BRICS நாணயம்: ஒரு நீண்ட கால சாத்தியம் - ராம் சிங் ஆகிப் சவுத்ரியால்

 ரூபாயை சர்வதேசமயமாக்கும் முயற்சிகளில் இந்தியா இப்போதைக்கு கவனம் செலுத்தலாம். 


அமெரிக்க டாலர் மற்றும் பிற அதிகாரமயமாக்கப்பட்ட நாணயங்களுக்கு (weaponized currencies) மாற்றாக பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்குவது பற்றி நிறைய விவாதங்கள் நடந்துள்ளன.  இந்த யோசனை பிரிக்ஸ் நாடுகளுக்கு சாதகமாக உள்ள புவி-பொருளாதார மாற்றம், அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் மத்திய வங்கி விகித உயர்வால் அமெரிக்க டாலர் பற்றாக்குறை காரணமாக கவனத்தை ஈர்த்துள்ளது.


தெற்கு பகுதியில் உள்ள பல நாடுகள் உள்ளூர் அல்லது மாற்று நாணயங்களில் பணம் செலுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்து வருகின்றன. தடைசெய்யப்பட்ட நிதி வழிகளை கடந்து செல்வதையும், பொருளாதார தடைகளைத் தவிர்ப்பதையும், மேற்கத்திய நாடுகளால் முன்வைக்கப்படும் சாத்தியமான அச்சுறுத்தல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதையும் அவர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர். ரஷ்யாவின் கசானில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது நாணய விவகாரம் மீண்டும் கவனம் செலுத்தியுள்ளது.


இருப்பினும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் சமீபத்திய கருத்துக்கள், பிரிக்ஸ் நாணயத்தின் யோசனை இன்னும் யதார்த்தமாக மாறவில்லை என்றே கூறுகின்றன. பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே உள்ள பல்வேறு பொருளாதார கட்டமைப்புகள் மற்றும் பணவியல், நிதி மற்றும் வர்த்தகக் கொள்கைகளில் உள்ள வேறுபாடுகள் போன்றவறில்  குறிப்பிடத்தக்க சவால்களாக உள்ளன.


இந்தியாவின் நகர்வுகள்


இந்த சூழலில், இந்தியாவின் கொள்கை நிலைப்பாடு, ரூபாய் சர்வதேசமயமாக்கலுக்கான முன்முயற்சிகள், மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்களின் பங்கு மற்றும் எல்லை தாண்டிய வர்த்தகம் மற்றும் வர்த்தகத்திற்கான துடிப்பான செயல்பாடு மற்றும் நிலையான நாணய முறையை ஆராய்வதை நோக்கமாகக் கொண்ட டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஆகியவற்றை கொண்டுள்ளது.


உலக வர்த்தகம் மற்றும் நிதித்துறையில் அமெரிக்க டாலரின் முக்கியத்துவத்தை மேலாதிக்க நிலைத்தன்மையை இந்தியா அங்கீகரிக்கிறது.  மாறாக,  உலகளாவிய வர்த்தகம் மற்றும் அமெரிக்க டாலரின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கிறது. 


இந்தியாவின் முயற்சிகள் டாலரை மாற்றுவது அல்ல என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மாறாக வர்த்தக நாடுகளின்  பணத் தட்டுப்பாடு, நிதி வழிகள் தடைபடும் பிரச்சனைகளை சமாளிப்பது, ரூபாய் கடன்களை மதிப்பது மற்றும் எதிர்கால சவால்களில் இருந்து தணிப்பது போன்ற நடைமுறை சவால்களை எதிர்கொள்வதே இந்தியாவின் முயற்சிகள் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெளிவுபடுத்தினார்.


குறிப்பாக டாலர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நாடுகளில்,  இந்திய ரூபாய்களில் பணம் செலுத்துவதற்கான வழிகளை இந்தியா ஆராய்ந்து வருகிறது. 


இந்த மாற்றத்தை ஆதரிக்க இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) நடவடிக்கை எடுத்துள்ளது. மாற்று விகித அபாயத்தைக் குறைத்தல், பரிவர்த்தனை செலவுகளைக் குறைத்தல் மற்றும் இருதரப்பு வர்த்தகத்தை வலுப்படுத்துதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு, ரூபாயில் வர்த்தக தீர்வுகளுக்கு சிறப்பு ரூபாய் வோஸ்ட்ரோ கணக்குகளைத் (special rupee vostro account) திறந்துள்ளது.  இதுவும் இந்தியாவின் பொருளாதார உத்தியைஆதரிக்கிறது.


இலங்கை, மாலத்தீவு, தான்சானியா, லெசோதோ, வெனிசுலா, ரஷ்யா மற்றும் மியான்மர் போன்ற உலகளாவிய தென் நாடுகளுக்கு டாலர் தட்டுப்பாடு அல்லது மேற்கத்திய பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள இந்தியா உதவ விரும்புகிறது.


இந்தியாவின் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (central bank digital currency (CBDC)) தடையற்ற, வெளிப்படையான மற்றும் நிகழ்நேர கட்டண முறையை வழங்குவதன் மூலம் இந்த சவால்களை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  இந்தியாவும் தனது நிதி அமைப்பை நவீனமயமாக்கி, பரிவர்த்தனை செலவுகளைக் குறைப்பதற்கும், எல்லை தாண்டிய கொடுப்பனவுகளை விரைவுபடுத்துவதற்கும், உலகளாவிய டிஜிட்டல் போக்குகளுடன் ஒத்துப்போவதற்கும் ரூபாயின் சர்வதேச பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறது.


நீண்ட காலத்திற்கு, பிரிக்ஸ் நாடுகள் தங்கள் பொருளாதார, நிதி மற்றும் வர்த்தகக் கொள்கைகளில் உள்ள வேறுபாடுகளைத் தீர்த்து,  நாணய ஏற்ற இறக்கம், மாற்று விகித வேறுபாடுகள், ஒழுங்குமுறை தீர்வுகள் மற்றும் நம்பிக்கைப் பற்றாக்குறை போன்ற சிக்கல்களைத் தீர்த்தால், பொதுவான பிரிக்ஸ் நாணயம் சாத்தியமாகும்.


முன்னோக்கி செல்லும் வழி


குறுகிய காலத்தில், பிரிக்ஸ் அமைப்பானது  5R Pay அல்லது BRICS Pay, பிளாக்செயின் அடிப்படையிலான கட்டண தளத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.  பிரிக்ஸ் பரிமாற்றங்களை மேம்படுத்த, உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதித் தொலைத் தொடர்புகளுக்கான சங்கம் (Society for Worldwide Interbank Financial Telecommunications (SWIFT)) போன்ற நிதிச் செய்தியிடல் அமைப்பையும் அவர்கள் உருவாக்க வேண்டும். இந்தப் படிகள் உள்ளூர் நாணயங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும், பாதுகாப்பான எல்லை தாண்டிய கொடுப்பனவுகளை மேம்படுத்தவும், மேலும் ஒருங்கிணைந்த நிதி அமைப்புக்கு தேவையான உள்கட்டமைப்பை படிப்படியாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.


சில்லறை பரிவர்த்தனைகளை எளிதாக்க, சர்வதேச தீர்வுகளுக்கான வங்கி (Bank for International Settlements (BIS)) தலைமையிலான "mBRIDGE" திட்டத்தை ஆராயலாம். 


ஐக்கிய அரபு அமீரகம், சீனா, ஈரான் மற்றும் ரஷ்யா உட்பட பல நாடுகள் ஏற்கனவே டிஜிட்டல் நாணயங்களைப் பயன்படுத்தி mBRIDGE மூலம் பணம் செலுத்தி வருகின்றன. ஆசியான்-நெக்ஸஸ் கட்டணத் தீர்வு (ASEAN-NEXUS payment settlement system,) அமைப்பில் இணைவதன் மூலம் இந்தியா ஏற்கனவே நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்தின் (Unified Payments Interface (UPI)) வரம்பை விரிவுபடுத்துகிறது.


இந்தியாவைப் பொறுத்தவரை, mBRIDGE என்பது எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளில் ரூபாயின் பங்கை மேம்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகும். இது ரூபாயை சர்வதேசமயமாக்குதல் மற்றும் அமெரிக்க டாலரைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் இந்தியாவின் குறிக்கோளுடன் ஒத்துப்போகிறது. mBRIDGE உறுப்பு நாடுகளின் கட்டண வலையமைப்புகளை UPI  உடன் ஒருங்கிணைப்பதன் மூலம், இந்தியா சுமூகமான எல்லை தாண்டிய பணம் அனுப்புதல் மற்றும் வர்த்தகத்தை எளிதாக்க முடியும்.


நியூயார்க்கில் நடந்த ஐ.நா ஆண்டு உச்சி மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட, பிரிக்ஸ் பே கார்டுடன் (BRICS pay card) ஒருங்கிணைப்பதையும் இந்தியா ஆராயலாம். இந்த அட்டை சில்லறை கட்டணங்களை ஊக்குவிக்கலாம். சுற்றுலாவை மேம்படுத்தலாம், மக்களிடையேயான தொடர்பை ஊக்குவிக்கலாம் மற்றும் படிப்படியான நிதி ஒருங்கிணைப்பை ஆதரிக்கலாம்.


இவை ரூபாயை சர்வதேசமயமாக்குவதற்கான இந்தியாவின் முயற்சிகளை துரிதப்படுத்துகிறது மற்றும் அதன் நிதி உள்கட்டமைப்பை வலுப்படுத்துகிறது. இது இந்தியாவின் பின்னடைவை அதிகரிக்கிறது மற்றும் வளர்ந்து வரும் உலகளாவிய ஒழுங்கிற்குள் சென்றடைகிறது.


பிரிக்ஸ் நாணயத்தின் யோசனை குறுகிய கால யதார்த்தத்தை விட நீண்ட கால இலக்காகவே உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, ரூபாயை சர்வதேசமயமாக்குவது, டாலர் ஆதிக்கம் செலுத்தும் உலகளாவிய அமைப்புக்கு நேரடியாக சவால் விடாமல் பொருளாதார இறையாண்மையை அதிகரிப்பதற்கான ஒரு நடைமுறை வழியாகும்.


ரூபாய் வர்த்தக தீர்வுகள், டிஜிட்டல் நாணய முன்முயற்சிகள் மற்றும் நிதி உள்கட்டமைப்பை நவீனமயமாக்குதல் போன்ற இந்தியாவின் சமீபத்திய முயற்சிகள், சர்வதேச வர்த்தகத்தில் ரூபாயின் பங்கை வலுப்படுத்துவதற்கான அதன் படிப்படியான உத்தியை எடுத்துக்காட்டுகின்றன.  


பிரிக்ஸ் அமைப்பு தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதால்,  ரூபாயை சர்வதேசமயமாக்குவதற்கான இந்தியாவின் உந்துதல் பலமுனை உலகளாவிய நிதி அமைப்பை உருவாக்குவதற்கான பரந்த முயற்சிகளை நிறைவுசெய்யும்.  பொருளாதார அடிப்படைகளை வலுப்படுத்துவதன் மூலமும், நிதிச் சந்தையின் பின்னடைவை மேம்படுத்துவதன் மூலமும், பாதுகாப்பான கட்டணத் தீர்வுகளை உருவாக்குவதன் மூலமும், பொதுவான பிரிக்ஸ் நாணயம் மற்றும் நிதிக் கருவிகளை அதிகாரமயமாக்குதல் ஆகியவற்றுடன் தொடர்புடைய சவால்களை இந்தியா சமாளிக்க முடியும்.




Original article:

Share:

லடாக் சமூக செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை முடித்தார்: இந்திய அரசியலமைப்பின் 6-வது அட்டவணை என்றால் என்ன?

 சோனம் வாங்சுக் மற்றும் பிற லடாக் ஆர்வலர்கள் 6-வது அட்டவணையை யூனியன் பிரதேசத்திற்கு பயன்படுத்துமாறு கோரியுள்ளனர். 


அக்டோபர் 21 அன்று, லடாக் ஆர்வலர் சோனம் வாங்சுக் தனது காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். லடாக் நிர்வாகம் குறித்த எதிர்கால பேச்சுவார்த்தைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்தது. 


வாங்சுக் மற்றும் பிற ஆர்வலர்கள் செப்டம்பர் மாதம் லடாக்கில் இருந்து டெல்லிக்கு தங்கள் பேரணியைத் தொடங்கினர். இந்திய அரசியலமைப்பின் 6-வது அட்டவணை லடாக்கிற்கு பயன்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. பிராந்திய நிர்வாகத்திற்கு அதிக சுயாட்சி வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். 

 

லடாக்கிலிருந்து தொண்டர்கள் டெல்லிக்கு அணிவகுத்துச் சென்றது ஏன்? 


பொறியாளரும் கண்டுபிடிப்பாளருமான வாங்சுக், சமீபத்திய ஆண்டுகளில் லடாக்கின் நிர்வாகம் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளார். 2019-ஆம் ஆண்டில், அவர் மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சர் அர்ஜுன் முண்டாவுக்கு 6-வது அட்டவணையின் கீழ் லடாக்கிற்கு திட்டமிடப்பட்ட பகுதி அந்தஸ்தைக் கோரி கடிதம் எழுதினார். 


முண்டா தனது அமைச்சகம் இந்த விவகாரம் குறித்து அறிந்திருப்பதாகவும், உள்துறை அமைச்சகத்திற்கு ஒரு திட்டத்தை அனுப்பியுள்ளதாகவும் பதிலளித்தார். இருப்பினும், வாங்சுக்கின் கூற்றுப்படி, அதன் பிறகு லடாக் தலைவர்களுடன் மேற்கொண்டு எந்த விவாதங்களும் நடக்கவில்லை. 


2019-ஆம் ஆண்டில், 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் (Jammu and Kashmir Reorganisation Act), 2019 இயற்றப்பட்ட பின்னர் இந்த கோரிக்கை மிகவும் முக்கியத்துவம் பெற்றது. அப்போது லடாக் தனி யூனியன் பிரதேசமாக அங்கீகரிக்கப்பட்டது. 


2019-ஆம் ஆண்டில், 6-வது  அட்டவணை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டங்களை நடத்தினர். இந்த போராட்டங்களுக்கு லே அபெக்ஸ் அமைப்பை (Leh Apex Body (ABL)) உருவாக்கிய முன்னாள் எம்.பி துப்ஸ்டன் செவாங் ஆதரவளித்தார். கார்கிலில் உள்ள அமைப்புகளும் ஒன்றிணைந்து கார்கில் ஜனநாயக கூட்டணியை (Kargil Democratic Alliance (KDA)) உருவாக்கின. இந்த போராட்டங்களை இரு குழுக்களும் முன்னின்று நடத்தி வருகின்றன.  6-வது அட்டவணை கீழ் பாதுகாப்புகள் 2019-ஆம் ஆண்டில் பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதி என்று வாங்சுக் கூறினார். இந்த வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.


லடாக்கில் ஆறாவது அட்டவணைக்கான தேவை என்ன? 


இந்திய அரசியலமைப்பின் 244-வது பிரிவின் கீழ், 6-வது அட்டவணை, தன்னாட்சி மாவட்ட கவுன்சில்கள் (Autonomous District Councils (ADCs)) மற்றும் தன்னாட்சி பிராந்திய கவுன்சில்கள் (Autonomous Regional Councils (ARCs)) எனப்படும் பழங்குடி நிர்வாக பகுதிகளை உருவாக்க அனுமதிக்கிறது. லடாக்கின் மக்கள் தொகையில் பெரும்பாலோர் பட்டியல் பழங்குடியினரைச் சேர்ந்தவர்கள். 


தன்னாட்சி மாவட்ட கவுன்சில்கள் 30 உறுப்பினர்கள் வரை இருக்கலாம் மற்றும் ஐந்து ஆண்டுகள் பணியாற்றலாம்.  நிலம், காடுகள், நீர், விவசாயம், கிராம சபைகள், சுகாதாரம், மற்றும் கிராம மற்றும் நகர மட்டங்களில் காவல்துறை குறித்து சட்டங்களை இயற்றும் அதிகாரம் அவர்களுக்கு உள்ளது. தற்போது, வடகிழக்கு இந்தியாவில் 10 தன்னாட்சி மாவட்ட கவுன்சில்கள் உள்ளன. இவை அசாம், மேகாலயா மற்றும் மிசோரமில் தலா மூன்று, திரிபுராவில் ஒன்று  உள்ளது. 


லடாக் மக்கள் அதிகாரப்பரவலை விரும்புகிறார்கள் என்று வாங்சுக் கூறினார். லடாக்கின் பள்ளத்தாக்குகளில் சுரங்கம் நடக்க விரும்பும் தொழில்துறை சக்திகளால் உள்ளூர் அதிகாரத்துவத்தினர் பாதிக்கப்படலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள். 

போராட்டத்திற்கு வேறு காரணங்கள் என்ன? 


மார்ச் மாதத்தில், மத்திய உள்துறை அமைச்சகம், தன்னாட்சி மாவட்ட கவுன்சில்கள் மற்றும் தன்னாட்சி பிராந்திய கவுன்சில்கள் இடையேயான பேச்சுவார்த்தைகள் முடங்கின. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 371-வது பிரிவைப் போன்ற பாதுகாப்புகளை வழங்கினார். வேலைகள், நிலம் மற்றும் கலாச்சாரம் குறித்த கவலைகளுக்கு தீர்வு காண முன்வந்தார். ஆனால், லடாக் 6-வது அட்டவணையில் சேர்க்கப்படாது என்று அவர் கூறினார். 


இதையடுத்து வாங்சுக் உள்ளிட்டோர் லேவில் உண்ணாவிரதத்தை தொடங்கினர். அவர் தண்ணீரையும் உப்பையும் உண்டு உயிர் வாழ்ந்தார். 21 நாட்கள் உறைபனி வெப்பநிலையில் வெளியில் தூங்கினார். 


சீன எல்லைக்கு திட்டமிடப்பட்டிருந்த 'பஷ்மினா அணிவகுப்பு' (‘Pashmina march’) பின்னர் ரத்து செய்யப்பட்டது. ஐபிசியின் பிரிவு 144 விதிக்க நிர்வாகம் அச்சுறுத்தியதாக வாங்சுக் கூறினார். வாங்சுக்கின் கூற்றுப்படி, பாரம்பரியமாக புகழ்பெற்ற பஷ்மினா ஆடுகளை மிகவும் விரும்பப்படும் கம்பளிக்காக வளர்த்து வந்த மேய்ப்பர்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டனர். அவர் இரண்டு காரணங்களை மேற்கோள் காட்டினார். அவை, தொழில்துறை அலகுகள் அல்லது சூரிய ஆலைகளுக்காக நிறுவனங்களுக்கு நிலத்தை இழந்தவர்கள் மற்றும் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (Line of Actual Control (LAC) ) சீன நடவடிக்கைகள். 


2019-ஆம் ஆண்டு முதல் லடாக்கில் உள்ள  வேலையின்மை குறித்தும் வாங்சுக் கவலை தெரிவித்தார். 


இனி என்ன நடக்கும்? 


சமீபத்திய 'டெல்லி சலோ பாதயாத்திரை' (‘Delhi Chalo Padyatra’) அபெக்ஸ் பாடி, லே (Apex Body, Leh (ABL)) ஆல் ஏற்பாடு செய்யப்பட்டது. லடாக்கிற்கு மாநில அந்தஸ்து, ஆறாவது அட்டவணையை நீட்டிப்பது, ஆட்சேர்ப்புக்கான பொது சேவை ஆணையம் மற்றும் லே மற்றும் கார்கிலுக்கு தனி மக்களவை இடங்கள் ஆகிய நான்கு அம்ச நிகழ்ச்சி நிரலை அவர்கள் முன்வைத்தனர். 


ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கின் இணைச் செயலாளரான பிரசாந்த் லோகண்டே, புதுதில்லியில் உள்ள லடாக் பவனில் ஆர்வலர்களை சந்தித்து திங்கள்கிழமை அமைச்சகத்தின் கடிதத்தை அவர்களிடம் வழங்கினார். முன்னதாக லடாக் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய உயர்மட்டக் குழு டிசம்பர் 3-ல் அவர்களை சந்திக்க உள்ளதாக கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 




Original article:

Share:

மதரஸா கல்வி மதச்சார்பின்மையை மீறுகிறதா? : உச்சநீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும் - அஜய் சிஹ்னா கற்பூரம்

 தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவின் (National Council of Educational Research and Training (NCERT)) பாடத்திட்டத்தைத் தவிர, மதரஸா கல்விக்கான கட்டமைப்பை இந்த சட்டம் வழங்குகிறது.


நாடு முழுவதும், மதம் சார்ந்த கல்வி முறைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒத்திவைத்தது. இந்தியாவின் தலைமை நீதிபதி (Chief Justice of India (CJI)) DY சந்திரசூட் தலைமையிலான அமர்வு, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஒரு வழக்கை மறுஆய்வுக்கு உட்படுத்தியது. இதில், மார்ச் மாதம் உத்தரப் பிரதேச மதரஸா கல்வி வாரியச் சட்டம், 2004யை (Madarsa Education Act(Madarsa Act)) ரத்து செய்தது.


ஏப்ரல் மாதம், உச்ச நீதிமன்றம் மதரஸா கல்வி வாரியச் சட்டத்தை மறுஆய்வு செய்யும் போது, ​​உத்தரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே, தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (National Commission for the Protection of Child Rights) ஜூன் 7 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இரண்டு அறிவுப்புகளை வெளியிட்டது.  இவை அங்கீகரிக்கப்பட்ட மதரஸாக்களை விசாரிக்கவும், முறையான கல்வியை வழங்கும் பள்ளிகளில் முஸ்லீம் அல்லாத மாணவர்களை அனுமதிக்கவும் உத்திர பிரதேச அரசுக்கு உத்தரவிட்டது. மதரஸாக்களை ஆய்வு செய்ய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், கல்வி உரிமைச் சட்டம், 2009 பின்பற்றாதவர்களுக்கு அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்த அறிக்கைகள் ஒன்றிய அரசைக் கேட்டுக் கொண்டன. 


இந்த இரண்டு அறிக்கைகளையும் உச்ச நீதிமன்றம் அக்டோபர் 21 அன்று தடை செய்தது. 


தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (NCERT) பாடத்திட்டத்தைத் தவிர, மதரஸா  கல்விக்கான சட்ட கட்டமைப்பை இந்த சட்டம் வழங்குகிறது.


இந்த சட்டம் உத்தரபிரதேச மதரஸா கல்வி வாரியத்தை நிறுவுகிறது. இந்த  வாரியம் முக்கியமாக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்டது. சட்டத்தின் 9-வது பிரிவு வாரியத்தின் செயல்பாடுகளை விவரிக்கிறது. 'மௌல்வி' (‘Maulvi’) (10 ஆம் வகுப்புக்கு சமமானது) முதல் 'பாசில்' (‘Fazil’) (முதுகலை பட்டத்திற்கு சமமானது) வரையிலான பாடங்களுக்கான படிப்புகளைத் தயாரித்தல் மற்றும் தேர்வுகளை நடத்துவது ஆகியவை இதில் அடங்கும். 


பிப்ரவரி 3, 2020-ஆம் ஆண்டில் ‘நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்ட ஒன்றிய அரசின் தரவுகளின்படி, 2018-19 ஆம் ஆண்டில் இந்தியாவில் 24,010 மதரஸாக்கள் இருந்தன. இவற்றில் 60% க்கும் அதிகமானவையாக கிட்டத்தட்ட 14,528 மதரஸாக்கள் உத்திர பிரதேசத்தில் உள்ளன. இதில் 11,621 அங்கீகரிக்கப்பட்ட மதரஸாக்கள் அடங்கும். 2023-ஆம் ஆண்டில், 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வுகளுக்குச் சமமான உத்தரபிரதேச மதரஸா கல்வி வாரியத் தேர்வுகளில் சுமார் 1.69 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


மார்ச் 22 அன்று, நீதிபதிகள் சுபாஷ் வித்யார்த்தி மற்றும் விவேக் சவுத்ரி ஆகியோர் அடங்கிய அமர்வானது ஒரு முடிவை எடுத்தது.  இந்த  சட்டத்தில், மூன்று முக்கிய காரணங்களுக்காக இச்சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது என்பதன் அடிப்படையில் மதரஸா சட்டத்தை முற்றிலுமாக நீக்கினார்கள். 


மதச்சார்பின்மை (SECULARISM) : உச்சநீதிமன்றத்தின் முந்தைய வழக்குகளை குறிப்பிட்டு, மதச்சார்பின்மை என்பது அனைத்து மதங்களையும், பிரிவுகளையும் சமமாக நடத்துவதாகும். அரசு எந்த ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது பிரிவினருடன் அடையாளப்படுத்தவோ அல்லது ஆதரவாகவோ இருப்பதாக பாகுபாடு காட்டக் கூடாது என்று உயர்நீதிமன்றம் கூறியது.


மதரஸாவில் மாணவர்கள், ஒவ்வொரு வகுப்பிலும் இஸ்லாம் படிப்பது கட்டாயம் என்று நீதிமன்றம் கூறியது. இதனால், மதத்தின் போதனைகள், விதிகள் மற்றும் தத்துவங்களைப் பற்றி அறிந்துகொள்வது இதில் அடங்கும். மதரஸாக்களில் நவீன பாடங்கள் விடுபட்டுள்ளன அல்லது விருப்பத்திற்குரியவை என்றும், மதச்சார்பற்ற கல்வியை வழங்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என்று நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. மதத்தின் அடிப்படையில் மட்டும் கல்வியை வழங்க முடியாது, அது பாரபட்சமாக இருக்கும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.


கல்வி உரிமை (RIGHT TO EDUCATION) : அரசியலமைப்பின் பிரிவு 21A ஆறு முதல் பதினான்கு வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியை அரசு வழங்க வேண்டும் என்று அரசியலமைப்பு குறிப்பிடுகிறது. 


நவீனபாட முறைகளில் "தரமான" கல்வியை மறுப்பதன் மூலம் கல்வி உரிமையை அரசு மீறுவதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறைந்த கட்டணத்தில் பாரம்பரியக் கல்வியை வழங்குவதன் மூலம் அரசாங்கம் தனது கடமையைச் செய்வதாகக் கூறி சாக்குப்போக்கு கூற முடியாது என்று நீதிமன்றம் மேலும் கூறியுள்ளது.


மத்திய சட்டத்துடன் முரண்பாடு (CONFLICT WITH CENTRAL LAW) : மதரஸா சட்டம், பல்கலைக்கழக மானியக் குழு சட்டம் (University Grants Commission Act(UGC)), 1956-ஆம் ஆண்டுடன் முரண்படுகிறது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. யுஜிசி சட்டத்தின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்கள் அல்லது நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மட்டுமே சான்றிதழ்களை வழங்க முடியும் என்று அது கூறியது. எந்த மதரஸா அல்லது மதரஸா வாரியமும் சான்றிதழ்களை வழங்க முடியாது. 


உச்ச நீதிமன்றத்தின் முன் வாதங்கள்:


அக்டோபர் 2024 விசாரணைகளின்போது இரண்டு முக்கிய கேள்விகள் எழுந்தன. 


முதலாவதாக, மதர்சா "மதக் கல்வியை" (religious education) வழங்குகிறதா அல்லது "மத போதனையை" (religious instruction) வழங்குகிறதா என்பதுதான் பிரச்சினை. திருமதி அருணா ராய் vs யூனியன் ஆஃப் இந்தியா (Ms. Aruna Roy vs. Union of India) 2002-ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றம் இரண்டிற்கும் இடையே வேறுபாட்டை எடுத்துக் காட்டியது.


அரசியலமைப்பின் 28-வது பிரிவின்படி, அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் மத வழிபாடுகளில் மாணவர்களை கட்டாயப்படுத்துவது அனுமதி இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருப்பினும், மதக் கல்வியின் நோக்கம் அல்லது "மதங்களைப் பற்றிய கல்வி" என்பது வெவ்வேறு மதங்களைப் பற்றி மாணவர்களுக்கு கற்பிப்பதாகும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. இது மத நல்லிணக்கத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


அக்டோபர் 21-ஆம் தேதி நடந்த விசாரணையின் போது, ​​உயர் நீதிமன்றம் மத போதனையுடன் ஒழுங்குமுறைகளை தவறாகக் இணைத்துள்ளது என்று மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி வாதிட்டார். மத போதனை அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மை கொள்கையை மீறுவதாக உயர் நீதிமன்றம் கருத்து தெரிவிக்கிறது என்று அவர் கூறினார்.


இரண்டாவதாக, மதரஸா சட்டம் முழுவதையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்க வேண்டுமா? மாற்றாக, சட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் நீதிமன்றம் நீக்கியிருக்க வேண்டுமா? இது மதரஸா நிறுவனங்களின் செயல்பாட்டை அரசு தொடர்ந்து ஒழுங்குபடுத்த அனுமதித்திருக்கும் என்று நீதிமன்றம் விவாதித்தது.


அக்டோபர் 22 அன்று, தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்த கருத்தில், "மதரஸா சட்டத்தை நீக்குவது குழந்தையை குளியலறையில் வீசுவது போன்றது". இந்த சட்டத்தின் கீழ் விதிகளை உருவாக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று அவர் விளக்கினார். இந்த விதிகளின் அடிப்படையில் வழங்கப்படும் கல்வியானது மிகவும் மதச்சார்பற்ற தன்மையைக் கொண்டிருப்பதை உறுதிசெய்யும்.


மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ண குமார் சார்பில் ஆஜரான பிரதிவாதிகள், மாணவர்கள் மதச்சார்பற்ற கல்வியைப் பெறுவதை உறுதி செய்வதற்காக இந்த சட்டம் இல்லை என்று வாதிட்டனர். அவர்கள் முக்கிய கண்ணோட்டத்தில் அனுமதிப்பதற்காக உதவுவதும், இதன் நோக்கம் அல்ல.  இந்தச் சட்டம் தற்போதைய நிலையைப் உறுதிபடுத்துகிறது என்று அவர் விளக்கினார். இந்த சூழ்நிலையில், முக்கிய பாடங்கள் விருப்பமானவை மற்றும் அதே சமயம் மதக் கல்வி கட்டாயமாகும் என்று மேலும் குறிப்பிட்டிருந்தார்.


முடிவின் தாக்கம் 


உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உத்தரப் பிரதேசத்தில் நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தும். எவ்வாறாயினும், இந்த தீர்ப்பு நாடு முழுவதும் உள்ள மதக் கல்வியில் பரந்த விளைவை ஏற்படுத்தும் என்று இந்திய தலைமை நீதிபதி (CJI) வழக்கறிஞர்களை எச்சரித்தார். குருகுலங்கள் மற்றும் கான்வென்ட் பள்ளிகள் போன்ற மதக் கல்வியை வழங்கும் அனைத்து நிறுவனங்களும் பாதிக்கப்படலாம் என்று தலைமை நீதிபதியின் கருத்துகள் தெரிவிக்கின்றன. இந்த அமைப்புகளின் செயல்பாட்டிற்கு மதச்சார்பின்மை கொள்கைகள் எவ்வாறு பொருந்தும் என்ற கருத்தும் தோன்றுகின்றன.




Original article:

Share:

இரஷ்யாவில் பிரிக்ஸ் உச்சி மாநாடு : விளாடிமிர் புதினுக்கு ததாரிஸ்தானில் உள்ள கசான் ஏன் முக்கியமானது? - அர்ஜுன் சென்குப்தா

 முதலில், குல் ஷெரீஃப் மசூதி 16-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டது. இது, கசான் முற்றுகையின் போது இவான் தி டெரிபிள் என்பவரால் இந்த மசூதி தீ வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு, கசானின் கானேட்டின் (Khanate of Kazan) வீழ்ச்சிக்கு வழிவகுத்தது மற்றும் 1552-ம் ஆண்டில் ததாரிஸ்தானை (Tatarstan) மஸ்கோவிட் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.


16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா உள்ளிட்டோர் ரஷ்யா சென்றுள்ளனர். 


பிரிக்ஸ் உச்சி மாநாட்டை நடத்தும் நகரமான கசான், இரஷ்யாவின் மிகப்பெரிய மற்றும் செல்வம் கொழிக்கும் நகரங்களில் ஒன்றாகும். இது, அதன் செழிப்பு ஒரு வலுவான பெட்ரோ கெமிக்கல்ஸ் மற்றும் இராணுவத் தொழில் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத் துறையிலிருந்து மேம்பட்டுள்ளது. 2009-ஆம் ஆண்டில், இது மாஸ்கோ மற்றும் கலாச்சார தலைநகரான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு அடுத்தபடியாக ரஷ்யாவின் மூன்றாவது தலைநகரமாக கசான் அங்கீகரிக்கப்பட்டது. கசான் ரஷ்யாவின் எதிர்கால நகரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ரஷ்யாவின் வளர்ந்து வரும் தேசிய அடையாளத்திற்கு பங்களிக்கும் சில குறிப்பிடத்தக்க மக்கள்தொகை மாற்றங்களை இது ஏற்கனவே எதிர்கொண்டுள்ளது. 


இரஷ்யா மற்றும் இரஷ்யன் 


இரஷ்யாவில், மக்களின் தாயகமாக, மிகப்பெரிய ஸ்லாவிக் இனக்குழுவைச் (Slavic ethnic group) சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் இரஷ்ய மொழியை தங்கள் தாய்மொழியாக பேசுகிறார்கள். பெரும்பாலான இரஷ்ய இனத்தவர்கள் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் என்பதால், யார் இரஷ்ய மக்கள்? என்பதன் அடிப்படையில் மதமும் ஒரு முக்கிய மையமாக உள்ளது. 


இருப்பினும், இந்த வரையறை உலகின் மிகப்பெரிய நாட்டின் சமூக-கலாச்சார பன்முகத்தன்மையை பிரதிபலிக்கவில்லை. இரஷ்யா நாடு மேற்கில் பின்லாந்து முதல் கிழக்கில் அலாஸ்கா வரை நீண்டுள்ளது. இந்த நாடு கண்டம் தாண்டிய, பல இனங்களைக் கொண்டு, இது ஐரோப்பாவையும் ஆசியாவையும், கிட்டத்தட்ட அமெரிக்காவை இணைக்கிறது.


இரஷ்யாவில், 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் இரஷ்ய இனத்தவர்கள் ஆவர். இருப்பினும், இரஷ்யாவில் சுமார் 193 இனக்குழுக்கள் மற்றும் 21 தேசிய குடியரசுகளை உள்ளடக்கியது. இதில், குறிப்பிட்ட இனங்கள் சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இந்த சிறுபான்மைக் குழுக்கள் வரலாற்று ரீதியாக இரஷ்ய பெரும்பான்மை இனத்தவரால் பாகுபாட்டிற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.


ஆனால், இந்த நிலைமை மாறப்போகிறது. மக்கள்தொகையில் இரஷ்யர்கள் மற்றும் ஸ்லாவியர்களின் விகிதம் குறைந்து வருவதாகவும், மேலும் இந்த போக்கு இன்னும் தீவிரமடையும் என்று குறிப்பிடுகின்றன. இரஷ்ய இனத்தவரிடையே பிறப்பு விகிதம் (ஒரு பெண்ணுக்கு 1.3 குழந்தைகள்) முஸ்லீம் இனத்தவர்களிடையே (2.3) இருப்பதை விட கணிசமாகக் குறைவாக உள்ளது. மேலும், ரஷ்ய மக்கள்தொகையில் முஸ்லீம் இன சிறுபான்மையினரின் பங்கு, வரும் காலங்களில், தற்போதைய 10% ஐ விட மூன்று மடங்காக அதிகரிக்கும். 


இரஷ்யாவின் மக்கள்தொகை, இனரீதியாக இரஷ்யர்களாகவும், மத ரீதியாக வேறுபட்டவர்களாகவும் மாறும் அதேவேளையில் இதன் எண்ணிக்கை குறைவானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  கடந்த மாதம் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தரவுகள், 2024-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 1999-ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகக் குறைந்த பிறப்பு விகிதத்தை இந்த நாடு பதிவு செய்துள்ளது என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மக்கள்தொகை வீழ்ச்சியை சரிசெய்ய,  இரஷ்யா அதிக குடியேற்றத்தை அனுமதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக குடியேறியவர்களில் பெரும்பாலானவர்கள் துருக்கிய மற்றும் ஆசிய இனக்குழுக்களை சேர்ந்த முஸ்லிம்களாக இருப்பார்கள்.


கிழக்கு & மேற்கு நகரம் 


இரஷ்யாவின் மக்கள்தொகை குறித்த இந்த விவாதத்திற்கு கசான் பகுதி முக்கியமானது. வோல்கா மற்றும் கசான்கா ஆறுகள் சந்திக்கும் இடத்தில் மாஸ்கோவின் கிழக்கே சுமார் 900 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த நகரம் 1.2 மில்லியன் மக்களைக் கொண்ட ததாரிஸ்தான் குடியரசின் தலைநகரம் ஆகும்.  இது, ததாரிஸ்தான் மக்களின் தாயகமாக உள்ளது. இரஷ்யர்களுக்கு அடுத்தபடியாக நாட்டின் இரண்டாவது பெரிய இனக்குழுவாக இந்த மக்கள் உள்ளனர். ததார்ஸ்கள் (Tatars) தங்கள் சொந்த மொழி மற்றும் தனித்துவமான கலாச்சாரத்தைக் கொண்ட ஒரு பெரும்பான்மை முஸ்லீம் துருக்கிய இனக்குழுவாகும். 


கசானின் மக்கள் தொகை ரஷ்ய இனத்தவர்கள் (48.6%) மற்றும் தாதர்ஸ் இனத்தவர்கள் (47.6%) மத்தியில் தோராயமாக சமமாக பிரிக்கப்பட்டுள்ளது. இது ரஷ்யா படிப்படியாக மாறிவரும் தேசத்தின் அடையாளமாக கசானை உருவாக்குகிறது.  இது ஐரோப்பா மற்றும் ஆசியாவின் கலவையை பிரதிபலிக்கிறது. கசான் பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களின் கலவையாகும்.


கிரெம்ளின் நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கசானின் பன்முகத்தன்மைக்கான சான்றுகளை கருத்துரையாளர் கவனித்துள்ளனர். இந்த கிரெம்ளின் நகரம் பல ரஷ்ய நகரங்களின் மையத்தில் அமைந்துள்ள ஒரு வலுவான வளாகமாகும். ஆர்த்தடாக்ஸின் அறிவிப்பின் படி, அதிகாரப்பூர்வ கட்டிடங்களுக்கு அடுத்ததாக கதீட்ரல் மற்றும் குல் ஷரீப் மசூதி ஆகியவை உள்ளன. இது ஐரோப்பாவின் மிகப்பெரிய மசூதிகளில் ஒன்றாகும். அதன் தனித்துவமான வெள்ளை ஓடுகள் மற்றும் டர்க்கைஸ் குவிமாடம் மற்றும் மினாராக்கள் ஆகியவற்றை கொண்டுள்ளன.

இந்த மசூதி முதலில் 16-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்டது. இருப்பினும், கசான் முற்றுகையின் போது இவான் தி டெரிபிள் என்பவரால் இந்த மசூதிக்கு தீ வைக்கப்பட்டது. இந்த முற்றுகையானது கசான் கானேட்டின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது மற்றும் 1552-ஆம் ஆண்டில் ததாரிஸ்தானை (Tatarstan) மஸ்கோவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் உதவியுடன் 2005-ஆம் ஆண்டில் மசூதி மீண்டும் கட்டப்பட்டது.


விளாடிமீர் புதினின் கீழ் ததாரிஸ் நகரம்


அதிபர் விளாமிடிர் புதின், இரஷ்யாவின் இன சிறுபான்மையினருடன் தனது உறவுகளை சமநிலைப்படுத்த முயன்றார். இந்த சிறுபான்மையினரை பிரதானமாக சமூகத்தில் சேர்க்கவும், அவர்களிடையே உள்ள வேறுபாடுகளை சமரசம் செய்யவும் அவர் முயன்றார். அவர் இரஷ்ய இனத்தை விட ரஷ்யாவின் மகத்துவத்தை வலியுறுத்தும் தேசியவாதத்தை ஊக்குவிக்கிறார். இருப்பினும், அவர் பிரிவினைவாத உணர்வுகளுக்கு வலுவான மற்றும் வலிமையான அணுகுமுறையுடன் பதிலளித்துள்ளார். செச்சினியர் இன மக்களை அவர் நடத்திய விதம் இவரின் நிர்வாகத்தை நிரூபித்தது.


ரஷ்யாவின் இன சிறுபான்மையினருடனான தனது நடவடிக்கைகளில் அதிபர் புதின்  ஒரு சமநிலைப்படுத்தும் விளையாட்டை விளையாட முயன்றுள்ளார். அவர் சிறுபான்மையினரை மைய நீரோட்டத்தில் இணைக்கவும், வேறுபாடுகளை சமரசம் செய்யவும், ரஷ்யாவின் மகத்துவத்தை ஊக்குவிக்கும் ஒரு தேசியவாதத்தையும் ஆதரித்தார். ஆனால் அவர் பிரிவினைவாத உணர்வுகளை இரும்புக்கரம் கொண்டு கையாண்டார். 


2014-ஆம் ஆண்டில், கிரிமியா பகுதியை இணைத்ததில் இருந்து கிரிமியன் ததார்ஸ்களை புதின் துன்புறுத்துவது ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது. கூடுதலாக, 2021-ஆம் ஆண்டில் ததார்ஸ்தானின் தலைவருக்கு அதிகாரங்கள் மற்றும் அந்தஸ்து குறைத்தது இதற்கான பதட்டங்களை அதிகரித்தது. இருப்பினும், கசானில் பிரிக்ஸ் மாநாட்டை நடத்துவது நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு படியாக பார்க்கப்படுகிறது.


மாஸ்கோ மற்றும் ததார்ஸ்தான் இந்த நிகழ்வுக்கு முன் நகர மறுசீரமைப்பு திட்டங்களில் 8 பில்லியன் ரூபிள்களை (சுமார் $80 மில்லியன்) முதலீடு செய்தன. இந்த உச்சிமாநாடு ரஷ்யாவில் "இதுவரை நடைபெற்ற மிகப்பெரிய வெளியுறவுக் கொள்கை நிகழ்வு" என ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.




Original article:

Share:

குழந்தைத் திருமணம் மீதான உச்சநீதிமன்ற தீர்ப்பு, தேவையற்ற குற்றமாக்கலுக்கு எதிரான தடுப்புக் கண்காணிப்புடன் பின்பற்றப்பட வேண்டும் -ஆட்ரி டிமெல்லோ, ஃபிளேவியா ஆக்னஸ்

 உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் பாராட்டுக்குரியதாக இருந்தாலும், அவை நடைமுறைப்படுத்தப்படுவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.


அக்டோபர் 18 அன்று, தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வானது, குழந்தை திருமண தடைச் சட்டம் (Prohibition of Child Marriage Act (PCMA)) 18 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட போதிலும், இந்தியாவில் குழந்தைத் திருமணங்கள் எவ்வளவு கவலையளிக்கின்றன என்பதை இந்தத் தீர்ப்பு சுட்டிக்காட்டியுள்ளது. நீதிமன்ற அமர்வு இந்த வழக்குக்கு தீர்ப்புகாண ஏழு ஆண்டுகள் எடுத்தாலும், குழந்தை திருமண தடைச் சட்டத்தை (PCMA) செயல்படுத்துவதற்கான விரிவான வழிகாட்டுதல்களை இந்த தீர்ப்பு கொண்டுள்ளது. 


1884-ம் ஆண்டில் பம்பாய் உயர்நீதிமன்றத்தில் ருக்மாபாய் தாக்கல் செய்த மனுவை மேற்கோள் காட்டி, "ஐயா, இளமைக்காலத்தின் திருமணத்தால் ஏற்பட்ட குறிப்பிட முடியாத துயரங்களை அனுபவிக்க வேண்டிய துரதிர்ஷ்டவசமான இந்துப் பெண்களில் நானும் ஒருவர். மேலும், இந்த தீய நடைமுறை என் வாழ்க்கையின் மகிழ்ச்சியை அழித்துவிட்டது.” என்று குறிப்பிட்டார். இதன்காரணமாக, ருக்மாபாய் தனது கணவருடன் சேர மறுத்து, தனது கணவருடன் வாழ்வதை விட சட்டத்தின் கீழ் அதிகபட்ச தண்டனைக்கு தன்னை உட்படுத்திக்கொள்வேன் என்று அறிவித்தார். 


இறுதியில், ருக்மாபாய்க்கும் அவரது கணவருக்கும் இடையே பிரச்சனை தீர்ந்தது. அதன் பிறகு, காலனித்துவ இந்தியாவில் பயிற்சி செய்த முதல் பெண் மருத்துவர்களில் ஒருவராக ஆனார்.


குழந்தைத் திருமணம் என்பது சட்டத்தின் படி குற்றம் ஆகும். இந்த, குழந்தைத் திருமணத்தை செய்பவர், நடத்துபவர், இயக்குபவர் அல்லது தூண்டுபவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை அல்லது ரூ.1 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். இச்சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் பிடியாணை பிறப்பிக்கத்தக்க மற்றும் பிணையில் வெளிவர முடியாத குற்றங்களாகும். குறிப்பிட்ட சில நிகழ்வுகளைத் தவிர, குழந்தைத் திருமணங்கள் செல்லாது. 2006-ம் ஆண்டின் குழந்தை திருமண தடைச் சட்டம் (PCMA) 1929-ம் ஆண்டின் குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக மாற்றப்பட்டது. இதற்கு முன், 1891-ம் ஆண்டின் ஒப்புதல் வயது சட்டம் (Age of Consent Act) நடைமுறையில் இருந்தது. 


ஏறக்குறைய 150 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தியாவில் இன்னும் மூன்றில் ஒரு பங்கு குழந்தை மணமகள் இருந்தனர். இந்தியாவில் உள்ள 223 மில்லியன் குழந்தை மணமகள்களில் 102 மில்லியன் பேர் 15 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டுள்ளனர். 2006-ம் ஆண்டில், இந்தியாவில் குழந்தை திருமணங்கள் மொத்த திருமணங்களில் 47% ஆகும். 


தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி, நாட்டில் உள்ள அனைத்து பெண் குழந்தைகளிலும் கிட்டத்தட்ட பாதிப் பேர் 18 வயதை அடையும் முன்பே திருமணம் செய்து கொள்கின்றனர். குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் (பிசிஎம்ஏ) நடைமுறைக்கு வந்த பிறகு, குழந்தைத் திருமண விகிதம் பாதியாகக் குறைந்துள்ளது. இருப்பினும், சில மாநிலங்களில், 40% க்கு மேல் உள்ளது. இதில், முக்கியமாக மேற்கு வங்கம், பீகார் மற்றும் திரிபுராவில் அதிக விகிதங்கள் காணப்படுகின்றன என்று UNICEF அறிக்கை கூறுகிறது. இந்தியாவின், நகர்ப்புறங்களில் 29 சதவிகிதங்களுடன் ஒப்பிடும்போது, கிராமப்புறங்களில் இந்த பிரச்சனை 56 சதவிகிதத்துடன் மோசமாக உள்ளது. 


குழந்தைத் திருமணங்களுக்கு வறுமையே முக்கியக் காரணம். குடும்பங்கள் பொருளாதார சிரமங்களை சமாளிக்க இதனை ஒரு வழியாக பார்க்கிறார்கள். பெரும்பாலும், செலவுகளைக் குறைப்பதற்காக, வயதானவர்களுடன் திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். இதனால், இந்த இடப்பெயர்வால் சமூக மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை உடைத்து, இளம் பெண்களை இன்னும் பாதிக்கப்படக்கூடியவர்களாக ஆக்குகிறது. 


மணப்பெண்களின் கற்பு மற்றும் கன்னித்தன்மையை பெற்றோர்கள் பெரிதும் மதிக்கிறார்கள். இதனால், அவர்கள் தங்கள் மகள்களுக்கு இளம் வயதில் திருமணம் செய்து வைக்கிறார்கள். மேலும் சில நேரங்களில், இளம் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படலாம் அல்லது ஒருமித்த பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடலாம் என்று அவர்கள் பயப்படுகிறார்கள். 


இதனால், பெற்றோர்கள் தங்கள் மகளுக்கு திருமணம் செய்து வைப்பதை ஒரு மதக் கடமை என்றும், அதை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆழமான நம்பிக்கையும் உள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், குடும்பமும் சமூகமும் ஒப்புக்கொள்வதால், குழந்தை திருமணத் தடைச் சட்டம் (PCMA) போன்ற சட்டங்கள் அரிதாகவே பயன்படுத்தப்படுகின்றன. இளம் பெண்கள் குடும்பம் மற்றும் சமூக அழுத்தத்தை எதிர்க்க போராடுகிறார்கள். மேலும், மாநில ஆதரவு அமைப்புகள் முழுமையானதாகவோ போதுமானதாகவோ இவர்களுக்கு கிடைப்பதில்லை.


குழந்தைத் திருமணங்கள் பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் நடத்தப்படுவதோடு நின்றுவிடுவதில்லை, பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக சிறார்களின் திருமணங்களும் இவற்றில் அடங்கும். "இந்த இரண்டு வகையான திருமணங்களும் ஒரே மாதிரியாக நடத்தப்பட வேண்டுமா?" என்று டெல்லி உயர் நீதிமன்றம் ஜிதேந்தர் குமார் சர்மா vs அரசு-2010 (Jitender Kumar Sharma vs State) வழக்கில் விசாரித்தது. இதில், சிறார்கள் தங்கள் பெற்றோரின் அனுமதியின்றி திருமணம் செய்யத் தேர்ந்தெடுக்கும்போது, ​​குழந்தை திருமணத் தடைச் சட்டம் (பிசிஎம்ஏ) பெரும்பாலும் அவர்களது திருமணம் செல்லாது என்று அறிவிக்கப் பயன்படுகிறது.


இதுபோன்ற வழக்குகளில் நீதிமன்றங்கள் முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை தெரிவித்துள்ளன. யூனுஸ் கான் vs ஹரியானா மாநிலம் (Yunus Khan vs State of Haryana) 2014-ம் ஆண்டு வழக்கில், 16 வயது சிறுமி தனது பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக திருமணம் செய்து கொண்டார். அவரது தந்தை, அந்த பெண்ணின் கணவர் மீது கடத்தல் வழக்கையும், அவரை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி உயர் நீதிமன்றத்திலும் ரிட் மனு தாக்கல் செய்தார். சிறுமி தனது சொந்த விருப்பத்தின் பேரில் திருமணம் செய்து கொண்டதாகக் கூறியதாகவும் மேலும், நீதிமன்றங்கள் திருமணம் செல்லுபடியாகும் என்று கூறியது. 


இருப்பினும், அம்ரிந்தர் கவுர் மற்றும் மற்றவர்கள் vs பஞ்சாப் மாநிலம் (Amrinder Kaur and Others vs State of Punjab) 2015-ம் ஆண்டின் வழக்கில், 16 வயது சிறுமியின் குடும்பத்தினர், அந்த நபர் வேற்று வர்க்கத்தைச் சேர்ந்தவர் என்பதால் திருமணத்தை எதிர்த்தபோது, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் அந்த சிறுமி 18 வயது பூர்த்தியடையவில்லை என்றும், அந்த சிறுவன் அவளை கவர்ந்திழுத்து கடத்தியதாகவும் கூறி திருமணம் செல்லாது என்று அறிவித்தது. இந்நிலையில், காவல் பாதுகாப்பு கோரி நீதிமன்றத்தை அணுகி, திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக சிறுமி நீதிமன்றத்தில் தெரிவித்தார். 


18 வயதிற்குட்பட்ட சிறுமி சட்டப்பூர்வ பாதுகாவலரிடமிருந்து "எடுத்துக்கொள்ளப்பட்ட" அல்லது "ஏமாற்றப்பட்டு" திருமணம் செய்துகொள்ளப்படும்போது இந்த திருமணம் நடைபெறாததுபோல் நிகழ்கிறது. மறுபுறம், குழந்தைக்கு 18 வயதாகும் வரை ‘செல்லாத திருமணம்’ செல்லுபடியாகும். ஆனால், வயது வந்த பிறகு இரண்டு ஆண்டுகளுக்குள் திருமணத்தை "செல்லாததாக" செய்ய சிறுமி நீதிமன்றத்திற்குச் செல்லலாம். கர்நாடகா 2016-ம் ஆண்டில் ஒரு சட்டத்தை இயற்றியது. இந்த சட்டம் அனைத்து குழந்தை திருமணங்களையும் ஆரம்பத்தில் இருந்தே செல்லாது. ஹரியானா 2020-ம் ஆண்டில் இதேபோன்ற திருத்தத்துடன் பின்பற்றப்பட்டது.


இளம் பருவத்தினரின் கவலைகளை ஆதரிப்பதற்கான தேசிய கூட்டணியின் ஆய்வில், கர்நாடகாவில் குழந்தை மணமகள் மீதான பாதிப்பின் தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது. இது அவர்களின் சட்ட நிலை மற்றும் அவர்களின் குழந்தைகளின் நிலை குறித்து முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது. திருமணச் சொத்துரிமை மீதான அவர்களின் உரிமைகளையும் ஆய்வு கேள்விக்குள்ளாக்கியது. கூடுதலாக, இந்தச் சிறுமிகள் எதிர்கொள்ளும் நிதிச் சிக்கல்கள், குறிப்பாக மறுமணம் செய்துகொள்வதற்கான சட்டப்பூர்வ தகுதியின்மையை கணவர்கள் பயன்படுத்திக் கொள்ளும்போது, ​​கைவிடப்படுதல் போன்ற பிரச்சினைகளை சட்டம் எவ்வாறு தீர்க்கும்? என்று அது கேட்டது.


உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் பாராட்டுக்குரியவை. இருப்பினும், அவை நடைமுறையில் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதைப் பார்க்க வேண்டும். பெண்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் மீது குற்றமாக்கலின் தாக்கத்தை உச்ச நீதிமன்றம் புரிந்து கொண்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் முதலில் தடுப்பு, இரண்டாவது பாதுகாப்பு மற்றும் கடைசியாக தண்டிக்கப்படுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது என்று வலியுறுத்தியுள்ளது. இந்த அணுகுமுறை வரவேற்கத்தக்க நிவாரணமாகும். 


Dmello இயக்குனர், மற்றும் Agnesis மஜ்லிஸ் நிறுவனர் ஆவார்.




Original article:

Share:

மௌசாம் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியா ஏன் மேகக் கலன் (cloud chamber) உருவாக்குகிறது? - அஞ்சலி மரார்

 மௌசம் திட்டம் வானிலை நிகழ்வுகளை 'நிர்வகிப்பதை' நோக்கமாகக் கொண்டுள்ளது. மேகக் கலன் என்றால் என்ன, அது எப்படி உதவும்?


மௌசம் திட்டம் கடந்த மாதம் அரசால் தொடங்கப்பட்டது. இந்தியாவில் வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்துவது மற்றும் சில வானிலை நிகழ்வுகளை "நிர்வகிப்பதற்கு" உதவுவதே இதன் நோக்கமாகும். மழைப்பொழிவு, ஆலங்கட்டி மழை, மூடுபனி மற்றும் பின்னர், தேவைப்படும் போது மின்னல் தாக்கங்களை அதிகரிக்கும் அல்லது குறைக்கும் திறன் இதில் அடங்கும்.


வானிலையை திறம்பட மேம்படுத்த, இந்தியா மேக இற்பியலில் (cloud physics) தனது ஆராய்ச்சியை மேம்படுத்த வேண்டும். இதை ஆதரிக்கும் வகையில், புனேயில் உள்ள இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வுக் கழகத்தில் (Indian Institute of Tropical Meteorology (IITM)) இந்தியா ஒரு தனித்துவமான மேகக் கலனை அமைக்கிறது.


மேகக் கலன் (cloud chamber) என்றால் என்ன? 


ஒரு மேகக் கலனானது நீர், நீராவி, தூசிப்படலம் மற்றும் பிற பொருட்கள் சேர்க்கப்படும் ஒரு மூடிய, உருளை போல் காணப்படும். சரியான ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை உள்ளே அடையும் போது, ​​மேகங்கள் உருவாகும்.


புனேவில் இருப்பதன் வசதி, விஞ்ஞானிகள் காலப்போக்கில் மேகத் துளிகள் அல்லது பனித் துகள்களை உருவாக்கும் துகள்களை ஆய்வு செய்ய உதவும். பல நாடுகளில் குறைந்த திறன் கொண்ட அடிப்படை மேகக் கலன்கள் உள்ளன. ஆனால், இந்தியா பருவகால மேகங்களை ஆராய வெப்பச்சலன பண்புகளுடன் கூடிய மேம்பட்ட மேகக் கலனை உருவாக்கி வருகிறது. உலகம் முழுவதும் இதுபோன்ற சில கலன்கள் மட்டுமே உள்ளன.


மேக இயற்பியல் என்பது வெவ்வேறு நிலைகளில் மேகங்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்டறிய உதவும்.  மழைத் துளிகள் மற்றும் பனித் துகள்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் சூறாவளிகளின் ஈரப்பதம் வளிமண்டலத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது. புதிய குறிக்கோள், இந்திய வானிலை அமைப்புகளுடன் தொடர்புடைய கிளவுட் இயற்பியலை நன்கு புரிந்துகொள்வதாகும். இது வானிலை மாற்றத்திற்கு ஏற்ப திட்டமிட்டு செயல்பட உதவுகிறது. 


இந்த வெப்பச்சலன மேகக் கலன்யானது வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் போன்ற சுற்றுச்சூழல் காரணிகளை அவை மேகங்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பார்க்க விஞ்ஞானிகளை அனுமதிக்கும். இந்திய தொழில் நுட்ப கழகத்தின் மூத்த விஞ்ஞானி தாரா பிரபாகரன், பருவகால மேகங்களைப் பற்றி மேலும் அறிய, கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் புதிய யோசனைகளை சோதிக்க விரும்புவதாக கூறினார்.


அடுத்த 18-24 மாதங்களில், மேகக் கலனுக்கான மேம்பட்ட கருவிகள் மற்றும் ஆய்வுகளை உருவாக்குவதில் குழு கவனம் செலுத்தும். கலன் கட்டும் பணி விரைவில் துவங்கும். நிலைமைகளைக் கண்காணிக்கவும், துகள் ஊசிகளைச் செய்யவும் அவர்களுக்கு அதிநவீன உபகரணங்கள் தேவைப்படும் என்றும், இது பல்வேறு சுற்றுச்சூழல் காட்சிகளைப் படிக்க உதவும் என்றும் பிரபாகரன் குறிப்பிட்டார்.


மேக விதைப்பு (cloud seeding) தொடர்பான இந்தியாவின் அனுபவம் எப்படி இருந்தது?


மேக வளிமக்கரைசல் (Cloud Aerosol) தொடர்பு மற்றும் மழைப்பொழிவு மேம்படுத்தல் பரிசோதனை (Cloud Aerosol Interaction and Precipitation Enhancement Experiment (CAIPEEX)) என்பது பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நான்கு கட்டங்களாக நடந்த ஒரு திட்டமாகும்.


இறுதிக்கட்டமாக, 2016 முதல் 2018 வரை, மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தில், மழை மறைவு பகுதி (rain-shadow region) என்று அழைக்கப்படும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் சோதனைகள் நடத்தப்பட்டது. மேக விதைப்பு சரியான சூழ்நிலையில் இந்தப் பகுதியில் மழையை கணிசமாக அதிகரிக்கக்கூடும் என்று பகுப்பாய்வு காட்டுகிறது. சில இடங்களில் மழைப்பொழிவு 46% வரையும், விதைப்பு ஏற்பட்ட இடத்திலிருந்து 100 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சராசரியாக 18% ஆகவும் அதிகரித்தது.


இருப்பினும், அனைத்து மழைப்பொழிவு பிரச்சினைகளுக்கு மேக விதைப்பு ஒரு முழுமையான தீர்வாக இருக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.



அஞ்சலி மரார் பெங்களூரில் உள்ள ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் அறிவியல் தொடர்பாளராக உள்ளார்.




Original article:

Share: