உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் பாராட்டுக்குரியதாக இருந்தாலும், அவை நடைமுறைப்படுத்தப்படுவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அக்டோபர் 18 அன்று, தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வானது, குழந்தை திருமண தடைச் சட்டம் (Prohibition of Child Marriage Act (PCMA)) 18 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட போதிலும், இந்தியாவில் குழந்தைத் திருமணங்கள் எவ்வளவு கவலையளிக்கின்றன என்பதை இந்தத் தீர்ப்பு சுட்டிக்காட்டியுள்ளது. நீதிமன்ற அமர்வு இந்த வழக்குக்கு தீர்ப்புகாண ஏழு ஆண்டுகள் எடுத்தாலும், குழந்தை திருமண தடைச் சட்டத்தை (PCMA) செயல்படுத்துவதற்கான விரிவான வழிகாட்டுதல்களை இந்த தீர்ப்பு கொண்டுள்ளது.
1884-ம் ஆண்டில் பம்பாய் உயர்நீதிமன்றத்தில் ருக்மாபாய் தாக்கல் செய்த மனுவை மேற்கோள் காட்டி, "ஐயா, இளமைக்காலத்தின் திருமணத்தால் ஏற்பட்ட குறிப்பிட முடியாத துயரங்களை அனுபவிக்க வேண்டிய துரதிர்ஷ்டவசமான இந்துப் பெண்களில் நானும் ஒருவர். மேலும், இந்த தீய நடைமுறை என் வாழ்க்கையின் மகிழ்ச்சியை அழித்துவிட்டது.” என்று குறிப்பிட்டார். இதன்காரணமாக, ருக்மாபாய் தனது கணவருடன் சேர மறுத்து, தனது கணவருடன் வாழ்வதை விட சட்டத்தின் கீழ் அதிகபட்ச தண்டனைக்கு தன்னை உட்படுத்திக்கொள்வேன் என்று அறிவித்தார்.
இறுதியில், ருக்மாபாய்க்கும் அவரது கணவருக்கும் இடையே பிரச்சனை தீர்ந்தது. அதன் பிறகு, காலனித்துவ இந்தியாவில் பயிற்சி செய்த முதல் பெண் மருத்துவர்களில் ஒருவராக ஆனார்.
குழந்தைத் திருமணம் என்பது சட்டத்தின் படி குற்றம் ஆகும். இந்த, குழந்தைத் திருமணத்தை செய்பவர், நடத்துபவர், இயக்குபவர் அல்லது தூண்டுபவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை அல்லது ரூ.1 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். இச்சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் பிடியாணை பிறப்பிக்கத்தக்க மற்றும் பிணையில் வெளிவர முடியாத குற்றங்களாகும். குறிப்பிட்ட சில நிகழ்வுகளைத் தவிர, குழந்தைத் திருமணங்கள் செல்லாது. 2006-ம் ஆண்டின் குழந்தை திருமண தடைச் சட்டம் (PCMA) 1929-ம் ஆண்டின் குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக மாற்றப்பட்டது. இதற்கு முன், 1891-ம் ஆண்டின் ஒப்புதல் வயது சட்டம் (Age of Consent Act) நடைமுறையில் இருந்தது.
ஏறக்குறைய 150 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தியாவில் இன்னும் மூன்றில் ஒரு பங்கு குழந்தை மணமகள் இருந்தனர். இந்தியாவில் உள்ள 223 மில்லியன் குழந்தை மணமகள்களில் 102 மில்லியன் பேர் 15 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டுள்ளனர். 2006-ம் ஆண்டில், இந்தியாவில் குழந்தை திருமணங்கள் மொத்த திருமணங்களில் 47% ஆகும்.
தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி, நாட்டில் உள்ள அனைத்து பெண் குழந்தைகளிலும் கிட்டத்தட்ட பாதிப் பேர் 18 வயதை அடையும் முன்பே திருமணம் செய்து கொள்கின்றனர். குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் (பிசிஎம்ஏ) நடைமுறைக்கு வந்த பிறகு, குழந்தைத் திருமண விகிதம் பாதியாகக் குறைந்துள்ளது. இருப்பினும், சில மாநிலங்களில், 40% க்கு மேல் உள்ளது. இதில், முக்கியமாக மேற்கு வங்கம், பீகார் மற்றும் திரிபுராவில் அதிக விகிதங்கள் காணப்படுகின்றன என்று UNICEF அறிக்கை கூறுகிறது. இந்தியாவின், நகர்ப்புறங்களில் 29 சதவிகிதங்களுடன் ஒப்பிடும்போது, கிராமப்புறங்களில் இந்த பிரச்சனை 56 சதவிகிதத்துடன் மோசமாக உள்ளது.
குழந்தைத் திருமணங்களுக்கு வறுமையே முக்கியக் காரணம். குடும்பங்கள் பொருளாதார சிரமங்களை சமாளிக்க இதனை ஒரு வழியாக பார்க்கிறார்கள். பெரும்பாலும், செலவுகளைக் குறைப்பதற்காக, வயதானவர்களுடன் திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். இதனால், இந்த இடப்பெயர்வால் சமூக மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை உடைத்து, இளம் பெண்களை இன்னும் பாதிக்கப்படக்கூடியவர்களாக ஆக்குகிறது.
மணப்பெண்களின் கற்பு மற்றும் கன்னித்தன்மையை பெற்றோர்கள் பெரிதும் மதிக்கிறார்கள். இதனால், அவர்கள் தங்கள் மகள்களுக்கு இளம் வயதில் திருமணம் செய்து வைக்கிறார்கள். மேலும் சில நேரங்களில், இளம் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படலாம் அல்லது ஒருமித்த பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடலாம் என்று அவர்கள் பயப்படுகிறார்கள்.
இதனால், பெற்றோர்கள் தங்கள் மகளுக்கு திருமணம் செய்து வைப்பதை ஒரு மதக் கடமை என்றும், அதை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆழமான நம்பிக்கையும் உள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், குடும்பமும் சமூகமும் ஒப்புக்கொள்வதால், குழந்தை திருமணத் தடைச் சட்டம் (PCMA) போன்ற சட்டங்கள் அரிதாகவே பயன்படுத்தப்படுகின்றன. இளம் பெண்கள் குடும்பம் மற்றும் சமூக அழுத்தத்தை எதிர்க்க போராடுகிறார்கள். மேலும், மாநில ஆதரவு அமைப்புகள் முழுமையானதாகவோ போதுமானதாகவோ இவர்களுக்கு கிடைப்பதில்லை.
குழந்தைத் திருமணங்கள் பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் நடத்தப்படுவதோடு நின்றுவிடுவதில்லை, பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக சிறார்களின் திருமணங்களும் இவற்றில் அடங்கும். "இந்த இரண்டு வகையான திருமணங்களும் ஒரே மாதிரியாக நடத்தப்பட வேண்டுமா?" என்று டெல்லி உயர் நீதிமன்றம் ஜிதேந்தர் குமார் சர்மா vs அரசு-2010 (Jitender Kumar Sharma vs State) வழக்கில் விசாரித்தது. இதில், சிறார்கள் தங்கள் பெற்றோரின் அனுமதியின்றி திருமணம் செய்யத் தேர்ந்தெடுக்கும்போது, குழந்தை திருமணத் தடைச் சட்டம் (பிசிஎம்ஏ) பெரும்பாலும் அவர்களது திருமணம் செல்லாது என்று அறிவிக்கப் பயன்படுகிறது.
இதுபோன்ற வழக்குகளில் நீதிமன்றங்கள் முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை தெரிவித்துள்ளன. யூனுஸ் கான் vs ஹரியானா மாநிலம் (Yunus Khan vs State of Haryana) 2014-ம் ஆண்டு வழக்கில், 16 வயது சிறுமி தனது பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக திருமணம் செய்து கொண்டார். அவரது தந்தை, அந்த பெண்ணின் கணவர் மீது கடத்தல் வழக்கையும், அவரை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி உயர் நீதிமன்றத்திலும் ரிட் மனு தாக்கல் செய்தார். சிறுமி தனது சொந்த விருப்பத்தின் பேரில் திருமணம் செய்து கொண்டதாகக் கூறியதாகவும் மேலும், நீதிமன்றங்கள் திருமணம் செல்லுபடியாகும் என்று கூறியது.
இருப்பினும், அம்ரிந்தர் கவுர் மற்றும் மற்றவர்கள் vs பஞ்சாப் மாநிலம் (Amrinder Kaur and Others vs State of Punjab) 2015-ம் ஆண்டின் வழக்கில், 16 வயது சிறுமியின் குடும்பத்தினர், அந்த நபர் வேற்று வர்க்கத்தைச் சேர்ந்தவர் என்பதால் திருமணத்தை எதிர்த்தபோது, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் அந்த சிறுமி 18 வயது பூர்த்தியடையவில்லை என்றும், அந்த சிறுவன் அவளை கவர்ந்திழுத்து கடத்தியதாகவும் கூறி திருமணம் செல்லாது என்று அறிவித்தது. இந்நிலையில், காவல் பாதுகாப்பு கோரி நீதிமன்றத்தை அணுகி, திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக சிறுமி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
18 வயதிற்குட்பட்ட சிறுமி சட்டப்பூர்வ பாதுகாவலரிடமிருந்து "எடுத்துக்கொள்ளப்பட்ட" அல்லது "ஏமாற்றப்பட்டு" திருமணம் செய்துகொள்ளப்படும்போது இந்த திருமணம் நடைபெறாததுபோல் நிகழ்கிறது. மறுபுறம், குழந்தைக்கு 18 வயதாகும் வரை ‘செல்லாத திருமணம்’ செல்லுபடியாகும். ஆனால், வயது வந்த பிறகு இரண்டு ஆண்டுகளுக்குள் திருமணத்தை "செல்லாததாக" செய்ய சிறுமி நீதிமன்றத்திற்குச் செல்லலாம். கர்நாடகா 2016-ம் ஆண்டில் ஒரு சட்டத்தை இயற்றியது. இந்த சட்டம் அனைத்து குழந்தை திருமணங்களையும் ஆரம்பத்தில் இருந்தே செல்லாது. ஹரியானா 2020-ம் ஆண்டில் இதேபோன்ற திருத்தத்துடன் பின்பற்றப்பட்டது.
இளம் பருவத்தினரின் கவலைகளை ஆதரிப்பதற்கான தேசிய கூட்டணியின் ஆய்வில், கர்நாடகாவில் குழந்தை மணமகள் மீதான பாதிப்பின் தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது. இது அவர்களின் சட்ட நிலை மற்றும் அவர்களின் குழந்தைகளின் நிலை குறித்து முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது. திருமணச் சொத்துரிமை மீதான அவர்களின் உரிமைகளையும் ஆய்வு கேள்விக்குள்ளாக்கியது. கூடுதலாக, இந்தச் சிறுமிகள் எதிர்கொள்ளும் நிதிச் சிக்கல்கள், குறிப்பாக மறுமணம் செய்துகொள்வதற்கான சட்டப்பூர்வ தகுதியின்மையை கணவர்கள் பயன்படுத்திக் கொள்ளும்போது, கைவிடப்படுதல் போன்ற பிரச்சினைகளை சட்டம் எவ்வாறு தீர்க்கும்? என்று அது கேட்டது.
உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் பாராட்டுக்குரியவை. இருப்பினும், அவை நடைமுறையில் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதைப் பார்க்க வேண்டும். பெண்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் மீது குற்றமாக்கலின் தாக்கத்தை உச்ச நீதிமன்றம் புரிந்து கொண்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் முதலில் தடுப்பு, இரண்டாவது பாதுகாப்பு மற்றும் கடைசியாக தண்டிக்கப்படுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது என்று வலியுறுத்தியுள்ளது. இந்த அணுகுமுறை வரவேற்கத்தக்க நிவாரணமாகும்.
Dmello இயக்குனர், மற்றும் Agnesis மஜ்லிஸ் நிறுவனர் ஆவார்.