எல்லைகளைத் தாண்டி : இந்தியா-சீனா ஒப்பந்தம் குறித்து…

 இந்தியா மற்றும் சீனா இடையேயான ஒப்பந்தம் புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.


அக்டோபர் 21, 2024 திங்கட்கிழமை அன்று இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி அறிவித்த படி, நேற்று  இந்தியாவுடன் நான்கு ஆண்டுகால இராணுவ பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை சீனா உறுதிப்படுத்தியது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும். இந்த செய்தி அனைவராலும் வரவேற்கப்படுகிறது.


ஏப்ரல் 2020-ல், சீனா திடீரென உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டை (Line of Actual Control (LAC)) தாண்டி தனது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்ட போது, ​​இந்தியா அதற்குப் பதிலடி தரும் வகையில் தனது படைகளை அனுப்பியது. அதன் பின்னர் இருநாடுகளுக்கும் இடையிலான உறவில் பல்வேறு சிக்கல் நீடித்தது. ஜூன் 2020-ல் கால்வான் மோதலுக்குப் பிறகு பதற்றம் மீண்டும் அதிகரித்தது. இந்த மோதலின் போது 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.  மேலும் வன்முறையைத் தவிர்க்க இரு தரப்பினரும் நடவடிக்கை எடுத்திருந்தாலும், ஐந்து மோதல் புள்ளிகளில் இருந்து விலகியிருந்தாலும், இன்னும் சீனாவின் மீது இந்தியாவிற்கு நம்பிக்கை ஏற்படவில்லை. சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் (People’s Liberation Army (PLA)) 2020-க்கு முன்பு இருந்த நிலைகளுக்கு மீண்டும் திரும்புமா என்று இந்தியாவுக்கு உறுதியாக தெரியவில்லை. 


இது "தற்போதைய நிலைக்கு முந்தைய நிலை" (status quo ante) என்று அழைக்கப்படுகிறது. 2020-க்கு முன்பு இருந்த நிலைமையை மீண்டும் கொண்டு வருவதற்கான சூழலை உருவாக்க இருப்பதாக சீனா ஒப்புக்கொண்டதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். "ரோந்து ஒழுங்கமைப்பு" (patrolling arrangements) பற்றிய அறிவிப்பு நடக்க இருக்கும் BRICS உச்சிமாநாட்டிற்கு முன்பு வந்தது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். 


2020-ஆம் ஆண்டிற்குப் பிறகு  முதல் முறையாக இரு நாட்டு தலைவர்களும் சந்திப்பு நடத்துவதற்கான வாய்ப்பை உருவாக்குகிறது. இதற்கு முன், பிரதமர் நரேந்திர மோடி 2014 முதல் 2019 வரை 18 முறை நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். அவர்கள் வுஹான் மற்றும் மாமல்லபுரத்தில் இரண்டு முக்கிய சந்திப்புகளை மேற்கொண்டனர். 2020 முதல், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் உச்சிமாநாட்டின் போது முறைசாரா பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் இன்னும் வலுவாக உள்ளது. இருப்பினும், முதலீடு, பயணம் மற்றும் விசா தொடர்பான உறவுகள் நிறுத்தப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இந்தப் பகுதிகள் மேம்படுமா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.


அடுத்தகட்ட நடவடிக்கைகள் வெளிப்படையாக செய்யப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.  இது செயல்பாட்டில் நம்பிக்கையை வளர்க்க உதவும் என்று மிஸ்ரி கூறுகிறார். சீனா தனது துருப்புக்கள் சொந்த நிலத்தில் இருப்பதாகக் கூறினாலும், யாரும் இந்திய எல்லை தாண்டி ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று பிரதமர் மோடி கூறினாலும், சீன துருப்புக்கள் அதிக இந்திய எல்லை பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதாக பலர் நம்புகிறார்கள். அவர்கள் இந்திய வீரர்களை ரோந்து செல்வதையும் தடை விதித்துள்ளனர் மற்றும் கிழக்கு லடாக்கில் உள்ள தங்கள் மேய்ச்சல் நிலங்களுக்கு உள்ளூர் கிராமவாசிகளுக்கு அனுமதி மறுத்துள்ளனர். அரசாங்கம் மக்களவைக்கு முழுமையான தகவலை வழங்க மறுப்பது சந்தேகத்தை அதிகரிக்க செய்துள்ளது. சீன துருப்புக்கள் இந்த பகுதிகளை விட்டு வெளியேறியுள்ளன என்று நாட்டு மக்களுக்கு தெரிவிப்பது முக்கியம். 


2017 டோக்லாம் பிரிவினைக்குப் பிறகு, சீனா அப்பகுதியில் தனது இருப்பை அதிகரித்தது. முன்னேற்றமான பாதையை நோக்கி செல்லும் போது, எச்சரிக்கையாக இருப்பது மற்றும் கடந்த கால அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்வது முக்கியம். 1993-ஆம் ஆண்டு எல்லை அமைதி மற்றும் சமாதான ஒப்பந்தம் ( Border Peace and Tranquillity Agreement) மற்றும் 2013-ஆம் ஆண்டு எல்லை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் (Border Defence Cooperation Agreement) போன்ற பழைய ஒப்பந்தங்கள் இன்னும் பயனளிக்குமா என்பதை இருதரப்பும் விவாதிக்க வேண்டும். ஒன்றாக சேர்ந்து பணியற்றுவதற்கான புதிய அணுகுமுறை தேவையா என்பதை இருநாடுகளும் ஆராய வேண்டும். இந்த அணுகுமுறை, எல்லை பிரச்சனைகளை சரி செய்து  புதிய வாய்ப்புகளை உருவாக்க உதவும்.




Original article:

Share: