லடாக் சமூக செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை முடித்தார்: இந்திய அரசியலமைப்பின் 6-வது அட்டவணை என்றால் என்ன?

 சோனம் வாங்சுக் மற்றும் பிற லடாக் ஆர்வலர்கள் 6-வது அட்டவணையை யூனியன் பிரதேசத்திற்கு பயன்படுத்துமாறு கோரியுள்ளனர். 


அக்டோபர் 21 அன்று, லடாக் ஆர்வலர் சோனம் வாங்சுக் தனது காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். லடாக் நிர்வாகம் குறித்த எதிர்கால பேச்சுவார்த்தைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்தது. 


வாங்சுக் மற்றும் பிற ஆர்வலர்கள் செப்டம்பர் மாதம் லடாக்கில் இருந்து டெல்லிக்கு தங்கள் பேரணியைத் தொடங்கினர். இந்திய அரசியலமைப்பின் 6-வது அட்டவணை லடாக்கிற்கு பயன்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. பிராந்திய நிர்வாகத்திற்கு அதிக சுயாட்சி வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். 

 

லடாக்கிலிருந்து தொண்டர்கள் டெல்லிக்கு அணிவகுத்துச் சென்றது ஏன்? 


பொறியாளரும் கண்டுபிடிப்பாளருமான வாங்சுக், சமீபத்திய ஆண்டுகளில் லடாக்கின் நிர்வாகம் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளார். 2019-ஆம் ஆண்டில், அவர் மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சர் அர்ஜுன் முண்டாவுக்கு 6-வது அட்டவணையின் கீழ் லடாக்கிற்கு திட்டமிடப்பட்ட பகுதி அந்தஸ்தைக் கோரி கடிதம் எழுதினார். 


முண்டா தனது அமைச்சகம் இந்த விவகாரம் குறித்து அறிந்திருப்பதாகவும், உள்துறை அமைச்சகத்திற்கு ஒரு திட்டத்தை அனுப்பியுள்ளதாகவும் பதிலளித்தார். இருப்பினும், வாங்சுக்கின் கூற்றுப்படி, அதன் பிறகு லடாக் தலைவர்களுடன் மேற்கொண்டு எந்த விவாதங்களும் நடக்கவில்லை. 


2019-ஆம் ஆண்டில், 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் (Jammu and Kashmir Reorganisation Act), 2019 இயற்றப்பட்ட பின்னர் இந்த கோரிக்கை மிகவும் முக்கியத்துவம் பெற்றது. அப்போது லடாக் தனி யூனியன் பிரதேசமாக அங்கீகரிக்கப்பட்டது. 


2019-ஆம் ஆண்டில், 6-வது  அட்டவணை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டங்களை நடத்தினர். இந்த போராட்டங்களுக்கு லே அபெக்ஸ் அமைப்பை (Leh Apex Body (ABL)) உருவாக்கிய முன்னாள் எம்.பி துப்ஸ்டன் செவாங் ஆதரவளித்தார். கார்கிலில் உள்ள அமைப்புகளும் ஒன்றிணைந்து கார்கில் ஜனநாயக கூட்டணியை (Kargil Democratic Alliance (KDA)) உருவாக்கின. இந்த போராட்டங்களை இரு குழுக்களும் முன்னின்று நடத்தி வருகின்றன.  6-வது அட்டவணை கீழ் பாதுகாப்புகள் 2019-ஆம் ஆண்டில் பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதி என்று வாங்சுக் கூறினார். இந்த வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.


லடாக்கில் ஆறாவது அட்டவணைக்கான தேவை என்ன? 


இந்திய அரசியலமைப்பின் 244-வது பிரிவின் கீழ், 6-வது அட்டவணை, தன்னாட்சி மாவட்ட கவுன்சில்கள் (Autonomous District Councils (ADCs)) மற்றும் தன்னாட்சி பிராந்திய கவுன்சில்கள் (Autonomous Regional Councils (ARCs)) எனப்படும் பழங்குடி நிர்வாக பகுதிகளை உருவாக்க அனுமதிக்கிறது. லடாக்கின் மக்கள் தொகையில் பெரும்பாலோர் பட்டியல் பழங்குடியினரைச் சேர்ந்தவர்கள். 


தன்னாட்சி மாவட்ட கவுன்சில்கள் 30 உறுப்பினர்கள் வரை இருக்கலாம் மற்றும் ஐந்து ஆண்டுகள் பணியாற்றலாம்.  நிலம், காடுகள், நீர், விவசாயம், கிராம சபைகள், சுகாதாரம், மற்றும் கிராம மற்றும் நகர மட்டங்களில் காவல்துறை குறித்து சட்டங்களை இயற்றும் அதிகாரம் அவர்களுக்கு உள்ளது. தற்போது, வடகிழக்கு இந்தியாவில் 10 தன்னாட்சி மாவட்ட கவுன்சில்கள் உள்ளன. இவை அசாம், மேகாலயா மற்றும் மிசோரமில் தலா மூன்று, திரிபுராவில் ஒன்று  உள்ளது. 


லடாக் மக்கள் அதிகாரப்பரவலை விரும்புகிறார்கள் என்று வாங்சுக் கூறினார். லடாக்கின் பள்ளத்தாக்குகளில் சுரங்கம் நடக்க விரும்பும் தொழில்துறை சக்திகளால் உள்ளூர் அதிகாரத்துவத்தினர் பாதிக்கப்படலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள். 

போராட்டத்திற்கு வேறு காரணங்கள் என்ன? 


மார்ச் மாதத்தில், மத்திய உள்துறை அமைச்சகம், தன்னாட்சி மாவட்ட கவுன்சில்கள் மற்றும் தன்னாட்சி பிராந்திய கவுன்சில்கள் இடையேயான பேச்சுவார்த்தைகள் முடங்கின. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 371-வது பிரிவைப் போன்ற பாதுகாப்புகளை வழங்கினார். வேலைகள், நிலம் மற்றும் கலாச்சாரம் குறித்த கவலைகளுக்கு தீர்வு காண முன்வந்தார். ஆனால், லடாக் 6-வது அட்டவணையில் சேர்க்கப்படாது என்று அவர் கூறினார். 


இதையடுத்து வாங்சுக் உள்ளிட்டோர் லேவில் உண்ணாவிரதத்தை தொடங்கினர். அவர் தண்ணீரையும் உப்பையும் உண்டு உயிர் வாழ்ந்தார். 21 நாட்கள் உறைபனி வெப்பநிலையில் வெளியில் தூங்கினார். 


சீன எல்லைக்கு திட்டமிடப்பட்டிருந்த 'பஷ்மினா அணிவகுப்பு' (‘Pashmina march’) பின்னர் ரத்து செய்யப்பட்டது. ஐபிசியின் பிரிவு 144 விதிக்க நிர்வாகம் அச்சுறுத்தியதாக வாங்சுக் கூறினார். வாங்சுக்கின் கூற்றுப்படி, பாரம்பரியமாக புகழ்பெற்ற பஷ்மினா ஆடுகளை மிகவும் விரும்பப்படும் கம்பளிக்காக வளர்த்து வந்த மேய்ப்பர்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டனர். அவர் இரண்டு காரணங்களை மேற்கோள் காட்டினார். அவை, தொழில்துறை அலகுகள் அல்லது சூரிய ஆலைகளுக்காக நிறுவனங்களுக்கு நிலத்தை இழந்தவர்கள் மற்றும் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (Line of Actual Control (LAC) ) சீன நடவடிக்கைகள். 


2019-ஆம் ஆண்டு முதல் லடாக்கில் உள்ள  வேலையின்மை குறித்தும் வாங்சுக் கவலை தெரிவித்தார். 


இனி என்ன நடக்கும்? 


சமீபத்திய 'டெல்லி சலோ பாதயாத்திரை' (‘Delhi Chalo Padyatra’) அபெக்ஸ் பாடி, லே (Apex Body, Leh (ABL)) ஆல் ஏற்பாடு செய்யப்பட்டது. லடாக்கிற்கு மாநில அந்தஸ்து, ஆறாவது அட்டவணையை நீட்டிப்பது, ஆட்சேர்ப்புக்கான பொது சேவை ஆணையம் மற்றும் லே மற்றும் கார்கிலுக்கு தனி மக்களவை இடங்கள் ஆகிய நான்கு அம்ச நிகழ்ச்சி நிரலை அவர்கள் முன்வைத்தனர். 


ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கின் இணைச் செயலாளரான பிரசாந்த் லோகண்டே, புதுதில்லியில் உள்ள லடாக் பவனில் ஆர்வலர்களை சந்தித்து திங்கள்கிழமை அமைச்சகத்தின் கடிதத்தை அவர்களிடம் வழங்கினார். முன்னதாக லடாக் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய உயர்மட்டக் குழு டிசம்பர் 3-ல் அவர்களை சந்திக்க உள்ளதாக கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 




Original article:

Share: