தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவின் (National Council of Educational Research and Training (NCERT)) பாடத்திட்டத்தைத் தவிர, மதரஸா கல்விக்கான கட்டமைப்பை இந்த சட்டம் வழங்குகிறது.
நாடு முழுவதும், மதம் சார்ந்த கல்வி முறைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒத்திவைத்தது. இந்தியாவின் தலைமை நீதிபதி (Chief Justice of India (CJI)) DY சந்திரசூட் தலைமையிலான அமர்வு, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஒரு வழக்கை மறுஆய்வுக்கு உட்படுத்தியது. இதில், மார்ச் மாதம் உத்தரப் பிரதேச மதரஸா கல்வி வாரியச் சட்டம், 2004யை (Madarsa Education Act(Madarsa Act)) ரத்து செய்தது.
ஏப்ரல் மாதம், உச்ச நீதிமன்றம் மதரஸா கல்வி வாரியச் சட்டத்தை மறுஆய்வு செய்யும் போது, உத்தரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே, தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (National Commission for the Protection of Child Rights) ஜூன் 7 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இரண்டு அறிவுப்புகளை வெளியிட்டது. இவை அங்கீகரிக்கப்பட்ட மதரஸாக்களை விசாரிக்கவும், முறையான கல்வியை வழங்கும் பள்ளிகளில் முஸ்லீம் அல்லாத மாணவர்களை அனுமதிக்கவும் உத்திர பிரதேச அரசுக்கு உத்தரவிட்டது. மதரஸாக்களை ஆய்வு செய்ய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், கல்வி உரிமைச் சட்டம், 2009 பின்பற்றாதவர்களுக்கு அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்த அறிக்கைகள் ஒன்றிய அரசைக் கேட்டுக் கொண்டன.
இந்த இரண்டு அறிக்கைகளையும் உச்ச நீதிமன்றம் அக்டோபர் 21 அன்று தடை செய்தது.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (NCERT) பாடத்திட்டத்தைத் தவிர, மதரஸா கல்விக்கான சட்ட கட்டமைப்பை இந்த சட்டம் வழங்குகிறது.
இந்த சட்டம் உத்தரபிரதேச மதரஸா கல்வி வாரியத்தை நிறுவுகிறது. இந்த வாரியம் முக்கியமாக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்டது. சட்டத்தின் 9-வது பிரிவு வாரியத்தின் செயல்பாடுகளை விவரிக்கிறது. 'மௌல்வி' (‘Maulvi’) (10 ஆம் வகுப்புக்கு சமமானது) முதல் 'பாசில்' (‘Fazil’) (முதுகலை பட்டத்திற்கு சமமானது) வரையிலான பாடங்களுக்கான படிப்புகளைத் தயாரித்தல் மற்றும் தேர்வுகளை நடத்துவது ஆகியவை இதில் அடங்கும்.
பிப்ரவரி 3, 2020-ஆம் ஆண்டில் ‘நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்ட ஒன்றிய அரசின் தரவுகளின்படி, 2018-19 ஆம் ஆண்டில் இந்தியாவில் 24,010 மதரஸாக்கள் இருந்தன. இவற்றில் 60% க்கும் அதிகமானவையாக கிட்டத்தட்ட 14,528 மதரஸாக்கள் உத்திர பிரதேசத்தில் உள்ளன. இதில் 11,621 அங்கீகரிக்கப்பட்ட மதரஸாக்கள் அடங்கும். 2023-ஆம் ஆண்டில், 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வுகளுக்குச் சமமான உத்தரபிரதேச மதரஸா கல்வி வாரியத் தேர்வுகளில் சுமார் 1.69 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மார்ச் 22 அன்று, நீதிபதிகள் சுபாஷ் வித்யார்த்தி மற்றும் விவேக் சவுத்ரி ஆகியோர் அடங்கிய அமர்வானது ஒரு முடிவை எடுத்தது. இந்த சட்டத்தில், மூன்று முக்கிய காரணங்களுக்காக இச்சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது என்பதன் அடிப்படையில் மதரஸா சட்டத்தை முற்றிலுமாக நீக்கினார்கள்.
மதச்சார்பின்மை (SECULARISM) : உச்சநீதிமன்றத்தின் முந்தைய வழக்குகளை குறிப்பிட்டு, மதச்சார்பின்மை என்பது அனைத்து மதங்களையும், பிரிவுகளையும் சமமாக நடத்துவதாகும். அரசு எந்த ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது பிரிவினருடன் அடையாளப்படுத்தவோ அல்லது ஆதரவாகவோ இருப்பதாக பாகுபாடு காட்டக் கூடாது என்று உயர்நீதிமன்றம் கூறியது.
மதரஸாவில் மாணவர்கள், ஒவ்வொரு வகுப்பிலும் இஸ்லாம் படிப்பது கட்டாயம் என்று நீதிமன்றம் கூறியது. இதனால், மதத்தின் போதனைகள், விதிகள் மற்றும் தத்துவங்களைப் பற்றி அறிந்துகொள்வது இதில் அடங்கும். மதரஸாக்களில் நவீன பாடங்கள் விடுபட்டுள்ளன அல்லது விருப்பத்திற்குரியவை என்றும், மதச்சார்பற்ற கல்வியை வழங்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என்று நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. மதத்தின் அடிப்படையில் மட்டும் கல்வியை வழங்க முடியாது, அது பாரபட்சமாக இருக்கும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
கல்வி உரிமை (RIGHT TO EDUCATION) : அரசியலமைப்பின் பிரிவு 21A ஆறு முதல் பதினான்கு வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியை அரசு வழங்க வேண்டும் என்று அரசியலமைப்பு குறிப்பிடுகிறது.
நவீனபாட முறைகளில் "தரமான" கல்வியை மறுப்பதன் மூலம் கல்வி உரிமையை அரசு மீறுவதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறைந்த கட்டணத்தில் பாரம்பரியக் கல்வியை வழங்குவதன் மூலம் அரசாங்கம் தனது கடமையைச் செய்வதாகக் கூறி சாக்குப்போக்கு கூற முடியாது என்று நீதிமன்றம் மேலும் கூறியுள்ளது.
மத்திய சட்டத்துடன் முரண்பாடு (CONFLICT WITH CENTRAL LAW) : மதரஸா சட்டம், பல்கலைக்கழக மானியக் குழு சட்டம் (University Grants Commission Act(UGC)), 1956-ஆம் ஆண்டுடன் முரண்படுகிறது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. யுஜிசி சட்டத்தின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்கள் அல்லது நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மட்டுமே சான்றிதழ்களை வழங்க முடியும் என்று அது கூறியது. எந்த மதரஸா அல்லது மதரஸா வாரியமும் சான்றிதழ்களை வழங்க முடியாது.
உச்ச நீதிமன்றத்தின் முன் வாதங்கள்:
அக்டோபர் 2024 விசாரணைகளின்போது இரண்டு முக்கிய கேள்விகள் எழுந்தன.
முதலாவதாக, மதர்சா "மதக் கல்வியை" (religious education) வழங்குகிறதா அல்லது "மத போதனையை" (religious instruction) வழங்குகிறதா என்பதுதான் பிரச்சினை. திருமதி அருணா ராய் vs யூனியன் ஆஃப் இந்தியா (Ms. Aruna Roy vs. Union of India) 2002-ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றம் இரண்டிற்கும் இடையே வேறுபாட்டை எடுத்துக் காட்டியது.
அரசியலமைப்பின் 28-வது பிரிவின்படி, அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் மத வழிபாடுகளில் மாணவர்களை கட்டாயப்படுத்துவது அனுமதி இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருப்பினும், மதக் கல்வியின் நோக்கம் அல்லது "மதங்களைப் பற்றிய கல்வி" என்பது வெவ்வேறு மதங்களைப் பற்றி மாணவர்களுக்கு கற்பிப்பதாகும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. இது மத நல்லிணக்கத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அக்டோபர் 21-ஆம் தேதி நடந்த விசாரணையின் போது, உயர் நீதிமன்றம் மத போதனையுடன் ஒழுங்குமுறைகளை தவறாகக் இணைத்துள்ளது என்று மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி வாதிட்டார். மத போதனை அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மை கொள்கையை மீறுவதாக உயர் நீதிமன்றம் கருத்து தெரிவிக்கிறது என்று அவர் கூறினார்.
இரண்டாவதாக, மதரஸா சட்டம் முழுவதையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்க வேண்டுமா? மாற்றாக, சட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் நீதிமன்றம் நீக்கியிருக்க வேண்டுமா? இது மதரஸா நிறுவனங்களின் செயல்பாட்டை அரசு தொடர்ந்து ஒழுங்குபடுத்த அனுமதித்திருக்கும் என்று நீதிமன்றம் விவாதித்தது.
அக்டோபர் 22 அன்று, தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்த கருத்தில், "மதரஸா சட்டத்தை நீக்குவது குழந்தையை குளியலறையில் வீசுவது போன்றது". இந்த சட்டத்தின் கீழ் விதிகளை உருவாக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று அவர் விளக்கினார். இந்த விதிகளின் அடிப்படையில் வழங்கப்படும் கல்வியானது மிகவும் மதச்சார்பற்ற தன்மையைக் கொண்டிருப்பதை உறுதிசெய்யும்.
மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ண குமார் சார்பில் ஆஜரான பிரதிவாதிகள், மாணவர்கள் மதச்சார்பற்ற கல்வியைப் பெறுவதை உறுதி செய்வதற்காக இந்த சட்டம் இல்லை என்று வாதிட்டனர். அவர்கள் முக்கிய கண்ணோட்டத்தில் அனுமதிப்பதற்காக உதவுவதும், இதன் நோக்கம் அல்ல. இந்தச் சட்டம் தற்போதைய நிலையைப் உறுதிபடுத்துகிறது என்று அவர் விளக்கினார். இந்த சூழ்நிலையில், முக்கிய பாடங்கள் விருப்பமானவை மற்றும் அதே சமயம் மதக் கல்வி கட்டாயமாகும் என்று மேலும் குறிப்பிட்டிருந்தார்.
முடிவின் தாக்கம்
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உத்தரப் பிரதேசத்தில் நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தும். எவ்வாறாயினும், இந்த தீர்ப்பு நாடு முழுவதும் உள்ள மதக் கல்வியில் பரந்த விளைவை ஏற்படுத்தும் என்று இந்திய தலைமை நீதிபதி (CJI) வழக்கறிஞர்களை எச்சரித்தார். குருகுலங்கள் மற்றும் கான்வென்ட் பள்ளிகள் போன்ற மதக் கல்வியை வழங்கும் அனைத்து நிறுவனங்களும் பாதிக்கப்படலாம் என்று தலைமை நீதிபதியின் கருத்துகள் தெரிவிக்கின்றன. இந்த அமைப்புகளின் செயல்பாட்டிற்கு மதச்சார்பின்மை கொள்கைகள் எவ்வாறு பொருந்தும் என்ற கருத்தும் தோன்றுகின்றன.