உடல் பருமன் மற்றும் நீரிழிவு ஆகிய நோய்களின் இரட்டை சவாலானது, பருவ வயது பெண்கள் மற்றும் இளம் பெண்களின் ஆரோக்கியத்தில் முதலீடு செய்வதன் மூலம் மட்டுமே சமாளிக்க முடியும்.
தி லான்செட்டில் ‘நோயின் உலகளாவிய சுமை ஆய்வு’ (Lancet's Global Burden of Disease study), ஊட்டச்சத்து குறைபாடு (undernutrition) மற்றும் உடல் பருமன் (obesity) ஆகிய இரண்டின் உலகளாவிய பிரச்சினையில் ஒரே நேரத்தில் கவனம் செலுத்துகிறது. பெரும்பாலான அறிக்கைகள் ஒரே நேரத்தில் ஒரு புள்ளியைப் பார்க்கின்றன, ஆனால் சிறிய மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களில் நீரிழிவு மற்றும் உடல் பருமன் எவ்வாறு உருவாகிறது என்பதை இந்திய தரவுகள் நமக்கு வழங்குகிறது. இந்தியாவில், ஆரம்பகால வாழ்க்கையில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீரிழிவு மற்றும் உடல் பருமன் அதிகரிப்பு என்பதான ஒரு இரட்டை சவால் உள்ளது. கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் (1830-1980) ஐரோப்பியர்கள் 15 செ.மீ உயரத்தைப் பெற்றதால், ஊட்டச்சத்துக் குறைபாட்டின் வரலாற்று மரபு உள்ளது. அதே சமயம், இந்தியர்கள் இதேபோன்ற வளர்ச்சியை அனுபவிக்கவில்லை. இருப்பினும், தற்போதைய தலைமுறை இந்தியக் குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை விட சுமார் 5 செ.மீ உயரமாக உள்ளனர். நீண்ட காலமாக போதுமான உணவு இல்லாததிலிருந்து திடீர் முன்னேற்றம் வரை செல்வது ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தும். இதற்கு தீர்வு உண்டா? ஆம், இயற்கையின் வழிகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்.
"உடல் பருமன் தினம்" (obesity day) மற்றும் "மகளிர் தினம்" (women’s day) ஒரே நேரத்தில் நடக்கிறது என்ற உண்மையை நாம் அடிக்கடி கவனிக்கத் தவறிவிடுகிறோம். ஆரம்பகால வாழ்க்கையில் ஊட்டச்சத்து குறைபாடு, நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சினைகள் பல ஆண்டுகளாக இளம் தாய்மார்களின் ஆரோக்கியத்தையும், ஊட்டச்சத்தையும் புறக்கணிப்பதால் ஏற்படுகின்றன என்பதை நாம் தவறவிட்டோம். கர்ப்ப காலத்தில் இளம் பெண்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் ஊட்டச்சத்தையும் மேம்படுத்துவது இந்த சிக்கல்களைத் தடுக்க உதவும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. வாழ்க்கையின் பிற்பகுதியில் பிரச்சினையைத் தீர்க்க முயற்சிப்பது குதிரை ஏற்கனவே தப்பித்த பிறகு கதவை மூடுவதற்கு சமம்.
1970களில், புனேவில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி மற்றும் சசூன் மருத்துவமனையில் (BJ Medical College and Sassoon Hospital) மருத்துவராகப் பணிபுரிந்தபோது, நீரிழிவு கிளினிக்கில் (diabetes clinic) பல நோயாளிகள் ஏழ்மையான பின்னணியிலிருந்து வந்தவர்களாக உள்ளனர். மேற்கத்திய பாடப்புத்தகங்களில் காணப்படும் வயதான, பருமனான நீரிழிவு நோயாளிகளின் வழக்கமான விளக்கத்திற்கு அவை பொருந்தவில்லை. மேற்கத்தியர்களுடன் ஒப்பிடும்போது இந்தியர்கள் ஏன் இளம் வயதில் நீரிழிவு நோயை உருவாக்குகிறார்கள் மற்றும் உடல் பருமன் குறைவாக உள்ளது என்பது ஆச்சரியமாக உள்ளது.
1980 களின் முற்பகுதியில் ஆக்ஸ்போர்டில் எனது பயிற்சியின் போது, எனது எடை 55 கிலோவாக இருந்தது, உடல் நிறை குறியீட்டெண் (BMI— kg/m2) மூலம் அளவிடப்பட்டபடி நான் சந்தேகத்திற்கு இடமின்றி மெல்லியவனாக இருந்தேன். இருப்பினும், நான் ஆராய்ச்சியில் பங்கேற்றபோது, எனது குளுக்கோஸ்-இன்சுலின் வளர்சிதை மாற்றம் எனது 80 கிலோ ஆங்கில சக ஊழியரை விட மோசமாக இருப்பதைக் கண்டேன். ஒல்லியாக இருந்தபோதிலும், அதிக எடை கொண்ட நபரின் வளர்சிதை மாற்ற பிரச்சினைகள் எனக்கு இருந்தன. நான் 5 பவுண்டுகளுக்கும் குறைவான எடையுடன் பிறந்தேன், எனது 20 வயதுகளின் பிற்பகுதியில் ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொண்டேன். இருப்பினும் ஊட்டச்சத்து குறைபாடு என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. அதே நேரத்தில், லண்டனின் சவுத்ஹாலில் (Southall) ஒரு கணக்கெடுப்பு, இங்கிலாந்து மக்களை விட, குடியேறிய இந்தியர்களிடையே நீரிழிவு நோய் மிகவும் பொதுவானதாக வெளிப்படுத்தியது. இது இங்கிலாந்து மக்களை விட இந்தியர்கள் அதே BMI-யில் அதிக கொழுப்பைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடிக்க வழிவகுத்தது. இதனால், "மெல்லிய-கொழுப்பான" (thin-fat) இந்தியர் என்ற கருத்து பிறந்தது.
இந்தியர்கள் அடிவயிற்றிலும் அதைச் சுற்றியும் அதிக கொழுப்பைக் குவிப்பதாக எங்கள் ஆய்வுகள் விரைவாக வெளிப்படுத்துகின்றன. இது மத்திய உடல் பருமன் (central obesity) என்று அழைக்கப்படுகிறது மற்றும் இடுப்பு அளவைக் (waist size) கொண்டு அளவிடப்படுகிறது. வியக்கத்தக்க வகையில், குறைந்த பிஎம்ஐ (Body Mass Index (BMI) உள்ளவர்கள் ஆனால் அதிக இடுப்பு அளவீடு கொண்டவர்கள் அதிக குளுக்கோஸ் அளவைக் கொண்டிருந்தனர். இந்தியர்களின் கணையங்கள் குறைந்த இன்சுலினை உற்பத்தி செய்கின்றன. மேலும் பல்வேறு உறுப்புகளைச் சுற்றியுள்ள கொழுப்பு காரணமாக அவை உற்பத்தி செய்யும் இன்சுலின் நன்றாக வேலை செய்யாது. இது முற்றிலும் மரபணு என்று பலர் நினைத்தாலும், நான் இன்னும் குறிப்பிடத்தக்க ஒன்றைக் கண்டுபிடித்தேன்.
1991 ஆம் ஆண்டு ஒரு திங்கட்கிழமை காலை நீரிழிவு நோயால் பாதிக்கப்படக்கூடிய "மெல்லிய கொழுப்பு" இந்தியன் (“thin-fat” Indian) என்ற எனது கருத்தை விளம்பரப்படுத்துவதில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு ஆங்கில விஞ்ஞானி என்னைச் சந்திக்க விரும்புவதாக எனக்கு அழைப்பு வந்தது. நான் பேராசிரியர் டேவிட் பார்கர் மற்றும் அவரது மாணவி கரோலின் ஃபால் ஆகியோரை KEM மருத்துவமனையில் சந்தித்தேன், இங்கிலாந்தில் அவர்களின் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு பற்றி நான் அறிந்தேன். குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு பிற்காலத்தில் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை அவர்கள் கண்டறிந்தனர். (எனக்கு ஏற்கனவே தெரியாதது போல்?) இந்தியக் குழந்தைகள் உலகின் மிகச் சிறிய குழந்தைகளாக அறியப்பட்டதால், தங்கள் யோசனைக்கு ஆதரவைப் பெறுவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்கள் இந்தியாவுக்கு வந்துள்ளனர். மகப்பேறுக்கு முற்பட்ட நிலையில் ஊட்டச்சத்து குறைபாடு வளரும் உறுப்புகளின் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டை மாற்றுகிறது. அதிகப்படியான ஊட்டச்சத்து, செயலற்ற தன்மை, உளவியல்-சமூக அழுத்தம், இடம்பெயர்வு போன்ற அழுத்த காரணிகளைக் கையாளும் திறனைக் குறைக்கிறது என்று பார்கர் முன்மொழிந்தார்.
இந்திய குழந்தைகள், ஆங்கில குழந்தைகளை விட 800 கிராம் எடை குறைவாக இருந்தபோதிலும் (2.7 கிலோ மற்றும் 3.5 கிலோ), அதிக கொழுப்பைக் கொண்டுள்ளன என்பதை நாங்கள் ஒரு சுவாரஸ்யமான உண்மையைக் கண்டறிந்தோம். ஆச்சரியம் என்னவென்றால், புதிதாகப் பிறந்த இந்திய குழந்தைகளின் இரத்த வேதியியல் ஒரு ஜாதகத்தைப் போலவே அவர்களின் எதிர்கால நீரிழிவு அபாயத்தை கணித்துள்ளது. கர்ப்ப காலத்தில் அவர்களின் தாய்மார்களுக்கு போதுமான சீரான ஊட்டச்சத்து கிடைக்காததால் இது நிகழ்கிறது. இது குறைந்த புரதச்சத்து நிறைந்த திசு மற்றும் அதிக கொழுப்பு குழந்தையில் இருப்பு செய்யப்படுவதற்கு வழிவகுக்கிறது. இந்த தாய்மார்களில் பலருக்கு கர்ப்பகால நீரிழிவு நோயும் உள்ளதுடன், இது குழந்தையின் கொழுப்பை அதிகரிக்கிறது. முக்கிய யோசனை என்னவென்றால், கருப்பையில் ஊட்டச்சத்து குறைபாடு, தாய்வழி நீரிழிவு, நோய்த்தொற்றுகள் மற்றும் மன அழுத்தம் போன்ற சவாலான சூழலுக்கு வெளிப்படுவது எதிர்கால நீரிழிவு, உடல் பருமன் மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. இரண்டாம் உலகப் போரின்போது கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை அனுபவித்த டச்சு மக்களில் இந்த தொடர்பு முதன்முதலில் கவனிக்கப்பட்டது.
மரபணு காரணிகள் உடல் பருமன் மற்றும் நீரிழிவு அபாயத்தின் ஒரு சிறிய பகுதியை மட்டுமே விளக்குகின்றன. கர்ப்ப காலத்தில் "எபிஜெனெடிக்ஸ்" (epigenetics) எனப்படும் பிற காரணிகளும் DNA-வை மாற்றாமல் மரபணு வெளிப்பாட்டை பாதிப்பதன் மூலம் ஒரு பங்கைக் கொண்டுள்ளன. மரபியல் போலல்லாமல், தாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் இந்த காரணிகளை மாற்றலாம். இது எதிர்காலத்திற்கான நம்பிக்கையை அளிக்கிறது. இந்திய தாய்மார்கள் பல தலைமுறைகளாக பல சவால்களை எதிர்கொண்டுள்ளனர். இது விரைவான வளர்ச்சியுடன் போராடும் சிறிய குழந்தைகளுக்கு வழிவகுக்கிறது. தாய்வழி ஆரோக்கியம், ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதன் மூலம், அதிக நெகிழ்திறன் கொண்ட ஆரோக்கியமான குழந்தைகளை நாம் பெற முடியும். பல தேசிய கொள்கைகள் இளம்பெண்கள் மற்றும் பெண்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துகின்றன. இது எதிர்கால சந்ததியினருக்கு பயனளிக்கின்றன. இந்த ஆய்வுத் துறை "உடல்நலம் மற்றும் நோய்களின் வளர்ச்சி தோற்றம்" (Developmental Origins of Health and Disease) என்று அழைக்கப்படுகிறது, மேலும் இந்தியா அதில் பெரும் பங்கு வகிக்கிறது.
உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான நோய்வாய்ப்பட்ட தொழில்துறையின் வாக்குறுதிகளுக்கு அடிபணியாமல் இளம் பெண்களின் ஆரோக்கியத்தில் முதலீடு செய்ய உறுதி கொள்வோம். நாம் நிறைவேற்ற வேண்டிய இரட்டைப் பொறுப்பு உள்ளது.
கட்டுரையாளர், பூனேவில் அமைந்துள்ள KEM Hospital and Research Centre இன் நீரழிவுத் துறையின் இயக்குநர்.