ப்ளே ஸ்டோரில் (Play Store) இருந்து சில இந்திய செயலிகளை கூகுள் (Google) நீக்கியது ஏன் ? -அரூன் தீப்

 இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் கூகுள் (Google) இடையே  உள்ள கட்டணச் சிக்கல் என்ன? 


மார்ச் 1 ஆம் தேதி, கூகுள் நிறுவனம் தனது ஆப் ஸ்டோரில் இருந்து கிட்டத்தட்ட 12 செயலிகளை நீக்கியது. கூகுள் நிறுவனத்திற்கும் இந்திய நிறுவனங்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக நிலவி வந்த சிக்கல்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த  சிக்கல்கள் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டது.  மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (Ministry of Electronics and Information Technology) தலையீட்டிற்குப் பிறகு, திங்களன்று பயன்பாடுகள் மீண்டும் தொடங்கப்பட்டன. இருப்பினும், பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது.       


என்ன பிரச்சனை?


முக்கிய பிரச்சனை, கூகுளின் இயங்குதளக் கட்டணத்தைச் சுற்றியே உள்ளது. பயனர்கள் மின்புத்தகம் வாங்குதல் அல்லது OTT சந்தா ஆகியவற்றிற்கு முற்றிலும் மின்னணு சேவையை உள்ளடக்கிய அனைத்து செயலிகள் சார்ந்த பயன்பாட்டிற்கு கூகுள் ஒரு பரிவர்த்தனைக்கு 11%  முதல் 30% வரை கட்டணம் வசூலிக்கும். இந்த கட்டணம், கூகுள் பிளே (Google Play) ஐ பராமரிக்கவும் ஆண்ட்ராய்டு  சூழல் (Android ecosystem) அமைப்பை  மேம்படுத்தவும் உதவுகிறது என்று கூகுள் கூறுகிறது. செயலி உருவாக்குநர் ஒருவர் கூகுளின் சொந்த சேவையை அல்லது தயாரிப்பைப் பயன்படுத்தினால், மற்றும் தொடர்ச்சியான சந்தா சேவையை வழங்குகிறார் அல்லது செயலி வழியிலான கட்டணம் செலுத்துதல்கள் (in-app payments) மூலம் வருடத்திற்கு $1 மில்லியனுக்கும் குறைவாக வருமானம் ஈட்டினால், நிறுவனம் பயன்பாட்டாளர்களிடம்  15% கட்டணம்  வசூலிக்கிறது. ஆனால், பெரிய நிறுவனங்களுக்கு செயலிகள் வாங்குவதற்கான (app purchases) கட்டணமாக 30%  கட்டணம்  வசூலிக்கிறது. இந்தியா மற்றும் தென் கொரியாவில், செயலிகளை உருவாக்குபவர்கள் கடுமையான சிக்கல்களை  எதிர்கொண்டு வருகின்றனர். மற்றொரு கட்டண முறையைத் தேர்வுசெய்தால், கூகிள், 11% அல்லது 26% கட்டணத்தை வசூலிக்கிறது. இந்தியாவில் செயலிகளை உருவாக்குபவர்கள், உலகளவில் பலரைப் போலவே,  இந்தக் கட்டணங்களை அதிகமாகக் காண்கிறார்கள். பாரத் மேட்ரிமோனி (Bharat Matrimony) மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) போன்றவை கட்டணத்தை முழுவதுமாக செலுத்துவதைத் தவிர்க்க சட்ட நடவடிக்கையை நாடியுள்ளன.


 "ஆப் ஸ்டோர் சூழல் அமைப்பை (app store ecosystem) இயக்குவதற்கு கூகுள் கட்டணம் வசூலிக்கலாம். ஆனால், அவை எவ்வளவு வசூலிக்கின்றன என்பதுதான் முக்கிய பிரச்சினை" என்று பொதுக் கொள்கை நிறுவனமான தி குவாண்டம் ஹப்பின் (public policy firm The Quantum Hub) நிறுவனர் ரோஹித் குமார் கூறினார்.


மற்ற சந்தைகளைப் பற்றி என்ன?


ஆப்பிள் (apple) இந்தியாவில் அதிக எதிர்ப்பை எதிர்கொள்ளவில்லை. ஏனெனில், இங்கு குறைவான மக்கள் அதன் தயாரிப்புகளைப் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், திறன்பேசி (smartphone) சந்தையில் ஆண்ட்ராய்டு ஆதிக்கம் செலுத்துகிறது. மேலும், செயலிகள் உருவாக்குபவர்கள் வாடிக்கையாளர்களை அடைய google play முக்கிய இடமாகும். ஆப்பிள் மற்றும் கூகிள் இரண்டும் இந்த கட்டணங்கள் தொடர்பாக உலகளவில் எதிர்ப்பை சந்தித்தன. இசை ஓட்ட (music streaming) சேவையான ஸ்போடிஃபை (Spotify), கட்டணங்களைத் தவிர்ப்பதற்காக ஆப் ஸ்டோருக்கு வெளியே அதன் சேவைக்கு பணம் செலுத்துமாறு பயனர்களிடம் சொல்வதை ஆப்பிள் நிறுத்தியபோது ஐரோப்பிய ஆணையத்திடம் (European Commission) புகார் அளித்தது. ஆப்பிள் மியூசிக் (apple music) அதே 30% கட்டணத்தை எதிர்கொள்ளாததால் இது நியாயமற்றது என்று Spotify வாதிட்டது. நியாயமற்ற வர்த்தகத்திற்காக ஐரோப்பிய ஆணையம் (European Commission) ஆப்பிள் நிறுவனத்திற்கு 1.84 பில்லியன் யூரோ அபராதம் விதித்தது.  இதேபோல், எபிக் கேம்ஸ் (epic games), பிரபலமான ஃபோர்ட்நைட் பிராஞ்சைஸ் (Fortnite franchise), ஆப்பிள் மற்றும் கூகுள் மீது 30% கட்டணத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. 

 ஆப்பிளைப் போலல்லாமல், கூகுள் உலகெங்கிலும் உள்ள மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோர்களை (third party app stores) அனுமதிக்கிறது, இது செயலிகளை உருவாக்குபவர்களுக்கு இந்தக் கட்டணங்களைத் தவிர்ப்பதில் இன்னும் கொஞ்சம் வாய்ப்பளிக்கிறது. ஆனால் பெரும்பாலான ஆண்ட்ராய்டு போன்களில் கூகுள் ப்ளே இயல்பாகவே நிறுவப்படும்.  


கட்டுப்பாட்டாளர்கள் எவ்வாறு பதிலளித்துள்ளனர்?

2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் போட்டி ஆணையம் (Competition Commission of India (CCI)) கூகுளின் பிளே ஸ்டோர் கொள்கைகளுக்காக ₹936.44 கோடி அபராதம் விதித்தது. கூகுள் நிறுவனம் அந்த அபராதத்தை மேல்முறையீடு செய்ய  உள்ளது. அத்துடன் டெவலப்பர்களுக்கு பணம் செலுத்துவதற்கான விரிவான தேர்வுகளை வழங்கும்  இந்தியாவின் போட்டி ஆணையம் உத்தரவுகளையும் கொண்டுள்ளது. இந்த அபராதத்தை எதிர்த்து கூகுள் செய்த மேல்முறையீடு தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் (National Company Law Appellate) நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், நீதிமன்றத்திற்குச் சென்ற இந்திய பயன்பாடுகள் இப்போது மீண்டும் மேடையில் உள்ளன. இந்தியாவில் உள்ள மின்னணு பொருளாதாரத்தின் முக்கியப் பகுதியான செயலிகளுக்குள் பணம் செலுத்துதல் (In-app payments) இன்னும் இல்லை. ஏனெனில், இந்திய வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தத் தயாராக இருக்கும் மின்னணு சேவைகள் உள்ளடக்க ஓட்டம்(content streaming), டேட்டிங் (dating) மற்றும் மேட்ரிமோனியல் (matrimonial) சேவைகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன.  எங்களுக்கு உண்மையில் தேவை என்னவென்றால், appstore சந்தையில் போட்டியை அதிகரிப்பதற்கான ஒழுங்குமுறையாகும். இது, பிற appstore களை ஏற்றுக்கொள்வதற்கான தடைகளை நீக்குவதை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். கூகுள் நிறுவனம்,  அதன் சொந்த செயலிகளுக்கு முன்னுரிமையை வழங்குவதற்காக அலைப்பேசி  உற்பத்தியாளர்களுடன் செய்யும் ஏற்பாடுகளின் மீது கட்டுப்பாடுகளை விதிப்பது  இதில் அடங்கும்.




Original article:

Share: