புத்தொழில் (Startup) நிறுவனங்களின் மையம் -சிவராஜா ராமநாதன்

 ஆக்கப்பூர்வமான வழிகளில் முக்கியமான சிக்கல்களைத் தீர்ப்பதில் புத்தொழில்கள் (Startups) முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை தமிழ்நாடு அரசு புரிந்துகொண்டுள்ளது. மேலும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், பொருளாதாரத்தை உயர்த்துவதிலும் புத்தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.  


சமீபத்திய ஆண்டுகளில், புதுமையான யோசனைகளுடன் தொழில்நுட்ப நிறுவனங்களின் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது, புதிய யோசனைகள் மூலம் உலகை மாற்றக்கூடிய ஒரு வடிவமைப்பான காலத்தில் நாம் வாழ்கிறோம்.  ஆரம்பத்தில், சந்தேகத்திற்குரிய பல யோசனைகள், இப்போது நம் அன்றாட வாழ்வில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.


புதுமைகளை மதிப்பிடுவது மற்றும் அவற்றை ஆதரிக்கும் சூழல் ஆகியவை புத்தொழில்களின் (Startups) வெற்றிக்கு முக்கியமானதாக உள்ளது. இதனால், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புதுமை திட்டம் (Tamil Nadu Startup and Innovation Mission)  (StartupTN என்றும் அழைக்கப்படுகிறது) மூலம், தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்கும் ஒட்டுமொத்த சமுதாயத்தை மேம்படுத்துவதற்குமான ஒரு சூழலை தீவிரமாக உருவாக்கி வருகிறது.


தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புதுமை திட்டமானது (StartupTN), தற்போதைய அரசாங்கத்திடமிருந்து சிறப்பான ஆதரவைப் பெற்றுள்ளது. இது, புதுமை (innovation) மற்றும் புத்தொழில்களை (Startup) ஆதரிக்கக்கூடிய, சூழலை உருவாக்குவதற்கு நிதி ஒதுக்கீடு மற்றும் சிறந்த திறமைகளை அனைத்தையும் ஒன்றிணைக்க நோக்கமாக கொண்டுள்ளது.  இந்த திட்டமானது, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனத் துறையின் (Micro, Small, and Medium Enterprises Department) கீழ் செயல்படுவதுடன், மாநில அரசின் சமூக நீதி மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக் கொள்கைகளையும் பின்பற்றுகிறது.  


தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை திட்டம் 2023 (Tamil Nadu Startup and Innovation Policy 2023) இலட்சிய இலக்குகளை நிர்ணயித்துள்ளது. இது, 2032 ஆம் ஆண்டிற்குள், 15,000 புத்தொழில் நிறுவனங்களை உருவாக்கி, உலகளவில் முதல் 20 புத்தொழில் மையங்களில் ஒன்றாக தமிழகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புதுமை திட்டத்தின் (StartupTN) மூலம், குறிப்பிட்ட கொள்கைகள் மற்றும் ஆதரவை வழங்க அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இந்த கொள்கை ஒரு வெற்றிகரமான தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழல் அமைப்புக்கு அவசியமான, புத்தாக்க நிலப்பரப்பு (Innovation Landscape), சந்தைக்கான அணுகல் (Access to Market), பங்குதாரர்களின் ஈடுபாடு (Stakeholder Engagement), தொடக்க ஆதரவு மையங்கள் (Startup Support Centres), முதலீட்டு சுற்றுச்சூழல் அமைப்பு (Investment Ecosystem) மற்றும் சமமான வளர்ச்சி (Equitable Growth)  ஆகிய ஏழு முக்கிய காரணிகளில் கவனம் செலுத்துகிறது. 


StartupTN புத்துயிர் பெற்ற இரண்டே ஆண்டுகளில், மத்திய அரசின் புத்தொழில்  இந்தியா தரவரிசையில் (Startup India ranking) தமிழகம் 'சிறந்த செயல்திறன்' (Best Performer) கொண்டதாக மாறியுள்ளது. இந்த தரவரிசையில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு மாநிலம் கடைசி இடத்தில் இருந்ததை கருத்தில் கொண்டு இந்த சாதனை மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் (Department for Promotion of Industry and Internal Trade (DPIIT)) கீழ் பதிவு செய்யப்பட்ட புத்தொழில்களின் எண்ணிக்கை, மார்ச் 2021 இல் 2300 ஆக இருந்தது. இது, பிப்ரவரி 28, 2024 நிலவரப்படி 8000 ஆக அதிகரித்துள்ளது. 


தொழில்முனைவோர் அடைகாப்பகங்களின் (incubators) எண்ணிக்கையில், தமிழ்நாடு தேசிய அளவில் முன்னணி மாநிலமாக உள்ளது. மேலும், நிதி ஆயோக்கின் (NITI Aayog) கீழ் அடல் புதுமை இயக்கத்தின் (Atal Innovation Mission (AIM)) புதிய கண்டுபிடிப்புகளுக்கான முதன்மை மாநிலமாக தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 


அவுட்லுக் பிசினஸ் இதழ் (Outlook Business Magazine) வெளிப்படுத்தியபடி, புத்தொழிலில் சிறந்து விளங்குபவர்களின் 2023 ஆம் ஆண்டிற்கான தரவரிசையில், நாட்டின் முதல் மூன்று மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாகும். அவுட்லுக் பிசினஸ் கணக்கெடுப்பின்படி, நிதி, முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் ஒட்டுமொத்த வணிகச் சூழல் மாநிலத்தின் மிகப்பெரிய பலமாக சிறந்து விளங்குகிறது. 

 

சர்வதேச அளவில், தமிழ்நாடு ஒரு புத்தொழில் மையமாக தனது நிலையை மேம்படுத்தி வருகிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆராய்ச்சி நிறுவனமான ஸ்டார்ட்அப் ஜீனோமின் (Startup Genome) அறிக்கை, 2021 மற்றும் 2023 க்கு இடையில் தமிழகம் 108 வது இடத்தில் இருந்து 78 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்பதை சூட்டிக்காட்டுகிறது. 2023 ஆம் ஆண்டில், மாநிலத்தின் புத்தொழிலின் சுற்றுச்சூழல் அமைப்பின் மதிப்பு 2021 இல் $3.9 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து $10.8 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.


 StartupTN திட்டம், அதன் வளர்ச்சிக்கு ஆதரவாக பல்வேறு முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. சமூகத்தின் அனைத்து பிரிவினரிடையே சமத்துவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தமிழ்நாடு எஸ்சி / எஸ்டி புத்தொழில் நிதியானது (SC/ST Startup Fund) அத்தகைய ஒரு முயற்சியில் குறிப்பிடத்தக்கதான ஒன்றாகும். 2022-23 ஆம் ஆண்டில், முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின சமூகத்தினரால் நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவாக ரூ.30 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். அதன் சிறப்பான பயன்பாட்டின் காரணமாக, இந்த நிதி 2023-24 ஆம் ஆண்டில் ரூ.50 கோடியாக உயர்த்தப்பட்டது. தற்போது, இந்தத் திட்டத்தின் கீழ் 30 புத்தொழில் நிறுவனங்களின்  முதலீட்டைப் பெற்றுள்ளன. 


தமிழ்நாடு தொழில் தொடங்குவோர்  ஊக்குவிப்பு நிதியம் (Tamil Nadu Startup Seed Fund (TANSEED)) என்பது ஆரம்ப கட்ட புத்தொழில்களுக்கு நிதி உதவி வழங்கும் ஒரு திட்டமாகும். இது பெண்கள் தலைமையிலான, கிராமப்புற மற்றும் பசுமை தொழில்நுட்ப தொழில்முனைவு திட்டங்களுக்கு ரூ.15 லட்சமும், மற்ற புத்தொழில் திட்டங்களுக்கு ரூ.10 லட்சமும் ஒதுக்குகிறது. இதுவரை, 132 புத்தொழில் நிறுவனங்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளன. மேலும், அதன் பயனாளிகளை அடையாளம் காணும் செயல்முறை நடந்து வருகிறது.


மண்டல புத்தொழில் மையம் (Regional Startup Hub) தமிழ்நாட்டின் மற்றொரு தனித்துவமான முயற்சியாகும். மதுரை, திருநெல்வேலி மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் ஏற்கனவே இந்த மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், அவற்றை சேலம், தஞ்சாவூர், ஓசூர் மற்றும் கடலூரில் செயல்படுத்த அவை திட்டமிடப்படவுள்ளன.


புத்தொழில்முனைவோர் மற்றும் ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கு உதவ தமிழ்நாடு புத்தொழில் (StartupTN) திட்டம் 155343 என்ற ஒரு உதவி எண்ணை அறிவித்துள்ளது.  இந்த உதவி எண்ணின் மூலம் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மக்கள் தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.  கடந்த எட்டு மாதங்களில் 3500 க்கும் மேற்பட்டோர் இந்த சேவையால் பயனடைந்துள்ளனர்.


முதலீட்டாளர்களுடன் புத்தொழில்களை இணைக்கும் TANFUND போர்டல், என்ற தரவுத்தளம் தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு (Tamil Nadu Global Investors Meet) 2024 இன் போது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. தற்போது, இந்த தளத்தில் 250 பதிவு செய்யப்பட்ட முதலீட்டாளர்கள் மற்றும் 3,350 க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் உள்ளனர்.


MentorTN என்பது அனுபவம் வாய்ந்த நிபுணர்களுடன் புத்தொழில் நிறுவனங்களை இணைக்கும் ஒரு தளமாகும். இதில், 250க்கும் மேற்பட்ட நிபுணர்கள் வழிகாட்டிகளாக இணைந்துள்ளனர். மேலும் 650 புத்தொழில்கள் பதிவு செய்துள்ளன. இந்த தளம் 165 மணிநேர வழிகாட்டுதல் அமர்வுகளையும் ஏற்பாடு செய்துள்ளது.


தமிழ்நாடு 115க்கும் மேற்பட்ட புத்தொழில் காப்பகங்களைக் (incubators) கொண்ட துடிப்பான புத்தொழிலின் சூழல் (startup ecosystem) அமைப்பைக் கொண்டுள்ளது. இது நாட்டிலேயே மிகப்பெரியது.  பெரு நிறுவனங்கள் மற்றும் அரசுத் துறைகள் சவால்களை எதிர்கொள்ளவும், புத்தொழில்கள், புதுமையாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடமிருந்து தீர்வுகளைப் பெறவும் உதவிடும் நோக்கில்  ”Open Innovation Portal” என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. 


தமிழ்நாடு புத்தொழில் திட்டம் (StartupTN), ஒரு மாநில அரசின் சார்பாக முதன்முறையாக தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோவை ஏற்பாடு செய்கிறது. இது ஒரு மாநில அரசின் முதல் முயற்சியாகும். நிறுவனர்களின் தகுதியின் அடிப்படையில் புத்தொழிலுக்கு நிதியளிக்க முதலீட்டாளர்களுக்கு உதவுவதையும், தொழில்முனைவோர் மற்றும் புத்தொழில்  சூழல் அமைப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.   


AngelsTN என்பது தமிழ்நாடு புத்தொழில் திட்டத்தின் (StartupTN) மற்றொரு முயற்சியாகும். இது ஆர்வமுள்ள முதலீட்டாளர்களுக்கு அதிகாரம் மற்றும் கல்வியை அளிக்கும் தளமாக செயல்படுகிறது. முதலீடுகளின் சிக்கலான உலகில் நம்பிக்கையுடன் செல்ல தேவையான அறிவு மற்றும் திறன்களின் அடிப்படையில் வழங்குவதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. உயர் நிகர மதிப்புள்ள தனிநபர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், முதலீட்டாளர்களாக ஆவதற்கு ஊக்குவிப்பதையும், உள்ளூர் புத்தொழில்களுக்கு ஆதரவாக நிதி வழங்குவதையும் இந்த தளம் நோக்கமாகக் கொண்டுள்ளது.  


புத்தொழில் நிறுவனங்கள் எளிதாக அணுகுவதற்கும், முதலீடுகளை ஈர்க்கவும் உலகின் பல்வேறு பகுதிகளில் உலகளாவிய திறன் மையங்களை நிறுவி வருகிறது. அவர்கள் ஏற்கனவே துபாயில் ஒரு மையத்தை அமைத்துள்ள நிலையில், மேலும் பிற முக்கியமான இடங்களில் அதிக மையங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


மண்டல மற்றும் பொருள்சார் நிதிகளில் (regional and thematic funds) ரூ.100 கோடி முதலீடு செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.  முதலீட்டாளர்களால் நிர்வகிக்கப்படும் மற்றும் தமிழ்நாடு புத்தொழில் திட்டத்தால் (StartupTN) ஒருங்கிணைக்கப்படும் இந்த நிதி மாநிலத்தின் புத்தொழில் சூழல் அமைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


ஒரு வணிகத்தின் அடையாளத்தை நிறுவுவதற்கும், தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் அடிப்படையில் போட்டியாளர்களிடமிருந்து அதை வேறுபடுத்துவதற்கும் பிராண்ட்டிங் (Branding) முக்கியமானது. புத்தொழில் நிறுவனங்கள் தங்கள் பிராண்ட் அடையாளத்தை வளர்க்க உதவும் வகையில் பிராண்ட்லேப் முன்முயற்சியின் (BrandLab initiative) கீழ் Nil-Brand-Sell என்ற பிராண்டிங் பாடத்தை தமிழ்நாடு புத்தொழில் (StartupTN)  அறிமுகப்படுத்தியது.

 

தமிழ்நாடு புத்தொழில் திட்டம் (StartupTN), அதன் சமீபத்திய முயற்சிகளின் ஒரு பகுதியாக புத்தொழில்களுக்கான நுண்ணறி அட்டைகளை (Smart card) அறிமுகப்படுத்தியுள்ளது. இது, அவர்களின் தொழில் வளர்ச்சிக்கான பல்வேறு தேவைகளை நிவர்த்தி செய்து, மானிய விலையில் பலவிதமான சேவைகள் மற்றும் தயாரிப்புகளுடன் தொடக்க நிலைகளில் வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.


2030 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை அடைய தமிழ்நாடு முதலமைச்சர் இலக்கு நிர்ணயித்துள்ளார். இந்த தொலைநோக்கை நனவாக்குவதில் தமிழ்நாடு புத்தொழில் திட்டம் (StartupTN) முக்கிய பங்கு வகிக்க உறுதிபூண்டுள்ளது. 




Original article:

Share: