ஏப்ரல் 19 அன்று வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாடு, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு விவரத்தின் பன்முகத்தன்மையால் அளவிடப்படும் பொருளாதார பன்முகத்தன்மையின் அடிப்படையில் இந்தியாவில் முதல் மாநிலமாக உள்ளது.
தமிழ்நாட்டில், மொத்த மதிப்பு கூட்டுதல் (gross value added (GVA)) மற்றும் பணியமர்த்தப்பட்ட தொழிலாளர் சக்தியில், வேளாண் துறையின் பங்கு தேசிய சராசரியை விட குறைவாக உள்ளது. அதே சமயம், பொருளாதாரம் விவசாயத்தை குறைவாக நம்பியுள்ளதால், தொழில்துறை, சேவைகள் மற்றும் அதன் பொருளாதாரத்தில் கட்டுமானத்தின் அதிக பங்குகளால் அகில இந்திய அளவில் ஒப்பிடப்படுகிறது.
2022-23 ஆம் ஆண்டிற்கான மொத்த மதிப்பு கூட்டு (GVA) மற்றும் பணியாளர்களின் துறை வாரியான பங்குகள்
தமிழ்நாட்டை விட குஜராத்தில் அதிக தொழிற்சாலைகள் உள்ளன. குஜராத்தில், தொழிற்சாலைகள் மாநிலத்தின் மொத்த மதிப்பு கூட்டு (GVA) மதிப்பில் 43.4% ஐ வழங்குவதுடன் 24.6% தொழிலாளர்களைப் பயன்படுத்துகின்றன. இதை ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில், தொழிற்சாலைகள் மொத்த மதிப்பு கூட்டு (GVA) 22.7% பங்களிக்கின்றன மற்றும் 17.9% தொழிலாளர்களைப் பயன்படுத்துகின்றன. இருப்பினும், குஜராத் விவசாயத்தை அதிகம் நம்பியுள்ளது. இது அதன் மொத்த மதிப்பு கூட்டு (GVA) 15.9% ஆகும் மற்றும் தமிழ்நாட்டின் பங்களிப்பு முறையே 12.6% மற்றும் 28.9% உடன் ஒப்பிடும்போது அதன் பணியாளர்களில் 41.8% பேரைப் பயன்படுத்துகிறது. இதன் பொருள் குஜராத்தின் பொருளாதாரம் தமிழ்நாட்டை விட குறைவான பன்முகத்தன்மை கொண்டதாக உள்ளது.
பொருளாதார சிக்கலான தன்மையின் மற்றொரு குறிகாட்டி விவசாயம் ஆகும். தமிழ்நாட்டின் பண்ணை விவசாயத்தில் மொத்த மதிப்பு கூட்டு (GVA) சுமார் 45.3% கால்நடை துணைத் துறையிலிருந்து வருகிறது. இது எந்த மாநிலத்திற்கும் இல்லாத அளவு அதிகமாகும் மற்றும் 30.2% அகில இந்திய சராசரியை விட அதிகமாக உள்ளது. குறிப்பாக, இந்தியாவின் மிகப்பெரிய தனியார் பால் நிறுவனம் (Hatsun Agro Product), பிராய்லர் நிறுவனம் (Suguna Foods), முட்டை பதப்படுத்துதல் (SKM Group) நிறுவனம் அதிக பங்கு வகிக்கிறது. இதில் அதிக உற்பத்தியின் காரணமாக, நாமக்கல் மாவட்டம் முட்டையின் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது.
தொகுப்பு அடிப்படையிலான தொழில்மயமாக்கல்
தமிழ்நாட்டில் TVS, முருகப்பா, MRF, அமால்கமேஷன்ஸ் (Amalgamations), அப்போலோ மருத்துவமனை (Apollo Hospitals) என ஆண்டுக்கு ரூ.15,000 கோடிக்கு மேல் சம்பாதிக்கும் பெரிய நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. ஆனால், அவை டாடா (Tata), ரிலையன்ஸ் (Reliance), ஆதித்யா பிர்லா (Aditya Birla), அதானி (Adani), மஹிந்திரா (Mahindra), JSW, வேதாந்தா (Vedanta), பார்தி (Bharti), இன்போசிஸ் (Infosys), HCL அல்லது விப்ரோ (Wipro) போன்ற நிறுவனங்கள் அளவுக்கு பெரியவை அல்ல.
பெரிய வணிக நிறுவனங்களை விட நடுத்தர வணிக நிறுவனங்களால் தமிழ்நாட்டின் பொருளாதாரம் மாறிவிட்டது. இந்த நடுத்தர வணிகங்கள் ரூ.100 கோடி முதல் ரூ.5,000 கோடி வரை பொருளாதாரம் ஈட்டுகின்றன. இதில், ஹட்சன் மற்றும் சுகுணா போன்ற சில நிறுவனங்கள் ரூ.5,000 கோடி முதல் ரூ.10,000 கோடி வரை பொருளாதாரம் ஈட்டும் திறன் பெற்றுள்ளனர். இதனுடைய தொழில்மயமாக்கல் நிறுவன தொகுப்புகளின் வளர்ச்சியின் மூலம் மேலும் பரவலாக்கப்பட்டிருக்கிறது.
நிறுவனங்களின் சில குழுக்கள் சில தொழில்களில் நிபுணத்துவம் பெற்றவை. உதாரணமாக, காட்டன் பின்னலாடை தயாரிப்பில் திருப்பூர் பிரபலமானது. 2022-23ல், அங்குள்ள வணிகங்கள் ரூ.34,350 கோடி மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்து ரூ.27,000 கோடி மதிப்பில் உள்நாட்டில் விற்பனை செய்து பொருளாதாரம் ஈட்டுகிறது. கோயம்புத்தூர் நூற்பு ஆலைகள் மற்றும் வார்ப்பு, ஜவுளி இயந்திரங்கள், ஆட்டோ உதிரிபாகங்கள், பம்ப்செட்கள் மற்றும் வெட் கிரைண்டர்கள் போன்ற பொறியியல் பொருட்களை தயாரிப்பதற்கு பெயர் பெற்றது. பாதுகாப்பு தீப்பெட்டி, பட்டாசு வெடித்தல், அச்சிடுதல் போன்றவற்றில் சிவகாசி சிறப்பு. சேலம், ஈரோடு, கரூர், சோமனூர் ஆகிய பகுதிகள் விசைத்தறி மற்றும் வீட்டு ஜவுளிக்கு பெயர் பெற்றவை. வாணியம்பாடி, ஆம்பூர், ராணிப்பேட்டை ஆகியவை தோல் தொழிலுக்கு பெயர் பெற்றவை ஆகும்.
இந்த நகரங்களில் பல ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்களின் மையங்களாக உள்ளன. உதாரணமாக, கரூரில் விசைத்தறி, பேருந்து கட்டுமான தொழில்நுட்பம், கொசுவலை, மீன்பிடித் தொழில் செய்யும் நிறுவனங்கள் கூட உள்ளன. திண்டுக்கல்லில் நூற்பாலைகள் மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் உள்ளன. நாமக்கல் அடுக்கு கோழி பண்ணைகள் (layer poultry farms) மற்றும் பெரிய லாரி வாகனத் தொகுதி (large lorry fleets) மற்றும் மரவள்ளிக்கிழங்கு சார்ந்த சாகோ தொழிற்சாலைகளுக்கு பிரபலமானது. சேலத்தில் விசைத்தறி மற்றும் மரவள்ளிக்கிழங்கு ஸ்டார்ச்-கம்-சாகோ (starch-cum-sago) உற்பத்தியாளர்கள் உள்ளனர். ஈரோடு ஜவுளி மற்றும் "மஞ்சள் நகரம்" (turmeric city) என்று அழைக்கப்படுகிறது.
விருதுநகர் மாவட்டத்தின் ராஜபாளையம் தாலுகாவில் சத்திரப்பட்டி "கட்டுத்துணி நகரம்" (bandage city) என்று அழைக்கப்படுகிறது. இது கட்டுத்துணிகள் (bandages), துணிப் பட்டைகள் (gauze pads), சுருள்கள் (rolls), பஞ்சுகள் (swabs) மற்றும் பிற அறுவை சிகிச்சை பருத்தி பொருட்கள் (other surgical cotton products) மற்றும் நெய்த ஆடைகளை (woven dressing) உருவாக்குகிறது.
திருச்செங்கோடு இந்தியாவின் "போர்வெல் ரிக் தலைநகரம்" (borewell rigs capital) ஆகும். நாமக்கல் அருகே உள்ள இந்த ஊரைச் சேர்ந்த போர்வெல் தோண்டும் பணி ஒப்பந்ததாரர்கள், 1,400 அடி வரை தோண்டுவதற்காக, லாரியில் பொருத்தப்பட்ட ரிக்குகளை நாடு முழுவதும் எடுத்துச் செல்கின்றனர். ராஜபாளையத்தில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ள தளவாய்புரம், திண்டுக்கல்லை அடுத்த நத்தம், குறைந்த விலையில் ஆண்களுக்கான ஃபார்மல் ஷர்ட்களை (formal shirts) தயாரிப்பது போல், நைட்டி (nighties) மற்றும் பெண்களுக்கான உள்ளாடைகள் (ladies innerwear) தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்றுள்ளது.
இந்த குழுக்களில் பெரும்பாலானவை, சிறிய நகர்ப்புற அல்லது புறநகர் பகுதிகளில் தோன்றியுள்ளன. அருகிலுள்ள கிராமங்களிலிருந்து வேலைக்காக பெரிய நகரங்களுக்கு குடிபெயர்ந்தவர்களுக்கு வேலைகளை வழங்குகின்றன. அவர்கள் விவசாயத்தைத் தாண்டி வேலை வாய்ப்புகளை பன்முகப்படுத்தியுள்ளனர். இது தமிழ்நாட்டின் தொழிலாளர் தொகுப்பில் விவசாயத்தை சார்ந்திருப்பதைக் குறைத்துள்ளது.
திருப்பூரின் பின்னலாடை தொழில் மிகப் பெரியது. இதில் சுமார் 800,000 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இந்த தொழிலாளர்கள் உத்தரபிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா மற்றும் அசாம் போன்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். K.P.R. Mill Ltd நிறுவனத்தை எடுத்துக் கொள்வோம். இவை, 2022-23 ஆம் ஆண்டில் ரூ.4,740 கோடி விற்பனை செய்துள்ளது. இந்த நிறுவனத்தில் 21,819 நிரந்தர ஊழியர்கள் உள்ளனர். அவர்களில் 84% க்கும் அதிகமானோர் பெண்கள். இவர்கள் திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் பணிபுரிகின்றனர். அவர்கள் ஆடை, பின்னல், நூற்பு மற்றும் செயலாக்கம் செய்கிறார்கள்.
அடிமட்டத்திலிருந்து தொழில்முனைவோர்
ஒரு பாரம்பரிய வங்கி மற்றும் வர்த்தக சமூகமானது, தென்கிழக்கு ஆசியா மற்றும் இலங்கையில் விரிவான செயல்பாடுகளைக் கொண்டிருந்தனர். இரண்டாம் உலகப் போர் (World War II) மற்றும் பர்மிய தேசியவாத இயக்கத்தின் (Burmese nationalist movement) இடையூறுகள், பலர் தங்கள் முதலீடுகளை வீட்டிற்கு திருப்பி அனுப்ப வழிவகுத்தது.
அண்ணாமலை செட்டியார் (M.A. சிதம்பரம் மற்றும் செட்டிநாடு குழுக்களுடன் தொடர்புடையவர்), A.M.M.முருகப்ப செட்டியார் (முருகப்பா குழுமத்துடன்), கருமுத்து தியாகராஜ செட்டியார் (ஜவுளிக்கு பெயர் பெற்றவர்), அழகப்ப செட்டியார் (ஜவுளி, காப்பீடு, ஹோட்டல்கள் மற்றும் கல்வி ஆகியவற்றில் ஈடுபட்டவர்) ஆகியோர், TVS, TTK, அமால்கமேஷன்ஸ் (Amalgamations), சேஷசாயி (Seshasayee), ரானே, இந்தியா சிமெண்ட்ஸ் (India Cements), சன்மார் (Sanmar), என்ஃபீல்ட் இந்தியா (Enfield India), ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ், ஸ்ரீராம் (Standard Motors and Shriram) மற்றும் ஸ்ரீதர் வேம்பு தலைமையிலான ஜோஹோ பெரு நிறுவனம் (Zoho Corporation) ஆகிய தமிழ்நாட்டின் சமீபத்திய தொழில்மயமாக்கல் விவசாயப் பின்னணியைச் சேர்ந்த தொழில்முனைவோர் மற்றும் மாகாண வணிக சமூகங்களைச் சேர்ந்த தொழில்முனைவோர்களால் உந்தப்பட்டுள்ளது.
கோயம்புத்தூரின் தொழிற்சாலைகளான நூற்பாலைகள், ஃபவுண்டரிகள் (foundries), எந்திரங்கள் (machining), பம்புகள் & வால்வுகள் (pumps & valves), ஜவுளி உபகரணங்கள் (textile equipment) மற்றும் அழுத்தி (compressor), சுகுணா ஃபுட்ஸ் (Suguna Foods), CRI Pumps, Elgi Equipment மற்றும் Lakshmi Machine Works ஆகியவை மற்றும் திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் ஆகிய நகரங்களில் பெரும்பாலான தொழில்கள், தென் தமிழகத்தில் சிவகாசியின் பட்டாசு, தீப்பெட்டி மற்றும் அச்சுத் தொழில்கள், ராம்கோ குழுமம் மற்றும் அடையார் ஆனந்த பவன், போத்திஸ் போன்ற பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த தொழில்முனைவோர் இதில் உள்ளனர்.
இங்கு சிலர் பிரபலமான தயாரிப்பு பிராண்டுகளான 'அருண்' (Arun) ஐஸ்கிரீம் மற்றும் 'ஆரோக்யா' (Arokya) பால் ஹட்சன், 'இதயம்' (Idhayam) எள் எண்ணெய் V.V.V. & Sons, மற்றும் காளீசுவரி சுத்திகரிப்பு நிலையத்தின் 'கோல்ட் வின்னர்' (Gold Winner) சூரியகாந்தி எண்ணெய் போன்ற வெற்றிகரமான தயாரிப்பு பிராண்டுகளை உருவாக்கியுள்ளனர்.
தமிழ்நாட்டின் தொழில் முனைவோரின் கலாச்சாரமானது ஈர்க்கக்கூடியதாக உள்ளது. ஏனெனில், அது பல்வேறு சமூகங்கள் மற்றும் தொழில்களுக்கு பரவுகிறது. எடுத்துக்காட்டாக, MRF, Johnson Lifts மற்றும் Aachi Masala Foods போன்ற கிறிஸ்தவர்களுக்குச் சொந்தமான வணிகங்கள் மற்றும் Farida Group போன்ற முஸ்லீம்களுக்குச் சொந்தமானவை அனைத்தும் இந்தக் கலாச்சாரத்திற்கு பங்களிக்கின்றன.
முதலியார் சமூகத்தைச் சேர்ந்த சி.கே.ரங்கநாதன், தனது தந்தை சின்னி கிருஷ்ணனின் பெயரின் அடிப்படையில் 'சிக்' (Chik) ஷாம்பூவை சிறிய பாக்கெட்டுகளில் விற்கத் தொடங்கினார். ஹிந்துஸ்தான் யூனிலீவர் (Hindustan Unilever) போன்ற பெரிய நிறுவனங்கள் யோசிப்பதற்கு முன்பே அவர் இதைச் செய்தார். இவரது சகோதரர் சி.கே.குமாரவேல், நேச்சுரல்ஸ் சலூன் & ஸ்பா (Naturals Salon & Spa) என்ற நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். இது, இந்தியா முழுவதும் முடி மற்றும் அழகு பராமரிப்புக்காக சுமார் 700 விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளது.
தொழில்மயமாக்கலிலும், விவசாயத்தைத் தாண்டியும் தமிழகம் அடைந்துள்ள வெற்றிக்கு, பொருட்களை சிறிய பாக்கெட்டுகளில் விற்பனை செய்தல், பொது சுகாதாரம் மற்றும் கல்விக்கான முதலீடுகள் போன்ற முன்முயற்சிகள் சமூக முன்னேற்றத்திற்கு உத்வேகம் அளித்துள்ளன.
Original article: