பல குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் முக்கிய நிலைத்தன்மை கொண்ட இலக்குகளை விட வட்டி செலுத்துதல்களுக்கு அதிக செலவு செய்ய வேண்டியுள்ளது. இந்நிலை மாற வேண்டும்
புவி வெப்பமடைதல், உணவுப் பற்றாக்குறை, அதிகரித்து வரும் ஏழ்மை மற்றும் டாலரில் நிறைய கடன் இருப்பதால், உலகின் சில ஏழ்மையான நாடுகள் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்கின்றன. இது அவர்களின் பணத்தை நிர்வகிக்க கடினமாக உள்ளது. கோவிட் மற்றும் உக்ரைனில் போர் காரணமாக, விலைகள் மிகவும் உயர்ந்தன. மேலும் வட்டி விகிதங்களும் உயர்ந்தன. இதனால் பலர் பொருளாதார ரீதியாக சிரமப்பட்டனர். 2020 மற்றும் 2023 க்கு இடையில், 18 நாடுகளால் தங்கள் கடனை செலுத்த முடியவில்லை, இது கடந்த 20 ஆண்டுகளை விட அதிகமாகும். மற்றவர்கள் கடன் நெருக்கடியின் விளிம்பில் உள்ளனர்.
உலக வங்கியும் (World Bank), சர்வதேச நாணய நிதியமும் (International Monetary Fund) வாஷிங்டனில் தங்கள் வருடாந்திர கூட்டங்களை நடத்துகின்றன. இந்த மோசமான சூழ்நிலையை நிவர்த்தி செய்வதற்கு அவர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். தொற்றுநோய்க்கு முன்பு, 2020கள் வளரும் நாடுகளுக்கு ஒரு முக்கிய காலத்தின் முன்னேற்றமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. காலநிலை இலக்குகள், தீவிர வறுமை மற்றும் பசி குறைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இருப்பினும், எதிர்பாராத நிகழ்வுகள் ஒரு பின்னடைவுக்கு வழிவகுத்துள்ளன என்று சமீபத்திய உலக வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சர்வதேச வளர்ச்சி சங்கத்திடம் (International Development Association (IDA)) இருந்து உதவி பெற தகுதி பெற்ற நாடுகளில், மக்கள்தொகையில் கால் பகுதியினர் இப்பொழுது நாள் ஒன்றுக்கு 2.15 டாலருக்கும் குறைவான வருமானத்தில் வாழ்கின்றனர்.
விஷயங்களை மீண்டும் பாதையில் கொண்டு வர ஆண்டுதோறும் $2.4 டிரில்லியன் முதலீடு தேவைப்படுகிறது. குறிப்பிடத்தக்க கடன் நிவாரணம் இல்லாமல், துணை-சஹாரா ஆப்பிரிக்கா (sub-Saharan Africa) மற்றும் கரீபியன் (Caribbean) போன்ற பிராந்தியங்களில் உள்ள நாடுகள் தொடர்ந்து பின்தங்கியிருக்கும். சமூக சேவைகளுக்கு நிதியளிப்பதற்கும், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் பயன்படுத்தக்கூடிய பணத்தை இழக்க நேரிடும். ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தின் (United Nations Development Programme (UNDP)) சமீபத்திய ஆய்வில், குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் சமூக உதவி அல்லது சுகாதாரத்தை விட கடன்களை செலுத்துவதற்கு அதிகம் செலவிடுகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், உலகப் பொருளாதார மீட்சி (global economic recovery) மற்றும் பணக்கார நாடுகளில் அதிக வட்டி விகிதங்கள் (higher interest rates) காரணமாக, வெளிநாட்டு கடன் வழங்குபவர்கள் புதிய கடன்களை வழங்குவதைத் தவிர்த்து வருகின்றனர்.
முக்கியமான உலகளாவிய இலக்குகளை பாதிக்கும் ஒரு நெருக்கடி, வழக்கமான விஷயங்களைச் செய்யும் முறையிலிருந்து மாற்றத்தைக் கோருகிறது. பணக்கார நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும். வாஷிங்டனில் இந்த வாரம் நடைபெறும் கூட்டத்திற்கு முன்பு, உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா சர்வதேச வளர்ச்சி சங்கத்துக்கு இதுவரை இல்லாத அளவிற்கு மிகப் பெரிய நிதியுதவு தேவை என்று அழைப்பு விடுத்தார். இது தனியார் கடன் வழங்குநர்கள் கொடுக்காத பணத்திற்கு பதிலாக இருக்க வேண்டும். தற்போதுள்ள கடன்கள் விரைவாகவும் சிறந்த விதிமுறைகளுடனும் மறுசீரமைக்கப்பட வேண்டும். உதாரணமாக, ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் (UNDP) ஒரு "கடன்-வறுமை இடைநிறுத்தத்தை" (debt-poverty pause) பரிந்துரைத்தது. இதனால், அரசாங்கங்கள் பொதுவாக கடனில் செலுத்தும் பணத்தை சமூக திட்டங்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புக்கு உதவ பயன்படுத்தலாம்.
அத்தகைய நடவடிக்கை வரவேற்கத்தக்கது. ஆனால், விரிவான கடன் நிவாரணமும் தேவைப்படுகிறது. ஜாம்பியா போன்ற நாடுகள் 13 பில்லியன் டாலர் கடனில் சிக்கித் தவித்து வருகின்றன. உலகம் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தயாராக இல்லை என்பதையே இந்த நிலை காட்டுகிறது. கடந்த நவம்பரில், 550 பொருளாதார வல்லுநர்கள் Cop28 க்கு முன், ஜாம்பியா போன்ற நாடுகள் தங்களின் அவசரத் தேவைகளை, குறிப்பாக காலநிலை மாற்றம் தொடர்பானவற்றைச் சமாளிக்க உதவுவதற்காக பெரிய கடன்களை இரத்து செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.