2023 ஆம் ஆண்டின் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் (Digital Personal Data Protection Act of 2023) 'பத்திரிகை விலக்கை' (journalistic exemption) நீக்கியுள்ளது. இந்த மாற்றம் மிகவும் விரிவான பொது கலந்தாய்வின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
ஆகஸ்ட் 2023 இல், இந்தியா தனது முதல் பெரிய தரவு பாதுகாப்புச் சட்டத்தை உருவாக்கியது, இது டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம், 2023 (Digital Personal Data Protection (DPDP) Act, 2023) என்று அழைக்கப்படுகிறது. தற்போது, இந்த சட்டத்தை நடைமுறை படுத்துவதற்க்கான விதிகளை அரசாங்கம் உருவாக்குகிறது, இது, பொதுத் தேர்தலுக்குப் பின்பு நடக்க வேண்டும். இந்த சட்டம் பெரும்பாலும் மக்கள் தங்கள் தனிப்பட்ட தரவைப் பயன்படுத்த அனுமதிக்க ஒப்புக்கொள்வதைப் பற்றியது. இது அவர்களின் தரவைப் பார்த்தல் மற்றும் நீக்குவது போன்ற சில அடிப்படை உரிமைகளை அவர்களுக்கு வழங்குகிறது. மேலும், நிறுவனங்களுக்கும் சில விதிகளை உருவாக்குகிறது. மக்கள் தங்களுக்கு ஒரு பிரச்சினை இருந்தால் புகார் செய்யக்கூடிய இடத்தையும் இது ஏற்படுத்துகிறது. ஆனால், இந்த சட்டம் வெளிப்படையாக இல்லாவிட்டால், பத்திரிகைத் துறையில் கருத்து சுதந்திரத்தையும் பாதிக்கலாம்.
வழக்கமாக, தரவு பாதுகாப்பு சட்டங்கள் பத்திரிகையாளர்கள் தங்கள் தனிப்பட்ட தரவைப் பயன்படுத்துவதற்கு முன்பு மக்களைக் கேட்பது போன்ற தனியுரிமை விதிகளைப் பின்பற்ற வைக்காது. முன்னதாக, டிஜிட்டல் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டத்தின் மூன்று பதிப்புகள், பத்திரிகையாளர்கள் இந்த விதிகளைப் பின்பற்ற வேண்டியதில்லை என்று கூறின. ஆனால், இறுதி சட்டம் அதை மாற்றியது. எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா (Editors Guild of India) இந்த பிரச்சனை பற்றி பேசியது. டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தில் பத்திரிகையாளர்களுக்கு விதிவிலக்கு அளிக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டது.
ஒரு தடை
தனியுரிமைக்கும் பத்திரிகை சுதந்திரத்துக்கும் என்ன சம்பந்தம்? இந்தக் காட்சியைக் கவனியுங்கள்: நீங்கள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அவர்களின் செயல்பாடுகளைப் பற்றி எழுதும் பத்திரிகையாளர். உங்கள் கட்டுரையில் அவர்களின் சந்திப்புகள், பயண இடங்கள் மற்றும் தோழர்கள் பற்றிய விவரங்கள் உள்ளன. மேலும் அவர்கள் பயனம் செய்யும் விமானங்கள், அதற்க்கான கட்டணங்கள் அவர்களின் நிதி பின்னணி மற்றும் நெருங்கிய நன்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் முதலீடுகள் ஆகியவற்றையும் நீங்கள் பார்க்கிறீர்கள். இந்தத் தகவலைச் சேகரிக்க விரிவான ஆராய்ச்சி தேவைப்படுகிறது, ஏனெனில் இது பொதுக் களத்தில் எளிதாகக் கிடைக்காது.
டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தின் (DPDP) கீழ், இந்தத் தகவல்கள் அனைத்தும் பாராளுமன்ற உறுப்பினரின் 'தனிப்பட்ட தரவு' என்று கருதப்படுகிறது. இந்தத் தரவை உங்கள் கட்டுரையில் பயன்படுத்த, முதலில் அவர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும். மேலும், உங்கள் கட்டுரை வெளியான பிறகும், அதே சட்டத்தின் கீழ் அதை நீக்கக் கோருவதற்கு நாடாளுமன்ற உறுப்பினருக்கு உரிமை உண்டு. தங்கள் பிரதிநிதிகளின் செயல்கள் மற்றும் நடத்தைகள் குறித்து பொதுமக்களுக்குத் தெரியப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பத்திரிகையாளர்களுக்கு இது ஒரு சவாலாக உள்ளது.
டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு சட்டத்தின் இறுதிப் பதிப்புகளில் இருந்து இதழியல் துறைக்கு விலக்கு நீக்கப்பட்டது, ஒரு குழப்பமான முடிவாகவே உள்ளது. ஆரம்பத்தில், விலக்கு டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு சட்டத்தில் (DPDP) மூன்று அம்சங்கள் முந்தைய பதிப்புகளில் சேர்க்கப்பட்டது: ஒன்று 2018 இல் தரவுப் பாதுகாப்பிற்கான நிபுணர் குழு, மற்றொன்று 2019 இல் அரசாங்கம், மற்றும் மூன்றாவது 2021 இல் ஒரு கூட்டு நாடாளுமன்றக் குழு, இவை அனைத்தும் தனிப்பட்ட தேவைகளை அங்கீகரிக்கின்றன. எவ்வாறாயினும், பத்திரிகை நடவடிக்கைகளுக்கு தெளிவான விளக்கங்கள் எதுவும் வழங்கப்படாமல் இந்த விலக்கு அடுத்த 2022 மற்றும் 2023 வரைவுகளில் தவிர்க்கப்பட்டது.
விளக்கம் இல்லை
பத்திரிக்கையாளர்களுக்கு விலக்கு அளிக்கும் பிரிவை அரசு பொது மன்றங்களில் விவாதிக்காமல் நீக்கியது. சட்டங்கள் பற்றிய தெளிவான மற்றும் வெளிப்படையான பொது ஆலோசனைகளின் அவசியத்தை இது எடுத்துக்காட்டுகிறது. இதைச் செய்வதற்கான ஒரு வழி 'திறந்த மற்றும் வெளிப்படையான' மாதிரி. எடுத்துக்காட்டாக, இந்திய அரசாங்கம் பொதுமக்களின் கருத்துக்காக தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் மூன்று வரைவுகளை வெளியிட்டது. ஆனால், அவர்கள் பெறப்பட்ட கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவில்லை. இதனால், வெவ்வேறு குழுக்கள் என்ன சொன்னார்கள் மற்றும் இறுதிச் சட்டத்தில் யார் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள் என்பதை மக்கள் அறிந்துகொள்வது கடினமாகிறது. வரைவுகள் பற்றிய கருத்துக்களை சேகரிக்க பிரத்தியேக பொது கருத்துகேட்புகளையும் அரசாங்கம் நடத்தியது. இருப்பினும், பத்திரிகையாளர்களுக்கான விலக்குகளை நீக்குவது குறித்த விவாதங்கள் இந்த பொது கருத்துக்கேட்பில் நடக்கவில்லை. அதற்கான காரணத்தை அரசாங்கம் விளக்கவில்லை. துரதிர்ஷ்டவசமாக, இந்த ஆலோசனைகள் மற்றும் பொது கருத்து கேட்பு பெரும்பாலும் முன்மொழியப்பட்ட சட்டங்களைப் பற்றிய வெளிப்படையான விவாதத்தை ஊக்குவிப்பதில்லை.
ஒரு வேண்டுகோள்
சட்ட ரீதியாக நாம் என்ன தீர்வுகளை சிந்திக்க முடியும்? முதலாவதாக, சிக்கலை சரிசெய்ய டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உள்ள விதிகளை அரசாங்கம் பயன்படுத்தலாம். இந்த விதிகள் சட்டத்தின் சில பகுதிகளைப் பின்பற்றுவதிலிருந்து சில தரவு செயலிகளுக்கு விலக்கு அளிக்க அரசாங்கத்தை அனுமதிக்கின்றன. இது விரைவாக விலக்குகளை வழங்க அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. குடிமக்கள் பத்திரிக்கையாளர்கள் (citizen journalists) உட்பட பத்திரிகையாளர்களுக்கு டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சில விலக்குகள் வழங்கப்பட வேண்டும். இது இந்தியாவில் பத்திரிக்கைத் துறையின் பேச்சு சுதந்திரத்தை பாதுகாக்கும்.
சஷாங்க் மோகன், டெல்லி தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் தகவல் தொடர்பு ஆளுமை மையத்தின் திட்ட மேலாளர்.