தேசிய ஜனநாயக கூட்டணி (National Democratic Alliance (NDA)) அரசாங்கம் பழைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் திட்டங்களுக்கு மறுபெயரிட்டதன் மூலம் அவர்கள் சொந்த நலனுக்காக அதிகம் செலவு செய்தனர். பழைய திட்டங்களை பெயரிட்டு அதை புதியதாக உருவாக்கியது போல தோற்றத்தை ஏற்படுத்தினார். ஆனால் அவை உண்மையில் புதிய சமூக ஆதரவு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தாமல் நிதியைக் குறைத்தன.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (National Democratic Alliance (NDA)) ஆண்டுகள் வலுவான நலன் சார்ந்த நோக்கத்திற்காக ஊடகங்களில் பாராட்டப்படுகின்றன. ஆனால் ஒன்றிய பட்ஜெட்டில் உள்ள நிதி எண்ணிக்கைகள் இந்த கருத்தை ஆதரிக்கிறதா?
இதைக் கண்டுபிடிக்க, கடந்த 20 ஆண்டுகளில் நலத்திட்டங்களுக்கு எவ்வளவு பணம் செலவிடப்பட்டுள்ளது என்பதை ஒப்பிடுவோம். "தேசிய ஜனநாயக கூட்டணி திட்டங்கள்" என்று அழைக்கும் செலவினங்களை மற்றும் "ஐக்கிய முற்போக்கு கூட்டணி “திட்டங்களுக்கான செலவினங்களை ஒப்பிடுவோம்.
மாறுபட்ட மாதிரிகள்?
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் பத்தாண்டுகளில் (2004-2014), ஐந்து முக்கிய திட்டங்கள் “UPA schemes” என்று பெயரிடப்பட்டது. 2005 ஆம் ஆண்டின் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் (National Rural Employment Guarantee Act (NREGA)) மற்றும் 2013 ஆம் ஆண்டின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (National Food Security Act (NFSA)) கீழ் நான்கு திட்டங்கள்:
1.பொது விநியோக முறை (Public Distribution System (PDS)),
2.மதிய உணவு (Mid-Day Meals (MDM)),
3.ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் (Integrated Child Development Services (ICDS))
4.2017 இல் செயல்படத் தொடங்கிய பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (Pradhan Mantri Matru Vandana Yojana (PMMVY)) மூலம் வழங்கப்படும் மகப்பேறு உரிமைகள்.
பொது விநியோக முறையைப் பொறுத்தவரை, உணவு மானியத்தை நுகர்வோர், உற்பத்தியாளர் (குறைந்தபட்ச ஆதரவு விலையில் கோதுமை மற்றும் அரிசியை விற்கும் விவசாயிகளின் பங்கு) மற்றும் நிர்வாக செலவுகள் என்று பிரிப்பது சிக்கலானது. இருப்பினும், உணவு மானியத்தை பாதியாகக் குறைப்பது (நுகர்வோர் மானியத்தின் தோராயமாக) விஷயங்களை கணிசமாக மாற்றாது.
NDA காலத்தில் (2014-2024), பாரதிய ஜனதா கட்சி பல்வேறு முயற்சிகளுக்கு நிதியளித்தது:
1. தூய்மை இந்தியா திட்டம் / ஸ்வச் பாரத் அபியான் (Swachh Bharat Abhiyan (SBA)) 2014 இல் தொடங்கப்பட்டது.
2. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-நகர்புறம் (Pradhan Mantri Awas Yojana-Urban (PMAY-U)) 2015 இல் தொடங்கியது.
3. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா -கிராமப்புறம் (PM-Awas (rural)) அடுத்த ஆண்டு தொடங்கியது.
4. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவுக்கும் (Pradhan Mantri Ujjwala Yojana) நிதியளிக்கப்பட்டது.
5. பிரதமர்-கிசான் சம்மன் நிதி (PM-Kisan Samman Nidhi (PM-Kisan)) மற்றும் ஆயுஷ்மான் பாரத் (Ayushman Bharat) 2018 இல் தொடங்கியது.
6. ஜல் ஜீவன் மிஷன் (al Jeevan Mission (JJM)) 2019 இல் தொடங்கியது.
2019-24 முதல் ஆயுஷ்மான் பாரத் பட்ஜெட் ₹32,000 கோடி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டது. அதே காலக்கட்டத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவுக்கான வருடாந்திர செலவில் பாதி. உஜ்வாலா யோஜனா உணவு மானியத்தைப் போலவே L.P.G மானியத்தையும் பயன்படுத்துகிறது. மானியத்தில் ஒரு சிறிய பகுதி மட்டுமே உஜ்வாலா திட்டத்திற்கு செலவிடப்படுகிறது.
சிலர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் ஒப்பிடுகின்றனர். கழிப்பறைகள், L.P.G. சிலிண்டர்கள், தண்ணீர் இணைப்புகள் மற்றும் வீட்டுவசதி போன்ற தனியார் நலன்களை அரசாங்கம் வழங்குகிறது என்று கூறுகிறார்கள். இதை அவர்கள் "புதிய நலம்” (“new welfarism”) என்று அழைக்கிறார்கள். ஆனால், இந்த திட்டங்களில் சில ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் வெவ்வேறு பெயர்களிலும், குறைந்த செலவிலும் இருந்தன. 2014-ம் ஆண்டுக்குப் பிறகு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி திட்டங்கள் புதிய பெயர்களுடன் தொடர்கின்றன.
உதாரணமாக, மதிய உணவு திட்டம் இப்போது பிரதான் மந்திரி போஷன், பொது விநியோக முறை இப்போது பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (Pradhan Mantri Garib Kalyan Anna Yojana (PMGKAY)) ஆக பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் திட்டங்கள் ஒரு செறிவூட்டப்பட்ட அணுகுமுறையைப் (‘self-targeting’) பின்பற்றுகின்றன. கழிப்பறை, 'புக்கா' (‘pucca’) அறை அல்லது L.P.G. இணைப்புகள் இல்லாதவர்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்துகிறது. அவர்கள் உதவி பெற்றவுடன், மற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். UPA அரசின் திட்டங்களின் கீழ், பலன்களுக்குத் தகுதியுள்ளவர்கள் ஆண்டுதோறும் கிராமப்புறக் குடும்பங்களுக்கு 100 நாட்கள் வேலை, மாதந்தோறும் (பொது விநியோக முறைகளில் தானியங்கள் போன்றவை) அல்லது தினசரி (பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில் உணவு போன்றவை) பெறுகிறார்கள். எடுத்துக்காட்டாக, மகாத்மா காந்தி தேசிய. கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை விட அதிக ஊதியம் பெறும் வேலையைக் கண்டுபிடிக்க முடியாதவர்கள் மட்டுமே இதைப் பயன்படுத்த முனைகிறார்கள். மேலும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் பொதுவாக அரசுப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில் படிக்கின்றனர்.
நலச் செலவுகள்எவ்வாறு மாறியுள்ளன என்பது குறித்து
நல்ல மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இருந்தபோதிலும் நலச் செலவுகள் குறைவாகவும், எந்த வித வளர்ச்சி இல்லாமலும் உள்ளது. இது கோவிட்-19 ஆண்டுகளில் ஒரு முறை மட்டுமே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% க்கு மேல் சென்றது. இந்த அதிகரிப்பு பெரும்பாலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்தது. 14வது நிதிக் குழுவிற்குப் பிறகு, சில திட்டங்களுக்கு மத்திய அரசின் பங்கு 90 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாகக் குறைந்தது.
சட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப்படாத தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் திட்டங்களைப் போலல்லாமல், U.P.A. அரசின் நல திட்டங்கள் சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்பட்டன. NDA அரசின் திட்டங்கள், மறுபுறம், அரசாங்கத்தின் முடிவுகளால் கட்டுப்படுத்தப்படும் 'இலவசங்கள்' (‘freebies’) போன்றவை. சட்டப்பூர்வ கடமைகள் இருந்தபோதிலும், பள்ளி உணவு மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (Integrated Child Development Services (ICDS)) போன்ற குழந்தைகளுக்கான U.P.A. ஆட்சிகாலத் திட்டங்களுக்கு N.D.A. ஆட்சிக்காலத்தில் நிதி குறைவாக ஒதுக்கப்பட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் U.P.A ஆட்சிகாலத்தின் பங்கு 2014 இல் 1.5% ஆக இருந்து 2018-19 இல் 1% ஆகக் குறைந்துள்ளது. இருப்பினும், தொற்றுநோய் காரணமாக, அரசாங்கம் அவர்களின் நிதியை அதிகரிக்க வேண்டியிருந்தது.
N.D.A. அரசின் திட்டங்களுக்கான நிதி அதிகரித்தாலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி திட்டங்களுக்கான குறைந்த செலவினங்களை ஈடுசெய்ய முடியவில்லை. கடந்த பத்துண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் செலவினம் மெதுவாக அதிகரித்தது. ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% க்கும் குறைவாகவே இருந்தது. இது அவர்களின் நிர்வாக திறமையின்மையை வெளிகாட்டுகிறது. உதாரணமாக, தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி (National Family Health Survey), L.P.G. பயன்பாடு 2015-16 ஆம் ஆண்டில் 43% ஆக இருந்து 2019-21 ஆம் ஆண்டில் 58% ஆக உயர்ந்தது. திறந்தவெளி மலம் கழிப்பு பாதியாக (39% லிருந்து 19% ஆக) குறைந்தது. அதே நேரத்தில் ‘புக்கா' வீடுகளின் எண்ணிக்கை மாறியது (56%லிருந்து 60%).
கொரோனா காலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் போன்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (U.P.A.) அரசு தொடங்கிய முயற்சிகளை நம்புவதற்கு வழிவகுத்தது. 2015 ஆம் ஆண்டில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை பிரதமர் விமர்சித்திருந்தார். இது காங்கிரஸின் தோல்விகளின் அடையாளம் என்று அழைத்தார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் திட்டங்களுக்கு இடையிலான உறவு பொது விநியோகத் திட்டம் / பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா விஷயத்திலும் தெளிவாகத் தெரிகிறது. 2013 ஆம் ஆண்டின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் நகர்ப்புறங்களில் 50% மற்றும் கிராமப்புறங்களில் 75% உள்ளடக்கப்பட வேண்டும். இது 800 மில்லியன் மக்கள். ஒவ்வொருவருக்கும் மாதம் 5 கிலோ கோதுமை அல்லது அரிசி கிலோவுக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை வழங்கப்படும் என்று கூறியிருந்தது.
ஏப்ரல் 2020 முதல் டிசம்பர் 2022 வரை, அரசாங்கம் இந்த உரிமையை கோவிட்-19 நிவாரணமாக மாதத்திற்கு 10 கிலோவாக இரட்டிப்பாக்கியது. COVID-19 கூடுதல் நிவாரணம் 2023 இல் முடிவடைந்தபோது, அரசாங்கம் அசல் ஐந்து கிலோவை இலவசமாக்கியது, இது பொதுவாக ₹10-₹15 செலவாகும். அவர்கள் இந்த மறுசீரமைக்கப்பட்ட பொது விநியோக முறையை (PDS) PMGKAY என்று மறுபெயரிட்டனர். ஒவ்வொரு நபருக்கும் மாதத்திற்கு அதிகபட்சம் ₹15 கூடுதலாக மிச்சப்படுத்தினர்.
இந்த உண்மைகள் இருந்தபோதிலும், பிஜேபி இப்போது 800 மில்லியன் மக்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட பொது விநியோக முறை (P.D.S.) பாதுகாப்பில் காங்கிரஸை விட அதிக தொடர்பு கொண்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், 2013 (National Food Security Act, 2013) இன் மூலம் இது சாத்தியமானது. 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த தேசிய ஜனநாயக கூட்டணி தவறியதால் இந்த தொடர்பு ஆச்சரியமாக உள்ளது. இந்த தோல்வி மில்லியன் கணக்கான மக்களை பொது விநியோக முறையிலிருந்து வெளியேற்றியுள்ளது. 2021 மக்கள்தொகைக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்ட விகிதங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தால், 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் PDS இல் சேர்க்கப்பட்டிருப்பார்கள் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
மாநில அரசுகளின் முயற்சிகள்
பல மாநில அரசுகள், குறிப்பாக பிராந்திய கட்சிகளால் நடத்தப்படும் அரசுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, ஒரு குழந்தைக்கு பள்ளி உணவுக்கான சமையல் செலவுகளை ஒன்றிய அரசு அதிகரிக்கவில்லை என்றாலும், பீகார், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா போன்ற ஏழை மாநிலங்கள் தங்கள் பள்ளி உணவுத் திட்டங்களில் வாரத்திற்கு சில முறை முட்டைகளை வழங்குகின்றன.
இதேபோல், முதியோர் மற்றும் விதவைகள் போன்ற சில சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கான ஒன்றிய அரசின் பங்களிப்பு 2006 முதல் மாதத்திற்கு ₹200 ஆக உள்ளது. இருப்பினும், பல மாநிலங்கள் கூடுதல் பணத்தைச் சேர்த்து திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளனர். ஒடிசாவில், மது பாபு ஓய்வூதிய யோஜனா (Madhu Babu Pension Yojana) 58% ஓய்வூதியதாரர்களை ஆதரிக்கிறது. மேலும், ஒடிசா மற்றும் தமிழ்நாடு ஆகியவை ஒன்றிய அரசின் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (Pradhan Mantri Matru Vandana Yojana (PMMVY)) (ரூ.5,000-ரூ.6,000) உடன் ஒப்பிடும்போது கர்ப்பிணிப் பெண்களுக்கு மகப்பேறு உரிமைகளுக்காக அதிக பணத்தை (முறையே ரூ.10,000 மற்றும் ரூ.18,000) வழங்குகின்றன.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் ஏற்கனவே அமலில் இருந்த திட்டங்களுக்கு (M.D.M /POSHAN, P.D.S/ /PMGKAY) மறுபெயரிடுவதன் மூலம் மக்கள் நலனுக்காக செலவு செய்யும் அரசு என்ற நற்பெயரைப் பெற்றுள்ளது. ஆனால் அவர்கள் மக்களுக்கு போதுமான நிதி அல்லது சமூக உதவிகளை வழங்கவில்லை. இது "போர் என்பது சமாதானம்" (war is peace) மற்றும் "சுதந்திரம் என்பது அடிமைத்தனம்" (freedom is slavery) என்ற ஓர்வெல்லியன் உலகைப் (Orwellian world) போன்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கீழ், "உத்தரவாதம் என்பது நிலையற்றது" (guarantee is precarity) மற்றும் "நலன்புரி என்பது சுய பாதுகாப்பு" (welfare is self-care) ஆகும்.
முகமது அஸ்ஜத், ஜாமியா மில்லியாவில் பொருளாதார பேராசிரியராக உள்ளார்.
ரீதிகா கேரா டெல்லி இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (Indian Institute of Technology (IIT)) பேராசிரியராக உள்ளார்.