உள்நாட்டு கண்டுபிடிப்புகளுக்கு ஒரு புதிய தடையை ஏற்படுத்தியுள்ள வர்த்தகம் மற்றும் பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தின் (TEPA) அறிவுசார் சொத்துரிமை வரம்புமீறல் -தினேஷ் அப்ரோல்

 அறிவுசார் சொத்துரிமை  (intellectual property (IP)) மீதான அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதியின் வலுவான நிலைப்பாடு மற்றும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களின்  (Free Trade Agreements (FTAs)) வழியிலான முதலீடுகள் ஆகியவை பொது மற்றும் தனியார் நலன்களுக்கு இடையிலான சமநிலையை மாற்றலாம். இது இந்தியாவின் முக்கியமான கண்டுபிடிகளுக்கு தடையை ஏற்படுத்தும்.

 

சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டைன் ஆகிய நாடுகளுடன் இந்தியா புதிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இது முந்தைய ஒப்பந்தங்களில் இருந்து வேறுபட்டது. இந்த ஒப்பந்தம் இந்த நான்கு நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கத்துடன் (European Free Trade Association (EFTA)) வர்த்தகம் மற்றும் பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தின் (Trade and Economic Partnership Agreement (TEPA)) ஒரு பகுதியாகும். இது அறிவுசார் சொத்து (intellectual property (IP)), முதலீட்டு பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்தியா, பொதுவாக, உலக வர்த்தக அமைப்பில் அறிவுசார் சொத்துரிமை கொள்கைகளைப் பற்றி விவாதித்து இருக்கிறது.  


புறக்கணிக்கப்பட்ட பாடங்கள்


இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் கோவிட்-19 பிறகான  கண்டுபிடிப்புகளுக்கு அறிவுசார் சொத்துரிமைகளின் வர்த்தகம் தொடர்பான அம்சங்களுக்கான ஒப்பந்தங்களுக்கு (The Agreement on Trade-Related Aspects of Intellectual Property Rights (TRIPS)) விலக்கு கோரின. தடுப்பூசிகளை உருவாக்க சொந்த தொழில்நுட்பத்தையும் ஆராய்ச்சியையும் பயன்படுத்த இது தேவைப்பட்டது. வளரும் நாடுகளின் ஆதரவு இந்தியாவுக்கு கிடைத்தது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும் உலக வர்த்தக அமைப்பில் இந்த விலக்கை எதிர்த்தன. 


ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்துடனான பேச்சுவார்த்தையில் இந்தியா அதிக அறிவுசார் சொத்துரிமை சலுகைகளை வழங்கக்கூடும். இந்த சலுகைகள் அறிவுசார் சொத்துரிமை மற்றும் முதலீட்டிற்கான இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றத்தின் ஒரு பகுதியாகும். ஆகஸ்ட் 2022 இல், இந்திய பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு (Economic Advisory Council to the Prime Minister  (EAC-PM)) “இந்தியா ஏன் அதன் காப்புரிமைச் சுற்றுச்சூழலில் அவசரமாக முதலீடு செய்ய வேண்டும்” என்ற தலைப்பில் ஒரு பணித் தாளை (Working Paper (WP)) வெளியிட்டது. இந்த ஆவணம் அமெரிக்க காப்புரிமைக் கொள்கையை வெளிப்படையாகக் குறிப்பிடுகிறது. காப்புரிமை மானியங்களை விரைவுபடுத்துவதற்கான பரிந்துரை மற்றும் காப்புரிமை கொள்கைகளை தெளிவுபடுத்தும் யோசனையின் அடிப்படையில் இந்த கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.


இந்தியாவை மிகவும் புதுமையாக இருப்பதிலிருந்து தடுப்பது எது என்று அந்த பணித் தாள் குறிப்பிடவில்லை. அதன் பரிந்துரைகள் பெரும்பாலும் தனியார் நலன்களுக்கு சாதகமாக உள்ளன. அவர்கள் காப்புரிமை அலுவலகத்தை பணம் சம்பாதிக்கும் நிறுவனமாகப் பார்க்கிறார்கள். பொது நன்மையைப் புறக்கணிக்கிறார்கள். ஆலோசகர்கள் அதிக வெளிநாட்டு முதலீட்டை விரும்புகிறார்கள். மேலும், அறிவுசார் சொத்துரிமை சலுகைகளை வழங்குவது அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான தொழில்நுட்ப போட்டிக்கு உதவும் என்று நினைக்கிறார்கள்.


சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியாவிலிருந்து காப்புரிமை தாக்கல் செய்யும் எண்களை இந்த கட்டுரை  ஆய்வு செய்கிறது.  இது காப்புரிமை வைத்திருப்பவர்களுக்கு சாதகமான மாற்றங்களை ஊக்குவிக்கிறது. இருப்பினும், சீனா, ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் தொழில்நுட்பத்திற்கு அரசு முதலீடு மற்றும் சுயாதீன கண்டுபிடிப்பு எவ்வாறு பங்களிக்கிறது என்பதை தெளிவாக விளக்கவில்லை. விரைவான கண்காணிப்பு காப்புரிமை ஒப்புதல்கள் தரமான தயாரிப்புகளுக்கு வழிவகுக்கும்.


இந்தியாவுக்கும் சீனாவுக்கும் உள்ள வேறுபாடு


சீனா, தங்கள் சொந்த கண்டுபிடிப்புகளை அதிகரிக்கவும், வெளிநாட்டு முதலீட்டில் இருந்து பயனடையவும் பல்வேறு திட்டங்களை வடிவமைத்துள்ளனர்.  இந்தியா  இதுபோன்ற திட்டங்களை உருவாக்கவில்லை. அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளில் சீனா முதலீடுகளை செய்து வைத்து இருக்கிறது. இது தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சியில் தன்னம்பிக்கை பெற உதவுகிறது. ஆனால் அவர்கள் இந்த முதலீடுகளை அறிவுசார் சொத்துக்கான சந்தைகளை  உருவாக்குவதுடன் இணைக்கவில்லை. 


2024 இல் புதிய காப்புரிமை விதிகளில் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கத்தின் (European Free Trade Association (EFTA))  சலுகைகள் அடங்கும். ஆகஸ்ட் 2022 இல் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு காப்புரிமை மானியங்களுக்கான காலக்கெடுவை நிர்ணயிக்கவும் மற்றும் வெளிநாட்டு காப்புரிமை வைத்திருப்பவர்களுக்கு சுமையாக இருக்கும் அறிக்கையிடல் தேவைகளைக் குறைக்கவும் பரிந்துரைத்தது. காப்புரிமைச் சட்டம் (Patents Act) 1970இன் 25 (1) பிரிவை மாற்றுவதற்கு அவர்கள் பரிந்துரைத்தனர். ஏனெனில் சிலர் தேவையற்ற புகார்களுடன் காப்புரிமை ஒப்புதலை தாமதப்படுத்த அதைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.        


இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பதாரர்கள் காப்புரிமை பெறுவதற்கு  பல்வேறு சவால்களை எதிர்கொள்வதாக அமெரிக்க சிறப்பு அறிக்கை 301 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.  இருப்பினும், உலக வர்த்தக அமைப்பின் காப்புரிமை திருத்தங்களுக்குப் பிறகு, பொது நலனைப் பாதுகாப்பதற்காக இந்த விதிகள் சேர்க்கப்பட்டதற்கான காரணத்தை அது விளக்கவில்லை. அணுகல், மலிவு, மற்றும் உள்ளூர் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காக இந்த ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன என்பதையும் ஒப்புக்கொள்ளத் தவறிவிட்டது. கூடுதலாக, காப்புரிமைகளைச் சரிபார்க்க போதுமான நபர்கள் அல்லது ஆதாரங்கள் இல்லை என்று கூறுகிறது. வெளிநாட்டு காப்புரிமை வைத்திருப்பவர்கள் சில விவரங்களை ரகசியமாக வைத்திருப்பதை எளிதாக்க பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு பரிந்துரைத்தது.  


அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் படி, காப்புரிமை பெற்ற தயாரிப்பை இறக்குமதி செய்வது மட்டும் போதாது. காப்புரிமை வைத்திருப்பவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகள் கிடைக்கக்கூடியவை மற்றும் மலிவு விலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆனால் இப்போது, அவர்கள் சில மதிப்புமிக்க தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டியதில்லை.


TRIPS ஒப்பந்தத்திற்கு  பிறகு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் 76% காப்புரிமைகளை தாக்கல் செய்தன. இந்திய நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை. இந்திய கண்டுபிடிப்பாளர்கள் சம்பந்தப்பட்ட பெரும்பாலான தொழில்நுட்ப காப்புரிமைகள் வெளிநாட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களிலிருந்து வருகின்றன. இந்தியாவின் வணிகத் துறையானது முதல் 10 உலகப் பொருளாதாரங்களில் (பிரேசில் மிகக் குறைவானது) இரண்டாவது குறைந்த ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. 200,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள், நாட்டின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டுள்லனர். அவர்களில் சுமார் 40% பேர், பெங்களூர், ஹைதராபாத் மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மையங்களில் பணிபுரிகின்றனர்.


தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்ய செலவிடப்படும் தொகை அதிகரித்து வருகிறது. இறக்குமதி தொழில்நுட்பத்துடன் ஒப்பிடும்போது உள்நாட்டு கண்டுபிடிப்புகளுக்கு செலவிடப்படும் பணத்தின் விகிதம் மிகவும் குறைந்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, இந்த விகிதம் 2000 ஆம் ஆண்டில் 13.63% ஆக இருந்து 2018 இல் 2.18% ஆக குறைந்தது. சின்ஜென்ட்டா, பேயர் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களால் நாட்டை விட்டு வெளியேறும் பணம் அதிகரித்துள்ளது. இந்த நிறுவனங்கள் ஐரோப்பா அல்லது ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கத்தை (European Free Trade Association (EFTA)) தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகின்றன. அவர்கள் அறிவுசார் சொத்துரிமை மூலம் சந்தைகளின் மீது அதிக கட்டுப்பாட்டைப் பெறுகிறார்கள். ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் அமைந்துள்ள தாய் நிறுவனங்கள், இந்திய கண்டுபிடிப்பாளர்களுடன் உருவாக்கப்பட்ட கண்டுபிடிப்புகளிலிருந்து பெறப்பட்ட உரிமைகளை கட்டுப்படுத்துகின்றன. இது இரசாயனங்கள் மற்றும் கணினி தொடர்பான கண்டுபிடிப்புகள் போன்ற துறைகளை உள்ளடக்கியது. இந்திய சமூகம் இரண்டு முறை பணம் செலுத்துகிறது: முதலாவதாக, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித (science, technology, engineering and mathematics (STEM)) துறைகளில் திறமைகளைப் பயிற்றுவிப்பதற்கும் பயிற்சி செய்வதற்கும் பணம் செலவிடப்படுகிறது. பின்னர், இந்திய திறமையாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு இறக்குமதி, உரிமைத்தொகை மற்றும் கட்டணங்களை மீண்டும் செலுத்துகிறது.


அறிவுசார் சொத்துரிமை (intellectual property (IP)) மற்றும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் (free trade agreement (FTAs)) மூலம் முதலீடு செய்வதற்கான புதிய அணுகுமுறை அமெரிக்க வர்த்தக பிரதிநிதியின் செயல்திட்டத்தைப் பின்பற்றுகிறது. இது அறிவுசார் சொத்துரிமையின் பாதுகாப்பை வலுவாக ஆதரிக்கிறது. இந்த புதிய அணுகுமுறை, பொது மற்றும் தனியார் நலன்களுக்கு இடையிலான சமநிலையை சீர்குலைக்கும் அபாயம் உள்ளது. இந்தியாவின் பங்கேற்பானது, முக்கியமான கண்டுபிடிப்புகளை வளர்க்கும் திறனைத் தடுக்கலாம். அதற்கு பதிலாக, இது இந்தியாவின் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித துறைகளில் இந்தியாவின் திறமையான வல்லுநர்கள் சிலிக்கான் பள்ளத்தாக்கின் கண்டுபிடிப்பு மையங்களுக்கு இடம்பெயர்வதற்கு இது வழிவகுக்கும்.




Original article:

Share: