வாக்குச் சீட்டுக்கு திரும்புவதை நிராகரித்த உச்சநீதிமன்றம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், எண்ணும் செயல்முறை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது -ஆனந்தகிருஷ்ணன் க

 மனுதாரர்களில் ஒருவர் மீண்டும் வாக்குச் சீட்டுகளுக்கு செல்ல பரிந்துரைத்தபோது, வாக்குச் சீட்டுகளின் காலத்தில் என்ன நடந்தது என்பதை மறக்கவில்லை என்று உச்ச நீதிமன்ற அமர்வு கூறியது.


வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்துவதற்கான யோசனை குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (Electronic Voting Machines (EVMs)) நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுப்பிய மனுதாரர்களிடம், வாக்குச் சீட்டுகளில் கடந்த கால பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தனர். இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வின் ஒரு பகுதியாக இருக்கும் நீதிபதி சஞ்சீவ் கன்னா, வாக்குச் சீட்டுகள் தொடர்பான தனது தனிப்பட்ட அனுபவங்களைக் குறிப்பிட்டார்.    

 

அதிர்ஷ்டவசமாக, நாங்கள் இப்போது எங்கள் அறுபதுகளில் இருக்கிறோம். முன்பு என்ன நடந்தது என்பதை நாம் பார்த்திருக்கிறோம். அதை மறந்து விட்டீர்களா? அதை நீங்கள் மறந்திருந்தால் மன்னிக்கவும், நான் மறக்கவில்லை என்று வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனிடம் நீதிபதி சஞ்சீவ் கன்னா கூறினார். ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (Association for Democratic Reforms) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை (Voter verifiable paper audit trail (VVPAT)) சீட்டுகள் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர (EVM) வாக்குகளை 100% சரிபார்க்க கோருகிறது. தற்போது, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மட்டுமே ஒப்புகைச் சீட்டுகளுடன் தோராயமாக சரிபார்க்கப்படுகின்றன.


நீதிபதி தீபங்கர் தத்தா அடங்கிய நீதிமன்ற அமர்வு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மாற்று என்ன என்று கேட்டபோது, வாக்குச்சீட்டுகள் பற்றிய யோசனையை பிரசாந்த் பூஷண் பரிந்துரைத்தார். பல ஐரோப்பிய நாடுகள் இப்போது வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்துகின்றன என்றார் பூஷன். ஜேர்மன் அரசியலமைப்பு நீதிமன்றம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நம்புவதற்கு எதிராக தீர்ப்பளித்ததாகவும் அதற்கு பதிலாக காகித வாக்குச்சீட்டுகளைப் பயன்படுத்த பரிந்துரைத்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


இந்த பரிந்துரையை நிராகரித்த நீதிபதி தத்தா, ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் தேர்தல்களை நடத்துவது ஒரு பெரிய பணியாக உள்ளது என்று குறிப்பிட்டார். மேலும், மேற்கு வங்கத்திற்கும் ஜெர்மனிக்கும் இடையிலான மக்கள் தொகை வேறுபாட்டை அவர் எடுத்துரைத்தார் மற்றும் தேர்தல் நடைமுறையை நம்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) எவ்வாறு செயல்படுகின்றன. வாக்குகள் எவ்வாறு எண்ணப்படுகின்றன என்பது குறித்தும் நீதிமன்ற அமர்வு கேள்விகளைக் கேட்டது.


பெரும்பான்மையான வாக்காளர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (EVM) நம்பவில்லை என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் சமர்ப்பித்ததையும் அது கேள்விக்குள்ளாக்கியது மற்றும் பிரசாந்த் பூஷனிடம் “அதை எங்கிருந்து பெறுகிறீர்கள்” (where do you get that) என்று சமர்ப்பித்ததைக்  கேட்டுக்கொண்டது.


வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை (VVPAT) சீட்டுகளுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர (EVM) வாக்குகளை 100% சரிபார்ப்பதற்கான மனு தற்போது நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலின் போது விவாதிக்கப்படுகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் கவலைகளை எழுப்பியுள்ளன. மேலும், சிலர் வாக்குச் சீட்டுகளுக்கு திரும்ப மாறுவதைப் பற்றியும் பரிந்துரைத்துள்ளனர். தற்போது, ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், 5 வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை (VVPAT) சீட்டுகள் மூலம் சோதனை செய்கின்றனர்.


இந்த வாதத்தில், சரியான தரவுகள் இல்லை என்று நீதிபதி கன்னா குறிப்பிட்டார். மற்றொரு கருத்துக் கணிப்பு வெவ்வேறு முடிவுகளைக் காட்டக்கூடும் என்று அவர் மேலும் பரிந்துரைத்தார். ஆனால், அதை பற்றி ஆராயாமல் இருப்பது நல்லது. 


ஒரு பொதுத்துறை நிறுவனத்தால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) தயாரிக்கப்படுவது குறித்தும், அங்குள்ள தொழில்நுட்ப நபரின் பொறுப்புணர்வு இல்லாதது குறித்தும் வாதிட்ட ஒருவரிடம், தனியார் துறையால் தயாரிக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (EVM) விரும்புவீர்களா என்று நீதிபதி கன்னா கேட்டுக் கொண்டார். அப்படியானால், அவர்கள் தனியார் துறை உற்பத்திக்கு எதிராக வாதிடுவார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார். பதிவான மொத்த வாக்குகள், முரண்பாடுகள் மற்றும் காகித சீட்டு எண்ணுவதற்கான கோரிக்கைகள் உள்ளிட்ட தரவுகளின் அடிப்படையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்பாட்டை ஆய்வு செய்வதன் முக்கியத்துவத்தை இந்த அமர்வு வலியுறுத்தியது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கையாளப்படுகின்றனவா என்பதை தீர்மானிக்க இந்த தரவு உதவும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) கையாளுதலை அவர்கள் குற்றம் சாட்டவில்லை. ஆனால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை (VVPAT) இரண்டிலும் நிரல்படுத்தக்கூடிய சிப்புகள் (programmable chip) காரணமாக அதன் திறனை எடுத்துக்காட்டுகிறார்கள் என்று பூஷண் தெளிவுபடுத்தினார். வாக்காளர்கள், வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை (VVPAT) சீட்டுகளை தங்கள் கையிலெடுத்து  உரிய பெட்டியில் இடுவதற்கு அனுமதிப்பது மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) வெளிப்படையான கண்ணாடியால் (opaque mirrored glass) மாற்றுவது போன்ற நடவடிக்கைகளை அவர் பரிந்துரைத்தார்.


அனைத்து வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை (VVPAT) சீட்டுகளையும் எண்ண 12 நாட்கள் ஆகும் என்று மனுதாரர்கள் கூறியதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


அறிவுசார் சொத்துரிமை (intellectual property) காரணமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) மூலக் குறியீட்டை தேர்தல் ஆணையத்தால் பகிர்ந்து கொள்ள முடியவில்லை என்று பிரசாந்த் பூஷண் குறிப்பிட்டுள்ளார். இது இயந்திரங்கள் குறித்து மேலும் சந்தேகத்தை எழுப்புகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (Electronics Corporation of India Ltd) மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் (Bharat Electronics) ஆகிய இரண்டு பொதுத்துறை நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், 2019 மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவான வாக்குகள் மற்றும் சில தொகுதிகளில் எண்ணப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையில் உள்ள பொருத்தமின்மை பற்றிய இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) தரவு பற்றிய செய்தி அறிக்கையை மேற்கோள் காட்டினார். முதல் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடந்த 373 தொகுதிகளில் கடுமையான முரண்பாடுகள் உள்ளன என்று அவர் கூறினார்.


ஆனால், சில நேரங்களில் சில முரண்பாடுகள் இருக்கலாம். ஏனெனில், வாக்கு இயந்திரத்தில் பொத்தானை உடனடியாக அழுத்தாமல் இருக்கலாம். ஆனால், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் வேட்பாளர்கள் தரவுகளை சரிபார்த்து, வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை (VVPAT) சீட்டுகளை எண்ணும்படி கேட்கப்படலாம்.


ஏதேனும் முரண்பாடு ஏற்பட்டால், வேட்பாளர்கள் வாக்குக்கான தரவைப் பெறுவார்கள். இதனை, வேட்பாளர்கள் உடனடியாக அதை சவால் செய்யலாம் என்று நீதிபதி கன்னா வலியுறுத்தினார்.


வாக்குக்கான தரவுகள் பின்னர் தாமதமாக வந்ததாகவும். ஆனால், இதை நீதிமன்ற அமர்வு ஒப்புக் கொள்ளவில்லை என்றும் சங்கரநாயனன் கூறினார்.


சங்கரநாராயணன் ஜூலை 2023 முதல் அரசாங்க உத்தரவாதங்களுக்கான குழுவின் அறிக்கையைக் குறிப்பிட்டார். அந்த அறிக்கையில், கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அரசு இன்னும் பதிலளிக்கவில்லை என்று நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது. 2019 தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை (VVPAT) இடையே ஏதேனும் வேறுபாடுகள் இருந்தால் தேர்தல் ஆணையத்திடம் இருந்து தகவல் பெறப்படும் என்று அரசாங்கம் பாராளுமன்றத்தில் உறுதியளித்தது.


இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் கேட்போம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.


ஒரு வாக்காளர் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனையின் (VVPAT) மூலம் சீட்டு கோரினால், அவர்கள் பொய் சொன்னால் 6 மாத சிறைத்தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் போன்ற விளைவுகளை அவர்கள் புரிந்துகொள்வதாக அறிவிக்க வேண்டும் என்ற விதி குறித்து சங்கரநாயராயன் கவலை தெரிவித்தார். இந்த விதி மக்களை ஊக்கப்படுத்துகிறது என்று அவர் நினைக்கிறார்.


தற்போது, வாக்களித்த உடனேயே வாக்காளர்களுக்கு காகிதச் சீட்டுகள் வழங்கப்படுவதில்லை என்று நீதிபதி கன்னா விளக்கினார். ஒரு வாக்காளர் காகிதச் சீட்டைக் கோரினால், தேர்தல் செயல்முறை இடைநிறுத்தப்பட வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரம் திறக்கப்பட வேண்டும், சீட்டை மீட்டெடுக்க வேண்டும் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் அழைக்கப்பட வேண்டும். நடைமுறை தாக்கங்களை அவர் வலியுறுத்தினார், வெறும் 10% வாக்காளர்கள் கூட  சீட்டுகளைக் கேட்டால், அது தேர்தல் செயல்முறையை கடுமையாக சீர்குலைக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.


இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 18-ம் தேதிக்கு மீண்டும் நடைபெற உள்ளது.




Original article:

Share: