ஆர்க்டிக்கில் கடற்படுகை சுரங்கம் (seabed mining) மற்றும் வள சுரண்டல் (resource exploitation) ஆகியவற்றிலிருந்து பயனடைய இந்திய அரசாங்கம் ஆர்வமாக இருந்தாலும், அது ஒரு நிலையான பிரித்தெடுக்கும் முறையை சந்தேகத்திற்கு இடமின்றி ஆதரிக்க வேண்டும்.
மார்ச் 2024 இல், இந்தியா தனது முதல் குளிர்கால பயணத்தை ஆர்க்டிக்கில் வெற்றிகரமாக முடித்தது.
அதற்கு முன்பு, டிசம்பர் 2023 இல், ஆர்க்டிக்கில் இந்தியாவின் முதல் குளிர்காலப் பயணத்திற்குத் தயாராகுவதற்கு, நான்கு இந்திய காலநிலை விஞ்ஞானிகள் ஒஸ்லோ (Oslo) சென்றனர். இங்கு, என்ன நடக்கும் என்பது பற்றி அவர்களுக்கு அதிகம் தெரியாது. இதற்கு முன், ஆர்க்டிக்கில் உள்ள ஹிமாத்ரி (Himadri) என்ற இந்தியாவின் ஆராய்ச்சி நிலையம் (India’s research station) கோடை காலத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. குளிர்காலத்தில் பயணங்கள் என்பது மிகவும் குளிர்ந்த நிலையைத் தாங்குவதாகும். இது, சில நேரங்களில் -15 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக இருக்கும். இந்திய ஆராய்ச்சியாளர்கள் குறிப்பாக துருவப்பகுதியின் இரவுகளில் (polar nights) நீண்ட நேரம் இருளில் இருப்பது குறித்து கவலைப்பட்டனர்.
ஆர்க்டிக்கில் அதிகரிக்கும் ஆர்வம்
ஆர்க்டிக் பகுதிக்கான இந்தியாவின் முதல் குளிர்கால பயணம் மார்ச் 2024 இல் வெற்றிகரமாக முடிந்தது. விஞ்ஞானிகள் இந்த மைல்கல்லை அடைந்திருந்தாலும், ஆண்டு முழுவதும் ஆர்க்டிக் பயணத்தை மேற்கொள்ள இந்தியா தயங்குவது கேள்விகளை எழுப்புகிறது. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியாவின் துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் (National Centre for Polar and Ocean Research) ஆர்க்டிக்கில் குளிர்கால பயணத்திற்கான எந்தவொரு காரணத்தையும் வழங்கவில்லை. இருப்பினும், அறிவியல் தரவானது (scientific data), ஆர்டிக்கில் எதிர்பார்த்ததை விட வேகமாக வெப்பமடைவதை வெளிப்படுத்தியுள்ளன. ஆர்க்டிக் கடல் பனி உருகுவதற்கு இந்தியாவில் பேரழிவு தரும் காலநிலை நிகழ்வுகளை இணைக்கும் உண்மைகள் வெளிவந்தபோது, முடிவெடுப்பவர்கள் செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இரண்டாவதாக, ஆர்க்டிக் கடல் பாதைகளை, குறிப்பாக வடக்கு கடல் பாதையை வர்த்தகத்திற்கு பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆர்க்டிக் மீதான இந்தியாவின் ஆர்வத்திற்கு ஒரு காரணமாகும். இந்த வழிகளைப் பயன்படுத்துவதன் மூலம், கப்பல் மீதான செலவுகளைக் குறைக்கவும், அதற்கான பயண நேரத்தைக் குறைக்கவும், சரக்குகளைக் கொண்டு செல்வதற்கான பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்தியா நம்புகிறது.
மூன்றாவது, புவிசார் அரசியல் காரணிகளும் ஒரு தலைமையை வகிக்கின்றன. ஆர்க்டிக்கில் சீனாவின் அதிகரித்து வரும் முதலீடுகள் குறித்து, குறிப்பாக வடக்கு கடல் பாதைக்கு சீனாவுக்கு விரிவாக்கப்பட்ட அணுகலை ரஷ்யா வழங்கியிருப்பது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. ரஷ்யா-உக்ரைன் மோதல் (Russia-Ukraine conflict) மற்றும் பிராந்திய கூட்டுறவு மன்றங்களை (regional cooperative forums) இடைநிறுத்துதல் ஆகியவற்றால் எழும் பதட்டங்களின் பின்னணியில், ஆர்க்டிக் மீது அதிகரித்து வரும் கவனத்தில் நாடுகளின் இராஜதந்திர ரீதியான தாக்கங்களை இந்தியா காண்கிறது. மேற்கத்திய நாடுகள் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுடனும் நேர்மறையான உறவுகளைப் பேணுவது இந்தியாவுக்கு முன்னுரிமையாகும். பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதட்டங்களின் சாத்தியமான விளைவுகளைக் கருத்தில் கொண்டு, குறிப்பாக கோலா தீபகற்பத்தில் (Kola Peninsula) ரஷ்யா அதன் அணுசக்தி திறன்களை அதிகம் நம்பியுள்ளது.
1920 ஆம் ஆண்டு ஸ்வால்பார்ட் ஒப்பந்தத்தில் (Svalbard Treaty) கையெழுத்திட்டதிலிருந்து, இந்தியாவானது, ஆர்க்டிக் பகுதியில் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டில், இந்தியா ஆர்க்டிக் நுண்ணுயிரியல் (Arctic microbiology), வளிமண்டல அறிவியல் (atmospheric sciences) மற்றும் புவியியல் (geology) குறித்து ஆராய்ச்சி செய்யத் தொடங்கியது. ஒரு வருடம் கழித்து, இந்தியா ஒர் ஆர்க்டிக் ஆராய்ச்சி தளத்தை அமைத்தது. ஆர்டிக்கில் ஆராய்ச்சி தளத்தை அமைத்த சில வளரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். 2013 இல், ஆர்க்டிக் கவுன்சிலில் (Arctic Council) இந்தியாவுக்கு 'பார்வையாளர்' (observer) அந்தஸ்து கிடைத்தது. அதன்பிறகு, 2014ல், ஸ்வால்பார்டில் மல்டி-சென்சார் மூர்டு அப்சர்வேட்டரியையும் (multi-sensor moored observatory in Svalbard), 2016ல் வளிமண்டல ஆய்வகத்தையும் அமைத்தனர். இந்த நிலையங்கள் ஆர்க்டிக் பனி மற்றும் பனிப்பாறைகள் மற்றும் ஆர்க்டிக்கில் உருகுவது இமயமலை மற்றும் இந்தியப் பருவமழையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்கிறது.
இருப்பினும், இந்தியாவின் ஆர்க்டிகின் ஈடுபாடு குறித்து இந்திய கல்வியாளர்களும், கொள்கை வகுப்பாளர்களும் கருத்துகளால் வேறுபடுகின்றனர். ஆர்க்டிக்கின் மாறிவரும் காலநிலை இந்தியாவின் பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதில் அவர்கள் உடன்படவில்லை. இதனால், இந்தியாவின், குறிப்பாக புதைபடிவ எரிபொருட்களுக்கான சுரங்கம் தொடர்பாக, தெளிவான பொருளாதாரத் திட்டம் இல்லாதது குறித்து சிலர் கவலைப்படுகிறார்கள். ஆர்க்டிக்கில் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவானவர்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு மற்றும் சுரங்கத்தில் கவனம் செலுத்தி, இந்தியா நடைமுறைக்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். சில விமர்சகர்கள் சுற்றுச்சூழல் அபாயங்களை குறித்து வலியுறுத்தி வருகின்றனர் மற்றும் கடல் வள சுரண்டலின் தீங்குகளைக் கருத்தில் கொண்டு ஒரு சீரான கொள்கைக்கு இவர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.
ஒத்துழைப்புக்கான சாத்தியம்
ஆர்க்டிக் கவுன்சிலின் தற்போதைய தலைவரான நார்வே இந்தியாவுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளது. 1980களின் பிற்பகுதியிலிருந்து, ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக்கில் விஷயங்கள் எவ்வாறு மாறுகின்றன மற்றும் இது தெற்காசியாவை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்ய இந்தியாவும் மற்றொரு நாடும் இணைந்து பணியாற்றின. காலநிலை மாற்றம் ஆர்க்டிக் மற்றும் தெற்காசிய பருவமழையை அதிகம் பாதிக்கும் என்பதால், அவர்கள் இன்னும் கடினமாக உழைத்து வருகின்றனர்.
இந்தியாவின் தற்போதைய கொள்கையில் ஆர்க்டிக் நாடுகளுடன் பசுமை எரிசக்தி மற்றும் சார்ந்த தொழில்களில் ஒத்துழைப்பது ஒரு பொறுப்பான பங்குதாரராக அதன் நற்பெயரை மேம்படுத்துகிறது. கழிவு மேலாண்மை, மாசு கட்டுப்பாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பசுமை தொழில்நுட்பம் ஆகியவற்றில் டென்மார்க் மற்றும் பின்லாந்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. நீலப் பொருளாதாரம், இணைப்பு, கடல்சார் போக்குவரத்து, முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் பொறுப்பான வள மேம்பாடு ஆகியவற்றில் ஆர்க்டிக் கவுன்சிலின் பணிக்குழுக்களில் இந்தியாவின் அதிக ஈடுபாட்டை செயல்படுத்தும் வகையில் நார்வேயுடன் கூட்டாண்மைக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக பலர் கருதுகின்றனர். எவ்வாறாயினும், ஆர்க்டிக்கில் கடற்படுகை சுரங்கம் மற்றும் வள சுரண்டலுக்கான நிலையான பிரித்தெடுத்தல் நடைமுறைகளை இந்தியா ஆதரிக்க வேண்டும்.
நார்வே உடனான கூட்டு அறிவியல் ஆராய்ச்சி மற்றும் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் (scientific research and climate and environmental protection) கவனம் செலுத்தும் என்பது புரிந்துகொள்ளத்தக்கது. இந்தியாவின் ஆர்க்டிக் கொள்கையை உள்ளடக்கிய ஒரு பகுதியாக , பொருளாதாரம் மற்றும் மனித மேம்பாடு (economic and human development); போக்குவரத்து மற்றும் இணைப்பு (transportation and connectivity); நிர்வாகம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு (governance and international cooperation); மற்றும் தேசிய திறன் மேம்பாடு (national capacity building) ஆகும். ஆர்க்டிக்கில் பொருளாதார வாய்ப்புகளை ஆராய இந்தியா இன்னும் எதிர்பார்க்கலாம். அப்படியானால், விஞ்ஞானரீதியாக சமூகம் மற்றும் தொழில்துறையின் தேவைகளுக்கு இடமளிக்கும் ஒரு நிலையான கொள்கையை வடிவமைக்க நார்வே இந்தியாவுக்கு உதவ முடியும். ஆர்க்டிக்கிலும் உலகளாவிய புவிசார் அரசியல் பதட்டங்கள் அதிகரித்து வருவதால், அழுத்தத்தைத் தணிக்க ஆக்கபூர்வமான மற்றும் உணர்திறன் அல்லாத வழிகளைக் கண்டறிவது இந்தியா மற்றும் நார்வே ஆகிய இரு நாடுகளின் நலனுக்காக இருக்கும்.
அபிஜித் சிங், புது தில்லியில் உள்ள Observer Research Foundation-இன் கடல்சார் கொள்கை முன்முயற்சியின் தலைவராக உள்ளார்.
ஆண்ட்ரியாஸ் ஓஸ்தாகன் ஒஸ்லோவில் உள்ள Fridtjof Nansen Institute-ன் மூத்த ஆராய்ச்சியாளர் ஆவார்.