நீதிமன்றங்களில், அமலாக்கத்துறை நீதிப்பேராணை மனுக்களை (writ petitions) தாக்கல் செய்ய முடியுமா? -ஆராத்ரிகா பௌமிக்

 அமலாக்க இயக்குநரகத்தின் அதிகாரத்திற்கு எதிரான சட்டரீதியான சவாலின் தாக்கல் செய்யப்பட்டுள்ள முக்கிய வழக்கு எது? கேரள அரசாங்கத்தின் வாதம் என்னவாக இருக்கிறது? இந்தியாவில் ஒன்றிய மற்றும் மாநில அதிகாரிகளுக்கு இடையிலான அதிகார சமநிலைக்கு இந்த வழக்கின் தீர்ப்பு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?


ஜனவரி 20 அன்று, அமலாக்கத்துறை (ED) நிவாரணம் கோருவதற்காக அரசியலமைப்பு நீதிமன்றங்களின் நீதிப்பேராணை அதிகார வரம்பைப் பயன்படுத்த உரிமை உள்ளதா என்பதை ஆராய்வதாக உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டது. நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு, அவ்வாறு செய்வதற்கு அந்த அமைப்புக்கு உள்ள உரிமையை உறுதி செய்த கேரள உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து கேரள மற்றும் தமிழ்நாடு அரசுகளால் தாக்கல் செய்யப்பட்ட தனித்தனி மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. எதிர்க்கட்சிகளால் ஆளப்படும் இந்த மாநிலங்கள் எழுப்பிய முக்கிய சட்டக் கேள்வியைக் கருத்தில் கொண்ட நீதிமன்ற அமர்வு, இந்த வழக்கை நான்கு வாரங்களுக்குப் பிறகு விசாரணைக்குப் பட்டியலிடுமாறு உத்தரவிட்டது.


நீதிமன்றங்கள் எப்போது நீதிப்பேராணைகளை (writs) பிறப்பிக்க முடியும்?


இந்தியாவில், அரசியலமைப்பின் 32-வது பிரிவின் கீழ், சிறப்பு நீதிப் பேராணைகளை (prerogative writs) பிறப்பிக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அதே, சமயம் உயர் நீதிமன்றங்கள் 226-வது பிரிவின் கீழ் இதே போன்ற அதிகார வரம்பைப் பயன்படுத்துகின்றன. இந்த நீதிப் பேராணைகள் ஆங்கிலப் பொதுச் சட்டத்தில் இருந்து உருவானவை. அங்கு, வழக்கமான சட்டங்களோ அல்லது நீதிமன்றங்களோ ஒரு சிக்கலைத் திறம்படத் தீர்க்க முடியாதபோது, ​​மன்னர்களோ அல்லது நீதிமன்றங்களோ இவற்றைச் சிறப்பு வாய்ந்த  தீர்வுகளாகப் பிறப்பித்தன.


அரசியலமைப்பு ஐந்து வகையான நீதிப்பேராணைகளை அங்கீகரிக்கிறது: அவை,  


அ) ஆட்கொணர்வு நீதிப்பேராணை (Habeas Corpus) சட்டத்திற்கு புறம்பாக ஒருவர் கைது செய்யப்படுவதிலிருந்து இது பாதுகாக்கப்படுகிறது.


ஆ) கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை (Mandamus) மனுதாரர் சட்ட உதவியுடன் மனு தொடர்பபான பணியினைச் சம்மந்தப்ப்ட்ட துறையிலிருந்து நிறைவேற்றிக் கொள்ள முடியும்.


இ) தடையுறுத்தும் நீதிப்பேராணை (Prohibition) ஒரு கீழ் நீதிமன்றமோ அல்லது தீர்ப்பையமோ தனது, சட்ட எல்லலையைத் தாண்டி செயல்படுவதைத் தடுக்கிறது.


ஈ) ஆவணக் கேட்பு பேராணை (Certiorari) உயர்நீதிமன்றம், ஆவணங்களை நியாயமான பரிசீலனைக்கு தனக்கோ அல்லது உரிய அதிகாரிக்கோ அனுப்பச் செய்ய கீழ் நீதிமன்றங்களுக்கு இடும் ஆணை ஆகும்.


உ) தகுதிமுறை வினவும் நீதிப்பபேராணை (Quo-Warranto) இப்பபேராணை சட்டத்திற்குப் புறம்பபாக, தகாத அரசு முறையில் அலுவலகத்தை கைப்பற்றுவதை தடை செய்கிறது.


பிரிவு 32 முதன்மையாக அடிப்படை உரிமைகளை அமல்படுத்துவதற்காக (enforcement of fundamental rights) உச்ச நீதிமன்றத்திற்கு நீதிப் பேராணைகளை பிறப்பிக்கும் அதிகாரத்தை வழங்கினாலும், பிரிவு 226 உயர் நீதிமன்றங்களுக்கு பரந்த அதிகாரத்தை வழங்குகிறது. இது அடிப்படை உரிமைகளை அமல்படுத்துவதற்காக மட்டுமல்லாமல், சட்டப்பூர்வ உரிமைகளை செயல்படுத்துதல் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மறுஆய்வு செய்தல் (review of administrative action.) உட்பட "வேறு எந்தவொரு நோக்கத்திற்காகவும்" நீதிப் பேராணைகளைப் பிறப்பிக்க அனுமதிக்கிறது. இருப்பினும், இத்தகைய நீதிப் பேராணைகளை வழங்குவது நீதிமன்றங்களின் விருப்பத்திற்கு (discretionary) உட்பட்டது. மேலும், ஒரு பயனுள்ள மாற்றுத் தீர்வு ஏற்கனவே கிடைக்கும் பட்சத்தில் நீதிமன்றங்கள் நிவாரணம் வழங்க மறுக்கலாம்.

மேலும், அரசியலமைப்பின் 361-வது பிரிவின் கீழ், குடியரசுத் தலைவர் அல்லது ஒரு மாநில ஆளுநரின் பதவி அதிகாரங்கள் மற்றும் கடமைகளைச் செயல்படுத்துவது தொடர்பாக அவர்களுக்கு எதிராக ஒரு கட்டளையுறுத்தும் நீதிப்பபேராணை உத்தரவை (mandamus) பிறப்பிக்க முடியாது. அரசியலமைப்பு அல்லது சட்டப்பூர்வ விதிகளை மீறி, ஒரு தனிநபர்கள் அல்லது தனியார் அமைப்புகளுக்கு எதிராக நீதிப் பேராணை பிறப்பிக்கப்படாது. இருப்பினும், அரசியலமைப்பு அல்லது சட்டப்பூர்வ விதிகளை மீறி, அரசு ஒரு தனியார் அமைப்புடன் சேர்ந்து கூட்டுச் சதி செய்ததாகக் கூறப்படும் வழக்குகளில் நீதிப் பேராணை பிறப்பிக்கப்படலாம்.


கேரளா ஏன் உச்சநீதிமன்றத்தை அணுகியது?


இந்த சர்ச்சை, 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 26 அன்று கேரள உயர் நீதிமன்றத்தின் ஒரு கூடுதல் அமர்வு வழங்கிய தீர்ப்பில் இருந்து தொடங்கியது. அந்தத் தீர்ப்பில், 2000-ஆம் ஆண்டு ஜூன் மாத தீர்ப்பின்படி, அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், 1999-ஆம் ஆண்டு சட்டத்தின் (Foreign Exchange Management Act) பிரிவு 36-ன் கீழ் ஒன்றிய அரசால் உருவாக்கப்பட்ட அமலாக்க இயக்குநரகம் (ED), அரசியலமைப்பின் 226-வது பிரிவின்கீழ் உயர்நீதிமன்றங்களின் நீதிப்பேராணை அதிகாரத்தைப் பயன்படுத்தத் தகுதியுள்ள ஒரு சட்டப்பூர்வ அமைப்பு என்று கூறப்பட்டிருந்தது.


ராஜதந்திரத் தங்கம் கடத்தல் வழக்குத் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைப்பதற்கான கேரள அரசின் முடிவை எதிர்த்து அமலாக்கத்துறை தாக்கல் செய்த நீதிப்பேராணை மனுவின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு, 2020-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வந்த ராஜதந்திரப் பையிலிருந்து ரூ.14.82 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பானது. இதைத் தொடர்ந்து, தேசிய புலனாய்வு முகமை சட்டவிரோத நடவடிக்கைகள் (Unlawful Activities (Prevention) Act) சட்டம், 1967-ன் கீழ் வழக்குப் பதிவு செய்தது. அதே நேரத்தில், அமலாக்கத்துறையும் பணமோசடி தடுப்புச் சட்டம், 2002-ன் (Prevention of Money Laundering Act, 2002 (PMLA)) கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கைகளைத் தொடங்கியது.


இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான ஸ்வப்னா பிரபா சுரேஷ், அமலாக்கத்துறை அதிகாரிகள் மாநிலத்தின் உயர் பதவிகளில் இருப்பவர்களைக் குற்றஞ்சாட்டும்படி தன்னை வற்புறுத்தியதாகக் கூறி ஒரு ஒலிப் பதிவை வெளியிட்ட பிறகு, இந்த விவகாரம் ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே ஒரு மோதல் புள்ளியாக உருவெடுத்தது. இதைத் தொடர்ந்து, வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியும் ஒரு கடிதம் மூலம் இதே போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், மாநிலத் தலைவர்களுக்கு எதிராக ஏதேனும் சதித்திட்டம் நடக்கிறதா என்பதையும், அப்படி இருந்தால், அந்தச் சதிக்குப் பின்னணியில் உள்ளவர்களைக் கண்டறியவும் பினராயி விஜயன் அரசாங்கம் விசாரணை ஆணையத்திற்குப் பொறுப்பு வழங்கியது.


அதன்பிறகு, அமலாக்கத்துறை தனது துணை இயக்குநர் மூலம், விசாரணை ஆணையத்தை அமைத்த மே 7, 2021 தேதியிட்ட அறிவிக்கையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை அணுகியது. அந்த அறிவிப்பானது சட்டப்பூர்வ அதிகாரம் இல்லாமல் வெளியிடப்பட்டதாகவும், சட்டத்திற்கு முரணானது என்றும் வாதிட்டு, தொடர்புடைய ஆவணங்களைப் பெற்று, அந்த அறிவிப்பை ரத்து செய்யுமாறு அமலாக்கத்துறை நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்தது.


இருப்பினும், அமலாக்கத்துறை ஒரு நீதிப்பேராணை மனுவைத் தாக்கல் செய்வதற்கு உள்ள சட்டப்பூர்வ தகுதியை கேரள அரசு கேள்விக்குள்ளாக்கியது. அது ஒன்றிய அரசின் ஒரு துறை மட்டுமே என்றும், வழக்குத் தொடரவோ அல்லது வழக்குத் தொடரப்படவோ தகுதியுள்ள ஒரு சட்டப்பூர்வ அதிகாரம் அல்லது அதிக அதிகாரம் கொண்ட அமைப்பு அல்ல என்றும் வாதிட்டது. மேலும், அந்த அமைப்பிற்கு உள்ள ஒரே தீர்வு, அரசியலமைப்பின் 131-வது பிரிவின் கீழ் மட்டுமே உள்ளது என்றும், அந்தப் பிரிவு ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கு உச்சநீதிமன்றத்திற்கு பிரத்யேக அதிகார வரம்பை வழங்குகிறது (exclusive jurisdiction to adjudicate disputes) என்றும் வாதிட்டது. தனது வாதத்தை வலுப்படுத்த, மாநில அரசு, ஆந்திரப் பிரதேச அரசின் தலைமை வனப் பாதுகாவலர் vs ஆட்சியர் (Chief Conservator of Forests, Government of Andhra Pradesh versus Collector) வழக்கில் உச்சநீதிமன்றம் 2003-ல் வழங்கிய தீர்ப்பையும் சுட்டிக்காட்டியது. அந்தத் தீர்ப்பில், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தங்களுக்கு எதிராக உயர் நீதிமன்றங்களில் நீதிப்பேராணை மனுக்களைத் தாக்கல் செய்யும் நடைமுறை கண்டிக்கப்பட்டிருந்தது.

உயர் நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கியது?


ஆகஸ்ட் 2021-ல், உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி ஒருவர், அமலாக்கத்துறையின் நீதிப்பேராணை மனுவை பராமரிப்பது குறித்த மாநில அரசின் ஆட்சேபனையை நிராகரித்தார். அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்டப்பூர்வ அதிகாரங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்றும், அந்த அமைப்பை வெறும் ஒன்றிய  அரசின் ஒரு துறையாகக் கருத முடியாது என்றும் குறிப்பிட்டார். மாநில அரசு இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. கூடுதல் அமர்வு, செப்டம்பர் 2025-ல் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.


நீதிபதிகள் சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் சியாம் குமார் V.M. ஆகியோர் அடங்கிய அமர்வு, அமலாக்கத்துறை ஒரு சட்டப்பூர்வ அமைப்பு என்றும், அதன் அதிகாரிகள் அமலாக்கத்துறையும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு 48 மற்றும் 49-ன் கீழ் நியமிக்கப்பட்ட சட்டப்பூர்வ அதிகாரிகள் என்றும் மீண்டும் கூறியது. இந்த அமைப்பிற்கு சட்டப்பூர்வ அதிகாரம் மற்றும் வழக்குத் தொடரும் அதிகாரம் இல்லை என்ற அரசின் வாதத்தை நிராகரித்த கூடுதல் அமர்வு, அத்தகைய ஆட்சேபனை ஒரு "சிறிய குறைபாடு" (trivial defect) என்றும், "வடிவம் சம்பந்தப்பட்ட விவகாரம், சாராம்சம் சம்பந்தப்பட்டதல்ல" (a matter of form and not substance) என்றும் குறிப்பிட்டது. அரசியலமைப்பின் பிரிவு 226-ன் கீழ் உதவி கோருவதற்கான அமலாக்கத்துறையின் சட்டப்பூர்வ உரிமையை தோற்கடிக்க முடியாது.


கேரளாவும் தமிழ்நாடும் உச்சநீதிமன்றத்தில் என்ன வாதங்களை முன்வைத்துள்ளன?


உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தொடர்ந்த மேல்முறையீட்டில், அமலாக்கத்துறையின் நீதிப்பேராணை மனுவை பராமரிப்பதற்கான தனது சவாலை "சிறிய குறைபாடு" என்று உயர்நீதிமன்றம் வகைப்படுத்தியதற்கு ஆட்சேபனை தெரிவித்தது. தலைமை வனப் பாதுகாவலர் வழக்கில், ஒரு தனிநபருக்கோ அல்லது அமைப்புக்கோ வழக்குத் தொடரவோ அல்லது அவர்கள்மீது வழக்குத் தொடரப்படவோ சட்டப்பூர்வ உரிமை உள்ளதா என்பது மிகவும் முக்கியமானது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளதாக விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இந்த சட்டப்பூர்வ தகுதி இல்லையென்றால், அந்த வழக்கில் வெற்றி பெற முடியாது.


மேலும், அமலாக்கத் துறையின் துணை இயக்குநர், ஒரு அதிகாரி மட்டுமே, சட்டத்துறை சார்ந்த நபர் அல்ல என்பதால், நீதிப்பேராணை மனு தாக்கல் செய்ய அவருக்கு உரிமை இல்லை. அவரும் நீதிப்பேராணை மனு தாக்கல் செய்திருக்க முடியாது. எனவே, அமலாக்கத்துறையின் துணை இயக்குநருக்கு நீதிப்பேராணை மனுவைத் தொடங்குவதற்கான உரிமை உள்ளது என்ற உயர்நீதிமன்றத்தின் முடிவு தவறானது என்று அரசு வாதிட்டது. 1999-ஆம் ஆண்டுச் சட்டமோ அல்லது பணமோசடி தடுப்புச் சட்டமோ அமலாக்க இயக்குநரகத்திற்கு (ED) சட்டப்பூர்வ அதிகாரத்தை வழங்கவில்லை என்றும், எனவே அது வழக்குத் தொடரும் உரிமை கொண்ட ஒரு "சட்டப்பூர்வ அமைப்பு" போல செயல்பட முடியாது என்றும் அந்த மனு விரிவாக விளக்கப்பட்டது. கேரளாவின் இந்த சவாலுக்குத் தமிழ்நாடும் ஆதரவளித்ததுடன், தானும் ஏறக்குறைய இதே போன்ற சிக்கலை எதிர்கொள்வதாகக் கூறியது. சட்டவிரோத சுரங்கப் பணிகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு நீதிப்பேராணை மனுவைத் தாக்கல் செய்ததன் மூலம், அமலாக்க இயக்குநரகம் சட்ட செயல்முறைகளைத் தீவிரமாகத் தவறாகப் பயன்படுத்துவதாக தமிழ்நாடு குற்றம் சாட்டியது. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு மனுவில், கேரள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, அமலாக்கத் துறையைத் தூண்டிவிட்டு, அதுவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது வழக்கில் இதேபோன்ற அணுகுமுறையைக் கையாள வழிவகுத்துள்ளதாகத் தமிழ்நாடு வாதிட்டது.


இதன் சாத்தியமான விளைவுகள் என்ன?


அரசாங்கத்தால் நிறுவப்பட்ட அமைப்புகளான இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (Securities and Exchange Board of India) அல்லது இந்திய ரிசர்வ் வங்கி போன்றவற்றுக்கு இணையாக அமலாக்க இயக்குநரகத்தையும் கருத முடியுமா என்பது விவாதத்திற்குரியது. அந்த அமைப்புகள் சட்டப்பூர்வமாக இயங்கும் தன்மையைக் கொண்ட சட்டப்பூர்வ அமைப்புகளாகவும், வழக்குத் தொடரவும் தம்மீது வழக்குத் தொடரப்படவும் வெளிப்படையான சட்டப்பூர்வத் திறனைக் கொண்டவையாகவும் உள்ளன என்று விதி சட்டக் கொள்கை மையத்தின் இணை நிறுவனர் அலோக் பிரசன்னா குமார் 'தி இந்து' நாளிதழிடம் தெரிவித்தார். அமலாக்க இயக்குநரகம் ஒரு தன்னாட்சி பெற்ற சட்ட அமைப்பாகச் செயல்படாமல், ஒன்றிய அரசின் ஒரு கருவியாகவே அனைவராலும் கருதப்படுகிறது என்றும், ஒன்றிய அரசின் சார்பாக வழக்குகளை நடத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.


மாநில அரசுகளைப் போல் இல்லாமல், அமலாக்கத்துறைக்கு எந்தவிதமான தன்னிச்சையான சட்ட உரிமைகளும் இல்லை என்று குமார் மேலும் சுட்டிக்காட்டினார். "மாநில அரசுகள் அமலாக்கத்துறைக்கு எதிராக ஒரு 'பொது கடமை' அல்லது 'சான்றிதழ்' பிறப்பிப்பதை நியாயப்படுத்தக் கூடாது. அதிகபட்சமாக, ஒன்றிய அரசின் ஒரு பிரிவாக அமலாக்கத்துறையின் அதிகாரங்களை ஒரு மாநிலம் ஆக்கிரமித்துள்ளதாக குற்றச்சாட்டு இருக்கலாம். இத்தகைய கோரிக்கை அரசியலமைப்பின் 131-வது பிரிவின் கீழ் ஒன்றிய-மாநில அரசுகளின் தகராறாகக் (Centre-State dispute) கருதப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் என்று அவர் விளக்கினார். இந்த வழக்குகளை உச்சநீதிமன்றம் மட்டுமே பிரத்தியேகமாக விசாரிக்கும்.


Original Article :  Can the ED file writ petitions before Courts? -Aaratrika Bhaumik

Share:

உற்பத்தித் துறைச் சிக்கல்கள்: புதைபடிவமல்லாத எரிபொருள் திறன் மற்றும் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகைத் (PLI) திட்டங்கள் குறித்து...

  மின்கல செல் உற்பத்தித் திறனை மேம்படுத்த நிதி உதவி மட்டுமே போதுமானதல்ல என்று தெரிவிக்கின்றனர். 


2030-ஆம் ஆண்டிற்குள் 500 ஜிகாவாட் (GW) அளவிற்குப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை மேம்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை அடைய, உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (Production Linked Incentive (PLI)) திட்டத்தையே இந்தியா தனது முக்கியக் கருவியாக நம்பியுள்ளது. ஏற்கனவே தொலைத்தொடர்புத் துறையில் இந்தத் திட்டம் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அங்கு, நிறுவனங்கள் தங்களது ஆண்டு விற்பனை இலக்கை எட்டினால் மட்டுமே அரசு ஊக்கத்தொகை வழங்கும் என்பது போன்ற அதே பாணியைப் பின்பற்றி, பசுமைத் தொழில்நுட்பப் பொருட்களை இறக்குமதி செய்யும் நாடாக இருக்கும் இந்தியாவை, உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்ற அமைச்சகங்கள் நம்புகின்றன. இருப்பினும், தொலைத்தொடர்புத் துறையைப் போலன்றி, சூரிய ஒளி மின்சக்தி (Solar PV) மற்றும் நவீன மின்கல சேமிப்புத் துறைகளில் இந்த உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைத் (PLI) திட்டத்தைச் செயல்படுத்துவதில் பெரும் சவால்கள் உள்ளன.இறுதிக்கட்டப் பணியான 'சூரிய ஆற்றல் மின்கலம்' (Solar Module) கட்டமைக்கும் வேலைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இது 2025-ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் அதன் இலக்கில் 56% சதவீதத்தை எட்டிவிடும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், அதன் ஆரம்பக்கட்ட உற்பத்தி நிலைகள் இன்னும் பலவீனமாகவே உள்ளன.


 தொழில்நுட்பரீதியாக மிகவும் கடினமான பாலிசிலிக்கான் (Polysilicon) மற்றும் வேஃபர் (Wafer) தயாரிப்பில், முறையே 14% மற்றும் 10% இலக்கு மட்டுமே எட்டப்பட்டுள்ளது என்றும் இந்த இடைவெளியானது, மூலப்பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்திற்காக நாம் இன்னும் பிற நாடுகளையே சார்ந்திருப்பதைக் காட்டுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.  எனவே, அதிக முதலீடு தேவைப்படும் இத்தகைய ஆரம்பக்கட்டத் திட்டங்களில் உள்ள அபாயங்களைக் குறைக்க, கூடுதல் நிதியுதவி (Capital Subsidies) வழங்குவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. 


மின்கல தயாரிப்புத் திட்டத்திலும் இதே போன்ற சிக்கல்கள் நீடிக்கின்றன. மின்சார வாகனங்களுக்காக (EV) உள்நாட்டிலேயே 50 கிகாவாட் (GWh) மின்கல செல்களை உற்பத்தி செய்யும் திட்டம், ₹18,000 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டது. ஆனால், இதன் முன்னேற்றம் மிகவும் மந்தமாக உள்ளது. 2025-ஆம் ஆண்டின் இறுதி நிலவரப்படி, இலக்கில் வெறும் 2.8% (அதாவது 1.4 கிகாவாட்) மட்டுமே எட்டப்பட்டுள்ளது. உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பொருட்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனை (இரண்டு ஆண்டுகளில் 25% மற்றும் ஐந்து ஆண்டுகளில் 60%) ஒரு தடையாக உள்ளது. 'ஜிகாபேக்டரி' (Gigafactory) எனப்படும் பிரம்மாண்ட தொழிற்சாலைகளை அமைப்பதில் உள்ள தொழில்நுட்ப சிக்கல்கள், தொழிற்சாலைகளை அமைக்கத் தேவையான சீனத் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு விசா வழங்கப்படாதது போன்ற சிக்கல்கள் பின்னடைவுக்குக்கான  காரணங்களாகக் கூறப்படுகின்றன.  வெறும் நிதி உதவியை (பணம்) மட்டும் அளிப்பதன் மூலம் உயர் தொழில்நுட்ப உற்பத்தியை மேம்படுத்திவிடலாம் என்ற அரசாங்கத்தின் நம்பிக்கை தவறானது. இத்தகைய தொழில்நுட்பங்களை பெருமளவில் உற்பத்தி செய்ய பல ஆண்டுகால ஆராய்ச்சி முதலீடும், திறமையான பணியாளர்களும் அவசியம் என்று வலியுறுத்துகின்றனர்.  பெரிய நிறுவனங்கள் சர்வதேச தொழில்நுட்பப் பரிமாற்றங்கள் மூலம் விரைவான முன்னேற்றத்தை எதிர்பார்க்கின்றன. ஆனால், இவை அதிக செலவுகளை ஏற்படுத்துபவை மற்றும் எப்போதும் உடனடி முடிவுகளைத் தருவதில்லை. மேலும், காலக்கெடுவைத் தவறியதற்காக பல நிறுவனங்கள் கடுமையான அபராதங்களைச் சந்தித்து வருகின்றன. எனவே, 'உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை' (PLI) திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஏலம் எடுக்கும் நிறுவனங்களின் நிதி பலத்தை மட்டும் பார்க்காமல், அவர்களின் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் அனுபவத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். 


Original Article : Manufacturing woes: On non-fossil fuel capacity and PLI schemes.

Share:

ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்குத் தீர்வு, இராஜதந்திரத்தில் உள்ளது -சி. ரங்கராஜன், என்.ஆர். பானுமூர்த்தி

  முதலீடுகள் இந்தியாவை விட்டு வெளியேறுவதால் ரூபாய் மதிப்பின் மீது அழுத்தம் ஏற்படுகிறது. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்படும் வரை இந்த நிலை தொடர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 


இந்தியப் பொருளாதாரம் வலுவாக இருக்கும் நிலையில், ரூபாயின் மதிப்பு திடீரென சரிந்து வருவது மக்களையும் பொருளாதார சந்தை நிபுணர்களையும் கவலையடையச் செய்துள்ளது. அதிக வளர்ச்சி, குறைந்த பணவீக்கம் மற்றும் கட்டுக்குள் இருக்கும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை என அனைத்தும் சாதகமாக இருக்கும்போது, இந்த வீழ்ச்சி ஏன் ஏற்படுகிறது என்ற கேள்வியை அனைவரும் எழுப்புகின்றனர்.


இந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.4%-ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பணவீக்கம் தொடர்ந்து குறைவாகவே உள்ளது. 2025-ஆம் ஆண்டின் இறுதியில் நுகர்வோர் விலை குறியீட்டு (Consumer Price Index (CPI)) பணவீக்கம் 1.33%-ஆக இருந்தது. இது இந்திய ரிசர்வ் வங்கியின்  குறைந்தபட்ச விகித இலக்கத்திற்கும் குறைவாகவே தொடர்ந்து நான்கு மாதங்களாக நீடிக்கிறது. 2025-26 நிதியாண்டின் முதல் பாதியில், நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product (GDP)) வெறும் 0.76% மட்டுமே. இது கடந்த ஆண்டின் 1.35%-ஐவிடக் குறைவு. ஒட்டுமொத்தமாக, 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 6% சரிவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 


பொருளாதார சிக்கல்களுக்கான முக்கிய காரணம் 


சரக்கு மற்றும் சேவைகள் பரிமாற்றத்தில் ஏற்படும் வர்த்தகப் பற்றாக்குறை (Trade Deficit) அவ்வளவு பெரியதாக இல்லை என்றே கூறப்படுகிறது. கடந்த ஆண்டு இது 88.43 பில்லியன் டாலராக இருந்தது, தற்போது (ஏப்ரல்-டிசம்பர் 2025-ஆம் ஆண்டுக்குள்) 96.58 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. ஆனால், இந்தியாவின் முக்கியப் பிரச்சனை என்பது அதிக அளவில் அந்நிய முதலீடுகள் வெளியேறுவதுதான் (Capital Outflows) என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து, இந்திய ஏற்றுமதி பொருட்களின்மீது 50% இறக்குமதி வரியை விதித்ததில் இருந்தே, முதலீடுகள் நாட்டை விட்டுத் தொடர்ந்து வெளியேறி வருகின்றன. முதலில், "இருதரப்பு அடிப்படையில்" (Reciprocal basis) எனக் கூறி அமெரிக்கா 25% வரியை விதித்தது. பிறகு, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக மேலும் ஒரு 25% கூடுதல் வரி விதிப்பதாக அறிவித்தது. இப்போது, ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு மேலும் 25% வரி விதிக்கப்போவதாக அமெரிக்கா தற்போது மிரட்டல் விடுத்து வரும் நிலையில். இந்தியாவின் மொத்த வர்த்தகத்தில் ஈரானின் பங்கு வெறும் 0.15% மட்டுமே என்றாலும், இந்த மிரட்டல் இந்தியாவிற்கும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.


கடந்த 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில், இந்தியாவிற்கு வந்த நிகர மூலதன வரத்து (inflows) 10,615 மில்லியன் டாலராக இருந்தது. ஆனால், 2025-ஆம் ஆண்டின் அதே காலக்கட்டத்தில், இது தலைகீழாக மாறி 3,900 மில்லியன் டாலர் நிகர வெளியேற்றமாக (Outflow) அமைந்தது. அமெரிக்காவுடன் பல மாதங்களாகப் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், சில சிக்கலான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியாததால் இன்னும் எந்தவித ஒப்பந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த சிக்கல் தொடர்ந்து நீடித்தால், இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 


தற்போதைய சூழ்நிலையில், மூலதன வெளியேற்றமானது (capital outflows) பொருளாதார காரணிகளைவிட, அமெரிக்காவின் விரோதமான அணுகுமுறையால் உருவான அச்சத்தினாலேயே அதிகம் தூண்டப்படுகிறது. 2022-ஆம் ஆண்டில், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை கடுமையாக உயர்த்தியது போன்ற தெளிவான பொருளாதாரக் காரணங்களால் ரூபாய் மதிப்பு சுமார் 10% சரிந்தது. ஆனால் இந்த முறை, அத்தகைய தெளிவான பொருளாதாரக் காரணம் ஏதுமில்லை. எனவே, இந்தப் பிரச்சனை பொருளாதாரத்திலிருந்து நாடுகள் உடனான ராஜதந்திர (diplomacy) உறவுகள் சார்ந்ததாக மாறியுள்ளது. சுங்க வரிகள் (tariffs) புவிசார் அரசியல் கருவிகளாகப் பயன்படுத்தப்படும்போது, அதற்கான தீர்வைக் காண்பதற்கு ராஜதந்திரரீதியிலான நடவடிக்கைகளே முதன்மையானதாகக் கருதப்படுகிறது .


ரிசர்வ் வங்கி தலையீடு


1993-ஆம் ஆண்டில் தனது நாணய மாற்று விகித முறையை இந்தியா மாற்றியது. இதன் மூலம், சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப ரூபாயின் மதிப்பு தீர்மானிக்கப்படும் முறை நடைமுறைக்கு வந்தது. இருப்பினும், இந்த முறையில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அந்நியச் செலாவணி சந்தையில் தலையிட அனுமதி உண்டு என்கின்றனர். ரூபாயின் மதிப்பை ஒரு குறிப்பிட்ட நிலையில் நிலைநிறுத்துவதற்காக தாங்கள் தலையிடுவதில்லை என்றும், சந்தையில் ஏற்படும் அதிகப்படியான ஏற்ற இறக்கங்களைக் குறைப்பதற்காகவே தலையிடுவதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.


“நிலையற்ற தன்மை” (Volatility) என்ற சொல்லிற்கு ரிசர்வ் வங்கி (RBI) இதுவரை தெளிவான விளக்கம் அளித்ததில்லை. ஆனால், ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளை வைத்துப் பார்க்கும்போது, “பொருளாதார சூழல்களில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தைக் குறைப்பது” என்பது தினசரி மாற்றங்களைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், ரூபாயின் மதிப்பில் ஏற்படும் திடீர் வீழ்ச்சிகளைத் தடுப்பதையும் குறிக்கிறது. ரூபாயின் மதிப்பில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் பொருளாதார ரீதியாகப் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இத்தகைய அதிர்ச்சிகளைக் குறைப்பதற்காகவே ரிசர்வ் வங்கி இந்த நடைமுறைகளில் தலையிடுவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், ரூபாயின் வீழ்ச்சியை முழுமையாகத் தடுப்பது ரிசர்வ் வங்கியின் நோக்கமல்ல என்றும் அந்த வீழ்ச்சி மிகவும் வேகமாகக் கீழ்நோக்கிச் செல்லாமல் இருப்பதை உறுதி செய்வதே ரிசர்வ் வங்கியின் நோக்கமாகக் கருதப்படுகிறது. ரூபாயின் மதிப்பில் ஏற்படும் அதிரடி வீழ்ச்சிகளைக் குறைப்பதும் “ஏற்ற இறக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குள்” அடங்கும் என்பதை ரிசர்வ் வங்கி தெளிவாகத் தெரிவிப்பது பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், ரிசர்வ் வங்கியின் இத்தகைய தலையீடுகள் ஏற்ற இறக்கத்தைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், ரூபாயின் பரிமாற்ற மதிப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போதைய சூழலில், பொருளாதார காரணங்கள் மட்டுமின்றி மற்ற காரணிகளும் ரூபாயின் மதிப்பை பாதிக்கின்றன. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு சுமுகமான உடன்பாடு ஏற்பட்டால், ரூபாயின் மதிப்பு மீண்டும் வலுவடைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


பணத்தின் மதிப்பை குறைப்பது ஏன் சரியான தீர்வாக இருக்காது?


இந்தியாவின் தற்போதைய ஏற்றுமதி வர்த்தகம், இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களையே பெரிதும் நம்பியுள்ளது. இதன் காரணமாக, ரூபாய் மதிப்பு குறைவதால் ஏற்றுமதிக்குக் கிடைக்கக்கூடிய ஊக்கம் மிகவும் குறைவாகவே இருக்கும். அமெரிக்கச் சந்தையில் விதிக்கப்பட்டுள்ள அதிகப்படியான வரி (High Tariffs) காரணமாக, இந்திய ஏற்றுமதியாளர்கள் அங்கு பெரிய அளவில் லாபம் ஈட்ட வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கின்றனர். இந்தியாவின் இறக்குமதியில் பெரும்பாலானவை அத்தியாவசியப் பொருட்கள் ஆகும். குறிப்பாக, மொத்த இறக்குமதியில் கச்சா எண்ணெய் (Crude Oil) மட்டுமே சுமார் 25% பங்கைக் கொண்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்தால், இறக்குமதிச் செலவுகள் அதிகரிக்கும் என்றும் இது நாட்டில் விலைவாசி உயர்வுக்கு (Inflation) வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கின்றனர்.


இந்தியாவின் பணவீக்கம் (Inflation), வளர்ந்த மேற்கத்திய நாடுகளைவிட அதிகமாக இல்லை. பணவீக்க விகிதத்தில் பெரிய இடைவெளி இருக்கும்போது மட்டுமே ஒரு நாட்டின் பணமதிப்பைக் குறைக்க (Currency devaluation) வேண்டிய அவசியம் ஏற்படும். இத்தகைய சூழலில், 'உண்மையான பயனுள்ள மாற்று விகிதத்தை' (Real Effective Exchange Rate - REER) கவனிப்பது அவசியம். இது ஒரு நாட்டின் பணமதிப்பை, அதன் முக்கிய வர்த்தக நாடுகளின் பணமதிப்போடு பணவீக்கத்திற்கு ஏற்ப சரிசெய்து அளவிடுகிறது. சீனா போன்ற சில நாடுகள் தங்கள் நாட்டின் பணமதிப்பை வேண்டுமென்றே குறைவாக வைத்துள்ளன. ஆனால், இது போன்ற நடவடிக்கைகள் பணமதிப்பு மோசடியாகக் (Currency manipulation) கருதப்படுவதால் சர்ச்சைக்குரிய ஒன்றாக உள்ளது.


இந்திய ஏற்றுமதி பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி (Tariff) விதித்துள்ளதால் ஏற்பட்ட அச்சத்தினால், கடந்த ஒரு மாதமாக இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது. புதிய அமெரிக்க சட்டங்களால் இந்த வரி இன்னும் அதிகரிக்கக்கூடும் என்ற கவலையும் நிலவுகிறது. இந்த வரி விதிப்பின் முழுமையான தாக்கம் 2026-27-ஆம் ஆண்டுகளில் தான் தெரியவரும்  என்று எச்சரிக்கின்றனர். 


தற்போது, முதலீடுகள் இந்தியாவை விட்டு வெளியேறுவதால் ரூபாயின் மதிப்பு பலவீனமடைந்து வருகிறது. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்படும் வரை இந்தப் பொருளாதார பாதிப்புகள் தொடர வாய்ப்புள்ளது. ரூபாயின் மதிப்பு சரிவதை நாம் அலட்சியப்படுத்த முடியாது; ஏனெனில் ஒவ்வொரு வீழ்ச்சியும் முதலீடுகள் மேலும் முதலீடுகள் வெளியேறுவதற்கே வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டுமானால், அவர்களுக்கு ரூபாய் மதிப்பில் அதிக லாபம் கிடைக்கச் செய்ய வேண்டும். முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றுவிட்டு வெளியேறும்போது, அது பங்குச்சந்தையை நேரடியாகப் பாதிக்கும் என்கின்றனர். எனவே, இந்தியாவின் வர்த்தகப் பேச்சுவார்த்தையாளர்கள் அமெரிக்காவுடன் விரைவில் ஒரு புரிதலுக்கு வர வேண்டும். அதுவரை, ரிசர்வ் வங்கியால் (RBI) ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி வேகத்தை மட்டுமே கட்டுப்படுத்த முடியும்  என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். 


சி. ரங்கராஜன், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர்; என்.ஆர். பானுமூர்த்தி., சென்னையில் உள்ள மெட்ராஸ் பொருளாதாரப் பள்ளியின் இயக்குநர் ஆவார்.


Original Article : The solution to the falling rupee lies in diplomacy -C. Rangarajan, N.R. Bhanumurthy

Share:

இந்தியாவில் ஐரோப்பிய ஆடம்பர கார்கள் விலை மலிவாக கிடைக்குமா? -சௌம்யரேந்திர பாரிக்

இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் (FTA): இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் ஐரோப்பிய தயாரிப்பு கார்களுக்கான வரிகள் படிப்படியாக 110%-லிருந்து 10% ஆகக் குறைக்கப்படும். இருப்பினும், புதிய வரி விகிதங்கள் குறிப்பிடுவது போல விலைகள் அவ்வளவாகக் குறையாது என்று தொழில்துறை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.


இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் (FTA) : நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்திற்கான (FTA) பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்வதாக இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் செவ்வாயன்று அறிவித்தபோது, ​​ஒரு முக்கிய புள்ளி அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததுள்ளது. இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் ஐரோப்பிய தயாரிப்பு கார்களுக்கான வரிகள் படிப்படியாக தற்போதைய 110%-லிருந்து வெறும் 10%-ஆகக் குறையும்.


இதனால், ஐரோப்பிய கார்கள் இந்தியாவில் மலிவு விலையில் கிடைக்கும் என்ற நம்பிக்கைகள் எழுந்துள்ளன. இருப்பினும், குறைந்த வரிகள் குறிப்பிடுவது போல உண்மையான தாக்கம் அவ்வளவு பெரியதாக இருக்காது என்று தொழில்துறை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.


இந்த அறிவிப்புக்குப் பிறகு இந்திய கார் நிறுவனப் பங்குகள் சரிந்தன. மஹிந்திரா பங்குகள் 4.3%, ஹூண்டாய் 3.6%, மாருதி 1.5%, மற்றும் டாடா பங்குகள் சுமார் 1% சரிந்தன. உள்நாட்டு கார் தயாரிப்பாளர்கள், குறிப்பாக உயர் ரக சந்தையில், அதிக போட்டியை எதிர்கொள்ள நேரிடும் என்று முதலீட்டாளர்கள் கவலைப்படுகின்றனர். மெர்சிடிஸ், ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ போன்ற நிறுவனங்களின் கார்கள் இப்போது அதிக போட்டித்தன்மையுடன் விலை நிர்ணயம் செய்யப்படலாம் என்று முதலீட்டாளர்கள் நம்புகின்றனர்.


இருப்பினும், அது முழுமையாக உண்மையாக இருக்காது.


இந்தியாவில் ஐரோப்பிய கார்களின் விலை பெருமளவு குறையுமா?


இதற்குப் பதிலளிக்க, இந்தியாவில் விற்கப்படும் கார்களுக்கான வரி அமைப்பை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். முக்கியத் தலைப்பாக வரியானது காலப்போக்கில் 110%-லிருந்து 10%-ஆகக் குறைக்கப்பட்டது. ஆனால் இது முழுமையாகத் தயாரிக்கப்பட்ட அலகுகளுக்கு (completely built units (CBU)) மட்டுமே பொருந்தும். முழுமையாகத் தயாரிக்கப்பட்ட அலகுகள் (CBU) என்பவை இந்தியாவிற்கு வெளியே தயாரிக்கப்பட்டு முழுமையாக இறக்குமதி செய்யப்படும் கார்கள் ஆகும். இந்த வரிக்குறைப்பு இந்தியாவில் பிணைக்கப்படும் கார்களுக்குப் பொருந்தாது. உள்நாட்டில் பிணைக்கப்படும் இந்தக் கார்கள், இந்தியாவில் விற்கப்படும் ஐரோப்பிய கார்களில் 90%-க்கும் அதிகமாக உள்ளன. இவை முழுமையாகப் பிரிக்கப்பட்ட அலகுகள் (completely knocked down (CKD)) என்று அழைக்கப்படுகின்றன. அதற்கான பாகங்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்படுகின்றன. மேலும், முழுமையாகப் பிரிக்கப்பட்ட அலகுகளுக்கான (CKD) தற்போதைய வரி சுமார் 16-17% ஆகும்.


எனவே, மெர்சிடிஸ், ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ போன்ற நிறுவனங்களுக்கு, அவர்களின் கார் விலைகள் பெரிய அளவில் குறையாமல் இருக்கலாம். ஏனெனில், அந்த கார்கள் எப்படியும் அதிக 110% வரியை செலுத்துவதில்லை. அவை முழுமையாகப் பிரிக்கப்பட்ட அலகுகள் (CKD) வடிவில் கார்களை இறக்குமதி செய்து இந்தியாவில் பிணைக்கப்படுவதால், 16-17% வரியை மட்டுமே செலுத்துகின்றன. தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் (FTA) காரணமாக முழுமையாகப் பிரிக்கப்பட்ட அலகுகள் (CKD) மீதான 16-17% வரியும் பாதியாகக் குறைக்கப்படலாம் என்று சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால், இது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.


மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சந்தோஷ் ஐயர் கூறுகையில், “மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவின் விற்பனையில் 90%-க்கும் அதிகமானவை ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்ட’ உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மாடல்களாகும். மேலும், விற்பனையில் சுமார் 5% மட்டுமே ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து முழுமையாகத் தயாரிக்கப்பட்ட அலகுகள் (CBU) இறக்குமதிகள் மூலம் வருகின்றன. எனவே, எதிர்காலத்தில் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து மெர்சிடிஸ் பென்ஸ் வாகனங்களுக்கு எந்த விலைக் குறைப்பையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை”.


ஆடி இந்தியாவின் பிராண்ட் இயக்குநர் பல்பிர் சிங் தில்லான், இறுதி விதிமுறைகள் வெளியிடப்பட்டு, கவனமாக மதிப்பாய்வு செய்யப்பட்ட பின்னரே விலை நிர்ணயம் மற்றும் சந்தையில் ஏற்படும் தாக்கம் குறித்து அறிய முடியும் என்று கூறினார். இதில், செயல்படுத்தப்படும் காலக்கெடுவையும் கருத்தில் கொள்வது அடங்கும். அதுவரை, குறிப்பிட்ட வணிக அல்லது தயாரிப்பு உத்திகள் குறித்து முடிவுகளை எடுப்பது முன்கூட்டியதாக இருக்கும்.


போர்ஷே, லம்போர்கினி அல்லது ஃபெராரி போன்ற பிராண்டுகளின் மிக உயர்ந்த ரக கார் மாடல்கள் சில விலைக் குறைப்புகளுக்கு உள்ளாகக்கூடும். ஏனெனில், அவை இந்தியாவில் தயாரிக்கப்படவில்லை அல்லது பிணைக்கப்படவில்லை. ஆனால், இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. வோக்ஸ்வாகன் கோல்ஃப் GTI அல்லது ஸ்கோடா ஆக்டேவியா RS போன்ற அதிக பொதுவான சந்தை பிராண்டுகளின் சில குறிப்பிட்ட மாடல்களும் இந்தியாவிற்கு மிகவும் மலிவு விலையில் இறக்குமதி செய்யப்படலாம். உயர்நிலை சொகுசு கார்களைப் பொறுத்தவரை, வரி குறைப்புகளால் விலை குறைப்புகள் தானாகவே நிகழ்வதில்லை. பெரும்பாலும், காரின் உயர்தர நிலையை வெளிப்படுத்தவே அதிக விலை நிர்ணயிக்கப்படுகிறது.


யூரோவுடன் ஒப்பிடும்போது ரூபாயின் மதிப்பு குறைவது, இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் விரைவில் மலிவாக மாறுவதற்கு வழிவகுக்கும் என்று ஒரு தொழில்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. "யூரோவுடன் ஒப்பிடும்போது 2025-ம் ஆண்டில் ரூபாய் மதிப்பு 19% குறைந்துள்ளது. மேலும், இது அடுத்த இரண்டு ஆண்டுகளில் முழுமையாகத் தயாரிக்கப்பட்ட அலகுகளுக்கு (CBU) குறைந்த வரி இறக்குமதியால் ஏற்படும் எந்தவொரு நன்மையையும் அழிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்று ஒரு மூத்த தொழில்துறை நிர்வாகி கூறினார்.


இருப்பினும் இது ஒரு வெற்றிதான்


இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை முறைப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளன. புவிசார் அரசியல் சவால்கள் மற்றும் புது டெல்லியுடன் ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்வதில் அமெரிக்கா தயக்கம் காட்டிவரும் நிலையிலும் இது நிகழ்ந்துள்ளது. இந்த ஒப்பந்தமே ஒரு வலுவான அறிக்கைகளை அனுப்புகிறது. பல பத்தாண்டுகால உரையாடல்கள், பேச்சுவார்த்தைகள் மற்றும் பேச்சுவார்த்தைகளின் முறிவுக்குப் பிறகு இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் அதன் முடிவை எட்டியுள்ளது.


தி இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்பு விளக்கியது போல, இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் முதல் சுற்று 2007-ல் தொடங்கப்பட்டது. அக்டோபர் 2013-க்குள், இந்தியா மற்றும் பிரஸ்ஸல்ஸ் (Brussels) ஆகியவை கட்டணங்கள் மற்றும் சேவைகள் குறித்த சலுகைகளைப் பரிமாறிக் கொண்டன. மேலும் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தின் (FTA) தந்திரமான சந்தை-அணுகல் பகுதிக்கான சாத்தியமான ஒப்பந்தத்தின் வரையறைகளை அடையாளம் காண்பதில் கவனம் செலுத்தின.


அந்தநேரத்தில், கார் மற்றும் கார் உதிரி பாகங்களுக்கான வரிகள் இந்தியாவுக்கு மிகவும் அரசியல்ரீதியாக உணர்வுப்பூர்வமான பிரச்சினையாக இருந்தது. பேச்சுவார்த்தைகள் தொடங்கியபோது, ​​இந்தியத் தேர்தல்கள் நெருங்கிக்கொண்டிருந்தன. பிரதமர் மன்மோகன் சிங்கின் அரசாங்கம் அரசியல் சவால்களை எதிர்கொண்டிருந்தது.


எனவே, வாகனத் துறையில் - சென்ற முறை ஒப்பந்தம் நிறைவேறாமல் போக முக்கிய காரணமாக இருந்தது — இப்போது இரு தரப்பும் "நிரப்பு காரணிகள்" (complementary factors) என்பதை மிகவும் வலியுறுத்தி பேசி வருகின்றன. அதாவது, இந்தியா சிறிய மற்றும் குறைந்த விலை கொண்ட கார்களில் வலுவான நிலையில் உள்ளது, ஐரோப்பியர் பெரிய வாகனங்களில் வலுவான நிலையில் உள்ளனர் என்பதுதான்.


Original Article : Will European luxury cars get cheaper in India? -Soumyarendra Barik

Share:

இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் : ஐரோப்பிய ஒன்றியத்தின் வளர்ந்துவரும் விதிமுறைகள் இந்தியாவின் மிகப்பெரிய சவாலாக இருப்பது ஏன்? ஒப்பந்தம் ஏன் அவற்றை நிவர்த்திசெய்ய வேண்டும்? -ரவி தத்தா மிஸ்ரா

இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தச் செய்திகள்: உணவு மற்றும் இரசாயனங்கள் முதல் பொறியியல் பொருட்கள் வரை, ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அவை அதிக இணக்கச் சுமை காரணமாக ஏற்றுமதியாளர்களை ஊக்கப்படுத்துவதில்லை. இதற்கு தீர்வுகாண இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் (FTA) இந்தியாவுக்கு சட்டப்பூர்வ வாய்ப்பை வழங்குகிறது என்று வர்த்தக நிபுணர்கள் தெரிவித்தனர்.


இந்தியா ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் : உலக வர்த்தக வளர்ச்சியை குறைக்கும் அச்சுறுத்தலையும், வர்த்தக உத்திகள் மற்றும் கூட்டணிகளை மறு மதிப்பீடு செய்ய வேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்தியுள்ள வேகமாக மாறிவரும் சர்வதேச வர்த்தக சூழலுக்கு மத்தியில், ஒழுங்குமுறை உறுதிப்பாட்டைப் பெறுவதற்காக இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் (EU) ஒரு தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்திற்கான (free trade agreement (FTA)) பேச்சுவார்த்தைகளை முடித்துள்ளன.


ஆனால், உலகளாவிய வர்த்தகத்தில் தனது செல்வாக்கைப் பயன்படுத்த அமெரிக்கா வரிகளைப் பயன்படுத்தி வருகிறது என்றால், ஐரோப்பிய ஒன்றியம் பல பத்தாண்டுகளாக, அதன் விரிவடைந்துவரும் ஒழுங்குமுறை வலிமை மூலம் சர்வதேச வர்த்தகத்தில் அதன் செல்வாக்கை வெளிப்படுத்தி வருகிறது. உணவு மற்றும் இரசாயனங்கள் முதல் பொறியியல் பொருட்கள் வரை, ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அவை அதிக இணக்கச் சுமை காரணமாக ஏற்றுமதியாளர்களை ஊக்கப்படுத்துவதில்லை.


இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் (FTA), இந்தியாவிற்கு அதன் வேகமாக வளர்ந்துவரும் நுகர்வோர் சந்தையைப் பயன்படுத்தி, வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் பெற்ற லாபங்களை மாற்றியமைக்கக்கூடிய ஐரோப்பிய ஒன்றியம் (EU) தரநிலைகளுக்கு ஒரு தீர்வைக் காண ஒரு சட்டப்பூர்வ வாய்ப்பை வழங்குகிறது என்று வர்த்தக நிபுணர்கள் தெரிவித்தனர். சட்ட ஒப்பந்தத்தின்கீழ் ஐரோப்பிய ஒன்றியம் விதிமுறைகளுக்கு தீர்வு காணப்படாதது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகத்தில் கணிசமான சமச்சீரற்றத் தன்மையை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.


முன்னாள் வருவாய் சேவை அதிகாரியும், ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையாளருமான சங்கீதா காட்போல், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், இந்தியாவின் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 80% ஏற்கனவே வர்த்தக ஒப்பந்தம் இல்லாவிட்டாலும் 1%-க்கும் குறைவான வரிகளை எதிர்கொள்கிறது என்று கூறினார். மேலும், பரந்த அளவிலான பொருட்களுக்கு அதிக வரிகளைக் குறைப்பதன் மூலம் இந்தியா வழங்கும் சலுகைகளுடன் ஒப்பிடும்போது, தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் (​​FTA) கையெழுத்திடப்படும்போது இந்தியப் பொருட்கள் குறிப்பிடத்தக்க சந்தை அணுகலைப் பெறாது என்று கூறினார்.


இந்திய ஏற்றுமதிகளுக்கு கடுமையான சுற்றுச்சூழல் விதிகளிலிருந்து பாதுகாப்புத் தேவை என்று காட்போல் மேலும் கூறினார். இந்த விதிகள் ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (Small and Medium-sized Enterprises (SME)) மீது அழுத்தத்தை உருவாக்கி வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவிற்கு விலக்கு அளித்துள்ளது என்று அவர் கூறினார். வளரும் நாடுகளை கடுமையான விதிகளைப் பின்பற்றச் செய்யும் அதேவேளையில் பெரியளவில் மாசுபடுத்துபவர்களுக்கு ஒரு சிறப்பு நன்மையை வழங்குவது தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து (FTA) இந்தியா பெறும் எந்தவொரு கட்டண சலுகைகளையும் குறைக்கக்கூடும்.


கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (Carbon Border Adjustment Mechanism (CBAM))


இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஐரோப்பிய ஒன்றியம் உலகின் முதல் கார்பன் வரியை அமல்படுத்தத் தொடங்கியது. அதன் தற்போதைய வடிவத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தைவிட குறைந்த சுற்றுச்சூழல் விதிமுறைகளைக் கொண்ட நாடுகளிலிருந்து சிமென்ட், எஃகு, அலுமினியம், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், காகிதம், கண்ணாடி, இரசாயனம் மற்றும் உரங்கள் போன்ற மின்சாரத் துறை மற்றும் ஆற்றல் மிகுந்த தொழில்துறை துறைகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (CBAM) கார்பன் தொடர்பான கட்டணத்தைப் பயன்படுத்தும்.


ஆனால் கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (CBAM), ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டமியற்றுபவர்களுக்கு வரி விதிக்கப்படும் பட்டியலில் மேலும் பல பொருட்களைச் சேர்க்க அனுமதிக்கிறது. இந்தியா பெரும்பாலும் அலுமினியம், இரும்பு மற்றும் எஃகு ஆகியவற்றை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதி செய்கிறது. அவை ஒழுங்குமுறை காரணமாக பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2023 மற்றும் 2025 க்கு இடையிலான கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறையின் (CBAM) மாற்றக் காலத்தில் இந்தியாவின் எஃகு ஏற்றுமதி ஏற்கனவே குறையத் தொடங்கியுள்ளது.


இந்த ஆண்டு ஜனவரி 1 முதல், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழையும் இந்திய எஃகு மற்றும் அலுமினியத்தின் ஒவ்வொரு ஏற்றுமதிக்கும் கார்பன் வரி விதிக்கப்படுகிறது. உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முன்முயற்சி (Global Trade Research Initiative (GTRI)) என்ற சிந்தனைக் குழுவின்படி, ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதியாளர்கள் கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (CBAM) வரியைச் செலுத்த ஏதுவாக, பல இந்திய ஏற்றுமதியாளர்கள் தங்கள் விலைகளை 15 முதல் 22 சதவீதம் வரை குறைக்க வேண்டியிருக்கலாம்.


ஐரோப்பிய ஒன்றியம் அதன் புதிய மறுசுழற்சி கொள்கையின்கீழ் ஸ்கிராப் ஏற்றுமதியையும் (exports of scrap) கட்டுப்படுத்துவதால், கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (CBAM) ஒரு வரி அல்லாத தடையாக செயல்படுவதாக இந்திய ஏற்றுமதியாளர்கள் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளனர்.


குறைந்த கார்பன் எஃகு உற்பத்திக்கான முக்கியமான உள்ளீடான எஃகு ஸ்கிராப்பை உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளராக ஐரோப்பிய ஒன்றியம் உள்ளது.


ஐரோப்பிய ஒன்றிய காடழிப்பு ஒழுங்குமுறை


ஐரோப்பிய ஒன்றியத்தின் காடழிப்பு ஒழுங்குமுறை (European Union’s Deforestation Regulation (EUDR)) ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்கப்படும் பொருட்கள் காடழிக்கப்பட்ட நிலத்திலிருந்து வருவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது முதலில் டிசம்பர் 2024-ல் தொடங்க திட்டமிடப்பட்டது. ஐரோப்பிய நாடாளுமன்றம் அதை டிசம்பர் 2026 வரை தாமதப்படுத்த முடிவு செய்தது.


உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முன்முயற்சியின் (GTRI) படி, ஐரோப்பிய ஒன்றியத்தின் காடழிப்பு ஒழுங்குமுறை (EUDR) இந்தியாவின் விவசாய ஏற்றுமதியை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மதிப்பு $1.3 பில்லியன் ஆகும். இது இந்தியாவின் அதிக காடழிப்பு விகிதம் காரணமாக போட்டியிடும் நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்வதைவிட கடுமையாக இருக்கும். இறுதிப் பொருளை மட்டும் சரிபார்க்கும் தரநிலைகளைப் போலன்றி, ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகள் சிக்கலான இணக்கத்தைக் கோருகின்றன. இந்த விதிகள் இறக்குமதி செலவுகளை உயர்த்துவதற்கும் ஐரோப்பிய ஒன்றிய உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பதற்கும் வடிவமைக்கப்பட்டதாகத் தெரிகிறது.


இந்தியாவில் தற்போது இணக்கத் தரநிலைகள் இல்லை என்றும், ஐரோப்பிய ஒன்றியத்தின் காடழிப்பு ஒழுங்குமுறை (EUDR) உணவுப் பொருட்களின் ஏற்றுமதியில் சவால்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஏனெனில், ஒழுங்குமுறைக்கு விநியோகர்கள் விவரங்கள் மற்றும் உற்பத்தியின் முகவரிகள் உட்பட விரிவான இணக்க நடைமுறைகள் தேவைப்படுகின்றன. இந்தியாவில் சாகுபடியின் பெரும்பகுதி சிறு விவசாயிகளால் செய்யப்படுகிறது. இது மூலத்தைக் கண்டறிவதை கடினமாக்குகிறது.


ஐரோப்பிய ஒன்றியத்தின் காடழிப்பு ஒழுங்குமுறை (EUDR) பல நாடுகளை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காடழிப்புச் சட்டம் தொடர்பாக இந்தோனேசியா ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது. மேலும், ஐரோப்பிய ஒன்றியம் அதன் புதிய காடழிப்புச் சட்டத்தின் மூலம் "ஒழுங்குமுறை ஏகாதிபத்தியத்தை" நடத்துகிறது என்று கூறியுள்ளது.


நிறுவன நிலைத்தன்மை குறித்த உரிய விடாமுயற்சி


பெருநிறுவன நிலைத்தன்மை தொடர்பான ஐரோப்பிய ஒன்றிய உத்தரவு (Corporate Sustainability Due Diligence (CSDD)) ஜூலை 2024-ல் தொடங்கியது. இது 2027 முதல் அமலுக்கு வரும். மேலும் 2029-ம் ஆண்டளவில், நிறுவனங்கள் தங்கள் மதிப்புச் சங்கிலிகளை பகுப்பாய்வு செய்து மனித உரிமை மீறல்கள், சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் ஊழல் போன்ற சாத்தியமான அபாயங்கள் மற்றும் தாக்கங்களை அடையாளம் காண வேண்டும். இந்த செயல்முறை, விநியோகர்கள் மற்றும் பிற வணிக கூட்டமைப்புகள் உட்பட பல்வேறு ஆதாரங்களில் இருந்து தரவைச் சேகரித்து பகுப்பாய்வு செய்ய வணிகங்களை கட்டாயப்படுத்தும். இது தரவுப் பாதுகாப்பு குறித்த இணக்கத்தையும் கவலைகளையும் எழுப்புகிறது.


பெருநிறுவன நிலைத்தன்மை தொடர்பான ஐரோப்பிய ஒன்றிய உத்தரவு (CSDD) பொறுப்பான வணிக நடத்தையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், ஆனால் விநியோகர்களின் தரவு உணர்திறன் வாய்ந்தது என்றும் அதைப் பகிர்வது வணிக ஆபத்து என்றும் இந்திய உற்பத்தியாளர்கள் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக்கொள்ளும் அறிக்கையிடல் தரநிலைகளை அரசாங்கம் கொண்டு வரலாம் என்றும், தரநிலைகளில் ஒருங்கிணைப்பு இந்திய உற்பத்தியாளர்கள் தரநிலைகளுடன் ஒத்துப்போக உதவும் என்றும் தொழில்துறையினர் பரிந்துரைத்துள்ளனர்.


தொழில்துறை முடுக்கி சட்டம் (Industrial Accelerator Act)


இந்த ஆண்டு ஜனவரியில் முன்மொழியப்படும் என்று எதிர்பார்க்கப்படும் தொழில்துறை முடுக்கி சட்டம் (Industrial Accelerator Act), குறைந்தபட்ச உள்நாட்டு மதிப்பு கூட்டலை கட்டாயப்படுத்தும் உள்ளூர் உள்ளடக்க விதிமுறைகளை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. இது இறக்குமதிகள்மீது அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். இந்திய நிபுணர்கள் கூறுகையில், ஐரோப்பிய ஒன்றியம் நீண்ட காலமாக, உள்ளூர் உள்ளடக்க விதிமுறைகளை அறிமுகப்படுத்த வேண்டாம் என்று மற்ற நாடுகளை வற்புறுத்தி வருகிறது. இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியமே அத்தகைய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.


இந்தச் சட்டம் தூய்மையான, மீள்திறன் கொண்ட, சுழற்சி முறை மற்றும் இணையப் பாதுகாப்புத் தரங்களைக் கொண்டிருக்கும். இது ஐரோப்பிய ஒன்றியத்தில் தயாரிக்கப்பட்ட தூய்மையான தயாரிப்புகளுக்கான தேவையை அதிகரிக்கவும், அதிக ஆற்றல் தேவைப்படும் தொழில்களுக்கு ஒரு தூய்மையான ஐரோப்பிய விநியோகத்தை உறுதி செய்யவும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தச் சட்டம் ஒரு குறைந்த கார்பன் முத்திரையை உருவாக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையம் கூறியது. இந்த முத்திரை முதலில் எஃகு மற்றும் பின்னர் சிமெண்ட்டை உள்ளடக்கும். இது நுகர்வோர் பொருட்களின் கார்பன் தடம் பற்றி அறிய உதவும்.


 Original Article : India-EU FTA: Why EU’s ever-growing regulations are India’s biggest challenge & deal needs to address them. -Ravi Dutta Mishra

Share:

'லிஸ்பானின் காந்தி' அன்டோனியோ கோஸ்டா, கோவா பாரம்பரியம் குறித்து பெருமை கொள்கிறார் : வெளிநாடுவாழ் இந்தியக் குடிமகன் (OCI) என்பவர் யார்? -ஸ்வரீனா சிங்

வெளிநாடுவாழ் இந்தியக் குடிமகன் (OCI) அட்டைதாரர்கள் பலமுறை இந்தியாவுக்குள் நுழையவும், வாழ்நாள் முழுவதும் இலவச விசா பெற தகுதியுடையவர்கள். இருப்பினும், அவர்கள் இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருக்கவில்லை மற்றும் அவர்கள் இந்தியக் குடிமக்களும் அல்ல.


ஜனவரி 27, செவ்வாயன்று, இந்தியா ஐரோப்பிய ஒன்றியத்துடனான அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களுக்கும் தலைமையான இந்தியாவை முடித்த நிலையில், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, ஒப்பந்தத்தின் இராஜதந்திர மற்றும் தனிப்பட்ட முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.


"கோஸ்டா தான் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர். மேலும், தான் ஒரு வெளிநாட்டு இந்திய குடிமகன்" என்று அவர் கூறினார். இதன் காரணமாக, இந்த ஒப்பந்தம் அவருக்கு ஒரு சிறப்பு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. கோவாவில் உள்ள தனது வேர்களை நினைத்து மிகவும் பெருமைப்படுவதாக அவர் கூறினார். அவரது தந்தையின் குடும்பம் பூர்வீகமாக அங்கிருந்து வந்தவர்கள்.


போர்ச்சுகலின் முன்னாள் பிரதமர் அன்டோனியோ கோஸ்டா, லிஸ்பன் நகர மேயராக இருந்தபோது உரையாடல் சார்ந்த பணி மற்றும் பேச்சுவார்த்தை திறன்களுக்காக 'லிஸ்பன் காந்தி' என்றும் அழைக்கப்படுகிறார். அவரது இந்திய ஆதரவாளர்கள் அவரை "பாபுஷ்" என்று அழைக்கப்படுகிறார். "பாபுஷ்" என்பது கொங்கனி வார்த்தையாகும், இதன் பொருள் இளமையான மற்றும் அன்புக்குரியவர் என்பதாகும்.


2017-ம் ஆண்டில், இந்தியப் பிரதமர் ஒருவர் போர்ச்சுகலுக்கு முதன்முறையாக இருதரப்பு பயணம் செய்தபோது, ​​பிரதமர் நரேந்திர மோடி கோஸ்டாவுக்கு வெளிநாடுவாழ் இந்தியக் குடிமகன் (OCI) அட்டையை வழங்கினார்.


இந்தியாவின் வெளிநாட்டு குடிமக்கள் யார்?


இரட்டைக் குடியுரிமைக்கான தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு, குறிப்பாக இந்திய புலம்பெயர்ந்தோரின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, ஆகஸ்ட் 2005-ல் வெளிநாடுவாழ் இந்தியக் குடிமகன் (OCI) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.


வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்தத் திட்டம் ஜனவரி 26, 1950 அன்று அல்லது அதற்குப் பிறகு இந்தியக் குடிமக்களாக இருந்த அல்லது ஜனவரி 26, 1950 அன்று இந்தியக் குடிமக்களாக மாறத் தகுதி பெற்ற அனைத்து இந்திய வம்சாவளியினரையும் (Persons of Indian Origin (PIO)) வெளிநாடுவாழ் இந்தியக் குடிமகனாகப் (OCI) பதிவு செய்ய அனுமதிக்கிறது. பாகிஸ்தான், வங்காளதேசம் அல்லது மத்திய அரசால் குறிப்பிடப்பட்ட வேறு எந்த நாடுகளின் குடிமகனாகவோ அல்லது அங்கு இருந்தவராகவோ உள்ள எவரையும் இது விலக்குகிறது.


வெளிநாடுவாழ் இந்தியக் குடிமகன் (OCI) அட்டைதாரர்கள் பல நுழைவுகளுக்கும் வாழ்நாள் முழுவதும் இலவச நுழைவனுமதிக்கும் தகுதியுடையவர்கள் ஆவர். இருப்பினும், அவர்கள் இரட்டை குடியுரிமையைக் கொண்டிருக்கவில்லை மற்றும் அவர்கள் இந்தியக் குடிமக்களும் அல்ல.

எத்தனை கோவா மக்கள், வெளிநாட்டு குடிமக்களாக மாறினர்?


1510 முதல் போர்த்துகீசிய காலனியாக இருந்த கோவா, 450 ஆண்டுகளுக்குப் பிறகு 1961-ல் சுதந்திரம் பெற்றது. போர்த்துகீசிய சட்டத்தின் கீழ், டிசம்பர் 19, 1961-க்கு முன்பு, இந்தியாவில் முன்னாள் போர்த்துகீசிய காலனித்துவப் பேரரசான "எஸ்டாடோ டா இந்தியா"வில் (Estado da India) பிறந்த எவரும் போர்ச்சுகலில் தங்கள் பிறப்பைப் பதிவு செய்யலாம். இதனால், மூன்றாம் தலைமுறை வரையிலான அவர்களின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளும் போர்த்துகீசிய குடியுரிமைக்கு தகுதியுடையவர்களாகிறார்கள்.


இருப்பினும், இந்தியா ஒற்றைக் குடியுரிமைக் கொள்கையைப் பின்பற்றுகிறது. இதன் விளைவாக, வேறொரு நாட்டின் கடவுச்சீட்டைப் பெறும் எந்தவொரு இந்தியரும் தங்கள் இந்தியக் குடியுரிமையை இழப்பார்கள். எனவே, போர்த்துகீசியக் குடியுரிமையைப் பெற்ற பெரும்பாலான கோவா மக்கள் வெளிநாடுவாழ் இந்தியக் குடிமகன் (OCI) அட்டைகளுக்கு விண்ணப்பித்தனர். இதனால், அவர்கள் இந்தியாவில் வாழவும் வேலை செய்யவும் அனுமதித்தனர். இருப்பினும், அது வாக்களிக்கும் உரிமையை வழங்குவதில்லை. மேலும், விவசாய நிலங்களை வாங்குவதற்கும் இது அனுமதிப்பதில்லை.


கடந்த காலத்தில், வெளிநாட்டு கடவுச்சீட்டை எடுக்கும் ஒரு இந்திய குடிமகன் தனது பாஸ்போர்ட்டை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டியிருந்தது. அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் போர்ச்சுகலில் யாராவது தங்கள் பிறப்பைப் பதிவு செய்வது கண்டறியப்பட்டால், அவர்களின் கடவுச்சீட்டு ரத்து செய்யப்பட்டு, அவர்கள் வெளிநாடுவாழ் இந்தியக் குடிமகன் (OCI) அட்டையைப் பெறுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. இது பல கோவா மக்களுக்கு ஒரு பிரச்சனையாக அமைந்தது. அவர்கள் இந்திய குடியுரிமையை இழந்து வெளிநாடுவாழ் இந்தியக் குடிமகனாகக் (OCI) கூட பதிவு செய்ய முடியாமல் தவித்தனர்.


இருப்பினும், 2024-ம் ஆண்டில், வெளியுறவு அமைச்சகம் ஒரு குறிப்பாணையை வெளியிட்டது. அதில், இந்தியாவின் முன்னாள் போர்த்துகீசிய பிரதேசங்களைச் சேர்ந்த அனைத்து இந்தியர்களும் தங்கள் கடவுச்சீட்டுகள் ரத்து செய்யப்பட்டிருந்தால், அவர்கள் வெளிநாடுவாழ் இந்தியக் குடிமகன் (OCI) அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறியது. இன்றும், போர்த்துகீசிய கடவுச்சீட்டைக் கொண்ட தகுதியுள்ள இந்தியர்கள் வெளிநாடுவாழ் இந்தியக் குடிமகன் (OCI) அந்தஸ்துடன் இந்தியாவில் வாழவும் வேலை செய்யவும் முடியும்.


வெளிநாடுவாழ் இந்தியக் குடிமகனாக (OCI) தகுதியற்றவர்கள் யார்? அவர்கள் எதிர்கொள்ளும் சில கட்டுப்பாடுகள் என்ன?


ஒரு விண்ணப்பதாரரின் பெற்றோரோ அல்லது தாத்தா பாட்டிகளோ எப்போதாவது பாகிஸ்தான் அல்லது வங்காளதேசம் குடிமக்களாக இருந்திருந்தால், அவர் வெளிநாடுவாழ் இந்தியக் குடிமகன் (OCI) அட்டைக்குத் தகுதியற்றவர் ஆவர். இருப்பினும், ஒரு இந்தியக் குடிமகன் அல்லது OCI அட்டைதாரரின் வெளிநாட்டு வம்சாவளியைச் சேர்ந்த மனைவி, திருமணம் பதிவு செய்யப்பட்டு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் நீடித்திருந்தால், வெளிநாடுவாழ் இந்தியக் குடிமகன் (OCI) அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.


பணியில் இருக்கும் அல்லது ஓய்வுபெற்ற வெளிநாட்டு இராணுவ வீரர்கள் வெளிநாடுவாழ் இந்தியக் குடிமகன் (OCI) அட்டைக்குத் தகுதியற்றவர்கள்.


ஒரு வெளிநாடுவாழ் இந்தியக் குடிமகன் (OCI) அட்டை வைத்திருப்பவர் வாக்களிக்க உரிமை இல்லை. அவர்கள் சட்டமன்றம், சட்ட மேலவை அல்லது நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருக்க முடியாது. அவர்கள் இந்திய அரசியலமைப்புப் பதவிகளை வகிக்கவும் தகுதியற்றவர்கள். இதில் குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகள் போன்ற பதவிகள் அடங்கும். மேலும், அவர்களால் பொதுவாக இந்திய அரசாங்கத்தில் வேலை செய்ய முடியாது.



 Original Article : ‘Gandhi of Lisbon’ Antonio Costa proud of Goan heritage: Who is an Overseas Citizen of India? -Swareena Singh

Share:

அடிப்படை உரிமைகள் மீதான நியாயமான கட்டுப்பாடுகள் யாவை? -குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள் :


கடந்த ஆண்டு மார்ச் மாதம், அரசியலமைப்பின் பிரிவு 19(1)(a)-ன் கீழ் பேச்சு சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான திட்டங்களை வரைவு முன்மொழிவுகளைத் தயாரிக்குமாறு உச்ச நீதிமன்றம் சொலிசிட்டர் ஜெனரலிடம் கேட்டுக் கொண்டது. அதேநேரத்தில், பிரிவு 19(2)-ன் கீழ் அரசியலமைப்புச் சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட "நியாயமான கட்டுப்பாடுகளை" உறுதிசெய்ய வேண்டும்.


சமூக ஊடகப் பிரபலங்களான ரன்வீர் அல்லாபாடியா மற்றும் சமய் ரெய்னா ஆகியோரின் கருத்துகளுக்கு எதிராக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் நிலையில் இது நடந்தது. இந்த வழக்கு ஜனவரி 29 அன்று விசாரணைக்கு வர உள்ளது.


தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், தகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 இன் பிரிவு 87(1)-ன் கீழ், வரைவு தகவல் தொழில்நுட்ப (டிஜிட்டல் சட்டம்) விதிகள்-2026-ஐ (Information and Broadcasting Ministry has proposed draft IT (Digital Code) Rules) முன்மொழிந்துள்ளது. அவை அச்சட்டத்தின் 67, 67A, 67B மற்றும் 66B ஆகிய பிரிவுகளுடன் சேர்த்துப் படிக்கப்பட வேண்டும். தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 67 ஆனது, மின்னணு வடிவத்தில் ஆபாசமான விஷயங்களை வெளியிடுவதற்கோ அல்லது பரப்புவதற்கோ சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வழிவகுக்கிறது.


இந்த கருப்பொருள்களில் வன்முறை, ஆபாசம், நிர்வாணம், பாலியல், மொழி, போதைப்பொருள் மற்றும் திகில் ஆகியவையும் மற்றும் செய்திகளின் அடிப்படையில் அடையாள வில்லையுடன் அனைத்து மின்னணு உள்ளடக்கத்தையும் வகைப்படுத்த வரைவு சட்டம் கட்டாயமாக்குகிறது. இது அனைத்து மின்னணு உள்ளடக்கத்தையும் வயதுக்கு ஏற்றவாறு வகைப்படுத்தவும் முன்மொழிகிறது. அனைத்து வயதினருக்கும் 'U', 7+, 13+, 16+, பெரியவர்களுக்கு மட்டும், மற்றும் மருத்துவர்கள் அல்லது விஞ்ஞானிகள் போன்ற நிபுணர்களுக்காக மட்டுமே பிரத்யேகமான வகைகளையும் உருவாக்குகிறது.


ஒவ்வொரு மின்னணு உள்ளடக்கங்களும் தொடக்கத்தில் ஒரு தெளிவான உள்ளடக்க விளக்கத்தையும் வயது மதிப்பீட்டையும் காட்ட வேண்டும் என்று இது பரிந்துரைக்கிறது. இது பயனர்களுக்குத் தெரிவித்து, தகவலறிந்த பார்வைத் தேர்வுகளைச் செய்ய அவர்களுக்கு உதவும். U/A 13+ அல்லது அதற்குமேல் மதிப்பிடப்பட்ட உள்ளடக்கத்தில் பெற்றோர் கட்டுப்பாட்டு வழிமுறைகளைக் கொண்டிருக்க வேண்டும். அதேநேரத்தில், பெரியவர்களுக்காக மட்டுமேயான உள்ளடக்கம் நம்பகமான வயது சரிபார்ப்பு முறையை பயன்படுத்த வேண்டும்.


தகவல் தொழில்நுட்பம் (இடைத்தரகர் வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறைச் சட்டம்) விதிகள், 2021-ன் அனைத்து விதிகளும் இந்த விதிகளுக்கும் பொருந்தும்.


இணையவழி தொகுக்கப்பட்ட உள்ளடக்க வழங்குநர்கள் (Online Curated Content Providers (OCCP)) மீதான ஆபாசத்திற்கு "சிவில் விளைவுகளை" அறிமுகப்படுத்த தகவல் தொழில்நுட்ப விதிகளை திருத்துவதற்கான முன்மொழியப்பட்ட உத்தி, நேரியல் ஒளிபரப்பு மற்றும் தேவைக்கேற்ப மின்னணு ஒளிபரப்பு (digital streaming) இடையே பல ஆண்டுகளாக "நுட்பமான சட்ட வேறுபாட்டை" ரத்துசெய்ய அச்சுறுத்துகிறது என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


இணையவழி தொகுக்கப்பட்ட உள்ளடக்க வழங்குநர்கள் (OCCP) "ஈர்க்கும்" (pull) தன்மையைக் கொண்டுள்ளன. மேலும், அங்கு உள்ளடக்கத்தை விருப்பப்படி அணுகலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. மின்னணு சுற்றுச்சூழல் அமைப்பு ஏற்கனவே வயது-கட்டுப்பாடு, உள்ளடக்க விளக்கங்கள், பெற்றோர் கட்டுப்பாடுகள் (parental locks) மற்றும் உள்ளடக்கத் தேர்வு கருவிகளுடன் பொருத்தப்பட்டுள்ளது. அவை லீனியர் டிவி-யின் ”முன்நகர்த்தும்” (push) தன்மைக்கு மாறாக பெரியவர்கள் தகவலறிந்த தேர்வுகளை செய்ய அனுமதிக்கின்றன. இதில், உள்ளடக்கம் கோரப்படாமலேயே வீடுகளுக்கு ஒளிபரப்பப்படுகிறது. இதன் காரணமாக, தற்செயலாகப் பார்க்கக்கூடிய பார்வையாளர்களைப் பாதுகாக்க ஒரு நிகழ்ச்சி நெறிமுறை தேவைப்படுகிறது.


யூடியூப் போன்ற பயனர் உருவாக்கிய உள்ளடக்கம் (User Generated Content (UGC)) தளங்களில் உள்ள உணர்ச்சியற்ற மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத உள்ளடக்கம் குறித்த கவலைகளால் வரவிருக்கும் உச்சநீதிமன்ற விசாரணை பெரும்பாலும் தீவிரப்படுத்தப்பட்டதாக வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. மேலும், முக்கிய பிரச்சினை அத்தகைய உள்ளடக்கத்துடன் தொடர்புடையது. இது தேர்ந்தெடுக்கப்பட்ட டிஜிட்டல் உள்ளடக்கம் தொடர்பானது அல்ல என்பதை நீதிமன்றத்திற்கு தெளிவுபடுத்துவது மிகவும் பொருத்தமானதாக இருந்திருக்கும்.


உங்களுக்குத் தெரியுமா?


இந்தியச் சட்டங்களில் தெளிவான வரையறை இல்லாததால், இந்திய நீதிமன்றங்களின்படி ஆபாசமாகக் கருதக்கூடியவை பல ஆண்டுகளாக வேறுபட்டு பரிணமித்துள்ளன. 2014 வரை, ஏதேனும் ஒன்று ஆபாசமானதா என்பதைத் தீர்மானிக்க நீதித்துறை ஹிக்லின் சோதனையை நம்பியிருந்தது.


ரெஜினா vs ஹிக்லின்-1868 (Regina vs Hicklin) வழக்கிற்குப் பிறகு ஆங்கில சட்டத்தில் ஹிக்லின் சோதனை நிறுவப்பட்டது. இந்தச் சோதனையின்கீழ், ஒரு படைப்பின் எந்தப் பகுதியாவது அத்தகைய தாக்கங்களுக்கு எளிதில் ஆளாகக்கூடியவர்களின் மனது "ஒழுக்கக்கேடான மற்றும் ஊழல் நிறைந்த" (deprave and corrupt) போக்கைக் கொண்டிருந்தால், அந்தப் படைப்பு ஆபாசமானதாகக் கருதப்படுகிறது.


ரஞ்சித் டி உதேஷி vs மகாராஷ்டிரா மாநிலம்-1964 Ranjit (D. Udeshi vs State of Maharashtra) வழக்கில் டி.எச்.லாரன்ஸின் லேடி சாட்டர்லியின் காதலரை தடை செய்ய உச்ச நீதிமன்றத்தால் இந்த சோதனை மிகவும் பிரபலமாகப் பயன்படுத்தப்பட்டது.


இருப்பினும், 1964-ம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பு வழங்கப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, இங்கிலாந்தில் ஆபாசத்திற்கான தரநிலை மாறிவிட்டது. ஆபாச வெளியீட்டுச் சட்டம்-1959 (Obscene Publications Act), ஒரு படைப்பை பார்வையாளர்கள் மீது அதன் விளைவைக் கருத்தில் கொள்வதற்கு முன்பு "ஒட்டுமொத்தமாக" கருத வேண்டும் என்று கூறியது.


1957-ம் ஆண்டு ரோத் vs அமெரிக்கா (Roth vs United States) வழக்கில் அமெரிக்காவும் ஹிக்லின் சோதனையிலிருந்து தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. அமெரிக்க உச்சநீதிமன்றம், ஆபாசத்திற்கான சோதனை இதுதான் என்று தீர்ப்பளித்தது: "சராசரி மனிதரின் பார்வையில், சமகால சமூகத் தரங்களைப் பயன்படுத்தும்போது, ​​ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொள்ளப்பட்ட அந்தப் பொருளின் பிரதான கருப்பொருள் காம உணர்வைத் தூண்டுகிறதா என்பதே அந்தச் சோதனை."


குறிப்பிடத்தக்க வகையில், இது ஒரு முக்கியமான மாற்றத்தைக் குறித்தது. ஹிக்லின் சோதனை மிகக் குறைந்த பொதுவான அளவுகோலைக் கொண்டு ஆபாசத்தை வரையறுத்தாலும், அமெரிக்காவும் இங்கிலாந்தும் சமூக ஒழுக்கங்களை மாற்றியமைப்பதற்கும் பரிணமிப்பதற்கும் காரணமாக அமைந்தன.


குறிப்பாக ரோத் வழக்கு, போரிஸ் பெக்கர் மற்றும் அவரது வருங்கால மனைவியின் அரை நிர்வாணப் படத்தை வெளியிடுவது தொடர்பான அவீக் சர்க்கார் vs மேற்கு வங்க மாநிலம்-2014 (Aveek Sarkar vs State of West Bengal) வழக்கில் "சமூகத் தரநிலைகள்" சோதனையை ஏற்றுக்கொள்ளும் இந்திய உச்சநீதிமன்றத்தில் ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது.


Original Article : What are reasonable restrictions on fundamental rights? -Khushboo Kumari

Share: