வருமான வரி (Income Tax Act) சட்டத்தை மறுபரிசீலனை செய்யும் நோக்கத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது. இதில் உள்ள சர்ச்சைக்குரிய பிரிவுகளை கவனமாக மறுவடிவமைத்து, வரி கட்டமைப்பை எளிதாக்க வேண்டும்.
1958-ஆம் ஆண்டில், இந்திய சட்ட ஆணையம் (Law Commission of India) வருமானவரிச் சட்டம் 1922-யை எளிமைப்படுத்த ஏற்பாடு செய்தது. வரிக் கட்டமைப்பை எளிமையாக்காமல், சட்டத்தின் உண்மையான எளிமைப்படுத்தல் இருக்க முடியாது என்று நிபுணர்கள் ஒப்புக்கொண்டனர். பல ஆண்டுகளாக, நடைமுறையில் உள்ள வருமான வரி சீர்திருத்தத்திற்கான இலக்குகள் எளிமை மற்றும் உறுதியான முறைகளைக் கொண்டுள்ளன. இருப்பினும், கடந்த ஐந்து ஆண்டுகளில், வரிக் கட்டமைப்பை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 2009-ஆம் ஆண்டில் நேரடி வரிகள் (Direct Tax) உட்பட முந்தைய வரிக் குழுக்களின் பரிந்துரைகளுக்கு அனுமதியளித்தது. பெருநிறுவன வரி-விகிதங்கள் (corporate tax-rates) முன்னதாகவே குறைக்கப்பட்டு, புதிய வரிமுறையின் கீழ் ஊக்கத்தொகைகள் படிப்படியாக அகற்றப்படுகின்றன. பெருநிறுவன வரி செலுத்துவோரில் 58 சதவீதம் பேர் புதிய வரி விதிப்பைத் தேர்ந்தெடுத்துள்ளனர். 2017-18ல் 29.49 சதவீதமாக இருந்த வரி விகிதத்தை 2021-22ல் 23.26 சதவீதமாகக் குறைத்துள்ளனர். இந்த அமைப்பை மேலும் சீரமைக்கவும், வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கவும், வெளிநாட்டு நிறுவனங்களின் பெருநிறுவன வரி விகிதம் தற்போது 35 சதவீதமாக குறைக்கப்பட்டு, ஏஞ்சல் வரி (angel tax) ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், தனிநபர் வருமான வரி அடுக்குகள் (personal income-tax slabs) இப்போது குறைவாக உள்ளதால் அதிக வரி செலுத்துவோரைக் இதில் கொண்டு வந்துள்ளது. 2019-20 ஆண்டு மற்றும் 2022-23 ஆண்டுக்கு இடையில், வரி செலுத்துவோர் எண்ணிக்கை 89.8ல் இருந்து 93.7 மில்லியனாக அதிகரித்துள்ளது. தற்போதைய பட்ஜெட், 12 லட்சத்துக்கும் குறைவான வருமானங்களுக்கான வரி விகிதத்தை மேலும் குறைத்துள்ளது. இது தனிநபர் வருமானத்தில் 80 சதவீதத்திற்கும் அதிகமான வருமானத்தையும், வருமானத்தில் தாக்கல் செய்யப்பட்ட மொத்த வருமானத்தில் 51 சதவீதத்தையும் பாதிக்கும். முன்மொழியப்பட்ட நேரடி வரி மாற்றங்களால் ஏற்படும் வருவாய் இழப்பு ரூ.29,000 கோடி ரூபாயாக கணக்கிடப்பட்டாலும், நடப்பு விலக்குகளால் இழந்த வருவாயை விட இந்தத் தொகை குறைவாகும்.
வரி விகிதங்கள் குறைக்கப்பட்டாலும், நேரடி வரி மற்றும் உள்நாட்டு உற்பத்தி விகிதம் அதிகரித்துள்ளது. இருப்பினும், இந்தியா தனது வரித் திறனை இன்னும் அடையவில்லை. இந்தியா 2047-ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடு என்ற நிலையை அடைய இலக்கை அமைத்துள்ள நிலையில், வளர்ச்சி மற்றும் சமத்துவத்திற்கு இடையே சமநிலையை உறுதிப்படுத்த வரிக் கொள்கை அடுத்து என்ன செய்ய முடியும்? என்பது கேள்வியாக உள்ளது.
மூலதன ஆதாய வரி (capital gains tax) முறையை சீர்திருத்துவது ஒரு முக்கியமான ஒன்று. கோவிட்-19க்குப் பிறகு பல நாடுகள் செயலற்ற வருமானங்களுக்கு (passive incomes) எவ்வாறு வரி விதிக்கப்படுகிறது என்பதை மாற்ற பல நாடுகள் முயற்சித்து வருகின்றன. மூலதனச் சந்தைகளின் உலகளாவிய உயர்வு இந்த சீர்திருத்தங்களில் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு நிஃப்டி 50, 26.8 சதவீத லாபத்தை வழங்கியதன் மூலம் இந்தியாவும் இந்த ஏற்றத்தைக் கண்டுள்ளது. இந்தியாவில் உள்ள கொள்கை வகுப்பாளர்கள் எதிர்கால வர்த்தகத்தின் அதிகரிப்பை அறிந்துள்ளனர். நிதிநிலை அறிக்கை மூலதன ஆதாய வரி (capital gains tax) மற்றும் எதிர்கால விருப்பங்கள் மீதான அதிக பத்திர பரிவர்த்தனை வரியை அதிகரிக்க முன்மொழிந்தது.
2022-23ம் ஆண்டிற்கான மதிப்பீட்டில், நீண்டகால மற்றும் குறுகியகால மூலதன ஆதாயங்கள் வரிக் கணக்குகளில் பதிவான மொத்த வருவாயில் 11 சதவீதம் ஆகும். 2022-23ம் ஆண்டிற்கான நீண்டகால மூலதன ஆதாய வருமானத்தில் சுமார் 60 சதவீதம் ரூ. 500 கோடி ரூபாய்க்கு மேல் இருந்தது. மேலும், 40 சதவீதத்துக்கும் அதிகமான வருவாய்கள் பெருநிறுவனங்களால் பதிவாகியுள்ளன. எனவே, நீண்ட கால ஆதாயங்களுக்கான அதிக விலக்கு வரம்பு ரூ.1.25 லட்சம் ரூபாயானது, குறைந்த வருமான வரி செலுத்துவோருக்கு முதன்மையாக பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் அதிக வரி விகிதங்கள் மற்றும் குறியீட்டு நீக்கம் (indexation), போன்றவை அரசாங்கம் இனி முதலீடுகளை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தவில்லை என்பதைக் காட்டுகிறது.
வருமான வரிச் சட்டத்தைப் பயன்படுத்துவதில் உள்ள ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், அதில் உள்ள முக்கிய சர்ச்சைகளைத் தடுப்பதும் மற்றும் தீர்ப்பதும் ஆகும். விவாட் சே விஸ்வாஸ் திட்டம் (Vivad Se Vishwas scheme) நீண்டகால சர்ச்சைகளை தீர்க்க ஒரு வழியை வழங்குகிறது. மறுமதிப்பீட்டு காலத்தை (period of reassessment) குறைப்பது போன்றவை வரி செலுத்துவோர் மற்றும் வருமான வரி
துறைக்கு இடையேயான மோதல்களைத் தடுக்கும் வழிகளாகும்.
வருமான வரி (Income Tax) சட்டத்தை மறுபரிசீலனை செய்யும் நோக்கத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது. இதில் உள்ள குறைபாடுகளைத் தீர்க்க, சட்டத்தின் சர்ச்சைக்குரிய பிரிவுகளை கவனமாக மறுவடிவமைக்க வேண்டும். கடந்த காலத்தில் எளிமையாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அடுத்த ஆறு மாதங்களில் இந்த பணிகள் கூறப்பட்ட நோக்கங்களை அடையும் என்ற நம்பிக்கை உள்ளது.