பிரதமர் நரேந்திர மோடி அரசு, தனியார் நிறுவனங்களுக்கான புதிய வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (employment linked internship (ELI)) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் சில குறைபாடுகள் இருப்பதை அரசு ஒத்துக்கொள்கிறது. பிரச்சனை என்னவென்றால், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (gross domestic product (GDP)) வளர்ச்சி அதிக வேலை வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுக்கவில்லை.
நிதித்துறை செயலர் டி.வி.சோமநாதன் பட்ஜெட்டுக்கு பிந்தைய பேட்டியில் “குறைந்த தானியங்கி இயந்திரம் அதிக உழைப்பையும்” பயன்படுத்துவதற்கு தொழில்துறையை அரசு மேம்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி அரசின் புதிய பட்ஜெட் அறிவிப்பு குறித்து அவர் பேசினார். இந்த அறிவிப்பு தனியார் நிறுவனங்களுக்கான வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியது. வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தின்கீழ், நிறுவனங்கள் தாங்கள் பணியமர்த்தப்படும் ஒவ்வொரு புதிய பணியாளருக்கும் நிதி ஊக்கத்தொகை வழங்குகின்றன. பல உரையாசிரியர்கள் மற்றும் நிபுணர்கள் இந்த திட்டத்தை விமர்சித்துள்ளனர். நிதி ஊக்குவிப்பு காரணமாக நிறுவனங்கள் அதிக நபர்களை வேலைக்கு அமர்த்தும் என்ற அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த பகுப்பாய்வு குறுகியப் பார்வை கொண்டது. பொருளாதாரச் சிந்தனையில் ஒரு அடிப்படை மாற்றத்தை இழக்க செய்கிறது. நிதிச் செயலாளரின் அறிக்கை மோடி அரசின் பொருளாதாரக் கொள்கையில் பெரும் மாற்றத்தை பிரதிபலிக்கிறது. இந்த புதிய நடவடிக்கைகள் பல விஷயங்களை ஒப்புக்கொள்கிறது. முதலில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைத் பின்தொடர்வதில் தவறான நம்பிக்கை இருந்தது. இரண்டாவதாக, மூலதனத்திற்கும் உழைப்புக்கும் இடையே ஒரு பெரிய ஏற்றத்தாழ்வு உள்ளது. அரசு தங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும்.
சிறப்பாக செயல்படாத முயற்சிகள்
பத்தாண்டு காலமாக, பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கம் பாரம்பரியமான வாஷிங்டன் கருத்தொற்றுமையின் ட்ரிக்கிள்-டவுன் வளர்ச்சி (Washington Consensus’ trickle-down development model) மாதிரியைப் பின்பற்றியது. இந்த மாதிரி பொருட்கள் மற்றும் சேவைகளின் திறமையான உற்பத்தியை வலியுறுத்தியது. இது தானாக வேலைகள், வருமானங்கள் மற்றும் மக்களுக்கு பொருளாதார முன்னேற்றத்தை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. நிறுவனங்கள் உற்பத்தி செய்யும்போது, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளரும், மற்றும் வேலைவாய்ப்பு உருவாகும். 2014-ல் தொடங்கப்பட்ட 'மேக் இன் இந்தியா' (Make in India) முயற்சி இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. நிறுவனங்கள் பல தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் என்ற நம்பிக்கையுடன் உற்பத்தியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
2019-ஆம் ஆண்டு ஒன்றிய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அவர்கள் பெருநிறுவன வரி விகிதங்களை கணிசமாகக் குறைக்க இருப்பதாக அரசு அறிவித்தது. நிறுவனங்கள் அதிக முதலீடு செய்து அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. 2020-ஆம் ஆண்டில், அரசாங்கம் ஒரு புதிய உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (production linked incentive (PLI)) திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டம் நிறுவனங்களுக்கு ₹2 லட்சம் கோடி நிதி ஊக்கத்தொகையை வழங்கியது. உற்பத்தி இலக்குகளை அடைவதன் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. மீண்டும், அதிக உற்பத்தி மற்றும் அதிக வேலைகளை உருவாக்க நிறுவனங்களை ஊக்குவிப்பதே இலக்காக இருந்தது. இருப்பினும், இந்த முயற்சிகள் எதிர்பார்த்த அளவு வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை. நிறுவனங்கள் முதலீடு செய்யாமல் வரிக் குறைப்புகளை மட்டும் செய்தன அல்லது மக்களை வேலைக்கு அமர்த்துவதைவிட உபகரணங்களில் அதிக முதலீடு செய்தன. சுருக்கமாக, நிறுவனங்களுக்கான உற்பத்தி ஊக்கத்தொகைகள் மற்றும் வரிக் குறைப்புக்கள் மக்களுக்கு போதுமான வேலைகள் அல்லது வருமானத்தை அதிகரிக்க வழிவகுக்கவில்லை.
வேலைவாய்ப்புக்காக இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (employment linked internship (ELI)) திட்டம் முந்தைய திட்டங்களின் தோல்வியை ஏற்று அதன் அணுகுமுறையை மாற்றியது. செல்வந்தர்களுக்கான ஆதாய (trickle-down) முறைகளை நம்புவதற்குப் பதிலாக ஆட்களை வேலைக்கு அமர்த்துவதற்கு நிறுவனங்களுக்கு இது நேரடி ஊக்கத்தை வழங்குகிறது. உற்பத்திச் சலுகைகள் உற்பத்திச் செலவைக் குறைக்கின்றன மற்றும் நிறுவனங்களை அதிக உற்பத்தி செய்ய ஊக்குவிக்கின்றன. இதேபோல், வேலைவாய்ப்பு ஊக்கத்தொகைகள் தொழிலாளர் செலவைக் குறைக்கின்றன மற்றும் அதிக நபர்களை வேலைக்கு அமர்த்த நிறுவனங்களை ஊக்குவிக்கின்றன.
வேலைவாய்ப்புக்காக இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (ELI) திட்டத்தை, உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI) திட்டத்துடன் இணைத்து பார்க்க வேண்டும். PLI என்பது உற்பத்தியை அதிகரிக்க ஒரு புனலின் மேற்பகுதியில் மேலும் சேர்ப்பது போன்றது. ELI என்பது வேலைகளை அதிகரிக்க புனலின் அடிப்பகுதியில் அதிகம் சேகரிப்பது போன்றது. அதிக வேலை வாய்ப்புகளையும் வருமானத்தையும் உருவாக்குவதே இந்த திட்டங்களின் இறுதி இலக்கு.
இது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம்
வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (employment linked internship (ELI)) திட்டம் மட்டும் தனியார் நிறுவனங்களில் அதிக வேலை வாய்ப்பு உருவாக்காது. ஆனால், அது அவர்களின் முடிவுகளை பாதிக்கலாம். உபகரணங்களை வாங்குவதைவிட ஆட்களை வேலைக்கு அமர்த்துவதற்கு நிறுவனங்களை இது ஊக்குவிக்கிறது. பல வணிக நிறுவனங்கள் இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக ஆட்களை தேர்வு செய்தல், அது ஒட்டுமொத்த வாய்ப்பு உருவகத்தை கணிசமாக அதிகரிக்கும்.
தொழில்நுட்பம் மற்றும் செயல்திறனில் கவனம் செலுத்தும் சில பொருளாதார வல்லுநர்கள், வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டம் ஒரு தவறான திட்டம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இது இந்திய நிறுவனங்களை குறைந்த உற்பத்தித்திறன் மற்றும் குறைந்த போட்டித்தன்மை கொண்டதாக மாற்றும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர்களின் கவலைகள் சில அடிப்படைகளைக் கொண்டிருந்தாலும், உழைப்பை விட மூலதனத்தையும், வேலைகளை விட மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் ஆதரிக்கும், தற்போதைய மாதிரி ஒரு ஜனநாயக சமூகத்தில் நிலையானது அல்ல.
வேலைகள் பற்றாக்குறை மற்றும் யோசனைகள் பற்றாக்குறை
வேலை பற்றாக்குறையானது கர்நாடகாவில் உள்ள அனைத்து வேலைகளையும் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்குவது போன்ற தீவிர திட்டங்களுக்கு வழிவகுக்கிறது. உண்மையான தீர்வுகளை ஆராயாமல் வெறுமனே இத்தகைய திட்டங்களை விமர்சிப்பது பயனுள்ளதாக இருக்காது. இந்தியாவில் வேலை பற்றாக்குறை மற்றும் அதை நிவர்த்தி செய்வதற்கான புதிய யோசனைகள் பற்றாக்குறை ஆகிய இரண்டும் உள்ளது. பொருளாதார வல்லுநர்கள் அடிக்கடி சீர்திருத்தங்களை பரிந்துரைக்கின்றனர். அவர்கள் பொதுவாக வேலைகளை உருவாக்குவதற்கு உழைப்பு, கல்வி, திறன்கள் மற்றும் வணிக சீர்திருத்தங்களை பரிந்துரைக்கின்றனர்.
வேலைவாய்ப்புக்காக இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (employment linked internship (ELI)) திட்டம் அதிக வேலைகளை உருவாக்காது. ஆனால், இது மூலதனத்திற்கும் உழைப்புக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு மற்றும் இந்தியாவில் வேலையின்மை வளர்ச்சியின் பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்கான ஒரு புதிய அணுகுமுறையாகும். இது செல்வந்தர்களுக்கான ஆதாய (trickle-down) பொருளாதாரத்திலிருந்து கீழிருந்து-மேல் (bottom-up solutions) தீர்வுகளுக்கு மாறுவதைக் குறிக்கிறது.
பிரவீன் சக்ரவர்த்தி, அகில இந்திய தொழில் வல்லுநர்கள் காங்கிரஸின் தலைவராக உள்ளார்.