'ஐந்து பரஸ்பரங்கள்' உருவாக்கம் சீனா-இந்தியா உறவுகளை மீண்டும் நிலையான மற்றும் நல்ல பாதைக்கு கொண்டு வர உதவும்.
'ஐந்து பரஸ்பரம்' வழிகாட்டுதல்கள்
சீனாவும் இந்தியாவும் நெருங்கிய அண்டை நாடுகள். பழங்காலம் முதல் ஒருவரிடமிருந்து ஒருவர் நிறைய கற்றுக்கொண்டோம். தற்போது, நல்ல மற்றும் துயரமான செய்திகளையும் பகிர்ந்துக் கொள்கிறோம். இன்று புத்துணர்ச்சிக்கான பொதுவான காரணத்தைக் கொண்டுள்ளோம். சீனா-இந்தியா உறவுகள் இருதரப்பு உறவுகளில் மிக முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் சீனா-இந்தியா உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மேலும் சீனாவும் இந்தியாவும் ஒன்றுக்கொன்று போட்டியாகவோ அல்லது அச்சுறுத்தலாகவோ இல்லை. மாறாக ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளில் சமமானவர்கள் என்ற ஒருமித்த கருத்தை எட்டியுள்ளனர். இது இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கான தெளிவான பாதையை வழங்குகிறது. அதை எவ்வாறு திறம்பட செயல்படுத்துவது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சீன வெளியுறவு அமைச்சர் (Foreign Minister) வாங் யீ (Wang Yi ) சமீபத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை இரண்டு முறை சந்தித்து, சீனாவும் இந்தியாவும் பரஸ்பர மரியாதை, பரஸ்பர புரிதல், பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர தங்குமிடம் மற்றும் பரஸ்பர சாதனை ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேற்கூறிய ஒருமித்த கருத்தை செயல்படுத்துவதற்கு "ஐந்து பரஸ்பரம்" (Five Mutuals) ஒரு குறிப்பிடத்தக்க வழிகாட்டுதலை வழங்குகிறது. இவை இரண்டு பெரிய அண்டை நாடுகளும் நன்றாகப் பழகுவதற்கு வழிகாட்டும் கொள்கைகளாகவும் இருக்கும். ஐந்து பரஸ்பரங்கள் (Five Mutuals) சீனா-இந்திய உறவுகளை மீண்டும் ஒரு நிலையான நிலைக்கு கொண்டு வருவதற்கு உகந்ததாக உள்ளது.
முன்பு, மகாராஷ்டிராவுக்குச் சென்று, ஒரு பாரம்பரிய இந்திய திருமணத்தில் கலந்துகொண்டு, உள்ளூர் நாட்டுப்புற உடைகளை அணிந்து மசாலா டீயை சுவைத்தது, இரண்டு பழங்கால நாகரிகங்களாக, சீனாவும் இந்தியாவும் உணவுப் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறைகள், கலாச்சார மரபுகள் மற்றும் வளர்ச்சிப் பாதைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தனித்துவத்தைக் இரு நாடுகளும் கொண்டுள்ளன. இருப்பினும், இந்த வேறுபாடுகள் வரலாற்றில் ஒருவரையொருவர் ஈர்ப்பதிலும் ஊக்குவிப்பதிலும் இருந்து நம்மைத் தடுக்கவில்லை. புதிய சகாப்தத்தில், ஒருவரையொருவர் திறந்த மனதுடன் பார்ப்பது, ஒருவருக்கொருவர் வளர்ச்சி பாதை, சமூக அமைப்பு மற்றும் உலக அரங்கில் பங்கு ஆகியவற்றுக்கு இணங்க, இரு நாடுகளின், பிராந்தியத்தின் வளர்ச்சி மற்றும் செழிப்பைக் கூட்டாக ஊக்குவிப்பது இன்னும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.
பரஸ்பர புரிதல்தான் சீனா-இந்தியா உறவுகளின் வளர்ச்சியின் அடிப்படை. இரண்டு மக்களும் தேசிய சுதந்திரம் மற்றும் விடுதலைக்கான போராட்டங்களில் ஒருவருக்கொருவர் இணையானவர்கள். இந்தியாவின் தேசிய மறுமலர்ச்சிக்கான வெளிப்பாட்டை சீனா புரிந்துகொள்கிறது, மேலும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை ஆதரிக்கிறது. இரு நாடுகளும் பெரிய வளரும் நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. 1.4 பில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் நல்ல வாழ்க்கை வாழ இது எவ்வளவு பெரிய காரணம் என்பதையும், அதற்கு எவ்வளவு முயற்சி தேவை என்பதையும் சீனாவை விட வேறு எந்த நாடும் புரிந்து கொள்ளவில்லை. இதற்கிடையில், இந்திய மக்களுடன் உரையாடியபோது, இரு நாடுகளுக்கு இடையேயான பரிமாற்றங்களும் புரிதலும் போதுமானதாக இல்லை என்பது தெரிகிறது. இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிக்காக அரசியல் மற்றும் பொது அடித்தளத்தை பலப்படுத்தும் வகையில், பல்வேறு துறைகளில் அனைத்து மட்டங்களிலும் உரையாடல் மற்றும் தகவல் தொடர்புகளை மேம்படுத்துதல், இரு நாட்டு மக்களிடையே அதிக பரிமாற்றங்களை மேற்கொள்ளுதல், பரஸ்பர புரிதல் மற்றும் அரசியல் நம்பிக்கையை மேலும் ஊக்குவிக்கும்.
பரஸ்பர நம்பிக்கையே சீனா-இந்தியா உறவுகளின் வளர்ச்சிக்கு முக்கியமாகும். சர்வதேச நிலைமை முன்பை விட மிகவும் நிலையற்றதாகவும் நிச்சயமற்றதாகவும் உள்ளது. இரு நாடுகளும் வளர்ந்து வரும் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாக இருப்பதால், சீனாவும் இந்தியாவும் ஒன்றாக வளர்வதற்கு நாடுகளுக்கு இடையே உள்ள முரண்பாடுகளை தவிர்க்க வேண்டும் என்பதை அதிகமான மக்கள் உணர்ந்துள்ளனர். இருதரப்பு உறவுகளை ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். அதற்கு, ஒருவருக்கொருவர் சரியான நியாமான கருத்தை உருவாக்க வேண்டும். ஒருவருக்கொருவர் நிலையான நோக்கங்களை ஒரு வாய்ப்பாக பார்க்க வேண்டும் மற்றும் சரியான பார்வையில் இணைய வேண்டும். சீனாவும் - இந்தியாவும் போட்டியாளர்களாக இருப்பதற்கு பதிலாக ஒருவருக்கொருவர் நட்பு நாடுகளாகவும், அச்சுறுத்தல்கள் இல்லாமலும் இருந்தால் இரு நாடுகளுக்கு இடையே உள்ள சர்ச்சைகளை அமைதியான முறையில் தீர்க்கலாம். இதை நல்ல நட்பு மற்றும் நம்பிக்கையுடன் இரு நாடுகளின் பரிமாற்றங்களை செயல்படுத்தினால் இரு நாடுகளின் வளர்ச்சியை இமயமலையால் கூட தடுக்க முடியாது. சீன மக்கள் என்றென்றும் இந்திய மக்களின் நல்ல நண்பர்களாக இருக்கவும், நல்லிணக்கத்துடன் வாழவும், பொதுவான வளர்ச்சியைப் பின்பற்றவும் தயாராக உள்ளனர்.
இரு நாடுகளின் விரிவான உறவு
பரஸ்பர புரிதல்கள் சீனா - இந்தியா உறவுகளின் வளர்ச்சியை உறுதி செய்கிறது. சீனாவும் இந்தியாவும் எப்போதும் நெருக்கமாக இருக்கும் அண்டை நாடுகளாகவே தொடர்ந்து இருக்கும். சில நேரங்களில் ஏற்படும் இரு நாடுகளுக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் மற்றும் சச்சரவுகள் ஏற்படுவது இயற்கை. வேறுபாடுகளைப் பற்றிய சரியான கருத்தை உருவாக்கி அவற்றை சரியான முறையில் கையாள்வதே முக்கியமானது. பண்டைய நாகரிகங்களின் அரசியல் ஞானத்தை இரு நாடுகளும் பெற்றிருப்பதால், இரு நாடுகளின் நலன்கள் மற்றும் விவாதத்திற்கு இடமளிக்காமல், அவற்றை உரையாடல் மூலம் ஏற்படும் வேறுபாடுகளை சரியாகக் கையாள்வதற்கும், நல்ல தீர்வை உருவாக்க வேண்டும். இதற்கிடையில், இரு நாடுகளின் உறவு எல்லா வகையிலும் நல்ல நிலையில் உள்ளது. மேலும், இரு நாடுகளின் ஒத்துழைப்பை எந்த ஒரு சிறு சம்பவத்தாலும் சீர்குலைக்க முடியாது.
பரஸ்பர புரிதல்கள் என்பது சீனா-இந்தியா உறவுகளின் வளர்ச்சியில் இன்றியமையாதது. முக்கியமான வளர்ந்துவரும் பொருளாதார நாடுகளான, சீனாவும் இந்தியாவும் தேசிய வளர்ச்சி மற்றும் மறுமலர்ச்சியின் முக்கியமான கட்டத்தில் உள்ளன. மேலும், பரந்த பொது நலன்களையும் ஒத்துழைப்பிற்கான இடத்தையும் இரு நாடுகளும் அனுபவிக்கின்றன. சமீபத்தில் முடிவடைந்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (Communist Party of China) 20வது மத்தியக் குழுவின் மூன்றாவது முழு அமர்வு, விரிவான மற்றும் ஆழமான சீர்திருத்தத்தின் புதிய பயணத்தைத் தொடங்கியது. சீனா அனைத்து முனைகளிலும் சீன நவீனமயமாக்கலை முன்னெடுத்து வருகிறது. இது உலகிற்கு புதிய வாய்ப்புகளை வழங்கும். இந்தியாவும் “விக்சித் பாரத் 2047” (Viksit Bharat 2047) என்ற பார்வையைக் கொண்டுள்ளது. இந்தியா தேசிய வளர்ச்சியில் புதிய சாதனைகளை நிகழ்த்துவதையும், சர்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்களில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பையும் கண்டு சீனா மகிழ்ச்சி அடைகிறது. ஒருவருக்கொருவர் வெற்றி பெறவும், பொதுவான வளர்ச்சி மற்றும் புத்துயிர் பெறவும், உலகளாவிய தெற்காசியாவின் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், எதிர்காலத்தில் மனித குலத்திற்கு ஒரு நல்ல வலுவான சமூகத்தை உருவாக்க, இந்தியாவுடன் சீனா இணைந்து பணியாற்ற விரும்புகிறது.
அமைதியான வாழ்விற்கான கோட்பாடுகள்
"ஐந்து பரஸ்பரங்கள்" (Five Mutuals) அமைதியான வாழ்விற்கான ஐந்து கோட்பாடுகளை முன்னெடுத்து, மேலும் அதை மேம்படுத்துகிறது. மேலும் இந்தியத் தலைவரால் முன்மொழியப்பட்ட "பரஸ்பர மரியாதை, பரஸ்பர உணர்திறன் மற்றும் பரஸ்பர நலன்களை" இவை எதிரொலிக்கிறது. இரு தலைவர்களும் எட்டிய முக்கியமான ஒருமித்த கருத்தை நடைமுறைப்படுத்த, இரு தரப்பினருக்கும் இவை பயனுள்ள வழிகாட்டியாக இருக்கும். இந்தியா-சீனா உறவில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவது சாதரணம். இரண்டு பெரிய பண்டைய நாகரிகங்களாக, இருதரப்பும் இருப்பதால் இருதரப்பு உறவுகளை சரியான திசையில் வழிநடத்தி, கூட்டாக ஒரு புதிய எதிர்காலத்தை உருவாக்க முடியும். ஜூன் 2024ல், பீகாரில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தின் திறப்பு விழாவில், 1,400 ஆண்டுகளுக்கு முன்பு, துறவி சுவான்சாங் படித்த அதன் பழங்கால இடிபாடுகளைப் பார்வையிட்ட போது, இரு நாடுகளும் நெருங்கிய வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளை கொண்டிருந்ததை காணலாம். 21-ஆம் நூற்றாண்டில், இருதரப்பு உறவுகளை நாம் சிறப்பாக வளர்த்துக் கொள்ள முடியாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை.
இரு நாடுகளும் ஒரே குரலில் பேசினால், உலகம் முழுவதும் கேட்கும் என்று அதிபர் ஜி ஜின்பிங் கூறினார். இந்தியாவும் சீனாவும் ஒரே உயிர் கொண்ட இரண்டு உடல்கள் என்று பிரதமர் மோடி கூறினார். "டிராகன்-யானை டேங்கோ" (Dragon-Elephant Tango) என்பது இரு தரப்புக்கும் ஒரே சரியான தேர்வு.
இரு நாடுகளின் தலைமையின் கீழ், சீனாவும் இந்தியாவும் தங்கள் உறவை நல்ல முறையில் நிர்வகிக்க முடியும் மற்றும் அமைதியான வாழ்வு மற்றும் கூட்டு வளர்ச்சிக்கான பாதையை உருவாக்க முடியும்.