நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவையில் பேசுவதற்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது. இருப்பினும், மற்றொரு சட்டமியற்றுபவரின் பெயரைக் குறிப்பிட்டால், அவர்கள் பதிலளிக்க உரிமை உண்டு.
புதன்கிழமை, நாடாளுமன்ற உறுப்பினரும், பஞ்சாப் முன்னாள் முதல்வருமான சரண்ஜித் சிங் சன்னி, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சிறப்புரிமைத் தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் தாக்கல் செய்தார். பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் அனுராக் தாக்கூர் பேசிய சில பகுதிகள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டாலும் அதை பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால் அவர் இவ்வாறு செய்தார்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் அவர்களுக்கு சில சலுகைகள் உண்டு. அவர்களைப் பற்றி சட்டமன்றத்தில் தவறான தகவல்களைப் பரப்ப முடியாது. அவர்கள் சபையில் பேசியதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது. மற்றொரு சட்டமியற்றுபவர் அவர்களின் பெயரைக் குறிப்பிட்டால், அவர்களுக்குப் பதிலளிக்க உரிமை உண்டு. சட்டமன்ற அமர்வுகளின் போது, அரசாங்கக் கொள்கை அல்லது சட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து சட்டமியற்றுபவர்களுக்கு முதலில் தெரிவிக்க வேண்டும். இதனால்தான், நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் போது, ஒன்றிய அமைச்சரவை எடுக்கும் முடிவுகளை, ஒன்றிய அரசு வெளியிடுவதில்லை.
ஒரு உறுப்பினர் அல்லது அமைச்சர் ஆதாரமற்ற கருத்தைச் சொன்னாலோ, அல்லது யாரேனும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் நற்பெயருக்குக் எதிராக தவறான கருத்துக்களை கூறினாலோ அல்லது அவர்களின் வேலையைச் செய்யவிடாமல் தடுத்தாலோ, நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டமன்ற உறுப்பினர்சட்டத்தை மீறியதாக சபாநாயகரிடம் (அல்லது மாநிலங்களவை தலைவரிடம்) புகார் அளிக்கலாம்.
நவம்பர் 22, 1978 அன்று, அவசரநிலை முடிவடைந்த ஒரு வருடத்திற்குப் பிறகு, மக்களவையின் சிறப்புரிமைக் குழு, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவையை அவமதித்த குற்றத்திற்காகக் கண்டிதது. ஜனதா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமர் குஹா தலைமையிலான குழு, சிபிஐஎம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிர்மாய் போசுவின் புகாரை விசாரித்தது. 1975-ல் அவர் கேட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக மாருதி பற்றிய தகவல்களை சேகரிக்க அதிகாரிகளுக்கு இந்திரா காந்தியின் அரசாங்கம் தடைகளை ஏற்படுத்தியதாக போசு கூறினார். இந்திரா காந்தியும் 1978-ல் சபையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
அனுராக் தாக்கூரின் முழு உரையாயும் பிரதமர் வெளியிட்டார். ஆனால் அந்த உரையின் சில வார்த்தைகள் நீக்கப்பட்டன. நீக்கப்பட்ட வார்த்தைகளை பகிரங்கப்படுத்துவது சிறப்புரிமை மீறலாகும் என்று சரண்ஜித் சிங் சன்னி கூறுகிறார். பொதுவாக, நீக்கப்பட்ட சொற்கள் அல்லது கருத்துக்களை வெளியிட முடியாது.
சிறப்புரிமைக் (privilege) கேள்வியை எழுப்ப விரும்பும் நாடாளுமன்ற உறுப்பினர், கேள்வி எழுப்பத் திட்டமிடும் நாளில் காலை 10:00 மணிக்கு நாடாளுமன்ற செயலாளருக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்று அரசியலமைப்பின் விதி 223 கூறுகிறது.
அறிவிப்பைச் செயல்படுத்துவதற்கு முன்பு சபாநாயகர் தனது ஒப்புதலை வழங்க வேண்டும். இந்த வழக்கில், சபாநாயகர் அறிவிப்பின் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து பின்னர் முடிவு செய்வார் என்று அரசியலமைப்பின் விதி 222 கூறுகிறது. அத்தகைய எந்தவொரு அறிவிப்புக்கும் சபாநாயகர் தனது ஒப்புதலை வழங்கினால், அது வழக்கமாக உரிமைக் குழுவுக்கு ஆய்வுக்கு அனுப்பப்படும். குழு தனது அறிக்கையை சபைக்கு சமர்ப்பிப்பதற்கு முன்பு குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் புகார்தாரர் இருவரையும் அழைக்கும்.