இந்தியாவின் இளம் வயதினரின் (15-29 வயது) திறன் நெருக்கடி, கல்வி முறையின் தோல்வியை பிரதிபலிக்கிறது. மேலும், சிறந்த திறன் முயற்சிகளால் இந்தக் குறையை ஈடுசெய்ய முடியாது.
படித்த இளைஞர்களிடையே தொழிலாளர் உற்பத்தித்திறன் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண நிதிநிலை அறிக்கை முயற்சிக்கிறது. எதிர் காலத்தில் வருங்கால வைப்பு நிதி (Employees' Provident Fund (EPF)) பங்களிப்பை செலுத்துவதன் மூலம், புதிய தொழிலாளர்களின் பயிற்சிக்கு மானியம் அளிக்கும் மூன்று திட்டங்களை இந்த நிதிநிலை அறிக்கை வெளியிட்டுள்ளது.
நிதித்துறை செயலர் டி.வி.சோமநாதன், சமீபத்தில் அளித்த பேட்டியில், ஊக்கத்தொகை வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நடவடிக்கையாக பார்க்கக்கூடாது என்று விளக்கினார். மாறாக, இயந்திரங்களுக்கு மேல் திறமையான தொழிலாளர்களை பணியமர்த்துவதை ஊக்குவிக்கும் சிறிய முயற்சியாக பார்க்க வேண்டும். இந்த முயற்சி, வேலை தேடுவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் புதிய பணியாளர்களுக்கு குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்புகளை வழங்கும்.
இந்த நடவடிக்கைகள் வேலைகளின் அளவு மற்றும் தரம் ஆகிய இரண்டையும் உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டவை. அதேசமயம், 2019-ஆம் ஆண்டு முதல் இந்திய தொழிலாளர்களின் அனுபவம், தொழிலாளர்களின் வேலை வாய்ப்புகள் உயர்ந்துள்ளன. ஆனால், உற்பத்தித்திறன் மற்றும் ஊதியங்கள் உயரவில்லை. ஏனென்றால், பல தொழிலாளர்கள் விவசாயம், கட்டுமானம் அல்லது சுயதொழில் போன்ற குறைந்த உற்பத்தி வேலைகளுக்குத் திரும்பியுள்ளனர்.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியை (Employees' Provident Fund (EPF)) விரிவுபடுத்துவதில் இந்த நிதிநிலை அறிக்கை கவனம் செலுத்துகிறது. இந்தச் சலுகைகளில் இருந்து பயனடைய நிறுவனங்கள் வருங்கால வைப்பு நிதியில் பங்கு பெற வேண்டும். இந்தத் திட்டங்கள் அடுத்த நான்கு ஆண்டுகளில் சுமார் 30 மில்லியன் கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது புதிய பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். கூடுதலாக, பயிற்சித் தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது, திறமையான ஊழியர்களைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் உள்ள உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களுக்கு பயனளிக்கும்.
எவ்வாறாயினும், இந்தியாவின் இளம் வயதினரின் (15-29 வயது) திறன் நெருக்கடி கல்வி முறையின் தோல்வியை பிரதிபலிக்கிறது. மேலும், சிறந்த திறன் முயற்சிகளால் இந்த பற்றாக்குறையை ஈடுசெய்ய முடியாது. வளர்ந்து வரும் பொருளாதாரத்தில், திறமையான வேலைகளுக்கு சிறந்த படித்தவர்கள் இல்லை.
இதன் விளைவாக, பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பது கடினமாக இருப்பதாக கருதினால், தொழில்துறையினர் அதற்குப் பதிலாக தானியங்கி முறையை தேர்வு செய்யலாம். இந்திய வேலைவாய்ப்பு அறிக்கையின்படி (India Employment Report), இளைஞர்களிடையே வேலையின்மை விகிதம் இடைநிலை அல்லது உயர்கல்வி பெற்றவர்களை விட ஆறு மடங்கு அதிகமாகவும், படிக்கவோ எழுதவோ தெரியாதவர்களுடன் ஒப்பிடும்போது பட்டதாரிகளுக்கு ஒன்பது மடங்கு அதிகமாகவும் உள்ளது. நடுத்தர அல்லது உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் மனப்பாடம் செய்யும் கல்வி முறை இந்தியாவின் உற்பத்தித்திறனையும் போட்டித்தன்மையையும் மேம்படுத்தாது. எதிர்காலத்தில் வரக்கூடிய நெருக்கடியை எதிர்கொள்ள மனிதவள மேம்பாடு மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சகங்கள் ஒத்துழைக்க வேண்டும்.
நிதிநிலை அறிக்கை முன்மொழிவு ஒரு சில இடர்பாடுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். முதலாவதாக, முதலாளிகள் தொழிலாளர்களின் அடிப்படை சுதந்திரத்திற்கு தடையாக இருக்கக்கூடாது. இதற்கான வழிகாட்டுதல்கள் தெளிவாக இருக்க வேண்டும். இரண்டாவதாக, மானியங்களைப் பெறுவதற்காக போலியான பதிவுகளை சந்தேகிக்கும் அளவுக்கு அதிகமாக உருவாக்கக்கூடாது. ’உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்’ (Know Your Customer(KYC)) தொழில்நுட்பம் அத்தகைய மோசடியைத் தடுக்க உதவும். மானியத் திட்டங்கள் வணிகம் செய்வதை கடினமாக்கினால் அவை பயனுள்ளதாக இருக்காது.