இந்தியாவின் பருவமழை துயரங்களுக்குப் பின்னால் மோசமான நகர பராமரிப்பு, உள்கட்டமைப்பு குறைபாடு, நகர்ப்புற திட்டமிடல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு இடையில் அத்தியாவசிய தொடர்புகளை உருவாக்குவதில் கொள்கை வகுப்பாளர்களின் தோல்வி ஆகியவை உள்ளன.
டெல்லி மற்றும் அதள் சுற்றுப்புற நகரங்களில் பெய்த பலத்த மழை, நகரங்களை நீரில் மூழ்கடித்து, போக்குவரத்தை முடக்கி, உயிர்களை பறித்தது. இதில் தவிர்க்க முடியாமல் எழும் கேள்வி என்னவென்றால், இந்திய நகரங்கள் ஏன் பருவமழைக்கு ஒருபோதும் தயாராக இல்லை? என்பது தான். அதற்கு வடிகால் அமைப்பு இல்லாதது தான் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. பண்டைய மற்றும் இடைக்கால நாகரிகங்கள் தண்ணீரை கொண்டு செல்வதற்கான வழிகளைக் கொண்டிருந்தன. அதற்கு சான்று சிந்து சமவெளி நகரங்களின் வடிகால் அமைப்பு முறை ஆகும். ஆனால் நவீன காலங்களில், தரை முழுவதும் கான்கிரீட் மற்றும் தார்சாலைகள் அமைக்கப்படுதலால், நகரத் திட்டமிடுபவர்கள் அதனை அரிதான முறையிலேயே, கடந்த காலத்திலிருந்து குறிப்புகளை எடுத்துக் கொள்கிறார்கள். மழையினால் வெளியேறும் கழிவுநீர் சரியான வடிகால் வசதியின்றி தாழ்வான பகுதிகளில் தேங்குகிறது. இதனால் சாலைகள், பாதாளச் சாக்கடைகள், வீடுகள், அலுவலகங்கள், ரயில் பாதைகள் மற்றும் அடித்தளங்களில் வெள்ளம் ஏற்படுகிறது.
இதனால், இந்தியாவில் பருவக் காலங்களில் தீவிர மழையை எதிர்கொள்ளுதல் பெரும் சவாலாகவே உள்ளது.
காலநிலை மாற்றத்தின் குறிப்பிடத்தக்க அம்சம் அதிக உள்ளூர் மழைப்பொழிவு (hyper-local torrential rainfall) ஆகும். ஜூலை 26ல், டெல்லியில்
99 மிமீ மழை பெய்தது. மறுநாள், பழைய ராஜிந்தர் நகரில் ஒரு வடிகால் வெடிப்பில் மூன்று இளம் உயிர்கள் பறிபோயின. இச்சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள பூசாவில் 58 மிமீ மழை பதிவாகியுள்ளது. இந்திய வானிலை ஆய்வுத் துறை (India Meteorological Department(IMD)) 64 மிமீ மழையை கன மழையாக கருதுகிறது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் பழமையான டெல்லியின் வடிகால் அமைப்பு 50 மிமீ மழையைக் கூட கையாள முடியாமல் திணறுகிறது.
கடந்த வாரம், 26 வயதான நிலேஷ் ராய் என்பவர், தண்ணீர் தேங்கியுள்ள தெருவை தவிர்க்க முயன்றார். அவர் ஒரு உலர்ந்த பகுதியின் குறுக்கே குதித்து, தனது கட்டிடத்தின் அருகே ஒரு இரும்பு கேட்டைப் பிடித்தார். துரதிர்ஷ்டவசமாக, அந்த இரும்பு கேட் ஒரு மின்சார கம்பியுடன் தொடர்பு கொண்டு இருந்ததால், நிலேஷ் ராய் மின்சாரம் தாக்கி இறந்தார். குருகிராமில் வெள்ளத்தில் மூழ்கிய மெட்ரோ நிலையம் அருகே, உயர் அழுத்த மின்சார கம்பி விழுந்து மூன்று பேர் இறந்தனர்.
கடந்தகால நகரங்களில் பெரும்பாலானவை உயரமான தளத்தில் அமைந்திருந்தன. அவை தண்ணீரை திறம்பட வெளியேற்ற அவர்களுக்கு உதவியது. ஆனால் பிந்தைய காலங்களில் நகரத் திட்டமிடல் என்ற முறையைப் பின்பற்றியது. நகர்ப்புற விரிவாக்கம் மற்றும் உள்கட்டமைப்பு உருவாக்கம் ஆகியவை நகர வளர்ச்சிக்கு முக்கியமானவை. இவை பெரும்பாலும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் மாறுகின்றன. எடுத்துக்காட்டாக, டெல்லியில் மழைநீரை முதலில் சேகரிக்கும் இடங்களில் ஒன்றான மின்டோ சுரங்கப்பாதை, உயரமான நிலத்தால் சூழப்பட்ட தாழ்வான பகுதியாகும். தற்போது பெய்த மழையில், பாதாள சாக்கடை மற்றும் பழைய ராஜிந்தர் நகர் ஆகிய இரண்டும் வெள்ளத்தில் மூழ்கின.
நீரியல் புறக்கணிப்பு (neglect of hydrology) மிகவும் மாறுபட்ட புவியியல் அம்சங்களைக் கொண்ட நகரங்கள் டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு இதேபோன்ற நீர் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்ள வழிவகுத்தது. மலைகளை சமன் செய்து கடலில் இருந்து நிலத்தை மீட்டு மும்பை உருவாக்கப்பட்டது. இந்த திட்டம் காலனித்துவ காலத்தில் தொடங்கப்பட்டு சுதந்திரத்திற்கு பிறகும் தொடர்ந்தது. இது தாழ்வான பகுதிகள் மற்றும் மலைகளின் கலவையாகும். மழை பெய்யும் போது, நகரின் மையப் பள்ளத்தில் தண்ணீர் தேங்குகிறது. மழைக்காலங்களில், குறைந்தது ஒரு நாளாவது, கிட்டத்தட்ட முழு நகரமும் தண்ணீருக்கு அடியில் செல்கிறது, அதன் உயிர்நாடியான, ரயில் சேவையும் நிறுத்தப்படுகிறது. உயர் அலைகள் நிலைமையை மோசமாக்குகின்றன. 2005 ஆம் ஆண்டின் பேரழிவு தரும் வெள்ளத்திற்குப் பிறகு, நகரத்தின் மோசமான வானிலை நாட்கள் நீண்டுகொண்டே வருகின்றன.
காலநிலை மாற்றம் அனைவரையும் பாதிக்கிறது. எவ்வாறாயினும், வெள்ளம், வெப்ப அலைகள் மற்றும் கடுமையான குளிர் ஆகியவற்றின் தாக்கத்தை ஏழை மற்றும் கீழ் நடுத்தர மக்களே எதிர்கொள்கின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. நகர்ப்புற இந்தியாவில் உள்கட்டமைப்பு மேம்பாடு இந்த பிரிவினருக்கு நியாயம் செய்யவில்லை. அரசியல்வாதிகள் அவர்களின் வாக்குகளின் சக்தியை அறிந்திருந்தாலும், நகரங்களை உருவாக்கும் சமூகங்களின் குடிசைப்பகுதிகள் மற்றும் குடியிருப்புகள் உட்பட முறைசாரா குடியிருப்புகளுக்கு முழுமைத் திட்டங்கள் அரிதாகவே காரணியாக உள்ளன. கழிவுநீர் வலைப்பின்னலுக்கு வெளியே, நகர்ப்புறங்களில் இருந்து வரும் கழிவுகள், மழைநீர் வடிகால் அமைப்பில் நுழைந்து அதை அடைத்துக் கொள்கின்றன. கடுமையான மழைப்பொழிவு என்பது குடிசைப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து, அவர்களுக்கு நோய்கள் மற்றும் வாழ்வாதார இடையூறுகளைக் ஏற்படுத்துகிறது.
பயிற்சி மையத்தில் ஏற்பட்ட சம்பவம் மற்றும் நிலேஷ் ராயின், துயரங்கள் திட்டமிடுபவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களின் பிற தொடர்புகளையும் உருவாக்கத் தவறியதைக் காட்டுகின்றன. ராஜீந்தர் நகர் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் பிரிவினை அகதிகளின் குடியிருப்புகளாக உருவாக்கப்பட்டன. டெல்லியின் சமூக பொருளாதார வரைபடம் இன்று நடுத்தர மற்றும் உயர் நடுத்தர மக்களின் குடியிருப்புகள், மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்விற்கு தயார் செய்பவர்களுக்கு வாடகைக்கு விடப்படும் ஒரு அறை குடியிருப்புகள் மற்றும் குடிசைப் பகுதிகளுக்கான பகுதிகளை குறிக்கும்.
நவீனத்திற்கு முந்தைய டெல்லியில், சிற்றோடைகள் மற்றும் சிறிய நீரோடைகள் ஒரு காலத்தில் ஆரவல்லிகளிலிருந்து புதிய நீரைக் கொண்டு வந்தன. மேலும் மழைக்காலங்களில் அவை புயல் நீர் வடிகால்களாக மாறி, கனமழை பெய்த சில மணி நேரங்களுக்குள் டெல்லியில் விரைவாக வடிகட்டின. இன்று, அவற்றை முறையாக காலத்திற்கேற்ப பாரமரிக்கவில்லை. ராஜீந்தர் நகரிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள கரோல் பாக்கில் உள்ள ஜர்ஹல்லியா அத்தகைய ஒரு நீர் வழித்தடமாகும். இன்று, அது மூடப்பட்டுள்ளது.
இயற்கையான நீரை வெளியேற்றும் அமைப்புகள் பலவீனப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டதால், நவீன வடிகால் அமைப்புகளால் இந்த முறை புறக்கணிக்கப்படுகின்றன. டெல்லியின் வடிகால் அமைப்பு 1976 ஆம் ஆண்டுக்கு முந்தையது. இந்த கண்டா கால்வாய்களில் சில மூடப்படவில்லை. மும்பையின் வடிகால் அமைப்பு சுமார் 100 ஆண்டுகள் பழமையானது. குருகிராமின் மட்டுப்படுத்தப்பட்ட வடிகால் திறன், இதன் விளைவாக பாட்ஷாபூர் வடிகால் கனமழையின் போது நிரம்பி வழிகிறது மற்றும் இயற்கை நீர் வெளியேற்றங்களின் ஓட்டத்தை சீர்குலைக்கிறது. இது இந்தியாவின் மில்லினியம் நகரம் (Millennium City) என்ற கூற்றுக்கு எதிரானது. இந்த வடிகால் ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான லிட்டர் கழிவுநீரைக் கொண்டு சென்று டெல்லியின் நஜாஃப்கர் நல்லாவில் வெளியேற்றுகிறது. இது 18 ஆம் நூற்றாண்டின் முகலாய அதிகாரி மிர்சா நஜாப் கானின் பெயரிடப்பட்டது மற்றும் பறவைகள் நிறைந்த ஒரு ஜீலின் ஒரு பகுதி, மானாவாரி சாஹிபி நதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதன் கரையோரங்களில் சிந்து நாகரிக நகரங்களின் பண்பாட்டு அடையாளங்கள் காணப்படுகின்றன.
மழையின் போது பயிற்சி மையத்தில் நடந்த நிகழ்வை தொடர்ந்து, நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வடிகால்களை ஒழுங்குபடுத்துவது குறித்து வரவேற்கத்தக்க உரையாடல்கள் தொடங்கியுள்ளன. அதற்கு இன்னும் நிறைய வடிகால் அமைப்பு சார்ந்த திட்டங்களை தொடங்க வேண்டும். திட்டமிடுபவர்கள் நகரங்களின் வடிகால் அமைப்பு, நீர்நிலைகளை பாராமரித்தல், காலநிலை மாற்றம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.