தனியார் ஆலோசனை : ஒளிபரப்புச் சேவைகள் (ஒழுங்குமுறை) மசோதா, 2023 பற்றி . . .

 முக்கியமான விவாதங்கள் மீதான அரசாங்கத்தின் கட்டுப்பாடு, கொள்கை உருவாக்கும் செயல்பாட்டின் மீதான நம்பிக்கையைக் குறைக்கிறது. 


ஒளிபரப்பு சேவைகள் (ஒழுங்குமுறை) மசோதா (Broadcasting Services (Regulation) Bill), 2023 குறித்து தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தனிப்பட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு அதற்கான ஒரு முன் வரைவை வெளியிட்டனர். இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட பங்குதாரர்கள் மட்டுமே புதிய முன்மொழிவுகளைப் பெற்றனர்.  கடுமையான விதிமுறைகளின் கீழ், பங்குதாரர்கள் பெற்ற  புதிய முன்மொழிவுகளின் ஒவ்வொரு நகலிலும் "கசிவுகள்" ஏதேனும் இருந்தால் அடையாளம் காணக்கூடிய தனித்துவமான அடையாளக்குறி (watermark) வழங்கப்பட்டுள்ளது. 


பல இந்தியர்களைப் பாதிக்கும் சட்டங்களை உருவாக்குவதில் பொது ஆலோசனைகள் என்ற பகுதி, ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும். இது அரசாங்கத்தின் 2014 நாடாளுமன்றத்திற்கு முந்தைய ஆலோசனைக் கொள்கையால் (Pre-Legislative Consultation Policy) அங்கீகரிக்கப்பட்டது. இது சட்டமியற்றும் முன் விரிவான பொது வெளிப்பாட்டைப் (public outreach) பரிந்துரைத்தது. தற்போது பழைய முறையை நிறுத்திவிட்டு, ஒரு சில பங்குதாரர்களை மட்டுமே கலந்தாலோசிக்கிறார்கள்.


மசோதாவின் முந்தைய வரைவை அரசாங்கம் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தினாலும், அதற்கான விமர்சனங்களுக்கு பதில் அளிக்கவில்லை. மேலும் ஒரு சில பங்குதாரர்களை மட்டுமே தேர்வு செய்துள்ளது.  இந்த அணுகுமுறை ஆன்லைன் படைப்பாளர்கள் (online creators), ஊடகத் துறையின் பெரும்பகுதியினர் மற்றும் ஊடகச் சமூகத்தை சார்ந்துள்ளோர் போன்ற நபர்களைப் புறக்கணிக்கிறது. இந்த குழுக்கள் ஊடக ஒழுங்குமுறை குறித்து அதிக அக்கறைக் கொண்டுள்ளன. இந்த மசோதா ஏற்கனவே விரிவடைந்துள்ள ஒழுங்குமுறை கட்டமைப்பை  மேலும் விரிவுபடுத்தும். இந்த கட்டமைப்பு, செய்தி மற்றும் பொழுதுபோக்குகளில் சுதந்திரமான கருத்து வெளிப்பாட்டை ஊக்கப்படுத்துவதாக விமர்சிக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக, தகவல் தொழில்நுட்பம் விதிகள் 2021 (IT Rules, 2021), இயற்றப்பட்டதிலிருந்து ஸ்ட்ரீமிங் தளங்களின் (over-the-top (OTT)) மீதான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன .


 இந்தச் சூழலில், பல அமைச்சகங்களில் பொதுவான பிரச்சினையாக இருப்பது பொதுக் கலந்தாய்வு (public consultation) என்ற முறை இல்லாதது ஆகும். முக்கிய கொள்கை மாற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கும், யார் கருத்துச் சொல்ல வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்கும் திட்டமிட்ட உத்தியாக இருக்கலாம். இந்த செயல்முறை கவலைக்குரியது. ஊடக ஒழுங்குமுறையில் உள்ள கார்ப்பரேட்  நிறுவன பங்குதாரர்களின் நலன்கள், புதிய படைப்பாளிகள், வர்ணனையாளர்கள், சமூக ஊடகப் பயனர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆகியோரின் நலன்களிலிருந்து பெரும்பாலும் வேறுபடுகின்றன. அவர்கள் ஒளிபரப்பு மசோதாவால் பாதிக்கப்படுவார்கள். மற்ற பங்குதாரர்களின் கருத்துக்களை அறியாமலோ அல்லது அவற்றுக்கு பதிலளிக்கும் வாய்ப்பு இல்லாமலோ, உள்ள இந்த முன்மொழிவின் தரம் மற்றும் அதன் தன்மை மிகவும் கேள்விக்குரியதாக உள்ளது. 


பொதுமக்களின் நம்பிக்கைக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் விரைவான மற்றும் எளிமையான கொள்கைகளை உருவாக்கும் முறைகளைப் அரசாங்கம் நிறுத்த வேண்டும். இத்தைகைய முறை சர்ச்சைக்குரிய விவாதங்கள்  மற்றும் சட்டங்களுக்கு வழிவகுக்கும்.  



Original article:

Share: