போபால் விஷவாயு சம்பவம் நடந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு மத்தியப் பிரதேசம் ஏன் நச்சுக் கழிவுகளை அகற்றத் தொடங்குகிறது? -ஆனந்த் மோகன் ஜே

 போபால் விஷவாயு சம்பவம் (Bhopal gas tragedy) நடந்து கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு, யூனியன் கார்பைடு ஆலையில் (Union Carbide facility) இருந்து 337 மெட்ரிக் டன் நச்சுக் கழிவுகளை எரிக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளது.


போபால் விஷவாயு துயரச் சம்பவம் (Bhopal gas tragedy) நடந்து கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு, யூனியன் கார்பைடு ஆலையில் இருந்து 337 மெட்ரிக் டன் (Metric Tons (MT)) நச்சுக் கழிவுகளை எரிக்கும் திட்டத்தை மத்தியப் பிரதேச மாநில அரசு இறுதியாக முன்னெடுத்துச் செல்லும். இதற்காக மத்திய அரசு கடந்த மார்ச் 4-ம் தேதி ரூ.126 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

போபால் விஷவாயு விபத்து (Bhopal Gas Tragedy) என்றால் என்ன?


டிசம்பர் 2, 1984 அன்று, இரவு மத்தியப் பிரதேசத்தின் போபாலில் மிகப்பெரிய தொழில்துறை பேரழிவுகளில் ஒன்று ஏற்பட்டது. இந்நிகழ்வின் போது,  நகரின் புறநகரில் அமைந்துள்ள யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் (Union Carbide India Limited (UCIL)) நிறுவனத்திற்கு சொந்தமான பூச்சிக்கொல்லி ஆலையில் (pesticide plant) இருந்து அதிக நச்சுத்தன்மை வாய்ந்த மெத்தில் ஐசோசயனேட் (Methyl Isocyanate (MIC)) வாயு கசிந்ததில் சுமார் 5,000 பேர் கொல்லப்பட்டனர்.


இதில், உயிர் பிழைத்தவர்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். தோல் நோய் (skin disease), பெண்களின் இனப்பெருக்க உடல்நலப் பிரச்சினைகள் (reproductive health problems in women) மற்றும் பிறக்கும் குழந்தைகளின் பிறவி உடல்நலப் பிரச்சினைகள் (congenital health issues in children born) ஆகியவை இதில் அடங்கும்.


சுற்றுச்சூழல் மாசுபாட்டின் அளவு மிகப்பெரிய அளவில் இருந்தது. தொழிற்சாலையைச் சுற்றியுள்ள நீர் ஆதாரங்கள் மாசுபட்டிருந்தன மற்றும் பல கைப்பம்புகள் (hand pumps) சீல் வைக்கப்பட்டன.


அமெரிக்காவை தளமாகக் கொண்ட யூனியன் கார்பைட் கார்ப்பரேஷனின் (Union Carbide Corporation (UCC)) துணை நிறுவனமும், தற்போது டௌ கெமிக்கல்ஸின் (Dow Chemical) ஒரு பகுதியுமான யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் (Union Carbide India Limited (UCIL)) நிறுவனம், தங்களின் துன்பங்களுக்கு நியாயமான இழப்பீடு கோரி உயிர் தப்பியவர்களால் பொறுப்பேற்க வைக்கப்பட்டுள்ளது. யூனியன் கார்பைட் கார்ப்பரேஷனின் (Union Carbide Corporation (UCC)) வாரிசு நிறுவனங்களிடமிருந்து கூடுதல் இழப்பீடு கோரி ஒன்றிய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை (curative petition) உச்ச நீதிமன்றம் 2023-ல் தள்ளுபடி செய்தது.


கழிவுகளை அகற்றும் பணியை தொடங்க ஏன் நாற்பதாண்டுகள் ஆனது?


சமூக ஆர்வலர் அலோக் பிரதாப் சிங், என்பவர் 2004-ம் ஆண்டில் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை (Public interest Litigation (PIL)) தாக்கல் செய்தார். அந்த இடத்தில் மாசுபாட்டிற்கு டெள கெமிக்கல்ஸ் (Dow Chemicals) பொறுப்பு என்றும், சுத்தம் செய்வது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒன்றிய அரசின் இரசாயனம் மற்றும் பெட்ரோலிய இரசாயனத் துறை செயலர் தலைமையில் ஒரு பணிக்குழுவை அமைத்தது.


மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய (Central Pollution Control Board (CPCB)) நிபுணர்கள் 2005-ம் ஆண்டில் குஜராத்தின் அங்கலேஷ்வரில் உள்ள பருச் என்விரோ-இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (Bharuch Enviro-Infrastructure Limited (BEIL)) நிறுவனத்திற்கு சொந்தமான உலகத் தரம் வாய்ந்த எரியூட்டியை பாதுகாப்பாக அகற்றுவதற்காக குறிப்பிட்டுள்ளனர். 2007-ல் குஜராத்தில் நடந்த போராட்டங்கள் மற்றும் 2009-ல் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டைத் தொடர்ந்து, இது கைவிடப்பட்டது.


ஹைதராபாத்தில் உள்ள துங்கிகல் (Dundigal) மற்றும் மும்பையில் உள்ள தலோஜா (Taloja) உள்ளிட்ட பிற சுத்திகரிப்பு, சேமிப்பு மற்றும் அகற்றல் வசதி (Treatment, Storage, and Disposal Facility (TSDF)) உள்ளிட்ட தளங்களை பணிக்குழு அடையாளம் கண்டது. 2010-ம் ஆண்டில், மத்திய பிரதேசத்தின் பிதாம்பூரில் உள்ள சுத்திகரிப்பு, சேமிப்பு மற்றும் அகற்றல் வசதியில் (TSDF) 346 மெட்ரிக் டன் கழிவுகளை எரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.


இந்த முடிவை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அரசானது சவால் செய்துள்ளது. மேலும், 2012-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு சிறப்பு விடுப்பு மனுவை (Special Leave Petition) தாக்கல் செய்தது. அதில் "போபால் வாயு நச்சுக் கழிவுகளை எரிப்பதற்கு தொழில்நுட்ப ரீதியாக இந்த வசதி வலுவாக இல்லை எனவும், இது தொழில்துறை கழிவுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் அபாயகரமானது" என்று வாதிட்டது.


பொதுவாக, ஜெர்மனியில் கழிவுகளை அகற்ற ரூ.24.56 கோடி மதிப்புள்ள திட்டத்தை சமர்ப்பித்த Deutsche Gesellschaft für Internationale Zusammenarbeit GmbH (GIZ), அமைப்பானது தங்கள் குடிமக்களின் பரவலான எதிர்ப்பைத் தொடர்ந்து 2012-ல் அதை திரும்பப் பெற்றது.


2015-ம் ஆண்டில், ஒன்றியமானது பிதாம்பூர் சுத்திகரிப்பு, சேமிப்பு மற்றும் அகற்றல் வசதியில் ஒரு சோதனை நிகழ்வை நடத்தியது. ஆனால், குடியிருப்பாளர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து மேலும் திட்டங்களை நிறுத்த வேண்டியிருந்தது. ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையே கருத்தொற்றுமை ஏற்படாமல், ஏழு ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


மார்ச் 4, 2024 அன்று, நீதிமன்றங்களின் அதிக வற்புறுத்தலுக்குப் பிறகு, கழிவுகளை அகற்ற ஒன்றிய அரசு ரூ.126 கோடியை வழங்கியது.


நச்சுக் கழிவுகளை அகற்றுவதற்கான திட்டம் என்ன?


இந்த திட்டத்தின்படி, மத்திய பிரதேச போபால் எரிவாயு துயர நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத் துறையின் (Bhopal Gas Tragedy Relief and Rehabilitation (BGTRR)) கண்காணிப்பில், ஜூலை 2024 முதல் இந்தூரின் பிதாம்பூரில் உள்ள சுத்திகரிப்பு சேமிப்பு அகற்றல் வசதியின் எரியூட்டியில் யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து (Union Carbide facility) நச்சுக் கழிவுகளை அகற்றுதல் நடைபெறும்.


இந்த திட்டம் 180 நாட்களில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் 20 நாட்களில், கழிவுகள் மாசுபட்ட இடத்திலிருந்து அகற்றும் இடத்திற்கு பேக் செய்யப்பட்ட டிரம்களில் (packed drums) கொண்டு செல்லப்படும். பின்னர், இந்த கழிவுகள் சேமிப்பிலிருந்து ஒரு கலவை கொட்டகைக்கு (blending shed) மாற்றப்படுகின்றன. அங்கு, அது சில வேதிப்பொருட்களுடன் கலக்கப்பட்டு (mixed with regents) பின்னர் 3-9 கிலோ எடையுள்ள சிறிய பைகளில் அடைக்கப்படுகிறது.


எரித்தல் தொடர்பான அனைத்து அறிக்கைகளும் பல துறைகளின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட 76-வது நாளில் மட்டுமே உண்மையான எரித்தல் நடக்கும். இந்த உண்மையான அகற்றல் தொடங்குவதற்கு முன்பு காற்றின் தரம் மோசமடையாது மற்றும் நிலையான இயக்க நடைமுறைகளின்படி எரித்தல் நடைபெறுகிறது.


இந்த நடைமுறைக்கு ரூ.126 கோடி செலவாகும். இது 2012-ல் Deutsche Gesellschaft für Internationale Zusammenarbeit GmbH (GIZ) அமைப்பு வழங்க முன்வந்த ரூ.24.56 கோடியை விட ஐந்து மடங்கு அதிகமாகும்.

தளத்தில் உள்ள மாசுபாட்டின் அளவு என்ன?


போபால் எரிவாயு துயர நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத் துறையால் (BGTRR) ஆதரவளிக்கப்பட்ட 2010 அறிக்கை யூனியன் கார்பைடு வளாகத்திற்குள் (Union Carbide premises) ஒன்பது இடங்களில் மாசுபடுவதற்கான சாத்தியக்கூறுகளை சுட்டிக்காட்டியது. அந்த இடத்தில் 320,000 கன மீட்டர் மண் சீரமைக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் இதுபோன்ற துயர சம்பவத்திற்கு முன்னரே அப்பகுதியில் நிலத்தடி நீர் மாசுபட்டிருந்தது. மேலும், அப்பகுதிக்கு அருகிலுள்ள ஐந்து கிணறுகளில் தனிமைப்படுத்தப்பட்ட பூச்சிக்கொல்லி மாசுபாடு இருப்பது கண்டறியப்பட்டது.


2021-ம் ஆண்டு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் (National Green Tribunal (NGT)) அறிக்கை, தொழிற்சாலைக்கு வடக்கே அமைந்துள்ள சூரிய ஆவியாதல் குளங்களை (Solar Evaporation Ponds (SEP)) சரிசெய்ய உத்தரவிட்டது. துயரச் சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றி எடுக்கப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் உள்ள தண்ணீரில் மாங்கனீஸ் (manganese) மற்றும் நிக்கல் (nickel) போன்ற கன உலோகங்களின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குளோரின் (chlorine) மற்றும் மொத்த கடினத்தன்மை (total hardness) போன்ற இயற்பியல் வேதியியல் அளவுருக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வரம்புகளை மீறி கூடுதலாக இருந்ததாகக் கூறப்படுகிறது.


செயல்முறையில் உள்ள அபாயங்கள் என்ன?


2015-ம் ஆண்டு விசாரணையின் சோதனை அறிக்கையில், எரியூட்டியில் இருந்து தப்பியோடிய உமிழ்வு (fugitive emissions ) எதுவும் வெளியிடப்படவில்லை என்று கூறியது.


"எரியூட்டியைச் சுற்றியுள்ள சுற்றுப்புற காற்றின் தரம் கண்காணிக்கப்பட்ட அளவுருக்களான PM-10 (10 மைக்ரோமீட்டர் அல்லது அதற்கும் குறைவான விட்டம் கொண்ட துகள்கள்), சல்பர் ஆக்சைடுகள் (SOx), நைட்ரஜன் ஆக்சைடுகள் (NOx), ஆர்சனிக் (arsenic), ஈயம் (lead) மற்றும் பென்சீன் (benzene) ஆகியவற்றிற்கான தேசிய சுற்றுப்புற காற்று தர தரங்களுக்குள் (National Ambient Air Quality standards) இருந்தது. சுற்றுப்புற காற்றில் நிக்கல் இணக்கமாக இருந்தது. இருப்பினும், சுத்திகரிப்பு, சேமிப்பு மற்றும் அகற்றல் வசதி (TSDF) வளாகத்தில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளுக்கு இது இல்லை, ”என்று அறிக்கை கூறியது.


இந்த கூற்று வாயு மாசுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக செயல்படும் சமூக குழுக்களால் மறுக்கப்பட்டது. 2022-ம் ஆண்டு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (Central Pollution Control Board (CPCB)) அறிக்கையானது, சோதனையின் கண்டுபிடிப்புகள் குறித்து வெளிப்படுத்தியது. இதில், ஏழு சோதனை நிலைமைகளில் ஆறு நிலைமையின் போது குடியிருப்பாளர்கள் அதிக அளவு டையாக்ஸின்கள் (Dioxins) மற்றும் ஃபுரான்களுக்கு (Furans) ஆளாகியுள்ளனர். இவை இரசாயன மாசுக்களை எரிப்பதன் மூலம் உருவாகின்றன. அவை மனித ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்  மற்றும் தோல் கோளாறுகள் (skin disorders), கல்லீரல் பிரச்சினைகள் (liver issues) மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை (immune system) பாதிக்கலாம்.



Original article:

Share: