இங்கிலாந்து மற்றும் இந்திய பொருளாதாரக் கூட்டாண்மைக்கான சாத்தியங்கள் பரந்த அளவில் உள்ளன. ஆனால், இதற்கு இரு நாடுகளின் முயற்சிகளும் தேவைப்படும்.
இரண்டு ஜனநாயக நாடுகளுக்கும் சமீபத்தில் தேர்தல்கள் நடந்தன. இந்த ஆண்டு ஜூன் மாதம், பிரதமர் நரேந்திர மோடி இந்திய வரலாற்றில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற இரண்டாவது பிரதமர் ஆனார். ஜூலை மாதம், ஐக்கிய இராச்சியத்தில் (United Kingdom) சர் கீர் ஸ்டார்மரின் கீழ் தொழிற்கட்சி (Labour Party) மகத்தான வெற்றியைப் பெற்றது. இது இங்கிலாந்து மற்றும் இந்திய கூட்டாண்மையில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது.
இங்கிலாந்து அரசு இந்தியாவுடன் ஈடுபடுவதற்கான சாதகமான அறிகுறிகளைக் காட்டுகிறது. தொழிலாளர் கட்சி (Labour Party) இந்தியாவுடன் ஒரு "புதிய இராஜதந்திர கூட்டுறவைத்" தொடர உறுதியளித்துள்ளது. அவர்கள் இங்கிலாந்து-இந்தியா தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை (Free trade Agreement (FTA)) விரைவாக முடிக்க விரும்புகிறார்கள். இதில், பாதுகாப்பு, தொழில்நுட்பம், காலநிலை மாற்றம் மற்றும் கல்வி ஆகியவற்றில் ஆழமான ஒத்துழைப்பை இருநாடுகளும் நோக்கமாகக் கொண்டுள்ளன. இங்கிலாந்தின் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு விவகாரங்களுக்கான செயலர் (Secretary of State for Foreign, Commonwealth, and Development Affairs) டேவிட் லாம்மி இந்தியாவுக்கு வருகை தருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இவர் பதவியேற்ற ஒரு மாதத்திற்குள் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
‘2030 ஆம் ஆண்டிற்கான இராஜதந்திர திட்டம்’ வெற்றியடைந்துள்ளது. இருதரப்பு வர்த்தகம் 2023-ல் 39 பில்லியன் பவுண்டுகளை எட்டியுள்ளது. இரு நாடுகளும் பரஸ்பர பொருளாதாரங்களில் பெரிய முதலீடுகளைச் செய்து வருகின்றன. தற்போது, இந்த முதலீடுகள் சுமார் எட்டு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்குகிறது.
எவ்வாறாயினும், இந்த கூட்டாண்மையின் முழுப் பலன்களையும் செயல்படுத்த 2047-ம் ஆண்டிற்கான புதிய வரைபடத்தை ஒப்புக்கொள்ளுமாறு இரு அரசாங்கங்களையும் கேட்டுக்கொள்கிறோம்.
இந்தியா முக்கியமானது மற்றும் அது இப்போது மிகவும் முக்கியமானது
இந்தியாவின் உலகளாவிய நிலை மறுக்க முடியாததாகப் பார்க்கப்படுகிறது. அதில், 2023-ல் அதன் மகத்தான வெற்றிகரமான G-20 தலைமைப்பதவி (G-20 Presidency), குறிப்பிடத்தக்க நிலவு தரையிறக்கம், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பில் முதன்மையானது மற்றும் விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் ஆகியவை இதற்குச் சான்றாகும். பொதுவாக நாம் வழிநடத்தும் அமைப்பான, இங்கிலாந்து இந்திய வர்த்தக அமைப்பு (U.K. India Business Council), இங்கிலாந்து மற்றும் அதன் நிறுவனங்களுக்கு இதை நன்றாகப் புரிந்துகொள்ளவும், இந்திய வாய்ப்பை அவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் புதுப்பிக்கவும் உதவும் பணியில் உள்ளது. இந்தியா வெறுமனே ஒரு சந்தை மட்டுமல்ல, ஒரு இராஜதந்திர பங்குதாரர் ஆவார். இது நம் தொழில்நுட்பச் சங்கிலி (technology chain), திறமைச் சங்கிலி (talent chain) மற்றும் விநியோகச் சங்கிலியின் (supply chain) ஒரு பகுதியாகும்.
இரு நாடுகளிலும் வேலை வாய்ப்புகளையும், வளர்ச்சியையும் உருவாக்கி, இந்தியாவுக்கு முன்னுரிமை அளித்து, சமமான பொருளாதார கூட்டாண்மையை உருவாக்க வேண்டும் என்பதே இங்கிலாந்தின் புதிய அரசாங்கத்திற்கு நாம் தெரிவிக்கும் செய்தியாகும். ஒரு விரைவான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் (Free trade Agreement (FTA)) ஒரு மாற்றியாக இருக்கும். இது நாம் உருவாக்கக்கூடிய ஒரு புதிய கட்டமைப்பின் அடித்தளமாகும். மேலும், அந்த கட்டமைப்பின் மையமானது தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) ஒத்துழைப்பு ஆகும். உலகில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) செலவில் ஒரு டாலருக்கு முதலீட்டில் (return on investment (ROI)) சிறந்த வருமானத்தை இந்தியா பெற்றுள்ளது. உதாரணமாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் சாதனைகளைக் கவனியுங்கள். கூடுதலாக, இந்திய நிறுவனங்கள் இங்கிலாந்து நிறுவனங்கள் மற்றும் நமது உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களுடன் ஒத்துழைக்க ஆர்வமாக உள்ளன.
இங்கு நாம் பெரிதாக சிந்திக்கலாம். இரு நாடுகளும் நீண்டகால சுகாதாரப் பாதுகாப்பு கூட்டுறவைக் கொண்டுள்ளன. உலகளாவிய சவாலை எதிர்கொள்ள உயிர்காக்கும் மலேரியா தடுப்பூசிகளை (malaria vaccines) வெற்றிகரமாக உருவாக்குகின்றன. இந்தியாவில் அதிகமான இங்கிலாந்து மருத்துவ பரிசோதனைகளை மேம்படுத்தவும், சுகாதார-பராமரிப்பு ஆராய்ச்சியைப் பகிர்ந்து கொள்ளவும், அறிவு பரிமாற்றத்தை ஆதரிக்கவும் முடியுமா?
புதுமையான நிலைத்தன்மை தொழில்நுட்பத்தை (innovative sustainability technology) ஆதரிக்க இங்கிலாந்து முதலீடு செய்கிறது மற்றும் இங்கிலாந்து வங்கிகள் இந்தியாவிற்கு பில்லியன் கணக்கான காலநிலை நிதியுதவியை (climate financing) வழங்குகின்றன. இந்தியப் பல்கலைக்கழகங்களுடனான கூட்டாண்மை இந்தியாவில் உலகத் தரம் வாய்ந்த உயர்கல்வியை வழங்க முடியும். புதுமையான நாடுகடந்த கல்வி முறைகள் மூலம் இதனை அடைய முடியும்.
சீரமைப்பின் முக்கிய பகுதிகள்
கடந்த ஆண்டு, இரு நாடுகளுக்கிடையே ஒரு முக்கிய ஒப்பந்தம் (G2G agreement) செய்யப்பட்டது. அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகளில் ஒத்துழைப்பதில் கவனம் செலுத்திய இந்த ஒப்பந்தம் முன்னோக்கி செல்லும் வழியைக் காட்டுகிறது.
பாதுகாப்பு (defence) மற்றும் காப்புத்திறனில் (security) இங்கிலாந்தும் இந்தியாவும் நடைமுறையில் நட்பு நாடுகளாக உள்ளன.
ஒரு காலத்தில் இந்தியாவின் பெரும்பாலான பாதுகாப்பு உபகரணங்களை இங்கிலாந்து வழங்கியது. இன்று இதன் மதிப்பு வெறும் 2.5% சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது. இந்தியா, உள்நாட்டுமயமாக்கல், நம்பகமான பாதுகாப்பு தொழில்நுட்ப விநியோகச் சங்கிலிகளை உருவாக்குதல், முக்கியமான தொழில்நுட்பத்திற்கான அணுகலைப் பாதுகாத்தல், ஏற்றுமதியை அதிகரிப்பது மற்றும் உள்நாட்டு உற்பத்தி வேலைகளை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இங்கிலாந்தின் மேம்பட்ட பாதுகாப்புத் துறை இந்த பணியை ஆதரிக்க முடியும். இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் ஜனவரி 2024 இல் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டார். இது, 22 ஆண்டுகளில் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் மேற்கொண்ட முதல் பயணம் ஆகும்.
இரு நாடுகளும் தடையின்றி இணையும் மற்றொரு பகுதி போக்குவரத்துத் துறை (mobility) ஆகும். மாணவர்கள் மற்றும் திறமையான நிபுணர்களுக்கு இந்தப் பகுதியில் உரிமையைப் பெறுவது இன்றியமையாதது. இது நம்பிக்கை மற்றும் பரஸ்பர நம்பிக்கையை அளிக்கும். இது இந்திய முதலீட்டாளர்களுக்கு இங்கிலாந்து வரவேற்கும் வலுவான செய்தியை அனுப்பும். மேலும், இங்கிலாந்துக்கு போக்குவரத்துத் துறை (mobility) பற்றி சொல்ல ஒரு நேர்மறையான கதை உள்ளது. கடந்த ஆண்டில், வேலைக்காகவோ, கல்விக்காகவோ அல்லது சார்ந்திருப்பவர்களுக்காகவோ இந்திய குடிமக்களுக்கு சுமார் 3,50,000 விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ‘வாழும் இணைப்பை’ (living bridge) நாம் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும்.
முழு திறனையும் பயன்படுத்துதல் (Unlocking full potential)
மேலே உள்ள யோசனைகள் பனிப்பாறையின் முனை மட்டுமே. இங்கிலாந்துக்கும், இந்தியாவுக்கும் இடையே ஆழமான பொருளாதார கூட்டாண்மைக்கு பெரும் சாத்தியம் உள்ளது. இருப்பினும், இதற்கு இரு நாடுகளின் முயற்சிகளும் தேவைப்படும். இந்தியாவில், வணிகச் சூழலை மேம்படுத்த மேலும் சீர்திருத்தங்களை வரவேற்போம்.
இங்கிலாந்து நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்வதில் உறுதிபூண்டுள்ளன மற்றும் அவற்றின் செயல்திறனை பாதிக்காமல் தங்கள் விநியோகச் சங்கிலிகளில் இந்தியாவை ஒருங்கிணைக்க உதவும் கொள்கைகளை வரவேற்கின்றன. எடுத்துக்காட்டாக : ஒரு வசதியான கட்டணம் மற்றும் தரநிலைகள் குறிப்பிடத்தக்க வரவுகளைத் திறக்க உதவும்.
நியாயமான வரிவிதிப்புக் கொள்கைகள் இருப்பது அவசியம். இந்தக் கொள்கைகள் அனைத்து முதலீட்டாளர்களும் சமமாக நடத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். இது சமதளத்தை உருவாக்கும்.
இங்கிலாந்து முதலீட்டாளர்கள் இந்தியாவில் புதிய அறிவுசார் சொத்துக்களை (Intellectual Property (IP)) இந்தியாவின் நட்பு நாடுகளுடன் கொண்டு வந்து இணைந்து உருவாக்க விரும்புகிறார்கள். கொள்கைகள் தங்கள் அறிவுசார் சொத்துக்களுக்கு (Intellectual Property (IP)) நல்ல பாதுகாப்பு மற்றும் நியாயமான வணிக இழப்பீடு வழங்கினால் இதைச் செய்ய அவர்கள் தயாராக உள்ளனர்.
இதன், ஒப்புதலுக்கான குறுகிய காலக்கெடு மற்றும் அரசாங்கத் துறைகள், மாநிலங்கள் மற்றும் அனுமதிகளுக்கான கட்டுப்பாட்டாளர்கள் முழுவதும் மிகவும் நிலையான, வெளிப்படையான அணுகுமுறை போன்ற வணிக மேம்படுத்துதல்களை எளிதாகச் செய்வதும் முக்கியம்.
உலகளவில் வாழ்க்கையை மேம்படுத்தும் வலுவான இருதரப்பு பொருளாதார கூட்டாண்மையை வலுப்படுத்த இரு அரசாங்கங்களுடனும் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றுவோம்.
இந்தியா இன்று மிகவும் பரபரப்பான பொருளாதாரக் கதையாக உள்ளது. நாம் இந்தியாவின் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருக்கிறோம். அதிக நன்மைக்காக திறன்களில் இணைவதற்கான சிறந்த நேரமாக இது அமைகிறது.
‘இந்தியாவுடனான உங்கள் நட்பு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறதோ, அவ்வளவு செழிப்பை இருவரும் அனுபவிக்கலாம்’ என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியது போல, பகிரப்பட்ட எதிர்காலத்திற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
ரிச்சர்ட் மெக்கலம், UK India Business Council-ன் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.