எண்களுக்குப் பின்னால்…

 ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை அறிக்கையில் இந்தியாவிற்கான பாடங்கள்.


இந்தியாவின் மக்கள்தொகை 1.46 பில்லியன் (ஏப்ரல் 2023-ல் சீனாவை விஞ்சி, இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறியது) எண்ணிக்கையை கொண்டுள்ளது என்று கவலைபடுபவர்களுக்கு, சில மகிழ்ச்சியான செய்திகள் உள்ளன. ஐ.நா.வின் உலக மக்கள்தொகை அறிக்கை 2025 (State of the World Population Report 2025 (SOWP)) படி, இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் (total fertility rate (TFR)) 1.9 ஆகக் குறைந்துள்ளது.


மொத்த கருவுறுதல் விகிதம் என்பது ஒரு பெண் தனது வாழ்நாளில் பெற்ற குழந்தைகளின் சராசரி எண்ணிக்கையாகும். 2.1 என்ற TFR, மாற்று நிலை (replacement level) என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மக்கள்தொகையை நிலையாக வைத்திருக்க தேவையான பிறப்புகளின் எண்ணிக்கையாகும். இந்தியாவின் மக்கள் தொகை திடீரென குறையும் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. நமது மக்கள் தொகை சுமார் நாற்பது ஆண்டுகளில் அதன் அதிகபட்ச புள்ளியான 1.7 பில்லியனை எட்டும். அதன் பிறகு, அது குறையத் தொடங்கும்.


மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) குறைந்து வந்தாலும், இந்தியாவின் மக்கள் தொகை இன்னும் சிறிது காலத்திற்கு உயரும். ஏனென்றால், பல இளைஞர்களைக் கொண்ட நாடாக உள்ளதால், மக்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள். சீனா உள்ளிட்ட பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக இருக்கும். அங்கு கருவுறுதல் விகிதம் குறைந்து, முதியோர் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது.


இந்த மக்கள் தொகை வளர்ச்சி ஒரு நன்மையா அல்லது பிரச்சனையா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்தியாவில் 68 சதவீத மக்கள் 15 முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள். இதன் பொருள், அதன் தொழிலாளர்கள் சரியான திறன்களைக் கொண்டிருந்தால் மட்டுமே இந்தியா உலகளாவிய தொழிலாளர் இடைவெளியை நிரப்ப உதவும். எல்லா இடங்களிலும் ஆட்டோமேஷன் பல வேலைகளை மாற்றக்கூடும் என்ற கவலையும் உள்ளது.


எனவே, நாட்டின் வளர்ச்சியைத் தக்கவைக்க இந்தியாவின் பெரிய இளம் மக்கள்தொகைக்கு நன்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், அது இன்னும் அதிகமாக இருக்கும் மாநிலங்களில் கருவுறுதல் விகிதத்தைக் குறைக்க இந்தியா பாடுபட வேண்டும். குறிப்பாக, இந்த மாநிலங்கள் பீகார், உத்தரபிரதேசம், மேகாலயா, ஜார்கண்ட் மற்றும் மணிப்பூர் போன்ற மாநிலங்களாகும்.


SOWP 2025 அறிக்கையானது, சுகாதாரம், கல்வி, ஆயுட்காலம், தாய் இறப்பு, பாலின அதிகாரமளித்தல் (கருவுறுதல் முடிவுகளின் மீதான கட்டுப்பாடு மற்றும் பிறப்பு கட்டுப்பாட்டு முறைகளின் பயன்பாடு) மற்றும் பொருளாதார நல்வாழ்வின் முன்னேற்றத்தின் மூலம் மக்கள்தொகை மாற்றத்தை இந்தியா நிர்வகித்துள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இப்போது, ​​அதிக கருவுறுதல் உள்ள பகுதிகளுக்கும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் இடையிலான வேறுபாட்டைக் குறைக்க, பரவலாக்கப்பட்ட முயற்சிகள் தேவை. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு, முந்தைய ஆண்டுகள் மற்றும் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 ஆகியவற்றின் ஆய்வுகள், பிறப்பு விகிதங்களைக் குறைக்க உள்ளடக்கிய வளர்ச்சி சிறப்பாகச் செயல்படுகிறது என்பதைக் காட்ட போதுமான ஆராய்ச்சி தெளிவுபடுத்துகிறது. இந்தியாவின் மக்கள்தொகை பிராந்தியங்களுக்கு இடையே மிகவும் வேறுபடுவதால், ஒற்றை தேசிய மக்கள்தொகைக் கொள்கையைக் கொண்டிருப்பது கடினம். தென் மாநிலங்கள் வயதான மக்கள்தொகையின் சவாலை எதிர்கொள்கின்றன. அவற்றின் வயதான மக்கள்தொகை தேசிய சராசரியான 7 சதவீதத்தை விட மிக அதிகம்.


Original article:
Share:

ஹைட்ரஜன் எரிபொருள் : சாம்பலில் இருந்து பசுமைக்கு படிப்படியாக மாறவும். -ரிச்சா மிஸ்ரா

 பசுமை ஹைட்ரஜனானது (Green hydrogen), தற்போது உற்பத்தி செய்வதற்கு விலை அதிகம். அதனால், சாம்பல் ஹைட்ரஜன் (grey hydrogen) உற்பத்தியில் கவனம் செலுத்துவது மிகவும் நடைமுறை விருப்பமாகும் (pragmatic option).


தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டம் (National Green Hydrogen Mission (NGHM)), என்பது மற்ற திட்டங்களைப் போலவே, பசுமை ஹைட்ரஜனுக்கு தொடக்கத்தில் முக்கியத்துவம் கொடுத்து, ஹைட்ரஜனில் இந்தியாவை உலகளாவிய முன்னணியில் ஆக்குகிறது. அரசாங்கமும் இதற்கு ஒரு பெரிய உந்துதலை அளிக்கிறது. இருப்பினும், பல சவால்கள் உள்ளன. குறிப்பாக, வழக்கமான விருப்பங்களுடன் ஒப்பிடும்போது பசுமை ஹைட்ரஜனின் விலை ஒரு பெரிய சவாலாகும்.


கொள்கை தேவைப்படுவதால், வணிகங்கள் சுத்திகரிப்பு நிலையங்களில் ஹைட்ரஜனைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன மற்றும் அவை சார்ந்த வழிப்பொருட்கள் (derivatives) ஏற்றுமதி செய்வதில் கவனம் செலுத்துகின்றனர். இந்திய ஹைட்ரஜன் சங்கம் (Hydrogen Association of India) மற்றும் ARUP ஆகியவற்றின் சமீபத்திய கூட்டு ஆய்வானது 'இந்தியாவில் இயக்கத்திற்கான ஹைட்ரஜனின் பங்கைத் திறத்தல்' என்ற கருப்பொருள் சுட்டிக்காட்டப்பட்டது.


இன்றைய இந்தியாவின் ஹைட்ரஜன் அமைப்பின் முக்கிய கேள்வி தெளிவாக உள்ளது. பசுமை ஹைட்ரஜனுக்கான உள்நாட்டு தேவைக்கான பயன்பாடு எங்கே? இங்கு உற்பத்தி செலவு அதிகமாக உள்ளது. இதில் முக்கியமாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் சமீபத்திய விலை நிர்ணயத்தின்படி, ஒரு கிலோவிற்கு சுமார் ₹400 உற்பத்தி செலவு அதிகமாக உள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது, விநியோகத்திற்கும் (supply), தேவைக்கும் (demand) இடையே உண்மையான மற்றும் அவசர ஏற்றத்தாழ்வாக உள்ளது.


இதன் காரணமாக, பல ஹைட்ரஜன் உற்பத்தியாளர்கள் பசுமை ஹைட்ரஜன் பொருட்களை ஏற்றுமதி செய்வதைப் பார்க்கிறார்கள். இவற்றில், பசுமை அம்மோனியா மற்றும் பசுமை மெத்தனால் ஆகியவை அடங்கும். இந்த தயாரிப்புகள் குறுகிய காலத்தில் மிகவும் பொருளாதார ரீதியாக சாத்தியமானவை. இது உலகளாவிய விதிகள் மற்றும் வாங்குபவர்கள் அவற்றை வாங்க தயாராக இருப்பதே இதற்குக் காரணமாகும்.


இருப்பினும், இந்தியா ஏற்றுமதிகளை மட்டுமே சார்ந்து இருக்க முடியாது. உண்மையிலேயே நிலையான ஹைட்ரஜன் பொருளாதாரத்தைப் பெற, உள்நாட்டிற்கான தேவை வளர வேண்டும். இதற்கு ஒரு நடைமுறையாக, படிப்படியான திட்டம் தேவை. இந்தியா உற்பத்தி முறைகளை அடையாளம் கண்டு ஹைட்ரஜனுக்கான பயன்பாடுகளின் வரம்பை அதிகரிக்க வேண்டும்.


போதுமான அளவு ஆய்வு செய்யப்படாத ஆனால் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரக்கூடிய ஒரு பகுதியளவு போக்குவரத்துக்கு ஹைட்ரஜனைப் பயன்படுத்துவது ஆகும்.


இயக்கம் திறன்


ஹைட்ரஜன் இயக்கத்தில் தெளிவான பங்கைக் கொண்டுள்ளது என்பதை ஆய்வு காட்டுகிறது. இது தூய்மையான மற்றும் நிலையான எரிபொருளுக்கு மாறுவதற்கான நீண்டகால வாய்ப்பை வழங்குகிறது.


ஹைட்ரஜனை பல மூலங்களிலிருந்து தயாரிக்கலாம். இவற்றில் முக்கியமாக புதைபடிவ எரிபொருள்கள் (fossil-based) மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (renewable) ஆகியவை அடங்கும். இது மிகக் குறைந்த உமிழ்வுகளுடன் அதிக ஆற்றலை வழங்குகிறது. எரிபொருள் செல் மின்சார வாகனங்களில் (Fuel Cell Electric Vehicles (FCEV)) பயன்படுத்தப்படும்போது இது குறிப்பாக உண்மை.


இந்திய ஹைட்ரஜன் சங்கத்தின் தலைவர் ஆர்.கே. மல்ஹோத்ரா மற்றும் ARUP இல் எரிசக்தி மற்றும் ஹைட்ரஜன் முன்னணி சச்சின் சக் ஆகியோரால் இந்த ஆய்வு குறிப்பிடப்பட்டது.


இந்தியாவின் பசுமை ஹைட்ரஜன் திட்டங்கள் மெதுவாக நகர்கின்றன. பசுமை அம்மோனியாவிற்கான உலகளாவிய தேவை குறித்து தெளிவு இல்லாததால் இது நிகழ்கிறது. மேலும், பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வது விலை உயர்ந்ததாக உள்ளது. இது பொருளாதார ரீதியாக கடினமாக்குகிறது மற்றும் அதன் விலை குறித்து நிச்சயமற்ற தன்மையை உருவாக்குகிறது.


ஆனால், நாம் ஏன் பசுமை ஹைட்ரஜனைப் பற்றி பேசுகிறோம்? ஏன் சாம்பல் ஹைட்ரஜனில் தொடங்கி, பின்னர் நீலத்திற்கு நகர்ந்து, பின்னர் பசுமை நிறத்தை அடையக்கூடாது?


இந்த அறிக்கையின்படி, சாம்பல் ஹைட்ரஜன் மிகவும் பொதுவான வடிவம் மற்றும் இயற்கை எரிவாயு அல்லது மீத்தேன் மூலம் உருவாக்கப்படுகிறது. இது நீராவி சீர்திருத்த செயல்முறை (steam reforming) மூலம் செய்யப்படுகிறது. இது சுத்திகரிப்பாளர்கள் (Refiners) எளிதாக செய்ய முடியும்.


நீராவி சீர்திருத்தத்திலிருந்து உருவாகும் கார்பன் தொழில்துறை கார்பன் பிடிப்பு மற்றும் சேமிப்பு (Carbon Capture and Storage (CCS)) மூலம் கைப்பற்றப்பட்டு நிலத்தடியில் சேமிக்கப்படும் போதெல்லாம் ஹைட்ரஜன் 'நீலம்' (Blue) என்று பெயரிடப்படுகிறது. தொழில்கள் முழுவதும் CSS பல்வேறு நிலைகளில் முயற்சி செய்யப்படுகிறது.


“சுத்தமான ஹைட்ரஜன்” (clean hydrogen) என்றும் அழைக்கப்படும் பசுமை ஹைட்ரஜன், சுத்தமான ஆற்றலைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இந்த ஆற்றல் சூரிய சக்தி அல்லது காற்றாலை போன்ற கூடுதல் புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து வருகிறது. இந்த செயல்முறை தண்ணீரை ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாகப் பிரிக்கிறது. இந்தப் பிளவு மின்னாற்பகுப்பு (electrolysis) என்று அழைக்கப்படுகிறது. 


அறிக்கையின் படி, பசுமை ஹைட்ரஜன் இப்போது உற்பத்தி செய்யப்படும் அனைத்து ஹைட்ரஜனிலும் சுமார் 0.1% மட்டுமே உருவாக்குகின்றன. இந்த நேரத்தில், பசுமை ஹைட்ரஜன் தற்போது வெளிப்படையாக விலை உயர்ந்ததாக மல்ஹோத்ரா கூறுகிறார். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதன் பானிபட் சுத்திகரிப்பு (Panipat Refinery) நிலையத்திற்கு டெண்டர் செயல்முறை மூலம் ஒரு கிலோவிற்கு ₹397 அடிப்படை விலையைக் கண்டறிந்தது. இவை, விநியோகம் மற்றும் விநியோகத்திற்காக கூடுதல் செலவுகள் சேர்க்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.


"பசுமை ஹைட்ரஜனை இப்போது ஒரு கிலோவிற்கு ₹450 க்கும் குறைவாக வழங்க முடியாது" என்று அவர் கூறினார். பசுமை ஹைட்ரஜனின் இந்த விலை சரியான நேரத்தில் குறையும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் கூறினார்.


இதற்கிடையில், சாம்பல் ஹைட்ரஜனைப் பார்க்க மல்ஹோத்ரா பரிந்துரைத்தார். சுத்திகரிப்பு நிலையங்கள் உண்மையில் இயற்கை எரிவாயுவில் இருந்து சாம்பல் ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய முடியும், இது ஒரு கிலோவுக்கு ₹175-200 வரை விலை போகலாம் மற்றும் ஒரு கிலோ ₹250க்கு விற்கப்படுகிறது.


எனவே, ஹைட்ரஜனை ஒரு பிரபலமான எரிபொருளாக இந்தியா ஊக்குவிக்க விரும்பினால் சரியான அணுகுமுறை என்ன? ஹைட்ரஜனை மலிவு விலையில் வழங்குவதோடு, அதற்கான உள்கட்டமைப்பையும் உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது.


கட்டமைப்புக்கான அணுகுமுறை


பெரும்பாலான நிபுணர்கள் சாம்பல் ஹைட்ரஜனில் இருந்து நீல ஹைட்ரஜனுக்கும் பின்னர் பசுமை ஹைட்ரஜனுக்கும் மெதுவாக நகர்வதே சிறந்த வழி என்று நம்புகிறார்கள். மல்ஹோத்ரா மற்றும் சுக் போன்றோர் தங்கள் ஆய்வில் இதை ஒப்புக்கொள்கிறார்கள்.


இந்தியா இறுதி இலக்காக பசுமை ஹைட்ரஜனை இலக்காகக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், போக்குவரத்தில் ஹைட்ரஜனுக்கு மாறுவதை விரைவுபடுத்த, ஒரு நடைமுறையாக, படிப்படியான திட்டம் தேவை. வெவ்வேறு பகுதிகள் மற்றும் வாகன வகைகளுக்கு உள்கட்டமைப்பு, செலவுகள் மற்றும் தொழில்நுட்ப தயார்நிலைக்கு வெவ்வேறு தேவைகள் உள்ளன என்பதை ஆய்வு விளக்குகிறது.


இதன் காரணமாக, இந்தியா "பல வண்ண ஹைட்ரஜன் உத்தியை" (multi-colour hydrogen strategy) பயன்படுத்த வேண்டும். இதன் பொருள் சாம்பல், நீலம் மற்றும் பசுமை ஹைட்ரஜனை திட்டமிட்ட மற்றும் ஒழுங்கான முறையில் பயன்படுத்துவதாகும்.


போக்குவரத்தில் ஹைட்ரஜனைப் பயன்படுத்துவதற்கு சாம்பல் ஹைட்ரஜன் ஒரு முக்கியமான தொடக்கப் புள்ளியாக இருக்கலாம். கார்பன் உமிழ்வைக் குறைக்க விரும்பும் மக்களுக்கு இது ஒரு இலக்காகும்.


மாற்றியமைக்கப்பட்ட ஹைட்ரஜன் உள் எரிப்பு இயந்திரங்கள் (internal combustion engines (ICE)) கொண்ட கனரக வாகனங்களிலும் (trucks) பிற ஆரம்ப சோதனைத் திட்டங்களிலும் சாம்பல் ஹைட்ரஜனைப் பயன்படுத்தலாம் என்று ஆய்வு கூறுகிறது. இந்தத் திட்டங்கள் ஏற்கனவே கிடைக்கக்கூடிய தொழில்துறை சாம்பல் ஹைட்ரஜனைப் பயன்படுத்துகின்றன.


இந்த வழியில் சாம்பல் ஹைட்ரஜனைப் பயன்படுத்துவது ஆரம்பகால தேவையை உருவாக்க உதவுகிறது. இது, ஆரம்ப செலவுகளைக் குறைக்கிறது மற்றும் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை மக்கள் கற்றுக்கொள்ள உதவுகிறது.


நடுத்தர ல பயன்பாட்டிற்கு நீல ஹைட்ரஜன் முக்கியத் தேர்வாக இருக்க வேண்டும். இது H₂ ICE வாகனங்கள் மற்றும் எரிபொருள் செல் மின்சார வாகனங்கள் (FCEV) இரண்டிற்கும் குறிப்பாக நல்லது.


நீல ஹைட்ரஜன் உமிழ்வை நிறையக் குறைக்கிறது மற்றும் கார்பன் பிடிப்பு மற்றும் சேமிப்பை (carbon capture and storage (CCS)) ஆதரிக்கும் உள்கட்டமைப்புடன் செயல்படுவதால் இது மிகவும் எளிதாக வளர முடியும்.


பின்னர் பசுமை ஹைட்ரஜன் வருகிறது. நகர்ப்புற வழிதடங்கள், ஏற்றுமதி சார்ந்த ஹைட்ரஜன் மையங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து போன்ற ESG-உணர்திறன் பயன்பாடுகள் போன்ற உயர்-பாதிப்பு மண்டலங்களில் இது உத்திரீதியாக ஒதுக்கப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டும். அதே நேரத்தில், எலக்ட்ரோலைசர் திறன் (electrolyzer capacity) மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒருங்கிணைப்பை அதிகரிக்க வேண்டும் என்று ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.


ஹைட்ரஜனை உற்பத்தி செய்வது திட்டத்தின் ஒரு பகுதியாகும். மற்றொரு முக்கிய பகுதி எரிபொருள் நிரப்பும் உள்கட்டமைப்பை உருவாக்குவதாகும். ஹைட்ரஜன் அன்றாட வாழ்க்கையில் வழக்கமான எரிபொருளாக மாற வேண்டுமானால் இது அவசியம்.


இந்த ஆய்வு ஐந்து முனை எரிபொருள் நிரப்பும் உத்தியை முன்மொழிகிறது. 


1. கதி சக்தி மாஸ்டர் திட்டத்தில் ஹைட்ரஜனைச் சேர்க்கவும்.

2. நிபந்தனைக்குட்பட்ட நம்பகத்தன்மை இடைவெளி நிதி (viability gap funding (VGF)) மற்றும் பொது-தனியார் கூட்டாண்மைகளைப் பயன்படுத்தவும்.

3. ஹைட்ரஜன் பள்ளத்தாக்குகள் எனப்படும் ஹைட்ரஜன் கிளஸ்டர்களை வெளியிடவும்.

4. உரிமையாளர்கள் மற்றும் நங்கூர மாதிரிகள் போன்ற புதிய உரிமை மாதிரிகளை உருவாக்கவும்.

5. உத்திக்கான உரிமம் மூலம் உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கவும்.


ஹைட்ரஜன் அடுத்த முக்கிய எரிபொருளாக மாற வேண்டுமானால், சவால் பெரியது. இப்போது ஒரு தெளிவான உத்தி மிகவும் முக்கியமானது.


Original article:
Share:

மக்கள்தொகை கொள்கை உந்துதலுடன் மகப்பேறு தேர்வுகளை சமநிலைப்படுத்துங்கள். -ஜ்வாலிகா பாலாஜி

 இரண்டாவது குழந்தைக்குப் பிறகு மகப்பேறு சலுகைகள் பறிக்கப்படுவதை எதிர்த்து, உச்ச நீதிமன்றம் பெண்களின் மகப்பேறு உரிமைகளைப் பாதுகாத்துள்ளது. 


கடந்த மாதம், கே. உமாதேவி vs  தமிழ்நாடு அரசு (K Umadevi vs Government of Tamil Nadu) வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியது. இது தமிழக அரசு விதியை (FR 101(a)) புரிந்துகொள்ளும் விதத்தை மாற்றியது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட பெண் அரசு ஊழியர்கள் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு பெற முடியாது என்று இந்த விதி முன்பு கூறியது. இது தவறு என்று நீதிமன்றம் கூறியது. ஒரு பெண் தனது மூன்றாவது குழந்தையைப் பெற்றிருக்கிறாள் என்பதற்காக மகப்பேறு விடுப்பு மறுக்கப்பட முடியாது. நீதிமன்றம் இந்த மாநில விதியை மத்திய மகப்பேறு சலுகைச் சட்டம் (Maternity Benefit Act), 1961 உடன் ஒப்பிட்டது. இது ஒரு பெண் எத்தனை முறை மகப்பேறு விடுப்பு எடுக்கலாம் என்பதைக் கட்டுப்படுத்தாது.


ஒரு நபரின் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பாதுகாக்கும் அரசியலமைப்பின் பிரிவு 21யை அடிப்படையாகக் கொண்டு நீதிமன்றம் இந்த முடிவை எடுத்தது. சுசிதா ஸ்ரீவஸ்தவா vs சண்டிகர் நிர்வாகம் (Suchita Srivastava vs  Chandigarh Administration) போன்ற முந்தைய வழக்குகளில், ஒரு பெண்ணின் குழந்தைகளைப் பெறுவதற்கான உரிமை (அல்லது பெறாமல் இருப்பது) அவளுடைய தனிப்பட்ட சுதந்திரத்தின் ஒரு பகுதி என்று நீதிமன்றம் கூறியது. இந்த வழக்கில், மகப்பேறு ஆதரவிற்கான அணுகலை பறிப்பது ஒரு பெண்ணின் கண்ணியத்தைப் பாதிக்கிறது என்றும் நீதிமன்றம் கூறியது.


உமாதேவி வழக்கில், நீதிமன்றம் சட்டத்தைப் புரிந்துகொள்ள நடைமுறை மற்றும் நோக்கமான வழியைப் பயன்படுத்தியது. மகப்பேறு சலுகைகள் பற்றிய முக்கிய விதிகளை மகப்பேறு சலுகைச் சட்டம் (Maternity Benefit Act (MBA)) வழங்குகிறது என்றும், எந்தவொரு மாநில சட்டமும் இந்த முக்கிய சட்டம் மற்றும் அரசியலமைப்பின் உணர்வைப் பின்பற்ற வேண்டும் என்றும் அது கூறியது.


நீதிமன்றத்தின் முடிவை ஆதரிக்கும் முக்கியமான உண்மைகள் இருந்தன. முதலாவதாக, தீபிகா சிங் வழக்கைப் போலவே, உமாதேவியின் கர்ப்பம் அரசாங்கத்தில் பணிபுரியும் போது அந்தப் பெண்ணின் முதல் உயிரியல் கர்ப்பமாகும். இரண்டாவதாக, அவளுக்கு முந்தைய திருமணத்திலிருந்து இரண்டு குழந்தைகளின் பராமரிப்பு உரிமையைப் பெறவில்லை. எனவே இந்த கர்ப்பம் அவருக்கு மிகவும் முக்கியமானது.


இந்த உண்மைகளின் காரணமாக, இது அவளுடைய மூன்றாவது குழந்தை என்பதற்காக அவளை மோசமாக நடத்துவது நியாயமற்றது என்று நீதிமன்றம் கருதியது. பெண்கள் தங்கள் மகப்பேறுத் தேர்வுகளுக்காக தண்டிக்கப்படக்கூடாது என்று நீதிமன்றம் கூறியது. மகப்பேறு சலுகைகள் என்பது பெண்களை தாய்மார்களாகவும் பணிபுரியும் நிபுணர்களாகவும் மதிக்க வேண்டும் என்பதாகும்.


மக்கள்தொகை கட்டுப்பாட்டுக் கொள்கைகளில் அடிக்கடி பயன்படுத்தப்படும் "இரண்டு குழந்தைகள் விதி" (two-child norm) பற்றி நீதிமன்றம் விவாதித்தது. மக்கள்தொகை வளர்ச்சி குறித்த மாநிலத்தின் கவலைகளை நிராகரிப்பதற்குப் பதிலாக, இந்த இலக்குகள் அரசியலமைப்பு உரிமைகளுடன் சமநிலைப்படுத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. மக்கள்தொகை கட்டுப்பாடு மற்றும் மகப்பேறு சலுகைகள் ஒன்றாகச் செயல்பட வேண்டும் என்று அது கூறியது. ஆனால், மக்கள்தொகை கட்டுப்பாட்டின் முழுப் பொறுப்பையும் பெண்களின் வேலை உரிமைகளைப் பறிப்பதன் மூலம் அவர்கள் மீது வைப்பது தவறு என குறிப்பிட்டது.


இரண்டு குழந்தைகள் வரம்பைக் கொண்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டுமல்ல. இந்தியா முழுவதும் உள்ள பல அரசு வேலை விதிகளில் இதே போன்ற நிபந்தனைகள் உள்ளன. உதாரணமாக, 2018ஆம் ஆண்டில், மூன்றாவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு மறுக்கும் ஒரு விதியை உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் பரிசீலித்தது. உர்மிளா மாசி vs உத்தரகண்ட் மாநிலம் (Urmila Masih vs. State of Uttarakhand) வழக்கில், நீதிமன்றம் இந்த விதியை ரத்து செய்தது. மகப்பேறு சலுகைகளை உறுதி செய்யும் சட்டத்திற்கும், பெண்களுக்கு நியாயமான மற்றும் மனிதாபிமான வேலை நிலைமைகள் குறித்த அரசியலமைப்பின் வாக்குறுதிக்கும் இந்த விதி எதிரானது என்று அது கூறியது.


2019ஆம் ஆண்டில், உயர்நீதிமன்ற அமர்வு, ஊர்மிளா மாசி வழக்கில் முந்தைய தீர்ப்பை ரத்து செய்தது. மகப்பேறு விடுப்பு என்பது சேவை விதிகளால் வழங்கப்படும் சட்டப்பூர்வ உரிமை என்றும், அவை அடிப்படை உரிமை அல்ல என்றும், மகப்பேறு சலுகைச் சட்டம் (MBA) அரசு ஊழியர்களுக்கான மாநில விதிகளை தானாகவே மாற்றாது என்றும் அது கூறியது. முந்தைய நீதிபதி இந்த முடிவை ஆதரிக்க வழிகாட்டுதல் கொள்கைகளை (சட்டப்பூர்வமாக செயல்படுத்த முடியாதவை) பயன்படுத்தியதற்காகவும் அமர்வு விமர்சித்தது. மேலும், இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ள பெண்களுக்கு சலுகைகளை மறுக்கும் விதியை மீண்டும் கொண்டு வந்தது.


பின்னர், உமாதேவி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் தாராளமான பார்வையை ஆதரித்தது. மகப்பேறுத் தேர்வுகள் அரசியலமைப்பின் பிரிவு 21-ன் கீழ் வாழ்வதற்கான அடிப்படை உரிமையின் ஒரு பகுதியாகும் என்று அது கூறியது. இதன் அடிப்படையில், மூன்றாவது குழந்தைக்குக் கூட பெண்கள் மகப்பேறு சலுகைகளைப் பெற வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. இரண்டுக்கும் மேற்பட்ட உயிரியல் குழந்தைகளைக் கொண்ட தாய்மார்களுக்கு சலுகைகளை மறுக்கும் மாநில விதிகளை சவால் செய்ய இது ஒரு வழியை உருவாக்குகிறது.


இருப்பினும், உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டின் விதியை (FR 101(a)) ரத்து செய்யவில்லை அல்லது இதே போன்ற விதிகளை மாற்ற மற்ற மாநிலங்களைக் கேட்கவில்லை. இதன் பொருள் உத்தரகண்ட் போன்ற மாநிலங்களில் இன்னும் சட்ட நிச்சயமற்ற தன்மை இருக்கலாம். உமாதேவி ஒரு முக்கியமான முன்னேற்றப் படியாக இருந்தாலும், அதன் முழு தாக்கமும் அரசாங்க நடவடிக்கையைப் பொறுத்தது. சட்டங்கள் அல்லது விதிகளில் மாற்றங்கள் இல்லாமல், அத்தகைய மாநிலங்களில் உள்ள பெண்கள் மகப்பேறு சலுகைகளைப் பெற நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும். இது பலருக்கு விலை உயர்ந்ததாகவும், மெதுவாகவும், கடினமாகவும் இருக்கலாம்.


மாநில அரசுகள் மகப்பேறு சலுகைகளை இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே என்று வரையறுக்கும் விதிகளை அவசரமாக மறுபரிசீலனை செய்து மாற்ற வேண்டும். அதே நேரத்தில், அனைத்து நீதிமன்றங்களும் உமாதேவி தீர்ப்பைப் பின்பற்ற வேண்டும். இது மகப்பேறுத் தேர்வுகளைச் செய்வதற்கும் சரியான மகப்பேறு பராமரிப்பைப் பெறுவதற்கும் பெண்களின் உரிமை அரசியலமைப்பின் ஒரு பகுதியாகும் என்று கூறுகிறது.


இந்தியாவில், தாய்மை பெரும்பாலும் வார்த்தைகளில் பாராட்டப்படுகிறது. ஆனால், கொள்கைகளில் முழுமையாக ஆதரிக்கப்படவில்லை. மூன்றாவது குழந்தை கூட முதல் இரண்டு குழந்தைகளைப் போலவே அரசாங்கத்திடமிருந்து அதே கவனிப்பையும் பாதுகாப்பையும் பெற வேண்டும் என்பதை உமாதேவி வழக்கு தெளிவுபடுத்தியது. இந்த முக்கியமான மாற்றத்தை அரசாங்கம் உண்மையில் பின்பற்றுமா என்பதுதான் இப்போது பெரிய கேள்வி.


ஜ்வாலிகா பாலாஜி, விதி சட்டக் கொள்கை மையத்தின் (Vidhi Centre for Legal Policy) ஆராய்ச்சியாளர்.


Original article:
Share:

பான் காலநிலை மாற்ற மாநாடு தொடங்குகிறது : தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்

 பான் காலநிலை மாற்ற மாநாடு என்பது காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டின் (UNFCCC) கீழ் நடைபெறும் வருடாந்திர இடைக்கால கூட்டமாகும். இது 1992-ல் கையெழுத்திடப்பட்ட ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் காலநிலை பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு அடித்தளத்தை வழங்கியுள்ளது.


ஜெர்மனியின் பான் (Bonn) நகரில் 5,000க்கும் மேற்பட்ட அரசு பிரதிநிதிகள் மற்றும் பங்குதாரர்கள் கூடியிருந்த நிலையில், ஆண்டுதோறும் பான் பருவநிலை மாற்ற மாநாடு திங்கள்கிழமை (ஜூன் 16) தொடங்கியது. ஜூன் 26-ம் தேதி முடிவடையும் இந்தக் கூட்டத்தில், பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க நிதி திரட்டுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.


பான் காலநிலை மாற்ற மாநாடு என்றால் என்ன?


பான் காலநிலை மாற்ற மாநாடு என்பது காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டின் (United Nations Framework Convention on Climate Change (UNFCCC)) கீழ் நடைபெறும் வருடாந்திர இடைக்கால கூட்டமாகும். இது 1992-ல் கையெழுத்திடப்பட்ட ஒரு சர்வதேச ஒப்பந்தம், இது காலநிலை பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு அடிப்படையை வழங்குகிறது. இந்த மாநாடு முறையாக UNFCCC துணை இயக்குநர்களின் (Subsidiary Bodies (SB)) அமர்வுகள் என்று அழைக்கப்படுகிறது. கட்சிகளின் வருடாந்திர மாநாட்டுடன் (Conference of the Parties (COP)), UNFCCC நடத்தும் ஒரே வழக்கமான காலநிலை உச்சிமாநாடு இதுவாகும்.


இதில் துணை இயக்குநர்களின் (SB) உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றன. இந்த குழுக்கள் UNFCCC-ன் நிர்வாக அமைப்புகளுக்கு உதவும் குழுக்கள் ஆகும். அவை காலநிலை மாற்ற ஒப்பந்தங்களை செயல்படுத்துவதிலும் மறுஆய்வு செய்வதிலும் உதவுகின்றன. இக்கூட்டத்தில் உள்நாட்டுப் பிரதிநிதிகள், சர்வதேச நிறுவனங்கள், விஞ்ஞானிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.


குறிக்கோள்கள்


காலநிலை பேச்சுவார்த்தைகளின் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் சார்ந்த அம்சங்களைப் பற்றி விவாதிக்க இந்த மாநாடு நடைபெறுகிறது. மேலும், COP-க்கான செயல் திட்டங்களை அமைக்கவும், இது வழக்கமாக நவம்பரில் நடைபெறும்.


ஹார்வர்ட் கென்னடி பள்ளியின் இணையதளத்தில் ஒரு அறிக்கையின்படி, "பானில் நடந்த பேச்சுவார்த்தைகளின் முடிவுகள் COP-ல் எடுக்கப்பட்ட முடிவுகளில் கடுமையாகப் பாதிக்கின்றன. துணை இயக்குநர்களில் (SB) செய்யப்பட்ட பரிந்துரைகள் COP-ல் உள்ள தரப்பினரால் செயல்படும் இறுதி முடிவுகளில் அடிக்கடி தோன்றும்" என்று ஹார்வர்ட் கென்னடி பள்ளியின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பான் காலநிலை மாநாடு முந்தைய COP-ல் நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்தங்களை செயல்படுத்துவது பற்றி விவாதிக்கப்படும் இடமாகும்.


முக்கிய பங்கு வகிக்கும் நபர்கள்


இந்தக் கூட்டத்தை UNFCCC-ன் துணை இயக்குநர்கள் தலைமை தாங்குகிறார்கள். UNFCCC-ல் இரண்டு நிரந்தர துணை இயக்குநர்கள் உள்ளனர். ஒன்று செயல்படுத்தலுக்கான துணை அமைப்பு (Subsidiary Body for Implementation (SBI)). மற்றொன்று, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைக்கான துணை இயக்குநர்கள் (Subsidiary Body for Scientific and Technological Advice (SBSTA)) ஆவர்.


UNFCCC நிர்வாக அமைப்புகள் தங்கள் முடிவுகளை மதிப்பிடுவதிலும் செயல்படுத்துவதை மதிப்பாய்வு செய்வதிலும் SBI உதவுகிறது. இது UNFCCC உடன்படிக்கையில் உள்ள வளரும் நாடுகளுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு குறித்த விவாதங்களையும் எளிதாக்குகிறது.


காலநிலை மாற்றம் தொடர்பான அறிவியல் அறிவு குறித்து SBSTA நிர்வாக அமைப்புகளுக்கு ஆலோசனை வழங்குகிறது. “இது IPCC-ல் உள்ள அறிவியல் ஆலோசகர்களுக்கும் COP-களில் கட்சி பிரதிநிதிகளில் பணியாற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் இடையிலான “இணைப்பாக” (link) செயல்படுகிறது” என்று ஹார்வர்ட் கென்னடி பள்ளியின் அறிக்கை கூறியது.


இந்த ஆண்டு செயல்திட்டம்


விவாதங்களின் போது முக்கியமான தலைப்புகளில் ஒன்றாக உலகளாவிய தகவமைப்பு இலக்கு (Global Goal on Adaptation - GGA) இருக்கும். இது, வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸுக்கு கீழே வைத்திருப்பது ஒரு உலகளாவிய தணிப்பு இலக்காக இருப்பது போல, தகவமைப்புக்கான பொதுவான உலகளாவிய இலக்கை அடையாளப்படுத்துவதற்கான முயற்சியாகும்.


GGA 2015 ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தத்தில் நிறுவப்பட்டிருந்தாலும், துபாயில் நடந்த COP28 வரை எந்தவொரு பெரிய முன்னேற்றமும் ஏற்படவில்லை. அங்கு, தகவமைப்புக்கான உலகளாவிய இலக்குகளை வரையறுக்கும் ஒரு கட்டமைப்பை கட்சிகள் ஏற்றுக்கொண்டன.


Original article:
Share:

இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய கூட்டாண்மை: கொந்தளிப்புக்கு நடுவில், ஒரு நிலைப்படுத்தும் சக்தி

 இன்றைய மாறிவரும் உலகில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி வரும் ஒரு வலுவான கூட்டாண்மையை இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் (EU) உருவாக்கி வருகின்றன. இந்த உறவை வலுப்படுத்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சமீபத்தில் பிரஸ்ஸல்ஸுக்கு பயணம் செய்தார். மேலும், பிரதமர் மோடியின் சைப்ரஸ் (Cyprus) பயணம் ஐரோப்பாவில் இந்தியாவின் வளர்ந்து வரும் ஆர்வத்தைக் காட்டுகிறது.


இந்த நெருக்கமான ஒத்துழைப்பு, டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றபோது காணப்பட்ட கணிக்க முடியாத கொள்கைகளுக்கு ஒரு பிரதிபலிப்பாகும். இதில் பாதுகாப்புவாதம் மற்றும் கூட்டணிகள் குறித்த சந்தேகங்கள் அடங்கும். இதன் காரணமாக, இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒரு நிலையான, விதிகள் சார்ந்த சர்வதேச அமைப்பை ஆதரிக்க இணைந்து செயல்பட விரும்புகின்றன.


இருப்பினும், இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவிலிருந்து விலகிச் செல்கின்றன என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. அமெரிக்கா இன்னும் அவர்களின் மிக முக்கியமான பொருளாதார மற்றும் இராஜதந்திர ரிதீயான நட்பு நாடாகும். அவர்கள் அந்த வலுவான உறவை வைத்திருக்க விரும்புகிறார்கள்.  அதே நேரத்தில் ஒருவருக்கொருவர் நெருக்கமான உறவுகளையும் வளர்த்துக் கொள்ள விரும்புகிறார்கள்.


கடந்த ஒரு வருடமாக, இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் தங்கள் உறவை மேம்படுத்தியுள்ளன. அவர்கள் ஒரு பெரிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் (Free Trade Agreement (FTA),) பணியாற்றி வருகின்றனர். இதை 2025-ஆம் ஆண்டின் இறுதிக்குள் முடிக்க அவர்கள் நம்புகிறார்கள். இந்த ஒப்பந்தம் வலுவான விநியோகச் சங்கிலிகளை உருவாக்குவதையும் நீண்டகால வளர்ச்சியை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


பல வருட மெதுவான முன்னேற்றத்திற்குப் பிறகு, இரு தரப்பினரும் இப்போது ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவர விரைவாக நகர்கின்றனர். இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (India-Middle East-Europe Economic Corridor (IMEC)) போன்ற பெரிய திட்டங்கள் பிராந்திய இணைப்புகளை மேம்படுத்துவதற்கும் புதுமைகளை அதிகரிப்பதற்கும் தங்கள் இலக்கைக் காட்டுகின்றன. மேம்பட்ட தொழில்நுட்பத்தில் இணைந்து பணியாற்றுவதிலும், பாதுகாப்பில் கூட்டாளராக இருப்பதற்கான வழிகளை ஆராய்வதிலும் அவர்கள் கவனம் செலுத்துகின்றனர்.


இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் (EU) தங்கள் உறவில் சில சவால்களை கவனமாகக் கையாள வேண்டும். முக்கிய பிரச்சினைகளில் ஒன்று ரஷ்யா. இந்தியா ரஷ்யாவுடன் நெருக்கமான பாதுகாப்பு உறவுகளைக் கொண்டுள்ளது மற்றும் உக்ரைனில் அதன் நடவடிக்கைகளை வெளிப்படையாக விமர்சிக்கவில்லை. மறுபுறம், ஐரோப்பா ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் நேரடியாகப் பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற போதிலும், இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் சித்தாந்தங்கள் குறித்து வாதிடுவதற்குப் பதிலாக நடைமுறையில் இணைந்து செயல்படத் தேர்ந்தெடுத்துள்ளன. ரஷ்யா மீதான தனது நிலைப்பாடு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை, மாறாக, வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் சீனா பற்றிய கவலைகளில் ஒத்துழைப்பில் கவனம் செலுத்துகிறது.


குறிப்பாக காஷ்மீரில் சமீபத்திய பதட்டங்களுக்குப் பிறகு, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் பிரஸ்ஸல்ஸ் பயணத்தின்போது பாகிஸ்தான் குறித்தும் விவாதிக்கப்பட்டது. தெற்காசியாவில் அமைதிப் பேச்சுவார்த்தைகளை EU ஆதரிக்கிறது, ஆனால், தன்னைத் தற்காத்துக் கொள்ளும் இந்தியாவின் உரிமையையும் மதிக்கிறது. எல்லைக்கு அப்பால் இருந்து பயங்கரவாதத்திற்கு எதிராகவும் அது பேசியுள்ளது.


பாகிஸ்தானுடனான பிரச்சினைகள் தங்கள் வளர்ந்துவரும் உறவைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்ள இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் (EU) விரும்புகின்றன. பல சக்திவாய்ந்த நாடுகளுடன் ஒரு உலகத்தை வடிவமைப்பதில் அவர்களின் கூட்டாண்மை மிகவும் முக்கியமானதாகி வருகிறது. இது ஒரு தற்காலிகத் திட்டம் மட்டுமல்ல, பொதுவான பொருளாதார இலக்குகள், ஜனநாயக மதிப்புகள் மற்றும் வலுவான பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு நீண்டகால உத்தி ஆகும்.


Original article:
Share:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஒரு சமூக பாதுகாப்புத் திட்டம் -ரோஷ்னி யாதவ்

 தற்போதைய செய்திகளில் ஏன்?


2025-26 நிதியாண்டின் முதல் பாதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGS)) கீழ் எவ்வளவு பணம் செலவிடப்படலாம் என்பதற்கு மத்திய நிதி அமைச்சகம் ஒரு வரம்பை நிர்ணயித்துள்ளது. இப்போது, ​​மொத்த ஆண்டு பட்ஜெட்டில் 60% மட்டுமே இந்தக் காலகட்டத்தில் பயன்படுத்த முடியும். முன்னதாக, அத்தகைய வரம்பு இல்லை. தொழிலாளர் சங்கங்கள் மற்றும் பொது சமூகக் குழுக்கள் இந்த முடிவைப் பற்றி கவலை கொண்டுள்ளன.


MGNREGS என்றால் என்ன?, இந்த செலவு வரம்பைப் பற்றி மக்கள் ஏன் கவலைப்படுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வோம்.


முக்கிய அம்சங்கள்:


1. MGNREGA என்பது உலகின் மிகப்பெரிய சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும். இது மக்களுக்கு வேலைகளை வழங்குவதன் மூலமும் வறுமையைக் குறைப்பதன் மூலமும் கிராமப்புற வாழ்க்கையை மேம்படுத்த உதவுகிறது. இது 2005ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தை (MGNREGA) அடிப்படையாகக் கொண்டது.


2. MGNREGA மக்களுக்கு வேலை பெறுவதற்கான சட்டப்பூர்வ உரிமையை வழங்குகிறது. முன்னதாக, அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ், மக்கள் தங்கள் வாழ்க்கையை சம்பாதிப்பதைத் தடுக்காமல் இருப்பதை மட்டுமே அரசாங்கம் உறுதி செய்ய வேண்டியிருந்தது. ஆனால் இந்தச் சட்டத்தின் மூலம், வேலை கேட்பவர்களுக்கு வேலை வழங்குவது அரசாங்கத்தின் தெளிவான கடமையாகும்.


3. குடும்பத்தில் பெரியவர்கள் எளிய உடல் உழைப்பைச் செய்யத் தயாராக இருந்தால் கிராமப்புற குடும்பங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 100 நாட்கள் வேலை வழங்குவதாக இது உறுதியளிக்கிறது.


4. இச்சட்டம் 15 நாட்களுக்குள் வேலை வழங்குவதை உறுதி செய்கிறது. இது கடினமான காலங்களில் ஏழை மக்களைப் பாதுகாக்கிறது. மேலும், தொழிலாளர்களில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கு பெண்களாக இருக்க வேண்டும்.


5. இச்சட்டம் 100 நாட்களுக்கு மேல் வேலை வழங்க அனுமதிக்கிறது. ஆனால், உண்மையில், பெரும்பாலான குடும்பங்களுக்கு 100 நாட்கள் மட்டுமே கிடைக்கிறது. சிறப்பு கோரிக்கை விடுக்கப்படாவிட்டால் அதிகாரப்பூர்வ NREGA கணினி அமைப்பு அதிக நாட்கள் நுழைய அனுமதிக்காது.


6. சில குடும்பங்களுக்கு 150 நாட்கள் வேலை கிடைக்கும். உதாரணமாக, வேறு எந்த தனியார் நிலமும் இல்லாத (வன உரிமைகள் தவிர) வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடி குடும்பங்களுக்கு 2016ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின் கீழ் கூடுதலாக 50 நாட்கள் வேலை கிடைக்கும்.


7. உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டபடி, வறட்சி அல்லது இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசாங்கம் கூடுதலாக 50 நாட்கள் வேலை வழங்க முடியும்.


MGNREGS செலவின வரம்பில் உள்ள சிக்கல்கள்


1. MGNREGS-க்கான செலவு கட்டுப்பாடுகள்


செலவினங்களைக் கட்டுப்படுத்த நிதி அமைச்சகத்தால் 2017ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மாதாந்திர/காலாண்டு செலவுத் திட்டம் (MEP/QEP) எனப்படும் அமைப்பின் கீழ் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் (MGNREGS) இப்போது சேர்க்கப்பட்டுள்ளது. முன்னதாக, MGNREGS இந்த அமைப்பின் ஒரு பகுதியாக இல்லை. ஏனெனில், இது தேவை அடிப்படையிலான திட்டம். இதன் பொருள் மக்களுக்குத் தேவைப்படும்போது வேலை கிடைக்கும் என்பதாகும்.


2. செலவு வரம்பில் உள்ள சிக்கல்கள்


(i) வேலையின் தேவையை மாற்றுதல்


MGNREGS என்பது கிராமப்புற மக்களுக்கு உதவுவதற்காக, குறிப்பாக மோசமான அறுவடைகள் அல்லது மோசமான வானிலை போன்ற கடினமான காலங்களில் மக்களுக்கு உதவுகிறது. ஆனால், MGNREGS-ன் கீழ் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை ஆண்டு முழுவதும் மாறிக்கொண்டே இருக்கும். இது பெரும்பாலும் விவசாய பருவங்கள் மற்றும் வானிலையைப் பொறுத்தது.


எடுத்துக்காட்டாக, வேலைக்கான தேவை பொதுவாக ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் அதிகமாக இருக்கும். மேலும் செப்டம்பரில் பருவமழை நடவு பருவத்திற்குப் பிறகும் அதிகமாக இருக்கும்.


இருப்பினும், அசாதாரண வானிலை, தாமதமான மழை போன்றவை  ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில்கூட அதிகமான மக்கள் வேலை தேட வழிவகுக்கும்.


2023ஆம் ஆண்டில், குறைந்த மழைப்பொழிவு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வேலை தேவையை 20% அதிகரிக்க வழிவகுத்தது. கடுமையான வறட்சி காரணமாக கர்நாடகா தனது வருடாந்திர MGNREGS பட்ஜெட்டில் 70%-க்கும் அதிகமாக ஆறு மாதங்களில் பயன்படுத்தியது.


தற்போதைய செலவு வரம்பு இதுபோன்ற எதிர்பாராத சூழ்நிலைகளுக்கு காரணமல்ல.


(ii) சட்ட கவலைகள்


செலவு மீதான இந்த வரம்பில் சட்ட சிக்கலும் உள்ளது.


சில அரசு திட்டங்கள் (PM-Kisan அல்லது LPG மானியம் போன்றவை) அரசாங்கத்தால் உருவாக்கப்படுகின்றன. மேலும், அவை புதிய அரசாங்கத்தால் மாற்றப்படலாம் அல்லது நிறுத்தப்படலாம்.


ஆனால், MGNREGS போன்ற பிற திட்டங்கள் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை அடிப்படையாகக் கொண்டவை. இந்தச் சட்டங்கள் மக்களுக்கு சில உரிமைகளை வழங்குகின்றன. MGNREGS-ன் கீழ் வேலை கோரும் உரிமை போன்றவை இதில் உள்ளன.


இந்தத் திட்டங்களை எப்படி நடத்துவது? என்பதை அரசாங்கம் முடிவு செய்ய முடியும் என்றாலும், சட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சட்ட உரிமைகளை அது புறக்கணிக்க முடியாது.


ஆனால், நிதி அமைச்சகத்தின் 60% செலவு வரம்பு, அந்த வரம்பை அடைந்தவுடன் MGNREGS-ன் கீழ் வேலை வழங்குவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. 



அரசு திட்டங்களில் காந்தியின் தத்துவம்


கடந்த ஆண்டுகளில், மகாத்மா காந்தியின் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்ற மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்கள், திட்டங்கள், விதிமுறைகள் மற்றும் செயல்களை மேற்கொண்டுள்ளன. MGNREGA, தூய்மை இந்தியா திட்டம் (Swachh Bharat Mission) மற்றும் இந்தியாவில் தயாரிப்போம் (Make in India) ஆகியவை காந்தியின் தத்துவத்தை எவ்வாறு உள்ளடக்கியது என்பதை அறிந்து கொள்வோம்.





1. தூய்மை இந்தியா திட்டம் (Swachh Bharat Mission): 


ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் சிறந்த சமூகத்திற்கும் தூய்மை முக்கியம் என்று மகாத்மா காந்தி நம்பினார். சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பது சாதி பாகுபாடு இல்லாத சமூகத்தை உருவாக்குவதற்கான ஒரு வழி என்று அவர் உணர்ந்தார். காந்தி, "ஒவ்வொருவரும் அவரவருக்கு துப்புரவாளர்" (Everyone is his own scavenger) என்று கூறினார். அதாவது, ஒவ்வொரு நபரும் தூய்மைக்கு பொறுப்பேற்க வேண்டும். நாகரிகமாக மாறுவதற்கு மேற்கத்திய நாடுகளிடமிருந்து உதவி தேவை என்ற எதிர்மறை பிம்பத்தை சரியான சுகாதாரம் அகற்ற உதவும் என்றும் அவர் நம்பினார்.


காந்தி, "சுயராஜ்யம் (Swaraj ) சுத்தமான, துணிச்சலான மக்களால் மட்டுமே அடைய முடியும்" என்றார்.


அவரது கருத்துக்களின் அடிப்படையில், இந்திய அரசாங்கம் அக்டோபர் 2, 2014 அன்று தூய்மை இந்தியா திட்டம் தொடங்கியது.  இந்த மிஷன் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் தூய்மையில் கவனம் செலுத்துகிறது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் நகர்ப்புற பகுதியைக் கையாளுகிறது. அதே நேரத்தில் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் கிராமப்புற பகுதியை நிர்வகிக்கிறது.


2. MGNREGA: கிராமப்புறங்களை மேம்படுத்துவதில் காந்தியின் நம்பிக்கையை இது உள்ளடக்கியது. இந்த முதன்மையான திட்டம் கிராமப்புற குடும்பங்களுக்கு பொருளாதார பாதுகாப்பை வழங்குகிறது மற்றும் கிராமங்களில் தன்னிறைவை மேம்படுத்துவதன் மூலம் அவர்களின் வாங்கும் திறனை அதிகரிக்கிறது.


3. இந்தியாவில் தயாரிப்போம் (Make in India): சுதந்திரப் போராட்டத்தின் போது காந்தி “சுதேசி” பற்றி பேசினார். இன்று, உலகமயமாக்கலின் காலக்கட்டத்தில், அரசாங்கத்தின் "இந்தியாவில் தயாரிப்போம்" முன்முயற்சியானது இந்தியாவில் உற்பத்தியை மேம்படுத்துவதையும், நாட்டை உலகளாவிய உற்பத்தி மையமாக நிறுவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சி காந்தியின் சுயசார்பு மற்றும் சுதேசியின் யோசனையை அடிப்படையாகக் கொண்டது. தூய்மையில் இருந்து உணவுப் பாதுகாப்பு, கல்வி மற்றும் உலகளாவிய வங்கியியல் வரையிலான அரசு திட்டங்கள் அனைத்தும் காந்தியின் உணர்வில் உள்ளன.



Original article:
Share:

டிஆக்ஸிரைபோநியூக்ளிக் அமிலம் (DNA) என்பது என்ன? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


  • ஒரே மாதிரியான இரட்டையர்களைத் தவிர, ஒவ்வொரு நபருக்கும் தனித்துவமான DNA உள்ளது. இது அவர்களின் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் காணப்படுகிறது. இறந்த உடல்களை அடையாளம் காண DNA மிகவும் துல்லியமான வழியாகும். குறிப்பாக, பெரிய விபத்துகளுக்குப் பிறகு அடையாளம் காண கடினமாக இருக்கும்போது பயன்படுகிறது.


  • ஒருவர் இறந்த பிறகு, அவர்களின் DNA உடைந்து போகத் தொடங்குகிறது. அதிக நேரம் கடந்துவிட்டால், DNAவைச் சோதிப்பது கடினமாகவோ அல்லது சாத்தியமற்றதாகவோகூட மாறக்கூடும். DNA எவ்வளவு விரைவாக உடைகிறது என்பது DNA எடுக்கப்பட்ட உடல் பகுதி மற்றும் உடல் வைக்கப்படும் நிலைமைகளைப் பொறுத்தது.


  • வெப்பமான மற்றும் ஈரப்பதமான இடங்களை விட குளிர் மற்றும் வறண்ட இடங்களில் DNA நீண்ட காலம் நீடிக்கும். எனவே, மாதிரிகளை விரைவாகச் சேகரித்து குளிர்ச்சியாகவும் உலர்வாகவும் வைத்திருப்பது முக்கியம். -20°C இல் உறைதல் சிறந்தது. தோல் அல்லது தசை போன்ற மென்மையான திசுக்களையும் 95% எத்தனாலில் சேமிக்க முடியும்.


  • எலும்புகள் மற்றும் பற்கள் போன்ற கடினமான திசுக்களைவிட மென்மையான திசுக்களில் DNA வேகமாக உடைகிறது. கடினமான திசுக்கள் DNAவை சிறப்பாகப் பாதுகாக்கின்றன. எனவே, புலனாய்வாளர்கள் பொதுவாக எலும்புகள் அல்லது பற்களிலிருந்து DNAவை எடுக்கிறார்கள்.


  • விமான விபத்துகளுக்குப் பிறகு, இடிபாடுகளிலிருந்து உடல் பாகங்களை சேகரிக்க வாரங்கள் ஆகலாம். ஆனால், 9/11 தாக்குதல்கள் போன்ற பெரிய பேரழிவுகளில், கிட்டத்தட்ட 3,000 பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து DNA மாதிரிகளைச் சேகரிக்க கிட்டத்தட்ட 10 மாதங்கள் ஆனது.


  • DNA யாருடையது என்பதைக் கண்டறிய, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரிடமிருந்து மாதிரிகள் எடுக்கப்படுகின்றன. பெற்றோரும் குழந்தைகளும் தங்கள் DNAவில் பாதியை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதன் மூலம் மாதிரிகள் பெறப்படுகின்றன.


உங்களுக்குத் தெரியுமா?


  • மாதிரிகளைச் சேகரித்த பிறகு, அடுத்த படி அவற்றிலிருந்து DNAவை எடுப்பதாகும். DNA எவ்வளவு சிறந்தது என்பதைப் பொறுத்து, விஞ்ஞானிகள் அதைப் பிரிக்க  பொருத்தமான முறையைத் தேர்வு செய்கிறார்கள்.


  • Short Tandem Repeat (STR)  பகுப்பாய்வு: இந்த முறை டிஎன்ஏவின் குறுகிய, மீண்டும் மீண்டும் வரும் பகுதிகளைப் பார்க்கிறது. இந்த மறுநிகழ்வுகள் ஒவ்வொரு நபரிடமும் வேறுபடுகின்றன. எனவே, அவை தனிநபர்களை அடையாளம் காண உதவுகின்றன. விஞ்ஞானிகள் இந்த பகுதிகளில் 15 அல்லது அதற்கு மேற்பட்டவற்றைப் காண்பதால், அவர்கள் குடும்ப உறவுகளை அதிக நம்பிக்கையுடன் சொல்ல முடியும்.

  • STRகள் நியூக்ளியர் DNAவில் (nuclear DNA) காணப்படுகின்றன. எனவே, இந்த சோதனை செயல்பட மாதிரியின் நியூக்ளியர் DNA நல்ல நிலையில் இருக்க வேண்டும்.


  • மைட்டோகாண்ட்ரியல் DNA ((mtDNA)) பகுப்பாய்வு: DNA சேதமடைந்தாலோ அல்லது காணாமல் போனாலோ, இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. mtDNA மைட்டோகாண்ட்ரியாவில் காணப்படுகிறது. இவை ஆற்றலை உற்பத்தி செய்யும் செல்லின் பாகங்கள் ஆகும். mtDNA மீட்டெடுப்பது எளிது. குறிப்பாக, பழைய அல்லது மோசமாகப் பாதிக்கப்பட்ட  ஒவ்வொரு செல்லிலும் இது பல பிரதிகளில் உள்ளது.


  • Y குரோமோசோம் பகுப்பாய்வு: மனிதர்களுக்கு X மற்றும் Y குரோமோசோம்கள் உள்ளன. ஆண்களுக்கு பொதுவாக ஒரு X மற்றும் ஒரு Y இருக்கும். பெண்களுக்கு இரண்டு X குரோமோசோம்கள் இருக்கும். இந்த முறை Y குரோமோசோமில் கவனம் செலுத்துகிறது. எனவே, ஆண் நபர்களை அடையாளம் காண இது பயனுள்ளதாக இருக்கும்.


  • ஒற்றை நியூக்ளியோடைடு பாலிமார்பிசம் (Single Nucleotide Polymorphism(SNP)) பகுப்பாய்வு: இந்த முறை பொதுவாக DNA மோசமாக சேதமடைந்திருக்கும் போது பயன்படுத்தப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் DNAவில் ஒரு எழுத்தில் (A, C, G, அல்லது T) ஏற்படும் மாற்றமே SNP ஆகும். மேலும், இந்த மாற்றம் ஒவ்வொரு நபரிடமும் வேறுபடும். SNPகள் ஒவ்வொரு நபருக்கும் தனித்துவமானவை என்பதால், பாதிக்கப்பட்டவர் பயன்படுத்தும் பல் துலக்குதல் அல்லது ஹேர் பிரஷ் போன்ற குறிப்பு மாதிரிகளுடன் ஒப்பிட்டு ஒருவரை அடையாளம் காண உதவும்.


Original article:

Share: