இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய கூட்டாண்மை: கொந்தளிப்புக்கு நடுவில், ஒரு நிலைப்படுத்தும் சக்தி

 இன்றைய மாறிவரும் உலகில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி வரும் ஒரு வலுவான கூட்டாண்மையை இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் (EU) உருவாக்கி வருகின்றன. இந்த உறவை வலுப்படுத்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சமீபத்தில் பிரஸ்ஸல்ஸுக்கு பயணம் செய்தார். மேலும், பிரதமர் மோடியின் சைப்ரஸ் (Cyprus) பயணம் ஐரோப்பாவில் இந்தியாவின் வளர்ந்து வரும் ஆர்வத்தைக் காட்டுகிறது.


இந்த நெருக்கமான ஒத்துழைப்பு, டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றபோது காணப்பட்ட கணிக்க முடியாத கொள்கைகளுக்கு ஒரு பிரதிபலிப்பாகும். இதில் பாதுகாப்புவாதம் மற்றும் கூட்டணிகள் குறித்த சந்தேகங்கள் அடங்கும். இதன் காரணமாக, இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒரு நிலையான, விதிகள் சார்ந்த சர்வதேச அமைப்பை ஆதரிக்க இணைந்து செயல்பட விரும்புகின்றன.


இருப்பினும், இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவிலிருந்து விலகிச் செல்கின்றன என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. அமெரிக்கா இன்னும் அவர்களின் மிக முக்கியமான பொருளாதார மற்றும் இராஜதந்திர ரிதீயான நட்பு நாடாகும். அவர்கள் அந்த வலுவான உறவை வைத்திருக்க விரும்புகிறார்கள்.  அதே நேரத்தில் ஒருவருக்கொருவர் நெருக்கமான உறவுகளையும் வளர்த்துக் கொள்ள விரும்புகிறார்கள்.


கடந்த ஒரு வருடமாக, இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் தங்கள் உறவை மேம்படுத்தியுள்ளன. அவர்கள் ஒரு பெரிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் (Free Trade Agreement (FTA),) பணியாற்றி வருகின்றனர். இதை 2025-ஆம் ஆண்டின் இறுதிக்குள் முடிக்க அவர்கள் நம்புகிறார்கள். இந்த ஒப்பந்தம் வலுவான விநியோகச் சங்கிலிகளை உருவாக்குவதையும் நீண்டகால வளர்ச்சியை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


பல வருட மெதுவான முன்னேற்றத்திற்குப் பிறகு, இரு தரப்பினரும் இப்போது ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவர விரைவாக நகர்கின்றனர். இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (India-Middle East-Europe Economic Corridor (IMEC)) போன்ற பெரிய திட்டங்கள் பிராந்திய இணைப்புகளை மேம்படுத்துவதற்கும் புதுமைகளை அதிகரிப்பதற்கும் தங்கள் இலக்கைக் காட்டுகின்றன. மேம்பட்ட தொழில்நுட்பத்தில் இணைந்து பணியாற்றுவதிலும், பாதுகாப்பில் கூட்டாளராக இருப்பதற்கான வழிகளை ஆராய்வதிலும் அவர்கள் கவனம் செலுத்துகின்றனர்.


இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் (EU) தங்கள் உறவில் சில சவால்களை கவனமாகக் கையாள வேண்டும். முக்கிய பிரச்சினைகளில் ஒன்று ரஷ்யா. இந்தியா ரஷ்யாவுடன் நெருக்கமான பாதுகாப்பு உறவுகளைக் கொண்டுள்ளது மற்றும் உக்ரைனில் அதன் நடவடிக்கைகளை வெளிப்படையாக விமர்சிக்கவில்லை. மறுபுறம், ஐரோப்பா ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் நேரடியாகப் பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற போதிலும், இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் சித்தாந்தங்கள் குறித்து வாதிடுவதற்குப் பதிலாக நடைமுறையில் இணைந்து செயல்படத் தேர்ந்தெடுத்துள்ளன. ரஷ்யா மீதான தனது நிலைப்பாடு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை, மாறாக, வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் சீனா பற்றிய கவலைகளில் ஒத்துழைப்பில் கவனம் செலுத்துகிறது.


குறிப்பாக காஷ்மீரில் சமீபத்திய பதட்டங்களுக்குப் பிறகு, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் பிரஸ்ஸல்ஸ் பயணத்தின்போது பாகிஸ்தான் குறித்தும் விவாதிக்கப்பட்டது. தெற்காசியாவில் அமைதிப் பேச்சுவார்த்தைகளை EU ஆதரிக்கிறது, ஆனால், தன்னைத் தற்காத்துக் கொள்ளும் இந்தியாவின் உரிமையையும் மதிக்கிறது. எல்லைக்கு அப்பால் இருந்து பயங்கரவாதத்திற்கு எதிராகவும் அது பேசியுள்ளது.


பாகிஸ்தானுடனான பிரச்சினைகள் தங்கள் வளர்ந்துவரும் உறவைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்ள இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் (EU) விரும்புகின்றன. பல சக்திவாய்ந்த நாடுகளுடன் ஒரு உலகத்தை வடிவமைப்பதில் அவர்களின் கூட்டாண்மை மிகவும் முக்கியமானதாகி வருகிறது. இது ஒரு தற்காலிகத் திட்டம் மட்டுமல்ல, பொதுவான பொருளாதார இலக்குகள், ஜனநாயக மதிப்புகள் மற்றும் வலுவான பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு நீண்டகால உத்தி ஆகும்.


Original article:
Share: