தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் நம்பிக்கை…

 குவாட் அமெரிக்க-இந்திய கூட்டாண்மையின் முக்கிய அங்கமாக மாறியுள்ளது. இருப்பினும், இந்தியாவின்  G-20 அமைப்பின் கூற்றுப்படி, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத்திற்கு அப்பாற்பட்ட பகுதிகளில் இந்தியாவுடன் இணைவதற்கான முயற்சிகளை அமெரிக்கா மேம்படுத்த வேண்டும்.


உலகளவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் போது, ​​அமெரிக்கா ஒரு வலுவான பொருளாதார நாடக உள்ளது. இது உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 26% மற்றும் உலகளாவிய சந்தை மதிப்பில் 44% ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இருப்பினும் இது உலக மக்கள்தொகையில் 4% மட்டுமே உள்ளது. இந்தியா 2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக ('Viksit Bharat') அதன் இலக்கை அடைய மற்றும் உலகளாவிய வல்லரசாகக் காணப்படுவதற்கு, இந்தியா அமெரிக்காவுடன் வலுவான பொருளாதார உறவுகளை வைத்திருப்பது முக்கியம்.


ஜப்பான், தென் கொரியா, தைவான் மற்றும் சீனா போன்ற நாடுகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் வளர்ந்தன. இந்தியா வெற்றிபெற அமெரிக்காவுடனான வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பில் கவனம் செலுத்த வேண்டும்.


பிரதமர் மோடியின் சமீபத்திய அமெரிக்க பயணம் வரலாற்று சிறப்பு மிக்கது. இது நல்ல எரிசக்தி, சுகாதாரம், தொழில்நுட்பம் மற்றும் இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பு ( Indo-Pacific Economic Framework (IPEF)) ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்தியாவின் தொழில்நுட்ப எதிர்காலத்தை வடிவமைக்க தொழில்நுட்ப தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார்.


பொது அணுவியல் (General Atomics) உடனான கூட்டாண்மை, செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு பகுப்பாய்வுகளில் இந்தியாவின் திறனைக் காட்டுகிறது. புதுமை வளர்ச்சியையும் வேலைகளையும் தூண்டுகிறது. அமெரிக்கா மூலம் இந்தியா புதுமையாக மாற கற்றுக்கொள்ள முடியும்.


பயன்பாட்டு ஆராய்ச்சி மற்றும் சந்தை சார்ந்த கண்டுபிடிப்புகளில் இந்தியா முதலீடு செய்ய வேண்டும். உயர்கல்வியில் தொழில் சார்ந்த திறன்களில் கவனம் செலுத்த வேண்டும். சிறந்த பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்ட ஆராய்ச்சி மையங்கள் முக்கியமானவை.


இந்தியா தனது முதல் தேசிய பாதுகாப்பு குறைமின்கடத்தி உற்பத்தி (semiconductor fabrication) ஆலையை அமைக்கிறது. இந்த திட்டத்திற்கு இந்தியா குறைமின்கடத்தி திட்டம் (India Semiconductor Mission) மற்றும் பாரத் செமி (Bharat Semi), 3-வது தொழில்நுட்பம் (3rdiTech) மற்றும் அமெரிக்க விண்வெளிப் படை (US Space Force) ஆகியவற்றின் கூட்டாண்மை ஆதரவு அளிக்கிறது. 


இந்த புதிய வசதி, 2025-ஆம் ஆண்டு முதல் அமெரிக்க ராணுவம், நாட்டுப் படைகள் மற்றும் இந்தியாவின் சொந்தப் பாதுகாப்பிற்கான மேம்பட்ட சில்லுகளை உருவாக்கும். இந்த வளர்ச்சி இந்தியா-அமெரிக்க கூட்டாண்மையை வலுப்படுத்தும் மற்றும் நீண்டகால இராஜதந்திர ஒத்துழைப்பை மேம்படுத்தும், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப நிலைமையை மாற்றும். 


குவாட் இந்தியா-அமெரிக்க கூட்டாண்மைக்கு மையமாக உள்ளது. டெலாவேர் குவாட் உச்சிமாநாடு இலவச இந்தோ-பசிபிக் அமைப்பிற்கான அவர்களின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியது.


வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுடன் மோடி தொடர்பு கொள்கிறார். கலாச்சார பரிமாற்றங்கள் மற்றும் கூட்டாண்மைகள் இந்தியா-அமெரிக்க உறவுகளை வலுப்படுத்த முடியும்.


பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் அமெரிக்கா முதலீடு செய்ய வேண்டும். இது இரு நாடுகளின் காலநிலை இலக்குகளுடன் ஒத்துப்போகிறது.


இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் இணைந்து செயல்பட ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது. அதை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பிரதமர் மோடியின் வருகை  ஒரு முக்கியமான படியாகும். சக்தி குறைமின்கடத்தி ஆலை (semiconductor plant at Shakti) இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்த உதவும். இந்த கூட்டாண்மை எதிர்காலத்தில் அதிக ஒத்துழைப்புகளுக்கு வழிவகுக்கும் மற்றும் மிகவும் நிலையான மற்றும் வளமான உலகத்தை உருவாக்க உதவும்.



Original article:

Share:

ரிசர்வ் வங்கி ஆளுநரின் பதவிக்காலத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் - டி.சி.ஏ சீனிவாச ராகவன்

 நீண்ட பதவிக்காலம் ஆளுநருக்கு மத்திய வங்கியின் நிறுவன சுயாட்சியைப் பாதுகாக்க ஆளுநருக்கு உதவும்.


ரிசர்வ் வங்கி ஆளுநராக உள்ள சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த காலத்தில், ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் தற்போதைய மூன்று மற்றும் இரண்டு ஆண்டுகள் அல்லது நேராக ஐந்து ஆண்டுகளை விட மிக நீண்ட பதவிக் காலத்தைக் கொண்டிருந்தனர்.

 

பல வளர்ந்த நாடுகளில் மத்திய வங்கித் தலைவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றுகிறார்கள். உதாரணமாக, ஆலன் கிரீன்ஸ்பான் 20 ஆண்டுகளாக  பணியாற்றினார். இங்கிலாந்து வங்கி ஆளுநர் ஜெர்மன் எட்டு ஆண்டுகள் பணியாற்றுகின்றனர். பிரெஞ்சு வங்கி ஆளுநர் ஆறு ஆண்டுகள் பணியாற்றுகிறார்.


ரிசர்வ் வங்கியின் முதல் நான்கு இந்திய ஆளுநர்களில், மூன்று பேர் ஆறு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பதவி வகித்துள்ளனர். 1937-ஆம் ஆண்டில் 20 மாதங்களுக்குப் பிறகு அவர் அரசாங்கத்துடன் உடன்படாததால் வெளியேறும்படி பதவி விலக கேட்டுக்கொண்டதால், அவ்வாறு வெளியேறிய முதல் ஆளுநர்ஆவார். அவர் நீண்ட விடுப்பில் இங்கிலாந்துக்கு சென்று எடுத்துவிட்டு திரும்பி வரவில்லை. 


1935-ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கியில் சேருவதற்கு முன்பு, இம்பீரியல் பேங்க் ஆஃப் இந்தியாவின் (Imperial Bank of India) நிர்வாக இயக்குநராக இருந்தார். அவருக்குப் பிறகு, ஒரு அதிகாரத்துவத்தை ஆளுநராக நியமிக்க அரசாங்கம் முடிவு செய்தது.  இது நீடித்த பாரம்பரியத்தைத் தொடங்கியது.

 

அவருக்குப் பிறகு இந்திய குடிமையில் பணி அதிகாரியான ஜான் டெய்லர் நியமிக்கப்பட்டார். மற்ற அனைத்து ஆளுநர்களும் நியமிக்கப்பட்ட அதே காரணத்திற்காக, அவர் நிதி அமைச்சகத்திலிருந்து அனுப்பப்பட்டார். 

 

அமைதியாக முறையில் செயல்படுதல்


இந்த பாரம்பரியம் இருபது ஆண்டுகள் நீடித்தது. 1958-ஆம் ஆண்டில், நிதியமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி, கவர்னர் பெனகல் ராமா ராவுக்கு அவரது பணிகளை கடினமாக்கினார். ராமா ​​ராவ் முதல் ஆளுநரப் போல் ராஜினாமா செய்தார்.


டெய்லர் தனது 46-வது வயதில் ஆளுநரானார். மேலும், ஐந்து ஆண்டுகளுக்கு மீண்டும் நியமிக்கப்பட்ட பிறகு 1943-ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் இறந்தார். அவர் 10 ஆண்டுகள் பதவி வகித்திருக்கலாம்.  அவரது பணிக்காலத்தில் சிறப்பான பாராட்டுகளைப் பெற்றார். 


டெய்லருக்குப் பதிலாக துணை ஆளுநரும் இந்திய குடிமையில் பணி  அதிகாரியுமான சிடி தேஷ்முக் நியமிக்கப்பட்டார். தேஷ்முக் 1950-ஆம் ஆண்டில், சப்தர்ஜங் சாலையில் வசித்து வந்தார். இந்த வீடு பின்னர் 1964-ல் இந்திரா காந்திக்கு வழங்கப்பட்டது. தேஷ்முக் 1950-ஆம் ஆண்டு வரை ஏழு ஆண்டுகள் கவர்னராக இருந்தார். பின்னர் அவர் நிதி அமைச்சரானார்.


ஒரு ஆங்கிலேயரை ஆளுநராக்க  அரசு விரும்பியது. ரிசர்வ் வங்கி இந்த முறையை நிறுத்தியது. 1940-ஆம் ஆண்டுகளில் ரிசர்வ் வங்கி எவ்வளவு சுதந்திரமாக இருந்தது என்பதை இது காட்டுகிறது.


தேஷ்முக் அரசாங்கத்தின் தேவைகளை கவனத்தில் வைத்திருந்தார். ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தைப் பாதுகாப்பது குறித்து நிதித் துறைக்கு ஒருமுறை கடிதம் எழுதினார்.


1956-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த முறை மாறியது. அரசியல்வாதிகளுக்கு அதிக ஒத்துழைப்பு தேவைப்பட்டதால் ரிசர்வ் வங்கி ஆளுநரின் பங்கு அதிகரித்தது.


தேஷ்முக் நிதியமைச்சராக இருந்தபோதும், பெனகல் ராமா ராவ் ஆளுநராக இருந்தபோதும் சிறப்பாக செயல்பட்டது. ராமா ​​ராவ் 1950-ஆம் ஆண்டு முதல் எட்டு ஆண்டுகள் பணியாற்றினார். தேஷ்முக் 1956-ஆம் ஆண்டில் பம்பாய் ராஜினாமா செய்தார்.


தேஷ்முக்கிற்குப் பதிலாக கிருஷ்ணமாச்சாரி நியமிக்கப்பட்டார். ஒரு வருடத்தில் அவருக்கும் ராமராவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.  ஜவஹர்லால் நேரு, ராமா ராவிடம் இன்னும் ஒத்துழைக்கச் சொன்னார். நேரு விரும்பிய ரிசர்வ் வங்கி தேசியமயமாக்கலை ராமா ராவ் எதிர்த்தார்.


ராமா ​​ராவ் கிருஷ்ணமாச்சாரியுடன் பணியாற்ற முயற்சித்தார். ஆனால், அவருக்கு அது  மிகவும் கடினமாக இருந்தது. அவர் 1958-ஆம் ஆண்ல் ராஜினாமா செய்தார்.


எட்டு வருட காலம்

    

தற்போதைய 3 + 2 ஆண்டுகள் முறையானது முதல் மூன்று ஆண்டுகளில் சில ஆளுநர்களை கவலையடையச் செய்கிறது. ஏனெனில், அவர்கள் இரண்டு ஆண்டு நீட்டிப்பை விரும்புகிறார்கள். இது அவர்கள் அதிகமாக ஒத்துழைக்க வழிவகுக்கும்.


ஆளுநர்கள் ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் நியமிக்கப்பட்டுள்ளனர். "சிறந்த" ஆளுநரை எது வரையறுக்கிறது என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். அவர்கள் அதிகமாக ஒத்துழைக்கிறார்கள். எவ்வாறாயினும், அனைத்து சிறந்த ஆளுநர்களும் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.


எது ‘சிறந்தது’ என்று நீங்கள் கேட்கலாம். பதில்கள் மாறுபடும். ஆனால் பதில் எதுவாக இருந்தாலும் இரண்டு விஷயங்கள் முக்கியம். ஒன்று, ஆளுநரின் தனது விருப்பு வெறுப்புகளை  தினமும் காலையில் வீட்டில் விட்டுவிட வேண்டும். இரண்டு, அவர் வீடு திரும்பும் வரை பொது அறிவு மேலோங்க வேண்டும். இவை இரண்டும் 'சிறந்தது' என்பதற்கு தேவையான மற்றும் போதுமான விளக்கங்கள் உள்ளன.



Original article:

Share:

அனைவருக்குமான அடிப்படை வருமானம் Universal Basic Income (UBI) பற்றிய ஆதரவான வாதங்கள் -முனேஷ் சூட்

 அனைவருக்குமான அடிப்படை வருமானம் Universal Basic Income (UBI) வறுமை மற்றும் சமூக பாதுகாப்பு இடைவெளிகளை குறைக்க முடியும். தற்போதுள்ள மானியங்கள் நிதி இடத்தை உருவாக்க அனைவருக்குமான அடிப்படை வருமானத்திற்கு (UBI) திருப்பி விடப்படலாம். 


இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க மக்கள்தொகை மாற்றத்தின் விளிம்பில் உள்ளது. அதன் மக்கள்தொகையில் 65 சதவீதத்திற்கும் அதிகமானோர் 35 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார். இது உழைக்கும் வயதினரின் மக்கள்தொகையை சார்ந்துள்ள மக்களை விட அதிகமாக இருக்கும் நேரம். ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (United Nations Population Fund (UNFPA)) இந்த மக்கள்தொகை ஈவுத்தொகை 2040-ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என்று கூறுகிறது. இது பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும், வறுமையைக் குறைக்கவும் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்தவும் இந்தியாவுக்கு ஒரு சிறப்பு வாய்ப்பை வழங்குகிறது.


இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இருந்தபோதிலும், இன்னும் சவால்கள் உள்ளன. வேலை உருவாக்கம், தொழிலாளர் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவை இதில் அடங்கும். இந்த சூழலில், அனைவருக்குமான அடிப்படை வருமானம் (UBI) ஒரு பயனுள்ள கொள்கையாக செயல்பட முடியும். நன்கு கட்டமைக்கப்பட்ட அனைவருக்குமான அடிப்படை வருமானம் (UBI) ஒரு பாதுகாப்பு முறையை வழங்கலாம், சேர்ப்பதை ஊக்குவிக்கலாம் மற்றும் வளர்ச்சியின் நன்மைகள் மிகவும் நியாயமான முறையில் பகிரப்படுவதை உறுதிசெய்யலாம்.


இந்தியாவின் மக்கள்தொகையின் ஈவுத்தொகை கால உணர்திறன் கொண்டது. முழுமையாகப் பயனடைய, இந்தியாவின் உழைக்கும் வயது மக்கள் தரமான கல்வி, வேலைகள் மற்றும் திறன்களை அணுக வேண்டும். காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு (PLFS) (2020-21) தரவு தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தை 41.6 சதவீதமாகக் காட்டுகிறது. வேலை வளர்ச்சியின் பெரும்பகுதி முறைசாரா துறையில் அதிகமாக காணப்படுகிறது. அங்கு ஊதியங்கள் குறைவாக உள்ளன. மேலும் வேலைக்கான பாதுகாப்பு குறைவாக உள்ளது. மேலும், இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிப்பதற்கான மையம் (CMIE) ஜூலை 2024 இல் 7.95 சதவீத வேலையின்மை விகிதத்தை அறிவித்தது. இது இளைஞர்களின் வேலையின்மையை அதிகமாக இருப்பதை குறிப்பிடுகிறது. இலக்குக்கான தலையீடுகள் இல்லாமல், கட்டமைப்பு வேலையின்மை மற்றும் அதிகரித்து வரும் வருமான சமத்துவமின்மை ஆகியவை நீண்டகால பிரச்சினைகளாக மாறக்கூடும். 


திறன் இந்தியா (Skill India) மற்றும் தன்னிறைவு இந்தியா (Atmanirbhar Bharat) போன்ற திட்டங்கள் முக்கியமானவை என்றாலும், முறையான வேலைவாய்ப்பிலிருந்து விலக்கப்பட்டவர்களுக்கு பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைவருக்குமான அடிப்படை வருமானம் (UBI) போன்ற கொள்கைகளுடன் அவை இருக்க வேண்டும். 


சமூகப் பாதுகாப்பு 


அனைவருக்குமான அடிப்படை வருமானம் (UBI) அனைத்து குடிமக்களுக்கும் ஒரு நிலையான, நிபந்தனையற்ற தொகையை முன்மொழிகிறது. வேலைவாய்ப்பு நிலையைப் பொருட்படுத்தாமல் அடிப்படை வருமானத்தை வழங்குகிறது. இந்தியாவில், அனைவருக்குமான அடிப்படை வருமானம் (UBI) வறுமை, சமத்துவமின்மை மற்றும் சமூக பாதுகாப்பு இடைவெளிகளை நிவர்த்தி செய்ய முடியும் என்பதை நிரூபிக்கிறது.


வறுமை மற்றும் வருமான சமத்துவமின்மை : இந்தியாவின் வளர்ச்சி சமமான செல்வப் பகிர்வாக மாறவில்லை. உலக சமத்துவமின்மை அறிக்கை 2022, மக்கள்தொகையில் முதல் 1 சதவீதம் பேர் தேசிய வருமானத்தில் 22 சதவீதத்திற்கும் அதிகமாக வைத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் கீழே உள்ள 50 சதவீதம் பேர் 13 சதவீதத்தை மட்டுமே வைத்திருக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது. அனைவருக்குமான அடிப்படை வருமானம் (UBI) மில்லியன் கணக்கானவர்களை வறுமையிலிருந்து உயர்த்தி, வருமான இடைவெளியைக் குறைக்கும். மத்திய பிரதேசத்தில் சுயதொழில் பெண்கள் சங்கம் (Self-Employed Women's Association (SEWA)) மற்றும் யுனிசெப் (UNICEF) நடத்திய சோதனைகள், நேரடி பணப் பரிமாற்றங்கள் கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றில் மேம்பட்ட செலவினங்களுக்கு வழிவகுத்து, வாழ்க்கைத் தரத்தை சாதகமாக பாதிக்கின்றன என்பதைக் காட்டுகிறது. 


முறைசாரா பொருளாதாரம் (Informal economy) : இந்தியாவின் தொழிலாளர்களில் கிட்டத்தட்ட 90 சதவீதம் முறைசாரா துறையில் பணிபுரிகின்றனர். இங்கு தொழிலாளர்கள் ஒழுங்கற்ற வருமானம் மற்றும் வேலை பாதுகாப்பு இல்லாததை எதிர்கொள்கின்றனர். கோவிட் தொற்றுநோய் முறைசாரா தொழிலாளர்களின் பாதிப்பை எடுத்துக்காட்டுகிறது. ஏனெனில், மில்லியன் கணக்கானவர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். இதில், ஒரு அனைவருக்குமான அடிப்படை வருமானம் (UBI) ஒரு நிதி பாதுகாப்பை வழங்க முடியும். இது தொழிலாளர்களைப் பாதுகாக்கிறது மற்றும் முறையான பொருளாதாரத்தில் அவர்களின் பங்கேற்பை செயல்படுத்துகிறது. 


நுகர்வு மற்றும் வளர்ச்சியை அதிகரித்தல் : அனைவருக்குமான அடிப்படை வருமானம் (UBI) மூலம்  நுகர்வை அதிகரிக்க முடியும். இந்த விளைவு குறிப்பாக கிராமப்புற (rural) மற்றும் அரை நகர்ப்புற பகுதிகளில் (semi-urban areas) கவனிக்கப்படுகிறது. அனைவருக்குமான அடிப்படை வருமானம் (UBI) ஆண்டுக்கு ₹7,620 என நிர்ணயம் செய்தால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.9 சதவீதம் செலவாகும். 2016-17 பொருளாதார ஆய்வின்படி, மானியத்தை பகுத்தறிவு செய்வதன் மூலம் இந்த செலவை அடைய முடியும்.


விளிம்புநிலை சமூகங்களுக்கு அதிகாரமளித்தல் : குளோபல் ஃபிண்டெக்ஸ் 2021 (Global Findex )தரவு 97 சதவீத ஆண்களுடன் ஒப்பிடும்போது, 77 சதவீத பெண்களுக்கு மட்டுமே முறையான வங்கி அணுகல் உள்ளது என்பதைக் காட்டுகிறது. அனைவருக்குமான அடிப்படை வருமானம் (UBI) விளிம்புநிலை சமூகங்களுக்கு, குறிப்பாக பெண்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்கலாம் மற்றும் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்தலாம், வீட்டு முடிவுகளில் பெண்களுக்கு அதிக தன்னாட்சி மற்றும் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான அணுகலை வழங்கும். 


அனைவருக்குமான அடிப்படை வருமானம் (UBI) வாக்குறுதியைக் கொண்டிருந்தாலும், நிதி சாத்தியக்கூறு குறித்த கவலைகள் நீடிக்கின்றன. இருப்பினும், நிலைத்தன்மை நடவடிக்கைகள் அனைவருக்குமான அடிப்படை வருமானம் (UBI) மலிவு மற்றும் செயல்படுத்தக்கூடியதாக மாற்றும். 


முறைசாரா தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் போன்ற பாதிக்கப்படக்கூடிய குழுக்களில் தொடங்கி அனைவருக்குமான அடிப்படை வருமானம் (UBI) கட்டங்களாக அறிமுகப்படுத்தப்படலாம். இது பின்னர் அதிகமான மக்களை உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தப்படலாம். 


இந்தியாவின் மானிய முறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.6 சதவிகிதம் ஆகும். ஆனால், திறமையின்மை மற்றும் கசிவுகளால் பாதிக்கப்படுகிறது. இந்த மானியங்களை உலகளாவிய அடிப்படை வருமானத்திற்கு (UBI) திருப்பி விடுவதன் மூலம், இந்தியா அதிக நிதி இடத்தை உருவாக்க முடியும்.


நாட்டில் அதிக நிர்வாகச் செலவுகளுடன் கூடிய சிக்கலான நலத்திட்டங்கள் உள்ளன. இந்தத் திட்டங்கள் அனைவருக்குமான அடிப்படை வருமானம் (UBI) கட்டமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டால், செலவுகளைக் குறைக்கலாம் மற்றும் செயல்திறனை மேம்படுத்தலாம். ஆதார்-இணைக்கப்பட்ட கணக்குகளால் ஆதரிக்கப்படும் நேரடி பலன் பரிமாற்றத்தின் (Direct Benefit Transfer (DBT)) வெற்றி, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, நலன்சார் விநியோகத்தை திறம்பட சீராக்க முடியும் என்பதைக் காட்டுகிறது.


அனைவருக்குமான அடிப்படை வருமானம் (UBI) நடைமுறைப்படுத்துவது, முறையான துறையில் சேர அதிக நபர்களை ஊக்குவிக்கும். இது வரி அடிப்படையை விரிவுபடுத்தும் மற்றும் இணக்கத்தை மேம்படுத்தும். சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax (GST)) வசூல் அதிகரிப்பு, ஜூலை 2024 இல் ₹1.65 லட்சம் கோடியை எட்டியது. வரிகளை முறைப்படுத்துவதன் மூலம் வருவாய் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதைக் காட்டுகிறது.


நாட்டின் வளர்ச்சி இராஜதந்திரத்தில் அனைவருக்குமான அடிப்படை வருமானம் (UBI) ஒரு முக்கிய கருவியாக செயல்பட முடியும்.  இந்தியா தனது அமிர்த காலம் (Amrit Kaal) மற்றும் வளர்ந்த இந்தியாவின் (Viksit Bharat) பார்வையின் மூலம் முன்னேறும்போது எந்தவொரு குடிமகனும் பின்தங்கி விடக்கூடாது என்பதை உறுதி செய்ய முடியும். 


முனேஷ் சூட்  நிதி அமைச்சகத்தின் துணை இயக்குநர்.



Original article:

Share:

இந்தியாவில் உற்பத்தி மற்றும் எதிர்காலத்திற்கான நிலையான தீர்வு -ரிதம் கவுல்

 வரவிருக்கும் ஆண்டுகளில், உயிரி உற்பத்தி நிலையான வாழ்க்கைக்கு முக்கியமாக இருக்கும். மேலும் சுகாதாரத் துறையில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருக்கும். 

 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், உயிரி தொழில்நுட்பத் துறையின் (department of biotechnology (DBT)) இரண்டு பாதுகாப்பு திட்டங்கள், 'உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு (Biotechnology Research Innovation and Entrepreneurship Development (Bio-RIDE))' என்ற ஒரே திட்டமாக இணைக்கப்பட்டு, உயிரி உற்பத்தி மற்றும் உயிரி தொழிற்சாலை (Biofoundry) என்ற புதிய கூறுகளுடன் தொடர சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 


அரசாங்க அறிக்கையின்படி, இந்த திட்டம் புதுமைகளை வளர்ப்பது, உயிரி தொழில்முனைவோரை ஊக்குவித்தல் மற்றும் உயிரி உற்பத்தி மற்றும் உயிரி தொழில்நுட்பத்தில் உலகளாவிய தலைவராக இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ஆராய்ச்சியை விரைவுபடுத்துதல், தயாரிப்பு வளர்ச்சியை மேம்படுத்துதல் மற்றும் கல்வி ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை பயன்பாடுகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 


உயிரி உற்பத்தி என்பது செல்கள் அல்லது பிற உயிருள்ள நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தி எரிபொருட்கள், இரசாயனங்கள், ஊட்டச்சத்து மருந்துகள் மற்றும் மருந்துகள் போன்ற வணிக ரீதியாக சாத்தியமான தயாரிப்புகளை உருவாக்குகிறது. 


இத்திட்டத்திற்காக அரசாங்கம் ₹9197 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தில் மூன்று முக்கிய கூறுகள் உள்ளன: உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (biotechnology research and development (R&D)), தொழில்துறை மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு (industrial and entrepreneurship development (I&ED)), மற்றும் உயிரி உற்பத்தி (biomanufacturing) மற்றும் உயிரி தொழிற்சாலை (biofoundry) ஆகியவை அடங்கும்.


இது புத்தொழில்களுக்கான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதன் மூலம் உயிரி-தொழில் முனைவோருக்கு ஆதரவளிக்கும். உயிர் தொழில்முனைவோருக்கு விதை நிதி, பாதுகாக்கும் ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் ஆகியவை இதில் அடங்கும். மேம்பட்ட கண்டுபிடிப்புத் திட்டம் செயற்கை உயிரியல், உயிரி மருந்துகள், உயிரி ஆற்றல் மற்றும் பயோபிளாஸ்டிக்ஸ் போன்ற துறைகளில் உயர் மட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான மானியங்கள் மற்றும் ஊக்கத்தொகைகளை வழங்கும். ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை இணைந்து செயல்பட உதவும் வகையில் தொழில் மற்றும் கல்வியாளர்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு ஊக்குவிக்கப்படும். இது உயிர் சார்ந்த பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களின் வணிகமயமாக்கலை விரைவுபடுத்தும்.


வரும் ஆண்டுகளில், நிலையான வாழ்க்கைக்கு உயிரி உற்பத்தி அவசியம். இது சுகாதாரத் துறையில் முக்கியப் பங்கு வகிக்கும்.


உயிரி உற்பத்தியின் குறிக்கோள் உள்நாட்டில் புதுமையான தீர்வுகளை உருவாக்குவதாகும். இந்தத் தீர்வுகள் சுகாதாரத்தை மேம்படுத்தவும், விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், உயிர்ப் பொருளாதாரத்தை வளர்க்கவும் உதவும். உயிரி அடிப்படையிலான தயாரிப்புகளை அளவிடுதல் மற்றும் வணிகமயமாக்குதல் ஆகியவற்றிலும் இது கவனம் செலுத்தும். கூடுதலாக, இது இந்தியாவின் திறமையான பணியாளர்களை விரிவுபடுத்துவதையும், தொழில்முனைவோரை உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


இந்தியாவில் உயர்-செயல்திறன் கொண்ட உயிரி உற்பத்தியை ஊக்குவிக்கும் மையத்தின் பயோ-இ3 (Bio-e3) கொள்கையின் தொடக்கத்தின் போது, உயிரி தொழில்நுட்பத் துறையின் செயலாளரான ராஜேஷ் கோகலே, எதிர்காலத்தில் உயிரி உற்பத்தியில் முதலீடு செய்வதன் முக்கியத்துவம் குறித்து விவாதித்தார். "உயிரியல் அடுத்த தொழில்நுட்ப புரட்சியை உருவாக்கும். நாம் உண்ணும் உணவு மாறும். நமது நீர் ஆதாரங்கள் மாறும். ஆற்றலை உருவாக்கும் முறை மாறும். தாவரங்கள் மற்றும் விலங்குகள் உட்பட சுற்றுச்சூழலில் உள்ள அனைத்தும் மாறும்" என்று அவர் கூறினார்.


நாம் எதிர்கொள்ளும் பல சவால்களையும் அவர் எடுத்துரைத்தார். காலநிலை மாற்றம், நிலைக்க முடியாத பொருள் நுகர்வு மற்றும் கழிவு உற்பத்தி ஆகியவை இதில் அடங்கும். தற்போது, ​​நாம் அதிக அளவில் உட்கொள்ளும் பொருட்களுக்கான இறுதி வாழ்க்கைச் சுழற்சியின் மதிப்பீடு இல்லை. உதாரணமாக, ஆடைகள் ஒரு காலத்தில் தேவையாக இருந்தன. ஆனால், இப்போது அவை பொருட்களாக கருதப்படுகின்றன. பொருள் நுகர்வு அதிகரித்து வருவதால், கழிவு உற்பத்தி ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சனையாக மாறி வருகிறது. இந்த சிக்கலை தீர்க்க, உயிர் புரட்சி மறுசுழற்சி செய்யக்கூடிய உயிரியை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.


இந்தியாவும் உலகமும் எதிர்கொள்ளும் குறிப்பிடத்தக்க பிளாஸ்டிக் மாசு நெருக்கடியைச் சமாளிக்க உயிரி உற்பத்தி உதவும். கோகலே குறிப்பிட்டுள்ளபடி, "உயிர் உற்பத்தி எதிர்காலத்தை மறுபரிசீலனை செய்ய நமக்கு அதிகாரம் அளிக்கும்."


 ரித்மா கவுல்,  சுகாதாரத் துறையில் மிக முக்கியமான செய்திகளின் தாக்கத்தை பகுப்பாய்வு செய்பவர்.



Original article:

Share:

ஆங்கிலேயர்கள் முதலில் சிந்து இடங்களை எவ்வாறு எதிர்கொண்டார்கள் மற்றும் 1947-ஆம் ஆண்டுக்குப் பிறகு அது ஏன் தேசிய திட்டமாக மாறியது? -அட்ரிஜா ராய்சௌத்ரி

 நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஜான் மார்ஷல் சிந்து நாகரிகத்தின் கண்டுபிடிப்பு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். எவ்வாறாயினும், அலெக்சாண்டரின் பிரச்சாரங்களுடனோ அல்லது சீன யாத்ரீகர்களின் பயணங்களுடனோ தொடர்பு இருப்பதாக அவர்கள் நினைத்தபோது, ​​ஆங்கிலேயர்கள், கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பு ஹரப்பாவை முதன்முதலில் பார்வையிட்டனர்.


1830-ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில், இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள் காபூலில் ஒரு நபர் பயணம் செய்வதைப் பற்றி அறிந்தனர். அவர் சிவப்பு முடி, நரைத்த கண்கள், ஒரு சில வரைபடங்கள், ஒரு திசைகாட்டி மற்றும் ஒரு ஆஸ்ட்ரோலேப் ஆகியவற்றைக் கொண்டிருந்தார். அவர் காலுறைகள் அல்லது காலணிகளை அணியவில்லை மற்றும் ஒரு டெர்விஷ் குடிநீர் கோப்பையை தோளில் சுமந்தார். அவர் தன்னை அமெரிக்கர் என்று கூறிக்கொண்டு சார்லஸ் மேசன் என அடையாளம் காட்டினார். இருப்பினும், 1835-ஆம் ஆண்டில், அவரது உண்மையான அடையாளம் ஜேம்ஸ் லூயிஸ் என்பது தெரியவந்தது. அவர் 1827-ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனியின் பெங்கால் பீரங்கி படைப்பிரிவிலிருந்து வெளியேறிய ஆங்கிலேயர் ஆவார்.


லூயிஸ், அல்லது மேசன், இந்திய துணைக்கண்டத்தின் வடமேற்கு பகுதிக்கு அருகில் உள்ள பகுதிகளில் ஐந்து மாதங்கள் பயணம் செய்தார். இந்த நிலங்கள் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை. இந்த பயணமானது, கிழக்கிந்திய கம்பெனி அவரை காபூலில் உளவுத்துறை முகவராக ஆக்குவதற்கு வற்புறுத்திய பிறகு அரச மன்னிப்புக்கு (royal pardon) ஈடாக அவர் இந்த பயணத்தை மேற்கொண்டார். குதிரையில் பஞ்சாப் முழுவதும் பயணம் செய்யும் போது, ​​ஹரப்பா (Haripah) என்ற சிறிய, குறிப்பிடத்தக்க நகரத்தைக் கண்டுபிடித்தார். பெரிய சிந்து நாகரிகத்தின் குறிப்பிடத்தக்க தளத்தை ஒரு ஐரோப்பியர் சந்தித்தது இதுவே முதல் முறையாகும். இருப்பினும் அதன் முக்கியத்துவம் இந்த நேரத்தில் அங்கீகரிக்கப்படவில்லை.

ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, ஆங்கிலேய தொல்பொருள் ஆய்வாளரும், இந்திய தொல்லியல் துறையின் (Archaeological Survey of India (ASI)) இயக்குநருமான சர் ஜான் மார்ஷல், சிந்து நாகரிகத்தின் கண்டுபிடிப்பை அறிவித்தார். அவர் செப்டம்பர் 20, 1924-ல் தி இல்லஸ்ட்ரேட்டட் லண்டன் நியூஸில் எழுதியதாவது, "தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு, நீண்டகாலமாக மறக்கப்பட்ட நாகரீகத்தின் எச்சங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவது பெரும்பாலும் இல்லை என்றும் இந்த நேரத்தில், சிந்து சமவெளியில் நாம் அத்தகைய கண்டுபிடிப்பின் வாசலில் இருப்பது போல் தெரிகிறது" என்றும் அவர் குறிப்பிட்டார்.


முதல் சந்திப்பு


1820-ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், மேசன் முதன்முதலில் 'ஹரப்பா'வைக் கண்டுபிடித்தபோது, ​​​​அது பண்டைய நகரமான சங்கலாவின் இடிபாடுகள் என்று அவர் நம்பினார். கிமு நான்காம் நூற்றாண்டில் இந்திய துணைக்கண்டத்தின் மீது படையெடுத்தபோது மகா அலெக்சாண்டரால் தோற்கடிக்கப்பட்ட போரஸ் மன்னரின் தலைநகராக சங்கலா இருந்தது. மானுடவியலாளர் ரீட்டா பி. ரைட்டின் படி, அவரது புத்தகமான ”பண்டைய சிந்து” (The Ancient Indus), மேசன் பாரம்பரிய கிரேக்க இலக்கியங்களை நன்கு அறிந்திருந்தார். அலெக்சாண்டரின் பிரச்சாரங்களைப் பற்றிய இந்த அறிவு, அலெக்சாண்டர் கிமு 326-ல் அணிவகுத்துச் சென்ற நவீன ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பஞ்சாப் பகுதிகளை ஆராய அவரைத் தூண்டியது.


ஹரப்பாவில் பார்த்த காட்சிகளால் மேசன் மிகவும் ஈர்க்கப்பட்டார். அவர் தனது பிற்கால பயணக் கட்டுரையில், அந்த இடத்தின் இடிபாடுகளை விவரித்தார். அவர் ஒரு ‘பெரிய வட்ட மேடு’ (large circular mound), ஒரு ‘பாழடைந்த செங்கல் கோட்டை’ (ruinous brick castle) ஒரு பாறை உயரத்தில் ஒரு கட்டிடத்தின் எச்சங்கள், மற்றும் அவர் நம்பிய பல பழமையான பீப்புல் மரங்கள் (Peepul trees) பெரிய பழங்காலத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. "இறையாண்மையின் இச்சையாலும் குற்றங்களாலும் அழிக்கப்பட்ட" சுமார் 13 காஸ் (சுமார் 45 கிலோமீட்டர்) அளவுள்ள ஒரு நகரத்தின் முக்கியத்துவத்தை அவர் குறிப்பிட்டார்.


1831-ஆம் ஆண்டில் மேசனின் வருகைக்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, லெப்டினன்ட் அலெக்சாண்டர் பர்ன்ஸ் சிந்து நதியில் பயணம் செய்தபோது ஹரப்பாவுக்குப் பயணம் செய்தார். அவரைத் தொடர்ந்து அலெக்சாண்டர் கன்னிங்ஹாம், 1861-ஆம் ஆண்டில் இந்திய தொல்லியல் துறையை (ASI) நிறுவி அதன் முதல் இயக்குநர் ஜெனரலாக ஆனார். கன்னிங்காம் ஹரப்பாவிற்கு 1853, 1856 மற்றும் மீண்டும் 1872 மற்றும் 1873 க்கு இடையில் மூன்று முறை பயணம் செய்தார்.


ஹரப்பாவை முதலில் அகழ்வாராய்ச்சி செய்தவர் கன்னிங்ஹாம் என்று தொல்பொருள் ஆய்வாளர் நயன்ஜோத் லஹிரி indianexpress உடனான மின்னஞ்சல் நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். அவர் மேடுகளின் விரிவான விளக்கத்தை அளித்தார் மற்றும் அவற்றின் சீரமைப்புகளை விளக்கும் தளத் திட்டத்தை உருவாக்கினார். பொறிக்கப்பட்ட கல் முத்திரைகள் மற்றும் பிளின்ட் கருவிகள் உட்பட ஹரப்பா கலைப்பொருட்களாக அங்கீகரிக்கப்பட்ட பொருட்களின் காட்சி விவரங்களையும் அவர் ஆவணப்படுத்தினார். ஹரப்பா கலைப்பொருட்கள் பற்றிய கன்னிங்ஹாமின் வரைபடங்கள், அவரது முந்தைய ஆய்வுகளில் அவர் சந்தித்ததைப் போலல்லாமல் இருந்தன. இருப்பினும், தளத்தை அடையாளம் காணும் போது, ​​அவர் உரை மூலங்களை நம்பியதாக லஹிரி குறிப்பிட்டார். சீனப் பயணி சுவான்சாங் சில மாதங்கள் தங்கியிருந்த இடம் ஹரப்பா என்று அவர் நம்பினார்.


கன்னிங்ஹாமின் தொல்பொருள் ஆய்வு பௌத்த தளங்களைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தியது. புத்தரின் அடிச்சுவடுகளைக் கண்டுபிடித்ததாக நம்பப்படும் சீன யாத்ரீகர்களான சுவான்சாங் (Xuanzang) மற்றும் Fa Hien ஆகியோரின் பயணங்களை அவர் நெருக்கமாகப் பின்தொடர்ந்தார்.


சிந்து நாகரிகத்தின் நகர்ப்புற கட்டத்தின் பொதுவான கலைப்பொருளாக இப்போது கருதப்படும் ஒரு முத்திரையை கன்னிங்ஹாம் கண்டுபிடித்தார். அவர் தொல்பொருள் "இந்தியாவிற்கு அப்பாற்பட்டது" என்று கூறினார். ஏனெனில், இது இந்திய செபுவைக் காட்டிலும் கொம்பு இல்லாத காளையை சித்தரித்தது. அதிலுள்ள ஒரு கல்வெட்டில் "இந்திய எழுத்துக்கள்" இல்லை என்றும் அவர் நம்பினார். இந்தத் தகவல் 2007-ல் ஹிஸ்டரி டுடே இதழில் (journal History Today) வெளியான தொல்பொருள் ஆய்வாளர் சுதேஷ்னா குஹாவின் கட்டுரையிலிருந்து வருகிறது.


ஆரம்ப கால ஐரோப்பிய ஆய்வாளர்கள் ஹரப்பா இடிபாடுகளை தவறாகப் புரிந்துகொள்ள கிரேக்க மற்றும் சீன ஆதாரங்களை நம்பியதற்கு பல காரணங்கள் இருந்தன. குஹா, இந்தியன் எக்ஸ்பிரஸ் உடனான ஒரு நேர்காணலில், சிந்து நாகரிகத்தில் நிபுணத்துவம் பெற்ற குஹா கூறுகையில், “இந்தியாவின் பண்டைய நூல்களை விட, வெளிநாட்டுக் கணக்குகள், இந்தியாவைப் பற்றிய சிறந்த புரிதலை வழங்குகின்றன என்று அவர்கள் நம்பினர். இந்த கணக்குகள் இந்தியாவை அதன் பண்டைய நூல்களை விட சிறந்த புரிதலை வழங்குவதாக அவர்கள் கருதினர். அவை வரலாற்று விவரங்கள் இல்லாதவை என்று அவர்கள் கருதினர். குஹா சிந்து நாகரிகத்தில் நிபுணத்துவம் பெற்றவர்.


பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் ஏற்கனவே பாரம்பரியமாக கிரேக்கத்தை அறிந்திருந்தனர். இருப்பினும், Xuanzang மற்றும் Fa Hien ஆகியோரின் பண்டைய சீன கணக்குகள் 1800-ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் மட்டுமே மேற்கத்திய நாடுகளுக்கு அணுகப்பட்டன. அவை முதலில் பிரெஞ்சு மொழியிலும் பின்னர் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டபோது இது நடந்தது.


இந்த ஆரம்பகால ஆய்வாளர்கள் எழுதப்பட்ட நூல்களை மட்டுமே நம்பியிருந்தனர் என்று லஹிரி வாதிட்டார். இந்த உரை மரபுகளுக்கு அப்பாற்பட்ட காலத்தில் ஹரப்பா செழித்து வளர்ந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். அலெக்சாண்டருடன் வடமேற்கு இந்தியாவுக்குச் சென்ற சீன யாத்ரீகர்கள் அல்லது மாசிடோனியர்களுடன் எப்போதும் இருந்த ஆய்வாளர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் அதன் பண்டைய வரலாறு கண்டறியப்பட வாய்ப்பில்லை.


ஒரு பண்டைய நாகரிகமாக ஹரப்பாவின் முக்கியத்துவம் அப்போது புரிந்து கொள்ளப்படாததற்கு மற்றொரு காரணம், வரலாற்றுக்கு முந்தைய ஆய்வு 19-ம் நூற்றாண்டில் தொடங்கவில்லை. 1859-ஆம் ஆண்டில் மனிதர்களுக்கு வரலாற்றுக்கு முந்தைய கடந்த காலம் இருந்தது என்பதை ராயல் சொசைட்டி உறுதிப்படுத்திய பின்னரே, 'வரலாற்றுக்கு முந்தைய' இருப்பு பரவலாக ஒப்புக் கொள்ளப்பட்டது என்று குஹா விளக்கினார். இதற்கு முன், ஐரோப்பிய அறிஞர்கள் உலகம் கிமு 4004 இல் தான் தொடங்கியது என்ற கிறிஸ்தவ நம்பிக்கையால் வழிநடத்தப்பட்டது.


ஜான் மார்ஷல் 1902-ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வந்து தொல்பொருள் ஆய்வுத் துறையின் (ASI) இயக்குநர் ஜெனரலாக ஆனார். அவரது முன்னோடிகளைப் போலல்லாமல், அவர் இந்தியாவில் அலெக்சாண்டர் அல்லது புத்த மதத்தில் குறிப்பாக கவனம் செலுத்தவில்லை. அதற்கு பதிலாக, அவர் மத்திய தரைக்கடல் பகுதியில் ஆர்வமாக இருந்தார் மற்றும் ஆரம்பத்தில் கிரீட்டின் மினோவான் நாகரிகத்தை குறிப்பிட்டார். இருப்பினும், ஆண்ட்ரூ ராபின்சன் தனது புத்தகமான ”சிந்து” (2015) இல் குறிப்பிட்டுள்ளபடி, அவரது துறையில் குறைந்த நிதி ஆதாரங்கள் இருந்தபோதிலும், அவர் விரைவில் இந்திய தொல்லியல் முன்னேற்றத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தார்.


மார்ஷல் தனது கண்டுபிடிப்புகளை தி இல்லஸ்ட்ரேட்டட் லண்டன் நியூஸ்-ல் அறிவிப்பதற்கு பல பத்தாண்டுகளுக்கு முன்பு, ஹரப்பாவைத் தவிர பல சிந்து தளங்கள் ஏற்கனவே ஆராயப்பட்டன. உதாரணமாக, 1911-ஆம் ஆண்டில், தேவதுத்த ராமகிருஷ்ண பண்டார்கர் ஒரு பண்டைய பௌத்த தலத்தைக் கண்டுபிடிப்பார் என்ற நம்பிக்கையில் மொஹஞ்சதாரோவுக்குச் சென்றார். 


இருப்பினும், இதன் இடிபாடுகள் 200 ஆண்டுகளுக்கு மேல் இல்லை என்று பண்டார்கர் முடிவு செய்தார். 1924-ஆம் ஆண்டுக்கு முன், மக்ரானில் உள்ள சுட்காகென்-டோர் மற்றும் ராஜஸ்தானில் உள்ள கலிபங்கன் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் இருந்து மட்பாண்டங்கள் மற்றும் பிற கலைப்பொருட்கள் தோண்டப்பட்டன.  இந்த கண்டுபிடிப்புகள் இருந்தபோதிலும், எந்தவொரு அறிஞரும் அவற்றை இணைக்க முடியவில்லை. ஏனெனில், பொருட்களின் வயது அறியவில்லை. மேலும், அவை ராபின்சன் குறிப்பிட்டது போல் வரலாற்று சூழலைக் கொண்டிருக்கவில்லை.


1912-ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் இருந்து இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மூன்று முத்திரைகள் அடங்கிய ஒரு வெளியீடு மார்ஷலின் கவனத்தை ஈர்த்தது. பின்னர், அவரது உதவியாளர் ஒருவர் ஹரப்பாவிலிருந்து இரண்டு முத்திரைகள் உட்பட அதிகமான பொருட்களை வாங்கியபோது, ​​மார்ஷல் தளத்தின் முக்கியத்துவத்தை நம்பினார். "ஹரப்பாவின் அகழ்வாராய்ச்சி, அதை ஏற்பாடு செய்ய முடிந்தால், அது மிகவும் மதிப்புமிக்க முடிவுகளைத் தரும் மற்றும் இந்திய வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறக்கும்" என்று லஹிரி தனது புத்தகமான ”மறந்த நகரங்களை கண்டுபிடிப்பது: எப்படி சிந்து நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டது (2006)” (Finding Forgotten Cities: How the Indus Civilisation was Discovered (2006)) என்பதில் மேற்கோள் காட்டினார்.


1921-22ஆம் ஆண்டில் தயா ராம் சாஹ்னி ஹரப்பாவை அகழ்வாராய்ச்சி செய்தார். அடுத்த ஆண்டு, ரக்கல் தாஸ் பானர்ஜி ஆகியோர் மொகஞ்சதாரோவை அகழ்வாராய்ச்சி மேற்கொண்டனர். சாஹ்னி மற்றும் பானர்ஜி இருவரும் பல பத்தாண்டுகளுக்கு முன்னர் கன்னிங்ஹாம் கண்டுபிடித்ததைப் போன்ற முத்திரைகளைக் கண்டறிந்தனர். இருப்பினும், அவர்கள் மிகவும் வேறுபட்ட தளங்களை அகழ்வாராய்ச்சி செய்ததால், அவர்கள் ஒருவருக்கொருவர் கண்டுபிடிப்புகள் பற்றி அறிந்திருக்கவில்லை.


எடுத்துக்காட்டாக, பானர்ஜி, ஆரம்பத்தில் சிந்து முத்திரை ஒரு சந்தேஷ் (sandesh) போல இருப்பதாக நினைத்தார். இது ஒரு வகை பெங்காலி இனிப்பு அச்சு. அவர் இதைப்பற்றி எச்சரிக்கையுடன் மார்ஷலுக்கு எழுதினார். முத்திரைகள் "கன்னிங்ஹாமின் ஹரப்பா முத்திரைகள் போலவே" (ராபின்சனின் புத்தகத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது) என்று குறிப்பிட்டார்.  பின்னர் மொஹஞ்சதாரோவில் நடந்த அகழ்வாராய்ச்சியில் இது போன்ற மேலும் ஏழு முத்திரைகள் கிடைத்தன.


பிரிட்டிஷ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் துட்டன்காமுனின் கல்லறையைக் கண்டுபிடித்த நேரம் இது. பிரிட்டிஷ் தொல்பொருள் ஆய்வாளரான சர் லியோனார்ட் வூலி, மெசபடோமியாவில் அகழ்வாராய்ச்சி செய்து கொண்டிருந்தார். உர், கிஷ், லகாஷ் மற்றும் சூசா போன்ற பல பழங்கால சுமேரிய தளங்களை அவர் கண்டுபிடித்தார்" என்று குஹா கூறினார். "ஒரு பெரிய பழங்கால நாகரிகம் அங்கு கண்டுபிடிக்கப்பட்டது. மார்ஷல் தனது சர்வதேச நட்பு நாடுகள், குறிப்பாக பிரிட்டனில் உள்ளவர்கள், அவரும் அவரது குழுவினரும் இந்தியாவில் செய்யும் ஒரு பண்டைய நாகரிகத்தின் அற்புதமான கண்டுபிடிப்புகளைப் பார்க்க விரும்பினார்.


ஆரம்பத்திலிருந்தே, இது ஒரு பூர்வீக நாகரிகம் என்பதில் மார்ஷல் தெளிவாக இருந்தார். "இந்த முதல் அறிவிப்பு ஒரு புதிய வகையான தொல்பொருள் வரலாற்றின் தொடக்கத்தைக் குறிக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். இந்தப் புதிய வரலாறு, இந்தியாவிற்குக் கூறப்படும் தொன்மையுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும். மிக முக்கியமாக, இந்தியாவின் பண்டைய கடந்த காலத்திற்கான ஒரு புதிய தொடக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வேலையை அவரது எழுத்து திறம்பட வெளிப்படுத்தும் என்று லஹிரி கூறினார். இதனை தொடர்ந்து வெளியிட்ட செய்தித்தாள் கட்டுரைகளில், "அவர் நாகரிகத்தின் பூர்வீக இயல்பு மற்றும் அது எவ்வாறு 'இந்திய மண்ணில் கணக்கிட முடியாத பல நூற்றாண்டுகளை எட்டிய வளர்ச்சிக்கு உட்பட்டுள்ளது' என்பதை வலியுறுத்தினார்" என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


சுதந்திரத்திற்குப் பிந்தைய தேசியவாத திட்டம்


1947-ஆம் ஆண்டில் நடந்த இந்தியப் பிரிவினை சிந்து நாகரிகத் தளங்களைத் தேடுவதில் ஒரு புதிய அத்தியாயத்தை மேற்கொண்டது. இது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான புதிய எல்லைரீதியிலான சிந்து நாகரிகத்தின் கிழக்குப் பகுதி வழியாகச் சென்றது. இதன் விளைவாக, இரண்டு சிந்து இடங்களைத் தவிர மற்ற அனைத்தும் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாறியது.


இந்தியாவின் பண்டைய மற்றும் மேம்பட்ட நகர்ப்புற வரலாறு இப்போது பெரும்பாலும் பாகிஸ்தானில் இருந்தது. இது இந்தியப் பிரதேசத்தில் சிந்து நாகரிகத்தின் தடயங்களைக் கண்டறியும் நம்பிக்கையில் இந்திய அரசாங்கம் தங்கள் பக்கத்தில் அகழ்வாராய்ச்சியைத் தொடங்க வழிவகுத்தது, குஹா கூறினார்.


ஆங்கிலேயர் காலத்தைப் போலல்லாமல், இந்தியத் தலைவர்கள் ஹரப்பா தளங்களைத் தேட ஆர்வமாக இருந்தனர். மார்ச் 1948-ஆம் ஆண்டில், அறிஞரும், பிகானரின் முன்னாள் திவானுமான கே எம் பணிக்கர், பிரதமர் நேருவுக்கு கடிதம் எழுதினார். தொல்பொருள் ஆய்வாளர் ஆரல் ஸ்டெய்னின் நுண்ணறிவுகளின் அடிப்படையில் பிகானர் மற்றும் ஜெய்சால்மர் பகுதிகளை ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.


பாகிஸ்தான் பிரிந்த பிறகு, சிந்து சமவெளி நாகரிகத்தின் பெரும்பாலான முக்கிய இடங்கள் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாறியது. இந்திய வரலாற்றின் இந்த ஆரம்ப காலகட்டம் தொடர்பான தொல்லியல் பணிகளை இந்தியா தொடர்வது மிகவும் முக்கியமானது. இந்த பழங்கால நாகரிகத்தின் மையம் சிந்து அல்லது சிந்து சமவெளியில் இல்லை என்பது ஆரம்ப ஆய்வில் தெரியவந்துள்ளது. அதற்கு பதிலாக, இது பிகானேர் (Bikaner) மற்றும் ஜெய்சால்மர் (Jaisalmer) பாலைவனப் பகுதிகளில் இருந்தது, அங்கு பழங்கால நதி சரஸ்வதி ஒரு காலத்தில் கட்ச் வளைகுடாவில் பாய்ந்தது.


நேரு இந்த யோசனையை விரைவில் ஒப்புக்கொண்டார். விரைவில், இந்திய தொல்லியல் துறை (ASI) அமலானந்த கோஷ் தலைமையில் பிகானரை ஆராயத் தொடங்கியது. சில மாதங்களில், சுமார் 70 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில், 25 தளங்களில் ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோவில் காணப்பட்டதைப் போன்ற கலைப்பொருட்கள் இருந்தன.


இந்திய தொல்லியல் துறை (ASI) விரைவில் இந்தியாவிற்குள் ஹரப்பா நாகரிக தளங்களைத் தேடுவதை ஒரு தேசிய திட்டமாக மாற்றியது என்று லஹிரி விளக்கினார். இந்தப் பணியைத் தொடர இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பணி அமர்த்தப்பட்டனர். இதனால், பல இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடந்தன. இதன் அடிப்படையில், பஞ்சாபில் உள்ள ரோபர் 1953-ஆம் ஆண்டு மற்றும் 1955-ஆம் ஆண்டிலும், குஜராத்தில் உள்ள லோத்தல் 1953 மற்றும் 1963 இலும், ராஜஸ்தானில் உள்ள காளிபங்கன் 1961-ஆம் ஆண்டு முதல் 1969-ஆம் ஆண்டு வரையிலும் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து, ராக்கிகர்ஹி இடமானது, இன்றும் அகழாய்வு செய்யப்படுகிறது.


சௌராஷ்டிராவில் மட்டும் சுமார் 40 ஹரப்பா தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் லஹிரி குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் சிந்து நதி தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டது சுதந்திரத்திற்குப் பிறகு நடந்த ஒரு பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.



Original article:

Share:

சில்லறை மற்றும் மின்-வணிக புரட்சிக்கு இந்தியாவிற்கு என்னென்ன உத்திகள் தேவை? -அபினவ் சிங்

 சில்லறை (retail) மற்றும் மின்-வணிகத்தின் (e-commerce) ஏற்றம் நாட்டின் தளவாடங்கள் மற்றும் விநியோகச் சங்கிலி உள்கட்டமைப்பின் முதுகெலும்பாக உள்ளது. 2030-ஆம் ஆண்டளவில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நாம் இலக்காகக் கொண்டுள்ளதால், நாட்டின் தேவையை பூர்த்தி செய்வதற்கும் இந்தத் துறையின் வளர்ச்சியை இயக்குவதற்கும் பொருட்களின் தடையற்ற மற்றும் திறமையான இயக்கம் அவசியம். 


இந்தியா ஒரு பெரிய மாற்றத்தின் நுழைவாயில் உள்ளது. வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கம், செலவழிக்கக்கூடிய வருமானம் அதிகரித்து வருவது மற்றும் இளம் மக்கள் தொகை ஆகியவற்றுடன், நாடு ஒரு சில்லறை புரட்சியை (retail revolution) நோக்கி தயாராக உள்ளது. 2033-ஆம் ஆண்டில் 820 பில்லியன் டாலரில் இருந்து 2033-ஆம் ஆண்டில் 2 டிரில்லியன் டாலராக உயரும் என்று கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த மாற்றத்தில் மின்-வணிகம் (e-commerce) முக்கிய பங்கு வகிக்கிறது. விரைவான மின்னணுமயமாக்கல் மற்றும் வளர்ந்து வரும் இணைய ஊடுருவலுடன், இந்திய மின்-வணிக (e-commerce) சந்தை 2030-ஆம் ஆண்டில் 325 பில்லியன் டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


சில்லறை (retail) மற்றும் மின்-வணிகத்தின் (e-commerce) ஏற்றம் நாட்டின் தளவாடங்கள் மற்றும் விநியோகச் சங்கிலி உள்கட்டமைப்பின் முதுகெலும்பாக உள்ளது. 2030-ஆம் ஆண்டளவில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நாம் இலக்காகக் கொண்டுள்ளதால், நாட்டின் தேவையை பூர்த்தி செய்வதற்கும் இந்தத் துறையின் வளர்ச்சியை இயக்குவதற்கும் பொருட்களின் தடையற்ற மற்றும் திறமையான இயக்கம் அவசியம். 


எவ்வாறாயினும், இந்த வளர்ச்சி தளவாட செலவுகளை நிர்வகிக்கும் மற்றும் குறைக்கும் திறனைப் பொறுத்தது. இது தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11-14 சதவீதமாக உள்ளது. இதற்கு நேர்மாறாக, உலகளாவிய சராசரி சுமார் 8 சதவீதமாக உள்ளது. தளவாட செலவுகள் (logistics costs) அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8-10 சதவீதமாகவும், சீனாவில் முறையே 9 சதவீதமாகவும் உள்ளன. 


நம்முடைய சில்லறை விற்பனைத் துறையின் முழுத் திறனையும் திறக்க, தளவாடச் செலவுகளைக் குறைக்க வேண்டும். இந்தச் செலவுகளைக் குறைப்பது அதிகளவில் போட்டி தன்மையில் விலையின் அடிப்படைக்கு வழிவகுக்கும். இது சில்லறை விற்பனையாளர்களுக்கான லாப வரம்பையும் மேம்படுத்தலாம். இறுதியில், இது நுகர்வோருக்கு தயாரிப்புகளை மிகவும் மலிவானதாக மாற்றும்.  இந்த இலக்கை அடைவதற்கு பன்முக அணுகுமுறை தேவை. உலகளாவிய சிறந்த நடைமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும் மற்றும் இராஜதந்திர ரீதியில் உள்கட்டமைப்பு வளர்ச்சிகளை செயல்படுத்த வேண்டும்.


அரசின் முயற்சிக்கான வாய்ப்புகளுக்கு வழிவகுத்தல்


உள்கட்டமைப்பு மற்றும் வர்த்தகத்தை எளிதாக்கும் முயற்சிகளுக்கான நிதியை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது மலிவு தொழில்நுட்பம் மற்றும் நுகர்வோர் நடத்தைகளை மாற்றுவதற்கான முன்முயற்சிகளுக்கான செலவை அதிகரிக்கும் என்று அரசாங்கத்தின் சமீபத்திய அறிவிப்புகளின் ஆதரவுடன், தளவாடத் தொழில் ஆண்டுதோறும் 8.8 சதவீதம் வளர்ந்து 2029-ஆம் ஆண்டில் 484.43 பில்லியன் டாலராக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


 உலக வங்கியின் லாஜிஸ்டிக்ஸ் செயல்திறன் குறியீட்டில் (World Bank's Logistics Performance Index) 139 நாடுகளில் இந்தியா ஆறு இடங்கள் முன்னேறி 2023-ஆம் ஆண்டில் 38 வது இடத்தைப் பிடித்துள்ளது. தளவாடத் துறையை மாற்றுவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க காரணியாக அரசாங்கத்தின் தேசிய தளவாடக் கொள்கை (National Logistics Policy (NLP)) ஆகும். இது தளவாட செயல்திறன் குறியீட்டை மேம்படுத்துவதற்கும், செலவைக் குறைப்பதற்கும், தரப்படுத்தலை ஊக்குவிப்பதன் மூலமும், முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலமும், புதுமைகளை வளர்ப்பதன் மூலமும் திறமையான தளவாட சுற்றுச்சூழல் அமைப்புக்கான தரவு சார்ந்த முடிவு ஆதரவு வழிமுறைகளை உருவாக்குவதற்கான விரிவான கட்டமைப்பை நோக்கி செயல்படுகிறது. 


தேசிய தளவாடக் கொள்கை (National Logistics Policy (NLP)) செயல்முறைகளின் மின்னணுமயமாக்கலிலும் கவனம் செலுத்துகிறது. நிகழ்நேர கண்காணிப்பு, மின் ஆவணங்கள் மற்றும் தடையற்ற தகவல் பரிமாற்றத்திற்கான டிஜிட்டல் தளங்கள் திறமையின்மைகளை அகற்றலாம் மற்றும் தாமதங்களைக் குறைக்கலாம். மேலும், சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புக்கு உதவும் வகையில், அனைத்து பங்குதாரர்களையும் ஒரே மேடையில் கொண்டு வர ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்து இடைமுக தளத்தை (Unified Logistics Interface Platform (ULIP)) உருவாக்கவும் இந்தக் கொள்கை வழிவகை செய்கிறது. 


நிலைத்தன்மைக்கு (sustainability) முக்கியத்துவம் அளிப்பது மற்றொரு முக்கியமான அம்சமாகும். மின்சார வாகனங்களின் பயன்பாடு (electric vehicles), ஆற்றல் திறன் கொண்ட கிடங்கு (energy-efficient warehousing) மற்றும் நிலையான பேக்கேஜிங் (sustainable packaging) போன்ற சுற்றுச்சூழல் நட்பு நடைமுறைகளை ஊக்குவிப்பதன் மூலம், நமது சுற்றுச்சூழல் தடத்தையும் குறைக்க முடியும். 

 

ஜெர்மனி போன்ற நாடுகள் சிறந்த வழிமுறைகளை வழங்குகின்றன. அதன் தளவாடத் துறை அதன் செயல்திறன், நம்பகத்தன்மை,  மேம்பட்ட உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு மற்றும் திறமையான பணியாளர்களால் ஆதரிக்கப்படுகிறது.  ஜெர்மன் மாதிரியானது (German model) பல்வேறு போக்குவரத்து முறைகளில் தடையற்ற ஒருங்கிணைப்பை வலியுறுத்துகிறது. இது வலுவான கிடங்கு வசதிகள் மற்றும் திறமையான சரக்கு மேலாண்மை அமைப்புகளையும் கொண்டுள்ளது.


எடுத்துக்காட்டாக, இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (Internet of Things (IoT)), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence (AI)) மற்றும் தரவு பகுப்பாய்வு (data analytics) போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் தளவாட செயல்பாடுகளின் முன்கணிப்பு மற்றும் நம்பகத்தன்மையை பெரிதும் மேம்படுத்தியுள்ளன.


தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதன் மூலம் ஜெர்மனியில் இருந்து கற்றுக்கொள்ளலாம். முறையான கல்வி மற்றும் திறன் பயிற்சியை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட கதி சக்தியானது (Gati Shakti), தேசிய தலைமை திட்டத்துடன் (National Master Plan) இந்தப் பயணம் தொடங்கப்பட்டது. கிடங்கு தரநிலைகள் மற்றும் நடைமுறைகளை மேம்படுத்துவதும் அவசியம். ஒரு நவீன, தொழில்நுட்பம்-இயக்கப்பட்ட கிடங்கு சரக்கு நிர்வாகத்தை சீராக்க முடியும், சேமிப்பு செலவுகளை குறைக்கலாம் மற்றும் கழிவுகளை குறைக்கலாம். ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence (AI))  மற்றும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (Internet of Things (IoT)), போன்ற தானியங்கி தொழில்நுட்பங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தி செயல்திறனை மேம்படுத்தும். மின்-வணிகத் துறைக்கு இது மிகவும் முக்கியமானது. திறமையான கிடங்குகள் விரைவான விநியோக நேரங்களுக்கும் சிறந்த வாடிக்கையாளர் திருப்திக்கும் வழிவகுக்கும். 


தளவாடத் துறைக்கு அதிநவீன அமைப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை நிர்வகிக்கும் திறன் கொண்ட திறமையான பணியாளர்களும் தேவை. கதி சக்தி(Gati Shakti) தேசிய தலைமை திட்டத்தில் (National Master Plan) குறிப்பிடப்பட்டுள்ளபடி, தளவாட நிபுணர்களுக்கான பயிற்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வது, இந்தத் துறையை முன்னோக்கி நகர்த்தக்கூடிய திறமையான தொழிலாளர்களின் தொகுப்பை உருவாக்க முடியும். கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் அமைப்புகளுடனான கூட்டாண்மை இந்த திறன் மேம்பாட்டை எளிதாக்கும். 


பொருளாதார வளர்ச்சிக்கு வலுவான தளவாட சுற்றுச்சூழல் அமைப்பு அவசியம். இது முழுமையான வளர்ச்சிக்கான முக்கிய படியாகவும் உள்ளது. இது இந்திய வணிகங்களின் போட்டித்தன்மையை மேம்படுத்தவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், மில்லியன் கணக்கானவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் முடியும். கூடுதலாக, இது இந்தியா தனது இராஜதந்திர இடத்தைப் பயன்படுத்தவும், கிழக்கு நாட்டையும், மேற்குலக நாடுகளை இணைக்கவும், சர்வதேச வர்த்தகத்திற்கான மையமாக மாறவும் உதவும்.


உலகளாவிய சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் இந்தியா தனது சில்லறை வணிகத் துறையின் முழு திறனையும் திறக்க முடியும். உள்கட்டமைப்பு மற்றும் திறமையான தொழிலாளர்களில் முதலீடு செய்வதுடன், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதும் இதில் அடங்கும். இந்த முயற்சிகள் நாட்டை வளர்ந்த இந்தியா 2047-ஆம் ஆண்டை (Viksit Bharat 2047) நோக்கி நகர்த்த உதவும். இந்த பார்வையில், தளவாடத் தொழில் நிலையான வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய காரணியாகச் செயல்படும்.


அபினவ் சிங் எழுத்தாளர் மற்றும் அமேசான் இந்தியாவின் துணைத் தலைவர் (செயல்பாடுகள்) ஆவார்.



Original article:

Share: