பிரதமர் மோடியின் வெளியுறவுக் கொள்கை, உலக விவகாரங்களில் இந்தியா ஒரு அமைதியான நடுநிலையாளர் என்ற பிம்பத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்புகள் உட்பட நடவடிக்கைகளின் எழுச்சி ஏற்பட்டுள்ளது. அவர் G20, UN உச்சிமாநாடு மற்றும் QUAD கூட்டங்கள் போன்ற நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார்.
இந்தியா சீனாவுடன் 3,488 கிமீ எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. ஆனால், சிலர் சீனாவை அண்டை நாடாக கருதுகின்றனர். அது ஏன் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நீண்ட எல்லைகளை பகிர்ந்துக் கொண்ட நமது மற்ற அண்டை நாடுகள் பாகிஸ்தான் (3,310 கிமீ) மற்றும் வங்காள்தேசம் (4,096 கிமீ) ஆகும். இதில் நாம், பெரும்பாலும் அவர்களுடன் எல்லையில் முழு நேரமும் காவலுக்கு அமைத்துள்ளோம். நேபாளமும் இந்தியாவும் ‘திறந்த எல்லை’ கொள்கையைக் (open border policy) கொண்டுள்ளன. இந்த திறந்த எல்லையானது, சில சிறிய சிக்கல்கள் இருந்தபோதிலும், பொருட்கள், சேவைகள் மற்றும் மக்களின் இயக்கத்தை அனுமதிக்கிறது.
இந்தியாவுடன் 578 கிமீ எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் பூடான் நாடானது, சிறிய எல்லையை பகிர்ந்து கொள்ளும் மதிப்புமிக்க அண்டை நாடாகும். குறுகிய பாக் ஜலசந்தியால் இலங்கை இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. வரலாற்று மற்றும் கலாச்சார காரணங்களுக்காக இந்தியாவிற்கு இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், இருநாடுகளின் உறவு சில நேரங்களில் சிக்கலாக இருக்கலாம். மாலத்தீவு இன்னும் தொலைவில் உள்ளது, இருப்பினும் சீனாவின் செல்வாக்குடன் கூட அதனுடன் நல்ல உறவைப் பேண நாம் முயற்சி செய்கிறோம்.
1988-ஆம் ஆண்டில், மாலத்தீவை கொள்ளைகாரர்களின் குழுவால் (group of bandits) கைப்பற்றப்படுவதிலிருந்து நாம் காப்பாற்றினோம். ஆனால் ஆபரேஷன் காக்டஸ் (Operation Cactus) யாருக்காவது நினைவிருக்கிறதா என்பது சந்தேகம். ஆப்கானிஸ்தான் இந்தியாவுடன் 106 கி.மீ நீளமுள்ள சிறிய எல்லையைக் கொண்டுள்ளது. அதன் பரபரப்பான உள்நாட்டு அரசியல் இந்தியாவுடனான உறவுகளை சீரற்றதாக மாற்றியுள்ளது. சீனாவைத் தவிர, இந்தியாவும் இந்த நாடுகளும் தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு (South Asian Association for Regional Cooperation (SAARC)) என்ற பிராந்தியக் குழுவில் உறுப்பினர்களாக உள்ளன.
தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு (SAARC) எங்கே?
இந்தியத் திட்டத்தில் இந்த அண்டை நாடுகளின் இடம் என்ன? ஐ.கே. குஜ்ரால் கிழக்கு நோக்கிய கொள்கையை (East policy)அறிவித்தார். ஏ.பி. வாஜ்பாய் இக்கொள்கையை கிழக்கு நோக்கிய செயல் (Act East) என்று சாமர்த்தியமாக மாற்றினார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது வழக்கப்படி, அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற தனது அரசாங்கத்தின் கொள்கையை பிரமாண்டமாக அறிவித்தார்.
அண்டை நாடுகளில் பிரதமரின் தனிப்பட்ட ஆர்வம் குறித்தும் மற்றும் சார்க்கின் ஒவ்வொரு உறுப்பு நாடுகளுக்கும் பிரதமர் மோடி கடைசியாக எப்போது பயணம் செய்தார் என்றும், இதற்கான தகவலை PMINDIA இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இதில், கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் நேபாளத்திற்கு ஐந்து முறையும், பூடானுக்கு மூன்று முறையும், இலங்கைக்கு மூன்று முறையும், வங்கதேசத்திற்கு இரண்டு முறையும், மாலத்தீவுக்கு இரண்டு முறையும், ஆப்கானிஸ்தானுக்கு இரண்டு முறையும், பாகிஸ்தானுக்கு ஒரு முறையும் சென்றுள்ளார். இந்த 18 வருகைகள் பிரதமர் மோடி தனது பதவிக் காலத்தில் மேற்கொண்ட 82 வெளிநாட்டுப் பயணங்களின் ஒரு பகுதியாகும்.
மார்ச் 2024-ல் பூடானுக்கு ஒரு நாள் பயணம் செய்ததைத் தவிர, அவர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வேறு எந்த அண்டை நாட்டிற்கும் செல்லவில்லை என்பதை அறிந்து ஏமாற்றமடைந்தேன். 18-வது சார்க் உச்சி மாநாடு நேபாளத்தின் காத்மாண்டுவில் நவம்பர் 2014-ஆம் ஆண்டில் நடந்தது. 19-வது உச்சிமாநாடு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் 2016-ஆம் ஆண்டில் நவம்பரில் திட்டமிடப்பட்டது. ஆனால், இந்தியா மற்ற நான்கு நாடுகளுடன் சேர்ந்து அதை புறக்கணித்தது. அதன்பிறகு, உச்சி மாநாடு நடத்தப்படவில்லை.
வாஜ்பாயின் கீழ் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங் சார்க் அமைப்பு "முழுமையான தோல்வி" (complete failure) என்று கூறினார். இந்த முடிவையே மோடி அரசு இறுதியாக ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.
டிராகன் மற்றும் யானை (Dragon and Elephant)
அவர் பதவியில் இருந்த காலத்தில், பிரதமர் மோடி 2015-ஆம் ஆண்டு முதல் ஜூன் 2018-ஆம் ஆண்டு வரை ஐந்து முறை சீனாவுக்குச் சென்றார். அதன் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் விரிவடைந்தது. மியான்மருக்கு இரண்டு முறையும் மொரீஷியஸுக்கு ஒரு முறையும் சென்றுள்ளார்.
சீனா அணுகுமுறையானது நரேந்திர மோடியை கவலையடையச் செய்கிறது. ஆனால், இது எல்லா வழிகளிலும் உதவ முன்வரவில்லை. இதனால், இந்தியாவின் கொள்கைகளை சீனாவானது கட்டுப்படுத்த அனுமதித்துள்ளது. இருநாடுகளின் உறவுகளிலிருந்து விலகல் பற்றிய விவாதங்களில், சீனா செயல் திட்டத்தை அமைக்கிறது. பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் கிடைக்கவில்லை. இராணுவ ரீதியாக, சீனா தனது படைகளை உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (Line of Actual Control (LAC)) வழியாக அதிகரித்துள்ளது.
சாலைகள், பாலங்கள், குடியிருப்புகள், முகாம்கள், நிலத்தடி வசதிகள் மற்றும் சேமிப்புத் தளங்களையும் உருவாக்குகிறார்கள். பொருளாதார ரீதியாக, சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 2013-14-ஆம் ஆண்டில் 37 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 2023-24-ஆம் ஆண்டில் 85 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இந்தியாவில் பணத்தை முதலீடு செய்ய விரும்புவோரை மொரீஷியஸ் வரவேற்கிறது. இதற்கிடையில், மியான்மர் ரோஹிங்கியா அகதிகளை இந்தியாவிற்குள் விரட்டுகிறது மற்றும் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகிறது. இந்த நிலைகளை மாற்றியதில் இந்தியா சாதித்தது என்ன? தெளிவாக, இதுவரை எதுவும் இல்லை.
அண்டை நாட்டாரை புறக்கணித்ததற்காக, நாம் ஒரு விலையைக் கொடுத்துள்ளோம். நேபாளத்தில் இடைக்கால ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. இதில், கே.பி.சர்மா ஒலி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஷேக் ஹசீனா வங்காளதேசத்திலிருந்து விரட்டியடிக்கப்படுவார் என்று நமக்கு எந்த விவரமும் இல்லை. ரணில் விக்கிரமசிங்கவுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் 42.3 சதவீத வாக்குகளுடன் இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அனுர திஸாநாயக்கவுடன் சிறிதளவே தொடர்பு வைத்திருந்தோம்.
மாலத்தீவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், திரு முகமது முய்ஸு செய்த முதல் நடவடிக்கை குறைந்த எண்ணிக்கையிலான இந்திய இராணுவ ஆலோசகர்களை வெளியேற்றியதுதான். பாகிஸ்தானைப் பொறுத்தவரை, மோடி அரசாங்கத்தின் கொள்கை அதன் உள்நாட்டு அரசியல் கணக்குகளால் ஆணையிடப்படுகிறது என்றும், அந்த நாட்டின் உண்மையான ஆட்சியாளர்கள் யார் என்பதைப் பற்றி கவலைப்படவில்லை.
தானாக ஏற்படுத்திக் கொண்ட காயம்
தெற்காசிய நாடுகளில் இந்தியாவின் செல்வாக்கு குறைந்து வருவது தானே ஏற்படுத்திக் கொண்ட காயமாகும். உலக விவகாரங்களில் இந்தியாவை 'அமைதி நடுநிலையாளர்' என்று முன்னிறுத்துவதன் மூலம் மோடியின் வெளியுறவுக் கொள்கை ஒரு பிரகாசத்தைப் பெற முயற்சிக்கிறது. ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளின் தலைவர்களுடனான செயல்பாடு மற்றும் சந்திப்புகள் மற்றும் G20, UN உச்சிமாநாடு மற்றும் QUAD ஆகியவற்றில் கலந்து கொள்வதைக் காணுங்கள்.
பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள் இருந்தாலும், அண்டை நாடுகளைப் பற்றிய அவரது கொள்கையானது அண்டை நாடுகளின் கடைசி (Neighbourhood Last) அல்லது அண்டை நாடுகளை இழந்தது (Neighbourhood Lost) என்று விவரிக்கப்படுகிறது என்பதையும் நாம் அவருக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.