கார்பன் தரநிலை நடைமுறைகளில் இந்தியாவின் கண்ணோட்டத்தை கருத்தில் கொள்ள வேண்டும். - சயந்தா கோஷ், ஜிதேந்திர வீர் சர்மா

  சர்வதேச கார்பன் நிதித் தளங்கள் (International carbon finance platforms) இந்திய விவசாயத்தின் தேவைகளுக்கு ஏற்றவாறு தங்கள் தரநிலைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.


  வேளாண் காடு வளர்ப்பில் இந்தியா குறிப்பிடத்தக்க ஆற்றலைக் கொண்டுள்ளது. காடு வளர்ப்பு, மீள்வளர்ப்பு மற்றும் தாவர வளர்ப்பு (Afforestation, Reforestation, and Revegetation (ARR)) முயற்சிகள் மூலம் கார்பன் நிதி திட்டங்களுடன் இணைவதற்கான வாய்ப்பை இது வழங்குகிறது. வேளாண் காடு வளர்ப்பு தற்போதைய 28.4 மில்லியன் ஹெக்டேரிலிருந்து 2050-ஆம் ஆண்டில் 53 மில்லியன் ஹெக்டேராக விரிவடைவதை அரசு இலக்காக நிர்ணயித்துள்ளது. இது தற்போது இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 8.65% மற்றும் நாட்டின் கார்பன் பங்குகளில் 19.3% பங்களிப்பை வழங்குகிறது. எனவே, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை (environmental sustainability) மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகிய இரண்டிற்கும் வேளாண் காடு வளர்ப்பு முக்கியம் என்பதை இது காட்டுகிறது. 


கார்பன் உமிழ்வைக் கணிசமாகக் குறைக்கும் ஆற்றல் வேளாண் காடு வளர்ப்புத் துறைக்கு (agroforestry sector) உண்டு என்று சமீபத்திய ஆய்வு  முடிவுகள் சுட்டி காட்டுகின்றன. தேவையான கொள்கைகள், நிதியுதவி மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டால்,  இந்தத் துறை கூடுதல் கார்பனை உள் வாங்கிக் கொள்ளலாம். குறிப்பாக, இது 2030-ஆம் ஆண்டிற்குள் 2.5 பில்லியன் டன்களுக்கு இணையான கார்பனை உள் வாங்கிக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


கார்பன் தரநிலைகளில் ”பொதுவான நடைமுறை”  (‘Common Practice’ in Carbon Standards)


கார்பன் நிதியில், "பொதுவான நடைமுறை" என்பது கூடுதலாக உள்ளதா என்பதை மதிப்பிடுவதற்கான ஒரு முக்கியமான தரநிலையாகும்.  இதன் பொருள் இது ஒரு பிராந்தியத்தில் வழக்கமாக செய்யப்படுவதை விட அதிகமாக உள்ளது என்பதாகும். காடு வளர்ப்பு, மீள்வளர்ப்பு மற்றும் தாவர வளர்ப்பு (Afforestation, Reforestation, and Revegetation (ARR))  திட்டங்களைப் பொறுத்தவரை, கார்பன் வரவுகளிலிருந்து நிதி உதவி இல்லாமல் இதே போன்ற நடவடிக்கைகள் ஏற்கனவே நடக்கின்றனவா என்பதைச் சரிபார்ப்பது இதில் அடங்கும். 


வெர்ராவின் சரிபார்க்கப்பட்ட கார்பன் தரநிலை (Verra’s Verified Carbon Standard (VCS)) அல்லது தங்கத் தரநிலை போன்ற கார்பன் தரநிலைகளின்படி, ஒரு செயல்பாடு "பொதுவான நடைமுறை" என்று கருதப்பட்டால், அது கார்பன் வரவுகளுக்கு தகுதி பெறாமல் போகலாம். ஏனெனில், இது கூடுதல் சுற்றுச்சூழல் நன்மைகளை வழங்காது. 


இருப்பினும், தற்போதைய உலகளாவிய கார்பன் தரநிலைகள் லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா அல்லது அமெரிக்கா போன்ற நாடுகளில் காணப்படும் பெரிய அளவிலான விவசாய நடைமுறைகளின் அடிப்படையில் பொதுவான நடைமுறைகளை கொண்டுள்ளன. இந்த  நாடுகளில் நில உடைமைகள் பெரியதாகவும் தொடர்ச்சியாகவும் உள்ளன. இதற்கு நேர்மாறாக, இந்தியாவில் சிறிய மற்றும் பிரிக்கப்பட்ட நில உடமைகள் உள்ளன. இந்திய விவசாயிகளில் 86.1% பேர் சிறு மற்றும் குறு விவசாயிகள், இரண்டு ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பதாக சமீபத்திய தகவல்கள் காட்டுகின்றன. இந்த விவசாயிகள் பெரும்பாலும் வேளாண் காடு வளர்ப்பை ஆங்காங்கே பயிர்களுடன் அல்லது தரிசு நிலத்தின் சிறிய திட்டுகளில் மரங்களை நடவு செய்கிறார்கள். 


இந்த நடைமுறைகள் நன்மை அளிக்கும் என்றாலும், அவை தற்போதைய கார்பன் தரங்களின் கீழ் கூடுதல் அளவுகோல்களை பூர்த்தி செய்யாமல் போகலாம், ஏனெனில் அவை இந்தியாவில் "பொதுவானவை" என்று கருதப்படுகின்றன. காடு வளர்ப்பு, காடுகளை வளர்ப்பது மற்றும் மீள்வளர்ப்பு கார்பன் நிதி திட்டங்களில் பங்கேற்பதில் இருந்து பல இந்திய விவசாயிகளை இது ஒதுக்கி வைப்பதால், இது சவாலை உருவாக்குகிறது. இதன் விளைவாக, கார்பன் வரவுகளிலிருந்து கூடுதல் வருமானம் ஈட்டும் வாய்ப்பை அவர்கள் இழக்கிறார்கள்.

 

இந்தியாவை மையமாகக் கொண்ட (Need for India-centric approaches) அணுகுமுறைகளின் தேவை 


இந்தியாவின் விவசாய நிலப்பரப்பு தனித்துவமானது. எனவே, பொதுவான நடைமுறை அளவுகோலை மறுவரையறை செய்ய வேண்டிய அவசர தேவை ஏற்பட்டுள்ளது.  இது இந்திய வேளாண் காடு வளர்ப்பில் உள்ள குறிப்பிட்ட சவால்கள் மற்றும் வாய்ப்புகளை சிறப்பாக எதிர்கொள்ள உதவும். இந்தியாவை மையமாகக் கொண்ட அணுகுமுறையானது, நில நிர்வாகத்தில் சிறிய மாற்றங்கள் கூட, அதிக ஒழுங்கமைக்கப்பட்ட வேளாண் காடு வளர்ப்பு நுட்பங்களைப் பயன்படுத்துதல் அல்லது மரங்களின் மூடியைப் பராமரிக்க கார்பன் நிதியைப் பயன்படுத்துதல் போன்றவை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். 


இந்தியாவின் சிறு விவசாயிகளின் தேவைக்கு ஏற்றவாறு பொதுவான நடைமுறைத் தரங்களைத் திருத்துவது, நாட்டின் கார்பன் உற்பத்தி  திறனைத் மேம்படுத்தும். இந்த மாற்றம் அதிகமான விவசாயிகளை கார்பன் நிதி திட்டங்களில் சேர அனுமதிக்கும், அவர்களுக்கு கூடுதல் வருமானத்தை அளிக்கும் மற்றும் இந்தியா அதன் காலநிலை இலக்குகளை அடைய உதவும். கூடுதலாக, இந்திய விவசாயத்தின் பிரிக்கப்பட்ட தன்மையை அங்கீகரிப்பதன் மூலம், கார்பன் கடன் தளங்கள் முறையான வேளாண் காடு வளர்ப்பை ஊக்குவிக்கும் ஊக்கத்தொகைகளை வடிவமைத்து, அதன் மூலம் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்பத்தலாம்.


வேளாண் காடு வளர்ப்பு, காடு வளர்ப்பு, மீள்வளர்ப்பு மற்றும் தாவர வளர்ப்பு (Afforestation, Reforestation, and Revegetation (ARR)) முன்முயற்சிகளுடன் இணைந்து, இந்தியாவின் விவசாயத் துறையில் உள்ள சவால்களுக்கு ஒரு நடைமுறை தீர்வை வழங்குகிறது. இந்த திட்டங்கள் மாற்று வாழ்வாதாரங்களை ஊக்குவிக்கின்றன மற்றும் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தை வழங்குகின்றன. குறைந்த உற்பத்தித்திறன், பருவமழையை நம்பியிருத்தல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற பிரச்சினைகளை சமாளிக்க உதவுகின்றன. வேளாண் காடு வளர்ப்பு, காடு வளர்ப்பு, மீள்வளர்ப்பு மற்றும் தாவர வளர்ப்பு திட்டங்களின் கார்பன் நிதி வேளாண் காடு வளர்ப்புக்கு மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நீடித்த அணுகுமுறையை வழங்குகிறது. 


இது பல இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளும் நிதி சார்ந்த பிரச்சனைகள் மற்றும் சந்தை சவால்களை எதிர்கொள்வதால் இத்தகைய நடைமுறைகளைச் செயல்படுத்துவது கடினமாக இருப்பதால் இந்த ஆதரவு முக்கியமானது. கணிக்க முடியாத வானிலை மற்றும் மாறிவரும் பயிர் விளைச்சலைக் கையாளும் விவசாயிகளுக்கு, ARR திட்டங்களில் சேருவது அவர்களின் வருமானத்தை பல்வகைப்படுத்த ஒரு வழியை வழங்குகிறது. 


தங்கள் பண்ணைகளில் மரங்களை நடவு செய்வதன் மூலமோ அல்லது பாழடைந்த வனப்பகுதிகளை மீட்டெடுப்பதன் மூலமோ, அவர்கள் கார்பன் வரிசைப்படுத்தல் மூலம் கூடுதல் வருவாய் ஈட்டலாம். பொருளாதார நன்மைகளைத் தவிர, ARR திட்டங்கள் மண் வளத்தை மேம்படுத்துதல், நீர் தக்கவைப்பை அதிகரித்தல் மற்றும் அரிப்பைக் குறைத்தல் போன்ற முக்கியமான சுற்றுச்சூழல் நன்மைகளை வழங்குகின்றன. இந்த நன்மைகள் விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும் நீண்ட கால நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும் உதவுகின்றன.

 

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு உதவுங்கள் 


எரிசக்தி மற்றும் வள நிறுவனம் (The Energy and Resources Institute (TERI)) போன்ற ஆராய்ச்சி நிறுவனங்கள் ஏற்கனவே இந்தியாவில் வேளாண் காடு வளர்ப்பு, காடு வளர்ப்பு, மீள்வளர்ப்பு மற்றும் தாவர வளர்ப்பு (Afforestation, Reforestation, and Revegetation (ARR))  திட்டங்களின் திறனைக் காட்டியுள்ளன. ரிசக்தி மற்றும் வள நிறுவனம் ஏழு மாநிலங்களில் 19 திட்டங்களை வழிநடத்தி 56,600-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயனளித்துள்ளது. இருப்பினும், இந்த முயற்சிகள் வளர, சர்வதேச கார்பன் நிதி தளங்கள் இந்திய விவசாயத்தின் உண்மைகளுடன் சிறப்பாக பொருந்தும் வகையில் தங்கள் தரங்களை புதுப்பிக்க வேண்டும். 


இந்தியா தனது வேளாண் காடுகள் துறையை விரிவுபடுத்துவதையும், கார்பன் நிதியைத் தட்டுவதையும் நோக்கமாகக் கொண்டிருப்பதால், சர்வதேச தரநிலைகள் இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட நிலைமைகளுக்கு ஏற்ப மாற்றியமைப்பது முக்கியம். இந்திய வேளாண் காடு வளர்ப்பு நடைமுறைகளை உள்ளடக்கும் வகையில் "பொதுவான நடைமுறை" (’Common Practice’) வழிகாட்டுதல்களை திருத்துவதன் மூலம் மில்லியன் கணக்கான சிறு மற்றும் குறு விவசாயிகள் காடு வளர்ப்பு, மீள்வளர்ப்பு மற்றும் தாவர வளர்ப்பு திட்டங்களில் சேர அனுமதிக்கும். 


இது நிலையான வளர்ச்சிக்கு ஆதரவளிப்பது மட்டுமல்லாமல், கிராமப்புற குடும்பங்களின் வருமானத்தை அதிகரித்து, இந்தியாவின் பொருளாதார மற்றும் சுற்றுசுழலுக்கு முக்கிய பங்காற்றும். வெர்ரா(Verra) மற்றும் கோல்ட் ஸ்டாண்டர்ட்(Gold Standard) போன்ற கார்பன் கிரெடிட் தளங்களுக்கு இந்தியாவை மையமாகக் கொண்ட தரநிலைகளின் தேவையை அங்கீகரிப்பது அவசியம். அப்போதுதான் வேளாண் காடுகள் மற்றும் காடு வளர்ப்பு, மீள்வளர்ப்பு மற்றும் தாவர வளர்ப்பு திட்டங்களின் முழு திறனையும் உணர முடியும். இது இந்தியாவின் விவசாயிகளுக்கு பசுமையான, மிகவும் நிலையான, பொருளாதார ரீதியாக வளமான எதிர்காலத்தை உருவாக்க உதவும்.

 

சயந்தா கோஷ், தி எனர்ஜி அண்ட் ரிசோர்சஸ் இன்ஸ்டிடியூட், நில வளங்கள் இணை உறுப்பினர். 

ஜிதேந்திர வீர் சர்மா, மூத்த இயக்குநர், நில வளங்கள், எரிசக்தி மற்றும் வள நிறுவன உறுப்பினர்.



Original article:

Share: