உணவு வீணாவதை குறைக்க இந்தியா என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம்? - அசோக் குலாட்டி, ராயா தாஸ்

 அறுவடைக்குப் பின்னர் உணவு வீணாவதைக் குறைத்தல் என்பது பொருளாதார செயல்திறனை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், ஊட்டச்சத்தை வழங்குதல், பசியை அகற்றுதல் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் ஆகியவை ஆகும். 


ஐக்கிய நாடுகள் சபை செப்டம்பர் 29-ம் தேதியை, உணவு இழப்பு மற்றும் கழிவுகள் (Food Loss and Waste (FLW)) பற்றிய சர்வதேச விழிப்புணர்வு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (Food and Agriculture Organisation (FAO)) மற்றும் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (United Nations Environment Programme (UNEP)) ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளுடன் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. ஏனெனில், உணவு இழப்பு மற்றும் கழிவுகள், உணவு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கிறது.


2023-ஆம் ஆண்டின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) அறிக்கையானது, அறுவடை மற்றும் சில்லறை விற்பனைக்கு இடையில் இழந்த உணவு உலகளாவிய உணவு உற்பத்தியில் 13.2 சதவீதம் என்று மதிப்பிடுகிறது. சில்லறை மற்றும் நுகர்வுக்கு இடையில் 17 சதவீத உணவு வீணடிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) மதிப்பிட்டுள்ளது. இதில் ஒன்றாக, உணவு இழப்பு மற்றும் கழிவு (FLW) உலகளாவிய உற்பத்தியில் சுமார் 30 சதவீதத்தைக் குறிக்கிறது. வீணாகும் உணவில் பாதியை சேமித்து பயன்படுத்தினால், உலகில் பசியால் வாடும் அனைத்து மக்களுக்கும் எளிதாக உணவளிக்க முடியும். இந்த சேமிப்புகள் உலகளாவிய பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் (greenhouse gas emissions) 8-10% குறைக்கலாம் மற்றும் மொத்த ஆற்றல் பயன்பாட்டில் 38% குறைக்கலாம். இது பூமிக்கு நன்மை பயக்கும். இருப்பினும், இந்த இலக்குகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.


எனவே, இந்த சாத்தியமான நன்மைகளைப் புரிந்துகொள்வது மற்றும் உணவு இழப்பு மற்றும் கழிவுகளை (FLW) குறைந்தது 50 சதவிகிதம் குறைக்க உறுதியளிப்பது அவசியம். இந்த அர்ப்பணிப்பு ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு (SDGs) பங்களிக்கும்.  


உணவு இழப்பு மற்றும் கழிகளின் (FLW) இந்த உலகளாவிய நிலையில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது? பசியை அகற்றவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் நாடு எவ்வாறு உதவ முடியும்? என்பதை பொறுத்து இந்த உண்விற்கான பயன்பாட்டை நாம் அறிய முடியும்.


2022-ஆம் ஆண்டில், நபார்டு ஆலோசனை சேவை மையம் (NABARD Consultancy Services (NABCONS)) நடத்திய அகில இந்திய அறுவடைக்கு பிந்தைய உணவு இழப்பு கணக்கெடுப்பானது, நாடு ரூ.1.53 டிரில்லியன் ($ 18.5 பில்லியன்) மதிப்புள்ள குறிப்பிடத்தக்க உணவு வீணாவதை எதிர்கொள்கிறது என்பதைக் காட்டுகிறது. இதில் 12.5 மில்லியன் மெட்ரிக் டன் (million metric tons (MMT)) தானியங்கள், 2.11 மில்லியன் மெட்ரிக் டன் எண்ணெய் வித்துக்கள் மற்றும் 1.37 மில்லியன் மெட்ரிக் டன் பருப்பு வகைகள் வீணாவது ஆகியவை அடங்கும். கூடுதலாக, மோசமான குளிர்கால உள்கட்டமைப்பு (poor cold chain infrastructure) காரணமாக ஆண்டுதோறும் சுமார் 49.9 மில்லியன் மெட்ரிக் டன் தோட்டக்கலை பயிர்கள் இழக்கப்படுகின்றன. இந்த இழப்பு இது புதிய விளைபொருட்கள் கிடைப்பதைக் குறைக்கிறது மற்றும் விவசாயிகளின் வருமானத்தை குறைக்கிறது. நபார்டு ஆலோசனை சேவை மையம் (NABCON) கணக்கெடுப்பு நுகர்வோர் கழிவுகளை மதிப்பிடவில்லை. எனெனில், அது குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம். குறிப்பாக, ஆடம்பரமான திருமணங்கள் மற்றும் பிற பெரிய கூட்டங்களில் உணவுக் கழிவுகள் ஆகியற்றை உள்ளடக்கியது. 


பெரும்பாலான ஆய்வுகள் வீணான உணவின் அளவை மதிப்பிடுவதில் கவனம் செலுத்துகின்றன. இருப்பினும், ICRIER-ADMI இன் ஆராய்ச்சியாளர்கள், உணவின் அளவும், அதன் தரத்திலும் உணவு வீணாவதை கணக்கிட்டனர்.  இதில், பஞ்சாப், பீகார் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள 1,200 விவசாயிகளிடம் இவர்கள் விரிவான ஆய்வு நடத்தினர். 2022-ஆம் ஆண்டில் நெல், கோதுமை, சோயாபீன் மற்றும் மக்காச்சோளம் போன்ற முக்கிய பயிர்களை இந்த கணக்கெடுப்புக்கு உள்ளடக்கியது.


சோயாபீன் 15.34% அறுவடைக்குப் பின் அதிகளவில் உணவு வீணாவதை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதில் மேலும், கோதுமை 7.87%, நெல் 6.37%, மக்காச்சோளம் 5.95% ஆகியவையும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புள்ளிவிவரங்களில் அளவு மற்றும் தர இழப்புகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.


இந்த பெரிய இழப்புகள் உணவுக் கழிவுகளைக் குறைக்க விநியோகச் அமைப்பு நிலை முழுவதும் சிறந்த தொழில்நுட்பத்தின் அவசியத்தை எடுத்துக்காட்டுகின்றன. அறுவடை, கதிரடித்தல், உலர்த்துதல் மற்றும் உணவு சேமிப்பின் போது அதிக இழப்பு ஏற்படுகிறது என்றும் ஆய்வு காட்டுகிறது. இது முக்கியமாக குறைந்த இயந்திரமயமாக்கல் (low mechanization) மற்றும் மோசமான தளவாட உள்கட்டமைப்பு (poor logistics infrastructure) காரணமாகும்.


உதாரணமாக, ஒருங்கிணைந்த அறுவடை இயந்திரங்களைப் பயன்படுத்தும் விவசாயிகள், பாரம்பரிய கைமுறை முறைகளை (traditional manual methods) நம்பியிருப்பவர்களுடன் ஒப்பிடும்போது நெல் வீணாவதில் குறிப்பிடத்தக்க குறைப்பைக் காண்கிறார்கள். அறுவடை மற்றும் உலர்த்துதல் ஆகியவற்றில் இயந்திரமயமாக்கப்பட்டால், நெல்லின் ஒட்டுமொத்த இழப்பு வெறும் 2.84 சதவீதமாக குறையும் என்பதை ஆய்வு வெளிப்படுத்துகிறது. 2019-ஆம் ஆண்டில் அகில இந்திய கடன் மற்றும் முதலீட்டு ஆய்வின் (All-India Debt and Investment Survey (AIDIS)) படி, இந்தியாவில் 4.4 சதவீத விவசாயி குடும்பங்கள் மட்டுமே டிராக்டர்களை வைத்துள்ளனர் எனவும், இதில் குறிப்பிட்ட 5.3 சதவீதம் பேர் பவர் டில்லர்கள் (power tillers), அறுவடை இயந்திரங்கள் (harvesters) அல்லது கதிரடிக்கும் இயந்திரங்களை (threshers) வைத்துள்ளனர். 


இந்திய விவசாயக் குடும்பங்களில் 86 சதவீதத்திற்கும் மேலான சிறு மற்றும் குறு விவசாயிகள், பெரும்பாலும் விலையுயர்ந்த இயந்திரங்களை வாங்க முடியாது. இதனால், நெல்லுக்காக, பஞ்சாபில் 97 சதவீத குடும்பங்கள் ஒருங்கிணைந்த அறுவடை இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றன. அதே சமயம், பீகாரில் 10 சதவீத நெல் உற்பத்தி செய்யும் குடும்பங்கள் மட்டுமே கூட்டு அறுவடை இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றன. பண்ணை இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்க, விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் (Farmer Producer Organisations (FPOs)) மற்றும் தனிப்பயன் பணியமர்த்தல் மையங்கள் (Custom Hiring Centres (CHC)) குழு குத்தகை ஏற்பாடுகள் மற்றும் பண்ணை இயந்திரங்களின் "சேவை வழங்கல்" (uberisation) மூலம் உதவ முடியும்.


உணவு இழப்புகளைக் குறைக்க சரியான உலர்த்துதல் மற்றும் சேமிப்புக்கான உள்கட்டமைப்பு அமைப்பது மிக முக்கியம். பாரம்பரிய சூரிய உலர்த்தும் முறைகள் பல அபாயங்களைக் கொண்டுள்ளன. வெளிநாட்டு பொருட்களைச் சேர்ப்பது, சீரற்ற உலர்த்துதல் மற்றும் ஈரப்பதத்தை வெளிப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். இத்தகைய காரணிகள் மைக்கோடாக்சின் மாசுபாட்டிற்கு (mycotoxin contamination) வழிவகுக்கும். சூரிய உலர்த்திகள் (Solar dryers) மற்றும் நீர் இழப்பு (dehydrators) உணவு இழப்பைக் குறைக்க ஒரு வழியை வழங்குகின்றன. அவை அழிந்துபோகக்கூடிய பொருட்களின் அடுக்கு ஆயுளை நீட்டிக்க உதவுகின்றன. இந்த பசுமைத் தொழில்நுட்பங்கள் சிறு-குறு விவசாயிகளுக்கு செலவு குறைந்தவை, அவை காலநிலைக்கு ஏற்றவை மற்றும் பொருத்தமான கொள்கை உருவாக்கம் மூலம் ஊக்குவிக்கப்பட வேண்டும்.


மேலும், இந்தியாவில் உணவு சேமிப்புக்கான உள்கட்டமைப்பு போதுமானதாக இல்லை. 2021-ஆம் ஆண்டில் இந்திய தானிய சேமிப்பு மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (IGMRI) படி, மோசமான சேமிப்பு வசதிகள் காரணமாக மொத்த உணவு தானிய உற்பத்தியில் அறுவடைக்கு பிந்தைய உணவு இழப்புகள் சுமார் 10 சதவீதம் ஆகும். சமீபத்தில், இந்திய அரசு ஒரு பெரிய தானிய சேமிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த முயற்சி இந்தியாவின் வேளாண் முறையை நவீனமயமாக்குவதற்கான பரந்த உத்தியின் ஒரு பகுதியாகும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 70 மில்லியன் மெட்ரிக் டன் உணவு சேமிப்புக்கான திறனை விரிவுபடுத்துவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டம் முறையாக செயல்படுத்தப்பட்டால், உணவு சேமிப்பு நிலையில் அறுவடைக்குப் பின் உணவு வீணாவதைக் குறைக்கும் திறனைக் கொண்டுள்ளது. 


இயந்திரமயமாக்கல், மேம்படுத்தப்பட்ட சேமிப்பு மற்றும் திறமையான போக்குவரத்து அமைப்புகள் ஆகியவை தொழில்நுட்பம் உதவக்கூடிய முக்கிய பகுதிகளாகும். இருப்பினும், தொழில்நுட்பம் மட்டும் போதாது. சிறு மற்றும் குறு விவசாயிகள் இந்த முன்னேற்றங்களை அணுகுவதற்கு கொள்கை ஆதரவு தேவை.  1987-ஆம் ஆண்டின் சணல் பேக்கேஜிங் பொருள் சட்டம் (Jute Packaging Material Act (JPMA)) அரிசி மற்றும் கோதுமையை பேக்கேஜிங் செய்வதற்கு சணல் பைகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது. சணல் மக்கும் தன்மையுடையது என்றாலும், அது நிறைய தண்ணீரை உட்கொள்கிறது மற்றும் தீவிர உழைப்பு தேவைப்படுகிறது. இது வெப்பமண்டல காலநிலையில் எலிகள் மூலம் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் திருட்டு அபாயத்தையும் அதிகரிக்கிறது.


எனவே, காற்று புகாத பைகளை பயன்படுத்த அனுமதிக்க சணல் பேக்கேஜிங் பொருள் சட்டம் (JPMA) மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். இந்த பைகள் சேமிப்பு மற்றும் போக்குவரத்தின் போது ஏற்படும் இழப்பைக் குறைக்கும்.



Original article:

Share: