தென்னிந்தியாவில் முதியோர்களின் நிலைமை குறித்து ஏன் கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன? இந்த நிலைமை சமூக மற்றும் பொருளாதாரத் தாக்கத்தால், அதிக குழந்தைகளைப் பெற மக்களை ஊக்குவிக்க முடியுமா? உள்-இடப்பெயர்வு என்ன விதமான பங்கை வகிக்க முடியும்?
ஆந்திரப் பிரதேசத்தில் வசிக்கும் மக்கள், அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் சட்டத்தை உருவாக்கி வருவதாக ஆந்திர முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். மேலும், எங்கள் மாநிலம் ஏற்கனவே மக்கள்தொகையில் பற்றாக்குறையில் உள்ளோம் எனவும், ஒரு குடும்பத்தில் இரண்டுக்கும் குறைவான குழந்தைகளைப் பெற்றிருப்பது இளைஞர்களின் எண்ணிக்கையின் விரைவான வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது என்று இவர் குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக, தென் மாநிலங்களின் கவலைகள் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸிடம் சந்திரபாபு நாயுடு பேசியுள்ளதாவது, மாநிலங்களில் தொகுதி எல்லை நிர்ணயத்திற்குப் பிறகு குறைவான மக்கள்தொகையால் நாடாளுமன்றத்தில் தங்கள் பிரதிநிதித்துவத்தை பாதிக்கலாம் என்று கவலைப்படுவதாகவும், தென்னிந்தியாவில் கருவுறுதல் விகிதம் குறைவாக இருப்பதாகவும், மேலும் ஏற்கனவே முதியோர்களின் பிரச்சினையை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலைமை, படிப்படியாக வட இந்தியாவையும் பாதிக்கும் அபாயம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
திங்களன்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், குறைந்த மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தால், தென்னிந்தியாவின் நாடாளுமன்றத் தொகுதிகளில் பங்கு குறையும் சாத்தியம் குறித்து பேசுகையில் "ஏன் 16 குழந்தைகளை இலக்காகக் கொள்ளக்கூடாது?" என்று கேலி செய்தார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021-ம் ஆண்டில் தாமதமாகியுள்ள நிலையில், மிக சமீபத்தில் கிடைக்கக்கூடிய மக்கள் தொகை கணிப்புகள், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்குள் உள்ள ஒரு தொழில்நுட்பக் குழுவின் 2020-ம் ஆண்டு அறிக்கையிலிருந்து வந்துள்ளன.
இந்தியாவின் மக்கள் தொகை ஒவ்வொரு ஆண்டும் அதிகளவு முதியோர்களை கொண்டுள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின் சதவீதம் ஒட்டுமொத்தமாக உயரும். இருப்பினும், தென் மாநிலங்களை விட வட மாநிலங்களில் முதியோர்களின் அதிகரிப்பு குறைவாக இருக்கும். ஏனென்றால், பெரும்பாலான தென் மாநிலங்கள் வட மாநிலங்களை விட விரைவில் குறைந்த கருவுறுதல் விகிதத்திற்கு (lower fertility rate) மாறிவிட்டன. உதாரணமாக, ஆந்திராவின் 20 ஆண்டுகளுக்குப் பிறகுதான், உத்தரப் பிரதேசம் கருவுறுதலின் மாற்று நிலையை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2011 முதல் 2036-ம் ஆண்டு வரை, இந்தியாவின் மக்கள் தொகை 31.1 கோடி கூடுதலாக அதிகரிக்கும். இந்த அதிகரிப்பில் கிட்டத்தட்ட பாதி, அதாவது 17 கோடி - பீகார், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களின் எண்ணிக்கையின் கூடுதலாக இருக்கும். இந்த காலகட்டத்தில், மொத்த மக்கள்தொகை அதிகரிப்பில் உத்தரப்பிரதேசம் 19% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
* 2011-2036 ஆம் ஆண்டில் மொத்த மக்கள் தொகை அதிகரிப்பில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகிய ஐந்து தென் மாநிலங்களின் பங்களிப்பு 2.9 கோடி மட்டுமே பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மொத்த அதிகரிப்பில் 9% ஆகும்.
* கருவுறுதல் குறைந்து வருவதாலும், சராசரி ஆயுட்காலம் அதிகரிப்பதாலும், மக்கள்தொகையில் முதியோர்களின் எண்ணிக்கை 2011-ம் ஆண்டில் 10 கோடியிலிருந்து 2036-ம் ஆண்டில் 23 கோடியாக இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில், மக்கள்தொகையில் முதியோர்களின் பங்கு 8.4% முதல் 14.9% வரை உயரும்.
* கேரளாவில், மற்ற மாநிலங்களைவிட மிகக் குறைந்த கருவுறுதல் மற்றும் இறப்பு விகிதங்கள் முன்னதாகவே எட்டப்பட்டன. இதன் விளைவாக, 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் விகிதம் 2011-ம் ஆண்டில் 13% ஆக இருந்து 2036-ம் ஆண்டில் 23% ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, 4-ல் ஒருவர் முதியவராக இருப்பார். மாறாக, உத்தரபிரதேசத்தின் மக்கள் தொகை இளைஞர்களைக் கொண்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உத்திரப் பிரதேசத்தில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களின் பங்கு 2011-ம் ஆண்டில் 7% ஆக இருந்து 2036-ம் ஆண்டில் 12% ஆக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
முதியோர்களைப் பற்றிய சந்திரபாபு நாயுடுவின் கவலை மற்றும் குறைந்த மக்கள்தொகை பற்றிய ஸ்டாலினின் குறிப்பு போன்ற இரண்டு வேறுபட்ட பிரச்சினைகளை குறிப்பிட்டுள்ளன.
பொதுவாக, மொத்த மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு உழைக்கும் மக்களை கொண்டுள்ளதால், அது "பிளவு" (dividend) என்று பரிந்துரைக்கிறது. ஏனென்றால், மக்கள் தொகையில் வருமான ஈட்டாத மற்றும் மற்றவர்களைச் சார்ந்திருக்கும் சதவீதத்தை அளவிடும் சார்பு விகிதம் 50% க்கும் குறைவாக உள்ளது.
இரண்டு வகையான சார்புநிலைகள் உள்ளன. அவை, 15 வயதுக்குட்பட்ட தனிநபர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவார். முதியோர்களின் அதிக சதவிகிதம், இந்த வளர்ந்து வரும் மக்கள்தொகையை கவனித்துக்கொள்வதற்கு அரசு அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும் என்பதைக் குறிக்கிறது.
ஒரு மாநிலத்தின் மொத்த மக்கள்தொகை மற்ற மாநிலங்களைக் காட்டிலும் குறைவாக இருப்பது வேறுபட்டது. தேர்தல் எல்லை நிர்ணயம் (electoral delimitation) குறித்த பொது விவாதங்களில் இந்த கவலை கவனம் பெற்றுள்ளது. மக்களவையில் குறைவான இடங்களுடன் தென் மாநிலங்களுக்கு பாகுபாடு விதிக்கப்படலாம் என்ற அச்சம் உள்ளது. இது வடக்கு மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, குறிப்பாக "BIMARU" மாநிலங்களுடன் ஒப்பிடும்போது அவர்களின் முந்தைய மக்கள்தொகை மாற்றத்தின் காரணமாகும்.
ஜப்பான், சீனா மற்றும் ஐரோப்பாவில் உள்ள நாடுகள் போன்ற சில நாடுகளும் முதியோர்களுடன் போராடுகின்றன என்று சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டார். இருப்பினும், மேம்பாடாக மற்றும் கல்வியறிவு பெற்றவர்கள் அதிக குழந்தைகளைப் பெற ஊக்குவிக்க முடியும் என்பதற்கு உறுதியான சான்றுகள் எதுவும் இல்லை.
சமூக மக்கள்தொகை ஆய்வாளர் சோனால்டே தேசாய், மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற பல்கலைக்கழக பேராசிரியர் எமரிட்டா மற்றும் ஜே.என்.யூவின் பி.எம்.குல்கர்னி மற்றும் தீபக் மிஸ்ரா போன்ற கல்வியாளர்கள் மகப்பேறு சார்பு கொள்கைகள் (pro-natalist policies) மிகக் குறைந்த வெற்றியையே பெற்றுள்ளன என்பதில் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளனர்.
மகப்பேறு ஆதரவு கொள்கைகள் உலகில் எங்கும் திறம்பட செயல்படவில்லை என்று சோனால்டே தேசாய் சுட்டிக்காட்டினார். இதில் ஜப்பான், சீனா, கொரியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் அடங்கும். ஸ்காண்டிநேவிய நாடுகளில் இந்தக் கொள்கைகள் சில நேர்மறையான விளைவைக் கொண்ட ஒரே இடமாக உள்ளது. இந்த நாடுகளில், இந்த கொள்கைகள் குடும்ப ஆதரவு, குழந்தை பராமரிப்பு ஆதரவு, பாலின சமத்துவம் மற்றும் தந்தைவழி விடுப்பு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துகின்றன.
இந்தக் கருத்துக்கள், மக்கள் தொகைப் பிரச்சினை தொடர்பான அரசியல்வாதிகளின், குறிப்பாக தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் பார்வையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை எடுத்துக்காட்டுகின்றன.
ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா எதிர்கொள்ளும் முக்கிய கவலை அதிகமான மக்கள்தொகை வளர்ச்சியாகும். இது அதிக அளவு கருவுறுதல் (ஒரு பெண்ணுக்கு பிறப்பு) மூலம் தூண்டப்பட்டது. ஒரு காலத்தில் இதன் நிலைமை மிகவும் கடுமையானதாகக் கருதப்பட்டது. ஏனெனில், இந்தியா தனது மில்லியன் கணக்கான மக்களுக்கு உணவளிக்க போதுமான உணவு இருக்குமா என்று பலர் கவலைப்பட்டனர்.
பல ஆண்டுகளாக, இந்தியா அதன் மக்கள்தொகை வளர்ச்சியைக் குறைக்க முடிந்தது. குறிப்பாக, பல தென் மாநிலங்களில் இந்த வெற்றி குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, 2004-ம் ஆண்டில், ஒரு பெண்ணுக்கு சராசரியாக 2.1 குழந்தைகள் என்ற விகிதத்தில் கருவுறுதலின் மாற்று நிலையை ஆந்திரப் பிரதேசம் அடைந்தது. கேரளா (1988), தமிழ்நாடு (2000), இமாச்சல பிரதேசதம் (2002) மற்றும் மேற்கு வங்காளத்தைத் (2003) தொடர்ந்து இந்த மைல்கல்லை எட்டிய ஐந்தாவது இந்திய மாநிலமாக அமைந்தது. ஆந்திராவில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சித் தேர்தலுக்கு போட்டியிடுவதைத் தடுக்கும் சட்டம் முன்பு இருந்தது. இருப்பினும், சந்திரபாபு நாயுடு இந்த சட்டத்தை ரத்து செய்துள்ளார்.
இருப்பினும், தனிப்பட்ட மாநிலங்கள் கடந்த காலங்களை விட கணிசமாக குறைந்த அளவிலான கருவுறுதலைக் கொண்டிருந்தாலும், இந்தியாவின் மக்கள்தொகையின் வேகம் என்பது இப்போது உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது.
இருப்பினும், குடும்பங்கள் அதிக குழந்தைகளைப் பெறுவதற்கு நிதி உதவி வழங்குவதற்கு போதுமானதாக இல்லை என்று அவர் வலியுறுத்தினார்.
"எளிமையான தீர்வு (உள்) இடப்பெயர்வு" என்று தேசாய் கூறினார். மொத்த மக்கள்தொகைக்கு பங்களிக்கும் மூன்று காரணிகள் உள்ளன: கருவுறுதல், இறப்பு மற்றும் இடம்பெயர்வு ஆகியவை ஆகும். தேசாய் மற்றும் குல்கர்னி இருவரும் வடக்கு மற்றும் தென்னிந்தியாவிற்கு இடையிலான மக்கள்தொகை மாற்றத்தின் சீரற்ற வேகத்தால் ஏற்படும் மக்கள்தொகை வேறுபாட்டை சமப்படுத்துவதற்கு உள்-இடப்பெயர்வு உதவும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இடப்பெயர்வு ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிறது. "மேலும், தென் மாநிலங்களில் உழைக்கும் வயதில் உள்ளவர்கள் கிடைப்பார்கள்" என்று தேசாய் கூறினார். சுருக்கமாக, இதற்கான இலக்கு மாநிலங்கள் ஒரு இளைஞர்களை, அல்லது இவர்களின் கல்வியை உயர்த்துவதில் முதலீடு செய்ய வேண்டியதில்லை. உழைக்கும் வயதினர் புலம்பெயர்ந்தவர்களிடமிருந்து அவர்கள் உடனடியாக பயனடைவார்கள்.
இந்த மாதிரியைத்தான் அமெரிக்கா பல பத்தாண்டுகளாக பயன்படுத்தியுள்ளது. இது புலம்பெயர்ந்தோர், அவர்களின் பொருளாதார பங்களிப்பு மற்றும் கருவுறுதல் ஆகியவை அமெரிக்காவின் பொருளாதார ஆதிக்கத்தை உலகளவில் தக்கவைக்க உதவியுள்ளன.
குல்கர்னி மற்றும் மிஸ்ரா இருவரும் இந்தியா தனது தொழிலாளர்களின் பொருளாதார உற்பத்தியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதிக குழந்தைகளைப் பெறுவதற்குப் பதிலாக, இந்தியா அதன் தற்போதைய மக்கள்தொகையின் பிளவின் பலன்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.