பிரதமர் பி.வி. நரசிம்மராவ் அமைச்சரவையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நிதியமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, அவர் அசாமில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1993ஆம் ஆண்டு, அவரை நாடாளுமன்றத்திலிருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஒருவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இருப்பினும், மன்மோகன் சிங் அசாமின் "சாதாரண குடியிருப்பாளர்" (an ordinary resident) அல்ல என்று மனுதாரர் கூறினார். மனுதாரரின் கூற்றை நீதிமன்றம் நிராகரித்தது.
கடந்த மாதம் காலமான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தனது ஆரம்பகால அரசியல் வாழ்க்கையில் ஒரு சர்ச்சையை எதிர்கொண்டார். அரசியலில் நுழைவதற்கு முன்பு, அவர் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தார். 1991-ல், அவர் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். சில மாதங்களுக்குப் பிறகு, பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் அவரை நிதியமைச்சராக நியமித்தார். அதன் பிறகு, மன்மோகன் சிங் அசாமில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அந்த நேரத்தில், மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு வேட்பாளர்கள் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று சட்டம் கூறியது. முன்னாள் அசாம் முதல்வர் ஹிதேஷ்வர் சைகியாவுக்குச் சொந்தமான கவுகாத்தியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்ததாக மன்மோகன் சிங் கூறினார். இருப்பினும், தேர்தலுக்கு முன்பு, அவர் அசாமில் வசிக்கும் ஒரு சாதாரண குடியிருப்பாளராக இல்லை.
நான்கு பிரதிநிதித்துவங்கள்
1993 செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில், மெட்ராஸ் குடிமக்கள் முன்னேற்றக் குழுவின் தலைவரான கஸ்தூரி ராதாகிருஷ்ணன், குடியரசுத்தலைவருக்கு நான்கு மேல்முறையீடு மனுக்களை அனுப்பினார். மன்மோகன் சிங்கை மாநிலங்களவையிலிருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவருக்கு எந்த பதிலும் கிடைக்காததால், அவர் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தை அணுகினார். அரசியலமைப்பின் பிரிவு 103(2)-ன் படி, தனது மேல்முறையீடு மனுக்களை தேர்தல் ஆணையத்திற்கு ஒரு கருத்துக்காக அனுப்புமாறு குடியரசுத்தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
மன்மோகன் சிங் அசாமின் "சாதாரண குடியிருப்பாளர்" அல்ல என்பது அவரது வாதமாக இருந்தது. எனவே, அவர் சட்டப்பூர்வமாக மாநிலத்தில் வாக்காளராகப் பதிவு செய்ய முடியாது. இதன் அடிப்படையில், அரசியலமைப்பின் பிரிவு 102(1)(e)-ன் கீழ் மன்மோகன் சிங் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாகக் கருத வேண்டும் அவர் கூறினார்.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்குமுன், நீதிமன்றம் மூன்று விஷயங்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது. முதலாவதாக, அரசியலமைப்பின் 361வது பிரிவால் வழங்கப்பட்ட விலக்குரிமையைக் கருத்தில் கொண்டு, குடியரசுத்தலைவருக்கு எதிராக ஒரு நீதிப் பேராணை (writ) மனுவை தாக்கல் செய்ய முடியுமா என்பதை நீதிமன்றம் பரிசீலித்தது. இரண்டாவதாக, மனுதாரர், கஸ்தூரி ராதாகிருஷ்ணனுக்கு பொது நல வழக்காக நீதிப் பேராணை மனுவை தாக்கல் செய்ய உரிமை உள்ளதா என்பதை நீதிமன்றம் ஆய்வு செய்தது. மூன்றாவதாக, மனுதாரர் தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கான தெளிவான கோரிக்கையை முன்வைத்தாரா என்பதை நீதிமன்றம் பரிசீலித்தது. இது அரசியலமைப்பின் பிரிவு 102(1)(e)-ஐ அடிப்படையாகக் கொண்டது. அத்தகைய கோரிக்கை முன்வைக்கப்பட்டால், மனுதாரரின் கோரிக்கையின்மீது குடியரசுத்தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், கடந்தகால வழக்குகளை முன்னுதாரணமாக மேற்கோள் காட்டி வாதிட்டார். தகுதி நீக்க குற்றச்சாட்டு இருக்கும்போது, அது சம்பந்தமாக முடிவெடுப்பதற்கு முன்பு குடியரசுத்தலைவர் தேர்தல் ஆணையத்தின் கருத்தைப் பெற வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி ராஜு ஒரு குறிப்பிட்ட கேள்வியைக் கேட்டபோது, மனுதாரரின் வழக்கறிஞர் கடந்த கால வழக்கை மேற்கோள் காட்டினார். அந்த வழக்கில், உயர் நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி நியமித்தது ரத்து செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், நீதிமன்றம் மனுவை விசாரிப்பதற்கு எந்தத் தடையும் இருக்கக்கூடாது என்று வழக்கறிஞர் வாதிட்டார்.
விலக்கு நீட்டிக்கப்பட்டது
சமர்ப்பிப்புகளை மதிப்பாய்வு செய்த பிறகு, நீதிபதி ராஜு, "இந்த நீதிப் பேராணை மனுவில் கோரப்படும் நிவாரணத்தை நிதிமன்றத்தால் இந்தக் கட்டத்தில் வழங்க முடியாது என்று கூறினார். பிரிவு 361 குடியரசுத்தலைவருக்கு விலக்குரிமை அளிக்கிறது (immunity conferred) என்று நீதிபதி விளக்கினார். இந்த விலக்குரிமை குடியரசுத்தலைவருக்கு தனது அதிகாரப்பூர்வ கடமைகளில் செய்யும் செயல்களுக்கு மட்டுமல்ல, தனது அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் செய்வதாகக் கூறப்படும் செயல்களுக்கும் பொருந்தும்.
“மனுதாரர் தனது கடமைகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது குறித்து குடியரசுத் தலைவருக்கு ஒரு குறிப்பிட்ட வழிகாட்டுதலைக் கேட்கிறார். பிரிவு 361-ன் படி, மனுதாரரின் வேண்டுகோளுக்கு ஏற்ப இதைச் செய்ய முடியாது. மேலும், வழக்கின் உண்மைகளின் அடிப்படையில், மனுதாரர் எதிர்பார்த்த அளவுக்கு அல்லது விரைவாக பதில் அளிக்காததால், குடியரசுத்தலைவர் தனது கடமைகளை செய்ய தவறினர் என்று கருதுவதற்கு எந்த காரணமும் இல்லை என்றும் இது நீதிமன்றத்தின் தலையீட்டை நியாயப்படுத்தாது" என்று நீதிபதி குறிப்பிட்டார்.
மனுதாரருக்கு நீதிப் பேராணை மனுவை பராமரிக்க உரிமை இல்லை என்றும் நீதிமன்றம் நம்பியது. சென்னையில் உள்ள ஒரு சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிய மனுதாரர், அசாம் மக்களுக்காகப் பேச முடியாது என்று கூறினார். அசாம் மக்களால் நீதிமன்றத்தை தாங்களாகவே அணுக முடியவில்லை என்பது போல் இந்த மனு சித்தரிப்பதாக நீதிபதி சுட்டிக்காட்டினார். இந்த மனு விளம்பரம் பெறுவதை நோக்கமாகக் கொண்டதாகத் தெரிகிறது என்றும் நீதிபதி நினைத்தார்.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை
"இறுதியாக, மனுதாரர் பிரிவு 102(1)(e)-ன் கீழ் எந்தவொரு தகுதியிழப்பும் இருப்பதாகக் காட்டவோ அல்லது நிரூபிக்கவோ இல்லை". இந்தத் தகுதியிழப்புக்கு பிரிவு 103(2)-ன் கீழ் குடியரசுத்தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதி நீக்கம் நிரூபிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியை முதலில் முடிவெடுப்பது நீதிமன்றமோ அல்லது குடியரசுத்தலைவரோ அல்ல என்பது உண்மைதான். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் கருத்தைப் பெற்ற பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட வேண்டும். இருப்பினும், ஒவ்வொரு மனுவும், பிரிவு 102(1)(e)-ன் கீழ் தகுதி நீக்கம் செய்யப்படவில்லை அல்லது குற்றம் சாட்டப்படவில்லை என்றாலும், பிரிவு 103(2)-ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை" என்று நீதிபதி கூறினார்.
நான்காவது பிரதிவாதியான மன்மோகன் சிங், நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட எந்தவொரு சட்டத்தின் கீழும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்ற எந்தவொரு குறிப்பிட்ட கூற்றையும் பிரதிநிதித்துவங்களிலும் பிரமாணப் பத்திரத்திலும் சேர்க்கப்படவில்லை என்று நீதிபதி கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தகுதி நீக்கம் குறித்த சட்டம் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் (Representation of the People Act) பிரிவுகள் 8, 8A, 9, 9A, 10, 10A மற்றும் 11A-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
நான்காவது பிரதிவாதியான மன்மோகன் சிங்கை எந்தச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய முடியும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும், பிரிவு 103(2)-ன் கீழ் குடியரசுத்தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார். எனவே, இந்த நீதிப் பேராணை (writ) மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாது என்றும் இந்த மனுவை நிராகரிப்பதாக நீதிபதி தனது உரையை முடித்தார். 2003ஆம் ஆண்டு, மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஒரு மாநிலத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும் என்ற தேவையை நீக்கி நாடாளுமன்றம் ஒரு சட்டத்தை இயற்றியது. 2004ஆம் ஆண்டில், தமிழ்நாட்டின் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சு. திருநாவுக்கரசர், பாஜக வேட்பாளராக சொந்த மாநிலம் அல்லாத வேறு மாநிலத்திலிருந்து (மத்தியப் பிரதேசம்) மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதன்மையான நபர்களில் ஒருவராக இருந்தார்.