முக்கிய உலகளாவிய வர்த்தக நாணயமாக இருக்கும் டாலரை மாற்ற BRICS மற்றும் இந்தியா முயற்சி செய்கின்றனவா? - ரவி தத்தா மிஸ்ரா

 BRICS மீது 100% வரி விதிக்கப்படும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். டாலர் மதிப்பிழப்பு மற்றும் ரூபாயின் சர்வதேசமயமாக்கலில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? இதில் உள்ள சிக்கல்கள் மற்றும் கவலைகள் என்ன?


உலகளாவிய வர்த்தகத்தில் டாலரின் பயன்பாட்டைக் குறைப்பதற்கு பிரிக்ஸ் நாடுகள் ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், ஜனவரி 20 திங்கட்கிழமை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரிக்ஸ் நாடுகள் மீது 100% இறக்குமதி வரிகளை விதிக்கும் தனது திட்டத்தை மீண்டும் வலியுறுத்தினார். 


உலகளாவிய வர்த்தகத்தில் டாலரின் பங்கைக் குறைப்பது குறித்து பிரிக்ஸ் நாடுகள் பரிசீலித்தாலும் கூட 100% வரியை எதிர்கொள்ள நேரிடும் என்று டிரம்ப் கூறினார். ஓவல் அலுவலகத்தில் (Oval Office) நடந்த கையெழுத்து விழாவின் போது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்ததாக ANI செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது.


முன்னதாக, கேபிடால் ரோட்டுண்டாவில் (capitol rotunda) சத்தியப்பிரமாணம் எடுத்த பிறகு அவர் தனது தொடக்க உரையை நிகழ்த்தினார். தனது உரையில், தனது நிர்வாகம் "வெளிப்புற வருவாய் சேவை"யை (External Revenue Service) அமைக்கும் என்று அவர் கூறினார். இந்த சேவை அனைத்து கட்டணங்கள், வரிகள் மற்றும் வருவாய்களையும் சேகரிக்கும். "நமது குடிமக்களை மேம்படுத்த வெளிநாடுகளுக்கு வரி விதிப்பதே" இலக்காக இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தது.


கேபிடால் ரோட்டுண்டா (capitol rotunda) என்பது, அமெரிக்கக் நாடாளுமன்றக் கட்டிடத்தின் குவிமாடத்தால் மூடப்பட்ட சுற்று கட்டிடத்தைக் குறிக்கும்.


டிசம்பர் 2024-ம் ஆண்டில், அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப் சமூக ஊடகங்களில் பதிவிட்டு அவர் குறிப்பிட்டதாவது, "பிரிக்ஸ் நாடுகளிடமிருந்து எங்களுக்கு ஒரு உறுதிப்பாடு தேவை. அவர்கள் ஒரு புதிய பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்கக்கூடாது அல்லது சக்திவாய்ந்த அமெரிக்க டாலரை மாற்ற வேறு எந்த நாணயத்தையும் ஆதரிக்கக்கூடாது. அவர்கள் அவ்வாறு செய்தால், அவர்கள் 100 சதவீத வரிகளை எதிர்கொள்ள நேரிடும். அவர்கள் சிறந்த அமெரிக்க பொருளாதாரத்திற்கான அணுகலை இழக்க நேரிடும் என்றும் எதிர்பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.


BRICS நாடுகள் டாலருக்கு பதிலாக புதிய நாணயத்தை திட்டமிட்டுள்ளதா?


உலகெங்கிலும் உள்ள நாடுகள் அமெரிக்க டாலரைச் சார்ந்திருப்பதைக் குறைக்க முயற்சித்து வருகின்றன. அமெரிக்கா தலைமையிலான உலகளாவிய நிதி அமைப்பைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் அவர்கள் விரும்புகிறார்கள். அமெரிக்கா ரஷ்யாவை உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதி தொலைத்தொடர்பு சங்கத்திலிருந்து (Society for Worldwide Interbank Financial Telecommunication (SWIFT)) நீக்கிய பிறகு இந்த உந்துதல் தீவிரமாகிவிட்டது. சர்வதேச நிதி பரிவர்த்தனைகளில் SWIFT முக்கிய பங்கு வகிக்கிறது.


ஈரான் 2012-ம் ஆண்டில் SWIFT-லிருந்து நீக்கப்பட்டது. இந்த நடவடிக்கை 2015-ம் ஆண்டு தெஹ்ரானை பேச்சுவார்த்தைக்குக் கொண்டுவருவதற்கான ஒரு காரணியாகக் கருதப்பட்டது. 2018-ம் ஆண்டில், முதல் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்கா ஈரான் மீது எண்ணெய் மற்றும் நிதித் தடைகளை மீண்டும் விதித்தபோது, ​​SWIFT மீண்டும் அந்நாட்டில் உள்ள வங்கிகளுக்கான அணுகலை நிறுத்தியது.


ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த 2023 பிரிக்ஸ் உச்சிமாநாட்டில், பிரேசிலின் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, புதிய பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்குவது கட்டண விருப்பங்களை அதிகரிக்கும் என்றும் இதனால், தங்களின் பாதிப்புகளைக் குறைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.


2024 அக்டோபரில் கசானில் நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், "டாலர் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை நாம் தெளிவாகக் காணலாம். இதை நடைமுறைப்படுத்துபவர்களால் இது ஒரு பெரிய தவறு என்று நான் நம்புகிறேன்" என்று கூறினார்.


ஆம். 2022-ம் ஆண்டில், இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India (RBI)) சர்வதேச வர்த்தகத்திற்கான விலைப்பட்டியல் மற்றும் பணம் செலுத்துதல்களை இந்திய ரூபாயில் அனுமதித்தது. அமெரிக்க டாலரை நம்பியிருப்பதைக் குறைப்பதற்கும் இந்திய ரூபாயை சர்வதேசமயமாக்குவதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டது. உக்ரைனில் நடந்த போர் காரணமாக ரஷ்யா மீது தடைகள் விதிக்கப்பட்ட பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


கசானில் நடந்த ஒரு நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி, பிரிக்ஸ் நாடுகளிடையே நிதி ஒருங்கிணைப்பை அதிகரிப்பதற்கு இந்தியாவின் ஆதரவு குறித்து பேசினார். உள்ளூர் நாணயங்களில் வர்த்தகம் மற்றும் சுமூகமான எல்லை தாண்டிய பணம் செலுத்துதல் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்று அவர் வலியுறுத்தினார்.


நவம்பர் 2024-ம் ஆண்டில், மும்பையில் நடந்த இந்தியா-ரஷ்யா அரசுகளுக்கிடையேயான ஆணையக் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பேசியதாவது, "தேசிய நாணயங்களில் வர்த்தகத்தை சரிசெய்வது மிகவும் முக்கியமானது, குறிப்பாக தற்போதைய சூழ்நிலையில்" என்று அவர் கூறினார்.


இல்லை, தீவிரமாகவோ அல்லது தீங்கிழைக்கும் நோக்கத்திலோ அல்ல. இருப்பினும், இந்தியா இந்த பிரச்சினை குறித்து இயல்பான கவலையைக் வெளிப்படுத்தியுள்ளது.


அக்டோபர் 2024-ம் ஆண்டில், அமெரிக்க கொள்கைகள் பெரும்பாலும் சில நாடுகளுடனான வர்த்தகத்தை சிக்கலாக்குகின்றன என்று ஜெய்சங்கர் தெளிவுபடுத்தினார். இந்தியா தனது வர்த்தக நலன்களைப் பாதுகாக்க "தீர்வுகளை" நாடுகிறது. இருப்பினும், டாலரை குறிவைப்பதையோ அல்லது அதிலிருந்து விலகிச் செல்வதையோ அது நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை.


"நாங்கள் ஒருபோதும் டாலரை தீவிரமாக குறிவைத்ததில்லை. அது எங்கள் பொருளாதார, அரசியல் அல்லது இராஜதாந்திரக் கொள்கையின் ஒரு பகுதியாக இல்லை. வேறு சில நாடுகள் அவ்வாறு செய்திருக்கலாம். ஆனால், நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. இருப்பினும், எங்களுக்கு ஒரு இயல்பான கவலை உள்ளது. எங்கள் வர்த்தக கூட்டணி நாடுகளுடன் பலருக்கு பரிவர்த்தனைகளுக்கு டாலர்கள் இல்லை. இது அவர்களுடன் வர்த்தகத்தை நிறுத்துவதா அல்லது தீர்வு காண மாற்று வழிகளைக் கண்டுபிடிப்பதா என்பதை முடிவு செய்ய எங்களை கட்டாயப்படுத்துகிறது. டாலருக்கு எதிராக எந்த தீங்கிழைக்கும் நோக்கமும் இல்லை," என்று வாஷிங்டன் டிசியில் உள்ள அமெரிக்க சிந்தனைக் குழுவான கார்னகி எண்டோவ்மென்ட் ஃபார் இன்டர்நேஷனல் பீஸில் ஒரு கேள்விக்கு பதிலளித்த ஜெய்சங்கர் கூறினார்.


"டாலர் மதிப்பிழப்பு" (de-dollarisation) என்று அழைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடு என்ன?


டிசம்பர் 2024-ம் ஆண்டில், அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், இந்தியா "டாலர் மதிப்பிழப்பு" (de-dollarisation) செய்வதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்று கூறினார். வோஸ்ட்ரோ கணக்குகளை (Vostro accounts) அனுமதிப்பது மற்றும் உள்ளூர் நாணய வர்த்தக ஒப்பந்தங்களை (local currency trade agreements) உருவாக்குவது போன்ற சமீபத்திய நடவடிக்கைகள் இந்திய வர்த்தகத்தை "ஆபத்தை குறைப்பதற்கு" (de-risk) நோக்கமாகக் கொண்டவை என்று அவர் விளக்கினார்.


பிரிக்ஸ் நாடுகள் பகிரப்பட்ட நாணயத்தை உருவாக்குவது பற்றிப் பேசியிருந்தாலும், இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தாஸ் குறிப்பிட்டார்.


"இது டாலர் மதிப்பிழப்பு (de-dollarisation) பற்றியது அல்ல. இது நமது வர்த்தகத்தில் அபாயங்களைக் குறைப்பது பற்றியது" என்று தாஸ் கூறினார். "வெவ்வேறு பிராந்தியங்களில் BRICS நாடுகளின் பரவல் முக்கியமானது. ஒன்றுக்கொன்று நெருக்கமான நாடுகளைக் கொண்ட யூரோ மண்டலத்தைப் (Eurozone) போலல்லாமல், BRICS நாடுகள் பரவியுள்ளன. இது தனித்துவமான சவால்களை உருவாக்குகிறது," என்று அவர் மேலும் கூறினார். இந்த அணுகுமுறையில் இந்தியா கவனமாக உள்ளது.


அமெரிக்க டாலருக்கு நிகரான போட்டியாளராக சீன யுவானின் (Chinese yuan) உயர்வு காரணமாக, இந்தியா டாலர் மதிப்பிழப்புக்கு ஆதரவளிக்கவில்லை. ரஷ்யா அதிகளவில் யுவானை ஏற்றுக்கொண்டாலும், ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதிக்கு யுவானைப் பயன்படுத்துவதை இந்தியா எதிர்த்தது.


ரஷ்யாவின் மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து, 300 பில்லியன் டாலர் ரஷ்ய வெளிநாட்டுப் பங்குகளை முடக்கம் உட்பட, யுவான் ரஷ்யாவின் அதிகம் வர்த்தகம் செய்யப்படும் நாணயமாக மாறியுள்ளது. ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகத்தில் 90%-க்கும் அதிகமானவை இப்போது ரூபிள்களில் (rubles) தீர்க்கப்படுவதாக ரஷ்ய அரசாங்கம் தெரிவித்துள்ளது.


அதே நேரத்தில், இதற்கிடையில், டாலரை அதிகமாக நம்பியிருப்பது குறித்து இந்தியா எச்சரிக்கையாக உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India (RBI)) அதன் தங்கத்தின் கொள்முதலை (gold purchases) அதிகரித்துள்ளது. இதனால், வெளிநாட்டிலிருந்து நம்நாட்டிற்கு தங்கத்தை மீண்டும் கொண்டு வரவும் தொடங்கியுள்ளது.


உக்ரைனில் நடந்த போருக்குப் பிறகு அதிகரித்த நிச்சயமற்ற தன்மைகள் இந்த நிலைமைக்கு பங்களித்துள்ளன. இரண்டாம் நிலைத் தடைகள் குறித்து கவலை கொண்ட உலக மத்திய வங்கிகள் (global central banks) தங்கத்தை வாங்குவது இதற்கு ஒரு காரணமாகும்.


இந்தியாவின் முன்னணி வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பான இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பின் (Federation of Indian Export Organisations (FIEO)) இயக்குநர் ஜெனரலும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அஜய் சஹாய் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் உடன் குறிப்பிட்டதாவது, உள்ளூர் நாணய முயற்சிகளை இந்தியா ஆதரிக்கும் அதே வேளையில், இதற்கான கட்டமைப்பு சீனாவை அதிகமாக ஆதரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். பிரிக்ஸ் நாடுகளிடையே பொருளாதார சக்தியில் குறிப்பிடத்தக்க ஏற்றத்தாழ்வு இருப்பதால் இது நிகழ்கிறது.


சீனா ஒரு மேலாதிக்க நாடுகளின் பங்கை எடுத்து அமெரிக்காவிற்கு எதிராக கூட்டணியைப் பயன்படுத்த ஆர்வமாக உள்ளது என்று சஹாய் மேலும் கூறினார். இதற்கு நேர்மாறாக, இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றவும் பேச்சுவார்த்தைகள் மூலம் வேறுபாடுகளைத் தீர்க்கவும் விரும்புகின்றன.


இந்தியா தனது நிலைப்பாட்டை விளக்க அமெரிக்காவுடன் ராஜதந்திர ரீதியாக ஈடுபட வேண்டும். வர்த்தக வழிமுறைகளை பன்முகப்படுத்துவது அமெரிக்காவிற்கு எதிரானது அல்ல என்பதை வலியுறுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். மாறாக, இது பன்முகத்தன்மை மற்றும் நிதி நிலைத்தன்மையை நோக்கிய ஒரு படியாகும் என்று அவர் கூறினார்.


அஜய் ஸ்ரீவஸ்தவா, குளோபல் டிரேட் ரிசர்ச் முன்முயற்சி என்ற சிந்தனைக் குழுவின் தலைவரும், முன்னாள் இந்திய அரசாங்க வர்த்தக அதிகாரியுமானவர். அவர் முன்பு தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் குறிப்பிடுவதாவது, "அமெரிக்காவின் நடவடிக்கைகள்தான் பல நாடுகளை அமெரிக்க டாலருக்கு மாற்று வழிகளைத் தேடத் தூண்டியுள்ளன. SWIF வலையமைப்பு போன்ற உலகளாவிய நிதி அமைப்புகளின் மீது தனது செல்வாக்கைப் பயன்படுத்தி ஒருதலைப்பட்சத் தடைகளை விதித்த வரலாற்றை அமெரிக்கா கொண்டுள்ளது. ரஷ்யா மற்றும் ஈரான் போன்ற நாடுகள் SWIF அமைப்பை அணுகுவதைத் தடுப்பதன் மூலம், அமெரிக்கா உலகளாவிய நிதி உள்கட்டமைப்பை திறம்பட ஆயுதமாக்கியுள்ளது. இது மற்ற நாடுகளை முறையான வர்த்தகத்தைத் தொடர மாற்று கட்டண முறைகளைக் கண்டறிய கட்டாயப்படுத்தியுள்ளது.




Original article:

Share: