விரைவான பொருளாதார வளர்ச்சியை இந்தியா இலக்காகக் கொள்ள வேண்டும். இதை அடைய, தனியார் துறையை உள்ளடக்கிய தாராளமய கொள்கைகளை (liberal policies) இந்தியா பயன்படுத்த வேண்டும். வருமான சமத்துவமின்மை (income inequality) குறித்த விமர்சனங்களால் இந்திய தனது இலக்குகளிலிருந்து பின்வாங்கக்கூடாது.
இந்தியாவின் 7%-க்கும் அதிகமான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரம் போன்ற கருத்துகளை மக்கள் அடிக்கடி கூறி வருகின்றனர். 21-ஆம் நூற்றாண்டு “இந்தியாவின் நூற்றாண்டாக” (‘India’s century’) இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தவிர்க்க முடியாதது என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. இருப்பினும், பல நாடுகள் இந்தியாவின் தற்போதைய காலகட்டத்தில் இருந்தன. வளர்ந்த நாடு என்ற நிலைக்கு முன்னேற அந்த நாடுகள் தவறிவிட்டன. இந்தியா இதைத் தவிர்க்க, 2047-க்குள் $30-டிரில்லியன் பொருளாதாரமாக மாற வேகமான பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். இந்த வளர்ச்சி தனியார் துறையை உள்ளடக்கிய தாராளமயக் கொள்கைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். வருமான சமத்துவமின்மை (income inequality) குறித்த விமர்சனங்களால் இந்திய தனது இலக்குகளலிருந்து பின்வாங்கக்கூடாது.
இந்தியாவின் உழைக்கும் வயது மக்கள்தொகையின் சாத்தியம்
வறுமையைக் குறைப்பதற்கும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் பொருளாதார வளர்ச்சியே சிறந்த வழியாகும். சுதந்திரம் பெற்றதிலிருந்து 1991-வரை, வறுமைக் குறைப்பை ஏற்படுத்தும் சமத்துவ கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், இந்தியாவின் வறுமை விகிதம் 50%-ஆக இருந்தது. 1991-க்குப் பிறகு, இந்தியா தனது பொருளாதாரத்தை தாராளமயமாக்கத் தொடங்கியபோது, 2011-ல் வறுமை விகிதம் சுமார் 20%-ஆகக் குறைந்தது. இந்த காலகட்டத்தில், இந்தியாவின் வளர்ச்சி 35கோடி மக்களை தீவிர வறுமையிலிருந்து மீட்டெடுக்க உதவியது.
1991-க்கு முன்பிருந்ததை விட இன்று இந்தியா சமத்துவமின்மையில் உள்ளதா? கினி குணகத்தின் (gini co-efficient) தரவு சிறிய மாற்றம் ஏற்பட்டிருப்பதை காட்டுகிறது. இருப்பினும், இன்று அதிகமான இந்தியர்கள், குறிப்பாக பொருளாதார வளர்ச்சியின் அடிமட்டத்தில் உள்ளவர்கள் நன்றாக இருக்கிறார்களா? ஆம். வேகமாக வளர்ந்து வரும் எந்தவொரு பொருளாதாரத்திலும், சிலர் குறிப்பிடத்தக்க செல்வத்தை உருவாக்குவார்கள். இது பொருளாதார வளர்ச்சியின் இயல்பான பகுதியாகும் மற்றும் புதிய வணிகங்களை ஊக்குவிக்கிறது. இந்த செல்வ உருவாக்கம் அனைவரின் வாழ்க்கையையும் மேம்படுத்த உதவுகிறது. இந்த நேர்மறையான தாக்கத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
1990-களின் பொருளாதார சீர்திருத்தங்களின் ஆரம்ப நன்மைகள் உணரப்பட்டுள்ளன. 2000 முதல் 2010 வரை, தகவல் தொழில்நுட்பத்தின் சேவைகளின் முன்னேற்றம் காரணமாக இந்தியா வளர்ச்சியை அடைந்தது. இந்த வளர்ச்சி பணக்கார நடுத்தர வர்க்கத்தை உருவாக்க வழிவகுத்தது. இருப்பினும், இந்தியாவின் தொழில்துறையில் 46% இன்னும் விவசாயத்தில் வேலை செய்கிறார்கள். இந்தத் துறை குறைந்த உற்பத்தித்திறனைக் கொண்டுள்ளது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18% மட்டுமே பங்களிக்கிறது. கூடுதலாக, இந்தியாவின் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (female labour force participation rate (FLFPR)) வெறும் 37% ஆகும். இது மற்ற வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் காணப்படும் விகிதங்களை விட குறைவாக உள்ளது. எவ்வாறாயினும், இந்த எண்ணிக்கை வெளிப்படுத்துவதை விட அதிகமாக மறைக்கிறது. 2019 ஆம் ஆண்டில் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 26% ஆக இருந்தது. மேலும் COVID-19-க்குப் பிறகு, பல பெண்கள் விவசாயத் தொழிலாளர்களாக வேலைக்குத் திரும்பியுள்ளனர். சீனா, வியட்நாம் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 60% முதல் 70% வரை இருக்கும். இந்தியா எங்கு முன்னேற வேண்டும் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.
950-மில்லியனாக இருக்கும் இந்தியாவின் உழைக்கும் வயதுடைய மக்கள்தொகையில், தற்பொழுது பாதி பேர் மட்டுமே பணிபுரிந்து வருவதால், நியாயமான வேலை வாய்ப்புகளை எவ்வாறு உறுதிப்படுத்துவது? 'ஆசியப் புலிகள்' (‘Asian Tigers’) என்று அழைக்கப்படும் தென் கொரியா, தைவான், ஜப்பான் மற்றும் வியட்நாம் ஆகியவை 1960-1990 வரை குறைந்த திறன் கொண்ட, உழைப்பு மிகுந்த உற்பத்தியில் கவனம் செலுத்தி, ஏற்றுமதிக்கு வலுவான முக்கியத்துவம் அளித்து இரட்டை இலக்க வளர்ச்சியை அடைந்தன. அவர்களின் பொருளாதாரக் கொள்கையானது ஏற்றுமதியால் இயக்கப்படும் விரைவான தொழில்மயமாக்கலில் கவனம் செலுத்தியது. ஏற்றுமதியை அதிகரிக்க, தங்களிடம் உள்ள பலத்தைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் பிற பொருட்களை இறக்குமதி செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர். வெளிப்படைத்தன்மை நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. எடுத்துக்காட்டாக, இந்தியா தனது ஏற்றுமதியை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக 1990-ல் 7%-ல் இருந்து 2013-ல் 25% ஆக உயர்ந்தது. இன்று, உலக உற்பத்தியாளர்களை ஈர்ப்பதற்காக சீனா+1 (China+1) ஏற்றுமதியை அதிகரிப்பதை இந்தியா நோக்கமாகக் கொண்டிருப்பதால், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது அதிக வரி விதிப்பை தவிர்க்க வேண்டும்.
நடுத்தர வருமானப் பொறி (middle-income trap)
அதிக இறக்குமதி கட்டணங்களைப் பயன்படுத்தி வெளிநாட்டுப் போட்டியிலிருந்து தொழில்களைப் பாதுகாக்க முயற்சித்தால், பாதுகாப்பை அதிகம் நம்பியிருக்கும் திறனற்ற உற்பத்தியாளர்களை உருவாக்கும் அபாயம் உள்ளது. உதாரணமாக, சீனாவில் இருந்து பாகங்களை இறக்குமதி செய்ய வேண்டிய கைபேசி தயாரிப்பாளருக்கு கட்டணங்கள் காரணமாக அதிக செலவுகள் ஏற்படும். இது அவர்களின் கைபேசிகளின் விலையை அதிகமாக்கி, இந்திய ஏற்றுமதியை பாதிக்கும். குறிப்பாக நடுத்தர வருமானப் பொறியின் (middle-income trap) சவாலை எதிர்கொள்ளும் இந்தியா இந்தப் பிரச்சனையைத் தவிர்க்க வேண்டும்.
1960-ல், 101 நடுத்தர வருமான பொருளாதாரங்கள் இருந்தன. 2018-ஆம் ஆண்டளவில், அவற்றில் 23 மட்டுமே அதிக வருமானம் கொண்ட நாடுகளாக மாறியது. குறைந்த-நடுத்தர வருமானம் கொண்ட நாடான இந்தியா, நடுத்தர வருமான நிலைக்கு முன்னேறி, அதைத் தாண்டிச் செல்வது எவ்வளவு சவாலானது என்பதை இது காட்டுகிறது. குறைந்த வருமான உள்ள தொழில்களில் பல்வேறு நன்மைகளை இழந்து உயர் தொழில்நுட்பத் துறைகளில் போட்டியிடுவதால், நாடுகள் பெரும்பாலும் நடுத்தர வருமான சிக்கல்களில் சிக்கிக் கொள்கின்றன.
இந்தியா ஒரு தனித்துவமான சிக்கலை எதிர்கொள்கிறது: குறைந்த அளவிலான தொழில்களில் வளர பெரிய தொழிலாளர் சக்தியை பயன்படுத்தவில்லை. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி புதிய பாதையை வழங்கியது. ஆனால், அதற்கு குறிப்பிட்ட வரம்புகள் உள்ளன. இது ஒரு பிரச்சனையாக மாறியது. உற்பத்தியில் முன்னேற்றம் பெரும்பாலும் வலுவான, குறைந்த தொழில்நுட்பத் தொழில்களை உருவாக்கத் தொடங்குகிறது. இந்தத் தொழில்களுக்குத் தரம் மற்றும் அளவை உறுதிசெய்யக்கூடிய திறமையான மேலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தேவை. குறைந்த-தொழில்நுட்ப உற்பத்தியை வெற்றிகரமாக இயக்குவது, பின்னர் மிகவும் சிக்கலான பணிகளுக்குத் தேவையான திறன்களை உருவாக்க உதவுகிறது.
இந்தியாவின் சமூகத் துறையும் குடிமை சமூகமும் தொழிற்சாலைகளை அடிமை உழைப்பு தொழிற்சாலைகள் என்று முத்திரை குத்துவது தீங்கு விளைவிக்கும். பணியாளர் நலனுக்காக அதிக செலவு செய்யுமாறு முதலாளிகளை கட்டாயப்படுத்துவது வேலை தரத்தை மேம்படுத்துவதற்கு பதிலாக வேலை இழப்புக்கு வழிவகுக்கும். இது விவசாய வேலைகளைத் தவிர வேறு சில வேலை வாய்ப்புகள் உள்ளவர்களுக்கு முக்கியமானது.
நடுத்தர வருமான சிக்கல்களை தவிர்க்க, தனியார் வணிக நிறுவனங்கள் வளரக்கூடிய சந்தை சார்ந்த பொருளாதாரம் இந்தியாவுக்குத் தேவை. அரசாங்கம் அனைத்திலும் தலையிடக்கூடாது, தொழிற்சாலை வேலைகள் பற்றிய கருத்துக்கள் தடையாக இருக்கக்கூடாது. இந்த அணுகுமுறை குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம் என அழைக்கப்படுகிறது. அடுத்த பத்தாண்டுகளில் வணிகச் சூழலை மேம்படுத்த இந்திய அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும். வணிகத்தை எளிதாக்குவதற்கான சீர்திருத்தங்கள் தாமதமின்றி தொடர வேண்டும்.
ஒரு திரள் தலைமையிலான தொழில்துறை மாதிரி (cluster-led industrial model)
இந்தியாவின் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். சீனா மற்றும் வியட்நாமில் உள்ளதைப் போன்ற தொழில்துறை திரள்களை (industrial clusters) உருவாக்க வேண்டும். இந்தக் திரள்கள், முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களை ஈர்க்கும் கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் ஆதரவு அமைப்புகளைக் கொண்டிருக்க வேண்டும். தற்போது, இந்திய மாநிலங்கள் மின்சாரம், தளவாடங்கள் மற்றும் நிதியுதவிக்கு அதிக செலவுகளை எதிர்கொள்கின்றன. கூடுதலாக, பங்களாதேஷ், சீனா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தொழிலாளர் உற்பத்தித்திறன் குறைவாக உள்ளது. ஒழுங்குமுறைச் சுமை புதிய வணிகங்களைத் தொடங்குவதையும், ஏற்கனவே உள்ள செயல்முறைகளை விருவப்படுத்த வேண்டும். மற்ற நாடுகளும் இது போன்ற சவால்களை எதிர்கொண்டன. இந்த சிக்கல்களைத் தீர்க்க, தொழில்துறை வளர்ச்சிக்கான திரள் அடிப்படையிலான அணுகுமுறை பயனுள்ளதாக இருக்கும். இந்த மாதிரியில், உற்பத்திக்கான சிறந்த சூழலை உருவாக்க குறிப்பிட்ட பகுதிகளில் விதிமுறைகள் தளர்த்தப்படவேண்டும்.
குறைந்த திறன் கொண்ட உற்பத்தியை அதிகரிக்க தனியார் துறையின் பலத்தையும் அதன் சொந்த சீர்திருத்தக் கவனத்தையும் அரசாங்கம் பயன்படுத்த வேண்டும். இதில் மின்னணு தொகுப்பு (electronics assembly) மற்றும் ஆடை போன்ற துறைகள் அடங்கும். இது இந்தியர்களுக்கு பல வேலைகளை உருவாக்க முடியும். முன்னேற்றத்தைக் கண்காணிக்க, மாநிலங்களுக்கு இடையேயான இடம்பெயர்வு, நகரமயமாக்கல், பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் மற்றும் மொத்த வேலைவாய்ப்பில் விவசாயத்தின் பங்கின் குறைவு போன்ற குறிகாட்டிகளைப் பார்க்க வேண்டும். 2047-க்குள் $30-டிரில்லியன் பொருளாதாரமாக மாறும் இலக்கை நோக்கி நகர்கிறோமா என்பதை தீர்மானிக்க இவை உதவும்.
ராகுல் அலுவாலியா பொருளாதார மேம்பாட்டு அறக்கட்டளையின் (Foundation for Economic Development) நிறுவனர்-இயக்குநராக உள்ளார். ஹர்ஷித் ராகேஜா, பொருளாதார மேம்பாட்டு அறக்கட்டளையின் தகவல் தொடர்பு மேலாளராக உள்ளார்.