நிதி நலக் குறியீடு என்பது கவனமான நிதி மேலாண்மையை மட்டுமே பாராட்டி முக்கியத்துவம் அளிக்கிறது. -கிறிஸ்டோபர் சுஜோய் தாமஸ், நிரஞ்சனா வி.எச். மற்றும் சுமலதா பி.எஸ்

 வரலாற்றுரீதியாகவே சமூக நலத்திட்டங்களுக்காக அதிக நிதி ஒதுக்கும் வளர்ச்சியடைந்த மாநிலங்கள், நிதி நல தரவரிசைப் பட்டியலில் (Fiscal health charts) நியாயமற்ற முறையில் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன.


இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General (CAG)) வழங்கிய தணிக்கை செய்யப்பட்ட தரவுகளின் அடிப்படையில், மாநிலங்களின் நிதி நலக் குறியீட்டின் (Fiscal Health Index (FHI)) இரண்டு பதிப்புகளை நிதி ஆயோக் (National Institution for Transforming India (NITI Aayog)), வெளியிட்டுள்ளது. அதில் 2022–23-ஆம் ஆண்டிற்கான குறியீடு ஜனவரி மாதம் 2025-ஆம் ஆண்டிலும், 2023–24-ஆம் ஆண்டிற்கான குறியீடு மார்ச் மாதம் 2026-ஆம் ஆண்டிலும் வெளியிடப்பட்டன. இக்குறியீடு இந்திய மாநிலங்களின்      நிதிச் செயல்பாடுகளை, குறிப்பாக 18 முக்கிய பொதுப் பிரிவு மாநிலங்களின்            நிதி நிலையை மதிப்பீடு செய்து ஒப்பிட்டுக் காட்டுகிறது.


இந்த இரண்டு பதிப்புகளின் ஒப்பீடு, மாநில அளவிலான நிதிச் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளைக் காட்டுகிறது. ஒடிசா மாநிலம் தனது சாதனையாளர் (Achiever) நிலையை தக்க வைத்துக் கொண்டதுடன், தனது மதிப்பெண்ணையும் 67.8-லிருந்து 73.1-ஆக உயர்த்தியுள்ளது. கோவாவும் 53.6-லிருந்து 54.7-ஆகச் சற்று முன்னேறியுள்ளது. அதேநேரத்தில், ஹரியானா தனது மதிப்பெண்ணை 29.3-லிருந்து 32.9-ஆக உயர்த்தி, ஆர்வமுள்ள மாநிலங்கள் (Aspirational category) பிரிவில் இருந்து செயல்படும் மாநிலங்கள் பிரிவிற்கு முன்னேறியுள்ளது.


பீகார் மாநிலம் 36.1-லிருந்து 36.2-ஆக மிகக் குறைந்த அளவே முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தின் மதிப்பெண் 55.2-லிருந்து 44.3-ஆகக் குறைந்தபோதிலும், அது தரவரிசையில் (Ranking) முன்னேறியுள்ளது. ஆனால், மதிப்பெண் குறைந்ததால் அது சாதனையாளர் பிரிவில் இருந்து முன்வரிசை மாநிலங்கள் பிரிவிற்கு மாற்றமடைந்துள்ளது.


இதேபோல், கர்நாடகாவின் தகுதிப்புள்ளி 46.2-லிருந்து 20.2-ஆகவும், தெலுங்கானாவின் தகுதிப்புள்ளி 47.9-லிருந்து 44.3-ஆகவும் சரிந்துள்ளன. இதனால் இந்த இரண்டு மாநிலங்களுமே 'செயல்பாட்டாளர் பிரிவிற்கு’ (Performer tier) தரம் இறக்கப்பட்டுள்ளன. தகுதிப்புள்ளி சரிவைச் சந்தித்த மாநிலங்களிலேயே, தமிழ்நாடு 39.5-லிருந்து 32.1-ஆகப் பெரிய சரிவைச் சந்தித்து, 'செயல்பாட்டாளர் பிரிவில்' இருந்து 'ஆர்வலர் பிரிவிற்குத்' (Aspirational tier) தள்ளப்பட்டுள்ளது.                   அதேநேரத்தில், கேரளாவின் தகுதிப்புள்ளியும் 28.9-லிருந்து 27.3-ஆகக் குறைந்து, கடைசி இடமான அதே 'ஆர்வலர்' பிரிவிலேயே நீடிக்கிறது.


இந்த ஒப்பீடு 'தென்னக நிதி முரண்பாடு' (Southern Fiscal Paradox) விரிவடைவதைக் காட்டுகிறது. அதாவது, பாரம்பரியமாக சமூக நலத்திட்டங்களுக்கு அதிகமாகச் செலவு செய்யும் மாநிலங்கள் இதில் பாதகமான நிலையைச் சந்திக்கின்றன. அதேநேரத்தில், தங்களது பொதுச் செலவுகளைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் மாநிலங்கள் இந்தக் குறியீட்டில் ஒப்பீட்டளவில் உயர்ந்த தரவரிசைகளைப் பெறுகின்றன. இதனால் எழும் அடிப்படை கேள்வி என்னவென்றால், நிதி நல குறியீடு (FHI) அதன் தற்போதைய வடிவத்தில், ஒரு மாநிலத்தின் உண்மையான நிதி நலனை அளவிடுகிறதா? அல்லது செலவுகளைக் குறைப்பதற்கும் குறைவாகக் கடன் வாங்குவதற்கும் மாநிலங்களுக்குப் பரிசளிக்கும் ஒரு 'நிதி முற்போக்குக் கட்டுப்பாட்டுக் குறியீடாக' (Index of fiscal restraint) இருக்கிறதா? என்பதுதான். அந்த நிதிக் கட்டுப்பாடு, மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்தைப் பாதித்தாலும்கூட, அதைப் பற்றிக் கவலைப்படாமல் இந்தக் குறியீடு தரவரிசையை வழங்குகிறது.



குறியீடு எதை அளவிடுகிறது?


மாநிலங்களின் நிதிச் செயல்பாடுகளை இன்னும் துல்லியமாக மதிப்பிடுவதற்காக, நிதி நலக் குறியீடு (FHI) என்பது ஐந்து முக்கியத் துணைக் குறியீடுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அவை: செலவினங்களின் தரம் (Quality of Expenditure), வருவாய் திரட்டுதல் (Revenue Mobilization), நிதி நிர்வாகம் (Fiscal Prudence), கடன் குறியீடு (Debt Index) மற்றும் கடன் நிலைத்தன்மை (Debt Sustainability) ஆகியவையாகும். இந்தியத் தலைமைக்  கணக்குத் தணிக்கைத் துறைத் தலைவரின் (CAG) தணிக்கை செய்யப்பட்ட தரவுகளின் அடிப்படையில், 18 முக்கியப் பொதுப் பிரிவு மாநிலங்களில் உள்ள ஒன்பது துணைக் குறியீடுகளைப் பயன்படுத்தி மதிப்பிடப்படுகின்றன. இந்தத் தரவுகள் 'Min-Max method' என்ற புள்ளியியல் முறையைப் பயன்படுத்திச் சீரமைக்கப்பட்டு, அனைத்துக் காரணிகளுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து ஒன்றாக இணைக்கப்படுகின்றன. இந்த மதிப்பீட்டு முறை முந்தைய பதிப்பைப் போலவே மாற்றமில்லாமல் தொடர்வதால், ஒவ்வொரு ஆண்டிற்கும் இடையிலான நிதி நிலையை நம்பகத்தன்மையுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது.


2026-ஆம் ஆண்டின் நிதி நலக் குறியீடு (FHI), வடகிழக்கு மற்றும் இமயமலைப் பகுதி மாநிலங்களை அவற்றின் தனித்துவமான சூழலுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட குறியீடுகளைப் பயன்படுத்தி சேர்த்திருப்பது, முந்தைய பதிப்பைவிட ஒரு நல்ல மற்றும் வரவேற்கத்தக்க வழிமுறை மாற்றமாகும். இருப்பினும், இந்த முறைப்படியான சீரான தன்மை இருந்தபோதிலும், சில உள்கட்டமைப்பு குறைபாடுகள் மாநிலங்களின் தரவரிசையை இன்னும் பாதித்துக் கொண்டுதான் இருக்கின்றன. அதைவிட முக்கியமாக, இந்தக் குறியீடு என்ன மாதிரியான கொள்கை செய்திகளை உணர்த்த விரும்புகிறதோ, அதையும் இது சிதைப்பதாக உள்ளது.


மாநில உள்நாட்டு உற்பத்திப் பகுதிச் சிக்கல்


இந்தக் குறியீட்டில் இருக்கும் ஒரு முக்கியமான குறைபாடு என்னவென்றால், பல்வேறு குறியீடுகளைக் கணக்கிடுவதற்கு "மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி" (GSDP) அடிப்படையாகப் பயன்படுத்தப்படுவதுதான். உதாரணமாக, மூலதனச் செலவு/மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி, மொத்த நிதிப் பற்றாக்குறை/மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி, மற்றும் நிலுவையில் உள்ள கடன் பொறுப்புகள்/மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகிய குறியீடுகள் இதற்குள் அடங்கும். ஒடிசா போன்ற கனிம வளம் நிறைந்த மாநிலங்களில், அவற்றின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) மிக வேகமாக வளரும்போது, அந்த மாநிலத்தின் உண்மையான நிதிச் செயல்பாட்டில் எந்த மாற்றமும் ஏற்படாவிட்டாலும், இந்த மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GSDP)  அடிப்படையாகக் கொண்ட விகிதங்கள் தானாகவே மேம்பட்டதாகக் காட்டும்.


இதற்கு நேர்மாறாக, ஒரு மாநிலம் தனது மூலதனச் செலவை (Capital Expenditure (Capex)) அதிகப்படுத்தினாலும், அங்கு மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) வளர்ச்சி மெதுவாக இருந்தால், அந்த மாநிலத்திற்குப் புள்ளிகள் குறைக்கப்பட்டு தண்டிக்கப்படுகிறது. இந்த அணுகுமுறையானது, இயற்கை வளங்கள் அதிகம் உள்ள மாநிலங்களுக்கு இயல்பாகவே சாதகமாகவும், இயற்கை வளங்களைவிட மனித வளம் மற்றும் சேவைத் துறையை நம்பி வளர்ச்சி அடையும் மாநிலங்களுக்குப் பாதகமாகவும் முடிகிறது.


வருவாய் திரட்டல் மாயை


வருவாய் திரட்டுதலை அளவிடுவதிலும் இதேபோன்ற ஒரு சிக்கலைக் காண முடிகிறது. மாநிலத்தின் சொந்த வருவாய்/மாநில உள்நாட்டு உற்பத்தி                                  (State Own Revenue / Gross State Domestic Product) மற்றும் மாநிலத்தின் சொந்த வருவாய்/மொத்தச் செலவினம் (SOR/Total Expenditure) ஆகிய இரண்டு குறியீடுகளுமே, மாநில அரசு நிறுவனங்கள் மூலம் திரட்டப்படும் வரி வருவாயையும், இயற்கை வளங்கள் மூலம் கிடைக்கும் வரியல்லாத வருவாயையும் ஒன்றாகக் கலந்துவிடுகின்றன. இதற்கு உதாரணமாக, ஒடிசாவில் சுரங்க ஒப்பந்தம் மூலம் கிடைக்கும் வருவாயையும், சத்தீஸ்கரில் உள்ள கனிம வளம் அல்லது இயற்கை வளம் சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களின் லாபப் பங்கீட்டைக் கூறலாம்.


மாநிலங்களால் புதிய கனிமப் படிவங்களை உருவாக்க முடியாது.         கொள்கை ரீதியான நடவடிக்கைகள் மூலமும் இந்த இயற்கையான புவியியல் நன்மைகளை மற்ற மாநிலங்களில் கொண்டுவர முடியாது. இதன் விளைவாக, கனிமவளம் அதிகம் உள்ள மாநிலங்கள் சிறந்த வரி நிர்வாகத்தினாலோ அல்லது தீவிரமான நிதி முயற்சியினாலோ வருவாய் திரட்டலில் உயர் வரிசையில் இருப்பதில்லை, மாறாக அவர்களின் இயற்கை வள சாதகங்களினாலேயே உயர் வரிசையில் இருக்கின்றன. எனவே, ஒரு மாநிலத்தின் உண்மையான நிதித் தற்சார்பை துல்லியமாகக் காட்ட வேண்டுமானால், சொந்த வரி வருவாயையும், சொந்த வரியல்லாத வருவாயையும் தனித்தனியாகப் பிரிப்பது அவசியம். அத்துடன் வரி மிதப்புத்தன்மை (Tax buoyancy) பற்றிய ஒரு குறியீட்டையும் இதில் சேர்க்க வேண்டும்.


தென்னக நிதி முரண்பாடு மேலும் தீவிரமடைகிறது


ஒட்டுமொத்த மதிப்பெண்கள், தரவரிசைகள் மற்றும் அடுக்கு நிலைகளில் ஏற்பட்ட மாற்றங்களின் அடிப்படையில், நிதி நலக் குறியீட்டின் (FHI) இரண்டு பதிப்புகளிலும் உள்ள 18 முக்கிய பொதுப் பட்டியல் மாநிலங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஒரு விஷயம் தெளிவாகிறது. அதன்படி, ஹரியானா, பீகார், கோவா, ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய ஐந்து மாநிலங்கள் தங்களது நிலையில் முன்னேற்றம் கண்டுள்ளன. ஒடிசா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளா ஆகிய ஏழு மாநிலங்கள் எவ்வித மாற்றமும் இன்றி நிலையாக உள்ளன. அதேநேரத்தில், சத்தீஸ்கர், கர்நாடகா, தெலங்கானா, தமிழ்நாடு, குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய ஆறு மாநிலங்கள் தங்களது நிலையில் சரிவைச் சந்தித்துள்ளன.


2026-ஆம் ஆண்டின் நிதி நலக் குறியீடு (FHI) தரவரிசையில், தமிழ்நாடு 'செயல்பாட்டாளர்' (Performer) நிலையிலிருந்து 'ஆர்வலர்' (Aspirational) நிலைக்குக்கீழ்நோக்கி நகர்ந்துள்ளது. இதன் விளைவாக, கல்வியறிவு, ஆயுட்காலம் மற்றும் ஒட்டுமொத்த மனித வளம் ஆகியவற்றில் இந்தியாவின் முன்னணி மாநிலங்களாக நீண்டகாலமாகக் கருதப்படும் கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டுமே இப்போது இந்தக் குறியீட்டின் மிகக் கடைசி இடங்களுக்குத் தள்ளப்பட்டுள்ளன.


இதற்கு நேர்மாறாக, மனிதவள மேம்பாட்டில் ஒப்பீட்டளவில் பின்தங்கியுள்ள ஒடிசா, கோவா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் நிதி நலனில் முதலிடத்தில் உள்ளன. இது தற்செயலாக நடந்தது அல்ல, மாறாக அங்கிருக்கும் கட்டமைப்பு காரணங்களால் ஏற்பட்டது ஆகும். மனித வளம் மற்றும் சமூக மேம்பாட்டிற்காக பல ஆண்டுகளாக முதலீடு செய்ததன் காரணமாக, நன்கு வளர்ச்சியடைந்த மாநிலங்கள் அதிக அளவிலான கட்டாயச் செலவினங்களைச் (Committed expenditure) சுமக்க வேண்டியுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) இந்த மாநிலங்கள் அதிக பங்களிப்பை அளித்தபோதிலும், ஒன்றிய அரசிடமிருந்து இவற்றுக்குக் கிடைக்கும் நிதிப்பகிர்வு குறைவாகவே உள்ளது. நிதி நலக் குறியீடு (FHI) இந்தக் காரணங்களைக் கருத்தில் கொள்ளாமல் தண்டிப்பது போல அமைந்திருக்கிறது. மாறாக, தங்கள் குடிமக்களுக்குத் தேவையான தரமான பொதுச் சேவைகள் கிடைக்காத போதிலும், கையில் உபரி நிதி வைத்திருக்கும் மாநிலங்களுக்குப் பாராட்டு வழங்குவது போல் உள்ளது.


நிதி நலக் குறியீடு (FHI) இந்த முக்கியமான நடைமுறைக் காரணிகளைக் கருத்தில் கொள்ளாமல் அவற்றைத் குறைந்த தரவரிசைக்குத் தள்ளுகிறது. மாறாக, தங்கள் மக்களுக்குத் தேவையான தரமான பொதுச் சேவைகளைக்கூட வழங்காமல், நிதியை உபரியாக வைத்திருக்கும் மாநிலங்களுக்கு அதிக மதிப்பெண் வழங்கி ஊக்குவிக்கிறது.


மாற்றப்பட வேண்டியது என்ன?


நிதி நலக் குறியீடு (FHI) என்பது ஒரு நல்ல அளவுகோலாகும், மேலும் அதன் கணக்கீட்டு முறை மாறாமல் சீராக இருப்பது அதன் மிகப்பெரிய பலமாகும். ஆனால், தற்போதைய நிலையில் இதில் சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன. மாநிலங்களின் நிதி நிலையை வெறும் நிதி சார்ந்த காரணிகளை (Fiscal indicators), மட்டுமே வைத்து மதிப்பிடுவது, அந்த மாநிலங்களின் உண்மையான வளர்ச்சித் திறனைத் தவறாகக் காட்டக்கூடும். எனவே, இதை வெறும் நிதி அளவீடுகளோடு மட்டும் நிறுத்தாமல், மாநிலங்களின் சமூக-பொருளாதார வளர்ச்சியோடும் இணைத்துப் பார்க்க வேண்டும்.


அரசுச் செலவுகளைக் குறைவாகச் செய்வதால் மட்டுமே ஒரு 'வளர்ச்சியடைந்த இந்தியா' (Viksit Bharat) உருவாகிவிடாது. மாறாக, தங்கள் மக்களின் சமூக மேம்பாட்டிற்காகச் சரியாகச் செலவிடும் மாநிலங்களால் மட்டுமே அந்த இலக்கு சாத்தியமாகும்.


Original article : Fiscal health index’ rewards prudence alone. -Christopher Sujoy Thomas, Niranjana VH and Sumalatha BS

Share:

1920-களில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ஒரு கண்டுபிடிப்பு, பருவமழை முன்னறிவிப்புகளை எப்படி மாற்றியமைத்தது? - அமிதாப் சின்ஹா

 1988-ஆம் ஆண்டில்தான் இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department (IMD)) மீண்டும் அகில இந்திய அளவிலான வானிலை கணிப்புகளைத் தொடங்கியது. மேலும், தனது கணிப்புகளில் மழைப்பொழிவின் அளவு சார்ந்த (Quantitative) விவரங்களையும் மீண்டும் அறிமுகப்படுத்தியது.


இந்தியப் பருவமழையில் எல் நினோ (El Niño) ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்படுவதால், இந்தியாவில் இந்த நிகழ்வு பலருக்கும் நன்கு தெரிந்த ஒன்றாக இருக்கிறது. எல் நினோ தென் திசை அலைவு    (El Niño Southern Oscillation (ENSO)) என்பது பசிபிக் பெருங்கடல் பகுதியில் நடக்கும் ஒரு பெரிய அளவிலான கடல்-வளிமண்டலத் தொடர்பாகும். இதுதான் உலகளாவிய காலநிலையில் ஆண்டுக்கு ஆண்டு ஏற்படும் மாற்றங்களுக்கு மிக முக்கியக் காரணமாக விளங்குகிறது. இந்த நிகழ்வு, இந்தியப் பருவமழை உட்பட உலகெங்கிலும் உள்ள வானிலை நிகழ்வுகளில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது.


இந்த உலகளாவிய நிகழ்வு, குறிப்பாக அதன் வளிமண்டலப் பகுதி, முதன்முதலில் 1920-களின் தொடக்கத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தால் (IMD) கண்டறியப்பட்டது என்பது பலருக்கும் தெரியாத ஒரு விஷயமாகும். பிரிட்டிஷ் கணிதவியலாளரும், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவருமான                   சர் கில்பர்ட் வாக்கர் என்பவர், பசிபிக் பெருங்கடலின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு இடையே காற்று அழுத்தத்தில் ஒரு ஊசலாட்டம் (See-saw) போன்ற ஏற்ற இறக்கமான அமைப்பைக் கவனித்தார். இந்த நிகழ்வு பின்னர் "தெற்கத்திய அலைவு" (Southern Oscillation) என்று அழைக்கப்பட்டது.





இந்தியப் பருவமழையைத் துல்லியமாகக் கணிக்கும் ஒரு நம்பகமான மாதிரியை உருவாக்க முயன்றபோது, 1904-ஆம் ஆண்டு முதல் 1924-ஆம் ஆண்டு வரை இந்திய வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றிய வாக்கர், பருவமழை என்பது இந்தியாவிற்கு வெளியேயுள்ள காரணிகளாலும் பாதிக்கப்படுகிறது என்பதைக் கண்டறிந்தார். வானிலை பதிவுகளை மிக உன்னிப்பாக ஆய்வு செய்த அவர், மூன்று முக்கியமான வளிமண்டல அமைப்புகளைக் கண்டறிந்தார். அவற்றில் இரண்டு பசிபிக் பெருங்கடலிலும், ஒன்று அட்லாண்டிக் பெருங்கடலிலும் இருந்தன. இந்த அமைப்புகளில் இருமுனைகளுக்கும் இடையே காற்று அழுத்தம் தொடர்ந்து உயர்மட்டத்திற்கும் குறைந்த மட்டத்திற்கும் மாறி மாறி நகர்ந்தது. மற்ற இருஅமைப்புகளான "வட அட்லாண்டிக் அலைவு" மற்றும் "வட பசிபிக் அலைவு" ஆகியவற்றைவிட இது மிகவும் தெற்கே அமைந்திருந்ததால், இதற்கு "தெற்கத்திய அலைவு" (Southern Oscillation) என்று பெயரிடப்பட்டது.


வாக்கர் என்பவர், உலகில் இருக்கும் மூன்று வளிமண்டல அமைப்புகளில் இந்த 'தெற்கு அலைவு' (Southern Oscillation) என்ற அமைப்புதான் மிகவும் சீரானது என்றும், இதுவே இந்தியப் பருவமழையை அதிகம் பாதிக்கக்கூடியது என்றும் கண்டறிந்தார்.


பல ஆண்டுகளுக்குப் பிறகு, நார்வேய-அமெரிக்க வானிலை ஆய்வாளரான ஜேக்கப் பிஜெர்க்னெஸ், இந்த 'தெற்கு அலைவு' அமைப்பை, பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள பசிபிக் பெருங்கடலில் அவ்வப்போது ஏற்படும் வெப்பமாதல் மற்றும் குளிர்ச்சியடைதல் நிகழ்வோடு இணைத்துப் பார்த்தார். இந்த நிகழ்வுதான் 'எல் நினோ' (El Niño) என்று அழைக்கப்படுகிறது. தென் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையோரத்தில், குறிப்பாக பெரு (Peru) மற்றும் ஈக்வடார் (Ecuador) நாடுகளில் வசிக்கும் மக்கள், கடலில் ஏற்படும் இந்த வெப்பநிலை மாற்றங்களைப் பற்றி பல நூற்றாண்டுகளாகவே அறிந்திருந்தனர். இருப்பினும், 1960-களின் பிற்பகுதியில், பிஜெர்க்னெஸ் ஒரு முக்கியமான விஷயத்தை நிரூபித்துக் காட்டினார். கடல் சார்ந்த நிகழ்வான 'எல் நினோ'-வும், வளிமண்டலம் சார்ந்த நிகழ்வான 'தெற்கு அலைவும்' ஒன்றுக்கொன்று தொடர்புடையவை ஆகும். இவை இரண்டும் இணைந்து ஒரு கூட்டு அமைப்பாக செயல்பட்டு, ஒன்றை ஒன்று மேலும் வலுப்படுத்திக் கொள்கின்றன என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.


இந்தக் கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளுக்கு முழுமையான செயல்முறையைப் பற்றிய முதல் தெளிவான புரிதலை வழங்கியது. எல் நினோ-தெற்கு அலைவின் (ENSO) இரு எதிர்நிலைகளான 'எல் நினோ' (El Niño) மற்றும் 'லா நினா' (La Niña) ஆகிய இரண்டும் உலகெங்கிலும் உள்ள அனைத்து முக்கிய வானிலை அமைப்புகளையும் பாதிக்கின்றன. எல் நினோ காலத்தின்போது, தென் அமெரிக்கக் கடற்கரைக்கு அருகிலுள்ள பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடல் பகுதி வழக்கத்தைவிட அதிக வெப்பமடைகிறது. அதேநேரத்தில் ‘லா நினா’ காலத்தின்போது, குளிர்ச்சியடைகிறது. பொதுவாக எல் நினோ உலகளாவிய வெப்பநிலையை உயர்த்துகிறது. இது வழக்கமாக இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் பருவமழையளவைக் குறைக்கிறது, ஆனால் வட அமெரிக்காவிற்கு பலத்த மழையைக் கொண்டுவருகிறது. லா நினா இதற்கு நேர் எதிர் விளைவுகளை ஏற்படுத்துகிறது.


வாக்கர் என்பவர் தெற்கு அலைவைக் (Southern Oscillation) கண்டுபிடித்தது, பருவமழை பற்றிய அறிவியல் புரிதலை பெரிதும் மேம்படுத்தியதுடன், பருவமழை கணிப்புகளை மேலும் அறிவியல் பூர்வமானதாக மாற்றியது. இதற்கு முன்பு, 1870-களில்  இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தொடங்கப்பட்டதிலிருந்து வழங்கப்பட்டு வந்த வானிலை கணிப்புகள், முக்கியமாக புள்ளிவிவரத் தொடர்புகளை மட்டுமே நம்பியிருந்தன.


இருந்தபோதிலும், பருவமழை கணிப்புகள் உடனடியாக துல்லியமாக மாறிவிடவில்லை. எல் நினோ-தெற்கு அலைவு (ENSO) எனப்படும் பசிபிக் பெருங்கடல் காலநிலை மாற்றத்திற்கும் இந்திய பருவமழைக்கும் இடையே உள்ள தொடர்பு கண்டறியப்பட்ட பல ஆண்டுகளுக்குப் பிறகும், இந்திய வானிலை ஆய்வு மையத்தால் (IMD) நம்பகமான கணிப்புகளை வழங்க முடியவில்லை. இதற்குக் காரணம், பருவமழை என்பது மிகவும் சிக்கலான ஒரு அமைப்பாகும்.                    மேலும் 'எல் நினோ-தெற்கு அலைவுடன்' அதற்குள்ள தொடர்பு என்பது நேரடியான ஒரு 'காரண-விளைவு' (Cause-and-effect) சார்ந்ததல்ல. நம்பகமான துணைக் குறியீடுகள் இல்லாத காரணத்தால், 1932-ஆம் ஆண்டு முதல் 1988-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்த நாட்டிற்குமான பருவமழை கணிப்புகளை வெளியிடுவதை இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) நிறுத்திக்கொண்டது. அக்காலத்தில் கணிப்புகள் வடமேற்கு இந்தியா மற்றும் தீபகற்ப (Peninsular) பகுதிகளுக்கு மட்டுமே வெளியிடப்பட்டன, மேலும் அவை எண்களின் அடிப்படையிலான துல்லியமான அளவீடுகளாக (Quantitative) இருக்கவில்லை. இன்று வழங்குவது போல, இயல்பான மழையளவில் இத்தனை சதவீதம் மழை பெய்யும் என்று துல்லியமாகக் கூறாமல், அதற்குப் பதிலாக "இயல்பைவிட சற்று அதிகம்" அல்லது "இயல்பான அளவிற்கு மிக அருகில்" போன்ற விளக்கங்களையே இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அப்போது பயன்படுத்தியது.


1988-ஆம் ஆண்டில், இந்திய வானிலை ஆய்வு மையமானது (IMD) ஒட்டுமொத்த இந்தியாவிற்குமான பருவமழை கணிப்புகளை மீண்டும் தொடங்கி, துல்லியமான அளவு அடிப்படையிலான கணிப்புகளை வழங்கியது. காலப்போக்கில், இந்தத் துறை தனது கணினித் திறன் (Computing capacity), வானிலை கண்காணிப்பு வலையமைப்பு மற்றும் முன்னறிவிப்பு மாதிரிகளை பெருமளவில் மேம்படுத்தியது. இதன் விளைவாக, நீண்டகால வானிலை கணிப்புகள் மிகவும் துல்லியமாக மாறின. இருப்பினும், தற்போதைய காலகட்டத்தில் தீவிர வானிலை நிகழ்வுகள் போன்ற புதிய சவால்கள் உருவெடுத்துள்ளன.


அமிதாப் சின்ஹா, 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழின் காலநிலை மற்றும் அறிவியல் பிரிவின் துணை ஆசிரியர் ஆவார்.


Original article : How an IMD discovery in 1920s changed monsoon forecasts -Amitabh Sinha

Share:

மின்-ஆளுகை விருதுகள்: இந்தியாவில் மின்-ஆளுகை எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்தது? –குஷ்பூ குமாரி

 நாடெங்கிலும் உள்ள ஒன்றிய, மாநில மற்றும் உள்ளாட்சி அரசாங்கங்களால் செயல்படுத்தப்பட்ட 17 திட்டங்களை, மின்-ஆளுகைக்கான தேசிய விருதுகளுக்கு (National Awards for e-Governance (NAeG)) ஒன்றிய அரசு தேர்வு செய்துள்ளது.    இந்தத் திட்டங்களில், 10 திட்டங்களுக்கு தங்க விருதும் (Gold Award), 6 திட்டங்களுக்கு வெள்ளி விருதும் (Silver Award), மற்றும் ஒரு திட்டத்திற்கு நடுவர் குழு விருதும் (Jury Award) வழங்கப்படவுள்ளன. இந்த விருதுகள், 2026-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெறவிருக்கும் 29-வது மின்-ஆளுகைக்கான தேசிய மாநாட்டில் (National Conference on e-Governance) வழங்கப்படும். "வளர்ச்சியடைந்த இந்தியா 2047: செயற்கை நுண்ணறிவுடன் கூடிய, தரவு அடிப்படையிலான மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் ஆளுகை" (Viksit Bharat 2047: AI-Enabled, Data-Driven and Secure Digital Governance) என்பது இந்த ஆண்டின் மாநாட்டிற்கான மையக்கருத்தாகும்.


இந்த விருது குறித்தும், இந்தியாவில் மின்-ஆளுகை எவ்வாறு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதைப் பற்றியும் அறிந்து கொள்வோம்.


மின்-ஆளுகைக்கான தேசிய விருதுகள் (National Awards for e-Governance (NAeG)) ஏன் வழங்கப்படுகின்றன, மேலும் இந்தியாவின் மின்-ஆளுகைப் பயணம் கணினிமயமாக்கலில் இருந்து டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (Digital Public Infrastructure (DPI)) நோக்கி எவ்வாறு முன்னேறியுள்ளது?


1. இந்திய அரசின் நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுக் குறைதீர்ப்புத் துறை (Department of Administrative Reforms and Public Grievances (DAR&PG)) மூலம், மின்-ஆளுகை (e-Governance) எனப்படும் டிஜிட்டல் தொழில்நுட்ப வழி நிர்வாகத் திட்டங்களில் மிகச்சிறப்பாகச் செயல்பட்டவர்களை அங்கீகரித்து ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் தேசிய மின்-ஆளுகை விருதுகள் (NAeG Awards) வழங்கப்படுகின்றன. இந்த விருதுகள் 2003-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.


2. 2026-ஆம் ஆண்டிற்கான மின்-ஆளுகைக்கான தேசிய விருதுகள் (NAeG Awards), ஒரு கோப்பை, ஒரு சான்றிதழ் மற்றும் தங்க விருது (Gold award) வெல்பவர்களுக்கு ₹10 லட்சமும், வெள்ளி விருது (Silver award) வெல்பவர்களுக்கு ₹5 லட்சமும் ரொக்க ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. இந்த பரிசுத் தொகையானது, புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கோ அல்லது பொது நலன் சார்ந்த பணிகளில் உள்ள நிதி மற்றும் உள்கட்டமைப்பு பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வதற்கோ மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.



3. வேளாண்மை அமைச்சகத்தின் விவசாயிகளுக்கான 'அக்ரி ஸ்டாக்' (Agri Stack) தளம், நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகத்தின் 'இ-ஜாக்ரிதி' (e-Jagriti) நுகர்வோர் புகார் பதிவுத் தளம், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் பஞ்சாயத்து மேம்பாட்டுக் குறியீடு (Panchayat Advancement Index (PAI)), மற்றும் 2025-ஆம் ஆண்டு மகா கும்பமேளாவை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக பிரயாக்ராஜ் மேளா வாரியம் (Prayagraj Mela Authority) ஆகியவை இந்த ஆண்டின் வெற்றிகரமான திட்டங்கள் ஆகும்.


மின்-ஆளுகை முன்னெடுப்புகள்


அக்ரி ஸ்டாக் (Agri Stack): விவசாயத் தரவுகள் அனைத்தையும் ஒரே தளத்திற்குக் கொண்டு வருவதற்காக, ஒன்றிய அரசின் விவசாயத்திற்கான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI) திட்டத்தின்கீழ் 2024-ஆம் ஆண்டில் அக்ரி ஸ்டாக் இணையதளம் தொடங்கப்பட்டது. இதில் விவசாயிகள் பதிவேடு, புவி-குறிப்பு கிராம வரைபடங்கள் (Geo-referenced Village Maps) மற்றும் பயிர் விதைப்பு பதிவேடு ஆகிய மூன்று முக்கிய தரவுத்தளங்கள் அடங்கியுள்ளன. இவை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசாங்கங்களால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.


இ-ஜாக்ரிதி (e-Justice and Grievance Redressal through Information Technology and Innovation (e-Jagriti)): இ-ஜாக்ரிதி (தகவல் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள் மூலம் மின்-நீதி மற்றும் குறைதீர்ப்பு) என்பது இந்தியா முழுவதும் நுகர்வோர் குறைதீர்ப்பை வலுப்படுத்துவதற்காக நுகர்வோர் விவகாரங்கள் துறையின் ஒரு முக்கியத் திட்டமாகும். இது நுகர்வோர் தங்களின் புகார்களை இணையதளங்களில் பதிவு செய்யவும், வழக்கு நிலவரத்தைக் கண்காணிக்கவும் மற்றும் தீர்ப்புகளைப் பெறவும் அனுமதிக்கிறது. இத்தளம் நுகர்வோர், நீதிமன்றங்களை டிஜிட்டல் மயமாக்க உதவுகிறது மற்றும் குடிமக்களுக்குச் சட்டப்பூர்வ தீர்வுகளை எளிதாகக் கிடைக்கச் செய்கிறது.


பஞ்சாயத்து மேம்பாட்டு குறியீடு (PAI): மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் (Ministry of Panchayati Raj) வெளியிடப்படும் இந்த பஞ்சாயத்து மேம்பாட்டு குறியீடானது, ஒன்பது முக்கிய தலைப்புகளின்கீழ் "நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளை உள்ளூர்மயமாக்குதல்" (Localization of Sustainable Development Goals (LSDGs)) திட்டத்தை கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுத்துகின்றன என்பதை மதிப்பிடுகிறது.





மின்-ஆளுகை என்றால் என்ன?


1. மின்-ஆளுகை என்பது, அரசாங்கங்கள் பொதுமக்களுக்கான சேவைகளை வழங்குவதற்கும், தகவல்களைப் பகிர்வதற்கும், தொடர்புகளை எளிதாக்குவதற்கும், பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கும் மற்றும் நிர்வாகத்தில் குடிமக்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கும் இணையம் மற்றும் பிற தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கருவிகள் போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது. நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் விரைவான செயல்பாட்டை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.


2. ஒரு திறமையான, மக்கள் பங்களிப்புள்ள மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு நிர்வாக அமைப்பை உருவாக்குவதன் மூலம், அரசாங்கத்திற்கும் சமுதாயத்திற்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதே மின்-ஆளுகையின் முதன்மை நோக்கமாகும். அனைத்துச் சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கும் ஒற்றைச் சாளர அணுகுமுறை (Single-window access), அரசுத் துறைகளுக்கு இடையே எளிதான தகவல் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பு, உடனுக்குடன் தகவல்களைப் பகிர்தல், மற்றும் குடிமக்களின் கருத்துக்கள் மற்றும் குறைகளைத் தீர்ப்பதற்கான தளங்கள் போன்ற வசதிகளின் மூலம் இது சாத்தியமாகிறது.


3. ஸ்மார்ட் ஆளுகை (Simple, Moral, Accountable, Responsive, and Transparent (SMART)) எளிய, ஒழுக்கநெறியான, பொறுப்புள்ள, துரிதமாகச் செயல்படும் மற்றும் வெளிப்படையான நிர்வாகம் என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில், மின்-ஆளுகையின் வெற்றியானது நான்கு முக்கியத் தூண்களைச் சார்ந்துள்ளது. அவை: மக்கள், செயல்பாட்டு முறை, தொழில்நுட்பம், மற்றும் வளங்கள் ஆகும்.


இந்தியாவில் மின்-ஆளுகை எவ்வாறு வளர்ச்சியடைந்துள்ளது?


1. மின்-ஆளுகை மற்றும் அரசாங்கத்திற்கும் குடிமக்களுக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்தும் அதன் திறன் பற்றிய யோசனை பிற்காலத்தில் உருவானது என்றாலும், இந்தியாவின் மின்-ஆளுகைக்கான பயணம் 1970-களில் அரசு அலுவலகங்களை கணினிமயமாக்கும் நடவடிக்கைகளில் இருந்தே தொடங்கிவிட்டது.


2. 1976-ஆம் ஆண்டில் தேசிய தகவல் மையம் (National Informatics Centre (NIC)) நிறுவப்பட்டதன் மூலம், பொது நிர்வாகத்தில் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டது. 1980-கள் மற்றும் 1990-களில், இந்திய அரசு தனது செயல்பாடுகளைக் கணினிவழிச் செயல்பாடுகளாக மாற்றுவதிலும், நிர்வாக அலுவலகங்களை இணையம் மூலம் இணைப்பதிலும் சீரான முன்னேற்றத்தைக் கண்டது.


3. 2006-ஆம் ஆண்டில் தேசிய மின்-ஆளுகைத் திட்டம் (NeGP) தொடங்கப்பட்டதன் மூலம் ஒரு பெரிய முன்னேற்றம் ஏற்பட்டது. இந்தத் திட்டத்தின் வெற்றிகரமான அங்கங்களில் ஒன்று பொதுச் சேவை மையங்கள் (Common Service Centers (CSCs)) நிறுவப்பட்டதாகும். இது பொதுமக்கள் அரசு சேவைகளை மிக எளிதாகப் பெறுவதற்கான வாய்ப்பை மேம்படுத்தியது. 


4. டிஜிட்டல் இந்தியா திட்டம் (Digital India Mission) நிர்வாகத்தை வலுப்படுத்துவதிலும், மக்களுக்கான அதிகாரத்தை டிஜிட்டல் உள்கட்டமைப்பு மூலம் வலுப்படுத்துவதிலும் மிக முக்கியப் பங்கு வகித்துள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்ட பல முக்கிய முயற்சிகள், இந்தியாவில் மின்-ஆளுகை எனப்படும் டிஜிட்டல் நிர்வாகச் சூழலை முற்றிலும் மாற்றியமைத்துள்ளன.


5. உலகின் மிகப்பெரிய பயோமெட்ரிக் (Biometric) அடையாள அமைப்பான ஆதார் அடையாள அட்டை, நலத்திட்ட உதவிகள் மக்களைச் சென்றடைவதை மேம்படுத்தியுள்ளதுடன், முறைகேடுகள் மற்றும் தகவல் கசிவுகளையும் குறைத்துள்ளது. அதேபோல, ‘UMANG’ (Unified Mobile Application for New-age Governance)  புதிய யுக நிர்வாகத்திற்கான ஒருங்கிணைந்த அலைபேசி செயலி தளம் பல்வேறு அரசாங்க சேவைகளை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்வதற்கான ஒற்றைச் சாளர அணுகலை வழங்குகிறது.


6. அரசு மின்-சந்தை (Government e-Marketplace (GeM)) அரசுப் பொருட்களை வாங்குவதில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்துள்ளது. அதேவேளையில், மின்-நீதிமன்றங்கள் (e-Courts) மற்றும் மின்-அலுவலகம் (e-Office) போன்ற திட்டங்கள் வெவ்வேறு துறைகளில் செயல்திறனையும் பொறுப்புணர்வையும் மேம்படுத்தியுள்ளன.


7. இருப்பினும், மின்-ஆளுகை திட்டங்களை முழுமையாகச் செயல்படுத்துவதில் பல  சிக்கல்கள் இன்னும் நீடிக்கின்றன. அதில் ஒரு முக்கிய சிக்கல் , இணையம் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் திறன் (Digital literacy) ஆகும். 'இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார நிலை' (State of India’s Digital Economy (SIDE)) 2025-ஆம் ஆண்டு அறிக்கையின்படி, தனிநபர் டிஜிட்டல் மயமாக்கலில் இந்தியா 28-வது இடத்தில் மட்டுமே உள்ளது. மேலும், முக்கியமான தனிப்பட்ட தரவுகள் டிஜிட்டல் மயமாக்கப்படுவதால், இணையப் பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் தரவுப் பாதுகாப்பு குறித்த சிக்கல்களும் தொடர்கின்றன.


8. மின்-ஆளுகையின் பலன்களை முழுமையாகப் பெற வேண்டுமானால், பலதரப்பட்ட அணுகுமுறை அவசியமாகும். நாட்டின் கடைசி எல்லை வரை இணைய வசதியைக் கொண்டு சேர்ப்பதன் மூலமும், குறைந்த விலையில் இணையம் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்வதன் மூலமும், இந்த டிஜிட்டல் இடைவெளியைக் குறைப்பதற்கான முயற்சிகள் அவசரமாகத் தேவைப்படுகின்றன.





டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு


1. ஐக்கிய நாடுகள் சபையின் கருத்துப்படி, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI) என்பது நவீன சமூகங்களின் முதுகெலும்பாக விளங்கும் அடிப்படை டிஜிட்டல் அமைப்புகளின் தொகுப்பாகும். இது பொதுமக்கள், வணிகங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு இடையே பாதுகாப்பான மற்றும் தடையற்ற தொடர்புகளை சாத்தியமாக்குகிறது. அடையாளத்தை சரிபார்ப்பது மற்றும் வங்கி கணக்குகளைத் தொடங்குவது முதல், உடனடி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்வது மற்றும் தரவுகளைப் பாதுகாப்பாகப் பகிர்வது வரை, மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI) முக்கியப் பங்கு வகிக்கிறது.


2. இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பானது (DPI), அடையாளம், வங்கிச் சேவை மற்றும் திறன்பேசி இணைப்பு ஆகிய மூன்றையும் ஒன்றிணைக்கும் 'JAM' (Jan Dhan, Aadhaar, Mobile) முத்தொலைவுக் கொள்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது. அனைவருக்கும் வங்கிக் கணக்கு (Jan Dhan), ஆதார் (Aadhaar) சேர்க்கை மற்றும் திறன்பேசிகளின் பரவலான பயன்பாடு ஆகியவை இந்தியாவின் டிஜிட்டல் உருமாற்றத்திற்கான அடித்தளத்தை உருவாக்கின.


3. இந்த முத்தொலைவுக் (JAM) கட்டமைப்பு மக்களை நேரடியாகவும் நம்பகமான முறையிலும் அரசாங்கத்துடன் இணைத்தது. இதன் மூலம் அரசின் நலத்திட்ட உதவிகள் இடைத்தரகர்கள், காலதாமதம் மற்றும் முறைகேடுகள் ஏதுமின்றி, நேரடியாக மக்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படத் தொடங்கின. இந்த அமைப்புகளின் பெரிய அளவிலான ஒருங்கிணைப்பு, ஒட்டுமொத்த டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI) சுற்றுச்சூழல் அமைப்பின் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமிட்டது.


4. இந்த அடித்தளத்தின்மீது, இந்திய அரசாங்கம் திறந்தநிலை பயன்பாட்டு நிரலாக்க இடைமுகங்கள் (Application Programming Interfaces (Open APIs)) மற்றும் பொது டிஜிட்டல் சொத்துகளைப் பயன்படுத்தி 'இந்தியா ஸ்டாக்' (India Stack) என்ற டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்கியது. காலப்போக்கில், இது வெறும் டிஜிட்டல் அடையாளம் (ஆதார்) மற்றும் நிதி உள்ளடக்கம் (அனைவருக்கும் வங்கிச் சேவை) என்பதோடு நின்றுவிடாமல், பணப்பரிவர்த்தனைகள், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், சுகாதாரம், கல்வி, திறன் மேம்பாடு மற்றும் அரசு நிர்வாகத் தளங்கள் எனப் பல துறைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.


5. இந்தியா டிஜிட்டல் உள்கட்டமைப்பு ஒத்துழைப்புக்கான உத்திசார் ஒப்பந்தங்களையும் மேற்கொண்டுள்ளது. 2026-ஆம் ஆண்டு கடந்த பிப்ரவரி மாத நிலவரப்படி, 'இந்தியா ஸ்டாக்' (India Stack) மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI) தொடர்பாக 24 நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இந்தக் கூட்டாண்மைகள் முக்கியமாகத் தொழில்நுட்பத் திறன்களைப் பகிர்ந்துகொள்வதிலும், பிற நாடுகள் இதுபோன்ற டிஜிட்டல் நிர்வாகத் தளங்களை உருவாக்க உதவுவதிலும் கவனம் செலுத்துகின்றன.


Original article : E-Governance Awards: How e-governance evolved in India. -Khushboo Kumari

Share:

வாகனங்களில் E85 எரிபொருளைப் பயன்படுத்த, முதலில் சரிபார்க்க வேண்டியன குறித்து . . .

 அறிமுக விழாவின்போது, ​​மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இந்தக் கலப்பு எரிபொருள், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட எரிபொருள்-கலவை வாகனங்களுக்கானது (flex-fuel vehicles (FFV)) என்றும், சாதாரண பெட்ரோல் வாகனங்களுக்கானது அல்ல என்றும் கூறினார். இதுகுறித்த தகவல்கள் கீழே குறிப்பிட்டுள்ளன.

 

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ஜூன் 5, வெள்ளிக்கிழமை அன்று புது தில்லியில் உள்ள ஒரு சில்லறை எரிபொருள் விற்பனை நிலையத்தில் “E85 எரிபொருளை” அறிமுகப்படுத்தினார். E-85 (எத்தனால்-85) என்பது 80-85% எத்தனால் மற்றும் 14-19% பெட்ரோல் அடங்கிய, அதிக எத்தனால் கலந்த ஒரு எரிபொருளாகும். இது குறிப்பாக எரிபொருள்-கலவை வாகனங்களில் (FFV) பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.


தேசிய தலைநகரில் இந்தியாவின் முதல் பயணிகள் எரிபொருள்-கலவை வாகனத்தின் (FFV) அறிமுக விழாவில் அமைச்சர் கலந்துகொண்ட ஒரு நாள் கழித்து இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எரிபொருள்-கலவை வாகனங்கள் (FFV), நுகர்வோர் ஒரே ஒரு குறிப்பிட்ட கலவையை மட்டுமே பயன்படுத்தக் கட்டாயப்படுத்தாமல், E20 (இதில் எத்தனால் கலப்பு எரிபொருளில் 20% ஆகும்) முதல் E100 வரையிலான பல்வேறு எத்தனால்-பெட்ரோல் கலவைகளில் இயங்கக்கூடியவை.


E85 எரிபொருள், இந்திய வாகனங்களில் பயன்படுத்தப்படும் மற்ற வகை எரிபொருள்கள் மற்றும் உங்கள் வாகனத்தின் பெட்ரோல் கொள்கலனை மீண்டும் நிரப்புவதற்கு முன் நீங்கள் சரிபார்க்க வேண்டியவை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


E85 : பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம்


பத்திரிக்கை தகவல் பணியகத்தின் (PIB) அறிக்கையின்படி, E85 ஆனது வழக்கமான பெட்ரோலை விட லிட்டருக்கு கிட்டத்தட்ட ரூ.20 குறைவாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எத்தனாலின் பொருளாதாரப் பலன்கள் நுகர்வோருக்குக் கிடைப்பதை உறுதி செய்வதற்காகவே இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.


மேலும், வழக்கமான பெட்ரோல் வாகனங்களுடன் ஒப்பிடும்போது, ​​E85-ல் இயங்கும் எரிபொருள்-கலவை வாகனங்கள் (FFV) அவற்றின் வாழ்நாள் முழுவதுமான பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை சுமார் 61% குறைக்க முடியும். நிதிஆயோக், E85 போன்ற அதிக எத்தனால் கலவைகளில் இயங்கும் வாகனங்கள் உட்பட, எத்தனால் அடிப்படையிலான எரிபொருள்-கலவை வாகனங்கள் (FFV) பூஜ்ஜிய-வெளியேற்ற வாகனங்களாக வகைப்படுத்துகிறது. E85 எரிபொருள் கிட்டத்தட்ட பூஜ்ஜிய அளவிலான துகள் உமிழ்வுகளை உருவாக்குகிறது. இது நாட்டின் அதிகரித்துவரும் காற்று மாசுபாடு சவாலை எதிர்கொள்வதற்கு எரிபொருள்-கலவை வாகனங்கள் (FFV) ஒரு நம்பிக்கைக்குரிய தீர்வாக ஆக்குகிறது என்று PIB அறிக்கை தெரிவிக்கிறது.


E85 மற்றும் பிற புதைபடிவ எரிபொருள்கள்


தற்போது, இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் வாகனங்கள் பெட்ரோல், டீசல், அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (compressed natural gas (CNG)) அல்லது எத்தனால் கலந்த பெட்ரோலில் இயங்குகின்றன. திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (liquified petroleum gas (LPG)) மற்றும் உயிரி-டீசல் (bio-diesel) ஆகியவை கிடைக்கக்கூடிய அல்லது சாத்தியமானதாகக் கருதப்படும் பிற எரிபொருள்களாகும். இருப்பினும் அவை பரவலாகப் பயன்படுத்தப்படுவதில்லை.


பல பத்தாண்டுகளாக அதிக எத்தனால் கலவைகளின் நீண்டகால நிலைத்தன்மையை பிரேசில் நிரூபித்திருப்பதையும், அந்நாட்டின் 80%-க்கும் மேற்பட்ட இலகுரக வாகனங்கள் தற்போது எரிபொருள்-கலப்பு தொழில்நுட்பத்தில் இயங்குவதையும் ஹர்தீப் சிங் பூரி உதாரணமாகக் குறிப்பிட்டார்.


மேலும், இந்தியா முழுவதும் E20 தரமான எரிபொருளாக மாறியதிலிருந்து, எத்தனால் கலப்பதால் ஏற்படும் இயந்திரக் கோளாறு அல்லது வாகனப் பழுது போன்ற எந்தச் சம்பவமும் பதிவாகவில்லை என்றும் அவர் கூறினார். எரிபொருள்-கலப்பு வாகனங்கள் (FFV) அவற்றின் குறைந்த கொள்முதல் செலவுகள் மற்றும் தற்போதுள்ள எரிபொருள் உள்கட்டமைப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் திறன் காரணமாக மின்சார வாகனங்களுடன் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்தவையாகத் திகழ்கின்றன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


வாகனங்களின்  எரிபொருள் கொள்கலனில் E85 கொண்டு நிரப்ப முடியுமா?


அது ஒரு எரிபொருள்-கலப்பு வாகனங்களாக (FFV) இருந்தால் மட்டுமே இது சாத்தியம். E85 எரிபொருள் என்பது பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட எரிபொருள்-கலப்பு வாகனங்களுக்காக (FFV) மட்டுமேயானது, சாதாரண பெட்ரோல் வாகனங்களுக்கானது அல்ல என்று அறிமுக விழாவின்போது பூரி கூறினார்.


நாடு தழுவிய அளவில் எர்பொருள்-கலப்பு பயன்பாட்டுச் சூழலை (ecosystem) உருவாக்கும் நோக்கில் அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட செயல்திட்டத்தில், எரிபொருள்-கலப்பு வாகனங்களுக்கான ஒற்றை எரிபொருள் தரநிலையாக E85 அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.


தற்போது இந்தியச் சாலைகளில் இயங்கிக்கொண்டிருக்கும் பயணிகள் வாகனங்களுக்கு இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து பூரி கூறுகையில், “உங்கள் E20 வாகனம் இன்னும் நீண்ட காலத்திற்கு இயங்கும்... E20 மற்றும் E85 ஆகியவை வெவ்வேறு வகையான வாகனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட, இரண்டு வெவ்வேறு வகைகளைச் சேர்ந்த எரிபொருள்கள் ஆகும். E85-இன் வருகையால் E20 அல்லது பெட்ரோல் வாகனங்கள் நிறுத்தப்படும் என்று அர்த்தமல்ல. E85 எரிபொருள் நிலையங்களில் 'E85-க்கு ஏற்ற கார்கள் மட்டுமே' (E85-compliant cars only) என்று குறிப்பிடப்பட்ட பெரிய அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டிருக்கும்," என்று கூறினார்.


E85 அறிமுகம்


இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் 48 சில்லறை விற்பனை நிலையங்களில் இந்தத் திட்டம் தொடங்கப்படும் என்று PIB அறிக்கை குறிப்பிட்டது. இது டிசம்பர் 2026-க்குள் 500 விற்பனை நிலையங்களுக்கும், டிசம்பர் 2027-க்குள் சுமார் 5,000 விற்பனை நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இதன் மூலம், 2030-31-க்குள் இந்தியாவின் ஒட்டுமொத்த எத்தனால் கலப்பு அளவை ஏறக்குறைய 26%-ஆக உயர்த்த இது உதவும்.


2014-ல் 1.53% ஆக இருந்த எத்தனால் கலப்பு, இன்று 20%-ஆக அதிகரித்துள்ளது என்றும், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அடைந்துவிட்டதாகவும் பூரி கூறினார். இதன் மூலம் ₹1.84 லட்சம் கோடிக்கும் அதிகமான அந்நியச் செலாவணி சேமிக்கப்பட்டுள்ளதாகவும், ஏறக்குறைய 302 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு மாற்றாக இது அமைந்துள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.


Original article : Can you use E85 fuel in your car? Here’s what to check first.

Share:

சுகாதாரச் சூழலமைப்பை ஐசிஎம்ஆர் எவ்வாறு மாற்றியமைக்கிறது? -ராஜீவ் பஹ்ல்

 திறன் மேம்பாடு மற்றும் உலகளாவிய ஒத்துழைப்புக்கு வலுவான முக்கியத்துவம் அளித்து, டிஜிட்டல் சுகாதாரம், உயிரி உற்பத்தி மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றில் ஏற்படும் முன்னேற்றங்களால் 2047-ம் ஆண்டுக்கான செயல்திட்டம் வடிவமைக்கப்படும்.


வளர்ந்த இந்தியா-2047 (Viksit Bharat) தொலைநோக்குப் பார்வையை நோக்கி நகரும்போது, நோய்களுக்குச் சிகிச்சை அளிப்பதில் மட்டும் கவனம் செலுத்தப்படுவது மட்டுமில்லாமல், சவால்களை முன்கூட்டியே கணித்து, சமத்துவத்தை உறுதிசெய்து, புதுமைகளை ஊக்குவிக்கும் ஒரு சுகாதார அமைப்பை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தப்படுகிறது. இதன் முக்கிய மாற்றத்தில், தரவுகளை முடிவுகளுடனும், முடிவுகளைத் உண்மையான உலகத் தாக்கத்துடனும் இணைக்கும், சுகாதாரத்திற்கான ஒரு மறுவடிவமைக்கப்பட்ட அணுகுமுறையாக அமைந்துள்ளது.


கோவிட்-19 பெருந்தொற்றின் மூலம் கடினமாகப் பெற்ற பாடங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் உயர்மட்ட உயிரி மருத்துவ ஆராய்ச்சி அமைப்பான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council of Medical Research (ICMR)), தொலைநோக்குப் பார்வை கொண்ட தொடர் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் சீர்திருத்தங்களில், அதன் நிறுவனக் கட்டமைப்பை மறுபரிசீலனை செய்வதும், ஆராய்ச்சிக்கு நிதியளிக்கும் முறையை வலுப்படுத்தி அதை நடைமுறைப் பலன்களாக மாற்றுவதும் அடங்கும். இந்த மாற்றம், தேசிய முன்னுரிமைகளுடன் ஒத்துப்போகும் ஒருங்கிணைந்த, நிறுவனத்தால் வழிநடத்தப்படும் ஆராய்ச்சியை நோக்கிய ஒரு திட்டமிட்ட நகர்வைப் பிரதிபலிக்கிறது. இந்த அணுகுமுறையில், அறிவியலானது அறிவை உருவாக்குவதற்காக மட்டுமல்லாமல், அவசரமான பொது சுகாதார சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


ஒரு இராஜதந்திர மறுசீரமைப்பு


இந்த மாற்றத்தின் ஒரு முக்கிய அம்சம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (Indian Council of Medical Research (ICMR)) நிறுவனக் கட்டமைப்பை மறுசீரமைப்பதாகும். சமீபத்திய சீர்திருத்தங்கள் பல நிறுவனங்களின் அதிகார வரம்புகளை விரிவுபடுத்தி, அவற்றை குறுகிய வரையறைக்குட்பட்ட அமைப்புகளாகக் கருதாமல், பல்துறை சார்ந்த மையங்களாக (interdisciplinary hubs) நிலைநிறுத்தியுள்ளன. டிஜிட்டல் சுகாதாரம் மற்றும் தரவு அறிவியல், குழந்தை நலம், மற்றும் மகளிர் நலம் போன்ற துறைகளை நோக்கி நிறுவனங்கள் பரிணமிப்பது, இந்தியாவின் நோய்ச் சுமை மற்றும் தொழில்நுட்பத் திறன்களின் மாறிவரும் தன்மைகளைப் பிரதிபலிக்கிறது. மற்றொரு முக்கிய நடவடிக்கை, வடகிழக்கில் உள்ள திப்ருகர் முதல் மேற்கில் உள்ள ஜோத்பூர் வரை நாடு முழுவதும் பிராந்திய தேசிய சுகாதார ஆராய்ச்சி நிறுவனங்களின் (National Institutes of Health Research) வலையமைப்பை உருவாக்குவதாகும். இந்த நிறுவனங்கள், மாநில மற்றும் மாவட்ட சுகாதார அமைப்புகளுடன் இணைந்து செயல்பாட்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, பொருத்தமான ஆராய்ச்சி நடத்தப்படுவதையும், அதன் முடிவுகள் கள அளவில் பயன்படுத்தப்படுவதையும் உறுதிசெய்ய முடியும். இந்த மாற்றங்கள், எதிர்காலத்திற்குத் தயாரான அறிவியலை நோக்கிய ஒரு இராஜதந்திர மறுசீரமைப்பைக் குறிக்கின்றன. இதில் செயற்கை நுண்ணறிவு (AI), மரபணுவியல் (genomics) மற்றும் நிகழ்நேரத் தரவு அமைப்புகள் (real-time data systems) ஆகியவை பொது சுகாதார முடிவெடுக்கும் செயல்முறையின் ஒருங்கிணைந்த பகுதிகளாக அமைகின்றன.


தனித்தனிப் பிரிவுகளாகச் செயல்படுவதிலிருந்து, ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட ஒரு தேசிய ஆராய்ச்சிச் சூழலமைப்பை நோக்கிய மாற்றமும் சம முக்கியத்துவம் வாய்ந்தது. நிறுவனங்கள் இப்போது ஒரு பொதுவான தேசியப் பணிக்குப் பங்களிக்கும் வள மையங்களாகக் கருதப்படுகின்றன. இதன் மூலம், ஓர் இடத்தில் உருவாக்கப்படும் சான்றுகள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு வழிகாட்டுவதை உறுதி செய்கின்றன. நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன், பெருந்தொற்றுகள் அல்லது தொற்றா நோய்கள் போன்ற சுகாதாரச் சவால்கள் சிக்கலானவையாகவும் ஒன்றோடொன்று தொடர்புடையவையாகவும் இருக்கும் இந்தக் காலகட்டத்தில், இந்த அமைப்பு நிலையிலான அணுகுமுறை மிகவும் இன்றியமையாதது. அதே நேரத்தில், ஆராய்ச்சிக்கான நிதி வழங்கும் சூழலமைப்பும் ஒரு மறுவடிவமைப்பிற்கு உள்ளாகி வருகிறது.


இந்த ஒருங்கிணைந்த தொடர்ச்சியானது, திட்டங்களுக்கு நிதியளிப்பதிலிருந்து தீர்வுகளைச் செயல்படுத்துவதை நோக்கிய ஒரு தீர்க்கமான மாற்றத்தைக் குறிக்கிறது. நுண்ணுயிர் எதிர்ப்புத்திறன் மற்றும் காசநோய் முதல் மனநலம், ஊட்டச்சத்து மற்றும் அவசர சிகிச்சை வரை 13 முன்னுரிமைப் பகுதிகளை அடையாளம் கண்டுள்ள தேசிய சுகாதார ஆராய்ச்சித் திட்டத்தால் (National Health Research Programme (NHRP)) இது மேலும் வலுப்படுத்தப்படுகிறது.


தொழில்நுட்பமும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பங்கை வகிக்கிறது. நோயறிதல், கண்காணிப்பு மற்றும் திட்டச் செயலாக்கம் ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைப்பது, நகர்ப்புற மற்றும் கிராமப்புற சுகாதாரப் பராமரிப்புக்கு இடையே உள்ள நீண்டகால இடைவெளிகளைக் குறைக்க உதவுகிறது. காசநோய் (tuberculosis) மற்றும் நீரிழிவு விழித்திரை நோய் (diabetic retinopathy screening) பரிசோதனைக்கான செயற்கை நுண்ணறிவு சார்ந்த கருவிகள் ஏற்கனவே களப்பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு ஆதரவளித்து வருகின்றன. அதேநேரத்தில், செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் ஊட்டச்சத்து கண்காணிப்பு போன்ற புதுமைகள், பெரிய அளவில் திட்டச் செயலாக்கத்தை மேம்படுத்துகின்றன. தடுப்பூசி விநியோகத்துடன் தொடங்கி, முக்கியமான மருத்துவப் பொருட்களைக் கொண்டு செல்வது வரை விரிவடைந்துள்ள 'ஐ-ட்ரோன்' (i-Drone) முயற்சியானது, அதிநவீன தொழில்நுட்பம் எவ்வாறு புவியியல் தடைகளைத் தாண்டி, பராமரிப்பை சமூகங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு வர முடியும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். அறிவியலின் எல்லையில், மருத்துவத் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் நிலையில், மருத்துவ சாதனங்கள், நோயறிதல் கருவிகள், அடுத்த தலைமுறை தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை முறைகள் ஆகியவை அடங்கும். மேலும் அவை இலக்கு சார்ந்த மற்றும் நோயாளியை மையமாகக் கொண்ட தலையீடுகளைச் சாத்தியமாக்குகின்றன. இதற்கு இணையாக, புதுமையான, சான்றுகள் அடிப்படையிலான மாதிரிகள் மூலம் பாரம்பரிய அறிவு அமைப்புகளை ஒருங்கிணைப்பது உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்று வருகிறது. "உலகின் முதல்” சவால் (First in the World Challenge) போன்ற திட்டங்கள், மெட் டெக் மித்ரா (MedTechMitra) மற்றும் மருத்துவ கண்டுபிடிப்புகள் - காப்புரிமை மித்ரா முன்முயற்சி (Medical Innovations–Patent Mitra initiative) போன்ற தளங்களுடன் இணைந்து, ஆராய்ச்சியில் இருந்து வணிகமயமாக்கல் வரையிலான பயணத்தை விரைவுபடுத்துகின்றன. இதன் மூலம், பொது நிதியுதவி பெற்ற அறிவியல் ஆராய்ச்சி, மக்களுக்கு மலிவான மற்றும் எளிதில் அணுகக்கூடிய தொழில்நுட்பங்களாக மாற்றப்படுவதை உறுதிசெய்ய அவை உதவுகின்றன.


அனைவருக்கும் சுகாதார அணுகலை நோக்கி


இருப்பினும், இந்த சீர்திருத்தங்களின் உண்மையான அளவுகோல், பொது சுகாதாரத்தில் அவை ஏற்படுத்தும் தாக்கத்தில்தான் அடங்கியுள்ளது. இந்திய உயர் இரத்த அழுத்தக் கட்டுப்பாட்டு முன்முயற்சி (India Hypertension Control Initiative) போன்ற முன்னெடுப்புகள், சான்றுகளின் அடிப்படையில் அமைந்த உத்திகள் எவ்வாறு நாள்பட்ட நோய்களுக்கான சிகிச்சையை பரந்த அளவில் மேம்படுத்த முடியும் என்பதை நிரூபித்துள்ளன. நடமாடும் பக்கவாத சிகிச்சை பிரிவுகள் (mobile stroke units) மற்றும் விரைவான இதய சிகிச்சைக் கட்டமைப்புகள் உள்ளிட்ட, அவசரகால சிகிச்சையில் செயல்படுத்தப்படும் செயல்திட்டங்கள், உயிருக்கு ஆபத்தான நிலைகளில் சிகிச்சைக்கான விளைவுகளை மறுவரையறை செய்கின்றன. விரிவாக்கப்பட்ட நோயறிதல் கட்டமைப்புகளும் மற்றும் உள்நாட்டுத் தொழில்நுட்பங்களும் புற்றுநோய் முதல் தொற்றுநோய்கள் வரையிலான நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சையளிப்பதை வலுப்படுத்துகின்றன. இந்த முயற்சிகள், தடுப்பு மற்றும் மேம்பாட்டு சுகாதாரப் பராமரிப்பு, அனைவருக்கும் அணுகல் மற்றும் தரமான பராமரிப்பு ஆகியவற்றை வலியுறுத்தும் 2017-ம் ஆண்டின் தேசிய சுகாதாரக் கொள்கையுடன் (National Health Policy) நெருக்கமாக ஒத்துப்போகின்றன.


எதிர்காலத்தைப் பொறுத்தவரை, ​​தொலைநோக்குப் பார்வை தெளிவாக உள்ளது. ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்துறையினரை ஒன்றிணைத்து, ஒரு மீள்திறன் கொண்ட சுகாதாரச் சூழலமைப்பைக் கட்டமைக்கும் ஒரு வினையூக்கியாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council of Medical Research (ICMR)) தொடர்ந்து செயல்படும். 2047-ம் ஆண்டுக்கான செயல்திட்டமானது, திறன் மேம்பாடு மற்றும் உலகளாவிய ஒத்துழைப்புக்கு வலுவான முக்கியத்துவம் அளித்து, டிஜிட்டல் சுகாதாரம், உயிரி உற்பத்தி மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றில் ஏற்படும் முன்னேற்றங்களால் வடிவமைக்கப்படும். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்-க்குள் (Indian Council of Medical Research (ICMR)) தற்போது நடைபெற்று வரும் இந்த மாற்றம், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் இந்தப் பயணத்தில் பங்கேற்கவும், அறிவியல் சமூகத்திற்கு மிகவும் அர்த்தமுள்ள வகையில் சேவை செய்வதை உறுதி செய்யவும் ஓர் அழைப்பாகும்.


டாக்டர் ராஜீவ் பஹல், இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சுகாதார ஆராய்ச்சித் துறையின் செயலாளராகவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தலைமை இயக்குநராகவும் உள்ளார்.


Original article : How ICMR is rewiring the health ecosystem?. -Rajiv Bahl

Share:

தமிழ்நாட்டில் உறுப்புதானத்தில் அரசு மருத்துவமனைகளின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. -செரீனா ஜோசபின் எம்.

 அரசு மருத்துவர்களுக்கான முறையான மறுபயிற்சி, செயல்பாட்டு நடைமுறைகளைத் தரப்படுத்துதல் மற்றும் பல்வேறு நிலைகளில் காலமுறைப்படி மேற்கொள்ளப்படும் மதிப்பாய்வுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதற்கு முக்கிய காரணிகளாக இருந்துள்ளன.


தமிழ்நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கையில் அரசு மருத்துவமனைகளின் பங்களிப்பு படிப்படியாக அதிகரித்துள்ளது. 2025-ஆம் ஆண்டில், இறந்தவர்களின் உறுப்பு தானம் செய்பவர்களில் 58% அரசு மருத்துவமனைகளைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாத நிலவரப்படி, அவர்களின் பங்கு 64%-ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், சிறுநீரகங்களைத் தவிர மற்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இது பல்வேறு காரணிகள் ஒருங்கிணைந்து செயல்படுவதன் விளைவாக இருக்கலாம்.


தமிழ்நாட்டில் இறந்தவர்களின் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை 2022-ஆண்டில் 156-ஆக இருந்து, 2023-ல் 178-ஆக கணிசமாக அதிகரித்து, 2024-ஆண்டில் 268 என்ற சாதனை அளவை எட்டியது. 2025-ஆண்டில் 266 தானம் செய்பவர்களுடன் இதே அளவில் இருந்த இந்த எண்ணிக்கை, ஏப்ரல் 2026 வரை 112-ஆக இருந்தது. இந்தக் காலகட்டத்தில், உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கையில் அரசின் பங்களிப்பு 33%-லிருந்து 64%-ஆக கணிசமாக அதிகரித்துள்ளது என தமிழ்நாடு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தின் (Transplant Authority of Tamil Nadu (TRANSTAN)) தரவுகள் காட்டுகின்றன.


தமிழ்நாடு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் (Transplant Authority of Tamil Nadu (TRANSTAN))  என்றால் என்ன?


1994-ஆம் ஆண்டில் 'மனித உறுப்பு மாற்றுச் சிகிச்சைச் சட்டம்' (Transplantation of Human Organs Act) இயற்றப்பட்டதைத் தொடர்ந்து, 1995-ஆம் ஆண்டில் இறந்தவரிடமிருந்து உறுப்பு பெறும் மாற்றுச் சிகிச்சை முறையைத் (Cadaver Transplant) தொடங்கிய முதல் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருந்து வருகிறது.


இறந்தவரிடமிருந்து உறுப்பு பெறும் மாற்றுச் சிகிச்சைத் (Cadaver Transplant Program)திட்டத்தை,   முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி  2008-ஆம் ஆண்டில் தொடங்கி வைத்தார்.


இந்தத்திட்டம் 2015-ஆம் ஆண்டு மே மாதம், தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையின் கீழ் 'தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம்' (Transplant Authority of Tamil Nadu) எனப் பெயரிடப்பட்டது.




அரசு மருத்துவமனைகளின் செயல்பாடு மேம்பட்டதற்குப் பல காரணங்கள் முக்கியமானதாக இருந்துள்ளதாக தமிழ்நாடு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தின் (TRANSTAN) உறுப்பினர் செயலர் N. கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நடத்தப்படும் 'கௌரவ அணிவகுப்புகள்' (honour walks), உறுப்பு தானம் செய்தவர்களுக்கு மாநில அரசு சார்பில் வழங்கப்படும் கௌரவங்கள் குறித்த அறிவிப்பு, அரசு மருத்துவர்களுக்கு 'தமிழ்நாடு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தின்' மூலம் வழங்கப்படும் முறையான மறுபயிற்சி, செயல்பாட்டு நடைமுறைகளைச் சீராக்குதல், பல்வேறு நிலைகளில் மேற்கொள்ளப்படும் காலமுறை ஆய்வுகள் மற்றும் 'தொடர் மருத்துவக் கல்வி' (Continuing Medical Education programmes (CME)) திட்டங்கள் மூலமாக அறிவு மற்றும் செயல்முறைத் திறன்களைத் தொடர்ந்து மேம்படுத்துதல் போன்றவைவை இதில் அடங்கும்.


தமிழ்நாட்டில் மொத்தம் 13 அரசு மருத்துவமனைகளும் 159 தனியார் மருத்துவமனைகளும் உறுப்பு மாற்று உரிமங்களைக் பெற்றுள்ளன. அதே சமயம், அரசுத் துறையில் 35 உறுப்பு மாற்று அல்லாத உறுப்பு மீட்பு மையங்கள் (Non Transplant Organ Retrieval Centres (NTORC)) உள்ளன. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளாத, ஆனால் உறுப்புகளைச் சேகரிக்கும் மையங்களிலிருந்தே ஏறக்குறைய 15 சதவீத நன்கொடையாளர்கள் வந்துள்ளனர். உறுப்பு தானைங்களை அதிகரிக்கவும், உறுப்பு தானம் வழங்குபவர்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்தவும் இந்த மையங்கள் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தன என்று அவர் கூறினார்.


உறுப்பு தானம் செய்பவர் கண்டறியப்பட்டதும், அவரது உடல்நிலையைப் பராமரிப்பது மிக முக்கியமானது. தொடர்ச்சியான தகவல் தொடர்பு முதல் மூளைச் சாவு உறுதிப்படுத்தல் வரை, இதற்கெனத் தனிப்பட்ட வழிமுறைகள் நடைமுறையில் உள்ளன. இதன் விளைவாக, உறுப்புகளை எடுப்பதற்கு முன்பே தானம் செய்பவரின் உடல்நிலை மோசமடைவது (crashing) இப்போது அரிதாகிவிட்டது. இதனால் திருப்தியடைந்து நாம் அலட்சியமாக இருக்க முடியாது. இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.


மாநிலத்தில் உறுப்பு தானத்திற்கான ஏற்பு விகிதம் 75% முதல் 80% வரை உள்ளதாக டாக்டர் கோபாலகிருஷ்ணன் குறிப்பிட்டார். மீதமுள்ள 20% முதல் 25% வரையிலான காரணங்கள் ஆராயப்பட வேண்டும். உறுப்பு தானத்தைச் சுற்றி சில கட்டுக்கதைகள் நிலவுகின்றன. குடும்பத்தினரிடையே உள்ள அச்சங்களைப் நிவர்த்தி செய்து, உறுப்புகள் எடுக்கப்பட்ட பிறகு உடல்களை விரைவாக ஒப்படைப்பது போன்ற செயல்முறைகளை வேகப்படுத்த வேண்டும் என்று கூறிய அவர், உறுப்பு ஒதுக்கீட்டுச் செயல்முறையில் உள்ள வெளிப்படைத்தன்மை, பொதுமக்களிடையே இந்த அமைப்பின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.


வலுப்படுத்தப்பட வேண்டிய பகுதிகள் இருப்பதாக பல மூத்த மருத்துவர்கள் தெரிவித்தனர். அதிகமான அரசு மையங்கள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளைச் செய்யும் திறனையும், இதயம், நுரையீரல் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளுக்கான பயிற்சியும் கூடுதலாக இருக்க வேண்டும். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விகிதங்களை மேம்படுத்துவதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்று அல்லது இரண்டு முழு வசதிகளுடன் கூடிய அரசு மையங்கள் செயல்படலாம். அரசுத் துறையில் பெரும்பாலான மையங்கள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளைச் செய்வதால், அவையே அங்கு ஆதிக்கம் செலுத்துவதாக மருத்துவர்கள் கூறினர். சிறுநீரக செயலிழப்பு உள்ள நோயாளிகள் டயாலிசிஸ் உதவியுடன் உயிர்வாழ முடிகிறது. இதன் விளைவாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காகப் பட்டியலிடப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அரசுத் துறையில் இலவசமாக வழங்கப்படும் பராமரிப்பு டயாலிசிஸ் மூலம் பல நபர்கள் சிறந்த வாழ்க்கைத் தரத்தைக் பெற்றுள்ளனர். இதற்கு மாறாக, கல்லீரல், இதயம் மற்றும் நுரையீரல் செயலிழப்புகளுக்குப் போதுமான ஆதரவு அமைப்புகள் இல்லை. மேலும், மாற்று அறுவை சிகிச்சைக்காகப் பட்டியலிடப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தது.


ஒரு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் கவனம் செலுத்துவதற்காக, அரசுத் துறையில் மாவட்ட மையங்களை நாம் உருவாக்க வேண்டும். இதன் மூலம், மனிதவளம் உட்பட அனைத்து வளங்களையும் நாம் ஒருங்கிணைக்க முடியும். உதாரணமாக, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு உள்ளது என்று ஒரு மூத்த மருத்துவர் கூறினார்.


Original article : Government hospitals’ share in organ donation rises in Tamil Nadu. -Serena Josephine M.

Share:

எல்லைப் பகுதியிலிருந்து, இந்தியாவின் உத்திசார் வள எல்லைப் பகுதி வரை. -சங்முவான் ஹங்சிங்

 முக்கிய கனிம வளங்கள் தொடர்பான இலக்குகள், வடகிழக்கு இந்தியாவின் மக்கள், நிலம் மற்றும் வரலாற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.


தொடர்ந்து சில நாட்களுக்குள், சுரங்க அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் பல வடகிழக்கு மாநிலங்களை, குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்கள் மற்றும் பயன்படுத்தப்படாத ஆற்றல் கொண்ட உத்திசார் கனிமங்களின் முக்கிய ஆதாரங்களை ஒரே மாதிரியாகச் சித்தரித்தன. மணிப்பூர் ஒரு “அமைதியான கனிம வள எல்லை” (quiet mineral frontier) என்றும், அருணாச்சலப் பிரதேசம் ஒரு “வளம் நிறைந்த எல்லை” (resource-rich frontier) என்றும் விவரிக்கப்பட்டன. அதேசமயம், மேகாலயா மற்றும் மிசோரம் ஆகியவை அவற்றின் மலைகளுக்கு அடியில் மறைந்திருக்கும் செல்வத்தை வலியுறுத்தும் ஒப்பிடத்தக்க விவரிப்புகளின் மூலம் சித்தரிக்கப்பட்டன. அரசாங்கங்கள் வழக்கமாக இயற்கை வளங்களையும் மேம்பாட்டு வாய்ப்புகளையும் விளம்பரப்படுத்துகின்றன. மேலும், இதுபோன்ற விளக்கங்கள் பொதுவாக அதிக கவனத்தை ஈர்க்காது.


இருப்பினும், இவற்றை ஒன்றாகப் பார்க்கும்போது, தேசிய உரையாடலிலும் இந்தியாவின் இராஜதந்திர சிந்தனையிலும், வடகிழக்குப் பகுதி அதிகளவில் கட்டமைக்கப்படும் மொழியில் ஏற்பட்டுவரும் ஒரு பரந்த மாற்றத்தைச் சுட்டிக்காட்டுகின்றன.


முக்கிய கனிம வளங்களுக்கான உந்துதல்


முக்கியமான கனிமங்கள் இனி புவியியல்ரீதியாக மட்டும் விவாதிக்கப்படுவதில்லை என்பதால், இந்த நேரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. இதில் லித்தியம், கோபால்ட், கிராஃபைட், நிக்கல் மற்றும் அரியவகை மண் தனிமங்கள் ஆகியவை தொழில்துறைப் போட்டி, தொழில்நுட்ப உற்பத்தி மற்றும் எரிசக்தி மாற்றங்களை அதிகளவில் வடிவமைக்கின்றன. மின்கலன்கள், குறைமின்கடத்திகள், புதுப்பிக்கத்தக்க தொழில்நுட்பங்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் இவற்றைச் சார்ந்துள்ளன. இதன் விளைவாக, நாடுகள் இந்த வளங்களுக்கான அணுகலைப் பாதுகாப்பதற்காகத் தங்களை மறுசீரமைக்கத் தொடங்கியுள்ளன. இந்தியா பல முக்கியமான கனிமங்களுக்குத் தொடர்ந்து இறக்குமதியைச் சார்ந்துள்ளது. எனவே, தனது ஆய்வு முயற்சிகளை விரிவுபடுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் சுரங்க அமைச்சகம் அளித்த பதிலின்படி, இந்தியப் புவியியல் ஆய்வு நிறுவனம் 2022-23, 2023-24 மற்றும் 2024-25 களப் பருவங்களில் வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் 43 முக்கிய கனிம ஆய்வுத் திட்டங்களை மேற்கொண்டது. இதில் கிராஃபைட், வனேடியம், லித்தியம், அரியவகை மண் தனிமங்கள், நிக்கல் மற்றும் கோபால்ட் போன்ற கனிமங்கள் அடங்கும். அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, அசாம், நாகாலாந்து மற்றும் மணிப்பூர் முழுவதும் ஆய்வு நடவடிக்கைகள் விரிவடைந்துள்ளன. மணிப்பூரில், நிக்கல், கோபால்ட் மற்றும் குரோமியம் ஆய்வு தொடர்பான திட்டங்கள் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளன.


பல ஆண்டுகளாக, புவியியல் ஆய்வுகள் இப்பகுதி முழுவதும் கனிம வளம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளைச் சுட்டிக்காட்டி வருகின்றன. ஆனால், அந்த முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளும் விதம்தான் தற்போது மாறிவருவதாகத் தெரிகிறது. வடகிழக்குப் பகுதி, புவியியலையும் தாண்டிய ஒரு இராஜதந்திர முக்கியத்துவத்தை நீண்டகாலமாகவே கொண்டுள்ளது. ஆனால், தற்போது அந்த முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளும் கட்டமைப்பு விரிவடைந்து வருவதாகத் தெரிகிறது.


நடைமுறையில் மாற்றம்


பல பத்தாண்டுகளாக, தேசியளவிலான உத்தியில் வடகிழக்குப் பகுதியானது பெரும்பாலும் எல்லைகள் மற்றும் பாதுகாப்பு என்ற கண்ணோட்டத்தில் இடம்பெற்று வந்துள்ளது. கிளர்ச்சிகள், பிராந்திய மேலாண்மை, இணைப்பு முயற்சிகள் மற்றும் அண்டை நாடுகளை உள்ளடக்கிய புவிசார் அரசியல் கருத்தாய்வுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு விவாதங்கள் நடைபெற்றன. அதேசமயம், உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாடு ஆகியவை இராஜதந்திர அணுகல் மற்றும் பிராந்தியப் பாதுகாப்பிற்கான கருவிகளாகப் பெரும்பாலும் நியாயப்படுத்தப்பட்டன.


ஒரு காலத்தில் எல்லைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகளால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட ஒரு இராஜதந்திர களத்தில், வளங்கள் பற்றிய நடைமுறை பெருகி வருகிறது. பிராந்திய மற்றும் வளப் பாதுகாப்பு ஒன்றிணையும் நிலையில், முக்கிய கனிமங்கள் இப்போது வர்த்தக வழித்தடங்கள் மற்றும் புவிசார் அரசியல் அணுகலுடன் சேர்த்து விவாதிக்கப்படுகின்றன. ஒரு காலத்தில் முக்கியமாக உணர்திறன் மிக்க எல்லைப் பகுதிகளாகக் கருதப்பட்ட இடங்கள், இப்போது அதிகளவில் உத்திசார் சொத்துக்களாகக் கருதப்படுகின்றன.


எல்லை (frontier) என்ற வார்த்தையின் தொடர்ச்சியான பயன்பாடு பல உண்மைகளை வெளிப்படுத்துகிறது. ஏனெனில், எல்லைகள் அரிதாகவே நடுநிலையான விளக்கங்களாகச் செயல்படுகின்றன. அவை பொதுவாகவே புவியியலை விவரிப்பதில்லை. மாறாக, ஒரு பிராந்தியத்தை அரசுகள் எவ்வாறு கற்பனை செய்து புரிந்து கொள்கின்றன என்பதை அவை பெரும்பாலும் பிரதிபலிக்கின்றன. வரலாற்றுரீதியாக, எல்லைகள் ஒருங்கிணைப்பு, வளர்ச்சி அல்லது வளப் பிரித்தெடுப்பிற்காகக் காத்திருக்கும் பகுதிகளாகக் காணப்படுகின்றன. ஏனெனில் அவை பெரும்பாலும் எதிர்கால சாத்தியக்கூறுகள் நிறைந்த நிலப்பரப்புகளாகக் கருதப்படுகின்றன.


சவால் என்னவென்றால், எல்லைகள் என்பவை கண்டறியப்படுவதற்கான வெற்று இடங்களாக அரிதாகவே இருக்கின்றன. வடகிழக்கின் மலைகளும் பள்ளத்தாக்குகளும் வழக்கமான நில அமைப்புகள், உள்ளூர் நிறுவனங்கள் மற்றும் நிலப்பரப்புடனான நீண்டகால உறவுகளை மையமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட அடர்த்தியான சமூக மற்றும் அரசியல் நிலைகளை ஏற்கனவே கொண்டுள்ளன. நிலம் தொடர்பான கேள்விகள் பெரும்பாலும் பொருளாதாரத்தைத் தாண்டியும் நீள்கின்றன. ஏனெனில் அவை அதிகாரம், அடையாளம் மற்றும் நினைவுகளுடனும் பிணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, வளங்களை அகழ்ந்தெடுத்தல் என்பது, தமக்கென சொந்த நிறுவனங்களையும் வரலாறுகளையும் ஏற்கனவே கொண்டுள்ள நிலப்பரப்புகளுக்குள் நுழைகிறது.


அரசியல் நிச்சயமற்ற தன்மை அன்றாட வாழ்க்கையில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தும் பகுதிகளில் இந்தக் கேள்விகள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. மணிப்பூரில், பல ஆண்டுகளாக நீடிக்கும் வன்முறை மற்றும் மக்கள் இடம்பெயர்வு ஆகியவை நிலம் மற்றும் பிராந்திய ஏற்பாடுகள் குறித்த விவாதங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன. வடகிழக்கு பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளில், உரிமை, சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் உள்ளூர் மக்களின் பங்கேற்பு ஆகியவை குறித்த இதேபோன்ற கவலைகள் வெவ்வேறு காலகட்டங்களில் வெளிவந்துள்ளன. சமூகங்கள் நம்பிக்கை, பிரதிநிதித்துவம் மற்றும் அரசியல் உள்ளடக்கத்தின் கண்ணோட்டத்தில் நிலம் தொடர்பான திட்டங்களைப் புரிந்துகொள்வதால், அவை பெரும்பாலும் வளர்ச்சிக்கு அப்பாற்பட்ட பரிமாணங்களைப் பெறுகின்றன.


வளங்களும் உள்ளடக்கமும்


விநியோகச் சங்கிலி நிச்சயமற்றத் தன்மை மற்றும் இராஜதந்திரப் போட்டிகளால் வடிவமைக்கப்படும் தற்போதைய உலகச் சூழலில், முக்கியமான வளங்களுக்கான இந்தியாவின் தேடல் புரிந்துகொள்ளத்தக்கதே. அதே வேளையில், பல பத்தாண்டுகளாகச் சீரற்ற நிலையில் உள்ள வடகிழக்கு பிராந்தியத்திற்குச் சிறந்த உள்கட்டமைப்பு, கூடுதல் வேலைவாய்ப்புகள் மற்றும் மேம்பட்ட பொருளாதார வாய்ப்புகளும் அவசியமாக உள்ளன. இதன் விளைவாக, வள மேம்பாடு குறித்த விவாதங்களை வெறும் 'ஆதரவு' அல்லது 'எதிர்ப்பு' என்ற எளிய நிலைப்பாடுகளாக மட்டும் சுருக்கிவிட முடியாது.


இந்த மாற்றங்கள் எவ்வளவு விரைவாக நிகழ்கின்றன என்பதும், அவற்றை யார் வடிவமைக்கிறார்கள் என்பதும், வளங்களைப் போலவே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம். மிக நீண்ட காலமாக, வடகிழக்குப் பகுதியில் தேசிய முன்னுரிமைகளும் உள்ளூர் யதார்த்தங்களும் பெரும்பாலும் வெவ்வேறு வேகத்திலேயே பயணித்து வந்துள்ளன. இணைப்புத் திட்டங்கள் சில சமயங்களில் அதற்கேற்ற பொருளாதாரச் சூழல் அமைப்புகள் இல்லாமலேயே வந்தன. அதே சமயம், பங்கேற்பு மற்றும் பிரதிநிதித்துவம் தொடர்பான கேள்விகளை இராஜதந்திரக் கருத்தாய்வுகள் அடிக்கடி மறைத்துவிட்டன. வளங்களை அகழ்ந்தெடுப்பது, அதன் சமூக விளைவுகளை நிர்வகிக்கத் திறனுள்ள நிறுவனங்களை விட வேகமாக நகரத் தொடங்கினால், வள மேம்பாடு இதே போன்ற பதட்டங்களை மீண்டும் உருவாக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது.


இந்த விவாதம் மலைகளுக்கு அடியில் உள்ள கனிமங்களைப் பற்றியது மட்டுமல்ல. பல ஆண்டுகளாக, வடகிழக்கு பிராந்தியம் முதலில் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு 'எல்லையாகவும்', பின்னர் இணைக்கப்பட வேண்டிய ஒரு 'வழித்தடமாகவும்' பார்க்கப்பட்டது. இப்போது அது இராஜதந்திர முக்கியத்துவம் வாய்ந்த வளங்கள் நிறைந்த பகுதியாகப் பார்க்கப்படத் தொடங்கினால், ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. இந்த 'புதிய முன்னெடுப்பு' அங்கு ஏற்கனவே வசிக்கும் மக்களையும் உள்ளடக்கியதாக இருக்குமா?, அல்லது அவர்களின் காலடியில் உள்ள நிலத்திற்கு வேறொரு நோக்கத்தை மட்டும் அது வழங்குமா? என்பதுதான்.


முக்கிய கனிம வளங்கள் தொடர்பான இலக்குகள், வடகிழக்கு இந்தியாவின் மக்கள், நிலம் மற்றும் வரலாற்றைக் கணக்கில் கொள்ள வேண்டும்.


சங்முவான் ஹாங்சிங் (Sangmuan Hangsing) ஒரு ஆராய்ச்சியாளர் மற்றும் கௌடில்யா பொதுக் கொள்கைப் பள்ளியின் (Kautilya School of Public Policy) முன்னாள் மாணவர் ஆவார்.


Original article : From borderland to India’s strategic resource frontier. -Sangmuan Hangsing

Share:

இந்தியாவின் நவீனமயமாக்கப்பட்ட 'தொழில்துறை உற்பத்தி குறியீடு' அறிமுகம்: கவனிக்க வேண்டிய 5 முக்கிய மாற்றங்கள். - ரோஷ்னி யாதவ்

 இந்தியாவின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை முழுமையாகச் சீரமைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நுகர்வோர் விலைக் குறியீடு (Consumer Price Index (CPI)) மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product (GDP)) ஆகியவற்றின் கணக்கீட்டு முறைகள் மாற்றியமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது புதிய தொழில் உற்பத்தி குறியீட்டு (Index of Industrial Production (IIP)) முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் மேற்கொள்ளப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் என்ன? அடிப்படை ஆண்டுகள் (base years) ஏன் முக்கியமானவை? பழைய தயாரிப்புகள் நீக்கப்பட்டு புதியவை பட்டியலில் சேர்க்கப்படும்போது என்ன மாற்றங்கள் நிகழ்கிறது? இது குறித்த முழுமையான விவரங்கள் இங்கே உள்ளன.


தற்போதைய செய்தி :


புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (Ministry of Statistics and Programme Implementation (MoSPI)) திங்களன்று வெளியிட்ட புதிய தொழில்துறை உற்பத்தி குறியீட்டு (IIP) தரவுத் தொடரின் படி, இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி ஏப்ரல் மாதத்தில் 4.9% வளர்ச்சி அடைந்துள்ளது. இது மார்ச் மாதத்தில் பதிவான 3.2% வளர்ச்சியைவிட அதிகமாகும். தொழில்துறை உற்பத்தி குறியீட்டை நவீனமயமாக்குவது என்பது, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் இந்தியாவின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில் மேற்கொள்ளப்படும் ஒரு பெரிய சீரமைப்பின் ஒரு பகுதியாகும். முன்னதாக, நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அடிப்படை ஆண்டும் திருத்தப்பட்டன.


முக்கிய அம்சங்கள்:


1. புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (MoSPI) கீழ் உள்ள தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் (National Statistical Office (NSO)) மாதந்தோறும் வெளியிடப்படும் தொழில்துறை உற்பத்தி குறியீடானது, இந்தியத் தொழில்துறைகளின் உற்பத்தி அளவில் ஏற்படும் மாற்றங்களை அளவிடுகிறது.


2. முறையாகச் சொல்வதானால், தொழில்துறை உற்பத்தி குறியீடு (IIP) என்பது உற்பத்தித் துறை, சுரங்கத் துறை மற்றும் மின்சார/ஆற்றல் துறை போன்ற பல்வேறு தொழில்துறைப் பொருட்களை ஒரு தொகுப்பாக தேர்ந்தெடுக்கிறது. பின்னர், ஒவ்வொரு துறைக்கும் அதன் பொருளாதார முக்கியத்துவத்திற்கேற்ப வெவ்வேறு எடைகள் வழங்கப்பட்டு ஒரு குறியீடு உருவாக்கப்படுகிறது. அதன் பிறகு, ஒவ்வொரு மாதமும் அந்தத் துறைகளின் உற்பத்தி அளவு கண்காணிக்கப்படுகிறது. இறுதியாக, பொருளாதாரத்தின் தொழில்சார்ந்த நிலையை அறிய, குறியீட்டு மதிப்பானது (index value) கடந்த ஆண்டின் அதே மாதத்தில் இருந்த அதனது மதிப்புடன் ஒப்பிடப்படுகிறது.


தொழில்துறை உற்பத்தி குறியீட்டின் (IIP) புதிய தொடரில் உள்ள முக்கிய மாற்றங்கள் என்னென்ன?


1. திருத்தப்பட்ட அடிப்படை ஆண்டு (Revised Base Year): தொழில்துறைத் துறையின் தற்போதைய கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டுத் தன்மைகளை இந்தக்குறியீடு சிறப்பாகப் வெளிக்காட்டும் வகையில், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சக மதிப்பீடானது தொழில்துறை உற்பத்தி குறியீட்டின் அடிப்படை ஆண்டை 2011–12-லிருந்து 2022–23-க்கு மாற்றியமைத்துள்ளது.


அடிப்படை ஆண்டு (base year) என்றால்  என்ன?


அடிப்படை ஆண்டு என்பது, காலப்போக்கில் உற்பத்தியை ஒப்பிடுவதற்கான ஒரு குறிப்புப் புள்ளியாகப் பயன்படுத்தப்படும் ஆண்டாகும். தற்போதைய தரவுகளை இதனுடன் ஒப்பிடுவதன் மூலம் உற்பத்தி அதிகரித்துள்ளதா அல்லது குறைந்துள்ளதா என்பதை தெரிந்து கொள்ள முடியும். ஒரு அடிப்படை ஆண்டு இருப்பது முக்கியமானதாகும். எனவே, அடிப்படை ஆண்டு ஒப்பீட்டிற்கான ஒரு நிலையான புள்ளியாகச் செயல்படுகிறது.



2. விரிவாக்கப்பட்ட நோக்கம் மற்றும் வரம்பு: புதிய தொழில்துறை உற்பத்தி குறியீட்டு தொடரில், ஏற்கனவே உள்ள சுரங்கம், உற்பத்தி மற்றும் மின்சாரம் ஆகிய மூன்று முக்கியத் துறைகளைத் தக்கவைத்துக்கொண்டு, எரிவாயு மற்றும் நீர் வழங்கல், கழிவுநீர் மற்றும் கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் என்ற ஒரு முழுமையான புதிய துறையை இடம்பெற செய்து, அதன் வரம்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.



3. சீரமைக்கப்பட்ட பொருள் தொகுப்பு: தேவையான பண்டங்களைச் சேர்ப்பதற்கும், காலாவதியானவற்றை நீக்குவதற்கும் பொருள் தொகுப்பிலும் அதன் எடைகளிலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. 2011-12-ஆம் ஆண்டுத் தொடரில் 407 பொருள் குழுக்களின்கீழ் 839 பொருட்கள் இடம்பெற்றிருந்த நிலையில், திருத்தப்பட்ட தொகுப்பில் 463 பொருள் குழுக்களின்கீழ் 1,042 பொருட்கள் இடம்பெற்றுள்ளன. இதில் புதிதாகச் சேர்க்கப்பட்ட மற்றும் நீக்கப்பட்ட பொருட்களுக்கான எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:



கூடுதலாக சேர்க்கப்பட்ட பொருட்கள்: அவை, காந்தப் பட்டை கொண்ட அட்டைகள், CCTV கேமரா, நெய்யப்படாத துணி வகைகள், விமானம் மற்றும் விண்வெளிக்கலங்களின் உதிரிபாகங்கள், ஸ்டென்ட்கள் (Stents), கால்நடை மருத்துவத் தடுப்பூசிகளைத் தவிர்த்த மனிதர்களுக்கான தடுப்பூசிகள் ஆகும்.


நீக்கப்படுபவை: மண்ணெண்ணெய், ஃப்ளோரசன்ட் குழாய்கள் மற்றும் சி.எஃப்.எல் விளக்குகள், மிதிவண்டி/முச்சக்கர வண்டி/ரிக்‌ஷா டயர்களுக்கான குழாய்கள், இலகுரக வாகன டயர்களுக்கான குழாய்கள், அச்சு இயந்திரங்கள், தையல் இயந்திரங்கள்


அகில இந்திய தொழில்துறை உற்பத்தி குறியீடு (IIP) அடிப்படை ஆண்டு: இதுவரை மேற்கொள்ளபட்ட திருத்தங்கள்


இது அகில இந்திய தொழில்துறை உற்பத்தி குறியீட்டின் (IIP) அடிப்படை ஆண்டின் 10-வது திருத்தம் ஆகும். முதல் தொழில்துறை உற்பத்தி குறியீடு 1937-ஐ அடிப்படை ஆண்டாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அடிப்படை ஆண்டு 1946, 1951, 1956, 1960, 1970, 1980-81, 1993-94, 2004-05 மற்றும் 2011-12 என அடுத்தடுத்த ஆண்டுகளில் திருத்தம் செய்யப்பட்டது.


4. புதுப்பிக்கப்பட்ட எடைகள்: புதிய தொழில்துறை உற்பத்திக் குறியீட்டில், எடைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இந்த புதுப்பிப்பு, தேசிய கணக்கியல் புள்ளிவிவரங்களின் (National Accounts Statistics) 2022-23 அடிப்படை ஆண்டுக்கான மொத்த மதிப்புக் கூட்டு (Gross Value Added (GVA)) துறை வாரியான தரவுகளையும், 2022-23 நிதியாண்டிற்கான தொழில்துறை ஆண்டு ஆய்வு (Annual Survey of Industries (ASI)) தரவுகளையும், தேசிய தொழில்துறை வகைப்பாடு-2/3/4 இலக்க வகைப்பாட்டை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


5. மேம்பட்ட நுணுக்கம்: புதிய தொழில்துறை உற்பத்தி குறியீட்டு தொடரானது, புதுப்பிக்கத்தக்க மற்றும் புதுப்பிக்க இயலாத மூலங்களிலிருந்து மின்சார உற்பத்திக்கும், சுரங்கம் மற்றும் கல் குவாரித் துறைக்கும் தனித்தனி குறியீடுகளை வழங்குவதன் மூலம், தொழில்துறை நடவடிக்கைகளை மிகவும் விரிவாகக் காட்டுகிறது. இது (i) எரிபொருள் கனிமங்கள், (ii) அரிய மண் கனிமங்கள் உள்ளிட்ட உலோகக் கனிமங்கள் மற்றும் (iii) சிறு கனிமங்கள் உள்ளிட்ட உலோகமல்லாத கனிமங்கள் ஆகியவற்றை  கொண்டுள்ளது.



இந்தியாவின் புதிய நுகர்வோர் விலைக் குறியீட்டுத் தொடரில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது?


1. பொருளாதார மற்றும் கலாச்சார அமைச்சகம், புதுப்பிக்கப்பட்ட 2024-ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்ட புதிய நுகர்வோர் விலைக் குறியீட்டு  தரவுகளை வெளியிட்டது. அதன்படி, ஜனவரி மாதத்தில் சில்லறைப் பணவீக்கம் (retail inflation) 2.75% ஆக இருந்தது. நுகர்வோர் விலைக் குறியீட்டின் திருத்தத்தை ஒரு “முக்கியமான முன்னேற்றம்” என்று குறிப்பிட்ட தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன், இனி பணவீக்கத்தின் அறிகுறிகள் தற்போதைய பொருளாதார நிலைமைகளுடன் “மிகவும் நெருக்கமாகப் பொருந்தும்” என்று கூறினார்.


2. நுகர்வோர் விலைக் குறியீட்டின் விலைகளுக்கான அடிப்படை ஆண்டை 2012-லிருந்து 2024-க்கு மாற்றுவதற்கும், 2023-24 குடும்ப நுகர்வுச் செலவினக் கணக்கெடுப்பின் (Household Consumption Expenditure Survey (HCES)) முடிவுகளின் அடிப்படையில் நுகர்வுக் கூடையை மறுசீரமைப்பதற்கும் புள்ளியியல் அமைச்சகம் பல ஆண்டுகளாக மேற்கொண்ட பணிகளுக்குப் பிறகு இந்தப் புதிய நுகர்வோர் விலைக் குறியீடு வந்துள்ளது. இதன் மூலம், விலைகள் 2011-12 கணக்கெடுப்பின்படிஎந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல், தற்போது நிகழ்ந்து வரும் நுகர்வு மாற்றங்களின் அடிப்படையில் அளவிடப்படுகின்றன.


நுகர்வோர் விலைக் குறியீட்டு பணவீக்கம்


ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கும் வட்டி விகிதங்களின் அளவை இது நேரடியாகப் பாதிப்பதால், இது நாட்டின் மிக முக்கியமான பொருளாதாரக் குறியீடாக இருந்து வருகிறது. நடுத்தர காலத்தில் 2 முதல் 6 சதவீத அளவிலான ஏற்பு வரம்பிற்குள், 4 சதவீத நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) பணவீக்க விகிதத்தை இலக்காகக் வைத்துள்ள சட்டப்பூர்வமான கடமை மத்திய வங்கிக்கு உள்ளது.


3. புதிய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படை ஆண்டு 2024-ஆம் ஆண்டு ஆகும். இதன் பொருள், 2024-ஆம் ஆண்டிற்கு விலைக் குறியீட்டிற்கு 100 என்ற மதிப்பு வழங்கப்பட்டு, பின்னர் இந்த விலை நிலைகளில் இருந்து ஏற்படும் மாற்றங்களைக் கொண்டு ஒவ்வொரு பொருள் அல்லது சேவைக்குமான பணவீக்க விகிதங்கள் கணக்கிடப்படுகின்றன.


4. புதிய நுகர்வோர் விலைக் குறியீட்டுக்  தொகுப்பில் 358 பொருட்கள் மற்றும் சேவைகள் உள்ளன. இது முந்தைய தொகுப்பில் இருந்த 299-ஐவிட அதிகமான அளவாகும். கிராமப்புற வீட்டுவசதி நுகர்வின் விரிவாக்கதை மேம்படுத்தும் வகையில், இந்த புதிய நுகர்வோர் விலைக் குறியீட்டில் முதல் முறையாக கிராமப்புற வீட்டு வாடகை சேர்க்கப்பட்டுள்ளது.


5. 2024-ஆம் ஆண்டு நுகர்வோர் விலைக் குறியீடு, ஐக்கிய நாடுகள் புள்ளியியல் பிரிவால் உருவாக்கப்பட்ட வகைப்பாட்டு முறையைப் பயன்படுத்துகிறது. புள்ளியியல் மற்றும் முதலீட்டு அமைச்சகத்தின் கூற்றுப்படி, திருத்தப்பட்ட கட்டமைப்பின் கீழ், செலவினமானது முதல் மட்டத்தில் 12 பிரிவுகளாகவும், 43 குழுக்களாகவும், 92 வகுப்புகளாகவும், 162 துணைப்பிரிவுகளாகவும் மற்றும் படிநிலையின் கடைசி மட்டத்தில் 358 பொருட்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது


மொத்த உள்நாட்டு உற்பத்தி மறுஅடிப்படைப்படுத்தல் (GDP Rebasing)


1. பொருளாதாரக் கொள்கை அமைச்சகம் (MoSPI), தேசியக் கணக்குகளை தற்போதைய பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப சீரமைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட வழிமுறை சீர்திருத்தங்களுடன், அடிப்படையை 2011-12-லிருந்து 2022-23-க்கு மாற்றி, ஒரு புதிய தேசிய வருமானக் கணக்குத் தொடரையும் வெளியிட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர் கடைசியாக 2015-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திருத்தம் செய்யப்பட்டது.


2. மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஆண்டு பொருளாதார வளர்ச்சியை அல்லது ஒரு பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த அளவை மதிப்பிடுவதற்கான ஒரு முக்கியக் குறியீடாகும். இது ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாட்டின் புவியியல் எல்லைகளுக்குள் உற்பத்தி செய்யப்படும் இறுதிப் பொருட்கள் மற்றும் சேவைகளின் சந்தை மதிப்பின் கூட்டுத்தொகையாகும்.


3. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இறுதியாக பயன்ப்படுதபட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் மட்டுமே சேர்க்கப்படுகின்றன.  இடைநிலைப் பொருட்கள் (Intermediate Goods) என்பது பிற பொருட்கள் அல்லது சேவைகளை உற்பத்தி செய்வதற்கான உள்ளீடுகளாக பயன்படுத்தப்படும் பொருட்களாகும். இரட்டை கணக்கீட்டை (Double Counting) தவிர்ப்பதற்காக, இவை கணக்கீட்டில் இருந்து தவிர்க்கப்படுகின்றன.


Original article : India unveils modernized Index of Industrial Production : 5 key changes that matter. -Roshni Yadav

Share: