தென்மேற்குப் பருவமழை இந்தியப் பொருளாதாரத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது? - பிரியா குமாரி சுக்லா

முக்கிய அம்சங்கள்:


• இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department (IMD))              மே மாதம் 29-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட கணிப்பின்படி, இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை வழக்கத்தைவிடக் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது.                                       தென்மேற்குப் பருவமழையானது, வழக்கமாகத் தொடங்கும் நாளான ஜூன் மாதம் 1-ஆம் தேதியைவிட மூன்று நாட்கள் தாமதமாக, ஜூன் மாதம் 4-ஆம் தேதி கேரளாவை வந்தடைந்தது. இதுவரை இந்தப் பருவமழை நாட்டின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளின் சில இடங்களை உள்ளடக்கியிருந்தாலும், ஒட்டுமொத்த நாட்டின் அளவிலான மொத்த மழைப்பொழிவு (ஜூன் 1-21 வரை) வழக்கமான அளவைவிடக் கணிசமாகக் குறைவாகவே உள்ளது, என்று இந்திய ரிசர்வ் வங்கியின் மாதாந்திர செய்தி இதழில் வெளியிடப்பட்ட கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


• நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் கடந்த ஆண்டைவிடக் குறைந்துள்ளது. இருப்பினும், இது கடந்த பத்தாண்டுகளின் சராசரி அளவைவிட அதிகமாகவே உள்ளது என்று கூறுகிறது. கடந்த ஆண்டு நல்ல அறுவடை நடந்ததைக் கருத்தில்கொண்டு, பொதுமக்களிடமிருந்து கோதுமை கொள்முதல் வலுவாக உள்ளது. இந்திய உணவுக் கழகத்திடம் (Food Corporation of India (FCI)) உள்ள அரிசி மற்றும் கோதுமையின் பொது இருப்பு நெறிமுறைகளைவிட மிக அதிகமாக உள்ளது.  இது எல் நினோ (El Niño) போன்ற வானிலை மாற்றங்களால் ஏற்படக்கூடிய விநியோகத் தடை அல்லது விலை உயர்வுக்கு எதிரான ஒரு பாதுகாப்பு அரணாகச் செயல்படும், என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


• இந்தக் கட்டுரையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கருத்துக்கள் ஆசிரியர்களின் சொந்தக் கருத்துக்களே தவிர, அவை இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வக் கருத்துக்களைப் பிரதிபலிக்கவில்லை, என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


• கச்சா எண்ணெய் விலை உயர்வு, உலகளாவிய வர்த்தகத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மை, மோசமான வானிலை மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் ஆகியவை பொருளாதாரக் கண்ணோட்டத்தில் சவால்களை ஏற்படுத்தி வருவதால், ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் குழு (Monetary Policy Committee)                   தனது வளர்ச்சி மற்றும் பணவீக்கக் கணிப்புகளை மறுமதிப்பீடு செய்தது.                 ஜூன் மாதம் 5-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், வளர்ச்சி குறித்த கணிப்பை 6.9%-லிருந்து 6.6%-ஆகக் குறைத்ததுடன், பணவீக்கக் கணிப்பை 4.6%-லிருந்து 5.1%-ஆக உயர்த்தியது.


• அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான இடைக்கால அமைதி ஒப்பந்தம் ஏதேனும் ஒரு காரணத்தால் முறிந்தால், அது பல அபாயங்களை மீண்டும் ஏற்படுத்தக்கூடும் என்று அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.                              இதனால் விலைவாசி மேலும் உயரலாம், முக்கியமான எரிசக்தி உள்கட்டமைப்புகள் பாதிக்கப்படலாம், தொழில் முதலீடுகள் தாமதமாகலாம், உணவுப் பாதுகாப்பு குறித்த கவலைகள் எழலாம், நிதித்துறையின் நிலைத்தன்மை பாதிக்கப்படலாம் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி நிரந்தரமாகக் குறையலாம் என்றும் எச்சரிக்கப்படுகிறது.



உங்களுக்குத் தெரியுமா?


• இந்த நிச்சயமற்ற சூழல்கள் சர்வதேச வர்த்தகம், உற்பத்திச் செலவு அழுத்தங்கள், முதலீட்டு வரத்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் ஆகியவற்றின் மூலமாக பொருளாதார எதிர்காலத்தை பாதிக்கலாம் என்று கூறியுள்ளது. இந்தக் கட்டுரையின்படி, அமெரிக்கா-ஈரான் இடையேயான தற்காலிக அமைதி ஒப்பந்தம் மூலம் சற்று நிம்மதி கிடைத்துள்ள போதிலும், உலகளாவிய பொருளாதாரச் சூழல் இன்னும் பலவீனமாகவே உள்ளது. இருப்பினும், இந்த அதிர்ச்சியைத் தாங்கி நிற்பதற்கு ஏதுவாக, மற்ற பல நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகச் சிறந்த அடிப்படைப் பொருளாதார பலத்துடனேயே இந்தியப் பொருளாதாரம் இந்த இக்கட்டான சூழலுக்குள் நுழைந்துள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


• கடந்த சில ஆண்டுகளில் இந்தியா தொடர்ந்து நிலையான வளர்ச்சியைப் பராமரித்து வருவது, பணவீக்கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது,                       நிதிப் பற்றாக்குறையைத் தொடர்ந்து குறைத்து வருவது, சமாளிக்கக்கூடிய அளவிலான நடப்புக் கணக்குப்பற்றாக்குறை மற்றும் வலுவான அந்நியச் செலாவணி இருப்பு ஆகியவற்றைக் கொண்டிருப்பது இந்தியாவின் பலத்தை அதிகரிக்கிறது. இது கடந்த காலத்தில் நடந்த இதேபோன்ற பிற உலகளாவிய நிகழ்வுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவுக்குக் கூடுதல் பலத்தைத் தருகிறது என்றும் கூறியுள்ளது.


• ஏப்ரல் மாதத்தில் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்திருந்த சரக்கு மற்றும் சேவை வரி (GST) வருவாய் வளர்ச்சி, மே மாதத்தில் சற்று குறைந்தது.                                    மே மாதத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் பயன்பாடு நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தாலும், சமையல் எரிவாயு (LPG), பெட்ரோலியம் கோக் மற்றும் நெப்தா ஆகியவற்றின் பயன்பாடு கடுமையாக வீழ்ச்சியடைந்ததால், ஒட்டுமொத்த பெட்ரோலியப் பொருட்களின் பயன்பாடு குறைந்தது. அதேசமயம், கடுமையான வெப்ப அலைகள் காரணமாக, மே மாதத்தில் மின்சாரத்திற்கான தேவை கடந்த ஆண்டைவிட இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளது.



• தொடர்ந்து மூன்று மாதங்களாகக் குறைந்து வந்த உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை, அதற்குப் பிறகு மே மாதத்தில் கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தோடு ஒப்பிடும்போது மீண்டும் நல்ல வளர்ச்சியைப் பெற்றுள்ளதாக அந்தக் கட்டுரை குறிப்பிட்டுள்ளது. அதே நேரத்தில், புதிய தயாரிப்புகளின் அறிமுகம் மற்றும் வலுவான முன்பதிவுகள் காரணமாகப் பயணிகள் வாகன விற்பனை அதிகரித்துள்ளது. அதோடு அனைத்து வகையான வாகனப் பிரிவுகளிலும் மின்சார வாகனங்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இதற்கு நேர்மாறாக, கிராமப்புறங்களில் நிலவும் தேவைகள் சற்று குறைந்துள்ளதை, அங்கு குறைந்துள்ள சில்லறை வாகன விற்பனை விகிதம் காட்டுகிறது.


Original Link: How Southwest Monsoon impacts the Indian economy?


Share:

கெயர் ஸ்டார்மர் பதவி விலகல்: பிரிட்டன் நாடாளுமன்ற அமைப்பு இந்தியாவின் நாடாளுமன்ற அமைப்பிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? -குஷ்பூ குமாரி

கெய்ர் ஸ்டார்மர் பதவி விலகும் நிலையில், பிரிட்டன் நாடாளுமன்ற முறையை மீண்டும் ஆராய்ந்து, அதனை இந்தியாவின் மாதிரியுடன் ஒப்பிட்டு, ஜனாதிபதி ஆட்சி முறையின் முக்கிய அம்சங்களைப் புரிந்துகொள்வோம்.


தற்போதைய செய்தி?


தொழிலாளர் கட்சி 412 இடங்களை வென்ற தேர்தலில், கன்சர்வேடிவ் கட்சியைப் படுதோல்வி அடையச் செய்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரதமர் மற்றும் தொழிலாளர் கட்சியின் தலைவர் ஆகிய இரு பதவிகளிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளார்.


ஸ்டார்மரின் இந்தப் பதவி விலகல், அவருக்குப் பின் வரப்போகும் புதிய பிரதமரின் வருகையும், கடந்த பத்து ஆண்டுகளில் பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக ஏழு பிரதமர்களைப் பார்த்துள்ளது என்பதைக் காட்டுகிறது. ஒரு பிரதமரின் அதிகாரப்பூர்வப் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் என்றபோதிலும்,                       2016-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஒரு பிரிட்டன் பிரதமர் கூட தங்களது முழு பதவிக்காலத்தையும் நிறைவு செய்யவில்லை. இதில் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) மட்டுமே 2019 முதல் 2022-ஆம் ஆண்டு வரை பிரதமராகப் பணியாற்றி, ஓரளவிற்குத் தனது பதவிக்காலத்தை நெருங்கினார்.


முக்கிய அம்சங்கள்:


1. பிரிட்டன்என்பது இங்கிலாந்து, வட அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ்  ஆகிய நான்கு பகுதிகளை கொண்டுள்ளது. இங்கு அரசியலமைப்பு முடியாட்சி (Constitutional Monarchy) நடைமுறையில் உள்ளது. மன்னரின் பதவி பெரும்பாலும் சடங்கு மற்றும் அடையாள முக்கியத்துவம் கொண்டதாக உள்ளது.


2. பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இரண்டு அவைகளைக் கொண்ட அமைப்பைக் கொண்டுள்ளது. அவை கீழ் அவை (lower house)  மற்றும்  மேல் அவை (upper house) ஆகும். இவை லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் கூடுகின்றன. 'கீழ் அவை' நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 650 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அதே சமயம், நிலையான எண்ணிக்கை இல்லாத மேல்  அவையானது, ஆயுள் முழுவதும் பதவியில் இருக்கும் உறுப்பினர்கள்,              மதகுருமார்கள் மற்றும் பரம்பரை பிரபுக்கள் ஆகியோரைக் கொண்டுள்ளது.      பிரதமர் அரசின் நிர்வாகப் பிரிவுக்கு தலைமை தாங்கி, ஐந்து ஆண்டுகள் பதவியில் இருப்பார்.


3. பிரதமர் ஐந்தாண்டுகள் என்ற ஒரு குறிப்பிட்ட பதவிக்காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பது ஒரு பொதுவான தவறான கருத்தாகும்.                       இந்த வரம்பு ஆளும் கட்சியின் நாடாளுமன்றப் பதவிக்காலத்திற்கே பொருந்தும், பிரதமராகும் தனிநபருக்கு அல்ல. எனவே, அரசாங்கத்திற்கும் கட்சிக்கும் மக்கள் ஆதரவு இருந்தாலும், உயர்மட்டத் தலைமைப் பொறுப்பில் தொடர்ந்து குழப்பங்களும் மாற்றங்களும் ஏற்படுகின்றன.

4. கட்சிக்குள் தலைவரின் மீது உள்ள உள்ளக நம்பிக்கை  குறைந்துவிட்டால், அந்தக் கட்சிக்கான உள்கட்சி  தேர்தல் நடத்தப்படலாம். அந்தத் தேர்தலில் தற்போதைய தலைவருக்கு எதிராக முடிவு வந்தால், பதவியில் இருக்கும் பிரதமர் மாற்றப்படுவார். இதற்கு காரணம், பிரிட்டிஷ் அரசியல் அமைப்பில் பிரதமர் “சமமானவர்களுள் முக்கியமானவர்” (First among equals / Primus inter pares) என்ற கொள்கையின் அடிப்படையில் செயல்படுவதாகக் கருதப்படுவது ஆகும்.


5. ஸ்டார்மரின் விவகாரத்தில், மே மாத உள்ளாட்சி தேர்தல்களில் ஏற்பட்ட மோசமான முடிவுகள் மற்றும் பீட்டர் மாண்டல்சனை  அமெரிக்காவிற்கான தூதராக நியமித்தது தொடர்பான சர்ச்சை காரணமாக அவர் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். குறிப்பாக, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தில் தண்டனை பெற்ற ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன்  மாண்டல்சனுக்கு தொடர்பு இருந்ததாக கூறப்பட்டதால், இந்த நியமனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தியா மற்றும் பிரிட்டன் நாடாளுமன்ற முறைகளுக்கு இடையிலான ஒப்பீடு 


ஒற்றுமைகள்


1.  இரண்டு நாடுகளிலுமே அரசாங்கத்தின் தலைவர் கௌரவப் பொறுப்பை மட்டுமே வகிக்கிறார். பிரிட்டனில் அரசர்/அரசி (Monarch) மற்றும் இந்தியாவில் குடியரசுத் தலைவர் (President). இருப்பினும், பிரிட்டனின் கௌரவத் தலைவரைவிட இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அதிக அதிகாரங்கள் உள்ளன.


2. இரு நாடுகளிலும் இரு அவைகளைக் கொண்ட நாடாளுமன்ற அமைப்பு (Bicameral Parliament) உள்ளது. பிரிட்டனில் இது கீழ் அவை (lower house)  மற்றும்  மேல் அவை (upper house) என்று உள்ளது. இந்தியாவில், மாநிலங்களவை, மக்களவை என்று உள்ளது.


3. பெரும்பான்மை பெற்ற கட்சியின் ஆட்சியின் அடிப்படையிலேயே நிர்வாகம் நடக்கிறது. கீழவையில் பெரும்பான்மை இடங்களைப் பெற்ற கட்சியின் அல்லது கூட்டணியின் தலைவரே பிரதமராக பொறுப்பேற்கிறார்.


4. ஒரு கூட்டணி அரசாங்கத்தில், ஒருமித்த கருத்து அமைச்சர்களைக் கட்டுப்படுத்துகிறது. இந்த இரண்டு அமைப்புகளும், நிர்வாகம் சட்டமன்றத்திற்க்கு கட்டுப்படுகிறது என்பது தெளிவாக தெரிகிறது. இது ஜனநாயகப் பொறுப்புடைமை மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு முக்கியமான ஒரு கட்டுப்பாடு மற்றும் சமநிலை அமைப்பை உறுதி செய்கிறது.India, UK, parliamentary















வேறுபாடுகள்


1. நாடாளுமன்ற இறையாண்மை என்பது பிரிட்டனின் அரசியலமைப்பின் ஒரு கொள்கையாகும். அது எந்தவொரு சட்டத்தையும் உருவாக்கவோ அல்லது ரத்து செய்யவோ நாடாளுமன்றத்திற்கே அதிகபட்ச சட்ட அதிகாரத்தை வழங்குகிறது. இருப்பினும், இந்தியா ஒரு அரசியலமைப்பு தன்மை கொண்ட ஒரு முறையைப் பின்பற்றுகிறது. இந்தியாவில் சட்டம் இயற்றுவதில் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை அரசியலமைப்பு கட்டுப்படுத்துகிறது.


 

2. இந்தியாவின் நாட்டின் குடியரசுத் தலைவர் ஐந்து ஆண்டு காலத்திற்கு மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆனால், பிரிட்டனின் தலைவர் (அரசர்/அரசி) பரம்பரைப் பொறுப்பு மூலமாக அந்தப் பதவியைப் பெறுகிறார்.


3. இந்தியாவில், பிரதமர் அல்லது அமைச்சர்கள் பதவியேற்கும் போது நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாவிட்டால், அவர்கள் ஆறு மாதங்களுக்குள் ஏதேனும் ஒரு அவையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.                         இதற்கு நேர்மாறாக, பிரிட்டனில் பிரதமர் பாரம்பரியமாக 'மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் கீழவை' உறுப்பினராக மட்டுமே இருக்க வேண்டும். இது நேரடித் தேர்தல் பொறுப்பை உறுதி செய்கிறது.


4. அவைத் தலைவரின் பங்கும் வேறுபடுகிறது: இந்தியாவில், பொதுவாக ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் அவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதேசமயம் பிரிட்டனில், அவைத் தலைவர் நடுநிலைமையைக் கடைப்பிடிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் கட்சி பதவியை ராஜினாமா செய்கிறார்.


5. இந்தியாவின் நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களில் 'பூஜ்ஜிய மணிநேரம்' (Zero Hour) என்ற ஒரு தனித்துவமான முறை உள்ளது. இதன் மூலம் உறுப்பினர்கள் முன் அறிவிப்பின்றி அவசரமான விவாகரங்களை எழுப்ப முடியும். பிரிட்டனில் இது போன்ற நேரடியான நடைமுறை எதுவும் இல்லை. இருப்பினும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்ற நாடாளுமன்ற நடைமுறைகள் மூலம் அவசரப் பிரச்சினைகளை எழுப்பலாம்.


6. இந்தியாவில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கட்சியின் கட்டுப்பாட்டிற்கு கண்டிப்பாகக் கட்டுப்பட வேண்டும், பெரும்பாலும் கட்சி சொல்லும் வழியிலேயே வாக்களிக்க வேண்டும். கட்சி தாவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை இழக்க நேரிடும் என்று 'கட்சித் தாவல் தடைச் சட்டம்' (Anti-Defection Law) கூறுகிறது. இதனால் ஆறு மாதங்களுக்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.



7. இதற்கு மாறாக, பிரிட்டன் ஒரு வலுவான கட்சி ஒழுங்கு நடவடிக்கை முறையைப் பின்பற்றினாலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவ்வப்போது தங்கள் மனசாட்சிப்படியோ அல்லது தங்கள் தொகுதி மக்களின் நலன்களின்படியோ வாக்களிக்க அதிக நெகிழ்வுத்தன்மையைக் கொண்டுள்ளனர். இந்தியாவைப் போல் இல்லாமல், பிரிட்டனில் கட்சித் தாவல் தடைச் சட்டத்திற்கு இணையான சட்டம் எதுவும் இல்லை. இது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களிப்பு முடிவுகளில் அதிக சுதந்திரத்தை  வழங்குகிறது.


8. நாடாளுமன்ற அமைப்புகளுக்குள் இருக்கும் பிரதிநிதித்துவம் அந்தந்த நாட்டின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கிறது. பின்தங்கிய சமூகங்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காக இந்தியாவில் பட்டியல் சாதியினர் (SC) மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு (ST) இடஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் (Reserved seats) உள்ளன. பிரிட்டனில் இப்படி இடஒதுக்கீடு இல்லை என்றாலும், கட்சிகள் தங்களின் வேட்பாளர் தேர்வு முறைகள் மூலம் நாடாளுமன்றத்தில் பன்முகத்தன்மையை அதிகரிக்க முயற்சித்து வருகின்றன.


அதிபர் ஆட்சி முறை


1. இந்தியாவும் பிரிட்டனும் நாடாளுமன்ற ஆட்சி முறையைப் பின்பற்றுகின்றன. ஆனால், அமெரிக்கா (USA) அதிபர் ஆட்சி முறையின்கீழ் இயங்குகிறது. அங்கு நிர்வாக அதிகாரங்கள் அனைத்தும் அதிபரின் கைகளில் உள்ளன.


2. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவின் (NCERT) கூற்றுப்படி, அதிபர் ஆட்சி முறையில், அதிபரே நாட்டின் தலைவராகவும் அரசாங்கத்தின் தலைவராகவும் செயல்படுகிறார். இந்த முறையில், அதிபரின் பதவி என்பது சட்டப்படியும் சரி, நடைமுறையிலும் சரி, மிகவும் சக்திவாய்ந்தது ஆகும்.


3. அதிபர் ஆட்சி முறையானது, நிர்வாகத் துறையை சட்டமன்றத்திடமிருந்து தனியாகப் பிரிப்பதற்குக் 'அதிகாரப் பகிர்வுக் கொள்கையை' (Doctrine of separation of powers) பயன்படுத்துகிறது. இது நாட்டின் மற்றும் அரசாங்கத்தின் தலைவரான அதிபருக்கு எல்லையற்ற அதிகாரங்களை வழங்குகிறது.


4. மேலும், அமெரிக்க அரசியலமைப்பு ஒரு கூட்டாட்சி முறையை வழங்குகிறது. இதில் மத்திய அரசைவிட மாநிலங்களுக்கு மிக அதிகமான தன்னாட்சி அதிகாரம் உள்ளது. அமெரிக்கச் சூழலில், குறிப்பிட்ட பட்டியலில் இல்லாத இதர அதிகாரங்கள் (Residuary powers) அனைத்தும் மாநிலங்களிடமே உள்ளன.


5. நீதித்துறை மறுஆய்வு என்று வரும்போது, அமெரிக்க அரசியலமைப்பு 'நீதித்துறை மேலாதிக்க' (Judicial supremacy) முறையை நிறுவியுள்ளது.                             இது எந்தவொரு சட்டத்தையும் அரசியலமைப்புக்கு முரணானது என்று அறிவிக்கும் அதிகாரத்தை உச்சநீதிமன்றத்திற்கு வழங்குகிறது. இதன் மூலம் சட்டமன்றத்தின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகின்றன.


Original Link: Keir Starmer’s exit: How the UK Parliamentary system differs from India’s.

Share:

சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸிலிருந்து விலகி 'ஃபார்வர்ட் பிளாக்' அமைப்பை ஏன் தொடங்கினார்? -அத்ரிஜா ராய்சௌத்ரி

அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக்கின் (All India Forward Bloc) முதல் பொது மாநாடு 1940-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற்றது, அப்போது நேதாஜி இரண்டாம் உலகப் போரை இந்தியாவிற்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முன்மொழிந்தார். ஆனால், காங்கிரஸின் தலைமை அவரது கருத்துக்களுடன் உடன்படவில்லை.


இம்மாநாட்டில், "இந்தக் கடுமையான நெருக்கடி வேளையில் இந்தியா தன்னைப்பற்றியே முதலில் சிந்திக்க வேண்டும்" என்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், தாம் புதிதாக உருவாக்கிய அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் முதல் மாநாட்டில் பிரகடனம் செய்தார். 1940-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நாக்பூரில் நடைபெற்ற இந்த மாநாட்டில்தான், ஃபார்வர்ட் பிளாக் கட்சி முறையாக ஒரு சோசலிசக் கட்சியாக அறிவிக்கப்பட்டது.                     காங்கிரஸ் கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட பெரும் கருத்து வேறுபாட்டிற்குப் பிறகு, அதற்கு ஓராண்டுக்கு முன்பே போஸ் இந்த அமைப்பைத் தொடங்கியிருந்தார்.


இரண்டாம் உலகப் போரினால் உலக அரசியலில் ஏற்பட்ட பெரும் மாற்றத்தை, ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து இந்தியா தனது சுதந்திரத்தைப் பெறுவதற்கான ஒரு வரலாற்று வாய்ப்பாக போஸ் கருதினார்.                                     இருப்பினும், காந்தி ஆதிக்கம் செலுத்திய காங்கிரஸின் தலைமைக்குள் அவரது நிலைப்பாட்டிற்குப் பெரிய ஆதரவு கிடைக்கவில்லை.


கட்சிக்கு இன்னும் தீவிரமான ஏகாதிபத்திய எதிர்ப்புத் திட்டம் தேவை என்று உறுதியாக நம்பிய போஸ், காங்கிரஸின் இடதுசாரி மற்றும் தீவிர தேசியவாதக் குழுக்களைத் திரட்டுவதற்கும், அவர் "மாற்றுத் தலைமை" (alternative leadership) என்று அழைத்த ஒன்றைக் கட்டமைப்பதற்கும் 1939-ஆம் ஆண்டில் ஃபார்வர்ட் பிளாக்கை நிறுவினார். அந்தச் சூழலில், காங்கிரசுக்குள் இருந்த ஒரு பிரிவாக இருந்த ஃபார்வர்ட் பிளாக், ஒரு சுதந்திரமான அரசியல் சக்தியாக உருமாறியதில் நாக்பூர் மாநாடு ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது.

காங்கிரஸ் கட்சிக்குள் நிலவிய நெருக்கடி


1939-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், போஸ் காங்கிரஸ் தலைவர் பதவிக்குத் தனது வேட்புமனுவை முன்வைத்தபோது, ​​அவர் தன்னை தீவிரவாத அரசியல் மற்றும் தீவிரவாதக் குழுக்களின் பிரதிநிதியாகக் கருதினார். வரலாற்றாசிரியர் பிபன் சந்திரா தனது 'India’s Struggle for Independence' (இந்தியாவின் சுதந்திரப் போராட்டம்) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளபடி, இந்தியாவில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் உருவான புதிய கருத்துக்கள், சித்தாந்தங்கள், பிரச்சினைகள் மற்றும் திட்டங்களின் பிரதிநிதியாக போஸ் தன்னைக் கருதினார். மகாத்மா காந்தி உட்பட கட்சியின் சில பிரிவினரால் அவரது கருத்துக்கள் எதிர்க்கப்பட்டபோதிலும், போஸ் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் தலைவரானார். இருப்பினும், இந்த வெற்றி கட்சிக்குள் இருந்த சித்தாந்த மோதலைத் தீர்க்க உதவவில்லை.


விரைவிலேயே, போஸ், சர்தார் வல்லபாய் படேல் மற்றும் காங்கிரஸின் உயர்மட்டத் தலைவர்கள் பலருக்கு எதிராக ஒரு விமர்சனக் கண்ணோட்டத்தைக் கையாண்டார். அவர்களை அவர் வலதுசாரிகள் என்று முத்திரை குத்தினார். அவர்கள் ஆங்கிலேய அரசாங்கத்துடன் சமரச போக்கைத் தேடுவதாக அவர் வெளிப்படையாகக் குற்றம்சாட்டினார். காங்கிரஸ் தலைவராக, ஆங்கிலேய அரசுடன் எந்தவொரு சமரசத்திற்கும் காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பை வலுப்படுத்த தன்னால் முடிந்த அனைத்தையும் போஸ் செய்தார். இது, அப்போது ஆங்கிலேய அரசாங்கத்துடன் ஒரு புரிதலை ஏற்படுத்த எதிர்பார்த்துக் கொண்டிருந்த காந்திய வட்டாரத்தில் எரிச்சலை ஏற்படுத்தியது, என்று போஸ் தனது சுயசரிதையில் எழுதியுள்ளதை பிபன் சந்திரா மேற்கோள் காட்டியுள்ளார்.


இந்தக் குற்றச்சாட்டு காங்கிரஸ் தலைவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் செயற்குழுவின் 12 உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். ஜவஹர்லால் நேரு ராஜினாமா செய்யாவிட்டாலும், போஸின் இந்தக் குற்றச்சாட்டுகளை அவரும் ஏற்கவில்லை. போஸுக்கு எழுதிய கடிதத்தில் நேரு, "நீங்கள் யாரை இடதுசாரி என்றும் யாரை வலதுசாரி என்றும் கருதுகிறீர்கள் என எனக்குத் தெரியவில்லை. தலைவர் தேர்தலின் போது உங்கள் அறிக்கைகளில் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்திய விதம், காந்திஜியையும் செயற்குழுவில் உள்ள அவரது குழுவினரையும் நீங்கள் வலதுசாரித் தலைவர்கள் என்று குறிப்பிடுவது போல இருந்தது. அவர்களை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இடதுசாரிகள் என்று காட்டுவது முற்றிலும் தவறான ஒரு விளக்கம் என்றே எனக்குத் தோன்றுகிறது, என்று குறிப்பிட்டார்.


போஸ்-காந்தி இடையேயான விவாதத்தின் அடிப்படை என்னவென்றால், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக உடனடியாக ஒரு பெரிய போராட்டத்தைத் தொடங்க காங்கிரஸ் தயாராக உள்ளது என்றும், அதற்குப் பொதுமக்களும் தயாராக இருக்கிறார்கள் என்றும் போஸ் உறுதியாக நம்பினார். மார்ச் மாதம் 1939-ஆம் ஆண்டில் நடந்த திரிபுரி (Tripuri) காங்கிரஸ் மாநாட்டில் ஆற்றிய உரையில், இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க ஆங்கிலேய அரசாங்கத்திற்கு ஆறு மாத காலம் அவகாசம் அளிக்க வேண்டும் என்றும், தவறினால் நாடு தழுவிய சட்ட மறுப்பு இயக்கத்தைத் தொடங்க வேண்டும் என்றும் போஸ் முன்மொழிந்தார்.


ஆனால் காந்தியின் கருத்து முற்றிலும் வேறாக இருந்தது. அவரும் அடுத்தகட்ட மக்கள் போராட்டம் என்றாவது ஒருநாள் தேவைப்படும் என்று நம்பினாலும், அதற்கான சரியான நேரம் இதுவல்ல என்று கருதினார். “போராட்டத்திற்குத் தேவையான போதிய ஆதாரங்கள் நம்மிடம் இருப்பதாக சுபாஷ் போஸ் கருதுகிறார். ஆனால் அவருடைய இந்தக் கருத்தை நான் முற்றிலும் எதிர்க்கிறேன்," என்று காந்தி மே மாதம் 1939-ஆம் ஆண்டில் அளித்த பேட்டி ஒன்றில் கூறினார்.


திரிபுரி மாநாட்டில் இந்த மோதல் உச்சகட்டத்தை அடைந்தது. அங்கு, கோவிந்த் பல்லப் பந்த், காந்தியின் தலைமை மீது முழு நம்பிக்கை தெரிவித்தும், காந்தியின் விருப்பங்களுக்கு இணங்க ஒரு செயற்குழுவை நியமிக்குமாறு போஸைக் கேட்டுக்கொண்டும் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். போஸ் அவ்வாறு செய்ய மறுத்துவிட்டார்.


சந்திரா தனது புத்தகத்தில் இந்தச் சூழ்நிலையை இவ்வாறு விளக்கியுள்ளார்: "காந்திஜி வரவிருக்கும் போராட்டத்திற்குத் தலைமை தாங்க வேண்டும் என்று போஸ் விரும்பினார், ஆனால் காந்திஜி, போஸ் அவர்களும் மற்ற இடதுசாரி கட்சிகள் மற்றும் குழுக்களும் வகுத்துக் கொடுத்த உத்திகளையும் தந்திரங்களையும் பின்பற்ற வேண்டும் என்று போஸ் எதிர்பார்த்தார். மறுபுறம் காந்திஜியோ, தனது சொந்த உத்திகள் மற்றும் அரசியல் பாணியின் அடிப்படையில் மட்டுமே காங்கிரஸை வழிநடத்த விரும்பினார், இல்லையெனில் தலைவர் பதவியிலிருந்து முற்றிலும் விலகத் தயாராக இருந்தார்.


இதனால் போஸுக்கு ராஜினாமா செய்வதைத் தவிர வேறு வழி ஏதும் இருக்கவில்லை. இதன் விளைவாக, மே மாதம் 1939-ஆம் ஆண்டில், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஒரு புதிய பிரிவாக 'ஃபார்வர்ட் பிளாக்' (Forward Bloc) அமைப்பை உருவாக்கினார்.


சுபாஸ் சந்திர போஸும் இரண்டாம் உலகப் போரும்


கொல்கத்தாவில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் ஃபார்வர்ட் பிளாக் (Forward Bloc) கட்சியைத் தொடங்குவதாக போஸ் அறிவித்தார். வரலாற்று ரீதியாக இது விவாதத்திற்குரியதாக இருந்தாலும், போஸின் ஆதரவாளர்கள் தங்களின் சொந்த இரத்தத்தால் கையெழுத்திட்டு இந்த அமைப்பிற்கான தங்களது அர்ப்பணிப்பை உறுதி செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டதாகப் பிந்தைய காலக் குறிப்புகள் சில தெரிவிக்கின்றன. எனினும், அந்த ஆரம்பக் கட்டத்தில் ஃபார்வர்ட் பிளாக் அமைப்பு காங்கிரஸின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்க வேண்டும் என்று போஸ் கருதினார்.


வரலாற்றாசிரியர் சுகதா போஸ் தனது நேதாஜியின் வாழ்க்கை வரலாற்றில், "காங்கிரஸ் கட்சியில் உள்ள பெரும்பான்மையினரை ஒரு தீவிரவாதக் கண்ணோட்டத்திற்கு மாற்றுவதே அவரது அரசியல் நோக்கமாக இருந்தது" என்று குறிப்பிடுகிறார். "காங்கிரஸின் பழைய தலைமுறைத் தலைவர்களுக்கு மாற்றாக, தேசிய அளவில் இந்திய மக்களுக்கு ஒரு மாற்றுத் தலைமையை வழங்க அவர் முயன்றார். இந்த மாற்றுத் தலைமை, இந்திய அரசியலின் தற்போதைய காலகட்டத்தில் சமரசமற்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் சுதந்திரம் கிடைத்தவுடன் கலப்படமற்ற சோசலிசம் ஆகியவற்றுக்கான அர்ப்பணிப்பை அடிப்படையாகக் கொண்டது" என்று சுகதா போஸ் எழுதியுள்ளார்.


இந்த விஷயத்தில், காங்கிரஸுக்குள் இருந்த மற்ற இடதுசாரிகளிடமிருந்து சுபாஸ் சந்திர போஸ் வேறுபட்டிருந்தார். அவர்களில் சிலர் கட்சியிலிருந்து முழுமையாகப் பிரிந்து செல்ல விரும்பினர், மற்றவர்களோ தற்போதைய தலைமைக்கு அழுத்தம் கொடுக்கும் நெருக்கடியை விரும்பவில்லை.

இதன் விளைவாக, சுபாஸ் சந்திர போஸ்  நேரடியாக மக்களிடம் சென்று தனது புரட்சிகரமான திட்டத்தை எடுத்துரைக்க முடிவு செய்தார். 1939-ஆம் ஆண்டு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில், அவர் வங்காளம், ஐக்கிய மாகாணங்கள், பஞ்சாப், வடமேற்கு எல்லைப்புற மாகாணம், மத்திய மாகாணங்கள், பம்பாய் மற்றும் கர்நாடகா ஆகிய பகுதிகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பெருந்திரளான மக்களைத் திரட்டினார்.


1939-ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி, மெட்ராஸில் உள்ள மெரினா கடற்கரையில் ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது, சுபாஸ் சந்திர ​​போஸிடம் ஒரு மாலை நாளிதழ் கொடுக்கப்பட்டது. போலந்தின் மீதான ஜெர்மனியின் படையெடுப்பிற்குப் பதிலடியாக பிரிட்டன் போரை அறிவித்திருந்தது. "ஐரோப்பாவில் தொடங்கிய இந்த உலகப் போரை, ஒரு நாட்டின் வரலாற்றில் அரிதாகவே கிடைக்கும் ஒரு வாய்ப்பு என்றும், இந்தியா எந்தச் சூழ்நிலையிலும் இழக்கக் கூடாத ஒரு தருணம் என்றும் போஸ் உடனடியாக விவரித்தார்," என்று சுகதா போஸ் எழுதியுள்ளார்.


சர்வதேச அளவில் உருவாகி வரும் சூழ்நிலையை அவர் முதன்மையாக இந்தியாவின் சுதந்திரப் போராட்டக் கண்ணோட்டத்திலேயே ஆராய்ந்தார்.                     இந்த விஷயத்திலும், காந்தியத் தலைமையின் நிலைப்பாட்டிலிருந்து போஸின் கருத்து முற்றிலும் மாறுபட்டிருந்தது.


நேதாஜி சுபாஷ் சந்திர போஸைப் பொறுத்தவரை, அந்தப் போர் ஒரு ஏகாதிபத்திய மோதலாகும். அதாவது ஒவ்வொரு தரப்பும் தங்களின் சொந்தக் காலனித்துவ நலன்களைப் பாதுகாப்பதற்காகவே போரிட்டுக் கொண்டன.                 எனவே, எந்தவொரு பக்கத்திற்கும் ஆதரவளிக்காமல், இந்தியா இந்தச் சூழ்நிலையைப் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஒரு சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்க வேண்டும் என்று போஸ் கருதினார்.






ஃபார்வர்ட் பிளாக் (Forward Bloc) கட்சியின் நாக்பூர் மாநாட்டில், போஸ் "போட்டி ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போர்" என்று தான் குறிப்பிட்ட அந்தச் சூழலில், ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களின் கடமைகள் என்ன என்பது குறித்து தனது மிக விரிவான விளக்கத்தை அளித்தார். இந்த நாக்பூர் உரைதான், காங்கிரஸ் தலைமையின் பாதையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு அரசியல் பாதையை அவர் முதன்முதலில் முழுமையாக வெளிப்படுத்திய நிகழ்வாகவும் அமைந்தது.


"பன்னிரண்டு மாதங்களுக்கு முன்பு ஃபார்வர்ட் பிளாக் உருவாக்கப்பட்டபோது, ​​வரவிருக்கும் போராட்டம் மற்றும் அதற்கு முன்கூட்டியே எவ்வாறு தயாராவது என்ற எண்ணத்திலேயே நாங்கள் முழு கவனம் செலுத்தினோம். முழுமையான சுதந்திரத்தை அடைவதற்கான எங்கள் முயற்சிகளுக்கு, சர்வதேச நிகழ்வுகளும் முன்னேற்றங்களும் எந்த அளவிற்கு உதவும் என்பது அப்போது எங்களுக்குத் தெரியவில்லை. இன்று, நிலைமை ஓரளவிற்கு மாறியுள்ளது. போட்டி ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போரில், பழைய ஏகாதிபத்திய நாடுகள் மிகவும் மோசமான நிலையைச் சந்தித்து வருகின்றன, என்று நேதாஜி தனது உரையில் குறிப்பிட்டார்.


இந்தச் சூழ்நிலையை இந்தியா தனக்குச் சாதகமாக முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமானால், மக்களிடையே அதிக தேசிய ஒற்றுமையும் ஒருமைப்பாடும் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மக்களை உத்வேகப்படுத்த, "அனைத்து அதிகாரமும் இந்திய மக்களுக்கே" (All power to the Indian people) என்ற முழக்கத்தையும் அவர் முன்மொழிந்தார்.


மேலும், ஃபார்வர்ட் பிளாக் கட்சி என்பது வரலாற்றுத் தேவையின் காரணமாகவே உருவானது என்பதை அங்கு வந்திருந்த பிரதிநிதிகளுக்கு போஸ் நினைவூட்டினார். சுதந்திரத்திற்குப் பிறகும் கூட, சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் சோசலிசம் ஆகிய நித்தியக் கொள்கைகளின் அடிப்படையில் ஒரு புதிய இந்தியாவையும், மகிழ்ச்சியான இந்தியாவையும் கட்டியெழுப்ப இந்த அமைப்பு முக்கியப் பங்காற்ற வேண்டியிருக்கும் என்றும் அவர் வாதிட்டார்.


Original Link: Why Subhas Chandra Bose broke with the Congress to found Forward Bloc?.

Share:

வெளிநாட்டு நிதியுதவி பெறும் அமைப்புகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்: சமூக ஊடக கணக்கு தகவல் கட்டாயம், அரசியல் செயல்பாடுகளுக்கு தடை. - விஜயதா சிங்

2010-ஆம் ஆண்டின் வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதவின் கீழ் (Foreign Contribution (Regulation) Amendment Bill),                                   பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (NGOs) மற்றும் சங்கங்கள், தங்கள் திட்டங்களின் குறிப்பிட்ட செயல்பாடுகள் மற்றும் தங்களது திட்டங்கள் எந்தெந்தப் பகுதிகளில் செயல்படுத்தப்படுகின்றன என்ற விவரங்களை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.


ஒன்றிய உள்துறை அமைச்சகம் (MHA), 2011-ஆம் ஆண்டு 'வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த விதிகளை, திருத்துவதற்காக, 'வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த விதிகள், 2026'-ஐ ஜூன் மாதம் 22-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு அறிவித்தது.


நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தைச் செயல்படுத்த இந்த விதிகள் உதவுகின்றன. மேலும், இவை இந்திய அரசிதழில்  வெளியிடப்பட வேண்டும். முக்கியமாக, 'வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) விதிகள்'                ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி, 2011-ஆம் ஆண்டு அரசிதழில் வெளியிடப்பட்டன. அதன் பிறகு 2015, 2019, 2020, 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளிலும், கடந்த வருடம் மே மாதம் 26ஆம் தேதி, 2025 அன்றும் இந்த மசோதா மொத்தம் ஒன்பது முறை திருத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த சட்டம், 2010'-ன்கீழ் உள்ள விதிகளில் மேற்கொள்ளபடும் 10-வது  திருத்தம் இதுவாகும்.



வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் உள்நாட்டு பாதுகாப்பிற்கு பாதிப்புகளை ஏற்படுதாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) விதிகள் மூலம் ஒன்றிய உள்துறை அமைச்சகம் அவற்றை ஒழுங்குபடுத்துகிறது. இந்தச் சட்டம் முதன்முதலில் 1976-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. 2010-ஆம் ஆண்டு சட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது. 2010-ஆம் ஆண்டுச் சட்டம் மே மாதம் 1-ஆம் தேதி,    2011-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டம் 2016, 2018 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் திருத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டப் (FCRA) பதிவு ஐந்து ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். அதன் பிறகு, சம்பந்தப்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனம் பதிவைப் புதுப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும். 2015-ஆம் ஆண்டு முதல், 18,000-க்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜூன் மாதம் 22-ஆம் தேதி நிலவரப்படி, நாட்டில் 14,456 வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டப் பதிவு பெற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டப் பதிவு பெற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆண்டுதோறும்               ₹22,000 கோடி நிதியைப் பெறுகின்றன என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறை  (Foreign Contribution (Regulation) Amendment Bill) விதிகளில் முன்மொழியப்பட்டுள்ள முக்கிய திருத்தங்கள் யாவை? 


2010-ஆம் ஆண்டின் வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த (Foreign Contribution (Regulation) Amendment Bill) விதிகளின்கீழ் பதிவு செய்யப்பட்ட அனைத்து தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் தங்கள் திட்டங்களின் குறிப்பிட்ட செயல்பாடுகள் மற்றும் அவை செயல்படுத்தப்படும் புவியியல் எல்லைகள் குறித்த விவரங்களை தெரிவிக்க  வேண்டும்.


இந்தப் புதிய விதிகள் வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறை விதிகளின்கீழ் பொதுவான அனுமதியை வழங்காது. மேலும், அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிதியை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பது குறித்த கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தச் சட்டங்கள் வலியுறுத்துகின்றன.

எந்தவொரு புதிய பதிவும் இந்தக் குறிப்பிட்ட விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மேலும், ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் "முக்கிய நிர்வாகி" (key functionary) என்பதற்கான வரையறையை இந்த விதிகள் விரிவுபடுத்தியுள்ளன. இதன்படி, அலுவலகப் பொறுப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் மட்டுமல்லாமல், அறங்காவலர்கள், அமைப்பை நிர்வகிக்கும்  நிர்வாகிகள் எந்த ஒரு நபரும் இதில் இடம்பெற்று இருப்பார்.


மேலும், இது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் சமூக ஊடகக் கணக்குகள், இணையதளங்கள் ஆகியவற்றை கட்டாயமாக வெளிப்படுத்தக் கோருகிறது. அதோடு, அந்தச் சங்கமோ அல்லது அதன் முக்கியப் பொறுப்பாளர்களோ அந்த ஆண்டில் புத்தகம், பத்திரிகை அல்லது செய்தித்தாள் கட்டுரை உள்ளிட்ட ஏதேனும் வெளியீடுகளைக் கொண்டுவந்துள்ளனரா என்பதையும் அறிவிக்க வேண்டும். இது ஒவ்வொரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவும் மற்றும் ஒவ்வொரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் செயல்படுவதற்கும் கட்டணத்தை விதிக்கிறது. பல துறைகளில் அல்லது பல பிராந்தியங்களில் செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அதிகப் பதிவுச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்கின்றனர்.


ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் வெளிநாட்டு நன்கொடைகளை பெற விரும்பும் திட்டங்கள் அல்லது நோக்கங்கள் தொடர்பாக செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் என்னென்ன?


தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சமூக, கல்வி, மத, பொருளாதார மற்றும் கலாச்சாரத் திட்டங்களுக்காக வெளிநாட்டு நிதியுதவியைப் பெறலாம்.                    திருத்தப்பட்ட விதிகளின்படி, பதிவுச் சான்றிதழ் அல்லது விண்ணப்பப் படிவத்தில் (புதிய பதிவுகளுக்கு) பின்வருவன குறிப்பிடப்பட வேண்டும்: அவை விதிகளுடன் இணைக்கப்பட்ட அட்டவணையில் உள்ள நோக்கங்களின் பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, பதிவுக்கான நோக்கம் அல்லது நோக்கங்கள் மற்றும் அந்த நிறுவனம் தனது செயல்பாடுகளை மேற்கொள்ள உள்ள மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்கள் ஆகும்.



ஏற்கனவே வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த (FCRA) விதிகளின்கீழ் பதிவு செய்துள்ள நிறுவனங்கள், ஒரு ஆண்டுக்குள் தங்களின் செயல்பாட்டு நோக்கங்களைப் புதுப்பித்து, அதனை ஒன்றிய அரசிடம் தெரிவிக்க வேண்டும். சில பிரிவுகள் அரசியல் நடவடிக்கைகளைத் திட்டவட்டமாகத் தவிர்க்கின்றன.


"கல்வி" சார்ந்த நோக்கம் 22 செயல்பாடுகளைப் பட்டியலிடுகிறது, ஆனால் "அரசியலமைப்பு உரிமைகள், அடிப்படைக் கடமைகள் மற்றும் குடிமைப் பொறுப்புகள் குறித்த விழிப்புணர்வுத் திட்டங்கள்" என்ற பிரிவுக்குப் பின்னால் முற்றிலும் அரசியல் சாராத தன்மை கொண்டது என்ற நிபந்தனையைச் சேர்த்துள்ளது.


"கலாச்சாரம்" சார்ந்த நோக்கம் 18 பிரிவுகளுக்கு இடையே இந்திய மரபுகளால் ஈர்க்கப்பட்ட சமகால கலைகளின் ஊக்குவிப்பு என்பதைப் பட்டியலிடுகிறது.              ஆனால், "அரசியல்/கருத்தியல் உள்ளடக்கங்களைத் தவிர்த்து" என்ற நிபந்தனையைச் சேர்த்துள்ளது.


மதச் செயல்பாடுகளின்கீழ் 16 பிரிவுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன,                 இதில் "மதக் கல்வி, ஒழுக்கநெறி போதனை, சத்சங்கங்கள், ஆன்மீகச் சொற்பொழிவுகள் மற்றும் தியான முகாம்களை நடத்துதல் மற்றும் மயானம்/சுடுகாடு மேம்பாடு மற்றும் பராமரிப்பு ஆகியவை அடங்கும். "பொருளாதாரம்" நோக்கத்தின்கீழ் 19 பிரிவுகளும், "சமூகம்" பிரிவின்கீழ் 30 அம்சங்களும் உள்ளன.


வேறு ஏதேனும் சட்டத் திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளதா?


மத்திய உள்துறை அமைச்சகம் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்ட (FCRA) விதிமீறல்களுக்கான அபராதங்களைக் குறிப்பிட்டு மற்றொரு உத்தரவை வெளியிட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக நிர்வாகச் செலவுகள் செய்வது, அபாயகரமான பங்குச்சந்தை முதலீடுகள் போன்றவற்றில் முதலீடு செய்வது, நிதியைத் தவறாகப் பயன்படுத்துவது, அனுமதியின்றி வெளிநாட்டுப் பங்களிப்புகளைப் பெறுவது அல்லது பயன்படுத்துவது, மற்றும் அங்கீகரிக்கப்படாத நோக்கங்களுக்காக அல்லது அங்கீகரிக்கப்படாத மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் நிதியைப் பயன்படுத்துவது போன்ற விதிமீறல்களுக்கு இந்த அபராதங்கள் விதிக்கப்படும்.


வெளிநாட்டு நிதி எந்த நோக்கத்திற்காகப் பெறப்பட்டதோ, அதைத் தவிர வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தினால், தவறாகப் பயன்படுத்தப்பட்ட தொகையில் 30% வரை அல்லது ₹1 லட்சம், இதில் எது அதிகமோ அது அபராதமாக விதிக்கப்படலாம். அதேபோல், அந்தத் தொண்டு நிறுவனத்தின் (NGO) அனுமதி அல்லது பதிவில் குறிப்பிடப்படாத நோக்கங்களுக்காகவோ அல்லது பகுதிகளிலோ வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்தினாலும், அந்தத் தொகையில் 30% அல்லது                   ₹1 லட்சம், இதில் எது அதிகமோ அது அபராதமாக விதிக்கப்படும்.                          மேலும், அனுமதிக்கப்பட்ட நிர்வாகச் செலவு வரம்பைத் தாண்டி செலவழிப்பது அல்லது நிதியை ஆபத்தான முதலீடுகளில் ஈடுபடுத்துவது போன்ற விதிமீறல்களுக்கு, சம்பந்தப்பட்ட தொகையின் குறிப்பிட்ட சதவீதத்தின் அடிப்படையில் அபராதம் கணக்கிடப்படும். இதற்கான குறைந்தபட்ச அபராதத் தொகை ₹1 லட்சம் ஆகும்.


Original Link: FCRA Rules tightened: NGOs must declare social media accounts, stick to specified activities; political content barred.

Share:

டெலிகிராம் செயலியை ‘தகவல்’ வரையறைக்குள் கொண்டு வருதல் -கிருஷ்ணதாஸ் ராஜகோபால்

தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்கீழ் வரும் 'தகவல்' (Information) என்ற சொல்லின் வரம்பிற்குள், தனிப்பட்ட சட்டப்பூர்வ நிறுவனங்களாகச் செயல்படும் நிறுவனங்களின் ஒட்டுமொத்த தளங்களையும் கொண்டு வந்ததன் மூலம், மத்திய அரசு சட்டப்பிரிவு 69A-ன்கீழ் உள்ள 'உள்ளடக்கங்களைத் தடை செய்யும்' அதிகாரத்தை ஒரு ஆயுதமாக மாற்றியுள்ளது.


தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு-இளநிலை (NEET-UG) 2026 மறுதேர்வின் நம்பகத்தன்மையைப் பாதுகாக்கும் பொருட்டு, ஒன்றிய அரசு ஒரு முழு இடைநிலைத் தளத்தையும் 'தகவல்' என்று கருதும் ஒரு விளக்கத்தின் மூலம் டெலிகிராம் செயலியைத் தற்காலிகமாக முடக்கியது.


2000-ம் ஆண்டின் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்கீழ் (IT Act, 2000) 'தகவல்' என்பதன் பொருளை விரிவுபடுத்தியதன் மூலம், இந்தத் தடைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.


வழக்கமாக, இச்சட்டத்தின் பிரிவு 2(1)(v), 'தகவல்' என்பதை தரவு, செய்திகள், உரை, படம், ஒலி, குரல், குறியீடுகள், கணினி நிரல், மென்பொருள் மற்றும் தரவுத்தளங்கள் உள்ளிட்ட சிறிய அலகுகளாக வரையறுத்தது. டெலிகிராம் செயலி மீதான தடை இந்தச் சட்டரீதியான புரிதலை மாற்றியமைத்தது.


டெலிகிராம் (Telegram) போன்ற ஓர் இணையத்தளம் என்பது இந்த அலகுகளின் ஒரு "தொகுப்பு" (aggregation) அல்லது "திரட்டு" (compilation) என்று அரசாங்கம் வாதிட்டது. இயல்பாகவே சட்டப்பூர்வமான அமைப்புகளாக விளங்கும் நிறுவனங்களால் நடத்தப்படும் முழுமையான தளங்களையும், சட்டத்தின்கீழ் ‘தகவல்’ என்ற வரையறைக்குள் கொண்டுவருவதன் மூலம், சட்டப்பிரிவு 69A-ன் உள்ளடக்கத் தடுப்பு விதியைத் திறம்பட ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளது.



தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (IT Act) பிரிவு 69A, ஒரு கணினி வளத்தின் மூலம் எந்தவொரு 'தகவலுக்கும்' பொது அணுகலையும் தடுப்பதற்கான உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரத்தை அரசாங்கத்திற்கு வழங்குகிறது.               இங்கு, ஒன்றிய அரசின் விளக்கமானது, 'தகவல்' என்ற வார்த்தைக்குப் பதிலாக 'ஒரு முழுமையான இடைநிலைத் தளம்' என்ற வார்த்தையை வெற்றிகரமாகப் பயன்படுத்த வழிவகுத்துள்ளது.


ஜூன் மாதம் 19-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் உயர்நீதிமன்றம்,                 ஒன்றிய அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்டது. அதாவது, "தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (IT Act) பிரிவு 69A-ன்கீழ் உள்ள முடக்கும் அதிகாரம் (Blocking power), தனிப்பட்ட உள்ளடக்கங்களைத் (Content) தாண்டிப் பொருந்தும்.                       இச்சட்டத்தின் விரிவான நோக்கத்தைக் கருத்தில் கொள்ளும்போது, ஒரு செயலியின் மென்பொருள் வடிவமைப்பு, குறியீட்டுத் தொகுப்பு, தரவுத்தளங்கள் மற்றும் அதன் ஒட்டுமொத்த இயக்க முறைமை ஆகியவற்றையும் முடக்குவதை இது உள்ளடக்கும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. 'தகவல்' (Information) என்ற வார்த்தைக்கு, தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்பப் பொருந்தக்கூடிய ஒரு "பரந்த மற்றும் பொதுவான அர்த்தத்தை" வழங்குவதே நாடாளுமன்றத்தின் நோக்கம் என்ற ஒன்றிய அரசின் கருத்தையும் நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.


டெலிகிராம் செயலியின் (Telegram) கட்டமைப்பு சார்ந்த வடிவமைப்பானது, குறிப்பாக தகவல்களைப் பெருமளவில் பலருக்கும் பகிரும் வசதிகள் மற்றும் தேதி, நேரத் தகவல்களைத் திருத்தும் திறன் ஆகியவை, முக்கியமான ஆய்வுக்காலத்தின்போது தவறான பயன்பாட்டைத் தடுப்பதற்கு இத்தகைய அம்சங்கள், தேர்வு நடக்கும் அந்த மிக முக்கியமான காலகட்டத்தில் தவறான பயன்பாடுகளைத் தடுப்பதற்கு ஏற்றதாக இல்லை என்று நீதிமன்றம் கருதியது.


இருப்பினும், ‘தகவல்’ என்ற சொல்லின் “விரிவான” விளக்கத்தை டெலிகிராம் நிறுவனம் ஏற்காததோடு, பிரிவு 69A-ன் மூலம் செயல்படும் அரசாங்கத்தால் “குறிப்பிட்ட தகவல்களுக்கான” அணுகலை மட்டுமே தடுக்க முடியும் என்றும், ஒரு முழு இடைநிலைத் தளத்தின் மீதும் ஒட்டுமொத்தமான கட்டுப்பாட்டை விதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தது.


இத்தகைய ஒரு முழுமையான தடை, அது எந்தக் குழுவைப் பாதுகாக்க வேண்டும் என்று கொண்டு வரப்பட்டதோ, அதே குழுவையே மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது. டெலிகிராம் (Telegram) செயலிக்கு இருக்கும் 15 கோடி பயனர்களில் பலர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆவர். இவர்கள் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்விற்கான (NEET) தயாரிப்புப் பொருட்கள் மற்றும் கல்வி ஆதாரங்களைப் பகிர்ந்து கொள்ள இந்தத் தளத்தைப் பயன்படுத்தி வந்தனர். இந்தத் தடையானது, தவறான உள்ளடக்கங்களோடு சேர்த்து, முறையான கல்வி உள்ளடக்கங்களையும் மற்றும் சட்டப்பூர்வமாகப் பயன்படுத்தும் சாதாரணப் பயனர்களையும் பாதிப்புக்கு உள்ளாக்கியது.


டிஜிட்டல் சுதந்திரம் குறித்த 'அனுராதா பாசின்' வழக்கில் (Anuradha Bhasin case) உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டே டெலிகிராம்  நிறுவனம் தனது வாதங்களை முன்வைக்கிறது. அந்தத் தீர்ப்பின்படி, அடிப்படை உரிமைகளின் மீதான கட்டுப்பாடுகள் எப்போதுமே நியாயமான விகிதத்தில் இருக்க வேண்டும் மற்றும் மிகக் குறைந்த அளவிலான கட்டுப்பாட்டு முறையை மட்டுமே அரசு பயன்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


ஒரு சமூக ஊடகத் தளம் என்ற முறையில் சட்டப்பூர்வமாகத் தங்களிடம் எதிர்பார்க்கப்படும் இணக்கம் என்பது, நியாயமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உரிய கவனத்தையும் செலுத்துவதுதானே தவிர, அதில் 100% குறையே இல்லாத துல்லியத்தை எதிர்பார்ப்பது அல்ல என்று டெலிகிராம் நிறுவனம் வாதிட்டிருந்தது.


ஒரு குறிப்பிட்ட சிறிய குற்றக் குழுவினரைக் குறிவைப்பதற்காக, 'தகவல்' என்ற வார்த்தைக்குப் பரந்த அளவிலான விளக்கத்தைக் கொடுத்து, ஒட்டுமொத்த தளத்தையுமே அரசு முடக்குவதும், அதன் மூலம் லட்சக்கணக்கான பயனர்களின் உரிமைகளைப் பறிப்பதும் நியாயமானதா? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. 


இருப்பினும், இந்தத் தடையானது குறிப்பிட்ட நோக்கத்தை அடைவதற்காக விதிக்கப்பட்ட குறுகிய கால வரம்பைக் கொண்டதுதான் என்று உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்திருந்தது.



Original Link: Stretching ‘information’ to include Telegram.

Share:

வாக்காளர் பட்டியல் திருத்தத்துடன் நலத்திட்டங்களை இணைக்கும் மேற்குவங்க அரசின் முடிவுக்கு எதிர்ப்பு ஏன்? - ஷிவ் சஹாய் சிங்

மேற்குவங்கத்தில், பொது விநியோகத் திட்டம் (Public Distribution System (PDS)) மற்றும் அன்னபூர்ணா யோஜனா (Annapurna Yojana) ஆகிய திட்டங்களை, 'சிறப்பு தீவிர திருத்த' (Special Intensive Revision (SIR)) நடவடிக்கையின் முடிவுகளோடு இணைப்பதை எதிர்த்து ஒரு தொழிற்சங்கம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.


தற்போதைய நிகழ்வு என்ன?


மேற்குவங்கத்தில் நடைபெற்ற சிறப்புத் தீவிர திருத்தத்தின் முடிவுகளுடன், பொது விநியோகத் திட்டம் (PDS) மற்றும் அன்னபூர்ணா யோஜனா ஆகியவற்றின்கீழ் வழங்கப்படும் சலுகைகளை இணைப்பது குறித்த மேற்குவங்க அரசின் அறிவிப்புகளை எதிர்த்து மனு தாக்கல் செய்தவர்கள், கல்கத்தா உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஜூன் மாதம் 23-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு வலியுறுத்தியது.


வேளாண் தொழிலாளர்கள், சிறு வேளாண் தொழிலாளர்கள் மற்றும் குத்தகை வேளாண் தொழிலாளர்களின் தொழிற்சங்கமான பச்சிம் பங்கா கேத் மஜூர் சமிதி (Paschim Banga Khet Majoor Samity), மேற்கு வங்கத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக அரசால் வெளியிடப்பட்ட இரண்டு அறிவிப்புகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.




உத்தரவில் கூறப்பட்டுள்ளவை


ஜூன் மாதம் 4-ஆம் தேதி, மேற்கு வங்க உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறையானது, ‘மேற்கு வங்கத்தில் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR), 2026-ன் முடிவுகளின் அடிப்படையில் தகுதியற்ற             பொது விநியோகத் திட்டப் பயனாளிகளைச் சரிபார்த்தல் மற்றும் நீக்குதல்’ என்ற தலைப்பில் ஒரு உத்தரவை வெளியிட்டது.


2026-ஆம் ஆண்டின் சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) முடிவுகளின் அடிப்படையில், பின்வரும் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றின்கீழ் வருவதன் காரணமாகத் தகுதியற்றவர்கள் எனக் கண்டறியப்பட்ட பொது விநியோகத் திட்டப் (PDS) பயனாளிகளைச் சரிபார்த்து நீக்குவதற்குத் துறை முடிவு செய்துள்ளதாக அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


இந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து பிரிவுகளில், டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி, 2025-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, வரைவுப் பட்டியலில் உள்ள இடம்பெறாத, வேறு இடத்திற்குச் சென்றவர்கள், இறந்தவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு கொண்ட (Absentee, shifted, dead, and duplicate (ASDD)) வாக்காளர்கள், சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) செயல்பாட்டின்போது கண்டறியப்பட்டு, விசாரணைக்குப் பிறகு நிராகரிக்கப்பட்ட, பட்டியலில் இடம்பெறாத வாக்காளர்கள், வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு இரண்டாவது பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள், தீர்ப்புக்குப் பிறகு நீக்கப்பட்டவர்கள் மற்றும்                      2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது வாக்காளர் தகவல் சீட்டு (Voter Information Slips (VIS)), இறந்தவர்கள் அல்லது இரட்டைப் பதிவு கொண்டவர்கள் (ASDD) என கண்டறியப்பட்டவர்கள் ஆகியோர் அடங்குவர்.


இந்த உத்தரவானது, சிறப்பு வாக்காளர் திருத்தப் பணியின்போது நீக்கப்பட்ட வாக்காளர்களை மட்டுமல்லாமல், அதற்குப் பிறகு, பெரும்பாலும் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் நடக்கும் 'வாக்காளர் தகவல் சீட்டு' (Voter Information Slip) விநியோகத்தின்போது வாக்குப்பதிவு நாளில் தங்கள் முகவரியில் இல்லாதவர்கள் (Absent), வேறு இடத்திற்கு மாறிச் சென்றவர்கள் (Shifted), இறந்துவிட்டவர்கள் (Dead) மற்றும் இரண்டு இடங்களில் பெயர் இருக்கும் இரட்டைப் பதிவு வாக்காளர்கள் (Duplicate) எனத் கண்டறியப்பட்ட வாக்காளர்களையும் பொது விநியோகத் திட்டப் பயன்பட்டியலில் இருந்து நீக்குகிறது.


மேலும், ஜூன் மாதம் 15-ஆம் தேதி முடிவடைந்த 12 நாள் காலப்பகுதியில், வாக்குச்சாவடி வாரியாக நீக்கப்பட்ட வாக்காளர்களின் பட்டியலின் அடிப்படையில், பொது விநியோகத் திட்ட (PDS) பயனாளிகளின் பெயர்களை நீக்குமாறும் உணவு மற்றும் நுகர்வோர் பொருள் வழங்கல் துறை தனது உத்தரவில் அறிவுறுத்தியுள்ளது.


மனுதாரர்களின் வாதம் என்ன?


பொது விநியோக அமைப்பு (Public Distribution System (PDS)), நாட்டின் குடிமக்களுக்கு உணவுக்கான உரிமையை வழங்கும், நாட்டின் மிக விரிவான சட்டங்களில் ஒன்றான 2013-ஆம் ஆண்டின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் (National Food Security Act) நிர்வகிக்கப்படுகிறது.                       பிற்கால நிர்வாக நடவடிக்கை மூலம் ஒரு குறைபாட்டை உருவாக்கி, அதை சிறப்பு தீவிர திருத்தம் (SIR) போன்ற ஒரு தேர்தல் செயல்முறையுடன் இணைப்பதன் மூலம் பொது விநியோக அமைப்பின் சலுகைகளை மறுக்க முடியாது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.


பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (SIR) வழக்கில்,                       அந்த விசாரணை முறையைச் சரி என்று ஏற்றுக்கொண்ட அதே வேளையில், உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் 27-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு ஒரு முக்கியக் கருத்தைத் தெரிவித்திருந்ததாக மனுதாரர்கள் வாதிடுகின்றனர்.                                 அதாவது, வாக்காளர் பட்டியலில் ஒருவரைச் சேர்ப்பதற்கான தகுதி இருக்கிறதா என்பதைத் தனக்குத்தானே உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கத்திற்காக மட்டுமே, குடியுரிமை குறித்து ஒரு குறிப்பிட்ட அளவிலான விசாரணையை நடத்தத் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என்று நீதிமன்றம் கூறியிருந்தது.


இத்தகைய விசாரணை என்பது சட்டப்பூர்வமான முழுமையான குடியுரிமை நிர்ணயம் ஆகாது. மேலும் இதன் அடிப்படையில் எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் தேர்தல் தொடர்பான விளைவுகளோடு மட்டுமே முடிந்துவிடும், என்று இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியிருந்தது. ஆனால், மேற்கு வங்க அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை ஜூன் மாதம் 4-ஆம் தேதி வெளியிட்ட உத்தரவு, இந்த வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (SIR) வழக்கு விசாரணையின் எல்லையைத் தாண்டி, அதை பொது விநியோகத் திட்டம் (PDS) போன்ற மக்கள்நலத் திட்டங்களுக்கும் நீட்டிப்பது போல் தெளிவாகத் தெரிகிறது.


அன்னபூர்ணா திட்டம் தொடர்பான அரசாணை


அன்னபூர்ணா யோஜனா (Annapurna Yojana) தொடர்பான உத்தரவு, மேற்குவங்க அரசின் பெண்கள், குழந்தைகள் மேம்பாடு மற்றும் சமூக நலத்துறையால் 2026-ஆம் ஆண்டு மே மாதம் 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது.


லக்ஷ்மிர் பண்டார் திட்டத்தின்கீழ் (Lakshmir Bhandar Scheme) தற்பொழுது பயனடைந்து வரும் அனைவரும் அன்னபூர்ணா யோஜனா (Annapurna Yojana) திட்டத்திற்கு மாற்றப்படுவார்கள் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், 2026-ஆம் ஆண்டின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போது கண்டறியப்பட்ட இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மற்றும் வரைவுப் பட்டியல் வெளியீட்டிற்குப் பிறகு இரண்டாவது பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள், இறுதித் தீர்ப்பிற்குப் பின் நீக்கப்பட்டவர்கள் மற்றும் வாக்காளர் சீட்டு விநியோகத்தின் போது கண்டறியப்பட்ட பிரிவினருக்கு இந்த இடமாற்றம் பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேற்குவங்க அரசாங்கம், பொது விநியோகத் திட்டம் (PDS) மற்றும் அன்னபூர்ணா யோஜனா (Annapurna Yojana) ஆகிய இரண்டு திட்டங்கள் தொடர்பான உத்தரவுகளிலும் ஒரு முக்கிய விஷயத்தைக் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின்கீழ் (Citizenship Amendment Act (CAA)) அமைக்கப்பட்டுள்ள சிறப்புத் தீவிர திருத்தம் தொடர்பாக (SIR) தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்துள்ள பயனாளிகளுக்கு, அவர்களின் விண்ணப்பங்கள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் வரை இந்தத் திட்டங்களின் பலன்கள் தொடர்ந்து கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.




மேற்குவங்கத்தில் இந்த மாநில அளவிலான சரிபார்ப்பு நடைமுறை (SIR) 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4-ஆம் தேதி முதல் 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்தச் செயல்பாட்டின்போது, மாநிலத்தின் வாக்காளர் பட்டியலிலிருந்து 91 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இவர்களில் சுமார் 34 லட்சம் மக்கள் தங்களது பெயர் நீக்கப்பட்டதை எதிர்த்து மாநில அளவிலான சரிபார்ப்பு நடைமுறை (SIR) தீர்ப்பாயங்களில் மேல்முறையீடு செய்துள்ளனர்.


அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் முக்கியத்துவம் 


அன்னபூர்ணா யோஜனா என்பது பொது விநியோகத் திட்டத்தைப் (PDS) போன்ற ஒரு சட்டப்பூர்வமான திட்டம் அல்ல, மாறாக 2026-ஆம் ஆண்டு மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலின்போது பாஜகவின் முக்கிய தேர்தல் முழக்கமாக இருந்த ஒரு திட்டமாகும். 2021-ஆம் ஆண்டு திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட லக்ஷ்மிர் பண்டார் திட்டத்தை (Lakshmir Bhandar scheme) எதிர்கொள்வதற்காக இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது.


2026-ஆம் ஆண்டு மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின்கீழ் மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகையை ₹1,500-லிருந்து ₹3,000-ஆக உயர்த்தி அளிப்பதாக பாஜக உறுதியளித்தபோது, லக்ஷ்மிர் பண்டார் திட்டத்தில் 2.2 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் இருந்தனர். தேர்தலுக்குப் பிறகான சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது அன்னபூர்ணா பண்டார் திட்டம் (Annapurna Bhandar) வழங்கப்படும் என்ற வாக்குறுதி அனைவருக்கும் பொதுவானதாக இருந்தபோதிலும், 'தகுதியுள்ள' பயனாளிகள் மற்றும் லக்ஷ்மிர் பண்டார் திட்டத்தின்கீழ் பலன் பெறுபவர்கள் உட்பட அனைவரும் 12 பக்க படிவத்தை நிரப்ப வேண்டியிருந்தது என்பது தெரியவந்தது.


ஜூன் மாதம் 22-ஆம் தேதி மேற்குவங்க சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், மாநில நிதியமைச்சர் இத்திட்டத்திற்காக ₹36,000 கோடியை ஒதுக்கியுள்ளார். இதன் பொருள் என்னவென்றால், பயனாளிகளின் எண்ணிக்கை லக்ஷ்மிர் பண்டார் திட்டத்தில் இருந்ததில் பாதியாக, அதாவது சுமார் ஒரு கோடியாகக் குறையும் என்பதாகும்.


முதலமைச்சர் சுவேந்து அதிகாரி கடந்த ஆறு வாரங்களாக, திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் லக்ஷ்மிர் பண்டார் திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகள் மற்றும் கசிவுகள் குறித்து முதலமைச்சர் சுவேந்து அதிகாரி பேசி வருகிறார். இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெற்று வரும் சுமார் 30 லட்சம் பயனாளிகளுக்கு, உண்மையில் இதைப் பெறுவதற்கான தகுதி கிடையாது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். இறந்தவர்கள், சட்டவிரோதமாக ஊடுருவியவர்கள் அல்லது இந்தியர் அல்லாத நபர்கள் எவரும் இந்த மாநில குடிமக்களுக்கான நலத்திட்ட உதவிகளைப் பெற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று                         சுவேந்து அதிகாரி குறிப்பிட்டிருந்த நிலையில், சமூக நலத்திட்டங்களில் இருந்து பயனாளிகளை நீக்குவதற்கான ஒரு கருவியாக இந்தச் சரிபார்ப்பு நடைமுறை பயன்படுத்தப்பட்டு வருவதை தற்போதைய மாநில அரசின் உத்தரவுகள் காட்டுகின்றன.


Original Link: Why West Bengal’s decision of linking social security benefits to SIR is being challenged?

Share:

இந்தியாவின் சீரற்ற காலநிலை உத்தி. -ஷிஃபாலி கோயல், தேபாஷிஸ் சக்ரவர்த்தி

ஒருபுறம் தொழில்துறை வளர்ச்சியையும் மற்றும் மறுபுறம் மக்கள்தொகை சார்ந்த பயன்பாட்டுத் தேவையையும், தேசிய மாசுக்கட்டுப்பாட்டு இலக்குகளுடன் சமநிலைப்படுத்துவதற்கு, மிகவும் இலக்கு சார்ந்த கொள்கைகள் தேவைப்படுகின்றன.


அரசின் 'இந்தியாவில் தயாரிப்போம்' (Make-in-India), 'வளர்ந்த இந்தியா-2047' (Viksit Bharat) மற்றும் நிகர-பூஜ்ஜிய உமிழ்வு-2070 (net-zero emissions) ஆகிய திட்டங்களின்கீழ் அரசாங்கம் நிர்ணயிக்கப்பட்ட லட்சிய இலக்குகளிலிருந்து வெளிப்படும் தவிர்க்க முடியாத முடிவு என்னவென்றால், இந்தியாவின் நீண்டகால காலநிலை இலக்குகளை அடைவதற்குத் தொழில்துறையில் கார்பன் உமிழ்வைக் குறைப்பது அவசியமாகும்.


பொருளாதாரம் வளரும்போது, ​​தற்போதுள்ள மற்றும் புதிதாக உருவாகும் உற்பத்தித் துறைகள் விரிவடைந்து, எரிசக்தித் தேவையில் ஒரு நிலையான உயர்வுக்கு வழிவகுக்கின்றன. ஒருபுறம் இந்தத் தொழில்துறை வளர்ச்சியையும்,                          மறுபுறம் மக்கள்தொகை சார்ந்த பயன்பாட்டுத் தேவையையும், தேசிய உமிழ்வுக் குறைப்பு இலக்குகளுடன் சமநிலைப்படுத்துவதற்கு மிகவும் இலக்கு சார்ந்த கொள்கைகள் தேவைப்படுகின்றன. ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு மாநாட்டிற்கு இந்தியா சமீபத்தில் சமர்ப்பித்த முதல் இருதரப்பு வெளிப்படைத்தன்மை அறிக்கை (Biennial Transparency Report (BTR1)), தேசிய உமிழ்வுகள் குறித்த ஒரு விரிவான கணக்கை வழங்குகிறது. 2022-ஆம் ஆண்டில், இந்தியாவின் மொத்த உமிழ்வுகளில் 20%-க்கும் அதிகமானவை நேரடியாகத் தொழில்துறையிலிருந்து உருவானவை என்று அந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, உற்பத்தித் தொழில்கள் மற்றும் கட்டுமானத் துறைகளில் எரிபொருள் நுகர்வு மொத்த உமிழ்வுகளில் 13%-ஆகவும், தொழில்துறை செயல்முறைகள் மற்றும் உற்பத்திப் பயன்பாடு மேலும் 9%-ஆகவும் பங்களிப்பை அளித்துள்ளன என்று சுட்டிக்காட்டுகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த கார்பன் உமிழ்விற்கு (carbon footprint) உற்பத்தி நடவடிக்கைகள் எவ்வளவு பங்களிக்கின்றன என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. காலப்போக்கில் இந்த நிலைத்தன்மை மாறாமல் தொடர்கிறது என்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.


பாதிப்புகளைக் குறைப்பதற்கான திட்டம்


தொழில்துறை உமிழ்வுகள் மற்றும் ஆற்றல் நுகர்வைக் குறைப்பதற்காக, அரசாங்கம் இரண்டு முக்கிய சந்தை அடிப்படையிலான வழிமுறைகளைச் சார்ந்திருக்கிறது. ஆற்றல் அதிகம் தேவைப்படும் 13 தொழில்துறைகளில், குறிப்பிட்ட ஆற்றல் நுகர்வைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட 'செயல்படுத்துதல், அடைதல் மற்றும் வர்த்தகம் செய்தல்' (Perform, Achieve and Trade (PAT)) திட்டத்தை முதல் இருதரப்பு வெளிப்படைத்தன்மை அறிக்கை (BTR1) ஒரு முதன்மை முயற்சியாக அங்கீகரிக்கிறது. 'செயல்படுத்துதல், அடைதல் மற்றும் வர்த்தகம் செய்தல்' (PAT) திட்டம் இப்போது 'கார்பன் கடன் வர்த்தகத் திட்டமாக’ (Carbon Credit Trading Scheme (CCTS)) மாறி வருகிறது. இது அலுமினியம், சிமெண்ட், உரங்கள், இரும்பு மற்றும் எஃகு, பெட்ரோலிய வேதிப்பொருட்கள், பெட்ரோலிய சுத்திகரிப்பு, காகிதக்கூழ் மற்றும் காகிதம், ஜவுளி மற்றும் குளோார்-அல்காலி (chlor-alkali) உள்ளிட்ட ஒன்பது தொழில்துறைத் துறைகளின் உமிழ்வுச் செறிவைக் குறைப்பதில் கவனம் செலுத்துகிறது. அனல் மின் நிலையங்கள், இரயில்வே, மின் விநியோக நிறுவனங்கள் (DISCOMs) மற்றும் வணிகக் கட்டிடங்கள் ஆகிய மற்ற நான்கு தொழில்கள் 'செயல்படுத்துதல், அடைதல் மற்றும் வர்த்தகம் செய்தல்' (PAT) திட்டத்தின்கீழ் தொடர்ந்து செயல்படும்.


இந்தத் திட்டங்கள் அளவுகோல்களை நிர்ணயித்து, ஆற்றல் திறனை ஊக்குவித்து, கார்பன் உமிழ்வு அடர்த்தியைக் குறைத்தாலும்,                                           இந்தியத் தொழில்துறைகள் முழுவதும் உமிழ்வு குறைப்புத் திட்டமிடல் எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பதில் ஒரு தெளிவான இடைவெளி உள்ளது.                            இந்தக் கொள்கைகள், சிமெண்ட், எஃகு, உரங்கள், சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் ஜவுளி போன்ற நன்கு வரையறுக்கப்பட்ட, பாரம்பரிய அதிக உமிழ்வுத் துறைகளுக்காகவே பெரும்பாலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.                                 இருப்பினும், அவை நடைமுறையில் தொழில்துறை உமிழ்வுகளின் ஒரு பெரும் பகுதியை, குறிப்பாக இந்தியாவின் உமிழ்வுப் பட்டியலில் "குறிப்பிட்ட வகைப்படுத்தப்படாத தொழில்துறைகள்" (non-specific industries) என வகைப்படுத்தப்படும் எரிபொருள் பயன்பாட்டினால் ஏற்படும் பெருமளவிலான தொழில்துறை உமிழ்வுகளை இக்கொள்கைகள் நடைமுறையில் கவனிக்காமல் விட்டுவிடுகின்றன.


இந்தியாவின் உற்பத்தித் தொழில்கள் மற்றும் கட்டுமானத் துறையின் அண்மைக்கால அறிக்கையான 2020-ஆம் ஆண்டின் உமிழ்வுத் தரவை ஆய்வு செய்யும் போது, உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான சிக்கலை வெளிப்படுத்துகிறது. உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறைகளில் இருந்து வெளிவரும் மொத்த உமிழ்வில், நேரடியாகக் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியத் தொழில் துறைகளின் பங்கு 55%-க்கும் சற்று அதிகமாகும். அதேநேரத்தில், அந்தத் துறையின் எஞ்சிய உமிழ்வில் 40%-க்கும் அதிகமானவை "குறிப்பிடப்படாத தொழில்கள்" என்ற ஒரே ஒரு பொதுவான பிரிவின் மூலமாக மட்டுமே ஏற்பட்டுள்ளன. நிதி ஆயோக்கின் (NITI Aayog) 'இந்திய காலநிலை மற்றும் ஆற்றல் தகவல் பலகையில்' (India Climate and Energy Dashboard (ICED)) உள்ள விரிவான உமிழ்வுப் பட்டியலின்படி, இதே போன்ற ஒரு நிலைதான் 2014, 2016 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளிலும் காணப்பட்டது. இந்தியாவின் உமிழ்வுப் பட்டியலில் உள்ள துறைகளின் வகைப்பாடானது, வியப்பூட்டும் வகையில் மிகப் பெருமளவிலான உமிழ்வு "குறிப்பிடப்படாத தொழில்கள்" என்ற ஒற்றை, தெளிவற்ற தலைப்பின்கீழ் வருவதைக் காட்டுகிறது.


கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இந்தியாவில் உமிழ்வு குறைப்பு திட்டமிடல் நடவடிக்கைகளின் வரம்பானது, குறிப்பிட்ட அடையாளம் காணக்கூடிய துறைகளைச் சுற்றி திட்ட அமலாக்கம் மற்றும் ஊக்கத்தொகை அடிப்படையிலான கட்டமைப்பைச் சார்ந்துள்ளது. உதாரணமாக, கார்பன் உமிழ்வுப் பட்டியலில் வெளிப்படையாக அடையாளம் காணப்பட்ட மின்சாரம், சிமெண்ட், இரும்பு அல்லாத உலோகங்கள், இரசாயனங்கள் மற்றும் ஜவுளி போன்ற சில துறைகள், 'செயல்படுத்துதல், அடைதல் மற்றும் வர்த்தகம் செய்தல்' (PAT) மற்றும் 'கார்பன் கடன் வர்த்தகத் திட்டம்' (CCTS) போன்ற உமிழ்வு குறைப்பு திட்டமிடல் நடவடிக்கைகளின்கீழ் வருகின்றன. இருப்பினும், தொழில்துறை உமிழ்வுகளின் ஒரு பெரும்பகுதி நிர்வாக ரீதியான தெளிவற்ற நிலையில் உள்ளது. இது இந்தியாவின் பரந்த தொழில்துறை காலநிலை உத்திசார்ந்த தீவிர தாக்கங்களை ஏற்படுத்துகிறது. இந்த 40% உமிழ்வுப் பங்கிற்குத் தெளிவான உட்பிரிவுத் துறை வரையறைகள் இல்லாததால், அதில் அடங்கியுள்ள பல்வேறு தொழில்கள் 'செயல்படுத்துதல், அடைதல் மற்றும் வர்த்தகம் செய்தல்' (PAT) மற்றும் 'கார்பன் கடன் வர்த்தகத் திட்டம்' (CCTS) ஆகிய இரண்டின் முதன்மை வரம்பிற்கு வெளியே இருக்கின்றன. இத்தொழில்கள் தொழில்துறை உமிழ்விற்குப் பெருமளவில் பங்களித்தாலும்,               எஃகு அல்லது சிமெண்ட் போன்ற தொழில்களைப் போல அதே ஆற்றல் திறன் தேவைகள் அல்லது உமிழ்வுக் குறைப்பு இலக்குகளுக்கு அவை உட்பட்டவை அல்ல. இந்தக் கொள்கை இடைவெளி, நாட்டின் தொழில்துறை அடித்தளத்தின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியை பசுமை மாற்றத்திலிருந்து (green transition) விலக்கி வைக்கிறது.


தொழில்துறைகளைக் கண்டறிய வேண்டியதன் அவசியம்


பசுமை இல்ல வாயு உமிழ்வை அதிகரிக்காமல், இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சியைத் தனியாகக் கொண்டு செல்வதில் இந்தியா வெற்றி பெற வேண்டுமானால், அதன் தேசியப் பருவநிலை உத்தியின் அடுத்த கட்டத்திற்கு மிகவும் வெளிப்படையான, தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட தரவுகள் தேவைப்படுகின்றன. உமிழ்வுப் பட்டியலில் தற்போது இருக்கும் "வகைப்படுத்தப்படாத தொழில்துறைகள்" என்ற பிரிவை உடைத்து ஆராய்வதிலிருந்து தொடங்க வேண்டும். பூஜ்ஜிய உமிழ்வு (Net-zero emissions) என்ற இலக்கை உரிய நேரத்தில் அடைவதற்கு, இந்த 40% உமிழ்வுக்கு எந்தெந்த உட்பிரிவுத் துறைகள் துல்லியமாகக் காரணமாக இருக்கின்றன, அவற்றின் குறிப்பிட்ட ஆற்றல் நுகர்வு முறைகள் எவ்வாறு மாறி வருகின்றன, மற்றும் உற்பத்திச் சங்கிலியின் எந்தப் பகுதியில் உமிழ்வுகள் முதன்மையாக அதிகரிக்கின்றன என்பதைக் கண்டறிவதில் கொள்கை வகுப்பாளர்கள் அவசரமாகக் கவனம் செலுத்த வேண்டும்.


காலநிலை தொடர்பான அறிக்கையிடலில் வெளிப்படைத்தன்மை என்பது, ஒரு நாடு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் பாதையில் திறம்படச் செயல்படுகிறது என்பதை உலகிற்கு நிரூபிக்கும் ஒரு வழியாக, பெரும்பாலும் ஒரு சர்வதேசக் கடமையாகவே கருதப்படுகிறது. ஆனால், வெளிப்படைத்தன்மையின் உண்மையான மதிப்பு உள்நாட்டு அளவிலேயே உள்ளது. கொள்கை வகுப்பாளர்களுக்கு, நடவடிக்கைகள் எங்கு மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறித்த தெளிவான புரிதலை வெளிப்படைத்தன்மை வழங்குகிறது.                     மேலும், இந்த நடவடிக்கைகள் பலனளிக்கின்றனவா என்பதை மதிப்பிடவும், கொள்கை திருத்தங்கள் தேவைப்படும் பகுதிகளை அடையாளம் காணவும் உதவுகிறது. எனவே, இந்தியா ஒரு குறைந்த கார்பன் உமிழ்வு கொண்ட பொருளாதாரத்தை உருவாக்க விரும்பினால், கவனிக்கப்படாத இந்தத் தொழில்துறை விதிவிலக்குகள் பற்றிய துல்லியமான தகவல்களைப் பெறுவது இன்றியமையாதது மற்றும் தவிர்க்க முடியாதது ஆகும்.


ஷிஃபாலி கோயல், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற மையத்தில் (Centre for Social and Economic Progress) ஒரு ஆராய்ச்சி உதவியாளராகவும், இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) முனைவர் பட்ட ஆய்வாளராகவும் உள்ளார். தேபாஷிஸ் சக்ரவர்த்தி, வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) பேராசிரியராக உள்ளார்.


Original Link: India’s patchy industrial climate strategy.

Share: