2010-ஆம் ஆண்டின் வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதவின் கீழ் (Foreign Contribution (Regulation) Amendment Bill), பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (NGOs) மற்றும் சங்கங்கள், தங்கள் திட்டங்களின் குறிப்பிட்ட செயல்பாடுகள் மற்றும் தங்களது திட்டங்கள் எந்தெந்தப் பகுதிகளில் செயல்படுத்தப்படுகின்றன என்ற விவரங்களை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.
ஒன்றிய உள்துறை அமைச்சகம் (MHA), 2011-ஆம் ஆண்டு 'வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த விதிகளை, திருத்துவதற்காக, 'வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த விதிகள், 2026'-ஐ ஜூன் மாதம் 22-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு அறிவித்தது.
நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தைச் செயல்படுத்த இந்த விதிகள் உதவுகின்றன. மேலும், இவை இந்திய அரசிதழில் வெளியிடப்பட வேண்டும். முக்கியமாக, 'வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) விதிகள்' ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி, 2011-ஆம் ஆண்டு அரசிதழில் வெளியிடப்பட்டன. அதன் பிறகு 2015, 2019, 2020, 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளிலும், கடந்த வருடம் மே மாதம் 26ஆம் தேதி, 2025 அன்றும் இந்த மசோதா மொத்தம் ஒன்பது முறை திருத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த சட்டம், 2010'-ன்கீழ் உள்ள விதிகளில் மேற்கொள்ளபடும் 10-வது திருத்தம் இதுவாகும்.
வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் உள்நாட்டு பாதுகாப்பிற்கு பாதிப்புகளை ஏற்படுதாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) விதிகள் மூலம் ஒன்றிய உள்துறை அமைச்சகம் அவற்றை ஒழுங்குபடுத்துகிறது. இந்தச் சட்டம் முதன்முதலில் 1976-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. 2010-ஆம் ஆண்டு சட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது. 2010-ஆம் ஆண்டுச் சட்டம் மே மாதம் 1-ஆம் தேதி, 2011-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டம் 2016, 2018 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் திருத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டப் (FCRA) பதிவு ஐந்து ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். அதன் பிறகு, சம்பந்தப்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனம் பதிவைப் புதுப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும். 2015-ஆம் ஆண்டு முதல், 18,000-க்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜூன் மாதம் 22-ஆம் தேதி நிலவரப்படி, நாட்டில் 14,456 வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டப் பதிவு பெற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டப் பதிவு பெற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆண்டுதோறும் ₹22,000 கோடி நிதியைப் பெறுகின்றன என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறை (Foreign Contribution (Regulation) Amendment Bill) விதிகளில் முன்மொழியப்பட்டுள்ள முக்கிய திருத்தங்கள் யாவை?
2010-ஆம் ஆண்டின் வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த (Foreign Contribution (Regulation) Amendment Bill) விதிகளின்கீழ் பதிவு செய்யப்பட்ட அனைத்து தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் தங்கள் திட்டங்களின் குறிப்பிட்ட செயல்பாடுகள் மற்றும் அவை செயல்படுத்தப்படும் புவியியல் எல்லைகள் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
இந்தப் புதிய விதிகள் வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறை விதிகளின்கீழ் பொதுவான அனுமதியை வழங்காது. மேலும், அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிதியை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பது குறித்த கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தச் சட்டங்கள் வலியுறுத்துகின்றன.
எந்தவொரு புதிய பதிவும் இந்தக் குறிப்பிட்ட விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மேலும், ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் "முக்கிய நிர்வாகி" (key functionary) என்பதற்கான வரையறையை இந்த விதிகள் விரிவுபடுத்தியுள்ளன. இதன்படி, அலுவலகப் பொறுப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் மட்டுமல்லாமல், அறங்காவலர்கள், அமைப்பை நிர்வகிக்கும் நிர்வாகிகள் எந்த ஒரு நபரும் இதில் இடம்பெற்று இருப்பார்.
மேலும், இது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் சமூக ஊடகக் கணக்குகள், இணையதளங்கள் ஆகியவற்றை கட்டாயமாக வெளிப்படுத்தக் கோருகிறது. அதோடு, அந்தச் சங்கமோ அல்லது அதன் முக்கியப் பொறுப்பாளர்களோ அந்த ஆண்டில் புத்தகம், பத்திரிகை அல்லது செய்தித்தாள் கட்டுரை உள்ளிட்ட ஏதேனும் வெளியீடுகளைக் கொண்டுவந்துள்ளனரா என்பதையும் அறிவிக்க வேண்டும். இது ஒவ்வொரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவும் மற்றும் ஒவ்வொரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் செயல்படுவதற்கும் கட்டணத்தை விதிக்கிறது. பல துறைகளில் அல்லது பல பிராந்தியங்களில் செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அதிகப் பதிவுச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்கின்றனர்.
ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் வெளிநாட்டு நன்கொடைகளை பெற விரும்பும் திட்டங்கள் அல்லது நோக்கங்கள் தொடர்பாக செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் என்னென்ன?
தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சமூக, கல்வி, மத, பொருளாதார மற்றும் கலாச்சாரத் திட்டங்களுக்காக வெளிநாட்டு நிதியுதவியைப் பெறலாம். திருத்தப்பட்ட விதிகளின்படி, பதிவுச் சான்றிதழ் அல்லது விண்ணப்பப் படிவத்தில் (புதிய பதிவுகளுக்கு) பின்வருவன குறிப்பிடப்பட வேண்டும்: அவை விதிகளுடன் இணைக்கப்பட்ட அட்டவணையில் உள்ள நோக்கங்களின் பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, பதிவுக்கான நோக்கம் அல்லது நோக்கங்கள் மற்றும் அந்த நிறுவனம் தனது செயல்பாடுகளை மேற்கொள்ள உள்ள மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்கள் ஆகும்.
ஏற்கனவே வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த (FCRA) விதிகளின்கீழ் பதிவு செய்துள்ள நிறுவனங்கள், ஒரு ஆண்டுக்குள் தங்களின் செயல்பாட்டு நோக்கங்களைப் புதுப்பித்து, அதனை ஒன்றிய அரசிடம் தெரிவிக்க வேண்டும். சில பிரிவுகள் அரசியல் நடவடிக்கைகளைத் திட்டவட்டமாகத் தவிர்க்கின்றன.
"கல்வி" சார்ந்த நோக்கம் 22 செயல்பாடுகளைப் பட்டியலிடுகிறது, ஆனால் "அரசியலமைப்பு உரிமைகள், அடிப்படைக் கடமைகள் மற்றும் குடிமைப் பொறுப்புகள் குறித்த விழிப்புணர்வுத் திட்டங்கள்" என்ற பிரிவுக்குப் பின்னால் முற்றிலும் அரசியல் சாராத தன்மை கொண்டது என்ற நிபந்தனையைச் சேர்த்துள்ளது.
"கலாச்சாரம்" சார்ந்த நோக்கம் 18 பிரிவுகளுக்கு இடையே இந்திய மரபுகளால் ஈர்க்கப்பட்ட சமகால கலைகளின் ஊக்குவிப்பு என்பதைப் பட்டியலிடுகிறது. ஆனால், "அரசியல்/கருத்தியல் உள்ளடக்கங்களைத் தவிர்த்து" என்ற நிபந்தனையைச் சேர்த்துள்ளது.
மதச் செயல்பாடுகளின்கீழ் 16 பிரிவுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன, இதில் "மதக் கல்வி, ஒழுக்கநெறி போதனை, சத்சங்கங்கள், ஆன்மீகச் சொற்பொழிவுகள் மற்றும் தியான முகாம்களை நடத்துதல் மற்றும் மயானம்/சுடுகாடு மேம்பாடு மற்றும் பராமரிப்பு ஆகியவை அடங்கும். "பொருளாதாரம்" நோக்கத்தின்கீழ் 19 பிரிவுகளும், "சமூகம்" பிரிவின்கீழ் 30 அம்சங்களும் உள்ளன.
வேறு ஏதேனும் சட்டத் திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளதா?
மத்திய உள்துறை அமைச்சகம் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்ட (FCRA) விதிமீறல்களுக்கான அபராதங்களைக் குறிப்பிட்டு மற்றொரு உத்தரவை வெளியிட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக நிர்வாகச் செலவுகள் செய்வது, அபாயகரமான பங்குச்சந்தை முதலீடுகள் போன்றவற்றில் முதலீடு செய்வது, நிதியைத் தவறாகப் பயன்படுத்துவது, அனுமதியின்றி வெளிநாட்டுப் பங்களிப்புகளைப் பெறுவது அல்லது பயன்படுத்துவது, மற்றும் அங்கீகரிக்கப்படாத நோக்கங்களுக்காக அல்லது அங்கீகரிக்கப்படாத மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் நிதியைப் பயன்படுத்துவது போன்ற விதிமீறல்களுக்கு இந்த அபராதங்கள் விதிக்கப்படும்.
வெளிநாட்டு நிதி எந்த நோக்கத்திற்காகப் பெறப்பட்டதோ, அதைத் தவிர வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தினால், தவறாகப் பயன்படுத்தப்பட்ட தொகையில் 30% வரை அல்லது ₹1 லட்சம், இதில் எது அதிகமோ அது அபராதமாக விதிக்கப்படலாம். அதேபோல், அந்தத் தொண்டு நிறுவனத்தின் (NGO) அனுமதி அல்லது பதிவில் குறிப்பிடப்படாத நோக்கங்களுக்காகவோ அல்லது பகுதிகளிலோ வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்தினாலும், அந்தத் தொகையில் 30% அல்லது ₹1 லட்சம், இதில் எது அதிகமோ அது அபராதமாக விதிக்கப்படும். மேலும், அனுமதிக்கப்பட்ட நிர்வாகச் செலவு வரம்பைத் தாண்டி செலவழிப்பது அல்லது நிதியை ஆபத்தான முதலீடுகளில் ஈடுபடுத்துவது போன்ற விதிமீறல்களுக்கு, சம்பந்தப்பட்ட தொகையின் குறிப்பிட்ட சதவீதத்தின் அடிப்படையில் அபராதம் கணக்கிடப்படும். இதற்கான குறைந்தபட்ச அபராதத் தொகை ₹1 லட்சம் ஆகும்.