2022–2024 காலகட்டத்தில், அனைத்து இறப்புகளிலும் 60 சதவீதம் தொற்றா நோய்களே காரணமாக அமைந்தன -பிந்து ஷாஜன் பேரப்படன்

 தொற்றா நோய்கள், பெண்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் வசித்துவரும்  மக்களிடையேயும் இடையே, அதிகரித்து வரும் மரணத்திற்கான முக்கிய  காரணியாக இருந்து வருகின்றன.


இந்த மாதம் வெளியிடப்பட்ட மாதிரிப் பதிவு முறை (Sample Registration System (SRS)) புள்ளிவிவர அறிக்கை 2024-ன் படி, 2022-2024 காலகட்டத்தில் நிகழும் மொத்த இறப்புகளில் 60%-க்கு தொற்றா நோய்களே (Non-Communicable Diseases (NCDs)) காரணமாக இருப்பதால், இந்தியாவின் இளைஞர் இறப்பு நிலை மாறி வருகிறது. 2015-2017-ஆம் ஆண்டு காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இது 7.3 சதவிகிதப் புள்ளிகள் அதிகமான அளவாகும். அந்தக் காலகட்டத்தில், தொற்றா நோய்களே மொத்த இறப்புகளில் 52.8%-க்கு முக்கிய காரணியாக இருந்தன. கீழேயுள்ள விளக்கப்படம், 2015-2017-ஆம் ஆண்டுகள் முதல் இந்தியாவில் நிகழ்ந்த இறப்புகளுக்கான முக்கியக் காரணங்களைக் காட்டுகிறது.


பகுப்பாய்வின்படி, தொற்றா நோய்களில், இருதய நோய்கள் மட்டுமே 2022-2024 காலகட்டத்தில் நிகழ்ந்த மொத்த இறப்புகளில் 32.1%-க்குக் முக்கிய காரணியாக அமைந்துள்ளன. இது 2015-2017 காலகட்டத்தில் 27.1%-ஆக இருந்ததைவிட, மீண்டும் ஐந்து சதவிகிதப் புள்ளிகள் அதிகமான அளவாகும். இதற்கிடையில், இந்தியாவில் இறப்பிற்கான முக்கியக் காரணியாக இருந்துவரும்  தொற்றுநோய்கள், தாய்வழி, மகப்பேறு மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடுகள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பங்கு, 2015-2017 காலகட்டத்தில் 22%-ஆக இருந்ததிலிருந்து, 2022-2024 காலகட்டத்தில் 19.7%-ஆகக் குறைந்துள்ளது.


இந்தியாவில் இறப்புக்கான காரணங்கள்: 2022-2024-ஆம் ஆண்டுகளின் அறிக்கையில் வயது வாரியாக வழங்கப்பட்டுள்ள தரவுகளின்படி, தொற்றா நோய்களால் ஏற்படும் மொத்த இறப்புகளில் இதய நோய்கள் 32.1% பங்கைக் கொண்டுள்ளனன். 30 முதல் 69 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மட்டும் இவை 37.3%-ஆகப் பதிவாகியுள்ளன. 30 மற்றும் 40 வயதுகளில் உள்ள பெரியவர்களை இதய நோய்கள் அதிகளவில் பாதிப்பை சந்ததித்து வருவதாகச் சுகாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நாட்டில் வேலை செய்துவரும் பணியாளர்களில்   இந்தப்பிரிவினர் அதிகமாக இருப்பதால், தரவு கவலைக்குரிய ஒன்றாகக் கருதப்படுகிறது.


இந்தியாவில் கருவுறுதல் விகிதங்கள் (fertility level) குறைந்துவரும் நிலையில், இந்தக் கண்டுபிடிப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. பல மாநிலங்கள் ஏற்கனவே ஒரு பெண்ணுக்கு 2.1 குழந்தைகள் என்ற மாற்று கருவுறுதல் அளவிற்குக் கீழே உள்ளன.


2022–2024 அறிக்கைக் காலத்தில், 69.3% இறப்புகள் 55 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் ஏற்பட்ட அதேவேளையில், 30 முதல் 44 வயதுக்குட்பட்டோர் 19.5% இறப்புகளுக்குக் காரணமாக அமைந்தனர். இது இளம் வயதினரிடையே ஏற்படும் அகால மரணங்களை ஒரு பொருளாதார மற்றும் சமூகம் தொடர்பான கவலையாக மாற்றுகிறது.


பல ஆண்டுகளாக தரவுகளைப் பகுப்பாய்வு செய்ததில், ஊரக மற்றும் நகர்ப்புற மக்களுக்கும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே வேறுபாடுகள் இருப்பது தெரியவந்தது. நகர்ப்புறங்களில் ஏற்பட்ட மொத்த இறப்புகளில் 64.8% தொற்றா நோய்களால் ஏற்பட்டன. அதே, சமயம் ஊரகப்பகுதிகளில் அவை மொத்த இறப்புகளில் 58.8% மட்டுமே காரணமாக இருந்தன. இதேபோல், ஆண்களிடையே ஏற்பட்ட மொத்த இறப்புகளில் 62.3% தொற்றா நோய்களாலும், பெண்களிடையே 56.9% தொற்றா நோய்களாலும் ஏற்பட்டன. இருப்பினும், ஊரகப் பகுதிகளில் வசித்து வரும்  மக்கள் மற்றும் பெண்களிடையே தொற்றா நோய்களே இறப்பிற்கான முக்கிய காரணமாக மாறும் போக்கு தெளிவாகத் தெரிகிறது. கீழேயுள்ள விளக்கப்படம், ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளுக்கும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே தொற்றா நோய்களால் ஏற்படும் இறப்புகளின்  அளவைக் காட்டுகிறது.


2022-2024 அறிக்கைக் காலத்தில், இருதய நோய்களுக்குப் பிறகு, இறப்புக்கான முக்கியக் காரணங்களாகப் புற்றுநோய் மற்றும் பிற கட்டிகள், சுவாச நோய்கள், செரிமான நோய்கள் மற்றும் சுவாச நோய்த்தொற்றுகள் ஆகியவை இருந்தன; இவை ஒவ்வொன்றும் மொத்த இறப்புகளில் 5%-க்கும் அதிகமாகப் பங்களித்தன. கீழேயுள்ள அட்டவணை, இந்தியாவில் அனைத்து வயதுப் பிரிவினரிடையேயும், மேலும் 15-29 மற்றும் 30-69 வயதுப் பிரிவினரிடையேயும் ஏற்பட்ட முதல் 10 இறப்புக் காரணங்களைக் காட்டுகிறது.

பல நடுத்தர மற்றும் அதிக அளவு வருமானம் பெறும் நாடுகளில் காணப்படுவது போன்ற ஒரு நோய்ப்பரவல் மாற்றத்தை இந்தியா தற்போது சந்தித்து வருவதாக அறிக்கை தெரிவிக்கிறது.  அது போன்ற நாடுகளில், இறப்புகள் ஏற்படுவதற்கு நாள்பட்ட நோய்களே முக்கியக் காரணியாக இருந்து வருகின்றன. அதேவேளையில், தொற்றுநோய்கள் தொடர்ந்து சவாலானதாகவே இருந்து வருகின்றன. இது, பொது சுகாதார வல்லுநர்கள் “இரட்டை நோய்ச்சுமை” (double burden) என்று விவரிக்கும் நிலையை உருவாக்குகிறது.


15-29 வயதுக்குட்பட்டோரிடையே தற்கொலையே மரணத்திற்கான முக்கியக் காரணமாகத் தொடர்கிறது என்று அட்டவணை-1 காட்டுகிறது. 2015-2017-ல் 16.3%-ஆக இருந்த தற்கொலைகள், தற்போது இந்த வயதினரின் மரணங்களில் 19% ஆக உள்ளன. தற்கொலைகளின் இந்த அதிகரிப்பு, வேலையின்மை, கல்வி தொடர்பான மன அழுத்தம், நிதிச் சிக்கல்கள் மற்றும் சமூகத் தனிமைப்படுத்தல் உள்ளிட்ட அதிகரித்து வரும் மனநல அழுத்தங்களைச் சுட்டிக்காட்டுகிறது.


அசாம் மற்றும் பிற மாநிலங்களுடன் சேர்த்து, அரசாங்கத்தின் அதிகாரமளிக்கப்பட்ட செயல் குழுவின் (Empowered Action Group (EAG)) கீழ் சிறப்பு கவனம் செலுத்துவதற்காக அடையாளம் காணப்பட்ட 8 மாநிலங்களான பீகார், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகியவற்றுக்கு இடையே உள்ள கடுமையான வேறுபாடுகளையும் அந்த அறிக்கை காட்டியது. அதிகாரமளிக்கப்பட்ட செயல் குழு மாநிலங்கள் மற்றும் அசாமில், மொத்த இறப்புகளில் 53.9% தொற்றா நோய்களால் ஏற்பட்டன. மற்ற மாநிலங்களில் இது 63.5%-ஆக இருந்தது. கீழேயுள்ள விளக்கப்படம், அதிகாரமளிக்கப்பட்ட செயல் குழு மாநிலங்கள் மற்றும் அசாம் ஆகியவற்றுக்கும் மற்ற மாநிலங்களுக்கும் இடையே தொற்றா நோய்கள் மற்றும் தொற்றுநோய்களால் ஏற்படும் இறப்புகளின் பங்கைக் காட்டுகிறது.


வரைபடங்களுக்கான தரவுகள், மாதிரிப் பதிவு முறை புள்ளிவிவர அறிக்கைகள் மற்றும் இந்தியாவில் இறப்புகளுக்கான காரணங்கள் குறித்த அறிக்கைகளிலிருந்து பெறப்பட்டன. இந்த வரைபடங்களில், அதிகாரமளிக்கப்பட்ட செயற்குழுவின் (Empowered Action Group (EAG)) அறிக்கை என்பது அதிகாரமளிக்கப்பட்ட செயற்குழுவைக் குறிக்கிறது.

Original link:

Non-communicable diseases accounted for 60% of all deaths in 2022-2024 


Share:

பத்ம விருதுகள் வெறும் கௌரவம் சார்ந்தவை மட்டுமல்ல — அவை ஜனநாயகத்தையும் வலுப்படுத்துகின்றன. - தாரிக் மன்சூர்

ந்தியா தனது சுதந்திரத்திற்குப் பிறகு பிரிட்டிஷ் காலனித்துவ காலப் பட்டங்களை (Colonial titles) ஒழித்தது. ஆனால், பொதுச் சேவையைப் பாராட்டி கௌரவிப்பதைக் கைவிடாமல், அதற்கென ஒரு குடிமக்கள் விருதுகள் முறையை (Civilian awards system) உருவாக்கியது. இந்த விருது வழங்கும் முறை, நம் நாட்டின் ஜனநாயகத்தின் (Democracy) வளர்ச்சிக்கு ஏற்ப இன்றும் தொடர்ந்து மேம்பட்டுக் கொண்டே வருகிறது.


"யாராலும் சேவை செய்ய முடியும் என்பதால், ஒவ்வொருவரும் மகத்தானவராக ஆக முடியும்," என்று மார்ட்டின் லூதர் கிங் (Jr) ஒருமுறை கூறினார். மகாத்மா காந்தியும் சேவையைப் பற்றி விரிவாகக் குறிப்பிட்டதாவது, "பிறருக்குச் சேவை செய்வதில் உங்களை இழப்பதே, உங்களைக் கண்டறிவதற்கான சிறந்த வழி" என்று அவர் வலியுறுத்தினார். ஒரு வெற்றிகரமான ஜனநாயகம், சேவை மனப்பான்மையைப் பொது வாழ்வில் பின்னிப் பிணைந்திருக்கச் செய்கிறது. பத்ம விருதுகள், பொதுச் சேவையைக் கௌரவிப்பதன் மூலம் இந்த ஜனநாயக இலட்சியத்தை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. ஆனால், உயரிய குடிமகன் விருது (civilian awardees) பெறுபவர்களின் பெயர்கள் பொதுமக்களிடையே மிகுந்த ஆர்வத்தையும், சில சமயங்களில் சர்ச்சையையும் ஏற்படுத்தினாலும் இந்த விருதுகளின் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வரலாறு, சட்ட ரீதியான சவால்கள் மற்றும் அரசியல் மாற்றங்கள் ஆகியவை பொதுமக்களின் மனதில் பெரிய அளவில் இடம்பெறுவதில்லை.


அரசியலமைப்பு நிர்ணய சபை விவாதங்கள்


அரசியலமைப்பு நிர்ணய சபை, பத்ம விருதுகள் குறித்து குறிப்பாக விவாதிக்கவில்லை. பிரிட்டிஷாரால் வழங்கப்பட்ட பட்டங்களை ஒழிக்க வேண்டும் என்ற வலுவான கோரிக்கையே இந்தச் சபையில் இருந்தது. அடிப்படை உரிமைகள் மீதான துணைக் குழுவின் அறிக்கையின்படி, அத்தகைய காலனித்துவப் பட்டங்கள் — அவை தனிப்பட்டவையாக இருந்தாலும் சரி அல்லது பரம்பரையாக வருபவையாக இருந்தாலும் சரி குடிமக்களிடையே செயற்கையான வேறுபாடுகளை உருவாக்கியது மட்டுமல்லாமல், பல்வேறு சமத்துவமின்மைகளையும் ஏற்படுத்தின. பொது வாழ்க்கையைச் சீர்குலைப்பதற்காகப் பட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்றும் சர்தார் வல்லபாய் படேல் வாதிட்டார். இந்த விவாதங்கள், அரசு பட்டங்களை வழங்குவதைத் தடைசெய்யும் அரசியலமைப்பின் 18-வது பிரிவுக்கு வழிவகுத்தன. இதன் மூலம், மற்றவர்களைவிட எந்த ஒரு வர்க்கமும் அதிக சமத்துவம் கொண்டதாக இருக்க முடியாது என்று குடியரசுக்கு மீண்டும் உறுதி அளிக்கப்பட்டது.


சுதந்திரத்திற்கு முந்தைய பட்டங்களைத் தொடர்வதற்கு கடும் எதிர்ப்பு இருந்தபோதிலும், சட்டமன்றம் ஓரளவு நெகிழ்வுத்தன்மையைக் காட்டியது. முதலாவதாக, இராணுவ மற்றும் கல்விச் சிறப்புகளுக்கு விலக்கு அளித்து                டி. டி. கிருஷ்ணமாச்சாரி கொண்டுவந்த திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இது, இராணுவப் பதவிகள், வீரதீர விருதுகள் மற்றும் மகாமகோபாத்யாயா (இந்து தத்துவத்தில் புகழ்பெற்ற அறிஞர்களுக்கானது) போன்ற கல்விசார் கௌரவப் பட்டங்களை அரசு வழங்குவதற்கு வழிவகுத்தது.


எம். ஆர். மசானி போன்ற உறுப்பினர்கள், பொது வாழ்வில் சிறந்து விளங்கும் மற்றும் சேவை செய்யும் குடிமக்களை அரசு கௌரவிக்கும் ஒரு முறையின் அவசியத்தை வலியுறுத்தினர். எனவே, “பட்டங்களுக்கும்” “கௌரவங்களுக்கும்” இடையே ஒரு வேறுபாடு வரையறுக்கப்பட்டது. ஒரு பட்டம் ஒருவரின் பெயருக்கு முன்னொட்டாகவோ அல்லது பின்னொட்டாகவோ இருக்கும் நிலையில், மற்ற (பிரிட்டிஷ் அல்லாத) நாடுகள் தங்கள் குடிமக்களைத் தகுதியான பணிகளுக்காகக் “கௌரவிக்கின்றன” என்று ஸ்ரீ பிரகாசா வாதிட்டார்.


பத்ம விருதுகளின் தோற்றம்


மேற்கூறிய சமரசமானது, வர்க்கம் மற்றும் செல்வாக்கு சார்ந்த பழைய படிநிலைகளைக் கடந்து, சேவை மற்றும் சாதனைகளை அங்கீகரிக்க வேண்டும் என்ற பொதுமக்களின் உணர்வைப் பிரதிபலித்தது. இது 1954-ஆம் ஆண்டில் ஒரு நிர்வாக ஆணை மூலம் பத்ம விருதுகள் நிறுவப்படுவதற்கு வழிவகுத்தது. ஆரம்பத்தில் பாரத ரத்னா (உயர்ந்த குடிமை விருது) மற்றும் மூன்று அடுக்கு பத்ம விபூஷன் ஆகிய இரண்டு குடிமை விருதுகளுடன் தொடங்கப்பட்ட இந்த விருதுகள், ஒரு வருடத்திற்குப் பிறகு இன்று அறியப்படும் மூன்று தனித்துவமான விருதுகளாக மறுசீரமைக்கப்பட்டன. அவை, 


  • பத்ம விபூஷண் — மிகச்சிறந்த மற்றும் தனித்துவமான சேவைக்காக

  • பத்ம பூஷண் — உயரிய வகையிலான தனித்துவமான சேவைக்காக

  • பத்மஸ்ரீ — தனித்துவமான சேவைக்காக


அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களின் நோக்கங்களுக்கு இணங்க, இவ்விருதுகளின் பெயரைத் தலைப்பெழுத்துத் தாள்கள் (letterheads), சுவரொட்டிகள் ஆகியவற்றில் பயன்படுத்துவதோ அல்லது ஒரு பட்டமாகச் சூட்டிக்கொள்வதோ தடை செய்யப்பட்டுள்ளது.


அரசியல் மற்றும் சட்டரீதியான சவால்கள்


ஆனால், பத்ம விருதுகள் தொடங்கப்பட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் மீது அதிருப்தி ஏற்பட்டது. குறிப்பாக, 1969-ஆம் ஆண்டில், முன்னர் அரசியலமைப்பு நிர்ணய சபையின் அடிப்படை உரிமைகள் மீதான துணைக் குழுவின் தலைவராக இருந்த ஆச்சார்யா ஜே. பி. கிருபாலனி, அந்த விருதுகளை ஒழிப்பதற்காக ஒரு தனிநபர் மசோதாவைத் தாக்கல் செய்தார். அந்த விருதுகள் தகுதியின் அடிப்படையில் வழங்கப்படவில்லை என்று வாதிட்ட அவர், விருதுகள் என்ற போர்வையில் பட்டங்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுவதாகக் குற்றம்சாட்டினார். விரிவான விவாதங்களுக்குப் பிறகு அந்த மசோதா தோற்கடிக்கப்பட்ட போதிலும், பிற்காலத்தில் எழுந்த சட்டரீதியான மற்றும் அரசியல் சவால்களுக்கு அதுவே அடித்தளமாக அமைந்தது.


முதலில், கிருபாலனியின் மசோதா முன்வைத்த காரணங்களின் அடிப்படையில், மொரார்ஜி தேசாய் தலைமையிலான அரசாங்க 1978-79-ஆம் காலகட்டத்தில் இந்த விருதுகளை இடைநிறுத்தியது. பின்னர் 1980-ஆம் ஆண்டில் இந்த விருதுகள் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டன. இரண்டாவதாக, அவற்றின் அரசியலமைப்புச் செல்லுபடியை எதிர்த்து உயர்நீதிமன்றங்களில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதால், 1993-97-ஆம் காலகட்டத்தில் இந்த விருதுகள் மீண்டும் தடைபட்டன. இறுதியாக, பாலாஜி ராகவன் vs இந்திய ஒன்றியம்-1996 (Balaji Raghavan vs Union of India) வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தைத் தீர்த்து வைத்தது. அதில் இந்த விருதுகள் அரசியலமைப்புக்கு உட்பட்டவை என உறுதி செய்யப்பட்டது. இந்த விருதுகள் சட்டரீதியான சவால்களைக் கடந்தபோதிலும், அடுத்தடுத்து வந்த அரசுகள் இந்த விருதுகளைத் தகுதியுடன் தொடர்புபடுத்தாமல், செல்வாக்கு மற்றும் வெளிச்சத்துடன் தொடர்புபடுத்த அனுமதித்துவிட்டன என்ற ஒரு கருத்து பரவலாக எழுந்தது.


ஆதரவாளர்களுக்கான விருதிலிருந்து மக்களின் பத்ம விருது வரை


நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கத்தின் ஒரு தொடர்ச்சியான அம்சம் என்னவென்றால், முந்தைய அரசாங்கங்கள் தோல்வியடைந்த அல்லது செயல்படுவதற்கான அரசியல் உறுதிப்பாடு இல்லாத பகுதிகளில் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த அது காட்டும் விருப்பமே ஆகும். பத்ம விருதுகளின் பாரம்பரியத்தை மீட்டெடுப்பது இதற்கு மிகவும் பொருத்தமானதாக அமைந்தது. அனைவரையும் உள்ளடக்கும் மற்றும் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் அதன் நோக்கத்திற்கு உண்மையாக, அந்த விருதுகளை "உயர் பிரிவினருக்கானது" (elite preserve) என்பதிலிருந்து "மக்களுக்கான விருதுகள்" (People’s Awards) என மறுசீரமைப்பதில்தான் முதன்மை சவாலாக இருந்தது.



பொதுமக்கள் நேரடியாகப் பரிந்துரை செய்யக்கூடிய இணையதளப் பக்கத்தை உருவாக்கியதன் மூலம், இந்த விருதுகளில் இருந்த "இடைத்தரகர்கள்" பண்பாடு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது ஒரு குறிப்பிடத்தக்கச் சீர்திருத்தமாகும். இதற்கு முன்பு, பரிந்துரைகள் அனைத்தும் அரசாங்கங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் வழியாக மட்டுமே அனுப்பப்பட்டன. தகுதி இருந்தும் வெளிச்சத்திற்கு வராமல் இருப்பதே ஒரு வகையானப் புறக்கணிப்பாகக் கருதப்படும் சமூகத்தில், இந்தச் சீர்திருத்தத்தின் தாக்கம் மிகத் தெளிவானது — 2014-ஆம் ஆண்டில் வெறும் 2,200-ஆக இருந்த பரிந்துரைகளின் எண்ணிக்கை, 2025-ஆம் ஆண்டில் 50,000-க்கும் மேலாக உயர்ந்தது. இது ஒரு சங்கிலித் தொடர் வினையை (Domino effect) ஏற்படுத்தியது. 2014-ஆம் ஆண்டுக்கு முந்தைய 16 ஆண்டுகாலத் தரவுகளைப் பார்த்தால், விருது பெற்றவர்களில் 63 சதவீதத்தினர் வெறும் ஏழு மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக மட்டுமே இருந்த ஒரு புவியியல் ரீதியான சமநிலையின்மை இருந்தது. பொதுமக்கள் பங்கேற்கும் இந்தப் பரிந்துரை முறை அந்தப் பாகுபாட்டை நீக்கி, நாடு முழுவதிலும் உள்ள தகுதியான நபர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வழிவகை செய்துள்ளது.


மோடி அரசாங்கம், தேர்வுக்கான தகுதிகளை வெறும் "சிறப்புத் தகுதி" (excellence) என்பதிலிருந்து ​​"அடிப்படை நிலையை” அங்கீகரிக்கும் வகையில் விரிவுபடுத்தியது. இந்த மாற்றம், குடிமைப் பதவியேற்பு விழாக்களில் இப்போது காணப்படும் நபர்களிடம் பிரதிபலிக்கிறது. இவர்களில், கர்நாடகத்தின் ஹலக்கி (Halakki) பழங்குடியினத்தைச் சேர்ந்த, காலில் செருப்பணியாத 84 வயது சூழலியல் ஆர்வலர் ஒருவர் (இவர் 30,000 மரங்களை நட்டுள்ளார்); நாகாலாந்தைச் சேர்ந்த எளிய பழ விவசாயி ஒருவர் (இவர் விவசாயிகள் வேற்றுப் பயிர் வகைகளை வளர்ப்பது குறித்து வழிகாட்டியவர்); மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பரதநாட்டியக் கலைஞர் (இவர் இவ்விருதைப் பெறும் முதல் திருநங்கை ஆவார்) ஆகியோர் அடங்குவர். தொழில் மற்றும் அறிவியல் போன்ற வெளிப்படையான துறைகளில் சிறந்து விளங்கியவர்களுடன், “பெயர் அறியப்படாத நாயகர்களின்” (unsung heroes) அமைதியான சேவையையும் ராஷ்டிரபதி பவனின் அதே உயர்ந்த குவிமாட மண்டபங்களில் பாராட்டுவது, நமது வேற்றுமையில் ஒற்றுமையின் ஒரு தனித்துவமான கொண்டாட்டமாகும். 2026-ஆம் ஆண்டின் குடிமைப் பதவியேற்பு விழா, போட்டியிடும் வடிவமாக அல்லாமல், ஒன்றுக்கொன்று துணைபுரியும் இந்த தேசத்தைக் கட்டியெழுப்பும் வடிவத்தின் மற்றுமொரு வெளிப்பாடாக விளங்குகிறது.


தாரிக் மன்சூர், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் (AMU) முன்னாள் துணைவேந்தரும் மற்றும் உத்தரப் பிரதேச சட்ட மேலவையின் (UPLC) நியமன உறுப்பினரும் ஆவார்.

Original link:

The Padma Awards aren’t just about prestige — they’re about deepening democracy.



Share:

இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவது எப்போதும், நாட்டின் பொருளாதாரத் தோல்வியையே குறிக்கிறதா? -புஷ்பேந்திர சிங் மற்றும் அர்ச்சனா சிங்

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைக்கு இடையில், கடந்த சில வாரங்களாக இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. நாணய மதிப்பின் இந்தச் சரிவு ஒரு ஆழமான கேள்வியை எழுப்பியுள்ளது: ஒரு நாட்டின் நாணய மதிப்பு பலவீனமடைவது எப்போது ஒரு பெரும் பொருளாதார நெருக்கடியாக மாறுகிறது?


ஈரான் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களைத் தொடர்ந்து, மேற்கு ஆசியாவில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள் ரூபாயின் மதிப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகத் தெரிகிறது. இதன் விளைவாக, செவ்வாய்க்கிழமை மே மாதம் 26-ஆம் தேதியன்று அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் 0.16 சதவீதம் சரிந்து 95.38 என்ற அளவில் தொடங்கியது.


கடந்த சில வாரங்களாக ரூபாயின் மதிப்பு கடுமையாகச் சரிந்துள்ள நிலையில், அரசாங்கமும், இந்திய ரிசர்வ் வங்கியும் (RBI) தலையிட்டு ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியைத் தடுக்க வேண்டுமா, அல்லது சந்தை நிலவரப்படி அதன் உண்மையான மதிப்பை அடைய அப்படியே விட்டுவிட வேண்டுமா என்று பொருளாதார வல்லுநர்கள் விவாதித்து வருகின்றனர்.


எனவே, ரூபாயின் சரிவு ஒரு ஆழமான கேள்வியை எழுப்பியுள்ளது. பலவீனமடையும் ஒரு நாணயம் எப்போது நெருக்கடியாக மாறுகிறது? ஒரு பொருளாதாரம் இறக்குமதிகளுக்கு நிதியளிக்க முடியாமல், அந்நியச் செலாவணிக் கையிருப்பைப் பாதுகாக்க முடியாமல், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், மற்றும் பொது நம்பிக்கையைத் தக்கவைக்க முடியாமல் போகும்போது ஒரு நெருக்கடி தொடங்குகிறதா? இதை நாம் இன்னும் விரிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.


ஒரு நாணயத்தை உண்மையில் எது வலிமையாக்குகிறது?


அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் பரிமாற்ற விகிதம், முக்கியமாக அந்நியச் செலாவணி (forex market) சந்தைகளில் இரு நாணயங்களுக்குமான தேவையைப் பொறுத்து மாறுகிறது. எண்ணெய், தங்கம், உரங்கள், மின்னணுப் பொருட்கள் மற்றும் பிற இறக்குமதிப் பொருட்களை வாங்குவதற்கு இந்தியாவிற்கு அதிக டாலர்கள் தேவைப்படும்போது, ​​டாலருக்கான தேவை அதிகரிக்கிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவிலிருந்து பணத்தை வெளியே எடுக்கும்போது, டாலரின் அளிப்பு பலவீனமடைகிறது. இதன் விளைவாக, ரூபாயின் மீதான அழுத்தம் அதிகரிக்கிறது.


ரூபாயின் மீதான தற்போதைய அழுத்தம், உயர்ந்து வரும் எண்ணெய் விலைகள், மூலதன வெளியேற்றம், அதிகரித்து வரும் தங்க இறக்குமதி மற்றும் விரிவடைந்து வரும் வர்த்தப் பற்றாக்குறை ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது. ரூபாய் வீழ்ச்சியடைவது மட்டுமல்லாமல், அது ஒரு நெருக்கடியான சூழலையும் உணர்த்துகிறது. ரூபாயைச் சரிசெய்ய அனுமதிக்காவிட்டால், அந்த அழுத்தம் மறைந்துவிடாது. மாறாக, அது அந்நியச் செலாவணிக் கையிருப்பு, பணவீக்கம், வட்டி விகிதங்கள் அல்லது இறக்குமதியைக் குறைத்தல் போன்ற பிற துறைகளுக்கு நகர்கிறது.


இதனால்தான் நாணய வலிமை என்ற கருத்தை மறுவரையறை செய்ய வேண்டியுள்ளது. அது அதிக பெயரளவு மதிப்பைப் பற்றியது அல்ல. அது நிலைத்தன்மை, நம்பகத்தன்மை மற்றும்  உலகப் பொருளாதார பாதிப்புகளைத் தாங்கும்திறன் ஆகியவற்றைப் பற்றியது. எனவே, உண்மையான கேள்வி என்னவென்றால், நமது பொருளாதாரம் இந்த அதிர்ச்சியைத் தாங்குமா என்பதுதான். ஒரு நாடு தனது நாணய மாற்று விகிதத்தை எவ்வாறு நிர்வகிக்கிறது என்பதுதான் இந்த முழு செயல்முறைக்கும் மிக முக்கியமானதாக அமைகிறது.


இந்தியாவின் நாணய மாற்று விகித அமைப்பு


இந்தியாவின் நாணய மாற்று விகித அமைப்பு இரண்டு அதிகபட்ச நிலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது. இதில் முதலாவது 'தூய்மையான மிதப்பு நிலை' (Pure Float) ஆகும். இந்த முறையில் ஒரு நாட்டின் நாணய மதிப்பு சந்தை சக்திகளுக்கு (தேவை மற்றும் விநியோகம்) ஏற்ப சுதந்திரமாக மாற அனுமதிக்கப்படும். இதற்கு நேர்மாறாக, 'நிலையான மாற்று விகித' (Fixed or Pegged Exchange Rate) முறையில், மத்திய வங்கி தனது நாட்டு நாணயத்தின் மதிப்பை மற்றொரு நாட்டின் நாணயத்திற்கு எதிராகவோ அல்லது பல நாணயங்களின் கூட்டு மதிப்புக்கு எதிராகவோ ஒரு குறிப்பிட்ட அளவில் நிலையாக வைத்திருக்கக் கடமைப்பட்டிருக்கும்.


இந்தியா இந்த இரண்டு மாதிரிகளையும் பின்பற்றுவதில்லை. மார்ச் மாதம் 1993-ஆம் ஆண்டு முதல், இந்தியா சந்தையினால் தீர்மானிக்கப்படும் மாற்று விகித முறையைக் கொண்டு வந்துள்ளது, அதே நேரத்தில் தேவைப்படும்போது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இதில் தலையிடும். நடைமுறையில், இது 'நிர்வகிக்கப்படும் மிதப்பு நிலை' (Managed Float) என்று அழைக்கப்படுகிறது. அதாவது ரூபாய் மதிப்பு மாற அனுமதிக்கப்படும், ஆனால் அது திடீரென வீழ்ச்சியடையாமல் ரிசர்வ் வங்கி பாதுகாக்கும் என்றும் கூறப்படுகிறது.


இந்த வேறுபாடு மிகவும் முக்கியமானது. அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு 96 அல்லது 97 என்ற ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தொடும்போது, எந்த விலை கொடுத்தாவது அதை ரிசர்வ் வங்கி பாதுகாக்கும் என்று சந்தை நம்பத் தொடங்கினால், அவர்கள் மத்திய வங்கியின் திறனைச் சோதிக்க ஆரம்பிக்கலாம். இதனால் இறக்குமதியாளர்கள் டாலர்களை உடனே வாங்க முற்படலாம், ஏற்றுமதியாளர்கள் தங்களுக்குக் கிடைத்த டாலர் வருவாயை இந்திய ரூபாயாக மாற்றுவதைத் தள்ளிப்போடலாம் மற்றும் வர்த்தகர்கள் ஒருதலைப்பட்சமாகச் செயல்படத் தொடங்கலாம். இது, ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்த நினைக்கும் அதே அழுத்தத்தை மேலும் அதிகரிக்கச் செய்துவிடும்.


சமீபத்திய புள்ளிவிவரங்கள் இத்தகைய நிர்வாகத்தினால் ஏற்படும் சுமையைக் காட்டுகின்றன. இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு (Foreign Exchange Reserves) கடந்த பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் 728.49 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற சாதனை அளவை எட்டியிருந்தது. ஆனால், மே மாதம் 8-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு நிலவரப்படி அது 696.99 பில்லியன் அமெரிக்க டாலராகக் குறைந்துள்ளது. இதில் அந்நிய நாட்டு நாணயச் சொத்துக்கள் (Foreign Currency Assets (FCA)) சுமார் 552.39 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.


இவை பொருளாதார நெருக்கடிக்கான புள்ளிவிவரங்கள் அல்ல. இந்தியாவிடம் இன்னும் கணிசமான அளவு கையிருப்புப் பாதுகாப்பு உள்ளது. ஆனால், ரூபாய் மீதான அழுத்தம் உண்மையானது என்பதை இது காட்டுகிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பை, அதன் தற்போதைய சந்தை விலையை மட்டும் பார்த்துப் புரிந்துகொள்ள முடியாது. அதனுடன் சேர்த்து அந்நியச் செலாவணி கையிருப்பு, ரிசர்வ் வங்கியின் முன்கூட்டிய ஒப்பந்தப் புத்தகம், கச்சா எண்ணெய் விலைகள், அந்நிய வெளிநாட்டு முதலீடுகள் (FPI) மற்றும் நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை (CAD) ஆகியவற்றையும் கவனிக்க வேண்டும். இந்தக் குறியீடுகள்தான் அழுத்தம் எங்கிருந்து வருகிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவுகின்றன.


ரூபாயின் மீது அழுத்தம் கொடுக்கும் பல காரணிகள்


இந்திய ரூபாயின் தற்போதைய மதிப்பு வீழ்ச்சிக்கு ஒரே ஒரு காரணம் மட்டும் அல்ல. பல அழுத்தங்கள் ஒன்றாகச் சேர்ந்து இந்த வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.


கச்சா எண்ணெய்


முதலாவது காரணம், கச்சா எண்ணெய். இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் ஏறக்குறைய 90 சதவீதத்தை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்கிறது.  மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின்கீழ் (Ministry of Petroleum and Natural Gas (MoPNG)) இயங்கும் பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவு (Petroleum Planning & Analysis Cell (PPAC)) தகவல்படி, 2025-26 நிதியாண்டில் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதி மதிப்பு 144.009 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.


கச்சா எண்ணெய் விலை உயரும்போது, ​​இறக்குமதிச் செலவு அதிகரிக்கிறது, பணவீக்க அபாயங்கள் கூடுகின்றன, மேலும் நடப்புக் கணக்கின் மீதான அழுத்தமும் அதிகரிக்கிறது. உதாரணமாக, இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தியா வாங்கிய கச்சா எண்ணெயின் அளவு, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 4.3 சதவீதம் குறைந்துள்ளது. இருப்பினும், உலகளாவிய எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்ததன் காரணமாக, இறக்குமதிச் செலவு 50 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளதால், பெட்ரோலியத் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வுப் பிரிவால் வெளியிடப்பட்ட தற்காலிகத் தரவுகளில் இத்தகவல் தெரியவந்துள்ளது.


மொத்த இறக்குமதி மதிப்பு மார்ச் மாதம் 2026-ஆம் ஆண்டில் 14.45 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து ஏப்ரல் மாதம் 2026-ஆம் ஆண்டில் 17.90 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. நிகர இறக்குமதி மதிப்பு 8.911 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 13.469 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது.


மூலதன வெளியேற்றம்


அழுத்தத்திற்கான இரண்டாவது காரணி மூலதன வெளியேற்றமாகும் (capital outflow). உலகளாவிய நிச்சயமற்ற தன்மையின் காரணமாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச்சந்தைகளில் இருந்து பணத்தை திரும்பப் பெற்றுள்ளனர். மார்ச் மாதம் 2026-ஆம் ஆண்டில் 5.08 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த வெளிநாட்டு முதலீடு, ஏப்ரல் மாதம் 2026-ஆம் ஆண்டில் 5.64 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. மார்ச் மாதம் 2026-ஆம் ஆண்டில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டு வரவுகளும் கடுமையாகக் குறைந்து, வலுவான நிகர வெளியேற்றத்தைக் காட்டுகின்றன. இது, சமீபத்திய மிகப்பெரிய எதிர்மறையான வெளிநாட்டு நிறுவன முதலீட்டு நகர்வுகளில் ஒன்றாகத் தோன்றுகிறது.




டாலர் முறை


மூன்றாவது காரணம், அமெரிக்க டாலரின் உலகளாவிய ஆதிக்கம் ஆகும். உலகளாவிய நிதிச் சந்தையின் மையமாக டாலர் மட்டுமே உள்ளது. கச்சா எண்ணெயின் விலையும் டாலரிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. உலகப் பொருளாதாரத்தில் ஒரு நிச்சயமற்ற சூழல் நிலவும்போது, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான டாலர் சொத்துக்களை நோக்கித் திரும்புகின்றனர். அமெரிக்காவின் மத்திய வங்கியான அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் (US Federal Reserve) தனது வட்டி விகிதங்களை அதிகமாக வைத்திருக்கும் போதோ, அல்லது உலக முதலீட்டாளர்கள் அபாயங்களை எதிர்கொள்ளத் தயங்கும் போதோ, வளரும் சந்தைகளால் சந்தைச் சுழற்சியை வழிநடத்த முடியாது. அவர்கள் டாலரின் போக்கைப் பின்தொடர மட்டுமே முடியும்.


இதுதான் உலகப் பொருளாதாரத்தின் கசப்பான உண்மை. இந்தியா பெரிய நாடுதான், ஆனால் அதனால் டாலர் சுழற்சியைக் கட்டுப்படுத்த முடியாது. அதனால் அந்தச் சுழற்சியின் தாக்கத்தை நிர்வகிக்க முடியும், ஆனால் போக்கின் நிலையை அதனால் கட்டுப்படுத்த முடியாது.


இந்தியா தற்போது ஒரு கடுமையான நாணய நெருக்கடியை எதிர்கொள்ளவில்லை, ஆனால் புறக்கணிக்க முடியாத எச்சரிக்கை அறிகுறிகள் உள்ளன. சமீபத்திய வர்த்தகத் தரவுகள் அதற்கான காரணத்தைக் காட்டுகின்றன. 2025-26-ஆம் நிதியாண்டில், இந்தியாவின் மொத்தப் பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி, முந்தைய ஆண்டைவிட 4.2 சதவீதம் அதிகரித்து, 860.09 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இறக்குமதி அதைவிட வேகமாக 6.5 சதவீதம் அதிகரித்து, 979.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, ஒட்டுமொத்த வர்த்தகப் பற்றாக்குறை 2024-25-ஆம் நிதியாண்டில் 94.7 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 2025-26-ஆம் நிதியாண்டில் 119.3 பில்லியன் அமெரிக்க டாலராக விரிவடைந்துள்ளது.


தஙகத்தின் இறக்குமதி


தங்க இறக்குமதியும் கவலையை அதிகரிக்கும் மற்றொரு காரணியாக உள்ளது. 2025-26-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் தங்க இறக்குமதி செலவு 71.98 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இயந்திரங்களை (Machinery) இறக்குமதி செய்வது எதிர்கால உற்பத்தியைப் பெருக்க உதவும். ஆனால், தங்கம் இறக்குமதி செய்யம்போது நாட்டின் டாலர்கள் வெளியேறுகின்றனவே தவிர, நேரடியாக ஏற்றுமதியை உருவாக்கும் எந்தவொரு சொத்தும் இங்கு உருவாவதில்லை.


இதுவே ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்த விவாதங்களில் தங்கத்தை மிக முக்கியமான ஒன்றாக மாற்றுகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதி என்பது அத்தியாவசியமானது, ஆனால் தங்க இறக்குமதியை நாம் தவிர்க்க முடியும். ரூபாயின் மதிப்பு பலவீனமடையும் போது, பொதுமக்கள் அல்லது முதலீட்டாளர்கள் தங்கள் சொத்துக்களைப் பாதுகாக்க அதிக தங்கத்தை வாங்குகிறார்கள். ஆனால், இந்தச் செயல் அவர்கள் பயப்படும் அதே ரூபாய் வீழ்ச்சிக்குத் தங்களை அறியாமலேயே மேலும் வலுசேர்ப்பதாக அமைந்துவிடுகிறது. அதிக தங்க இறக்குமதி என்பது டாலருக்கான தேவையை அதிகரிக்கும், டாலரின் தேவை அதிகரித்தால் அது ரூபாயின் மதிப்பை மேலும் பலவீனப்படுத்தும். இந்த அழுத்தங்களே அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளைத் தீர்மானிக்கின்றன.


மண்டெல்-ஃபிளெமிங் மும்முனைச் சிக்கல் 


பொருளாதார வல்லுநர்கள் 'சாத்தியமற்ற மும்மை' (impossible trinity) அல்லது 'மண்டெல்-ஃபிளெமிங் மும்முனைச் சிக்கல்' (Mundell-Fleming trilemma) என்று அழைக்கும் ஒரு நிலையை இந்திய ரிசர்வ் வங்கி கையாண்டு வருகிறது. எந்தவொரு மத்திய வங்கியாலும் ஒரே நேரத்தில் நிலையான நாணய மாற்று விகிதத்தைப் பராமரிப்பது, மூலதனத்தின் தடையற்ற இயக்கத்தை அனுமதிப்பது மற்றும் சுதந்திரமான பணவியல் கொள்கையைத் தக்கவைத்துக் கொள்வது ஆகிய மூன்றையும் செய்ய முடியாது.


இதற்குச் சரியான தீர்வு, மாற்று விகித மாற்றங்களை ஒரு ஒழுங்குமுறைக்குள் நிர்வகிப்பதே தவிர, நமக்குப் பழகிப்போன ஒரு குறிப்பிட்ட மாற்று விகிதத்தை மட்டுமே பாதுகாக்க முயல்வது அல்ல. அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பை 90 அல்லது 95 என்ற அளவில் தக்கவைக்க, ரிசர்வ் வங்கி தன்வசம் உள்ள அந்நியச் செலாவணி இருப்பை (Forex Reserves) செலவழித்தால், எதிர்காலத்தில் வெளிப்புறப் பொருளாதார அதிர்ச்சிகள் ஏற்படும்போது நம்மைப் பாதுகாக்கும் அந்த முக்கியக் கேடயத்தையே நாம் பலவீனப்படுத்தும் அபாயம் ஏற்படும். அதேபோல, வெளிநாட்டு மூலதன ஈர்ப்பை அதிகரிப்பதற்காக வட்டி விகிதங்களை உயர்த்தினால், அது நாட்டின் உள்நாட்டு முதலீடுகளையும், கடன் வளர்ச்சியையும் முடக்கிவிடும்; இந்த இழப்பை நம் பொருளாதாரத்தால் தாங்கிக்கொள்ள முடியாது.


ஒரு சீரான திட்டமிடப்பட்ட தலையீடே சிறந்த அணுகுமுறையாக இருக்கலாம் என்றாலும், இதற்கான வலுவான தீர்வு கட்டமைப்பு சார்ந்ததே ஆகும். இந்தியா கச்சா எண்ணெய் மீதான தனது சார்பைக் குறைக்க வேண்டும், உள்நாட்டு எரிசக்தி இருப்பை விரிவாக்க வேண்டும், தங்க மறுசுழற்சியை ஊக்குவிக்க வேண்டும், நிதிச் சேமிப்புகளை அதிகரிக்க வேண்டும், வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதித் திறனை உயர்த்த வேண்டும், தவிர்க்கக்கூடிய இறக்குமதிகளைக் குறைக்க வேண்டும் மற்றும் நிலையான நீண்டகால வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க வேண்டும். ரூபாயின் மதிப்பை ரிசர்வ் வங்கி மட்டுமே நிலைநிறுத்திவிட முடியாது. அதற்கு நாட்டின் வலுவான உற்பத்தித் தளத்தின் ஆதரவு தேவை.


எனவே, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவது என்பது ஒரு தோல்வியும் அல்ல, அதேசமயம் அது முற்றிலும் பாதிப்பில்லாத ஒன்றும் அல்ல. அது ஒரு எச்சரிக்கை, ஒரு சுய-சீரமைப்பு மற்றும் ஒரு சோதனை ஆகும். நெருக்கடியின் போது வளையும் ஒரு நாணயம், அந்தச் சூழ்நிலைக்குத் தேவையானதைத்தான் செய்கிறது. இங்கிருக்கும் சவால், ஒவ்வொரு வீழ்ச்சியையும் தடுப்பது அல்ல; மாறாக அந்த வீழ்ச்சி ஒரு பொருளாதாரப் பேரழிவாக மாறிவிடாமல் தடுப்பதும், அத்தகைய நெருக்கடிகள் அடிக்கடி ஏற்படுவதைக் குறைப்பதற்கான வலுவான பொருளாதார அடித்தளங்களை உருவாக்குவதுமே ஆகும்.

Original link:

 Is a weakening rupee always a sign of economic failure?


Share:

டெல்லியின் தூசு மாசுபாட்டை கட்டுப்படுத்த அறிவியல் பூர்வமான அணுகுமுறையே தேவை, தற்காலிக நடவடிக்கைகள் அல்ல. -குஃப்ரான் பெய்க்

இந்தோ-கங்கைச் சமவெளி முழுவதும் இந்த முறை கடுமையான வெப்பம் பதிவாகியுள்ளது. இதன் விளைவாக, வழக்கத்தைவிட மிக அதிக அளவில் காற்றில் தூசிகள் கிளம்பியுள்ளன. வீசும் காற்று, இந்தத் தூசிகளில் ஒரு பகுதியை இந்தோ-கங்கைச் சமவெளிப் பகுதியிலிருந்தும், மற்றொரு பகுதியை ராஜஸ்தான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பாலைவனப் பகுதிகளிலிருந்தும் டெல்லியை நோக்கி அடித்துச் சென்றுள்ளது. இதனால் டெல்லி நகரம் பல பக்கங்களிலிருந்தும் வரும் தூசிப் பாதைகளுக்கு நடுவே சிக்கிக் கொண்டுள்ளது.


சமீபகாலங்களில் டெல்லியில் தூசி மாசுபாடு ஒரு பெரிய பொது சுகாதார அபாயமாக உருவெடுத்துள்ளது. இந்தச் சவாலை இன்னும் விரிவாக ஆராய்வதற்குமுன், காற்று மாசுபாடுகளுக்குக் காரணமான மூலங்கள் உள்ளூரிலேயேதான் இருக்கின்றன. எனவே கோட்பாட்டு ரீதியாக இவற்றை நம்மால் கட்டுப்படுத்த முடியும். ஆனால், இங்கே "உள்ளூர்" என்பதை ஒரு குறிப்பிட்ட நகர எல்லையை மட்டும் வைத்துப் பார்க்கக்கூடாது. ஒட்டுமொத்தக் காற்றுப் பகுதியையும் கணக்கில் கொள்ள வேண்டும். வானிலை மற்றும் பருவநிலை மாற்றங்கள், இந்த மூலங்களிலிருந்து வரும் மாசுக்கள் எந்தத் திசையில் பரவுகின்றன என்பதைத் தீர்மானிக்கின்றன.




குளிர்காலத்தில், குளிர்ந்த காற்றும் மெதுவான காற்றோட்டமும் மாசுக்களை காற்றில் பரவவிடாமல் தடுத்து, ஒரே இடத்தில் தேக்கி வைப்பதால் மாசுபாட்டின் அளவு மிக வேகமாக உயர்கிறது. ஆனால் கோடைகாலத்தில், அதிக வெப்பநிலையும் பலத்த காற்றும் காற்றின் இயக்கத்தை அதிகரித்து, தூசிகள் காற்றில் எளிதாகக் கிளம்பி வேகமாகப் பரவ வழிவகுக்கின்றன. இதைத்தான் இப்போது டெல்லியில் பார்க்கிறோம். முரண்பாடு என்னவென்றால், காற்றில் இயற்கையாகவே தூசி கிளம்புவது குறைவாக இருக்கும் குளிர்காலத்தில்தான் டெல்லியில் தண்ணீர் தெளிப்பதைப் பற்றிய விவாதங்கள் தீவிரமடைகின்றன. ஆனால் உண்மையில், கோடைகாலத்தில்தான் தண்ணீர் தெளிப்பது மிக மிக அவசியமான ஒன்றாகும்.


தூசி மாசுபாட்டை மூன்று தனித்துவமான வகைகளாகப் புரிந்துகொள்ளலாம். முதலாவது இயற்கையான தூசி (natural dust). இது நிலப்பரப்பின் பண்புகள், நிலப் பயன்பாடு மற்றும் நிலப் பரப்பு ஆகியவற்றைச் சார்ந்துள்ளது. இரண்டாவது மீண்டும் காற்றில் கலக்கும் தூசி (re-suspended dust). இது தார் மற்றும் தார் இல்லாத சாலைகளில் வாகனங்கள் செல்லும்போது உருவாகிறது. அதிக போக்குவரத்து நெரிசல், அதிக வாகன வேகம் மற்றும் மோசமான சாலை நிலைமைகள், குறிப்பாக குளிர்காலத்தில், தூசியின் அளவை கணிசமாக அதிகரிக்கின்றன. காற்றில் வேகம் இல்லாததால் இந்தத் தூசிகள் தானாகக் கலைந்து போகாது, அதே நேரத்தில் தொடர்ச்சியான வாகனப் போக்குவரத்து இந்தத் தூசிகளை காற்றில் பரவிக் கொண்டே இருக்கச் செய்கிறது.


மூன்றாவது வகை, கட்டுமானப் பணிகளின்போது முறையான விதிகளைப் பின்பற்றாததால் உருவாகும் தூசியாகும். இந்த மூன்று வகைகளில், கட்டுமானத் தூசியால் ஏற்படும் மாசுபாடு மிகக் குறைவுதான் என்றாலும், இதுவே நிர்வாக ரீதியாக மிக உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. டெல்லியில் அமல்படுத்தப்படும் தரப்படுத்தப்பட்ட பதிலளிப்பு செயல் திட்ட (Graded Response Action Plan(GRAP)) போன்ற அவசரகால வழிகாட்டுதல்களில் இதற்கான நடவடிக்கைகள் முக்கியமாக இடம்பெறுவதே இதற்குச் சான்றாகும்.


தற்போது, டெல்லி நகரம் மற்ற இரு தூசி ஆதாரங்களுடன் (Dust sources) சேர்த்து, முக்கியமாக இயற்கையாகவே காற்றில் அதிகளவில் தூசி பறக்கும் கடுமையானப் பிரச்சினையால் தவித்து வருகிறது. இங்கே எழும் முக்கியமான கேள்வி என்னவென்றால்: 2026-ஆம் ஆண்டின் கோடைகாலம் ஏன் இவ்வளவு தீவிரமான பாதிப்பைக் கண்டுள்ளது? இதற்கான விடை, காலநிலை மாற்றத்தால் மேலும் தீவிரமடைந்துள்ள பெரிய அளவிலான வானிலை மாற்றங்களில்தான் உள்ளது. இந்தியா தற்போது 'சூப்பர் எல் நினோ' (Super El Niño) (பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் வழக்கத்திற்கு மாறான வெப்பமயமாதல்) சூழலுக்குள் நுழைந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இதன் ஆரம்பகால விளைவுகளில் ஒன்றாக, வானிலை ஆய்வு அமைப்புகள் இந்த ஆண்டு பருவமழை வழக்கத்தைவிடக் குறைவாகவே இருக்கும் என்று கணித்துள்ளன.

பசிபிக் பெருங்கடல் வெப்பமடைவதால், சூப்பர் எல்-நினோ நிலைமைகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் வெப்பத்தைத் தீவிரப்படுத்துகின்றன. இந்த ஆண்டு, இந்திய நகரங்கள் உலகின் வெப்பமான இடங்களில் தொடர்ந்து இடம்பெற்றுள்ளன. தெற்காசியா முழுவதும் பரவலாக ஏற்பட்ட வெப்பமயமாதல், ஒரு பரந்த பிராந்தியத்தில் மேற்பரப்பு ஈரப்பதத்தை முற்றிலும் வறண்டுபோகச் செய்துள்ளது. இதன் விளைவாக, மண் தளர்ந்து, பலத்த காற்றினால் ஏற்படும் தூசி இடப்பெயர்ச்சிக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படக்கூடியதாக மாறியுள்ளது.


வழக்கமாக, கோடை காலத்தில் மேற்கு இந்தியாவில் கடுமையான தூசி கலந்த புயல் பாதிப்புகள் ஏற்படும். இருப்பினும், இந்த ஆண்டு, பரந்த இந்தோ-கங்கைச் சமவெளி முழுவதும் கடும் வெப்பம் நிலவியதால், வட மற்றும் கிழக்கு இந்தியப் பகுதிகள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. இதன் விளைவாக, தூசியானது மிகப் பெரிய அளவில் மேலே கிளம்பியுள்ளது. காற்றுகள் தூசியைப் பகுதியளவு இந்தோ-கங்கைப் பகுதியிலிருந்தும், பகுதியளவு ராஜஸ்தான் மற்றும் அதை ஒட்டிய பாலைவனப் பகுதிகளிலிருந்தும் டெல்லியை நோக்கி எடுத்துச் செல்கின்றன. எனவே, டெல்லி பல தூசி செல்லும் பாதைகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டுள்ளது.


உள்ளூரில் 'லூ' (Loo) என்று அழைக்கப்படும் பலமான கோடைகாலக் காற்று, இந்தத் தூசி மேலும் பரவ வழிவகுத்துள்ளது. இந்தச் சவாலை எதிர்கொள்ள, தற்காலிகமான உடனடித் தீர்வுகளைக் காட்டிலும், நீண்டகாலத் திட்டமிடலும் கட்டமைப்பு ரீதியான தலையீடுகளும் அவசியமாகின்றன.





எனவே, பல தீர்வுகள் முக்கியமானதாகின்றன


முதலாவதாக, கொள்கை வகுப்பாளர்கள் ஒவ்வொரு மாசு மூலத்திற்குப் பின்னணியில் உள்ள அறிவியலையும், வானிலை மற்றும் பருவகால நிலைகள் அவற்றின் மீது ஏற்படுத்தும் தாக்கத்திற்கான வழிமுறைகளையும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். வெவ்வேறு மாசு மூலங்கள் வெவ்வேறு பருவகாலங்களில் வெவ்வேறு விதமாகச் செயல்படுகின்றன, எனவே மாசைக் குறைப்பதற்கான உத்திகள் இந்த யதார்த்தத்தைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். இரண்டாவதாக, அர்த்தமுள்ள முடிவுகளைப் பெறுவதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்களுடன் கூடிய திட்டச் செயலாக்கம் இன்றியமையாததாகும். மூன்றாவதாக, இயந்திரமயமாக்கப்பட்ட சாலை பெருக்கும் இயந்திரங்களின் (Mechanical Road Sweeping Machines (MRSM)) பயன்பாட்டை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், தூசிகள் கிளம்பும் இடத்திலேயே அதை அடக்குவதற்கு, திறமையான கூட்டுதல் மற்றும் உகந்த அளவில் தண்ணீர் தெளித்தல் ஆகிய இரண்டையும் இணைக்கும் தொழில்நுட்பங்களை இந்தியா உருவாக்க வேண்டும்.


நான்காவதாக, சாலைத் தூசுகளைக் குறைப்பதற்குச் சிறந்த போக்குவரத்து மேலாண்மை மிகவும் முக்கியமானது. மின்சார வாகனங்கள் (EVs) எரிபொருள் உமிழ்வைக் குறைக்கலாமே தவிர, வாகனங்கள் செல்லும்போது காற்றில் மீண்டும் மிதக்கும் சாலைத் தூசுகளை அவற்றால் முற்றிலுமாகத் தடுக்க முடியாது. அந்த சவாலை எதிர்கொள்ள மென்மையான போக்குவரத்து, சிறந்த சாலைப் பராமரிப்பு மற்றும் நிலையான போக்குவரத்து மேலாண்மை ஆகியவை தேவைப்படுகின்றன.


ஐந்தாவதாக, கட்டுமானப் பகுதிகளில் பசுமைப் போர்வை அமைப்பது உள்ளிட்ட கட்டுமான விதிகளானது கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.  அதே நேரத்தில், தூசு மாசுபாட்டிற்குப் பங்களிக்கும் மற்ற பெரிய காரணிகளைவிடக் கட்டுமானத் தூசுகள் மட்டுமே பெரியதாகக் காட்டப்பட்டுவிடக் கூடாது. இறுதியாக, மண் பரப்பை நிலையாக வைத்திருக்கவும், தூசிகள் காற்றில் பறப்பதைத் தடுக்கவும் நகரங்களுக்கு கணிசமான அளவில் அதிக பசுமைப் போர்வையும் நீர்நிலைகளும் தேவைப்படுகின்றன.



காலநிலை மாற்றம் தீவிரமடைந்து வருவதால், நாம் கூடுதல் விழிப்புடன் இருப்பது மிகவும் அவசியமாகிறது. மாறிவரும் தூசு மாசுபாட்டின் புவியியல் அமைப்பானது நமக்கு ஒரு எச்சரிக்கையாகும்: பருவநிலையுடன் தொடர்புடைய தீவிர இயற்கை நிகழ்வுகள் மிகவும் கணிக்க முடியாததாகவும், பரவலானதாகவும் மற்றும் மனிதர்களால் கையாள்வதற்குக் கடினமானதாகவும் மாறி வருகின்றன. 


குஃப்ரான் பெய்க், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவன வளாகத்தில் (IISc-Campus) அமைந்துள்ள தேசிய மேம்பட்ட படிப்புகளுக்கான நிறுவனத்தில் (NIAS) முதன்மைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். மேலும், இவர் காற்றுத் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் (SAFAR) நிறுவனரும் ஆவார்.

Original link:

Delhi’s dust pollution needs science, not seasonal optics.


Share:

சுகாதாரக் குறியீடுகள் குழந்தை இறப்பு விகிதம் மற்றும் மொத்த கருவுறுதல் விகிதத்தில் முன்னேற்றங்களைக் காட்டினாலும், அதிக ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கின்றன.

இந்தத் தரவுகளை ஒட்டுமொத்தமாகச் சேர்த்துப் பார்க்கும்போது, அது மக்கள் தொகை ஈவுத்தொகையின் (Demographic Dividend) விளிம்பில் இருக்கும் ஒரே மாதிரியான இந்தியாவை நமக்குக் காட்டவில்லை. மாறாக, வெவ்வேறு வேகங்களில் பயணித்துக் கொண்டிருக்கும் இரண்டு விதமான மக்கள்தொகை எதார்த்தங்களை வெளிப்படுத்துகிறது.


சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட 2024-ஆம் ஆண்டுக்கான மாதிரிப் பதிவு முறைமை அறிக்கை, மகிழ்ச்சிக்கும் அதே வேளையில் கவலைக்கும் காரணமான ஒரு மக்கள்தொகை மாற்றத்தை எடுத்துக்காட்டுகிறது. நாட்டின் பிறப்பு விகிதம்  அதாவது ஒரு மக்கள்தொகையில் 1,000 பேருக்கு நிகழும் மொத்த பிறப்புகளின் எண்ணிக்கை  2014-ஆம் ஆண்டில் 21-ஆக இருந்த நிலையில், 2024-ஆம் ஆண்டில்1,000 பேருக்கு 18.3-ஆகக் குறைந்துள்ளது. குழந்தை இறப்பு விகிதம் (Infant Mortality Rate (IMR)) 2014-2019-ஆம் ஆண்டில் 1,000 பேருக்கு 39-ஆக இருந்த நிலையில் இருந்து, 2024-ஆம் ஆண்டில் 24-ஆகக் குறைந்துள்ளது. இந்த முன்னேற்றங்கள், பல  ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட பொது சுகாதார முதலீட்டைப்  வெளிக்காட்டுகின்றன. இருப்பினும், இந்தத் தேசிய அளவிலான சராசரி எண்கள், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கு இடையேயும் உள்ள ஆழமான இடைவெளியை மறைக்கின்றன. சத்தீஸ்கர் மாநிலத்தில் 36 என்ற அளவில் நாட்டின் அதிக உயர்ந்த குழந்தை இறப்பு விகிதம் (IMR) பதிவாகியுள்ளது. மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் குழந்தை இறப்பு விகிதம் தலா 35-ஆக உள்ளது. மறுபுறம், கேரளாவில் 8-ஆகவும்; தமிழ்நாடு, டெல்லி மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் 11-ஆகவும் உள்ளது. சிறப்பாகச் செயல்படும் மற்றும் மோசமாகச் செயல்படும் மாநிலங்களுக்கு இடையிலான இந்த இடைவெளி, தொடர்ச்சியான தோல்விகளை கோடிட்டுக் காட்டுகிறது.


தரவுகளில் காணப்படும் இந்த ஒட்டுமொத்த முன்னேற்றங்களுக்கு, தேசிய சுகாதார இயக்கத்தின்கீழ் (National Health Mission (NHM)) மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான மற்றும் குறிக்கோளுடன் கூடிய திட்டங்களே முக்கியக் காரணமாகும். இத்திட்டங்கள் நோய் எதிர்ப்புத் தடுப்பூசி போடும் பரப்பளவை விரிவுபடுத்தி, தடுக்கக்கூடிய குழந்தை மரணங்களைக் குறைத்துள்ளன. மேலும், மருத்துவமனை பிரசவங்களையும் மேம்படுத்தியுள்ளன. இருப்பினும், கிராமப்புறங்களில் உள்ள பின்தங்கிய நிலை இன்னும் தொடர்வது பொதுச் சுகாதாரக் உள்கட்டமைப்புகள் சீரற்ற முறையில் வளர்ந்துள்ளதையே காட்டுகிறது. இதனால் ஏழை மாநிலங்களும் மாவட்டங்களும் மற்ற பகுதிகளுக்கு இணையாக முன்னேற இன்னும் போராடி வருகின்றன. 2024-ஆம் ஆண்டின் தரவுகளின்படி, கிராமப்புறங்களில் குழந்தை இறப்பு விகிதம் (IMR) 1,000-க்கு 27-மரணங்களாக உள்ளது, ஆனால் நகர்ப்புறங்களில் இது 17-ஆக மட்டுமே உள்ளது. இந்த வேறுபாடானது மருத்துவ வசதிகளைப் பெறுதல், விழிப்புணர்வு மற்றும் தாய்ப்பால் ஊட்டச்சத்து ஆகியவற்றில் இன்னும் நீடித்து வரும் சமத்துவமின்மையைப் பிரதிபலிக்கிறது.


குழந்தை பிறப்பு விகிதம் குறித்த தரவுகளும்கூட, இந்தியா இரண்டு வெவ்வேறான நிலைகளில் இருப்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது. இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் (TFR), மக்கள்தொகை எண்ணிக்கையை நிலையாக வைத்திருக்கத் தேவையான 2.1 என்ற மாற்று நிலையைவிடக் குறைவாக, தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக 1.9 என்ற அளவிலேயே உள்ளது. நாட்டின் மிகக் குறைந்த கருவுறுதல் விகிதமாக டெல்லி 1.2 என்ற அளவைப் பதிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் 1.3 என்ற அளவில் உள்ளன. ஆனால், பீகார் மாநிலத்தின் கருவுறுதல் விகிதம் இன்னும் நாட்டின் மிக உயர்ந்த அளவாக 2.9-ஆக உள்ளது. இந்தத் தரவுகளைப் புறக்கணிப்பதன் விளைவுகள் மிகக் கடுமையானதாக இருக்கும். ஏனெனில், இந்தியாவின் மக்கள்தொகையில் தற்போது ஏறக்குறைய 10 சதவீதம் பேர் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் ஆவர். இது பொருளாதார ரீதியாக முன்னேறிய பல மாநிலங்கள் மிக வேகமாக முதியவர்கள் வாழும் மாநிலங்களாக மாறி வருவதைச் சுட்டிக்காட்டுகிறது. இந்தத் தரவுகள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பார்க்கும்போது, இந்தியா ஒட்டுமொத்தமாக ஒரே நேர்க்கோட்டில் மக்கள்தொகை ஈவுத்தொகையின் (Demographic Dividend) (அதாவது உழைக்கும் இளைஞர்கள் அதிகம் உள்ள காலம்) விளிம்பில் இருப்பதாகத் தெரியவில்லை; மாறாக, இரு வேறு வேகங்களில் பயணிக்கும் இரண்டு விதமான மக்கள்தொகை எதார்த்தங்களையே காட்டுகிறது. எனவே, கொள்கை வகுப்பாளர்கள் ஒட்டுமொத்த நாட்டின் 'சராசரி' அளவுகளை மட்டும் பார்த்துத் திருப்தியடைந்துவிடாமல், இந்த இரு வேறு எதார்த்தங்களை எதிர்கொள்ள முன்வர வேண்டும்.

Original link:

Health indicators point to gains on infant mortality, total fertility rate but large disparities remain.


Share:

டெல்லியில் இன்று 'குவாட்' வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் கூடியது: 'குவாட்' என்றால் என்ன அதன் நோக்கங்கள் யாவை?

அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு  இடையில், கடல்சார்-பாதுகாப்பு, எரிசக்தி சார்ந்த கவலைகள், முக்கிய கனிமங்கள் மற்றும் இந்தோ-பசிபிக் ஒத்துழைப்பு ஆகியவை குறித்து விவாதிக்க, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் டெல்லியில் ஒரு கூட்டமைப்பின்கீழ் சந்திக்கின்றனர். இது குறித்து தெரிந்துகொள்ள வேண்டியவை பின்வருமாறு.


குவாட் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமை அன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.  இந்த ராஜதந்திர சந்திப்பு நடைபெறுவது இது 11-ஆவது முறையாகும்.


ஹைதராபாத் இல்லத்தில் நடைபெறும் இக்கூட்டத்தை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அவர்கள் தொகுத்து வழங்குவார். இதில் ஆஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர் பென்னி வாங், ஜப்பானின் வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மொடேகி மற்றும் அமெரிக்காவின் வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்தச் சந்திப்பில் முக்கியமான கனிமங்கள், கடல்சார் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளதாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, கடல்சார் மற்றும் எரிசக்தி பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், இந்த சந்திப்பின் போது முக்கியமாகக் விவாதிக்கப்படக் கூடிய முதன்மையான பிரச்சனைகளில் ஒன்றாக இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.





குவாட் (Quad) என்றால் என்ன?


2004-ஆம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட  சுனாமியைத் தொடர்ந்து, பேரிடர் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஒரு முறைசாரா அமைப்பாக ஒன்றிணைந்தன. 2007-ஆம் ஆண்டில், அப்போதைய ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே, நாற்கர பாதுகாப்பு உரையாடல் (Quadrilateral Security Dialogue) என்ற அமைப்பின் மூலம் இந்தக் கூட்டணிக்கு ஒரு அரசியல் வடிவத்தைக் கொடுத்தார். இது பொதுவாக ‘குவாட்’ (Quad) என்று அழைக்கப்படுகிறது.


ஆனால், உறுப்பினர்களிடையே ஒருங்கிணைப்பு இல்லாததாலும், ‘Quad’ என்பது சீனாவுக்கு எதிரான ஒரு அணி என்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்ற குற்றச்சாட்டுகளாலும் இந்த  கூட்டமைப்பிற்கு  ஆரம்பகாலக் குழு தடைபட்டது. உறுப்பு நாடுகளிடையே  உத்தி சார்ந்த  முன்னுரிமைகள் வேறுபட்டதால்,  ஆரம்பக் கட்டத்திற்குப் பிறகு இந்தக் குழு படிப்படியாகத் தனது வேகத்தை இழந்தது. பின்னர் 2017-ஆம் ஆண்டில், சீனாவின் வளர்ந்து வரும் சவால்களை மீண்டும் எதிர்கொள்ளும் நோக்கில், இந்த நான்கு நாடுகளும் 'குவாட்' அமைப்பிற்கு மறுவடிவம் கொடுத்து, அதன் இலக்குகளையும் பரவலாக்கின.


இது பாரம்பரிய கூட்டணிகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?


குவாட் ஒரு பல நாடுகளை கொண்ட ஒரு வழக்கமான அமைப்பைப் போல கட்டமைக்கப்படவில்லை. மேலும், ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஐ.நா.வைப் போல இதற்கு ஒரு செயலகமோ அல்லது நிரந்தரமான முடிவெடுக்கும் அமைப்போ இல்லை. மாறாக, இது உறுப்பு நாடுகளுக்கு இடையேயான தற்போதைய ஒப்பந்தங்களை விரிவுபடுத்துவதிலும், அவற்றின் பகிரப்பட்ட கொள்கைகளை முன்னிலைப்படுத்துவதிலும் கவனம் செலுத்தியுள்ளது. மேலும், நேட்டோவைப் (North Atlantic Treaty Organization (NATO)) போல் இல்லாமல், குவாட் அமைப்பில் கூட்டுப் பாதுகாப்புக்கான விதிகள் இல்லை. அதற்குப் பதிலாக, உறுப்பு நாடுகள் தங்களின் ஒருங்கிணைப்பை வெளிப்படுத்த,   உத்திசார் உரையாடல் மற்றும் கூட்டு இராணுவப் பயிற்சிகளைச் சார்ந்துள்ளன.



உறுப்பு நாடுகள் சீனாவுடனான பொருளாதார உறவுகளையும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு குறித்த கவலைகளையும்  வெளிப்படுத்தி வரும் நிலையில், ஆய்வாளர்கள் அதன் நீண்டகால உத்திசார் ஒருங்கிணைப்பு குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர். 2017-ஆம் ஆண்டில் டிரம்பின் முதல் பதவிக்காலத்தில் குவாட் அமைப்பு புத்துயிர் பெற்றபோதிலும், உறுப்பு நாடுகள் முழுவதும் ஏற்பட்ட அரசியல்  மாற்றங்களும், சுமைப் பகிர்வு குறித்த விவாதங்களும், இந்த அமைப்பின் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையை அவ்வப்போது தூண்டி வருகின்றன. இது, இந்த அமைப்பின் வேகத்தைத் தக்கவைப்பதில் இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது.


Quad- அமைப்பின் நோக்கங்கள் யாவை?


2020-ஆம் ஆண்டில், இந்தியா-அமெரிக்கா-ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளின் மலபார் கடற்படைப் பயிற்சிகள் ஆஸ்திரேலியாவையும் உள்ளடக்கி விரிவுபடுத்தப்பட்டன. இது, 2017-ஆம் ஆண்டில் குவாட் அமைப்பு மீண்டும் தொடங்கப்பட்டதிலிருந்து அதன் முதல் அதிகாரப்பூர்வக் கூட்டமைப்பாகவும், 10-ஆண்டுகளுக்கு மேலாக இந்த நான்கு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் கூட்டு இராணுவப் பயிற்சியாகவும் அமைந்தது. மார்ச் மாதம் 2021-ஆம் ஆண்டில், குவாட் (Quad) அமைப்பு நாடுகளின் தலைவர்கள் காணொளி வாயிலாகச் சந்தித்து, பின்னர் 'The Spirit of the Quad' என்ற தலைப்பில் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டனர். அது, அந்த அமைப்பின் அணுகுமுறையையும் நோக்கங்களையும் கோடிட்டுக் காட்டியது. முதல் நேரடிக் கூட்டம் அதே ஆண்டின் பிற்பகுதியில் வாஷிங்டனில் நடைபெற்றது.


அதன் பின்னர், குவாட் அமைப்பின் செயல்திட்டம் கடல்சார் பாதுகாப்பைத் தாண்டி, முக்கிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், மீள்திறன் கொண்ட விநியோகச் சங்கிலிகள், இணையப் பாதுகாப்பு, குறைமின்கடத்தி ஒத்துழைப்பு, முக்கிய கனிமங்கள் மற்றும் எரிசக்திப் பாதுகாப்பு ஆகியவற்றை கொண்டு விரிவடைந்துள்ளது. உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் நடந்த போர்கள் உள்ளிட்ட சமீபத்திய புவிசார் அரசியல் சூழல்களும், கொரோனா பெருந்தொற்றின்போது வெளிப்பட்ட விநியோகச் சங்கிலி பாதிப்புகளும், பொருளாதார மீள்திறன் மற்றும் ராஜதந்திர ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மீது இந்த அமைப்பின் கவனத்தை கூர்மைப்படுத்தியுள்ளன.


இருப்பினும், குவாட் அமைப்பின் கண்ணோட்டத்தில் கடல்சார் பாதுகாப்பு முக்கியத்துவம்  பெற்றுள்ளது. குறிப்பாக, இந்தோ-பசிபிக் பகுதியில் அதிகரித்து வரும் பதற்றங்கள், கப்பல் போக்குவரத்தின் சுதந்திரம் குறித்த கவலைகள் மற்றும் அப்பகுதியில் சீனாவின் விரிவடைந்து வரும் இராணுவ மற்றும் கடல்சார் இருப்பு குறித்து உறுப்பு நாடுகளிடையே நிலவும்  பாதிப்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும்போது இவை முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த நான்கு நாடுகளும் பேரிடர் நிவாரணம், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறன் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு முயற்சிகள் ஆகியவற்றிலும் ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளன.


சீனா குறித்த பாதுகாப்பு கவலைகள் அதிகரித்த போதிலும், குவாட் உறுப்பு நாடுகள் இந்த அமைப்பை நேட்டோவைப் (NATO) போன்ற ஒரு முறையான இராணுவக் கூட்டணியாக மாற்றுவதைத் தவிர்த்துள்ளன. இந்த நெகிழ்வுத்தன்மை, டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றது உட்பட உறுப்பு நாடுகளுக்குள் ஏற்படும் அரசியல் மாற்றங்களை இந்தக் கூட்டமைப்பு சுமுகமாகக் கையாளுவதற்கும் உதவியாக இருந்தது.


மேலும், தென்கொரியா, நியூசிலாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட பிற நாடுகளையும் உள்ளடக்கிய 'குவாட் பிளஸ்' (Quad Plus) என்ற அமைப்பின் மூலம் தங்களது கூட்டாண்மையை விரிவுபடுத்த குவாட் (Quad) உறுப்பு நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.

Original link:

Quad foreign ministers meet in Delhi today: What is the Quad and what are its objectives?


Share:

இந்தியாவின் குறைமின்கடத்தி துறை ஊக்குவிப்பு: அதி-தீவிர புற ஊதாக் கதிர் லித்தோகிராபி மற்றும் கேலியம் நைட்ரைடு தொழில்நுட்பம்.

 தற்போதைய செய்தி ?


16-17 மே மாதம் 2026-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நெதர்லாந்து நாட்டிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டபோது, இந்தியாவின் குறைமின்கடத்தி உற்பத்தி இலக்கு ஒரு மிகப்பெரிய ஊக்கத்தைப் பெற்றது. இந்தப் பயணத்தின் போது, பிரதமர் மோடி அவர்களும் நெதர்லாந்தின் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களும் குறைமின்கடத்திகள், முக்கியமான கனிமங்கள், இடப்பெயர்வு, நீர் மேலாண்மை மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த 17 முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.



முக்கிய அம்சங்கள்:


1. குறைமின்கடத்திகளுக்கான ஒரு பெரிய மாற்றத்தின் ஒரு பகுதியாக, தோலேராவில் அமையவிருக்கும் தனது 300 மிமீ (12-அங்குல) குறைமின்கடத்தி உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கும், அதன் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் ஆதரவளிக்கும் வகையில், ‘Tata Electronics’ மற்றும் ‘Advanced Semiconductor Materials Lithography, ஆகிய நிறுவனங்களுக்கிடைய குறைமின்கடத்திகளுக்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது இந்தியாவின் குறைமின்கடத்தி உற்பத்தி இலக்குகளில் மிகப்பெரிய முன்னேற்றதை குறிக்கிறது.


2. ‘Advanced Semiconductor Materials Lithography’ நிறுவனம் ராஜதந்திர ரீதியாக ஏன் முக்கியமானது? மேம்பட்ட குறைமின்கடத்திகளை உற்பத்தி செய்யத் தேவைப்படும் மிகவும் அதிநவீன அமைப்புகளான, அதி-தீவிர புற ஊதா (extreme ultraviolet (EUV)) லித்தோகிராபி இயந்திரங்களை உற்பத்தி செய்யும் உலகின் ஒரே நிறுவனம் ‘Advanced Semiconductor Materials Lithography’ நிறுவனம் ஆகும். ‘Advanced Semiconductor Materials Lithography’ நிறுவனத்தின் இயந்திரங்கள் இல்லாமல், அதிநவீன சில்லுகளின் உற்பத்தி  ஏறக்குறைய சாத்தியமற்றதாகிவிடும்.


3. ‘Advanced Semiconductor Materials Lithography’ நிறுவனத்தின் கூற்றுப்படி, அதி தீவிர-புற ஊதா லித்தோகிராபி 13.5 நானோமீட்டர் அலைநீளம் கொண்ட ஒளியைப் பயன்படுத்தி மைக்ரோசிப்களை அச்சிடுகிறது. இது ஏறக்குறைய எக்ஸ்-கதிர் வீச்சு வரம்பிற்குச் சமமானது. லித்தோகிராபி, முறையாக 'ஒளி கல்லச்சு வரைவியல்' (photolithography’) என்று அழைக்கப்படுகிறது. அச்சிடப்பட வேண்டிய வடிவத்தின் வரைபடத்தின் (இதனை ‘மாஸ்க்’ அல்லது ‘ரெட்டிக்கிள்’ என்று அழைக்கின்றனர்) வழியாக ஒளி செலுத்தப்பட்டு இந்த வடிவங்கள் சிப்பில் உருவாக்கப்படுகின்றன. 



4. இந்தச் சிப் வடிவமைப்பு முறை ஒளியின் மூலம் குறியீடாக்கப்படுகிறது. இது கணினியின் ஒளியியல் அமைப்பை சுருக்கி, அந்த வடிவத்தை ஒளியால் பாதிக்கப்படக்கூடிய ஒரு சிப் தயாரிக்கப் பயன்படும் வட்ட வடிவ சிலிக்கான் தட்டு (Photosensitive silicon wafer)) மீது துல்லியமாகக் குவிக்க உதவுகிறது. ஒரு முறை வடிவமைப்பு அச்சிடப்பட்ட பிறகு, கணினி அந்த சிலிக்கான் தட்டை லேசாக நகர்த்தி, அதன் மீது மற்றொரு நகலை அச்சிடுகிறது.


5. அதி-தீவிர புற ஊதாக் கதிர் தொழில்நுட்பம் (extreme ultraviolet (EUV)), மூரின் விதியை (Moore’s Law) பின்பற்றி முன்னெடுத்துச் செலுத்துவதோடு, புதுமையான மின்பெருக்கி (transistor) வடிவமைப்புகள் மற்றும் சிப் கட்டமைப்புகளுக்கும் ஆதரவளிக்கிறது. 1965-ஆம் ஆண்டில், ‘Intel’ நிறுவனத்தின் இணை நிறுவனர் கார்டன் மூர், ஒரு மைக்ரோசிப்பில் உள்ள மின்பெருக்கிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதைக் கவனித்தார்.



6. அடுத்த பத்து ஆண்டுகளில் ஒரு மைக்ரோசிப்பில் உள்ள மின்பெருக்கிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் இரட்டிப்பாகும் என்று அவர் கணித்தார். பின்னர் 1975-ஆம் ஆண்டீல், இதனை ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் ஒருமுறை என அவர் மாற்றியமைத்தார். இவருடைய இந்தக் கணிப்புதான் 'மூரின் விதி' (Moore’s Law) என்று அழைக்கப்படுகிறது.


மின்பெருக்கிகள் என்பவை ஒருங்கிணைந்த மின்சுற்றுகள் (Integrated Circuits (IC)) மற்றும் மைக்ரோசிப்புகளின் மிக முக்கியமான அடிப்படை அமைப்புகள் ஆகும். அவை மின் சமிக்ஞைகளின் (Electrical signals) ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும் மிக நுண்ணிய மின்னணு நிலைமாற்றிகள் அல்லது பெருக்கிகள் (Amplifiers) ஆகும்.  இவை சிப்கள் தகவல்களைச் செயலாக்கவும் சேமிக்கவும் உதவுகின்றன. இவை சிலிக்கான் போன்ற குறைமின்கடத்தி பொருட்களால் செய்யப்படுபவை.


7. மூரின் விதி என்பது இயற்பியல் மற்றும் வேதியியலில் நாம் அறிந்த ஒரு இயற்கை விதி அல்ல. ஆனால், அது தொழில்நுட்ப வளர்ச்சியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இன்று, ஒரு சிப்பில் உள்ள மின்பெருக்கிகளின் எண்ணிக்கையைத் தொடர்ந்து இரட்டிப்பாக்குவதன் மூலம், சில்லு தயாரிப்பாளர்கள் ஒவ்வொரு புதிய தலைமுறை சிப்பிலும் குறைந்த செலவில் அதிக செயல்திறனை வழங்கி வருகின்றனர்.


8. இதைச் சாத்தியமாக்க, மேம்பட்ட சிப் செயல்திறனை வழங்குவதற்காக, சிப் தயாரிப்பாளர்கள் அரிதான மூலப்பொருட்கள், மேம்பட்ட பேக்கேஜிங் தொழில்நுட்பங்கள் மற்றும் மிகவும் சிக்கலான 3D வடிவமைப்புகளை அதிகளவில் சார்ந்துள்ளனர். இங்குதான் அதி-தீவிர புற ஊதாக் கதிர் (extreme ultraviolet (EUV)) லித்தோகிராஃபி முக்கியப் பங்கு வகிக்கிறது. இது சிப் தயாரிப்பாளர்கள் மிகக் குறைந்த செலவில் சிப்பின் அளவைச் சுருக்க உதவுகிறது மற்றும் குறைமின்கடத்தித் துறை தொடர்ந்து மூரின் விதியைப் பின்பற்றி முன்னேற வழிவகுக்கிறது.






இந்தியா-நெதர்லாந்து சந்திப்பின் முக்கிய விளைவுகள் என்னென்ன?


1. இந்தியாவும் நெதர்லாந்தும் தங்களுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை ஒரு 'உத்திசார் கூட்டாண்மையாக' உயர்த்துவதற்கு முடிவு செய்துள்ளன. இதற்காக, ஐந்து ஆண்டுகால (2026-30) விரிவான ஒரு கூட்டுச் செயல்பாட்டுத் திட்டத்திற்கு இருநாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன.


2. இரு நாடுகளும்  குறைமின்கடத்தி (Semiconductor) ஆராய்ச்சித் துறையில் “புதிய அறிவுப் பாலம்” (Brain Bridge) ஒன்றை உருவாக்கியுள்ளன. இதற்காக ஐந்தோவன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், ட்வென்டே பல்கலைக்கழகம் மற்றும் இந்தியாவின் ஆறு முன்னணி கல்வி நிறுவனங்களான இந்திய அறிவியல் கழகம், பெங்களூரு (Indian Institute of Science, Bangalore), இந்திய தொழில்நுட்பக் கழகம், மும்பை (Indian Institute of Technology, Bombay) இந்திய தொழில்நுட்பக் கழகம், டெல்லி, இந்திய தொழில்நுட்பக் கழகம், காந்திநகர், இந்திய தொழில்நுட்பக் கழகம், கவுகாத்தி மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகம், மதராஸ் ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.


3. பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பைப் பொறுத்தவரை, பாதுகாப்புத் தொழில் மற்றும் ஆராய்ச்சி மையங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு உட்பட, இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பை ஒருங்கிணைப்பதற்காக, பாதுகாப்பு அமைச்சகங்கள் மற்றும் சர்வதேச இராணுவ ஒத்துழைப்பு இயக்குநரகங்களுக்கு இடையே ஒரு முறையான "முப்படை கூட்டுத் தொடர்பை" திட்டமிட அவர்கள் ஒப்புக்கொண்டனர்.


4. இடப்பெயர்வு ஒப்பந்தம் குறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், சட்டவிரோதமாகப் குடியேறுவது மற்றும் மனிதக் கடத்தலைத் தடுப்பதற்கும், அவற்றுக்கு எதிராகப் போராடுவதற்கும் இருநாடுகளும் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒப்புக்கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது. அதேவேளையில், அதிகத் திறமை வாய்ந்த நிபுணர்களின் முறையான மற்றும் நியாயமான இடப்பெயர்வை ஊக்குவிக்கவும் இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.




கேலியம் நைட்ரைடு தொழில்நுட்பம்


1. இந்த மாதத் தொடக்கத்தில், ஒன்றிய அமைச்சரவை இந்தியாவில் இரண்டு புதிய குறைமின்கடத்தி ஆலைகளுக்கு ஒப்புதல் அளித்தது. அவற்றில் ஒன்று, நாட்டின் முதல் திரை தயாரிப்பு ஆலையாக அமையக்கூடும். இவற்றுடன், குஜராத், அசாம், ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களில் இந்திய குறைமின்கடத்தி இயக்கத்தின் (India Semiconductor Mission (ISM)) முதல் கட்டத்தின்கீழ் மொத்தம் 12 சிப் ஆலைகளுக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.


2021-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்திய குறைமின்கடத்தி இயக்கத்தின் 1.0, முதல் கட்டமானது உற்பத்தி மற்றும் திரை உற்பத்தி வரை ஒரு முழுமையான சிப் சூழலமைப்பை உருவாக்குவதற்கான அரசின் ஆதரவுடனான ஒரு முயற்சியாகக் கருதப்பட்டது. இது, சிப்களை உற்பத்தி செய்யக்கூடிய  உள்கட்டமைப்பை அமைப்பதில் கவனம் செலுத்துகிறது. டாடா குழுமத்தால் அமைக்கப்படும் ஒரு உற்பத்தி ஆலை முதல், ‘Micron Technology’, ‘Tatas’, ‘CG Power’, and ‘Kaynes Semicon’, போன்ற நிறுவனங்களின் பொருத்துதல், சோதனை மற்றும் பேக்கேஜிங் ஆலைகள் வரை, சிப்களை உற்பத்தி செய்யக்கூடிய இயற்பியல் உள்கட்டமைப்பை அமைப்பதில் கவனம் செலுத்துகிறது.


பிப்ரவரி மாதம் 2026-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்திய குறைமின்கடத்தி இயக்கம் 2.0, தற்போது அரசாங்கம் தனது கவனத்தை உற்பத்தி ஆலைகளைத் தாண்டி மற்றவைகளை விரிவுபடுத்திக்கொள்ள வழிவகுக்கிறது. இது குறைமின்கடத்தி உபகரணங்கள், மூலப்பொருட்கள், வேதிப்பொருட்கள், வடிவமைப்பு கருவிகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D), பயிற்சி மற்றும் விநியோகச் சங்கிலி உறுதித்தன்மை ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.


2. ‘Crystal Matrix Ltd’ நிறுவனத்தால் மினி/மைக்ரோ-எல்இடி (Mini/Micro-LED - Light Emitting Diode) டிஸ்ப்ளே மாடல்களை தயாரிப்பதற்காக, கேலியம் நைட்ரைடு  (Gallium Nitride (GaN)) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ரூ. 3,068 கோடி மதிப்பிலான 'கூட்டு குறைமின்கடத்தி உற்பத்தி மற்றும் பொருத்துதல்'  ஆலைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


3. குறைமின்கடத்திகள் சிலிக்கான் போன்ற பொருட்களால் ஆனவை மற்றும் ஒரு கடத்திக்கும் ஒரு மின்காப்புப் பொருளுக்கும் இடைப்பட்ட மின் கடத்துத்திறனைக் கொண்டுள்ளன. குறைமின்கடத்திகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் கூறு சிலிக்கான் ஆகும்.


4. கடந்த சில ஆண்டுகளில், மற்றொரு குறைமின்கடத்தியான கேலியம் நைட்ரைடு (GaN), அதிக சக்தி மற்றும் உயர் அதிர்வெண் பயன்பாடுகளுக்கு மிகவும் முக்கியமானதாக இருப்பதால், மின்னணுவியலில் தனக்கான இடத்தைப் பெற்று வருகிறது.


5. கேலியம் நைட்ரைடு (GaN) என்பது சிலிக்கானுக்கு ஒரு சிறந்த மாற்றாகக் கருதப்படும் ஒரு பொருளாகும். சிலிக்கானுடன் ஒப்பிடும்போது, இது நீண்டநேரத்திற்கு அதிக மின்னழுத்தத்தைக் கடத்துவதில் மிகவும் சிறந்தது. மேலும், இது மின்சாரம் வேகமாகப் பாய்வதற்கும் அனுமதிக்கிறது.


6. கேலியம் நைட்ரைடு மிகக் குறைவான வெப்பத்தையே வெளியிடுவதால், இதன் கட்டமைப்புகளை மற்ற பொருட்களுடன் ஒப்பிடும்போது மிகவும் நெருக்கமாக அடுக்க முடியும். இதன் காரணமாக ஒட்டுமொத்த சாதனத்தின் அளவும் மிகவும் சிறியதாக இருக்கும்.














குறைமின்கடத்தி ஆலை

இடம்

டாடா எலக்ட்ரானிக்ஸ் குறைமின்கடத்தி ஆலை

குஜராத்

மைக்ரான் தொழில்நுட்பம்

குஜராத்

கெய்ன்ஸ் குறைமின்கடத்தி

குஜராத்

சிஜி குறைமின்கடத்தி

குஜராத்

கிரிஸ்டல் மேட்ரிக்ஸ்

குஜராத்

சுச்சி செமிகான்

குஜராத்

டாடா எலக்ட்ரானிக்ஸ் அசெம்பிளி யூனிட்

அஸ்ஸாம்

எச்.சி.எல்-ஃபாக்ஸ்கான்

உத்தரப் பிரதேசம்

SIC குறைக்கடத்தி

ஒடிசா

3D கண்ணாடி தீர்வுகள்

ஒடிசா

தொகுப்பு தொழில்நுட்பங்களில் மேம்பட்ட அமைப்பு

ஆந்திர பிரதேசம்

கான்டினென்டல் சாதனம்

பஞ்சாப்

Original link:

India’s semiconductor push: EUV lithography and GaN technology.


Share: