உற்பத்தித் துறை அமைப்புகளுடன் செயற்கை நுண்ணறிவை இணைத்தல். -விபின் சோந்தி மற்றும் ஜி சுந்தரராமன்

 தொழில்துறை சூழலை உருவாக்குவதற்காக உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை (Production Linked Incentive (PLI)) திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்வதும், திறமையான ஊழியர்களை உருவாக்குவதற்காக செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence (AI)) மற்றும் உற்பத்தித் துறை அமைப்புகளை ஒன்றிணைப்பதும் மிகவும் அவசியமானதாகும்.


ஹரியானாவின் மானேசரில் உள்ள ஒரு நடுத்தர அளவிலான வாகன உதிரிபாகத் தொழிற்சாலையின் பொருட்கள் அனுப்பும் பிரிவிற்குள் நடந்து சென்று, அங்கிருக்கும் ஆலை மேலாளரிடம், உங்களுக்கு இப்போது இருக்கும் மிகப்பெரிய கவலை என்ன? என்று ஒரு வருடத்திற்கு முன்பு கேட்டிருந்தால், அவர் வேறு ஒரு பதிலைச் சொல்லியிருப்பார். அப்போதெல்லாம் அவரது கவலை உற்பத்தித் திறனைப் பற்றியதாக மட்டுமே இருந்தது. அதாவது, தொழிற்சாலையினால் உற்பத்தி செய்ய முடிந்ததைவிட அதிக வர்த்தக ஆணைகள் வந்துகொண்டிருந்தன. ஆனால் இன்று, கவலை முற்றிலும் மாறிவிட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) 'கார்பன் எல்லை வரி ஒழுங்குமுறை' (Carbon Border Adjustment Mechanism (CBAM)) விதிகளின்படி, நீண்டகாலமாக இந்தியாவிடம் வாடிக்கையாளராக இருக்கும் ஒரு ஐரோப்பிய நிறுவனம், இப்போது ஒவ்வொரு ஏற்றுமதிக்கும் முழுமையான 'கார்பன் தடம் கண்டறியும் தரவு' (Carbon traceability data) அதாவது, உற்பத்தி செய்யும்போது எவ்வளவு கார்பன் வெளியேறியது என்ற விவரம் கேட்கிறது. தொழிற்சாலையினால் பொருட்களைத் தயாரிக்க முடியும், ஆனால் அதற்கான ஆதாரத்தை இன்னும் வழங்க முடியவில்லை. இன்றைய உலகளாவிய உற்பத்தித் துறையில், விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பதை நிரூபிக்க முடியாமல் போவது என்பது, பொருளைத் தயாரிக்கவே தகுதியில்லாமல் போவதற்குச் சமமாக மாறி வருகிறது.


இது ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல. வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் கார்பன் கொள்கைகள் இனிமேல் சாதாரண விஷயங்கள் அல்ல. அவை சர்வதேச சந்தைகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பைத் தீர்மானிக்கின்றன. உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளில் பங்குபெறுவதற்கான விதிகளை வகுக்கின்றன. மேலும், எந்த நாடுகள் தங்களின் தொழில்துறை சுதந்திரத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பதை முடிவு செய்கின்றன. இப்போது இந்தியாவிற்கு முன் இருக்கும் முக்கியக் கேள்வி என்னவென்றால், இந்த புதிய வர்த்தக முறைக்குத் தேவையான தகுதிகளையும் அமைப்புகளையும் இந்தியாவால் உருவாக்க முடியுமா, அல்லது அதற்கு ஆதரவளிக்கும் உள்கட்டமைப்புகள் பின்தங்கியிருக்கும் போதே உற்பத்தியை மட்டும் தொடர்ந்து விரிவுபடுத்திக் கொண்டிருக்கப் போகிறதா என்பதுதான்.


நிஜ உலகோடு தொடர்பு கொள்ளும் செயற்கை நுண்ணறிவை நோக்கி நகர்தல்


செயற்கை நுண்ணறிவு (AI) என்பது, சமீபகாலம் வரை பெரும்பாலும் உள்ளடக்க உருவாக்கம், சில்லறை வர்த்தகம் மற்றும் மென்பொருள் போன்ற துறைகளில், கணினி அல்லது திறன்பேசி திரைகளுக்குள் மட்டுமே அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், இப்போது நிலைமை மாறிவருகிறது. செயற்கை நுண்ணறிவின் அடுத்த கட்டம் என்பது நிஜ உலகைச் சார்ந்தது (Physical AI) ஆகும். இது தொழிற்சாலைகள், தளவாடப் போக்குவரத்து, மின்சார விநியோகக் கட்டமைப்பு மற்றும் விநியோகச் சங்கிலிகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. இந்தத் துறைகளில் மென்பொருளும் இயந்திரங்களும் எந்தவிதத் தடங்கலும் இல்லாமல், நம்பகத்தன்மையுடன் இணைந்து செயல்பட வேண்டும். இது ஏதோ எதிர்காலத்தில் நடக்கப்போகும் விஷயம் அல்ல. உலகில் மிகக் கடுமையான போட்டி நிலவும் உற்பத்தித் துறை சார்ந்த பொருளாதார நாடுகளில் இது ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிறது. தற்போதைய நிலையில் இந்தியாவிலும் இந்தத் தொழில்நுட்பம் படிப்படியாக உருவெடுத்து வருகிறது.


இதன் பயன்பாடுகள் மிகவும் நடைமுறைக்குரியவை மற்றும் உண்மையானவை. முன்கூட்டியே கணிக்கும் பராமரிப்பு அமைப்புகள் (Predictive maintenance systems), இயந்திரங்கள் பழுதடைவதற்கு முன்பே அவற்றிலுள்ள சிக்கல்களைக் கண்டறிந்துவிடும். ‘ஒரு தொழிற்சாலையின் டிஜிட்டல் மாதிரி’ (Digital twins) தொழில்நுட்பம், நிஜமாகப் பண முதலீடு செய்து தொழிற்சாலையைக் கட்டுவதற்கு முன்பாகவே, அதை டிஜிட்டல் முறையில் இயக்கிச் சோதித்துப் பார்க்க உதவுகிறது. ‘கணினி வழிப் பார்வை’ (Machine vision) தொழில்நுட்பம், மனிதர்களின் முடிவை மட்டும் நம்பியிருக்காமல், உற்பத்திப் பொருட்களின் தரத்தை உடனுக்குடன் துல்லியமாகச் சரிபார்க்கிறது. ஆற்றல் மேலாண்மை வழிமுறைகள், தொழிற்சாலைகளின் மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்க உதவுவதோடு, கார்பன் உமிழ்வு விதிகளைப் பின்பற்றவும் துணைநிற்கின்றன. இந்த வகையான பயன்பாடுகளுக்குப் புதிய அல்லது அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) ஆராய்ச்சிகள் தேவையில்லை. ஏற்கனவே வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்ட தொழில்நுட்பங்களைச் சரியாகப் பயன்படுத்தினாலே போதுமானது என்கின்றனர்.


இங்கே உள்ள முக்கியப் பிரச்சினை விழிப்புணர்வு இல்லாமை அல்ல, மாறாக இந்தத் தொழில்நுட்பங்களை எவ்வளவு தூரம் முழுமையாகப் பயன்படுத்துகிறார்கள்  என்பதில்தான் உள்ளது. இந்தியாவில் உள்ள சில பெரிய வாகன உற்பத்தி (Automotive) மற்றும் பொறியியல் (Engineering) நிறுவனங்கள் ஏற்கனவே இந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. இருப்பினும், இந்த ஆரம்பகாலப் பயனர்களுக்கும், ஒட்டுமொத்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் (Micro, Small and Medium Enterprises (MSME)) இடையே இன்னும் பெரிய இடைவெளி உள்ளது. உதாரணமாக, மூன்று சுழற்சி முறையில் இயங்கும் ஒரு நடுத்தர அளவிலான உதிரிபாகத் தயாரிப்பு நிறுவனம், இயந்திரங்கள் பழுதடைவதை முன்கூட்டியே கணித்து பராமரிக்கும் தொழில்நுட்பத்தின் (Predictive maintenance) நன்மைகளைப் புரிந்து வைத்திருக்கலாம். ஆனால், பழைய உபகரணங்கள், வெவ்வேறு வகையான தரவு அமைப்புகள் மற்றும் இந்தத் தொழில்நுட்பங்களை நிர்வகிப்பதற்கான சொந்த நிபுணத்துவம் இல்லாததால், அதைச் செயல்படுத்துவது அந்நிறுவனங்களுக்கு கடினமாக உள்ளது. வணிகங்களுக்கு இடையே வர்த்தகம் நடக்கும் (Business-to-Business (B2B)) தொகுப்புகளில், அதாவது வார்ப்பாலைகள் (Foundries) மற்றும் இயந்திரப் பட்டறைகள் (Machining shops) போன்ற இடங்களில்தான், புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதில் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. அதே நேரத்தில், போட்டி காரணமாக ஏற்படும் ஆபத்தும் இந்தத் தொழில்நிறுவன முறையில் அதிகமாக உள்ளது.


சுற்றுச்சூழல் கட்டாயம்


உற்பத்தித் துறையில் போட்டித்திறன் என்பது ஒரு தனி நிறுவனத்தால் மட்டுமே எளிதில் சாதிக்கக்கூடிய ஒன்று அல்ல. அது ஒட்டுமொத்த உற்பத்திச் சூழல் அமைப்பால் உருவாக்கப்படுகிறது. சீனாவின் ஷென்சென் (Shenzhen) நகரில், ஒரு புதிய வன்பொருள் மாதிரி (Hardware prototype) ஒரு சில நாட்களிலேயே யோசனையிலிருந்து மேம்பட்ட வடிவமாக மாறிவிடுகிறது. இதற்கு அங்குள்ள ஏதோ ஒரு தனிச்சிறப்பான தொழிற்சாலை மட்டும் காரணம் அல்ல; மாறாக, விநியோகஸ்தர்கள், கருவிகளை வடிவமைக்கும் நிபுணர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் செயல்முறை பொறியாளர்கள் என அனைவரும் ஒரு நெருக்கமான பிணைப்பாக இணைந்து செயல்படுவதும், அவர்களிடையே அறிவு மற்றும் தகவல்கள் மிக வேகமாகப் பகிர்ந்துகொள்ளப்படுவதுமே இதற்குக் காரணம் ஆகும்.


இந்தியாவிலும் இதற்கு இணையான உதாரணங்கள் உள்ளன. புனே மற்றும் சென்னையில் உள்ள வாகன உதிரிபாகக் கூட்டமைப்புகள், திருப்பூரில் உள்ள பின்னலாடை உற்பத்திச் சூழல், மற்றும் தமிழ்நாடு மற்றும் தெலங்கானாவில் வளர்ந்து வரும் மின்னணுவியல் மையங்கள் ஆகியவற்றை இதற்குச் சான்றாகக் கூறலாம். ஆனால், இங்குள்ள முக்கியக் கேள்வி என்னவென்றால், இந்த உற்பத்தி மையங்கள் தங்களின் புவிசார் நெருக்கம்கொண்ட சூழலை, நீண்டகாலப் பலனாக மாற்றுவதற்குத் தேவையான நிறுவன வலிமையை உருவாக்கி வருகின்றனவா என்பதுதான். இதில் பொதுவான சோதனைக்கூட வசதிகள் (Shared testing facilities), திறன்பயிற்சி அமைப்புகள், தர நிர்ணய அமைப்புகளில் தொழில்துறையினரின் தீவிரப் பங்கேற்பு மற்றும் தொழிற்சாலைகளின் கள நிலவரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவை அடங்கும். இந்த அம்சங்கள் இல்லையென்றால், ஒரு உற்பத்தி மையம் என்பது வெறும் குறிப்பிட்ட இடத்தில் குவிந்திருக்கும் ஒரு தொழிற்சாலைகளின் கூட்டமாக மட்டுமே இருக்குமே தவிர, உண்மையான ஒரு தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பாக இருக்காது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.   


தரநிலைகள் தொடர்பான விஷயத்திற்கு தனிக் கவனம் செலுத்த வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தின் 'கார்பன் எல்லை வரி ஒழுங்குமுறை' (CBAM) மற்றும் 'டிஜிட்டல் தயாரிப்பு அடையாளம்' (Digital Product Passport (DPP)) போன்ற நடவடிக்கைகள் வெறும் நிர்வாக நடைமுறைகள் மட்டுமே அல்ல.                                  அவை உலகளாவிய சந்தைகளை அணுகுவதற்கான ஒரு புதிய விதியாகவே மாறி வருகின்றன. இந்தத் தரநிலைகளை உருவாக்கத் துணையாக இருக்கும் நாடுகளும் அமைப்புகளும், உலகளாவிய வர்த்தகத்தின் மீது அதிக செல்வாக்கைப் பெறுகின்றன. பன்முகப்படுத்தப்பட்ட உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் இந்தியா ஒரு நம்பகமான வர்த்தக நாடாக மாற வேண்டுமானால், மற்றவர்கள் உருவாக்கும் தரநிலைகளைப் பின்பற்றுவதை நிறுத்த வேண்டும். அதற்குப் பதிலாக, சர்வதேச தரநிர்ணய அமைப்புகள், வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மற்றும் மதிப்புச் சங்கிலி வடிவமைப்பு ஆகியவற்றின் மூலம் இந்த விதிகளை உருவாக்குவதில் இந்தியா தீவிரமாகப் பங்கேற்க வேண்டும்.


பலவீனங்கள்


இந்தியாவிற்கு இருக்கும் உண்மையான ஆபத்து, இந்த உற்பத்தித் துறை வாய்ப்பைத் தவறவிடுவது அல்ல. உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், சர்வதேச நிறுவனங்களின் "சீனாவை மட்டுமே நம்பியிருக்காமல் மற்றுமொரு நாட்டைத் தேடும்" (China-plus-one) உத்தி, மற்றும் மேற்கத்திய நாடுகளின் "நட்பு நாடுகளுடன் மட்டும் வர்த்தகம் செய்யும்" (Friend-shoring) அணுகுமுறை ஆகிய அனைத்தும் சேர்ந்து, இந்தியா ஒரு முதன்மையான உற்பத்தி மையமாக மாறுவதற்கான வலுவான தேவையை உருவாக்கியுள்ளன. இந்த சாதகமான வாய்ப்பு என்பது முற்றிலும் உண்மையானது. ஆனால், உண்மையான ஆபத்து எங்குள்ளது என்றால் — உற்பத்திக்குத் தேவையான பின்னணி ஆதரவு அமைப்புகளை மேம்படுத்தாமல், வெறும் உற்பத்தித் திறனை மட்டும் அதிகரிப்பதுதான். அப்படிச் செய்தால், அது நிலையான மற்றும் பலமான வளர்ச்சிக்கு வழிவகுக்காமல், ஒரு தற்காலிக வளர்ச்சிக்கு மட்டுமே வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.


பெரும்பாலான உற்பத்தி அமைப்புகள் ஆரம்பத்தில் தங்களிடம் ஏற்கனவே உள்ள வளங்களை சிறப்பாகப் பயன்படுத்துவதன் மூலமே வளர்ச்சியடைகின்றன. அதாவது கூடுதல் பணிநேரங்கள் (Shifts) வேலை செய்வது, இயந்திரங்களின் பயன்பாட்டை அதிகரிப்பது மற்றும் மேலாளர்களின் பொறுப்புகளை விரிவாக்குவது போன்ற வழிகளில் வளர்கின்றன. இது பயன்படுத்தப்படாமல் இருக்கும் உற்பத்தித் திறனை திறம்படக் கையாள உதவுகிறது. இருப்பினும், ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டும்போது, பொறுப்புக்கூறல் தெளிவற்றதாகிவிடுகிறது, குளறுபடிகள் அதிகரிக்கின்றன, மேலும் வாடிக்கையாளர்களுடன் கட்டியெழுப்பப்பட்ட நம்பிக்கையை விரைவாக இழக்க நேரிடும். தங்களுடைய சொந்தக் கட்டுபாட்டு விதிமுறைகளைப் பூர்த்தி செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் உலகளாவிய வாடிக்கையாளர்கள், இதுபோன்ற முரண்பாடுகளைப் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.


மோசமாக வடிவமைக்கப்பட்ட இயங்குதளங்களில் (Operating Systems), செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை முதலீடு செய்து பயன்படுத்துவது இந்தச் சிக்கல்களுக்குத் தீர்வாகாது. மாறாக, அது அந்த இயங்குதளங்களில் ஏற்கனவே இருக்கும் பலவீனங்களை அதிகரிக்கும் என்கின்றனர்.


அடுத்தகட்ட நடவடிக்கை


இந்தியா இந்த மாற்றுக் காலகட்டத்திற்குள் சில உண்மையான கட்டமைப்புச் சாதகங்களுடன் நுழைகிறது. ஒரு பெரிய பொறியியல் தளம், டிஜிட்டல் தொழில்நுட்பங்களை மிகப்பெரிய அளவில் வெற்றிகரமாகச் செயல்படுத்திக் காட்டிய திறன், மற்றும் வாகன உற்பத்தி, மருந்துகள், மின்னணுவியல் மற்றும் பாதுகாப்புத் துறை ஆகியவற்றில் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளுடன் ஆழமாகத் தன்னை இணைத்துக் கொண்டிருப்பது ஆகியவை இந்தக் கட்டமைப்புச் சாதகங்கள் ஆகும்.


இந்தச் சாதகங்களை நிலையான தொழில்துறை சுயசார்பு நிலையாக மாற்றுவதற்கு மூன்று குறிப்பிட்ட மாற்றங்கள் தேவைப்படுகின்றன. முதலாவதாக, உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை (PLI) திட்ட அமைப்பு வெறும் உற்பத்தி அளவிற்கான ஊக்கத்தொகைகளை வழங்குவதைத் தாண்டி அடுத்த கட்டத்திற்கு வளர வேண்டும். ஏனெனில், உற்பத்தி அளவை அடிப்படையாகக் கொண்ட மானியங்கள் அவற்றின் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டன. அடுத்த கட்டமானது ஒட்டுமொத்த உற்பத்திச் சூழல் உருவாக்கத்திற்கு வெகுமதி அளிப்பதாக இருக்க வேண்டும். அதாவது, உள்ளூர் விநியோகஸ்தர்களின் பலம், பொதுவான உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத் தொழிலாளர்களை உருவாக்குதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.


இரண்டாவது, ஆராய்ச்சித் திறனுக்கும் தொழில்முறை பயன்பாட்டிற்கும் இடையே உள்ள இடைவெளியைக் கூட்டு-நிதி வழிமுறைகள் மற்றும் பகிரப்பட்ட பொறுப்புக்கூறல் மூலம் சரிசெய்ய வேண்டும். மத்திய உற்பத்தித் தொழில்நுட்ப நிறுவனம் (Central Manufacturing Technology Institute (CMTI)) மற்றும் பயன்பாட்டு நுண்ணலை மின்னணு பொறியியல் மற்றும் ஆராய்ச்சி சங்கம்  (Society for Applied Microwave Electronics Engineering & Research (SAMEER)) போன்ற தேசிய ஆய்வகங்கள் சிறந்த தொழில்நுட்பத் திறனைக் கொண்டுள்ளன. ஆனால் அவை தொடர்ந்து உற்பத்தித் தரத்திலான கருவிகளாக மாற்றப்படுவதில்லை. இங்கு விடுபட்ட புள்ளி அறிவியல் அல்ல; மாறாக, முன்மாதிரிகளை (Prototypes) தொழில்நுட்பத் தயார்நிலை மட்டம் 4-லிருந்து (Technology Readiness Level 4 (TRL 4)) தொழில்நுட்பத் தயார்நிலை மட்டம் 7-க்கு (Technology Readiness Level 7 (TRL 7)) கொண்டு செல்லத் தயாராக இருக்கும் தொழில்முறை கூட்டமைப்புகள்தான்  தற்போதைய முதன்மைத் தேவையாக உள்ளது.


மூன்றாவது, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் நிஜ உலக செயல்பாட்டு அமைப்புகளின் இணைப்பை, இந்தியா தனது மனிதவளத் திறனை மேம்படுத்துவதற்கான ஒரு முதன்மை முன்னுரிமையாகக் கருதவேண்டும். வழிமுறைகள் மற்றும் பொருள்சார் அமைப்புகள், அதாவது வெப்ப இயக்கவியல் (Thermodynamics), ரோபாட்டிக்ஸ் (Robotics), மற்றும் நம்பகத்தன்மை பொறியியல் (Reliability engineering) ஆகிய இரண்டையும் திறம்பட கையாளத் தெரிந்த பொறியாளர்கள்தான், அடுத்த தொழிற்புரட்சி யுகத்தை எந்த நாடுகள் வழிநடத்தும் என்பதைத் தீர்மானிப்பார்கள். சரியாக இப்படிப்பட்ட திறமையாளர்களைத்தான் இந்தியா உருவாக்குகிறது. ஆனால், கேள்வி என்னவென்றால், அந்தத் திறமையை சொந்த நாட்டிலேயே பயன்படுத்துவதற்கான நிறுவனரீதியான சூழல்களும் வசதிகளும் இந்தியாவில் இருக்கிறதா என்பதுதான்.



ஒரு தொழிற்சாலை, எவ்வளவு கார்பன் உமிழ்வை வெளியிடுகிறது என்பதைக் துல்லியமாகக் கண்டறிவதும், இயந்திரங்களில் ஏற்படும் பழுதுகளை முன்கூட்டியே கணிப்பதும், உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளில் தடையின்றி தன்னை இணைத்துக் கொள்வதும் இன்றியமையாதது ஆகும். இன்றைய தேதியில், முக்கியமான உற்பத்திப் பொருட்களை வாங்கும் உலகளாவிய நிறுவனங்கள் ஒரு தொழிற்சாலையிடம் எதிர்பார்க்கும் குறைந்தபட்ச அடிப்படைத் தகுதி ஆகும். 


எனவே, ஒரு நாட்டின் பெரிய அளவிலான வளர்ச்சி அதன் சந்தையை வலுப்படுத்தும் அதே வேளையில், அதன் தனித்துவமான கட்டமைப்புதான் அதற்கு முழுமையான தன்னாட்சி அதிகாரத்தையும் தேடித்தரும்  என்கின்றனர்.


சோந்தி, 'Global – India' அமைப்பின் இயக்குநராக உள்ளார். இவர் ‘Ashok Leyland’ மற்றும் ‘JCB India’ ஆகிய நிறுவனங்களின் முன்னாள் நிர்வாக இயக்குநராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்தவர் ஆவார். சுந்தரராமன், ‘Wipro Research’ அமைப்பின் தலைமை விஞ்ஞானியும் தலைவரும் ஆவார்.


Original article : Welding AI with manufacturing systems. -Vipin Sondhi and G Sundararaman

Share:

இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டுமா அல்லது வங்கிகள் பெரிய அளவில் வைப்புத்தொகையைத் திரட்ட வேண்டுமா: 'மதிப்பு குறைந்துள்ள' இந்திய ரூபாய்க்கு எது தேவை? -சித்தார்த் உபாசனி

 இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவது, 'மூலதனப் புழக்கத்தில்' (Capital flows) உள்ள ஒரு பிரச்சனையாகக் கருதப்படுகிறது. ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக இந்தியாவுக்குள் வெளிநாட்டு மூலதனம் ஈர்க்கப்பட்டதற்கு, இந்தியாவின் உள்நாட்டுத் தனிச்சிறப்பு மட்டும் காரணமல்ல; உலகளவில் வட்டி விகிதங்கள் குறைவாக இருந்ததே முதன்மைக் காரணம் ஆகும்.


இந்திய ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India (RBI)) நாணயக் கொள்கைக் குழு (Monetary Policy Committee (MPC)) தனது மூன்று நாள் கூட்டத்தை புதன்கிழமை தொடங்கியது. இக்குழு தனது கொள்கை ரெப்போ விகிதத்தை (Repo rate) 5.25%-ஆக தக்கவைத்துக் கொள்ளும் என்று பெரும்பாலானோர் எதிர்பார்த்தாலும், ஒரு சிறிய தரப்பினர் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளதாகக் கணித்துள்ளனர். ரூபாய் மதிப்பு கடுமையான அழுத்தத்தில் இருப்பதாலும், பணவீக்கம் மேலும் அதிகரித்துவிடக் கூடாது என்பதை முன்கூட்டியே தடுத்து நிறுத்துவதற்காகவும் வெள்ளிக்கிழமை இந்த வட்டி உயர்வு அறிவிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.


ரெப்போ விகிதம் (Repo Rate): வணிக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம். 


நீண்டகாலம் நிலையாக இருந்த பிறகு, கடந்த ஓராண்டாக மாற்று விகிதம் (Exchange rate) ஒரு பெரிய கவலையாக மாறியுள்ளது. இந்திய நாணயத்தின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதில் உடனடி மற்றும் எதிர்கால வர்த்தகச் சந்தைகளில் (Spot and forward markets) ) வெளிநாட்டு நாணயங்களை விற்பது, நாணயப் பரிமாற்ற வாய்ப்புகள் மற்றும் ஏலங்களை (Swap windows and auctions) வழங்குவது, நாணய மதிப்பை வைத்து லாபம் பார்க்க நினைக்கும் வணிகத்தைக் கட்டுப்படுத்த விதிகளைக் கடுமையாக்குவது மற்றும் வெளிநாட்டுச் செலாவணி இருப்பைப் (Foreign exchange reserves) பாதுகாப்பதற்காகத் தங்கத்தை விற்பது போன்ற நடவடிக்கைகள் போன்றன அடங்கும். 


2013-ஆம் ஆண்டில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்திய ரூபாயின் மதிப்பை வீழ்ச்சியடையாமல் பாதுகாப்பதற்காக வட்டி விகிதங்களை உயர்த்தியது. ஆனால், இந்த முயற்சி எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. அதற்குப் பதிலாக, வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கான வெளிநாட்டு நாணய (வங்கி) (Foreign Currency Non-Resident (Bank) (FCNR(B)) வைப்புத்தொகை வேகமாக அதிகரித்ததே ரூபாயின் மதிப்பைக் காப்பாற்ற உதவியது. இருப்பினும், 2013-ஆம் ஆண்டைவிட தற்போது உலகளாவிய வட்டி விகிதங்கள் மிக அதிகமாக இருப்பதால், இதுபோன்ற ஒரு திட்டத்தை தற்போது செயல்படுத்துவது அரசுக்கு அதிக செலவை ஏற்படுத்தும். இதுதவிர, ‘Nomura’ நிறுவனத்தின் பொருளாதார வல்லுநர்கள் ஒரு எச்சரிக்கையை முன்வைக்கின்றனர். நாட்டின் நாணய மதிப்பைத் தக்கவைப்பதற்காக வட்டி விகிதங்கள் பெருமளவில் உயர்த்தப்பட்டால், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மந்தமடையச் செய்யும்; அதன் காரணமாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டு வெளியேறும் ஆபத்தும் அதிகரிக்கக்கூடும் என்றும் எச்சரிக்கின்றனர்.


பொதுத்துறை நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் கடன் வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில், மானிய விலையிலான வசதிகளை வழங்குவது மற்றொரு வழியாகும். அதிகாரிகள் எந்த முறையைத் தேர்ந்தெடுத்தாலும், 2013-ஆம் ஆண்டில் வெளிநாட்டு வாழ் இந்தியர் (வங்கி) திட்டத்தின் (FCNR(B)) மூலம் திரட்டப்பட்ட 26 பில்லியன் டாலர் (2,600 கோடி டாலர்) தொகையைவிட, மிக அதிகமான தொகையைத் தற்போது திரட்ட வேண்டியிருக்கும் என்றும் கூறப்படுகிறது.


இதன் மதிப்பு குறைந்தபட்சம் 50 முதல் 60 பில்லியன் டாலர்களாக (சுமார் ₹4,15,000 முதல் ₹5,00,000 கோடி) இருக்க வேண்டும் என்று தனது பெயரை வெளியிட விரும்பாத பொருளாதார நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் அடைந்துள்ள வளர்ச்சியை ஒப்பிடும்போது, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை சாதகமாக மாற்றுவதற்கு இந்தத் தொகை போதுமான அளவு பெரியதாக இருக்க வேண்டும். இந்திய ரூபாய் மீதான சர்வதேசப் பார்வையை நாம் விரைவாக மாற்ற வேண்டியுள்ளது; அதற்கு வெளிநாட்டு மூலதனத்தின் பெரிய அளவிலான வரவு நிச்சயம் உதவும் என்றும் தெரிவித்துள்ளார். 


ரூபாய் கதை


கடந்த ஓராண்டில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு    10 சதவீதத்திற்கும் மேலாக வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, தற்போது ரூபாயின் மதிப்பு அதன் உண்மையான அளவைவிடக் குறைவாகக் கணக்கிடப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கருதுகிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கடந்த வாரம் அளித்த நேர்காணல் ஒன்றில் இந்தத் தகவலைத் தெரிவித்தார். ரூபாயின் "உண்மையான பயனுள்ள மாற்று விகிதத்தை" (Real Effective Exchange Rate (REER)) சுட்டிக்காட்டி அவர் இதனைப் பேசினார். இந்த உண்மையான பயனுள்ள மாற்று விகிதம் (REER) கடந்த ஏப்ரல் மாதத்தில் 90.96-ஆகக் குறைந்தது.  இது செப்டம்பர் மாதம் 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த அளவாகக் கருதப்படுகிறது.


இந்த உண்மையான பயனுள்ள மாற்று விகிதம் (REER) என்பது, உலகெங்கிலும் உள்ள 40 முக்கிய நாணயங்களின் தொகுப்பிற்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பை அளவிடுவதாகும். அந்தந்த நாடுகளுடன் இந்தியா மேற்கொள்ளும் சேவை சாரா வணிகத்தின் (Non-services trade) அடிப்படையில், ஒவ்வொரு நாட்டின் நாணயத்திற்கும் ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இந்த மதிப்பு கணக்கிடப்படுகிறது. உண்மையான பயனுள்ள மாற்று விகிதம் (REER) 100-க்கும் கீழே இருந்தால், அந்த நாணயத்தின் மதிப்பு குறைவாகக் கணக்கிடப்பட்டுள்ளது என்றும், 100-க்கு மேல் இருந்தால் அதன் மதிப்பு அதிகமாகக் கணக்கிடப்பட்டுள்ளது என்றும் அர்த்தம் ஆகும். எனவே, தற்போது உண்மையான பயனுள்ள மாற்று விகிதம் (REER) 90.96-ஆக இருப்பது, இந்த 40 நாடுகளின் நாணயங்களுடன் ஒப்பிடும்போது இந்திய ரூபாய் சுமார் 9 சதவீதம் குறைவான மதிப்பில் வர்த்தகமாகிறது என்பதைக் காட்டுகிறது.


இருப்பினும், இந்திய ரூபாய் உண்மையிலேயே அதன் மதிப்பைவிடக் குறைவாகத்தான் மதிப்பிடப்பட்டிருக்கிறதா?



குறைந்த வட்டி விகிதங்களின் நன்மைகள்


தற்போதைய பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடைவதற்கு, முதலீடுகள் உள்ளே வருவது (capital inflows) குறைவாக இருப்பதே முக்கியக் காரணம் என்று பொருளாதார வல்லுநர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றனர். ஏப்ரல் மாதம் 2024-ஆம் ஆண்டு முதல், அந்நிய நேரடி முதலீடு (Foreign Direct Investment (FDI)) மற்றும் அந்நிய அந்நிய முதலீட்டாளர்கள் (Foreign Portfolio Investors (FPI)) ஆகிய இரண்டின் மூலமும் நாட்டிற்குள் வந்த மொத்த நிகர முதலீடு, (-) 1,840 கோடி டாலர் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில், அந்நிய நேரடி முதலீடானது (FDI) கடந்த சில ஆண்டுகளாகவே குறைந்து வருகிறது. இதுகுறித்து தலைமை பொருளாதார ஆலோசகர் (Chief Economic Advisor) வி. அனந்த நாகேஸ்வரன் கடந்த மாதம் எழுதிய கட்டுரையில், 2022-ஆம் ஆண்டுக்கு முந்தைய பத்து ஆண்டுகளில் உலகளவில் வட்டி விகிதங்கள் வழக்கத்திற்கு மாறாகக் குறைவாக இருந்தன. இது உலகெங்கிலும் இருந்த முதலீட்டாளர்களின் நஷ்ட பயத்தைக் குறைத்து, அதிக லாபத்தைத் தேடி வளரும் நாடுகளின் சந்தைகளுக்குள் பெருமளவிலான மூலதனத்தை கொண்டு வரச் செய்தது என்று குறிப்பிட்டுள்ளார்.


குறைந்த வட்டி விகிதங்கள் நிலவிய காலகட்டத்தால் இந்தியாவிற்கு நன்மை கிடைத்தது. மேற்கண்ட வரைபடம் காட்டுவதுபோல, அமெரிக்காவின் (US) வட்டி விகிதங்கள் பூஜ்ஜியத்திற்கு அருகில் இருந்தபோது, இந்தியாவிற்குள் வந்த நிகர அந்நிய நேரடி முதலீடு (Net FDI) அதிகரித்தது. இருப்பினும், பொருளாதார நிபுணர் சஜ்ஜித் சினாயின் கூற்றுப்படி, 2005 மற்றும் 2010-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும்தான், அமெரிக்கப் பத்திரங்களின் வட்டி வருவாயைச் (US bond yields) சார்ந்து இருக்காமல், இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு (FDI) முற்றிலும் சுயமாகவும் சுதந்திரமாகவும் உயர்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.


அந்த ஆண்டுகளில் இந்தியா ஒரு பெரிய தனியார் முதலீட்டு (Capital Expenditure (Capex)) சுழற்சியைக் கண்டதே இதற்குக் காரணம் என்று சினாய் விளக்கினார். இதுவே வலுவான வெளிநாட்டு நேரடி முதலீடுகளை (FDI) ஈர்த்தது. இதிலிருந்து, வெளிநாட்டு நேரடி முதலீடானது உள்ளூர் ஈர்ப்பு காரணிகள் ("pull" factors) மற்றும் வெளிநாட்டுச் சூழ்நிலை காரணிகள் ("push" factors) ஆகிய இரண்டினாலும் பாதிக்கப்படுகிறது என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.


2010-ஆம் ஆண்டிற்குப் பிறகு, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இந்தியாவில் மட்டுமே முதலீடு செய்வதற்கான குறிப்பிட்ட காரணம் எதுவும் இருக்கவில்லை. அவர்கள் தங்கள் சொந்த நாடுகளில் மிகக் குறைந்த வட்டியில் எளிதாகப் பணம் கடன் வாங்க முடிந்த ஒரே காரணத்தினாலேயே இங்கு முதலீடு செய்ததாகச் சுட்டிக்காட்டுகின்றனர்.


2022-ஆம் ஆண்டுக்கு முந்தைய பத்தாண்டுகளில், இந்திய ரூபாயின் மதிப்பும் மற்றும் அதன் உண்மையான பயனுள்ள மாற்று விகிதமும் (REER), வெளிநாடுகளில் நிலவிய பூஜ்ஜியத்திற்கு நெருக்கமான வட்டி விகிதங்களால் பாதிக்கப்பட்டு இருந்தன. அப்படியிருக்க, தற்போது உலகளாவிய பணவியல் கொள்கைகள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள சூழலில், இந்திய ரூபாய் இன்னும் குறைத்து மதிப்பிடப்பட்ட ஒன்றாகவே கருதப்பட வேண்டுமா?  என்ற கேள்வி எழுகிறது. 


பிராஞ்சுல் பண்டாரி தலைமையிலான ‘Hongkong and Shanghai Banking Corporation’ பொருளாதார வல்லுநர்கள் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்திய ரூபாயின் வீழ்ச்சியானது செலுத்துநிலைப் பாக்கியின் (Balance of Payments (BoP)) நீண்டகாலக் கட்டமைப்பு பலவீனத்தால் ஏற்பட்டதாக இருந்தால், நாணயத்தின் மதிப்பு குறைவது இயல்பான மற்றும் சரியான விளைவுதான். இருப்பினும், ரூபாயின் மதிப்பு தேவைக்கு அதிகமாகக் குறைந்து, அதன் உண்மையான மதிப்பைவிடக் குறைவாகக் காணப்பட்டால், அதிகாரிகள் அதன் மதிப்பை நியாயமான அல்லது சமநிலை நிலைக்கு உயர்த்துவதற்கு முயற்சி செய்யலாம். இதில் இருக்கும் சவால் என்னவென்றால், குறுகியகாலத்தில் இந்த வீழ்ச்சியில் எவ்வளவு பகுதி ஒரு புதிய சமநிலை மதிப்பை பிரதிபலிக்கிறது, எவ்வளவு பகுதி வெறும் தற்காலிகமான அதிகப்படியான வீழ்ச்சி என்பதைத் துல்லியமாகக் கண்டறிவது கடினமாகும்.


இந்தியாவின் பொருளாதாரம் கடந்த 2013-ஆம் ஆண்டில் இருந்தது போல் இப்போது இல்லை என்பதை இந்திய அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதனால்தான், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்காக, (மேற்காசியப் போர் தொடங்குவதற்கு முன்னதாக) தங்களிடம் இருந்த 700 பில்லியன் டாலருக்கும் அதிகமான அந்நியச் செலாவணி இருப்புத்தொகையைப்  (Forex Reserves) பயன்படுத்தினர். இருப்பினும், ஒரு அரசு ஆலோசகர் குறிப்பிட்டது போல, அந்நியச் செலாவணி இருப்பை சந்தையின் தற்காலிக நெருக்கடிகளால் ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டுமே தவிர, சந்தையின் இயல்பான திசையை நிரந்தரமாக மாற்றுவதற்காகப் பயன்படுத்தக் கூடாது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.


Original article : RBI rate hike or massive deposit mobilisation drive: what does ‘undervalued’ rupee need? -Siddharth Upasani

Share:

தொழில்நுட்பம், பசுமை வளர்ச்சி, பாதுகாப்பு : பிரதமர் மோடியின் ஐரோப்பியப் பயணத்தின் முக்கிய அம்சங்கள். - குல்ஷன் சச்தேவா

 கடந்த சில ஆண்டுகளாக, வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் பசுமைப் பரிமாற்றம் போன்ற துறைகளில் இந்தியாவிற்கு ஒரு முக்கிய நட்பு நாடாக ஐரோப்பா உருவெடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் மேற்கொண்ட நான்கு ஐரோப்பிய நாடுகளுக்கான பயணம், இந்த வளர்ச்சிப் பாதையை மேலும் எவ்வாறு வலுப்படுத்துகிறது?


ஐரோப்பாவுடனான இந்தியாவின் உறவுமுறை, உத்திசார்ந்ததாகவும், பன்முகத்தன்மை கொண்டதாகவும், தொழில்நுட்பம் சார்ந்ததாகவும், அமைப்பு ரீதியாக வலுவானதாகவும் மாறி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய நான்கு ஐரோப்பிய நாடுகளுக்கு மேற்கொண்ட பயணம், ஐரோப்பாவுடனான இந்தியாவின் உறவுமுறையில் வளர்ந்து வரும் வேகத்தை  கோடிட்டுக் காட்டுகிறது.


கடந்த சில ஆண்டுகளில், வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் பசுமை மாற்றம் போன்ற துறைகளில் ஐரோப்பா இந்தியாவின் முக்கிய நட்பு நாடாக உருவெடுத்துள்ளது. புதுடெல்லியில் நடைபெற்ற 16-வது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில், இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான நலன்களின் வளர்ந்து வரும் ஒருங்கிணைப்பு தெளிவாகத் தெரிந்தது. அங்கு இரு நாடுகளும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்ததை அறிவித்ததோடு, '2030-ஐ நோக்கி: ஒரு கூட்டு விரிவான ராஜதந்திர செயல்திட்டத்தையும்' ஏற்றுக்கொண்டனர்.


பிரதமர் மோடியின் இந்தப் பயணம், பசுமை வளர்ச்சி, தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்புத் தொழில்துறை கூட்டுறவு ஆகியவற்றிற்கு வலுவான முக்கியத்துவம் அளித்து, இந்தப் பயணப் உறவை மேலும் வலுப்படுத்தியது. கூட்டாண்மைகளை மேம்படுத்துதல், தொழில்நுட்பத் தூதரகம், பசுமை வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகிய நான்கு முக்கிய முன்னேற்றங்கள் இந்தப் பயணத்தின் மிக முக்கிய விளைவுகளாகத் தனித்து நிற்கின்றன.


ஐரோப்பிய கூட்டாண்மைகளை விரிவுபடுத்துதல் மற்றும் மேம்படுத்துதல்


புது டெல்லி தற்போது ஐரோப்பாவுடன் கொண்டுள்ள நட்புறவில், ஒரு தெளிவான உத்தி உருவாகி வருகிறது. ஐரோப்பிய ஒன்றியம் (EU) எவ்வாறு செயல்படுகிறது என்பதையும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அதன் உறுப்பு நாடுகளுக்கும் இடையே அதிகாரப் பகிர்வு எவ்வாறு அமைந்துள்ளது என்பதையும் குறித்த ஆழமான புரிதலை இது காட்டுகிறது. மேலும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம்பெறாத பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய பொருளாதார மற்றும் உத்திசார் ஒருங்கிணைப்புகள் குறித்த வளர்ந்துவரும் அங்கீகாரத்தையும் இது வெளிக்காட்டுகிறது.


இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் 2004-ஆம் ஆண்டு முதல் மூலோபாய கூட்டாளிகளாக இருந்து வருகின்றன. இதேபோல், இந்தியா பிரான்ஸ் (1998), ஜெர்மனி (2000) மற்றும் ஐக்கிய இராச்சியம் (2004) உள்ளிட்ட முக்கிய ஐரோப்பிய சக்திகளுடன் இராஜதந்திரக் கூட்டாண்மைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா 2023-ல் இத்தாலி மற்றும் கிரீஸுடனும், அதைத் தொடர்ந்து 2024-ல் போலந்துடனும் ராஜதந்திர கூட்டாண்மைகளில் கையெழுத்திட்டது.


பிரெக்ஸிட்டைத் தொடர்ந்து, இந்தியா 2021-ல் ஐக்கிய இராச்சியத்துடனான தனது உறவை ஒரு விரிவான இராஜதந்திர கூட்டாண்மையாக மேம்படுத்தியது. அதேபோல், இந்தியா-பிரான்ஸ் கூட்டாண்மை 2026-ல் உலகளாவிய ராஜதந்திர கூட்டாண்மையாக உயர்த்தப்பட்டது. சில நாட்களுக்கு முன்னர், புதுடெல்லி சைப்ரஸுடன் ஒரு இராஜதந்திரக் கூட்டாண்மையில் கையெழுத்திட்டுள்ளது.


பிரதமர் மோடி சில வருகையின்போது, ​​இந்தியா நெதர்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகளுடன் இரண்டு புதிய இராஜதந்திரக் கூட்டாண்மைகளை ஏற்படுத்திக் கொண்டது. மேலும், இத்தாலி உடனான இந்தியாவின் உறவு சிறப்பு இராஜதந்திரக் கூட்டாண்மை (Special Strategic Partnership) என்ற உயர்ந்த நிலைக்கு மேம்படுத்தப்பட்டது.


தொழில்நுட்ப இராஜதந்திரம் (Technology diplomacy)


இந்தப்  பயணம், தொழில்நுட்ப இராஜதந்திரத்தின் மீது இந்தியா அளித்து வரும் வளர்ந்துவரும் முக்கியத்துவத்தின் ஒரு தெளிவான வெளிப்பாடாக அமைந்தது. வெளியுறவுக் கொள்கை, பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் காரணமாக இயங்கும் தொழில்நுட்ப ராஜதந்திரம், சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மைகள் மூலம் செயற்கை நுண்ணறிவு (artificial intelligence (AI)), டிஜிட்டல் ஆளுகை, குறைக்கடத்திகள், குவாண்டம் கணினி, தொலைத்தொடர்பு, முக்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் இணையப் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சி செய்கிறது.


தொழில்நுட்பச் சார்புநிலையானது, ராஜதந்திர உறவின் கண்ணோட்டத்தில்   பார்க்கப்படும் இந்தக் காலகட்டத்தில், இந்தியாவும் ஐரோப்பாவும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் தங்கள் இலக்குகளை முன்னெடுத்துச் செல்ல நம்பகமான நட்பு நாடுகளைத் தேடுகின்றன. தற்போதைய நிலையில், பல முன்னோடி டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் இரண்டு நாடுகளும் அமெரிக்கா மற்றும் சீனாவைவிடப் பின்தங்கியுள்ளன.


இருப்பினும், ஐரோப்பிய மற்றும் இந்திய நிறுவனங்கள் முக்கிய தொழில்நுட்பத் துறைகளில் குறிப்பிடத்தக்க உறவுகளையும், புதுமையான கண்டுபிடிப்புகளால் வழிநடத்தப்படும் வளர்ச்சிக்கு தேவையான ஆற்றலையும் கொண்டுள்ளன. எனவே, இரு நாட்டின் கொள்கை வகுப்பாளர்களும் ஐரோப்பாவின் தொழில்நுட்பத் திறன்களை இந்தியாவின் அளவு, திறமை வளம் மற்றும் வேகமாக விரிவடைந்து வரும் புதுமையான கண்டுபிடிப்பு ஏற்றவாறு ஒன்றிணைந்து பணியாற்றி வருகின்றனர்.


இந்தியாவின் குறைமின்கடத்தித் திட்டத்திற்குப் பெரும் உத்வேகம்


பிரதமர் மோடியின் நெதர்லாந்து பயணத்தின்போது இந்த அணுகுமுறை தெளிவாகத் தெரிந்தது. அங்கு, இந்தியாவின் குறைமின்கடத்திச் சூழலமைப்பின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் வகையில், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் டச்சு தொழில்நுட்பத் தலைவரான ASML உடன் ஒரு இராஜதந்திரக் கூட்டாண்மையில் கையெழுத்திட்டது. இது இந்தியாவின் குறைமின்கடத்தித் திட்டத்திற்கு உத்வேகம் அளிக்கிறது.


$11 பில்லியன் முதலீட்டு ஆதரவுடன், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் குஜராத்தின் தோலேராவில் இந்தியாவின் முதல் வர்த்தகரீதியான 300 மிமீ குறைமின்கடத்தி உற்பத்தி ஆலையை உருவாக்கி வருகிறது. இந்த ஆலை, ஆட்டோமொபைல்கள் மற்றும் மொபைல் சாதனங்கள் முதல் செயற்கை நுண்ணறிவு வரையிலான பயன்பாடுகளுக்கான சிப்களை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஸ்வீடனிலும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு முக்கிய இடம் பிடித்தது. இரண்டு நாடுகளும் மேம்படுத்தப்பட்ட கூட்டுப் புத்தாக்கக் கூட்டாண்மை 2.0-ஐத் தொடங்கி, மெய்நிகர் இந்தியா-ஸ்வீடன் கூட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை (virtual India–Sweden Joint Science and Technology Centre (ISJSTC)) நிறுவின. இந்த மையம், செயற்கை நுண்ணறிவு, 6-ஜி தொழில்நுட்பங்கள், குவாண்டம் கணினி, நிலையான சுரங்கத் தொழில், நிலையான போக்குவரத்து, முக்கிய கனிமங்கள், விண்வெளி மற்றும் புவிசார் ஆராய்ச்சி மற்றும் உயிர் அறிவியல் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் கவனம் செலுத்தும்.


அதேபோல், இந்தியா-நார்டிக் உச்சிமாநாட்டின் முடிவுகள் புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு, விண்வெளி ஒத்துழைப்பு,  ஆர்க்டிக் மற்றும் துருவ ஆராய்ச்சி போன்றவற்றிற்கு வலுவான முக்கியத்துவம் அளித்தன. ரோம் பயணத்தின் போது, ​​பிரதமர் மோடியும் இத்தாலிப் பிரதமர் ஜார்ஜியா மெலோனியும், இரு நாடுகளின் புத்தாக்கச் சூழல் அமைப்புகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும், புத்தொழில் நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையே உள்ள நெருக்கமான உறவை ஊக்குவிக்கவும் வடிவமைக்கப்பட்ட புத்தாக்க மையமான INNOVIT இந்தியாவைத் தொடங்கி வைப்பதாக அறிவித்தனர். சூப்பர்கம்ப்யூட்டிங்கில் ஒத்துழைப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.


பசுமை வளர்ச்சி (Green growth )


நோர்டிக் நாடுகள் மற்றும் நெதர்லாந்தின்  வலிமைகளை கருத்தில் கொண்டு,  இருதரப்பு செயல் திட்டங்கள் மற்றும் கூட்டாண்மைகளின் முக்கிய கவனம் காலநிலை மாற்ற நடவடிக்கைகள் மற்றும் பசுமை வளர்ச்சிமீது இருந்தது. இந்தப் பயணத்தின்போது ஒத்துழைப்பிற்காக அடையாளம் காணப்பட்ட முக்கியத் துறைகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் தொழில்நுட்பங்கள், நீர் வள மேலாண்மை, நீலப் பொருளாதாரம், பசுமை ஹைட்ரஜன், உயிரி எரிபொருட்கள், சுழற்சிப் பொருளாதாரம், பசுமை கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தக வழித்தடங்களின் மேம்பாடு ஆகியவை அடங்கும்.


பிரதமர் மோடியின் பயணத்தின் ஒரு முக்கிய விளைவு, இந்தியா-நார்வே பசுமை உத்திசார் (India–Norway Green Strategic Partnership) கூட்டாண்மை தொடங்கப்பட்டதாகும். எண்ணெய் மற்றும் எரிவாயுவின் ஒரு முக்கிய உற்பத்தியாளராகவும் ஏற்றுமதியாளராகவும் இருந்தபோதிலும், நார்வே பசுமை மாற்றத்தில் முன்னணி நாடக இருந்து வருகிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின்சாரப் போக்குவரத்து மற்றும் பிற பசுமைத் தொழில்நுட்பங்களில் அதன் முன்னேற்றங்களுக்காக அந்த நாடு அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நார்வே நாட்டின் மின்சாரத்தில் 98 சதவீதம், முதன்மையாக நீர்மின்சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.


இந்தியா-நார்டிக் உச்சிமாநாட்டில் காலநிலை நடவடிக்கை, பசுமை மாற்றம் மற்றும் நீலப் பொருளாதாரம் போன்ற முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்தப்பட்ட நிலையில், இந்தியா-நெதர்லாந்து செயல்திட்டம் நீர், வேளாண்மை மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளுக்கு முக்கியத்துவம் அளித்தது. ஸ்வீடனில், தூய்மையான தொழில்நுட்பங்களை இணைந்து உருவாக்குவதன்மீது கவனம் செலுத்தப்பட்டது.


மேலும், சில ஆண்டுகளில் நெதர்லாந்துடனான நீர் கூட்டாண்மை, டென்மார்க்குடனான பசுமை உத்தி தொடர்பான கூட்டாண்மை, செக் குடியரசுடன் புத்தாக்க கூட்டாண்மை, பின்லாந்துடன் டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் நிலைத்தன்மையில் இராஜதந்திரக் கூட்டாண்மை உள்ளிட்ட பல துறைசார்ந்த முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்காக ஸ்வீடன்-இந்தியா தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு வழித்தடமும் (Sweden–India Technology and Artificial Intelligence Corridor (SITAC)) நிறுவப்பட்டுள்ளது.


நார்டிக் நாடுகளுடனான இந்தியாவின் ஈடுபாடு, 'நம்பகமான பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க உத்திசார் கூட்டாண்மை' என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. நார்டிக் நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளில், நிலைத்தன்மை, புத்தாக்கம் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் ஆகியவை பெற்றுவரும் முக்கியத்துவத்தை  இது வெளிபடுத்துகிறது.


2025-ஆம் ஆண்டில், ஐரோப்பிய சுதந்திர வர்த்தகக் கூட்டமைப்பின் (European Free Trade Association (EFTA)) ஐரோப்பிய ஒன்றியம் சாராத நான்கு உறுப்பு நாடுகளான ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன், நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவற்றுடன் இந்தியா தனது முதல் வர்த்தக மற்றும் முதலீட்டு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனும் இதே போன்ற ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.


ராஜதந்திர கூட்டாண்மைகள், துணைப் பிராந்திய அணுகுமுறைகள், துறைசார் ஒத்துழைப்புகள் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களின் வலையமைப்புக்கு, இந்தியா–ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக மற்றும் தொழில்நுட்ப கவுன்சில், 50-க்கும் மேற்பட்ட துறைசார் உரையாடல்கள் மற்றும் பல்வேறு இருதரப்பு நிறுவன கட்டமைப்புகள் போன்ற வலுவான நிறுவனரீதியிலான அமைப்புகள் ஆதரவளிக்கின்றன.


பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு


உக்ரைனில் நடைபெற்று வரும் போர், அமெரிக்காவின் நீண்டகாலப் பாதுகாப்பு உறுதிமொழிகள் குறித்த நிச்சயமற்ற நிலை மற்றும் புதிய போர்க்களங்களின் தோற்றம் ஆகியவற்றின் காரணமாக, ஐரோப்பியப் பாதுகாப்பு மற்றும் தற்காப்பில் ஒரு மாற்றம் நிகழ்ந்து வருகிறது. 'ஐரோப்பாவை மீண்டும் ஆயுதமயமாக்குதல்/தயார்நிலை 2030' (ReArm Europe/Readiness 2030) முன்முயற்சியின்கீழ், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் வரும் ஆண்டுகளில் தற்காப்பிற்காக €800 பில்லியன் அதிகமாகச் செலவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தியா ஒரு லட்சியமிக்க பாதுகாப்புத் துறை உள்நாட்டுமயமாக்கல் திட்டத்தை முன்னெடுத்து வருவதாலும், அதன் பாதுகாப்பு ஏற்றுமதிகள் தொடர்ந்து வளர்ந்து வருவதாலும், அதன் பாதுகாப்புத் தொழில்துறையை ஐரோப்பாவுடன் இணைப்பது ஒரு முக்கியமான ஒத்துழைப்புத் துறையாக உருவெடுத்து வருகிறது. இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒரு பாதுகாப்பு மற்றும் தற்காப்புக் கூட்டாண்மை ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளன. இந்தப் பின்னணியில், பிரதமர் மோடியின் பயணத்தின்போது, ​​குறிப்பாக நெதர்லாந்து, ஸ்வீடன் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் பாதுகாப்பு ஒத்துழைப்பு முக்கிய இடம் பிடித்தது.


இந்தியா-நார்டிக் உச்சிமாநாட்டில் நடைபெற்ற கலந்துரையாடல்களில் பாதுகாப்புத் தொழில்துறை ஒத்துழைப்பும் முக்கிய இடம் பிடித்தது. இத்தாலியில், இரண்டு நாடுகளும் இருதரப்பு பாதுகாப்புத் தொழில்துறைக்கான செயல்திட்டத்தை ஏற்றுக்கொண்டனர்.


இந்தியா நீண்டகாலமாக ஐரோப்பிய நட்பு நாடுகளிடமிருந்து பாதுகாப்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்து வந்தாலும், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஐக்கிய இராச்சியத்துடன் வலுவான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தி  வந்தாலும், கடல்சார் பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு மற்றும் தீவிரவாத எதிர்ப்பு போன்ற சூழகளில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயல்பட்டாலும், இந்தியா மற்றும் ஐரோப்பாவின் பாதுகாப்புத் தொழில்துறைகளுக்கு இடையிலான ஆழமான ஒருங்கிணைப்பைப் பற்றிய விவாதங்கள் ஒப்பீட்டளவில் சில காலத்திற்கு முன்னர்  தான் தொடங்கியுள்ளன. இருப்பினும், இந்தப் பயணத்தின்போது இந்த இரண்டு விவகாரத்தின்மீது கவனம் செலுத்தப்பட்டிருப்பது, ஒத்துழைப்பு தற்போது வேகம் பெற்று வருவதைக் காட்டுகிறது.


முக்கோண வளர்ச்சி ஒத்துழைப்பு


ஒட்டுமொத்தமாக, அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பிளவு,  வேகமாகச் செயல்படும் சீனாவின் எழுச்சி மற்றும் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் சீர்குலைக்கும் கொள்கை மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் இந்தப் பயணம் நடைபெற்றது. அதேசமயம், ஐரோப்பிய சுதந்திர வர்த்தகப் பகுதி, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுடன் மூன்று முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் முடிவுக்கு வந்ததன் மூலம், இந்தியா-ஐரோப்பா உறவுகள் புதிய உத்வேகத்தைப் பெற்றுள்ளன.


இணைப்புத் திட்டங்கள், குறிப்பாக இந்தியா–மத்தியகிழக்கு–ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (India–Middle East–Europe Economic Corridor (IMEC)) மற்றும் இடம்பெயர்வு, நடமாட்டம் தொடர்பான பிரச்சனைகளை தாண்டி, முக்கோண வளர்ச்சி ஒத்துழைப்பும் ஈடுபாட்டின் ஒரு முக்கியத் தூணாக உருவெடுத்தது. இந்தியா மற்றும் இத்தாலி ஆகிய இரண்டு நாடுகளும், ஆப்பிரிக்காவில் டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு (Digital Public Infrastructure (DPI)), வேளாண்மை, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டன.


அதேபோல், இந்தியாவும் நார்வேயும் மூன்றாம் நாடுகளில் கூட்டு வளர்ச்சித் திட்டங்களை ஆராய ஒப்புக்கொண்டன. குறிப்பாக, டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தின. இந்த முயற்சிகள், உலக தெற்குப் பகுதியில் உள்ள நாடுகளில் நிலையான வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் மாற்றத்தை முன்னேற்றுவதற்காக இந்தியாவும் ஐரோப்பிய கூட்டாளிகளும் தங்களுடைய பரஸ்பர வலிமைகளைப் பயன்படுத்தி நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருவதைக் காட்டுகின்றன.


Original article : Technology, green growth, defence: Key highlights of PM Modi’s Europe visit. -Gulshan Sachdeva

Share:

சம்பல் ஆறு ஏன் கவனம் பெற்றுள்ளது? -ரோஷ்னி யாதவ்

 சம்பல் நதியில் நடைபெறும் மணல் சுரங்க பணி ஏன் உச்சநீதிமன்றத்தை விரக்தியடையச் செய்கிறது? இந்தியாவின் பிற நதிகளுக்கு மத்தியில் சம்பல் நதி அமைப்பைத் தனித்துவமாக்குவது எது? சம்பல் நதி எதிர்கொள்ளும் முக்கியப் பாதுகாப்புச் சவால் என்ன? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே உள்ளன.  


தற்போதைய செய்தி?


ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்கள், மாநிலங்களுக்கு இடையிலான தேசிய சம்பல் காரியல்  சரணாலயத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நடைபெற்றுவரும் சட்டவிரோத மணல் சுரங்கம் குறித்து, உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த கண்டனம், பல ஆண்டுகளாக தொடர்ந்து நிலவி வரும் நிர்வாக குறைபாடு மற்றும் செயலற்ற தன்மை குறித்து நீதித்துறைக்கு ஏற்பட்ட அதிருப்தியை வெளிப்படுத்துகிறது. இதன் விளைவாக, அந்தப் பகுதியில் சுற்றுச்சூழல் நெருக்கடியும், நிர்வாகத் தோல்வியும் உருவாகியுள்ளன.


முக்கிய அம்சங்கள்:


1. மத்திய இந்தியாவில் யமுனை நதியின் துணை நதியாக விளங்கும் சம்பல் நதி, பரந்த கங்கை வடிகால் அமைப்பின் ஒரு பகுதியாகத் திகழ்கிறது. இது மத்தியப் பிரதேசத்தில் உள்ள விந்திய மலைத்தொடரின் தெற்கு சரிவில், இந்தூருக்கு அருகிலுள்ள மௌ நகருக்குத் தெற்கே அமைந்துள்ள ஜனப்பாவ் என்னுமிடத்தில் உற்பத்தியாகிறது.


2. இந்த நதி மத்தியப் பிரதேசத்தின் வழியாக வட-வடகிழக்காகப் பாய்ந்து, சிறிது காலம் இராஜஸ்தான் வழியாக ஓடிய பிறகு, பின்னர் இராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கு இடையிலான எல்லையை உருவாக்குகிறது. பின்னர், தென்கிழக்கு திசையில் திரும்பி, உத்தரப் பிரதேசத்தில் யமுனை நதியுடன் இணைகிறது.


3. சம்பல் நதியும் அதன் துணை நதிகளும் வடமேற்கு மத்தியப் பிரதேசத்தின் மால்வா பகுதிக்கு தேவையான நீரை வழங்குகின்றன. அதேசமயம், ஆரவல்லி மலைத்தொடரில் உருவாகும் அதன் துணை நதியான பனாஸ், தென்கிழக்கு ராஜஸ்தானுக்கு தேவையான நீரை வழங்குகிறது. இது உத்தரப் பிரதேச மாநிலத்தில், பிந்த் மற்றும் எட்டாவா மாவட்டங்களின் எல்லையில் உள்ள பரே அருகே பச்னதானில், சம்பல், குவாரி, யமுனை, சிந்து, பஹுஜ் உள்ளிட்ட ஐந்து நதிகள் சங்கமித்து முடிவடைகிறது.


4. சம்பல் ஆற்றில், முகர் (mugger) மற்றும் கரியால் (gharial) ஆகிய இரண்டு முதலை இனங்கள், எட்டு நன்னீர் ஆமை இனங்கள், மென்மயிர் நீர்நாய்கள், கங்கை ஆற்று டால்பின்கள், தத்திப்புள்கள் (skimmers), கருப்பு வயிற்று ஆலாக்கள், சாரஸ் கொக்குகள் மற்றும் கருங்கழுத்துக் நாரைகள் உள்ளிட்ட பல அற்புதமான நதி விலங்கினங்கள் வாழ்கின்றன.


5. சம்பல் ஒரு மழைநீர் பாசனப் பகுதியாகும். யமுனையுடன் சங்கமிக்கும் இடம் வரை மொத்த வடிகால் பரப்பளவு 143,219 சதுர கிலோமீட்டர்கள் (55,297 சதுர மைல்கள்) ஆகும்.


6. சம்பல் நதியின் தெற்கு, கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் விந்திய மலைத்தொடர்களும், வடமேற்கில் ஆரவல்லி மலைத்தொடரும் எல்லைகளாக அமைந்துள்ளன.


7. சம்பலின் துணை நதிகளில் க்ஷிப்ரா, சோட்டி கலிசிந்த், சிவண்ணா,  ரெட்டம், அன்சார், கலிசிந்த், பனாஸ், பர்பதி, சீப், குவாரி, குனோ, அல்னியா, மேஜ், சாகன், பார்வதி, சாம்லா, கம்பீர், லகுந்தர், கான், பாங்கேரி ஆகியவை அடங்கும்.


8. குறிப்பாக, கட்டுப்பாடின்றி மற்றும் அளவுக்கு மீறி மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டதால், சம்பல் நதியின் நீர்வாழ் சூழலியல் அமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீர்வாழ் உயிரினங்களின் வாழிடங்கள் சேதமடைந்துள்ளதுடன், நதியின் இயற்கையான நீரோட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அழிவின் விளிம்பில் உள்ள நீண்ட மூக்கைக் கொண்ட முதலை (Gharial), நன்னீர் டால்பின் மற்றும் ஆமை போன்ற உயிரினங்களின் உயிர்வாழ்வு ஆபத்தில் உள்ளன.


தேசிய சம்பல் சரணாலயம்


1. தேசிய சம்பல் சரணாலயம், தேசிய சம்பல் கரியால் வனவிலங்கு சரணாலயம் என்றும் அழைக்கப்படுகிறது. இது வட இந்தியாவில் உள்ள மூன்று மாநிலப் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இங்கு அதிகரித்து இனங்களான கரியால்  சிறிய முதலைகள், செந்தலை கூரை ஆமை மற்றும் அதிகரித்துவரும் இனமான கங்கை நதி டால்பின் போன்றவை வாழ்கின்றன.


2. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களின் எல்லைக்கு அருகில் சம்பல் ஆற்றின் கரையில் அமைந்துள்ள சம்பல் சரணாலயம், முதன்முதலில் 1978-ல் மத்தியப் பிரதேசத்தில் ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. தற்போது இது, மூன்று மாநிலங்களாலும் ஒன்றாக இணைந்து நிர்வகிக்ககும் ஒரு நீண்ட, குறுகலான சூழல் காப்பகமாகத் திகழ்கிறது.


3. இந்தச் சரணாலயத்திற்குள், தூய்மையான சம்பல் நதியானது, கரைகளில் பல மணல்வெளிகளைத் தாங்கியவாறு, செங்குத்துப் பள்ளங்கள் மற்றும் குன்றுகளின் சிக்கலான பாதைகளின் ஊடே பாய்ந்து செல்கிறது. உலகின் மிகப்பெரிய நீண்ட மூக்கைக் கொண்ட முதலைகளின் கூட்டத்திற்கு இருப்பிடமாகவும், அவற்றின் கடைசிப் புகலிடமாகவும் திகழ்வதால், நாட்டின் மிக முக்கியமான ஈரநிலச் சரணாலயங்களில் ஒன்றாக சம்பல் சரணாலயம் விளங்குகிறது.


4. மேலும், இது பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல நீர்வாழ் உயிரினங்களுக்கும் ஏற்ற வாழ்விடமாகவும் உள்ளது. இவற்றில் சதுப்புநில முதலை, நன்னீர் ஆமைகள் மற்றும் இரண்டு முக்கிய நீர்வாழ் பாலூட்டிகளான நீர்நாய் மற்றும் கங்கை டால்பின் ஆகியவை அடங்கும்.


5. சட்டவிரோத மணல் சுரங்கம், சரணாலயத்திற்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. குறிப்பாக, சம்பல் சரணாலயத்தில் 2006-ஆம் ஆண்டில் சம்பல் சரணாலயத்தில் மணல் எடுப்பது தடை செய்யப்பட்டாலும், சட்டவிரோத கும்பல்கள் தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபட்டு, அதை பெரிய அளவில் நடத்தி வந்துள்ளன.


ஆரவல்லி மலைத்தொடர்கள் 


1. 100 மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட உயரத்தில் உள்ள நிலவடிவங்களை மட்டுமே மலைகளாக வரையறுக்கும் ஆரவல்லிகளின் வரையறையை ஆராய்வதற்காக, இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி மன்றத்தின் (Indian Council of Forestry Research and Education (ICFRE)) தலைமை இயக்குநரைப் பதவிவழித் தலைவராகக் கொண்ட ஐந்து பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை (high-powered committee (HPC)) உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.


2. ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கும் மேலான பழமையான ஆரவல்லி மலைத்தொடர், உலகின் மிகப் பழமையான மலைத்தொடர்களில் ஒன்றாகும். இது பிரிகேம்ப்ரியன் சகாப்தத்தில் புவியின் மேலோட்டுப் புவித்தட்டுகள் மோதியதன் காரணமாக உருவானது.

3. 700 கி.மீ நீளமுள்ள இந்த மலைத்தொடர், குஜராத், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் டெல்லி ஆகிய நான்கு மாநிலங்களிலும் 37 மாவட்டங்களிலும் பரவியுள்ளது. இதில் 560 கி.மீ ராஜஸ்தானில் அமைந்துள்ளது. ஆரவல்லி மலைத்தொடரின் மிக உயரமான சிகரம் குரு ஷிகர் ஆகும். இது ராஜஸ்தானின் சிரோஹி மாவட்டத்தில் அமைந்துள்ளது.


4. இருப்பினும், ஆரவல்லி மலைத்தொடர் உருவான காலத்தில் இருந்ததை ஒப்பிடும்போது, ​​இன்றைய மலைத்தொடர் மிகவும் அரிக்கப்பட்டுவிட்டது.  சீரழிவுக்கு இயற்கைக் காரணிகளும் மனிதச் செயல்பாடுகளும் காரணமாகின்றன.


5. இருப்பினும், ஆரவல்லி மலைத்தொடர் விலைமதிப்பற்ற சூழலியல் சேவைகளை வழங்குகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகள் தீபகற்ப இந்தியாவின் நீர் தேக்கமாகவும், பருவநிலை சீராக்கியாகவும் கருதப்பட்டால், ஆரவல்லி மலைத்தொடர் வடமேற்கு மற்றும் வட இந்திய சமவெளிகளுக்கு ஒரு சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கவசமாக செயல்படுகிறது.


6. இந்த மலைத்தொடர், மேற்கில் உள்ள தார் பாலைவனத்திலிருந்து மணல் வடக்கு சமவெளிப் பகுதிகளுக்குள் ஊடுருவி வருவதைத் தடுக்கிறது. இதனால் வட இந்தியாவின் காற்றுத் தரமும் பாதுகாக்கப்படுகிறது. மணல் ஊடுருவல் அதிகரித்தால், ஏற்கனவே உள்ளூர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தப் போராடிக் கொண்டிருக்கும் டெல்லிக்கு  மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

7. மேலும், இந்த மலைகள் கணிசமான அளவு மழையையும் கொண்டு வருகின்றன. இது அவற்றைச் சுற்றியுள்ள குடியிருப்புகளின் உழவுப் பணிகளுக்கும் குடிநீர் தேவைகளுக்கும் முக்கியமானதாகும்.


Original article : Why is Chambal River in focus? -Roshni Yadav

Share:

ஜார்க்கண்டின் 'தானா பகத்'கள் (Tana Bhagats) யார்? அவர்கள் ஏன் ஒரு நெடுஞ்சாலைத் திட்டத்தை எதிர்க்கிறார்கள்? -சுபம் டிகா

 சிறப்பு அரசியலமைப்பு விதிகளின் கீழ் பாதுகாக்கப்பட்ட ஒரு பகுதியில், இந்த நெடுஞ்சாலையானது மூதாதையர் நிலம், காடுகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் விவசாய வாழ்வாதாரங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று பழங்குடியின ஆர்வலர்கள் கூறுகின்றனர்.


பாரத்மாலா திட்டத்தின்கீழ் கட்டப்படும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு எதிராக ஜார்க்கண்டின் தானா பகத் சமூகம் போராட்டம் நடத்தி வருகிறது. சிறப்பு அரசியலமைப்பு விதிகளின்கீழ் பாதுகாக்கப்படும் ஒரு பட்டியல் பகுதியில் உள்ள தங்களது மூதாதையர் நிலம், காடுகள், வழிபாட்டுத் தலங்கள், விவசாய வாழ்வாதாரங்கள் மற்றும் சமூக இடங்களுக்கு இந்தத் திட்டம் அச்சுறுத்தலாக இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


கும்லாவிலிருந்து சத்தீஸ்கர் எல்லை நோக்கி தேசிய நெடுஞ்சாலை-43 (NH-43) சாலையை அகலப்படுத்துவதற்காக நிலம் கையகப்படுத்துவதே இந்த மோதலின் முக்கியப் பிரச்சினையாக உள்ளது.


இந்தத் திட்டம் எதைப் பற்றியது?


ஜார்க்கண்ட்-சத்தீஸ்கர் எல்லையில் உள்ள 32.4 கி.மீ நீளமுள்ள இந்தச் சாலைப் பகுதி, ராய்ப்பூர்-தன்பாத் பொருளாதார வழித்தடத்தின் ஒரு அங்கமாகும். ராய்ப்பூர்-தன்பாத் விரைவுச்சாலை என்றும் அழைக்கப்படும் இது, 700 கி.மீ நீளமுள்ள, நான்கு வழி அணுகல் கட்டுப்பாட்டு விரைவுச்சாலையாகும் (four-lane access-controlled expressway). இது இரு மாநிலங்களுக்கு இடையேயான தொழில் மையங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கப் பகுதிகளுக்கு விரைவான இணைப்பை வழங்கும். சுமார் 1200 கோடி ரூபாய் செலவில் உருவாகும் இந்தத் திட்டம், இரு நகரங்களுக்கு இடையேயான பயண நேரத்தை 16 மணி நேரத்திலிருந்து 9 மணி நேரமாகக் குறைக்கும்.


தேசிய நெடுஞ்சாலைகள் சட்டத்தின் பிரிவு 3A-ன் கீழ் ஜனவரி 2023-ல் வெளியிடப்பட்ட அறிவிப்பு ஒன்று, நெடுஞ்சாலைத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் மத்திய அரசின் நோக்கத்தை அறிவித்து, பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து ஆட்சேபனைகளைக் கோரியது. அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 2023-ல் பிரிவு 3D–ன் கீழ் வெளியிடப்பட்ட ஓர் அறிவிப்பில், 'செயல்முறையின் போது பெறப்பட்ட ஆட்சேபனைகள் பரிசீலிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை இறுதி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது என்று கூறப்பட்டது.


கிராம மக்கள் என்ன சொல்கிறார்கள்?


பழங்குடியின சமூகங்களின் பிரச்சினைகளைக் கையாளும் அரசியலமைப்பின் 5-வது அட்டவணையின் (Fifth Schedule) கீழ் இப்பகுதி வருவதாகவும், அட்டவணைப்படுத்தப்பட்ட பகுதிகளில் (Scheduled Areas) செயல்படும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட கிராம சபைகளுக்கு, இத்தகைய திட்டங்களை ஏற்பதற்கோ அல்லது நிராகரிப்பதற்கோ அதிகாரம் உள்ளதென அவர்கள் வாதிட்டனர். இத்திட்டத்தைத் தொடர்வதற்கு முன்பு கிராம சபைகளிடமிருந்து எந்த ஒப்புதலோ அல்லது சம்மதமோ பெறப்படவில்லை என்று அவர்கள் கூறினர். பஞ்சாயத்துகள் (பட்டியல் பகுதிகளுக்கு விரிவாக்கம்) சட்டம்-1996 (Panchayats (Extension to Scheduled Areas) Act (PESA)) கீழும், அட்டவணைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள கிராம சபைகளுக்கு நிலம், வளங்கள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பான விஷயங்களில் முடிவுகளை எடுக்க அதிகாரம் உள்ளது என்றும் அவர்கள் கூறினர்.


இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் மாநில அரசை விமர்சித்ததுடன், பஞ்சாயத்துகள் (பட்டியல் பகுதிகளுக்கு விரிவாக்கம்) சட்டத்தை (PESA) அமல்படுத்தவும் தேவையான விதிகளை வகுக்கவும் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் அமைச்சரவை பஞ்சாயத்துகள் (பட்டியல் பகுதிகளுக்கு விரிவாக்கம்) சட்ட (PESA) விதிகளுக்கு ஒப்புதல் அளித்தது.


"இந்தத் திட்டம் பஞ்சாயத்துகள் (பட்டியல் பகுதிகளுக்கு விரிவாக்கம்) சட்டத்தை (PESA) மீறுவது மட்டுமல்லாமல், 1908-ம் ஆண்டின் சோட்டாநாக்பூர் குத்தகைச் சட்டத்தையும் (Chotanagpur Tenancy Act (CNT)) மீறுகிறது. இந்தியாவின் காலனித்துவ எதிர்ப்பு இயக்கத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதற்காக வரலாற்றுரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தானா பகத் சமூகம், இன்று அச்சமூகம் இத்தகைய ஒரு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது," என்று ஜமீன் பச்சாவ் சங்கர்ஷ் சமிதியின் புரவலரும் தற்காலிகத் பொறுப்புத் தலைவருமான லோத்தே ஓரோன் கூறினார்.


அதிகாரப்பூர்வ ஆவணங்களின்படி, 2022 ஜனவரியில் பிரதான அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு, கும்லா துணை ஆணையர் ஒரு கணக்கெடுப்பை நடத்தி, உண்மையான பாதையானது சூழல் உணர்திறன் மண்டலம் மற்றும் பால்கோட் வனவிலங்கு சரணாலயம் வழியாகச் செல்வதாகக் கூறினார். பின்னர் நிர்வாகம், திருத்தப்பட்ட பாதையானது எந்தவொரு சாரணா ஸ்தல் அல்லது பழங்குடியினர் மதத் தலங்களையும் பாதிக்காது என்று கூறி, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) “விருப்பம்-3” பாதைக்கு ஒப்புதல் அளித்தது.


எனினும், ஆதிவாசிச் செயற்பாட்டாளர்கள் இந்தக் கூற்றை மறுக்கின்றனர். “ரைடிஹ் வட்டாரத்தின் கீழ் வரும் கட்கயா கிராமத்தில் உள்ளவை உட்பட, சர்னா ஆதிவாசிகளின் சமயத் தலங்கள் இத்திட்டத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றன. பல பழங்குடிப் பூசாரிகளின் நிலங்களும், தானா பகத்களின் விவசாய நிலங்களும் பாதிக்கப்படுகின்றன. இதை நாங்கள் இதனை நீதிமன்றத்தில் எதிர்த்து வழக்குத் தொடர்வோம்,” என்று ஆதிவாசி ஆர்வலரான ஜோதி குஜூர் கூறினார்.


யார் இந்த தானா பகத்துகள்?


தானா பகத்கள் என்பவர்கள், சோட்டாநாக்பூர் பகுதியின் ஓரோன் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஆதிவாசிகள் ஆவர். இவர்கள் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம், ஜமீன்தார்கள், வரி விதிப்பு மற்றும் பிற சுரண்டல் கொள்கைகளுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பிற்காக அறியப்படுகிறார்கள். இந்த இயக்கம் 1914-ல் ஜத்ரா பகத் என்பவரால் வழிநடத்தப்பட்டது.


காலப்போக்கில், இந்த இயக்கம் காந்திய சித்தாந்தத்துடன் நெருக்கமாக இணைந்தது. இதனைப் பின்பற்றுபவர்கள் வெள்ளை உடைகள், வெள்ளைத் தொப்பிகள் அணிந்து, மூவர்ணக் கொடியை ஏந்தி, அகிம்சை கொள்கைகளைப் பின்பற்றினர். பழங்குடி ஆர்வலர்கள் மற்றும் சர்னா அறிஞர்களின் (Sarna) கூற்றுப்படி, தனா பகத்துகள் (Tana Bhagat) சமூகத்தினர் விலங்கு பலியிடுதல், மது அருந்துதல் ஆகியவற்றிலிருந்து விலகி இருத்தல் மற்றும் பிற சர்னா மற்றும் கிறிஸ்தவ ஆதிவாசி சமூகங்கள் பின்பற்றும் சில வழக்கமான மத நடைமுறைகள் உள்ளிட்ட சில கலாச்சாரப் பழக்கவழக்கங்களையும் ஏற்றுக்கொண்டனர்.


தற்போது, ​​தனா பகத் சமூகத்தினர் முக்கியமாக ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள கும்லா, ராஞ்சி, லோஹர்தகா, லதேஹார், சத்ரா, சிம்தேகா, குந்தி மற்றும் பலாமு போன்ற மாவட்டங்களில் உள்ளனர். இவர்களின் மக்கள்தொகை 20,000-க்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், சில சமூகத்தினர் சத்தீஸ்கரின் சில பகுதிகளிலும் வசித்து வருகின்றனர்.


அரசின் நிலைப்பாடு என்ன?


கும்லா மாவட்ட நில கையகப்படுத்தல் அலுவலர் (District Land Acquisition Officer (DLAO)) மகேஷ்வர் மாத்தோவின் கூற்றுப்படி, பாரத்மாலா திட்டம் (Bharatmala project) தொடர்பாக நிர்வாகத்திற்கு எந்தவிதமான எதிர்ப்பும் அதிகாரப்பூர்வமாக வந்து சேரவில்லை. "எந்தவொரு எதிர்ப்பு மனுவும் எனக்கு வந்து சேரவில்லை," என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் மாத்தோ கூறினார். மேலும், தனது துறையின் பணி நிலம் கையகப்படுத்துவதுடன் மட்டுமே நின்றுவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


2023-ம் ஆண்டிலேயே நிலம் கையகப்படுத்தும் அறிவிக்கை வெளியிடப்பட்டுவிட்டதாகவும், அதேவேளையில் பிரிவு 3G-ன் கீழான நடுவர் மன்ற நடவடிக்கைகள் (arbitration proceedings) கடந்த ஆண்டு நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.


தேசிய நெடுஞ்சாலைகள் சட்டத்தின் விதிகளின்கீழ் ஒரு தீர்ப்பு அறிவிக்கப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட ரயத்துகளுக்கு (நில உரிமையாளர்கள்) அறிவிப்புகள் அனுப்பப்படுகின்றன என்று மாஹ்தோ கூறினார். இந்த அறிவிப்புகள் இழப்பீட்டுத் தொகையைப் பற்றி அவர்களுக்குத் தெரிவிப்பதோடு, தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறும் கேட்கின்றன. ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு, பொது நிதி மேலாண்மை அமைப்பு (PFMS) அமைப்பு மூலம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு இழப்பீடு நேரடியாக மாற்றப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

அட்டவணைப்படுத்தப்பட்ட பகுதியில் நிலம் கையகப்படுத்துவது குறித்து கிராமவாசிகள் எழுப்பிய கவலைகள் மற்றும் சோட்டாநாக்பூர் குத்தகைச் சட்டம் (Chotanagpur Tenancy (CNT)) போன்ற சிறப்பு சட்ட விதிகள் பொருந்துமா என்பது பற்றிக் கேட்டபோது, ​​1956-ம் ஆண்டின் தேசிய நெடுஞ்சாலைச் சட்டத்தின்கீழ் மட்டுமே இந்தக் கையகப்படுத்துதல் கண்டிப்பாக மேற்கொள்ளப்படுவதாக மாத்தோ தெரிவித்தார்.


தேசிய நெடுஞ்சாலை ஆணைய (NHAI) அதிகாரி எஸ்.கே. கௌதம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசுகையில், பாதிக்கப்பட்ட மக்களில் சுமார் 85 சதவீதம் பேர் கிட்டத்தட்ட 380 கோடி ரூபாய் இழப்பீட்டை ஏற்கனவே ஏற்றுக்கொண்டதாகக் கூறினார்.


இருப்பினும், “பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஒரு சிறு பிரிவினர் சமீபத்தில் வன்முறையில் ஈடுபட்டு, ‘சமூக விரோத சக்திகளைப்’ போல் நடந்துகொள்வதாக அவர் குறிப்பிட்டார். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட குழுவின் சில உறுப்பினர்கள் நிறுவனப் பணியாளர்கள்மீது தாக்குதல் நடத்தியதாகவும், பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது,” என கௌதம் குற்றம் சாட்டினார்.


கும்லாவின் கோட்ட வன அதிகாரி (Divisional Forest Officer (DFO)) அஹ்மத் பெலால் அன்வர், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், முன்மொழியப்பட்ட 32.4 கி.மீ நீளமுள்ள மாற்றுச் சாலையில் கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் பகுதி வனப்பகுதி வழியாகச் செல்லும் என்று கூறினார். இந்தத் திட்டத்திற்கு முதற்கட்ட வன அனுமதி ஏற்கனவே கிடைத்துவிட்டது என்றும், எனினும், பணிகளைத் தொடங்குவதற்கான இறுதி அனுமதி இன்னும் நிலுவையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


Original article : Who are the Tana Bhagats of Jharkhand and why are they opposing a highway project? -Shubham Tigga

Share:

மவுண்ட்பேட்டன் திட்டத்தின் 79-வது ஆண்டு : ஜூன்-3 பிரகடனம் துணைக்கண்டத்தை எவ்வாறு மறுவரையறை செய்தது?. -நிகிதா மோத்தா

 ஜூன் 3, 1947-ம் ஆண்டில், வைஸ்ராய் லூயிஸ் மவுண்ட்பேட்டன் பிரபு, ஜவஹர்லால் நேரு மற்றும் முகமது அலி ஜின்னா போன்றோர் பிரிட்டிஷ் இந்தியாவை இரு நாடுகளாகப் பிரிக்கப் போவதாக அறிவித்தனர். அந்தத் திட்டம் என்ன முன்மொழிந்தது?, மேலும், காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் இரண்டும் ஏன் ஒப்புக்கொண்டன?


எழுபத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பு, சமூகத்தின் ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்த மக்களும் தெருக்களிலும், பொதுப் பூங்காக்களிலும், சந்தைகளிலும் மாலை 7 மணிக்குத் திட்டமிடப்பட்ட ஒரு வரலாற்று வானொலி ஒலிபரப்பைக் கேட்க கூடினர். அந்த வழியாகச் செல்பவர்கள் அறிவிப்பைக் கேட்கும் வகையில் கடைகளில் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டன. வரலாற்றாசிரியர் யாஸ்மின் கான் தனது The Great Partition (2007) நூலில் குறிப்பிட்டதைப் போல: “பெஷாவர் முதல் திருவிதாங்கூர் வரை, கராச்சி முதல் ஷில்லாங் வரை, இந்தியா ஒரு மாபெரும் ஒருங்கிணைந்தச் செவியாக மாறி, அந்த ஒலிபரப்புகளுக்காக மூச்சற்று, உதவியற்று, நம்பிக்கையற்று காத்திருந்தது.”


இதற்கிடையில், டெல்லியில் உள்ள ஒரு ஸ்டுடியோவில், அன்றைய முக்கிய அரசியல் பிரமுகர்களான பிரிட்டிஷ் வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் பிரபு, காங்கிரஸ் சார்பில் ஜவஹர்லால் நேரு, முஸ்லிம் லீக் சார்பில் முகமது அலி ஜின்னா மற்றும் சீக்கியர்கள் சார்பாக பல்தேவ் சிங் ஆகியோர் துணைக்கண்டத்தின் எதிர்காலத்தை அறிவிக்கத் தயாரானார்கள்.


அவர்கள் வெளியிட்ட அறிவிப்பு, ஜூன் 3 பிரகடனம் என்று அறியப்பட்டது. அது என்ன முன்மொழிந்தது? மேலும், காங்கிரஸும் முஸ்லிம் லீக்கும் அதனை ஏன் ஏற்றுக்கொண்டன?


பின்தங்கிய நிலையில் இருந்த ஒரு நாடு


1947 மார்ச் 22 அன்று வைஸ்ராயாகப் பதவியேற்பதற்காக மவுண்ட்பேட்டன் பிரபு டெல்லிக்கு வந்தபோது, ​​பிரிட்டிஷ் பிரதமர் கிளமென்ட் அட்லீயிடமிருந்து ஒரு தெளிவான ஆணையை அவர் கொண்டுவந்திருந்தார். இதில், 1948 ஜூன் 30-ம் தேதிக்குள் அதிகாரம் இந்தியக் கைகளுக்கு மாற்றப்பட வேண்டும் என்பதே அந்த ஆணையின் சாரம்சம். அவர் நம் நாட்டிற்கு வந்தபோது, ஏற்கனவே தீவிரமடைந்து வந்த வகுப்புவாத வன்முறையின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. 1946 ஆகஸ்டில் நடந்த கல்கத்தா படுகொலைகளைத் தொடர்ந்து நோவாக்கலி மற்றும் பீகாரில் கலவரங்கள் வெடித்திருந்தன. அதேநேரத்தில், பதற்றமானது பம்பாய் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியிருந்தது. அமிர்தசரஸ், தக்ஷிலா மற்றும் ராவல்பிண்டியில் பெரும் வன்முறை வெடிப்புகளுடன், பஞ்சாபும் மோதலுக்குள் மூழ்கிக்கொண்டிருந்தது.


பாகிஸ்தான் என்ற யோசனை தவிர்க்க முடியாததாகிவிட்டது என்று மவுண்ட்பேட்டன் விரைவாக முடிவு செய்தார். இந்தியாவில் கலந்தாலோசனைகளை நடத்தியும், மே மாத நடுப்பகுதியில் லண்டனுக்குச் சென்று, அவர் திரும்பி வந்து 1947 ஜூன் 3 அன்று மாலை பிரிவினைத் திட்டத்தை அறிவித்தார்.


இந்தத் திட்டத்தின் மையக்கரு, பிரிட்டிஷ் இந்தியாவின் பிரிவினையை ஏற்றுக்கொண்டதுதான். பஞ்சாப் மற்றும் வங்காளத்தின் மாகாணங்களைப் பிரிப்பதா வேண்டாமா என்பது குறித்து அவற்றின் சட்டமன்றங்கள் வாக்களிக்கும் என்று அந்தக் குழு முன்மொழிந்தது. மேலும், சிந்து மாகாண சட்டமன்றம் இந்தியாவுடன் இணைவதா அல்லது பாகிஸ்தானுடன் இணைவதா என்பதை முடிவு செய்யும். மேலும், வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (North-West Frontier Province (NWFP)) மற்றும் சில்ஹெட் மாவட்டத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க அங்கு பொது வாக்கெடுப்புகள் நடத்தப்படும். ஒருவேளை பிரிவினை ஏற்பட்டால், ஒரு எல்லை ஆணையம் (Boundary Commission), குறிப்பாக எல்லைகள் குறித்துக் கடுமையான சர்ச்சை நிலவும் பஞ்சாப் மற்றும் வங்காளத்தில், எல்லைகளை குறித்து வரைவை மேற்கொள்ளும்.


இந்தத் திட்டம், இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரண்டு சுதந்திரமான தன்னாட்சிகளை (two independent dominions) உருவாக்குவதற்கும், ஒவ்வொன்றும் அதன் அரசியலமைப்புச் சபையைக் கொண்டிருப்பதற்கும் வழிவகை செய்தது. சுதேச அரசுகள் இந்த இரண்டு தன்னாட்சிகளில் ஒன்றில் சேர வேண்டியிருந்தது. மேலும், அதிகாரப் பரிமாற்றம் ஆகஸ்ட் 15, 1947-க்கு முன்கூட்டியே நடத்தப்பட்டது.


"குறிப்பாக, இந்த அறிவிப்பின் விதிமுறைகளை மாற்றியமைப்பதற்காக அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் கடைசி நிமிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன," என்று ஆயிஷா ஜலால் தனது ஒரே பிரதிநிதி: ஜின்னா, முஸ்லிம் லீக் மற்றும் பாகிஸ்தான் கோரிக்கை-1994 (The Sole Spokesman: Jinnah, the Muslim League and the Demand for Pakistan) எனும் நூலில் எழுதியுள்ளார். முஸ்லிம் லீக் கட்சியானது பஞ்சாப் மற்றும் வங்காளத்தின் பிரிவினையைத் தொடர்ந்து எதிர்த்து வந்தது. அதேவேளையில், பஞ்சாபின் முக்கிய மாவட்டங்களில் தங்களுக்குள்ள உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், எல்லை ஆணையத்திற்குத் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்குமாறு சீக்கியத் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.


எதிர்க் கட்சிகள் எவ்வாறு உடன்பட்டன?


ஜூன் 3 திட்டத்தை இந்திய தேசிய காங்கிரஸ் ஏற்றுக்கொள்வதற்குப் பல காரணிகள் வழிவகுத்தன.


ஒன்று, நாட்டின் பெரும் பகுதிகளில் பரவியிருந்த, வேகமாக அதிகரித்து வந்த மதக்கலவரத்தைக் கட்டுப்படுத்தும் விருப்பமே ஒரு முக்கியக் காரணியாக இருந்தது. ஒரு இந்திய அரசாங்கத்திடம் விரைவாக அதிகாரத்தை ஒப்படைப்பதன் மூலம் மட்டுமே அமைதியை நிலைநாட்டி, இரத்தக் கொதிப்பை நிறுத்த அதுவே சிறந்த வழி என்று காங்கிரஸ் தலைவர்கள் நம்பினர். முஸ்லிம் லீக் நிரந்தரமாக ஆட்சியைத் தடுக்கவோ அல்லது தடைசெய்யவோ கூடிய ஒரு ஒன்றுபட்ட இந்தியாவைவிட, ஒரு வலுவான மத்திய அரசாங்கத்துடன் கூடிய சிறிய ஆனால் மிகவும் ஒன்றுபட்ட இந்தியாவே சிறந்தது என்றும் அவர்கள் முடிவு செய்தனர். மௌலானா அபுல் கலாம் ஆசாத், 'இந்தியா வின்ஸ் ஃப்ரீடம்-1989' (India Wins Freedom) என்ற தனது நூலில் குறிப்பிடுவது போல, “வடமேற்கு மற்றும் வடகிழக்கில் சில சிறிய பகுதிகளை விட்டுக்கொடுத்துவிட்டு, பின்னர் ஒரு வலுவான மற்றும் ஒருங்கிணைந்த இந்தியாவைக் கட்டியெழுப்புவது சிறந்தது என்று மவுண்ட்பேட்டன் பிரபு அறிவுறுத்தினார். முஸ்லிம் லீக்குடன் ஒத்துழைப்பது இந்திய ஒற்றுமையைப் பாதிக்கும் என்ற வாதத்தால் சர்தார் படேல் ஈர்க்கப்பட்டார்….” இந்த வாதங்கள் ஜவஹர்லால் நேரு மற்றும் மகாத்மா காந்தியையும் பாதித்தன என்று ஆசாத் குறிப்பிடுகிறார்.


மவுண்ட்பேட்டனின் முந்தைய “பால்கன் திட்டத்தில்” (Plan Balkan) முன்மொழியப்பட்டிருந்த பிளவைத் தவிர்க்கவும் காங்கிரஸ் உறுதியாக இருந்தது. அத்திட்டத்தின்படி, இந்தியாவின் ஒவ்வொரு மாகாணமும் ஏற்கனவே உள்ள அரசியலமைப்புச் சபையில் சேரவோ, புதிய ஒன்றை அமைக்க ஒன்றிணையவோ அல்லது இரண்டிலிருந்தும் விலகி நிற்கவோ தேர்வுசெய்யலாம்.


தனது புத்தகத்தில், பிரிவினையை எதிர்க்கும்படி காங்கிரஸ் தலைவர்களை இணங்க வைப்பதற்கான தனது தோல்வியுற்ற முயற்சிகளை ஆசாத் விவரிக்கிறார். இதில், பிரிவினை தவிர்க்க முடியாதது என்று பட்டேலும் நேருவும் நம்பத் தொடங்கியிருந்ததாக அவர் எழுதுகிறார். ஆசாத் நினைவுகூரும்போது, “நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இந்தியாவில் இரண்டு தேசங்கள் உள்ளன என்று பட்டேல் பதிலளித்தபோது நான் ஆச்சரியமும் வேதனையும் அடைந்தேன். மேலும், முஸ்லிம்களையும் இந்துக்களையும் ஒரே தேசமாக ஒன்றிணைக்க முடியாது என்று அவர் உறுதியாக நம்பினார்.” இருப்பினும், நேரு தயக்கத்துடன் பிரிவினையை ஏற்றுக்கொண்டார். “உண்மையில், பிரிவினை அதன் இயல்பிலேயே தவறானது என்பதை அவர் ஒப்புக்கொண்டார். இருப்பினும்கூட, நிர்வாகக் குழுவின் முஸ்ஸீம் லீக் உறுப்பினர்களின் நடத்தை குறித்த தனது அனுபவத்திற்குப் பிறகு, கூட்டு நடவடிக்கைக்கான அனைத்து நம்பிக்கையையும் அவர் இழந்திருந்தார்.” காந்தியும்கூட, மவுண்ட்பேட்டனுடனான தனது கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, இறுதியில் அந்த முடிவை ஏற்றுக்கொண்டார்.


இதற்கு மாறாக, முஸ்லிம் லீக்கைப் பொறுத்தவரை, ஜூன் 3 திட்டத்தை ஏற்றுக்கொண்டது பாகிஸ்தான் உருவாக்கத்தை உறுதி செய்ததுடன், அதன் முக்கிய அரசியல் நோக்கத்தை நிறைவேற்றியது. ஜின்னாவின் தலைமையின்கீழ், இயங்கிய முஸ்ஸீம் லீக், இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு ஒன்றுபட்ட இந்தியாவில் முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக ஓரங்கட்டப்படுவார்கள் என்று அஞ்சியது. எனவே, அரசியல் சுயநிர்ணய உரிமைக்கான தெளிவான மற்றும் உறுதியான பாதையாகப் பிரிவினையை அது கருதியது.

இருப்பினும், இந்த ஏற்பாடு குறித்து ஜின்னாவுக்கும் சில ஐயங்கள் இருந்தன. கான் மேற்கோள் காட்டிய ஒரு கடிதத்தில், அவர் ஒரு பத்திரிகையாளருக்கு குறிப்பிட்டதாவது, ‘பஞ்சாபையும் வங்காளத்தையும் பிரிக்கும் முடிவுக்கு மாட்சிமை பொருந்திய மன்னரின் அரசாங்கம் ஏன் வந்தது என்பதைப் புரிந்துகொள்வது எனக்கு மிகவும் கடினமாக உள்ளது. என் கருத்துப்படி இது ஒரு தவறு... ஆனால் இப்போது நாங்கள் இந்தத் திட்டத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளோம். மேலும், இதை நாங்கள் சிறப்பாகச் செய்து முடிப்போம் என்று நான் நம்பிக்கையுடன் உணர்கிறேன்’ என்று எழுதியிருந்தார்.


தெளிவான வெற்றியாளர்களோ தோல்வியாளர்களோ இல்லை


கான் குறிப்பிடுவது போல, முஸ்லிம் லீக் பாகிஸ்தானைப் பெற்றிருந்தபோதிலும், வெற்றியாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்கும் இடையே உறுதியான நிலைப்பாடு எதுவும் இல்லை. அனைத்து சமூகங்களையும் பாதிக்கும் அந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பரவலான குழப்பமும் திசைமாற்றமும் ஏற்பட்டதாக அவர் விளக்குகிறார். இந்தியாவைப் பிரிக்கும் முடிவு இப்போது இறுதியானது. இருப்பினும், பல முக்கியமான கேள்விகளுக்குப் பதில் கிடைக்கவில்லை. மக்கள் இடம்பெயர வேண்டியிருக்குமா? எல்லைகள் சரியாக எங்கே வரையப்படும்? எந்தெந்த மாவட்டங்கள் பாகிஸ்தானின் பகுதியாக மாறும்? எந்தெந்த மாவட்டங்கள் இந்தியாவிலேயே இருக்கும்?


அந்த அறிவிப்பு வெளியான சில நாட்களில், இந்தத் திட்டம் பெரிய அளவிலான இடப்பெயர்வைத் தூண்டுமா என்று பத்திரிகையாளர்கள் மவுண்ட்பேட்டனிடம் பலமுறை கேள்வி எழுப்பினர். இதில், “மக்கள் பெருமளவில் இடம்பெயர்வதை நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?” என்று அவர்கள் கேட்டனர். இதற்கு “தனிப்பட்ட முறையில் நான் அப்படி எதையும் பார்க்கவில்லை,” என்று வைஸ்ராய் பதிலளித்தார்.


இருப்பினும், அதன் துயரமான விளைவுகள் விரைவில் உலகிற்குப் புலப்பட்டன. அடுத்த சில வாரங்களில், துணைக்கண்டத்தின் பெரும் பகுதிகளை வன்முறை சூழ்ந்துகொண்டு, வரலாற்றிலேயே மிகப்பெரிய மக்கள் இடம்பெயர்வுகளில் ஒன்றைத் தூண்டியது.


Original article : Mountbatten Plan at 79: How the June 3 Declaration redrew the subcontinent. -Nikita Mohta

Share: