மொத்த கருவுறுதல் விகிதம் (total fertility rate) குறைவது பொதுவாக வளர்ச்சி மற்றும் செழிப்புக்கான அறிகுறியாக இருந்தாலும், குறைவான குழந்தைகள் பிறப்பது பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
கடந்த வாரம், ஆந்திரப் பிரதேச அரசு சட்டமன்றத்தில் மாநிலங்களில் முதல் முன்முயற்சியான ஒரு வரைவு மக்கள்தொகை மேலாண்மைக் கொள்கையை (draft Population Management Policy) அறிமுகப்படுத்தியது. இது குடும்பங்கள் இரண்டு அல்லது மூன்று குழந்தைகளைப் பெற ஊக்குவிப்பதையும், குறிப்பாக பெண்களுக்கு சிறந்த சுகாதார வசதிகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
வரும் ஆண்டுகளில் முதியவர்களின் எண்ணிக்கை சீராக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் முதியோர்களுக்கான முதியோர் பராமரிப்பை மேம்படுத்தவும் இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட கொள்கை, மாநிலத்தின் கருவுறுதல் விகிதங்கள் குறைந்து வருவதற்கு நேரடியான பிரதிபலிப்பாகும். இது மாநிலத்தின் கருவுறுதல் விகிதம் நாட்டிலேயே மிகக் குறைவு. இது மாற்று நிலை கருவுறுதல் விகிதமான 2.1-ஐ விட மிகவும் குறைவாக உள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் மொத்த கருவுறுதல் விகிதம் (total fertility rate (TFR)) 1.5 ஆகக் குறைந்துள்ளது. அதாவது, சராசரியாக, மாநிலத்தில் ஒரு பெண் 1.5 குழந்தைகளை மட்டுமே பெற்றெடுக்கிறார்கள்.
இந்தியாவின் ஒரு சில மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான சந்திரபாபு நாயுடு, குறைந்து வரும் போக்கு குறித்து பகிரங்கமாக கவலை தெரிவித்ததுடன், அதிக குழந்தைகளைப் பெற வேண்டும் என்று குடும்பங்களை வலியுறுத்தியுள்ளார். குறைவான குழந்தைகள் பிறப்பதால் உழைக்கும் மக்கள்தொகை விகிதம் குறைந்து, ஆதரவையும் பராமரிப்பையும் தேவைப்படும் வயதானவர்களின் விகிதம் அதிகமாகிறது. இது பொருளாதார உற்பத்தித்திறனைப் பாதிக்கலாம். மேலும் அரசாங்க நிதிகளில் அழுத்தத்தை ஏற்படுத்தி, மக்கள்தொகை பலன் மக்கள்தொகைச் சுமையாக மாற்றலாம்.
ஆந்திராவின் மக்கள்தொகை விவரங்கள்
ஆந்திரப் பிரதேசத்தின் மொத்த கருவுறுதல் விகிதம் 2003-ல் 2.2 ஆக இருந்தது (ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலத்தை இணைத்ததற்கு பிறகு) 2023-ல் 1.5 ஆகக் குறைந்துள்ளது. இது 2023-க்கான தரவு சமீபத்தியது. 2014-ல் உருவாக்கப்பட்ட தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசத்தைப் போலவே அதே மொத்த கருவுறுதல் விகிதத்தைக் (TFR) கொண்டுள்ளது.
இந்தப் போக்கு இந்த இரண்டு மாநிலங்களுக்கும் தனித்துவமானது அல்ல. ஒட்டுமொத்த இந்தியாவிற்கும், இது 2003-ல் 3-ல் இருந்து இப்போது 1.9 ஆகக் குறைந்துள்ளது. மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) வீழ்ச்சி பொதுவாக வளர்ச்சி மற்றும் செழிப்பின் அறிகுறியாகும். இது மேம்பட்ட கல்வி மற்றும் சுகாதாரம், குறிப்பாக பெண்களின் முன்னேற்றம், அதிகரித்து வரும் நகரமயமாக்கல் நிலைகள், அதிகரித்துவரும் வருமான போக்குகள் மற்றும் மற்றொரு காரணி, பெரிய கூட்டுக் குடும்பங்களுக்குப் பதிலாக தனிக்குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிப்பது.
உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் இதே போன்ற முறைகளைப் பின்பற்றி வருகின்றன. இந்தியாவில், வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களை விட மிகச் சிறந்த சமூக குறிகாட்டிகளைக் கொண்ட தென் மாநிலங்கள், எப்போதும் தேசிய சராசரியைவிட மிகக் குறைந்த மொத்த கருவுறுதல் விகிதங்களைக் (TFR) கொண்டுள்ளன. இது கடந்த இருபதாண்டுகளில் மேலும் குறைந்துள்ளது. தமிழ்நாட்டின் மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) 1.3 ஆகவும், கர்நாடகா மற்றும் கேரளா 1.5 ஆகவும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுடன் இணையாகவும் உள்ளன.
மறுபுறம், பீகாரில் 2.8 மற்றும் உத்தரப் பிரதேசம் 2.6 ஆகவும் மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) உள்ளது. மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஜார்கண்ட் மற்றும் அசாம் ஆகியவை தேசிய சராசரியைவிட மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) அதிகமாக உள்ள பிற முக்கிய மாநிலங்களாகும்.
இந்த போக்குகளுக்கான அரசியல் எதிர்வினை வெவ்வேறு வழிகளில் தோன்றியுள்ளது. சந்திரபாபு நாயுடு தனது மாநிலத்தில் கருவுறுதல் விகிதம் குறைவதால் ஏற்படும் பொருளாதார தாக்கங்களில் முக்கியமாக கவனம் செலுத்தியுள்ள நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்றத்தில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தில் மக்கள்தொகை குறைவதால் ஏற்படும் தாக்கங்கள் குறித்துப் பேசியுள்ளார். உத்தரப் பிரதேசம் அல்லது பீகார் போன்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தென் மாநிலங்களின் மக்கள்தொகை பல ஆண்டுகளாகக் குறைந்துள்ளது. இது ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை பாதிக்கும். இந்த தொகுதி பங்கீடு மக்கள்தொகை அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. தென் மாநிலங்கள் நாடாளுமன்றத்தில் அவற்றின் பிரதிநிதித்துவ பலம் குறைவதைக் காணலாம்.
இதனால்தான், ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளை மறுவரையறை செய்வதற்கான ஒரு குறிப்பிட்டகாலப் பயிற்சியான தொகுதி மறுவரையறை அரசியலமைப்பு ஆணை கடந்த 50 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த இடைநீக்கம் இந்த ஆண்டு முடிவடைகிறது. இதை மேலும் நீட்டிக்க வேண்டாம் என்றும் அரசாங்கம் உறுதியாகத் தெரிகிறது. இதன் காரணமாக, இந்தப் பிரச்சினை மிக விரைவில் அரசியல் விவாதத்திற்குத் திரும்ப வாய்ப்புள்ளது.
கொள்கை நோக்கங்கள்
மக்கள்தொகை போக்கை மாற்றியமைக்க இலக்கு வைக்கப்பட்ட கொள்கையைத் தொடங்கிய முதல் மாநிலம் ஆந்திரப் பிரதேசம் ஆகும். மார்ச் 5 வியாழக்கிழமை அன்று, மாநில சட்டமன்றத்தில் வரைவுக் கொள்கையை அறிமுகப்படுத்தியபோது, இது மாநிலத்திற்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று சந்திரபாபு நாயுடு கூறினார்.
இந்தக் கொள்கையில் ஐந்து முக்கியக் கூறுகள் உள்ளன. அவை, மாத்ருத்வா (Matrutva) தாய்மார்களின் நல்வாழ்வில் கவனம் செலுத்துகிறது. கர்ப்பம் மற்றும் பிரசவத்தின் போது தாய்வழி ஆரோக்கியத்தையும் ஆதரவையும் மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். சக்தி (Shakti) பணியிடத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது அதிகமான பெண்கள் வேலைகளில் சேரவும், தொடர்ந்து இருக்கவும் ஊக்குவிக்கிறது. க்ஷேமா (Kshema) மூத்த குடிமக்களின் நலனில் கவனம் செலுத்துகிறது. இது முதியோருக்கான பராமரிப்பு மற்றும் ஆதரவு அமைப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நைபுண்யம் (Naipunyam) திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது. எதிர்காலத் தேவைகளுக்கு பணியாளர்களைத் தயார்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் சுகாதாரப் பராமரிப்புத் துறையில், குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்குத் தேவையான திறன்களும் அடங்கும். சஞ்சீவானி (Sanjeevani) மாநிலத்தின் டிஜிட்டல் பொது சுகாதார விநியோக முறையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
இந்தக் கொள்கையின்கீழ், இரண்டாவது அல்லது மூன்றாவது குழந்தை பிறக்கும்போது ரூ.25,000 ரொக்க ஊக்கத்தொகை வழங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. மூன்றாவது குழந்தை பிறந்தால், ஊட்டச்சத்து மருந்துகளை உறுதி செய்வதற்காக முதல் ஐந்து ஆண்டுகளுக்கு மாதத்திற்கு ரூ.1,000 வழங்க அரசாங்கம் முன்மொழிகிறது. அரசு நிறுவனங்களில் இரண்டாவது மற்றும் மூன்றாவது குழந்தைகளுக்கு 18 வயது வரை இலவச கல்வி வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.
ஓய்வு பெறும் நிலையை நெருங்கும் மாநில அரசு ஊழியர்கள் தடுப்பு சுகாதார பரிசோதனைகளில் கவனம் செலுத்த ரூ.50,000 மற்றும் 15 நாட்கள் விடுப்பு பெற தகுதியுடையவர்கள் ஆவர். மாநிலத்தில் உள்ள கிட்டத்தட்ட 11.7 லட்சம் கறுவுறா நிலை தம்பதிகளுக்கு (infertile couples) உதவ, பொது-தனியார் கூட்டாண்மை மாதிரிகள் மூலம் சோதனைக்குழாய் கருவுறுதல் (In-vitro fertilisation (IVF)) நடைமுறைகளுக்கு மானியம் வழங்கப்பட வேண்டும்.
இந்தக் கொள்கையின் மூலம் அடையவேண்டிய சில இலக்குகளையும் மாநில அரசு நிர்ணயித்துள்ளது. இந்த நோக்கத்திற்காக தனியார் மருத்துவமனைகள் வழங்கும் விபரீதமான சலுகைகளை கையாள்வதன் மூலம் மாநிலத்தில் அறுவை சிகிச்சை பிரசவ விகிதத்தை 67.5 சதவீதத்திலிருந்து 40 சதவீதத்திற்கும் குறைவாகக் குறைக்க அரசாங்கம் விரும்புகிறது. ஒரு அறுவை சிகிச்சை பிரசவத்திற்குப் பிறகு தம்பதிகள் அதிக குழந்தைகளைப் பெறுவதற்கு குறைவாகவே விரும்புகின்றனர். மேலும், அனைவருக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படாமல், தேவைப்பட்டால் மட்டுமே இந்த செயல்முறை மேற்கொள்ளப்படுவதை அரசாங்கம் உறுதிசெய்ய விரும்புகிறது. இதேபோல், பதின்மவயது கர்ப்பங்களை கணிசமாகக் குறைக்கவும், ஆண்களிடையே கருத்தடை நடைமுறைகளைக் குறைக்கவும் திட்டமிட்டுள்ளது.
இளம் பருவத்தினர் மற்றும் முதியவர்களின் தேவைகளைக் கையாள முக்கியமாக தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 10,000 சுகாதார உதவியாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும் இந்தக் கொள்கையின் மற்றொரு குறிக்கோள்.
"மக்கள்தொகை கட்டுப்பாடு" (population control) என்பதிலிருந்து "மக்கள்தொகை மேலாண்மை" (population management) என்பதற்கு கவனம் செலுத்துவது கருவுறுதல் விகிதங்களின் சரிவைத் தடுக்கும் என்பது மட்டுமல்லாமல், முதியோர் பராமரிப்பு மற்றும் பெண்களின் சுகாதாரம் தொடர்பான அதன் தொடர்புடைய பிரச்சினைகளையும் தீர்க்கும் என்று சந்திரபாபு நாயுடு அரசாங்கம் விரும்புகிறது. ஆந்திரப் பிரதேசத்தில் தேசிய சராசரியைவிட வேகமாக வயதான மக்கள்தொகை உள்ளது. மக்கள்தொகையின் சராசரி வயது 32.5 ஆண்டுகள் ஆகும். இது ஒட்டுமொத்த நாட்டிற்கு 28.4 ஆண்டுகள் ஆகும். அதன் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 10 சதவீதம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இது 2047-ம் ஆண்டுக்குள் 23 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திரப் பிரதேசத்தில் தொழிலாளர் தொகுப்பில் பெண்களின் பங்களிப்பு சுமார் 31 சதவீதம் ஆகும். இந்த நிலை தேசிய சராசரியான 37 சதவீதத்தை விடக் குறைவு.
மாநில அரசு இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க மாநில அரசுக்கு ஒரு சிறிய வாய்ப்பு இருப்பதாக சந்திரபாபு நாயுடு கூறினார். அரசாங்கம் இப்போது தலையிடவில்லை என்றால், மாநிலத்தின் பொருளாதார அமைப்பு சிதைந்துவிடக்க்கூடும் என்று அவர் கூறினார்.
Original article : Andhra Pradesh’s draft population policy: How a shift from ‘population control’ tries to address decline in fertility rates. -Sreenivas Janyala