1937-ம் ஆண்டின் ஷரியத் சட்டத்திற்கு எதிரான சவால், வாரிசுரிமைச் சட்டம் சிவில் சார்ந்ததா அல்லது மதம் சார்ந்ததா என்பதை எவ்வாறு வடிவமைக்கிறது? -அமால் ஷேக்

2024-ல் நிறைவேற்றப்பட்ட உத்தரகண்ட் பொது சிவில் சட்டத்தை (UCC) மேற்கோள் காட்டி, ஒரே மாதிரியான நம்பிக்கை, குடும்பம் மற்றும் குடியுரிமை கொண்ட இரண்டு முஸ்லிம் பெண்கள் இப்போது அவர்களின் அஞ்சல் குறியீடு (postal code) காரணமாக வெவ்வேறு சொத்துரிமைகளைப் பெறக்கூடிய சூழல் உருவாகியுள்ளதாக அது குறிப்பிடுகிறது.


ஒரு முஸ்லிம் பெண் தனது தந்தை இறக்கும்போது எவ்வளவு வாரிசுரிமையைப் பெறுகிறார் என்பதை எது தீர்மானிக்கிறது. இது அவருடைய மதம் அல்லது அவருடைய முகவரி சார்ந்ததா?. கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு நீதிப்பேராணை மனு (writ petition), இன்று இந்தியாவில், இந்தக் கேள்விக்கான பதிலாக 'அவரது முகவரி'யாகவே இருக்கக்கூடும் என்று அந்த மனு வாதிடுகிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்ற அமர்வு, இக்கருத்தை வெளிப்படையாக மறுக்கவில்லை.


பொது சிவில் சட்டம் (UCC) "மிகவும் பயனுள்ள பதில்" (the most effective answer) என்று இந்திய தலைமை நீதிபதி (CJI) சூர்யா காந்த், நீதிபதிகள் ஜோய்மல்யா பாக்சி மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோருடன் இணைந்து, 1937-ம் ஆண்டு முஸ்லிம் தனிநபர் சட்டம் (ஷரியத்) விண்ணப்பச் சட்டத்திற்கு (Muslim Personal Law (Shariat) Application Act) எதிரான ஒரு வழக்கை விசாரித்தனர். உத்தரகாண்டில் அமல்படுத்தப்பட்டுள்ள பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்று இந்த மனு கோருகிறது. 'உத்தரகாண்ட் பொது சிவில் சட்டம், 2024' நடைமுறைக்கு வந்தபிறகு, பிற மாநிலங்களில் தொடர்ந்து 'முஸ்லிம் தனிநபர் சட்ட (ஷரியத்) பயன்பாட்டுச் சட்டத்தைப்-1937' (Muslim Personal Law (Shariat) Application Act) பயன்படுத்துவது என்பது, வாரிசுரிமை சார்ந்த விவகாரங்களில் தன்னிச்சையானதாகவும், பகுத்தறிவற்றதாகவும், பாகுபாடு நிறைந்ததாகவும் மாறிவிட்டது என்று அந்த மனு வாதிடுகிறது.


தனிநபர் சட்ட நடைமுறைகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதா என்பதை முடிவுசெய்ய நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளதா என்று நீதிமன்ற அமர்வு கேள்வி எழுப்பியது. முஸ்லிம் வாரிசை நிர்வகிக்கும் தனி சட்டப்பூர்வ சட்டம் இல்லாததால், பரம்பரை விதிகளை ரத்து செய்யப்பட்டால் என்ன நடக்கும் என்பது குறித்தும், இது ஒரு சட்ட வெற்றிடத்தை உருவாக்கக்கூடும் என்ற கவலைகளையும் நீதிபதிகள் கூறினர்.


"அதிகப்படியான பதட்டம் புதிய சிக்கல்களை உருவாக்கக்கூடும், இறுதியில் சரிசெய்ய முயற்சிக்கும் செயல்பாட்டில் நீதிமன்றம் கிடைக்கும் நன்மைகளை பறிக்கக்கூடும்" என்று தலைமை நீதிபதி சூர்யா காந்த் குறிப்பிட்டார். மற்றொரு சட்ட அமைப்பை ஏற்படுத்தாமல் 1937 சட்டத்தை நீக்குவது முஸ்லிம் பெண்களை சட்டப் பாதுகாப்பு இல்லாமல் விட்டுவிடக்கூடும் என்று எச்சரித்தார். இந்த விதிகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டால் சாத்தியமான தீர்வுகளைக் குறிப்பிட மனுவில் திருத்தம் செய்யுமாறு மனுதாரர்களிடம் நீதிமன்றம் கேட்டுக்கொண்டதுடன், இதன் விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது.


மனுவில் என்ன சொல்கிறது?


மனு மதரீதியான வாதங்களை அடிப்படையாகக் கொண்டது அல்ல, அரசியலமைப்பு கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. இது பரம்பரை மற்றும் சாசன உரிமைகளுக்கு மட்டுமே பொருந்தும். மேலும், உத்தரகண்ட் பொது சிவில் சட்டம் (UCC) ஒரு காலத்தில் 1937 ஷரியத் விண்ணப்பச் சட்டத்தை அரசியலமைப்புரீதியான சவால்களிலிருந்து பாதுகாத்த பொதுவான தன்மையை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டது என்ற அடிப்படையில் உள்ளது.


ஒருமைப்பாடு இனி இல்லை என்ற நிலை ஏற்பட்ட பிறகு, ‘முஸ்லிம் தனிநபர் சட்ட (ஷரியத்) பயன்பாட்டுச் சட்டம்-1937’ (Muslim Personal Law (Shariat) Application Act) என்பது முற்றிலும் மதச்சார்புடைய தன்மையைக் கொண்டது என்று உரிமை கோர முடியாது என்று அந்த மனு கூறுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும், எவ்விதக் கேள்விக்கும் இடமின்றி இச்சட்டம் பொருந்தும் என்றும் கூற இயலாது. மாறாக, அது ஒரு சிவில் சட்டமாகவே கருதப்பட வேண்டும். இது, ஒரு சிவில் சட்டமாக இருப்பதால், அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள சமத்துவக் கோட்பாடுகளுக்கு அது உட்பட்டதாக அமைகிறது.


இந்த இடைவெளி தோன்றிய பிறகு, அச்சட்டம் வெறும் ஒரு மதச்சார்புடைய நிலையாக இருப்பதை நிறுத்திவிட்டது என்று அந்த மனு மேலும் வாதிடுகிறது. மேலும், சிவில் சட்டங்களை அரசியலமைப்பின் பிரிவுகள் 14, 15 மற்றும் 21 ஆகிய பிரிவுகளின் கீழ் பரிசீலிக்க முடியும்.


ஷரியத் சட்டத்தின்கீழ், ஒரு முஸ்லிம் ஆண் தனது சொத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் சுதந்திரமாக உரிமை கோர முடியாது. அவர் தனது சொத்தில் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே தீர்மானிக்க முடியும். மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கு குர்ஆனில் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி அவரது சட்டப்பூர்வ வாரிசுகளுக்குச் செல்ல வேண்டும். உத்தரகண்ட் பொது சிவில் சட்டத்தின் கீழ், அந்த கட்டுப்பாடு நீக்கப்படுகிறது. ஒரே மதத்தைப் பின்பற்றுபவர்கள், ஒரே குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒத்த சொத்துக்களை வைத்திருப்பவர்கள் இப்போது ஒரே நாட்டிற்குள் சிவில் சட்டத்தின்கீழ் வித்தியாசமாக நடத்தப்படுகிறார்கள் என்று மனு கூறுகிறது.


அரசியலமைப்புப் பிரிவு 14-ன் கீழ் மனுவில் குறிப்பிட்டுள்ள வழக்கு முக்கியப் பகுதியாக உள்ளது. 1937 சட்டத்தின் உண்மையான நோக்கம் பொதுவான தன்மையைக் கொண்டுவர அறிமுகப்படுத்தப்பட்டது. பிரிட்டிஷ் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் ஒரு பொதுவான சட்டத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். இந்த பிரச்சினை இனி மத பன்மைத்துவத்தைப் (religious pluralism) பற்றியது அல்ல என்று மனு வாதிடுகிறது. இது தன்னிச்சையான சட்ட பன்மைத்துவத்தைப் (legal pluralism) பற்றியது என்று அது கூறுகிறது. இந்திய ஒன்றியம் ஒரு மாநிலத்தில் முஸ்லிம் பெண்களுக்கு சம உரிமைகளைப் பெற அனுமதிக்கிறது, ஆனால் மற்ற மாநிலங்களுக்கு அதே உரிமைகளை நீட்டிக்கவில்லை என்றால், அது பாகுபாட்டை உருவாக்குகிறது என்று அது கூறுகிறது. மனுவின்படி, இது அரசியலமைப்புப் பிரிவு 14 மற்றும் பிரிவு 15-ன் கீழ் மதங்களுக்கு இடையேயான பாகுபாட்டிற்கும் வழிவகுக்கிறது.


ஒரே மாதிரியான நம்பிக்கை, குடும்ப பின்னணி மற்றும் குடியுரிமையைப் பகிர்ந்து கொள்ளும் இரண்டு முஸ்லிம் பெண்கள் இப்போது அவர்களின் அஞ்சல் குறியீடு காரணமாக வெவ்வேறு மாநிலங்களில் வசிப்பதால் மட்டுமே வெவ்வேறு சொத்துரிமைகளைப் பெறுகிறார்கள் என்று மனு வாதிடுகிறது.


நியாயமான அடிப்படைக் காரணம் இல்லாவிட்டால், அரசு மக்களை சமமாக நடத்துவதை அரசியலமைப்புப் பிரிவு 14 தடை செய்கிறது. ஒரு நியாயமான காரணம் இருந்தால் மட்டுமே அது அவ்வாறு செய்ய முடியும். இந்த யோசனை நியாயமான வகைப்பாடு (reasonable classification) என்று அழைக்கப்படுகிறது. ஒரு வகைப்பாடு செல்லுபடியாகும் வகையில் இருக்க, அது ஒரு உண்மையான வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அந்த வேறுபாடு சட்டத்தின் நோக்கத்துடனும் தெளிவாக தொடர்புடையதாக இருக்க வேண்டும். இந்த வழக்கில், வேறுபாட்டிற்கு தெளிவான அல்லது தர்க்கரீதியான அடிப்படை இல்லை என்றும், ஒரு பெண் வசிக்கும் இடத்திற்கும் அவள் பெற வேண்டிய சொத்தின் பங்கிற்கும் இடையே நியாயமான தொடர்பு இல்லை என்றும் மனுதாரர்கள் கூறுகிறார்கள்.


வரலாற்றுரீதியாக தனிப்பட்ட சட்டத்தை இந்த வகையான சட்ட சவாலில் இருந்து பாதுகாத்த மத சுதந்திர உத்தரவாதமான அரசியலமைப்புப் பிரிவு 25-ல், மரபுரிமை "முவாமலாத்-muamalat" (சிவில் பரிவர்த்தனைகளின் களம்)-க்கு சொந்தமானது, "இபாதத்-ibadat" (வழிபாட்டுச் செயல்கள்) என்பதன் கீழ் வராது என்று மனு கூறுகிறது. இதன் ஒரு பகுதியாக, பரம்பரை சமூக தொடர்புகள் மற்றும் சிவில் பரிவர்த்தனைகள் என வகைப்படுத்துகிறது. மேலும், வாரிசுரிமை வழிபாட்டுச் செயல்களின்கீழ் வராது. அவ்வாறு செய்வதன் மூலம், வாரிசுரிமை ஒரு மதச்சார்பற்ற சிவில் ஒப்பந்தமாக அது கூறுகிறது. இது ஒரு முக்கிய மத நடைமுறை அல்ல. மேலும், அதை சிவில் கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவதன் மூலம், அரசியலமைப்புப் பிரிவு 25(2)(b)-ன் கீழ் சிவில் விஷயங்களைப் பரிந்துரைக்கும் அதிகாரத்தை அரசு பெறுகிறது.


உத்தரகண்டிற்கு வெளியே ஷரியத் சட்டத்தைப் பயன்படுத்துவது "பொருளாதார வன்முறையில் அரசு ஈடுபடுவதற்குச் சமம் என்பதைக் குறிக்கிறது". இது மதத்தை மறுப்பது அல்ல, மாறாக "பிரிவு 21-ன் கீழ் கண்ணியமான வாழ்க்கை" என்று அது கூறுகிறது.


உத்தரகண்ட் பொது சிவில் சட்டம் 2024 மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு பாஜக அரசாங்கத்தால் பிப்ரவரி 2024-ல் நிறைவேற்றப்பட்டது. இது சுதந்திரத்திற்குப் பிறகு எந்தவொரு இந்திய மாநிலமும் இயற்றிய இந்த வகையான முதல் சட்டமாக இது மாறியது. பொது சிவில் சட்டம் 1998 முதல் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.


மாநிலத்தின் பொது சிவில் சட்டம் பட்டியல் பழங்குடியினரைத் தவிர அனைத்து மக்களுக்கும் பொருந்தும். மாநில அதிகாரிகளிடம் பதிவு செய்ய வேண்டும் அல்லது இணங்காததற்காக சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கோரும் நேரடி உறவுகள் குறித்த அதன் விதிகள் உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தில் சவால் செய்யப்படுகின்றன.


1937 ஷரியத் சட்டம்


ஷரியத் சட்டம் முஸ்லிம்கள் மீது திணிக்கப்படவில்லை. சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் மத அமைப்புகள் நீண்டகாலமாக பிராந்திய பழக்கவழக்கங்கள் பெண்களுக்கு குர்ஆனிய மரபுரிமைச் சட்டம் உரிமையாகக் கொண்ட பங்குகளைக் கூட மறுப்பதாக வாதிட்டு வந்தன. பஞ்சாப், வங்காளம் மற்றும் தென்னிந்தியாவின் சில பகுதிகளில், உள்ளூர் பழக்கவழக்கங்கள் குர்ஆனிய விதிகளை முற்றிலுமாக மாற்றியமைத்தன.


1937-ம் ஆண்டு சட்டம், பெண்களுக்கு நிலையான பங்குகளை வழங்கும் ஷரியா சட்டத்துடன்கூடிய பழக்கவழக்கங்களை ரத்து செய்தது. இது பல பெண்களுக்கு இருந்த முதல் சட்டப்பூர்வ தளம் ஷரியா சட்டத்தளமாகும். குர்ஆன் மற்றும் இஸ்லாமிய நீதித்துறையின் போதனைகளிலிருந்து பெறப்பட்ட "ஃபாரைட்" (faraid) என்று ஷரியா மரபுரிமையை பரிந்துரைக்கிறது. இந்தப் பங்குகள் நிலையானவை மற்றும் கட்டாயமானவை. ஒரு ஒற்றை மகள் சொத்தில் பாதியைப் பெறுகிறாள். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மகள்கள் சேர்ந்து மூன்றில் இரண்டு பங்கைப் பெறுகிறார்கள். குழந்தைகள் இருந்தால் ஒரு விதவைக்கு எட்டில் ஒரு பங்கும், யாரும் இல்லையென்றால் நான்கில் ஒரு பங்கும் கிடைக்கும். ஒரு உயில் இந்த நிலையான பங்குகளை ரத்து செய்யவோ குறைக்கவோ முடியாது. "வாசிய்யா" (wasiyyah) அல்லது சாசன உயில் (testamentary will), சொத்தின் மூன்றில் ஒரு பங்கிற்கு மட்டுமே. இது வாரிசுகள் அல்லாதவர்களுக்கு மட்டுமே சொத்தை வழங்க முடியும்.


மனு இந்த முறையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த முறையின்கீழ் பெண்கள் ஆண்களைவிட குறைவாகவே பெறுகிறார்கள் என்று மனுதாரர்கள் கூறுவது சரிதான். ஆனால் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (All India Muslim Personal Law Board (AIMPLB)) மற்றும் இஸ்லாமிய அறிஞர்கள் விரைவாக சுட்டிக்காட்டுவது போல், மகன்களுக்கும் மகள்களுக்கும் இடையிலான 2:1 விகிதம் ஒரு பெரிய நிதி கட்டமைப்பிற்குள் இருப்பதாக கூறுகிறது.


அதிக பங்கைப் பெறும் ஆணுக்கு நிதிக் கடமைகள் உள்ளன. அவர் "நஃபக்கா" (nafaqah) வழங்க வேண்டும். இதன் பொருள், அவர் தனது மனைவியை, தனது மகள்கள் திருமணம் செய்து கொள்ளும் வரை ஆதரிக்க வேண்டும். அவர் சார்ந்திருக்கும் பெண் உறவினர்களையும் ஆதரிக்க வேண்டும். இதற்கு நேர்மாறாக, ஒரு பெண்ணின் வாரிசுரிமை முழுமையாக அந்தப் பெண்ணிற்குச் சொந்தமானது. அந்தப் பெண் அதை வீட்டிற்குச் செலவிட வேண்டியதில்லை. திருமணத்தில் அந்தப் பெண் பெறும் "மெஹர்" அந்த பெண்ணுக்கு மட்டுமே சொந்தமானது. "ஃபரைட்" (Faraid) முறை முஸ்லிம் பெண்களுக்கு வாரிசுரிமை பெறும் உரிமையையும் வழங்கியது. இஸ்லாமியத்திற்கு முந்தைய அரேபியா முறையில், பெண்கள் மற்றவர்களுக்கு அனுப்பப்படும் சொத்தாகக் கருதப்பட்டதால், "ஃபரைட்" (Faraid) முஸ்லிம் பெண்களுக்கு வாரிசுரிமை பெறும் உரிமையையும் உறுதி செய்தது.


அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் (AIMPLB) செய்தித் தொடர்பாளர் சையத் காசிம் ரசூல் இலியாஸ், மனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் வாரியத்தின் நிலைப்பாட்டை விளக்கினார். "பராமரிப்பு மற்றும் அனைத்து வீட்டுச் செலவுகளும் ஆணின் மீதுதான் உள்ளன. அதேநேரத்தில் பெண் அத்தகைய கடமைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார். ஒரு பெண் தனது பெற்றோரிடமிருந்து எதைப் பெற்றாலும், அல்லது வேலைவாய்ப்பின் மூலம் சம்பாதித்தாலும், அந்தப் பெண் வீட்டுச் செலவுகளுக்குச் செலவிட வேண்டிய அவசியமில்லை. அந்தப் பெண் தனது தனிப்பட்ட வருமானத்தை முழுவதுமாக அந்தப் பெண்ணுடைய சொந்த விருப்பப்படி செலவிடலாம்."


75 ஆண்டுகால முன்னுதாரணங்கள்

முக்கிய சட்டப் பிரச்சினையாக பம்பாய் மாநிலம் vs நரசு அப்பா மாலி-1951 (State of Bombay vs Narasu Appa Mali) தீர்ப்பு உள்ளது. தனிநபர் சட்டங்கள், பிரிவு 13(1) இன் கீழ் "நடைமுறையில் உள்ள சட்டங்கள்" அல்ல என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தனிநபர் சட்டங்கள் சட்டத்திலிருந்து அல்ல, மத நூல்களிலிருந்து அவற்றின் அதிகாரத்தைப் பெறுகின்றன என்று அது கூறியது. எனவே, அடிப்படை உரிமைகளை மீறியதற்காக அவற்றை எதிர்த்து வழக்குத் தொடர முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தின் 2018 சபரிமலை தீர்ப்பில், நீதிபதி டி.ஒய். சந்திரசூட் 1951 தீர்ப்பை குறைபாடுள்ள பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டது என்று அவர் கூறினார். இருப்பினும், 1951-ம் ஆண்டு தீர்ப்பு முறையாக ரத்து செய்யப்படவில்லை.


ஷயாரா பானோ vs இந்திய ஒன்றியம் (Shayara Bano vs Union of India) வழக்கில் 2017-ம் ஆண்டு முத்தலாக் தீர்ப்பு இந்த பிரச்சினையைச் சமாளிக்க ஒரு வழியைக் கண்டறிந்தது. ஷரியா விண்ணப்பச் சட்டம் ஷரியாவை சட்டப்பூர்வ சட்டமாக மாற்றியதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. இதன் காரணமாக, இது அரசியலமைப்பின் 13-வது பிரிவின் கீழ் "நடைமுறையில் உள்ள சட்டம்" (law in force) என்று தகுதி பெற்றது. இதன் விளைவாக, உடனடி முத்தலாக் ஒரு தன்னிச்சையான சட்டப்பூர்வ ஏற்பாடாகும் என்பதால் ரத்து செய்யப்பட்டது.


தற்போதைய மனுவும் பரம்பரை உரிமைக்கான அதே அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. இந்த வேறுபாடு முக்கியமானது. முத்தலாக் ஏற்கனவே முஸ்லிம் சமூகத்தைப் பிரித்திருந்தது. நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்குவதற்கு முன்பே அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (AIMPLB) கூட இதை "விரும்பத்தகாதது" என்று விவரித்திருந்தது. இதற்கு நேர்மாறாக, ஃபரைத் (Faraid) அத்தகைய உள் கருத்து வேறுபாட்டை எதிர்கொள்வதில்லை. இது நேரடியாக குர்ஆனை அடிப்படையாகக் கொண்டது. இது ஒரு தெய்வீக கட்டளையாக இஸ்லாமிய நீதித்துறையின் பல்வேறு பள்ளிகளிலும் பின்பற்றப்படுகிறது.


கடந்த வாரம், அமர்வு ஒரு நடைமுறை கவலையை எழுப்பியது. 1937 சட்டத்தின் பரம்பரை விதிகள் ரத்து செய்யப்பட்டு, நாடாளுமன்றம் ஒரு புதிய சட்டத்தை இயற்றவில்லை என்றால், முஸ்லிம் வாரிசுரிமையை எது நிர்வகிக்கிறது? மனுதாரர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், அந்த சூழ்நிலையில் இந்திய வாரிசுரிமைச் சட்டம் பொருந்தும் என்று வாதிட்டார். நீதிபதி பாக்சி அதை ஏற்கவில்லை. ஒரு சட்டத்தை ரத்து செய்வது தேவையற்ற வெற்றிடத்தை உருவாக்கக்கூடும் என்றும், "சட்டமன்றத்தின் ஞானத்திற்கு இணங்குவது நல்லது" (defer to the wisdom of the legislature) என்றும் கூறினார்.


நீதிமன்றங்கள் தனிநபர் சட்டங்களில் தலையிடும்போது, விளைவுகள் நீதிமன்ற அறைக்கு அப்பால் செல்வதைக் கண்டுள்ளன. 1985-ம் ஆண்டில், ஷா பானு வழக்கில், விவாகரத்து பெற்ற ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் பராமரிப்புக்கு உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஒரு வருடத்திற்குள், இந்தத் தீர்ப்பின் பிரதிபலிப்பாக, நாடாளுமன்றம் 1986-ம் ஆண்டு முஸ்லிம் பெண்கள் (விவாகரத்து உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்தை (Muslim Women (Protection of Rights on Divorce) Act) நிறைவேற்றியது. இந்த புதிய சட்டம், நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்படுத்திய தாக்கத்தைக் குறைத்தது. தனக்கு ஆதரவாக அமைந்திருந்த அத்தீர்ப்பை, பொதுவெளியில் நிராகரிக்குமாறு ஷா பானுவே பிற்காலத்தில் வற்புறுத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. அத்தீர்ப்பின் மையக் கோட்பாடு உடனடியாக மீட்டெடுக்கப்படவில்லை. 2001-ம் ஆண்டில், வேறொரு தனி வழக்கின் மூலமாகவே அது மீட்டெடுக்கப்பட்டது.


பரந்த அளவிலான கேள்வி


இவ்விவகாரம் மதம் சார்ந்ததோ அல்லது இறையியல் சார்ந்ததோ அல்ல என்று அந்த மனு வாதிடுகிறது. குர்ஆனை மறுவிளக்கம் செய்யுமாறு தான் கோரவில்லை என்றும் அது குறிப்பிடுகிறது. மேலும், நம்பிக்கை சார்ந்த விதிமுறைகளை ரத்து செய்யவோ அல்லது நீக்கவோ தான் முயலவில்லை என்றும் அது கூறுகிறது. இவ்விவகாரம் மதச்சார்பற்றதே தவிர, மதரீதியானது அல்ல என்று அது வலியுறுத்துகிறது.


எனினும், முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை, அந்த வேறுபாடு பொருந்தாது. "ஃபரைட்" (Faraid) முறைக்கும், 1937-ஆம் ஆண்டு சட்டத்திற்கும் இடையே எவ்விதப் பிரிவும் இல்லை. அந்தச் சட்டத்தை, ஒரு இறைக்கட்டளையை (divine command) அரசு அங்கீகரித்ததற்கான சான்றாகவே அவர்கள் நோக்குகின்றனர்.


அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (AIMPLB) இந்த மனுவை "தீங்கானது" (mischievous) என்றும் மத சுதந்திரத்திற்கான அரசியலமைப்பு உத்தரவாதத்தை மீறுவதாகவும் விவரித்தது. இந்த வாரியத்தின் நிலைப்பாடு பல நிலைகளைக் அடிப்படையாகக் கொண்டது.


முதலாவதாக, இன்னும் ரத்து செய்யப்படாத நரசு அப்பா மாலி தீர்ப்பு (Narasu Appa Mali judgment), தனிநபர் சட்டத்தை அரசியலமைப்புரீதியாக சவால் செய்ய முடியுமா என்ற கேள்வியை ஏற்கனவே தீர்த்து வைத்துள்ளது. இரண்டாவதாக, ஃபராய்ட் (faraid) என்பது கொள்கை தேர்வு தொடர்பான விஷயம் மட்டுமல்ல, அவை குர்ஆனின் குறிப்பிட்ட வசனங்களிலிருந்து பெறப்பட்டவை. மேலும், முஸ்லிம் அறிஞர்கள் அவற்றை தெய்வீகமாக கட்டளையிட்டதாகக் கருதுகின்றனர் என்றும் ஃபரைட்டை சட்டமன்றம் அல்லது நீதிமன்றத்தால் மாற்ற முடியாது என்று அவர்கள் நம்புகிறார்கள்.


மனு ஒரு அறிக்கையில் அதன் வலுவான மற்றும் மிகவும் முக்கிய வாதத்தை முன்வைக்கிறது. இதில், குடியரசின் ஒரு பகுதியில் சமத்துவம் அடையப்பட்டவுடன், மற்றொரு பகுதியில் மத பன்மைத்துவத்தின் பெயரில் அதை மறுக்க முடியாது என்று அது கூறுகிறது. அரசியலமைப்பு ஒழுக்கத்திற்கு சமத்துவத்தின் விரிவாக்கம் தேவை, அதன் கட்டுப்பாடு அல்ல என்று அது வாதிடுகிறது.


மேலும், மனு ஒரு புவியியல் வாதத்தையும் முன்வைக்கிறது. இருப்பினும், இந்த வாதத்தை இரண்டு வெவ்வேறு வழிகளில் புரிந்து கொள்ளலாம். உத்தரகண்ட் பொது சிவில் சட்டத்தின் இருப்பு உத்தரகண்டில் உள்ள முஸ்லிம் பெண்களுக்கும் மற்ற இடங்களில் உள்ளவர்களுக்கும் இடையே அரசியலமைப்பிற்கு முரணான சமத்துவமின்மையை உருவாக்கினால், அதற்கான தீர்வு கோட்பாட்டளவில் முஸ்லிம்களுக்கான உத்தரகண்ட் பொது சிவில் சட்டத்தை திரும்பப் பெறுவதாக இருக்கலாம். அப்படியானால், சட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட வேண்டியதில்லை. மனு இந்த சாத்தியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், மனு குறிப்பிடுவது போல் புவியியல்ரீதியில் அதன் தர்க்கம் தெளிவானதாகவோ அல்லது நேரடியானதாகவோ இல்லை என்பதை இந்த எடுத்துக்காட்டு விளக்குகிறது.



Original Link: How a challenge to 1937 Shariat Act frames inheritance law as a civil statute vs religious instrument question?.


Share:

சோனம் வாங்சுக்கின் தேசிய பாதுகாப்பு சட்டத் (NSA) தடுப்புக்காவலை ஒன்றிய அரசு ரத்துசெய்துள்ள நிலையில், லடாக் ஏன் 6-வது அட்டவணை பாதுகாப்புகளை கோருகிறது?

முன்னாள் ஜம்மு & காஷ்மீர் மாநிலமானது, லடாக் மற்றும் ஜம்மு & காஷ்மீர் என இரண்டு ஒன்றியப் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு, லடாக் அதிக ஜனநாயக பிரதிநிதித்துவத்திற்காகவும், அதன் சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சாரத்திற்கான பாதுகாப்புகளுக்காகவும் போராடி வருகிறது.


6-வது அட்டவணையின் கீழ் மாநில அந்தஸ்து மற்றும் பாதுகாப்புகளைக் கோரும் லடாக் இயக்கத்தின் மத்தியில் கைது செய்யப்பட்ட கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (National Security Act (NSA)) கீழ் ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் தடுப்புக்காவலை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது.


செப்டம்பர் 24 அன்று லடாக்கில் வன்முறைப் போராட்டங்களைத் தூண்டியதாகக் கூறி வாங்சுக் என்பவர் செப்டம்பர் 26 அன்று கைது செய்யப்பட்டார். இதில், நான்கு பேர் காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.


மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முட்டுக்கட்டைக்கு மத்தியில் லடாக் அமைப்புகள், மேலும் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


லடாக் ஏன் இந்தப் பாதுகாப்புகளைக் கோருகிறது? என்பது குறித்து கீழே குறிப்பிட்டுள்ளது,


லடாக்கில் போராட்டங்களைத் தூண்டியது எது?


இந்தப் பிரச்சினை 2019-ம் ஆண்டு முதல் தொடங்குகிறது. அந்த ஆண்டில், அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டு, ஜம்மு & காஷ்மீர் மாநிலம் இரண்டு ஒன்றியப் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. அவற்றில் ஒன்று, சட்டமன்றத்தைக் கொண்ட 'ஜம்மு காஷ்மீர்' மற்றொன்று, சட்டமன்றம் இல்லாத 'லடாக்' ஆகும்.


லடாக்கில் சட்டமன்றம் இல்லாத காரணத்தினால், அது மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த மாற்றத்தின் தாக்கத்தை லடாக் மக்கள் உணர்ந்தனர். ஜம்மு & காஷ்மீரின் தேர்வாணைய வாரியங்களிலிருந்து (recruitment boards) லடாக் பிரிக்கப்பட்ட பிறகு, தன்னாட்சி கவுன்சில்களின் (Autonomous Councils) முக்கியமான அதிகாரங்களை இழந்ததையும், வேலைவாய்ப்புகளும் குறைந்ததையும் அவர்கள் உணரத் தொடங்கினர்.


முன்னதாக, ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் லடாக்கிற்கு நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA-க்கள்) இருந்தனர். தற்போது, ​​இப்பகுதி முழுமையாக அரசு அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுகிறது. ஸ்ரீநகரிலிருந்து நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டபோது இருந்ததைவிட, தற்போது அரசு தங்களுக்கு வெகு தொலைவில் இருப்பதாக லடாக்கைச் சேர்ந்த பல மக்கள் கருதுகின்றனர்.


மேலும், ஜம்மு & காஷ்மீரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய 'குடியிருப்பு உரிமை கொள்கை' (Domicile Policy) லடாக் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் நிலம், வேலைவாய்ப்புகள், மக்கள்தொகை சமநிலை மற்றும் கலாச்சார அடையாளம் ஆகியவை குறித்து மக்கள் கவலையடைந்துள்ளனர்.


லடாக் ஏன் 6-வது அட்டவணையின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறது?


லடாக்கின் மக்கள்தொகையில் 90%-க்கும் அதிகமானோர் பட்டியல் பழங்குடியினரைச் சேர்ந்தவர்கள் என்பதால், இப்பகுதியை 6-வது அட்டவணையின் கீழ் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது. குறிப்பாக லே மாவட்டத்தில் (Leh district) பெரும்பான்மையான பௌத்த மக்கள் வசிக்கின்றனர்.


அரசியலமைப்பின் 244 வது பிரிவின் கீழ் 6-வது அட்டவணை, சில வடகிழக்கு மாநிலங்களில் பழங்குடியினர் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளை நிர்வகிக்கும் தன்னாட்சி மாவட்ட கவுன்சில்கள் (Autonomous District Councils (ADC)) எனப்படும் தன்னாட்சி நிர்வாகப் பகுதிகளை உருவாக்குவதற்கு வழங்குகிறது.


தன்னாட்சி மாவட்ட கவுன்சில்கள் (ADC) ஐந்து வருட பதவிக் காலத்துடன் சேர்ந்து 30 உறுப்பினர்கள் வரை உள்ளனர். மேலும் நிலம், காடு, நீர், விவசாயம், கிராம சபைகள், சுகாதாரம், துப்புரவு, கிராமம் மற்றும் நகர அளவிலான காவல் போன்றவற்றில் சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை உருவாக்க முடியும். தற்போது, வடகிழக்கில் 10 தன்னாட்சி மாவட்ட கவுன்சில்கள் (ADC) உள்ளன. அசாம், மேகாலயா மற்றும் மிசோரமில் தலா மூன்று மற்றும் திரிபுராவில் ஒன்று உள்ளது.


லடாக்கில் இரண்டு மலை கவுன்சில்கள் (Hill Councils) உள்ளன. அவை லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டுக் குழுமம் (Ladakh Autonomous Hill Development Council (LAHDC)) லே மற்றும் லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டுக் குழுமம் (LAHDC) கார்கில் ஆகியவையாகும். ஆனால் இரண்டும் 6-வது அட்டவணையின் கீழ் இல்லை. அவற்றின் அதிகாரங்கள், வாகன நிறுத்துமிடக் கட்டணங்கள் மற்றும் மத்திய அரசால் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நில ஒதுக்கீடு மற்றும் பயன்பாடு போன்ற சில உள்ளூர் வரிகளை வசூலிப்பதில் மட்டுமே உள்ளன.


சோனம் வாங்சுக் ஏன் கைது செய்யப்பட்டார்?


சோனம் வாங்சுக் ஒரு பொறியாளர் மற்றும் நிலையான தயாரிப்புகளை வடிவமைக்கும் ஒரு கண்டுபிடிப்பாளர். 2009-ம் ஆண்டு வெளியான 3 இடியட்ஸில் (3 Idiots) என்ற இந்தி திரைப்படமான ஆமிர் கான் எழுதிய ஒரு கதாபாத்திரத்திற்கு உத்வேகம் அளித்ததற்காக அவர் பரவலாக அறியப்படுகிறார்.


2018-ம் ஆண்டில், "தொலைதூர வட இந்தியாவில் கற்றல் அமைப்புகளில் அவரது தனித்துவமான முறையான, ஒத்துழைப்பு மற்றும் சமூகத்தால் இயக்கப்படும் சீர்திருத்தத்தை..." அங்கீகரிப்பதற்காக, அவருக்கு மதிப்புமிக்க ரமோன் மகசேசே விருது (Ramon Magsaysay Award) வழங்கப்பட்டது.


சமீபத்திய ஆண்டுகளில், வாங்சுக் லடாக்கில் நிர்வாக சுயாட்சி குறித்து கவலைகளை எழுப்பியுள்ளார். 2019-ம் ஆண்டில், இந்திய அரசியலமைப்பின் 6-வது அட்டவணையின்கீழ் லடாக்கிற்கு திட்டமிடப்பட்ட பகுதி அந்தஸ்து கோரி அப்போதைய மத்திய பழங்குடி விவகார அமைச்சர் அர்ஜுன் முண்டாவுக்கு அவர் ஒரு கடிதம் எழுதினார்.


6-வது அட்டவணையின் கீழ் பாதுகாப்புகள் என்பது 2019-ம் ஆண்டில் பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதி என்றும், இந்திய அரசு தனது வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும் என்றும் சோனம் வாங்சுக் வாதிட்டார்.


6-வது அட்டவணையின் கீழ் மாநில அந்தஸ்து மற்றும் பாதுகாப்புகளைக் கோரி 2025-ம் ஆண்டு நடந்த போராட்டங்களில் அவர் முன்னணிப் பங்காற்றினார். மேலும் இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக அவர் உண்ணாவிரதப் போராட்டத்தையும் மேற்கொண்டார்.


ஆனால், செப்டம்பர் 24 அன்று லே மாவட்டத்தில் வெடித்த வன்முறைப் போராட்டங்களைத் தூண்டியதற்கு மத்திய அரசு அவரைக் குற்றம் சாட்டியது. இதில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 50 பேர் காயமடைந்தனர்.


லடாக்கில் முந்தைய போராட்டங்கள்


கடந்த ஆண்டு அதிக சுயாட்சி கோரிக்கையை முன்வைத்து லடாக்கில் போராட்டங்கள் நடந்தது இது முதல் முறையல்ல. 2019-ம் ஆண்டில் மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துப்ஸ்தான் சேவாங் அவர்களை ஆதரித்தார். பின்னர், அவர் லே அபெக்ஸ் அமைப்பை (Leh Apex Body (ABL)) உருவாக்கினார். அதேநேரத்தில், கார்கிலில் உள்ள அமைப்புகளும், கார்கில் ஜனநாயகக் கூட்டணியை (KDA) உருவாக்க ஒன்றிணைந்தன.


மார்ச் 6, 2024 அன்று, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, லே அபெக்ஸ் அமைப்பு (ABL) மற்றும் கார்கில் ஜனநாயக கூட்டணி (KDA) தோல்வியடைந்ததால், சோனம் வாங்சுக் மற்றும் பலர் லே மாவட்டத்தில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினர். அவர் தண்ணீர் மற்றும் உப்பை மட்டுமே சாப்பிட்டு 21 நாட்கள் உறைபனி வெப்பநிலையில் வெளியில் தூங்கினார்.


அதைத் தொடர்ந்து, சீன எல்லைக்கு திட்டமிடப்பட்ட 'பஷ்மினா அணிவகுப்பு' (Pashmina march) ரத்து செய்யப்பட்டது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 144 இன் கீழ் தடை உத்தரவுகளை விதிப்பதாக நிர்வாகம் எச்சரித்ததாக சோனம் வாங்சுக் கூறினார். லே மாவட்டத்தில் பிரபலமான பஷ்மினா ஆடுகளை (Pashmina goats) பாரம்பரியமாக வளர்த்துவரும் மேய்ப்பர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்த இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது.


செப்டம்பர் 2024-ல், 'டெல்லி சலோ பாதயாத்திரை' (Delhi Chalo Padyatra) லே அபெக்ஸ் அமைப்பால் (ABL) ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் லடாக்கின் மாநில அந்தஸ்து, 6-வது அட்டவணையின் நீட்டிப்பு, ஆரம்பகால வேலைவாய்ப்பு நியமனச் செயல்முறை, அத்துடன் லடாக்கிற்கான பொதுப் பணி ஆணையம் மற்றும் லே மற்றும் கார்கில் மாவட்டங்களுக்கு தனி மக்களவை இடங்கள் ஆகியவற்றிற்கான நான்கு அம்ச செயல்திட்டத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டது.


6-வது அட்டவணையின் கீழ் லடாக்கை சேர்க்க முடியுமா?


செப்டம்பர் 2019-ல், பட்டியல் பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் லடாக்கை 6-வது அட்டவணையின் கீழ் சேர்க்க பரிந்துரைத்தது. புதிய ஒன்றிய பிரதேசம் பெரும்பாலும் பழங்குடியினர் கொண்டதாகவும், 97% க்கும் அதிகமான பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதி என்றும் அது கூறியது. நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அங்கு நிலம் வாங்கவோ அல்லது கையகப்படுத்தவோ தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அது குறிப்பிட்டது. லடாக் ஒரு தனித்துவமான கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது, அதற்கு பாதுகாப்பு தேவை என்றும் ஆணையம் மேலும் கூறியது.


குறிப்பாக, வடகிழக்குக்கு வெளியே உள்ள எந்தப் பகுதியும் 6-வது அட்டவணையில் சேர்க்கப்படவில்லை. உண்மையில், சில இடங்களில் பழங்குடி மக்கள் அதிகமாகக் வசிக்கும் மணிப்பூரில் கூட, தன்னாட்சி கவுன்சில்கள் 6-வது அட்டவணையில் சேர்க்கப்படவில்லை. முற்றிலும் பழங்குடியினரான நாகாலாந்து மற்றும் அருணாச்சலப் பிரதேசமும் ஆறாவது அட்டவணையின் கீழ் இல்லை.


"லடாக்கை 6-வது அட்டவணையில் சேர்ப்பது கடினமாக இருக்கும். 6-வது அட்டவணை வடகிழக்குக்கானது என்று அரசியலமைப்பு தெளிவாகக் கூறுகிறது. நாட்டின் பிற பகுதிகளில் உள்ள பழங்குடிப் பகுதிகளுக்கு, 5-வது அட்டவணை உள்ளது," என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.


இருப்பினும், இது அரசாங்கத்தின் தனிப்பட்ட அதிகாரமாகவே நீடிக்கிறது. அவ்வாறு செய்யத் தேர்வுசெய்தால், இந்த நோக்கத்திற்காக அரசியலமைப்பைத் திருத்துவதற்கான மசோதாவை அறிமுகப்படுத்தலாம்.


Original Link: As Centre revokes Sonam Wangchuk’s NSA detention, revisiting why Ladakh is seeking Sixth Schedule protections.


Share:

உங்கள் வாடிக்கையாளரை அறிதல் (Know Your Customer (KYC)) நடைமுறை தொடர்பான விதிமுறைகள் என்ன? -ரோஷ்னி யாதவ்

முக்கிய அம்சங்கள் :


கடந்த ஆண்டு ஜூன் மாதம், இந்திய ரிசர்வ் வங்கியானது உங்கள் வாடிக்கையாளரை அறிதல்  (Know Your Customer (KYC)) நடைமுறை தொடர்பான விதிமுறைகள் குறித்த முதன்மை உத்தரவில் (Master Direction) தொடர்ச்சியான பல மாற்றங்களை அறிவித்தது. இதில் வணிக நிருபர்கள் KYC-ஐ செயல்படுத்துவதில் வணிக நிருபர்களுக்கு உதவ அனுமதிப்பது மற்றும் 'குறைந்த ஆபத்துள்ள' (low risk) பிரிவில் உள்ள வாடிக்கையாளர்களின் KYC விவரங்களைப் புதுப்பிக்க வங்கிகளுக்கு ஒரு வருடம் அவகாசம் அளித்தது. இந்த செயல்முறையை முடிக்க வங்கிகளுக்கு ஜூன் 2026 வரை அவகாசம் உள்ளது.


மத்திய அரசு அதன் முக்கிய பணப் பரிமாற்றத் திட்டமான பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனாவை (Pradhan Mantri Jan Dhan Yojana) அறிமுகப்படுத்திய பிறகு, வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது. கணக்குகளில் ஏற்பட்ட இந்த மிகப்பெரிய அதிகரிப்பு காரணமாக, வாடிக்கையாளர்களின் அடையாளங்களைச் சரிபார்ப்பது மிகவும் கடினமாகிவிட்டது என்று வங்கியாளர்கள் கூறுகின்றனர்.


இந்த நிலைமையானது, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் மற்றும் வைப்புத்தொகையாளர்கள் இருவரையும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஒழுங்குமுறையாளர்களின் (Regulatory) அழுத்தம் காரணமாக, பல கணக்கு வைத்திருக்க கட்டுப்பாடு ஏற்படுத்த வழிவகுத்தது. சிலவற்றில், கணக்குகள்கூட முடக்கப்பட்டுள்ளன. இது வாடிக்கையாளர்களை கவலையடையச் செய்துள்ளது. அதேநேரத்தில், வங்கி ஊழியர்கள் இணக்கத் தேவைகளைப் பூர்த்தி செய்ய சிரமப்படுகிறார்கள்.


இந்த வலியுறுத்தல் பெரும்பாலும் இணக்கத் தேவையின் அழுத்தங்கள், உள்-ஆபத்து கட்டுப்பாடுகள் மற்றும் வங்கிகள் தங்கள் செயல்பாடுகளில் கூடுதல் எச்சரிக்கையுடன் உள்ளன என்று வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், KYC புதுப்பிப்புகளுக்கான தொடர்ச்சியான கோரிக்கைகள் துன்புறுத்தலுக்கு சமம் என்று வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.


இந்தியாவில் 250 கோடிக்கும் அதிகமான வங்கிக் கணக்குகள் இருப்பதால், இணக்கப் பணிச்சுமை (compliance workload) அதிகமாகிவிட்டதாக வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர். பாரத ஸ்டேட் வங்கி மட்டும் 50 கோடிக்கும் அதிகமான வங்கிக் கணக்குகளைக் கொண்டுள்ளது. ஒரு முன்னணி தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் மேலாளர் சமீபத்தில் KYC புதுப்பித்தல் செயல்பாட்டில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டி, அமலாக்க நிறுவனங்களுக்கு புகார் அளித்தார்.


கடந்த ஆண்டு, உங்கள் வாடிக்கையாளரை அறிதல்  (KYC) இணக்கத்தை உறுதி செய்வதற்கான அழுத்தம் தீவிரமடைந்துள்ளதாக வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர். 'அதிக ஆபத்து' கொண்ட வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும், 'நடுத்தர ஆபத்து' கொண்ட வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு எட்டு வருடங்களுக்கும் மற்றும் 'குறைந்த ஆபத்து' கொண்ட வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் KYC ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று விதிமுறைகள் கட்டாயப்படுத்துகின்றன.


இருப்பினும், இந்த விதிமுறை பெரும்பாலும் வங்கிகளால் மீறப்படுகிறது. அவை "குறைந்த ஆபத்துள்ள" வாடிக்கையாளர்கள் "அதிக ஆபத்துள்ள" பிரிவில் வைக்கப்படுகிறார்கள். மேலும், ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஒருமுறை KYC விவரங்களைப் புதுப்பிக்குமாறு அவை கோரப்படுகின்றன. ஒரு சம்பளதார வாடிக்கையாளர் தனது இந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். இதில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் KYC சரிபார்ப்புகளின் காரணமாகத் தான் பல சிக்கல்களைச் சந்தித்ததாக அவர் கூறினார்.


ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் அதிகாரியின் கூற்றுப்படி, ஒவ்வொரு கணக்கும் முழுமையாக KYC இணக்கமாக இருப்பதை உறுதி செய்வதற்காக வங்கித் துறை தொடர்ச்சியான ஒழுங்குமுறை ஆய்வுக்கு உட்பட்டுள்ளது.


உங்களுக்குத் தெரியுமா? 


அரசாங்கத்தின் முதன்மை நிதி உள்ளடக்கத் திட்டமான பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY)) ஆகஸ்ட் 28, 2014 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது.


இது நிதிச் சேவைகளுக்கான அணுகலை உறுதி செய்வதற்கான ஒரு தேசிய நிதி உள்ளடக்கம் (Financial Inclusion) ஆகும். இதன் பொருள், அடிப்படை சேமிப்பு மற்றும் வைப்பு கணக்குகள், பணம் அனுப்புதல், கடன், காப்பீடு, ஓய்வூதியம், மலிவு விலையில் மக்கள் நிதிச் சேவைகளை எளிதாக அணுகமுடிவதை உறுதிசெய்வதே இதன் நோக்கமாகும்.


பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனாவின் (PMJDY) கீழ், கணக்கு தொடங்குவதற்கு மக்கள் எவ்விதக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை, கணக்கைப் பராமரிப்பதற்கான கட்டணங்கள் ஏதுமில்லை, கணக்கில் குறைந்தபட்ச இருப்பு கட்டணங்கள் வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு இலவச 'RuPay' பற்று அட்டை (Debit card) வழங்கப்படுகிறது. இந்த அட்டையுடன் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான விபத்துக் காப்பீட்டு வசதியும் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் மூலம் 10,000 ரூபாய் வரையிலான 'ஓவர் டிராஃப்ட்' (overdraft) வசதியையும் பெற முடியும்.


பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) கணக்குகள் நேரடி பலன் பரிமாற்றம் (Direct Benefit Transfer (DBT)), பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana (PMJJBY)), பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (Pradhan Mantri Suraksha Bima Yojana (PMSBY)), அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana (APY)), குறு அலகுகள் மேம்பாடு மற்றும் மறுநிதியளிப்பு முகமை வங்கி (Pradhan Mantri MUDRA Yojana (MUDRA)) போன்ற திட்டத்திற்கு தகுதியானவையாகும்.



Original Link: What are KYC norms?


Share:

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் FASTag ஆண்டு அனுமதிச்சீட்டு கட்டணத்தை உயர்த்தியது: என்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன? - தீரஜ் மிஸ்ரா

அதிகப்படியான சுங்கச்சாவடி கட்டணங்களிலிருந்து பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கவும், பயணத்தை எளிதாக்கவும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று இந்த ஆண்டு அனுமதிச்சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இது குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விவரங்கள் இங்கே.


இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highway Authority of India (NHAI)), வரவிருக்கும் 2026-27-ஆம் நிதியாண்டிற்கான (FASTag) ஆண்டு அனுமதிச்சீட்டு கட்டணத்தை மாற்றியமைத்துள்ளது. மார்ச் 12 அன்று வெளியிடப்பட்ட ஒரு உத்தரவின்படி, ஏப்ரல் 1 முதல், வணிக நோக்கமற்ற வாகனங்களைப் பயன்படுத்துவோர் (non-commercial vehicle users) ஆண்டு சீட்டைப் பெற, முன்பு நிர்ணயிக்கப்பட்ட ரூ. 3000 என்ற கட்டணத்திற்குப் பதிலாக, இனி ரூ. 3075 செலுத்த வேண்டும்.


அதிகப்படியான சுங்கச்சாவடி கட்டணங்களிலிருந்து பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கவும், பயணத்தை எளிதாக்கவும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று இந்த ஆண்டு அனுமதிச் சீட்டை அறிமுகப்படுத்தப்பட்டது.


இந்தத் திட்டத்தின்கீழ், வணிக நோக்கமற்ற பயன்பாட்டிற்காக பதிவு செய்யப்பட்ட கார், ஜீப் அல்லது வேன் வைத்திருக்கும் ஒருவர் மற்றும் செயல்பாட்டில் உள்ள FASTag கொண்டவர் இந்த அனுமதிச் சீட்டைப் பெற தகுதியானவர் ஆவார். இந்த அனுமதிச்சீட்டு ஒரு ஆண்டு காலத்திற்கு அல்லது தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எந்த ஒரு சுங்க சாவடி வழியாகவும் 200 முறை கடக்கும்வரை செல்லுபடியாகும். ஒவ்வொரு சுங்க சாவடியிலும் வசூலிக்கப்படும் கட்டணத்தைப் பொருட்படுத்தாமல் இந்த நுழைவு சீட்டை பயன்படுத்தலாம்.


FASTag ஆண்டு அனுமதிச்சீட்டு 'Rajmargyatra' எனும் மொபைல் செயலி மூலமாகவோ அல்லது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின்  இணையதளம் மூலமாகவோ வாங்கிக்கொள்ளலாம்.


இந்தக் கட்டண உயர்வு, 'தேசிய நெடுஞ்சாலைக் கட்டணம் (விகித நிர்ணயம் மற்றும் வசூல்) (திருத்தம்) விதிகள், 2025 விதிகளுக்கு ஏற்ப செய்யப்பட்டுள்ளது. இந்த விதிகளின்படி, ஆண்டுதோறும் ஆண்டு அனுமதிச்சீட்டு கட்டணம் திருத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


எத்தனை சாலைப் பயனர்களிடம் ஆண்டு அனுமதிச்சீட்டு உள்ளது?


சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்திடம் (Ministry of Road Transport and Highways (MoRTH)) உள்ள தரவுகளின்படி, தற்போது 50 லட்சத்திற்கும் அதிகமான தேசிய நெடுஞ்சாலைப் பயனர்கள் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்துவதற்கு இந்த ஆண்டு அனுமதி சீட்டைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த எண்ணிக்கையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள, தேசிய நெடுஞ்சாலை வலையமைப்பில் (National Highway network) நடைபெறும் வணிக நோக்கமற்ற கார் பரிவர்த்தனைகளில் 28% (நான்கில் ஒரு பகுதியை விட) தற்போது FASTag ஆண்டு அனுமதி சீட்டு வாயிலாகவே மேற்கொள்ளப்படுகின்றன.


2016-ஆம் ஆண்டில் FASTag திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை மொத்தம் 11.86 கோடி FASTag-குகள் வழங்கப்பட்டுள்ளதாக அந்தத் தரவுகள்  தெரிவிக்கின்றன. இவற்றில், 5.9 கோடி FASTag-குகள் நாடு முழுவதும் செயல்பாட்டில் உள்ளன. இவை தேசிய நெடுஞ்சாலைச் சுங்கச்சாவடிகளில் மின்னணு முறையில் கட்டணம் செலுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் பயனர் கட்டணத்தில் 98%-க்கும் அதிகமான தொகை FASTag மூலமாகவே வசூலிக்கப்படுகிறது.


வருடாந்திர அனுமதிச் சீட்டுப் பயன்பாட்டிற்குச் சிறந்த சுங்கச்சாவடிகள் எவை?


சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் (MoRTH) தரவுகளின்படி, டெல்லி-குருகிராம் எல்லையில் அமைந்துள்ள பிஜ்வாசன் (Bijwasan) கட்டணச் சுங்கசாவடியில் வருடாந்திர அனுமதிச்சீட்டின் பயன்பாடு அதிகமாக உள்ளது. இங்கு கடந்து செல்லும் மொத்த கார்களில் 57% வாகனங்கள் இந்த அனுமதிச்சீட்டைப் பயன்படுத்துகின்றன. இதற்கு அடுத்தபடியாக, டெல்லியில் உள்ள 'நகர்ப்புற விரிவாக்கச் சாலை-II'-ன் முக்கியக் கட்டண வசூல் சுங்கசாவடியாக முண்ட்கா (Mundka) சுங்கச்சாவடி உள்ளது. இங்கு கடந்து செல்லும் வணிகம் சாராத வாகனங்களில் ஏறக்குறைய 53% வாகனங்கள் வருடாந்திர அனுமதிச்சீட்டைப் பயன்படுத்துகின்றன. இதேபோல், டெல்லிக்கு அருகிலுள்ள சோனிபட்-பாவனா நெடுஞ்சாலையில் (NH-334P) அமைந்துள்ள ஜின்ஜோலி (Jhinjholi) கட்டணச் சாவடியைக் கடந்து செல்லும் வணிகம் சாராத வாகனங்களில் 53% வாகனங்கள் FASTag வருடாந்திர அனுமதிச்சீட்டைப் பயன்படுத்துகின்றன.


பிராந்திய வாரியான தரவுகளைப் பார்க்கும்போது, ​​வருடாந்திர அனுமதிச்சீட்டு பயன்பாட்டில் சண்டிகர் முதலிடத்தில் உள்ளது; நாடு முழுவதும் நடைபெறும் மொத்த வருடாந்திர அனுமதிச்சீட்டு பரிவர்த்தனைகளில் 14% சண்டிகரிலேயே நடைபெறுகின்றன. இதற்கு அடுத்தபடியாகத் தமிழ்நாடு 12.3% உடனும், டெல்லி 11.5% உடனும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. ஆகஸ்ட் 15, 2025 அன்று அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, ஜனவரி 2026 வரையிலான காலகட்டத்தில், FASTag வருடாந்திர அனுமதிச்சீட்டு வாயிலாக 26.55 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் பதிவாகியுள்ளன.


இந்த அனுமதிச்சீட்டின் கீழ் அனைத்துச் சுங்கச்சாவடிகளும் வருமா?


இல்லை. இந்த அனுமதிச்சீட்டு தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய விரைவுச்சாலைகளில் அமைந்துள்ள 1150 சுங்கச் சாவடிகளில் மட்டுமே  செல்லுபடியாகும். மாநில அரசுகள் அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் நிர்வகிக்கப்படும் விரைவுச்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் (SH) போன்றவற்றில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில், இந்த FASTag ஒரு சாதாரண FASTag-ஆகவே செயல்படும்; அங்குப் பொருந்தக்கூடிய வழக்கமான பயனர் கட்டணங்களே வசூலிக்கப்படும்.




இந்த அனுமதிச்சீட்டு கட்டாயமா?


இல்லை. வருடாந்திர அனுமதிச்சீட்டைத் தேர்வு செய்யாத பயனர்களுக்கு, தற்போது நடைமுறையில் உள்ள வழக்கமான FASTag கட்டமைப்பு தொடர்ந்து செயல்படும்.


வருடாந்திர அனுமதிச்சீட்டு செயல்படுத்தப்பட்ட நாளிலிருந்து 200 பயணங்களை நிறைவு செய்தாலோ அல்லது ஓராண்டு காலம் முடிவடைந்தாலோ, அது தானாகவே மீண்டும் ஒரு சாதாரண FASTag-ஆக மாறிவிடும். இருப்பினும், ஓராண்டுக்கான செல்லுபடிக்காலம் இன்னும் முடிவடையாத நிலையிலும், 200 பயணங்களுக்கான வரம்பை மேற்கொண்டுவிட்டால், பயனர் மீண்டும் ஒரு புதிய வருடாந்திர அனுமதிச்சீட்டை வாங்கிக்கொள்ளலாம்.


Original Link: NHAI increases rate of the FASTag Annual pass: What has changed?


Share:

2026-ஆம் ஆண்டுக்கான நிதி சுகாதாரக் குறியீடு - ரோஷ்னி யாதவ்

நிதி சுகாதாரக் குறியீட்டின் (Fiscal Health Index (FHI)) இரண்டாவது பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் குறியீடு எதைப் பற்றியது? இது ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?


தற்போதைய செய்தி?


சில நாட்களுக்கு முன்னர் நிதி ஆயோக், 2023-24-ஆம் ஆண்டுகளுக்கான நிதி ஆயோக் நிதியாண்டிற்கான '2026-ஆம் ஆண்டுக்கான நிதி சுகாதாரக் குறியீடு (FHI) வெளியிட்டது. இது நிதி சுகாதாரக் குறியீட்டின் இரண்டாவது பதிப்பாகும்; இது இந்தியாவின் மாநில அளவிலான நிதிச் செயல்பாடுகளை மதிப்பிடுகிறது. இந்த பதிப்பு, இந்தியாவின் மாநிலங்களின் நிதி செயல்திறனை மதிப்பிடுவதற்காக உருவாக்கப்பட்டது. குறியீடு வடகிழக்கு மற்றும் இமயமலை மாநிலங்களையும் சேர்த்து மதிப்பீட்டு அளவை விரிவுபடுத்தியுள்ளது. மேலும், நிதி நிலைத்தன்மையை (Fiscal Sustainability) சரியாக அளவிட சில புதிய அல்லது மேம்படுத்தப்பட்ட குறியீடுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. 


முக்கிய அம்சங்கள்


1. வேளாண்மை, வறுமை ஒழிப்பு, மனித வளர்ச்சி, நகரமயமாக்கல் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற முக்கியத் துறைகளுக்கு வளங்களை ஒதுக்கீடு செய்வதில் இந்திய மாநிலங்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றன. இது போன்றத் துறைகளில் மேற்கொள்ளப்படும் திறமையான நிதி மேலாண்மை, பொருளாதார வளர்ச்சியைத் தூண்டவும், சமூக நலனை மேம்படுத்தவும், பிராந்தியப் பொருளாதார ஒருங்கிணைப்பை வளர்க்கவும் உதவும்.


2. இந்தச் சூழலில், இந்திய மாநிலங்களின் நிதிச் செயல்பாடுகளை மதிப்பிடுவதற்கும் ஒப்பிடுவதற்கும் ஒரு விரிவான கட்டமைப்பாக இந்த 'நிதி சுகாதாரக் குறியீடு' (FHI) இருந்து வருகிறது.


3. இந்தக் குறியீட்டின் முதல் பதிப்பு 18 முக்கிய மாநிலங்களை மட்டுமே கவனத்தில் கொண்டிருந்தது. ஆனால், இரண்டாவது பதிப்பில் அந்த 18 பொதுப் பிரிவு மாநிலங்களுடன் (General Category States) சேர்த்து 10 வடகிழக்கு மற்றும் இமயமலை மாநிலங்களையும் மதிப்பீடு செய்கிறது. இதன் மூலம், 2023-24-ஆம் ஆண்டுகளுக்கான இந்தியாவின் நிதிப் பன்முகத்தன்மையை இன்னும் முழுமையாக பிரதிபலிக்கும் வகையில் இந்தக் குறியீடு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியுள்ளது. இந்த மாநிலங்களை சேர்த்ததான் மூலம், புவியியல்ரீதியான தொலைவு, மக்கள்தொகை தன்மைகள் மற்றும் அரசு சேவைகளை வழங்குவதற்கான அதிக செலவுகள் போன்ற காரணிகளால் உருவாகும் நிதி செயல்முறை (Fiscal patterns) குறித்து  அதிகக் கவனம் செலுத்துகிறது.


4. மாநிலங்களின் நிதி சுகாதாரத்தை அளவிடுவதற்கு, நிதி சுகாதாரக் குறியீடு தொடர்ந்து ஐந்து முக்கிய 'நிதித் தூண்களை' (fiscal pillars) அடிப்படையாகக் கொண்டுள்ளது. அந்த ஐந்து தூண்கள் செலவினங்களின் தரம், வருவாய் திரட்டல், நிதி பொறுப்புணர்வு, கடன் குறியீடு மற்றும் கடன் நிலைத்தன்மை ஆகியன ஆகும்.


Knowledge Nugget | Fiscal Health Index 2026: Key highlights for UPSC and other competitive exams

5. ஒடிஷா மாநிலம் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது மற்றும் கடந்த ஆண்டைவிட மாநிலத்தின் மதிப்பெண் உயர்ந்துள்ளது. கோவா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களும் சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களாக உள்ளன. குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களும் தொடர்ந்து முதல் ஐந்து இடங்களில் உள்ளன.

6. ஹரியானா மாநிலம், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது மூன்று இடங்கள் முன்னேறி குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. பீகார், கர்நாடகா, தெலங்கானா போன்ற மாநிலங்கள் சிறிய அளவு  முன்னேற்றம் அடைந்துள்ளதை காட்டுகின்றன. ஆனால், பஞ்சாப், மேற்கு வங்காளம், கேரளா மாநிலங்கள் தொடர்ந்து தரவரிசையின் கடைசி இடங்களில் உள்ளன.

7. ஒட்டுமொத்தமாக, முன்னணி இடங்களில் உள்ள மாநிலங்கள் சிறந்த நிதி பொறுப்புணர்வு (Fiscal Discipline) மற்றும் வளங்களைத் திரட்டும் திறனையும் (Resource Mobilisation) காட்டுகின்றன. அதேநேரத்தில், தரவரிசையில் கடைசி இடங்களில் உள்ள மாநிலங்கள் அதிக வளர்ச்சி சாரா செலவினங்களையும் குறைந்த நிலையான நிதி முறைகளையும் (sustainable fiscal patterns) காட்டுகின்றன.

8. சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்கள் (ஒடிஷா, கோவா, ஜார்கண்ட்) பின்வரும் அம்சங்களால் அறியப்படுகின்றன. அதிக சுய வரிப் பங்குகள் 60%-க்கு மேல் உள்ளன. வலுவான மூலதனச் செலவினம் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 4-5% ஆகும். குறைந்த நிதிப் பற்றாக்குறை மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 3%-க்கும் குறைவான அளவாகும். மிதமான கடன் அளவு (மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 25%-க்கும் குறைவான அளவாகும். இந்த மாநிலங்கள் நிதி மேலாண்மையில் வலுவாக செயல்படுகின்றன.


9. குஜராத், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், தெலுங்கானா, உத்தரப்பிரதேசம் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்கள் தரவரிசையில் முக்கிய இடங்களில் உள்ளன. அதேசமயம், செயல்திறன் கொண்ட மாநிலங்களாக மத்தியப் பிரதேசம், ஹரியானா, பீகார், தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் உள்ளன .

10. இந்த குறியீட்டில் மேற்கு வங்கம், கேரளா, ஆந்திரா மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்கள் சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களாக உள்ளன. இந்த மாநிலங்கள் தொடர்ச்சியான வருவாய் மற்றும் நிதி பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன. அவை பெரும்பாலும் நிதிப் பொறுப்பு மற்றும் வரவு செலவுத் திட்ட மேலாண்மை (Fiscal Responsibility and Budget Management (FRBM)) விதிமுறைகளை மீறுகின்றன. மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 35-45%  அதிக கடன் அளவுகள், நிலையான செலவுகளில் 50-60% ஈடுசெய்யப்பட்ட செலவினங்கள், 15-20%-ஐ விட அதிகமான வட்டி செலுத்துதல்கள் மற்றும் ஒப்பீட்டளவில் குறைந்த வளர்ச்சி செலவினங்களை எதிர்கொள்கின்றன.

வடகிழக்கு மாநிலங்கள் (NE) / இமயமலை மாநிலங்களின் தரவரிசை

1. வடகிழக்கு / இமயமலை மாநிலங்கள் முக்கிய மாநிலங்களிலிருந்து தனித்தனியாக தரவரிசைப்படுத்தப்பட்டு மூன்று குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன,

(i) இலக்கு அடைந்தவர் (Achiever) : அருணாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் போன்ற மாநிலங்களாகும்.

(ii) சாதனையாளர் (Performer) : அசாம், மேகாலயா, மிசோரம், சிக்கிம், திரிபுரா போன்ற மாநிலங்களாகும்.

(iii) முயற்சியாளர் (Aspirant) : இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர், நாகாலாந்து போன்ற மாநிலங்களாகும்.

2. அருணாச்சலப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து உத்தரகண்ட் மற்றும் திரிபுரா போன்ற மாநிலங்கள் வலுவான செலவினத் தரம், வருவாய் திறன் மற்றும் கடன் மேலாண்மை போன்றவற்றை வெளிப்படுத்துகின்றன. அதே, நேரத்தில் இமாச்சலப் பிரதேசம் மற்றும் மணிப்பூர் போன்ற மாநிலங்கள் பலவீனமான வருவாய் மற்றும் தொடர்ச்சியான நிதி பற்றாக்குறையின் காரணமாக கடைசி இடங்களில் உள்ளன.

நிலையான வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goals (SDG)) இந்தியா குறியீடு

1. நிதி ஆயோக்கின் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான இந்தியா குறியீடு, சுகாதாரம், கல்வி, பாலினம், பொருளாதார வளர்ச்சி, நிறுவனங்கள், காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு அளவுருக்களில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முன்னேற்றத்தை மதிப்பிடுகிறது. டிசம்பர் 2018-ல் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த குறியீடு, இந்தியாவில் நிலையான வளர்ச்சி இலக்குகளின் முன்னேற்றத்தை கண்காணிக்கும் முக்கியமான கருவியாக மாறியுள்ளது.

2. நிலையான வளர்ச்சி இலக்குகளின் இந்திய குறியீட்டு மதிப்பெண்கள் 0–100 வரை இருக்கும். ஒரு மாநிலம்/யூனியன் பிரதேசங்களின் மதிப்பெண் அதிகமாக இருந்தால், இலக்கை அடைய அதிக காலம் தேவைப்படும். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அவற்றின் நிலையான வளர்ச்சி இலக்குகளின் இந்திய குறியீட்டு மதிப்பெண்ணின் அடிப்படையில் நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்கள்: 0–49; மதிப்பெண்களை கொண்டுள்ளன: 50–64மதிப்பெண்களை கொண்டுள்ளன; செயல்திறன் கொண்ட மாநிலங்கள்: 65–99, 0–49; மதிப்பெண்களை கொண்டுள்ளன. 100. NITI-யின் ஆயோக் நிலையான வளர்ச்சி இலக்குகள்  குறியீட்டின்படி, 2023-24-ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மதிப்பெண் 71 ஆகும்.

SDG இந்தியா குறியீட்டு மதிப்பெண்கள் 0–100 வரை இருக்கும். ஒரு மாநிலம்/ஒன்றியப் பகுதியின் மதிப்பெண் அதிகமாக இருக்கும் அளவுக்கு, இலக்கை நோக்கிய தூரத்தில் அதிகம் கடக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கும். மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகள் SDG இந்தியா குறியீட்டு மதிப்பெண்ணின் அடிப்படையில் நான்கு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன: முயற்சியாளர் (Aspirant): 0–49; சாதனையாளர் (Performer): 50–64; முன்னிலை வகிப்பவர் (Front-runner): 65–99; இலக்கு அடைந்தவர் (Achiever): 100. நிதி ஆயோக் SDG குறியீட்டின்படி, 2023-24-இல் இந்தியாவின் மதிப்பெண் 71 ஆகும்.


Original Link: Fiscal Health Index 2026


Share:

தண்ணீரை மையமாகக் கொண்டு இந்தியாவின் காலநிலை மீள்திறனை மேம்படுத்துதல். -கிரிஜா கே. பாரத், எஸ்.கே. சர்க்கார்

பெலெம் குறியீடுகளின் (Belém indicators) வழிகாட்டுதலோடு, வலுவான மற்றும் மீண்டுவரக்கூடிய நீர் மேலாண்மை அமைப்புகளை எவ்வாறு உருவாக்குவது என்பதை இந்தியா 'உலகளாவிய தெற்கு (Global South)'  எனப்படும் உலகளாவிய வளரும் நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாகக் காட்டமுடியும்.


நவம்பர் மாதம் 2025-ஆம் ஆண்டில் பிரேசிலின் பெலெம் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டின் 30-வது அமர்வு (Conference of the Parties (COP 30)), "செயல்பாட்டிற்கான மாநாடு" (COP of Implementation) என்று அழைக்கப்பட்டது. இது பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ளும் 'தகவமைப்பு' முறையைப் புரிந்துகொள்வதில் ஒரு முக்கிய மாற்றத்தைக் குறித்தது: அதாவது, தகவமைப்பு என்பது வெறும் மீள்தன்மைக்கான வாக்குறுதி மட்டுமல்ல, அது நெருக்கடியான காலங்களில் செயல்படும் அமைப்புகளைக் கொண்டு அளவிடக்கூடியதாகவும், பொறுப்புக்கூறத்தக்கதாகவும் இருக்கவேண்டும் என்பதாகும். இந்த மாற்றத்தின் மையப்புள்ளியாக 'நீர்' மாறியுள்ளது; இது உள்கட்டமைப்புத் திட்டமிடலில் இருந்து விலகி, காலநிலை மாற்றத்திலிருந்து தப்பிப்பிழைப்பதற்கான அடிப்படைத் தேவையாக மாறியுள்ளது. முதன்முறையாக, உலகளாவிய தகவமைப்பு குறிகாட்டிகளில் நீர், துப்புரவு மற்றும் சுகாதாரம் (Water, Sanitation, and Hygiene (WASH)) ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இது நீர்-உணவு-காலநிலை ஆகியவற்றுக்கு இடையேயான பிணைப்பை  மறுசீரமைத்துள்ளதுடன், இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.


தண்ணீரின் வழியாக உணரப்படும் காலநிலை மாற்றம்


காலநிலை மாற்றத்தின் தாக்கம் மற்றெல்லாவற்றையும்விட நீரின் மூலமாகவே மிகத் தீவிரமாக உணரப்படுகிறது. வெள்ளப்பெருக்கு நகரங்களை மூழ்கடிக்கிறது, வறட்சி கிராமப்புறப் பொருளாதாரத்தை நலிவடையச் செய்கிறது, உருருகின்ற பனிப்பாறைகள் இமயமலை நதி அமைப்புகளைச் சீர்குலைக்கின்றன, கடலோர நிலத்தடி நீரில் உப்பு நீர் ஊடுருவுகிறது, மற்றும் சீரற்ற பருவமழை உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைகிறது. குறிப்பாக, நெல் விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் கரிமக் கழிவுகள் ஆகியவற்றின் மூலமாக மனிதர்களால் உருவாக்கப்படும் மீத்தேன் (Methane) உமிழ்வில் சுமார் 40% விவசாயத் துறையிலிருந்தே கிடைக்கிறது. எனவே, நீர்பயன்பாட்டுத் திறனை மேம்படுத்துதல், கழிவுநீரை மறுசுழற்சி செய்தல், நிலத்தடி நீரைச் செறிவூட்டுதல் மற்றும் வலுவான துப்புரவு அமைப்புகளை (Sanitation systems) உருவாக்குதல் ஆகியவை இப்போது வெறும் வளர்ச்சி இலக்குகள் மட்டுமல்ல, அவை காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளாகவும் மாறியுள்ளன.


ஐக்கிய அரபு அமீரகத்தின் உலகளாவிய காலநிலை மீள்தன்மை கட்டமைப்பின் (UAE Framework for Global Climate Resilience) கீழ் உருவாக்கப்பட்டுள்ள 59 பெலெம் தகவமைப்பு குறியீடுகளில் (Belém Adaptation Indicators), உலகளாவிய நிர்வாகத்தில் ஒரு புதிய ஒழுங்குமுறையை வெளிப்படுத்துகின்றன. இதில் இரண்டு முக்கியப் பிரிவுகள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. முதலாவது பிரிவு, காலநிலையைத் தாங்கி நிற்கும் நீர் மற்றும் துப்புரவு அமைப்புகளில் கவனம் செலுத்துகிறது: அதாவது காலநிலை மாற்றத்தால் ஏற்படும் நீர்ப் பற்றாக்குறையைக் குறைத்தல், வெள்ளம் மற்றும் வறட்சிக்கு எதிரான பாதுகாப்பை உருவாக்குதல், அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீரை உறுதி செய்தல் மற்றும் தீவிர இயற்கைச் சீற்றங்களைத் தாங்கும் வகையில் துப்புரவு உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகக் கூறப்படுகிறது. இரண்டாவது பிரிவு, இடர் மேலாண்மை நிர்வாகத்தில் கவனம் செலுத்துகிறது. அதாவது 2027-ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய பல-அபாய முன்னெச்சரிக்கை அமைப்புகளை உருவாக்குதல், வலுவான வானிலை மற்றும் நீர் கண்காணிப்புச் சேவைகளை மேம்படுத்துதல் மற்றும் 2030-ஆம் ஆண்டிற்குள் புதுப்பிக்கப்பட்ட தேசிய பாதிப்பு மதிப்பீடுகளைத் தயாரித்தல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டுள்ளது. தற்போது நீர் பாதுகாப்பு என்பது வெறும் உள்கட்டமைப்பை உருவாக்குவது மட்டுமல்ல, காலநிலை அழுத்தங்கள் அதிகரிக்கும் போதும் அந்த அமைப்புகள் தொடர்ந்து தடையின்றி இயங்குவதை உறுதி செய்வதாகவும் கூறப்படுகிறது. 


ஆரம்பத்திலிருந்தே தொடங்கத் தேவையில்லை


இந்தியா தனது தற்போதைய அடித்தளங்களை வலுப்படுத்தி வருகிறது. 2019-ஆம் ஆண்டில், நீர் மேலாண்மையை ஒருங்கிணைந்த முறையில் கையாளுவதற்காக, அது ஜல் சக்தி அமைச்சகத்தின்கீழ் (Ministry of Jal Shakti) கொண்டுவரப்பட்டது. மேலும், இந்தியாவின் 'நீர் தொலைநோக்கு பார்வை 2047' (Water Vision 2047) திட்டமானது பெலெம் (Belém) தகவமைப்பு கட்டமைப்புடன் ஒத்துப்போவதுடன், நிலைத்தன்மை, சமநிலை மற்றும் மீள்திறன் ஆகியவற்றில் அதிகக் கவனம் செலுத்தி வருகிறது.


நிலத்தடி நீர் மேலாண்மை இந்த மாற்றத்தை மிகத் தெளிவாக விளக்குகிறது. தேசிய நீர்நிலைப் வரைபடமாக்கம் மற்றும் மேலாண்மைத் திட்டம் 2.0 (National Aquifer Mapping and Management Programme 2.0 (NAQUIM 2.0)), வெறும் நீர்நிலைகளை அடையாளம் காண்பதோடு நின்றுவிடாமல், அந்தந்த நீர்நிலைகளுக்கு ஏற்ற மேலாண்மைத் திட்டங்களைச் செயல்படுத்துவது வரை முன்னேறியுள்ளது. இந்த மாற்றமானது, நீர் புவியியல் அறிவை (hydrogeological knowledge) கொள்கைரீதியான நடவடிக்கையாக மாற்றுகிறது. மேலும், சர்வதேச தகவமைப்பு குறியீடுகளுக்கு (global adaptation indicators) இணையாக தற்போது தேவைப்படும் ஒருங்கிணைந்த மேலாண்மை முறையையும் பிரதிபலிப்பதாகக் கூறப்படுகிறது. 


நதிகளைப் புதுப்பிப்பதும் இதேபோன்ற ஒரு அணுகுமுறையைத்தான் பிரதிபலிக்கிறது. தூய்மையான கங்கைக்கான தேசிய இயக்கம் (National Mission for Clean Ganga (NMCG)) என்பது வெறும் கழிவுநீர் சுத்திகரிப்போடு நின்றுவிடாமல், பல்லுயிர் பாதுகாப்பு, டிஜிட்டல் கண்காணிப்பு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கி விரிவடைந்துள்ளது. இதன் மூலம் தூய்மையான நதிகள் பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் ஒரு அரணாகச் செயல்பட உதவுகின்றன.


தெளிவான முன்னேற்றம் காணப்பட்டாலும், மூன்று முக்கிய அபாயங்கள் இந்த வேகத்தைக் குறைக்கக்கூடும். முதலாவதாக, நீர் தட்டுப்பாடு தீவிரமாகவும், பகுதிகளுக்கு இடையே சீரற்ற நிலையிலும் உள்ளது. இந்தியாவில் நிகழும் பெரும்பாலான காலநிலை பேரிடர்கள் நீருடன் தொடர்புடையவை; இத்தகைய சூழலில், நீர், துப்புரவு மற்றும் சுகாதார (Water, Sanitation, and Hygiene (WASH)) அமைப்புகள்தான் பாதிப்பிற்கு எதிரான முதல் பாதுகாப்பு அரணாகச் செயல்படுகின்றன. வெள்ளம் அல்லது நீண்ட வறட்சிக் காலங்களில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் தடையற்ற நீர் விநியோகத்தை உறுதிசெய்ய, வெறும் இணைப்புகளை மட்டும் அதிகரிப்பதோடு நின்றுவிடாமல், உள்கட்டமைப்புகளின் காலநிலைத் தாங்குதிறனைப் பரிசோதித்தல் (Climate Stress Testing), நீர் ஆதாரங்களைப் பன்முகப்படுத்துதல் மற்றும் மாற்று சேவை அமைப்புகளை உருவாக்குதல் ஆகியவை அவசியமாகிறது. 


இரண்டாவதாக, காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வதற்கான நிதி உதவி இன்னும் பலவீனமாகவே உள்ளது. 2035-ஆம் ஆண்டிற்குள் ஆண்டுக்கு $1.3 டிரில்லியன் (சுமார் 1.3 லட்சம் கோடி டாலர்) திரட்டுவது குறித்து உலகளாவிய விவாதங்கள் நடந்தாலும், அதை எப்படிச் சாதிப்பது என்பது குறித்த தெளிவான திட்டம் இன்னும் இல்லை. நம்பகமான மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய தகவமைப்பு நிதி இல்லையென்றால், பேரிடர் மீட்புக்காகச் செலவிடப்படும் பணம், நீண்டகால மீள்திறனுக்கான முதலீடுகளைக் குறைத்துவிடக்கூடும் என்கின்றனர். எனவே, நீர் மேலாண்மைத் திட்டங்களை வெறும் சாதாரணத் துறை சார்ந்த செலவுகளாகப் பார்க்காமல், அவற்றை காலநிலை மாற்றத்திற்கான முதலீடுகளாகத் தெளிவாக அங்கீகரித்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். 


மூன்றாவதாக, டிஜிட்டல்ரீதியிலான தரவுப் பிரிவினை தொடர்ந்து நீடிக்கிறது. இந்தியாவில் நீர்நிலை மற்றும் வானிலை தொடர்பான ஏராளமான தரவுகள் இருந்தபோதிலும், செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence (AI)) பயன்படுத்தி அந்தத் தரவுகளைத் திட்டமிடுதல், நிதி ஒதுக்கீடு மற்றும் உள்ளூர் நிர்வாக அமைப்புகளை உடனுக்குடன் ஒருங்கிணைப்பது இன்னும் வரம்பிற்குட்பட்டதாக உள்ளது.


இந்தியாவின் நிறுவன அமைப்பை உற்று நோக்கினால், சர்வதேச அளவில் நிர்ணயிக்கப்பட்ட பெரும்பாலான தகவமைப்பு இலக்குகளுக்கு இணையாக நம்மிடமும் ஏற்கனவே தேசிய அளவிலான திட்டங்கள் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. குடிநீர் வசதி, துப்புரவு விரிவாக்கம், நீர்ப்பாசனத் திறன், நகர்ப்புற நீர் சீர்திருத்தங்கள் மற்றும் காலநிலை செயல் திட்டங்கள் போன்றவை பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் மாநிலங்கள் மூலம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இனிவரும் காலங்களில், இந்தத் திட்டங்களின் கண்காணிப்புத் திரைகளில் காலநிலை அழுத்தக் குறியீடுகளையும் Climate stress indicators) ஒரு அங்கமாகச் சேர்க்க வேண்டும்.


பெலெம் பிரகடனம் முழுமையான மாற்றத்தைவிட, நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பையே வலியுறுத்துகிறது. இந்தியாவின் வலுவான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (Digital Public Infrastructure (DPI)), நீர் மேலாண்மைத் தரவுகள், பயிர் ஆலோசனைகள், காப்பீடு மற்றும் நிதிச் சேவைகளை ஒருங்கிணைந்த தளங்களாக மாற்ற உதவும் என்றும் இது விவசாயிகள் உடனுக்குடன் சரியான முடிவுகளை எடுக்க வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கின்றனர். 


பெலெம் குறியீடுகள் காலநிலை வாழ்வாதாரத்திற்கான வழிகாட்டியாக அமைகின்றன


பெலெம் குறியீடுகள் (Belém indicators) என்பது வெறும் அலுவலகரீதியான சரிபார்ப்புப் பட்டியல் மட்டுமல்ல என்றும் அவை உயிர்வாழ்வதற்கான ஒரு வழிகாட்டுதல்களாகக் கருதப்படுகின்றன. இதனைத் தீவிரமாகச் செயல்படுத்தினால், 'பருவநிலை மாற்றத்திற்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்ளுதல்' என்பதை ஒரு மேலோட்டமான விவாதமாக மட்டும் பார்க்காமல், நாட்டின் வளர்ச்சி உத்திகளை வழிநடத்தும் ஒரு முக்கியக் கொள்கையாக மாற்ற முடியும். இந்தியா தற்போது ஒரு முக்கியமான காலகட்டத்தில் உள்ளது. இந்தியாவின் நீர் மேலாண்மை சீர்திருத்தங்கள், தொழில்நுட்ப வலிமை மற்றும் சமூகங்கள் முன்னெடுக்கும் திட்டங்கள் ஆகியவை, உலகளாவிய பருவநிலை பேச்சுவார்த்தைகளில் இந்தியாவை ஒரு வெறும் பங்கேற்பாளராக மட்டுமன்றி, பருவநிலை மாற்றத் தகவமைப்புத் திட்டங்களை ஒரு பெரிய அளவில் செயல்படுத்துவதில் ஒரு சிறந்த முன்மாதிரியான தலைவராகவும் முன்னிறுத்துகின்றன.


காலநிலை மாற்றத்திற்கான நடவடிக்கைகளில் நீர்வளம் முதன்மையானதாக இருக்க வேண்டும். அதற்கான திட்டங்களைச் செயல்படுத்துவது வேகமாகவும், நேர்மையாகவும், வலுவான தொழில்நுட்பத்தின் உதவியுடனும் அமைய வேண்டும் என்கின்றனர். ஒரு நாட்டின் மீள்திறன் என்பது அங்கு கட்டப்பட்டுள்ள உள்கட்டமைப்புகளின் எண்ணிக்கையை வைத்து அளவிடப்படக்கூடாது என்றும் மாறாக பெருவெள்ளம், வறட்சி மற்றும் பிற காலநிலை மாற்றங்களின் போதும் மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்யும் அமைப்புகளை வைத்தே அளவிடப்பட வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இந்தியா ஏற்கனவே இதற்கான பல திட்டங்களைச் செயல்பாட்டில் வைத்துள்ளது. தனது இலக்குகள், அளவீடுகள் மற்றும் நிதி ஒதுக்கீடு ஆகியவற்றை விரைவாக ஒருங்கிணைப்பதன் மூலம், இந்தியா தனது லட்சியத்தை உண்மையான மீள்திறனாக மாற்ற முடியும் என்றும் இதன் மூலம் 'உலகளாவிய தெற்கு'  எனப்படும் வளரும் நாடுகளுக்கு இந்தியா ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ முடியும் என்றும் தெரிவிக்கின்றனர். 


கிரிஜா கே. பாரத், குர்கானில் உள்ள 'மியூ காமா' (Mu Gamma) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பணியாற்றுகிறார். எஸ்.கே. சர்க்கார், புது தில்லியில் உள்ள ‘TERI’ அமைப்பின் மூத்த ஆலோசகரும், இந்திய அரசின் நீர்வள அமைச்சகத்தின் முன்னாள் செயலாளரும் ஆவார்.


Original Link: Building India’s climate resilience with water at the core 

Share: