முக்கிய அம்சங்கள் :
கடந்த ஆண்டு ஜூன் மாதம், இந்திய ரிசர்வ் வங்கியானது உங்கள் வாடிக்கையாளரை அறிதல் (Know Your Customer (KYC)) நடைமுறை தொடர்பான விதிமுறைகள் குறித்த முதன்மை உத்தரவில் (Master Direction) தொடர்ச்சியான பல மாற்றங்களை அறிவித்தது. இதில் வணிக நிருபர்கள் KYC-ஐ செயல்படுத்துவதில் வணிக நிருபர்களுக்கு உதவ அனுமதிப்பது மற்றும் 'குறைந்த ஆபத்துள்ள' (low risk) பிரிவில் உள்ள வாடிக்கையாளர்களின் KYC விவரங்களைப் புதுப்பிக்க வங்கிகளுக்கு ஒரு வருடம் அவகாசம் அளித்தது. இந்த செயல்முறையை முடிக்க வங்கிகளுக்கு ஜூன் 2026 வரை அவகாசம் உள்ளது.
மத்திய அரசு அதன் முக்கிய பணப் பரிமாற்றத் திட்டமான பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனாவை (Pradhan Mantri Jan Dhan Yojana) அறிமுகப்படுத்திய பிறகு, வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது. கணக்குகளில் ஏற்பட்ட இந்த மிகப்பெரிய அதிகரிப்பு காரணமாக, வாடிக்கையாளர்களின் அடையாளங்களைச் சரிபார்ப்பது மிகவும் கடினமாகிவிட்டது என்று வங்கியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலைமையானது, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் மற்றும் வைப்புத்தொகையாளர்கள் இருவரையும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஒழுங்குமுறையாளர்களின் (Regulatory) அழுத்தம் காரணமாக, பல கணக்கு வைத்திருக்க கட்டுப்பாடு ஏற்படுத்த வழிவகுத்தது. சிலவற்றில், கணக்குகள்கூட முடக்கப்பட்டுள்ளன. இது வாடிக்கையாளர்களை கவலையடையச் செய்துள்ளது. அதேநேரத்தில், வங்கி ஊழியர்கள் இணக்கத் தேவைகளைப் பூர்த்தி செய்ய சிரமப்படுகிறார்கள்.
இந்த வலியுறுத்தல் பெரும்பாலும் இணக்கத் தேவையின் அழுத்தங்கள், உள்-ஆபத்து கட்டுப்பாடுகள் மற்றும் வங்கிகள் தங்கள் செயல்பாடுகளில் கூடுதல் எச்சரிக்கையுடன் உள்ளன என்று வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், KYC புதுப்பிப்புகளுக்கான தொடர்ச்சியான கோரிக்கைகள் துன்புறுத்தலுக்கு சமம் என்று வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் 250 கோடிக்கும் அதிகமான வங்கிக் கணக்குகள் இருப்பதால், இணக்கப் பணிச்சுமை (compliance workload) அதிகமாகிவிட்டதாக வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர். பாரத ஸ்டேட் வங்கி மட்டும் 50 கோடிக்கும் அதிகமான வங்கிக் கணக்குகளைக் கொண்டுள்ளது. ஒரு முன்னணி தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் மேலாளர் சமீபத்தில் KYC புதுப்பித்தல் செயல்பாட்டில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டி, அமலாக்க நிறுவனங்களுக்கு புகார் அளித்தார்.
கடந்த ஆண்டு, உங்கள் வாடிக்கையாளரை அறிதல் (KYC) இணக்கத்தை உறுதி செய்வதற்கான அழுத்தம் தீவிரமடைந்துள்ளதாக வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர். 'அதிக ஆபத்து' கொண்ட வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும், 'நடுத்தர ஆபத்து' கொண்ட வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு எட்டு வருடங்களுக்கும் மற்றும் 'குறைந்த ஆபத்து' கொண்ட வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் KYC ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று விதிமுறைகள் கட்டாயப்படுத்துகின்றன.
இருப்பினும், இந்த விதிமுறை பெரும்பாலும் வங்கிகளால் மீறப்படுகிறது. அவை "குறைந்த ஆபத்துள்ள" வாடிக்கையாளர்கள் "அதிக ஆபத்துள்ள" பிரிவில் வைக்கப்படுகிறார்கள். மேலும், ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஒருமுறை KYC விவரங்களைப் புதுப்பிக்குமாறு அவை கோரப்படுகின்றன. ஒரு சம்பளதார வாடிக்கையாளர் தனது இந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். இதில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் KYC சரிபார்ப்புகளின் காரணமாகத் தான் பல சிக்கல்களைச் சந்தித்ததாக அவர் கூறினார்.
ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் அதிகாரியின் கூற்றுப்படி, ஒவ்வொரு கணக்கும் முழுமையாக KYC இணக்கமாக இருப்பதை உறுதி செய்வதற்காக வங்கித் துறை தொடர்ச்சியான ஒழுங்குமுறை ஆய்வுக்கு உட்பட்டுள்ளது.
உங்களுக்குத் தெரியுமா?
அரசாங்கத்தின் முதன்மை நிதி உள்ளடக்கத் திட்டமான பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY)) ஆகஸ்ட் 28, 2014 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது.
இது நிதிச் சேவைகளுக்கான அணுகலை உறுதி செய்வதற்கான ஒரு தேசிய நிதி உள்ளடக்கம் (Financial Inclusion) ஆகும். இதன் பொருள், அடிப்படை சேமிப்பு மற்றும் வைப்பு கணக்குகள், பணம் அனுப்புதல், கடன், காப்பீடு, ஓய்வூதியம், மலிவு விலையில் மக்கள் நிதிச் சேவைகளை எளிதாக அணுகமுடிவதை உறுதிசெய்வதே இதன் நோக்கமாகும்.
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனாவின் (PMJDY) கீழ், கணக்கு தொடங்குவதற்கு மக்கள் எவ்விதக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை, கணக்கைப் பராமரிப்பதற்கான கட்டணங்கள் ஏதுமில்லை, கணக்கில் குறைந்தபட்ச இருப்பு கட்டணங்கள் வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு இலவச 'RuPay' பற்று அட்டை (Debit card) வழங்கப்படுகிறது. இந்த அட்டையுடன் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான விபத்துக் காப்பீட்டு வசதியும் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் மூலம் 10,000 ரூபாய் வரையிலான 'ஓவர் டிராஃப்ட்' (overdraft) வசதியையும் பெற முடியும்.
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) கணக்குகள் நேரடி பலன் பரிமாற்றம் (Direct Benefit Transfer (DBT)), பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana (PMJJBY)), பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (Pradhan Mantri Suraksha Bima Yojana (PMSBY)), அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana (APY)), குறு அலகுகள் மேம்பாடு மற்றும் மறுநிதியளிப்பு முகமை வங்கி (Pradhan Mantri MUDRA Yojana (MUDRA)) போன்ற திட்டத்திற்கு தகுதியானவையாகும்.
Original Link: What are KYC norms?