சூரிய ஆற்றல் தகடுகளை மறுசுழற்சி செய்வதுதான் மின்சக்தித் துறையின் அடுத்த முக்கிய முன்னுரிமையாக இருக்க வேண்டும். -மிலிந்த் குமார் சர்மா, குஷ்பூ ஷா, லலித் ஜியானி

 மறுசுழற்சியை வெற்றிகரமாகச் செயல்படுத்த, உற்பத்தியாளர்களுக்கான கட்டாய விதிமுறைகள் மற்றும் நிதிச் சலுகைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான ஒழுங்குமுறை கட்டமைப்பு மிகவும் அவசியமாகும்.


கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable energy) பயணம் என்பது பெரிய இலக்குகள், பிரம்மாண்டமான அளவுகள் மற்றும் அதிவேகமான செயல்பாடுகளால் அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய சூரிய ஒளி மின்சக்தி திட்டத்தின் (National Solar Mission (NSM)) தொடக்கத்திலிருந்து, ராஜஸ்தான், குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத வகையில் சூரிய ஆற்றல் (Solar capacity) உற்பத்தித் திறன் மிக வேகமாக விரிவடைந்து வருகிறது.


இருப்பினும், இந்த வெற்றிக் கதைக்கு பின்னால் ஒரு முக்கியமான, ஆனால் இதுவரை அதிகம் ஆராயப்படாத கேள்வி ஒன்று உள்ளது: பழுதடைந்த சூரிய மின்சக்தி தகடுகளில் (Solar panels) பயன்பாடு முடிவடைந்த பிறகு அவை என்னவாகும்?



சூரிய ஆற்றல் தகடுக் கழிவுகளின் பெருக்கம்


சூரிய மின்சக்தி தகடுகள்  (Photovoltaic (Solar PV)) வழக்கமாக 25 முதல் 30 ஆண்டுகள் வரை உழைக்கக்கூடியவை. இந்தியாவின் தேசிய சூரிய ஒளி மின்சக்தி திட்டத்தின்கீழ் முதன்முதலில் தொடங்கப்பட்ட பெரிய அளவிலான சூரிய மின்சக்தித் திட்டங்கள், தற்போது தங்களின் ஆயுட்காலத்தின் பாதியை எட்டியுள்ளன. இதனால், அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் பெருமளவிலான சூரிய மின்சக்தி தகடுகள் தங்களின் பயன்பாட்டுக் காலம் முடிந்து, நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சர்வதேச புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முகமையின் (International Renewable Energy Agency (IRENA)) கணிப்புப்படி, 2050-ஆம் ஆண்டிற்குள் உலகம் முழுவதும் சூரிய மின்சக்தி தகடுக் கழிவுகளின் அளவு 7.8 கோடி டன்னாக உயரக்கூடும். நூற்றுக்கணக்கான கிகாவாட் (GW) அளவிலான சூரியஒளி மின் கட்டமைப்புகளை நிறுவத் திட்டமிட்டு வரும் இந்தியாவிற்கு, எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவில் சூரிய மின்சக்தி தகடுக் கழிவுகள் உருவாகும் என்பதைக் காட்டுகிறது.                    சாதாரண கழிவுகளைப் போலல்லாமல், ஒளிமின்னழுத்த தகடுகள் (Photovoltaic Modules) என்பவை கண்ணாடி, சிலிக்கான், உலோகங்கள் மற்றும் நெகிழிகள் (Polymers) போன்ற பல்வேறு அடுக்குகளைக் கொண்டு கட்டமைக்கப்படுபவை ஆகும். இவற்றைச் சரியாக மறுசுழற்சி செய்யாமல் தவறான முறையில் தூக்கி எறியும்போது, அவற்றில் உள்ள காரீயம் (Lead), காட்மியம் (Cadmium) மற்றும் பிற நச்சுப் பொருட்கள் நிலத்தில் கசிந்து மாசுபடுத்தக்கூடும். இது மண்வளம், நீர்நிலைகள் மற்றும் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு நீண்டகால ஆபத்துகளை ஏற்படுத்தும். எனவே, ஒரு முறையான மறுசுழற்சி உள்கட்டமைப்பை உருவாக்கவில்லை என்றால், பயன்பாடு முடிந்து அகற்றப்படும் சூரிய மின்சக்தி தகடுகள் சுற்றுச்சூழலுக்கு பெரிய அச்சுறுத்தலாக மாறிவிடும் என்கின்றனர்.


பயன்படுத்தப்படாத பொருளாதார வாய்ப்பு


சூரிய மின்சக்தி தகடுக் கழிவுகளால் (Solar waste) கணிசமான பாதிப்புகள் ஏற்படும் அபாயமிருந்தாலும், அதில் சம அளவில் முக்கியமான நல்ல வாய்ப்புகளும் உள்ளன. சூரிய மின்சக்தி தகடுகளில் (Solar panels) மிகத் தூய்மையான சிலிக்கான் (Silicon), வெள்ளி (Silver), அலுமினியம் (Aluminium) மற்றும் தாமிரம் (Copper) போன்ற மதிப்புமிக்க பொருட்கள் உள்ளன. இந்தக் கழிவுகளிலிருந்து இப்பொருட்களைப் பிரித்தெடுத்து மறுசுழற்சி செய்வதன் மூலம், பிற நாடுகளிலிருந்து இவற்றை இறக்குமதி செய்வதைக் குறைக்கலாம். புதிய சூரிய மின்சக்தி தகடுகளைத் தயாரிப்பதற்கான செலவையும் குறைக்கலாம். இது ஒட்டுமொத்த உலகளாவிய சூரிய மின்சக்தித் துறையில் இந்தியாவின் பங்கை மேலும் வலுப்படுத்தும் என்கின்றனர்.


உதாரணமாக, சூரிய ஒளிமின்னழுத்தக் கலங்களின் (Photovoltaic cell) மின் இணைப்புகளுக்கு இன்றியமையாததான வெள்ளி (Silver), மிக அதிக விலையைக் கொண்டிருப்பதோடு குறைந்த அளவிலேயே கிடைக்கிறது. எனவே, அதை மறுசுழற்சி செய்வது உற்பத்திச் செலவைக் குறைக்க உதவும். அதேபோல், மறுசுழற்சி மூலம் மீட்டெடுக்கப்படும் சிலிக்கானைச் சுத்திகரித்து, மீண்டும் சூரிய மின்சக்தி தகடுகள் (Solar panel) தயாரிப்பிலோ அல்லது குறைமின்கடத்தி உற்பத்தியிலோ பயன்படுத்தலாம் என்கின்றனர்.


சூரிய மின்சக்தி தகடுகளை (Solar panels) மறுசுழற்சி செய்யும் முறை இன்னும் ஆரம்பக்கட்ட வளர்ச்சியில்தான் உள்ளது. தற்போது இதில் மூன்று முக்கிய முறைகள் பயன்படுத்தப்படுகின்றன: இயந்திரவியல் முறை (Mechanical), வெப்பவியல் முறை (Thermal - Pyrolysis), மற்றும் வேதியியல் முறை (Chemical processes). இயந்திரவியல் முறையில் சூரிய மின்சக்தி தகடுகள் நசுக்கப்பட்டு, சிறு துண்டுகளாக உடைக்கப்படுகின்றன. இது கண்ணாடியை எளிதாக மீட்டெடுக்க உதவுகிறது, ஆனால் இதன் மூலம் கிடைக்கும் உலோகங்கள் மற்றும் சிலிக்கான் (Silicon) தூய்மை குறைவாகவே இருக்கும். வெப்பவியல் (Pyrolysis) முறையில், அதிக வெப்பத்தைப் பயன்படுத்தி 'Ethylene Vinyl Acetate' போன்ற பாதுகாப்பு அடுக்குகளை உருக்கி நீக்குகிறார்கள். இது மற்ற பொருட்களைத் தனித்தனியாகப் பிரிப்பதை எளிதாக்குகிறது; இருப்பினும், இதைச் சரியாகக் கையாளாவிட்டால் நச்சு வாயுக்கள் வெளியேற வாய்ப்புள்ளது. வேதியியல் முறையில், அமிலங்கள் அல்லது கரைப்பான்களைப் பயன்படுத்தி பொருட்கள் பிரிக்கப்படுகின்றன.                          இது அதிக அளவிலும், மிகத் தூய்மையாகவும் பொருட்களை மீட்டெடுக்க உதவுகிறது. ஆனால், இந்த முறைக்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது, இயக்குவது கடினம், மற்றும் சுற்றுச்சூழல்ரீதியான அபாயங்களையும் கொண்டது. ஒவ்வொரு முறையிலும் அதன் செயல்திறன், செலவு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகியவற்றிற்கு இடையே சில சமரசங்களைச் செய்ய வேண்டியுள்ளது. பெரிய அளவில் சூரிய மின்சக்தித் தகடுகளை மறுசுழற்சி செய்வதற்கு, இன்னும் ஒரு நிலையான, குறைந்த செலவிலான மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற தீர்வு கிடைக்காமல் இருப்பதே தற்போதைய மிகப்பெரிய சவாலாக உள்ளது.


ஒழுங்குமுறைச் சூழல் 


மின்னணுக் கழிவு (மேலாண்மை) விதிகள், 2022 (E-Waste Management Rules, 2022) மூலமாக, மறுசுழற்சி அடிப்படையிலான பொருளாதாரத்தை நோக்கி இந்தியா சில ஆரம்பகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இருப்பினும், சூரிய மின்சக்தி தகடுக் கழிவுகள் (Solar photovoltaic waste) இன்னமும் ஒரு குறிப்பிட்ட ஒழுங்குமுறை சட்டதிட்டத்திற்குள் முழுமையாகக் கொண்டுவரப்படவில்லை.


இது தொடர்பாக சர்வதேச நாடுகள் பின்பற்றும் வழிமுறைகள் நமக்குச் சிறந்த பாடமாக உள்ளன. உதாரணமாக, ஆஸ்திரேலிய அரசாங்கம் 'தேசிய சூரிய மின்சக்தி தகடு மறுசுழற்சி முன்னோடித் திட்டத்தை' (National Solar Panel Recycling Pilot) செயல்படுத்துவதற்காக 3 ஆண்டுகளில் 24.7 மில்லியன் டாலர்களை முதலீடு செய்து வருகிறது. இந்த முன்னோடித் திட்டம், எதிர்காலத்தில் நாடு தழுவிய மறுசுழற்சி மற்றும் தயாரிப்பாளர் பொறுப்புணர்வுத் திட்டத்தை திட்டமிட உதவும். ஐரோப்பாவில், 'நீட்டிக்கப்பட்ட தயாரிப்பாளர் பொறுப்பு' (Extended Producer Responsibility (EPR)) என்ற விதிமுறை மூலம், பயன்படுத்த முடியாத சூரிய மின்சக்தி தகடுகள் தயாரிப்பாளர்களே மேலாண்மை செய்யவேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், ஐரோப்பாவைப் போலல்லாமல் இந்தியாவின் கொள்கை அணுகுமுறை இன்னும் ஆரம்பக்கட்ட வளர்ச்சியில்தான் உள்ளது. இக்கழிவுகளைச் சேகரிப்பது, மறுசுழற்சி செய்வது மற்றும் பாதுகாப்பாக அகற்றுவது போன்றவற்றுக்கான தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாததால், சூரிய ஆற்றல் துறையினருக்கும் அதில் முதலீடு செய்பவர்களுக்கும் ஒரு தெளிவற்ற சூழல் நிலவுகிறது.


ஒரு விரிவான ஒழுங்குமுறை கட்டமைப்பு பின்வரும் அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்:




(i) உற்பத்தியாளர்கள் மற்றும் உருவாக்குநர்களுக்குக் கட்டாய நீட்டிக்கப்பட்ட தயாரிப்பாளர் பொறுப்பு (EPR).


(ii) மறுசுழற்சி உள்கட்டமைப்பை வேகப்படுத்துவதற்கான நிதி ஊக்கத்தொகைகள் மற்றும் சலுகைகள்.


(iii) மூலப்பொருள் மீட்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற தரப்படுத்தப்பட்ட அளவுகோல்கள்.


(iv) சூரிய ஒளிமின்னழுத்த தகடுகளின் (Photovoltaic Modules) ஆயுட்கால மேலாண்மையைக் கண்காணிப்பதற்கான டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்புகள்.


அரசாங்கத்தின் தெளிவான விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் இல்லை என்றால், மறுசுழற்சித் துறை வளர்ச்சி அடைவதற்குத் தேவையான முதலீடுகளை ஈர்ப்பது கடினமாகிவிடும்.


சுழற்சிமுறை சூரிய மின்சக்திப் பொருளாதாரம் 


வடிவமைப்பு கண்டுபிடிப்புகள் — அதாவது பாகங்களை எளிதாகப் பிரித்தெடுக்கும், மாடுலர் கட்டமைப்பு (Modular architectures), அபாயகரமான பொருட்களின் பயன்பாட்டைக் குறைத்தல், மற்றும் மறுசுழற்சி செய்யும் திறனை மேம்படுத்துதல் போன்றவை — ஒரு பொருளின் ஆயுட்காலம் முடியும்போது அதை மறுசுழற்சி செய்வதற்கான செலவைக் கணிசமாகக் குறைக்கும்.


மேலும், முன்கூட்டியே கணிக்கும் பகுப்பாய்வு மற்றும் ஆயுட்காலத்தைக் கண்காணிக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், சொத்துக்களின் பயன்பாட்டை மேம்படுத்த உதவுகின்றன. இது சரியான நேரத்தில் பராமரிப்புப் பணிகளைச் செய்யவும், திறம்படப் பயன்பாட்டை நிறுத்தவும், முறையான மறுசுழற்சி செய்வதை உறுதிப்படுத்தவும் உதவும் என்கின்றனர்.


இந்தியாவின் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், லேசர் அடிப்படையிலான படலப் பிரிதல் (Laser-based delamination) மற்றும் உயர் மின்னழுத்தப் பிரிப்பு முறைகள் (High-voltage separation techniques) உள்ளிட்ட மேம்பட்ட மறுசுழற்சி முறைகளை ஆராய வேண்டும். புத்தொழில் (Start-up) நிறுவனங்கள், பரவலாக்கப்பட்ட மறுசுழற்சி மாதிரிகள், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் பொருட்கள், மீட்பு அமைப்புகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற இரசாயன செயல்முறைகளை உருவாக்குவதன் மூலம் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவர முடியும். ஆராய்ச்சி, அதை வணிகமயமாக்குதல் மற்றும் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவது ஆகியவற்றுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க அரசு-தனியார் கூட்டுப் பங்களிப்பு (Public-private partnerships) மிகவும் அவசியமாகும்.


மிலிந்த் குமார் சர்மா மற்றும் குஷ்பு ஷா லலித் ஜியானி, ஜோத்பூரில் உள்ள எம்.பி.எம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.


Original article : Solar panel recycling should be next energy priority. -Milind Kumar Sharma, Khushboo Shah, Lalit Jyani

Share:

கிரேட் நிக்கோபார் திட்டம் : சூழலியல் பொறுப்புணர்வுடன் தேசிய பாதுகாப்பை மேம்படுத்துதல். -டி கே ஜோஷி

 இந்திய-பசிபிக் (Indo-Pacific) நூற்றாண்டில், கிரேட் நிக்கோபார் என்பது இந்தியாவின் எல்லைப் பகுதி மட்டுமல்ல, அது இந்தியாவின் எதிர்கால நுழைவாயிலைக் கண்காணிக்கும் ஒரு முக்கிய உத்திசார்ந்த கண்காணிப்புக் கோபுரம் ஆகும்.


எந்த ஒரு நாடு தன் எல்லைகளையும், கூட்டணிகளையும், வர்த்தகப் பாதைகளையும் பாதுகாக்கத் தவறுகிறதோ, அந்த நாட்டால் தன் எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியாது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கௌடில்யர் (Kautilya) கூறிய இந்தப் பாடம், இன்றும் மிக முக்கியமானதாக விளங்குகிறது. இன்று நாடுகள் அவற்றின் பொருளாதார அளவு அல்லது ராணுவ பலத்தை வைத்து மட்டும் மதிப்பிடப்படுவதில்லை. மாறாக, அவை புவியியலை எவ்வளவு சிறப்பாகப் புரிந்துகொள்கின்றன, எதிர்காலத்திற்கு எவ்வாறு தயாராகின்றன, மற்றும் வாய்ப்புகள் ஆபத்தாக மாறுவதற்கு முன்பே எப்படிச் செயல்படுகின்றன என்பதைப் பொறுத்தே மதிப்பிடப்படுகின்றன. இந்தியாவின் முன்இருக்கும் அத்தகைய ஒரு சிக்கல்தான் கிரேட் நிக்கோபார் பகுதி ஆகும்.


இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் மிக முக்கியமான கடல் வழித்தடங்களுக்கு அருகில் அமைந்துள்ள 'கிரேட் நிக்கோபார்' தீவு, உலகிற்கு இந்தியாவின் மிக முக்கியமான ராஜதந்திர நுழைவாயில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. எனவே, அங்கு முன்மொழியப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டங்களை வெறும் உள்கட்டமைப்புத் திட்டமாக மட்டும் பார்க்கக் கூடாது. மாறாக, இந்தியா தனது தனித்துவமான புவியியல் சாதகத்தைப் பயன்படுத்தி, தன் ஒட்டுமொத்த தேசிய வலிமையைப் பெருக்கிக் கொள்ள முடியுமா என்பதற்கான ஒரு சோதனையாகவே இதைப் பார்க்க வேண்டும்.


பல நூற்றாண்டுகளாக, இந்தியப் பெருங்கடல் பகுதியானது இந்தியாவின் வர்த்தகம், கலாச்சாரம், சிந்தனைகள் மற்றும் அதன் பாதுகாப்பு சவால்களைக் கூட தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருந்தது. இருப்பினும், 1947-ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ராஜாதத்திரரீதியான கவனம், கடல் பகுதிகளைக் காட்டிலும் நிலப்பகுதிகள் மீதே பெரும்பாலும் இருந்தது.


அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக் கூட்டத்தில் உள்ள மிகப்பெரிய தீவுகளில் ஒன்றுதான் 'கிரேட் நிக்கோபார்' (Great Nicobar) ஆகும். இது சுமார் 910 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இங்கு முன்மொழியப்பட்டுள்ள புதிய திட்டப் பகுதி 166.10 சதுர கிலோமீட்டர் ஆகும். இது இந்தத் தீவுகளின் மொத்த பரப்பளவில் வெறும் 2% மட்டுமே. இதில் 130.75 சதுர கிலோமீட்டர் பரப்பளவு — அதாவது இத்தீவுகளின் மொத்த காட்டுப் பகுதியில் சுமார் 1.82%, திட்டப் பயன்பாட்டிற்காக மாற்றியமைக்க முன்மொழியப்பட்டுள்ளது. இந்த கிரேட் நிக்கோபார் தீவானது, தென்கிழக்கு ஆசியாவிற்கு மிக அருகிலும், சர்வதேச கடல் வணிகக் கப்பல்கள் செல்லும் முக்கியப் பாதைகளுக்கு அருகிலும் அமைந்துள்ளது.


கடல்சார் கண்ணோட்டத்தில் பார்க்கும்போதுதான் இதன் ராணுவ மற்றும் வணிகரீதியான முக்கியத்துவம் இன்னும் தெளிவாகப் புரிகிறது. ஏடன் வளைகுடாவில் (Gulf of Aden) இருந்து மலாக்கா நீரிணைக்கு (Malacca Strait) செல்லும் கப்பல்கள், மேற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் இருந்து கிழக்கு ஆசியாவிற்கு கொண்டு செல்லப்படும் எரிசக்தி விநியோகங்கள், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் சரக்குக் பெட்டகக் கப்பல்கள் (Container ships), மற்றும் இப்பகுதிக் கடல்களில் இயங்கி வரும் கடற்படைக் கப்பல்கள், கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் தளவாடப் போக்குவரத்து வலையமைப்புகள் ஆகியவற்றைக் கவனித்தால் இதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள முடியும்.


இந்தியப் பெருங்கடல் பகுதி நாளுக்கு நாள் மிக முக்கியத்துவம் ஒரு பகுதியாக மாறி வருகிறது. எரிசக்திப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, கடற்படை நடவடிக்கைகள், தீவுகளில் கட்டமைப்பு வசதிகள், கடலுக்கடியில் பதிக்கப்படும் கேபிள்கள் (Undersea cables) மற்றும் கடல்சார் கண்காணிப்பு போன்ற விஷயங்கள் இப்போது நாடுகளுக்கு இடையிலான ஒரு பெரிய போட்டியின் அங்கமாக மாறியுள்ளன. இந்த போட்டி பல நாடுகளின் எதிர்காலத்தையே தீர்மானிக்கப் போகிறது. சமீபத்தில், தாய்லாந்து நாடு அந்தமான் கடலையும் தாய்லாந்து வளைகுடாவையும் (Gulf of Thailand) நேரடியாக இணைக்கும் வகையில் கால்வாய் வெட்டும் தனது நீண்டகாலத் திட்டத்தைக் கைவிட்டது. அதற்குப் பதிலாக, இரண்டு புதிய ஆழ்கடல் துறைமுகங்களை இணைக்கும் 90 கிலோமீட்டர் நீளமுள்ள நிலப்பாலத் (Land bridge) திட்டத்திற்கு இறுதி ஒப்புதல் அளிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது. இதன்படி, ஒரு துறைமுகம் அந்தமான் கடலில் உள்ள ரானாங் (Ranong) என்ற இடத்திலும், மற்றொரு துறைமுகம் தாய்லாந்து வளைகுடாவில் உள்ள சும்போன் (Chumphon) என்ற இடத்திலும் அமையவுள்ளன. இந்தத் திட்டத்தில் அதிவேக இரட்டைப் ரயில் பாதைகள், பல வழிச் சாலைகள், எண்ணெய் மற்றும் எரிவாயுக் குழாய் இணைப்புகள், மற்றும் வான்வழி-டிஜிட்டல் வலையமைப்புகள் ஆகிய வசதிகளும் அடங்கும். இந்த மாற்றங்கள் அனைத்தும் இணைந்து, இந்திய-பசிபிக் (Indo-Pacific) பிராந்தியத்தின் வர்த்தகப் பாதைகளை மாற்றி அமைப்பதுடன், அந்தமான் பகுதியின் பொருளாதார முக்கியத்துவத்தையும் கணிசமாக உயர்த்தக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


மலாக்கா ஜலசந்தி (Strait of Malacca) உலகின் மிக முக்கியமான கடல்வழிச் போக்குவரத்து நெரிசல் பகுதிகளில் ஒன்றாகும். இது இந்தியப் பெருங்கடலையும் பசிபிக் பெருங்கடலையும் இணைப்பதுடன், பெருமளவிலான எரிபொருள் விநியோகத்தையும் உலக வர்த்தகத்தையும் இணைக்கும் கடல்வழிப் பாதையாகும். கிரேட் நிக்கோபார் தீவில் உள்ள கலாத்தியா வளைகுடா (Galathea Bay), சிக்ஸ் டிகிரி சேனலில் (Six Degree Channel) இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த சிக்ஸ் டிகிரி சேனல்தான் மலாக்கா ஜலசந்தியை ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவிற்குச் செல்லும் கடல்வழிப் பாதைகளுடன் இணைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு லட்சம் கப்பல்கள் இந்த மலாக்கா ஜலசந்தி – சிக்ஸ் டிகிரி சேனல் வழித்தடத்தைக் கடந்து செல்கின்றன. மலாக்கா, சுந்தா (Sunda) மற்றும் லோம்போக் (Lombok) ஆகிய முக்கிய கடல்வழி நெரிசல் புள்ளிகளுக்கு அருகில் கிரேட் நிக்கோபார் அமைந்திருப்பது, இந்தியாவிற்கு ஒரு மிகப்பெரிய வர்த்தகரீதியான சாதகமான சூழலை வழங்குகிறது.


Six Degree Channel (சிக்ஸ் டிகிரி சேனல்): இந்தியப் பெருங்கடலில் இருக்கும் ஒரு முக்கியமான கடல்வழிப் பாதை. இது இந்தோனேசியாவின் சுமத்ரா தீவிற்கும் இந்தியாவின் நிக்கோபார் தீவிற்கும் நடுவில் அமைந்துள்ளது.


இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில், உலகின் முக்கிய நாடுகள் தங்களின் துறைமுகங்கள், தளவாடக் கட்டமைப்பு வலையமைப்புகள், கடல்சார் வசதிகள், கடற்படைப் பிரிவுகள், கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் பொருளாதார வழித்தடங்கள் ஆகியவற்றின் மூலமாகத் தங்களது ஆதிக்கத்தை சீராக அதிகரித்து வருகின்றன. இதற்குப் பதிலடியாக, இந்தியா தனது ராஜதந்திரரீதியான ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும். ஒரு நாட்டின் எல்லைப்பகுதி மற்ற பகுதிகளுடன் சிறப்பாக இணைக்கப்பட்டு, மக்கள் வசிப்பிடமாக மாறி, தேவையான சேவைகளைப் பெற்று, உற்பத்தித் திறன் கொண்டதாகவும், ராஜதந்திரரீதியாகப் பயனுள்ளதாகவும் இருக்கும்போதுதான் அந்த நாட்டின் சுயசார்பு நிலை இன்னும் வலுவடைகிறது. சர்வதேச கொள்கலன் மறுபகிர்வு துறைமுகம் (International Container Transshipment Port (ICTP)), ஒரு புதிய விமான நிலையம், குடியிருப்புப் பகுதி மற்றும் மின்உற்பத்தி நிலையம் ஆகிய அனைத்தும் இணைந்து, இந்த முக்கியமான கடல்சார் பகுதியில் இந்தியா தனது வலுவான, நீண்டகால ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்குத் தேவையான உள்கட்டமைப்பை உருவாக்கும் என்கின்றனர்.


அனைத்து கருத்துக்களையும் கவனமாகப் பரிசீலித்த பிறகு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (National Green Tribunal (NGT)), இந்தத் திட்டம் இந்தத் தீவு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், நாட்டின் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புக்கும் மிக முக்கியமானது என்பதை அங்கீகரித்துள்ளது.


சிங்கப்பூர் வெறும் அதன் புவியியல் அமைப்பால் மட்டுமே ஒரு முக்கிய கடல்சார் மையமாக மாறிவிடவில்லை. அந்தச் சாதகமான இருப்பிடத்தைப் பயன்படுத்தி, வலுவான உள்கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டுத் திறன்களை அந்த நாடு வளர்த்துக்கொண்டது. அதன் இருப்பிடம் வாய்ப்புகளை உருவாக்கியது என்றால், அதன் உள்கட்டமைப்பு அந்த வாய்ப்புகளை உலகளாவிய செல்வாக்காக மாற்றியது. இந்தியப் பெருங்கடலில் இருக்கும் 'டீகோ கார்சியா' (Diego Garcia) தீவும் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். வலுவான தளவாட ஆதரவும் செயல்பாட்டு வசதிகளும் இருந்தால், ஒரு தொலைதூரத் தீவுகூட எவ்வளவு பெரிய ராஜதந்திரரீதியான முக்கியத்துவத்தைப் பெற முடியும் என்பதைக் காட்டுகிறது.


கிரேட் நிக்கோபார் தீவுத் திட்டம், இந்தியா தனது வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை சமநிலையான முறையிலும், முற்றிலும் இந்தியப் பாணியிலும் மேம்படுத்துவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. இது இந்தியாவின் வர்த்தகத்தை ஊக்குவிக்கவும், தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தவும், வெளிநாட்டு மறு ஏற்றுமதி மையங்களை சார்ந்திருப்பதை குறைக்கவும் உதவும். மேலும், இது இந்தியாவின் கடல்சார் இருப்பை உலகளவில் விரிவுபடுத்துவதுடன், தென்கிழக்கு ஆசியா மற்றும் பரந்த இந்தியா-பசிபிக் (Indo-Pacific) பிராந்தியத்திற்கான நுழைவாயிலாகவும் செயல்படும். கிரேட் நிக்கோபாரில் அமையவுள்ள மறுஏற்றுமதி துறைமுகம் (Transhipment port), வெளிநாட்டுத் துறைமுகங்கள் மீதான இந்தியாவின் சார்புநிலையைக் குறைக்கும். இந்தியாவின் விநியோகச் சங்கிலியை மிகவும் வலுவானதாக மாற்றும், புதிய முதலீடுகளை ஈர்க்கும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும், மற்றும் இந்தியாவின் சரக்கு போக்குவரத்தின் மீது இந்தியாவிற்கு கூடுதல் கட்டுப்பாட்டை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.


அதே நேரத்தில், கிரேட் நிக்கோபார் தீவு சுற்றுச்சூழல்ரீதியாக எளிதில் பாதிப்படையக்கூடிய ஒரு பகுதியாகும். அங்கு மேற்கொள்ளப்படும் எந்தவொரு பெரிய திட்டமும் முறையான சுற்றுச்சூழல் பாதுகாப்பு வழிமுறைகள், சட்ட விதிமுறைகளுக்குக் கட்டுப்படுதல், அறிவியல்ரீதியான கண்காணிப்பு மற்றும் பாதிப்புகளைக் குறைப்பதற்கான பயனுள்ள நடவடிக்கைகள் ஆகியவற்றுடன்தான் செயல்படுத்தப்பட வேண்டும். இருப்பினும், சுற்றுச்சூழல் தொடர்பான கவலைகள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால வளர்ச்சி சார்ந்த திட்டங்களை முழுமையாக முடக்கிவிடக்கூடாது. தேசிய பாதுகாப்பையும், சுற்றுச்சூழலுக்கான பொறுப்பையும் சமநிலையில் கொண்டு செல்வதே இதன் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.




இந்திய-பசிபிக் (Indo-Pacific) பிராந்தியத்தில் பெரிய மாற்றங்கள் நடந்துவரும் வேளையில், இந்த முக்கியத்துவம் வாய்ந்த தீவை இந்தியா பொறுப்புடன் மேம்படுத்த விரும்புகிறதா அல்லது வளர்ச்சி அடையாமல் அப்படியே விட்டுவிடப் போகிறதா என்பதுதான் தற்போதைய முக்கியமான கேள்வி ஆகும். இந்தியா நிலம் மற்றும் கடல் என இரண்டிலும் எல்லையைக் கொண்ட ஒரு வல்லமையுள்ள நாடு. ஆனால், நீண்டகாலமாகவே கடல் சார்ந்த பகுதிகளைவிட நில எல்லைப் பாதுகாப்பிற்கே அதிகக் கவனம் செலுத்தப்பட்டு வந்தது. எனவே, கிரேட் நிக்கோபார் திட்டம் (Great Nicobar project) என்பது தேவையற்ற ஒரு செலவு அல்ல; அது எதிர்காலத்திற்கான ஒரு உத்திசார் முதலீடு ஆகும். ஒரு நாட்டின் எதிர்காலம் என்பது அது எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களைப் பொறுத்து மட்டுமல்ல, சரியான நேரத்தில் கண்டறிந்து பயன்படுத்தும் வாய்ப்புகளையும் பொறுத்தே அமைகிறது.                கிரேட் நிக்கோபார் என்பது அப்படிப்பட்ட ஒரு சிறந்த வாய்ப்பு. இதை நாம் புறக்கணித்தால், இந்தியாவிற்குச் சாதகமாக உள்ள ஒரு புவியியல் அமைப்பை நாம் பயன்படுத்தாமல் வீணடிப்பதாக அர்த்தம். மேலும், அது பிற நாடுகள் அந்தப் பகுதியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க நாமே வழிவகுத்துக் கொடுப்பது போலாகிவிடும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. எனவே, புத்திசாலித்தனமான முறையில் இந்தத் தீவை மேம்படுத்துவது,  இந்தியாவின் புவியியல் அமைப்பையே நாட்டின் மிகப்பெரிய பலமாக மாற்றும் என்கின்றனர்.


இந்தியா தனது உத்திசார்ந்த சிந்தனையை மற்றவர்களுக்கு நியாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை. அது தனது தேசிய நலன்களுக்கு ஏற்ப, பொறுப்புடனும் துணிச்சலுடனும் செயல்பட்டாலே போதுமானது. இந்த இந்திய-பசிபிக் (Indo-Pacific) நூற்றாண்டில், கிரேட் நிக்கோபார் என்பது இந்தியாவின் எல்லைப் பகுதி மட்டுமல்ல, அது இந்தியாவின் எதிர்கால நுழைவாயிலைக் கண்காணிக்கும் ஒரு முக்கிய உத்திசார்ந்த கண்காணிப்புக் கோபுரம் ஆகும்.


டி கே ஜோஷி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் மற்றும் தீவுகள் மேம்பாட்டு முகமையின் துணைத் தலைவர் ஆவார். இவர் இந்திய கடற்படையின் முன்னாள் தளபதி ஆவார். மேலும், 2009-10-ஆம் ஆண்டு காலகட்டத்தில் அந்தமான் மற்றும் நிக்கோபார் கூட்டுப்படைத் தலைமையகத்தின் (A&N Command) தலைமைத் தளபதியாகவும் பணியாற்றியுள்ளார்.


Original article : Great Nicobar task: Pursuing national security with ecological responsibility. -D K Joshi

Share:

உலக சுற்றுச்சூழல் தினம் 2026: சுற்றுச்சூழல் தொடர்பான 5 முக்கிய பாடங்கள் -ரோஷ்னி யாதவ்

 ஆர்க்டிக் பகுதி, பெருங்கடல்கள் மற்றும் உலகின் காடுகள் ஆகியவை கடந்த ஆண்டு வலுவான எச்சரிக்கை நிலைகளை வெளிப்படுத்தின. கேள்வி என்னவென்றால், நாம் அவற்றைக் கவனத்தில் கொள்கிறோமா? நமது பூமி எதை நோக்கிச் செல்கிறது என்பதையும், அடுத்து என்ன நிகழக்கூடும் என்பதையும் உணர்த்தும் ஐந்து சுற்றுச்சூழல்கள் நிலை குறித்து விரிவாக கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.


தற்போதைய நிகழ்வு :


ஜூன் 5 அன்று, அஜர்பைஜான் குடியரசு, பாகு (Baku) நகரில் 2026-ம் ஆண்டுக்கான உலகளாவிய உலக சுற்றுச்சூழல் தினக் கொண்டாட்டத்தை நடத்தவுள்ளது. ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தால் (United Nations Environment Programme (UNEP)) நடத்தப்படும் உலக சுற்றுச்சூழல் தினம், நவீன உலகின் சுற்றுச்சூழல் பேரழிவுகள் குறித்து விழிப்புணர்வையும் நடவடிக்கையையும் ஏற்படுத்துவதற்கான ஒரு நாளாகும். 2026-ம் ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் தினம், காலநிலை மாற்றத்தின் மீது கவனம் செலுத்துகிறது. இதன் பொருள், பூமி வெளிப்படுத்தும் அவசர எச்சரிக்கை குறியீடுகள் மற்றும் அதற்குப் பதிலாக அக்குறியீடுகளுக்கு மனிதகுலம் எவ்வாறு பதிலளிக்கப்போகிறது என்பதையும் இது கேள்விக்குள்ளாக்குகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள், “இயற்கையால் பெற்ற ஊக்கம். காலநிலைக்காக. நமது எதிர்காலத்திற்காக” (Inspired by Nature. For Climate. For Our Future) என்பதாகும்.


முக்கிய அம்சங்கள்:


1. ஒரு முக்கிய கடல் நீரோட்டம் செயலிழந்து வருகிறது


விஞ்ஞானிகள் முன்பு எதிர்பார்த்ததைவிட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பரந்த நீரோட்ட அமைப்பு மிக அதிகமாக பலவீனமடையக்கூடும் என்று சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று தெரிவித்ததை அடுத்து, அதன் நிலைத்தன்மை குறித்து விஞ்ஞானிகள் மிகுந்த கவலை கொண்டுள்ளனர்.


உலகின் பெரும்பகுதிகளில் காலநிலையை ஒழுங்குபடுத்தும் அட்லாண்டிக் தீர்க்கரேகை தலைகீழ் சுழற்சி (Atlantic Meridional Overturning Circulation (AMOC)), 2100-ம் ஆண்டிற்குள் 59% வரை குறையக்கூடும். இதனால், இந்தியத் துணைக்கண்டம் போன்ற தொலைதூர வானிலை அமைப்புகளில் பேரழிவுகரமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

அட்லாண்டிக் தீர்க்கரேகை தலைகீழ் சுழற்சி (Atlantic Meridional Overturning Circulation (AMOC)) முக்கியமானது. ஏனெனில் இது ஒரு 'காலநிலைத் திருப்புமுனை' (climate tipping point) ஆகக் கருதப்படுகிறது. ஒரு திருப்புமுனையாக, அளவுக்கு அதிகமாக சமநிலைப்புள்ளியைத் தாண்டி சாய்க்கப்பட்ட நாற்காலியைப் போலவே, AMOC ஒரு குறிப்பிட்ட வரம்பைக் கடந்தவுடன், அது மீளமுடியாத வகையில் ஒரு புதிய, மந்தமான நிலைக்குச் சரிந்துவிடக்கூடும். அப்படி நடந்தால், அதன் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்துவதாக அமையலாம். அது வட அமெரிக்காவில் தீவிரமான கடல் மட்ட உயர்வையும், உலகளவில் கடுமையான வானிலை சீர்குலைவுகளையும் ஏற்படுத்தக்கூடும்.


கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வேளாண் வாழ்வாதாரத்திற்கும், நீர் விநியோகத்திற்கும் கோடைக்கால பருவமழையைச் சார்ந்துள்ள இந்தியாவிற்கு, இந்தக் கண்டுபிடிப்புகள் தனிச்சிறப்பு வாய்ந்தவை.


அட்லாண்டிக் தீர்க்கரேகை தலைகீழ் சுழற்சி (Atlantic Meridional Overturning Circulation (AMOC))


AMOC என்பது கடல் நீரோட்டங்களின் ஒரு பெரிய அமைப்பாகும். இது 'தெர்மோஹலைன் சுழற்சி' (thermohaline circulation (THC)) என்றும் அழைக்கப்படும் உலகளாவிய கடல் நீரோட்ட அமைப்பின் (global ocean conveyor belt) அட்லாண்டிக் கிளையாகும். இது உலகின் கடல் பகுதிகளில் வெப்பம் மற்றும் ஊட்டச்சத்துக்களைப் பரவச் செய்ய உதவுகிறது. இது வெப்பமண்டலங்களிலிருந்து வெப்பமான மேற்பரப்பு நீரை, வட அரைக்கோளத்தை நோக்கி எடுத்துச் செல்கிறது. அது உறைபனி நிறைந்த ஆர்க்டிக்கை அடையும்போது, ​​நீர் குளிர்ந்து, அடர்த்தியாகி, ஆழ்கடலில் பல கிலோமீட்டர் ஆழத்திற்குச் செல்கிறது. பின்னர் அது ஒரு குளிர்ந்த ஆழ்கடல் நீரோட்டமாகத் தெற்கு நோக்கித் திரும்பி, இறுதியில் மேற்பரப்பிற்கு வந்து வெப்பமடைந்து, இந்தச் சுழற்சியை மீண்டும் தொடங்குகிறது. மெதுவான ஆனால் சக்திவாய்ந்த இந்த அமைப்பு, உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவிலான வெப்பத்தை இடமாற்றம் செய்கிறது.


2. ஆர்க்டிக் கடல் பனி உருகுவது குறைந்துள்ளது. இது ஒரு ‘நல்ல செய்தி’ அல்ல.


அரை நூற்றாண்டுக்கும் மேலாக, ஆர்க்டிக் பகுதியில் கடல் பனி உருகுதல் என்பது பருவநிலை மாற்றத்தின் மிக முக்கியமான மற்றும் பரவலாக அறியப்பட்ட குறிகாட்டிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் கடல் பனி இழப்பின் வேகம் குறைந்துள்ளதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.


இதன் பொருள் ஆர்க்டிக் கடல் பனி மீண்டும் பழைய நிலையை அடைகிறது (மீட்சியடைகிறது) என்பதல்ல. இந்த வேகம் குறைவது தற்காலிகமானது மட்டுமே. மேலும், இது இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை நீடிக்கலாம். அதன் பிறகு, கடல் பனியானது நீண்டகால சராசரியைவிட வேகமாக உருகக்கூடும் என்று ஆய்வு கூறியது.


ஆர்க்டிக் பகுதியில் கடல் பனி குறைவது தொலைநோக்கு விளைவுகளை ஏற்படுத்தும். இது புவி வெப்பமயமாதலைத் தீவிரப்படுத்தி, கடல் மட்டம் மேலும் உயர வழிவகுத்து, கடல் பனியைச் சார்ந்துள்ள சூழல் அமைப்புகளுக்கு முன்னெப்போதும் இல்லாத சவால்களை முன்வைக்கும்.


‘உள் காலநிலை மாறுபாட்டிற்கு ஏற்ப, கடந்த 20 ஆண்டுகளில் ஆர்க்டிக் கடல் பனி இழப்பு மிகக் குறைவு’ (Minimal Arctic Sea Ice Loss in the Last 20 Years, Consistent With Internal Climate Variability) என்ற தலைப்பிலான ஆய்வு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ‘Geophysical Research Letters என்ற இதழில் வெளியிடப்பட்டது.


குறிப்பாக, மனித நடவடிக்கைகளால் புவியின் வெப்பநிலை உயர்கிறது என்பதை விஞ்ஞானிகள் நீண்ட காலத்திற்கு முன்பே உறுதிப்படுத்தியுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதாகும். இது வெப்பத்தைத் தக்கவைக்கும் பசுமை இல்ல வாயுக்களை (GHGs) வளிமண்டலத்தில் வெளியிடுகிறது. ஆர்க்டிக் பகுதியில், இந்த வெப்பமடைதல் கடல் பனி உருகுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.


மனிதர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிலான பசுமை இல்ல வாயுக்களை வளிமண்டலத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். அதே வேளையில், புவியின் சராசரி வெப்பநிலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, ஆர்க்டிக் கடல் பனி உருகுவது மெதுவாக இருப்பது, காலநிலை மாற்றமும் மெதுவாகிறது என்பதைக் குறிக்கிறது என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை.



3. 2025-ல் பூமியின் பெருங்கடல்கள் முன்னெப்போதையும்விட அதிக வெப்பமடைந்திருந்தன


ஒரு புதிய ஆய்வின்படி, 1960-களில் நவீன அளவீடுகள் தொடங்கப்பட்டதிலிருந்து எந்த ஆண்டையும்விட 2025-ல் பூமியின் பெருங்கடல்கள் அதிக வெப்பத்தை உறிஞ்சியுள்ளன. கடந்த ஆண்டு, பெருங்கடல்கள் கூடுதலாக 23 ஜெட்டாஜூல் (zettajoules) வெப்பத்தை உறிஞ்சின. இது 2024-ல் உறிஞ்சப்பட்ட கூடுதல் 16 ஜெட்டாஜூல் வெப்பத்தைவிட கணிசமாக அதிகமாகும்.


ஆற்றல் பொதுவாக ஜூல்களில் (joules) அளக்கப்படுகிறது. ஒரு ஜெட்டாஜூல் என்பது ஒரு செக்ஸ்டில்லியன் ஜூல் ஆகும். அதாவது, கடந்த ஆண்டு பெருங்கடல்கள் உள்வாங்கிக்கொண்ட 23 ஜெட்டாஜூல்களை 23,000,000,000,000,000,000,000 என்று எழுதலாம்.


Ocean Heat Content Sets Another Record in 2025 என்ற பகுப்பாய்வு, ஜனவரி 9 அன்று ‘அட்வான்சஸ் இன் அட்மாஸ்பெரிக் சயின்சஸ்’ (Advances in Atmospheric Sciences) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டது.


கடல் நீர் வெப்பமடைவது கடல்சார் சூழல் மண்டலங்களில் மீளமுடியாத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். உதாரணமாக, வெப்பமான கடல் நீர் 'கடல் அடுக்குப்பிரிவு' (ocean stratification) நிகழ்வை அதிகரிக்கிறது. இது அடர்த்தியின் அடிப்படையில் கடல் நீர் கிடைமட்ட அடுக்குகளாகப் பிரியும் ஒரு இயற்கையான நிகழ்வாகும்; இதில் வெப்பமான, எடை குறைந்த, உப்புத்தன்மை மற்றும் ஊட்டச்சத்து குறைந்த நீர், குளிர்ந்த, அதிக எடை கொண்ட, அதிக உப்புத்தன்மை மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த நீரின் மேல் அடுக்காக அமைகிறது. பொதுவாக, கடல்சார் சூழல் மண்டலங்கள், கடல் நீரோட்டங்கள், காற்று மற்றும் அலைகள் ஆகியவை இந்த அடுக்குகளை ஒன்றோடொன்று கலக்கச் செய்கின்றன.


இருப்பினும், வெப்பநிலை அதிகரிப்பு இந்த நீர் அடுக்குகள் ஒன்றோடொன்று கலப்பதை கடினமாக்கியுள்ளது. இதன் காரணமாக, பெருங்கடல்களால் வளிமண்டலத்திலிருந்து குறைந்த அளவே கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்ச முடிகிறது. மேலும், உறிஞ்சப்பட்ட ஆக்ஸிஜனால் கீழே உள்ள குளிர்ந்த கடல் நீருடன் சரியாகக் கலக்க முடியாததால், கடல்வாழ் உயிரினங்களின் உயிர்வாழ்வுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது.


வெப்பமான பெருங்கடல்கள் கடல்சார் வெப்ப அலைகளை ((Marine Heatwaves(MHWs)) ஏற்படுத்துகின்றன. இவை, கடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியின் மேற்பரப்பு வெப்பநிலை, சராசரி வெப்பநிலையை விட 3 அல்லது 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக, குறைந்தது ஐந்து நாட்களுக்கு உயரும்போது ஏற்படுகின்றன.


பல ஆய்வுகளின்படி, கடல் நீர் வெப்பமடைவது சூறாவளி மற்றும் புயல்கள் போன்ற தீவிரமான புயல் நிகழ்வுகள் அடிக்கடி மற்றும் அதிக வீரியத்துடன் ஏற்படவும் காரணமாக அமையலாம்.


4. புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிகரிப்பது மட்டுமே பருவநிலை நெருக்கடிக்குத் தீர்வாகாது


சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமையின் (International Renewable Energy Agency (IRENA)) அறிக்கையின்படி, 2024-ம் ஆண்டில் உலகம் சுமார் 582 ஜிகாவாட் (GW) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனைச் சேர்த்தது, இது முந்தைய ஆண்டை விட 15% அதிகரிப்பாகும். மேலும், ஒரே ஆண்டில் பதிவு செய்யப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனின் மிகப்பெரிய ஆண்டு அதிகரிப்பும் இதுவேயாகும்.


ஜூலை 2025 நிலவரப்படி, உலகெங்கிலும் நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் 4,442 ஜிகாவாட்டிற்கும் அதிகமாக உள்ளது. தற்போது, ​​உலகின் மொத்த மின்சார உற்பத்தியில் சுமார் 30% புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் மூலம் பெறப்படுகிறது.


கடந்த ஆண்டு ஜூலை 10 அன்று வெளியிடப்பட்ட சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சங்கத்தின் (IRENA) அறிக்கையில், தற்போதைய வளர்ச்சி விகிதத்தில், 2030-ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவும் திறனை மும்மடங்காக்கும் தனது இலக்கை உலகம் நெருங்கிவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த இலக்கு புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதற்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது மற்றும் 2023-ம் ஆண்டு துபாயில் நடைபெற்ற COP28 மாநாட்டில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவும் இது இருந்தது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் விரைவான வளர்ச்சி, காலநிலை இலக்குகளை அடைவதில் உலகம் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது என்ற தோற்றத்தை அளிக்கக்கூடும். இருப்பினும், உலக அளவில் புதைபடிவ எரிபொருட்களுக்குப் பதிலாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இன்னும் முழுமையாகப் பயன்படுத்தத் தொடங்கவே இல்லை.


தற்போதைய நிலையில், இது முக்கியமாக அதிகரித்துவரும் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்து வருகிறது. இந்தத் தேவை 1990-ம் ஆண்டிலிருந்து மூன்று மடங்கு அதிகரித்துள்ளதுடன், இன்னும் அதிகமாக வளரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.


5. உலகின் வெப்பமண்டலக் காடுகளைப் பாதுகாக்க ஒரு புதிய நிதியின் தேவை


காடழிப்பு என்பது ஒரு முக்கிய உலகளாவிய சவாலாகும். இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, உயிருள்ள காடுகளைவிட அழிந்த அல்லது வெட்டப்பட்ட காடுகளுக்குச் சந்தையில் அதிக மதிப்பு இருப்பதுதான். உதாரணமாக, காடுகள் நிலைத்திருப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகளான வெப்பநிலை குறைப்பு மற்றும் வனவிலங்குகளுக்கான வாழ்விடங்கள் போன்றவை பெரும்பாலும் பெரிதாகக் கருதப்படுவதில்லை. அதே வேளையில், காடுகளை அழித்து அந்த நிலத்தைச் சோயா போன்ற ஒற்றைப் பயிர் சாகுபடிக்கு (monoculture) மாற்றுவதில் வலுவான நிதி சார்ந்த ஊக்கங்கள் உள்ளன.


உலகின் வெப்பமண்டலக் காடுகளைப் பாதுகாக்கும் நோக்கத்தில், பிரேசிலின் பெலேம் நகரில் நடைபெற்ற COP30 பருவநிலை உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக ஒரு புதிய நிதி தொடங்கப்பட்டது. 'வெப்பமண்டலக் காடு நிரந்தர நிதி' (Tropical Forest Forever Facility(TFFF)) என்று அழைக்கப்படும் இந்த நிதியானது, 125 பில்லியன் டாலர்களைத் திரட்டி முதலீடு செய்வதையும், அதன் மூலம் கிடைக்கும் வருவாயைத் தங்கள் காடுகளைப் பாதுகாக்கும் வளரும் நாடுகளுக்கு வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.




வெப்பமண்டலக் காடு நிரந்தர நிதியானது (TFFF), கார்பன் சேமிப்பு உட்பட பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகளை வழங்கும் உலகின் முக்கிய வெப்பமண்டல காடுகளைப் பாதுகாப்பதற்கு நிதி வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.


வெப்பமண்டலக் காடு நிரந்தர நிதி (TFFF) என்பது ஒரு நிரந்தரமான, சுயநிதி அமைப்பாக வடிவமைக்கப்பட்ட முதலீட்டு நிதியாகும். இதன் மூலம், வளரும் வெப்பமண்டல வனங்களைக் கொண்ட 74 நாடுகள் வரை, தங்களிடம் தற்போதுள்ள தொன்மையான காடுகளைப் பாதுகாத்து (old-growth forests) வருவதற்காக நிகர வருமானம் வழங்கப்படும்.


இந்த நிதியானது, செல்வந்த அரசாங்கங்கள் மற்றும் கொடையாளர்களிடமிருந்து 25 பில்லியன் டாலரையும், கூடுதலாக 100 பில்லியன் டாலரை தனியார் முதலீடாகவும் திரட்டத் திட்டமிட்டுள்ளது. பின்னர், அந்தத் தொகையானது பொது மற்றும் பெருநிறுவனச் சந்தைப் பத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு முதலீட்டுத் தொகுப்புகளில் முதலீடு செய்யப்படும். அதன் மூலம் கிடைக்கும் வருடாந்திர வருமானமானது, தங்கள் காடுகளைப் பாதுகாக்கும் வெப்பமண்டல வன நாடுகளுக்கு வெகுமதியாகப் பயன்படுத்தப்படும்.


நாடுகளுக்கான நிதியுதவித் தொகைகள், ஆண்டுதோறும் வன விதானப் பரப்பைக் (forest canopy cover) குறைந்த செலவிலும் வெளிப்படையான முறையிலும் கண்காணிக்கும் செயற்கைக்கோள் தொலை உணர்வுத் தரவுகளின் (satellite-based remote sensing data) அடிப்படையில் வழங்கப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.


இந்தியாவின் புதிய காலநிலை இலக்குகள்


இந்தியா மார்ச் 25 அன்று, 2035-ம் ஆண்டுக்கான தனது பருவநிலை இலக்குகளை வெளியிட்டது. அதன்படி, தனது பொருளாதாரத்தின் கார்பன் செறிவைக் (carbon intensity) குறைப்பதிலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பயன்பாட்டை விரிவுபடுத்துவதிலும், காடுகள் மற்றும் மரங்களிலிருந்து கார்பன் உறிஞ்சும் பரப்புகளை (carbon sinks) உருவாக்குவதிலும் மேலும் முன்னேற்றம் காண்பதாக உறுதியளித்துள்ளது.


தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் (NDCs)


2015-ம் ஆண்டின் இந்த ஒப்பந்தத்தின்கீழ், ஒவ்வொரு நாடும் காலநிலை மாற்றத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்திற்கு உதவும் வகையில் காலநிலை நடவடிக்கைகளைத் தீர்மானித்து, செயல்படுத்தக் கடமைப்பட்டுள்ளது. இவை தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் (NDCs) எனக் குறிப்பிடப்படுகின்றன. காலநிலை நடவடிக்கைகளின் தன்மையையும் மற்றும் அளவையையும் நாடுகளே தீர்மானிக்கின்றன என்பதை இது வலியுறுத்துகிறது.


2030-ஆம் ஆண்டிற்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த 50% இலக்கைவிட, 2035-ம் ஆண்டில் தனது மின்சார உற்பத்தித் திறனில் குறைந்தபட்சம் 60% புதைபடிவ எரிபொருள் அல்லாத மூலங்களிலிருந்து (non-fossil fuel) பெறப்படுவதை உறுதிசெய்யும் என இந்தியா தெரிவித்துள்ளது.


2005-ம் ஆண்டு அளவுகளுடன் ஒப்பிடுகையில், கார்பன் உமிழ்வு அடர்த்தியில், அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஓர் அலகுக்கான உமிழ்வுகளில், குறைந்தபட்சம் 47% குறைப்பை அடைவதாக இந்தியா உறுதியளித்துள்ளது. இது, 2030-ம் ஆண்டுக்கான அதன் தற்போதைய 45% இலக்கைவிட இரண்டு சதவிகிதப் புள்ளிகள் அதிகமாகும்.


Original article : World Environment Day 2026: Let’s revisit 5 critical environmental lessons. -Roshni Yadav

Share:

கல்பசார் திட்டம் குஜராத்தின் சௌராஷ்டிரப் பகுதியின் சமூக-பொருளாதார நிலையை எவ்வாறு மேம்படுத்தும்? - அபினவ் ராய்

 வரலாற்றுரீதியாக நெதர்லாந்து சந்தித்ததைப் போன்ற பல சவால்களை குஜராத்தின் கடற்கரையும் சந்தித்தது வருகிறது. அவற்றில் உவர்நீர் ஊடுருவல் (salinity intrusion), வறட்சி மற்றும் கடல் மட்டம் உயர்வு ஆகியவை அடங்கும். லட்சியமிக்க கல்பசார் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல, நீர் பொறியியலில் உள்ள டச்சு நிபுணத்துவத்தை இந்தியா எவ்வாறு பயன்படுத்திக்கொள்ள முயற்சி செய்து வருகிறது?


வறட்சி தொடர்பான பாதிப்புகளை எதிர்கொள்ளும் மாநிலமான குஜராத், 1900-ஆம் ஆண்டிலிருந்து ஏறக்குறைய 30 முறை தண்ணீர் பற்றாக்குறையைச் சந்தித்துள்ளது. முன்மொழியப்பட்ட கல்பசார் திட்டமானது, ஆண்டு முழுவதும் பாசனம், தொழிற்சாலை மற்றும் வீட்டு உபயோகத்திற்குத் தண்ணீர் வழங்கக்கூடிய, நம்பகமான ஒரு பெரிய அளவிலான நன்னீர் நீர்த்தேக்கத்தை உருவாக்குவதன் மூலம், சௌராஷ்டிரா மற்றும் மத்திய குஜராத்தின் நீண்டகால நீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


பிரதமர் நரேந்திர மோடி தனது சமீபத்திய நெதர்லாந்து பயணத்தின் போது, வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் நீர் மேலாண்மை நடவடிக்கைகளில் உலகளாவிய அளவுகோலாகத் இருந்து வரும் நெதர்லாந்து நாட்டின் அஃப்ஸ்லூயிட்ஜிக் அணையையும் பார்வையிட்டார். மேலும், முன்மொழியப்பட்ட கல்பசார் திட்டம் தொடர்பான தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்காக இரு நாடுகளும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.


ஆனால், இந்தியாவின் மிகவும் லட்சியமான நீர் உள்கட்டமைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த, டச்சு நீர் பொறியியலில் இந்தியா காட்டும் இந்த மிகுந்த ஆர்வத்திற்கு என்ன காரணம்? காம்பத் வளைகுடா மேம்பாட்டுத் (Khambhat Development Project) திட்டம் என்றும் அழைக்கப்படும் கல்பசார் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் யாவை? தண்ணீர் பற்றாக்குறையைத் தீர்ப்பதுடன், இந்தத்திட்டத்தை செயலப்படுத்துவதன் மூலம் கிடைக்கும்  பலதரப்பட்ட நன்மைகள் யாவை?


குஜராத்தின் தண்ணீர் பற்றாக்குறையை கல்பசார் திட்டம் எவ்வாறு தீர்க்க முயற்சி செய்கிறது?


குஜராத் இந்தியாவின் மொத்த புவியியல் பரப்பளவில்   6 சதவீதத்தை உள்ளடக்கியுள்ளது மற்றும் இதனை மூன்று முக்கிய பகுதிகளாகப் பிரிக்கலாம்:


அ) மத்திய மற்றும் தெற்கு குஜராத் போன்ற பகுதிகள் வளமான, தொழில் செய்வதற்கு ஏற்ற முக்கிய பகுதிகளாகும்.


ஆ) சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதியில் மேற்கு தீபகற்பம் மற்றும் உப்பு  தன்மை கொண்ட சமவெளிகள்  உள்ளன


c) வடக்கு  குஜராத் பகுதியில் வடக்கு சமவெளிகள் உள்ளன.


குஜராத் மாநிலம் மழைப்பொழிவிற்கு தென்மேற்குப் பருவமழையையே நம்பியுள்ளது. தென்மேற்குப்பருவமழை குஜராத் குதிகளில் பெரும்பாலும் சீரற்ற முறையில் பரவியுள்ளது.


சௌராஷ்டிரா, கட்ச் மற்றும் வடக்கு குஜராத் பகுதிகள் ஒவ்வொரு 3-வது ஆண்டும் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன. முன்னரே குறிப்பிட்டபடி, குஜராத் ஒரு நாள்பட்ட வறட்சி பாதிப்புக்குள்ளாகும் மாநிலமாகும். குஜராத் அரசின் நீர்வளத் துறை கூற்றின்ப்படி, 1900-ஆம் ஆண்டிலிருந்து குஜராத் மாநிலம் 30 முறை தண்ணீர் பற்றாக்குறையைச் சந்தித்துள்ளது.


கம்பாத் வளைகுடாவில் இது முன்பு கேம்பே என்று அறியப்பட்டது. முன்மொழியப்பட்டுள்ள கல்பசார் திட்டம், சௌராஷ்டிரா மற்றும் மத்திய குஜராத் பகுதிகளின் நீண்டகால நீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்காக, ஆண்டு முழுவதும் பாசனம், தொழில் மற்றும் வீட்டு உபயோகத்திற்குத் தேவையான நீரை வழங்கக்கூடிய, நம்பகமான மற்றும் பெரிய அளவிலான நன்னீர் தேக்கம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது.


2022-ஆம் ஆண்டு கல்பசார் அறிக்கையின்படி, இந்தத் திட்டம் உள்ளூர் கால்வாய்கள் மற்றும் நிலத்தடி நீரைப் புத்துயிர் (Replenish) பெறச் செய்து, தற்போதுள்ள 60-க்கும் மேற்பட்ட அணைகளுக்கு நன்னீரைச் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1986-ஆம் ஆண்டு முதல் அரசாங்கத்தின் செயல் திட்டத்தில் இடம்பெற்றுள்ள இந்தத் திட்டம், தற்போது நெதர்லாந்தின் ஒத்துழைப்புடன் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஏன் கம்பத் வளைகுடா கல்பசருக்கு ஏற்றது


மேலும், இந்தத்திட்டத்தின் சாத்தியக்கூறு காம்பத் வளைகுடாவின் புவியியல் அமைப்புடன் நெருக்கமாக தொடர்புடையது. அனைத்து இந்திய மாநிலங்களிலும் குஜராத் மிக நீண்ட கடற்கரையைக் (2,340.62 கி.மீ) கொண்டுள்ளது. காம்பத் வளைகுடாவானது சௌராஷ்டிரா பகுதியை குஜராத்தின் தென்கிழக்குப் பகுதியிலிருந்து பிரிக்கிறது. சூரத், பரூச் மற்றும் தஹேஜ் உள்ளிட்ட பல முக்கிய துறைமுகங்கள் அமைந்துள்ளன. மேலும், வரலாற்று ரீதியாகவும் இது இந்தியாவை மேற்கு ஆசிய நாடுகளுடன் இணைக்கும் முக்கிய கடல் வழித்தடமாக உள்ளது.


காம்பத் வளைகுடாவின் புவியியல் அமைப்பு, கல்பசார் அணைக்கு ஏற்றதாக உள்ளது. இந்தப்பகுதியில் 13 மீட்டர் உயரமான அலை ஏற்ற-இறக்க வேறுபாடு (Tidal Range) காணப்படுகிறது. Tidal Range என்பது தொடர்ச்சியாக ஏற்படும் உயர் அலை   மற்றும் கீழே உள்ள அலை   நிலைகளுக்கிடையேயான உயர வேறுபாட்டைக் குறிக்கிறது. மேலும், இந்தப்பகுதியில் வலுவான அலைநீர் ஓட்டங்கள் (Tidal Currents) காணப்படுகின்றன. அவற்றின் வேகம் பல நேரங்களில் வினாடிக்கு 3 மீட்டருக்கும் அதிகமாக பதிவாகிறது.


மேலும், இந்த வளைகுடாவின் தென்புறத்தில் 180 கி.மீ அகலமும், வடபுறத்தில் ஏறத்தாழ 5 கி.மீ அகலமும் கொண்ட அகன்ற முகத்துவாரம் உள்ளது. இந்த நில அமைப்பு, இதனை அணை கட்டுவதற்கு ஏற்ற இடமாக ஆக்குகிறது.



முக்கிய நோக்கங்கள் மற்றும் நன்மைகள்


கல்பசார் திட்டம் என்பது, குஜராத்தின் தண்ணீர் பற்றாக்குறையுள்ள சௌராஷ்டிரா பகுதியில் பாசனம், தொழிற்சாலை மற்றும் வீட்டு உபயோகத்திற்காக தண்ணீர் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய திட்டமாகும்.


அணை மற்றும் நீர்த்தேக்க உள்கட்டமைப்பு


இந்தத் திட்டத்தில், அலதார் (கிழக்குப் பக்கம்) முதல் பவநகர் அருகே (மேற்குப் பக்கம்) வரை வளைகுடாவின் குறுக்கே 60.13 கி.மீ நீளமுள்ள அணை கட்டுவது அடங்கும். இதில் 26.7 கி.மீ நீளம் வளைகுடாவிலும் (கடல் பகுதி), மீதமுள்ள 33.43 கி.மீ நீளம் காம்பத் வளைகுடாவின் குறுக்கே உள்ள அருகிலுள்ள சாலை வரை இரண்டு  கரைகளிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.


நன்னீர் சேமிப்பு மற்றும் நீர்ப்பாசனம்


திட்டத்தின் முன்-சாத்தியக்கூறு அறிக்கையின்படி, இந்த அணை 7800 மில்லியன் கன மீட்டர் கொள்ளளவுடன் உலகின் மிகப்பெரிய நன்னீர் நீர்த்தேக்கங்களில் ஒன்றை உருவாக்கும். இது சௌராஷ்டிராவின் 9 மாவட்டங்களுக்கு, மொத்தம் 10.54 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பிற்கு பாசன நீரை வழங்கும்.


நதி ஒருங்கிணைப்பு மற்றும் நீர் திசைதிருப்பல்


இந்த நீர்த்தேக்கம், சபர்மதி, மாஹி, தாதர் மற்றும் நர்மதா ஆகிய நான்கு பெரிய ஆறுகளிலிருந்தும், வத்வான் போகவோ, லிம்ப்டி போகவோ, சுக்பதர், உதாவ்லி, கேரி, கேலோ மற்றும் கலுபார் ஆகிய ஏழு சிறிய ஆறுகளிலிருந்தும் நீரைப் பெறும். இதற்காக, நர்மதா ஆற்றின் கூடுதல் நீரை நீர்த்தேக்கத்திற்குத் திருப்பிவிடும் வகையில், அதன் மீதுள்ள பத்பூத் தடுப்பணையில் ஒரு மாற்றுக்கால்வாய் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.



சுற்றுச்சூழல் மற்றும் கடலோர நன்மைகள்


இந்தத்திட்டத்தின் மூலம் சுற்றியுள்ள மாவட்டங்களில் நிலத்தடி நீர் நிலை மேம்படும் என்றும், அலைகளால் பாதிக்கப்பட்ட பகுதிகள் பாதுகாக்கப்படும் என்றும், கடலோரப் பகுதியில் உப்புத்தன்மை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தத்திட்டத்தின் மதிப்பீடுகளின்படி 1.76 லட்சம் ஹெக்டேர் நிலம் மீட்கப்படும் எனத் தெரிகிறது.


புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மீன்வளம், சுற்றுலா


சூரிய ஆற்றல் (1000 மெகாவாட்) மற்றும் காற்றாலை ஆற்றல் (1500 மெகாவாட்) மேம்பாட்டின் மூலம் கல்பசார் திட்டம் மிகப்பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனைக் கொண்டுள்ளது. இந்தத்திட்டத்தின் மூலம் ஆற்றல் தேவையான ஆற்றலை தானாக பூர்த்தி செய்யமுடியும். நன்னீர் தேக்கத்தை உருவாக்குவதன் மூலம் கடல்சார் மீன்பிடி முறைக்கு மாற்றாக நன்னீர் மீன் வளர்ப்பு அமையும். இதன் மூலம் ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படும் மீன்களின் அளவு, ஆரம்பக் கட்டத்தில் 2,000 டன்களாக இருந்து, முழுமையான அளவாக வளர்ச்சி நிலையில் 20,000 டன்களாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்தப்பகுதியில் மேம்பாடு மற்றும் சுற்றுலாவை ஊக்குவிப்பதையும் இந்தத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.


போக்குவரத்து மற்றும் இணைப்பு


கிழக்கு மற்றும் மேற்குப் பக்கங்களில் உள்ள மாவட்டங்களை இணைக்கும் வகையில், உபரி நீரை வெளியேற்றுவதற்கான வெள்ளக் கட்டுப்பாட்டுக் கருவி ஒன்றையும், 16 வழிச் சாலைகளையும், அதனுடன் 4 வழி நிரந்தர இரயில் போக்குவரத்துப் பாதையையும் அமைப்பதற்கும் திட்டங்கள் உள்ளன. இது  வளைகுடாவைக் கடந்து செல்லும்போது பயணத் தூரத்தை 240 கி.மீ-லிருந்து 60 கி.மீ-ஆகக் குறைக்கும்.




திட்டத்தின் வரலாற்றுப் பின்னணி


குறிப்பாக, கல்பசார் திட்டம் 1955-ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டது. அப்போது, ​​சௌராஷ்டிரா பகுதியில் நில மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த நெதர்லாந்து பொறியியல் ஆலோசகர்கள் (Netherlands Engineering Consultants (NEDECO)) என்ற டச்சு நிறுவனம், இது போன்ற ஒரு யோசனையை முன்வைத்தது. 1962-ல், மாநிலங்களவை உறுப்பினராக (1952-56) இருந்த போகிலால் ஷா, காம்பத் வளைகுடாவின் குறுக்கே அணை கட்டும் யோசனையை முன்மொழிந்து, அந்த நன்னீர் ஏரிக்கு காந்தியின் (Gandhisar) பெயரை பரிந்துரை செய்தார்.


அதைத் தொடர்ந்து, பொறியாளரான டாக்டர் வித்துபாய் படேல் மற்றும் ஐ.நா.வின் அலை ஆற்றல் நிபுணரான பேராசிரியர் ஈ.எம்.வில்சன் போன்ற ஆளுமைகள் இந்த யோசனைக்கு வடிவம் கொடுத்தனர். 1986-ல், குஜராத் அரசு ஒரு நன்னீர் நீர்த்தேக்கத்தையும், வளைகுடா முழுவதும் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்கட்டமைப்பையும் மேம்படுத்துவதற்கு முறைப்படி முன்மொழிந்தது. இருப்பினும், சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொள்வதற்கான அனுமதி 2003-ஆம் ஆண்டில் தான் வழங்கப்பட்டது.


'அஃப்ஸ்லுய்ட்ஜிக்' ஏன் ஒரு உலகளாவிய அளவுகோலாகத் திகழ்கிறது?


நெதர்லாந்து நாட்டின் மூன்றில் ஒரு பகுதி கடல் மட்டத்திற்குக் கீழே அமைந்துள்ளதால், அந்நாடு ஆரம்ப காலத்திலேயே நீர் மேலாண்மைத் திறன்களை மேம்பத்தியது. மேலும், வெள்ளத்தைக் கட்டுப்படுத்த அணைக்கட்டுகள், கரைகள் மற்றும் புயல் தடுப்பு அரண்கள் போன்ற அதிநவீன அமைப்புகளை உருவாக்கியது.


இவற்றுள், வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் நில மீட்பில் அஃப்ஸ்லூயிட்ஜிக் அணை ஒரு உலகளாவிய அளவுகோலாகத் தனித்து நிற்கிறது. 1932-ல் கட்டப்பட்ட, 32 கி.மீ நீளமுள்ள இந்த அணை, நெதர்லாந்தில் உள்ள வாடன் கடலை ஐசெல்மீர் நன்னீர் ஏரியிலிருந்து பிரிக்கிறது. இது நெதர்லாந்தின் பெரும் பகுதிகளை வட கடலிலிருந்து பாதுகாப்பதுடன், நன்னீர் பாதுகாப்பு, உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து மற்றும் சாலை வழியாக இணைப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி ஆகியவற்றையும் ஆதரிக்கிறது.


ஐசெல்மீர் ஏரிக்குத் தேவையான நீரில் 70 சதவீதம், ரைன் நதியின் துணை நதியான ஐசெல் ஆற்றிலிருந்தும், மீதமுள்ள நீர் மழைநீர், பிற ஓடைகள் மற்றும் சிறிய ஆறுகளிலிருந்தும் கிடைக்கிறது. தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், 10,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் ஒரு அதிக வலிமை கொண்ட புயலின் போது ஏற்படும் அலைகளைத் தாங்கும் வகையில் அஃப்ஸ்லூயிட்ஜிக் நவீனமயமாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு வருகிறது.


உலகளாவிய அனுபவங்களும் கல்பசார் திட்டத்திற்க்கான எதிர்காலப் பாதையும்


குஜராத்தின் கடற்கரையானது, உவர்நீர் ஊடுருவல், வறட்சி மற்றும் கடல் மட்டம் உயர்வு உள்ளிட்ட, வரலாற்று ரீதியாக நெதர்லாந்து சந்தித்ததைப் போன்ற பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது. இது போன்ற சூழல்களை கருத்தில் கொண்டுதான், தனது மிக முக்கிய மற்றும் பிரம்மாண்டமான நீர் உள்கட்டமைப்புத் திட்டமான 'கல்பசார் திட்டத்தை' (Kalpasar Project) செயல்படுத்த, டச்சு நீர் மேலாண்மைப் பொறியியல் தொழில்நுட்பத்தில் இந்தியா அதிக ஆர்வம் காட்டி வருகிறது.


மற்றொரு முக்கிய உதாரணம் தென் கொரியாவின் சேமங்கியம் திட்டமாகும். 1970-களின் உலகளாவிய உணவு நெருக்கடி மற்றும் 1980-களின் மோசமான அறுவடைக்குப் பிறகு, 1991-ல் தொடங்கப்பட்டது. வளைந்து நெளிந்த கடற்கரை அமைப்பு, மென்சரிவான கடலடிப் பகுதி மற்றும்  6 மீட்டர் அளவிலான கடல் அலை  ஆகியவை, இந்த கடல் அலை மீட்புத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்குச் சாதகமான புவியியல் மற்றும் நீரியல் சூழல்களை வழங்கின.


தற்போது இந்தியாவிடம் சர்வதேச தொழில்நுட்ப ஒத்துழைப்பும், பிற உலகளாவிய முன்னுதாரணங்களும் இருப்பதால், முக்கிய இலக்கை கொண்ட கல்பசார் திட்டத்தின் செயலாக்கம் விரைவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கல்பசார் திட்டம் சௌராஷ்டிரா மற்றும் குஜராத்தின் சமூக-பொருளாதார நிலைமைகளை மேம்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது.


Original article : How Kalpasar project seeks to improve socio-economic conditions of Gujarat’s Saurashtra. -Abhinav Rai

Share:

திவால் நடவடிக்கைகள், காசோலை மோசடி வழக்கில் உங்களைப் பாதுகாக்க முடியுமா? சட்டரீதியான முரண்பாடு குறித்து . . . -அமால் ஷேக்

 ஒரு நபர் 'திவால் மற்றும் நொடிப்புநிலைச் சட்டம்' (IBC)-ன் கீழ் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும்போது, ​​'தற்காலிகத் தடை' (moratorium) ஒன்று அமலுக்கு வருகிறது. ஆனால், இந்தத் தடை காசோலை மோசடியையும் உள்ளடக்குமா என்பதில் தெளிவு இல்லை. இந்த விவகாரம் தற்போது உச்சநீதிமன்றத்தின் ஒரு விரிவான அமர்வுக்குப் (larger bench) பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


திவால் நடவடிக்கைகளுக்கு (insolvency proceedings) உட்படும் ஒரு நபருக்கு எதிரான காசோலை திரும்பப் பெறப்பட்ட வழக்கை நிறுத்தி வைக்க முடியுமா?


இந்தக் கேள்விக்குத் தெளிவான தீர்ப்பை வழங்குவதற்கான சூழலை உச்ச நீதிமன்றம் இப்போது உருவாக்கியுள்ளது. கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறும் நிறுவனங்களைக் கையாள்வதற்கான ஒரு கட்டமைப்பை வழங்கும் திவால் மற்றும் நொடிப்புநிலைச் சட்டத்திற்கும், (Insolvency and Bankruptcy Code (IBC)), காசோலை திரும்பப் பெறுதலைக் குற்றச் செயலாகக் கருதும் 'பேச்சுவார்த்தைக்குரிய ஆவணங்கள் சட்டம்' (Negotiable Instruments Act)-இன் பிரிவு 138-க்கும் இடையிலான தொடர்பு மற்றும் முரண்பாடுகளை நீதிமன்றம் ஆராயவுள்ளது.


மே 27 அன்று, நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, காசோலை மோசடி வழக்கின் குற்றவியல் மற்றும் இழப்பீடு சார்ந்த அம்சங்களுக்கு இடையே ஒரு வேறுபாட்டை வரையறுக்க வேண்டியிருக்கலாம் என்று கூறியது.


திவால் மற்றும் நொடிப்புநிலைச் சட்டம் (IBC) என்பது, தனிப்பட்ட குற்றவியல் பொறுப்பிலிருந்து தப்பிப்பதற்கான ஒரு வழியாக மாறிவிடக் கூடாது என்று அவர்கள் குறிப்பிட்டனர். மேலும், திவால் நடவடிக்கைகளின் போது காசோலை மோசடி வழக்கில் இழப்பீடு பெறுவதை அனுமதிப்பது, கடனளிப்போர் மத்தியில் சொத்துக்களை ஒழுங்கான மற்றும் நியாயமான முறையில் பகிர்ந்தளிப்பதை உறுதிசெய்யும் திவால் மற்றும் நொடிப்புநிலைச் சட்டம் (IBC) நோக்கமாகக் கொண்டுள்ளது.


காசோலை மோசடி வழக்கு என்பது அடிப்படையில் ஒரு குற்றவியல் வழக்கா அல்லது முந்தைய உச்சநீதிமன்றத் தீர்ப்பு விவரித்தபடி "குற்றவாளி ஓநாய் வேடத்தில் இருக்கும் ஒரு நாகரிக ஆடு" (civil sheep in criminal wolf’s clothing) என்பதா என்பது குறித்த நீதிமன்றத்தின் சொந்த சட்டக் கோட்பாடுகளில் உள்ள ஒரு கருத்து வேறுபாட்டிலிருந்து இந்தக் குறிப்பு உருவாகிறது.


திவால் மற்றும் நொடிப்புநிலைச் சட்டம் (IBC) கூறுவது என்ன?


ஒருவர் திவால் மற்றும் நொடிப்புநிலைச் சட்டத்தின் (IBC) கீழ் தனிநபர் திவால் நடவடிக்கைகளுக்கு உட்படும்போது, ​​பிரிவுகள் 96 மற்றும் 101-இன் கீழ் எந்தவொரு கடன் தொடர்பான சட்ட நடவடிக்கை அல்லது செயல்முறைகளுக்கும் ஒரு தற்காலிகத் தடை அமலுக்கு வருகிறது.


பிரிவு 96, திவால்நிலைக்கான விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து ஒரு இடைக்காலத் தடைக்கு வழிவகை செய்கிறது. மேலும், நீதிமன்றம் திவால்நிலை விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டவுடன் ஒரு சட்டப்பூர்வத் தடை நடைமுறைக்கு வர வேண்டும் என்று பிரிவு 101 குறிப்பிடுகிறது.


தற்போதைய வழக்கான தினேஷ்சந்த் சுரானா vs யுனைடெட் கமர்ஷியல் வங்கி (Dineshchand Surana vs UCO Bank) வழக்கானது, ஒரு காசோலை மோசடி வழக்கு, திவால்நிலை செயல்முறையால் இடைநிறுத்தப்படக்கூடிய ஒரு நடவடிக்கையாகத் தகுதி பெறுகிறதா என்பது தொடர்பானது.


அப்படியென்றால், ஒரே நேரத்தில் திவால்நிலை மற்றும் மாற்றுமுறை ஆவணங்கள் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் கடன் வழங்குநர்கள், குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களின் இயக்குநர்களுக்கான கணக்கீடுகளை இது மாற்றும்.



பிரிவு 138 கூறுவது என்ன?


பிரிவு 138-ன் கீழ், காசோலை (cheque) பணமின்றித் திரும்பப் பெறப்படுவது (dishonour) ஒரு குற்றவியல் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. இதற்குச் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இவை இரண்டும் தண்டனையாக விதிக்கப்படலாம். இந்தக் குற்றத் தடுப்பு நடவடிக்கையானது, பணம் செலுத்தும் முறையாகக் காசோலைகள் மீதான மக்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


காலப்போக்கில், பிரிவு 138-ன் கீழான நடவடிக்கைகளில் இழப்பீடு வழங்கும் அம்சத்திற்கு நீதிமன்றங்கள் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றன. தண்டனை பெற்ற ஒரு குற்றம் சாட்டப்பட்டவர், புகார்தாரருக்கு இழப்பீடு வழங்குமாறு உத்தரவிடப்படலாம்.


இந்தக் குற்றம் சமரசம் செய்துகொள்ளக்கூடியது (compoundable), அதாவது சம்பந்தப்பட்ட தரப்பினர் சமரசம் செய்துகொண்டால், வழக்கு முடிவுக்கு வரும். ஒரு புகார்தாரர் அதே தொகைக்காக ஒரே நேரத்தில் ஒரு உரிமையியல் வழக்கையும் தாக்கல் செய்யலாம். இந்த அம்சங்கள், பிரிவு 138 நடவடிக்கைகளைத் தண்டனை மற்றும் இழப்பீடு என இரட்டை நோக்கத்திற்காகப் பயன்படுவதாக நீதிமன்றங்கள் கருதுவதற்கு வழிவகுத்துள்ளன.


இந்த இரட்டைத் தன்மையே, திவால் சட்டத்துடனான (insolvency law) இதன் செயல்பாட்டுத் தொடர்பைச் சிக்கலாக்குகிறது.


திவால் மற்றும் நொடிப்புநிலைச் சட்டத்தின் (IBC) கீழ் உள்ள 'தற்காலிகத் தடை' (moratorium), கடன் மறுசீரமைப்பு செயல்முறை நடைபெறும்போது கடனாளியின் சொத்துக்களைக் குறைக்கக்கூடிய நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. பிரிவு 138 நடவடிக்கையின் ஒரு பகுதியாக வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையானது, கடனாளியின் சொத்துக்களிலிருந்து எடுக்கப்பட்டு ஒரு கடன் வழங்குநருக்குச் செலுத்தப்பட்டால், அது இந்தத் தடையின் வரம்பிற்குள் வரக்கூடும். இருப்பினும், இக்குற்றம் முதன்மையாக ஒரு குற்றவியல் விவகாரமாகக் கருதப்பட்டால், அந்தத் தடை இதற்குப் பொருந்தாது.

சட்ட முன்னுதாரணத்தில் உள்ள முரண்பாடு


சட்ட முன்னுதாரணங்களில் உள்ள இந்த முரண்பாடு, 2021-ம் ஆண்டு பி. மோகன்ராஜ் vs ஷா பிரதர்ஸ் இஸ்பாட் (P Mohanraj vs Shah Bros Ispat) வழக்கில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பிலிருந்து தொடங்குகிறது. அந்தத் தீர்ப்பு, திவால் மற்றும் நொடிப்புநிலைச் சட்டத்தின் (IBC) பிரிவு 14-இன் கீழ் உள்ள பெருநிறுவன திவால்நிலைத் தடையுத்தரவு மற்றும் தனிநபர் திவால்நிலை விதிகள் ஆகியவற்றை ஆராய்ந்தது.


இந்த அமர்வு, மாற்றுமுறை ஆவணங்கள் சட்டத்தின் பிரிவு 138-ஐ, “குற்றவாளி ஓநாய் வேடத்தில் உள்ள ஒரு நாகரிக ஆடு” (a civil sheep in criminal wolf’s clothing) என்று வர்ணித்தது. வேறுவிதமாகக் கூறினால், இந்தப் பிரிவு ஒரு குற்றவியல் குற்றமாக உருவாக்கப்பட்டிருந்தாலும், அதன் உண்மையான நோக்கம் பணத்தை மீட்பதே ஆகும்.


இந்த விளக்கத்தின் அடிப்படையில், ஒரு கடன் தொடர்பான சட்ட நடவடிக்கைகளுக்கான தற்காலிகத் தடை, பிரிவு 138-ன் கீழ் தாக்கல் செய்யப்படும் ஒரு புகாருக்கும் தர்க்கரீதியாகப் பொருந்தும்.


இருப்பினும், 2025-ல், ராகேஷ் பானோட் vs குர்தாஸ் அக்ரோ (Rakesh Bhanot vs Gurdas Agro) வழக்கில், இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒரு மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தது. பிரிவு 138-ன் கீழ் வழக்குத் தொடரப்படுவதைத் தவிர்ப்பதற்காக, குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தற்காலிகத் தடையைப் பயன்படுத்த அனுமதிப்பது, மாற்றுமுறை ஆவணங்கள் சட்டத்தின் நோக்கத்தையே தோற்கடித்துவிடும் என்று அது தீர்ப்பளித்தது. கடன் மீட்புக்கான சிவில் நடவடிக்கைகளை ஒத்திவைப்பதற்காக மட்டுமே இந்தத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது என்றும், அது குற்றவியல் நடவடிக்கைகளை நிறுத்துவதற்காக அல்ல என்றும் அந்த அமர்வு குறிப்பிட்டது.





2026-ல் நீதிபதி அமர்வு, ராகேஷ் பானோட், பி. மோகன்ராஜ் வழக்கில் தனிநபர் திவால்நிலை குறித்த பகுப்பாய்வில் ஈடுபடவில்லை என்றும், அந்த வழக்கு பிரிவு 138-இன் குற்றவியல் பரிமாணங்களை முழுமையாக ஆராயவில்லை என்றும் குறிப்பிட்டது. இதன் விளைவாக, இரு விளக்கங்களுக்கும் இடையிலான முரண்பாட்டை எந்தத் தீர்ப்பும் முழுமையாகத் தீர்க்கவில்லை.


அமர்வு பரிந்துரைத்தது என்ன?


சமீபத்திய வழக்கைக் குறிப்பிடுகையில், உச்சநீதிமன்ற அமர்வு ஒரு பூர்வாங்கக் கருத்தை வெளிப்படுத்தியது.


இது, பிரிவு 138 நடவடிக்கைகளின் குற்றவியல் அம்சம் (விசாரணை, தண்டனைத் தீர்ப்பு, சிறைத்தண்டனை, அபராத அபராதம்) என்றும், புகார்தாரருக்குப் பணம் செலுத்த நீதிமன்றம் தனது விருப்பப்படி உத்தரவிடக்கூடிய இழப்பீட்டு அம்சம் என்றும் அது வேறுபடுத்திக் காட்டியது.


குற்றவியல் அம்சத்தைப் பொறுத்தவரை, திவால் மற்றும் நொடிப்புநிலைச் சட்டமே (IBC) கடனின் வரையறையிலிருந்து நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட அபராதத்தைச் செலுத்தும் பொறுப்பை விலக்குவதால், இந்தத் தடையாணை பொருந்தாது என்று அது கூறியது. திவால்நிலை என்பது தனிப்பட்ட குற்றவியல் பொறுப்புணர்வுக்கு எதிரான ஒரு கேடயமாக இருக்க முடியாது.


இருப்பினும், இழப்பீடு தொடர்பான அம்சத்தில், கடன் திருப்பிச் செலுத்துதலை நிறுத்தி வைக்கும் நடைமுறை (moratorium) பொருந்தும் என்று நீதிமன்றம் கூறியது. மறுசீரமைப்பு காலக்கட்டத்தில், திவாலான ஒருவரின் சொத்துக்களிலிருந்து இழப்பீட்டை வசூலிப்பது மற்ற கடன் கொடுத்தவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், இது 'திவால் மற்றும் நொடிப்புநிலைச் சட்டத்தின் (IBC) அடிப்படை நோக்கத்திற்கும் முரணானதாக அமையும்.


பொருத்தமான அமர்வை அமைப்பதற்காக இந்த விவகாரம் இந்தியத் தலைமை நீதிபதியின் முன் வைக்கப்பட்டுள்ளது.


Original article : Can insolvency proceedings shield you in a cheque bounce case? The legal conflict, explained. -Amaal Sheikh

Share: