இந்தியாவின் பரந்த பொருளாதார அடிப்படைக் காரணிகளை (meta-economic factors) மேம்படுத்த வேண்டும். -சுபோத் மதூர்

 வேளாண்மை முதல் கல்வி வரை அனைத்துத் துறைகளிலும் வடிவமைப்பு, நிர்வாகம் மற்றும் செயல்படுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.


30 ஆண்டுகளுக்கும் மேலாக மதிக்கப்படும் 1991-ஆம் ஆண்டின் பொருளாதாரச் சீர்திருத்தங்களைப் போல, இந்தியா ஒரு புதிய பொருளாதார மாதிரிக்கு மாறாமல் தனது 2047-ஆம் ஆண்டிற்கான இலக்குகளை அடைய முடியாது. ஆனால், புதிய பொருளாதார மாதிரி மட்டுமே அதற்குப் போதுமானதாக இருக்காது. எந்தவொரு பொருளாதார மாதிரியின் செயல்பாட்டையும் அதன் விளைவுகளையும் பல பொருளாதாரம் சாரா அல்லது ‘பரந்த பொருளாதார அடிப்படைக் காரணிகள்' (Meta-economic) பாதிக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.


இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு இந்த பரந்த பொருளாதாரக் காரணிகளை மேம்படுத்துவது மிக அவசியமாகும். இருப்பினும், அரசாங்கங்களும் பொருளாதாரப் பகுப்பாய்வாளர்களும் பெரும்பாலும் பொருளாதாரக் கொள்கைகளில் மட்டுமே அதிக கவனம் செலுத்துகிறார்கள்.  ஏனெனில், அவற்றை மாற்றுவதும் சீர்திருத்துவதும் எளிதானது. இந்த சமநிலையின்மையைக் கையாள்வதற்காக, இந்த விவாதம் பொருளாதாரக் கொள்கைகளைப் பற்றிப் பேசாமல்,  பரந்த பொருளாதாரக் காரணிகளைப் பற்றி மட்டுமே கவனம் செலுத்துகிறது.


முதலாவதாக, பொறுப்புகள் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும். வேளாண்துறையை ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்வோம். இந்திய அரசியலமைப்பின்கீழ், வேளாண்மை என்பது மாநிலப் பட்டியலின்கீழ் வரும் ஒரு துறையாகும். அது ஒன்றிய அரசின் பட்டியலின்கீழ் வராது. இருப்பினும், நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்தே ஒன்றிய அரசுக்கு என்று ஒரு தனி வேளாண்துறை அமைச்சர் இருந்து வருகிறார். அதோடு, கடந்த 25 ஆண்டுகளில் ஒன்றிய அரசு 20-க்கும் மேற்பட்ட வேளாண் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.


ஒன்றிய அரசின் இந்தத் தலையீடு, மாநில அரசாங்கங்களின் பொறுப்புணர்வைக் குறைப்பதோடு, வேளாண்துறையில் பெரிய சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதையும் கடினமாக்குகிறது. பொறுப்புகள் தெளிவாக வரையறுக்கப்படாததால் ஏற்படும் சிக்கல் 2020-ஆம் ஆண்டில் வெளிப்படையாகத் தெரிந்தது. அப்போது ஒன்றிய அரசு மூன்று சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. முக்கியமாக, உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில வேளாண் தொழிலாளர்களின் கடுமையான போராட்டங்களால், ஒன்றிய அரசு அந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற்றது. இந்த ஒட்டுமொத்த நிகழ்வுகளின்போது, அந்தந்த மாநில முதலமைச்சர்களின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே இருந்தது.


பொறுப்புகள் மற்றும் கடமைகளில் நிலவும் இந்தக் குழப்பமே இந்திய வேளாண் துறையை பின்னுக்குத் தள்ளியிருக்கும் மிக முக்கியக் காரணங்களில் ஒன்றாகும். இது குறைந்த வருமானம், மந்தமான வளர்ச்சி விகிதம் மற்றும் வேளாண் தொழிலையே நம்பி மக்கள் இருக்க வேண்டிய கட்டாயம் போன்ற நிலைகளுக்கு வழிவகுத்துள்ளது. எனவே, வேளாண் துறைக்கான பொறுப்பையும் கடமையையும் ஒன்றிய அரசிடமிருந்து மாநில அரசுகளுக்கு படிப்படியாக மாற்றுவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது.





நிர்வாக மேம்பாடு


இரண்டாவதாக, இந்தியாவிற்குச் சிறந்த நிர்வாகம் தேவைப்படுகிறது. நல்ல கொள்கைகள்கூட அவை சரியாகச் செயல்படுத்தப்படாததால் பெரும்பாலும் தோல்வியடைகின்றன. சில நேரங்களில், இந்தக் கொள்கைகளின் நன்மைகள் அவை யாருக்காக உருவாக்கப்பட்டவோ அந்த மக்களைச் சென்றடைவதில்லை. அடித்தட்டு அளவில் பணியாற்றும் இளம் நிபுணர்களுடனான கலந்துரையாடல்களிலிருந்து, தங்களுக்காக உருவாக்கப்பட்ட கொள்கைகளைப் பற்றி பல மக்களுக்குத் தெரியவில்லை என்பது தெளிவாகிறது. இதன் விளைவாக, இந்தக் கொள்கைகள் வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கின்றன. ஒன்றிய மற்றும் மாநில அரசு கொள்கைகள் செயல்படுத்தப்படும்போதுகூட, அவை இந்தியாவின் பன்முகத்தன்மையைக் கருத்தில் கொள்ளாததால் பெரும்பாலும் தோல்வியடைகின்றன. ஒரே ஒரு மாவட்டத்திற்குள்ளேயே பலதரப்பட்ட பொருளாதார மண்டலங்கள் இருக்கலாம், அவை ஒவ்வொன்றிற்கும் தனித்தனி வாய்ப்புகளும் சவால்களும் இருக்கும்.  எனவே, "அனைவருக்கும் ஒரே மாதிரியான கொள்கை" என்ற அணுகுமுறை இந்தச் சவால்களுக்குத் தீர்வாக இருக்காது.


இந்தியாவின் முக்கிய நகரங்கள் காற்று மாசுபாடு, தண்ணீர் பற்றாக்குறை, சேதமடைந்த சாலைகள், சேகரிக்கப்படாத குப்பைகள் மற்றும் ஒலி மாசுபாடு போன்ற கடுமையான சிக்கல்களை எதிர்கொள்கின்றன. இவை அனைத்தும் மக்களின் உற்பத்தித் திறனைக் குறைக்கின்றன. இந்தப் பிரச்சனைகளுக்கு ஒரு காரணம் என்னவென்றால், மாநகர அதிகார அமைப்புகளுக்குத் திறம்படச் செயல்படுவதற்குத் தேவையான அதிகாரங்களும் நிதியும் பெரும்பாலும் இருப்பதில்லை. டெல்லியில் நிலவும் காற்று மாசுபாட்டைத் தடுப்பது போன்ற      ஒன்றிய அரசு உதவக்கூடிய விஷயங்களில், அது ஒரு குறிப்பிடத்தக்கப் பங்கை வகிக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.


ஊரகப்புறங்களில், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் அரசியலமைப்புச் சட்டப்பூர்வ அமைப்புகளாகும். இவை உருவாக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், இவை மிகவும் திறமையான அமைப்புகளாக மாறியிருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால், அப்படி நடக்கவில்லை. அவை டிஜிட்டல் தொழில்நுட்பங்களை வெற்றிகரமாக ஏற்றுக்கொண்டபோதிலும், அவற்றின் ஒட்டுமொத்த தாக்கம் இன்னும் குறைவாகவே உள்ளது. மாநிலங்களுக்கு இடையே அவற்றின் செயல்பாடுகள் பெரிதும் வேறுபடுகின்றன. மேலும், அவை தற்போது அல்லது விரைவில் அதிவேகப் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய உந்துசக்திகளாக மாறும் என்பதற்கான சான்றுகள் மிகக் குறைவாகவே உள்ளன. அவற்றுக்கு அதிகப் பொறுப்புணர்வும் கூடுதல் நிதி ஆதாரங்களும் தேவைப்படுகின்றன.


கல்வி முறை


மூன்றாவதாக, இந்தியா தனது ஒட்டுமொத்த கல்வி முறையையும் கணிசமாக மேம்படுத்த வேண்டும். உண்மையில், அதற்கு ஒரு முழுமையான சீரமைப்பு தேவைப்படுகிறது. போதிய கல்வியறிவு இல்லாத இளைஞர்கள், எதிர்காலத்தில் அதிக உற்பத்தித் திறன் கொண்ட தொழிலாளர்களாக மாறுவது கடினம். இந்தியா உலகத்தரம் வாய்ந்த பல மாணவர்களை உருவாக்கினாலும், அவர்கள் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் மிகச் சிறிய மற்றும் சலுகை பெற்ற ஒரு மேல்தட்டுப் பிரிவினராகவே இருக்கிறார்கள்.


இந்தியாவில் உள்ள அரசுப் பள்ளிகளின் செயல்பாடு மோசமாக உள்ளது. குறைந்த வருமானம் கொண்ட பல பெற்றோர்கள், தங்களுக்குப் பொருளாதாரச் சுமை இருந்தபோதிலும் தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளுக்கு அனுப்பவே விரும்புகின்றனர். 1991-ஆம் ஆண்டில், சுமார் 80% குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் படித்து வந்தனர். மக்களின் வருமானம் அதிகரித்துள்ள நிலையில், இந்த எண்ணிக்கை தற்போது சுமார் 50%-ஆகக் குறைந்துள்ளது. பெற்றோர்கள் தங்கள் சொந்தத் தேவைகளைத் தியாகம் செய்துதான் பள்ளிக் கட்டணங்களை செலுத்துகிறார்கள். பெரும்பாலானவர்களால் மிகக் குறைந்த கட்டணம் கொண்ட தனியார் பள்ளிகளுக்கு மட்டுமே அனுப்ப முடிகிறது. இந்த விளிம்புநிலைத் தனியார் பள்ளிகளின் கல்வியின் தரம் மிக அதிகமாக இல்லாவிட்டாலும், அது சராசரி அரசுப் பள்ளிகளைவிட ஓரளவுக்கு மேலானதாகவே இருக்கிறது. தொழில்நுட்பத் துறையில் ஏற்படும் வேகமான மாற்றங்கள் உற்பத்தியின் ஒவ்வொரு பகுதியையும் பாதிக்கும் இன்றைய உலகச் சூழலில், போதிய கல்வியறிவு இல்லாத மாணவர்களைக் கொண்ட ஒரு நாடால் வேகமான பொருளாதார வளர்ச்சியை அடைய முடியாது.



கல்லூரிக் கல்வி நிலையில் மாணவர்களும் பெரும்பாலும் மனப்பாடம் செய்யும் முறையை மட்டுமே மையமாகக் கொண்ட ஒரு கல்வி முறையையே எதிர்கொள்கின்றனர். இருப்பினும், சில புதிய மற்றும் அதிகக் கட்டணம் வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள் இதற்கு விதிவிலக்காக உள்ளன. ‘Infosys’ நிறுவனத்தின் நிறுவனர் என்.ஆர். நாராயண மூர்த்தி சுட்டிக்காட்டியுள்ளது போல, கல்வி முறையில் உள்ள பலவீனங்கள் காரணமாக பெரும்பாலான இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பிற்குத் தேவையான தகுதிகள் அல்லது திறன்கள் கிடைப்பதில்லை. இதன் விளைவாக, அவர்களில் பலர் குறைந்த உற்பத்தித் திறன் கொண்ட தொழிலாளர்களாகவே மாறக்கூடிய சூழல் நிலவுவதாகத் தெரிவித்துள்ளார்.


பெரும்பாலான அரசுப் பள்ளிகளும் கல்லூரிகளும் மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் ஒன்றிய அரசு முக்கியமாக உயர்தர கல்வி நிறுவனங்களை நடத்துகிறது. குறிப்பாகப் பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய மாநிலங்களின் முதலமைச்சர்கள், சாதாரண மாணவர்களின் திறன்களையும் உற்பத்தித் திறனையும் உயர்த்துவதற்காக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மேம்படுத்துவதில் அதிக நிதி ஆதாரங்களையும் உழைப்பையும் முதலீடு செய்ய வேண்டும்.


முடிவாக, கொள்கைகளை விரைவாக வடிவமைத்து அவற்றைச் செயல்படுத்துவதற்கான தங்களின் திறனை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் ஆகிய இருதரப்புமே வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவின் முன்னேற்றத்திற்குப் பங்களிக்க விரும்பும் அனுபவம் வாய்ந்த மற்றும் இளம் தலைமுறையினரின் கூட்டமைப்பைப் பயன்படுத்துவதன் மூலம், லாப நோக்கற்ற அமைப்புகள் (NGOs) தங்களின் செயல்பாட்டுத் திறனை மிக வேகமாக வளர்த்துக் கொள்ள முடியும். மேலும், 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இன்று இந்தியாவில் நிதி ஆதாரங்கள் மிக அதிகமாக உள்ளதால், இத்தகைய அமைப்புகள் நிதி உதவி பெறுவது இப்போது எளிதாகியுள்ளது. இவர்களின் பணிகள், இந்திய அறிவியல் கழகம் (Indian Institute of Science (IISc)) மேற்கொள்வது போன்ற ஆராய்ச்சிகள் முதல், சுகாதாரம், கல்வி மற்றும் விவசாய நடைமுறைகளை மேம்படுத்துவது வரை பலதரப்பட்டதாக இருக்கலாம். மேலும், அரசாங்கங்களின் முக்கியப் பொருளாதார இலக்குகளுக்கு, இத்தகைய அமைப்புகள் உதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.


சுபோத் மாத்தூர், பொதுக் கொள்கை வகுப்பதில் மிக விரிவான நடைமுறை அனுபவம்கொண்ட ஒரு பொருளாதார நிபுணர் ஆவார்.


original article : Need to improve India’s meta-economic factors. -Subodh Mathur

Share:

குறைமின்கடத்தி: ஆற்றல் சார்ந்த கேள்விகள் -ரிச்சா மிஸ்ரா

சிப் (Chip) உற்பத்தி தொழில்துறைக்குத் தடையற்ற மின்சாரமும் தண்ணீர் விநியோகமும் தேவைப்படுகிறது. எனவே, இந்தியாவின் எரிசக்திக் கொள்கைகளும் சிப் கொள்கைகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும்.


இந்தியா 446 ஜிகாவாட்டிற்கும் (GW) அதிகமான ஒட்டுமொத்த மின்உற்பத்தித் திறனைப் பெற்று மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. ஆனால், நாட்டின் - குறைமின்கடத்தி (Semiconductor) உற்பத்தி இலக்கை அடைய இது மட்டுமே போதுமானதாக இருக்காது. ஏனெனில், சிப் தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு துல்லியமான மின் விநியோகம், சீரான சுற்றுச்சூழல் மற்றும் மிக அதிக அளவிலான வளங்கள் தேவைப்படுகின்றன. தற்போதைய உள்கட்டமைப்பு வசதிகளால் இவற்றை எவ்விதத் தடையுமின்றித் தொடர்ந்து வழங்க முடியுமா என்கிற கேள்வி எழுகிறது.


இதிலிருந்து, குறைமின்கடத்தி கொள்கையும் எரிசக்திக் கொள்கையும் நாட்டின் ஒட்டுமொத்த ஆற்றல் இலக்குகளோடு எவ்வளவு நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது. ஒரு சாதாரண 300 மில்லிமீட்டர் (300mm) சிப் தயாரிப்புத் தொழிற்சாலைக்கே நூற்றுக்கணக்கான மெகாவாட் (MW) மின்சாரம் தேவைப்படும் என்பதால், குறைமின்கடத்தி மற்றும் எரிசக்திக் கொள்கைகள் ஒன்றோடொன்று இணைந்திருப்பது முற்றிலும் இயல்பானது என்கின்றனர்.


மின்சார விநியோகத்திலும் இந்தியா பல சவால்களை எதிர்கொள்கிறது. நாட்டின் மின்சார பகிர்மான அமைப்பில் இன்னும் 20 முதல் 22% வரை மிக அதிகமான மின் இழப்பு ஏற்படுகிறது.


ஒரு சாதாரண சிலிக்கான் சிப் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு (Silicon fabrication plant) 99.9999% தடையற்ற மின்சாரம் தேவைப்படுகிறது. இது தொழில்நுட்பத் துறையில் "ஆறு ஒன்பதுகள் (Six nines)" தரம் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய அதிநவீன உற்பத்தியில், ஒரு மில்லிசெகண்டில் மிகச்சிறிய பங்கு நேரத்திற்கு மின் அழுத்தத்தில் (Voltage) மாற்றம் ஏற்பட்டால்கூட, பல மில்லியன் டாலர் மதிப்புள்ள ‘சிப் தயாரிக்கப் பயன்படும் தகடுகள்’ (Silicon wafers) மொத்தமாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.


இந்தியா தற்போது மின்சார பயன்பாட்டைவிட அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்தாலும், பிராந்திய மின்சாரக் கட்டமைப்புகள் இன்னும் எதிர்பாராத மின்அழுத்தக் குறைவு (Voltage drops), மின் எழுச்சி (Surges) மற்றும் அதிர்வெண் மாற்றங்கள் (Frequency variations) உள்ளிட்ட சிக்கல்களை எதிர்கொள்கின்றன. இதன் காரணமாக, பெரிய அளவிலான குறைமின்கடத்தி (Semiconductor) உற்பத்தி திட்டங்களைச் செயல்படுத்துபவர்கள், தங்களின் உற்பத்தி தடையின்றி சீராக நடப்பதற்காக, அதிக செலவுமிக்க தொழில்துறை தரத்திலான மின்சேமிப்பு அமைப்புகளையும் பிரத்யேக மின் துணை நிலையங்களையும் அமைக்க முதலீடு செய்ய வேண்டியுள்ளது.


குறைபாடு: சூரியஒளி மற்றும் காற்று மூலம் பெறப்படும் மின்சாரம் நிலையற்றது. ஆனால், குறைமின்கடத்தி சிப் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஒரு நொடிகூட நிறுத்தப்படாமல், வருடத்தின் 365 நாட்களும், வாரத்தின் 7 நாட்களும், 24 மணி நேரமும் (24/7/365) தொடர்ந்து இயங்க வேண்டும்.


செலவு: இந்தியாவில் இன்னும் போதிய அளவு பசுமை ஆற்றலைச் (Green energy) சேமித்து வைக்கும் வசதி இல்லை. ஒரு தொழிற்சாலையை முழுமையாகப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable energy) மூலமே இயக்குவதற்குத் தேவையான, மிகப்பெரிய மற்றும் மிக அதிக விலையுள்ள மின்கலன் சேமிப்பு கட்டமைப்பை உருவாக்குவது தற்போதைய நிலையில் சாத்தியமற்றது. மேலும், அதிக மின் கட்டணம் மற்றும் சர்வதேச சந்தையில் விலைப் போட்டித்திறன் போன்ற சிக்கல்களும் உள்ளன. சிப் தயாரிப்பு என்பது மிக அதிக முதலீடு தேவைப்படும் ஒரு தொழிலாகும். மேலும், இதன் ஒட்டுமொத்த செயல்பாட்டுச் செலவில் மின்சாரக் கட்டணம் ஒரு மிகப்பெரிய பங்காக உள்ளது. இந்தத் தொழிற்சாலைகளுக்கு மின்சாரம்தான் மிகப்பெரிய செலவுகளில் ஒன்று. ஆனால், இந்தியாவில் மின்சார விலை அடிக்கடி மாறுகிறது. ஏனெனில், வேளாண்தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவதற்காக, இந்தத் தொழிற்சாலைகள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.


தைவான் (Taiwan) போன்ற நாடுகளுடன் போட்டியிட வேண்டுமானால், இந்தத் தொழிற்சாலைகளுக்குக் குறைந்த விலையில் மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்யும் நீண்டகால ஒப்பந்தங்கள் தேவைப்படுகின்றன. இந்தியாவில் மாநில ஒழுங்குமுறை ஆணையங்களின் (State Electricity Regulatory Commission (SERC)) விதிகள் அல்லது 'குறுக்கு-மானியக் கூடுதல் கட்டணம்' (Cross-subsidy surcharges) வேளாண்துறைக்கு மானியம் வழங்குவதற்காகத் தொழில்துறை பயனர்களிடம் அதிகக் கட்டணம் வசூலிப்பதன் காரணமாக, ஒவ்வொரு மாநிலத்திற்கும் இடையே மின் கட்டண அமைப்புகள் மாறுபடுகின்றன.


தண்ணீர் தேவைகள்


மேலும், மிக முக்கியமான ஒரு சவால் உள்ளது. சிப் தயாரிப்பிற்குத் தேவைப்படும் மிகத் தூய்மையான நீரை உற்பத்தி செய்வதற்கு மிக அதிக அளவிலான ஆற்றல் தேவைப்படுகிறது.


சிப் தயாரிக்கப் பயன்படும் தகடுகளை (Silicon wafers) சுத்தம் செய்யத் தேவைப்படும், எந்தவொரு மாசும் இல்லாத மிகத் தூய்மையான நீராக, சாதாரண நகராட்சி நீரையும் ஆற்று நீரையும் மாற்றுவதற்கு, அந்தத் தண்ணீர் பல கட்ட தலைகீழ் சவ்வூடு பரவல் (Reverse Osmosis), அயனி நீக்கம் (Deionisation) மற்றும் வடிகட்டுதல் முறைகளைக் கடந்து செல்ல வேண்டும். இந்தச் செயல்முறைக்கு, சிப் தயாரிப்பிற்கு ஏற்கனவே தேவைப்படும் மின்சாரத்துடன் கூடுதலாக, மிக அதிக அளவிலான மின்சாரம் தேவைப்படுகிறது. மின்சாரக் கட்டமைப்பு சார்ந்த சிக்கல்கள் உலகம் முழுவதும் ஒரு பொதுவான பிரச்சனையாக இருப்பதால், திறன்பேசி உற்பத்தி துறையில் ஏற்பட்ட புரட்சியைப் போல, நிறுவனங்கள் காலாவதியான உள்கட்டமைப்புகளைத் தவிர்த்துவிட்டு நவீன தீர்வுகளைப் பின்பற்றுவதற்கு ஏதுவான, வணிகத் தோழமைமிக்கக் கொள்கைகளை அரசாங்கங்கள் கொண்டுவர வேண்டும்.


அரசாங்கத்தின் பரந்த கொள்கை இலக்குகளை, களத்தில் நம்பகமான ஆதாரங்களாக மாற்றித் தரும் ஒரு துல்லியமான உள்ளூர் உள்கட்டமைப்பு உத்திதான் தற்போது தேவைப்படுகிறது. தைவான், தென்கொரியா மற்றும் அமெரிக்கா போன்ற உலகளாவிய குறைமின்கடத்தி உற்பத்தி மையங்களுடன் போட்டியிட, இந்தியா தனது ஆற்றல் மற்றும் குறைமின்கடத்தி கொள்கைகளை ஒருங்கிணைத்து ஒரே கூட்டுத் தொழில்முறைத் திட்டமாக ஒருங்கிணைக்க வேண்டும்.


பொது மின்சாரக் கட்டமைப்பிலிருந்து சிப் தயாரிப்பு மையங்களை முற்றிலும் தனியாகப் பிரிப்பதன் மூலம் இந்தியா இந்தச் சவாலை எதிர்கொள்ள முடியும் என்று சில வல்லுநர்கள் நம்புகின்றனர். மாநில அரசாங்கங்கள் குஜராத்தில் உள்ள தோலேரா (Dholera) மற்றும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள நொய்டா போன்ற உற்பத்தி மையங்களுக்காக பிரத்யேகமான மற்றும் அதி-பாதுகாப்பான மின் வழித்தடங்களை உருவாக்க வேண்டும். சிப் தொழிற்சாலைகள் தங்களுக்கு என்றே பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட மின்உற்பத்தி நிலையங்களுக்கு அருகிலேயே அமைக்கப்பட வேண்டும். இந்த மையங்கள் மிகச் சிறிய மின்அழுத்த மாறுபாடுகளைக்கூட தடையின்றிச் சமாளிக்க, தொடர்ச்சியான அணுசக்தி அல்லது இயற்கை எரிவாயு மின்சாரத்துடன், பெரிய அளவிலான தொழில்துறை மின்கலன்களை ஒருங்கிணைத்துப் பயன்படுத்த வேண்டும்.

மாறிக்கொண்டே இருக்கும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தி,          24 மணி நேரமும் தொழிற்சாலைகளைத் தடையின்றி இயக்குவதற்கு ஏதுவாக, இந்தியா தனது மின்சாரச் சந்தை ஒழுங்குமுறை விதிகளில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும். சூரிய ஒளி மற்றும் காற்றாலையோடு சேர்த்து, உந்தப்பட்ட சேமிப்பு நீர்மின்சாரம் (Pumped-storage hydropower) மற்றும் பெரிய மின்கலன் அமைப்புகளை ஒருங்கிணைத்து வழங்கும் எரிசக்தி நிறுவனங்களுக்கு, மின்சார ஒழுங்குமுறை அமைப்புகள் சலுகைகளை வழங்க வேண்டும்.


ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் குறைமின்கடத்தி தொழிற்சாலைகளுக்காக விதிக்கப்படும் குறுக்கு-மானியக் கூடுதல் கட்டணங்கள் (Cross-subsidy surcharges) மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான மின் பகிர்மான கட்டணங்களை முழுமையாக நீக்க வேண்டும். இது, சிப் தயாரிப்பு நிறுவனங்கள் நீண்டகால, நிலையான விலை கொண்ட 'மெய்நிகர் மின் கொள்முதல் ஒப்பந்தங்கள்' (Virtual Power Purchase Agreements (VPPA)) மூலமாக, நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் குறைந்த விலை பசுமை மின்சாரத்தை நேரடியாகப் பெற்றுக் கொள்ள வழிவகுக்கும் என்கின்றனர்.




சுயசார்பு கொண்ட சிப் உற்பத்தி தொழில்துறையை உருவாக்குவதற்கு நீண்டகாலம் ஆகும் என்பதை ஒன்றிய அரசு உணர்ந்துள்ளது. ஆற்றல் மற்றும் மூலப்பொருள் பற்றாக்குறையிலிருந்து தனது விநியோகச் சங்கிலியைப் பாதுகாக்க, கனிம பாதுகாப்பு கூட்டாண்மை (Minerals Security Partnership) மற்றும் அமெரிக்க-இந்திய முக்கிய கனிமங்கள் ஒத்துழைப்பு கட்டமைப்பு (US-India Critical Minerals Cooperation Framework) போன்ற ஒப்பந்தங்கள் மூலம் சர்வதேச உறவுகளை இந்தியா தீவிரமாக வலுப்படுத்தி வருகிறது. இந்த முயற்சிகள் காலியம் (Gallium), இண்டியம் (Indium) மற்றும் அரிய மண் கனிமங்கள் (Rare earth elements) போன்ற அத்தியாவசியமான பொருட்களை நீண்டகாலத்திற்கு தடையின்றிப் பெறுவதை உறுதி செய்கின்றன.


நவீன குறைமின்கடத்திகள், சூரிய ஒளித் தகடுகள் மற்றும் காற்றாலைகளைத் தயாரிப்பதற்கு இந்த மூலப்பொருட்கள் மிகவும் முக்கியமானவை ஆகும். சிப் தயாரிக்கப் பயன்படும் தகடுகள் (Silicon wafer) உற்பத்திக்குத் தேவைப்படும் பெரும் அளவிலான மின்சாரம் மற்றும் தண்ணீரின் பயன்பாட்டைக் குறைக்க, குறைந்த ஆற்றலில் இயங்கும் அதிநவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த உலகளாவிய தொழில்நுட்ப முன்னணி நிறுவனங்களுடன் இந்தியா கூட்டு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.


இந்தியாவில் குறைமின்கடத்தி உற்பத்தி நிறுவனங்கள் மின்சாரத்தைப் பெறுவதற்கான கொள்கை கட்டமைப்பு ஒரு இருஅடுக்கு அமைப்பைப் (Two-tier system) பின்பற்றுகிறது. அதாவது, ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்கள் மாநில அளவிலான கொள்கைகள் மூலம் செயல்படுத்தப்படுகின்றன. இந்திய குறைமின்கடத்தி உற்பத்தித் திட்டம் (India Semiconductor Mission), நிதிச் சலுகைகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் (Renewable energy) பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் உற்பத்திச் செலவைக் குறைக்கவும், அதே நேரத்தில் மின்சாரக் கட்டமைப்பு தடங்கல்களிலிருந்து இந்த அதிநவீன உற்பத்தித் துறையைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.





சிப் தயாரிப்பு ஆலைகளை மின்சார விநியோகப் பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பதன் மூலமும், தண்ணீர் மற்றும் ஆற்றல் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலமும், உலகளவில் போட்டியிடக்கூடிய ஒரு குறைமின்கடத்தி தொழில்துறையை இந்தியாவால் உருவாக்க முடியும். இருப்பினும், இந்த மாற்றம் சந்தை அடிப்படையிலான சீர்திருத்தங்களால் இயக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.

 

original article : Semiconductor: Energy questions -Richa Mishra

Share:

ஒரு அரசியல் கட்சி தனது தேர்தல் சின்னமாக கரப்பான் பூச்சியை வைத்திருக்கலாமா? தேர்தல் ஆணையத்தின் விதிகள் என்ன சொல்கின்றன? -தாமினி நாத்

 தேர்தல் செயல்பாட்டிற்கான குறிப்பிட்ட அளவுகோல்களைப் பூர்த்தி செய்யாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள் (அங்கீகரிக்கப்படாத கட்சிகள்) மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு, தேர்தல் ஆணையம் 'ஒதுக்கப்படாத சின்னங்கள்' (free symbols) பட்டியலிலிருந்து சின்னங்களை வழங்குகிறது. 


கடந்த மாதம் ஒரு விசாரணையின்போது, ​​இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், வேலையில்லாத இளைஞர்களில் ஒரு பிரிவினர் “கரப்பான் பூச்சிகளாக” மாறிவிட்டதாகக் குறிப்பிட்டதிலிருந்து, அந்தக் கூற்றுக்கு எதிராகப் போராடுபவர்களும், 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' (Cockroach Janta Party - CJP) என்ற நையாண்டித்தனமான அமைப்பும் இந்த அடையாளத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.


சிஜேபி ஒரு அரசியல் கட்சி அல்ல, மாறாக அது ஒரு “இளைஞர் அழுத்தக் குழு” (youth pressure group) என அதன் நிறுவனர் அபிஜீத் திப்கே கூறுகிறார். ஆனால், எதிர்காலத்தில் தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய விண்ணப்பிக்கும் வாய்ப்பை  திப்கே முற்றிலுமாக மறுக்கவில்லை. இருப்பினும், தற்போதைக்கு இக்குழு இணையவழியில் மட்டுமே இயங்கி வருகிறது. மேலும், ஜூன் 6 அன்று புது தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தனது முதல் போராட்டத்தை நடத்தியது.


எதிர்காலத்தில் CJP ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டு, கரப்பான் பூச்சியைத் தங்கள் தேர்தல் சின்னமாகக் கோரி விண்ணப்பித்தால், தேர்தல் ஆணையம் அந்தக் கோரிக்கையை அங்கீகரிக்க வாய்ப்பில்லை. தேர்தல் ஆணையத்தின் விதிகள் என்ன சொல்கின்றன என்பதையும், புதிய கட்சிகளுக்கு எந்தெந்தத் தேர்தல் சின்னங்கள் கிடைக்கின்றன என்பதையும் கீழே குறிப்பிட்டுள்ளதைத் தெளிவாகக் காணலாம்.


விதிகள் என்ன சொல்கின்றன?


தேர்தல் ஆணையம், 'தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் ஒதுக்களிப்பு) ஆணை-1968' இன் (Election Symbols (Reservation and Allotment) Order) கீழ் அரசியல் கட்சிகளுக்கும் சுயேச்சை வேட்பாளர்களுக்கும் தேர்தல் சின்னங்களை ஒதுக்குகிறது. இந்தச் சின்னங்கள் தொடர்பான ஆணையின்படி, அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு, அந்தந்தக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட சின்னமே வழங்கப்படுகிறது. உதாரணமாக, பாஜகவிற்குத் தாமரை, அல்லது காங்கிரஸிற்கு உயர்த்தப்பட்ட கை சின்னமும் ஒதுக்கப்படுகின்றன.


தேசிய அல்லது மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெறுவதற்குத் தேவையான தேர்தல் செயல்பாடு சார்ந்த தகுதிகளைப் பூர்த்தி செய்யாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளே 'அங்கீகரிக்கப்படாத கட்சிகள்' எனப்படுகின்றன. இக்கட்சிகளுக்கும் சுயேச்சை வேட்பாளர்களுக்கும், தேர்தல் ஆணையம் 'ஒதுக்கப்படாத சின்னங்கள்' (free symbols) அடங்கிய பட்டியலிலிருந்து சின்னங்களை ஒதுக்குகிறது. இந்த வேட்பாளர்களும் அங்கீகரிக்கப்படாத கட்சிகளும் அந்தப் பட்டியலிலிருந்து தங்களுக்கு விருப்பமான சின்னத்தைக் கோரலாம். ஆனால், அது அவர்களுக்குக் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.


எந்த வகையான சின்னங்கள் அனுமதிக்கப்படுகின்றன?


தேர்தல் ஆணையம் அவ்வப்போது திருத்தி வெளியிடும் 'ஒதுக்கப்படாத சின்னங்களின்' (free symbols) பட்டியலில், பழங்கள், காய்கறிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், விவசாய உபகரணங்கள், விளையாட்டு உபகரணங்கள் போன்றவற்றின் படங்கள் இடம்பெற்றுள்ளன. மே 23, 2025 அன்று தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய பட்டியலில், குளிரூட்டி, பலூன், கதவு மணி, குப்பைத்தொட்டி, வறுக்கும் கடாய் (frying pan), பலாப்பழம் மற்றும் திராட்சை உட்பட 184 சின்னங்கள் உள்ளன.





மேலும், இம்மியர்ஷன் ராட் (நீரைச் சூடாக்கும் கம்பி), தாழ்ப்பாள், மிக்ஸி, பல் துலக்கும் பிரஷ் மற்றும் தொலைக்காட்சி ரிமோட் போன்ற சில வீட்டு உபயோகப் பொருட்களும் இந்தப் பட்டியலில் உள்ளன. இவை தவிர, பலவகையான பழங்கள் மற்றும் காய்கறிகள், அத்துடன் கேக், டாஃபி (மிட்டாய்) உள்ளிட்ட பிற உணவுகளும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.


கரப்பான் பூச்சி தேர்தல் சின்னமாக இருக்க முடியுமா?


1990-களில் விலங்குகள் நல ஆர்வலர்கள் விடுத்த கோரிக்கைகளைத் தொடர்ந்து, தேர்தல் சின்னங்களாக விலங்குகளை ஒதுக்குவதை இந்தியத் தேர்தல் ஆணையம் நிறுத்தியது.


முன்னாள் மத்திய அமைச்சரும், விலங்குகளுக்கான மக்கள் அமைப்பின் (PFA) நிறுவனருமான மேனகா காந்தி, 'விலங்குகளுக்கான மக்கள் அமைப்பு' (PFA) இணையதளத்தில் எழுதிய ஒரு பதிவில், 1989-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பிரிவுக்கு சேவல் தேர்தல் சின்னமாக ஒதுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தார். “மாநிலத் தேர்தலின்போது, ​​வேகமாகச் செல்லும் வாகனங்களின் மேல் ஆயிரக்கணக்கான பறவைகள் கட்டப்பட்டன. அவற்றின் கால்கள் முறிந்தன, மேலும், ஒவ்வொரு மாலையிலும் தமிழ்நாடு முழுவதும் இறந்த சேவல்கள் ஆங்காங்கே கிடப்பதைக் காண முடிந்தது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். தேர்தல் சின்னங்களாகப் பயன்படுத்தப்படும் விலங்குகளை வலுவாகப் பரிசீலிக்குமாறு நான் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தினேன், அவரும் உடனடியாகத் தகுந்ததெனக் கருதிய விலங்குகளைத் தடை செய்தார்,” என்று அவர் எழுதியிருந்தார்.


அந்தத் தடை அமலுக்கு வருவதற்கு முன்பே பகுஜன் சமாஜ் கட்சி உருவாக்கப்பட்டவுடன், தனது தேர்தல் சின்னமான யானையை இன்னமும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இது சில விதிவிலக்குகளில் ஒன்றாக விளங்குகிறது.




தேர்தல் சின்னங்களாக விலங்குகளை ஒதுக்குவதற்கு எதிராக தேர்தல் ஆணையம் தற்போது நிலைப்பாடு எடுத்து வருவதால், யாரேனும் கரப்பான் பூச்சி சின்னத்தை ஒதுக்கக் கோரினால் அது வழங்கப்பட வாய்ப்பில்லை என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


original article : Can a political party have the cockroach as its election symbol? What EC rules say -Damini Nath

Share:

வங்காளத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பொதுவெளியில் அணிவகுத்து நிற்கவைப்பதைக் கண்டித்த கல்கத்தா உயர்நீதிமன்றம் : சட்டம் என்ன சொல்கிறது? -அமால் ஷேக்

 ஒரு நபரை காவல்துறையினர் கைது செய்யலாம். ஆனால், அவர்களைப் பொதுவெளியில் அவதூறு செய்ய முடியாது என்று நீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமர்வு நீதிபதி வாய்மொழியாகக் குறிப்பிட்டார். இதுகுறித்த தகவல்கள் கீழே குறிப்பிட்டுள்ளது.


மேற்கு வங்கத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை இடுப்பில் கயிறு கட்டி தெருக்களில் அழைத்துச் செல்லும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், அவர்களை இவ்வாறு பொதுவெளியில் ஊர்வலமாகக் கொண்டு சென்றதை கல்கத்தா உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) விமர்சித்தது.



நீதிபதிகள் ஜெய் சென்குப்தா மற்றும் ஸ்மிதா தாஸ் தே ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு, இது குறித்து மூன்று வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாநிலக் காவல்துறையைக் கேட்டுக்கொண்டது. ஒரு நபரை காவல்துறை கைது செய்யலாம், ஆனால் அவரைப் பொதுவெளியில் அவதூறு செய்ய முடியாது என்று நீதிமன்ற அமர்வு வாய்மொழியாகக் குறிப்பிட்டது. 


சட்டக் கட்டமைப்பு


குற்றம் சாட்டப்பட்ட ஒருவரைப் பொதுவெளியில் ஊர்வலமாகக் கொண்டு செல்வதற்குச் சட்டத்தில் எந்த விதியும் அங்கீகாரம் அளிக்கவில்லை. பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதாவின் (Bharatiya Nagarik Suraksha Sanhita(BNSS)) பிரிவு 43(3), குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் கைவிலங்குகளைப் (handcuffs) பயன்படுத்த காவல்துறை அதிகாரியை அனுமதிக்கிறது.


மேலும், இதில் கூறப்பட்டுள்ளதாவது, “தொடர்ந்து குற்றம்புரியும் நபர் (habitual offender), காவலில் இருந்து தப்பி ஓடியவர் அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம், பயங்கரவாதச் செயல், போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் அல்லது ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை சட்டவிரோதமாக வைத்திருத்தல் ஆகியவற்றில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்குப் பொருந்தும். மேலும் கொலை, பாலியல் வன்கொடுமை, அமிலத் தாக்குதல், நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளைக் கள்ளநோட்டு அடித்தல், ஆட்கடத்தல், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்கள் உட்பட அரசுக்கு எதிரான குற்றங்கள் அல்லது பொருளாதாரக் குற்றங்கள் போன்ற குற்றங்களைச் செய்த ஒரு நபரைக் கைது செய்யும்போது, ​​குற்றத்தின் தன்மை மற்றும் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு காவல் அதிகாரி கைவிலங்கைப் (handcuffs) பயன்படுத்தலாம்.”


இந்த வகைகளுக்குள்ளும்கூட, இச்சட்ட விதி “may” (செய்யலாம்/அனுமதிக்கலாம்) என்ற சொல்லையே பயன்படுத்துகிறது, “shall” (கட்டாயமாகச் செய்ய வேண்டும்) என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை. இதன் பொருள், கைவிலங்கு அணிவிப்பது கட்டாயமல்ல என்பதாகும். கைவிலங்கு போன்ற கட்டுப்பாடுகள் அவசியமா என்பதைத் தீர்மானிப்பதற்கு முன், அதிகாரி குற்றத்தின் தன்மை மற்றும் தீவிரத்தன்மை மற்றும் அந்தந்த வழக்கின் உண்மைகளையும் சூழ்நிலைகளையும் அவர் ஆராய வேண்டும்.


1955-ம் ஆண்டின் கைதிகள் (நீதிமன்றத்தில் ஆஜராகுதல்) சட்டத்தின் (Prisoners (Attendance in Court) Act), பிரிவு 9(2)(e)-ன் கீழ், "சிறையில் அடைக்கப்பட்டுள்ள நபர்களை, அவர்கள் ஆஜராக வேண்டிய நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வதற்கும், அங்கிருந்து திரும்ப அழைத்து வருவதற்கும், மற்றும் அவ்வாறு ஆஜராகும் காலத்தில் அவர்களைக் காவலில் வைப்பதற்கும்" இது தொடர்பான விதிகளை உருவாக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.


நீதிமன்றங்கள் முன்பு என்ன தீர்ப்பளித்துள்ளன?


பிரேம் சங்கர் சுக்லா vs டெல்லி நிர்வாகம்-1980 (Prem Shankar Shukla vs Delhi Administration) வழக்கில், உச்சநீதிமன்றம் கைவிலங்கிடுவதை (handcuffing) “மனிதாபிமானமற்றது”, “நியாயமற்றது” மற்றும் “தன்னிச்சையானது” என்று விவரித்தது. நீதிமன்றம் மேலும் கூறுகையில், “விசாரணைக்குட்பட்ட ஒருவர் தப்பிச் செல்வதைத் தடுப்பது பொது நலன் சார்ந்தது, நியாயமானது, மற்றும் சரியானது என்பதையும் நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. இருப்பினும், ஒரு நபரின் கை கால்களைக் கட்டி, உடலின் உறுப்புகளில் இரும்புக் கட்டுப்பாடுகளைப் பூட்டுவது, தெருக்களில் அவனை இழுத்துச் சென்று, நீதிமன்றங்களில் மணிக்கணக்கில் நிற்க வைப்பது என்பது அவனைச் சித்திரவதை செய்வதாகும். நீதிமன்றத்தின் கருத்துப்படி, இத்தகைய செயல் மனித கண்ணியத்தை மீறுவதாகவும், சமூகத்தின் தரத்தைக் குறைப்பதாகவும், இந்தியாவின் அரசியலமைப்பு கலாச்சார நெறிமுறைகளுக்கு முரணானதாகவும் அமைகிறது.


இந்த வழக்கில் மனுதாரராக இருந்தவர், திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒரு விசாரணைக் கைதி ஆவார். அவர், இதற்கு மாறான முந்தைய நீதிமன்ற உத்தரவுகள் இருந்தபோதிலும், நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லும் வழியில் தனக்கு வழக்கமாகக் கைவிலங்கிடப்படுவதாகக் கூறி உச்சநீதிமன்றத்திற்கு ஒரு தந்தி (telegram) அனுப்பினார்.



இந்த நடைமுறை அரசியலமைப்புக்கு முரணானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வழக்கமாக் கைவிலங்கிடுவது, அரசியலமைப்பின் 14, 19 மற்றும் 21 ஆகிய பிரிவுகளை மீறுவதாகவும், தப்பித்தல் அல்லது வன்முறையையோ தடுப்பதற்கு வேறு எளிய வழிமுறைகள் எதுவும் உதவாது என்று நம்புவதற்குத் தகுந்த மற்றும் பதிவு செய்யப்பட்ட காரணம் இருக்கும்போது மட்டுமே கைவிலங்குகளைப் பயன்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. கைவிலங்கு அணிவித்தல் என்பது ஒரு வழக்கமான நடைமுறையாக இருக்கக்கூடாது. அதுவே கடைசித் தேர்வாக (கடைசி முயற்சியாக) இருக்க வேண்டும் என்பதை நீதிமன்றம் வலியுறுத்தியது.


கட்டுப்பாட்டிலிருந்து விடுபடுவதே பொதுவான விதி என்றும், எந்தவொரு விதிவிலக்கிற்கும் அதற்கான நியாயப்படுத்தல் எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டு நீதிபதிக்கு முன்பாக விளக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் மேலும் தீர்ப்பளித்தது.


ஜனநாயகத்திற்கான குடிமக்கள் vs அசாம் மாநிலம்-1995 (Citizens for Democracy vs State of Assam) வழக்கில், ஒரு குடிமை உரிமைகள் அமைப்பின் தலைவர் குவஹாத்தியில் உள்ள ஒரு அரசு மருத்துவமனைக்குச் சென்றபோது, ​​ஆயுதமேந்திய காவல்துறையினரால் பாதுகாக்கப்பட்ட ஒரு பூட்டப்பட்ட அறைக்குள், விசாரணைக் கைதிகள் ஏழு பேர் தங்கள் படுக்கைகளுடன் கைவிலங்கிடப்பட்டிருப்பதைக் கண்டார். பிரேம் சங்கர் சுக்லா வழக்கில் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை என்பதைக் குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், “நாட்டின் எந்தவொரு சிறையிலும் அடைக்கப்பட்டிருக்கும்போதும், அல்லது ஒரு சிறையிலிருந்து மற்றொரு சிறைக்கோ, அல்லது சிறையிலிருந்து நீதிமன்றத்திற்கோ சென்று திரும்பும்போதோ, தண்டனை பெற்ற அல்லது விசாரணைக் கைதியான ஒரு கைதியின் மீது கைவிலங்குகளோ அல்லது வேறு ஏதேனும் கட்டுப்பாட்டுச் சங்கிலிகளோ வலுக்கட்டாயமாகப் பூட்டப்படக்கூடாது என்பதை நாங்கள் ஒரு விதியாக அறிவித்து, இயக்கி, வகுக்கிறோம்” என்று தீர்ப்பளித்தது.


2026-ம் ஆண்டு ஜனவரி மாதம், இஸ்லாம் கான் மற்றும் பலர் vs ராஜஸ்தான் அரசு மற்றும் பலர் (Islam Khan and Ors vs State of Rajasthan and Ors) வழக்கில், ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி ஒருவர், கைது செய்யப்பட்டவர்களை காவல் நிலையங்களுக்கு வெளியே உட்கார வைத்து, அவர்களைப் புகைப்படம் எடுத்து, அந்தப் படங்களைப் பரப்புவதை காவல்துறை ஒரு வழக்கமான நடைமுறையாகக் கொண்டுள்ளது என்று குற்றம் சாட்டிய ஒரு மனுவை விசாரித்தார்.


மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் உள்ளாடைகளை மட்டுமே அணிந்திருக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டு, அவமானகரமான நிலையில் அமர வைக்கப்பட்டதாகவும், பின்னர் அவர்கள் புகைப்படம் எடுக்கப்பட்டு பரவலாகப் பகிரப்பட்டதாகவும் மனுதாரர்கள் குற்றம் சாட்டினர்.


இத்தகைய நடவடிக்கைகள் “தன்னிச்சையானவை, சட்டவிரோதமானவை மற்றும் கட்டுப்பாடற்ற தன்னிச்சையான போக்கை வெளிப்படுத்துபவை. குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட துறைக்கு முற்றிலும் பொருத்தமற்றவை” என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், “அடிப்படை உரிமைகளின் எந்தவொரு மீறலையும் பொறுத்துக்கொள்ள முடியாது” என்றும், இந்தக் குற்றச்சாட்டுகள் அரசியலமைப்பின் 21-வது பிரிவின்கீழ் உள்ள “கண்ணியத்துடன் வாழ்வதற்கான அடிப்படை உரிமைக்கு ஒரு கடுமையான மற்றும் அமைப்புரீதியான அச்சுறுத்தலை” வெளிப்படுத்துவதாகவும் அது குறிப்பிட்டது.


2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம், சங்ராம் சிங் ராஜூத் vs மத்தியப் பிரதேச அரசு மற்றும் பிறர் (Sangram Singh Rajoot vs State of Madhya Pradesh & Others) வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை நீதிபதி முன் ஆஜர்படுத்துவதற்காக, அவர் காவல் நிலையத்திலிருந்து நீதிமன்றத்திற்கு கால்நடையாக அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டது.


"சட்டப்பூர்வ அதிகாரம் இல்லாமல், ஒரு தனிநபரை அவமானப்படுத்தும், இழிவுபடுத்தும் அல்லது பொது அவமதிப்பை ஏற்படுத்தும் அரசின் அல்லது அதன் அமைப்புகளின் எந்தவொரு நடவடிக்கையும், மேற்படி அரசியலமைப்புச் சட்டத்தின் கட்டளைக்கு முரணானதாக அமையும்" என்று குறிப்பிட்ட நீதிமன்றம், "ஒரு குற்றம் சாட்டப்பட்டவர் கால்நடையாக அழைத்துச் செல்லப்பட்டார் என்ற ஒரே காரணத்தால் மட்டும், அது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக ஆகாது. மாறாக, அத்தகைய செயல் வேண்டுமென்றே அவமானப்படுத்தும் நோக்கத்துடனோ அல்லது தீய எண்ணத்துடனோ செய்யப்பட்டது என்று நிரூபிக்கப்பட்டால் மட்டுமே அது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக ஆகிவிடும்" என்று தீர்ப்பளித்தது.

இதுபோன்ற வழக்குகள் அனைத்திலும், குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தண்டனை விதிக்கப்படும் வரை அரசியலமைப்புப் பாதுகாப்புகளைத் தக்கவைத்துக் கொள்கிறார் என்றும், சுதந்திரம் அல்லது கண்ணியத்தின் மீதான கட்டுப்பாடுகள் சட்டப்பூர்வமான நியாயத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் நீதிமன்றங்கள் வலியுறுத்தியுள்ளன. 'ஜனநாயகத்திற்கான குடிமக்கள்' வழக்கில், உச்சநீதிமன்றம், "பொது இடங்களில் பொறுப்பற்ற முறையில் கைவிலங்கிடுவதும் சங்கிலியால் பிணைப்பதும் இழிவுபடுத்துகிறது, நுட்பமான உணர்வுகளை அவமானப்படுத்துகிறது மற்றும் நமது கலாச்சாரத்தின் மீதான ஒரு களங்கமாகும்" என்று குறிப்பிட்டதோடு, தனது முந்தைய வழிகாட்டுதல்களை மீறுபவர்கள் மற்ற சட்ட விளைவுகளுடன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள நேரிடும் என்றும் உத்தரவிட்டிருந்தது.


original article : Calcutta High Court criticises parading of accused persons in Bengal: What law says -Amaal Sheikh

Share:

இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்கள் (BITs) - பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


• நாடுகளுடனான இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்களை (Bilateral Investment Treaties (BITs))  ஒன்றிய அரசு மாற்றியமைப்பதற்கான மூன்று முக்கிய கோட்பாடுகள் இவை என்று 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' அறிந்து கொண்டுள்ளது.


• தற்போதைய, இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்கள் மாதிரியில் உள்ள பல்வேறு சிக்கல்கள் குறித்த விவாதங்களுக்கு மத்தியில், மற்ற நாடுகளுடனான உறவுமுறைக்கு ஏற்ப அவற்றை மாற்றியமைக்க ஒன்றிய அரசு பரிசீலித்து வருகிறது. குறிப்பாக, சில நாடுகளுடனான பேச்சுவார்த்தைகளின்போது, ​​சர்வதேச நடுவர் மன்றத்தை நாடும் முன் உள்ளூர் சட்ட நடைமுறைகள் அல்லது தீர்வு வழிமுறைகளை முழுமையாகப் பயன்படுத்த ஒரு வருட கால அவகாசத்தை அளிப்பது குறித்தும் பரிசீலிக்கப்படுவதாக உயர்மட்டத்தில் இருக்கும் அரசு வட்டாரம் ஒன்று  செய்தித்தாளிடம் தெரிவித்தது.




• நாட்டின் 2016-க்கு முந்தைய இருதரப்பு முதலீட்டு ஒப்பந்த (BIT) மாதிரியில் இடம்பெறாத 'உள்ளூர் தீர்வு வழிமுறைகள்' (local remedies) தொடர்பான விதிமுறை முதலீட்டாளர்களுக்கு ஒரு தடையை ஏற்படுத்துமா என்று கேட்டபோது, ​​இந்தியா இதற்கென தனியாக வணிக நீதிமன்றங்களை அமைப்பதை வலியுறுத்தியுள்ளதாக அந்த வட்டாரம் தெரிவித்தது. அனைத்து நாடுகளின் நியாயமான பிரதிநிதித்துவம் இல்லாததும், தன்னிச்சையான முடிவுகளுக்கு வழிவகுக்கக்கூடியதுமான சர்வதேச நடுவர் மன்ற நடைமுறைக்குச் செல்வதற்கு முன்னதாக, இந்த வணிக நீதிமன்ற வழிமுறையை ஆராய வேண்டும் என்றும் அது குறிப்பிட்டது.


• Vodafone மற்றும் Cairn போன்ற உலகளாவிய நிறுவனங்கள் பல்வேறு வரி தொடர்பான பிரச்சனைகளில் இந்திய அரசுக்கு எதிராகத் தொடர்ந்த சர்வதேச நடுவர் மன்ற வழக்குகள், 1993-ஆம் ஆண்டின் பழைய இருதரப்பு முதலீட்டு ஒப்பந்த மாதிரியில் மாற்றங்களைக் கொண்டுவர முக்கியமானதாக அமைந்தன. முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாகவும், நிலையான அந்நிய முதலீட்டை ஈர்க்கும் வகையிலும் 2016-ஆம் ஆண்டு மாதிரியை மறுசீரமைப்பதாக 2025-26-ஆம் ஆண்டிற்கான  நிதி நிலை அறிக்கை  அறிவிக்கப்பட்டது.


• பிப்ரவரி 2025-ல் டெல்லியில் நடைபெற்ற சர்வதேச வணிக மற்றும் முதலீட்டு ஒப்பந்த நடுவர் மன்றம் (International Commercial & Investment Treaty Arbitration) தொடர்பான நிகழ்வில் பேசிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்களை சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களிலிருந்து (free trade agreements (FTAs)) தனியாக சரி பார்த்து  பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறினார். மேலும், வரிவிதிப்பு போன்ற கொள்கை உருவாக்கம் சார்ந்த அம்சங்களில் நிபுணத்துவம் பெற்றவர்களே இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


உங்களுக்குத் தெரியுமா?


• நாடுகள் ஒன்றுக்கொன்று முதலீடுகளை மேற்கொள்ளும்போது, ​​முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதிலும் பாதுகாப்பதிலும் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்கள் (Bilateral Investment Treaties (BITs)) முக்கியப் பங்கு வகிக்கின்றன. தற்போது, ​​டிசம்பர் 2015-ல் அங்கீகரிக்கப்பட்டு ஜனவரி 2016-ல் நடைமுறைக்கு வந்த இருதரப்பு முதலீட்டு ஒப்பந்த மாதிரியை அரசு பின்பற்றுகிறது. இந்த மாதிரி, சர்வதேச நடுவர் மன்ற நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு முன் உள்நாட்டுத் தீர்வு வழிமுறைகளை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் (exhaustion of domestic remedies) என்று கட்டாயமாக்குகிறது.



• 2016-ஆம் ஆண்டு மாதிரிக்கு முன்னதாக, 1993-ஆம் ஆண்டின் மாதிரி இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் மற்றும் 2003-ல் திருத்தப்பட்டதன் அடிப்படையில், இந்தியா 83 நாடுகளுடன் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருந்தது. அவற்றில் 74 ஒப்பந்தங்கள் முறைப்படி அங்கீகரிக்கப்பட்டன. மார்ச் 2023-ல் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட அரசாங்கத் தரவுகளின்படி, இந்த 74 இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்களில், 2016-ஆம் ஆண்டு மாதிரியின் அடிப்படையில் மறுபேச்சுவார்த்தை நடத்தக் கோரி 68 நாடுகளுக்கு ஒப்பந்தத்தை முடித்துக்கொள்வதற்கான அறிவிப்பு வழங்கப்பட்டது.


• திருத்தப்பட்ட 2016-ஆம் ஆண்டு மாதிரிக்குப் பிறகு, இந்தியா பெலாரஸ், ​​கிர்கிஸ் குடியரசு ஆகியவற்றுடன் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்களிலும், பிரேசில், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகியவற்றுடன் முதலீட்டு ஒத்துழைப்பு மற்றும் வசதி ஒப்பந்தத்திலும் (Investment Cooperation and Facilitation Treaty (ICFT)) கையெழுத்திட்டுள்ளது என்று ஏப்ரல் 2025-ல் மக்களவையில் அளிக்கப்பட்ட ஒரு பதிலின் மூலம் தெரியவந்தது. ஐக்கிய அரபு அமீரகத்துடனான இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில், உள்ளூர் தீர்வுகளைப் பயன்படுத்துவதற்கான காலக்கெடு ஐந்து ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. மேலும், இந்தியா தைபே சங்கம் மற்றும் தைபே பொருளாதார மற்றும் கலாச்சார மையம் ஆகியவற்றுக்கு இடையே இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தாகியுள்ளது என்று அது தெரிவித்தது.


original article : Bilateral Investment Treaties (BITs)? -Priya Kumari Shukla

Share:

2028-ஆம் ஆண்டுக்குள் மின்சார வாகனங்களுக்குக் கட்டாய மாறுவதற்கு இந்தியா தயாராக உள்ளதா? -லவீஷ் பண்டாரி

 உண்மையில், மின்சார வாகனங்கள் (Electric vehicles (EVs)) இந்தியாவின் உலகளாவிய பாதிப்புகளைக் குறைக்கின்றன. அதே, சமயம் புதைபடிவ எரிபொருள் வாகனங்கள் அவற்றை அதிகரிக்கின்றன. ஏன்? ஏனென்றால், மின்கலன்களும் (batteries) காந்தங்களும் நுகர்வுப் பொருட்கள் அல்ல, அவற்றின் இறக்குமதி நிறுத்தப்பட்டாலும், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள மின்சார வாகனங்கள் தொடர்ந்து இயங்கும்.


மாசுபாடு உயிர்களைக் கொல்லும். ஒரு ஆற்றல்மிக்க, முற்போக்கான சமூகம் என்ற இந்தியாவின் பெயருக்கு இது தீங்கு விளைவிக்கிறது. மேலும், வாகன மாசுபாட்டைப் பொறுத்தவரை, வசதி படைத்தவர்கள் அதிகமாக மாசுபடுத்துகிறார்கள். அதே, சமயம் வசதி குறைவாக உள்ளவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். வருவாய் இழப்புகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களுக்கு மாறுவதால் ஏற்படும் செலவுச் சுமை குறித்த அச்சத்தின் காரணமாக, புதைபடிவ எரிபொருள் வாகனங்களைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட கொள்கைகளை வாகனத் தொழில்துறை வரலாற்றுரீதியாக எதிர்க்கும் போக்கைக் கொண்டுள்ளது. தொழில்நுட்பத்தில் முக்கியத்துவம் பெற்ற புதிய போட்டியாளர்கள் குறித்த அச்சமும் மற்றொரு காரணியாக இருக்கலாம்.


நாம் இப்போதே மாறினாலும் சரி அல்லது இன்னும் 10 ஆண்டுகள் கழித்து மாறினாலும் சரி, இது போன்ற சவால்கள் தொடர்ந்து நிலவிக் கொண்டே இருக்கும். எனவே, "அரசு எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்?" என்ற கேள்வியை கொள்கை வகுப்பாளர்கள் எழுப்ப வேண்டும். 2028-ஆம் ஆண்டிற்குள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை மின்சார வாகனங்களாக (EVs) மாற்றுவதற்கான ஒரு விரிவான கொள்கையை அரசு உருவாக்கி அதை செயல்படுத்த வேண்டிய நேரம் இது. அதேவேளையில், நாடு முழுவதும் உள்ள வாகன நிறுத்துமிடங்கள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் தேவையான மின்னேற்று நிலையங்களை (charging points) அமைப்பதற்கான திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும்.


இது போன்ற கொள்கை இந்தியாவை சீனாவைச் சார்ந்திருக்கச் செய்யும் என்ற நம்பிக்கை முற்றிலும் தவறானது. முதலாவதாக, இந்தியா இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கான ஒரு பெரிய சந்தையாகும்.


இரண்டாவதாக, உண்மையில் மின்சார வாகனங்கள் இந்தியாவின் உலகளாவிய பாதிப்புகளைக் குறைக்கின்றன, அதேசமயம் புதைபடிவ எரிபொருள் வாகனங்கள் அவற்றை அதிகரிக்கின்றன. ஏன்? ஏனெனில், மின்கலன்களும் காந்தங்களும் நுகர்வுப் பொருட்கள் அல்ல; அவற்றின் இறக்குமதி நிறுத்தப்பட்டாலும், ஏற்கனவே சாலையில் உள்ள மின்சார வாகனங்கள் தொடர்ந்து இயங்கும். புதைபடிவ எரிபொருளில் இயங்கும் வாகனங்களுக்கு இது பொருந்தாது.


மூன்றாவதாக, பெட்ரோலியக் கையிருப்பை பராமரிப்பதற்கான ஒரு வழிமுறை இந்தியாவிடம் உள்ளது. அதேபோன்று அரிய வகை தனிமங்கள் மற்றும் முக்கிய தனிமங்களை கையாள ஒரு அமைப்பை உருவாக்க முடியும். உண்மையில், இந்தியாவின் தேசிய முக்கிய தனிமத் திட்டம் (National Critical Mineral Mission) இதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. முக்கிய தனிமங்கள் மற்றும் அரிய தனிமங்களுக்கான அணுகலை மேம்படுத்துவதற்கான தனது முயற்சிகளை இந்திய அரசு 2026-27-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் முன்னிலைப்படுத்தியது. இந்த முயற்சிகள் வெற்றிபெற உள்நாட்டுத் தேவை  முக்கியமானதாகும்.


புதைபடிவ எரிபொருளில் இயங்கும் வாகனங்களைப் பழுதுபார்த்தல் மற்றும் பராமரித்தல் தொடர்பான வேலை இழப்புகள் ஏற்படக்கூடும் என்பது மற்றொரு கவலையாகும். 2028-ஆம் ஆண்டிற்கு பிறகு புதிய வாகனங்களின் பதிவை நிறுத்த அரசாங்கம் ஒரு முன்மொழிவை வெளியிட்டுள்ளது. பழைய வாகனங்கள் அனைத்தும் தொடர்ந்து இது போன்ற விசைப்பொறியாளர்களின் சேவை தேவைப்படும். புதிய மின்சார வாகனங்களும் (EVs) பிற சேவைகள் சார்ந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கும். வங்கித்துறையில் கணினிமயமாக்கல் அறிமுகமானபோது எழுந்த கவலைகள் உங்களுக்கு நினைவிருக்கிறதா?


அரசு மானியங்கள் வழங்கப்பட்ட போதிலும், மின்சார வாகனங்கள் அதிக விலை கொண்டவை என்றும், அதனால் வாகனங்களை விற்பனை செய்யும்   பணியாளர்கள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் இருசக்கர, மூன்று சக்கர வாகனங்களைச் சார்ந்திருப்பவர்கள் அதிக பணம் செலுத்த நேரிடும் என்றும் சில சமயங்களில் வாதிடப்படுகிறது. இதற்கு மாறாக, CSEP நடத்திய ஆய்வில், மின்சார இருசக்கர வாகனங்களின் வாழ்நாள் செலவுகள், பெட்ரோல் வாகனங்களைவிட கணிசமாகக் குறைவாக இருப்பதும், இந்தத் தொழிலாளர்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவதால் பயனடைவார்கள் என்பதும் தெரியவந்துள்ளது. வாங்கும் செலவு அதிகமாக இருப்பது ஒரு உண்மையான கவலையாக இருந்தால், அரசின் பிணை இல்லாதக் கடன் திட்டங்களில் சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் அதைச் சரிசெய்ய முடியும். கிக் பணிப் பொருளாதாரம் (gig work economy) ஏற்கனவே மின்சார இருசக்கர வாகனங்களை ஏற்றுக்கொண்டுள்ளது.


எந்தவொரு கொள்கை மாற்றமும் பல நிலைகளில் வெற்றியாளர்களையும் தோல்வியாளர்களையும் உருவாக்கும். ஆனால், கற்பனைத்திறன் மிக்க மற்றும் ஒத்துழைப்புடன் கூடிய நடவடிக்கைகள், இரு தரப்பினருக்கும் வெற்றி தரும் தீர்வுகளை உருவாக்க முடியும். இந்திய வாகனத் துறையில், இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் சில நிறுவனங்கள் இடம் பெற்று உள்ளன. மேலும், இந்த நிறுவனங்கள் தொலைநோக்குப் பார்வை கொண்ட மற்றும் தீர்வை நோக்கிய ஒரு திட்டத்தைக் கொண்டுவர முடியும், தற்போதைய சூழலில் ஒரு தீர்வை கண்டிப்பாக கொண்டுவர  வேண்டும்.


உள்எரிப்பு இயந்திர (Internal Combustion Engine (ICE)) வாகனங்களிலிருந்து மின்சார வாகனங்களை நோக்கி உற்பத்தி வரிசைகள் மாறுவதால், தொழில்துறைகள் பயன்பாடின்றி போகக்கூடிய சொத்துகள் (stranded assets) என்ற சவாலை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். இதற்காக, அவர்கள் அரசாங்கத்திடம் விரைவுபடுத்தப்பட்ட தேய்மானச் சலுகை (accelerated depreciation) கோரலாம். இந்த சூழலில் சீனாவை அதிகமாக சார்ந்திருப்பது ஒரு கவலையாக இருப்பதால், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான முதலீட்டை தொழில்துறை அதிகரிக்க வேண்டும்.



தொழில்துறை, இடைக்கால கையிருப்பு (stockpiling) தீர்வுகளை உருவாக்குவதிலும் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படலாம். சார்ஜிங் வசதிகளை விரிவுபடுத்துவதற்கான புதுமையான யோசனைகளையும் முன்வைக்க வேண்டும். இதில் மின்சாரப் பயன்பாட்டு நிறுவனங்களை கலந்துரையாடலில் ஈடுபடுத்துவது பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், மின்சார வாகனங்களின் வளர்ச்சியால் அவர்கள் அதிக பயனை பெறும் பயனாளர்களாக இருப்பார்கள். மின்கலன் மற்றும் மறுசுழற்சி (recycling) ஆகியவை மற்றொரு முக்கிய சவாலாக உள்ளன. அரசின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க இந்தத்துறை தனது பரந்த அளவிலான கட்டமைப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளப் பல வழிகள் உள்ளன.


இந்தியா மாற வேண்டும். ஆனால், தொழில்துறையும் அரசாங்கமும் இணைந்து செயல்படும், சமூக நலனை மையமாகக் கொண்ட ஒத்துழைப்பு உறவை உருவாக்கும்போது மட்டுமே அந்த மாற்றம் சிறப்பாகவும் நிலையானதாகவும் இருக்கும்.


சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான (Centre for Social and Economic Progress (CSEP)) அமைப்பின் தலைவராக  செயல்படுகிறார்.’


original article : Is India ready for a mandatory shift to electric vehicles by 2028? -Laveesh Bhandari

Share:

ஜோஜிலா சுரங்கப்பாதை (Zojila Tunnel) : இந்தியாவின் மிக நீளமான சாலைச் சுரங்கம் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

ஜோஜிலா சுரங்கப்பாதை திட்டம் (Zojila Tunnel project), 13 கிலோமீட்டருக்கும் அதிகமான அகழ்வுப் பணிகளை நிறைவு செய்து ஒரு பெரும் திருப்புமுனையை எட்டியுள்ளது. இந்த திட்டம் பயன்பாட்டிற்கு வந்தவுடன், 14.15 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தச் சுரங்கப்பாதை இந்தியாவின் மிக நீளமான சாலைச் சுரங்கப்பாதையாக உருவெடுத்து, காஷ்மீருக்கும் லடாக்கிற்கும் இடையே அனைத்துப் பருவ காலங்களிலும் பயணிக்கக்கூடிய இணைப்பை வழங்கும். இந்தச் சுரங்கப்பாதை பயண நேரத்தை வெகுவாகக் குறைத்தாலும், இத்திட்டம் கடந்த காலங்களில் தாமதங்களைச் சந்தித்துள்ளது.


காஷ்மீரின் சோன்மார்க்கையும், லடாக்கின் மீனாமார்க்கையும் இணைக்கும் ஜோஜிலா சுரங்கப்பாதையில், 13 கிலோமீட்டருக்கும் அதிகமான அகழ்வுப் பணிகள் இன்று நிறைவடைந்ததையடுத்து, ஒரு பெரிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. இந்த இறுதிக்கட்ட அகழ்வுப் பணியின் வெற்றிக்கான நிகழ்வில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொள்ள உள்ளார்.


கடல் மட்டத்திலிருந்து 11,578 அடி உயரத்தில் அமைந்துள்ள ஜோஜிலா சுரங்கப்பாதை, சவாலான ஒரு மலைப்பாதையின் குறுக்கே ஆண்டு முழுவதும் பயணிக்கக்கூடிய வசதியை அளிக்கும். இத்திட்டம் சுமார் ரூ. 6,800 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது. இச்சுரங்கப்பாதை பயன்பாட்டிற்கு வரும்போது, ​​ஜம்மு-காஷ்மீரின் கந்தர்பால் பகுதியிலிருந்து கார்கில் வரையிலான பயண நேரம் சுமார் மூன்று மணி நேரத்திலிருந்து 20 நிமிடங்களுக்கும் சற்று அதிகமான நேரமாகக் குறையும்.


இப்பிராந்தியத்தில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்றுவரும் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ரூ.25,000 கோடி செலவில் 19 சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சுரங்கப்பாதை 2028-ம் ஆண்டில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஜோஜிலா சுரங்கப்பாதை (Zojila Tunnel) என்றால் என்ன?


ஜோஜிலா சுரங்கப்பாதை (Zojila Tunnel) 14.15 கி.மீ. நீளத்துடன், இந்தியாவின் மிக நீளமான சாலைச் சுரங்கப்பாதையாகவும், ஆசியாவின் மிக நீளமான இருவழிச் சுரங்கப்பாதையாகவும் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தேசிய நெடுஞ்சாலை-1 இல் உள்ள இசட்-மோர் (Z-Morh) பகுதியிலிருந்து ஜோஜிலா சுரங்கப்பாதைக்கு ஒரு இணைப்புச் சுரங்கப்பாதையாக, சோன்மார்க் மற்றும் கார்கில்-க்கு இடையே உள்ள ஜோஜிலா மலைப்பாதையில் கட்டப்படும். இது, இசட்-மோர் (Z-Morh) பகுதியிலிருந்து ஜோஜிலா வரையிலான 18.475 கி.மீ நீளமுள்ள நெடுஞ்சாலையை மேம்படுத்தி விரிவுபடுத்துவதை உள்ளடக்கியது. இதில் 3 கி.மீ நீளமுள்ள பகுதி விரிவாக்கப்படும், மீதமுள்ள பகுதி புதிதாக உருவாக்கப்படும். இந்த நெடுஞ்சாலையில் இரண்டு இரட்டைக்குழாய் சுரங்கப்பாதைகள், ஐந்து பாலங்கள் மற்றும் இரண்டு பனிப் பாதுகாப்புப் பாதைகள் (snow galleries) ஆகியவை இடம்பெறும்.


மொத்தம் 33 கி.மீ நீளம் கொண்ட இத்திட்டத்தின் பணிகள் ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு ஒன்றியப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.


இந்தச் சுரங்கப்பாதை ஏன் தேவைப்படுகிறது?


தற்போது, ​​லடாக்கின் மிகப்பெரிய நகரமான லேவிற்கும், ஸ்ரீநகருக்கும் இடையேயான பயணம் செய்ய, சாதகமான வானிலை நிலவும்போதே 10 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. மேலும், இப்பயணம் மிகவும் கடினமான நிலப்பரப்பின் வழியாகவே நடைபெறுகிறது. இந்தப் பயணத்தை மேற்கொள்வதற்கு, ஜோஜிலா கணவாய் (Zojila Pass) என்ற உயரமான மலைப்பாதையைக் கடந்துதான் செல்ல வேண்டும்.


கடுமையான குளிர்காலங்களில், பனிச்சரிவுகள், நிலச்சரிவுகள் மற்றும் வழுக்கும் சாலைகள் போன்ற ஆபத்துகள் காரணமாக இந்தப் பாதை பெரும்பாலும் மூடப்படுகிறது. இதன் விளைவாக, ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஐந்து மாதங்களுக்கு, இக்கணவாய்க்கு அப்பால் உள்ள பகுதிகள் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் இருக்கின்றன. ஜோஜிலா கணவாய் மூடப்படும்போது, விமானப் போக்குவரத்து மட்டுமே ஒரே வழியாகும். மேலும், குளிர்காலத்தின் உச்சக்கட்ட மாதங்களில் விமானக் கட்டணங்கள் ரூ. 40,000-க்கும் அதிகமாகச் செல்லக்கூடும்.


வரவிருக்கும் ஜோஜிலா சுரங்கப்பாதை, லடாக்கிற்கும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் இடையே ஆண்டு முழுவதும் தடையற்ற போக்குவரத்தை வழங்கும்.  இது, அப்பகுதியில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் பொதுமக்களுக்கு மட்டுமல்லாமல், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இப்பிராந்தியத்தில் இராணுவப்படைகள் மற்றும் விநியோகங்களின் போக்குவரத்தை விரைவுபடுத்துவதன் மூலம் இராணுவத்திற்கும் இது பெரிதும் பயனளிக்கும்.


இந்தச் சுரங்கப்பாதை பயண நேரத்தை எவ்வளவு மிச்சப்படுத்தும்?


ஆண்டு முழுவதும் போக்குவரத்தை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், இந்தச் சுரங்கப்பாதை காஷ்மீருக்கும் லடாக்கிற்கும் இடையிலான பயண நேரத்தைக் குறைக்கும் என்றும் உறுதியளிக்கிறது. தற்போது 40 கி.மீ. ஆக உள்ள பால்டாலில் இருந்து மினமார்க் வரையிலான தூரம் 13 கி.மீ. ஆகக் குறைவதோடு, பயண நேரமும் ஒன்றரை மணி நேரம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும், இந்தப் பயணம் சிரமமில்லாததாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜோஜிலாவின் கடினமான நிலப்பரப்பின் காரணமாக, இந்த வழித்தடத்தில் ஒவ்வொரு ஆண்டும் பல உயிரிழப்பு விபத்துக்கள் பதிவாகின்றன. சுரங்கப்பாதை திட்டம் நிறைவடைந்தவுடன், விபத்துகளுக்கான வாய்ப்புகள் கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தத் திட்டம் இரு ஒன்றியப் பிரதேசங்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2023-ல் அப்பகுதிக்கு மேற்கொண்ட பயணத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய கட்கரி, "இராஜதந்திரரீதியாக இத்திட்டம் முக்கியமானது. இந்த திட்டம் இப்பகுதியை மேம்படுத்தவும், மக்கள் இடம்பெயர்வதற்கான தேவையைக் குறைக்கவும் உதவும். மேலும், இப்பகுதியில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது," என்று கூறினார்.


இத்திட்டத்தின் செலவு எவ்வளவு?


இந்தச் சுரங்கப்பாதை 6,500 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் கட்டப்பட்டு வருகிறது. இத்திட்டம் பல்வேறு தாமதங்களைச் சந்தித்த நிலையில், தற்போது 2028-ம் ஆண்டிற்குள் இது நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

original article : Zojila tunnel breakthrough: India’s longest road tunnel inches closer to completion.

Share:

மியான்மருடனான இந்தியாவின் கொள்கை என்பது கூட்டு ஒத்துழைப்பு சார்ந்த பாதையாகும். -ஹர்ஷ் வி. பந்த், ஸ்ரீபர்ணா பானர்ஜி

 இணைப்புத் திறன், பாதுகாப்பு மற்றும் சீனா ஆகிய மூன்று காரணிகளே மியான்மருடனான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை தீர்மானிக்கின்றன.


மியான்மர் நாட்டின் அதிபர் உ மின் ஆங் ஹ்லைங், மே மாதம் 30-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு பீகாரில் உள்ள புத்த கயாவிற்கு (Bodh Gaya) வந்திறங்கியபோது, அதன் குறியீட்டு செய்தி மிகத் தெளிவாக இருந்தது. அவர் புது டெல்லிக்குச் சென்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆகியோரைச் சந்தித்துப் பேசுவதற்கு முன்பாக, ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பின் (United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO)) உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றானதும், பௌத்த மதத்தின் மிக முக்கியமான புனிதத் தலங்களில் ஒன்றானதுமான மகாபோதி கோயிலுக்குச் சென்றார். இந்த வருகை முக்கியாமான செய்தியை வெளிப்படுத்தியது.  இந்தியா, மியான்மர் தலைவரை வெறும் ராஜதந்திரரீதியாக மட்டும் வரவேற்கவில்லை. மாறாக, இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பொதுவான நாகரிக மற்றும் கலாச்சார பிணைப்புகள் மூலமாகவும் அவரை வரவேற்றது. 


மின் ஆங் ஹ்லைங் அதிபராக இந்தியாவிற்கு மேற்கொண்ட முக்கியமான ராஜதந்திரரீதியான பயணமாகும் (மே 30 முதல் ஜூன் 3, 2026 வரை). தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் மாறிவரும் புவிசார் அரசியல் சூழலில், இந்தியா-மியான்மர் இடையிலான உறவு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவருகிறது என்பதை இந்த வருகை பிரதிபலித்தது. இந்திய அரசுக்கு, இந்த வருகை நிகழ்ந்த காலகட்டமும் அதன் தன்மையும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.


இப்போது ஏன்?


பிப்ரவரி மாதம் 2021-ஆம் ஆண்டில் ஆங் சான் சூகி தலைமையிலான தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை அகற்றிவிட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து, உலகின் பெரும்பாலான ஜனநாயக நாடுகள் மியான்மரின் தலைநகரான நெய்பிடாவ் (Naypyidaw) உடனான தங்களது உறவை துண்டித்துக் கொண்டுள்ளன. மேற்கத்திய நாடுகள் மியான்மர்மீது பொருளாதாரத் தடைகளை விதித்து, அந்த ராணுவ ஆட்சியைத் தனிமைப்படுத்த முயன்றன. இருப்பினும், இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவின் கொள்கையானது, மியான்மரின் உள்நாட்டு அரசியல் ஏற்பாடுகள் குறித்த ஒரு விமர்சனமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், தொடர்ந்து இணக்கமாகச் செயல்படுவதுதான் சிறந்த அணுகுமுறை என்று இந்தியா நம்புவதாகவும் கூறினார்.


இது இந்தியாவின் ஒரு நடைமுறைச் சாத்தியமான உத்தி சார்ந்த அணுகுமுறையைக் காட்டுகிறது. மியான்மர் என்பது தென்கிழக்கு ஆசியாவிற்கான இந்தியாவின் நுழைவாயிலாகும்.  மேலும், இது இந்தியாவின் 'Act East Policy' மற்றும் 'Neighbourhood First Policy' ஆகிய கொள்கைகளின் மிக முக்கியமான பகுதியாகும். இந்தியாவின் நான்கு வடகிழக்கு மாநிலங்களுடன் மியான்மர் 1,643 கிலோமீட்டர் எல்லையைப் பகிர்ந்து கொள்வதால், அங்கு நிலவும் அரசியல் நிலையற்றதன்மை அந்த பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்பு நலன்களை நேரடியாகப் பாதிக்கிறது.


Act East Policy (கிழக்கில் செயல்படும் கொள்கை) : இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான பொருளாதார, ராஜதந்திரரீதியான உறவுகளை வலுப்படுத்துவதற்கான இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை.


Neighbourhood First Policy (அண்டைநாடுகளுக்கு முன்னுரிமை கொள்கை) : தனது அண்டை நாடுகளுடன் (இலங்கை, மாலத்தீவு, மியான்மர் போன்ற நாடுகள்) சுமுகமான மற்றும் நல்லுறவை பேணுவதற்கு இந்தியா வழங்கும் முன்னுரிமைக் கொள்கை.


இதற்கு மற்றொரு முக்கியக் காரணி சீனா ஆகும். மியான்மரில் ராணுவப் புரட்சி ஏற்பட்டதில் இருந்து, மேற்கத்திய நாடுகள் அந்நாட்டைப் புறக்கணித்ததால் ஏற்பட்ட இடைவெளியைச் சீனா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. உள்கட்டமைப்பு நிதி, ஆயுதங்கள் மற்றும் ராஜதந்திர ஆதரவை வழங்குவதன் மூலம் சீன அரசாங்கம் மியான்மரின் ராணுவ அரசுடன் தனது உறவை வலுப்படுத்தியுள்ளது. ஒருவேளை இந்தியா, மியான்மரை முழுமையாகச் சீனாவின் ஆதிக்கத்திற்குள் விட்டுவிட்டால், அது இந்தப் பகுதிகளில் இந்தியாவின் பாதுகாப்பை பலவீனப்படுத்திவிடும் என்றும் கூறப்படுகிறது.


உள்கட்டமைப்புக்கான முதலீட்டு அபாயங்கள் மற்றும் சவால்கள் 


மியான்மரில் இந்தியாவின் வலுவான உத்திசார் முதலீட்டை, கலாடன் பல்துறைப் போக்குவரத்துத் திட்டம் (Kaladan Multi-Modal Transit Transport Project (KMMTTP)) மற்றும் இந்தியா-மியான்மர்-தாய்லாந்து முத்தரப்பு நெடுஞ்சாலை (India-Myanmar-Thailand Trilateral Highway (IMT)) ஆகிய இரு முக்கிய இணைப்புத் திட்டங்களைவிட வேறு எந்தவொரு திட்டமும் இவ்வளவு சிறப்பாகக் காட்டிவிட முடியாது. இந்த இரண்டு திட்டங்களும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மியான்மர் ராணுவத் தளபதி மின் ஆங் ஹ்லைங் ஆகியோரின் பேச்சுவார்த்தையில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தன.


கலாடன் திட்டம் கொல்கத்தாவை கடல் வழியாக சித்வே (Sittwe) துறைமுகத்துடன் இணைக்கிறது, அங்கிருந்து கலாடன் நதி வழியாக பலேத்வா (Paletwa) பகுதிக்குச் சென்று, இறுதியாக சாலை வழியாக மிசோரமில் உள்ள ஜோரின்புயுடன் (Zorinpui) இணைகிறது. இதன் கடல் மற்றும் நதி வழிப் பாதைகள் ஏற்கனவே செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. மேலும், மே மாதம் 2023-ஆம் ஆண்டில் முதல் சரக்குக் கப்பல் சித்வே துறைமுகத்தை வந்தடைந்தது. இருப்பினும், மலைப்பாங்கான மற்றும் வெள்ள அபாயம் அதிகம் உள்ள சின் மாநிலம் (Chin State) வழியாகச் செல்லும் மிக முக்கியமான 109 கிலோமீட்டர் நீள பலேத்வா-ஜோரின்புய் சாலை இன்னும் முடிவடையாமல் உள்ளது. இந்தத் திட்டம் 2027-ஆம் ஆண்டிற்குள் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் என்று இந்தியாவின் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் 2025-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.



இந்த முத்தரப்பு நெடுஞ்சாலை (IMT Trilateral Highway) இன்னும் ஒரு பெரிய இலக்கைக் கொண்டுள்ளது. இது மணிப்பூரில் உள்ள மோரே (Moreh) பகுதியை மியான்மர் வழியாக தாய்லாந்தில் உள்ள மே சோட் (Mae Sot) பகுதியுடன் சுமார்     1,360 கி.மீ தூரத்திற்கு இணைக்கிறது. எதிர்காலத்தில் கம்போடியா, லாவோஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கும் இதை நீட்டிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் முடிவடைந்தால், கடலோரப் பகுதிகள் இல்லாத இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான ஒரு முக்கிய நுழைவாயிலாக மாற்றமுடியும். இந்தத் திட்டம் 2019-ஆம் ஆண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டது, ஆனால் இன்னும் முழுமையடையாமல் உள்ளது.


மியான்மர் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டுப் போர்தான் இந்த இரண்டு திட்டங்களும் தாமதமாவதற்கு முக்கியக் காரணமாகும். ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள் இந்த வழித்தடங்களில் உள்ள பெரிய பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால், கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது கடினமாகவும் ஆபத்தானதாகவும் மாறியுள்ளது. இந்தத் திட்டங்களை முடிப்பதற்கு மியான்மர் அரசாங்கம் தங்களால்  முடிந்த அனைத்தையும் செய்யும் என்று மியான்மர் ராணுவத் தலைவர் மற்றும் அதிபர் மின் ஆங் ஹ்லைங், பிரதமர் நரேந்திர மோடியிடம் உறுதியளித்தார். அதேநேரத்தில் பாதுகாப்பு சவால்கள் இருந்தாலும், இத்திட்டங்கள் தங்களுக்கு மிக முக்கியமான முன்னுரிமையாகவே தொடர்கிறது என்று இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.    மியான்மர்-இந்தியா வர்த்தகம் மற்றும் முதலீட்டு மாநாட்டில் (Myanmar-India Trade and Investment Conclave), ஆங் ஹ்லைங் இத்திட்டங்களை தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு ஆசியான்-இந்தியா பொருளாதார வழித்தடத்தின் (Association of Southeast Asian Nations(ASEAN)-India economic corridor) அத்தியாவசியப் பகுதிகள் என்று விவரித்தார். ஆனால், இப்போதுள்ள முக்கியக் கேள்வி என்னவென்றால், இந்த வாக்குறுதிகள் உண்மையில் களத்தில் வேலைகள் நடக்க வழிவகுக்குமா என்பதுதான். இந்த உச்சிமாநாடு பிற முக்கியமான விஷயங்களையும் உள்ளடக்கியதாக இருந்தது. 2025-26-ஆம் நிதியாண்டில் இருநாடுகளுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் 1.95 பில்லியன் டாலர்களை எட்டியது. இந்த வர்த்தகத்தை ‘Rupee-Kyat settlement mechanism’ எனப்படும் இந்திய ரூபாய் மற்றும் மியான்மர் கியாட் நாணயங்களை நேரடியாகப் பயன்படுத்தி வர்த்தகம் செய்யும் முறை மூலம், மேலும் அதிகரிக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. அதோடு, முக்கியமான கனிமங்கள் மற்றும் அரிய வகை மண் தனிமங்கள் ஆகியவற்றில் கூட்டு ஒத்துழைப்பு குறித்தும் விவாதித்தனர்.


பாதுகாப்பு குறித்துப் பேசிய மியான்மர் ராணுவத் தளபதி ஆங் ஹ்லைங், மியான்மரின் நிலப்பரப்பு இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படாது என்ற நாட்டின் உறுதியை மீண்டும் வலியுறுத்தினார். இந்தியாவின் கிளர்ச்சியாளர் குழுக்களும் (Indian insurgent groups), இணையக் குற்ற வலையமைப்புகளும் (Cybercrime networks) நீண்டகாலமாக மியான்மரின் எல்லைப் பகுதிகளில் செயல்பட்டு வருவதால் இந்த உறுதிமொழி மிக முக்கியமானதாகும். இருதரப்பு ஒத்துழைப்பின் மூலம், கடந்த 18-மாதங்களில் இணையவழி மோசடி மையங்களில் சிக்கியிருந்த 2,400-க்கும் மேற்பட்ட இந்தியக் குடிமக்கள் மீட்கப்பட்டுள்ளனர். இருப்பினும், பலர் இன்னும் அங்கு தவித்து வருகின்றனர். கல்வித்துறையைப் பொறுத்தவரை, மியான்மர் மாணவர்களுக்கான மேகாங்-கங்கா இந்திய கலாச்சார உறவுகளுக்கான கூட்டமைப்பு (Indian Council for Cultural Relations (ICCR)) கல்வி உதவித்தொகைகளின் எண்ணிக்கை, 2026-ஆம் ஆண்டு முதல் ஆண்டிற்கு 36-லிருந்து 100-ஆக உயர்த்தப்படும் என்று இந்தியா அறிவித்துள்ளது.


பெரிய அளவிலான கணக்கீடு


  மியான்மரின் அதிபராக ஆங் ஹ்லைங் அவர்களை வரவேற்பதன் மூலம், மியான்மரில் மாறிவரும் அரசியல் சூழ்நிலையை இந்தியா ஒரு குறிப்பிட்ட அளவிற்கு ஏற்றுக்கொண்டுள்ளதைக் காட்டுகிறது. இதன் பொருள் ராணுவ ஆதரவு பெற்ற அரசாங்கத்தை இந்தியா முழுமையாக ஆதரிக்கிறது என்பது அல்ல, மாறாக மியான்மருடன் பயனுள்ள முறையில் தொடர்பு ள்ள வேண்டுமென்றால், தற்போது அதிகாரத்தில் இருக்கும் தலைவர்களுடன்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற நிலையைப் பிரதிபலிக்கிறது. மியான்மர் நாட்டைப் பொறுத்தவரையிலும் இந்தப் பயணம் மிக முக்கியமானதாகும். ஆங் ஹ்லைங் கடைசியாக 2019-ஆம் ஆண்டு மியான்மரின் ராணுவத் தளபதியாக இந்தியாவுக்கு வந்திருந்தார். இப்போது அவர் நாட்டின் தலைவராக மீண்டும் வந்திருப்பதும், வெளிநாடுகளில் தனது முதல் முக்கிய இருதரப்புப் பேச்சுவார்த்தைக்கான இடமாக இந்தியாவைத் தேர்ந்தெடுத்திருப்பதும், ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்துகிறது. ராஜதந்திரரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் சீனா மீது மியான்மர் வைத்துள்ள அதிகப்படியான சார்புநிலையைக் குறைக்க, அண்டை நாடான இந்தியாவுடன் உறவை வலுப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த முடிவு புவியியல் மற்றும் நாட்டின் பாதுகாப்பு சார்ந்த காரணங்களால் எடுக்கப்பட்டதாகும். அதோடு, ஒரு நாட்டுடனான உறவைத் துண்டித்துக் கொள்வது எப்போதும் நல்ல பலனைத் தராது என்ற புரிதலும் இதற்குப் பின்னணியில் உள்ளது. இதன் மூலம் சொல்ல வரும் செய்தி மிகவும் தெளிவானது. பல சவால்கள் இருந்தபோதிலும், மியான்மர் தொடர்பான பிராந்திய அளவிலான அணுகுமுறைகளில், வரும் ஆண்டுகளில் நடைமுறைரீதியான கூட்டு ஒத்துழைப்பு மிக முக்கியப் பங்கு வகிக்கப் போகிறது.


ஹர்ஷ் வி. பந்த், ‘Observer Research Foundation’ அமைப்பின் துணைத் தலைவர் ஆவார். ஸ்ரீபர்ணா பானர்ஜி, ‘Observer Research Foundation’ அமைப்பின் உத்திசார் ஆய்வுகள் திட்டத்தின் இணை ஆய்வாளர் ஆவார்.


original article : India’s road through Myanmar is one of engagement. -Harsh V. Pant, Sreeparna Banerjee

Share:

இந்தியாவில் கருத்தடை பயன்பாடு மற்றும் பெண்கள் இன்னும் சுமந்து வரும் பொறுப்பு : NFHS-6 ஆய்வு கண்ணோட்டங்கள் - த்ரிஷ்னா சர்க்கார், சி. சரத் சந்த்

 கருத்தடைப் பயன்பாடு கட்டாயம் அல்லது சமூக அழுத்தத்தால் அல்லாமல், தனிநபர்களின் விருப்பத் தேர்வாக மாறும் வகையில் இந்தியா கொள்கைகளை உருவாக்க வேண்டும். 18 வயதுக்கு முன் எந்தப் பெண்ணுக்கும் திருமணம் நடக்காமல் இருப்பதை உறுதி செய்தல், கிராமப்புற இடைநிலைக் கல்வியில் முதலீடு செய்தல், மற்றும் மீளக்கூடிய அறிவியல் கருத்தடை முறைகளுக்கான அணுகலை அதிகரித்தல் ஆகியவை இதில் அடங்கும்.


குழந்தைகளைப் பெற வேண்டுமா, எப்போது பெற வேண்டும், எத்தனை குழந்தைகள் பெற வேண்டும் மற்றும் எந்த முறையில் குழந்தைகளைப் பெற வேண்டும் என்பதைக் குறித்து தனிநபர்ளே முடிவு செய்யும் அதிகாரத்தைக் குறிக்கிறது. இது பெண்களுக்கு அதிகாரம் (women’s Empowerment) வழங்கும் முக்கியமான படியாகும். இருப்பினும், வருமானம், கல்வி, நடமாடும் சுதந்திரம் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் ஆகிய அளவீடுகள் பகுப்பாய்வு செய்யப்படும்போது இது பெரும்பாலும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.


2023–24-ஆம் ஆண்டுகளுக்கான தேசிய குடும்ப சுகாதார-6-வது ஆய்வு இந்தியாவின் மக்கள்தொகை சார்ந்த மாற்றம், சுகாதாரக் குறியீடுகளில் ஏற்பட்டுள்ள படிப்படியான மாற்றங்களை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இனப்பெருக்கம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகார வரம்பில் ஏற்பட்டுள்ள ஒரு கட்டமைப்புரீதியான மாற்றத்தையும் சுட்டிக்காட்டுகிறது. ஒரு காலத்தில் முக்கியமானதாக இருந்த மக்கள்தொகைக் கட்டுப்பாட்டிற்கான ஒரு கருவியாகவே பார்க்கப்பட்ட கருத்தடை முறையானது, தற்போதுபெண்களின் இனப்பெருக்கத் தன்னாட்சி அமைப்பில் முக்கிய அடையாளமாக உருவெடுத்து வருகிறது.





கருத்தடை பயன்பாட்டின் (contraceptive use) வரலாறு


இந்தியாவின் கருத்தடை தொடர்பான முயற்சி 1952-ஆம் ஆண்டிலேயே தொடங்கியது. அப்போது, அதிகாரப்பூர்வ குடும்பக் கட்டுப்பாட்டு (Family Planning) திட்டத்தை அறிமுகப்படுத்திய உலகின் முதல் நாடாக இந்தியா இருந்தது. இருப்பினும், இந்த திட்டத்தின் பொறுப்பும் சுமையும் பெரும்பாலும் பெண்கள் மீதே விழுகிறது. கருத்தடை மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் பெண்களே அளவுக்கு அதிகமான பொறுப்பை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.


15 முதல் 49 வயதுக்குட்பட்ட, தற்போது திருமணமான பெண்களிடம் நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார-6-வது கணக்கெடுப்பிலிருந்து பெறப்பட்ட பின்வரும் தரவுகள், இந்தியாவின் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள இனப்பெருக்கம் மற்றும் கருத்தடை நிலவரத்தை, தேசிய குடும்ப சுகாதார-5  கணக்கெடுப்பின்  அடிப்படை அளவோடு ஒப்பிட்டுக் காட்டுகின்றன:



குழந்தை திருமணம், கூட்டு கருவுறுதல் வெளிப்பாடு


தேசிய குடும்ப சுகாதார-6-வது தரவுகளில் காணப்படும் ஒரு முக்கிய கண்டுபிடிப்பு, இளம் வயதில் திருமணம் செய்து கொள்வது தொடர்பானதாகும். தேசிய அளவில், 20-24 வயதுடைய பெண்களில் 20.1% பேர் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்துகொண்டனர். கிராமப்புறங்களில் இந்த எண்ணிக்கை 23.3%-ஆக உள்ளது. இது தேசிய குடும்ப சுகாதார-5-வது தரவுகளிலிருந்து மாறாமல் இருக்கிறது. ஆண்களைப் பொறுத்தவரை, 25-29 வயதுடையோரில் 15.9% பேர் 21 வயதுக்கு முன்பே திருமணம் செய்துகொண்டனர். இந்தப் போக்குகள் சட்டரீதியான தோல்விகள் மட்டுமல்ல, அவை சுகாதாரப் பின்னடைவுகள் ஆகும்.


மேல்நிலைக் கல்வியை முடிக்கவோ அல்லது ஊதியம் பெறும் பணியில் சேரவோ வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பே திருமணம் செய்துகொள்ளும் ஒரு பெண்,   நீட்டிக்கப்பட்ட இனப்பெருக்கக் காலத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. கருத்தடை வசதிகள் குறைவாக இருந்தால், சுகாதார விழிப்புணர்வு போதிய அளவில் இல்லாவிட்டால் அல்லது குடும்பத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்படவிட்டால், ஆரோக்கியமற்ற கர்ப்பங்கள், தாங்கமுடியாத அளவுக்கு அதிகப் பிரசவ வழிகள் மற்றும் தாய்–சேய் நலனுக்கான அதிக அபாயங்கள் ஏற்படுகின்றன. இதனை புள்ளிவிவரங்களும் உறுதிப்படுத்துகின்றன. கணக்கெடுப்பின்போது 15–19 வயதுடைய பெண்களில் 6.7% பேர் ஏற்கனவே தாய்மார்களாக இருந்தனர் அல்லது கர்ப்பமாக இருந்தனர். கிராமப்புறங்களில் இந்த விகிதம் 7.9%-ஆக உயர்ந்துள்ளது.


பொது சுகாதாரக் கண்ணோட்டத்தில், இளம் வயதுத் திருமணம் என்பது ஒரு சமூகப் பிரச்சனை மட்டுமல்ல, அது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் விளைவுகளைக் கொண்ட ஒரு இனப்பெருக்க சுகாதார அவசரநிலையாகும். இளம் வயதில் திருமணம் செய்துகொள்ளும் பெண்கள், தங்களுக்குரிய கருத்தடை முறைகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவும், அவற்றைப் பயன்படுத்துவது குறித்துப் பேசித் தெளிவுபடுத்திக்கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவும் இருப்பதோடு, கர்ப்பங்களுக்கு இடையே அதிக இடைவெளி இல்லாத நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன. இரத்தசோகை, மகப்பேறு சிக்கல்கள் மற்றும் தாய்வழி இறப்பு ஆகியவற்றின் ஒட்டுமொத்த சுமையானது, துல்லியமாக இந்த மக்கள்தொகையினரிடமே அதிகமாக உள்ளது. இருப்பினும், கருவுறுதல் தொடர்பான கொள்கை விவாதங்களில் இளவயது திருமணங்களின் பங்கு பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது. இதன் விளைவாக, அடிப்படைக் காரணமான இனப்பெருக்கத் தன்னாட்சியின் (reproductive agency) கட்டுப்பாட்டை கவனிக்காமல், அதன் அறிகுறியான அதிக கருவுறுதல் விகிதத்தை மட்டும் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக முயற்சிகள்  வெற்றியடைவதில்லை.


இந்தப் புள்ளிவிவரங்களில் கிராமப்புற-நகர்ப்புற வேறுபாடு தெளிவாகத்  தெரிகிறது. நகர்ப்புறப் பெண்கள் தாமதமாகத் திருமணம் செய்துகொள்கிறார்கள். அதிகமாகக் கல்வி கற்றுக் கொள்கிறார்கள்.   மேலும்,  கருத்தடை முறைகள் குறித்து அதிக விழிப்புணர்வை பெற்றுள்ளனர். கிராமப்புறப் பெண்கள் இதற்கு நேர்மாறான நிலையை எதிர்கொள்கின்றனர். முன்கூட்டியே திருமணம் செய்துகொள்வது,   குறைந்த முடிவெடுக்கும் திறன் மற்றும் பொது சுகாதாரத்தில் முதலீடு செய்வதற்குப் பதிலாக, நடைமுறையில் அனைவருக்கும் பொருந்தாத நிரந்தரத் தீர்வுகளையே இயல்பாக நாடும் ஒரு சுகாதாரக் கட்டமைப்பு போன்றவற்றையே அவர்கள் பெற்றுள்ளனர்.


பொது சுகாதாரத் தோல்வி, தனிப்பட்ட சுமை


இந்தியாவில் பெண்கள் கருத்தடை அறுவை சிகிச்சை முறையே முக்கிய  கருத்தடை முறையாகத் தொடர்கிறது. இது தேசிய அளவில் மொத்த கருத்தடை பயன்பாட்டில் 36.5% ஆகவும், கிராமப்புறங்களில் 38.1% ஆகவும் உள்ளது. இதற்கு மாறாக, ஆண்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மிகக் குறைவான 0.5% என்ற அளவில் உள்ளது. இது போன்ற அதிகமான ஏற்றத்தாழ்வு, கொள்கை வடிவமைப்பு மற்றும் பாலின அதிகாரமின்மையின் விளைவாகும்.


தேசிய குடும்ப சுகாதார-6-வது தரவுகளும், பெண் கருத்தடை அறுவை சிகிச்சை தேசிய குடும்ப சுகாதார-5-வது தரவு 37.9%-லிருந்து 36.5%-ஆகக் குறைந்திருப்பதையும், அதே சமயம் பாரம்பரிய முறைகளின் பயன்பாடு 10.3%-லிருந்து 16.4%-ஆக அதிகரித்திருப்பதையும், நவீன மீளக்கூடிய முறைகள் 56.4%-லிருந்து 52.7%-ஆக சிறிதளவு குறைந்திருப்பதையும் காட்டுகின்றன. இந்தப் போக்குகளை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ​​சில பெண்களால் கருத்தடை அறுவை சிகிச்சையிலிருந்து பின்வாங்க முடிகிறது என்பதையும், அவர்கள் இனப்பெருக்க உரிமையை உண்மையாக மேம்படுத்தக்கூடிய மீளக்கூடிய அறிவியல் முறைகளை நோக்கிச் செல்லாமல், முறைசாரா, மருத்துவ ஆதரவு குறைந்த முறைகளை நோக்கிச் செல்கிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றன.


இந்தியாவின் பொது சுகாதார அமைப்பில் பெண்கள் கருத்தடைக்கு (Female sterilisation) ஒரு சிக்கலான வரலாறு உண்டு. 2014-ஆம் ஆண்டு பிலாஸ்பூர் துயரச் சம்பவத்தில், ஒரே நாளில் நடத்தப்பட்ட ஒரு மாபெரும் கருத்தடை இயக்கத்தைத் தொடர்ந்து 13 பெண்கள் உயிரிழந்தனர். இது போன்ற மாபெரும் கருத்தடை முகாம்கள் விதிவிலக்குகள் அல்ல. மாறாக, பெண்களின் இனப்பெருக்கத் திறனை மலிவாக மற்றும் விரைவாகத் தீர்க்கப்பட வேண்டிய ஒரு மக்கள் தொகை மேலாண்மைப் பிரச்சனையாகக் கருதும் ஒரு அமைப்பின் விளைவுகளே ஆகும். கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் கருக்குழாய் கட்டும் அறுவைச் சிகிச்சைகள் (Tubectomy) மற்றும் நிரந்தர கருத்தடை அறுவைச் சிகிச்சைகள் சில நேரங்களில் ஆபத்தானவையாக இருக்கக்கூடும். இது போன்ற மருத்துவமனைகள் பெரும்பாலும் நோயாளிகளின் அதிக நெரிசல், போதுமான பயிற்சி இல்லாத பணியாளர்கள் மற்றும் அறிவியல் அடிப்படையிலான நோயாளர் பராமரிப்பைவிட அதிக எண்ணிக்கையிலான அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்துவது போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன. இந்த அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்ளும் பெண்களுக்கு தொற்றுநோய்கள், தவறாக அளிக்கப்படும் மயக்க மருந்தால் ஏற்படும் சிக்கல்கள் அல்லது அறுவைச் சிகிச்சை தோல்வியடைந்து நீடித்த உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். பெரும்பாலான பெண்கள் தங்களால் பொருளாதாரரீதியாக அணுகக்கூடிய சேவைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். போதிய நிதி ஒதுக்கப்படாத பொது சுகாதார சேவைகளை நம்ப வேண்டிய நிலை உள்ளது. மேலும், இது போன்ற அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்ளும் பல பெண்களுக்கு முழுமையான தகவல்களின் அடிப்படையில் தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் அல்லது வாய்ப்பு இருப்பதில்லை. சமூக இனப்பெருக்க  மற்றும் சமூக உற்பத்தி (social production) செயல்முறைகளில் அவர்கள் பின்தங்கிய நிலையில் இருப்பதால், இது போன்ற நடைமுறைகளுக்கு ஏற்ப செயல்படும்  பெண்களுக்குத் தெளிவான புரிதலுடன் கூடிய முடிவை எடுப்பதற்கான அதிகாரம் இருப்பதில்லை.



தன்னிச்சையாக முடிவு எடுக்கும் இனப்பெருக்க அதிகாரத்தை நோக்கி


தேசிய குடும்ப நல ஆய்வு-6-வது,  தரவுகளின் பகுப்பாய்வானது, இந்தியாவில் கருத்தடை என்பது இனி வெறும் பிறப்புகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் கருவியாக மட்டுமல்ல. சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மைகளை கடந்து பெண்களுக்கு இனப்பெருக்க உரிமை மற்றும் முடிவெடுக்கும் அதிகாரத்தை (Reproductive Agency) வழங்கும் ஒரு வழிமுறையாக மாறியுள்ளது என்பதை காட்டுகிறது.


இது பகுப்பாய்விலிருந்து மூன்று கட்டாய கொள்கைகள் உருவாகின்றன. முதலாவதாக, சிறுமிகளைப் பள்ளியில் தக்கவைத்துக்கொள்வதன் மூலமும், குழந்தை திருமணத் தடைச் சட்டத்தை முழுமையாகச் செயல்படுத்துவதன் மூலமும், சிறுமிகளுக்கான கிராமப்புற இடைநிலைக் கல்வியில் முதலீடு செய்வதன் மூலமும், குழந்தைத் திருமணத்தை ஒரு இனப்பெருக்க சுகாதார நெருக்கடியாகக் கருதி அதற்குத் தீர்வு காணப்பட வேண்டும். இரண்டாவதாக,நிரந்தரமான மற்றும் நீடித்துப் பயன்பட முடியாத கருத்தடை முறைகளிலிருந்து கொள்கைகள் விலகி, மாற்றிக்கொள்ளக்கூடிய அறிவியல் அடிப்படையிலான கருத்தடை முறைகளுக்கான அணுகலை அதிகரிக்க வேண்டும். இதற்காக சமூக அடிப்படையிலான பொது சுகாதார சேவைகளை வலுப்படுத்த வேண்டும். மூன்றாவதாக, கருத்தடையில் காணப்படும் பாலின ஏற்றத்தாழ்வைக் குறைப்பது கொள்கையின் முக்கிய செயல்திட்ட முன்னுரிமையாக மாற வேண்டும்.


நிலையான மக்கள்தொகை மாற்றம் (Demographic Transition) பெண்களின் இனப்பெருக்கம்  தொடர்பாக தன்னிச்சையாக முடிவு எடுக்கும் அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.


original article : Contraceptive use in India and the weight women still carry: insights from NFHS-6. -Trishna Sarkar, C. Saratchand

Share: