உண்மையில், மின்சார வாகனங்கள் (Electric vehicles (EVs)) இந்தியாவின் உலகளாவிய பாதிப்புகளைக் குறைக்கின்றன. அதே, சமயம் புதைபடிவ எரிபொருள் வாகனங்கள் அவற்றை அதிகரிக்கின்றன. ஏன்? ஏனென்றால், மின்கலன்களும் (batteries) காந்தங்களும் நுகர்வுப் பொருட்கள் அல்ல, அவற்றின் இறக்குமதி நிறுத்தப்பட்டாலும், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள மின்சார வாகனங்கள் தொடர்ந்து இயங்கும்.
மாசுபாடு உயிர்களைக் கொல்லும். ஒரு ஆற்றல்மிக்க, முற்போக்கான சமூகம் என்ற இந்தியாவின் பெயருக்கு இது தீங்கு விளைவிக்கிறது. மேலும், வாகன மாசுபாட்டைப் பொறுத்தவரை, வசதி படைத்தவர்கள் அதிகமாக மாசுபடுத்துகிறார்கள். அதே, சமயம் வசதி குறைவாக உள்ளவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். வருவாய் இழப்புகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களுக்கு மாறுவதால் ஏற்படும் செலவுச் சுமை குறித்த அச்சத்தின் காரணமாக, புதைபடிவ எரிபொருள் வாகனங்களைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட கொள்கைகளை வாகனத் தொழில்துறை வரலாற்றுரீதியாக எதிர்க்கும் போக்கைக் கொண்டுள்ளது. தொழில்நுட்பத்தில் முக்கியத்துவம் பெற்ற புதிய போட்டியாளர்கள் குறித்த அச்சமும் மற்றொரு காரணியாக இருக்கலாம்.
நாம் இப்போதே மாறினாலும் சரி அல்லது இன்னும் 10 ஆண்டுகள் கழித்து மாறினாலும் சரி, இது போன்ற சவால்கள் தொடர்ந்து நிலவிக் கொண்டே இருக்கும். எனவே, "அரசு எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்?" என்ற கேள்வியை கொள்கை வகுப்பாளர்கள் எழுப்ப வேண்டும். 2028-ஆம் ஆண்டிற்குள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை மின்சார வாகனங்களாக (EVs) மாற்றுவதற்கான ஒரு விரிவான கொள்கையை அரசு உருவாக்கி அதை செயல்படுத்த வேண்டிய நேரம் இது. அதேவேளையில், நாடு முழுவதும் உள்ள வாகன நிறுத்துமிடங்கள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் தேவையான மின்னேற்று நிலையங்களை (charging points) அமைப்பதற்கான திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும்.
இது போன்ற கொள்கை இந்தியாவை சீனாவைச் சார்ந்திருக்கச் செய்யும் என்ற நம்பிக்கை முற்றிலும் தவறானது. முதலாவதாக, இந்தியா இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கான ஒரு பெரிய சந்தையாகும்.
இரண்டாவதாக, உண்மையில் மின்சார வாகனங்கள் இந்தியாவின் உலகளாவிய பாதிப்புகளைக் குறைக்கின்றன, அதேசமயம் புதைபடிவ எரிபொருள் வாகனங்கள் அவற்றை அதிகரிக்கின்றன. ஏன்? ஏனெனில், மின்கலன்களும் காந்தங்களும் நுகர்வுப் பொருட்கள் அல்ல; அவற்றின் இறக்குமதி நிறுத்தப்பட்டாலும், ஏற்கனவே சாலையில் உள்ள மின்சார வாகனங்கள் தொடர்ந்து இயங்கும். புதைபடிவ எரிபொருளில் இயங்கும் வாகனங்களுக்கு இது பொருந்தாது.
மூன்றாவதாக, பெட்ரோலியக் கையிருப்பை பராமரிப்பதற்கான ஒரு வழிமுறை இந்தியாவிடம் உள்ளது. அதேபோன்று அரிய வகை தனிமங்கள் மற்றும் முக்கிய தனிமங்களை கையாள ஒரு அமைப்பை உருவாக்க முடியும். உண்மையில், இந்தியாவின் தேசிய முக்கிய தனிமத் திட்டம் (National Critical Mineral Mission) இதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. முக்கிய தனிமங்கள் மற்றும் அரிய தனிமங்களுக்கான அணுகலை மேம்படுத்துவதற்கான தனது முயற்சிகளை இந்திய அரசு 2026-27-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் முன்னிலைப்படுத்தியது. இந்த முயற்சிகள் வெற்றிபெற உள்நாட்டுத் தேவை முக்கியமானதாகும்.
புதைபடிவ எரிபொருளில் இயங்கும் வாகனங்களைப் பழுதுபார்த்தல் மற்றும் பராமரித்தல் தொடர்பான வேலை இழப்புகள் ஏற்படக்கூடும் என்பது மற்றொரு கவலையாகும். 2028-ஆம் ஆண்டிற்கு பிறகு புதிய வாகனங்களின் பதிவை நிறுத்த அரசாங்கம் ஒரு முன்மொழிவை வெளியிட்டுள்ளது. பழைய வாகனங்கள் அனைத்தும் தொடர்ந்து இது போன்ற விசைப்பொறியாளர்களின் சேவை தேவைப்படும். புதிய மின்சார வாகனங்களும் (EVs) பிற சேவைகள் சார்ந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கும். வங்கித்துறையில் கணினிமயமாக்கல் அறிமுகமானபோது எழுந்த கவலைகள் உங்களுக்கு நினைவிருக்கிறதா?
அரசு மானியங்கள் வழங்கப்பட்ட போதிலும், மின்சார வாகனங்கள் அதிக விலை கொண்டவை என்றும், அதனால் வாகனங்களை விற்பனை செய்யும் பணியாளர்கள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் இருசக்கர, மூன்று சக்கர வாகனங்களைச் சார்ந்திருப்பவர்கள் அதிக பணம் செலுத்த நேரிடும் என்றும் சில சமயங்களில் வாதிடப்படுகிறது. இதற்கு மாறாக, CSEP நடத்திய ஆய்வில், மின்சார இருசக்கர வாகனங்களின் வாழ்நாள் செலவுகள், பெட்ரோல் வாகனங்களைவிட கணிசமாகக் குறைவாக இருப்பதும், இந்தத் தொழிலாளர்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவதால் பயனடைவார்கள் என்பதும் தெரியவந்துள்ளது. வாங்கும் செலவு அதிகமாக இருப்பது ஒரு உண்மையான கவலையாக இருந்தால், அரசின் பிணை இல்லாதக் கடன் திட்டங்களில் சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் அதைச் சரிசெய்ய முடியும். கிக் பணிப் பொருளாதாரம் (gig work economy) ஏற்கனவே மின்சார இருசக்கர வாகனங்களை ஏற்றுக்கொண்டுள்ளது.
எந்தவொரு கொள்கை மாற்றமும் பல நிலைகளில் வெற்றியாளர்களையும் தோல்வியாளர்களையும் உருவாக்கும். ஆனால், கற்பனைத்திறன் மிக்க மற்றும் ஒத்துழைப்புடன் கூடிய நடவடிக்கைகள், இரு தரப்பினருக்கும் வெற்றி தரும் தீர்வுகளை உருவாக்க முடியும். இந்திய வாகனத் துறையில், இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் சில நிறுவனங்கள் இடம் பெற்று உள்ளன. மேலும், இந்த நிறுவனங்கள் தொலைநோக்குப் பார்வை கொண்ட மற்றும் தீர்வை நோக்கிய ஒரு திட்டத்தைக் கொண்டுவர முடியும், தற்போதைய சூழலில் ஒரு தீர்வை கண்டிப்பாக கொண்டுவர வேண்டும்.
உள்எரிப்பு இயந்திர (Internal Combustion Engine (ICE)) வாகனங்களிலிருந்து மின்சார வாகனங்களை நோக்கி உற்பத்தி வரிசைகள் மாறுவதால், தொழில்துறைகள் பயன்பாடின்றி போகக்கூடிய சொத்துகள் (stranded assets) என்ற சவாலை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். இதற்காக, அவர்கள் அரசாங்கத்திடம் விரைவுபடுத்தப்பட்ட தேய்மானச் சலுகை (accelerated depreciation) கோரலாம். இந்த சூழலில் சீனாவை அதிகமாக சார்ந்திருப்பது ஒரு கவலையாக இருப்பதால், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான முதலீட்டை தொழில்துறை அதிகரிக்க வேண்டும்.
தொழில்துறை, இடைக்கால கையிருப்பு (stockpiling) தீர்வுகளை உருவாக்குவதிலும் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படலாம். சார்ஜிங் வசதிகளை விரிவுபடுத்துவதற்கான புதுமையான யோசனைகளையும் முன்வைக்க வேண்டும். இதில் மின்சாரப் பயன்பாட்டு நிறுவனங்களை கலந்துரையாடலில் ஈடுபடுத்துவது பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், மின்சார வாகனங்களின் வளர்ச்சியால் அவர்கள் அதிக பயனை பெறும் பயனாளர்களாக இருப்பார்கள். மின்கலன் மற்றும் மறுசுழற்சி (recycling) ஆகியவை மற்றொரு முக்கிய சவாலாக உள்ளன. அரசின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க இந்தத்துறை தனது பரந்த அளவிலான கட்டமைப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளப் பல வழிகள் உள்ளன.
இந்தியா மாற வேண்டும். ஆனால், தொழில்துறையும் அரசாங்கமும் இணைந்து செயல்படும், சமூக நலனை மையமாகக் கொண்ட ஒத்துழைப்பு உறவை உருவாக்கும்போது மட்டுமே அந்த மாற்றம் சிறப்பாகவும் நிலையானதாகவும் இருக்கும்.
சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான (Centre for Social and Economic Progress (CSEP)) அமைப்பின் தலைவராக செயல்படுகிறார்.’
original article : Is India ready for a mandatory shift to electric vehicles by 2028? -Laveesh Bhandari