கோவில் நுழைவு ஆதரவாளர் மற்றும் இந்தி திணிப்புக் கொள்கையின் விமர்சகர்: குடியரசுத் தலைவர் மாளிகையில் தற்போது புதிய சிலையோடு கௌரவிக்கப்பட்டுள்ள சி. ராஜகோபாலாச்சாரியின் வரலாறு. -நிகிதா மோஹ்தா

 "ராஜாஜி என்று அழைக்கப்படும் சி. ராஜகோபாலாச்சாரி, மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகிய இருவராலும் மதிக்கப்பட்டவர். காந்தி இவரைத் தனது 'மனசாட்சியின் பாதுகாவலர்' என்றே அழைத்தார். ஒரு ஆங்கிலேயர் காலத்துச் சிலைக்குப் பதிலாக இவரது சிலையை நிறுவுவது, ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா கட்சி முன்னெடுக்கும் கலாச்சார தேசியவாதக் கொள்கைக்கு ஏற்றதாக அமைகிறது.


கடந்த திங்கட்கிழமை, பிப்ரவரி மாதம் 23-ஆம் தேதி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் ராஷ்டிரபதி பவனின் மைய முற்றத்தில் இருந்த ஆங்கிலேயக் கட்டிடக் கலைஞர் எட்வின் லுட்யன்ஸின் மார்பளவு சிலைக்குப் பதிலாக, ராஜாஜியின் (சி. ராஜகோபாலாச்சாரி) முழு உருவச் சிலையைத் திறந்து வைத்தார்.


பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த மாற்றத்தை அறிவித்தபோது, ராஜகோபாலாச்சாரி அவர்கள் அதிகாரத்தை ஒரு பதவியாகப் பார்க்காமல், ஒரு சேவையாகக் கருதியவர்களில் ஒருவர் என்றும் பொது வாழ்க்கையில் அவருடைய ஒழுக்கம், சுயக்கட்டுப்பாடு மற்றும் சுதந்திரமான சிந்தனை ஆகியவை இன்றும் நமக்குத் தூண்டுதலாக அமைந்துள்ளன என்றும் புகழாரம் சூட்டினார்.


விடுதலைப் போராட்டத்தில் ஆரம்பகால பங்கு


ராஜாஜி அல்லது சி.ஆர் என்று பிரபலமாக அழைக்கப்படும் சி. ராஜகோபாலாச்சாரி, டிசம்பர் மாதம் 1878-ஆம் ஆண்டில் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தின் (தற்போது தமிழ்நாடு) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தோரப்பள்ளி கிராமத்தில் ஒரு தமிழ் பேசும் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். அவரது பெற்றோர் அவரை 'ராஜன்' என்று அன்புடன் அழைத்தனர். தனது கிராமப் பள்ளியில் ஆரம்பக் கல்வியை முடித்த அவர், 1896-ஆம் ஆண்டில் சட்டம் பயில்வதற்காக மெட்ராஸிற்குச் சென்றார்.


அவரது மெட்ராஸ் (சென்னை) வாழ்க்கை அவருக்கு அரசியல் கருத்துக்களை அறிமுகப்படுத்தியது. 1906-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டிற்குச் சென்ற அவர், பின்னர் 1907-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சூரத் மாநாட்டிலும் கலந்து கொண்டார். 1911-ஆம் ஆண்டில், தனது 32-வது வயதில், சேலம் நகராட்சி மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1916-ஆம் ஆண்டில் அன்னி பெசன்ட்டின் தன்னாட்சி இயக்கத்தில் (Home Rule League) இணைந்து சேலத்தில் ஒரு பிரிவை நிறுவினார். பிறகு ஜூன் 1917-ஆம் ஆண்டில், சேலம் நகராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று அவரது வாழ்க்கை வரலாற்றாசிரியர் ராஜ்மோகன் காந்தி தனது ‘Rajaji: A Life’ (1997) புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.


ஜனவரி மாதம் 1919-ஆம் ஆண்டில், சி.ஆர் (ராஜாஜி) சேலம் நகரம் தனது பொது வாழ்க்கைக்கு ஏற்றதாக இல்லை என்று உணர்ந்ததால் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு, மகாத்மா காந்தி சென்னைக்கு வருகை தந்தபோது, அவரை சி.ஆர் சந்தித்தார்.


வெள்ளையனே வெளியேறு இயக்கம் மற்றும் சிஆர் திட்டம் (CR Formula)


மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான சி. ராஜகோபாலாச்சாரி, 1919-ஆம் ஆண்டு நடைபெற்ற ரௌலட் சத்தியாக்கிரகத்தை (Rowlatt Satyagraha) ஆதரித்தார். அதற்கு அடுத்த ஆண்டே, தமிழ்நாட்டில் ஒத்துழையாமை இயக்கத்திற்குத் தலைமை தாங்கிய அவர், தனது வெற்றிகரமான வழக்கறிஞர் பணியைக் கைவிட்டுவிட்டு முழுமையாக இப்போராட்டத்தில் இறங்கினார். மேலும், தேர்தல்கள், பள்ளிகள், அரசுப் பணிகள் மற்றும் அரசுப் பட்டங்களைப் புறக்கணித்து இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றார்.


1930-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், திருச்சியிலிருந்து தஞ்சை கடற்கரையில் உள்ள வேதாரண்யம் வரை நடைபயணமாகச் சென்று உப்பு சத்தியாகிரகத்தின் தென்னிந்தியப் போராட்டத்தை வழிநடத்தினார். பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்தியதற்காகக் கைது செய்யப்பட்ட அவர், சிறிது காலத்திற்குப் பின் விடுவிக்கப்பட்டார். ஆனால், "நன்னடத்தைக்கான" உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட மறுத்ததால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 1931-ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்ட அவர், 1932-ஆம் ஆண்டில் சத்தியாகிரக துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததற்காக மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.


இராஜகோபாலாச்சாரி கருத்து வேறுபாடுகளைக் கண்டு ஒருபோதும் அஞ்சவில்லை. 1942-ஆம் ஆண்டு நடைபெற்ற 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின் போது, அவர் காந்தியடிகளுடன் பகிரங்கமாக மாறுபட்டார். "வெறும் காங்கிரஸின் கோஷத்திற்காக மட்டுமே ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் துளிக்கூட உண்மையில்லை என்று அவர் கூறினார். மாறாக, இந்தியாவிற்கு விடுதலை கிடைக்க காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் இடையே ஒரு சுமுகமான உடன்பாடு ஏற்படுவதே "திறவுகோல்" (Golden Key) போன்ற மிகச்சிறந்த வழியாக அமையும் என்று அவர் வாதிட்டார்.


காந்தி ஒற்றுமையை ஒரு உன்னதமான குறிக்கோளாக ஏற்றுக்கொண்டார், ஆனால் ராஜாஜியின் முன்மொழிவு முற்றிலும் இயற்கைக்கு மாறானது என்று அவர் கூறினார்; மேலும், பத்திரிகைகளில் இனி இது குறித்து விவாதங்கள் ஏதும் இருக்காது என்றும் அவர் பின்னர் எழுதினார்.


அடுத்தடுத்த வாரங்களில், சி. ராஜகோபாலாச்சாரி காங்கிரஸுக்கும் முஸ்லிம் லீக்கிற்கும் இடையிலான ஒரு ஒப்பந்த முன்மொழிவை காந்தியிடம் சமர்ப்பித்தார். இது பின்னநாட்களில் 'ராஜாஜி திட்டம்' (Rajaji formula) என்று அழைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொள்வதாக காந்தி தெரிவித்தார்.


இந்தத் திட்டத்தின்படி, இந்திய தேசிய காங்கிரஸ் பாகிஸ்தான் உருவாக்கம் குறித்த பொதுவாக்கெடுப்பிற்கு ஒப்புக்கொண்டால், அதற்கேற்ப ஒரு தற்காலிக தேசிய அரசாங்கத்தை அமைக்க அகில இந்திய முஸ்லிம் லீக் காங்கிரஸுடன் இணைந்து செயல்பட வேண்டும். ஆங்கிலேய அரசு அதிகாரத்தை மாற்றிய பிறகு, இந்தியாவின் வடமேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் புவியியல்ரீதியாக இணைக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்களில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்படும். ஒருவேளை பிரிவினை ஏற்படும் பட்சத்தில், பாதுகாப்பு, வர்த்தகம், தகவல் தொடர்பு மற்றும் இதர முக்கிய விவகாரங்களைப் பாதுகாப்பதற்கு இரு தரப்பினரும் ஒப்பந்தங்களைச் செய்துகொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது. 


1944-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், மகாத்மா காந்தி தனது பாகிஸ்தான் திட்டத்தை ஏற்றுக்கொண்டதாக ராஜாஜி முகமது அலி ஜின்னாவிடம் தெரிவித்தார். ஜின்னா அந்த ஆவணத்தைப் பரிசீலித்தபோது, ராஜாஜி ஒரு நேர்மறையான பதிலுக்காகக் காத்திருந்தார், ஆனால் அது கிடைக்கவில்லை. ராஜாஜியின் பாகிஸ்தான் திட்டம் முஸ்லிம் லீக் கோரியதைவிட சிறியதாக இருப்பதையும், அது பொது வாக்கெடுப்பு மற்றும் பிரிவினை ஒப்பந்தத்தைச் சார்ந்திருப்பதையும் ஜின்னா விரைவில் உணர்ந்து கொண்டார். இறுதியில், "உங்களுடைய இந்தத் திட்டம் எனக்கு திருப்தி அளிக்கவில்லை" என்று ஜின்னா ராஜாஜியிடம் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.


இந்தி மொழித் திணிப்பு மற்றும் கோவில் நுழைவு ஆகிய விவகாரங்களில் இராசகோபாலாச்சாரியாரின் நிலைப்பாடு


ராஜாஜி இந்தி மொழி தொடர்பான தனது அணுகுமுறையை ஒரு எளிய உதாரணத்தின் மூலம் விளக்கினார். 1938-ஆம் ஆண்டில் முதலமைச்சராக உயர்நிலைப் பள்ளிகளில் இந்தியை அறிமுகப்படுத்தியபோது, அது "இலையில் வைக்கப்பட்ட துவையல்" (chutney on a leaf) போன்றது என்று அவர் குறிப்பிட்டார்; அதாவது, மாணவர்கள் அதை சுவைக்கலாம் அல்லது அப்படியே விட்டுவிடலாம். மார்ச் 1938-ஆம் ஆண்டில், 6, 7 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு இந்தியை அவர் கட்டாயமாக்கினாலும், இந்தி பாடத்தில் தேர்ச்சி பெறாததற்காக மாணவர்கள் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்படமாட்டார்கள் அல்லது அடுத்த வகுப்பிற்குச் செல்ல தடை விதிக்கப்பட மாட்டாது என்று தெளிவுபடுத்தினார். இவ்வளவு சலுகைகள் இருந்தபோதிலும், இந்தத் திட்டம் சென்னை மாகாணத்தில் மிகப்பெரிய போராட்டங்களுக்கு வழிவகுத்தது.


பின்னர், குறிப்பாக 1965-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின் போது, இந்தியை ஒரே ஆட்சிமொழியாக்குவதை அவர் உறுதியாக எதிர்த்தார். வசந்தி சீனிவாசன் தனது (Gandhi’s Conscience Keeper (2009) என்ற புத்தகத்தில், இந்தியை ஒரு ஏழ்மையான மற்றும் வளர்ச்சியடையாத மொழி என்றும், அது ஒரு 'ஆக்கிரமிப்பாளரின் மொழி' என்றும் அவர் விமர்சித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆட்சிமொழியாகத் திறம்படச் செயல்பட்டுவரும் ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தி வரக்கூடாது என்றும் அவர் கருதினார். அவரது எழுத்துக்கள் இந்தி மொழியின்மீது வெறுப்பைக் காட்டவில்லை, மாறாகப் பெரும்பான்மை அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த மொழியை மக்கள்மீது திணிப்பதையே அவர் எதிர்த்தார் என்று அந்த நூலாசிரியர் விளக்கியுள்ளார்.


சி. ராஜகோபாலாச்சாரி (CR), ஒடுக்கப்பட்ட சாதியினர் கோவிலுக்குள் நுழைவதை தீவிரமாக ஆதரித்தார்; குறிப்பாக ஆகஸ்ட் 1938-ஆம் ஆண்டில் சமூகப் பாகுபாடுகளை நீக்குவதற்காக எம். சி. ராஜா ஒரு மசோதாவைக் கொண்டு வந்தபோது, மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த ராஜகோபாலாச்சாரி அதனை முழுமையாக ஆதரித்தார். இந்தச் சட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு, கிணறுகளைப் பயன்படுத்துதல், பொது வசதிகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சேருதல் ஆகியவற்றில் பாகுபாடு காட்டுவது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டது.


கோவில்களுக்குள் ஒடுக்கப்பட்ட சாதியினர் நுழைவதற்கு பெரும்பாலான வழிபாட்டாளர்கள் சம்மதித்தால், அதற்கு ஆதரவளிப்பதாக ராஜாஜி, எம்.சி. ராஜாவிடம் வாக்குறுதி அளித்திருந்தார். இருப்பினும், பின்னர் அவர் இந்தத் திட்டத்தை மலபார் மாவட்டத்திற்கு மட்டுமே என்று தெரிவித்தார். இந்தித் திணிப்பு விவகாரத்தில் ஏற்கனவே விமர்சனங்களைச் சந்தித்து வந்த ராஜாஜி, பழமைவாதக் குழுக்களின் கோபத்திற்கு ஆளாகாமல் இருக்க இந்த எச்சரிக்கை நடவடிக்கையை எடுத்திருக்கலாம் என்று ராஜ்மோகன் காந்தி குறிப்பிடுகிறார். இதனால் ஏமாற்றமடைந்த எம்.சி. ராஜா, தான் வஞ்சிக்கப்பட்டதாகக் கூறினாலும், கடும் எதிர்ப்புகளுக்கு இடையே செப்டம்பர் 1938-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட மலபார் கோவில் நுழைவு  மசோதாவைத் தொடர்ந்து ஆதரித்தார்.


மதுரையில் ஏற்பட்ட ஒரு முக்கிய வளர்ச்சி சி.ராஜகோபாலாச்சாரியாரை  மேலும் ஒரு படி முன்னோக்கி நகர்த்தியது. புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலின் பெரும்பாலான அறங்காவலர்களும் அர்ச்சகர்களும் ஒடுக்கப்பட்ட சாதியினரை உள்ளே அனுமதிக்க விரும்பினாலும், மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அஞ்சினர். ஆனால், அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டால் எட்டு நாட்களுக்குள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றுவதாக ராஜகோபாலாச்சாரியார் வாக்குறுதி அளித்தார். அதன்படி, ஜூலை மாதம் 8, 1939-ஆம் தேதி, அவரது நண்பர் வைத்தியநாத ஐயர் ஒடுக்கப்பட்ட மக்கள் குழுவை கோவிலுக்குள் அழைத்துச் சென்றார், அதிகாரிகளும் அவர்களை உள்ளே நுழைய அனுமதித்தனர்.


இந்தச் செய்தியை மெட்ராஸில் கேள்விப்பட்ட ராஜாஜி மகிழ்ச்சியடைந்தார் என்றும், அன்றிரவு அவர் உறங்கவே இல்லை என்றும் ராஜ்மோகன் காந்தி குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், மற்றவர்கள் இதற்கு எதிர்மறையாகவே எதிர்வினை ஆற்றினர். குறிப்பாக, கோயிலின் நிர்வாக அதிகாரி மீது குற்றவியல் வழக்கு தொடரப்பட்டதோடு, சிலர் கோயில் புனிதப்படுத்தும் சடங்கைச் செய்ய வேண்டும் என்றும் கோரினர். இதனைத் தொடர்ந்து, உடனடியாக 'கோவில் நுழைவு அங்கீகாரம் மற்றும் இழப்பீட்டு மசோதா (1939)' (Temple Entry Authorisation and Indemnity Bill (1939)) வரைவு செய்யப்பட்டது, மேலும் அரசின் ஒப்புதலுடன் கோயில்களைத் திறந்த அல்லது திறக்கவிருக்கும் அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஓர் அவசரச் சட்டமும் பிறப்பிக்கப்பட்டது.


அப்போதே தஞ்சாவூரில் உள்ள அனைத்து 90 கோவில்களும் திறக்கப்பட்டுவிட்டன, குற்றாலம் கோவிலும் தனது கதவுகளைத் திறந்திருந்தது. ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலில் ஒரு பண்டிதர், சாஸ்திரங்கள் கோவில் நுழைவை அனுமதிக்கவில்லை என்று வாதிட்டபோது, அதற்கு ராஜாஜி, சாஸ்திரங்கள் ஒரு எல்லையற்ற கடல் போன்றவை என்றும் அதிலிருந்து முத்துக்களையும் பவளங்களையும் எடுக்க முடியும், அதேசமயம் சேற்றையும் சுறாக்களையும் கூட எடுக்க முடியும் என்று அதற்கு பதிலடி கொடுத்தார்.


ராஜாஜியின் சுதந்திராக் கட்சி


ஜவஹர்லால் நேருவின் அமைச்சரவையில் 1950-ஆம் ஆண்டு முதல் 1951-ஆம் ஆண்டு வரை ராஜாஜி உள்துறை அமைச்சராகப் பணியாற்றினார். ஆனால், 1950-களின் நடுப்பகுதியில், காங்கிரஸ் கட்சி அதிகப்படியான அரசு கட்டுப்பாடு மற்றும் அதிகாரக் குவிப்புக் கொள்கைகளைப் பின்பற்றுவதாக அவர் கருதினார்; இதனால் அக்கட்சியின் ஆதிக்கம் ஜனநாயகத்தை பலவீனப்படுத்திவிடுமோ என்று அவர் கவலைப்படத் தொடங்கினார்.


இராஜஜியின் பார்வையில், காங்கிரஸின் அரசு ஆதிக்கப் போக்கை  சரிசெய்யக்கூடிய ஒரு "தடை" போன்று செயல்படும் கட்சிதான் எதிர்க்கட்சியாக இருக்கவேண்டும். டெல்லியில் ஆளும் கட்சிக்கு உண்மையான ஜனநாயக சமநிலையை ஒரு பழமைவாதக் கட்சியால் மட்டுமே வழங்க முடியும் என்று அவர் வாதிட்டார். இதன் விளைவாக, ஆகஸ்ட் 1959-ஆம் ஆண்டில் சுதந்திரா கட்சி (Freedom Party) தொடங்கப்பட்டது, இருப்பினும் ராஜாஜி இதனை ஒரு பழமைவாதக் கட்சி என்று அழைப்பதைவிட 'அரசியலமைப்பு சார்ந்த கட்சி' (constitutional party) என்று அழைக்கவே விரும்பினார்.


இந்தக் கட்சி, சுதந்திரத் தொழில்முயற்சிகளுக்கான மன்றம் (1956) மற்றும் அகில இந்திய விவசாயிகளின் கூட்டமைப்பு (1958) ஆகியவற்றிலிருந்து உருவானது. இது தடையற்ற பொருளாதாரக் கொள்கையை ஆதரித்தபோதிலும், 19-ஆம் நூற்றாண்டின் கட்டுப்பாடற்ற முதலாளித்துவ முறையை (Laissez-faire) நிராகரித்தது. தான் திட்டமிடுதலுக்கு எதிரானவன் அல்ல என்றும், சோவியத் பாணியிலான கட்டாயப்படுத்தப்பட்ட திட்டமிடலை மட்டுமே எதிர்ப்பதாகவும் கூறிய ராஜாஜி, அரசுடைமைக்கு பதிலாக ஒழுங்குமுறை மற்றும் வழிகாட்டுதல்களை ஆதரிப்பதாக விளக்கினார். இக்கட்சி நவீன தாராளமயக் கருத்துக்களைக் கொண்டிருந்தாலும், நேரு உள்ளிட்ட விமர்சகர்கள் இதனை பிரபுக்கள், கோட்டைகள் மற்றும் ஜமீன்தார்களின் மத்திய காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் கட்சி என்று விமர்சித்தனர்.


ராஜாஜியின் நீடித்த முக்கியத்துவம்


பாரதிய ஜனதா கட்சி இந்திய நகரங்களில் உள்ள பல ஆங்கிலேயர் ஆட்சி கால அடையாளங்களை விமர்சிப்பதோடு அவற்றின் பெயர்களையும் மாற்றி வருகிறது. அந்த வகையில், அதன் கலாச்சார தேசியவாதக் கொள்கைக்கு ஏற்ப, குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்த காலனித்துவ காலச் சிலையை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக சி. ராஜகோபாலாச்சாரியின் சிலையை நிறுவுவது அமைந்துள்ளது.


பல வழிகளில், ராஜாஜியின் சாதனைகள் காலனித்துவ ஆட்சியில் இருந்து இந்தியா விடுதலை பெற்ற மாற்றத்தை பிரதிபலிக்கின்றன. 1935-ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தின்கீழ் காங்கிரஸ் வெற்றி பெற்ற பிறகு அவர் சென்னை மாகாணத்தின் பிரதமரானார். பின்னர் 1948-ஆம் ஆண்டில் மவுண்ட்பேட்டன் பிரபுவைத் தொடர்ந்து கவர்னர் ஜெனரலாகப் பதவியேற்ற அவர், இந்தியா குடியரசாவதற்கு முன்பு அந்த உயரிய பதவியை வகித்த ஒரே இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து 1952-ஆம் ஆண்டு முதல் 1954-ஆம் ஆண்டு வரை சென்னை மாநிலத்தின் முதலமைச்சராகப் பணியாற்றிய ராஜகோபாலாச்சாரி, ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை எளிய முறையில் மறுவடிவம் செய்து தந்ததற்காகவும் இன்றும் போற்றப்படுகிறார்.


நேருவின் சோசலிசக் கொள்கைகளை எதிர்த்தது உட்பட, இன்றைய பாரதிய ஜனதா கட்சியின் சித்தாந்தத்தோடு ஒத்துப்போகக்கூடிய ஒரு பழமைவாத அல்லது நிதானமான அரசியல் தொலைநோக்குப் பார்வையை ராஜாஜி கொண்டிருந்தார் என்கின்றனர். 


மகாத்மா காந்தியால் தனது "மனசாட்சியின் காவலர்" என்று போற்றப்பட்டவரும், ஜவஹர்லால் நேருவின் மதிப்பிற்குரியவருமான ராஜாஜி, 1954-ஆம் ஆண்டு பாரத ரத்னா விருதைப் பெற்றார். பின்னர் 1972-ஆம் ஆண்டில் அவருக்கு அரசு மரியாதைகளுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது. அரசியலில் கொள்கை பிடிப்புடன் கூடிய நெகிழ்வுத்தன்மை சாத்தியமே என்பதற்கு ராஜாஜியின் வாழ்க்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது என்றும் ஸ்ரீனிவாசன் குறிப்பிடுகிறார்.                     

Original tittle :  Proponent of temple entry, critic of Hindi policy: Story of C. Rajagopalachari, with new statue in Rashtrapati Bhavan -Nikita Mohta

Share:

கார்பன் பிடிப்பு மற்றும் பயன்பாட்டுத் தொழில்நுட்பங்கள் என்றால் என்ன? -ஷாம்பவி நாயக்

 இத்தகைய தொழில்நுட்பங்கள் எவ்வாறு கார்பன்-டை-ஆக்சைடு உமிழ்வைக் குறைக்க முடியும்? ஐரோப்பிய ஒன்றியத்தின் உயிர்சார் பொருளாதார உத்தி (EU Bioeconomy Strategy) மற்றும் சுழற்சி பொருளாதார செயல் திட்டம் என்றால் என்ன? மேலும், இந்தியா எவ்வாறு கார்பன் பிடிப்பு மற்றும் பயன்பாடு (CCU) தொழில்நுட்பத்தை பெரிய அளவில் மேம்படுத்த முடியும்?


கார்பன் பிடிப்பு மற்றும் பயன்பாடு (Carbon Capture and Utilisation (CCU)) என்பது தொழிற்சாலைகளில் இருந்தோ அல்லது நேரடியாக காற்றில் இருந்தோ கார்பன்-டை-ஆக்சைடைப் பிடித்து, அவற்றை உபயோகமான பொருட்களாக மாற்றும் தொழில்நுட்பங்களின் தொகுப்பாகும். இது வளிமண்டலத்தில் உள்ள கார்பனை அகற்றி, அதை எரிபொருட்கள், ரசாயனங்கள், கட்டுமானப் பொருட்கள் அல்லது பாலிமர்கள் போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்துகிறது. பிடிபட்ட கார்பன் டை ஆக்சைடை நிலத்தடியில் நிரந்தரமாகச் சேமித்து வைக்கும் 'கார்பன் பிடிப்பு மற்றும் சேமிப்பு' (CCS) முறையைப் போலல்லாமல், கார்பன் பிடிப்பு மற்றும் பயன்பாடு தொழில்நுட்பம் அந்த கார்பனைச் சேமிப்பதற்குப் பதிலாக மீண்டும் பயனுள்ள முறையில் பயன்படுத்துகிறது.




இந்தியாவுக்கு ஏன் கார்பன் பிடிப்பு மற்றும் பயன்பாடு தொழில்நுட்பம் தேவைப்படுகிறது?


இந்தியா உலகளவில் கார்பன்-டை-ஆக்சைடு (CO₂) வெளியேற்றத்தில் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் மின் உற்பத்தி மற்றும் சிமெண்ட், எஃகு, ரசாயனம் போன்ற தொழில்துறைகளே ஆகும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வருங்கால உமிழ்வைக் குறைக்க உதவினாலும், பல தொழில்முறைச் செயல்பாடுகள் இயற்கையாகவே அதிக கார்பனை வெளியேற்றுபவையாகவும், அவற்றை மாற்றுவது கடினமாகவும் உள்ளன. இத்தகைய சவாலான துறைகளில் இருந்து வெளியேறும் கார்பனைப் பிடித்துப் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பம் (Carbon Capture and Utilisation - CCU), உமிழ்வைக் குறைப்பதோடு புதிய தொழில்முறை வாய்ப்புகளையும் உருவாக்குகிறது. இது 2070-ஆம் ஆண்டுக்குள் 'நிகர பூஜ்ஜிய' (Net-Zero) உமிழ்வு இலக்கை அடையவும், சுழற்சி முறையிலான குறைந்த கார்பன் பொருளாதாரத்தை உருவாக்கவும் இந்தியாவின் முயற்சிகளுக்குப் பெரும் துணையாக அமைகிறது.


இன்று இந்தியா எந்த நிலையில் உள்ளது?


இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஆராய்ச்சி நிதியுதவி மற்றும் இதற்கான பிரத்யேக மேம்பாட்டுத் திட்டவரைவு மூலம் இந்தியா கார்பன் பிடிப்பு மற்றும் பயன்பாட்டிற்கு (CCU) ஆதரவளிக்கத் தொடங்கியுள்ளது. அதேபோல், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் 2030-ஆம் ஆண்டிற்கான கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு (Carbon Capture, Utilisation and Storage (CCUS)) வரைவுத் திட்டத்தை வெளியிட்டு, அதற்குப் பொருத்தமான திட்டங்களைக் கண்டறிந்து வருகிறது. தனியார்துறையில், அம்புஜா சிமெண்ட்ஸ் (அதானி குழுமம்) IIT பாம்பே உடன் இணைந்து பிடிபடும் CO₂-வை எரிபொருளாகவும் மற்ற பொருட்களாகவும் மாற்றும் இந்திய-ஸ்வீடிஷ் முன்னோடித் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது, அதே நேரத்தில் ஜே.கே. சிமெண்ட் நிறுவனம் (JK Cement), கார்பன்-டை-ஆக்சைடை (CO₂) சேகரித்து, அதை இலகுரக கான்கிரீட் கற்கள் மற்றும் ஓலிஃபின்கள் (olefins) தயாரிப்பதற்கு பயன்படுத்துவதற்காக ஒரு பரிசோதனை மையத்தை உருவாக்கி வருகிறது. அதேவேளையில் சிமெண்ட் துறையைத் தாண்டி, Organic Recycling Systems Limited (ORSL) என்கிற நிறுவனம் இந்தியாவின் முதல் 'உயிரி-கார்பன் பிடிப்பு மற்றும் பயன்பாடு' (Bio-CCU) என்கிற முன்னோடித் திட்டத்தை

முன்னெடுத்து, உயிரி எரிவாயுவிலிருந்து வெளிப்படும் கார்பன்-டை-ஆக்சைடை உயிரி-ஆல்கஹால்கள் மற்றும் சிறப்பு ரசாயனங்களாக மாற்றி பல புதிய தொழில்நுட்பப் பயன்பாடுகளைக் கண்டறிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 


மற்ற நாடுகள் என்ன செய்கின்றன?


ஐரோப்பிய ஒன்றியத்தின் உயிர்சார் பொருளாதார உத்தி மற்றும் சுழற்சி பொருளாதார செயல் திட்டம் ஆகியவை, கார்பன்-டை-ஆக்ஸைடை ரசாயனங்கள், எரிபொருட்கள் மற்றும் பிற பொருட்களுக்கான மூலப்பொருட்களாக மாற்றும் கார்பன் பிடிப்பு மற்றும் பயன்பாடு முறையை நிலைத்தன்மை இலக்குகளுக்காக ஆதரிக்கின்றன. அதேவேளையில் பெல்ஜியத்தில் உள்ள ஆர்செலர் மிட்டல் (ArcelorMittal) ஆலையில் சேகரிக்கப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடை எஃகு மற்றும் ரசாயன உற்பத்தியில் பயன்படும் கார்பன் மோனாக்சைடாக மாற்றும் புதிய தொழில்நுட்பத்தை மிட்சுபிஷி (Mitsubishi) மற்றும் டி-கார்பன் (D-CRBN) நிறுவனங்கள் இணைந்து சோதித்து வருகின்றன. மேலும், அமெரிக்கா வரிச்சலுகைகள் மற்றும் நிதியுதவி மூலம் கார்பன் பிடிப்பு மற்றும் பயன்பாடு விரிவாக்கத்தை ஊக்குவிப்பதோடு, ஐக்கிய அரபு அமீரகம் அல் ரேயாதா (Al Reyadah) போன்ற திட்டங்கள் மற்றும் பசுமை ஹைட்ரஜனுடன் இணைந்த ரசாயன மையங்கள் மூலம் இத்துறையில் முன்னேறி வருகிறது.


எதிர்காலத்தில் வரவிருக்கும் அபாயங்கள் யாவை?


இந்தியாவுக்கான கார்பன் பிடிப்பு மற்றும் பயன்பாடு (CCU) தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவதில் உள்ள முதன்மையான சவால் அதன் அதிகப்படியான செலவாகும்; ஏனெனில் காற்றிலிருந்து கார்பன்-டை-ஆக்சைடைப் பிரித்து, தூய்மைப்படுத்தி, மற்ற பொருட்களாக மாற்றுவதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுவதோடு பெரும் செலவும் ஆகிறது. அரசாங்கத்தின் ஊக்கத்தொகை மற்றும் மானியங்கள் இல்லையெனில், இத்தொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் சந்தையில் மலிவான விலையில் கிடைக்கும் நிலக்கரி போன்ற படிம எரிபொருள் சார்ந்த பொருட்களுடன் விற்பனைச் சந்தையில் போட்டியிடுவது கடினம் என்கின்றனர். அத்துடன், தொழிற்சாலைகள் அனைத்தும் அருகருகே அமைந்திருப்பது, கார்பன்-டை-ஆக்சைடை கொண்டு செல்வதற்கான முறையான போக்குவரத்து வசதிகள் மற்றும் உற்பத்தித் துறையுடனான இணைப்பு போன்ற கட்டமைப்பு வசதிகள் இந்தியாவின் அனைத்துத் தொழில் மண்டலங்களிலும் சமமாக வளர்ச்சி அடையவில்லை என்பதும் ஒரு பெரிய தடையாககச் சுட்டிக்காட்டப்படுகிறது. இறுதியாக, இத்துறைக்கான முறையான தரநிலைகள், சான்றிதழ்கள் மற்றும் தெளிவான சந்தை வழிகாட்டுதல்கள் இல்லாததால், முதலீட்டாளர்கள் இதில் முதலீடு செய்யத் தயங்குகின்றனர், இது கார்பன் சார்ந்த பொருட்களுக்கான தேவையையும் குறைப்பதாகக் கூறப்படுகிறது. 


கார்பன் பிடிப்பு மற்றும் பயன்பாட்டிற்கான (CCU) திட்ட வரைபடங்களை உருவாக்கியதன் மூலம் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. மேலும், அதன் இலக்குகளை அடைவதற்கு அவற்றைச் சரியாகச் செயல்படுத்துவது அவசியமாகிறது.


சாம்பவி நாயக், தக்ஷஷிலா நிறுவனத்தின் ஆரோக்கியம் மற்றும் உயிரியல் அறிவியல் கொள்கை துறையின் தலைவர் ஆவார்.


Original tittle :  What are carbon capture and utilisation technologies? -Shambhavi Naik

Share:

வெளிநாட்டில் இருக்கும் திறமையாளர்களை ஈர்த்தல் -தீபன்ஷு மோகன்

 H-1B நுழைவுஇசைவு (விசா) முறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், ஒருவேளை நகரங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் சமூக மற்றும் ஆராய்ச்சி ஆதரவு அமைப்புகளை மேம்படுத்தினால், அது புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்கின்றனர். இதன்மூலம் வெளிநாடுகளிலிருந்து தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பும் நிபுணர்களை ஈர்க்கவும், அவர்களை அங்கேயே தக்கவைத்துக் கொள்ளவும் முடியும் என்றும் தெரிவிக்கின்றனர். 


2025-ஆம் ஆண்டில் H-1B நுழைவு இசைவு (விசா) கட்டணங்கள் உயர்த்தப்பட்டு, புதிய விண்ணப்பங்களுக்கு ஒருமுறை கட்டணமாக $1,00,000 வசூலிக்கப்பட்டபோது, அது அமெரிக்காவில் உள்ள இளம் இந்தியப் பொறியாளர்களை கவலையடையச் செய்தது மட்டுமல்லாமல், திறமையான தொழிலாளர்கள் அமெரிக்காவில் தங்கள் வாழ்க்கையைத் தொடர்வதற்கான செலவைப் பற்றிய கவலையை ஏற்படுத்தியது. மேலும், இந்த அதீத கட்டண உயர்வானது, நிறுவனங்களையும் தங்களுக்குத் தேவையான திறமைசாலிகளை எங்கிருந்து பணியமர்த்துவது மற்றும் அவர்களை எவ்வாறு தக்கவைத்துக்கொள்வது என்பது குறித்து மீண்டும் யோசிக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது. 


டிரம்ப் நிர்வாகத்தின்கீழ் ஏற்பட்ட கொள்கை மாற்றங்கள், இந்தியா தனது உலகளாவிய திறமையாளர்களை 'சுதேசி' சிந்தனையுடன் தாயகத்தில் முதலீடு செய்ய ஊக்குவித்துக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் வந்துள்ளன. இருப்பினும், கடந்த பத்தாண்டுகளில் அரசின் முயற்சிகள் இருந்தபோதிலும், இந்தியாவில் உள்ளூர் தனியார் முதலீடு பலவீனமாகவே இருந்ததால் இது சவாலான ஒன்றாக அமைந்தது. சமீபகாலமாக, இந்தியாவிலிருந்து உலகளாவிய திறமைக்கான அணுகல் (Global Access to Talent from India (GATI), மின்னணு புலம்பெயர்வு-2.0 (eMigrate V2.0), வருகை தரும் மேம்பட்ட கூட்டு ஆராய்ச்சி ஆசிரியத் திட்டம் (Visiting Advanced Joint Research Faculty Scheme (VAJRA)) மற்றும் இந்தியாவை அறிவோம் திட்டம் (Know India Programme) போன்ற திட்டங்கள் மூலம் வெளிநாட்டுவாழ் இந்தியர்களை மீண்டும் சொந்த நாட்டுடன் இணைக்க அரசு முறையான முயற்சிகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, உலகளவில் நுழைவுஇசைவு (விசா) விதிமுறைகள் நிச்சயமற்றதாக மாறிவரும் நிலையில், வெளிநாடுகளில் உள்ள வல்லுநர்கள் இந்தியாவுக்குத் திரும்பி இங்கு முதலீடு செய்யவேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


மாநில அளவிலான அனுபவங்கள்


இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒரு விசித்திரமான முரண்பாடு நிலவுகிறது: அவை சிறந்த புத்தாக்கத் தொழில் (Start-Up) நிறுவனங்களுக்கான மையங்களாகத் திகழ்ந்தாலும், வெளிநாடுகளிலிருந்து திரும்பும் குடும்பங்கள் அங்கு வாழ்வது கடினமாக உள்ளது. மகாராஷ்டிரா நாட்டின் மிகப்பெரிய புத்தாக்க தொழில் (Start-Up) நிறுவனங்களுக்கான  மண்டலமாகத் திகழ்வதோடு, 2025-ஆம் ஆண்டிற்கான புதிய தொழில்முனைவோர் கொள்கையையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், வீட்டுவசதி மானியம் இல்லாமை, பள்ளிகளில் இட உத்திரவாதம் மற்றும் வாழ்க்கைத் துணைகளுக்கான வேலைவாய்ப்பு ஆதரவு குறைவு போன்ற காரணங்களால் குடும்பங்கள் அங்கு குடியேறுவதற்கான செலவு மிக அதிகமாக உள்ளது. இது தொழில்துறை செலவுகள் குறைவு என்ற சாதகத்தை மறைத்து, நெரிசலான மற்றும் விலையுயர்ந்த அந்த நகரங்களை வசதிபடைத்தவர்களுக்கான மட்டுமேயான இடமாக மாற்றுகிறது. டெல்லியைப் பொறுத்தவரை, அங்குள்ள அரசு நிறுவனங்கள், தேசிய ஆய்வகங்கள் மற்றும் அமைச்சகங்களின் செல்வாக்கு வெளிநாட்டிலிருந்து திரும்புவோரை ஈர்க்கிறது, ஆனால் அதிக வீட்டு வாடகை மற்றும் கல்வி நிறுவனங்களில் உள்ள வலுவான தொடர்புகள் காரணமாக, ஏற்கனவே செல்வாக்கு மிக்கவர்களுக்கே டெல்லி முன்னுரிமை அளிக்கிறது. கர்நாடகா மாநிலம் தனது 'பெங்களூருக்கு அப்பால்' (Beyond Bengaluru) திட்டத்தின் மூலம் மைசூர் மற்றும் மங்களூரு போன்ற நகரங்களில் வளர்ச்சியைப் பரப்ப முயன்றாலும், அங்கு போதிய உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி உள்கட்டமைப்பு, மருத்துவம் மற்றும் கல்வி வசதிகள் இல்லாததால் குடும்பங்களுடன் குடியேறுவதற்கு அந்த இடங்கள் இன்னும் தயார் நிலையில் இல்லை என்கின்றனர். 


இந்த இரண்டு ஆய்வு முடிவுகளும் ஒரு பொதுவான கருத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. முதலாவதாக, மாநில அரசுகள் குடும்பங்களை மீண்டும் குடியேற்றும் கொள்கைகளைவிட, தொழில் காப்பகங்கள் (Incubators), ஆரம்பக்கட்ட நிதியுதவி (Seed funding) மற்றும் உள்கட்டமைப்பு போன்ற நிறுவனரீதியான ஆதரவிற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. இரண்டாவதாக, அதிக ஊதியம் புலம் பெயர்ந்தவர்களை ஈர்த்தாலும், அவர்கள் நீண்டகாலம் அங்கேயே தங்குவது என்பது சமூகத் தொடர்புகள், வாழ்க்கைத் துணைக்கான வேலைவாய்ப்பு மற்றும் தரமான கல்வி ஆகியவற்றையே சார்ந்துள்ளது. இந்தச் சமநிலையின்மை, மாநிலங்கள் நிறுவனங்களை ஈர்க்கப் போட்டியிடுகின்றனவே தவிர, மனிதர்களுக்கான திட்டமிடலைச் செய்வதில்லை என்பதைக் காட்டுகிறது. முறையான இருப்பிடம், கல்வி மற்றும் வாழ்க்கைத் துணைக்கான வேலைவாய்ப்பு வசதிகள் இல்லாததே, வெளிநாட்டிலிருந்து திரும்புபவர்கள் இந்தியாவை நிரந்தரமான இடமாகக் கருதாமல் ஒரு தற்காலிகத் தங்குமிடமாகப் பார்ப்பதற்குக் காரணமாகிறது.


H-1B விசா கொள்கை மாற்றம்


2024-ஆம் நிதியாண்டில் வழங்கப்பட்ட H-1B நுழைவுஇசைவு (விசா) ஒப்புதல்களில் ஏறக்குறைய 71% இந்தியர்களுக்கு கிடைத்துள்ளதால், இந்தத் திட்டத்தில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது; எனவே, அமெரிக்கக் கொள்கைகளில் ஏற்படும் மாற்றங்களால் இந்தியா பெரும் பாதிப்புக்குள்ளாகும் நிலையில் இருக்கிறது. அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகளின் (U.S. Citizenship and Immigration Services (USCIS)) தரவுப்படி, 2024-ஆம் நிதியாண்டில் அங்கீகரிக்கப்பட்ட மொத்தம் 3,99,395 H-1B நுழைவுஇசைவு சீட்டுகளில், 71% இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன, மேலும் இந்த நுழைவுஇசைவு சீட்டுகளைப் பெற்றவர்களில் 46% பேர் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


H-1B நுழைவுஇசைவு (விசா) சீட்டு வைத்திருப்பவர்களின் கல்வித் தகுதி காலப்போக்கில் கணிசமாக மாறியுள்ளது. 2000-ஆம் ஆண்டில் 31%-ஆக இருந்த முதுகலை பட்டதாரிகளின் எண்ணிக்கை 2021-ஆம் ஆண்டில் 57%-ஆக உயர்ந்துள்ளது, அதே சமயம் இளங்கலை பட்டதாரிகளின் எண்ணிக்கை 57%-லிருந்து 34%-ஆகக் குறைந்துள்ளது. செப்டம்பர் 2025-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட கொள்கை மாற்றங்களுக்குப் பிறகு, அமெரிக்கா முன்மொழிந்துள்ள $1,00,000 பதிவுக் கட்டணத்தில் சில விலக்குகளை அறிவித்துள்ளது, குறிப்பாக அமெரிக்காவிலேயே தங்கிப் படிக்கும் F-1 மாணவர்கள் H-1B நுழைவுஇசைவு சீட்டுக்கு (விசா) மாறும்போது இது குறுகியகால நிம்மதியை அளிக்கிறது, ஆனால் வெளிநாடுகளில் இருந்து விண்ணப்பிக்கும் புதிய நபர்களை இந்தக் கொள்கை மாற்றம் பாதிக்கிறது. உயர் பதவிகளுக்கான தலைமை நியமன (BDO Executive Search) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஷிவானி தேசாய் கூறுகையில், ஐவி லீக் (Ivy league) பல்கலைக்கழகங்களில் படிக்கும் இந்திய மாணவர்கள் இந்தியாவில் வேலை தேடுவது இந்த ஆண்டு 30% அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கிறார். அதேசமயம், விசா நிச்சயமற்றத் தன்மையால் அமெரிக்காவில் உள்ள மூத்த இந்திய அதிகாரிகளும் தங்களது நீண்டகாலத் திட்டங்களை மறுபரிசீலனை செய்து வருகின்றனர். இந்தியாவில் தற்போது 1,600-க்கும் மேற்பட்ட உலகளாவிய திறன் மையங்கள் (Global Capability Centres (GCCs)) 1.66 மில்லியன் ஊழியர்களுடன் செயல்பட்டு வரும் நிலையில், இந்த சூழல் இந்தியாவின் அறிவுசார் வளர்ச்சி வெளிநாடுகளுக்குச் செல்வதை தடுத்து, மீண்டும் இந்தியாவிற்கே திரும்புவதற்கு சாதகமான வாய்ப்பாக அமைந்துள்ளது.


இருப்பினும், திறமையான பணியாளர்களைத் தக்கவைத்துக்கொள்வது இன்னமும் ஒரு சவாலாகவே உள்ளது. இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செலவினம் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product (GDP)) வெறும் 0.64% மட்டுமே என்கின்றனர்.  இது அமெரிக்கா (3.47%), சீனா (2.41%) மற்றும் இஸ்ரேல் (5.71%) ஆகிய நாடுகளைவிட மிகக் குறைவு ஆகும். இதற்கு முக்கியமாக தனியார் துறையினருக்கான ஊக்கத்தொகை குறைவாக இருப்பதே காரணமாகும். இந்த இடைவெளியானது, பொது நிதியுதவி குறைவாக இருப்பதையும் இந்தியாவின் பெருநிறுவனத் துறையின் கட்டமைப்பையும் ஒருசேரப் பிரதிபலிக்கிறது.

H-1B நுழைவுஇசைவு (விசா) விவாகரம் தொடர்பான இடையூறுகளைப் பயன்படுத்தி உண்மையான கண்டுபிடிப்பு ஆதாயங்களைப் பெற, இந்தியா தனது தனியார்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டும். மேலும், மென்பொருள் தயாரிப்புகள், குறைமின்கடத்திகள் (semiconductors) மற்றும் மேம்பட்ட உற்பத்தி போன்ற அதிக முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்த வேண்டும். இந்திய நகரங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்கள் இணைந்து தங்களின் ஆராய்ச்சி மற்றும் சமூக உள்கட்டமைப்பை வலுப்படுத்தினால், தற்போதைய இந்த நெருக்கடி புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஒரு பெரிய வாய்ப்பாக அமையும் என்கின்றனர். இல்லையெனில், அடுத்த தலைமுறை உயர்திறன் கொண்ட தொழிலாளர்கள் தங்களுக்குத் தேவையான வாய்ப்புகளைத் தேடி தொடர்ந்து வெளிநாடுகளுக்கே செல்லும் நிலை ஏற்படும் என்றும் தெரிவிக்கின்றனர். 


தீபன்ஷு மோகன், ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் மற்றும் தலைவராகவும் உள்ளார். இவர் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் கௌரவ பேராசிரியராகவும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கல்வி ஆராய்ச்சி உறுப்பினராகவும் இருக்கிறார். கீதாஞ்சலி மல்ஹோத்ரா மற்றும் அதிதி லாசரஸ் ஆகியோர் இக்கட்டுரைக்கு பங்களித்துள்ளனர்.


Original tittle :  Attracting talent positioned abroad -Deepanshu Mohan

Share:

இந்தியாவில் பாதுகாப்பான பாட்டில் குடிநீர் என்ற கட்டுக்கதையை அம்பலப்படுத்துதல் -ரோஹன் சிங், வெங்கடேஷ் தத்

 கொள்கை மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகள் பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் அபாயங்களை ஒப்புக்கொள்ள வேண்டும்.


இன்றைய இந்தியாவில், பாட்டில் குடிநீர் என்பது எப்போதாவது பயன்படுத்தும் ஒரு வசதி என்ற நிலையிலிருந்து மாறி, தற்பொழுது ஒரு தினசரி தேவையாக உருவெடுத்துள்ளது. இரயில் நிலையங்கள், அலுவலகங்கள் மற்றும் உணவகங்களில் பாட்டில்யில் அடைக்கப்பட்ட குடிநீர் (Packaged drinking water) மிகவும் பொதுவான ஒன்றாக மாறிவிட்டது. இதற்கு முக்கிய காரணம், மக்கள், நகராட்சி வழங்கும் குடிநீர் மீது வைத்துள்ள நம்பிக்கை குறைந்ததும், நெகிழி பாட்டில்யில் அடைக்கப்பட்ட தண்ணீர் பாதுகாப்பானது என்று மக்கள் நம்புவதுமே ஆகும்.


இருப்பினும், இந்திய ஆய்வுகள் உட்பட சமீபத்திய அறிவியல் ஆராய்ச்சிகள் இந்த நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்குகின்றன. நெகிழி பாட்டில் குடிநீர் முறைப்படுத்தப்பட்ட ஒன்றாகவும், பொதுவாக பாக்டீரியா மற்றும் பிற கிருமிகளிடமிருந்து பாதுகாப்பானதாகவும் இருந்தாலும், தற்போதைய பாதிப்புகள் அவற்றையும் தாண்டிச் செல்கின்றன. நெகிழி பாட்டில்களிலிருந்து வெளியேறக்கூடிய நுண்ணிய நெகிழித் துகள்கள் மற்றும் சிறிய அளவிலான வேதிப்பொருட்கள் போன்ற மறைமுக ஆபத்துகள் குறித்தும், அவை மனித ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தக்கூடிய நீண்டகால பாதிப்புகள் குறித்தும் நிபுணர்கள் இப்போது கவனம் செலுத்தி வருகின்றனர்.


நுண்ணிய நெகிழித் துகள்கள்  (Microplastics) ஒரு முக்கிய மாசுபடுத்தி


நுண்ணிய நெகிழித் துகள்கள் (Microplastics) என்பது ஐந்து மில்லிமீட்டருக்கும் குறைவான அளவுள்ள சிறிய நெகிழித் துண்டுகள் ஆகும். பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீர், மனிதர்கள் இத்தகைய துகள்களால் நேரடியாகப் பாதிக்கப்படுவதற்கு ஒரு முக்கியமான ஆதாரமாக மாறியுள்ளது.


மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், சோதிக்கப்பட்ட அனைத்து பாட்டில் குடிநீர் நிறுவனங்களின் தயாரிப்புகளிலும் நுண்ணிய நெகிழி துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டது; இதில் ஒரு லிட்டருக்கு 72 முதல் 212 துகள்கள் வரை இருந்தன. குறிப்பாக, தேசிய அளவிலான முன்னணி நிறுவனங்களைவிட உள்ளூர் பாட்டில் குடிநீர் நிறுவனங்களின் தயாரிப்புகளில் அதிகப்படியான துகள்கள் இருப்பது தெரியவந்துள்ளது, இது குடிநீர் பாட்டில்களில் அடைக்கப்படும் முறையிலும் தரக்கட்டுப்பாட்டிலும் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுகிறது.


மும்பை மற்றும் ஆந்திரப் பிரதேச கடற்கரைப் பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளிலும், சோதிக்கப்பட்ட அனைத்து மாதிரிகளிலும் நுண்ணிய நெகிழி துகள்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமன்றி, விநியோகச் சங்கிலி முழுவதுமே இந்த மாசு பரவியுள்ளதைக் காட்டுகிறது. ஒட்டுமொத்தமாக, இந்த முடிவுகள் பாட்டில் குடிநீரில் நுண்ணிய நெகிழித் துகள்கள் கலந்திருப்பது என்பது மேற்கத்திய நாடுகளுக்கு மட்டுமான பிரச்சனையல்ல, இந்தியாவிலும் இது ஒரு வளர்ந்துவரும் பெரும் பிரச்சனை என்பதை உறுதிப்படுத்துகின்றன.


நுண்ணிய நெகிழித் துகள்களை (microplastics) உட்கொள்வதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து இன்னும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இருப்பினும், இந்த துகள்கள் நச்சுத்தன்மை வாய்ந்த சேர்க்கைப் பொருட்கள் மற்றும் மாசுக்களை சுமந்து செல்லும் தன்மைக் கொண்டவை. தற்போது வெளிவரும் புதிய ஆய்வுகள், மிகச்சிறிய துகள்கள் உடலின் உயிரியல் தடுப்புகளைக் கடந்து செல்லக்கூடும் என்று கூறுவது பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்புகிறது. குறிப்பாக, தற்போதைய முறைகளால் கண்டறிய முடியாத அளவிற்கும், நடைமுறையில் உள்ள விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டும் இருக்கும் மிக மிக நுண்ணிய 'நுண் நெகிழித் துகளால்' (nanoplastics) இந்தப் பிரச்சனை இன்னும் மோசமடைவதாகவும் கூறப்படுகிறது. 


இது ஒரு ஒழுங்குமுறை இடைவெளியைச் சுட்டிக்காட்டுகிறது: பாட்டில் குடிநீர் போன்ற அன்றாட ஆதாரங்கள் மூலம் நுண்மாசுகள் உடலில் கலப்பது பற்றி அதிகளவில் தகவல்கள் வெளிவந்தாலும், தற்போதைய பாதுகாப்புத் தரநிலைகள் இன்னும் கண்ணுக்குத் தெரியும் அல்லது குறுகியகால பாதிப்புகளை ஏற்படுத்தும் மாசுகளில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. இதனால், ஏற்படக்கூடிய நீண்டகால அபாயங்கள் பெரும்பாலும் கவனிக்கப்படாமலேயே இருப்பதாகவும் கூறப்படுகிறது


பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரில் நெகிழி கொள்கலன்களில் இருந்து ரசாயனங்கள் கசியும் அபாயம் உள்ளது. குறிப்பாக, இந்திய விநியோகச் சங்கிலிகளில் பொதுவாகக் காணப்படுவது போல, தண்ணீர் பாட்டில்கள் அதிக வெப்பத்தில் வைக்கப்படும்போதோ அல்லது நீண்டகாலத்திற்கு சேமிக்கப்படும்போதோ, அவற்றில் உள்ள ஆன்டிமனி (antimony) மற்றும் பித்தலேட்ஸ் (phthalates) போன்ற வேதிப்பொருள் சேர்க்கைகள் தண்ணீருக்குள் ஊடுருவி விடக்கூடும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். 


தண்ணீர் அல்லது குளிர்பான பாட்டில்கள் நேரடி சூரிய ஒளியில் இருக்கும்போது, குறிப்பாக அவை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டு செல்லப்படும்போதோ, சேமித்து வைக்கப்படும்போதோ அல்லது கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும்போதோ, அவற்றில் உள்ள ரசாயனங்கள் திரவத்தில் கலக்கக்கூடும் என்கின்றனர். அதிகப்படியான வெப்பம் மற்றும் சூரியனின் புற ஊதாக் கதிர்கள் இந்த ரசாயனக் கசிவுச் செயல்பாட்டை மேலும் வேகப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. 

கண்டறியப்பட்ட ரசாயனங்கள் தற்போதைய விதிமுறைகளின் எல்லைக்குள் இருந்தாலும், வழக்கமான சோதனைகள் ஒரு குறிப்பிட்ட பொருளை குறுகிய காலத்திற்கு மட்டுமே ஆய்வு செய்கின்றன; ஆனால், நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவில் பலவிதமான உணவு சேர்க்கை பொருட்கள் (additives) மற்றும் நுண்ணிய நெகிழித் துகள்கள் (microplastics) ஒன்றாக கலந்துள்ளன. இத்தகைய பலதரப்பட்ட பொருட்கள் நீண்டகாலத்திற்கு உடலில் ஏற்படுத்தும் கூட்டுத் தாக்கத்தை தற்போதைய பாதுகாப்பு விதிமுறைகள் சரியாகக் கருத்தில் கொள்ளாததால், மக்களின் அன்றாட நுகர்வு முறைக்கும் அரசாங்கத்தின் கண்காணிப்புக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி நிலவுவதாகவும் தெரிவிக்கின்றனர். 


விதிமுறைகள் பின்தங்கியுள்ளன


இந்தியாவில் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் முக்கியமாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் (Food Safety and Standards Authority of India (FSSAI)) முறைப்படுத்தப்படுகிறது. கட்டாய இந்திய தர நிர்ணய ஆணையம் (Bureau of Indian Standards (BIS)) சான்றிதழ் நீக்கப்பட்ட பிறகு, உரிமம் வழங்குதல், சோதனை செய்தல் மற்றும் விதிமுறை இணக்கங்களை கவனிக்கும் பொறுப்பை இந்த அமைப்பே ஏற்றுள்ளது. இந்த முறை அடிப்படை தரநிலைகளை மேம்படுத்தியிருந்தாலும், இதில் சில குறைபாடுகள் உள்ளன; குறிப்பாக, நுண்ணிய நெகிழித் துகள்கள் (microplastics) குறித்த சோதனைகளுக்கோ அல்லது அவற்றுக்கான வரம்புகளை நிர்ணயிப்பதற்கோ தற்போதைய விதிகள் கட்டாயப்படுத்தவில்லை, மேலும், நடைமுறை வாழ்க்கை சேமிப்பு நிலைகளில் நெகிழியிலிருந்து வெளியேறும் இரசாயனங்களால் ஏற்படும் நீண்டகால பாதிப்புகள் குறித்தும் இந்த விதிகள் தெளிவுபடுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. 


கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், பாட்டில் குடிநீர் மாதிரிகள் பெரும்பாலும் பாதுகாப்பற்றதாகவோ அல்லது தரமற்றதாகவோ இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது விதிமுறைகளின் குறைபாடுகளைவிட, அவற்றைச் செயல்படுத்துவதில் உள்ள பலவீனங்களையே காட்டுகிறது. ஆயிரக்கணக்கான சிறிய குடிநீர் உற்பத்தி நிலையங்களைக் கொண்ட ஒரு சிதறியத் தொழில்துறையாக இருப்பதும், அவற்றில் பல மிகக் குறைந்த கண்காணிப்புடன் இயங்குவதும், ஏற்கனவே தட்டுப்பாட்டில் உள்ள நிலத்தடி நீரையே அவை பெரிதும் நம்பியிருப்பதும் இந்தப் பிரச்சனையை மேலும் மோசமாக்குகின்றன.


பாட்டில் குடிநீரால் ஏற்படும் சுகாதார அபாயங்களை அதன் சுற்றுச்சூழல் பாதிப்பிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. இந்தியா ஏற்கனவே ஒரு பெரிய நெகிழி கழிவுப் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் டன் நெகிழி உற்பத்தி செய்யப்படுகிறது, இதில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் தண்ணீர் பாட்டில்கள் பெரும் பங்கினை வகிக்கின்றன. நிலப்பரப்புகள், ஆறுகள் மற்றும் பெருங்கடல்களில் நெகிழி சிதைவடையும் போது, அவை நுண்-நெகிழித் துகள்களாக மாறி மீண்டும் சுற்றுச்சூழல் மற்றும் நீர் ஆதாரங்களுக்குள் நுழைகின்றன, இறுதியில் இது பாட்டில் குடிநீர் விநியோகத்தையே மாசுபடுத்துகிறது. சுற்றுச்சூழல் சேதம் மற்றும் சுகாதார அபாயங்களுக்கு இடையே உள்ள இந்தத் தொடர்பு, பாட்டில் குடிநீரை வெறும் நுகர்வோர் வசதிக்கான விஷயமாக மட்டும் பார்க்க முடியாது என்பதைக் காட்டுகிறது.



பாதுகாப்பான மாற்றுகளை நோக்கி


அவசர காலங்கள், பேரிடர் மீட்புப் பணிகள் மற்றும் பாதுகாப்பான குடிநீர் வசதி இல்லாத இடங்களில் பாட்டில் குடிநீர் இன்றும் அத்தியாவசியமான ஒன்றாகவே உள்ளது. எனவே இதன் உண்மையான பிரச்சனை அதைத் தடை செய்வது அல்ல, மாறாக அதை அளவுக்கு அதிகமாகச் சார்ந்து இருப்பதும், அதன் தரத்தைக் கண்மூடித்தனமாக நம்புவதும்தான் என்று கூறுகின்றனர். 


இதற்கிடையில், தண்ணீரில் உள்ள நுண்துகள்களை அகற்றும் வடிகட்டிகளைப் பயன்படுத்துவது, நீண்டநேரம் வெப்பத்தில் பாட்டில் தண்ணீரைச் சேமித்து வைப்பதைத் தவிர்ப்பது மற்றும் பொது குடிநீர் விநியோக நிலையங்கள் அல்லது மீண்டும் நிரப்பும் இடங்களின் வசதியை அதிகரிப்பது ஆகியவற்றின் மூலம் இதனுடன் தொடர்புடைய அபாயங்களைக் குறைக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. 


நகராட்சி குடிநீர் வழங்கலை மேம்படுத்துதல், நீரின் தரம் குறித்த தரவுகளை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ளுதல், குறைந்த விலையில் வீட்டு உபயோக நீர் சுத்திகரிப்பு கருவிகள் எளிதாகக் கிடைக்க வழிவகை செய்தல் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகிய செயல்பாடுகள், கண்காணிக்கப்படும் மற்றும் பொறுப்புணர்வோடு செயல்படும் பொது குடிநீர் அமைப்புகளின்மீது மக்களுக்கு மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கின்றனர். 


உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (Food Safety and Standards Authority of India (FSSAI)) மற்றும் இந்தியத் தர நிர்ணயப் பணியகம் (Bureau of Indian Standards (BIS)) ஆகியவற்றின் தற்போதைய விதிகளில் இடம்பெறாத நுண்ணிய நெகிழித் துகள்கள் மற்றும் நெகிழி சார்ந்த இதர அசுத்தங்களை அவ்வப்போது பரிசோதனை செய்வதை உறுதிப்படுத்தும் வகையில், தற்போதைய விதிமுறைகளைப் புதுப்பிப்பது மிகவும் அவசியமாகும்.


தீங்கு விளைவிப்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டு, அதற்கான அறிவியல் ஆதாரங்கள் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், அந்தப் பிரச்சினை இருக்கிறதா இல்லையா என்பது இப்போது கேள்வியல்ல; மாறாக, கொள்கை வகுப்பாளர்களும் ஒழுங்குமுறை அதிகாரிகளும் உண்மையை ஏற்றுக்கொண்டு, அதனை நேர்மையாக அளவிட்டு, அதற்கான பொறுப்பை ஏற்கத் தயாராக இருக்கிறார்களா என்பதுதான் தற்போதைய கேள்வியாக முன்வைக்கப்படுகிறது. 


ரோகன் சிங், ஒரு சுதந்திரமான அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் பத்திரிகையாளர் ஆவார். மேலும் வெங்கடேஷ் தத்தா, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் மத்திய பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் துறையின் பேராசிரியராகவும் அதன் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.


Original tittle :  Unpackaging the myth of safe bottled water in India -Rohan Singh,Venkatesh Dutt

Share:

இந்தியாவின் கருப்பை வாய் புற்றுநோய் (HPV) தடுப்பூசித் திட்டம் குறித்து…

 தடுப்பூசி செலுத்திய பிறகு ஏற்படும் பக்கவிளைவுகளைத் தொடர்ந்து கண்காணிப்பது அவசியமாகும்.


உலகளவில் தடுப்பூசிக்கு எதிரான கருத்துக்கள் அதிகரித்துவரும் வேளையில், 14 வயது சிறுமிகளுக்கான நாடு தழுவிய கருப்பை வாய் புற்றுநோய் (Human Papillomavirus (HPV)) தடுப்பூசி திட்டத்தை அறிமுகப்படுத்தும் இந்தியாவின் முடிவு அறிவியலுக்கு வலுசேர்க்கிறது. தடுப்பூசிகளைத் தவிர்ப்பதால் ஏற்படும் பாதிப்புகளை அமெரிக்காவில் தற்போது காணலாம். அங்கு 26 மாநிலங்களில் தட்டம்மை (Measles) நோய் பரவி வருகிறது. இந்த கருப்பை வாய் புற்றுநோய் (HPV) தடுப்பூசி குறிப்பிட்ட அரசு சுகாதார நிலையங்களில் மட்டுமே, பயிற்சி பெற்ற மருத்துவ அலுவலர்கள் முன்னிலையில் வழங்கப்படும். மேலும், தடுப்பூசிக்கு பிந்தைய ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்பட்டால், அதைக் கண்காணித்து நிர்வகிக்கத் தயாராக உள்ள தகுதியான சுகாதாரக் குழுவினரின் ஆதரவும் இதற்கு இருக்கும். உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்தபடி, ஒரு தவணை (Single-dose) தடுப்பூசி மட்டுமே பயன்படுத்தப்படும். கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்புகளில் ஏறக்குறைய அனைத்தும், அதிக ஆபத்துள்ள கருப்பை வாய் புற்றுநோய் வகைகளால் ஏற்படும் நீண்டகாலத் தொற்றினால் உண்டாகின்றன என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன. குறிப்பாக வகை 16 மற்றும் 18 ஆகியவை இந்தியாவில் 80%-க்கும் அதிகமான கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்புகளுக்குக் காரணமாகின்றன. கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி மற்றும் வழக்கமான பரிசோதனைகள் மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை பெருமளவு தடுக்க முடியும் என்றும், ஆரம்பத்திலேயே கண்டறிந்து விரைவாகச் சிகிச்சை அளித்தால் இதைக் குணப்படுத்த முடியும் என்றும் ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. உலகம் முழுவதும் 90-க்கும் மேற்பட்ட நாடுகள் ஒற்றைத் தவணை கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி முறையைப் பின்பற்றி வருகின்றன. தடுப்பூசி பரவலாகப் போடப்பட்டபிறகு, கருப்பை வாய் புற்றுநோய் தொற்று, புற்றுநோய்க்கு முந்தைய நிலைகள் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்புகள் பெருமளவு குறைந்துள்ளதாகப் பல நாடுகள் தெரிவித்துள்ளன. தடுப்பூசி மூலம் மிகவும் திறம்படத் தடுக்கக்கூடிய ஒரு சில புற்றுநோய்களில் கருப்பை வாய் புற்றுநோயும் ஒன்றாக க் கூறப்படுகிறது. 


இந்தியாவில் கருப்பை வாய் புற்றுநோய் (Cervical cancer) ஒரு மிகப்பெரிய சுகாதாரப் பாதிப்பாக உள்ளது, எனவே இது தொடர்பான முடிவு ஒரு முக்கியமான உயிர்காக்கும் நடவடிக்கையாகும். உலக சுகாதார அமைப்பின் (World Health Organisation (WHO)) மண்டலங்களில், தென்கிழக்கு ஆசிய மண்டலம் (South-East Asia Region (SEARO)) கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு மற்றும் இறப்புகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதில் இந்தியாவின் பங்கு 65 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் பெண்களிடையே காணப்படும் புற்றுநோய் வகைகளில், கருப்பை வாய் புற்றுநோய் இரண்டாவது பொதுவான புற்றுநோயாகும். 2022-ஆம் ஆண்டில், சுமார் 1,27,526 புதிய பாதிப்புகளும், 79,906 இறப்புகளும் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நோயைக் கண்டறியும் பரிசோதனை நிலைகள் மிகவும் குறைவாகவே உள்ளன. 30-49 வயதுடைய பெண்களில் 1.9% பேர் மட்டுமே பரிசோதனை செய்துகொள்கின்றனர். இருப்பினும், இந்தியாவில் கடந்த காலங்களில் நடத்தப்பட்ட கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி சோதனையின் அனுபவம் காரணமாக சில சிக்கல்கள் நீடிக்கின்றன. 2009-10 ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் குஜராத்தில் நடைபெற்ற சோதனையின்போது, ஏழு சிறுமிகள் உயிரிழந்தனர். இந்த இறப்புகள் தடுப்பூசியுடன் தொடர்பில்லாதவை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு (Indian Council of Medical Research (ICMR)) விசாரணை கூறியது, ஆனால் சரியான காரணத்தை உறுதிப்படுத்த முடியவில்லை. மேலும், தடுப்பூசிக்குப் பிந்தைய பாதகமான விளைவுகளை சரியாகக் கண்டறிந்து விசாரிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியது. அரசாங்கம் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும்போது, தடுப்பூசிகளைச் சரியான வெப்பநிலையில் சேமிக்க ஒரு வலுவான குளிர்சாதனக் கட்டமைப்பை (Cold Chain) உறுதிசெய்ய வேண்டும் என்றும் வெளிப்படைத்தன்மையைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.  மேலும், நாடு முழுவதும் தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகளைக் கவனமாகக் கண்காணித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.


Original tittle :  A jab well done: On India’s Human Papillomavirus vaccination programme

Share:

அறிவியலை காலனியமற்றதாகவும் நோபல்மயமற்றதாகவும் ஆக்குதல் -வாசுதேவன் முகுந்த்

தேசிய அறிவியல் தினம் (National Science Day) என்பது மேதைமை மற்றும் வெளிநாட்டிலிருந்து வரும் அங்கீகாரம் பற்றிய ஒரு கதையை மீண்டும் உருவாக்கக்கூடாது.


ஒவ்வொரு பிப்ரவரி 28-ம் தேதியானது, 1928-ம் ஆண்டில் சி.வி. ராமனின் ராமன் விளைவை (Raman effect) அறிவித்ததை நினைவுகூரும் வகையில் இந்தியா தேசிய அறிவியல் தினத்தைக் (National Science Day) கொண்டாடுகிறது. இது 1930-ல் சர்.சி.வி. ராமனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்ற ஒரு கண்டுபிடிப்பாகும். இத்தகைய தேசிய விழாக்கள் வெறும் நினைவுச் செயல்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் அவை அதைவிட மேலானவை. அவை, அரசு அறிவியலாகக் கருதுவதாகக் கூறுவதையும் சட்டப்பூர்வமாக்குகின்றன.



மூன்று முக்கிய வார்த்தைகள்


ஒரு புதிய புத்தகம்முக்கிய சொற்கள் பற்றி பேசுகிறது. அது இந்த சடங்கையே (ritual) ஒரு அரசியல் வாழ்க்கை உள்ள சொல்லாகப் பார்க்க உதவும் ஒரு நல்ல வழியைத் தருகிறது. ரென்னி தாமஸ் மற்றும் சசங்க பெரேரா என்ற மானிடவியலாளர்கள் தொகுத்த Decolonial Keywords என்ற புத்தகம் சொல்வது இதுதான்: சில சாதாரண, அன்றாடத்தில் நாம் பயன்படுத்தும் சொற்களை வரலாறு மற்றும் அதிகாரத்தின் பதிவுகளாக (archives) பார்க்கலாம்.


அந்த சொற்களின் பொருள் / வரையறை பெரும்பாலும் மொழி சார்ந்த சாதனை இல்லை; அது அரசியல் சாதனை.


இதே போலத்தான் ‘தேசிய அறிவியல் தினம்’ மற்றும் ‘நோபல் பரிசு’ ஆகியவற்றையும் முக்கிய சொற்களாக (keywords) கருதலாம். இந்த இரண்டு சொற்களும் இந்தியாவில் மக்கள் அறிவியலைப் பற்றி எப்படி கற்பனை செய்கிறார்கள் என்பதை ஒழுங்குபடுத்துகின்றன (organise). நாம் ஏன் ஒரு “உலகத் தரத்தில் உள்ள கண்டுபிடிப்பு” என்று சொல்லக்கூடிய தேதியை மட்டும் கொண்டாடுகிறோம்? அதற்குப் பதிலாக, உதாரணமாக, ஒரு அரசு மருத்துவமனையில் மகப்பேறு நலன்கள் (maternal outcomes) மேம்பட்ட தேதியை ஏன் கொண்டாடுவதில்லை? இதற்கு ஒரு காரணம் இருக்கிறது.


காலனித்துவ நீக்கம் என்பது இந்தியாவில் உண்மையான அர்த்தத்தைக் கொண்டிருக்க வேண்டுமென்றால், அது மேலும் செல்ல வேண்டும். அரசு அறிவியலை எவ்வாறு புரிந்துகொள்கிறது மற்றும் மதிக்கிறது என்பதை நோபல் நீக்கம் செய்வதையும் இது உள்ளடக்கியிருக்க வேண்டும். அரசு வெளிநாட்டு அங்கீகாரத்தை அறிவியல் மதிப்பின் முக்கிய சான்றாகக் கருதக்கூடாது. அது பல வகையான விஞ்ஞானிகளை அங்கீகரிக்க வேண்டும். அது அறிவியல் நடக்கும் இடங்களையும் அங்கீகரிக்க வேண்டும். புத்தகத்திலிருந்து மூன்று முக்கிய வார்த்தைகளான, 'ஜுகாத்' (jugaad), 'புறம்போக்கு' (poromboke) மற்றும் 'ஆய்வகம்' (laboratory) ஆகும். நிறுவன உள்கட்டமைப்புகள் மூலம் இந்த அங்கீகாரம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் காட்ட உதவுகின்றன.


ஆய்வாளரும் எழுத்தாளருமான பங்கஜ் சேக்ஸரியாவின் ‘ஜுகாட்’ (jugaad) பற்றிய கட்டுரை, அந்தச் சொல்லின் நிலையற்றத் தன்மையை — அதை நற்பண்பாகவோ (virtue), சமரசமாகவோ (compromise), அல்லது ஊழலாகவோ (corruption) புரிந்துகொள்ள முடியும் — ஆரம்பத்தில் பயன்படுத்தி, அது எப்படி சக்தி வாய்ந்தவர்களுக்கு தங்களுக்கு ஏற்ற பொருள்களைப் பெருக்கி, பொருந்தாதவற்றை நிராகரிக்க இடமளிக்கிறது என்பதை விளக்குகிறது.அவர் மேலும் காட்டுவது என்னவென்றால், அந்தச் சொல் மேலாண்மைப் பேச்சில் (managerial talk) சிக்கனமான புதுமை (frugal innovation) என்று பாராட்டத்தக்க ஒத்த சொல்லாக உள்வாங்கப்பட்டுவிட்டது; ஆனால் மற்ற ஒலிகள்/பொருள்கள் (resonances) கேட்பதற்கோ அல்லது தீவிரமாக எடுத்துக்கொள்வதற்கோ இன்னும் கடினமாகவோ உள்ளன.


தேசிய அறிவியல் தினத்தின் பொது அரங்கின் போது புதுமை இதேபோல் செயல்படுகிறது. இந்தப் பதிப்பு உயரடுக்கு பார்வையாளர்களுக்காக தொகுக்கப்பட்டுள்ளது. இது பொதுவாக ஆங்கிலத்தில் வழங்கப்படுகிறது. இது உலகளாவிய மேலாண்மை கலாச்சாரத்திற்கு புரியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதுடன், விருதுக்கு ஏற்றவாறும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் சேக்சாரியா தனது கட்டுரையை ஒரு கூர்மையான கேள்வியுடன் முடிக்கிறார். விவசாயிகள், மீனவர்கள் மற்றும் கைவினைஞர்கள் தங்கள் சொந்த கண்டுபிடிப்பை விவரிக்க எந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள்? இந்தக் கேள்விக்கு பதிலளிப்பது, கௌரவத்தின் உயரடுக்கு அடையாளங்களிலிருந்து நம் கவனத்தை விலக்கி, நடைமுறை அறிவை உருவாக்கவும் பெயரிடவும் மக்கள் பயன்படுத்தும் சொற்களஞ்சியங்களை நோக்கி நம்மைத் தூண்டுகிறது.


பேராசிரியர் பானு சுப்பிரமணியத்தின் 'புறம்போக்கு' (poromboke) என்ற அத்தியாயம் தமிழ் அரசியல் சூழலியலில் வேறூன்றியுள்ள வகைப்பாடு பற்றிய ஒரு இணையான வாதத்தை முன்வைக்கிறது. அரசு பெரும்பாலும் 'புறம்போக்கு' என்பதை 'பாழ்நிலம்' (wasteland) அல்லது மாநிலத்திற்கு வருவாயை ஈட்டாத நிலம் (land that does not generate revenue) என்று வரையறுக்கிறது. வருவாய் வகை எப்போதும் மாற்றுநிலையில் ஒரு சமூக வகையாகவே இருந்து வருகிறது. ஏனெனில், மாநிலத்தின் கணக்கியலானது எந்த நிலப்பரப்புகளை உற்பத்தித் திறன் கொண்டதாகக் கணக்கிடுகிறது. எனவே, எந்த மக்களின் பயன்பாடுகள் சட்டபூர்வமானவை என்று கணக்கிடப்படுகிறது என்பது அவரது கருத்தாக உள்ளது. வரலாற்றுரீதியாக, இந்த சொல் பொது பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தையும் குறிக்கிறது. அதேநேரத்தில், சமகால நடைமுறையில் இது விளிம்புநிலை சமூகங்களுக்கு அவசியமாக இருக்கும் பல பொதுவானவற்றை உள்ளடக்கியது. ஏனெனில், அவை தனியார் சொத்து அல்ல என்பதால் அவை குறிப்பாக முக்கியமானவை.


இந்த வார்த்தை பொதுவான தமிழ் மொழியில் 'எதற்கும் பயனற்றது' (good for nothing) என்று பொருள்படும் ஒரு இழிவான சொல்லாக மாறியுள்ளது என்பதையும் அவர் குறிப்பிடுகிறார். அரசு ஒரு நிலப்பரப்பை ஒரு முறை பயன்படுத்தக்கூடியது என்று அரசு முத்திரை குத்தும்போது, அந்த நிலத்தைச் சார்ந்து இருக்கும் மக்களும் செலவழிக்கக்கூடியதாக அறிவிப்பது எளிதாகிறது. அதேபோல், சில வகையான விசாரணைகள் 'தேசிய அறிவியல்' என்றும், குறைந்த மதிப்புள்ள மற்றவை 'வழக்கமான வேலை' அல்லது 'உள்ளூர் நடைமுறை' என்றும் அழைக்கப்படுகின்றன. இதனால்தான் தேசிய அறிவியல் தினத்தில் நாம் கொண்டாடுவது மதிப்பு-நடுநிலை (value-neutral) அல்ல, மாறாக அறிவியலின் உழைப்பை வரிசைப்படுத்துவதற்கான ஒரு வழியாகும்.


டாக்டர் தாமஸ் 'ஆய்வகத்தில்' (laboratory) கவனம் செலுத்துகிறார். மேலும், அவரது பகுப்பாய்வு நகரங்கள் மற்றும் கிராமங்களில், குறிப்பாக நோயறிதல் மையங்களில் ('நோயியல் ஆய்வகங்கள்') எங்கும் காணப்படும் உயரடுக்கு 'மெகா ஆய்வகங்கள்' மற்றும் 'சிறிய ஆய்வகங்கள்' ஆகியவற்றை வேறுபடுத்துவதன் மூலம் தொடங்குகிறது. சி.வி. ராமனின் கதை, ஆய்வக உள்கட்டமைப்பிலிருந்து பிரிக்க முடியாதது. அவர் கல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் வளர்ப்பு சங்கத்தில் பணிபுரியும் போது ராமன் விளைவை அறிவித்தார். ஆனால், டாக்டர் தாமஸின் கருத்து என்னவென்றால், இந்த பொது அங்கீகாரம் இயற்கையானது அல்லது தானாக அல்ல என்று டாக்டர் தாமஸ் வாதிடுகிறார். இது சமூகம் உருவாக்கும் ஒன்று. பள்ளிகள் பெரும்பாலும் ஆய்வகத்தை சிறந்த நபர்கள் தனிமையில் பணிபுரியும் இடமாகக் கற்பிக்கும்போது, ​​பெரும்பாலான இந்தியர்கள் உண்மையில் அறிவியல் அதிகாரத்தை எதிர்கொள்ளும் அன்றாட நோயறிதல் ஆய்வகம், சமூகத்திற்கு மையமாக இருந்தாலும் கருத்தியல்ரீதியாக சிறியதாகிவிடும்.


ஒரு 'ஆய்வகத்தை' ஒரு சமூக நிறுவனமாகக் கருதும்போது, அதன் அரசியலையும் அது என்ன என்பதன் ஒரு பகுதியாக நாம் பார்க்க வேண்டும். டாக்டர் தாமஸ் தனது சொந்த படைப்பில், ஆய்வகங்களில் உள்ளவர்கள் அறிவியல் பணிகளைச் செய்கிறார்கள் என்பதைக் காட்டியுள்ளார். அதேநேரத்தில், அவர்கள் விழாக்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். மேலும், வதந்திகள் மற்றும் சந்தர்ப்பங்களை ஒன்றாகக் கொண்டாடுகிறார்கள் என்றும், சாதி மற்றும் பாலினத்தின் படிநிலைகளை மக்கள் மீண்டும் உருவாக்கும் இடமாகவும் இது பெரும்பாலும் உள்ளது என்றும் கண்டறிந்துள்ளார். ஆனால் மற்ற அமைப்புகளில், 'அறிவியலின்' அதிகாரம் பொதுவில் காட்சிப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படும் இடமாகும்.


அறிவியலாகக் கருதப்படுவது எது?


இந்தக் கருத்துக்கள் அறிவியலின் நோபல்மயமாக்கப்பட்ட கற்பனை எப்படி இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகின்றன. இந்தக் கருத்து அறிவியலின் காலனித்துவ நீக்கத்தைப் போன்றது. அறிவியல் பணிகளை நாம் எவ்வாறு மதிக்கிறோம், அங்கீகரிக்கிறோம் என்பதை மறுபரிசீலனை செய்யச் சொல்கிறது. மேலும், அங்கீகாரம் எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பதை ஆராய இது இந்தியாவை உந்துகிறது. அங்கீகாரம் கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சி ஆவணங்கள் மூலம் வருகிறது. இது நிறுவனங்கள் மூலமாகவும் வருகிறது. இந்த நிறுவனங்கள் உழைப்பைப் பிரிக்கின்றன. சில வேலைகள் கொண்டாடப்படுகின்றன. சில வேலைகள் மறைக்கப்படுகின்றன.


அப்படியானால், தேசிய அறிவியல் தினம் நோபல் பரிசு, மேதைமை மற்றும் வெளியில் இருந்து ஒப்புதல் ஆகியவற்றைச் சுற்றி மட்டுமே வடிவமைக்கப்பட்ட கதையை மீண்டும் கூறக்கூடாது. தொழில்நுட்ப வல்லுநர்கள், கள ஊழியர்கள், செவிலியர்கள், ஆய்வக உதவியாளர்கள், தரவு சேகரிப்பாளர்கள் மற்றும் புதிய அறிவை உருவாக்க அவசியமான ஆனால் அரிதாகவே நினைவுகூரப்படும் மற்றவர்களின் பணி உட்பட, அறிவியலாகக் கருதப்படுவது பற்றிய விவாதத்தின் வருடாந்திர நாளாக இது மாற வேண்டும்.

 

Original tittle :  Decolonising and de-Nobelising science -Vasudevan Mukunth

Share:

நம்பிக்கை, கண்ணியம் மற்றும் அரசியலமைப்பு உரிமைகளை சமநிலைப்படுத்துதல் -சுஹ்ரித் பார்த்தசாரதி

 சபரிமலை மறுஆய்வின் இறுதி வாதங்கள் இந்தியாவின் மத சுதந்திரம் நீதித்துறையின் பரந்த கட்டமைப்பில் கவனம் செலுத்தும்.


இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் vs கேரள மாநிலம் (Indian Young Lawyers Association vs State of Kerala) என்ற வழக்கில், கேரளத்தின் சபரிமலை கோயிலின் கதவுகளை அனைத்து வயது பெண்களுக்கும் திறந்து வைத்து, 2018 செப்டம்பரில் இந்திய உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தனது தீர்ப்பை வழங்கியபோது, ​​அது பலவிதமான எதிர்வினைகளைத் தூண்டியது. நாடு முழுவதும், குறிப்பாக கேரளாவில் போராட்டங்கள் நடந்தன. அங்கு நீதிமன்றம் மத நம்பிக்கையை புறக்கணித்துவிட்டதாகவும், அவமதித்ததாகவும் என்று பலர் நம்பினர். மற்றவர்கள் இந்தத் தீர்ப்பை மாற்றத்தக்கதாகவும், அரசியலமைப்பை வலுப்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த பார்வையை வழங்கியதாக அவர்கள் உணர்ந்தனர். இப்போது, ​​கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, முந்தைய தீர்ப்பையும் அது வகுத்த சட்டத்தையும் ரத்து செய்ய முயலும் மறுஆய்வு மனுக்கள் மீதான இறுதி வாதங்களை நீதிமன்றம் பரிசீலிக்கும்.


கருத்து, கருத்து வேறுபாடு மற்றும் திருப்புமுனை


முதல் தீர்ப்பு 4:1 பெரும்பான்மை மூலம் வழங்கப்பட்டது. அப்போதைய இந்திய தலைமை நீதிபதி (CJI) தீபக் மிஸ்ராவின் கருத்தானது, அதில் நீதிபதி ஏ.எம். கான்வில்கர் அவரது கருத்துடன் உடன்பட்டார். நீதிபதிகள் ரோஹிண்டன் நாரிமன் மற்றும் டி.ஒய். சந்திரசூட் ஆகியோரிடமிருந்து தனித்தனியான, ஒத்த கருத்துகளும், நீதிபதி இந்து மல்ஹோத்ராவிடமிருந்து கடுமையான மாறுபட்ட கருத்தும் எழுந்தது. ஆனால், ஏற்றுக்கொள்ளப்பட்ட காரணங்களில் வேறுபாடுகள் இருந்தபோதிலும், பெரும்பான்மையினரின் கண்டுபிடிப்புகள் தெளிவாக இருந்தன.


முதலாவதாக, ஐயப்ப பக்தர்கள் ஒரு தனி மதப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இரண்டாவதாக, 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் கோயிலுக்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்ட தடை, பெண்களின் மத சுதந்திரத்திற்கான உரிமைகளை மீறுவதாகும். மூன்றாவதாக, கேரள இந்து பொது வழிபாட்டுத் தலங்கள் (நுழைவு அங்கீகாரம்) விதிகள்-1965-ன் (Kerala Hindu Places of Public Worship (Authorisation of Entry) Rules) விதி 3(b), இதன் அடிப்படையில் தடை விதிக்கப்பட்டது. அரசியலமைப்பை மட்டுமல்ல, அதன் முதன்மைச் சட்டத்தின் பிரிவு 3-ஐயும் மீறியது. இந்தப் பிரிவு அனைத்து வகை இந்துக்களுக்கும் கோயில்களில் இலவச நுழைவை உறுதி செய்தது.


நீதிபதி மல்ஹோத்ரா தனது மாறுபட்ட கருத்தில், மற்றவற்றுடன், மதச்சார்பற்ற அரசியலில் அடிப்படை உரிமைகள் இணக்கமாக இருக்க வேண்டும் என்று கண்டறிந்தார். சமத்துவம் என்ற பொதுவான கோட்பாடு தனிநபர்கள் தங்கள் பழக்கவழக்கங்கள் மற்றும் இலட்சியங்களுக்கு ஏற்ப தங்கள் நம்பிக்கையைப் பின்பற்றுவதற்கான கூட்டு உரிமைகளை மீற முடியாது. வழக்கப்படி, ஒரு குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் கோவிலின் வளாகத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். மேலும், இது ஒரு அவமதிக்க முடியாத "அத்தியாவசிய மத நடைமுறை" (essential religious practice) என்று அவர் கண்டறிந்தார்.


இந்தக் கண்டுபிடிப்பு முழு வழக்கும் முடிவு செய்யப்பட்ட மையப் புள்ளியாக மாறியது. அரசியலமைப்பு மத சுதந்திரத்தை ஒரு தனிநபர் உரிமையாகவும், மத விஷயங்களில் தங்கள் சொந்த விவகாரங்களை நிர்வகிக்க மதப் பிரிவுகளின் உரிமைகளாகவும் அங்கீகரிக்கிறது. இரண்டு உரிமைகளும் பொது ஒழுங்கு, ஒழுக்கம் மற்றும் சுகாதாரத்திற்கும், கூடுதலாக, ஒரு தனிநபரின் மத சுதந்திரத்திற்கான உரிமை பிற அடிப்படை உரிமைகளாலும் வரையறுக்கப்பட்டுள்ளது.


சமூகத்தின் நலன்களை தனிநபரின் மனசாட்சியுடன் சமநிலைப்படுத்துவது நமது சட்ட அமைப்பில் நீண்டகாலப் பிரச்சினையாக இருந்து வருகிறது. பல ஆண்டுகளாக, இந்த வகையான பதட்டங்களைத் தீர்க்க முன்வந்தபோது, ​​நீதிமன்றம் ஒரு குறிப்பிட்ட சோதனையை ஏற்றுக்கொண்டது. இந்த சோதனை நீதிமன்றத்தை மத நடைமுறைகளை உன்னிப்பாக ஆராய அனுமதித்துள்ளது. அவ்வாறு செய்வதன் மூலம், அது கிட்டத்தட்ட ஒரு இறையியல் அதிகாரம் போல செயல்பட்டுள்ளது. அதாவது, கேள்விக்குரிய ஒரு நடைமுறை மதத்திற்கு அவசியமானதா இல்லையா என்பது குறித்து இது ஆராய்ந்து ஒரு உண்மை முடிவுக்கு வருகிறது. இதன் பொருள், அரசு தலையிடுவது அரசியலமைப்புரீதியாக நியாயப்படுத்தப்படக்கூடிய பகுதிகளை மட்டுமல்லாமல், எந்த வகையான நடைமுறைகள் முதலில் அரசியலமைப்பு பாதுகாப்பிற்கு தகுதியானவை என்பதையும் நீதிமன்றம் திறம்பட தீர்மானித்துள்ளது.


உதாரணமாக, சாஸ்திரி யக்ஞபுருஷாத்ஜி vs முல்தாஸ் புதர்தாஸ் வைஷ்யா-1966 (Sastri Yagnapurushadji vs Muldas Bhudardas Vaishya)  வழக்கில், சுவாமிநாராயண் பிரிவைப் பின்பற்றுபவர்களுக்கு எது அவசியம் என்பதை, பின்பற்றுபவர்களின் மனசாட்சி உண்மையில் என்ன கட்டளையிடுகிறது என்று கேட்காமல், இந்து நூல்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்புகள் மூலம் தலைமை நீதிபதி பி.பி. கஜேந்திரகட்கர் தீர்மானிக்க முயன்றார். தீர்ப்பின் ஒரு பகுதியில், "வழக்கின் தோற்றம்... மூடநம்பிக்கை, அறியாமை மற்றும் இந்து மதத்தின் உண்மையான போதனைகள் பற்றிய முழுமையான தவறான புரிதலின் அடிப்படையில் நிறுவப்பட்டது" என்று கூட அவர் முடிவு செய்தார்.


மதம் தொடர்பான தார்மீக நடுவராக நீதிமன்றம் அமர்வது மதச்சார்பின்மைக்கு என்ற கருத்துக்கு எதிரானது. எனவே, அத்தியாவசிய மத நடைமுறைகளிலிருந்து விலகிச் செல்லும் ஒரு கோட்பாடு நமக்குத் தேவை என்பது சந்தேகத்திற்கு இடமின்றி இருக்க வேண்டும். நீதிபதி சந்திரசூட் இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கத்தில் தனது தீர்ப்பில் குறிப்பிட்டது போல், “ஒரு மத சமூகம் அதன் மதத்தின் ஒரு முக்கிய அம்சத்தை வரையறுக்க அனுமதிப்பதற்கான காரணம், மதங்கள் மற்றும் மதப் பிரிவுகளின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதாகும். அந்த சுதந்திரத்தைப் பாதுகாப்பது அரசியலமைப்பின் தாராளமய மதிப்புகளை மேம்படுத்துகிறது. மதத்தின் ஒரு முக்கியப் பகுதியாக என்ன இருக்கிறது அல்லது இல்லை என்ற கோட்பாட்டு பிரச்சினைகளில் நுழைவதன் மூலம், நீதிமன்றம், ஒரு அவசியமான விளைவாக, ஒரு மதரீதியில் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.”


இந்தச் சோதனையில் பிற நடைமுறை வரம்புகளும் உள்ளன. வாய்மொழி ஆதாரங்களையோ அல்லது சாட்சிகளை குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தவோ சாட்சிகளை அனுமதிக்காமல், முழுமையாக வடிவமைக்கப்பட்ட உண்மை முடிவுகளை அடைய அரசியலமைப்பு நீதிமன்றத்தை இது கோருகிறது. மேலும், உண்மையில் கோட்பாட்டளவில் ஒரு வெளிப்படையான பிரச்சினைக்கு தெளிவான தீர்வை வழங்கவில்லை. மதத்திற்கு அவசியமானதாகக் கருதும் ஒரு நடைமுறை தனிநபர்களின் கண்ணியத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அல்லது அதற்கு விரோதமானதாக இருக்கும்போது ஒரு நீதிமன்றம் என்ன செய்ய வேண்டும்?


‘விலக்கு எதிர்ப்பு சோதனை’ குறித்து


இந்தக் காரணத்திற்காகவே நீதிபதி சந்திரசூட் “விலக்கு எதிர்ப்பு சோதனை” (anti-exclusion test) ஒன்றை முன்மொழிந்தார். அவரது பார்வையின்படி, ஒவ்வொரு மதக் குழுவிற்கும் சரியான மரியாதை வழங்கப்பட வேண்டும். அவர்கள் தங்கள் சொந்த கோட்பாடுகள் மற்றும் நம்பிக்கைகளைத் தீர்மானிக்க அனுமதிக்கப்பட வேண்டும். நீதிமன்றங்கள் இந்த முடிவுகளுக்கு உரிய மரியாதை காட்டவேண்டும். அதேநேரத்தில், அத்தகைய எந்தவொரு நடைமுறையும் ஒரு தனிநபரின் கண்ணியத்தை பாதிக்கும் அல்லது அடிப்படை பொருட்களை அணுகுவதைத் தடுக்கும் வகையில் விலக்கினால், “மத சுதந்திரம் ஒரு தாராளவாத அரசியலமைப்பின் மிகைப்படுத்தப்பட்ட மதிப்புகளுக்கு வழிவகுக்க வேண்டும்”.


கோட்பாட்டளவில், சோதனை சிக்கல்களுக்கு அப்பாற்பட்டது அல்ல. முதல் பார்வையில், அத்தியாவசியமான மத நடைமுறைக் கோட்பாட்டை நீண்டகாலமாகப் பாதித்துள்ள சில சிரமங்களை இது பிரதிபலிப்பதாகத் தோன்றலாம். ஒரு குறிப்பிட்ட வகையான விலக்கு, கண்ணியத்தை அல்லது அடிப்படை பொருட்களை அணுகுவதை பாதிக்கிறதா என்பதைத் தீர்மானிக்க, ஒரு நீதிமன்றம் தவிர்க்க முடியாமல் கேள்விக்குரிய நடைமுறையின் அர்த்தத்தையும் நோக்கத்தையும் கையாள வேண்டும். அத்தகைய விசாரணையை பொதுவான இடத்தில் மேற்கொள்ள முடியாது. இது நம்பிக்கையின் நெறிமுறையான உள்ளடக்கத்திலேயே தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால் அது வேறுபடும் இடத்தில், விசாரணை இறையியல் சொற்களைவிட அரசியலமைப்புக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது.




ஒரு முக்கியமான வேறுபாடு


எளிமையான சொன்னால், விலக்கு எதிர்ப்பு சோதனை (anti-exclusion test), ஒரு நடைமுறை மதத்திற்கு அவசியமானதா என்று கேட்கப்படவில்லை. ஒரு நடைமுறையின் விளைவுகள் அரசியலமைப்பின் சமத்துவம் மற்றும் பாதுகாப்பிற்கான உத்தரவாதங்களுடன் ஒத்துப்போகிறதா என்று கேட்கிறது. இந்த வேறுபாடு முக்கியமானது. அத்தியாவசிய மத நடைமுறைகள் சோதனையின்கீழ், அரசியலமைப்பு பாதுகாப்பு ஒரு நீதிமன்றம் நம்பிக்கையைப் பயன்படுத்துவதற்கு ஒரு நடைமுறையை அவசியமாகக் கருதுகிறதா என்பதைப் பொறுத்தது.


இதற்கு நேர்மாறாக, விலக்கு எதிர்ப்பு சோதனையின் (anti-exclusion test) கீழ், ஒரு நீதிமன்றம், ஒரு தொடக்கப் புள்ளியாக, மதக் குழுக்கள் தங்கள் சொந்தக் கொள்கைகளை வரையறுக்க சுயாட்சியை (autonomy) ஏற்றுக்கொள்கிறது. அந்த சுதந்திரத்தைப் பயன்படுத்துவது, கண்ணியமான வாழ்க்கையை நடத்துவதற்கான அவர்களின் திறனுக்கு ஒருங்கிணைந்த இடங்களிலிருந்தோ அல்லது சலுகைகளிலிருந்தோ தனிநபர்களை முறையாக விலக்குவதற்கு வழிவகுக்காது என்பதை உறுதிசெய்ய மட்டுமே அது தலையிடுகிறது.


ஒன்பது நீதிபதிகள் கொண்ட நீதிமன்ற அமர்வு அதன் விசாரணைகளைத் தொடங்கும்போது, ​​இந்தியாவின் மத சுதந்திர விதிகளின் பரந்த கட்டமைப்பைப் பற்றி ஆராய ஒரு வாய்ப்பு கிடைக்கும். இது வகுத்துள்ள கொள்கைகள் சபரிமலை சர்ச்சையில் மட்டுமல்லாமல், தாவூதி போஹ்ரா சமூக உறுப்பினர்களின் மத விலக்கத்திற்கு எதிரான உரிமைகள் மற்றும் பார்சி பெண்கள் மதத்திற்கு வெளியே திருமணம் செய்து கொண்டால் ஜோராஸ்ட்ரிய நம்பிக்கையைத் தொடர்ந்து பின்பற்றுவதற்கான உரிமைகள் உட்பட பல சர்ச்சைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.


அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அங்கீகரித்தபடி, மதமும் சமூக வாழ்க்கையும் இந்தியாவில் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் நீதிமன்றங்கள் மத நடைமுறையின் உண்மையான வாழ்க்கை விளைவுகளைப் பற்றி புறக்கணிக்க முடியாது. விலக்கு எதிர்ப்புத் தேர்வு, நம்பிக்கை அதன் சொந்த களத்தில் தன்னாட்சி பெற்றதாக இருக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறது. அதேநேரத்தில், சமூகத்தில் பொதுவாக மதம் பின்பற்றப்படும்போது, ​​அது அனைத்து தனிநபர்களுக்கும் சமமான தார்மீக நிலை உறுப்பினர் பதவிக்கான அரசியலமைப்பின் உறுதிப்பாட்டுடன் ஒத்துப்போக வேண்டும்.


தனிநபர் அரசியலமைப்பு அக்கறையின் அடிப்படை அலகாக இருக்க வேண்டுமென்றால், சமூக உரிமைகோரல்கள் குடிமை வாழ்க்கையை வடிவமைக்கும் இடங்கள் மற்றும் அமைப்புகளை அணுகுவதற்கான ஒரு நபரின் உரிமையை மீற முடியாது. விசாரணையின் முக்கிய கண்ணோட்டமாக கண்ணியத்தை வைப்பதில், விலக்கு எதிர்ப்புத் தேர்வு, அரசியலமைப்பின் மாற்றும் வாக்குறுதிக்கு உண்மையாக இருக்கும் ஒரு கட்டமைப்பை வழங்குகிறது. அதேநேரத்தில், நம்பிக்கையின் பெயரில் பாகுபாட்டை அனுமதிக்காது.


சுஹ்ரித் பார்த்தசாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி செய்யும் ஒரு வழக்கறிஞர்.


Original tittle :  Balancing faith, dignity and constitutional rights -Suhrith Parthasarathy

Share: