சட்டப்பூர்வப் பாதுகாப்பு நடவடிக்கைகள் இருந்தபோதிலும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினரிடையே நிலத் தகராறுகள் ஏன் தொடர்கின்றன? -ஷ்ரியா முர்மு

பழங்குடியின மக்களின் நில உரிமைகள் மற்றும் தன்னாட்சியைப் பாதுகாப்பதற்காகவே சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் (Chota Nagpur Tenancy Act (CNT Act)), சந்தால் பர்கானா குத்தகைச் சட்டம் (Santhal Parganas Tenancy Act (SPT Act)) மற்றும் பஞ்சாயத்துகள் (பட்டியலிடப்பட்ட பகுதிகளுக்கான விரிவாக்கச்) சட்டம் (Provisions of the Panchayats (Extension to Scheduled Areas) Act (PESA Act)) ஆகியவை உருவாக்கப்பட்டன. இருப்பினும், ஜார்க்கண்ட் மாநிலம் முழுவதும் சுரங்கத் திட்டங்கள், சட்டத்தில் உள்ள குறைபாடுகள் மற்றும் பலவீனமான அமலாக்கம் ஆகியவற்றின் காரணமாக நிலத் தகராறுகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன.


இதே காலகட்டத்தில், சுமார் 170 ஆண்டுகளுக்கும் முன்பு, தற்போதைய கிழக்கு ஜார்க்கண்டின் காடுகள் நிறைந்த 'தாமின்-இ-கோ' (Damin-i-Koh) பகுதியில் சந்தால் பழங்குடியின மக்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒரு கிளர்ச்சியைத் தொடங்கினர். 1855-ஆம் ஆண்டின் இந்த சந்தால் பழங்குடியினரின் புரட்சி  (Hul) போராட்டத்தின்போது, ஆங்கிலேயர்கள், உயர்சாதியினர், ஜமீன்தார்கள் மற்றும் கந்துவட்டிக்காரர்களிடமிருந்து தாங்கள் எதிர்கொண்ட பல வகையான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அந்த மக்கள் துணிச்சலுடன் போராடினர்.


சில வரலாற்றுப் பதிவுகளின்படி ஜூலை மாதம் முதல் வாரத்தில் தொடங்கிய 'சந்தால் பழங்குடியினரின் புரட்சி' (Hul) இயக்கத்தின் ஒரு நிரந்தரமான முடிவு, 1876-ஆம் ஆண்டின் சந்தால் பர்கானா குத்தகை (SPT) சட்டம் ஆகும். பழங்குடி சமூகத்தினர் தங்களது நிலங்களை இழப்பதில் இருந்தும், கந்துவட்டிக்காரர்களின் சுரண்டல்களில் இருந்தும் அவர்களைப் பாதுகாப்பதற்காக இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.


பழங்குடியினரின் நிலங்களைப் பாதுகாக்கும் ஒரே சட்டம் இந்த சந்தால் பர்கானா குத்தகை (SPT) சட்டம் மட்டுமல்ல. சோட்டா நாக்பூர் குத்தகை (CNT) சட்டம் மற்றும் பஞ்சாயத்து (பட்டியலிடப்பட்ட பகுதிகளுக்கான விரிவாக்கச்) சட்டம் (PESA Act) ஆகியவை இதர முக்கியமான சட்டங்கள் ஆகும்.


இந்தச் சட்டங்கள் பழங்குடியினரின் நிலங்களுக்குச் சட்டப்பூர்வ பாதுகாப்பை வழங்குகின்றன. இருப்பினும், இத்தகைய பாதுகாப்பு வழிமுறைகள் இருந்தபோதிலும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலம் தொடர்பான விவகாரங்கள் இன்னும் ஒரு முக்கிய பிரச்சனையாகவே நீடித்து வருகின்றன.


சந்தால் பர்கானா குத்தகைச் சட்டம்


ஆங்கிலேயர்களால் இயற்றப்பட்ட இந்தச் சட்டம், பழங்குடியின மக்களின் நிலங்களை பழங்குடியினர் அல்லாத மற்றவர்களுக்கு மாற்றுவதைத் தடை செய்கிறது. இந்தச் சட்டத்தின் விதிகளின்படி மட்டுமே நிலத்தை வாரிசுரிமையாகப் பெறமுடியும். இதன் மூலம், சந்தால் (Santal) பழங்குடியினர் தங்களது நிலங்களை தாங்களே நிர்வகித்துக்கொள்ளும் உரிமையைப் பாதுகாக்கிறது. இந்த சந்தால் பர்கானா குத்தகைச் சட்டம், தற்போதைய சந்தால் பர்கனா பிராந்தியத்தில் உள்ள தும்கா (Dumka), தியோகர் (Deoghar), கோடா (Godda), பாகுர் (Pakur), சாஹிப்கஞ்ச் (Sahibganj) மற்றும் ஜாம்தாரா (Jamtara) ஆகிய மாவட்டங்களுக்குப் பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.


சோட்டாநாக்பூர் குத்தகைச் சட்டம்

பழங்குடியின மக்களின் போராட்டங்களின் விளைவாகக் கொண்டுவரப்பட்ட ஒரே ஆங்கிலேயர் கால நிலச் சீர்திருத்தச் சட்டம் சந்தால் பர்கானா குத்தகைச் சட்டம் மட்டுமல்ல. ஆங்கிலேயர்களால் 1908-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சோட்டாநாக்பூர் குத்தகைச் சட்டம் (CNT Act) என்பது 1899-ஆம் ஆண்டின் புகழ்பெற்ற பிர்சா முண்டா அவர்களின் இயக்கப் போராட்டத்தின் விளைவாக உருவானதாகும்.




இச்சட்டம், மாவட்ட ஆட்சியரின் அனுமதியோடு ஒரே சாதிக்குள்ளும், குறிப்பிட்ட புவியியல் பகுதிகளுக்குள்ளும் நிலங்களை மாற்றிக்கொள்ள அனுமதிக்கிறது. இந்தச் சட்டம் பழங்குடியின மக்கள் மற்றும் தலித் மக்களின் நிலங்களை மற்றவர்களுக்கு விற்பனை செய்வதைக் கட்டுப்படுத்துகிறது. அதேநேரத்தில், ஒரே காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழங்குடியின மக்களுக்கு இடையிலும், ஒரே மாவட்டத்திற்குட்பட்ட தலித் மக்களுக்கு இடையிலும் நிலங்களை மாற்றிக்கொள்ள இந்தச் சட்டம் அனுமதிக்கிறது.


இந்தச் சட்டம் வட சோட்டாநாக்பூர், தென் சோட்டாநாக்பூர் மற்றும் பலாமு ஆகிய பிரிவுகளுக்குப் பொருந்தும். இதில் ராஞ்சி (Ranchi), ஹசாரிபாக் (Hazaribagh), பலாமு (Palamu), குந்தி (Khunti) மற்றும் கும்லா (Gumla) போன்ற முக்கிய மாவட்டங்கள் அடங்கும்.


பஞ்சாயத்துகள் (பட்டியலிடப்பட்ட பகுதிகளுக்கான விரிவாக்கச்) சட்டம்


அரசியலமைப்பின் 9-வது பகுதியில் உள்ள பஞ்சாயத்துகள் தொடர்பான விதிகளை, பட்டியல் பழங்குடியினப் பகுதிகளுக்கும் நீட்டிப்பதற்காக 1996-ஆம் ஆண்டில் பஞ்சாயத்துகள் (பட்டியலிடப்பட்ட பகுதிகளுக்கான விரிவாக்கச்) சட்டம் (PESA Act) இயற்றப்பட்டது. இச்சட்டம், பட்டியலிடப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் கிராம சபைகள் மூலமாகத் தங்களைத்தாங்களே நிர்வகித்துக்கொள்ளும் சுயாட்சி உரிமையை உறுதி செய்கிறது. மேலும், இயற்கை வளங்கள்மீது பழங்குடியின மக்களுக்கு உள்ள உரிமைகளையும் இந்தச் சட்டம் அங்கீகரிக்கிறது. ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய பத்து மாநிலங்களில் இச்சட்டம் நடைமுறையில் உள்ளது.


இத்தகைய பாதுகாப்புச் சட்டங்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் அதிக கனிம வளங்கள் நிறைந்த மாநிலங்களில் ஒன்றான ஜார்கண்டில், சட்ட குறைபாடுகள், நிர்வாக நடைமுறைகள் மற்றும் பலவீனமான சட்ட அமலாக்கம் காரணமாக இன்னும் நிலத் தகராறுகள் தொடர்ந்து நடந்துவருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


சுரங்கத் தொழில் மற்றும் வளங்களைப் பிரித்தெடுத்தல்


சுரங்கத் தொழில் மற்றும் இயற்கை வளங்களை எடுப்பதைக் கட்டுப்படுத்தும் ஒன்றிய அரசின் சட்டங்கள் மீது ஒரு முக்கிய விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.


பிரிட்டனின் பிரைட்டன் நகரில் உள்ள வளர்ச்சி ஆய்வுகள் நிறுவனத்தில் (Institute of Development Studies) ஆலோசகராகப் பணிபுரியும் தீப்தி மேரி மின்ஜ் கூறுகையில், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் (Mines and Minerals (Development and Regulation) Act, 1957) மற்றும் நிலக்கரி தாங்கும் பகுதிகள் (கையகப்படுத்துதல் மற்றும் மேம்பாடு) சட்டம் (Coal Bearing Areas (Acquisition and Development) Act, 1957) போன்ற ஒன்றிய அரசின் சட்டங்கள், பெரும்பாலும் பொது நலன் என்ற பெயரில் பழங்குடியினரின் சட்டங்களைவிடவும் அதிக அதிகாரம் கொண்டு அவற்றை முடக்குகின்றன என்றும் கூறியுள்ளார்.


நிலச் சட்டங்கள் குறித்த கையேட்டின்படி (Handbook on Land Laws) (ஜார்க்கண்ட் நீதித்துறை அகாடமி), சோட்டாநாக்பூர் குத்தகைச் சட்டத்தின் (CNT Act) பிரிவு 49, தொடக்கத்தில் மத, கல்வி மற்றும் தொண்டு நோக்கங்களுக்காக மட்டுமே நிலங்களை மாற்றுவதற்கு அனுமதித்தது. இருப்பினும், 1996-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஒரு திருத்தத்தின் மூலம், துணை ஆணையரின் ஒப்புதலுடன் தொழில்துறை மற்றும் சுரங்கத் திட்டங்களையும் இந்தச் சட்டப்பிரிவில் சேர்க்கும் வகையில் இந்த விதி விரிவுபடுத்தப்பட்டது.


ராஞ்சியைச் சேர்ந்த சுதந்திர தேசப்பற்று மற்றும் காலனிய ஆதிக்க எதிர்ப்பு ஆராய்ச்சியாளரான ஆகிருதி லக்ரா கூறுகையில், சுரங்கத் தொழில் என்பது சுரங்கம், சுற்றுச்சூழல், காடு மற்றும் நிலக் கையகப்படுத்துதல் சட்டங்கள் உள்ளிட்ட பல சட்டங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.


இந்தச் சட்டங்கள் பெரும்பாலும் பஞ்சாயத்துகள் (பட்டியலிடப்பட்ட பகுதிகளுக்கான விரிவாக்கச்) சட்டம் (PESA) மற்றும் அரசியலமைப்பின் ஐந்தாவது அட்டவணையின்கீழ் (Fifth Schedule) வழங்கப்படும் பாதுகாப்புகளுடன் ஒன்றோடொன்று முரண்படுகின்றன. இதனால் எந்தச் சட்டத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. நடைமுறையில், மாநில அதிகாரிகள் உள்ளாட்சி அமைப்புகளைவிட சுரங்க மற்றும் தொழில்துறை கொள்கைகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்.


ராஞ்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் அவிரல் ஐந்த் கூறுகையில், நடைமுறையில் பஞ்சாயத்துகள் (பட்டியலிடப்பட்ட பகுதிகளுக்கான விரிவாக்கச்) சட்டத்தின் (PESA) விதிகள் புறக்கணிக்கப்படுகின்றன என்றும் இந்தச் சட்டம் மணல், களிமண் மற்றும் கூழாங்கற்கள் போன்ற சிறிய அளவிலான கனிமங்களை வெட்டி எடுப்பதற்கே பொருந்தும் என்றாலும், நிறுவனங்கள் சில நேரங்களில் இந்தச் சிறிய கனிமங்கள் பிரிவின்கீழ் அனுமதியைப் பெற்றுக்கொண்டு, பெரிய அளவிலான முக்கியக் கனிமங்களை வெட்டி எடுக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.


நில வங்கிகள் மற்றும் காடு வளர்ப்பு


பழங்குடியினரின் நிலங்கள் பறிபோவதற்குக் கூடுதல் ஒரு காரணம் 'நில வங்கிகள்' (Land banks) ஆகும். இதில் அரசாங்கமோ அல்லது பொது அதிகார அமைப்போ பின்னர் விநியோகிப்பதற்காக அல்லது பயன்படுத்துவதற்காக நிலங்களை முன்கூட்டியே கையகப்படுத்தித் தன்னிடம் வைத்துக் கொள்ளும். பல நேரங்களில், இவ்வாறு கையகப்படுத்தப்படும் நிலப்பகுதிகளில் பழங்குடியினரின் நிலங்களும் அடங்கும் என்கின்றனர்.


பழங்குடியின சமூகத்தினரிடம் வேளாண் சாகுபடிக்குப் பயன்படுத்தப்படாத சில பொதுவான நிலங்கள் இருக்கும். அவை கால்நடைகளை மேய்ப்பதற்கும், கதிர் அடிப்பதற்கும், அறுவடை செய்த பயிர்களைச் சேமித்து வைப்பதற்கும், சமூகக் கூட்டங்கள் மற்றும் திருவிழாக்களை நடத்துவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. 2016-ஆம் ஆண்டு கனிமப் படிமங்களை ஆராய்வதற்காக வான்வழியாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்போது (Aerial survey), அரசாங்கம் தங்களது இந்த பொது நிலங்களில் சிலவற்றை பயன்பாடற்ற தரிசு நிலம் (Wasteland) என வகைப்படுத்தியதாக மிஞ்ச் தெரிவித்தார். பின்னர், இந்த நிலங்கள் காடுகள் அழிக்கப்பட்டதற்கு ஈடாக வேறு இடங்களில் மரங்களை நட்டு காடுகளை வளர்க்கும் திட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்டன.


இழப்பீட்டு காடுவளர்ப்புத் திட்டம் பெரும்பாலும் விமர்சனத்திற்குள்ளாவதாக மிஞ்ச் கூறினார். இதற்கான ஒரு காரணம் என்னவென்றால், அங்கு அந்த மண்ணுக்குச் சொந்தமில்லாத பிற பகுதி மரங்கள் (Non-native trees) நடப்படுகின்றன. இத்தகைய செயற்கைத் தோட்டங்களால் ஒருபோதும் இயற்கை காடுகளுக்கு இணையான இடத்தை ஈடுசெய்ய முடியாது. மேலும், இந்த மரத்தோட்டங்கள் உருவாக்கப்பட்டபிறகு, அந்த நிலம் பொதுவாக வனத்துறையின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்படுகிறது. இது பழங்குடியின மக்கள் தங்களின் பாரம்பரிய வன நிலங்களையும் அங்கிருக்கும் வளங்களையும் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துகிறது.


சீரற்ற முறையில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்தல் 


சோட்டாநாக்பூர் குத்தகைச் சட்டத்தின் (CNT) பிரிவு 71(A)-ன்படி, சட்டவிரோதமாகப் பறிமாற்றம் செய்யப்பட்ட பழங்குடியினரின் நிலங்கள் மீண்டும் அவற்றின் உரிமையாளர்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டும். இருப்பினும், இந்தச் சட்டம் சீரற்ற முறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.


நிரஞ்சன் பாக்வர் எழுதிய 'Land, Law and Power: Unraveling the Legal and Criminal Nexus in Jharkhand’s Land Transactions' என்ற ஆய்வுக் கட்டுரையின்படி, நில அபகரிப்பாளர்கள் பெரும்பாலும் இத்தகைய சட்டவிரோத நிலப் பறிமாற்றங்களை 'தானப் பத்திரம்' (Dan patra) அல்லது 'நிலப் பரிமாற்றப் பத்திரம்' (Badlanama) என்று காட்டி மறைத்துவிடுகின்றனர். இது அவர்கள் சட்டரீதியான சோதனைகளில் இருந்து தப்பிக்கவும், அமைப்பில் உள்ள சட்டக் குறைபாடுகளைப் பயன்படுத்தி சுரண்டவும் உதவுகிறது.


இதுகுறித்து லக்ரா கூறுகையில், “நாங்கள் வளர்ச்சிக்கு அல்லது வளர்ச்சித் திட்டங்களுக்காக எங்கள் நிலத்தைக் கொடுப்பதற்கு எதிரானவர்கள் அல்ல. இருப்பினும், எங்கள் மக்களுக்குப் பொதுவாகக் குறைந்த ஊதியம் கொண்ட, குறைந்த திறன் தேவைப்படும் வேலைகளே வழங்கப்படுகின்றன. மேலும், தலைமைப் பொறுப்புகளிலோ அல்லது முடிவெடுக்கும் பதவிகளிலோ அவர்களுக்குப் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாகவே உள்ளது. இது எங்கள் சமூகத்தை இன்னும் விளிம்பு நிலைக்குத் தள்ளுகிறது, என்றும் இதன் விளைவாக, பழங்குடியின சமூகங்கள் அர்த்தமுள்ள வேலைகளோ அல்லது நீண்டகாலப் பொருளாதாரப் பாதுகாப்போ கிடைக்காமலேயே தங்களது நிலங்களை இழக்கின்றனர்” என்று வேதனை தெரிவித்துள்ளார்.  



Share:

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலை பிரதமர் தொடங்கி வைக்கிறார்: இது எவ்வாறு இயங்குகிறது மற்றும் ஹைட்ரஜன் ரயில்கள் உலகளவில் ஏன் இன்னும் விரிவடையவில்லை? -தீரஜ் மிஸ்ரா

ஹைட்ரஜன் (Hydrogen) எளிதில் தீப்பற்றக்கூடிய ஒரு வாயு என்பதால், அதனை மிக அதிக அழுத்தத்தில் சேமித்து வைக்கவும், கொண்டு செல்லவும் வேண்டும். இதனை இந்திய ரயில்வே எவ்வாறு பாதுகாப்பாகக் கையாளப் போகிறது? மேலும், ஹைட்ரஜனால் இயங்கும் ரயில் எவ்வாறு செயல்படுகிறது? 


பிரதமர் நரேந்திர மோடி ஹரியானாவின் ஜிந்த் (Jind) பகுதியில், இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயிலை ஜூலை மாதம் 17-ஆம் தேதி கொடியசைத்துத் தொடங்கி வைக்க உள்ளார். பசுமைத் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதில் இந்திய இரயில்வேக்கு இது ஒரு முக்கிய மைல்கல்லாகும். உலக அளவில் ஒரு சில நாடுகள் மட்டுமே இத்தகைய தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளன.


ரயில்வே அமைச்சகத்தின் தகவல்படி, இந்த ரயில் உலகிலேயே மிக நீளமான ஹைட்ரஜன் ரயில் தொடர்களில் ஒன்றாகும். இதில் எட்டு பயணிகள் பெட்டிகளும், இரண்டு ஓட்டுநர் கட்டுப்பாட்டு எஞ்சின் பெட்டிகளும் உள்ளன. மேலும், 2,400 கிலோவாட் திறனுடன் உலகின் மிக சக்திவாய்ந்த ஹைட்ரஜன் ரயில்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.


ஜிந்த் - சோனிபட் இடையிலான 89 கி.மீ தூரத்திலான இந்த ரயில் பாதையில், இந்த ரயில் குறைந்தது 682 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. இது மணிக்கு அதிகபட்சம் 75 கி.மீ வேகத்தில் இயங்கும். தினமும் இரண்டு முறை இந்த வழித்தடத்தில் இயக்கப்படும். இதன் மூலம் மொத்தம் 356 கி.மீ தூரத்தைக் கடக்க, இதற்கு சுமார் 300 கிலோ ஹைட்ரஜன் எரிபொருள் தேவைப்படும்.


ஹைட்ரஜன் எளிதில் தீப்பற்றக்கூடியது மற்றும் மிக அதிக அழுத்தத்தில் கொண்டு செல்லப்பட வேண்டியது என்பதால், இந்திய ரயில்வே இதை எப்படிப் பாதுகாப்பாகக் கையாளப் போகிறது? மேலும், இந்த ரயில் தொழில்நுட்ப ரீதியாக எப்படி இயங்குகிறது? என்பது குறித்த விளக்கம் பின்வருமாறு:


பிற நாடுகளில் ஹைட்ரஜன் ரயில்கள் 


பிரான்ஸ் நாட்டின் மிகப்பெரிய ரயில் உற்பத்தி நிறுவனமான 'Alstom', இந்தத் தொழில்நுட்பத்தை முதன்முதலாக 2016-ஆம் ஆண்டு பெர்லினில் நடந்த ஒரு கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது. இரண்டு பெட்டிகளைக் கொண்ட இவர்களது 'கொராடியா ஐலிண்ட்' (Coradia iLint) என்ற ரயில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜெர்மனியில் இயக்கப்பட்டது. இதுவே உலகின் முதல் ஹைட்ரஜனால் இயங்கும் பயணிகள் ரயிலாகும்.


பின்னர், ஜப்பான், சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளும் தங்களது சொந்த ஹைட்ரஜன் ஆற்றல் ரயில்களை அறிமுகப்படுத்தின.


இருப்பினும், அதிகப்படியான பயணிகளையும் மற்றும் சரக்குகளையும் கொண்டு செல்வதற்கு ஏற்றவாறு இந்தத் தொழில்நுட்பம் இன்னும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே, மிகச் சில நாடுகள் மட்டுமே ஹைட்ரஜன் ரயில் சேவைகளைக் கொண்டுள்ளன. அவ்வாறு கொண்டுள்ள நாடுகளும் இவற்றை பெரும்பாலும் குறுகியதூரப் பயணங்களுக்கு மட்டுமே பயன்படுத்துகின்றன.

ஹைட்ரஜன் ரயில்கள் எவ்வாறு இயங்குகின்றன?


வழக்கமான மின்சார ரயில்கள் இயங்குவதற்கு, அவற்றுக்கு மின்சாரத்தை வழங்கும் மேல்நிலை மின்சாரக் கம்பிகள் தேவைப்படுகின்றன. ஆனால், ஹைட்ரஜன் ரயில்களுக்கு இந்த மின் கம்பிகள் தேவையில்லை. அதற்குப் பதிலாக, அவை ஹைட்ரஜனை ஆக்சிஜனுடன் இணைப்பதன் மூலம் தங்களுக்குத் தேவையான மின்சாரத்தைத் தாங்களாகவே தயாரித்துக் கொள்கின்றன.


இந்தியாவின் ஹைட்ரஜன் ரயிலில் உள்ள இரண்டு 'மின் உற்பத்திப் பெட்டிகள்' (Power cars) ஒவ்வொன்றிலும் தலா நான்கு ஒருங்கிணைந்த 'மின்னழுத்தப் பெட்டிகள்' (Power packs) இருக்கும். ஒவ்வொரு மின்னழுத்தப் பெட்டிகளிலும் ஒரு ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலமும், ஒரு லித்தியம் அயர்ன் பாஸ்பேட் மின்கலமும் இருக்கும்.


இந்த ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலமானது, ரயிலிலேயே அதிக அழுத்தத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஹைட்ரஜனையும் (440 கிலோ), காற்றில் உள்ள ஆக்சிஜனையும் பயன்படுத்துகிறது. இவை இரண்டும் ஒன்றிணையும்போது மின்சாரம் உற்பத்தியாகிறது.

ஒவ்வொரு மின்னழுத்தப் பெட்டிகளும் 300 கிலோவாட் (kW) மின்சாரத்தை உருவாக்குகிறது. இதில் 115 கிலோவாட் ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலத்திலிருந்தும், 185 கிலோவாட் லித்தியம் அயர்ன் பாஸ்பேட் மின்கலத்திலிருந்தும் கிடைக்கிறது. ஒட்டுமொத்தமாக, ஒரு மின் உற்பத்திப் பெட்டிகளில் உள்ள நான்கு மின்னழுத்தப் பெட்டிகளும் சேர்ந்து 1,200 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.


இந்த இரயிலில் இரண்டு மின் உற்பத்திப் பெட்டிகள் இருப்பதால், இது மொத்தம் 2,400 கிலோவாட் (3,200 குதிரைத்திறன்) மின் ஆற்றலை உருவாக்குகிறது. இது குறுகிய தூரப் பயணங்களுக்குப் பயன்படுத்தப்படும் வழக்கமான மின்சாரப் பலவகை அலகுகள் (Electric Multiple Unit (EMU)) மற்றும் டீசல் மின்சாரப் பலவகை அலகுகள் (Diesel Electric Multiple Unit (DEMU)) இரயில்களின் ஆற்றலுக்கு இணையானதாகும்."


பழைய டீசல் மற்றும் மின்சாரத்தால் இயங்கும் ரயில் (DEMU) பெட்டிகளில் உள்ள டீசல் என்ஜின்களுக்குப் பதிலாக, சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தாத பூஜ்ஜிய உமிழ்வு ஹைட்ரஜன்-மின்சார உந்துவிசை அமைப்பு (Zero-emission hydrogen-electric propulsion system) மூலம் இந்த ரயில் உருவாக்கப்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வேயின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


மேலும், ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலன் மற்றும் மின்கலன் அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை அந்த அதிகாரி விளக்கினார்.


எரிபொருள் மின்கலனானது ரயிலின் தேவைக்கேற்ப மாறாமல், சீரான அளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்துகொண்டே இருக்கும். ரயில் நகரத் தொடங்கும்போது, அது எரிபொருள் மின்கலனில் இருந்து வரும் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது. ஆரம்பத்தில் தேவைப்படும் மின்சாரத்தின் அளவு குறைவாக இருப்பதால், மீதமுள்ள கூடுதல் மின்சாரம் ரயிலில் உள்ள ஆற்றலைச் சேமிக்கப் பயன்படுகிறது. ரயில் வேகம் எடுத்து, அதிக மின்சாரம் தேவைப்படும்போது, பேட்டரியும் எரிபொருள் மின்கலனுடன் இணைந்து ரயிலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது, என்றும் கூறினார்.


ரயில் செல்லும் வேகம் குறையும்போது, குறிப்பாக ஒரு நிலையத்தை நெருங்கும்போது, அதற்கான மின்சாரத் தேவை குறைகிறது. அந்தச் சமயத்தில் மின்சாரம் வழங்குவதை நிறுத்திக் கொள்கிறது. மேலும், எரிபொருள் கலனில் இருந்து கிடைக்கும் கூடுதல் மின்சாரம் அந்த மின்கலனை மீண்டும் மின்னேற்றம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக, ஒரு முழுப் பயணத்தை முடிக்கும்போது, பேட்டரி சுமார் 80 விழுக்காடு மின்னேற்றம் செய்யப்பட்டிருக்கும், என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.


இந்த அமைப்பின் மிக முக்கியப் பகுதி — 'எரிபொருள் மின்கலன்' ஆகும். இது எரிபொருள் மின்கலன்களைத் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற 'Ballard' என்ற கனடா நாட்டு நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.


ஹைட்ரஜனைச் சேமித்து வைத்தல் மற்றும் விநியோகித்தல் 


சாதாரண வளிமண்டல அழுத்தம் என்பது 1 பார் (bar) ஆகும், ஆனால் ஹைட்ரஜனை 200 முதல் 500 பார் அழுத்தத்தில்தான் சேமித்து வைக்க வேண்டும். ரயில்களுக்கு தூய்மையான எரிபொருளாக ஹைட்ரஜனைப் பயன்படுத்துவதில் இருக்கும் மிகப்பெரிய சிக்கலே இதுதான். இது தவிர வேறு சில சவால்களும் உள்ளன. ஹைட்ரஜன் உற்பத்தி இன்னும் குறிப்பிட்ட அளவில் மட்டுமே உள்ளது, மேலும் அதைக் கொண்டு செல்வதும் கடினமாக இருக்கிறது.


ரயில்களுக்குத் தடையின்றி ஹைட்ரஜன் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, ரயில்வே நிர்வாகம் ஜிந்த் (Jind) பகுதியில் 3,000 கிலோ கொள்ளளவு கொண்ட ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஹைட்ரஜனை வாகனங்களில் நிரப்பும்போது அதை -15°C வெப்பநிலையில் பராமரிப்பதற்காக ஒரு குளிரூட்டும் ஆலையையும் (Chiller plant) அமைத்துள்ளது. இந்த குறைந்த வெப்பநிலை ஹைட்ரஜனைத் திரவ நிலையில் வைத்திருக்க உதவுகிறது, இதனால் அதை எளிதாக நிரப்ப முடியும்.


ஒப்புதல்கள்



வடக்கு ரயில்வே ₹136 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்தை 2020-21-ஆம் ஆண்டில் கையில் எடுத்தது. இந்திய ரயில்வேக்குத் தேவையான உந்துவிசை உபகரணங்களை (Propulsion equipment) வழங்கும் ஹைதராபாத்தைச் சேர்ந்த 'Medha’ நிறுவனத்திற்கு இதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதம் 2022-ஆம் ஆண்டில் பணிகள் தொடங்கப்பட்டன.


ஹைட்ரஜனால் இயங்கும் இந்த ரயில் அனைத்து சோதனை ஓட்டங்களையும் வெற்றிகரமாக முடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, மே மாதம் 22-ஆம் தேதி ரயில்வே அமைச்சகம் இந்த ரயிலை இயக்குவதற்கான ஒப்புதலை வழங்கியது.


இருப்பினும், ரயில்வே துறை இதுவரை வேறு எந்த ஹைட்ரஜன் ரயில் திட்டங்களையும் அறிவிக்கவில்லை. மேலே குறிப்பிடப்பட்ட அதிகாரியின் கூற்றுப்படி, இதுபோன்ற திட்டங்களின் எதிர்காலம், இந்த முதல் ரயிலின் செயல்பாட்டைப் பொறுத்தே அமையும் என்றும் தெரிவித்துள்ளனர்.


Original Link: PM to flag off India’s first hydrogen train: How they work, and why they haven’t picked pace globally.

Share:

தேர்தல் ஆணையத்தின், புதிய இணையவழிப் பதிவு விதிமுறை வாக்காளர்களுக்கு எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும்? -தாமினி நாத்

படிவம்-6 (Form-6) என்பது புதிய வாக்காளர்களைப் பதிவு செய்வதற்கான படிவமாகும். தற்போது இணையவழியில் சமர்ப்பிக்கக் கிடைக்கும் இந்தப் படிவத்தின் பதிப்பில், விண்ணப்பதாரர்களின் பெற்றோர் கடந்த சிறப்பு தீவிர திருத்தத்தில் (SIR) இருந்தார்களா இல்லையா என்பதற்கு அவர்கள் பதிலளிக்க வேண்டிய ஒரு புதிய பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும், இத்தகைய நிபந்தனையைச் சேர்ப்பதற்கு விதிகளில் திருத்தம் மற்றும் அரசிதழ் அறிவிப்பு ஆகியவை தேவைப்படுகின்றன.




ECINET : ECINET என்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளம் (Election Commission of India Network) ஆகும். இது வாக்காளர்கள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கான அனைத்து தேர்தல் சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கும் ஒரு ஒற்றை புள்ளி டிஜிட்டல் தளமாக (Single Point Digital Platform) செயல்படுகிறது.


இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (ECI) இணையவழி வாக்காளர் பதிவுத் தளமான ECINET, தற்போது விண்ணப்பதாரர்கள் வாக்காளர் பட்டியலின் கடந்தகால சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) போது பெற்றோரின் நிலை குறித்த விவரங்களை விண்ணப்பதாரர்கள் இப்போது இந்த இணையதளத்தில் வழங்க வேண்டும். மேலும், வாக்குச்சாவடி எண் மற்றும் அந்த வாக்காளர் பட்டியலில் பெற்றோரின் பெயர் இடம்பெற்றுள்ள வரிசை எண் ஆகியவற்றையும் விண்ணப்பதாரர்கள் குறிப்பிட வேண்டும்.


புதிய வாக்காளர் பதிவுகளுக்கான சட்டப்பூர்வ படிவமான படிவம்-6, சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறையின்கீழ் இன்னும் திருத்தப்படவில்லை என்ற நிலையிலும் இது நிகழ்கிறது. இந்த புதிய நடைமுறை குறித்தும், அது புதிய வாக்காளர்களுக்கு இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தும் அறிய வேண்டிய தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.


புதிய நடைமுறை என்ன?


தேர்தல் ஆணையத்தின் ECINET இணையதளம், புதிய வாக்காளர் பதிவுகள், ஏற்கனவே உள்ள வாக்காளர் பட்டியல்களில் மாற்றங்கள் மற்றும் நீக்கங்களுக்கான படிவங்களைச் சமர்ப்பிக்க பயனர்களை அனுமதிக்கிறது.


1950-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (Representation of the People Act) மற்றும் 1960-ம் ஆண்டின் வாக்காளர் பதிவு விதிகளின் (Registration of Electors Rules) கீழ் வாக்காளர் பதிவுப் படிவமான படிவம்-6 இன் இணையவழிச் சமர்ப்பிப்புப் பதிப்பில், தற்போது ஒரு புதிய பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. அதில், விண்ணப்பதாரர்களின் பெற்றோர் முந்தைய சிறப்பு தீவிர திருத்தத்தில் (SIR) இருந்தார்களா இல்லையா என்பதற்கு அவர்கள் பதிலளிக்க வேண்டும். இது “உறுதிமொழிப் படிவம்” (declaration form) எனப்படும் ஒரு பிரிவின்கீழ் வருகிறது.


ஆம் எனில், அவர்கள் சட்டமன்றத் தொகுதி எண், வாக்குச் சாவடி எண் (பகுதி எண் என அழைக்கப்படுவது) மற்றும் தங்களது தந்தை அல்லது தாய் கடைசியாக பதிவான வாக்காளர் பாட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தில் (SIR) பதிவு செய்யப்பட்டிருந்த வரிசை எண் ஆகியவற்றை வழங்க வேண்டும்.


இதுவரை, கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் 10 மாநிலங்கள் மற்றும் மூன்று ஒன்றியப் பிரதேசங்களில் தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) நிறைவு செய்துள்ளது. மீதமுள்ள, மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களைப் பொறுத்தவரை, கடைசியாக சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலில் 2000-களின் முற்பகுதியில் நடத்தப்பட்ட மீளாய்வைக் குறிக்கிறது.


தற்போது மற்ற 19 மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களில் இந்த நடவடிக்கை நடைபெற்று வரும் நிலையில், இமாச்சலப் பிரதேசம், லடாக் மற்றும் ஜம்மு & காஷ்மீருக்கான சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை.


அஸ்ஸாமைப் பொறுத்தவரை, மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens (NRC)) பணி நிறைவடையும் வரை சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) நடத்த வேண்டாம் என தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.


பீகாரைத் தவிர, சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நிறைவடைந்த அல்லது நடைபெற்று வரும் அனைத்து மாநிலங்களிலும், தேர்தல் ஆணையத்தின் இணையவழி படிவம்-6 சமர்ப்பிப்புச் செயல்முறையில், விண்ணப்பதாரர் படிவத்தின் ஏற்கனவே உள்ள படிவம் 6-ன் பிரிவுகளுக்கு இடையில் தங்கள் பெற்றோரைப் பற்றிய புதிய “உறுதிமொழிப் படிவத்தை” நிரப்ப வேண்டும்.





விண்ணப்பதாரரின் பெற்றோர் முந்தைய சிறப்பு தீவிர திருத்தத்தில் (SIR) இடம்பெறவில்லை என்றால், விண்ணப்பதாரர் அந்த விருப்பத் தேர்வைத் தேர்ந்தெடுத்து, பெற்றோரின் பெயர்களையும், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (Electors Photo Identity Card (EPIC)) எண்கள் இருந்தால் அவற்றையும் வழங்க வேண்டும்.


சட்டம் என்ன சொல்கிறது?


அரசியலமைப்பின் 326-வது பிரிவு, சட்டப்படி தகுதி நீக்கம் செய்யப்படாத வரையில், ஒரு குறிப்பிட்ட சட்டமன்றத் தொகுதியில் இயல்பாக வசிக்கும் வயதுவந்த அனைத்து குடிமக்களுக்கும் வாக்காளராகப் பதிவு செய்யும் உரிமையை உறுதி செய்கிறது.


1950-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (Representation of the People Act), தேர்தல்களை நடத்துவது மற்றும் வாக்காளர்களைப் பதிவு செய்வது தொடர்பான விதிகளை உருவாக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்குகிறது.


மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் ((Representation of the People Act(RPA)) பிரிவு 28 ஆனது, “விதிமுறைகளை உருவாக்கும் அதிகாரம்” என்பதை, “மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசித்த பின்னர், அதிகாரப்பூர்வ அரசாணை அறிவிக்கை மூலம், இந்தச் சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான விதிகளை உருவாக்கலாம்” என்று கூறுகிறது. மேலும், இந்தச் சட்டத்தின்கீழ் உருவாக்கப்படும் ஒவ்வொரு விதியும், “உருவாக்கப்பட்ட பிறகு கூடிய விரைவில், நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு அவையின் முன்பும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்” என்றும் அது கூறுகிறது.


படிவம்-6 என்பது, அந்தச் சட்டத்திலிருந்து உருவான 1960-ம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகளின் ஒரு பகுதியாகும். எனவே, படிவத்தில் ஏதேனும் மாற்றம் செய்வதற்கு, சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் திருத்தம் மற்றும் அரசிதழ் அறிவிப்பு தேவைப்படும்.




திருத்தம் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா?


இல்லை, தேர்தல் ஆணையம் முதன்முதலில் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) அறிவித்த ஜூன் 24, 2025 முதல் தற்போது வரை, மின்-அரசிதழ் (e-Gazette) இணையதளத்தில் கிடைக்கும் அறிவிப்புகளின்படி, சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் படிவம்-6-ல் எந்த மாற்றத்தையும் இன்னும் அறிவிக்கவில்லை.


உண்மையில், தேர்தல் ஆணையத்தின் ECINET இணையதளத்தில், தேர்தல் அதிகாரிகளிடம் நேரில் சமர்ப்பிப்பதற்காகக் கிடைக்கும் படிவம் 6-ல், புதிய சிறப்பு தீவிர திருத்த (SIR) "உறுதிமொழிப் படிவம்" (declaration form) பகுதி இடம்பெறவில்லை. இதிலிருந்து, முறையான நடைமுறைகளின்படி அந்தப் படிவம் திருத்தப்படவில்லை என்பது தெளிவாகிறது.


ஏதேனும் திருத்தம் செய்யப்பட்டதா என்பது குறித்தும், புதிய அறிவிப்பு ECINET இணையதளத்தில் எப்போது வெளியிடப்பட்டது என்பது குறித்தும் விடுக்கப்பட்ட கருத்துகளுக்கான கோரிக்கைகளுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்கவில்லை.


புதிய வாக்காளர்களுக்கு இதன் பொருள் என்ன?


முக்கியமாக சமீபத்தில் 18 வயதை எட்டிய புதிய விண்ணப்பதாரர்கள், இப்போது தங்களையோ அல்லது தங்கள் பெற்றோரையோ முந்தைய சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பதிவுகளுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றம் குறித்து தேர்தல் ஆணையம் இன்னும் கருத்து தெரிவிக்கவோ அல்லது அறிவிக்கவோ இல்லை என்பதால், விவரங்களை வழங்க முடியாதவர்கள் கடுமையான விசாரணைக்கு உள்ளாக்கப்படுவார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.


இதுவரை ஆண்டுதோறும் செய்யப்பட்டு வந்தது போல வாக்காளர் பட்டியல்களைத் திருத்துவதற்குப் பதிலாக, புதிதாகப் பட்டியல்களைத் தயாரித்து, முன்னெப்போதும் இல்லாத வகையில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தத்தை (SIR) நடத்திவரும் இவ்வேளையில், இதற்கான அறிவிப்பின் அறிமுகம் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது.


முன்பு ஆணையம் நடத்திய வாக்காளர் பட்டியலின், தீவிரத் திருத்த நடவடிக்கைகளின்போது, ​​குடியுரிமை உள்ளிட்ட தகுதிகளை நிரூபிப்பதற்கான படிவங்களையும் ஆவணங்களையும் அனைத்து வாக்காளர்களும் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இருந்ததில்லை; ஆனால் தற்போதைய சிறப்பு தீவிர திருத்த (SIR) நடைமுறையில் அது அவசியமாகிறது.


தேர்தல் ஆணையத் தரவுகளின்படி, இதுவரை 13 மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களில் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) நிறைவடைந்துள்ளது. இதன் விளைவாக, 5.58 கோடி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் (Booth Level Officers) மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சம்பந்தப்பட்டவர்கள் இறந்துபோனது, வேறு இடத்திற்குக் குடிபெயர்ந்தது, நீண்ட காலமாக வசிப்பிடத்திலில்லாதது அல்லது பல இடங்களில் பெயர்களைப் பதிவு செய்திருந்தது ஆகியவை இதற்கான முக்கியக் காரணங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன.


மேற்கு வங்கத்தில், ஆவணங்களைச் சமர்ப்பித்த 27 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள், முன்னெப்போதும் இல்லாத ஒரு நீதித்துறைத் தீர்ப்பளிப்பு செயல்முறையின் மூலம் நீக்கப்பட்டுள்ளன. அதேவேளையில், அவர்களுடைய மேல்முறையீடுகள் தற்போது மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களில் நிலுவையில் உள்ளன. இந்த நடவடிக்கையில் நீக்கப்பட்டவர்களின் பிள்ளைகளின் வாக்காளர் பதிவில், சிறப்பு தீவிர திருத்த (SIR) அறிவிப்பு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை.


Original Link: What the Election Commission’s new online registration requirement means for voters?.

Share:

மவோரி ஹாகா (Māori Haka) : வரலாறு, முக்கியத்துவம் மற்றும் இந்தியாவின் தற்காப்புக் கலை வடிவங்கள் குறித்து . . . -ரோஷ்னி யாதவ்

நியூசிலாந்து பயணத்தின்போது பிரதமர் மோடிக்கு பாரம்பரிய 'மாவோரி ஹகா' (Maori Haka) வரவேற்பு அளிக்கப்பட்டது. மவோரி ஹகா (Maori Haka) என்றால் என்ன? அது ஏன் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? இந்தியாவின் தற்காப்புக் கலை வடிவங்கள் யாவை?


தற்போதைய நிகழ்வு :


பிரதமர் நரேந்திர மோடி நியூசிலாந்தின் ஆக்லாந்து (Auckland) நகருக்கு மேற்கொண்ட பயணத்தின்போது, ​​அவருக்கு மாவோரி இனத்தவரால் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. குறிப்பிடத்தக்க வகையில், கடந்த 40 ஆண்டுகளில் ஒரு இந்தியப் பிரதமர் நியூசிலாந்துக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். மேலும், பிரதமர் மோடியும் அவரது நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸனும் அதன் கட்டமைப்பு மற்றும் "2030-ம் ஆண்டுக்கான செயல்திட்டத்தை" அங்கீகரித்த நிலையில், இந்தியாவும் நியூசிலாந்தும் ஜூலை 11 அன்று தங்களது இருதரப்பு உறவை ஒரு "உத்திசார் கூட்டாண்மை" (Strategic Partnership) நிலைக்கு உயர்த்துவதாக உறுதியளித்தன.

இந்தச் சூழலில், மாவோரி ஹகா, அதன் கலாச்சார முக்கியத்துவம் மற்றும் இந்தியத் தற்காப்புக் கலை வடிவங்கள் பற்றி அறிந்துகொள்வோம்.


முக்கிய அம்சங்கள் :


1. ஹகா என்பது மாவோரி கலாச்சாரத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். நியூசிலாந்தின் 'ஆல் பிளாக்ஸ்' (All Blacks) ரக்பி அணி கடந்த 120 ஆண்டுகளாக ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் இதை நிகழ்த்தி வருவதால், இது பரவலாக அறியப்படுகிறது. இருப்பினும், ஹகா என்பது போட்டிக்கு முந்தைய ஒரு செயல்முறைக்கு அப்பாற்பட்டது. இது மாவோரி கலாச்சாரத்தின் மிக முக்கியமான ஒரு பகுதியாகும். இது அவர்களின் வரலாறு, அடையாளம், மரபுகள் மற்றும் உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது.


2. ஹகாவின் தோற்றம், நியூசிலாந்தின் (ஆவோடெரோவா) பூர்வீக பாலினேசிய மக்களான மாவோரி மக்களிடமிருந்து உருவானது. பாரம்பரியமாக, ஹகா என்பது போருக்கு முன் வீரர்களால் நிகழ்த்தப்படும் ஒரு சடங்கு நடனம் அல்லது சவாலாகவோ இருந்தது. அவ்வாறு செய்ய, அவர்கள் ஒத்திசைவான அசைவுகள், சக்திவாய்ந்த கோஷங்கள் மற்றும் தீவிரமான முகபாவனைகள் மூலம் எதிரிகளை அச்சுறுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டது.


3. ஹாகா போருக்கு மட்டும் பயன்படுத்தப்படவில்லை. அது கதைகளைச் சொல்வதற்கான ஒரு கருவியாகவும், சமூகக் குறைகளை வெளிப்படுத்தவும், வெற்றிகளைக் கொண்டாடவும், அல்லது முன்னோர்களைப் போற்றவும் பயன்பட்டது. இந்த முழக்கங்கள் அல்லது வாயாட்டா (waiata), மாவோரி பாரம்பரியம், நெறிமுறைகள் மற்றும் நிலத்துடனான பிணைப்பு பற்றிய ஆழமான செய்திகளை வெளிப்படுத்துகின்றன.


மவோரி (Māori) மக்கள் யார்?


மாவோரி மக்கள், ஆவோடெரோவா (Aotearoa) நியூசிலாந்தின் பூர்வீகக் குடிமக்கள் ஆவர். அவர்களின் கலாச்சாரம் பாலினேசிய கடற்பயணம், உயிரோட்டமான வாய்மொழி மரபுகள் மற்றும் நிலத்துடனான ஆழமான ஆன்மீகப் பிணைப்புகளில் வேரூன்றிய ஒரு செழுமையான கலாச்சாரப் பாரம்பரியத்தை அவர்கள் கொண்டுள்ளனர். அவர்களின் வரலாறு, மாபெரும் கடல்கடந்த பயணங்கள், நுட்பமான பழங்குடி அமைப்புகள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த காலனித்துவ சந்திப்புகளை உள்ளடக்கியது. இது, இன்றும் தேசத்தை வடிவமைத்துக்கொண்டிருக்கும் ஒரு சக்திவாய்ந்த கலாச்சார மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தது.


மவோரி மக்களின் மூதாதையர்கள், வக்கா (படகுகள்) (waka (canoes)) மூலம் பசிபிக் பெருங்கடலைக் கடந்து பயணம் செய்து, சுமார் 13-ம் நூற்றாண்டில் நியூசிலாந்திற்கு வந்தடைந்த திறமையான பாலினேசிய மாலுமிகள் ஆவர். அவர்கள் கிழக்கு பாலினேசியாவிலிருந்து மொழி, மரபுகள் மற்றும் விவசாயப் பழக்கவழக்கங்களைத் தங்களுடன் கொண்டு வந்தனர்.


4. மிக சமீபத்தில், 2024-ம் ஆண்டில், 22 வயதான மாவோரி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹனா-ராவ்ஹிட்டி மைபி-கிளார்க், ஒரு சர்ச்சைக்குரிய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் சக்திவாய்ந்த மாவோரி ஹகா நடனத்தை ஆடியபோது, ​​ஹகா உலக அளவில் தலைப்புச் செய்தியானது.


ஹகாவின் கலாச்சார முக்கியத்துவம் என்ன?


5. ஹகா என்பது ஒரு தனி நடனம் அல்ல, மாறாக அது ஒரு பாரம்பரிய மாவோரி கலைநிகழ்ச்சிகளின் ஒரு வகையாகும். மிகவும் பிரபலமான ஹகாவான 'கா மாடே' (Ka Mate), 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இங்காட்டி டோவா (Ngāti Toa) பழங்குடியைச் சேர்ந்த மாவோரி தலைவரான தே ரௌபராஹாவால் இயற்றப்பட்டது. இது எதிரிகளிடமிருந்து மயிரிழையில் தப்பித்ததைக் கொண்டாடுவதோடு, மீள்திறன் மற்றும் ஒற்றுமை ஆகிய கருப்பொருள்களையும் ஒன்றிணைக்கிறது. பல்வேறு வகையான ஹகாக்கள் வெவ்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுகின்றன:




வரவேற்பு ஹாகா (Haka pōwhiri) : வருகையாளர்களை வரவேற்பதற்காக நிகழ்த்தப்படும் நடனம்.


ஹகா தபராஹி (Haka taparahi) : சமூக நிகழ்வுகளுக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு சடங்கு சார்ந்த, போர் அல்லாத நடனம் ஆகும்.


பெருபெரு (Peruperu) : ஆயுதங்களையும், தாவிச் செல்லும் அசைவுகளையும் கொண்ட ஒரு போர் ஹகா நடனம் ஆகும்.


இங்கேரி (Ngeri) : இது குறிப்பிட்ட அசைவுகள் இல்லாத ஒரு குறுகிய ஹகா ஆகும். இது பெரும்பாலும் தசைநாண்களை வலுப்படுத்தவும், மன உற்சாகத்தை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.


மனவா வேரா (Manawa wera) : இறுதிச் சடங்குகள் அல்லது நினைவேந்தல் நிகழ்ச்சிகளில் துக்கத்தை வெளிப்படுத்த நிகழ்த்தப்படும் ஒரு ஹகா நடனம் ஆகும்.


6. ஒவ்வொரு ஹகாவும் வலிமை, எதிர்ப்பு மற்றும் ஒற்றுமையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், அகன்ற கண்கள், வெளியே நீட்டிய நாக்கு மற்றும் வலுவான காலடிகள் போன்ற குறியீட்டு சைகைகளையும் முகபாவங்களையும் கொண்டுள்ளது.

7. குறிப்பிடத்தக்க வகையில், ஹகா மவோரி கலாச்சாரத்தின் ஒரு இன்றியமையாத அம்சமாகத் தொடர்ந்தாலும், அதன் முக்கியத்துவம் அதன் பாரம்பரிய எல்லைகளைத் தாண்டி வெகுவாக வளர்ந்துள்ளது.


விளையாட்டு மற்றும் உலகளாவிய அங்கீகாரம் (Sports and Global Recognition) : நியூசிலாந்து ரக்பி அணியான ஆல் பிளாக்ஸ் (All Blacks), ஒற்றுமையையும் மரியாதையையும் வெளிப்படுத்தும் விதமாகப் போட்டிகளுக்கு முன்பு ஹகாவை நிகழ்த்தி, அதை சர்வதேச அளவில் பிரபலப்படுத்தியது.


போராட்டம் மற்றும் ஒற்றுமை வெளிப்பாடு (Protest and Solidarity) : ஹகா நடனமானது, மாவோரி மக்களின் உரிமைகளைப் போற்றுவதற்கும் சமூக நீதிக்காகக் குரல் கொடுப்பதற்கும் அரசியல் போராட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


அரசு விழாக்கள் (State Ceremonies) : வருகைதரும் முக்கிய பிரமுகர்களைக் கௌரவிப்பதற்கும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளைக் கொண்டாடுவதும் இப்போது அரசு விழாக்களின் ஒரு அங்கமாக மாறியுள்ளது.


8. ஹகா நடனம், ஒற்றுமை, பெருமிதம் மற்றும் பழங்குடி மரபுகளுக்கான மரியாதை ஆகியவற்றின் சின்னமாக விளங்கி, உலகெங்கிலும் தொடர்ந்து பிரமிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதன் பரவலான மறுமலர்ச்சி, மாவோரி கலாச்சாரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பழங்குடி கலை வடிவங்களின் ஆழம் மற்றும் பன்முகத்தன்மைக்கான உலகளாவிய பாராட்டையும் வளர்க்கிறது.


இந்திய தற்காப்புக் கலை வடிவங்கள்


களரிப்பயட்டு (Kalaripayattu)


1. களரிப்பயட்டு என்பது மனம் மற்றும் உடல் ஒருங்கிணைப்பை நோக்கமாகக் கொண்ட, உலகின் மிகப் பழமையான மற்றும் அறிவியல் பூர்வமான தற்காப்புக் கலை வடிவங்களில் ஒன்றாகும். இது கேரளாவில் தோன்றி, அங்கு பரவலாகப் பயிற்றுவிக்கப்படுகிறது. புராணங்களின்படி, வீர முனிவரான பரசுராமர் களரிப்பயட்டை நிறுவியதாகக் கூறப்படுகிறது. மலையாளத்தில் 'களரி' என்ற சொல், பயட்டு என்று அழைக்கப்படும் இந்தத் தற்காப்புக் கலை கற்பிக்கப்படும் ஒரு பாரம்பரிய உடற்பயிற்சிக் கூடத்தைக் குறிக்கிறது.


2. களரிப்பயட்டு குறித்துப் பேசிய, டெல்லி களரி கேந்திரத்தின் குருக்களான ஷிண்டோ மேத்யூ, இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் - தளத்தில், களரிப் பயிற்சியில் “யானை, சிங்கம், காட்டுப்பன்றி, குதிரை, பாம்பு, சேவல், பூனை, மீன் ஆகிய எட்டு விலங்குகளின் தாக்குதல் மற்றும் தற்காப்பு முறைகள் இணைக்கப்பட்டுள்ளன” என்று கூறினார்.


3. களரிப்பயட்டில் வடக்கு மற்றும் தெற்கு என இரண்டு வகைகள் உள்ளன என்றும், அவை ஒன்றுக்கொன்று சற்றே மாறுபடுகின்றன என்றும் அவர் மேலும் கூறினார். “தெற்குப் பகுதியுடன் ஒப்பிடும்போது வடக்கில் அதிக ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், வடக்கு களரியில் அனைத்து அசைவுகளும் முன்னோக்கியும் பின்னோக்கியும் நேர்கோட்டில் இருக்கும். இருப்பினும், தெற்குப் பகுதியில், பயிற்சி செய்யும்போது மக்கள் எந்த திசையிலும் நகரலாம்.”


4. களரிப்பயட்டின் நான்கு நிலைகள் பின்வருமாறு :


(i) மைப்பயட்டு (Maippayattu) : இது உடலை வலுப்படுத்தும் ஒரு கட்டமாகும். இதில், ஒரு சண்டைக்குத் தயாராவதற்காக ஒருவருக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தக் கட்டத்தில் தேர்ச்சி பெற்ற பின்னரே, பயிற்சியாளர் அடுத்த கட்டப் பயிற்சிக்குச் செல்ல முடியும்.


(ii) கோல்தாரி (Kolthari) : இக்கட்டத்தில், ஒருவருக்குக் குட்டையான மற்றும் நீளமான மரத்தாலான ஆயுதங்களின் உதவியுடன் தாக்குதல் மற்றும் தற்காப்புக் கலை கற்பிக்கப்படுகிறது.


(iii) அங்கத்தாரி (Angathari) : மரத்தாலான ஆயுதங்களைக் கொண்டு சண்டையிடுவதில் உள்ள பயத்தை ஒருவர் கடந்து வந்த பிறகு, மூன்றாவது கட்டத்தில் கூர்மையான உலோக ஆயுதங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.


(iv) வெறும்கை (Verumkai) : இந்தக் கட்டத்தில், ஆய்வு அடிப்படையிலான வெறும் கைச் சண்டை அடங்கும். இதில் மாணவர்கள் உடற்கூறியல் (body anatomy) குறித்துக் கற்பிக்கப்படுகிறார்கள்; இதன் மூலம் உடலின் எந்தப் புள்ளிகளைத் தாக்கலாம், எவற்றைத் தாக்கக்கூடாது என்பது அவர்களுக்குத் தெரியவருகிறது.


5. வட கேரளாவின் (மலபார்) மூன்று பகுதிகளில் காணப்படும் களரிப்பயட்டின் முக்கிய பாணிகள் : 1) வட்டெந்திரிப்பு (Vattenthirippu) பாணி 2) அரப்புக்கை (Arappukkai) பாணி 3) பிள்ளத்தாங்கி (Pillathangi) பாணி ஆகியவை அடங்கும்.


கட்கா (Gatka)


கட்கா என்பது பஞ்சாப் மாநிலத்தில் தோன்றிய ஒரு தற்காப்புக் கலை வடிவமாகும். நிஹாங் சீக்கிய வீரர்களின் (Nihang Sikh warriors serves) இந்த பாரம்பரிய சண்டை முறையானது, தற்காப்புக்கான ஒரு வழியாகவும் ஒரு விளையாட்டாகவும் பயன்படுகிறது.


தாங்-டா (ஹுயென் லல்லோங்)  (Thang-Ta (Huiyen Lallong))


1. தாங்-டா (Thang-Ta) என்பது ஹுயென் லல்லோங் (Huiyen Lallong) என்றும் அழைக்கப்படும் பண்டைய மணிப்பூரி தற்காப்புக் கலையின் ஒரு பிரபலமான சொல்லாகும். வரலாற்றுரீதியாக, இடைக்காலத்தில் புவிசார் அரசியல் நிலப்பரப்பில் தாங்-டா ஒரு குறிப்பிடத்தக்க பங்கை வகித்தது.


2. மணிப்பூரில் உடல் தகுதி வாய்ந்த அனைத்து ஆண்களுக்கும் கட்டாய இராணுவ சேவையாக இருந்த ‘லல்லுப்’ (Lallup) அமைப்பின் ஒரு முக்கிய அங்கமாக இது இருந்தது. இந்த அமைப்பு, அரசு எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் எப்போதும் தயாராக இருப்பதை உறுதி செய்தது. மேலும், அப்பகுதியின் சுதந்திரத்தையும் மீள்திறனையும் பேணுவதில் தாங்-டா ஒரு முக்கியப் பங்காற்றியது.


3. ஒரு நிகழ்த்துக் கலை வடிவமாக, தாங்-டா அதன் போர்க்காலத் தோற்றத்தில் வேரூன்றியுள்ளது. காலனித்துவ காலத்தில் (1891-1947), தாங்-தா பயிற்சிக்குத் தடைசெய்யப்பட்டிருந்தாலும், தனிப்பட்ட ஆசிரியர்கள் அல்லது குருக்களால் நடத்தப்பட்ட இரகசிய இல்லப் பள்ளிகள் மூலம் இது அழியாமல் பாதுகாக்கப்பட்டது. 1949-ல் மணிப்பூர் இந்திய ஒன்றியத்துடன் இணைந்ததைத் தொடர்ந்து, தாங்-டா பொதுமக்களின் கவனத்தைப் பெறத் தொடங்கியதுடன், 1976 முதல் வெளிநாடுகளில் உள்ள விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டது. இன்று, இந்தக் கலை வடிவம் அதன் வளமான கலாச்சாரப் பாரம்பரியத்திற்காக மறுபரிசீலனை செய்யப்பட்டு கொண்டாடப்படுகிறது.


4. ஹுயென் லல்லோங் என்பது பல்வேறு நுட்பங்களையும் திறன்களையும் உள்ளடக்கிய ஒரு ஆற்றல்மிக்க தற்காப்புக் கலையாகும். அதன் முக்கிய நுட்பங்கள் பின்வருமாறு:




(i) தெங்கோ பால்பா (வாள் மற்றும் கேடயம்) (Thengou Palba (Sword and Shield)) : இது ஹுயென் லல்லோங்கின் ஒரு தனித்துவமான அம்சமாக, வீரர்கள் தாக்குதல் மற்றும் தற்காப்புத் திறன்களை வளர்த்துக் கொள்வதற்காக ஒரு பாரம்பரிய வாள் (தாங்) மற்றும் கேடயம் (சுங்) கொண்டு பயிற்சி செய்கிறார்கள்.


(ii) சரித் சரக் (ஆயுதமற்ற சண்டை) (Sarit Sarak (Unarmed Combat)) : பயிற்சியாளர்கள் தங்கள் உடல்களை ஆயுதங்களாகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்கிறார்கள். எதிரிகளைச் செயலிழக்கச் செய்ய, தாக்குதல்கள், உதைப்புகள், மூட்டுப் பூட்டுகள் மற்றும் தூக்கி வீசுதல் போன்ற நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர்.


(iii) காங்லோன் சாட்பா (பாய்ந்து உதைத்தல்) (Kanglon Chatpa (Leaping and Kicking)) : இத்தொழில்நுட்பம் வளைந்து கொடுக்கும் உடல் அசைவுகள் (acrobatic movements) மற்றும் உயரமான உதைகளுக்கும் முக்கியத்துவம் அளித்து, சண்டைக் கலைக்கு ஒரு கண்கவர் காட்சி அம்சத்தைச் சேர்க்கிறது.


(iv) தாவோமெய் (ஈட்டிச் சண்டை) (Thaomei (Spear Fighting)) : ஈட்டியைக் கொண்டு பயிற்சி செய்வது (தாவோமெய்) சுறுசுறுப்பு, துல்லியம் மற்றும் தொலைவிலிருந்து தாக்கும் திறனை மேம்படுத்துகிறது.


(v) தியானம் மற்றும் சுவாசப் பயிற்சிகள் (Meditation and Breathing Exercises) : மன ஒருமைப்பாடு, அமைதி மற்றும் உள் வலிமையை வளர்ப்பதற்காக ஹுயென் லல்லோங் தியானப் பயிற்சிகளை இணைத்துக்கொள்கிறார்.


5. ஹுயென் லல்லோங்கின் போர் முறையானது அதன் சரளமான தன்மை, சுறுசுறுப்பு மற்றும் தகவமைத்துக் கொள்ளும் திறன் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. இது தாக்குதல், மல்யுத்தம் மற்றும் ஆயுத அடிப்படையிலான போர் ஆகியவற்றின் கூறுகளை ஒருங்கிணைத்து, தற்காப்பிற்கான ஒரு பல்துறை மற்றும் பயனுள்ள தற்காப்பு முறையாக அமைகிறது.


Original Link: Maori Haka explained: History, significance and India’s martial art forms.

Share:

200 ஆண்டுகள் பழமையான ஜோத்புரி மொஜாரி காலணி புவிசார் குறியீடைப் பெற்றுள்ளது -குஷ்பூ குமாரி

200 ஆண்டுகள் பழமையான ஜோத்புரி மொஜாரி, புவிசார் குறியீடைப் (GI tag) பெற்றுள்ளது. இது ராஜஸ்தானின் புகழ்பெற்ற தோல் கைவினைக் கலையின் அடையாளத்தை மேலும் உயர்த்தியுள்ளது. புவிசார் குறியீடு (GI) பதிவகம், ஜோத்பூர் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் கிராம் விகாஸ் சேவா சன்ஸ்தான் ஆகிய அமைப்புகளிடம் புவிசார் குறியீட்டுச் சான்றிதழை வழங்கியது. இந்த அங்கீகாரம் ஜோத்பூரின் கைவினைப் பொருட்கள் துறைக்கு ஒரு முக்கிய திருப்புமுனையாகும்.


தற்போதைய செய்தி 



ஜோத்பூரின் ஏறக்குறைய 200 ஆண்டுகள் பழமையான மொஜாரி காலணி  கைவினைக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு (GI) வழங்கியுள்ளது. இது அந்த பாரம்பரிய காலணிக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தையும், உலகளாவிய வர்த்தக முத்திரைக்கு ஒரு உத்வேகத்தையும் அளித்துள்ளது. புவியியல் குறியீட்டுப் பதிவகம், ஜோத்பூர் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் கிராம விகாஸ் சேவா சன்ஸ்தான் ஆகியவற்றுக்கு புவியியல் குறியீட்டுச் சான்றிதழை வழங்கியது. இந்த அங்கீகாரம் ஜோத்பூரின் கைவினைத் தொழிலுக்கு ஒரு முக்கிய மைல்கல்லாகும்.


முக்கிய அம்சங்கள்:


1. ஜோத்பூரி மொஜாரிகள் (Jodhpuri Mojari), ஜினகர் என்ற சாதியினரால் உருவாக்கப்படுகின்றன. ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இவர்கள் பாரம்பரியமாக சேணம் தயாரிப்பாளர்களாக (saddle makers) இருந்தனர். ஒரு காலத்தில் அரச குடும்பத்தினரால் ஆதரிக்கப்பட்ட மொஜாரி, படிப்படியாக ஒரு தனித்துவமான கைவினைப் பொருளாக உருவெடுத்து, அந்த நகரத்திற்கு ஒரு தனி அடையாளத்தை வழங்கியது. இன்று, ஜோத்பூரில் 5,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் கைவினைகலைஞர்கள் இந்தத் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.


2. கோட்டா பாரம்பரிய சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் மதன் மீனா, இந்த சமூகம்  250 ஆண்டுகளுக்கு முன்பு காலணி தயாரிக்கும் தொழிலை மேற்கொண்டது. அவர்கள் படைகளுக்காக ஜீன் (சேணம்) மற்றும் மியான் (வாள்கள், கத்திகளுக்கான தோல் உறைகள்) ஆகியவற்றைத் தயாரித்தனர். ஜீன் (சேணம்) தயாரிக்கும் அவர்களின் பாரம்பரியத்தின் காரணமாக, அவர்கள் ஜிங்கார்கள் (ஜீன் தயாரிப்பாளர்கள்) என்று அழைக்கப்பட்டதாக கூறினார்.



3. அந்தச் சமூகம் காலணி தயாரிப்புத் தொழிலுக்கு மாறியதைக் கூறும் ஒரு புராணக்கதையை மீனா மேற்கோள் காட்டினார். ஜோத்பூர் அரசரின் மகளின் திருமணத்தின் போது, ஜிங்கர்கள் ஒரு ஜோடி தோல் காலணிகளைப் பரிசாக வழங்க முடிவு செய்தனர். அதில் ஒரு காலணியை மற்றொரு காலணிக்குள் மிகவும் நேர்த்தியாக மறைத்து வைத்திருந்ததால், வெளியில் இருந்து பார்த்தால் அது ஒரே காலணியாகத் தோன்றியது. அவர்களின் கைவினைத் திறமையால் கவரப்பட்ட அரசர், அவர்களின் கைத்திறனைப் பாராட்டி, அவர்களை காலணி செய்யும் தொழிலை மேற்கொள்ளுமாறு பரிந்துரைத்தார்.


4. ஆண்களும் பெண்களும் அணியும் மொஜாரி, ராஜஸ்தானின் வெப்பமான காலநிலைக்கு ஏற்றதாக இருந்தது. இது காற்றோட்டமானது, நீண்ட தூரம் நடப்பதற்கு எளிதானது, உறுதியானது மற்றும் நெகிழ்வானது. மேலும், வீடுகளிலும் கோவில்களிலும் எளிதாகக் கழற்றிவிடக்கூடியது.  பாதத்தின் மேற்பகுதி, பக்கவாட்டு மற்றும் பின்பகுதி  திறந்த நிலையில் இருக்கும் ஸ்லிப்-ஆன் (Slip-on) வடிவில் இந்தக்காலணிகள் உருவாக்கப்பட்டன.


5. இன்று, ஜோத்புரி மொஜாரி எந்தவொரு நிகழ்விற்கும் ஏற்ற வகையில் உள்ளூர் கைவினை கலைஞர்களால் அழகாக எம்ப்ராய்டரி செய்யப்படுகிறது. இயந்திரத்தால் செய்யப்பட்ட ஒரு  தோற்றமுடைய பொருட்களின் வருகையால், இந்த பாரம்பரிய கைவினைத் தொழில் நிலைத்திருப்பதற்கு இந்த அங்கீகாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.


6. ஜோத்புரி மொஜாரிக்கான உள்நாட்டுச் சந்தையில் ₹100 கோடியாகவும், ஏற்றுமதி ₹10 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. புவிசார் குறியீடு (GI tag) ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் மூலம், ஏற்றுமதி அதிகரித்து, இரண்டு ஆண்டுகளில் வணிகம் இரண்டு மடங்காகும் என்று தொழில்துறை வல்லுநர்கள் நம்புகின்றனர்.


இந்தியாவில் புவிசார் குறியீடு (GI tag) எவ்வாறு வழங்கப்படுகிறது?


1. பொருட்களின் புவிசார் குறியீடுகள், ஒரு பொருள் உருவான இடத்தைக் குறிப்பிடுகின்றன. ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதி, பிராந்தியம் அல்லது நாட்டில் உருவானதன் காரணமாக, தரம் மற்றும் தனித்துவத்திற்கான உத்தரவாதத்தை அவை அளிப்பதால், இது போன்ற குறியீடுகள் வழங்கப்படுகின்றன.


2. ஒரு தனித்துவமான சட்டமாகிய பொருட்களின் புவியியல் குறியீடுகள்,சட்டமாகிய 1999-ஆம் ஆண்டு பதிவு மற்றும் பாதுகாப்பு சட்டம், (Geographical Indications of Goods (Registration and Protection) Act)  இது போன்ற பொருட்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் 2003-ஆம் ஆண்டு செப்டம்பர் 15 முதல் அமலுக்கு வந்தது. மேலும், உலக வர்த்தக அமைப்பின் (WTO) அறிவுசார் சொத்துரிமைகளின் வர்த்தகத் தொடர்பான அம்சங்கள் ஒப்பந்தம் (Trade-Related Aspects of Intellectual Property Rights (TRIPS)) விதிகளுக்கு ஏற்ற வகையிலும் இந்தச்சட்டம் இயற்றப்பட்டது.


3. இது, பொருட்கள் தொடர்பான புவிசார் குறியீடுகளைப் பதிவு செய்வதற்கும், பதிவுசெய்யப்பட்ட புவிசார் குறியீட்டிற்கு வழங்கப்பட்ட அறிவுசார் சொத்துரிமைகளை மோசடியான பயன்பாட்டிலிருந்து தடுப்பதற்கும் பாதுகாப்பதற்கும் ஒரு சட்டக் கட்டமைப்பை வழங்குகிறது. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின்கீழ் உள்ள, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (Department for Promotion of Industry and Internal Trade (DPIIT)), புவிசார் குறியீடுகளை வழங்குகிறது.


4. மேலும், 2016-ஆம் ஆண்டின் தேசிய அறிவுசார் சொத்துரிமைக் கொள்கையானது, நாடு முழுவதும் புபுவிசார் குறியீடுகளை (GI) ஊக்குவிப்பதில் வலுவான முக்கியத்துவத்தை வழங்குகிறது. இது தொடர்பாக, புவிசார் குறியீடுகள் உட்பட அறிவுசார் சொத்துரிமைகள் தொடர்பான பிரச்சினைகளில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவும், கொள்கையில் அடையாளம் காணப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றவும், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின்கீழ் உள்ள தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT) புவிசார் குறியீடுகளை (GI) வழங்குகிறது.


இந்தியாவில் புவிசார் குறியீட்டின் (GI tag) முதல் தயாரிப்பு, 2004-05-ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட டார்ஜிலிங் தேநீர் ஆகும்.


5. தனிநபர்கள், உற்பத்தியாளர்கள், அமைப்புகள் அல்லது உற்பத்தியாளர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு அதிகார அமைப்பும் புவிசார் குறியீட்டுப்பதிவுக்கு விண்ணப்பிக்கலாம். இந்தச்செயல்முறையானது, மத்திய அரசால் சென்னையில் நிறுவப்பட்டுள்ள  புவிசார் குறியீடுகள் பதிவகத்தில் (Geographical Indications Registry) விண்ணப்பத்தைத் தாக்கல் செய்யும் முறையை கொண்டுள்ளது.


6. அதன்பிறகு, தேர்வாளர் அந்த அடையாள அட்டைக்கான விண்ணப்பத்தை ஆய்வு செய்து கவனமாக ஆராய்வார். ஏதேனும், குறைபாடுகள் இருந்தால், விண்ணப்பதாரர் அவற்றை ஒரு மாதத்திற்குள் சரிசெய்து கொள்ளலாம். மேலும், விண்ணப்பத்தின்மீது பதிவாளருக்கு ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், விளக்கம் கோரும் அறிவிப்பு வழங்கப்படும். அந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு, அதற்கேற்ப முடிவு எடுக்கப்படும். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், அது புவிசார் குறியீட்டு இதழில் (GI Journal) வெளியிடப்படும்.




7. எந்தவொரு நபரும் ஆட்சேபனை தெரிவிக்கலாம். அறிவிப்பு வெளியிடப்பட்ட 3 மாதங்களுக்குள் எதிர்ப்பு அறிவிப்பு தாக்கல் செய்யப்பட வேண்டும். விண்ணப்பதாரர் இதற்கு 2 மாதங்களுக்குள் பதிலளிக்கலாம். அவ்வாறு செய்யத் தவறினால், அவர் தனது விண்ணப்பத்தைக் கைவிட்டதாகக் கருதப்படுவார். பின்னர், தரப்பினர் தமது சான்றுகளை முன்வைப்பார்கள். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தீர்ப்பளிக்கப்படும். ஒரு பொது அறிவிப்பு இறுதியாக ஏற்றுக்கொள்ளப்படும்போது, ​​அது பதிவு செய்யப்படும்.


8. ஒரு பொருளுக்கு இந்த முத்திரை வழங்கப்பட்டவுடன், எந்த ஒரு நபரோ அல்லது நிறுவனமோ அதே பெயரில் அதுபோன்ற  பொருளை விற்க முடியாது. இந்த முத்திரை 10 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் தன்மை கொண்டுள்ளது. அதன் பிறகு அதை புதுப்பித்துக் கொள்ளலாம். புவிசார் குறியீட்டுப் பதிவின் மற்ற நன்மைகளில், அந்தப் பொருளுக்குச் சட்டப் பாதுகாப்பு அளித்தல், மற்றவர்களால் அங்கீகரிக்கப்படாத பயன்பாட்டைத் தடுத்தல் மற்றும் ஏற்றுமதியை ஊக்குவித்தல் ஆகியவை அடங்கும்.


9. புவிசார் குறியீட்டுப் பதிவு (GI registration) ஒரு பகுதிக்கு வழங்கப்படுகிறது, வர்த்தகருக்கு அல்ல. ஆனால், ஒரு பொருளுக்குப் பதிவு கிடைத்தவுடன், அந்தப்பொருளைக் கையாளும் வர்த்தகர்கள் புவிசார் குறியீட்டுச் சின்னத்துடன் அதை விற்க விண்ணப்பிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட வர்த்தகர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவமான புவிசார் குறியீட்டு எண் ஒதுக்கப்படும்.


சமீபத்தில் புவிசார்  குறியீடு (GI Tag) பெற்ற பொருட்கள்


1. சந்தன்நகரின் ஜோல்போரா சந்தேஷ் மற்றும் ஜனயின் மனோகரா: ஜூன் மாதத்தில், மேற்கு வங்கம் மேலும் நான்கு தயாரிப்புகளுக்கான புவிசார் குறியீடுகளைப் பெற்றது. இதன் மூலம், அந்த மாநிலத்தில் புவிசார்  குறியீடு அங்கீகாரம் பெற்ற பொருட்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது. சந்தன்நகரின் ஜோல்போரா சந்தேஷ், ஜனாயின் மோனோஹாரா மற்றும் பாலகரின் பாரம்பரிய மரப் படகுகளும் அங்கீகாரம் பெற்றுள்ளன.



2. மாண்டுவின் 'குராசானி இம்லி': மத்தியப் பிரதேசத்தின் மாண்டுப்பகுதியில் காணப்படும் புகழ்பெற்ற பாவோபாப் மரங்களின் பழமான குராசானி இம்லி, ஜூன் 2026-ல் புவிசார் குறியீடு பெற்றது. இந்தப்பழம் அதன் தனித்துவமான இனிப்பு-புளிப்புச் சுவை மற்றும் அதிக ஊட்டச்சத்திற்காகப் பெயர் பெற்றது.


3. கடந்த மாதம் ஜார்க்கண்டின் பகையா பட்டு, குச்சாய் பட்டு, முண்டா நகைகள் மற்றும் மூங்கில் கைவினைப் பொருட்கள் புவிசார் குறியீட்டு (GI) அங்கீகாரத்தைப் பெற்றன. இது பாரம்பரிய அறிவை அடிப்படையாகக் கொண்ட கைவினைக்கலைகளுக்குத் தேசிய அங்கீகாரத்தை அளிக்கிறது. முண்டா சமூகத்தின் முண்டா நகைகள், அவற்றின் தனித்துவமான வடிவமைப்பு, பாரம்பரிய கைவினைத் திறன் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்திற்காகப் புகழ்பெற்றவை. அவை அடையாளத்தையும் பாரம்பரியத்தையும்  வெளிக்காட்டுகின்றன.

4. ஆந்திரப் பிரதேசத்தின் போண்டூரு காதி: போண்டூரு காதி என்பது ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள, உள்ளூரில் பட்நுலு என்று அழைக்கப்படும் போண்டூரு கிராமத்தில் தயாரிக்கப்படும் ஒரு பாரம்பரிய கைத்தறி பருத்தித் (traditional hand-woven cotton fabric) துணியாகும். அதேபகுதியில் விளையும் மலைப் பருத்தி, புனசா பருத்தி மற்றும் சிவப்புப் பருத்தி ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்தத் துணி தயாரிக்கப்படுகிறது. இதன் தனித்துவமான அம்சங்களில் ஒன்று, பருத்தியைச் சுத்தம் செய்ய வாலுகா மீனின் தாடை எலும்பைப் பயன்படுத்துவதாகும். இது உலகில் வேறு எந்த பகுதியில் இல்லாத ஒரு நடைமுறையாகும்.

 
Share: