Showing posts with label SIR. Show all posts
Showing posts with label SIR. Show all posts

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து, டிஜிட்டல் ஆளுகை (Digital Governance) மற்றும் ஆதார் (Aadhaar) திட்டத்தின் முன்னோடியின் கருத்தைக் கேளுங்கள்.

ஆர். எஸ். சர்மா  வாதிடுவதுபோல், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்காக ஆதாரை நம்பகமான முகவரி ஆதாரமாக (Credible Address Proof) ஏற்காமல் இருப்பதன் மூலம், அரசு தானே உருவாக்கியுள்ள ஆதார் தரவுத்தளத்தை (Aadhaar Database) பயனுள்ள முறையில் பயன்படுத்தத் தவறுகிறது. அந்த தரவுத்தளத்தில் உயிர்அடையாளத் தகவல்கள் (Biometric Details) மற்றும் வயது தொடர்பான ஆதாரங்களும் இடம்பெற்றுள்ளன.

நாட்டின் டிஜிட்டல் நிர்வாகத் துறையின் முன்னோடிகளில் ஒருவர், வாக்காளர் பட்டியல் ‘சிறப்பு தீவிர திருத்தப்பணி (Special Intensive Revision (SIR))’ குறித்து முன்வைத்துள்ள விமர்சனங்களை அரசும் இந்தியத் தேர்தல் ஆணையமும் (ECI) கவனமாகப் பரிசீலிக்க வேண்டும். இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின்' (Unique Identification Authority of India (UIDAI)) நிறுவன இயக்குநராக, நலத்திட்டங்களைச் செயல்படுத்த அரசுகள் தற்போது சார்ந்திருக்கும் கட்டமைப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றிய ராம் சேவக் சர்மா, இந்த செயல்முறை தொடங்கியதிலிருந்தே எழுப்பப்பட்டு வரும் கவலைகளை இந்தச்செய்தித்தாளில் வெளியான ஒரு கட்டுரையின் மூலம் வலியுறுத்தியுள்ளார். வாக்காளர் பட்டியலைப் புதுப்பிப்பதில் உள்ள நியாயமான தேவைகளுக்கும் (இரட்டைப் பதிவுகள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை நீக்குதல் மற்றும் தகுதியுள்ள புதிய குடிமக்களைச் சேர்த்தல்), அதேசமயம் தகுதியுள்ளவர்களைத் தவறாகப் பட்டியலில் இருந்து நீக்கிவிடாமல் இருப்பதற்கான கட்டாயத்திற்கும் இடையே சரியான சமநிலையைப் பாதுகாக்கத் தவறியதற்காகத் தேர்தல் ஆணையம் விமர்சனங்ககளை எதிர் கொண்டுள்ளது. தகுதியை நிரூபிப்பதற்கான சுமை முக்கியமாற்றதாகவும் நியாயமற்ற முறையிலும் குடிமக்கள் மீதே சுமத்தப்படுவதாகப் பல்வேறு அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. பிறப்பு, வசிப்பிடம் மற்றும் குடியுரிமைக்கான சான்றுகளைச் சமர்ப்பிக்குமாறு மக்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், சர்மா சுட்டிக்காட்டுவது போல, அது போன்ற ஆவணங்களைப் பராமரிப்பதில் அரசே பொறுப்புடன் செயல்பட்டதில்லை என்பதே உண்மையாக உள்ளது. 


ஆதார் திட்டத்தின் மூலம், அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான (Identity Verification) தொழில்நுட்பரீதியாக மிகவும் மேம்பட்ட அமைப்பை இந்தியா உருவாக்கியுள்ளது. ஆனால், ஆர். எஸ். சர்மா  கூறுவதுபோல், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்ததிற்க்காக ஆதாரை நம்பகமான முகவரி ஆதாரமாக (Credible Address Proof) ஏற்காமல் இருப்பதன் மூலம், உயிர்அடையாளத் தகவல்கள் (Biometric Details) மற்றும் வயது ஆதாரம் ஆகியவற்றையும் கொண்டுள்ள, அரசே உருவாக்கியுள்ள அந்தத் தரவுத்தளத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்த அரசு தவறுகிறது. இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் (Digital Public Infrastructure (DPI)) அடிப்படை நோக்கம், குடிமக்களிடம் அதிக ஆவணங்களைக் கேட்பதல்ல. மாறாக, குறைவான தகவல்கள் மற்றும் ஆவணங்களின் மூலமே சேவைகளை வழங்குவதாகும். ஆனால், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடைமுறை இதற்கு நேர்மாறான திசையில் செல்வதாகத் தெரிகிறது. ஆர். எஸ். சர்மா கூறுவதுபோல், “நாடு ஏற்கனவே தீர்வு கண்டுவிட்ட ஒரு பிரச்சினையை, தேவையற்ற வகையில் ஆவணங்களைச் சேகரிக்கும் (Document-heavy) முறையின் மூலம் மீண்டும் தீர்க்க முயல்கிறது


வாக்குரிமை பறிக்கப்படும் (Disenfranchisement) சாத்தியக்கூறைக் கொண்ட ஒரு நடைமுறைக்கு, மிக நுணுக்கமான அரசியலமைப்பு ஆய்வு தேவைப்படுகிறது. எனவே, அரசாங்கமும் இந்தியத் தேர்தல் ஆணையமும், சில காலத்திற்கு முன்பு வரை இந்த அமைப்பின் ஓர் அங்கமாக இருந்த ஒருவரின் வார்த்தைகளைப் புறக்கணிக்க இயலாது: “தனது கடமைகளைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளும் ஒரு அரசு, தங்களது மக்கள் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கச் செய்வதில்லை.” வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த அறிக்கை (SIR) செயல்முறை தொடங்கியபோது இந்தியத் தேர்தல் ஆணையத்தை அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்குமாறு வலியுறுத்தியது. ஆனால், மேற்கு வங்கத்தில் அந்த ஆய்வு நடத்தப்பட்டபோது குறைந்த விழிப்புணர்வுடன் இருந்த உச்சநீதிமன்றம், ஷர்மாவின் எச்சரிக்கையைக் கவனத்தில் கொள்ளுமாறு தேர்தல் ஆணையத்தை வலியுறுத்த வேண்டும்: இந்தியாவிடம் தற்போது உலகம் உற்றுநோக்கும் வகையிலான ஒரு டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (Digital Public Infrastructure (DPI)) உள்ளது. அதில் எதையும் நம்ப முடியாது என்று கூறுவது   தவறானதாக  அமையும்.



Share:

தேர்தல் ஆணையத்தின், புதிய இணையவழிப் பதிவு விதிமுறை வாக்காளர்களுக்கு எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும்? -தாமினி நாத்

படிவம்-6 (Form-6) என்பது புதிய வாக்காளர்களைப் பதிவு செய்வதற்கான படிவமாகும். தற்போது இணையவழியில் சமர்ப்பிக்கக் கிடைக்கும் இந்தப் படிவத்தின் பதிப்பில், விண்ணப்பதாரர்களின் பெற்றோர் கடந்த சிறப்பு தீவிர திருத்தத்தில் (SIR) இருந்தார்களா இல்லையா என்பதற்கு அவர்கள் பதிலளிக்க வேண்டிய ஒரு புதிய பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும், இத்தகைய நிபந்தனையைச் சேர்ப்பதற்கு விதிகளில் திருத்தம் மற்றும் அரசிதழ் அறிவிப்பு ஆகியவை தேவைப்படுகின்றன.




ECINET : ECINET என்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளம் (Election Commission of India Network) ஆகும். இது வாக்காளர்கள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கான அனைத்து தேர்தல் சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கும் ஒரு ஒற்றை புள்ளி டிஜிட்டல் தளமாக (Single Point Digital Platform) செயல்படுகிறது.


இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (ECI) இணையவழி வாக்காளர் பதிவுத் தளமான ECINET, தற்போது விண்ணப்பதாரர்கள் வாக்காளர் பட்டியலின் கடந்தகால சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) போது பெற்றோரின் நிலை குறித்த விவரங்களை விண்ணப்பதாரர்கள் இப்போது இந்த இணையதளத்தில் வழங்க வேண்டும். மேலும், வாக்குச்சாவடி எண் மற்றும் அந்த வாக்காளர் பட்டியலில் பெற்றோரின் பெயர் இடம்பெற்றுள்ள வரிசை எண் ஆகியவற்றையும் விண்ணப்பதாரர்கள் குறிப்பிட வேண்டும்.


புதிய வாக்காளர் பதிவுகளுக்கான சட்டப்பூர்வ படிவமான படிவம்-6, சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறையின்கீழ் இன்னும் திருத்தப்படவில்லை என்ற நிலையிலும் இது நிகழ்கிறது. இந்த புதிய நடைமுறை குறித்தும், அது புதிய வாக்காளர்களுக்கு இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தும் அறிய வேண்டிய தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.


புதிய நடைமுறை என்ன?


தேர்தல் ஆணையத்தின் ECINET இணையதளம், புதிய வாக்காளர் பதிவுகள், ஏற்கனவே உள்ள வாக்காளர் பட்டியல்களில் மாற்றங்கள் மற்றும் நீக்கங்களுக்கான படிவங்களைச் சமர்ப்பிக்க பயனர்களை அனுமதிக்கிறது.


1950-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (Representation of the People Act) மற்றும் 1960-ம் ஆண்டின் வாக்காளர் பதிவு விதிகளின் (Registration of Electors Rules) கீழ் வாக்காளர் பதிவுப் படிவமான படிவம்-6 இன் இணையவழிச் சமர்ப்பிப்புப் பதிப்பில், தற்போது ஒரு புதிய பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. அதில், விண்ணப்பதாரர்களின் பெற்றோர் முந்தைய சிறப்பு தீவிர திருத்தத்தில் (SIR) இருந்தார்களா இல்லையா என்பதற்கு அவர்கள் பதிலளிக்க வேண்டும். இது “உறுதிமொழிப் படிவம்” (declaration form) எனப்படும் ஒரு பிரிவின்கீழ் வருகிறது.


ஆம் எனில், அவர்கள் சட்டமன்றத் தொகுதி எண், வாக்குச் சாவடி எண் (பகுதி எண் என அழைக்கப்படுவது) மற்றும் தங்களது தந்தை அல்லது தாய் கடைசியாக பதிவான வாக்காளர் பாட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தில் (SIR) பதிவு செய்யப்பட்டிருந்த வரிசை எண் ஆகியவற்றை வழங்க வேண்டும்.


இதுவரை, கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் 10 மாநிலங்கள் மற்றும் மூன்று ஒன்றியப் பிரதேசங்களில் தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) நிறைவு செய்துள்ளது. மீதமுள்ள, மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களைப் பொறுத்தவரை, கடைசியாக சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலில் 2000-களின் முற்பகுதியில் நடத்தப்பட்ட மீளாய்வைக் குறிக்கிறது.


தற்போது மற்ற 19 மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களில் இந்த நடவடிக்கை நடைபெற்று வரும் நிலையில், இமாச்சலப் பிரதேசம், லடாக் மற்றும் ஜம்மு & காஷ்மீருக்கான சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை.


அஸ்ஸாமைப் பொறுத்தவரை, மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens (NRC)) பணி நிறைவடையும் வரை சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) நடத்த வேண்டாம் என தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.


பீகாரைத் தவிர, சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நிறைவடைந்த அல்லது நடைபெற்று வரும் அனைத்து மாநிலங்களிலும், தேர்தல் ஆணையத்தின் இணையவழி படிவம்-6 சமர்ப்பிப்புச் செயல்முறையில், விண்ணப்பதாரர் படிவத்தின் ஏற்கனவே உள்ள படிவம் 6-ன் பிரிவுகளுக்கு இடையில் தங்கள் பெற்றோரைப் பற்றிய புதிய “உறுதிமொழிப் படிவத்தை” நிரப்ப வேண்டும்.





விண்ணப்பதாரரின் பெற்றோர் முந்தைய சிறப்பு தீவிர திருத்தத்தில் (SIR) இடம்பெறவில்லை என்றால், விண்ணப்பதாரர் அந்த விருப்பத் தேர்வைத் தேர்ந்தெடுத்து, பெற்றோரின் பெயர்களையும், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (Electors Photo Identity Card (EPIC)) எண்கள் இருந்தால் அவற்றையும் வழங்க வேண்டும்.


சட்டம் என்ன சொல்கிறது?


அரசியலமைப்பின் 326-வது பிரிவு, சட்டப்படி தகுதி நீக்கம் செய்யப்படாத வரையில், ஒரு குறிப்பிட்ட சட்டமன்றத் தொகுதியில் இயல்பாக வசிக்கும் வயதுவந்த அனைத்து குடிமக்களுக்கும் வாக்காளராகப் பதிவு செய்யும் உரிமையை உறுதி செய்கிறது.


1950-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (Representation of the People Act), தேர்தல்களை நடத்துவது மற்றும் வாக்காளர்களைப் பதிவு செய்வது தொடர்பான விதிகளை உருவாக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்குகிறது.


மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் ((Representation of the People Act(RPA)) பிரிவு 28 ஆனது, “விதிமுறைகளை உருவாக்கும் அதிகாரம்” என்பதை, “மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசித்த பின்னர், அதிகாரப்பூர்வ அரசாணை அறிவிக்கை மூலம், இந்தச் சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான விதிகளை உருவாக்கலாம்” என்று கூறுகிறது. மேலும், இந்தச் சட்டத்தின்கீழ் உருவாக்கப்படும் ஒவ்வொரு விதியும், “உருவாக்கப்பட்ட பிறகு கூடிய விரைவில், நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு அவையின் முன்பும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்” என்றும் அது கூறுகிறது.


படிவம்-6 என்பது, அந்தச் சட்டத்திலிருந்து உருவான 1960-ம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகளின் ஒரு பகுதியாகும். எனவே, படிவத்தில் ஏதேனும் மாற்றம் செய்வதற்கு, சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் திருத்தம் மற்றும் அரசிதழ் அறிவிப்பு தேவைப்படும்.




திருத்தம் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா?


இல்லை, தேர்தல் ஆணையம் முதன்முதலில் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) அறிவித்த ஜூன் 24, 2025 முதல் தற்போது வரை, மின்-அரசிதழ் (e-Gazette) இணையதளத்தில் கிடைக்கும் அறிவிப்புகளின்படி, சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் படிவம்-6-ல் எந்த மாற்றத்தையும் இன்னும் அறிவிக்கவில்லை.


உண்மையில், தேர்தல் ஆணையத்தின் ECINET இணையதளத்தில், தேர்தல் அதிகாரிகளிடம் நேரில் சமர்ப்பிப்பதற்காகக் கிடைக்கும் படிவம் 6-ல், புதிய சிறப்பு தீவிர திருத்த (SIR) "உறுதிமொழிப் படிவம்" (declaration form) பகுதி இடம்பெறவில்லை. இதிலிருந்து, முறையான நடைமுறைகளின்படி அந்தப் படிவம் திருத்தப்படவில்லை என்பது தெளிவாகிறது.


ஏதேனும் திருத்தம் செய்யப்பட்டதா என்பது குறித்தும், புதிய அறிவிப்பு ECINET இணையதளத்தில் எப்போது வெளியிடப்பட்டது என்பது குறித்தும் விடுக்கப்பட்ட கருத்துகளுக்கான கோரிக்கைகளுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்கவில்லை.


புதிய வாக்காளர்களுக்கு இதன் பொருள் என்ன?


முக்கியமாக சமீபத்தில் 18 வயதை எட்டிய புதிய விண்ணப்பதாரர்கள், இப்போது தங்களையோ அல்லது தங்கள் பெற்றோரையோ முந்தைய சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பதிவுகளுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றம் குறித்து தேர்தல் ஆணையம் இன்னும் கருத்து தெரிவிக்கவோ அல்லது அறிவிக்கவோ இல்லை என்பதால், விவரங்களை வழங்க முடியாதவர்கள் கடுமையான விசாரணைக்கு உள்ளாக்கப்படுவார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.


இதுவரை ஆண்டுதோறும் செய்யப்பட்டு வந்தது போல வாக்காளர் பட்டியல்களைத் திருத்துவதற்குப் பதிலாக, புதிதாகப் பட்டியல்களைத் தயாரித்து, முன்னெப்போதும் இல்லாத வகையில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தத்தை (SIR) நடத்திவரும் இவ்வேளையில், இதற்கான அறிவிப்பின் அறிமுகம் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது.


முன்பு ஆணையம் நடத்திய வாக்காளர் பட்டியலின், தீவிரத் திருத்த நடவடிக்கைகளின்போது, ​​குடியுரிமை உள்ளிட்ட தகுதிகளை நிரூபிப்பதற்கான படிவங்களையும் ஆவணங்களையும் அனைத்து வாக்காளர்களும் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இருந்ததில்லை; ஆனால் தற்போதைய சிறப்பு தீவிர திருத்த (SIR) நடைமுறையில் அது அவசியமாகிறது.


தேர்தல் ஆணையத் தரவுகளின்படி, இதுவரை 13 மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களில் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) நிறைவடைந்துள்ளது. இதன் விளைவாக, 5.58 கோடி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் (Booth Level Officers) மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சம்பந்தப்பட்டவர்கள் இறந்துபோனது, வேறு இடத்திற்குக் குடிபெயர்ந்தது, நீண்ட காலமாக வசிப்பிடத்திலில்லாதது அல்லது பல இடங்களில் பெயர்களைப் பதிவு செய்திருந்தது ஆகியவை இதற்கான முக்கியக் காரணங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன.


மேற்கு வங்கத்தில், ஆவணங்களைச் சமர்ப்பித்த 27 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள், முன்னெப்போதும் இல்லாத ஒரு நீதித்துறைத் தீர்ப்பளிப்பு செயல்முறையின் மூலம் நீக்கப்பட்டுள்ளன. அதேவேளையில், அவர்களுடைய மேல்முறையீடுகள் தற்போது மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களில் நிலுவையில் உள்ளன. இந்த நடவடிக்கையில் நீக்கப்பட்டவர்களின் பிள்ளைகளின் வாக்காளர் பதிவில், சிறப்பு தீவிர திருத்த (SIR) அறிவிப்பு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை.


Original Link: What the Election Commission’s new online registration requirement means for voters?.

Share:

அதிகாரப்பூர்வ ஆவணங்கள் இல்லாவிட்டாலும், ஒரு நாட்டைச் சார்ந்தவராக வாழ்வதற்கான உரிமை குறித்து… - சுஹ்ரித் பார்த்தசாரதி

 அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலான மக்களாட்சியில், குடியுரிமையை நிர்ணயிக்கும் அமைப்பில், ஆவணங்களைவிட மனித நலனுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.


2026-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 24-ஆம் தேதி, இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் (Ministry of External Affairs (MEA)) உறுப்பினர் ஒருவர்  ஒரு அறிக்கையை வெளியிட்டார். இந்திய கடவுச்சீட்டு என்பது ஒரு "பயண ஆவணம்" (travel document) என்றும், அது "குடியுரிமை ஆவணம்" (citizenship document) அல்ல என்றும் கூறினார். இந்தக் கூற்று ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியது. கடவுச்சீட்டே போதுமானதாக இல்லையென்றால், வேறு எந்த ஆவணம் போதுமானதாக இருக்கும் என்பதே பலரின் கேள்வியாக இருந்தது.


இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) அறிக்கையும் அது எழுப்பும் கேள்விகளும் திசைதிருப்பும் ஒரு செயலாகவே தெரிகின்றன. இந்திய அரசாங்கம் "பொது நலன்" கருதி மிக அவசியமானதாகக் கருதும் சில விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே, இந்தியக் குடிமகன் அல்லாத ஒருவருக்குப் கடவுச்சீட்டு வழங்கப்பட முடியும். எனவே, அரசாங்கம் இந்தச் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தும் வழக்குகளைத் தவிர்த்து, மற்ற அனைத்து நிலைகளிலும் ஒரு கடவுச்சீட்டு என்பது ஒரு நபரின் குடியுரிமைக்கான முழுமையான மற்றும் உறுதியான சான்றாகவே கருதப்பட வேண்டும்.



ஒருவர் தனது உண்மையான குடியுரிமை நிலையை மறைத்து இந்த ஆவணத்தைப் பெற்றுள்ளார் என்பதைச் சட்டத்தின்படி நிரூபிப்பதற்கான உரிமை அரசாங்கத்திற்கு இருக்கலாம். ஆனால், அதற்காக ஒரு கடவுச்சீட்டை வெறும் பயண ஆவணம் மட்டுமே என்று கூறி முழுமையாக நிராகரித்துவிட முடியாது.


கண்காணிப்புக்குள்ளாகும் குடியுரிமை 


வெளியுறவுத் துறை அமைச்சகம் (MEA) வெளியிட்ட இந்த அறிக்கை, அரசியல் மற்றும் சட்டச் சூழலைக் கருத்தில் கொள்ளும்போது, முக்கியத்துவத்தைப் பெறுகிறது. இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிர திருத்ததை (Special Intensive Revision (SIR)) செய்து வரும் வேளையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. மேலும், இந்திய உச்சநீதிமன்றம் சமீபத்தில் பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த முறை செல்லுபடியாகும் தன்மை மற்றும் குடியுரிமையை ஆய்வு செய்வதற்கான வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிர திருத்ததின் அதிகாரம் குறித்தும், அதற்கு முன்பாக அசாம் ஒப்பந்தம் (Assam Accord) குறித்தும் வழங்கிய இரண்டு தீர்ப்புகளுக்குப் பின்னரும் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அசாம் ஒப்பந்தத்தில், குடியுரிமை குறித்த குடியரசுக் கருத்துக்களை நீதிமன்றம் எவ்வாறு கருதுகிறது என்பது குறித்து விரிவாகக் கருத்து தெரிவித்தது. மேலும், 2019-ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்திற்குப் பிறகு, ஒருவருக்குக் குடியுரிமை வழங்கும் விதிகள் மதத்தின் அடிப்படையில் மாற்றி எழுதப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பார்க்கும்போது, நம்மை நாமே ஒரு அடிப்படையான கேள்வியைக் கேட்டுக்கொள்ளத் தூண்டுகிறது: இந்தியக் குடிமகனாக இருப்பது என்பதன் அர்த்தம் என்ன, இந்த நாட்டிற்குச் சொந்தமானவர் யார், மற்றும் அது என்ன நிபந்தனைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது?


இந்தக் கேள்விகளுக்கு நமது அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் பதில்கள், சிலருக்குத் தெளிவற்றதாகத் தோன்றினாலும் கூட, அவை மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் உருவாக்கப்பட்டவை ஆகும். அரசியலமைப்பின் பகுதி II-ல் உள்ள 5 முதல் 11 வரை பிரவுகள், இந்தியப் பிரிவினை காரணமாக ஏற்பட்ட கடுமையான சூழ்நிலைகளில் சிக்கிய மக்களின் குடியுரிமை தொடர்பான பிரச்சினைகளைத் பற்றி குறிப்பிடுகின்றன. பிரவுகள் 11, குடியுரிமையைப் பெறுதல், இழத்தல் மற்றும் குடியுரிமை தொடர்பான பிற அனைத்து விவகாரங்கள் குறித்து சட்டம் இயற்றுவதற்கான விரிவான அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கு வழங்கியது.


மேலோட்டமாகப் பார்க்கும்போது, குடியுரிமையை நிர்ணயிக்கும் காரணிகள் என்னென்னவாக இருக்கலாம் என்பதைத் தீர்மானிக்கும் வரம்பற்ற அதிகாரம் நாடாளுமன்றத்திடம் இருப்பதாகத் தோன்றலாம். உண்மையில், மத அடிப்படையிலான குடியுரிமைச் சட்டங்களை ஆதரிப்பதற்காக இன்று முன்வைக்கப்படும் பல வாதங்களும் இந்த விளக்கத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. ஆனால், அரசியலமைப்பு நிர்ணய சபையின் விவாதங்களை ஆராய்ந்து கௌதம் பாட்டியா சுட்டிக்காட்டியுள்ளது போல, குடியுரிமை விவகாரத்தில் நாடாளுமன்றம் தன் விருப்பப்படி எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் நினைக்கவில்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.


குடியுரிமையின் அடித்தளங்கள்


உதாரணமாக, நமது அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவு விதிகளில் பி.எஸ். தேஷ்முக் கொண்டு வர விரும்பிய ஒரு திருத்தத்தை எடுத்துக் கொள்வோம். இந்து அல்லது சீக்கிய மதத்தைச் சேர்ந்த, வேறெந்த நாட்டின் குடியுரிமையும் இல்லாத ஒரு நபர், அவர் எங்கு வசித்தாலும் இந்தியாவின் குடிமகனாக மாறுவதற்கு தகுதியுடையவர் என்ற தெளிவான நிபந்தனையை சேர்க்க முயன்றார். ஆனால், இந்த முயற்சிக்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதனை எதிர்த்தவர்களில் ஒருவரான ஜவஹர்லால் நேரு, இத்திருத்தத்தை "பார்த்த உடனே முற்றிலும் அர்த்தமற்றது" என்று கூறி முற்றிலுமாக நிராகரித்தார்.

இதற்கு அலலாடி கிருஷ்ணசுவாமி ஐயர் மிகத் தெளிவான மற்றும் உறுதியான பதிலை அளித்தார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற அரசின் கொள்கைகளுக்குக் கட்டுப்பட்டது என்று அலாடி கிருஷ்ணசுவாமி வாதிட்டார். எனவே, இனம் அல்லது மதம் சார்ந்த அடிப்படையில் ஒருவருக்கும் மற்றொருவருக்கும் இடையே பாகுபாடு காட்டுவதற்கே இடமில்லை என்று கூறினார். இறுதியில், தேஷ்முக்கின் முன்மொழிவு நிராகரிக்கப்பட்டது. அதேவேளையில், பி.ஆர். அம்பேத்கரின் நடுநிலையான குடியுரிமைக்கான விதிமுறை ஏற்றுக்கொள்ளப்பட்டது.


எனவே, சட்டப்பிரிவு-11-ல் உள்ள வார்த்தைகள் தனித்தன்மை வாய்ந்தவையாக இருந்தாலும், அவை அவற்றின் பரந்த வரையறையின் பின்னணியில் புரிந்துகொள்ளப்பட வேண்டும். மதச்சார்பின்மை, சமத்துவம் மற்றும் பாகுபாடின்மை போன்றவற்றுக்கான அரசியலமைப்பின் மிகவும் போற்றப்படும் மற்றும் அடிப்படையான உறுதிப்பாடுகளிலிருந்து பெறப்பட்ட ஒரு மறைமுகமான வரம்பு அவற்றில் இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றம் குடியுரிமையின் வழிமுறைகளைத் தீர்மானிக்கலாம். ஆனால், குடியுரிமை பெறுவதற்கு மதத்தை ஒரு நிபந்தனையாக நாடாளுமன்றத்தால் நிர்ணயிக்க முடியாது.


இந்தியா சுதந்திரம் பெற்றபோது, பிறப்பிட அடிப்படையிலான குடியுரிமை (Jus Soli) என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டது. ஒருவர் இந்தியாவில் பிறந்ததும் அல்லது இந்தியாவில் வசித்தது வருவதன் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படும் என்ற கோட்பாடே அப்போது பின்பற்றப்பட்டது. 1955-ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டம், இந்தக் கொள்கையைத் தனது முக்கியக் கொள்கையாகக் கருதியது. ஆனால் காலப்போக்கில், நாடாளுமன்றம் இந்தக் கோட்பாட்டிலிருந்து விலகிச் சென்றது. முதலில், 1985-ஆம் ஆண்டில், அசாம் ஒப்பந்தத்தைச் செயல்படுத்தும் விதமாக, சட்டத்தில் பிரிவு-6A (Section 6A) அறிமுகப்படுத்தப்பட்டது. இது, "இந்திய வம்சாவளியைச்" சேர்ந்தவர்கள் இந்தியாவுக்குள் வந்த தேதிகளின் அடிப்படையில் குடியுரிமை வழங்குவதை நிறுத்தி வைத்தது. இரண்டாவதாக, 2003-ஆம் ஆண்டு, குடியுரிமைச் சட்டம் மேலும் திருத்தம் செய்யப்பட்டு, இந்தியாவில் பிறந்திருந்தாலும், அந்த நபரின் பெற்றோரில் ஒருவர் கூட "சட்டவிரோத குடியேறியவர்" (illegal migrant) என்றுக் கருதப்பட்டால், அந்த நபருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படாது என்று சட்டத்தில்  குறிப்பிடப்பட்டுள்ளது.


2024-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், இந்திய உச்சநீதிமன்றம்,          பிரிவு 6A-வின் செல்லுபடியாகும் தன்மையை உறுதிப்படுத்தியபோது, ​​இரண்டு முக்கியக் கொள்கைகளை வலுப்படுத்தியது. முதலாவதாக, அரசியலமைப்பின் பிரிவு-11 நாடாளுமன்றத்தின் அதிகாரத்திற்கு எந்த மறைமுக வரம்பையும் விதிக்கவில்லை என்று நீதிமன்றம் கருதியது. அதற்குப் பதிலாக, குடியுரிமை தொடர்பாக சட்டம் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டிருப்பது வரம்பற்ற அதிகாரமாகும் என்று நீதிமன்றம் கருதியது. இரண்டாவதாக, 2005-ஆம் ஆண்டு  சரபானந்த சோனோவால்  vs இந்திய ஒன்றியம் மற்றும் பிற (Sarbananda Sonowal vs Union Of India & Anr)  வழக்கில் உச்சநீதிமன்றம் முதலில் முன்வைத்த ஒரு கருத்துக்கு, இந்த தீர்ப்பு அரசியலமைப்பு அங்கீகாரத்தை வழங்கியதாகவும் தோன்றியது. அசாம் மாநிலத்திற்குள் நடக்கும் குடியேற்றம் என்பது மாநிலத்திற்கு எதிரான "வெளிப்புற ஆக்கிரமிப்பு" (external aggression)  என்பதாகும்.


இந்த ஆண்டு மே மாதம் வழங்கப்பட்ட, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் vs இந்திய யூனியன் (Association for Democratic Reforms vs Union of India) வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பிலும் இந்த வாதமே தொடர்ந்தது. அதில், வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதற்கான தகுதியைத் தீர்மானிக்கும் வரையறுக்கப்பட்ட நோக்கத்திற்காக, ஒரு நபரின் குடியுரிமையை இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) விசாரிக்கலாம் என்று கூறி, பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (SIR) நடவடிக்கையை நீதிமன்றம் உறுதி செய்தது. ஒரு நபரின் குடியுரிமையை சட்டப்பூர்வமாகத் தீர்மானிப்பதற்கும், வாக்காளர் பட்டியலில் ஒருவரது பெயர் நீடிப்பது குறித்த நிர்வாக ரீதியான திருப்திக்கும் இடையே உள்ள வேறுபாட்டை ஒரு கொள்கை ரீதியான வேறுபாடு என்று நீதிமன்றம் விவரித்தது. ஒரு நபர் தான் இந்தியக் குடிமகன் என்று கூறுவதை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை என்றால், அந்த வழக்கை குடியுரிமைச் சட்டத்தின்கீழ் உள்ள தகுதியான அதிகாரிடம் தேர்தல் ஆணையம் மாற்றிவிட வேண்டும் என்றும் கூறியது.

ஆனால், நாம் இதற்கு முன்பும் இதே போன்றதொரு சூழலைக் கடந்து வந்திருக்கிறோம். அசாமில், முன்னர் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்போது, ​​'சந்தேகத்திற்குரியவர்' என்று குறிக்கப்பட்ட வாக்காளர்கள் வெளிநாட்டு தீர்ப்பாயங்களுக்கு அனுப்பப்பட்டு, தங்கள் குடியுரிமையை நிலைநாட்டுவதற்காக ஒரு முடிவற்ற அதிகாரத்துவ சிக்கலில் தள்ளப்பட்டனர். எனவே, இன்று நம்மிடம் உள்ள செயல்முறையில், ஒருவரின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதற்கு, அவர் ஒரு வெளிநாட்டவர் என்று அறிவிக்கப்பட வேண்டிய அவசியமில்லை. மாறாக, அவர்கள் ஒருவித நிச்சயமற்ற நிலையில், அவர்களின் குடியுரிமை உறுதி செய்யப்படாமலும், அதே சமயம் நிராகரிக்கப்படாமலும், அவர்களுடைய உரிமைகள் காலவரம்பின்றி நிறுத்தி வைக்கப்படுகின்றன.





இது போன்ற சூழலில், வெளியுறவு அமைச்சகம் அளித்துள்ள விளக்கம் அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. குடியுரிமையை உறுதி செய்வதற்கான இது போன்ற நடைமுறைகள் அனைத்திலும், 'நிரூபிக்கும் பொறுப்பு' (burden of proof) என்பது ஒரு பொதுவானதாகத் திகழ்கிறது. ஒரு காலத்தில், ஒருவரின் குடியுரிமையை அரசு இயல்பாகவே ஏற்றுக்கொண்ட நிலையில், இன்று அந்தப் பொறுப்பு சிறிது சிறிதாக தனிநபர்கள் மீது சுமத்தப்பட்டு வருகிறது. சமர்ப்பிக்கப்படும் எந்த ஒரு ஆவணமும் போதுமான சான்றாகக் கருதப்படுவதில்லை. ஆதார் அடையாள அட்டை என்பது வசிப்பிடத்திற்கான சான்று மட்டுமே என்றும், வாக்காளர் அடையாள அட்டை என்பது முந்தைய பதிவிற்கான சான்று மட்டுமே என்றும், தற்போது கடவுச்சீட்டு என்பது பயணம் செய்வதற்கான உரிமைக்கான சான்று மட்டுமே என்றும் கூறப்பட்டு வருகிறது.


மனித நலனுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்


அரசியலமைப்பின்கீழ், நமக்கு வழங்கப்படும் பல அடிப்படை உரிமைகள் குடியுரிமையை அல்ல, அவை மனித நலனையே (Personhood) அடிப்படையாகக் கொண்டுள்ளன. அரசியலமைப்பின் பிரிவு-14, "எந்தவொரு நபருக்கும்"  சட்டத்தின்முன் அனைவரும் சமம், அது சட்டத்தின் சமமான பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. அதேபோல், பிரிவு-21, அனைத்து நபர்களுக்கும் உயிர் வாழும் உரிமையையும் தனிநபர் சுதந்திரத்திற்கான உரிமையையும் வழங்குகிறது. பிரிவு 19-ன்கீழ் உத்தரவாதமளிக்கப்பட்ட பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம், எந்தவொரு வர்த்தகம் அல்லது தொழிலைச் செய்வதற்கான சுதந்திரம் மற்றும் அமைதியாகக் கூடுவதற்கான சுதந்திரம் ஆகியவற்றை ஒரு நபருக்கு வழங்குகிறது. மேலும், குடியுரிமை இருப்பதால்தான் ஒருவர் வாக்களிக்கவும், தன்னை எவ்வாறு ஆள வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் ஜனநாயக உரிமையையும் உறுதி செய்கிறது. எனவே, குடியுரிமையை இழப்பது என்பது மற்ற அனைத்து உரிமைகளையும் பயன்படுத்துவதற்கான அடிப்படை உரிமையையே இழப்பதாகும் என்று ஹன்னா அரெண்ட் குறிப்பிட்டுள்ளார்.





மனித நலனுக்கு முதலிடம் அளிக்கும் ஒரு அரசியலமைப்புச் சட்ட அமைப்பில், யார் குடிமகன் என்ற தகுதியை பெறுகிறார் என்பதைத் தீர்மானிக்கும் விதிகள், ஆவணங்களின் தகுதியை மட்டும் சார்ந்திருக்கக் கூடாது. அந்த விதிமுறைகள், அரசியலமைப்பு மிகவும் மதிக்கும் அடிப்படை மதிப்பீடுகளின் மீது கட்டமைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மனிதரின் சமமான கண்ணியத்தையும், அனைவரும் சட்டத்தின்முன் சமம் என்ற பாதுகாப்பைப் பெறும் உரிமையையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.


சுஹ்ரித் பார்த்தசாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் பயிற்சி பெற்று வரும் வழக்கறிஞர் ஆவார்.


Original article: The right to belong beyond official documentation. -Suhrith Parthasarathy

Share:

வாக்காளர் பட்டியல் திருத்தத்துடன் நலத்திட்டங்களை இணைக்கும் மேற்குவங்க அரசின் முடிவுக்கு எதிர்ப்பு ஏன்? - ஷிவ் சஹாய் சிங்

மேற்குவங்கத்தில், பொது விநியோகத் திட்டம் (Public Distribution System (PDS)) மற்றும் அன்னபூர்ணா யோஜனா (Annapurna Yojana) ஆகிய திட்டங்களை, 'சிறப்பு தீவிர திருத்த' (Special Intensive Revision (SIR)) நடவடிக்கையின் முடிவுகளோடு இணைப்பதை எதிர்த்து ஒரு தொழிற்சங்கம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.


தற்போதைய நிகழ்வு என்ன?


மேற்குவங்கத்தில் நடைபெற்ற சிறப்புத் தீவிர திருத்தத்தின் முடிவுகளுடன், பொது விநியோகத் திட்டம் (PDS) மற்றும் அன்னபூர்ணா யோஜனா ஆகியவற்றின்கீழ் வழங்கப்படும் சலுகைகளை இணைப்பது குறித்த மேற்குவங்க அரசின் அறிவிப்புகளை எதிர்த்து மனு தாக்கல் செய்தவர்கள், கல்கத்தா உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஜூன் மாதம் 23-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு வலியுறுத்தியது.


வேளாண் தொழிலாளர்கள், சிறு வேளாண் தொழிலாளர்கள் மற்றும் குத்தகை வேளாண் தொழிலாளர்களின் தொழிற்சங்கமான பச்சிம் பங்கா கேத் மஜூர் சமிதி (Paschim Banga Khet Majoor Samity), மேற்கு வங்கத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக அரசால் வெளியிடப்பட்ட இரண்டு அறிவிப்புகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.




உத்தரவில் கூறப்பட்டுள்ளவை


ஜூன் மாதம் 4-ஆம் தேதி, மேற்கு வங்க உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறையானது, ‘மேற்கு வங்கத்தில் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR), 2026-ன் முடிவுகளின் அடிப்படையில் தகுதியற்ற             பொது விநியோகத் திட்டப் பயனாளிகளைச் சரிபார்த்தல் மற்றும் நீக்குதல்’ என்ற தலைப்பில் ஒரு உத்தரவை வெளியிட்டது.


2026-ஆம் ஆண்டின் சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) முடிவுகளின் அடிப்படையில், பின்வரும் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றின்கீழ் வருவதன் காரணமாகத் தகுதியற்றவர்கள் எனக் கண்டறியப்பட்ட பொது விநியோகத் திட்டப் (PDS) பயனாளிகளைச் சரிபார்த்து நீக்குவதற்குத் துறை முடிவு செய்துள்ளதாக அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


இந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து பிரிவுகளில், டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி, 2025-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, வரைவுப் பட்டியலில் உள்ள இடம்பெறாத, வேறு இடத்திற்குச் சென்றவர்கள், இறந்தவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு கொண்ட (Absentee, shifted, dead, and duplicate (ASDD)) வாக்காளர்கள், சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) செயல்பாட்டின்போது கண்டறியப்பட்டு, விசாரணைக்குப் பிறகு நிராகரிக்கப்பட்ட, பட்டியலில் இடம்பெறாத வாக்காளர்கள், வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு இரண்டாவது பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள், தீர்ப்புக்குப் பிறகு நீக்கப்பட்டவர்கள் மற்றும்                      2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது வாக்காளர் தகவல் சீட்டு (Voter Information Slips (VIS)), இறந்தவர்கள் அல்லது இரட்டைப் பதிவு கொண்டவர்கள் (ASDD) என கண்டறியப்பட்டவர்கள் ஆகியோர் அடங்குவர்.


இந்த உத்தரவானது, சிறப்பு வாக்காளர் திருத்தப் பணியின்போது நீக்கப்பட்ட வாக்காளர்களை மட்டுமல்லாமல், அதற்குப் பிறகு, பெரும்பாலும் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் நடக்கும் 'வாக்காளர் தகவல் சீட்டு' (Voter Information Slip) விநியோகத்தின்போது வாக்குப்பதிவு நாளில் தங்கள் முகவரியில் இல்லாதவர்கள் (Absent), வேறு இடத்திற்கு மாறிச் சென்றவர்கள் (Shifted), இறந்துவிட்டவர்கள் (Dead) மற்றும் இரண்டு இடங்களில் பெயர் இருக்கும் இரட்டைப் பதிவு வாக்காளர்கள் (Duplicate) எனத் கண்டறியப்பட்ட வாக்காளர்களையும் பொது விநியோகத் திட்டப் பயன்பட்டியலில் இருந்து நீக்குகிறது.


மேலும், ஜூன் மாதம் 15-ஆம் தேதி முடிவடைந்த 12 நாள் காலப்பகுதியில், வாக்குச்சாவடி வாரியாக நீக்கப்பட்ட வாக்காளர்களின் பட்டியலின் அடிப்படையில், பொது விநியோகத் திட்ட (PDS) பயனாளிகளின் பெயர்களை நீக்குமாறும் உணவு மற்றும் நுகர்வோர் பொருள் வழங்கல் துறை தனது உத்தரவில் அறிவுறுத்தியுள்ளது.


மனுதாரர்களின் வாதம் என்ன?


பொது விநியோக அமைப்பு (Public Distribution System (PDS)), நாட்டின் குடிமக்களுக்கு உணவுக்கான உரிமையை வழங்கும், நாட்டின் மிக விரிவான சட்டங்களில் ஒன்றான 2013-ஆம் ஆண்டின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் (National Food Security Act) நிர்வகிக்கப்படுகிறது.                       பிற்கால நிர்வாக நடவடிக்கை மூலம் ஒரு குறைபாட்டை உருவாக்கி, அதை சிறப்பு தீவிர திருத்தம் (SIR) போன்ற ஒரு தேர்தல் செயல்முறையுடன் இணைப்பதன் மூலம் பொது விநியோக அமைப்பின் சலுகைகளை மறுக்க முடியாது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.


பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (SIR) வழக்கில்,                       அந்த விசாரணை முறையைச் சரி என்று ஏற்றுக்கொண்ட அதே வேளையில், உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் 27-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு ஒரு முக்கியக் கருத்தைத் தெரிவித்திருந்ததாக மனுதாரர்கள் வாதிடுகின்றனர்.                                 அதாவது, வாக்காளர் பட்டியலில் ஒருவரைச் சேர்ப்பதற்கான தகுதி இருக்கிறதா என்பதைத் தனக்குத்தானே உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கத்திற்காக மட்டுமே, குடியுரிமை குறித்து ஒரு குறிப்பிட்ட அளவிலான விசாரணையை நடத்தத் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என்று நீதிமன்றம் கூறியிருந்தது.


இத்தகைய விசாரணை என்பது சட்டப்பூர்வமான முழுமையான குடியுரிமை நிர்ணயம் ஆகாது. மேலும் இதன் அடிப்படையில் எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் தேர்தல் தொடர்பான விளைவுகளோடு மட்டுமே முடிந்துவிடும், என்று இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியிருந்தது. ஆனால், மேற்கு வங்க அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை ஜூன் மாதம் 4-ஆம் தேதி வெளியிட்ட உத்தரவு, இந்த வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (SIR) வழக்கு விசாரணையின் எல்லையைத் தாண்டி, அதை பொது விநியோகத் திட்டம் (PDS) போன்ற மக்கள்நலத் திட்டங்களுக்கும் நீட்டிப்பது போல் தெளிவாகத் தெரிகிறது.


அன்னபூர்ணா திட்டம் தொடர்பான அரசாணை


அன்னபூர்ணா யோஜனா (Annapurna Yojana) தொடர்பான உத்தரவு, மேற்குவங்க அரசின் பெண்கள், குழந்தைகள் மேம்பாடு மற்றும் சமூக நலத்துறையால் 2026-ஆம் ஆண்டு மே மாதம் 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது.


லக்ஷ்மிர் பண்டார் திட்டத்தின்கீழ் (Lakshmir Bhandar Scheme) தற்பொழுது பயனடைந்து வரும் அனைவரும் அன்னபூர்ணா யோஜனா (Annapurna Yojana) திட்டத்திற்கு மாற்றப்படுவார்கள் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், 2026-ஆம் ஆண்டின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போது கண்டறியப்பட்ட இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மற்றும் வரைவுப் பட்டியல் வெளியீட்டிற்குப் பிறகு இரண்டாவது பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள், இறுதித் தீர்ப்பிற்குப் பின் நீக்கப்பட்டவர்கள் மற்றும் வாக்காளர் சீட்டு விநியோகத்தின் போது கண்டறியப்பட்ட பிரிவினருக்கு இந்த இடமாற்றம் பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேற்குவங்க அரசாங்கம், பொது விநியோகத் திட்டம் (PDS) மற்றும் அன்னபூர்ணா யோஜனா (Annapurna Yojana) ஆகிய இரண்டு திட்டங்கள் தொடர்பான உத்தரவுகளிலும் ஒரு முக்கிய விஷயத்தைக் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின்கீழ் (Citizenship Amendment Act (CAA)) அமைக்கப்பட்டுள்ள சிறப்புத் தீவிர திருத்தம் தொடர்பாக (SIR) தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்துள்ள பயனாளிகளுக்கு, அவர்களின் விண்ணப்பங்கள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் வரை இந்தத் திட்டங்களின் பலன்கள் தொடர்ந்து கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.




மேற்குவங்கத்தில் இந்த மாநில அளவிலான சரிபார்ப்பு நடைமுறை (SIR) 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4-ஆம் தேதி முதல் 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்தச் செயல்பாட்டின்போது, மாநிலத்தின் வாக்காளர் பட்டியலிலிருந்து 91 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இவர்களில் சுமார் 34 லட்சம் மக்கள் தங்களது பெயர் நீக்கப்பட்டதை எதிர்த்து மாநில அளவிலான சரிபார்ப்பு நடைமுறை (SIR) தீர்ப்பாயங்களில் மேல்முறையீடு செய்துள்ளனர்.


அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் முக்கியத்துவம் 


அன்னபூர்ணா யோஜனா என்பது பொது விநியோகத் திட்டத்தைப் (PDS) போன்ற ஒரு சட்டப்பூர்வமான திட்டம் அல்ல, மாறாக 2026-ஆம் ஆண்டு மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலின்போது பாஜகவின் முக்கிய தேர்தல் முழக்கமாக இருந்த ஒரு திட்டமாகும். 2021-ஆம் ஆண்டு திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட லக்ஷ்மிர் பண்டார் திட்டத்தை (Lakshmir Bhandar scheme) எதிர்கொள்வதற்காக இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது.


2026-ஆம் ஆண்டு மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின்கீழ் மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகையை ₹1,500-லிருந்து ₹3,000-ஆக உயர்த்தி அளிப்பதாக பாஜக உறுதியளித்தபோது, லக்ஷ்மிர் பண்டார் திட்டத்தில் 2.2 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் இருந்தனர். தேர்தலுக்குப் பிறகான சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது அன்னபூர்ணா பண்டார் திட்டம் (Annapurna Bhandar) வழங்கப்படும் என்ற வாக்குறுதி அனைவருக்கும் பொதுவானதாக இருந்தபோதிலும், 'தகுதியுள்ள' பயனாளிகள் மற்றும் லக்ஷ்மிர் பண்டார் திட்டத்தின்கீழ் பலன் பெறுபவர்கள் உட்பட அனைவரும் 12 பக்க படிவத்தை நிரப்ப வேண்டியிருந்தது என்பது தெரியவந்தது.


ஜூன் மாதம் 22-ஆம் தேதி மேற்குவங்க சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், மாநில நிதியமைச்சர் இத்திட்டத்திற்காக ₹36,000 கோடியை ஒதுக்கியுள்ளார். இதன் பொருள் என்னவென்றால், பயனாளிகளின் எண்ணிக்கை லக்ஷ்மிர் பண்டார் திட்டத்தில் இருந்ததில் பாதியாக, அதாவது சுமார் ஒரு கோடியாகக் குறையும் என்பதாகும்.


முதலமைச்சர் சுவேந்து அதிகாரி கடந்த ஆறு வாரங்களாக, திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் லக்ஷ்மிர் பண்டார் திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகள் மற்றும் கசிவுகள் குறித்து முதலமைச்சர் சுவேந்து அதிகாரி பேசி வருகிறார். இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெற்று வரும் சுமார் 30 லட்சம் பயனாளிகளுக்கு, உண்மையில் இதைப் பெறுவதற்கான தகுதி கிடையாது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். இறந்தவர்கள், சட்டவிரோதமாக ஊடுருவியவர்கள் அல்லது இந்தியர் அல்லாத நபர்கள் எவரும் இந்த மாநில குடிமக்களுக்கான நலத்திட்ட உதவிகளைப் பெற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று                         சுவேந்து அதிகாரி குறிப்பிட்டிருந்த நிலையில், சமூக நலத்திட்டங்களில் இருந்து பயனாளிகளை நீக்குவதற்கான ஒரு கருவியாக இந்தச் சரிபார்ப்பு நடைமுறை பயன்படுத்தப்பட்டு வருவதை தற்போதைய மாநில அரசின் உத்தரவுகள் காட்டுகின்றன.


Original Link: Why West Bengal’s decision of linking social security benefits to SIR is being challenged?

Share:

சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்த ஒரு கவலைக்குரிய தீர்ப்பும், அதன் அங்கீகாரமும் - பி.டி.டி. ஆச்சாரி

 உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அரசியலமைப்புரீதியான கவலைகளை எழுப்புவதுடன், கடந்தகால வாக்காளர் பட்டியல்களின் நம்பகத்தன்மை மீதும் ஒரு நிழலை (ஐயத்தை) விழச் செய்கிறது.


வாக்காளர் பட்டியல்களின் 'சிறப்பு தீவிர திருத்த' (Special Intensive Revision(SIR)) நடவடிக்கை தொடர்பாக மே 27, 2026 அன்று இந்திய உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, வாக்காளர் பட்டியல்களைத் தயாரித்தல் மற்றும் திருத்துதல் ஆகியவற்றில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (ECI) அதிகாரங்கள், பங்கு மற்றும் செயல்பாடுகள் குறித்து பல கவலைக்குரிய கேள்விகளை எழுப்பியுள்ளது.


இவ்வழக்கு பீகாரில் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) நடைமுறைப்படுத்துவது தொடர்பானது என்றாலும், நீதிமன்றம் கையாண்ட விவகாரங்களும் அதன் முடிவுகளும், இந்தியக் குடிமக்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதற்கான உரிமையின் மீது விரிவானத் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. தனது 124 பக்கத் தீர்ப்பில், சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (SIR) எதிராக மனுதாரர்கள் எழுப்பிய அனைத்து முக்கியக் கருத்துகளையும் நீதிமன்றம் பரிசீலித்தது. இருப்பினும், அந்த வாதங்கள் எதையும் நீதிமன்றம் ஏற்கவில்லை. மாறாக, தேர்தல் ஆணையம் முன்வைத்த அனைத்து வாதங்களையும் ஏற்றுக்கொண்டதுடன், அவற்றை மேலும் விரிவான விளக்கங்களுடனும் உறுதிப்படுத்தியது.


வாக்காளர் பட்டியல் திருத்தத்தை மறுபரிசீலனை செய்தல்


2025-ல் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பு சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடங்கப்பட்டபோது, ​​​​இவ்வளவு குறுகிய காலத்தில் வாக்காளர் பட்டியல்களில் இத்தகைய பெரிய மற்றும் தீவிரமான திருத்தங்களை மேற்கொள்வது விவேகமானதா என்பது குறித்துப் பலர் தீவிர கவலைகளை எழுப்பினர். மேலும், வாக்காளர் பட்டியலின் தீவிர திருத்தப் பணிகளை முடிப்பதற்கு வழங்கப்பட்ட வழக்கத்திற்கு மாறான குறுகிய காலக்கெடுவைத் தவிர, இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்வதற்குப் போதுமான சட்டப்பூர்வ அதிகாரம் இருந்ததா என்பது குறித்தும் தீவிர கேள்விகள் எழுப்பப்பட்டன. சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) செயல்படுத்தும்போது இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) எவ்வாறு சட்டரீதியான விதிமுறைகளிலிருந்து விலகிச் செயல்பட்டது என்பதை இச்செய்தித்தாளிலேயே வெளியான பல கட்டுரைகள் சுட்டிக்காட்டின. எனவே, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளையும் வழிமுறைகளையும் உறுதிப்படுத்தும் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னணியில், வாக்காளர் பட்டியல்களைத் தயாரித்தல் மற்றும் திருத்துதல் தொடர்பான அரசியலமைப்பு மற்றும் சட்டரீதியான விதிகளை மீண்டும் ஒருமுறை மறுபரிசீலனை செய்வதும், அதற்கேற்ப தீர்ப்பை மதிப்பிடுவதும் பயனுள்ளதாக இருக்கும்.


நாட்டின் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரே பொதுவான வாக்காளர் பட்டியல் இருக்க வேண்டும் என்றும், மதம், இனம், சாதி, பாலினம் அல்லது இவற்றில் ஏதேனும் ஒன்றின் அடிப்படையில் மட்டும் ஒரு நபர் அத்தகைய பட்டியலில் இடம்பெறுவதற்குத் தகுதியற்றவராகக் கருதப்படக்கூடாது என்றும் அரசியலமைப்பின் 325-வது பிரிவு கூறுகிறது. மேலும் பிரிவு 326-ன் படி, மக்களவை மற்றும் சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் வயது வந்தோர் வாக்குரிமை (adult suffrage) அடிப்படையில் நடத்தப்பட வேண்டும். இதன்பொருள், 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய ஒவ்வொரு குடிமகனும் அத்தகைய தேர்தல்களில் வாக்காளராகப் பதிவு செய்ய உரிமை பெற்றுள்ளார். வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதற்கான மற்றொரு நிபந்தனை என்னவென்றால், அரசியலமைப்புச் சட்டம் அல்லது ஏதேனும் சட்டத்தின்கீழ் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கக்கூடாது. வாக்காளர் பட்டியல்களைத் தயாரித்தல் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான அனைத்து அம்சங்கள் குறித்தும் சட்டங்களை இயற்றும் அதிகாரத்தை பிரிவு 327 நாடாளுமன்றத்திற்கு வழங்குகிறது. வாக்காளர் பட்டியல்களைத் தயாரிப்பதற்கும் தேர்தல்களை நடத்துவதற்கும் ஆன அதிகாரத்தை பிரிவு 324 இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு (ECI) வழங்குகிறது. வாக்காளர் பட்டியல்களைத் தயாரித்தல் மற்றும் திருத்தம் செய்தல் ஆகியவை 'மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்-1950' (Representation of the People (RP) Act) மற்றும் 'வாக்காளர் பதிவு விதிகள்-1960' (Registration of Electors Rules) ஆகியவற்றின் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 21 ஆனது, வாக்காளர் பட்டியல்களைத் தயாரித்தல் மற்றும் திருத்தம் செய்தல் குறித்துக் குறிப்பிடுகிறது. இதில் திருத்தம் செய்வதற்கான வழிமுறைகளைக் கொண்ட பிரிவு 21(2) மற்றும் (3) ஆகியவற்றில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. அவை, (அ)(i)/(ii) மக்களவை அல்லது சட்டமன்றத்திற்கான ஒவ்வொரு பொதுத் தேர்தலுக்கு முன்பும் மற்றும் ஒவ்வொரு இடைத்தேர்தலுக்கு முன்பும் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்பட வேண்டும்; (ஆ) இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) உத்தரவிட்டால், எந்தவொரு ஆண்டிலும் பட்டியல் திருத்தம் செய்யப்படலாம். மேலும், பிரிவு 21(3)-ன் படி, தேர்தல் ஆணையம் எந்தவொரு தொகுதிக்கும் அல்லது தொகுதியின் ஒரு பகுதிக்கும், வாக்காளர் பட்டியலின் சிறப்புத் திருத்தத்தை மேற்கொள்ள உத்தரவிடலாம். இருப்பினும், அத்தகைய திருத்தத்தை மேற்கொள்வதற்கான காரணங்களை அது முதலில் பதிவு செய்ய வேண்டும். பொதுத் தேர்தல் அல்லது இடைத்தேர்தலுக்கு முன் சட்டத்தின் பிரிவு 21(2)-ன் கீழ் மேற்கொள்ளப்படும் பட்டியல் திருத்தம் 'சுருக்கமான' (summary) அல்லது 'தீவிரமான' (intensive) முறையாக இருக்கலாம் என்று 'வாக்காளர் பதிவு விதிகள்'-ன் விதி 25 கூறுகிறது. இந்த விதிகளின்கீழ் 'தீவிரமான திருத்தம்' என்பது விரிவான நடைமுறைகளைக் கொண்டிருப்பதால், பொதுத் தேர்தலுக்குச் சற்று முன்பு மேற்கொள்ளப்படும் இத்தகைய திருத்தம் 'சுருக்கமான' முறையாக மட்டுமே இருக்க முடியும் என்பதை இது தெளிவாக உணர்த்துகிறது.


அடிப்படைச் சட்டக் கட்டமைப்பு


அப்படியானால், கேள்வி என்னவென்றால்: சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) எந்த வகையான திருத்தப் பிரிவின்கீழ் வருகிறது? என்பதுதான். ஒரு தொகுதி அல்லது தொகுதியின் ஒரு பகுதியில் மேற்கொள்ளப்படும் சிறப்புத் திருத்தம் குறித்துப் பேசும் பிரிவு 21(3)-ன் கீழ் இதனை வகைப்படுத்தலாம் என்று நீதிமன்றம் கூறுகிறது. இருப்பினும், இந்தப் பிரிவு 'தீவிர திருத்தம்' (intensive revision) செய்வதை அனுமதிக்கவில்லை, மாறாக 'சிறப்பு திருத்தம்' (special revision) செய்வதை மட்டுமே அனுமதிக்கிறது. சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) என்பது வாக்காளர் பட்டியலின் சிறப்பு மற்றும் தீவிர திருத்தம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய ஒரு செயல்முறையாகும். விதி 25-ன் படி, தீவிர திருத்தம் என்பது சட்டத்தின் பிரிவு 21(2)-ன் கீழ் மட்டுமே மேற்கொள்ளப்பட முடியும், தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதற்கு மாறாக, பிரிவு 21(3)-ன் கீழ் அதைச் செய்ய முடியாது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950-ன் பிரிவு 21(2) மற்றும் (3) மற்றும் வாக்காளர் பதிவு விதிகள் 1960-ன் விதி 25 ஆகியவற்றை கவனத்தில் கொண்டு, ஒரு மாநிலத்தில் வாக்காளர் பட்டியலின் தீவிர திருத்தம் பொதுத் தேர்தலோ அல்லது இடைத்தேர்தலோ நடைபெறாத காலத்தில்தான் மேற்கொள்ள முடியும் என்பது தெளிவாகும். தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படுவதை சட்டம் கருத்தில் கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது. ஏனெனில், அத்தகைய திருத்தம் மிகவும் விரிவான தன்மையைக் கொண்டிருப்பதாலும், அதை நிறைவு செய்ய நீண்டகாலம் தேவைப்படுவதாலும் அவ்வாறு செய்ய இயலாது.


வரும்காலங்களில், பிரிவு 21(3)-ன் கீழ் வரும் சிறப்பு திருத்தத்தைப் பொறுத்தவரை, அது ஒரு தொகுதி அல்லது தொகுதியின் ஒரு பகுதியில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். இது மாநிலம் முழுவதிலோ அல்லது ஒட்டுமொத்த நாட்டிற்கோ உரியதல்ல. "ஏதேனும் ஒரு தொகுதி" (any constituency) என்பது "அனைத்துத் தொகுதிகளையும்" குறிக்கும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ள வாதம், சூழலுக்குப் பொருத்தமானதாக இல்லை. "Any" (ஏதேனும்/எந்தவொரு) என்ற சொல் சில சூழல்களில் "அனைத்து" (all) என்பதைக் குறிக்கலாம். ஆனால், வேறு சில சூழல்களில் அது "ஒன்றை" (single) மட்டுமே குறிக்கலாம். "ஏதேனும் ஒரு தொகுதி" என்ற சொற்றொடரைத் தொடர்ந்து வரும் "அல்லது தொகுதியின் ஒரு பகுதி" (or a part of constituency) என்ற சொற்கள், சிறப்புத் திருத்தமானது ஒரு தொகுதி அல்லது அதன் ஒரு பகுதிக்கு மட்டுமே உரியது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. பிரிவு 21(2)-ல் தீவிர திருத்தத்திற்கான ஏற்பாடு தெளிவாக இருக்கும்போது, ​​பிரிவு 21(3)-லும் அதை அதிகாரத்தை வழங்க வேண்டிய அவசியமில்லை. உதாரணமாக, அண்டை மாநிலங்களிலிருந்து அப்பகுதிக்கு மக்கள் பெருமளவில் குடியேறுவது போன்ற காரணங்களால் சில தொகுதிகளில் சிறப்பு திருத்தம் தேவைப்படலாம். சிறப்பு திருத்தம் என்பது இந்தியத் தேர்தல் ஆணையத்தால் (ECI) நிர்ணயிக்கப்பட்ட முறையில் மேற்கொள்ளப்படுகிறது. அதேசமயம், பிரிவு 21(2)-ன் கீழ் வரும் தீவிர திருத்தம், பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையின்படி மேற்கொள்ளப்பட வேண்டும்.


மேற்கூறிய பகுப்பாய்வின்படி, முழுமையான சிறப்பு தீவிர திருத்த (SIR) நடவடிக்கையும் சட்டத்தின் தவறான பிரிவின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது என்பதைக் காட்டுகிறது. பீகார், தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில், சட்டமன்றத் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பு சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டது. இது சட்டத்தின் பிரிவு 21(2)(a) மற்றும் விதி 25-ன் படி, சட்டமன்றத் தேர்தலுக்கு முன் வாக்காளர் பட்டியலின் 'சுருக்கமான திருத்தம்' (summary revision) மட்டுமே சாத்தியமாகும். ஆனால், சட்டத்தின் வழிமுறைகளிலிருந்து முற்றிலும் விலகி, இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) 'சிறப்புத் தீவிரத் திருத்த' (SIR) நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் விளைவாக, லட்சக்கணக்கான வாக்காளர்கள் எவ்விதத் தீர்வுக்கான வாய்ப்பும் இன்றி வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர்.


குடியுரிமை தொடர்பான விவகாரம்


குடியுரிமையை நிரூபிப்பதற்கான ஆவணங்களைத் தீர்மானிப்பதில் தேர்தல் ஆணையத்திற்கு இத்தீர்ப்பு பெரும் சுதந்திரத்தை அளிக்கிறது. குடியுரிமையை நிரூபிக்கத் தேவையான ஆவணங்கள் எவை என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளதா என்பதே இங்குள்ள முக்கியக் கேள்வியாக அமைந்தது. குடியுரிமைச் சட்டத்தை நிர்வகிக்கும் பொறுப்பு உள்துறை அமைச்சகத்திடம் இருப்பதால், அந்தப் பணியை அதுவே மேற்கொள்ள வேண்டும். குடிமக்கள் தொடர்பான ஆவணங்களைச் சரிபார்ப்பது மட்டுமே தேர்தல் ஆணையத்தின் பணியாகும். ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால், தேர்தல் ஆணையம் ஆவணங்களின் பட்டியலை அறிவித்து, அவற்றைச் சமர்ப்பிக்குமாறு வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டது. இதன் மூலம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பங்கைத் தேர்தல் ஆணையம் தன்வசப்படுத்திக்கொண்டது. குடியுரிமையை நிரூபிக்கத் தேவையான ஆவணங்களின் பட்டியலைக் கொண்ட பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் உச்சநீதிமன்றம் விசாரணையின்போது கேட்காதது மிகவும் ஆச்சரியமளிக்கிறது. வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது அல்லது நீக்குவது தொடர்பான நோக்கங்களுக்காகக் குடியுரிமை தொடர்பான கேள்விகளைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை இப்போது நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கியுள்ளது. அதேவேளையில், குடியுரிமை தொடர்பான பரந்த கேள்வியை அதற்கான தகுதியுள்ள அதிகார அமைப்பான உள்துறை அமைச்சகத்திடம் உள்ளது. தற்காலிக அடிப்படையிலாவது குடியுரிமை மறுக்கப்படுவதால் பல்வேறு இன்னல்களைச் சந்திக்க நேரிடும் மற்றும் தங்கள் வாழ்நாளில் ஒருபோதும் வாக்களிக்க முடியாத லட்சக்கணக்கான இந்தியக் குடிமக்களின் விவகாரங்கள் குறித்து இனி உள்துறை அமைச்சகம் முடிவெடுக்க வேண்டியிருக்கும்.



இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) நிறுவப்பட்டதிலிருந்து அது ஆற்றிவரும் பணிகளை நீதிமன்றம் இதுவரை பாராட்டி வந்துள்ளது. ஆனால், சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்த இத்தீர்ப்பு, கடந்த காலங்களில் "வாக்காளர் பட்டியலில் இருந்த தொடர் பிழைகள்" மற்றும் "முழுப் பட்டியலிலும் காணப்பட்ட கட்டமைப்புரீதியான குறைபாடுகள்" ஆகியவற்றைப் பற்றிக் குறிப்பிடுகிறது. கடந்த காலங்களில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் தயாரிப்பு மற்றும் திருத்தப் பணிகள் மீதான கடுமையான விமர்சனமாக இது அமைகிறது. 2025-ம் ஆண்டிற்கான சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்கு, இத்தீர்ப்பு இத்தகைய கடுமையான விமர்சனங்களுக்குச் சென்றிருக்க வேண்டிய அவசியமில்லை.


பி.டி.டி. ஆச்சாரி, மக்களவையின் முன்னாள் பொதுச் செயலாளர் ஆவார்.


Original article : A troubling judgment and endorsement of the SIR -P.D.T. Achary

Share:

யார் இந்தியக் குடிமகன் என்பதைத் தேர்தல் ஆணையத்தால் தீர்மானிக்க முடியுமா? சிறப்புத் தீவிர திருத்த வழக்கில் உச்சநீதிமன்றம் கூறியது என்ன? -ஆதித்ய பிரசன்னா பட்டாச்சார்யா, வாசுதேவ் தேவதாசன்

வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர் நீக்கப்படுவதை குடியுரிமை இழப்பிலிருந்து முழுமையாகப் பிரித்துக் காட்டவில்லை என்பதைக் கவனிக்க கருத்தில் கொள்ள வேண்டும். சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், வாக்குரிமையை இழக்காமல் இருப்பதற்கான பொறுப்பு தற்போது குடிமக்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.


மே 27 அன்று, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் vs இந்தியத் தேர்தல் ஆணையம் (Association for Democratic Reforms v. Election Commission of India) வழக்கில், வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) தொடர்பான இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (ECI) உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதிசெய்தது. பீகாரில் நவம்பர் 2025-ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு நடத்தப்பட்ட சிறப்புத் தீவிர திருத்தத்தில் இருந்து இந்த சவால் எழுந்தது.


அதன் பிறகு, இந்தியத் தேர்தல் ஆணையம் மேலும் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தச் செயல்முறையை நிறைவுசெய்து மற்ற 19 இடங்களில் சிறப்புத் தீவிர திருத்தத்தின் அறிக்கைகளுக்கான தேதிகளை அறிவித்துள்ளது. சிறப்புத் தீவிர திருத்தத்தை நடத்துவதற்கான இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் குறித்தும், குடியுரிமை குறித்த கேள்வி குறித்தும் நீதிமன்றம் கூறியவற்றை நாங்கள் விளக்குகிறோம்.


சிறப்புத் தீவிர திருத்தம் நடத்துவதற்கான அதிகாரம்


அந்தத் தீர்ப்பு நான்கு கேள்விகளை முன்வைத்தது: அவை சிறப்புத் தீவிர திருத்தம் தொடர்பாக விசாரணையை நடத்துவதற்கு இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளதா, அந்த அதிகாரத்தை அது விகிதாசாரப்படி பயன்படுத்தியதா, அந்த நடைமுறை சட்டப்பூர்வ திட்டத்தை மீறியதா மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் வாக்களிக்கத் தகுதியுள்ளவர்களின் குடியுரிமையை ஆய்வு செய்யமுடியுமா  என்பதாகும். ஒவ்வொரு நிலையிலும், நீதிமன்றம் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது.

சிறப்புத் தீவிர திருத்த அறிக்கையை வெளியீடுவதற்கு இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என்றும், அது சட்ட நடவடிக்கைகளை கடைப்பிடித்துள்ளது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நடவடிக்கை   விகிதாசாரமானது என்றும், வாக்காளர் பட்டியல்களைத் திருத்துவதற்கான துல்லியமான தொழில்நுட்ப வழிமுறைகளைத் தீர்மானிக்க இந்தியத் தேர்தல் ஆணையமே மிகவும் சரியான அமைப்பு என்றும் நீதிமன்றம் கண்டறிந்தது. சிறப்புத் தீவிர திருத்தில் பல சிக்கல்கள், ஆதார் அட்டையை அடையாளச் சான்றாக ஏற்றுக்கொள்ளுமாறு இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடுதல், நீக்கப்பட்ட வாக்காளர்களின் பட்டியல்களை வெளியிடுதல், மற்றும் விசாரணைகளுக்கு உதவுவதற்காக நீதிபதிகளை நியமிக்குமாறு  உத்தரவிட்டது  போன்ற  நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுகளின் மூலமே சரிசெய்யப்பட்டுவிட்டன என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.


பீகார், மேற்கு வங்கம், தமிழ்நாடு, அசாம் மற்றும் கேரளாவில் தேர்தல்களுக்கு சில காலத்திற்கு முன்னர் சிறப்புத் தீவிர திருத்தத்தை (SIR) வெளியிடப்பட்டதன் காலமானது, வாக்களிக்கும் உரிமையை அனுமதிக்க முடியாத அளவிற்குப் பாதித்ததா என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை. மேலும், மேற்கு வங்கத்தில் இந்த செயல்முறையின் சட்டப்பூர்வத்தன்மையையும் நீதிமன்றம் ஆராயவில்லை. அங்கு, பெற்றோரின் பெயர்கள் அல்லது வயதுகளை பார்க்காமல் இருப்பதுபோன்ற, படிவங்களில் உள்ள "தேவையற்ற முரண்பாடுகள்" காரணமாக 1.36 கோடி வாக்காளர்களுக்கு அறிவிப்புகள் அனுப்பப்பட்டிருந்தன. மேற்கு வங்கத்தைச் சார்ந்த விவகாரம், நீதிமன்றத்தின் முன் தனி மனுவாக நிலுவையில் உள்ளது.


இந்தத் தீர்ப்பு, நாட்டின் பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை மேற்கொள்ள வழிவகை செய்கிறது. சட்டப் போராட்டம் முடிந்துள்ள நிலையில், வாக்குரிமையை இழக்காமல் இருப்பதற்கான பொறுப்பு தற்போது குடிமக்களிடமே உள்ளது. மீதமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான 30 நாள் கணக்கெடுப்பு (Enumeration) கட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. எனவே, வாக்காளர்கள் இந்த நடைமுறையைப் புரிந்துகொண்டு, தங்களின் வாக்குப்பதிவுக்கு எவ்வாறு பொருந்துகிறது என்பதை கவனமாக கண்காணிக்க வேண்டும். அரசியல் கட்சிகள், ஊடகங்கள் மற்றும் குடிமைச் சமூக அமைப்புகள், உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவுகளின் பாதுகாப்பு அம்சங்களுடன் இணைந்து, தேர்தல் ஆணையம் தனது அறிவிப்புகளில் கூறியுள்ள நடைமுறைகளை முறையாகப் பின்பற்றுகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.


குடியுரிமை குறித்து நீதிமன்ற கூறியது


1950-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 16-ஆம் பிரிவு, குடிமக்கள் இல்லாதவர்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்வதைத் தடை செய்வதால், வாக்காளர் பட்டியல்களைத் திருத்தும்போது இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரு நபரின் குடியுரிமையை ஆராயலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள ஒருவர், வாக்காளர் மற்றும் குடிமகன் என்ற அனுமானத்தைப் பெறுகிறார் என்றும் அது தெளிவுபடுத்தியது.


ஆனால், சிறப்புத் தீவிரத் திருத்த அறிக்கையை வெளியிடும்போது சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் இந்தியத் தேர்தல் ஆணையத்தின்  தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றால், வாக்காளர்களின் பதிவை நிராகரிக்கலாம் அல்லது பெயர் நீக்கதைத் தொடங்கலாம். முக்கியமாக, அது போன்ற முடிவு அந்த நபரை ஒரு குடிமகன் அல்லாதவர் என்று அறிவிப்பதில்லை. தேர்தல் நோக்கங்களுக்காக இந்தியத் தேர்தல் ஆணையம் திருப்தியடையவில்லை என்பதையும், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கான சட்டப்பூர்வ நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதையும் மட்டுமே அது குறிக்கிறது. இதன் ஒரே விளைவு, வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவது மட்டுமே.


வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவது ஒரு தனிநபரின் வாக்களிக்கும் உரிமையை மட்டுமே பாதிக்கும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருந்தாலும், தீர்ப்புக்கு முன்பு, பீகார் மற்றும் மேற்கு வங்க அரசியல் தலைவர்கள், சிறப்புத் தீவிரத் திருத்ததிற்குப் (SIR) பிறகு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் நிறுத்தி வைக்கப்படும் என்று அறிவித்திருந்தனர். வாக்காளர் பதிவை அடிப்படையாகக் கொள்ளாத தகுதியைக் கொண்ட தற்போதைய திட்டங்களை,  சிறப்புத் தீவிரத் திருத்ததில் சேர்க்கப்படாதவர்களுக்கு சட்டப்படி மறுப்பு தெரிவிக்க முடியாது. ஆனால், சிறப்புத் தீவிரத் திருத்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களை வெளிப்படையாக விலக்குவதற்காகத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டால், அந்தப் பாதுகாப்பு இல்லாமல் போய்விடும். நீதிமன்றத்தின் தீர்ப்புகளின் அடிப்படையில் இந்த நிலைப்பாடுகள் மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


இந்தத் தீர்ப்பு, வாக்காளர் பட்டியலிலிருந்து பெயரை நீக்குவது மற்றும் குடியுரிமையை இழப்பது ஆகியவற்றை முற்றிலும் தனித்தனியாகப் பார்க்கவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். ஒரு நபர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கான குடியுரிமை நிபந்தனைகளை பூர்த்தி செய்கிறாரா என்பது குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம்  திருப்தியடையவில்லை என்றால், அந்தக் கேள்வியை 1955-ஆம் ஆண்டு  குடியுரிமைச் சட்டத்தின் கீழ் ஒன்றிய அரசிடம் பரிந்துரைக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.


சந்தேகத்திற்குரிய குடியுரிமை என்ற அடிப்படையில் வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர் நீக்கப்பட்டாலும், அதற்கான இறுதி முடிவு ஒன்றிய அரசின் தீர்மானத்திற்குட்பட்டதாகவே இருக்கும். அந்த முடிவு நியாயமான காலக்கெடுவிற்குள் எடுக்கப்பட வேண்டும் என்றும், எந்த நிலையிலும் அந்த நபரின் தொகுதியில் அடுத்த நாடாளுமன்ற, சட்டமன்ற அல்லது உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாகவே எடுக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. இதனால் வாக்குரிமை மற்றும் குடியுரிமை தொடர்பான நிலை நீண்ட காலம் தெளிவற்றதாக இருக்காமல் தடுக்க முடியும். மேலும், குடியுரிமை மறுக்கப்படுவது ஒரு நபரின் “அடையாள உணர்வையும் சமூக அங்கீகாரத்தையும்” பாதிக்கும் என்பதால், இது போன்ற முடிவுகள் “நியாயமான நடைமுறைகளுடனும் அமைப்புரீதியான கட்டுப்பாட்டுடனும்” அணுகப்பட வேண்டும் என்று நீதிமன்றம் எச்சரித்தது.


வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்களை குடியுரிமை தீர்மானத்திற்காக அனுப்புவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கான முன்னுதாரணம் ஏற்கனவே உள்ளது. 1997-ஆம் ஆண்டு அசாமில் நடைபெற்ற சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது, பல இலட்சம் மக்கள் “சந்தேக வாக்காளர்கள்” (D-Voters) எனக் குறிக்கப்பட்டு, அவர்களின் குடியுரிமையை இறுதியாகத் உறுதிசெய்ய வெளிநாட்டு தீர்ப்பாயங்களுக்கு  அனுப்பப்பட்டனர். ஏறக்குறைய 30 ஆண்டுகளை கடந்தும், இந்த சந்தேக வாக்காளர்கள் தொடர்பான பல வழக்குகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன. அவர்கள் குடிமக்களாகவும், வெளிநாட்டவர்களாகவும் இல்லாமல் இடையில் சிக்கித் தவித்து வருகின்றனர். இதன் காரணமாக, குடும்பஅட்டைகள், வங்கி கணக்குகள் போன்ற அடிப்படை உரிமைகளையும் சேவைகளையும் பெறுவதில் அவர்கள் அதிக சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.


சிறப்புத் தீவிர திருத்த (SIR) செயல்முறையின்கீழ் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படக்கூடியவர்களின் எண்ணிக்கை, ஒருகாலத்தில் “சந்தேக வாக்காளர்கள்” (D-Voters) எனக் குறிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைவிட பல மடங்கு அதிகமாக இருக்கக்கூடும். இதனால் தற்போதுள்ள வெளிநாட்டவர் தீர்ப்பாயங்களின் (Foreigners Tribunals (FTs)) திறன் கடுமையாக அழுத்தங்களை எதிர்கொள்ளலாம். பெயர்களில் உள்ள சிறிய எழுத்துப் பிழைகள் அல்லது ஆவணங்களில் பெயர் பொருந்தாதது போன்ற   நிர்வாகத் தவறுகளுக்காகவே பலரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கி, அவர்களை குடியுரிமை விசாரணைக்கு அழைப்பது, அவர்களின் வாக்குரிமையை மட்டுமல்லாமல், பல ஆண்டுகள் நீடிக்கக்கூடிய உரிமையற்ற நிலைக்கு (rightlessness) அவர்களை தள்ளும் அபாயத்தையும் ஏற்படுத்தலாம்.


ஷெனாஸ் சௌத்ரியின் உதவியுடன் தயாரிக்கப்பட்டது. ஆதித்யா பிரசன்ன பட்டாச்சார்யா கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும், வாசுதேவ் தேவதாசன் டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞரும் ஆவர்.

 

Original article : Can Election Commission decide who is an Indian citizen? What Supreme Court said in SIR verdict. -Aditya Prasanna Bhattacharya, Vasudev Devadasan

Share:

சிறப்பு தீவிர திருத்த (SIR) தீர்ப்பு : நீக்கப்பட்ட வாக்காளர் பெயர்களை அறிக்கையாகச் சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றத்தின் உத்தரவு; குடியுரிமைச் சரிபார்ப்புகளுக்கு வழிவகுக்கிறது. -அபூர்வா விஸ்வநாத்


தேர்தல் வாக்காளர் பட்டியல்களைத் தயாரிக்கும்போதோ அல்லது திருத்தும்போதோ, ​​குடியுரிமை தொடர்பான கேள்விகளை ஆராய்வதற்காக தேர்தல் ஆணையத்திற்கு "சந்தேகத்திற்கு இடமின்றி அதிகாரம் உள்ளது" என்று உச்சநீதிமன்றம் கூறியது. இருப்பினும், நீதிமன்றம் இந்த அதிகாரத்தை "முற்றிலும் மேலோட்டமான மற்றும் சூழல் சார்ந்ததாகவே" இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு, அதற்கு வரையறை செய்தது.


தேர்தல் ஆணையத்தால் (Election Commission (EC)) வாக்காளர் பட்டியல்களில் மேற்கொள்ளப்பட்ட சிறப்புத் தீவிர திருத்தத்தின் (SIR) சட்டப்பூர்வத் தன்மையை உறுதி செய்து, உச்சநீதிமன்றம் புதன்கிழமை வழங்கிய முக்கியத் தீர்ப்பு, ஒரு குறிப்பிடத்தக்க முரண்பாடாக அமைந்துள்ளது.


சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) செயல்முறையானது வாக்களிப்பதற்கான தகுதியைச் சரிபார்ப்பதோடு மட்டுமே நின்றுவிடும் என்றும், வாக்காளர் பட்டியலிலிருந்து ஒருவரை நீக்குவது என்பது "அந்த நபர் இந்தியக் குடிமகன் அல்ல என்று அறிவிப்பதற்குச் சமமாகாது" என்றும் நீதிமன்றம் வலியுறுத்திய அதேவேளையில், வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்கள், அடுத்த தேர்தல்களுக்கு முன்னதாகவே "தங்கள் குடியுரிமை தொடர்பான சட்டரீதியான தீர்ப்பிற்கு" (adjudication) உட்படுத்தப்படுவார்கள் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


2003-ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவரின் பெயர், அவர் இந்தியக் குடிமகன் அல்ல என்று தேர்தல் ஆணையம் கருதியதன் அடிப்படையில் நீக்கப்பட்டிருந்தால், அத்தகைய வழக்குகளை நான்கு வாரங்களுக்குள், 1955-ம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தின் (Citizenship Act) கீழ் செயல்படும் உரிய அதிகார அமைப்பிடம் தேர்தல் ஆணையம் அனுப்பிவைக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. அந்த அதிகார அமைப்பு, பின்னர் சட்டத்திற்கு உட்பட்டு அந்த நபரின் குடியுரிமை தன்மையைத் தீர்மானிக்கும். நாடாளுமன்றம், சட்டமன்றம் அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் எது முதலில் வருகிறதோ, அதற்கு முன்னதாகவே, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அந்த அதிகார அமைப்பு அறிவிப்பு அனுப்ப வேண்டும். மேலும், தங்கள் தரப்பு விளக்கத்தை அளிப்பதற்கான வாய்ப்பையும் அவர்களுக்கு வழங்க வேண்டும். நீதிமன்றம் வழங்கிய 124 பக்கங்கள் கொண்ட தீர்ப்பின் ஒரு பகுதியாக இந்த வழிகாட்டுதல் அமைந்திருந்தது.


உள்துறை அமைச்சகம், குடியுரிமைச் சட்டம் மற்றும் 'வெளிநாட்டினர் தீர்ப்பாயங்களின்' (Foreigners’ Tribunals) கீழ், குடியுரிமை தொடர்பான கருத்துக்கணிப்புகளின் பல்வேறு அம்சங்களை விசாரிக்கிறது. வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்கள் குறித்த விவரங்களைச் சமர்ப்பிக்க தேர்தல் ஆணையத்திற்கு நான்கு வார கால அவகாசம் அளிப்பதன் மூலம், நீக்கப்பட்ட நபர்களே தாங்கள் இந்தியக் குடிமக்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய சுமையை, நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மூலம் அவர்கள் மீது சுமத்துகிறது.


வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும்போதோ அல்லது திருத்தும்போதோ, குடியுரிமை தொடர்பான விவகாரங்களை ஆராய்வதற்கான அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்குத் தெளிவாகவே வழங்கப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. இருப்பினும், நீதிமன்றம் இந்த அதிகாரத்தை ”முற்றிலும் மேலோட்டமான மற்றும் சூழல் சார்ந்ததாகவே" இருக்க வேண்டும் என்று வரையறுத்தது. அதன் "சரியான கண்ணோட்டத்தில்" புரிந்து கொள்ளும்போது, ​​"இது அந்த நபர் இந்தியக் குடிமகன் அல்ல என்ற பிரகடனத்திற்கு சமமாகாது. தேர்தல் நோக்கங்களுக்காக, சட்டப்பூர்வ நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்பதில் ஆணையத்திற்கு திருப்தி ஏற்படாததையே இது பிரதிபலிக்கிறது" என்று நீதிமன்றம் கூறியது.


லால் பாபு ஹுசைன் vs வாக்காளர் பதிவு அதிகாரி (Lal Babu Hussein vs Electoral Registration Officer) வழக்கில் 1995-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பின்படி, வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற வாக்காளர்கள் பெயர்கள் குடியுரிமை பெற்றதற்கான கருத்துகணிப்பிற்கு உரிமையுடையவர்கள் என்று மனுதாரர்கள் வாதிட்டனர். அந்தத் தீர்ப்பில், வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவது ஒரு அலுவல்சார்ந்த செயல் என்பதால், அது முறைப்படுத்தப்பட்டதற்கான கருத்துகணிப்பைக் கொண்டுள்ளது என்ற முன்னுதாரணத்தின் அடிப்படைக் கொள்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டபோதிலும், அதை தற்போதைய வழக்கிலிருந்து வேறுபடுத்திக் காட்டியது. இந்த கருத்துகணிப்பு சான்று அடிப்படையிலானது மற்றும் ஆதாரத்துடன் இதை எதிர்த்து சவால் செய்ய கூடியது என்றும், இது ஒரு இறுதி அல்லது முழுமையான சட்டப் பாதுகாப்பு அல்ல. மேலும், இது ஆய்வுக்கு எதிரான ஒரு நிரந்தர உத்தரவாதமும் அல்ல என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


சிறப்பு தீவிர திருத்தம் (SIR) செயல்முறையை நீதிமன்றம் எவ்வாறு நியாயப்படுத்தியது?


இந்தத் தீர்ப்பில், ஆரம்பத்தில் வடிவமைக்கப்பட்ட சிறப்பு தீவீர திருத்தம் (SIR) செயல்முறையானது, “ஆவணப்படுத்தல், வெளிப்படைத்தன்மை மற்றும் பொது அணுகல் தொடர்பாக நியாயமான கவலைகளை எழுப்பியது” என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. “இருப்பினும், தொடர்ச்சியான நீதித்துறைத் தலையீடுகள் மூலம் இந்தக் கவலைகள் நிவர்த்தி செய்யப்பட்டு, அந்தச் செயல்முறையில் படிப்படியாகப் பாதுகாப்பு அம்சங்கள் புகுத்தப்பட்டன என்பதும் தெளிவாகத் தெரிகிறது,” என்றும் நீதிமன்றம் கூறியது.


இந்தத் தலையீடுகளின் காரணமாக, சிறப்பு தீவிர திருத்தம் (SIR) செயல்முறை "அரசியலமைப்புக்கு இணக்கமானதாக" மாறியது என்று நீதிமன்றம் கூறியது.


மேலும் "சிலரால் புறக்கணிப்பதாகக் கருதப்படக்கூடிய ஒரு செயல்முறையை, பொருத்தமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மூலம், செயல்படுத்தும்போது அரசியலமைப்புக்கு இணக்கமானதாக மாற்ற முடியும்," என்று நீதிமன்றம் கூறியது.


சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் விலக்கப்பட்டதற்கான காரணங்களுடன், அவர்களின் முழுமையான வாக்காளர் பட்டியலை வெளியிடுவதற்கான தனது முடிவை, "ஆரம்பத்தில் ஒரு வெளிப்படையற்ற நிர்வாகப் பயிற்சியிலிருந்து, சரிபார்க்கவும் சவால் செய்யவும் கூடிய ஒன்றாக மாற்றியது" என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.


"இந்தத் தீர்ப்புகள், சிறப்பு தீவிர திருத்த செயல்முறையான நடைமுறை நியாயத்தின் தேவைகளுடன் சீரமைக்கப்படுவதை உறுதிசெய்யும் கட்டமைப்புச் சீர்திருத்தங்களாகச் செயல்பட்டன," என்று நீதிமன்றம் கூறியது.

உச்சநீதிமன்றம், 2025 ஜூலை மாதம் தொடங்கி ஏழு மாதங்களுக்கும் மேலாக இந்த வழக்கை விசாரித்து, நீதிமன்றம் ஜனவரி மாதம் தனது தீர்ப்பை ஒத்திவைத்தது.


வாக்காளர் பட்டியல்களைத் தயாரிக்கும் அல்லது திருத்தும் செயல்பாட்டின்போது, ​​குடியுரிமை தொடர்பான கேள்விகளை ஆராய தேர்தல் ஆணையத்திற்கு "சந்தேகத்திற்கு இடமின்றி அதிகாரம் உள்ளது" என்று உச்சநீதிமன்றம் கூறியது. இருப்பினும், நீதிமன்றம் இந்த அதிகாரத்தை "முற்றிலும் மேலோட்டமான மற்றும் சூழல் சார்ந்ததாகவே" என்று குறிப்பிட்டு, அதற்கு வரையறை செய்தது.

Original link:

SIR ruling: Supreme Court tells Election Commission to report deleted names, sets stage for citizenship test.



Share: