ஏர் இந்தியா விமானிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கஞ்சா பயன்பாடு கண்டறியப்பட்டது: விமானிகளுக்கு போதைப்பொருள் பரிசோதனைகள் எவ்வாறு நடத்தப்படுகின்றன மற்றும் அதற்கான தண்டனைகள் யாவை? - சுகல்ப் சர்மா

நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக, இந்தியப் பொது விமானப் போக்குவரத்து இயக்ககத்தால் (Directorate General of Civil Aviation (DGCA)) ஒரு கடுமையான வழிகாட்டு நெறிமுறை உருவாக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டது. இதன்படி, மனநிலை மற்றும் மூளையின் செயல்பாட்டைப் பாதிக்கும் போதைப்பொருட்களைப் பயன்படுத்தியது மருத்துவப் பரிசோதனையில் உறுதிசெய்யப்படும் விமானிகள் மற்றும் விமானத் துறையின் பிற பணியாளர்கள்மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


புகேட்-டெல்லி இடையிலான ஏர் இந்தியா விமானம் திடீரென 300 அடி கீழே இறங்கிய சம்பவத்தில், அந்த விமானத்தை இயக்கிய முதன்மை விமானிக்கு நடத்தப்பட்ட இரண்டாவது போதைப்பொருள் பரிசோதனையில் கஞ்சா பயன்பாடு உறுதி (positive for marijuana) செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.




இந்தச் சம்பவத்தில் 24 பயணிகளும் விமானப் பணிப்பெண்களும் காயமடைந்தனர். தொடக்கத்தில், கடுமையான காற்றுக்கொந்தளிப்பே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது. இருப்பினும், இந்தச் சம்பவம் நடப்பதற்குச் சிறிது நேரத்திற்கு முன்பாகவே, அந்த ‘Airbus A320’ விமானத்தின் ஹைட்ராலிக் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளில் கோளாறுகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.


விமான விபத்து புலனாய்வு அமைப்பு (Aircraft Accident Investigation Bureau (AAIB)) இந்தச் சம்பவத்தைக் குறித்து விரிவாக விசாரணை நடத்தி வருகிறது.


விமானப் போக்குவரத்து பாதுகாப்பு கட்டுப்பாட்டு அமைப்பான இந்தியப் பொது விமானப் போக்குவரத்து இயக்ககத்தின் (DGCA) கூற்றுப்படி, அதிகரித்துவரும் போதைப்பொருள் பயன்பாடும், மனநலத்தைப் பாதிக்கும் போதைப்பொருட்கள் மிக எளிதாகக் கிடைப்பதும், விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பிற்குப் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.


நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகவே, போதைப்பொருட்களைப் பயன்படுத்துவது பரிசோதனையில் உறுதி செய்யப்படும் விமானிகள் மற்றும் பிற விமானத்துறை ஊழியர்களுக்குக் கடுமையான விதிகளைப் இந்தியப் பொது விமானப் போக்குவரத்து இயக்ககம் (DGCA) அமல்படுத்தியது. இந்தப் பரிசோதனையில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களைப் பயன்படுத்தியது உறுதிசெய்யப்பட்டால், முதன்முறையாகக் பிடிபடுபவர்களுக்குக் கட்டாய மறுவாழ்வுச் சிகிச்சை அளிக்கப்படும். அதையே மீண்டும் மீண்டும் தொடர்ந்தால் அவர்களின் விமானச் சேவை உரிமமே ரத்து செய்யப்படும் என்றும் விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.


விமானப் போக்குவரத்துத் துறையில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கான பரிசோதனை விதிகள்


விமானப் போக்குவரத்து ஊழியர்களுக்கான போதைப்பொருள் பரிசோதனை குறித்து, இந்தியப் பொது விமானப் போக்குவரத்து இயக்ககம் (DGCA) செப்டம்பர் மாதம் 2021-ஆம் ஆண்டில் வெளியிட்ட 'பொது விமானப் போக்குவரத்துத் தேவை' (Civil Aviation Requirements (CAR)) விதிகளானது, ஜனவரி மாதம் 31-ஆம் தேதி, 2022-ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. இந்த விதிகள் முக்கியமாக விமானிகள் மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை ஆகும். அதேசமயம், பாதுகாப்பு சார்ந்த முக்கியப் பணிகளில் ஈடுபட்டுள்ள பிற விமானப் போக்குவரத்துப் பணியாளர்களான விமானப் பராமரிப்புப் பொறியாளர்கள், சான்றளிக்கும் பணியாளர்கள், பயிற்சி விமானிகள், பயிற்சியாளர்கள் மற்றும் தேர்வாளர்கள் ஆகியோருக்கும் இந்த விதிகள் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.


விமானிகள் மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் பணியாளர்களில் 10 சதவீதம் பேரை உள்ளடக்கிய தற்செயலான போதைப்பொருள் பரிசோதனைக்குக் கட்டாயம் உட்பட வேண்டும்.   பிற விமானப் பணியாளர்கள் வேலைக்கு பணியமர்த்தப்படும்போது அல்லது சில குறிப்பிட்ட சம்பவங்களுக்குப் பிறகு பரிசோதிக்கப்படுகிறார்கள். ஆகஸ்ட் மாதம் 4-ஆம் தேதியன்று புகேட்-டெல்லி (Phuket-Delhi) இடையிலான ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளைத் தொடர்ந்து இத்தகைய போதைப்பொருள் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.


விமான நிறுவனங்கள் மற்றும் விமானப் பயிற்சிப் பள்ளிகள், பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் அமைப்புகள், மற்றும் வான்வழிப் போக்குவரத்து சேவை வழங்கும் நிறுவனங்கள் போன்ற பிற அமைப்புகளும், தங்களது மற்ற ஊழியர்களிடம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென மது அல்லது போதைப்பொருள் பரிசோதனைகளை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றன.


இந்தியப் பொது விமானப் போக்குவரத்து இயக்ககத்தின் விதிகளின்படி, பணியாளர்களின் சிறுநீர் மாதிரிகள் ஆறு வகையான மனநலனைப் பாதிக்கும் போதைப்பொருட்களுக்காக கட்டாயப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அவை: ஆம்பெட்டமைன்கள் மற்றும் ஆம்பெட்டமைன் வகை போதைப் பொருட்கள் (Amphetamines and amphetamine-type stimulants), அபின் மற்றும் அதன் துணைப் பொருட்கள் (Opiates and their metabolites), கஞ்சா (Cannabis / Tetrahydrocannabinol), கொகெயின் (Cocaine), பார்பிட்யூரேட்ஸ் (Barbiturates) மற்றும் பென்சோடியாசெபைன்ஸ் (Benzodiazepines) ஆகியவையாகும்.




பரிசோதனை நடைமுறை 


பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் விமானி அல்லது ஊழியரின் சிறுநீர் மாதிரி சேகரிக்கப்பட்டு, ஒரே நேரத்தில் இரண்டு தனித்தனி பாட்டில்களில் பிரிக்கப்பட்டுப் பாதுகாப்பாக வைக்கப்படும். மாதிரி சேகரிக்கப்பட்ட உடனேயே, முதலாவது பாட்டிலில் உள்ள மாதிரியைக் கொண்டு முதற்கட்ட சோதனையான ‘Screening test’ தொடங்கப்படும். இந்த முதற்கட்ட பரிசோதனையின் முடிவில் 'Non-negative' (சந்தேகத்திற்குரியது) என்று வந்தால்—அதாவது, அவர்களின் உடலில் போதைப்பொருட்கள் இருப்பது உறுதிசெய்யப்படாமல் சந்தேகத்திற்கிடமாகத் தெரியவந்தால், அடுத்தகட்ட உறுதிப்படுத்தும் பரிசோதனையின் (Confirmatory test) முடிவுகள் வரும்வரை, அந்த விமானி உடனடியாக விமானம் இயக்கும் பணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவார்.


ஏர் இந்தியா விமானியின் தொடக்கநிலை பரிசோதனை முடிவு உண்மையிலேயே சந்தேகத்திற்குரியதாகத்தான் (non-negative) இருந்தது.


இதையடுத்து, இரண்டாவது கொள்கலனில் உள்ள மாதிரியானது (Sample B), நிறப்பிகையியல் / நிறை நிறமாலைமானி (Gas Chromatography/Mass Spectrometry - GC/MS) அல்லது திரவ நிறப்பிகையியல் - நிறை நிறமாலைமானி (Liquid Chromatography-Mass Spectrometry - LC-MS) போன்ற மேம்பட்ட முறைகளைப் பயன்படுத்தி உறுதிப்படுத்தும் சோதனைக்காக குறிப்பிட்ட ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகிறது. மாதிரி A (Sample A) சந்தேகத்திற்குரியதாக இருந்தால், மாதிரி சேகரிப்பாளர், ஊழியர் (மாதிரி அளித்தவர்) மற்றும் மருத்துவப் பணியாளர்களின் கையொப்பங்கள் இடப்பட்ட மாதிரி B (Sample B), தகுந்த ஆய்வகத்திற்கு உறுதிப்படுத்துவதற்காகக் கண்டிப்பாக அனுப்பப்பட வேண்டும் என்று 'பொது விமானப் போக்குவரத்துத் தேவை (CAR) விதிகளில் கூறப்பட்டுள்ளது.


தற்போதைய நிகழ்வைப் போலவே, உறுதிப்படுத்தும் பரிசோதனையின் முடிவுகள் 'Positive' (போதைப்பொருள் பயன்பாடு உறுதி) என வந்தால், அந்த அமைப்பின் மருத்துவ அதிகாரி, மருத்துவ ஆய்வுக்குழு அதிகாரியை (Medical Review Officer (MRO)) கலந்தாலோசிக்க வேண்டும். இந்த போதைப்பொருள் பயன்பாடு உறுதி என்கிற முடிவானது போதைப்பொருள் பயன்பாட்டினால் வந்ததா, அல்லது சட்டப்பூர்வமான மருத்துவச் சிகிச்சை அல்லது பிற காரணங்களால் வந்ததா என்பதை இந்த மருத்துவ ஆய்வுக்குழு அதிகாரி (MRO) பரிசோதிப்பார். உதாரணமாக, 'Codeine' கலந்த வலிநிவாரணிகளை உட்கொள்வது, போதைப்பொருள் (Opiates) பரிசோதனையில் போதைப்பொருள் பயன்பாடு குறித்த தவறான முடிவைக் காட்டக்கூடும் என்றும் கூறப்படுகிறது.


இந்திய விமான ஓட்டுநர்கள் சங்கம் (Airline Pilots’ Association of India (ALPA)) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, விமானிகள் சுயமாக மருந்து உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இந்தியாவில் விற்கப்படும் சாதாரண சளி, இருமல், ஒவ்வாமை மற்றும் தூக்கத்திற்கான மருந்துகளில், பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் ஆறு வகையான மருந்துப் பிரிவுகளைச் சேர்ந்த வேதிப்பொருட்கள் இருக்கக்கூடும்.  மேலும், ஓட்டுநர்கள் புதிய மருந்துகளை உட்கொள்வதற்குமுன், தங்கள் நிறுவனத்தின் மருத்துவ அதிகாரியைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும், தாங்கள் உட்கொள்ளும் அனைத்து மருந்துகளையும் உண்மையாகவும் நேர்மையாகவும் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பரிசோதனைக்குப் பிறகு மருத்துவ ஆய்வுக்குழு அதிகாரி (MRO) ஒருவேளை ஆய்வு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டால், அதற்காக மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு (Prescription) மற்றும் மருந்தக ரசீதுகளைப் பத்திரமாக வைத்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


போதைப்பொருள் பயன்பாடு உறுதிப்படுத்தப்பட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?


மருத்துவ ஆய்வுக்குழு அதிகாரி (MRO) ஒருவருக்கு போதைப்பொருள் பரிசோதனையில் போதைப்பொருள் பயன்பாடு (Positive) இருப்பதை உறுதிசெய்தால், அவர் மீது அடுத்தடுத்த ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பணியாளர் ஒருவர் முதல்முறையாகப் போதைப்பொருள் பரிசோதனையில் சிக்கினால், அந்நிறுவனம் மருத்துவ ஆய்வுக்குழு அதிகாரியின் ஆலோசனையோடு அவரை மறுவாழ்வுக்காக ஒரு சிறப்பு மருத்துவர், மனநல ஆலோசகர் அல்லது போதை மீட்பு மையத்திற்கு அனுப்பி வைக்கும். அதன் பின்னர், அவர் மீண்டும் பணியில் சேர வேண்டுமானால், மறுபடியும் ஒரு போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்பட்டு அதில் அவருக்குப் பாதிப்பில்லை (Negative) என முடிவுவர வேண்டும். மேலும், நிறுவனத்தின் மருத்துவ அதிகாரியிடமிருந்து பணியில் ஈடுபடத் தகுதியானவர் என்பதற்கான உடற்தகுதிச் சான்றிதழையும் பெற வேண்டும்.

முதல் தவறுக்குக்குப் பிறகு மீண்டும் பணிக்குத் திரும்பிய ஒரு ஊழியருக்கு, இரண்டாவது முறையாகவும் பரிசோதனையில் போதைப்பொருள் பயன்பாடு உறுதிசெய்யப்பட்டால், அவருடைய உரிமம் (Licence) மூன்று ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்படும். அதேநேரத்தில், அவர் மூன்றாவது முறையாகவும் பரிசோதனையில் தவறு செய்தது கண்டறியப்பட்டால், அவருடைய உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.


போதைப்பொருள் பரிசோதனை செய்ய மறுப்பதை, பரிசோதனையில் போதைப்பொருள் உட்கொண்டது உறுதிசெய்யப்பட்டதற்குச் சமமான தீவிரமான குற்றமாக இந்தியப் பொது விமானப் போக்குவரத்து இயக்ககம் (DGCA) கருதுகிறது. முதல்முறையாகப் பரிசோதனை செய்ய மறுக்கும் ஊழியர் உடனடியாகப் பணியிலிருந்து நீக்கப்படுவதுடன், 48 மணி நேரத்திற்குள் போதைப்பொருள் பரிசோதனை செய்து அதில் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெறத் தவறினால், அவரது உரிமம் ஒரு வருடத்திற்கு இடைநீக்கம் (Suspension) செய்யப்படும். மேலும், அவர் மீண்டும் பணியில் சேர்வதற்குமுன் மறுவாழ்வுப் பயிற்சியை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.


மேலும், "ஒரு நபர் இரண்டாவது முறையும் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள மறுத்தால் அல்லது முதல் முறை மறுப்பிற்குப் பிறகு செய்யப்படும் பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதிசெய்யப்பட்டால், அவருடைய ஓட்டுநர் உரிமம் மூன்று ஆண்டுகளுக்கு இடைநீக்கம் (Suspended) செய்யப்படும் என்றும் இதற்கு பிறகும் தொடர்ச்சியாக இந்த விதிமீறலில் ஈடுபட்டால் அவரது உரிமம் முற்றிலுமாக ரத்து செய்யப்படும்" என்றும் விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.


Original Link: Marijuana found in Air India pilot’s test: How pilots are tested for drugs, and the punishment that can follow.

Share:

உழவர்களையும் வேளாண் விளைபொருட்களையும் பாதுகாக்க, இந்தியாவின் புவிசார் குறியீட்டு முறையில் சீர்திருத்தம் தேவைப்படுகிறது. - அனுபவ் சௌத்ரி

பாதிக்கப்பட்ட தரப்பினரான, அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் பருவகால வேளாண் தொழிலாளர்கள் உடனடியாகச் சட்டப் பாதுகாப்பு பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆனால், அவர்கள் நீண்டகால நீதிமன்ற வழக்குகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதால், தங்களின் சொந்தப் பாரம்பரியத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்குக்கூடப் போராட முடியாத அளவிற்கு நிதி நெருக்கடிக்கு ஆளாகுகின்றனர்.



"நாங்கள் சீரகத்தைப் பயிரிடுகிறோம், ஆனால் ‘உஞ்ஜா’ என்பது வெறும் சந்தை மட்டுமே" என்று ராஜஸ்தானைச் சேர்ந்த வேளாண் தொழிலாளி ஒருவர் கூறுகிறார். 20260-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், புவிசார் குறியீடு பதிவுத் துறை (Geographical Indication Registry), குஜராத்தைச் சேர்ந்த உஞ்சா வேளாண் விளைபொருள் சந்தைக் குழுவின் (Unjha Agriculture Produce Market Committee) பெயரில் 'உன்ஜா சீரகம் மற்றும் சோம்பிற்கு' புவிசார் குறியீட்டுத் (GI Tag) தகுதியை வழங்கியது. இதைத் தொடர்ந்து, இந்த முடிவு குஜராத்திற்கு வெளியே உள்ள உற்பத்தியாளர்களை, குறிப்பாக ஆண்டிற்கு சுமார் 3,00,000 டன் சீரகத்தை உற்பத்தி செய்யும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த வேளாண் தொழிலாளர்களைப் பாதிக்கும் என்று உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


1999-ஆம் ஆண்டின் புவிசார் குறியீடு (GI) சட்டத்தின்படி, ஒரு விண்ணப்பத்திற்கு எதிரான ஆட்சேபனைகளை வரவேற்பதற்காக, அதுகுறித்த அறிவிப்பு ‘GI’ இதழில் வெளியிடப்பட்டு மூன்றுமாத காலஅவகாசம் வழங்கப்படுகிறது. இருப்பினும், மொழி மற்றும் தகவல் தொடர்பு தடைகள் காரணமாக, ராஜஸ்தான் உற்பத்தியாளர்களால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தங்களது ஆட்சேபனையைத் தெரிவிக்க முடியாமல் போனது. இதன் காரணமாக, புவிசார் குறியீட்டுப் பதிவு நடைமுறை முடிந்த பிறகு, பாதிக்கப்பட்ட தரப்பினர் புவிசார் குறியீடு (GI) சட்டத்தின் பிரிவு 27-ன்கீழ் மிகவும் மெதுவான மற்றும் அதிகச் செலவை ஏற்படுத்தும் ரத்து செய்யும் நடைமுறையைத் தேர்ந்தெடுக்கக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இந்தச் சிக்கல் ஏதோ ஒரு சாதாரண எல்லைப் பிரச்சினையை மட்டும் எழுப்பவில்லை. மாறாக, உடனடியாகச் சரிசெய்யப்பட வேண்டிய ஒரு ஆழமான நிர்வாகத் தோல்வியை வெளிக்காட்டியுள்ளது.


அலுவலக நடைமுறைச் சிக்கல்கள்


இந்தியாவில் தற்போது 724 பதிவு செய்யப்பட்ட புவிசார் குறியீடுகள் மட்டுமே உள்ளன. அதாவது பத்து லட்சம் மக்களுக்கு வெறும் 0.52 புவிசார் குறியீடுகள் என்ற விகிதத்திலேயே உள்ளன. இதற்கு மாறாக, ஹங்கேரி நாட்டில் 2023-ஆம் ஆண்டிலேயே 7,290 புவிசார் குறியீடுகள் இருந்தன. இது அங்குள்ள பத்து லட்சம் குடிமக்களுக்கு 751 புவிசார் குறியீடுகளுக்குச் சமமாகும். இந்த பிரம்மாண்டமான வித்தியாசத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட ஒற்றைப் பதிவு முறையே ஒரு முக்கியக் காரணமாகும். ஆனால், இந்தியாவில் நீண்ட பதிவு நடைமுறைகள் போன்ற காரணங்களால் தாமதமாகின்றன. இதுவரை விண்ணப்பிக்கப்பட்டவற்றில் 46 சதவீதம் மட்டுமே ஒப்புதல் பெற்றுள்ளன.  நிலுவையில் உள்ள பதிவுகள், திரும்பப் பெறப்படுதல், நிராகரிப்பு அல்லது விரக்தியடைந்த விண்ணப்பதாரர்களால் கைவிடப்பட்ட நிலையிலேயே முடங்கியுள்ளன. இது வெறும் எண்ணிக்கையைப் பற்றிய பிரச்சனை மட்டுமல்ல, யார் பின்னடைவைச் சந்திக்கிறார்கள் என்பதைப் பற்றியது ஆகும். இதனால் உஞ்சா வேளாண் விளைபொருள் சந்தைக் குழு (Unjha APMC) போன்ற அதிக நிதி பலம் கொண்ட அமைப்புகள் தொடர்ந்து செழித்து வளரும் வேளையில், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சிறு குறு வேளாண் தொழிலாளர்கள் இதன் பலன்களைப் பெற முடியாமல் பாதிக்கப்படுகின்றனர்.


எல்லை கடந்த நிலப்பரப்பு சார்ந்த சர்ச்சைகள் ஏற்படும்போது, அதற்குத் தீர்வுகாண சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிமையியல் நீதிமன்றங்களை அணுக வேண்டியுள்ளது. இது ஏற்கனவே மெதுவாகச் செயல்படும் நீதித்துறை அமைப்பின் தாமதத்தை மேலும் அதிகரிக்கிறது. பாஸ்மதி அரிசி தொடர்பான சர்ச்சையும் இந்த நீண்ட நீதிமன்ற நடைமுறையிலேயே முடங்கிக் கிடக்கிறது. 2021-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தபோதிலும், புவிசார் குறியீட்டில் (GI) தங்களையும் சேர்க்க வேண்டும் என்ற மத்தியப் பிரதேசத்தின் கோரிக்கைக்கு உயர்நீதிமன்றம் இன்னும் தீர்வு காணவில்லை. மைசூர் பாக் மற்றும் கோலாப்பூரி செருப்புகள் போன்ற புகழ்பெற்ற பொருட்களும் இதுபோன்ற காலதாமதங்களால் பாதிக்கப்பட்டுள்ளன. 2021-ஆம் ஆண்டில் அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரியம் (Intellectual Property Appellate Board (IPAB)) கலைக்கப்பட்ட பிறகு இந்த நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. மேலும், அவசர நீதிமன்றப் பாதுகாப்பு தேவைப்படக்கூடிய முறைசாரா மற்றும் பருவக்கால வேளாண் தொழிலாளர்கள் உட்பட பாதிக்கப்பட்ட பிரிவினர், உரிமையியல் நீதிமன்றங்களில் நீண்ட சட்டப் போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது அவர்கள் தங்களது பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளும் சட்டப் போராட்டத்தையும் கடினமாக்கியுள்ளது.





அமலாக்க நடைமுறைகளில் உள்ள குறைபாடுகள்


நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டு, புவிசார் குறியீடு சட்டம் (GI Act) "அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள்", "உற்பத்தியாளர்கள்" மற்றும் "பரிசீலனைக் கட்டமைப்புகள்" போன்ற பல முக்கிய சொற்களுக்குத் தெளிவற்ற வரையறைகளையே கொண்டுள்ளது. இந்தத் தெளிவின்மையானது, இந்தச் சட்டம் எந்த நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டதோ அதற்கும் நடைமுறையில் செயல்படும் விதத்திற்கும் இடையே பெரிய இடைவெளியை உருவாக்குகிறது. மேலும், புவிசார் குறியீட்டிற்கு விண்ணப்பிப்பவர்களுக்குப் பரிசீலனை அமைப்புகளின் தணிக்கையைக் கட்டாயமாக்காமல், விருப்பத் தேர்வாகவே இச்சட்டம் வைத்துள்ளது. இத்தகைய சரியான நேரடி ஆய்வு முறைகளும் இல்லாத நிலையில், புவிசார் குறியீட்டு உரிமைகளை நடைமுறையில் முழுமையாகச் செயல்படுத்த முடியாது.


இதன் விளைவாக, உலகளவில் சுமார் 4 கோடி கிலோ போலி டார்ஜிலிங் தேயிலை விற்பனை செய்யப்படுகிறது. இது உண்மையான உற்பத்தியைவிட 10 மடங்கு அதிகம் ஆகும். வாரணாசியில், கட்டுப்பாடின்றி சூரத்திலிருந்து வரும் இயந்திரத் தயாரிப்புகள், உண்மையான கைத்தறிப் பொருட்களுக்குப் பதிலாக விற்கப்படுகின்றன. இதுமட்டுமன்றி, போலி அல்போன்சா மாம்பழங்களின் விற்பனை மற்றும் பெயரளவில் மட்டுமே இயங்கும் காஷ்மீரி குங்குமப்பூவுக்கான பரிசோதனை மையங்கள் ஆகியவை இந்தச் சிக்கலை மேலும் தீவிரமாக்குகின்றன.


தகவல் சார்ந்த இடைவெளி இந்தச் சிக்கலை மேலும் மோசமாக்குகிறது. புவிசார் குறியீடு (GI Tag) சான்றிதழ் பெற்றவர்களில் சுமார் 78 சதவீதம் பேருக்கு, இந்தச் சான்றைப் பயன்படுத்தித் தங்கள் தயாரிப்புகளுக்கு எவ்வாறு சிறந்த விலையைப் பெறுவது என்பது தெரியவில்லை. அதுமட்டுமின்றி, 42 சதவீதப் புவிசார் குறியீடுகளுக்கு மட்டுமே அதிகாரப்பூர்வமாகப் பதிவுசெய்யப்பட்ட பயனர்கள் உள்ளனர். அதாவது, 58 சதவீதப் புவிசார் குறியீடுகள் பெயரளவில் மட்டுமே உள்ளனவே தவிர, அங்குள்ள தனிப்பட்ட உற்பத்தியாளர்களுக்கு அவற்றைச் சட்டப்பூர்வமாகப் பயன்படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ அனுமதி இன்னும் கிடைக்கவில்லை.



‘The Energy and Resources Institute’ (TERI) அமைப்பின் ஆய்வுகள், புவிசார் குறியீடு) பெற்ற தயாரிப்புகள் 20 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் விலையைப் பெற முடியும் என்பதைக் காட்டுகின்றன. இருப்பினும், மலபார் மிளகு மற்றும் வழக்குளம் அன்னாசிப்பழம் உற்பத்தி செய்யும் வேளாண் தொழிலாளர்கள், தங்கள் தயாரிப்புகளுக்கு புவிசார் குறியீடு பதிவு செய்த பிறகும் வருமானத்தில் எவ்வித உயர்வையும் காணவில்லை. சுமார் 80 சதவீத இந்திய வேளாண் தொழிலாளர்கள் இடைத்தரகர்கள், வியாபாரிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களையே நம்பியுள்ளனர். இதன் காரணமாக, உற்பத்தியாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய கூடுதல் லாபத்தில் வெறும் 10 முதல் 15 சதவீதம் மட்டுமே அவர்களுக்குச் சென்றடைகிறது. இதற்கு மாறாக, ஐரோப்பிய உற்பத்தியாளர்கள் 50 முதல் 60 சதவீதம் வரை கூடுதல் லாபத்தைப் பெறுகின்றனர். இதனால், இந்திய வேளாண் தொழிலாளர்கள் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த வேளாண் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் பொருளாதாரப் பலனில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவான அளவையே பெறுகின்றனர்.


சீர்திருத்தத்திற்கான பாதை


ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசு தலைமையிலான நிர்வாக மாதிரியைக் கருத்தில்கொண்டு, இந்த அமைப்பை மேலும் மேம்படுத்த வேண்டும். இந்தியப் புவிசார் குறியீட்டுச் சட்டத்தின் (Geographical Indications of Goods Act, 1999) பிரிவு-25-ன்கீழ், சந்தையில் நடக்கும் புவிசார் குறியீட்டு (GI) விதிமீறல்களைக் கண்காணிக்கும் பொறுப்பை நிதிப் பற்றாக்குறை கொண்ட உற்பத்தியாளர்கள்மீது சுமத்தாமல், அரசாங்கமே நேரடியாகக் கண்காணித்துச் செயல்படுத்தும் முறைக்கு இந்தியா மாற வேண்டும். இதில், மாநில வேளாண்மைத் துறைகளின்கீழ் புவிசார் குறியீட்டு அமலாக்கப் பிரிவுகளை அமைப்பதும், இணையதள இணையதள முகவரி எச்சரிக்கைகள் (Domain-name alerts) மற்றும் புவிசார் கட்டுப்பாடுகளைக் பயன்படுத்தி இணையத்தில் நடக்கும் போலி விற்பனையைத் தடுக்க 'இணையவழி புவிசார் குறியீட்டு கண்காணிப்புப் பிரிவை அமைப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.


ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் வேளாண் தொழிலாளர் அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இது சந்தையில் தங்களின் பொருட்களுக்குச் சரியான விலையைப் பெறப் போராடும் அவர்களின் பேரம் பேசும் திறனை வலுப்படுத்தும் என்கின்றனர். சந்தைப்படுத்தும் அமைப்புகளுக்கும் உண்மையான வேளாண் தொழிலாளர்களுக்கும் இடையே லாபத்தைப் பகிர்ந்து கொள்ளும் முறை விரிவாக்கப்பட வேண்டும். மேலும், அவர்களின் விளைபொருட்களுக்குக் கிடைக்கும் கூடுதல் மதிப்பு வீணாகாமல் தடுப்பதற்கு, ஒருங்கிணைக்கப்பட்ட விளம்பரப் பிரசார நிதி ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.


சிலி (Chile) மற்றும் பெரு (Peru) நாடுகளுக்கு இடையேயான 'பிஸ்கோ' (Pisco) மதுபானச் சான்றிதழ் தொடர்பான பிரச்சனையில், புவியியல் குறியீடு பாதுகாப்பு என்பது "யார் முதலில் பயன்படுத்தினார்கள்" என்பதை வைத்துத் தீர்மானிக்கும் பந்தயம் அல்ல என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆகவே, ஒரே பெயரைக் கொண்ட புவியியல் குறியீடுகள், பிராந்தியப் பெயர்களை (Regional prefixes) முன்னொட்டாகப் பயன்படுத்துவதன் மூலம் அமைதியான முறையில் ஒன்றாகப் பயன்பாட்டில் இருக்க முடியும். இந்தக் கொள்கை, புவியியல் குறியீடுகள் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனைக்குத் தீர்வாக அமையலாம். இந்தியா தனது புவியியல் குறியீட்டு சட்டக் கட்டமைப்பை சீர்திருத்த வேண்டும். இதன் மூலம் நிலத்தையும் விளைபொருட்களைச் சாகுபடி செய்யும் வேளாண் தொழிலாளர்களையும் பாதுகாக்க முடியும். இல்லையெனில், ஒரு பலவீனமான சட்டப் பாதுகாப்பின் காரணமாகத் தங்களின் பாரம்பரிய உரிமையை இழக்கும் கடைசி நபர்களாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த வேளாண் தொழிலாளர்கள்  இருக்கமாட்டார்கள்.


Original Link: To protect farmers and their produce, India’s GI tag needs reform.

Share:

கடல்சார் காற்றாலை ஆற்றல் திறனை இந்தியா எவ்வாறு பெரிய அளவிலான பயன்பாடாக மாற்ற முயற்சிக்கிறது? - மகேஷ் கங்குலி

கடல்சார் காற்றாலைகள், கடலில் வீசும் வலிமையான மற்றும் சீரான காற்றைப்பயன்படுத்துவதன் மூலம் மின்சாரத்தை மிகவும் நிலையான முறையில் உற்பத்தி செய்ய முடிகிறது. மூன்று பக்கங்களிலும் நீரால் சூழப்பட்ட 7,600 கி.மீ நீளமுள்ள கடற்கரையைக் கொண்டுள்ள இந்தியா, கடல்சார் காற்றாலை ஆற்றல் திறனை எவ்வாறு பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது?


மேற்கு ஆசியாவில் தொடர்ந்து நிலவும் நெருக்கடியும், கடல்சார் கப்பல் போக்குவரத்தின் முக்கியமான சந்திப்புப் பாதைகள் (choke-points) தொடர்பான அபாயங்களும் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை பாதித்துவரும் நிலையில், இந்தியா தனது பரந்த கடல்சார் எரிசக்தித்திறனை பயன்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இது நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒரு லட்சியமிக்க முயற்சியாகக் கருதப்படுகிறது.


ஜூலை 31 அன்று ரூ. 84,084 கோடி மதிப்பீட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்ட  தேசிய கடல்சார் ஆய்வுத் (Samudra Manthan) திட்டம் இந்த முயற்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். ஆழ்கடல் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை ஆய்வு செய்வதற்கான விரிவான நடவடிக்கைகளை இந்தத்திட்டம்  கொண்டுள்ளது.


7,600 கி.மீ நீளமுள்ள கடற்கரையையும், மூன்று பக்கங்களிலும் நீரால் சூழப்பட்ட அமைப்பையும் கொண்டுள்ளதால், கடல்சார் காற்றாலை ஆற்றலைப் (offshore wind energy) பயன்படுத்துவதில் இந்தியாவுக்குச் சிறந்த வாய்ப்புகள் உள்ளன. நிலப்பரப்பில் அமைக்கப்படும் காற்றாலைகளுடன் ஒப்பிடுகையில், கடல்சார் காற்றாலை ஆற்றல் எத்தகைய நன்மைகளை வழங்குகிறது? இந்தியாவின் கடலோரக்காற்றாலை ஆற்றல் திறனை எவ்வாறு அதிக அளவிலான பயன்பாட்டிற்குக் கொண்டுவர இந்தியா முயற்சி செய்து வருகிறது?


கடல்சார் காற்றாலை ஆற்றல் ஏன் முக்கியமானது?


நிலப்பரப்பில் உள்ள காற்றாலைகள் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படும் 'நிலம் சார் காற்றாலை' (onshore wind power) முறையுடன் ஒப்பிடுகையில், கடல்சார் காற்றாலை ஆற்றல் (offshore wind energy) சிறந்த காற்றுச் சூழலின் காரணமாக அதிக நன்மைகளை வழங்குகிறது. கடலில் எந்த விதமான தடைகள் இல்லாததால், காற்றின் தரம் மற்றும் அதன் மூலம் மின்சாரமாக மாற்றப்படும் திறன் மிகவும் சிறப்பாக உள்ளது.


காற்றாலை ஆற்றல் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகின் முதல் வணிகரீதியான கடல்சார் காற்றாலைப்பூங்காவான ‘Vindeby’, 1991-ஆம் ஆண்டு டென்மார்க்கால் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இது பின்னர் உலகளாவிய எரிசக்தி மாற்றத்தின் முக்கியத் தூணாக மாறிய ஒரு தொழில்நுட்பத்தின் தொடக்கத்தைக் குறித்தது. 2026 உலகளாவிய காற்றாலை ஆற்றல் அறிக்கையின் படி, 2025-ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 9.3 ஜிகாவாட் (GW) புதிய கடல்சார் காற்றாலைத் திறன் மின் தொகுப்புடன் (grid) இணைக்கப்பட்டது. இதன் மூலம், மொத்த நிறுவப்பட்ட திறன்  92.5 ஜிகாவாட்டாக  அதிகாரித்துள்ளது.


இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இணைந்து 2025-ஆம் ஆண்டில் 126 ஜிகாவாட்டிற்கும் அதிகமான புதிய திறனைச் சேர்த்துள்ளன என்பதையும் அந்த அறிக்கை  சுட்டிக் காட்டுகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் நிறுவப்படும் நிலம்சார் காற்றாலைத் திறனை  இருமடங்காக அதிகரித்து,  அதை 6.3 ஜிகாவாட் புதிய திறனை உருவாக்கியது. அதேவேளையில், சீனா மட்டும் 120 ஜிகாவாட்டிற்கும் அதிகமான நிலம்சார் மற்றும் கடல்சார் காற்றாலைத் திறனைச்சேர்த்தது. கடல்சார் காற்றாலைத் துறையைப் பொறுத்தவரை, உலகளாவிய புதிய இணைப்புகளில் ஐக்கிய இராச்சியம் 18.5 சதவீதப் பங்களிப்பை அளித்தது. அதைத் தொடர்ந்து ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து நாடுகள் முறையே 10.4 சதவீதம் மற்றும் 5.3 சதவீதப் பங்களிப்பை வழங்கின.


அதிகரித்துவரும் மின்சாரத்தேவையைப் பூர்த்தி செய்வதோடு, தூய எரிசக்தி கலவையின் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் அதே வேளையில், இந்தியா தனது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டமைப்பை விரிவுபடுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்த எரிசக்திக்கலவையில் கடல்சார் காற்றாலை ஆற்றல் அதிக ஆற்றல் திறனைக் கொண்டுள்ளது.


ஜூன் 15, 2026 அன்று, கோவாவில் "காற்றாலை ஆற்றல்: லட்சியத்திலிருந்து விரைவான செயல்பாட்டிற்கு" (Wind Energy: From Ambition to Acceleration) என்ற கருப்பொருளின் கீழ் 'உலகளாவிய காற்றாலை தின மாநாட்டை' இந்தியா நடத்தியது. காற்றாலை ஆற்றலின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதற்கும், இந்தத் துறையின் வளர்ச்சிகள் குறித்து விவாதிக்கவும் ஆண்டுதோறும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. வளங்களின் போதுமான இருப்பு, மின் தொகுப்பின் தயார்நிலை, திறன் விரிவாக்கம் மற்றும் உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றில் இந்த ஆண்டு நடைபெற்ற மாநாடு கவனம் செலுத்தியது. மேலும், இந்தியாவின் நீண்டகால புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உத்தியில் உருவெடுத்து வரும் முக்கியமான பகுதியாக கடல்சார் காற்றாலை மின் திட்டங்களை செயல்படுத்துவதும்  முன்னிலைப்படுத்தப்பட்டது.


மற்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களிலிருந்து கடல்சார் காற்றாலை எவ்வாறு வேறுபடுகிறது?


நவீன மின்சார அமைப்புகளுக்கு கடல்சார் காற்றாலை மிகவும் பொருத்தமானதாக மாறும் விதங்களில், அது மற்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களிலிருந்து வேறுபடுகிறது. சூரிய ஒலி ஆற்றல் பகல் நேரங்களில் மட்டுமே மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. மேலும் மேகமூட்டம் மற்றும் பருவகால நிலைமைகளுக்கு ஏற்ப அதன் உற்பத்தி மாறுபடும். நிலப்பரப்பு காற்றாலை மின்சாரம் (Onshore Wind) நிலப் பயன்பாடு, காட்சித் தாக்கம் மற்றும் ஒலி மாசுபாடு போன்ற சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும்.


இதற்கு மாறாக, கடல்சார் காற்றாலை ஆற்றல் வலிமையான மற்றும் நிலையான கடல் காற்றின் நன்மையைப் பெறுகிறது. இதன் மூலம் காற்றாலைகள்  சீரான முறையில் அதிக மின்சாரம் உற்பத்தியை செய்ய முடியும். குறிப்பாக, மாலை நேரங்களில் மின்சாரத் தேவை  அதிகரிக்கும் அதே நேரத்தில் சூரிய மின்சார உற்பத்தி குறையும். அந்த நேரத்திலும் கடல்சார் காற்றாலை மின்சாரம் பயனுள்ளதாக இருக்கும். மேலும், நிலப்பரப்பை மற்ற நிலையான பயன்பாடுகளுக்காக பயன்படுத்துவதற்கும் இது தேவையான வாய்ப்புகளை வழங்கும்.


எனவே, கடலோரக் காற்றாலைத் திட்டங்கள் அதிக திறன் காரணியைப் (Capacity utilisation) பெற முடியும். சூரிய ஒளி மின்சாரம் மற்றும் நிலப்பரப்புக் காற்றாலைகளுடன் ஒப்பிடுகையில், புதிய கடலோரக் காற்றாலைத் திட்டங்கள் ஏறத்தாழ 40-50 சதவீதம் வரை 'உற்பத்தித் திறனை' (Capacity factors) அடைய முடியும் என சர்வதேச ஆற்றல் முகமை (IEA) மதிப்பிடுகிறது."



உற்பத்தித் திறன் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு மின் உற்பத்தி நிலையம் உண்மையில் உற்பத்தி செய்த மின்சாரத்தையும், அது தொடர்ந்து முழுத்திறனில் இயங்கியிருந்தால் உற்பத்தி செய்திருக்கக்கூடிய அதிகபட்ச மின்சாரத்தையும் ஒப்பிடும் விகிதமாகும். அதிக உற்பத்தித் திறன் இருப்பது நிறுவப்பட்ட மின் திறனை சிறப்பாகப்பயன்படுத்த உதவுவதுடன், மின் அமைப்பின் நிலைத்தன்மைக்கும் (Grid Stability)  முக்கிய காரணியாக இருந்து வருகிறது.


தொழில்நுட்ப மற்றும் நிதி சார்ந்த சிக்கல்கள்


இருப்பினும், இந்த நன்மை அதிக தொழில்நுட்ப மற்றும் நிதிச் சிக்கல்களிலிருந்து வருகிறது. கடல் காற்றாலைத் திட்டங்களில் பெரிய சுழலும் இயந்திரங்கள் (Turbines), கடலிற்கு அடியில் உள்ள அடித்தளங்கள், கடலிற்கு அடியில் உள்ள கேபிள்கள், கடலோரப் பகுதிகளில் இருக்கும் துணை மின் நிலையங்கள் மற்றும் நிறுவுவதற்கும் பராமரிப்பதற்கும் பிரத்யேகமான கப்பல்கள் ஆகியவை அடங்கும். நவீன சுழலும் இயந்திரங்கள் 15 மெகாவாட்டைத் தாண்டக்கூடியவை. அவற்றின் இறக்கைகள் 100 மீட்டருக்கும் மேல் நீண்டுள்ளன.


ஒப்பீட்டளவில் ஆழம் குறைந்த நீர்நிலைகளில் உள்ள திட்டங்களுக்கு, ஒற்றைத் தூண்கள் ((Monopile), ஜாக்கெட்டுகள் மற்றும் புவியீர்ப்பு அடிப்படையிலான கட்டமைப்புகள் போன்ற நிலையான அடித்தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆழமான நீர்நிலைகளில் மிதக்கும் அடித்தளங்கள் தேவையற்றதாகுகின்றன. இருப்பினும், அந்தத் தொழில்நுட்பம் அதிக விலை கொண்டதாகவும், வணிகரீதியாக இன்னும் பின் தங்கிய நிலையிலே உள்ளது. திட்டச் செலவுகள் ஒரு மெகாவாட்டிற்கு  ரூ. 18–20 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தரைவழி காற்றாலை அல்லது பயன்பாட்டு அளவிலான சூரியசக்தித் திட்டங்களின் செலவை விட  இரண்டு மடங்கு ஆகும்.


மேலும், உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை நிலப்பகுதிக்கு கொண்டு செல்ல கடலுக்கடியில் அமைக்கப்படும் மின்சாரப்பரிமாற்றக் கம்பிகள் (Subsea Transmission Cables) தேவைப்படுகின்றன. அதேபோல், மின்சாரம் தேசிய மின்கம்ப அமைப்புடன் இணைக்கப்படுவதற்கு முன்பு அதைச் சேகரிப்பதற்கான கடல்சார் மின்சார உள்கட்டமைப்பும்  முக்கியமானதாகிறது. இது போன்ற தொழில்நுட்பத் தேவைகள் காரணமாக, கடல்சார் காற்றாலைத்துறை நீண்டகால நிதியுதவி, நிறுவுதல் மற்றும் செயல்பாட்டிற்கான சிறப்பான உள்கட்டமைப்பு, நீடித்த வளர்ச்சிக்கு ஆதரவான ஒழுங்குமுறைச்சூழலை உறுதி செய்யும் நிலையான கொள்கை ஆகியவற்றை பெரிதும் சார்ந்துள்ளது.


கொள்கைத் தலையீடுகள்


இந்தியா கடல்சார் காற்றாலை ஆற்றலின் திறனை ஆரம்பத்திலேயே உணர்ந்தது. 2015-ஆம் ஆண்டின் தேசியக் கடல்சார் காற்றாலை ஆற்றல் கொள்கையின் (National Offshore Wind Energy Policy) மூலம் இந்தத்துறைக்கான தனித்துவமான கொள்கை கட்டமைப்பை உருவாக்கியது. இதன்மூலம் இந்தத் துறைக்கென பிரத்யேக கொள்கைக் கட்டமைப்பை உருவாக்கிய முன்னோடி நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்தது. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் (Ministry of New and Renewable Energy (MNRE)) தன்னாட்சி அமைப்பான தேசிய காற்றாலை ஆற்றல் நிறுவனம் (National Institute of Wind Energy (NIWE)), காற்றாலை வள மதிப்பீடுகளை மேற்கொண்டு, 70 GW-க்கும் அதிகமான தொழில்நுட்பரீதியாக சாத்தியமான கடல்சார் காற்றாலை மின் திறனை அடையாளம் கண்டுள்ளது. இது முக்கியமாக குஜராத் மற்றும் தமிழ்நாடு கடற்கரைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமாக உள்ளது. மேலும், 2030-ஆம் ஆண்டிற்குள் 30 ஜிகாவாட் திறன் கொண்ட கடலோரப்பகுதிகளை தாண்டி அமையும் காற்றாலை மின் உற்பத்தித் திறனை நிறுவுவதற்கான இலக்கையும் அரசு அறிவித்துள்ளது.


கடந்த சில ஆண்டுகளில் இந்தக் கொள்கை கட்டமைப்பு மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால் திருத்தப்பட்ட கடல்சார் காற்றாலை ஆற்றல் உத்திசார் அறிக்கையை  வெளியிட்டது. இதன் கீழ் 2030-ஆம் ஆண்டுக்குள் 37 GW கடல்சார் காற்றாலைத் திட்டங்களுக்கான கடலடித் தள குத்தகைகளை (Site Leases) மூன்று மேம்பாட்டு மாதிரிகள் மூலம் ஏலம் விடுவதற்கான திட்டம் உருவாக்கப்பட்டது.


மாதிரி A: ஏற்கனவே அரசு அடையாளம் கண்டுள்ள பகுதிகளை இது கொண்டுள்ளது. இந்தப்பகுதிகளில் காற்றாலை வள மதிப்பீடுகள் மற்றும் கடலிற்கு அடியில் உள்ள தள ஆய்வுகள் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளன. இந்தத்திட்டங்கள் செயல்திறன் இடைவெளிக்கான நிதி உதவி (Viability Gap Funding (VGF)) மூலம் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கின்றன. செயல்திறன் இடைவெளிக்கான நிதி உதவி என்பது திட்டச்செலவுக்கும் எதிர்பார்க்கப்படும் வணிக வருமானத்திற்கும் இடையிலான இடைவெளியை  சரி செய்வதற்காக அரசு வழங்கும் நிதியுதவியாகும்.


மாதிரி B: இதுவும் அரசாங்கத்தால் அடையாளம் கணபட்டுள்ள பகுதிகளை கொண்டுள்ளது. ஆனால், இதில் செயல்திறன் இடைவெளிக்கான நிதி உதவி வழங்கப்படாது. எனவே, திட்டத்தின் பொருளாதார சாத்தியக் கூறு சந்தை நிலைமைகளைப் பொறுத்தே அமையும்.


மாதிரி C: இந்தத்திட்டம், முதலீட்டாளர்கள் இந்தியாவின் 200 கடல் மைல் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் (Exclusive Economic Zone) தேவையான இடங்களைக் கண்டறியவும், சொந்தமாக வளங்களை மதிப்பீடு செய்து தன்னிச்சையாகத் திட்டங்களை உருவாக்கவும் அனுமதிக்கிறது.


இருப்பினும், சந்தையின் ஆரம்பகாலப் வரவேற்பு மிகவும் பலவீனமாகவே இருந்தது. குஜராத் கடற்கரையில் 500 மெகாவாட் மின் இணைப்புத் திட்டத்திற்கும், தமிழ்நாடு கடற்கரையில் 4 கிகாவாட் கடலிற்கு அடியில் உள்ளப்பகுதியை குத்தகைக்கு  எடுக்க எந்த ஒரு ஏலதாரர்களும் முன்வரவில்லை. இந்த முடிவு ஒரு பரந்த சிக்கலைச் சுட்டிக்காட்டுகிறது: அரசின் ஆதரவு இருந்தபோதிலும், முதலீட்டாளர்கள் அதிக மூலதனத்தேவைகள், நீண்ட திட்ட வளர்ச்சி காலம், மின் விநியோகக் கட்டமைப்புகள், கட்டுமான ஆபத்துகள் மற்றும் எதிர்கால மின்சார விலை ஆகியவற்றைச் கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது.

உள்கட்டமைப்பு மற்றும் ஒழுங்குமுறைச் சவால்களை எதிர்கொள்வது


சில நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட கொள்கை முன்னேற்றங்கள், இந்தியா புதிய அணுகுமுறைகளைப் பரிசோதித்து வருவதைக்காட்டுகின்றன. புதிய திட்டங்களுடன் கூடுதலாக, இந்தக் கூறுகளுக்கான உள்நாட்டு விநியோகச் சங்கிலி குறைவாக இருப்பதால், கடல் காற்றாலை மின்னாக்கிகள், கடலிற்கு அடியில் உள்ள  வடங்கள் மற்றும் அடித்தளங்களுக்கான சுங்க வரி விலக்கு அளிப்பது குறித்தும் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.


கடல்சார் காற்றாலை வளர்ச்சிக்குத் தேவையான தளவாடச்சவால்களை எதிர்கொள்ளவும் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 2023-ஆம் ஆண்டின் ஹரித் சாகர் பசுமை துறைமுக வழிகாட்டுதல்கள் (Harit Sagar Green Port Guidelines) பசுமையான மற்றும் அதிக திறன் கொண்ட துறைமுகங்களை உருவாக்குவதற்கான கட்டமைப்பை ஏற்படுத்தியது. அதேபோல், 2024-ஆம் ஆண்டின் செயல்திறன் இடைவெளிக்கான நிதி உதவி Viability Gap Funding திட்டத்தில் துறைமுக மேம்பாட்டிற்காக ₹600 கோடி ஒதுக்கப்பட்டதும் இந்த முயற்சியின் ஒரு பகுதியாகும்.


இதேபோல், மின்சாரப் பரிமாற்றத்திட்டமிடலிலும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில், பல காற்றாலைகளிலிருந்து மின்சாரத்தைச் சேகரித்து, அதன் மின்னழுத்தத்தை உயர்த்தி, திறமையாகக் கரைக்கு கொண்டு வந்து, பின்னர் நிலப்பகுதியில் உள்ள தேசிய மின்கம்ப அமைப்புடன் இணைக்க கடல்சார் துணை மின் நிலையங்கள் (Offshore Substations) தேவைப்படுகின்றன. ஆரம்பகட்ட 10 GW கடல்சார் காற்றாலை மின் திறனுக்கான மின்சாரப் பரிமாற்றத் திட்டமிடலை இந்தியா ஏற்கனவே நிறைவு செய்துள்ளது. குஜராத் மற்றும் தமிழ்நாட்டிற்கு தலா 5 ஜிகாவாட் மின் பரிமாற்றத் திட்டமிடலை ஏற்கனவே முடித்துவிட்டது. இருப்பினும், பெரிய அளவில் திட்டங்களைச் செயல்படுத்த, கடல்சார் மின் உற்பத்திப் பகுதிகளுக்கும் நிலப்பகுதி மின்கம்ப அமைப்புக்கும் இடையே மேலும் ஒருங்கிணைப்பு தேவைப்படும்.


மேலும், இந்தியாவின் கடல்சார் திட்டங்கள் சுற்றுச்சூழல், கடலோர ஒழுங்குமுறை, பாதுகாப்பு, கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள், மீன்வளம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு விதிமுறைகளுக்கு உட்பட்டவை. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (Ministry of New and Renewable Energy (MNRE)) ஒருங்கிணைப்பு அமைச்சகமாக செயல்படுவதுடன், தேசிய காற்றாலை ஆற்றல் நிறுவனம் (National Institute of Wind Energy (NIWE)), கடல்சார் காற்றாலை வளர்ச்சிக்கு ஆதரவளிக்கிறது. இருப்பினும், திட்டங்களை உரிய காலத்தில் செயல்படுத்த பல்வேறு அதிகார அமைப்புகளுக்கு இடையிலான பயனுள்ள ஒருங்கிணைப்பு முக்கியமான ஒன்றாகும்.


இந்தியாவின் கடல்சார் காற்றாலை எதிர்காலத்தை உருவாக்குதல்



இந்தியாவின் கடல்சார் காற்றாலை உத்தி படிப்படியாக ஆற்றல் திறனிலிருந்து செயல்படுத்தலை நோக்கி நகர்ந்து வருகிறது. கொள்கை கட்டமைப்பு, காற்றாலை வளத்திறன் மதிப்பீடு, நிதியுதவி, மின்சாரப் பரிமாற்றத் திட்டமிடல் மற்றும் உலகளாவிய கூட்டாண்மைகள் ஆகியவை இந்தத் துறையின் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளங்களை வழங்குகின்றன.


அதேநேரத்தில், சிறப்புத் துறைமுகங்கள், கப்பல்கள், உள்நாட்டு உற்பத்தித்திறன் மற்றும் ஒழுங்குமுறை உறுதித்தன்மை உள்ளிட்ட முக்கியமான உள்கட்டமைப்பு, இந்தத்துறையின் வேகத்தை வடிவமைக்கும். இந்தக் கூறுகள் அனைத்தும் ஒன்றிணைந்து உருவாகும்போது, கடல் காற்றாலைகள் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கலவைக்கு மட்டுமல்லாமல், ஒரு பரந்த தொழில்துறை சூழலமைப்பின் வளர்ச்சிக்கும் முக்கியமானதாக அமையக்கூடும்.


இந்தியா ஏற்கனவே நிலப்பரப்பு காற்றாலை நிறுவல்களில் உலகின் 4-வது பெரிய சந்தையாக உள்ளது மற்றும் காற்றாலை ஆற்றலை அதிக அளவில் விரிவுபடுத்தும் திறனை நிரூபித்துள்ளது. கடல்சார் காற்றாலை ஒரு மாறுபட்ட தொழில்நுட்ப மற்றும் நிறுவனரீதியான சவாலாக இருந்தாலும், இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மாற்றத்திற்கு இது ஒரு புதிய பரிமாணத்தை வழங்கும். எனவே, இந்தியா தனது கடல்சார் காற்றாலை ஆற்றல் திறனை வணிக ரீதியாகச் சாத்தியமான மற்றும் நீடித்த தூய்மையான மின்சார ஆதாரமாக எவ்வளவு திறமையாக மாற்றுகிறது என்பதைத் தீர்மானிப்பதில் வரவிருக்கும் ஆண்டுகள் முக்கியமானதாக இருக்கும்.


உலகளாவிய முன்னுதாரணங்களிலிருந்து இருதரப்பு ஒத்துழைப்பு வரை


இங்கு, பிற நாடுகளின் அனுபவங்கள் இந்தியாவுக்கு பயனுள்ள வழிகாட்டுதல்களை வழங்கக்கூடும். உதாரணமாக, சீனா, தொடர்ந்து மேற்கொண்ட முதலீடுகள், உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஒருங்கிணைந்த உள்கட்டமைப்புத் திட்டமிடல் ஆகியவற்றின் மூலம் உலகின் மிகப்பெரிய கடல்சார் காற்றாலை சந்தையாக உருவெடுத்துள்ளது. ஐக்கிய இராச்சியம் வேறுபட்ட அணுகுமுறையைப் பின்பற்றியது. குறிப்பாக, நிலையான சந்தை ஊக்குவிப்புகளை மையமாகக் கொண்ட (Contract for Difference (CfD)) முறையைப் பயன்படுத்தியது. இந்த முறையின் மூலம், மின்சாரத்திற்கான ஒரு செயல்படுத்தும் விலையை திட்ட உருவாக்குநர்களுக்கு உறுதி செய்கிறது. சந்தை விலை இந்த அளவைவிடக் குறைவானதாக இருக்கும்போது, அதற்கேற்ப வழங்கப்படும் தொகை சரிசெய்யப்படுகிறது.


இந்த அனுபவங்கள், இந்தியா தனது சொந்த கடல்சார் காற்றாலை கொள்கைக் கட்டமைப்பை உருவாக்கும் நிலையில் பயனுள்ள முன்னுதாரணங்களாகவும் அமைகின்றன.  சில நாட்களுக்கு முன்னர் இந்தியா–நார்வே கடல்சார் காற்றாலை ஒத்துழைப்பு மற்றும் இந்தியா-ஐக்கிய இராச்சியம் தொலைநோக்குப் பார்வை 2035-ன் கீழ் உருவாக்கப்பட்ட கடல்சார் காற்றாலைப் பணிக்குழு (India–UK Offshore Wind Taskforce) ஆகியவை, இந்தியாவின் கடல்சார் காற்றாலைத்துறை இன்னும் வளர்ந்து வரும் பகுதிகளில் கூட்டாண்மைக்கான தளங்களை வழங்குகின்றன. தொழில்நுட்பப் பரிமாற்றம், நிதி மாதிரிகள், ஒழுங்குமுறை வடிவமைப்பு மற்றும் விநியோகச் சங்கிலி வசதிகளை மேம்படுத்துதல் போன்ற துறைகளில் இது போன்ற இரு நாட்டு ஒப்பந்தங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.


Original Link: How India seeks to translate its offshore wind potential into large-scale deployment.

Share:

கழிவுகளை எரிசக்தி பாதுகாப்பாக மாற்றுவதில் 'கோபர்தன்' (GOBARdhan) ஒரு முக்கிய உத்தியாக அமைகிறதா? - ரவீனா பனேட்டா

GOBARdhan : கோபர்தன் திட்டம் என்பது கிராமப்புறங்களில் உள்ள கால்நடை சாணம் மற்றும் கசடு போன்ற மக்கும் கழிவுகளை பயனுள்ள பயோ-கேஸ் (Biogas) மற்றும் இயற்கை உரங்களாக மாற்றும் ஒரு தேசியத் திட்டமாகும். இது கிராமங்களைச் சுத்தமாக வைத்திருக்கவும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும் உதவுகிறது.


'கோபர்தன்' (GOBARdhan) திட்டத்திற்கான புதிய கட்டமைப்பிற்கு அரசு ஏன் ஒப்புதல் அளித்துள்ளது? விவசாயக் கழிவுகள், கால்நடைச் சாணம் மற்றும் பிற கரிமக் கழிவுகள் எவ்வாறு அழுத்தப்பட்ட உயிரி எரிவாயுவாக (Compressed Biogas (CBG)) மாற்றப்படுகின்றன? இந்தியாவுக்கு அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (CBG) ஏன் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது? 


தற்போதைய நிகழ்வு :


நாட்டில் அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (CBG) உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு, மத்திய அமைச்சரவை வியாழக்கிழமையன்று 'கோபர்தன்' (GOBARdhan) எனும் தேசிய வட்டார உயிரி-எரிசக்தி திட்டத்திற்கு (National Circular Bioenergy Scheme) ஒப்புதல் அளித்தது. 2026-27 முதல் 2035-36 வரையிலான 10 ஆண்டுகளில் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்திற்கு ரூ. 23,731 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


முக்கிய அம்சங்கள் :


1. நகர எரிவாயு விநியோக நிறுவனங்களின் கொள்முதல் உத்தரவாதம், நிலையான நிர்ணயிக்கப்பட்ட விலை, மூலதன மானியங்கள், கடன் உதவிகள் மற்றும் குழாய்வழி உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றின் மூலம், இத்துறையில் தனியார் முதலீட்டை பெருமளவில் ஈர்ப்பதும், உள்நாட்டு அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (CBG) உற்பத்தியை சுமார் 10 மடங்கு அதிகரிப்பதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.


2. 'கோபர்தன்' (Galvanising Organic Bio-Agro Resources Dhan(GOBARdhan)) திட்டம் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட உள்ளது.


உயிரி எரிவாயுவிற்கும் (Biogas) அழுத்தப்பட்ட உயிரி எரிவாயுவிற்கும் (CBG) உள்ள வித்தியாசம் என்ன?




புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் இணையதளத்தின்படி,


3. உயிரி எரிவாயுவில் சுமார் 55-65% மீத்தேன், 35-44% கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு, நைட்ரஜன், அம்மோனியா போன்ற பிற வாயுக்களின் மிகச்சிறிய அளவுகள் உள்ளன. சுத்திகரிக்கப்படாத நிலையில் உள்ள உயிரி எரிவாயுவை, சமையல் எரிபொருளாக (LPG-க்கு மாற்றாக), விளக்கு எரித்தல், இயந்திரங்கள் மற்றும் பிற சாதனங்களை இயக்குதல் மற்றும் மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்தலாம்.


4. டீசல் இயந்திரங்களில் டீசலுக்கு மாற்றாக 80% வரையிலும், 100% உயிரி எரிவாயு இயந்திரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் டீசலை முழுமையாகவும் (100%) மாற்றீடு செய்ய இது பயன்படுகிறது. மேலும், உயிரி எரிவாயுவைச் சுத்திகரித்து 98% மீத்தேன் செறிவு கொண்டதாக மேம்படுத்தலாம். இவ்வாறு மேம்படுத்தப்பட்ட வாயுவை, போக்குவரத்துக்கான பசுமை மற்றும் தூய எரிபொருளாகவோ அல்லது சுமார் 250 பார் (bar) அழுத்தத்தில் சிலிண்டர்களில் நிரப்பியோ பயன்படுத்தலாம். இதுவே 'அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு' (CBG) என்று அழைக்கப்படுகிறது. 


5. அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (CBG) என்பது வாகன மற்றும் தொழில்துறை எரிபொருளாகப் பயன்படுத்துவதற்காக அதிக அழுத்தத்தில் அழுத்தப்பட்ட, சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் சுத்திகரிக்கப்பட்ட உயிரி-வாயு (biogas) வடிவமாகும். இது அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவை (compressed natural gas (CNG)) ஒத்த பண்புகளையும் ஆற்றல் அளவையும் கொண்டுள்ளது. எனவே, இதனை அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுடன் (CNG) கலக்கவோ அல்லது வாகன, தொழில்துறை மற்றும் வணிகத் துறைகளில் அதற்கு மாற்றாகப் பயன்படுத்தவோ முடியும்.


அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (CBG) ஆலை எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?


6. உயிரி-வாயுவானது 'காற்றில்லாச் சிதைவு' (anaerobic digestion) முறை மூலம் உருவாக்கப்படுகிறது. இச்செயல்முறையில், ஆக்சிஜன் இல்லாத சூழலில் சிக்கலான கரிமப் பொருட்கள் சிதைக்கப்பட்டு உயிரி-வாயு உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு மூடிய கலன் உலைக்குள் (sealed vessel reactor) நடைபெறும் இச்சிதைவு செயல்முறை நான்கு தொடர்ச்சியான நிலைகளைக் கொண்டுள்ளது. அவை, 

  • நீராற்பகுப்பு (Hydrolysis): சிக்கலான கரிமப் பொருட்கள் எளிய மூலக்கூறுகளாகச் சிதைக்கப்படுகின்றன.


  • அமில உருவாக்கம் (Acidogenesis): இந்த எளிய மூலக்கூறுகள் ஆவியாகக்கூடிய கொழுப்பு அமிலங்களாக மாற்றப்படுகின்றன.


  • அசிட்டேட் உருவாக்கம் (Acetogenesis): அசிட்டிக் அமிலம், கார்பன் டை ஆக்சைடு (CO₂) மற்றும் ஹைட்ரஜன் ஆகியவை உருவாக்கப்படுகின்றன.


  • மீத்தேன் உருவாக்கம் (Methanogenesis): இந்த இறுதிக்கட்டத்தில் உயிரி எரிவாயு உற்பத்தி செய்யப்படுகிறது.


அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (CBG) ஆலையின் செயல்பாட்டு முறை குறித்த விரிவான விளக்கத்திற்கு நீங்கள் தகவல் வரைபடத்தைப் (infographic) பார்க்கலாம்.


இந்தியாவுக்கு அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (CBG) ஏன் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது?

7. இந்தியா தனது இயற்கை எரிவாயுத் தேவையில் சுமார் பாதியை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யும் இந்தியாவின் சூழலில், CBG உற்பத்தியையும் பயன்பாட்டையும் அதிகரிப்பது இறக்குமதியைக் குறைக்கவும், நாட்டின் தூய எரிசக்தி மாற்றத்தை வலுப்படுத்தவும் உதவும். மேலும், தற்போது நிலவும் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) நெருக்கடி போன்ற சர்வதேச சந்தையின் விநியோகம் மற்றும் விலை தொடர்பான பெரும் பாதிப்புகளிலிருந்து உள்நாட்டுச் சந்தையைப் பாதுகாக்கவும் இது உதவும்.


8. இத்திட்டத்தின் முக்கியத்துவம் என்பது வெறும் அதிக உயிரி-வாயுவை உற்பத்தி செய்வதில் மட்டுமல்ல, மாறாக வரலாற்றுரீதியாக CBG திட்டங்களை விரிவுபடுத்துவதில் சவாலாக இருந்த வணிக ரீதியான தடைகளைச் சரிசெய்வதிலும் உள்ளது. ஒழுங்கமைக்கப்படாத மூலப்பொருள் விநியோகச் சங்கிலிகள், அதிகப்படியான ஆரம்பக்கட்ட முதலீட்டுச் செலவுகள், போதுமான உள்ளூர் விநியோகக் கட்டமைப்பு இல்லாமை மற்றும் பலவீனமான கொள்முதல் சூழல் ஆகியவை CBG துறையில் முக்கிய தடைகளாக இருந்து வருகின்றன. இத்திட்டம் அத்தடைகளை முறியடிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.



9. அரசின் கூற்றுப்படி, 'கோபர்தன்' (GOBARdhan) திட்டமானது, நாட்டின் ஏராளமான விவசாயக் கழிவுகள், கால்நடைச் சாணம், சர்க்கரை ஆலைக்கழிவுகள் (press mud), நகராட்சி மக்கும் கழிவுகள் மற்றும் பிற உயிரித்திரள் (biomass) வளங்களைச் சுத்தமான எரிபொருள், இயற்கை உரம், கிராமப்புற வருமானம் மற்றும் தேசியப் பொருளாதார மதிப்பு என மாற்றியமைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.


10. 'கோபர்தன்' திட்டம், முழுமையான அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (CBG) மதிப்புச் சங்கிலி முழுவதும் ஒரு ஒருங்கிணைந்த தளத்தை உருவாக்குவதன் மூலம், CBG சூழல் அமைப்பை மேலும் கட்டமைத்து வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது விரைவான செயலாக்கம், வலுவான திட்டப் பொருளாதாரம் மற்றும் முதலீட்டாளர்கள், கடன் வழங்குநர்கள் மற்றும் திட்ட உருவாக்குநர்களுக்கு அதிக உறுதியை அளிக்கும். இது அழுத்தப்பட்ட உயிரி எரிவாயுவை (CBG) ஒரு "தொழில்நுட்பம்/சோதனைத் திட்ட" மாதிரியிலிருந்து, வணிகரீதியாகச் சாத்தியமான மற்றும் வங்கிக் கடன் பெறத்தக்க ஆற்றல் சார்ந்த தொழில்துறையாக மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது.


11. "போக்குவரத்து, வீடுகள், தொழில் மற்றும் வணிகத் துறைகள் எனப் பல்வேறு பிரிவுகளில் இந்தியாவின் இயற்கை எரிவாயுவுக்கான தேவை அதிகரித்து வருகிறது. உள்நாட்டுப் புதுப்பிக்கத்தக்க உற்பத்தி மூலம் இத்தேவையின் வளர்ந்துவரும் ஒரு பகுதியை அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (CBG) பூர்த்தி செய்ய முடியும். இது எரிசக்தி சார்ந்த தன்னிறைவை வலுப்படுத்துவதோடு, இறக்குமதி செய்யப்படும் புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதையும் குறைக்கும். அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (CBG) வேதியியல்ரீதியாக இயற்கை எரிவாயுவிற்கு இணையானது மற்றும் ஏற்கனவே உள்ள எரிவாயு விநியோகக் கட்டமைப்பில் தடையின்றி ஒருங்கிணைக்கப்படக்கூடியது. எனவே, இது புதுப்பிக்கத்தக்க எரிபொருளின் நன்மைகளையும், இந்தியாவின் விரிவடைந்து வரும் எரிவாயு உள்கட்டமைப்பின் பரவலான பயன்பாட்டுத் திறனையும் ஒருங்கிணைக்கிறது," என்று அரசு தெரிவித்துள்ளது.


'கோபர்தன்' திட்டம் எவ்வாறு அழுத்தப்பட்ட உயிரி எரிவாயுவை (CBG) வணிகரீதியாகச் சாத்தியமானதாக மாற்றும்?


12. உற்பத்தியாளர்களுக்கு நம்பகமான மற்றும் கணிக்கக்கூடிய சந்தையை வழங்க, 'கோபர்தன்' திட்டத்தில் அழுத்தப்பட்ட உயிரி எரிவாயுவை கொள்முதல் செய்வதற்கான பிரத்யேக உத்தரவாதக் கட்டமைப்பு (CBG offtake assurance framework) இடம்பெறும். அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) மற்றும் வீடுகளுக்கான குழாய் வழி இயற்கை எரிவாயு (piped natural gas (PNG)) பிரிவுகளில், அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (CBG) கலப்புக்கான கட்டாய இலக்குகளை (2026-27-ல் 3%, 2027-28-ல் 4% மற்றும் 2028-29 முதல் 5%) பூர்த்தி செய்ய, நகர எரிவாயு விநியோக (City gas distribution (CGD)) நிறுவனங்களால் இந்தக் கொள்முதல் மேற்கொள்ளப்படும்.


13. அரசின் கூற்றுப்படி, இந்தக் கட்டமைப்பு, கலப்பு விகிதக் கட்டாய இலக்கை "தொழில்துறைக்கான தெளிவான, நீண்ட காலத் தேவைக்கான குறியீடாக" மாற்றுகிறது. மேலும், நகர எரிவாயு விநியோகம் (CGD) வலையமைப்புகள் முழுவதும் சீரான முறையில் இதைச் செயல்படுத்துவது திட்டங்களின் கடன் பெறும் தகுதியை (bankability) மேம்படுத்தி, உற்பத்தித் திறனை முழுமையாகப் பயன்படுத்துவதை ஆதரிக்கும். இது நீண்டகாலத் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும். 


14. 'கோபர்தன்' (GOBARdhan) திட்டத்தின்கீழ், அழுத்தப்பட்ட உயிரி எரிவாயுவிற்கான (CBG) நிலையான நிர்ணயிக்கப்பட்ட விலையாக, ஒரு மெட்ரிக் மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்டிற்கு (Metric Million British Thermal Unit (MMBTU)) ரூ. 2,110 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இந்தக் கட்டமைப்பு, அரசாங்க ஆதரவு மற்றும் சந்தை அடிப்படையிலான செலவுப் பகிர்வு வழிமுறை ஆகியவற்றின் மூலம் நுகர்வோர் வாங்கும் திறனைப் பாதுகாப்பதோடு, நீண்ட கால வருவாய் வெளிப்படைத்தன்மையையும் வழங்குகிறது. குறைந்தபட்சம் 10 ஆண்டு கால எல்லையுடன், இந்த விலை நிர்ணயக் கட்டமைப்பு உற்பத்தியாளர்களுக்கு நீடித்த வருவாய் உறுதித்தன்மை, வணிகரீதியாக கவர்ச்சிகரமான வருமானம் மற்றும் முதலீடு மற்றும் திறன் விரிவாக்கத்திற்கான வலுவான வணிக வாய்ப்பை வழங்கும்,” என்று அரசாங்கம் கூறியது.


15. இத்திட்டத்தின்கீழ், தகுதியுள்ள பசுமைநிறைந்த புதிய CBG திட்டங்கள் (greenfield CBG projects), நிறுவப்பட்ட திறனின் ஒரு டன்னுக்கு ஒரு நாளைக்கு ரூ. 2 கோடி வரை மூலதன உதவியைப் பெறும். இந்த ஆதரவு, முக்கிய ஆலை இயந்திரங்களைத் தாண்டி, மூலப்பொருள் திரட்டல், இயற்கை உரம் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டல் போன்ற முக்கிய மதிப்புச் சங்கிலி சொத்துக்களுக்கும் நீட்டிக்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள உற்பத்தித் திறனை விரிவுபடுத்தும் 'பழைய' (brownfield) திட்டங்களும் இந்த ஆதரவைப் பெறத் தகுதிபெறும்.


16. அரசின் கூற்றுப்படி, இந்த நிதியுதவி திட்டத்தை உருவாக்குபவர்கள் மீதான ஆரம்பக்கட்ட மூலதனச் சுமையைக் குறைத்து, நிதிசார்ந்த முடிவை விரைவுபடுத்தி, தனியார் மேம்பாட்டாளர்கள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கிராமப்புற தொழில்முனைவோர்களின் பங்களிப்பை விரிவுபடுத்தும். இந்தத் திட்டம், அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (CBG) ஆலைகளை பிரதான குழாய்கள் மற்றும் நகர எரிவாயு விநியோக வலைப்பின்னல்களுடன் இணைக்கும் தொகுப்பு அடிப்படையிலான மற்றும் தனித்த குழாய் உள்கட்டமைப்பிற்கு ஆதரவளிக்கும். மேம்பட்ட குழாய் இணைப்பு, வெளியேற்றும் செலவுகளைக் கணிசமாகக் குறைத்து, நம்பகத்தன்மையை மேம்படுத்தி, சந்தை வரம்பை விரிவுபடுத்தி, எரிபொருளின் அதிகபட்ச பயன்பாட்டைச் சாத்தியமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


17. “பிரத்யேக கடன் உத்தரவாத அமைப்பு (credit guarantee mechanism) கடன் வழங்குநர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும். அத்துடன் தகுதியுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) சார்ந்த அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (CBG) திட்டங்களுக்கு நிறுவனரீதியான கடன் நிலையை விரிவுபடுத்தும். இம்முறையானது கடன் வழங்குவதில் உள்ள இடர்பாட்டின் ஒரு பகுதியை பகிர்ந்துகொள்வதன் மூலம், இந்த அமைப்பு மலிவு விலையிலான நிதியுதவியைப் பெறுவதை எளிதாக்கும், பிணையத் தேவைகளைக் (collateral requirements) குறைக்கும் மற்றும் மேலும் திட்டங்களை விரைவாக மேம்படுத்த உதவும். இது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME), பெண் தொழில்முனைவோர்கள் மற்றும் முதல்முறை திட்ட உருவாக்குநர்களின் பங்கேற்பை விரிவுபடுத்தி, பரந்த, போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் தொழில்முனைவோர் சார்ந்த அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (CBG) துறையை உருவாக்க உதவும்” என்று அரசு கூறியது.


அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (CBG) துறைக்கான அரசின் முன்னெடுப்புகள்:


அரசின் கூற்றுப்படி,


“கடந்த சில ஆண்டுகளாக, இந்திய அரசு அழுத்தப்பட்ட உயிரி-வாயு (CBG) துறையின் அடித்தளத்தை முறையாகக் கட்டமைத்துள்ளது. இதற்காக ‘மலிவு விலையிலான போக்குவரத்தை நோக்கிய நிலையான மாற்று’ (Sustainable Alternative Towards Affordable Transportation (SATAT)) திட்டம், கரிம உரத்திற்கான ‘சந்தை மேம்பாட்டு உதவி’ (Market Development Assistance (MDA)) திட்டம், ‘உயிரி-நிறை திரட்டும் இயந்திரங்களுக்கான’ (Biomass Aggregation Machinery (BAM)) திட்டம், ‘குழாய்வழி உள்கட்டமைப்பு மேம்பாட்டு’ (Pipeline Infrastructure (DPI)) திட்டம் மற்றும் ‘தேசிய உயிரி-ஆற்றல் திட்டத்தின்’ கீழ் அழுத்தப்பட்ட உயிரி-வாயு (CBG) ஆலைகளுக்கான ‘மத்திய நிதியுதவி’ (Central Financial Assistance (CFA)) ஆகியவை செயல்படுத்தப்பட்டுள்ளன.


இம்முன்னெடுப்புகள் அனைத்தும் இணைந்து, 200-க்கும் மேற்பட்ட அழுத்தப்பட்ட உயிரி-வாயு (CBG) ஆலைகளைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவரவும், உற்பத்தி மற்றும் கொள்முதல் அமைப்புகளை நிறுவவும், கரிம உர மதிப்புச் சங்கிலியை வலுப்படுத்தவும், பல்வேறு மூலப்பொருட்கள் மற்றும் புவியியல் பகுதிகளில் CBG-யின் எரிசக்தி நிரூபிக்கவும் உதவியுள்ளன” என்று அரசு கூறியது.



நிலையான வளர்ச்சிக்காகக் கழிவிலிருந்து ஆற்றல் பெறும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல்


1. ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிவரப் பிரிவின் சுற்றுச்சூழல் புள்ளிவிவரக் கலைச்சொல் விளக்கத்தின்படி, கழிவு என்பது ‘முதன்மைப் பொருட்களாக இல்லாத, உற்பத்தி, மாற்றம் அல்லது நுகர்வு ஆகிய நோக்கங்களுக்காக அவற்றை உருவாக்கியவருக்கு இனிப் பயன்படாதவையும், மற்றும் அவர் அகற்ற விரும்பும் பொருட்கள்” ஆகும். இயற்கையில் கழிவு என்று எதுவும் இல்லை. ஏனெனில், இயற்கையான துணைப் பொருட்கள் அனைத்தும் சூழல் மண்டலத்தில் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன.


2. மறுபுறம், மனித நடவடிக்கைகளால் நகராட்சி திடக்கழிவு, அபாயகரமான கழிவு, கதிரியக்கக் கழிவு, உடல் சார்ந்த கழிவுகள் (bodily waste) போன்ற பல்வேறு வகையான கழிவுகள் உருவாகின்றன. இத்தகைய கழிவு வடிவங்களை இயற்கையில் உடனடியாகப் பயன்படுத்த முடியாது. இவை மறுசுழற்சி செய்ய முடியாதவை மற்றும் மனித ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலில் தீங்கு விளைவிக்கக்கூடியவை.


3. கழிவிலிருந்து ஆற்றல் பெறும் தொழில்நுட்பங்கள் ஒரு நவீன தீர்வாக அமைகின்றன. இவை இரண்டு நோக்கங்களை நிறைவேற்றுகின்றன. அவை, (அ) வீட்டு, நகராட்சி மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளால் உருவாகும் பெருமளவிலான கழிவுகளை நிர்வகித்தல் மற்றும் (ஆ) அதிகரித்துவரும் ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்தல் ஆகும்.


4. எளிமையாகச் சொன்னால், ‘கழிவிலிருந்து ஆற்றல் பெறுதல்’ (waste-to-energy) என்பது மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகளைப் பயன்படுத்தக்கூடிய ஆற்றல் வடிவங்களாக மாற்றும் தொழில்நுட்பங்களின் தொகுப்பைக் குறிக்கிறது. இந்தத் தொழில்நுட்பங்கள், தற்போதுள்ள கழிவு மேலாண்மைத் தொழில்நுட்பங்களின் வேறுபட்ட அல்லது மேம்படுத்தப்பட்ட பதிப்புகளாகும். ஏனெனில், அவை தங்களின் இறுதி விளைபொருட்களில் ஒன்றாக எரிபொருள் அல்லது வாயுவை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பின்னர், அவை வெப்பம் மற்றும் மின்சாரத்தை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படலாம்.


5. இரண்டு முக்கிய கழிவு மாற்றும் செயல்முறைகள் உள்ளன. அவை, உயிர்வேதியியல் (biochemical) மற்றும் வெப்பவேதியியல் (thermochemical)  ஆகும். இந்தத் தொழில்நுட்பங்களுக்கு, கழிவுப் பொருட்களைப் பிரித்தல், துண்டாக்குதல், உலர்த்துதல் போன்ற குறிப்பிட்ட வகையான முன்-பதப்படுத்தல்கள் தேவைப்படுகின்றன. வெப்பவேதியியல் (thermochemical) தொழில்நுட்பங்கள் பொதுவாக மூன்று முறைகளை உள்ளடக்கியுள்ளன. அவை எரித்தல் (incineration), வெப்பச்சிதைவு (pyrolysis) மற்றும் வாயுவாக்கம் (gasification) ஆகும்.


(i) எரித்தல் (Incineration) என்பது எரிப்பான்கள் எனப்படும் ஒரு குறிப்பிட்ட வகை உலையில் கழிவுப் பொருட்களை அதிக வெப்பநிலையில் எரிப்பதை உள்ளடக்கியது. எரித்தல் என்பது உணவு, தோட்டம், நெகிழி மற்றும் காகிதம் போன்ற கலப்புக் கழிவுகளை உள்ளடக்கிய பல்வகைப்பட்ட கழிவுகளுக்கு குறிப்பாகப் பொருத்தமானது. 70 முதல் 90 சதவிகிதக் கழிவுகள் எரித்தல் மூலம் கையாளப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நுட்பம் அதிக கலோரி மதிப்புள்ள கழிவுகளுக்கும், அபாயமற்ற நகராட்சிக் கழிவுகளுக்கும் பொருத்தமானது.


(ii) வெப்பச்சிதைவு (pyrolysis) என்பது ஆக்சிஜன் இல்லாத நிலையில் கனிம (அல்லது பெரும்பாலும் நெகிழிக்) கழிவுகளைச் சிதைத்து, கரி, பைரோலிசிஸ் எண்ணெய் மற்றும் சின்கேஸ் போன்ற மூன்று நிலைகளிலும் எரிபொருட்களை உற்பத்தி செய்யும் ஒரு தொழில்நுட்பமாகும். இது மரத்திலிருந்து கரி தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு பழைய தொழில்நுட்பமாகும்.


(iii) வாயுவாக்கம் (gasification) என்பது ஒரு மேம்பட்ட வெப்பச் சுத்திகரிப்பு முறையாகும். இது கார்பன் நிறைந்த நகராட்சிக் கழிவுகளைச் சிதைத்து சின்கேஸ் அல்லது தயாரிப்பு வாயுவை (ஹைட்ரஜன், கார்பன் மோனாக்சைடு, மீத்தேன் போன்ற பல வாயுக்களின் கலவை) உற்பத்தி செய்கிறது. இது பெட்ரோலிய வேதியியல் மற்றும் மின்சாரத் தொழில்களில் நன்கு நிறுவப்பட்ட ஒரு தொழில்நுட்பமாகும். வெப்பச்சிதைவு (pyrolysis) மற்றும் வாயுவாக்கம் (gasification) ஆகியவை ஒரே மாதிரியான கழிவு வகைகளுக்கு மிகவும் பொருத்தமானவை.




6. உயிர்வேதியியல் தொழில்நுட்பங்கள் : உயிர்வேதியியல் தொழில்நுட்பங்கள், பாக்டீரியாக்களின் உதவியுடன் மக்கும் தன்மையுடைய கரிமக் கழிவுகளைச் சிதைக்க உயிரியல் செயல்முறைகளைப் பயன்படுத்துகின்றன. இதில் காற்றில்லா செரிமானம் (anaerobic digestion (AD)) மற்றும் நிலத்தில் புதைத்தல் (landfilling) ஆகியவை அடங்கும்.


(i) காற்றில்லா செரிமானம் (AD) : சமையலறை மற்றும் தோட்டக் கழிவுகள் போன்ற கரிமக் கழிவுகளுக்கு காற்றில்லா செரிமானம் (AD) பொருத்தமானது. இதில் ஆக்சிஜன் இல்லாத நிலையில் நுண்ணுயிரிகள் மக்கும் பொருட்களாகச் சிதைக்கப்படுகின்றன. இறுதி விளைபொருட்களில் ஒன்று உயிர்வாயு ஆகும். இது வெப்பம் அல்லது மின்சாரத்தை உற்பத்தி செய்யப் பயன்படுகிறது. இந்த முறை இயற்கையாகவே நிகழலாம் அல்லது உயிரி செரிப்பான்கள் மற்றும் சுகாதார நிலநிரப்புத் தளங்களில் பொறியியல் முறையில் உருவாக்கப்படலாம்.


(ii) உரம் தயாரித்தல் மற்றும் நிலநிரப்புதல் ஆகியவை கழிவுகளைப் புதைப்பதையும், அதனுடன் நிலநிரப்பு வாயு மீட்பு அமைப்புகளை நிறுவுவதையும் உள்ளடக்கியுள்ளன. நிலத்தில் புதைத்தல் செலவு குறைந்ததாக இருந்தாலும், நச்சு மற்றும் விரும்பத்தகாத வாயுக்களை வெளியிடுவதால் அது சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கிறது.


7. வெப்பவேதியியல் மற்றும் உயிர்வேதியியல் தொழில்நுட்பங்கள் இரண்டும் கழிவுகளைக் குறைத்து ஆற்றலை மீட்டெடுப்பதன் மூலம் வட்டப் பொருளாதாரத்திற்குப் பங்களிக்கின்றன. கழிவிலிருந்து ஆற்றல் பெறும் தொழில்நுட்பம் திறம்படப் பயன்படுத்தப்பட்டால், அது நிலையான வளர்ச்சி, மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும். டென்மார்க்கின் இன்பவாத நிலைத்தன்மை (Denmark’s idea of hedonistic sustainability) என்ற கருத்து (பழைய, அசுத்தமான வழிகளைவிட சுற்றுச்சூழலுக்கு உகந்த தேர்வுகள் வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியாக மாற்றும்) போன்ற பல உலகளாவிய நடைமுறைகளை இந்தியாவில் புதுமைப்படுத்திப் பின்பற்றலாம்.


Original Link: Is GOBARdhan a strategic bet for turning waste into energy security?

Share:

'மனரீதியான தனியுரிமையில் தலையீடு' : நீட் (NEET) தேர்வு தொடர்பான மனுவின் பின்னணியில் பொய் கண்டறியும் சோதனைகளை நீதிமன்றங்கள் எவ்வாறு அணுகுகின்றன? - அமால் ஷேக்

பொய் கண்டறியும் சோதனைகளை (lie-detection tests) நடத்துவதற்குச் சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டாலும், அத்தகைய சோதனையை நடத்துவதற்கும், அதன் முடிவுகளை ஆதாரமாகக் கொள்வதற்கும் இடையே உச்சநீதிமன்றம் வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ளது.


NEET UG 2026 வினாத்தாள் கசிவு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவர், "தங்கள் நிரபராதித் தன்மையையும், இதில் தங்களுக்குத் தொடர்பில்லை என்பதையும் நிரூபிக்கவும்", "உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிய" மத்திய புலனாய்வு முகமைக்கு (CBI) உதவவும் தாங்களாகவே முன்வந்து 'பாலிகிராஃப்' (polygraph) மற்றும் 'மூளை மேப்பிங்' (brain mapping) சோதனைகளுக்கு உட்பட விருப்பம் தெரிவித்தனர்.


ஆனால் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 10), புது தில்லியில் உள்ள ரவுஸ் அவென்யூ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி (விரைவு நீதிமன்றம்) அஜய் குப்தா அந்த மனுவை நிராகரித்தார்.


தற்போதைய நிலையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, "சட்ட நடைமுறையைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர வேறில்லை என்றும், இவ்வழக்கின் நடவடிக்கைகளைத் தாமதப்படுத்தும் நோக்கிலேயே இது தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகத் தோன்றுவதாகவும்" அவர் குறிப்பிட்டார். குற்றப்பத்திரிகை ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால், இச்சோதனைகளுக்கு உட்படுவதற்கான அவர்களின் கோரிக்கை சட்டப்படி செல்லுபடியாகாது என்றும் சிபிஐ நீதிமன்றத்தில் வாதிட்டிருந்தது.


குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான விசாரணையை சிபிஐ ஏற்கனவே முடித்துவிட்டதால், இந்த நிலையில் அவர்களிடம் இருந்து எந்த உதவியும் தேவைப்படவில்லை என்று நீதிமன்ற உத்தரவு குறிப்பிட்டது.


பொய் கண்டறியும் சோதனைகள் (lie-detection tests) குறித்துச் சட்டம் என்ன சொல்கிறது?


2010-ல் நடைபெற்ற 'செல்வி எதிர். கர்நாடக அரசு' (Selvi vs State of Karnataka) வழக்கில், சம்பந்தப்பட்ட நபரின் ஒப்புதல் இல்லாமல் 'நார்கோ அனாலிசிஸ்' (narco analysis), 'பாலிகிராஃப்' (polygraph) மற்றும் 'மூளை மின் செயல்பாட்டு விவரப் பதிவு' (Brain Electrical Activation Profile (BEAP)) ஆகிய சோதனைகளை நடத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவ்வாறு செய்வது, அரசியலமைப்பின் பிரிவு 20(3)-ன்கீழ் உள்ள 'தமக்கு எதிராகத் தாமே சாட்சியம் அளிப்பதில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் உரிமை' மற்றும் பிரிவு 21-ன்கீழ் உள்ள 'தனிநபர் சுதந்திரம்' ஆகியவற்றை மீறுவதாக அமையும்.


இத்தொழில்நுட்பங்கள் ஒருவரிடமிருந்து நேரடியாகத் தகவல்களைப் பெற முயல்வதாலும், சாதாரண விசாரணையில் இல்லாத வகையில் ஒருவரின் மனரீதியான தனியுரிமையில் (mental privacy) தலையிடுவதாலும் இத்தகைய முடிவை நீதிமன்றம் எடுத்தது. "இத்தொழில்நுட்பங்களில் எதையேனும் கட்டாயமாகச் செயல்படுத்துவது ஒரு தனிநபரின் மனரீதியான தனியுரிமையில் நியாயமற்ற தலையீடாகும். மேலும், வளர்ந்து வரும் சர்வதேச மனித உரிமைகள் விதிமுறைகளின் அடிப்படையில் பார்த்தால், இது 'கொடுமையான, மனிதாபிமானமற்ற அல்லது கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலான நடத்தையாகவும்' அமையும்" என்று அந்தத் தீர்ப்பு குறிப்பிட்டது.


இவற்றைச் சாதாரண விசாரணை அல்லது தானாக முன்வந்து அளிக்கும் வாக்குமூலத்திலிருந்து இச்சோதனைகள் வேறுபடுகின்றன. ஏனெனில், ஒரு நபர் தனது பதில்கள் மீது கொண்டிருக்கும் கட்டுப்பாட்டைத் தாண்டிச் செயல்படும் வகையிலேயே இச்சோதனைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே, சோதனையின்போது வெளிப்படும் பதில்களை அந்த நபர் உணர்வுபூர்வமாகத் தேர்ந்தெடுப்பதில்லை என்றும் அது சுட்டிக்காட்டியது. மேலும் இதில் குறிப்பிட்டதாவது, போதைப்பொருள் மூலம் பெறப்படும் தகவல்கள் அல்லது ஒருவரின் உடலியல் எதிர்வினைகளை அளவிடுவதன் வாயிலாகப் பெறப்படும் முக்கிய முடிவுகள் ஆகியவற்றை, அந்த நபரின் மனரீதியான தனித்துரிமையில் செய்யப்படும் ஊடுருவல் என்று விவரிக்கலாம். மேலும், அத்துடன் இத்தொழில்நுட்பங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தக்கூடும் என்று அச்சுறுத்தப்பட்டால், ஒரு நபர் தனக்குத்தானே எதிரான வாக்குமூலத்தை அளிக்க நேரிடலாம் என்றும் அது குறிப்பிட்டது.


இத்தகைய பரிசோதனைகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளனவா?


'செல்வி' (Selvi) வழக்கின் தீர்ப்பின்படி, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (National Human Rights Commission) 2000-ம் ஆண்டு வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படும் பட்சத்தில், இத்தகைய சோதனைகளை விருப்பத்தின் பேரில் மேற்கொள்வதை உச்சநீதிமன்றம் அனுமதித்தது.


இத்தகைய சோதனைக்கான ஒப்புதல் ஒரு நீதித்துறை நடுவர் (judicial magistrate) முன்னிலையில் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், சோதனைக்கு உட்படுத்தப்படும் நபர் இச்செயல்முறையின் மருத்துவ, உணர்வுப்பூர்வ மற்றும் சட்டரீதியான விளைவுகள் குறித்த சட்ட ஆலோசனையைப் பெற வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.


நீதிமன்றம் மேலும் குறிப்பிட்டதாவது, "ஒரு நபர் இத்தகைய சோதனைகளில் ஏதேனும் ஒன்றை மேற்கொள்ள ஒப்புதல் அளித்திருந்தாலும்கூட, சோதனைக்கான முடிவுகளை மட்டும் சாட்சியமாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், அசோதனையின்போது வெளிப்படும் தீர்வுகள்மீது அந்த நபருக்கு உணர்வுப்பூர்வமான கட்டுப்பாடு இருப்பதில்லை..."



இருப்பினும், இந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டாலும், சோதனையை நடத்துவதற்கும் அதன் முடிவுகளைச் சான்றாகக் கொள்வதற்கும் இடையே உச்சநீதிமன்றம் வேறுபாட்டைக் காட்டியது. பதில்கள் அளிக்கப்படும்போது சம்பந்தப்பட்ட நபர் சுயநினைவற்ற நிலையில் இருப்பதால், சோதனை முடிவுகளைக் குற்றத்திற்கான உறுதியான சான்றாகக் கருத முடியாது.


பாரதிய சக்ஸ்ய அதினியம் (Bharatiya Sakshya Adhiniyam (BSA)) சட்டத்தின் பிரிவு 23-ஐக் குறிப்பிடுவது அவசியமாகும். அதன்படி, பிணைக் காவலில் இருக்கும்போது காவல்துறை அதிகாரியிடம் அளிக்கப்படும் வாக்குமூலங்களை, குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராகச் சான்றாகப் பயன்படுத்த முடியாது. ஆனால், அத்தகவல் ஏதேனும் ஒரு 'நேரடி உண்மையை' (physical fact) கண்டறிய வழிவகுக்கும் பட்சத்தில் இதற்கு விதிவிலக்கு உண்டு.


இதில் பாரதிய சக்ஸ்ய அதினியம் (Bharatiya Sakshya Adhiniyam (BSA)) பிரிவு 23-ல் உள்ள “கண்டறியப்பட்ட உண்மை” (fact discovered) தொடர்பான விதிவிலக்கின்கீழ் வரும் ஒரு பொருள், இடம் அல்லது ஆவணம் ஆகியவை அடங்கலாம். இருப்பினும், அவ்வாறு கண்டறியப்பட்ட உண்மையும்கூட, தனிப்பட்ட முறையில் ஒரு முழுமையான ஆதாரமாக அமையாமல், பிற ஆதாரங்களை உறுதிப்படுத்தும் ஒரு சான்றாகவே (corroboration) செயல்படுகிறது.


குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் இச்சோதனைகளைத் தானாக முன்வந்து மேற்கொள்ள வலியுறுத்த முடியுமா?


வரதட்சணை கொடுமை தொடர்பான வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் அனைவர் மீதும் 'நர்கோ-பகுப்பாய்வு' (narco-analysis) சோதனையை நடத்த அனுமதித்த பாட்னா உயர்நீதிமன்றத்தின் உத்தரவை, 'அம்லேஷ் குமார் vs பீகார் மாநிலம்-2025' (Amlesh Kumar vs State of Bihar) வழக்கில் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இந்தச் சோதனைகளுக்கு ஜாமீன் கோரும் நிலையிலேயே அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.


நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் பிரசன்னா பி. வரலே ஆகியோர் அடங்கிய அமர்வு குறிப்பிட்டதாவது, ஜாமீன் வழங்கும் நிலையில், குற்றத்தின் தன்மை, குற்றச்சாட்டுகள், பிணைக் காவலில் இருந்த காலம் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் சாட்சிகளை முக்கியத்துவம் செலுத்துவாரா என்பது போன்ற அம்சங்களை மட்டுமே நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும். நீதிமன்றம் "விரிவான அல்லது தேவையற்ற விசாரணையில் (roving enquiry) ஈடுபடுவதோ அல்லது கட்டாயமற்ற/விருப்பத்திற்கு மாறான புலனாய்வு நுட்பங்களைப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்வதோ" அவசியமில்லை.


மேலும், ஒரு நபர் இச்சோதனைகளை நடத்தத் தானாக முன்வந்து கோரிக்கை விடுத்தாலும்கூட, அத்தகைய சோதனையை வழக்கின் விசாரணையின் பொருத்தமான கட்டத்தில், அதாவது குற்றம் சாட்டப்பட்டவர் தனது தரப்புச் சான்றுகளை முன்வைக்கும் உரிமையைப் பயன்படுத்தும் நிலையில் மட்டுமே பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது. அப்படியிருந்தும், இத்தகைய பரிசோதனைக்கு அனுமதி தானாகவே கிடைத்துவிடாது என்பதில் நீதிமன்றம் தெளிவாக இருந்தது. ஏனெனில், "நார்க்கோ-பகுப்பாய்வு (narco-analysis) பரிசோதனையின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகத்திற்குரிய தன்மையைக் கருத்தில் கொள்ளும்போது, ​​அதனைச் சாட்சியங்களை முன்வைப்பதற்கான மறுக்க முடியாத உரிமையின் ஒரு பகுதியாகக் கருத முடியாது."


எனவே, ஒரு பரிசோதனைக்கு அனுமதி அளிப்பதற்குமுன், சம்பந்தப்பட்ட நபரின் தன்னிச்சையான சம்மதம், அதற்காக வகுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் வழக்கின் உண்மைகளின் அடிப்படையில் அப்பரிசோதனை அவசியமானதா ஆகியவற்றை மதிப்பிடுவதற்கான அதிகாரத்தை நீதிமன்றம் தன்வசம் கொண்டுள்ளது.


Original Link: ‘Intrusion into mental privacy’: How courts treat lie detector tests, amid NEET case plea

Share: